Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, March 29, 2015

உடல் உறுப்புகளை பாதுகாக்க டிப்ஸ்!?

உடல் உறுப்புகலில் என்ன என்ன நோய் அதை பாதுகாக்க சில டிப்ஸ்! உங்களுக்கு நோய் என்ன உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்.

கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி. சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.

கண் இமைகளில் வலி.. என்ன வியாதி: அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.

டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம் என்ன வியாதி: அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.

டிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.

கண்கள் உலர்ந்து போவது.. என்ன வியாதி: நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.

டிப்ஸ்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.

தோலில் தடிப்புகள் ஏற்படுதல் என்ன வியாதி: இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.

டிப்ஸ்: அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.

முகம் வீக்கமாக இருப்பது என்ன வியாதி: உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.

டிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.

தோல் இளம் மஞ்சளாக மாறுவது என்ன வியாதி: கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.

டிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.

பாதம் கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல் என்ன வியாதி: சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.

டிப்ஸ்: வைட்டமின் நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.

பாதம் மட்டும் மரத்துப் போதல் என்ன வியாதி: நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.


டிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள் என்ன வியாதி: தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.

டிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.

சிவந்த உள்ளங்கை என்ன வியாதி: கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.

டிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.

வெளுத்த நகங்கள் என்ன வியாதி: இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும். ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.

டிப்ஸ்: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரைவகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.



விரல் முட்டிகளில் வலி என்ன வியாதி: ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.

டிப்ஸ்: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.

நகங்களில் குழி விழுதல் என்ன வியாதி: சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.

டிப்ஸ்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.

வாய்ஈறுகளில் இரத்தம் வடிதல் என்ன வியாதி: பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.

டிப்ஸ்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.

சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல் என்ன வியாதி: வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.

டிப்ஸ்: ‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம்.

ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும். வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது. என்ன வியாதி: உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.

டிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்ல பலன் தரும்.

Friday, March 13, 2015

காவி தீவிரவாதி என்பதால் கள்ள மவுனம்!?


புதிய தலைமுறை அலுவலகம் மீது வெடிகுண்டு தாக்குதல். அடையலாம் தெரியாத நபர்கள் என cctv வீடியோ ஆதாரங்களுடன் புதிய தலைமுறை செய்தி வெளியீடு.

உலகத்துல எந்த மூலைல குண்டு வெடிச்சாலும் உடனுக்குடன் கண்டுபுடிச்சி தீவிரவாதியின் பெயர், இயக்கத்தின் பெயர், பயிற்சி பெற்ற நாடு எல்லாம் துல்லியமா செய்தி போடுவிங்களே.

இதே சம்பவம் ஒரு முசுலீம் செய்திருந்தால் அகில உலக பயங்கரவாதியாக அல்கொய்தா இந்தியன் முஜாஹிதீன் ஐ.எஸ்.ஐ.எஸ்.லஷ்கர் இ தொய்பா என சித்தரிக்கப்பட்டு காட்சி ஊடகங்களில் ப்ளாஷ் நியுஸாகவும் அச்சு ஊடகங்களில் தலைப்பு செய்தியாகவும் ஒரு வாரத்திற்கு கவர்ஸ்டோரி போட்டிருப்பர். அவனது குடும்பம் நண்பர்கள் உறவினர்கள் என அத்தனை பேரும் ஊடக பயங்கரவாதிகளால் மானபங்க படுத்தப்பட்டிருப்பர் காவி தீவிரவாதி என்பதால் கள்ளமவுனம் காக்கிறது ஊடகங்கள் வாழ்க பத்திரிகை சுதந்திரம். உங்கள் அலுவலகதில்லேயே வெடிகுண்டு தாக்குதல் நடத்தியவர்களுக்கு பெயர் கிடையாதா ? இயக்கம் கிடையாதா ? பயிற்சி பெற்ற இடம் கிடையாதா ?.

அதிகாலை குண்டு வைத்துவிட்டு உடனே மதுரை சென்று கோர்ட்டில் குற்றவாளி சரண்டர் ஆகிறது சாத்தியமா? எல்லாமே ஒரு செட்அப் மாதிரி இருக்கிறது அல்லவா?.



