Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, September 5, 2012

எத்தனை மருத்துவ குணம் இப்பூவில்

வேப்பம் பூவில் துவையல், ரசம் செய்து சாப்பிட்டால் குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும். வேப்பம் பூவை ஊற வைத்துக் குடிக்க பித்த தன்மை தீரும். வேப்பங்காயை வெயிலில் உலர்த்தி அந்த பொடியை வெந்நீரில் கலந்து கொடுக்க மலேரியாக் காய்ச்சல் குணமாகும். வேப்பம்பழ சர்பத்தை குடித்து வந்தால் படிப்படியாக சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.

வேப்பம் பூ உடலில் உள்ள கொட்ட கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும் ஆற்றல் கொண்டதாகும். வேப்பம்கொட்டையை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுத்து அரைத்துப் புரையோடிய புண்கள் மீது பூசி வரக் குணம் கிடைக்கும். குஷ்ட நோயாளிகளின் புண்களையும் குணப்படுத்தும்.

3 கிராம் வேப்பம் விதையை சிறிது வெல்லம் சேர்த்து அரைத்துக் காலை, மாலையாக 40 நாட்கள் சாப்பிட மூல நோய் தீரும். நீண்ட நாள் சாப்பிட்டு வரத் தோல் நோய்கள், சூதக சன்னி, நரம்பு இசிவு, குடல் புழுக்கள் போன்ற தொந்தரவு நீங்கும். வாயுத்தொல்லை,​ ஏப்பம் அதிகமாக வருதல், பசியின்மை போன்றவைகளுக்கு வேப்ப மரத்தின் பூக்களை மென்று தின்றால் நல்ல பலன் கிடைக்கும்.

1 comments :

இவ்வளவு இருக்கா.....அற்புத பூத்தான்.

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!