அதுமட்டும் பத்தாது இன்னும் இவர்களுக்கு பின்னிருந்து தூண்டியவர்கள் யார்? வெடிமருந்து எங்கிருந்து கிடைத்தது? இதற்கு முன் எங்கெல்லாம் குண்டு வைத்தார்கள்? என்பதையும் ஆராய வேண்டும்.

மோடி அரசு மத்தியில் வந்ததையொட்டி தங்கு தடையின்றி பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மற்றும் மதவாத அமைப்புகள் வன்முறைகளில் தீவிரமாக இறங்கிவிட்டன. இது ஒரு தொலைக்காட்சிமீது நடத்தப்பட்ட அச்சுறுத்தல் வன்முறை என்று எடுத்துக்கொள்ள முடியாது கருத்துச் சுதந்திரத்தின்மீது தொடுக்கப்பட்ட வன்முறை போர்!.

அராஜகத்தில் இறங்குவதற்கு காரணமே பா.ஜ.க தான். வன்முறையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட இந்து அமைப்பினரை புழல் சிறைக்கு சென்று சந்தித்தார் தமிழக பா.ஜ.க தலைவர். ஒன்று திரண்டு ஓங்கிய குரலால், ஒத்தக் கருத்துள்ள அனைவரும் ஓரணியில் திரண்டு ஒலிக்க முன்வர வேண்டும் - முறியடிக்க வேண்டும்.

இது போல சில்லறை வேலைகளை மத பற்று வெறி கொண்டவர்கள் செய்ய மாட்டார்கள் மாறாக இரு மதத்தினரின் உணர்வுகளை தூண்டும் முயற்சி அவ்வளவு தான். சண்டைய மூட்ட பார்க்கும் மூதேவிகள் இடம் கொடுக்கக் கூடாது.

நியூஸ்7 தொ.கா விவாதத்தில் நவீன இந்தியாவில் நடைபெற்ற கலவரங்கள் குறித்து ஆய்வு செய்து, அவை தற்செயலானவை அல்ல, திடீரென வெடிப்பவையுமல்ல. நன்கு திட்டமிடப்பட்டு முஸ்லிம்களைக் குறிவைத்து ஃபாசிச சக்திகளால் வழிநடத்தப்படுபவை” என்ற பால் ஆர் ப்ராஸ் சின் ஆய்வுத் தகவலை ஆதாராமாகக் குறிப்பிட்டோம்,

யாருமே அறிந்திராத ஆவணத்தை நாம் குறிப்பிடுவதாகக் குற்றம் சாட்டினார் பாஜக சார்பில் பேசிய நண்பர் வழ.ராமமூர்த்தி அவர்கள்,


இதோ அந்த ஆவணம் குறித்த பதிவு,:  Forms of Collective Violence: Riots, Pogroms, and Genocide in Modern india.
# This collection of essays focus on the various forms of collective violence that have occurred in India during the past six decades, which include riots, pogroms, and genocide. It is argued that these various forms of violence must be understood not as spontaneous outbreaks of passion, but as productions by organized groups. Moreover, it is also evident that government and its agents do not always act to control violence, but often engage in or permit gratuitous acts of violence against particular groups under the cover of the imperative of restoring order, peace, and tranquility. This has certainly been the case in numerous incidents of collective violence in India where curfew restrictions have been used for just such purposes. In this context, secularism constitutes a countervailing practice, and a set of values that are essential to maintain balance in a plural society where the organization of intergroup violence is endemic, persistent, and deadly.


Saturday, March 7, 2015

லிங்கம் பயன்படுத்தக்கூடாது சட்டம் !?

மாட்டினை கடவுளாக வணங்குவதில் மனிதனின் பகுத்தறிவுச் சிந்தனை மழுங்கிப் போவதை தான் காண முடிகிறது. மாட்டினுடைய கன்றினை அதன் மடியில் முட்ட வைக்கிறோம், தமது கன்று பால் கேட்கிறதே என்கிற தாய் பாசத்தின் மிகுதியால் மாடு பாலை சுரக்கிறது. உடனே, கன்றினை இடமாற்றி விட்டு கடகடவென அந்த பாலை நாம் கறந்து குடிக்கிறோம் என்றால்..இதற்கு மிஞ்சிய ஒரு மோசடி, ஒரு நயவஞ்சகம், ஒரு பித்தலாட்டம் வேறு இருக்க முடியுமா??. இத்தனையும் செய்து விட்டு, பசு பால் தரும் என்று பள்ளிகூடத்தில் பாடம் நடத்துகிறோம். பசு என்ன உனக்கா பால் தரும்?.

பசு வந்து நம்மிடம் அப்படி சொன்னதா? அது தமது குட்டிக்காக வைத்திருக்கும் பாலை, குட்டிக்காகவே சுரந்த பாலை நாம் களவாடி விட்டு, பசு பால் தரும் என்று சொல்கிறோம், ஒரு படி மேலே சென்று அதை தாய் என்கிறோம், கடவுள் என்கிறோம்.. பசுவுக்கு மட்டும் பேசுகிற ஆற்றல் இருந்தால் இந்த பாராட்டை அது ஏற்றுக் கொள்ளுமா  அல்லது உலகில் உள்ள கெட்ட கெட்ட வார்த்தைகள் அனைத்தையும் ஒன்று திரட்டி நம்மை காறி உமிழுமா?.

பசு பேசாது என்கிற தைரியத்தில் தான் இவர்கள் அதை கடவுள் என்கிறார்கள் !!

வண்டி மாடுகளைத் தடை செய்ய வேண்டும். காளை சிவனுக்குப் பிடித்தது. காளை வதை கூடாது. சேவல் கறியை தடை செய்ய வேண்டும். சேவர் கொடியோன் முருகனின் அன்பிற்குறியது. சேவல் வதை கூடாது. மீன் சாப்பிடுவதையும் தடை செய்ய வேண்டும். அது திருமால் அவதாரங்களில் ஒன்றான மச்ச அவதாரம். ஆமை உண்பதையும் தடை செய்ய வேண்டும். அது கூர்ம அவதாரம். பன்றி உண்பவர்களை தடை செய்யுங்கள். அது வராக அவதாரம். பாம்புகளைக் கொல்லாதீர்கள். அது பரம சிவனின் அணி கலன். சுன்டெலி உண்பவர்களை தடை செய்யுங்கள். பிள்ளையார் வாகனம். நாய்கள் ஜாக்கிரதை!. அது பைரவக் கடவுள். தாமரையைச் சூடாதீர். இலக்குமியின் இருக்கை.

சாப்பிட தகுதியானவற்றை சாப்பிடலாம், பால் கறக்க தகுதியானவற்றில் பால் கறக்கலாம், தோல் தேவையென்றால் தோலை எடுக்கலாம், உழுவதற்கு தேவையென்றால் அதற்கு பயன்படுத்தலாம், அவசியமற்று துன்புறுத்துதல் தான் பாவமே தவிர, நமக்கு தேவையான்வற்றை அதிலிருந்து பெற்றுக் கொள்ள எந்த தடையுமில்லை.

அதே சமயம் இதிலெல்லாம் விலங்குகளுக்கு எந்த பங்காவது இருக்கிறதா? அதுவாக விரும்பி, வலிய வந்து நமக்கு தேவையானவற்றை தந்தால் தான் அதற்கு இதில் பங்கு இருக்குமே தவிர, அதனுடைய சம்மதமின்றி, அதன் மேல் மனிதன் ஆதிக்கம் செலுத்தி விட்டு, இறுதியில் மாடு தந்தது, அதனால் அது தெய்வம், ஆடு தந்தது, அதனால் அது எங்கள் தாய் என்றெல்லாம் சொல்வது மடமையின் உச்சமல்லாமல் வேறென்ன.

எப்பா "கோ" பக்தர்களே, மாட்டுக்கறி (பீப்) மிக அதிகமாக சாப்பிடும் அமேரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அரேபியா நாடுகளுக்கு பிழைக்க போகாதிங்க, அவர்கள் நடத்தும் கம்பனிகளில் வேலைசெயாதிங்க, அவர்கள் அளிக்கும் வேலைகளை எடுத்து செய்யாதிங்க, அவுங்க கொடுக்குற அந்நிய செலாவணி (டாலர்) வேண்டாம்முன்னு சொல்லுங்க... அந்நிய முதலீடுக்கு மட்டும் சூ... வாய.. மூடிகின்னு அவுங்ககிட்ட கைநீட்டி பிச்ச எடுக்கரிங்களே வெக்கம்மாயில்ல.

பெண்களையும் சூத்திரரையும் கொல்லுவது மிகவும் குறைந்த பாவமாகும்."( அ.11. சு.66.மனு). "ஒரு பிராமணன் தவளையைக் கொன்றால் செய்ய வேண்டிய பிராயச்சித்தம் ஏதோ, அதைத்தான் சூத்திரனைக் கொன்றாலும் செய்ய வேண்டும்." (அ.11. சு.131.மனு) ஓ அதனாலதான் குஜராத்ல முஸ்லீம் கர்ப்பிணி பெண்ணை கணவன் முன்னாடி கற்பழிச்சு அந்த பெண்ணோட வயித்த கிழிச்சு குழந்தையோட இரத்தத்த எடுத்து பொட்டு வச்சிக்கிட்டு போனீங்களா சூப்பர் வாழ்க மனுதர்மம் வளர்க நாய் மதம் எல்லோரும் நாய் மதத்துக்கு திரும்பி வாங்க.

சகோ,  மன்னிக்கவும் காரணம் இது 18 +  மாடு என்பது கடவுள் அதனால் அதன் கறியை பயன்படுத்தக்கூடாது. என்ற சட்டத்தை ஆதரிப்பவர்களே லிங்கம் கூட கடவுள்தான் அதனால் இனி யாரும் அதை பயன்படுத்தக்கூடாதுனு சட்டம் வந்தா ஆதரிப்பீர்களா?. (வரும் காலங்களில் இந்துத்துவா தீவிரவாதிகளால் இனி இதுவும் நடக்கலாம்).


Sunday, March 1, 2015

அலைபேசி அருமையா அவலமா?

மோட்டாரோலாவின் செங்கல் போன்ற மொபைல் போனிலிருந்து இன்றைய ஆப்பிள் ஐ போன் 6 , பிளாக் பெர்ரி (Blackberry) போன் வரை வளர்ச்சியைக் கொண்ட மொபைல் போனின் வயது சுமார் 31 ஆகிறது. 

1983ல் டாக்டர் மார்டின் கூப்பர் 2500 பவுண்ட் விலையில் முதன் முதல் மோட்டாரோலா டைனா ஏ. டி .சி 800 எக்ஸ் என்னும் மொபைல் போனை வர்த்தக ரீதியாகக் கொண்டு வந்தார். அப்போதெல்லாம் பெரும் செல்வந்தர்களின் சொகுசு சாதனமாக செல்போன் இருந்து வந்தது. இந்நிலை நீண்ட நாட்களாக இருந்து வந்த போதிலும் அண்மைக் காலமாக அன்றாட வாழ்க்கையின் அத்தியாவசிய சாதனமாக அது மாறிவிட்டது. மொபைல் போன் முதன் முதலில் வந்து ஓராண்டு கழிந்த பின்னர் உலகில் சுமார் 12ஆயிரம் பேரே அதன் உபயோகிப்பாளர்களாக இருந்தனர். ஆனால் இன்று அனைத்து நாடுகளிலும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் மட்டும் மொபைல் போனை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 670 மில்லியன் என அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. பேசுவதற்கு மட்டும் வந்த இந்த மொபைல் போன் இன்று டெக்ஸ்ட் மெஸேஜ்களை (எஸ்எம்எஸ்) அனுப்புவதற்கும்பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பெரிய அளவில் டேட்டா (Data) பரிமாற்றத்திற்காக ஏற்படுத்தப்பட்டதே இன்று 3ஜி மற்றும் இனி வர இருக்கும் 4 ஜி மொபைல் சேவைகள் ஆகும். இந்த வேக மாற்றங்கள் இனிவரும் காலங்களில் மொபைல் போனில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்பது கற்பனை கூடசெய்து பண்ணிப் பார்க்க முடியாத நிலையிலுள்ளது.
 
பொதுவாக  மொபைல் மூலமாகவும் தொல்லை கொடுப்பது தடை செய்யப்பட்டதே! நாம் தொடர்பு கொள்ளக்கூடிய சகோதரர்கள் நோயாளியாக, பிஸியாக அல்லது ஏதாவது கூட்டங்களில் இருக்கலாம் எனவே அவர்களிடமிருந்து நமது அழைப்புக்கு பதில் வராத சந்தர்ப்பங்களில் அவர்களை மீண்டும் மீண்டும் அழைத்து தொல்லை கொடுக்காமல் இருக்க வேண்டும். அவ்வாறே தூங்கக்கூடிய நேரங்கள்,  வணக்கங்களில் ஈடுபடக் கூடிய சந்தர்ப்பங்களில் பிறரை அழைத்து தொல்லை கொடுப்பது  அனுமதிக்காத விஷயமாகும்.
 
தொலைபேசி மூலமாக ஒருவருடன் தொடர்பு கொள்ளக் கூடியவர் ஆரம்பத்தில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதே ஒழுங்காகும். ) எனவே ஒருவரோடு தொடர்பு கொள்ளும் போது நாம் யார் என்பதை அடையாளப்படுத்துவது அவசியம் என்பது தெளிவாகின்றது. குறிப்பாக, தொலைபேசி மூலமாக பேசும்போது நாம் யார் என்பதை அடையாளப்படுத்தாவிட்டால் தொடர்பு கொண்டவர் கோபத்தில் அழைப்பைத் துண்டிக்க வாய்ப்பிருக்கிறது. சிலர் தொடர்பு கொண்டுவிட்டு மறுதரப்பில் உள்ளவர்களிடம் ‘நீங்கள் யார் ?’ என வினவுவது அநாகரீகமான செயலாகும். எனவே தொடர்பு கொண்டவரே தன்னை அறிமுகப்படுத்துவதுதான் தொலைபேசி ஒழுங்கும்.  மேலும் தொடர்பு கொள்ளக் கூடிய ஒருவர் மறுதரப்பில் இருந்து பதில் எதுவும் கிடைக்காத போது உடனடியாக தனது மொபைலை ஆஃப் செய்துவிடுவதும் அவரை ஒரு வகையில் சங்கடத்தில் ஆழ்த்தும். எனவே இதுவும் தவிர்க்கப்பட வேண்டியதே!
 
கூட்டங்களில் (மீட்டிங்ஸ்) அமர்ந்திருக்கும் ஒருவர் பிறரோடு தொடர்பு கொள்வதும் தனக்கு வரும் அழைப்புகளுக்கு பதில் தருவதும் நாகரீகமற்ற செயலாகும். அவ்வாறு நடந்து கொள்வது கூட்டத்தில் அமர்ந்திருப்போருக்கும் அதை நடத்துபவருக்கும் தொல்லை தரும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. எனவே மொபைலை உபயோகிப்பவர்கள்இச்செயலை கண்டிப்பாக தவிர்ந்து கொள்ள வேண்டும். மொபைலை ‘ ஸைலென்ட் மோடில் வைத்துக் கொள்ளலாம். அல்லது ஆஃப் செய்துவிடலாம். இன்று பெரும்பாலான கூட்டங்களின் ஆரம்பத்தில் இவ்விஷயம் நினைவூட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.
 
வாகன ஓட்டுனர்கள் வாகனங்களை ஓட்டும் போது மொபைல் போன்களை பயன்படுத்துவது அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. விபத்துக்களில் 28 சதவீதமானவை வாகனங்களை ஓட்டும் போது மொபைல் போன்களில் பேசுவதாலும், எஸ்எம்எஸ் அனுப்புவதாலும் ஏற்படுவதாக ‘தி வாஷிங்டன் போஸ்ட் ’ இணையதளம் கூறுகிறது. இதனாலேயே பல நாடுகளில் இது ஒரு தண்டனைக்குரிய குற்றமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.   உயிர்கள் பெறுமதிப்புமிக்கவையாக உள்ளன. பிறர் உயிர்களுக்கு ஆபத்தை உண்டு பண்ணுவதும் , தன்னைத்தானே அழித்துக் கொள்வதும் , வாகனங்களை ஓட்டும் போது மொபைல் போனை பயன்படுத்துவதைத் தவிர்ப்பது கடமை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

மொபைல் போனின் பயன்பாடுகளில் டெக்ஸ்ட் மெஸேஜ் அனுப்புவது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. ஆனால் இதில்  ஆபாசமான , விரசமான செய்திகளையும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களையும் அனுப்புவதும் அடுத்தவர்களின் மனங்களை புண்படுத்தக்கூடிய செய்திகளை பரப்புவதும் . ‘தான் கேட்கின்ற அனைத்தையும் (உறுதிப் படுத்தாமல்) உடனே அறிவிப்பது ஒருவன் பொய்யன் என்பதற்குப் போதுமான சான்றாகும்’  மொபைல் போன்களின் மூலமாக ஆபாசத்தையும் அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்புவோர்   கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப் படுவார்கள்  

 மொபைல் போன் என்பது தகவல் தொடர்பு வசதிக்காக வந்த ஒரு சாதனமாக இருந்த போதிலும் அதையே வேடிக்கையாகப் பயன்படுத்தும் போக்கு இன்று பலரிடம் வளர்ந்து வருகிறது.  மொபைல் போன்களில் உள்ள வீடியோ, போட்டோ கேமராக்களை வைத்து அந்நியப் பெண்களை படம் எடுப்பதும் அவற்றை அசிங்கமான முறையில் பயன்படுத்துவதும் தம்முடன் தொடர்பு கொள்வோரின் உரையாடல்களை திருட்டுத்தனமாக பதிவு செய்வதும்  மோசமான செயல்களாகும். இதனால் பல விபரீதமான விளைவுகளும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. போன்கள் பழுதடையும்போது அவற்றைத் சரி செய்வதற்காக டெக்னீஷியனிடம் ஒப்படைக்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். மொபைல் போனிலுள்ள மெமரி கார்டை எடுக்காமல் கொடுத்ததனால் சில பெண்கள் தங்களது கற்புகளை இழந்த நிகழ்வுகளும் உள்ளன.
 
பிள்ளைகள் மொபைல் போன் பயன்படுத்தும் போது அவர்களை கவனிப்பது பெற்றோரின் பொறுப்பு பிள்ளைகள் பெற்றோரிடம் அமாநிதமாக ஒப்படைக்கப்பட்ட செல்வங்கள். எனவே அவர்களை  ஒழுக்கத்துடனும் வளர்த்தெடுப்பதுபெற்றோரின் கடமையாகும்.  ஆனால் இன்றைய இளைய தலைமுறையினர் அதை வேடிக்கைக்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். இதனால் பல மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. இளைஞர்களிடம் ஒழுக்கச் சீர்கேடுகள் வேகமாகப் பரவுகின்றன. அவர்களது கல்வியிலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால்தான் உத்தரப்பிரதேசம் போன்ற சில இடங்களில் திருமணமாகாத பெண்கள் மொபல் போனில் பேசத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே , பெற்றோர் தேவையில்லாமல் தமது பிள்ளைகளுக்கு மொபைல் போன் வாங்கிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அவர்கள் அதனை வைத்துக் கொள்ள வேண்டுமென்றநிலை ஏற்பட்டால் அவர்களை சரியான முறையில் கவனித்து வழிகாட்ட வேண்டும்.

“உண்ணுங்கள் பருகுங்கள் , வீண் விரயம் செய்யாதீர்கள்” மொபைல் போன் உபயோகிப்பாளர்கள் பணம் , நேரம் போன்றவற்றை வீண் விரயம் செய்வது பரவலாக உணரப்படுகிறது , எனவே , வீண் அவ்வாறே மொபைல் போனை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் உடல் நலத்திற்குரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆக , 
மொபைல் போன் அருட்கொடைகளில் ஒன்றாக கருதப்படும் மொபைல் போனை  வரையறைகளுக்குள் பயன்படுத்தி நன்மைகளை அடைய முயற்சி செய்வோம்.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!