இன்றைய நவீன கால கட்டத்தில் வாட்ஸ் அப் பயன்படுத்துவது இளைஞர்களின் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அவர்களுக்கு என்றே புதிய வரப்பிரசாதமாக இண்டர்நெட் இல்லாமல் ஒரு சிம் மூலமாக (what sim) வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் வசதியை இத்தாலியைச் சேர்ந்த மேனுவல் ஜனில்லா கண்டுபிடித்துள்ளார்.. இந்த வாட் சிம்மை பயன்படுத்தி, உலகம் முழுவதும் உள்ள நண்பர்களுக்கு மெஸேஜ் அனுப்பலாம். இதற்கு வை-பை வசதியோ அல்லது டேட்டா கார்டு இணைப்போ அவசியம் இல்லை.
வாட் சிம் குறித்த ரிப்போர்ட் தற்போது வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் போது சிம்மிற்கு நாம் ரீசார்ஜ் செய்யும் டேட்டா அளவிற்கே பயன்படுத்த முடியும். டேட்டா தீர்ந்துவிட்டால் பயன்படுத்த முடியாது. அதன்பின் பயன்படுத்த மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இதன் காரணமாக நாம் பயணத்தின் போது சிரமம் ஏற்படும்..
எனவே இதற்கு மாற்றான தீர்வை வாட் சிம் என்ற புதிய சிம்மை, இத்தாலியைச் சேர்ந்த ஜீரோ மொபைல் நிறுவனம் உலகம் முழுவதும் 150 நாடுகளில் 400 மொபைல் ஆப்ரேட்டர்களுடன் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சிம்மை பயன்படுத்தி, யாருக்கு வேண்டுமானானும் மெஸேஜ் அனுப்ப முடியும். இருக்கும் இடத்தில் இருந்து உலகின் எந்த மூளைக்கு சென்றாலும், அதற்கு ஏற்பே வேறு நெட்வொர்க் மாறிவிடும். இதற்கு ரோமிங் கட்டணம் கிடையாது. நீங்கம் செல்லும், மாநிலம் , அல்லது நாட்டில் உங்களுக்கு எந்த சிக்னல் சிறப்பாக கிடைக்கிறதோ, அது தானாக கனெக்ட்டாகி விடும். இந்த சிம், பயணம் செய்பவர்களுக்கு வரப்பிரசாதமாகும். தங்களது அன்பானவர்களுடன் எப்போதும் வாட்ஸ் அப்பில் இணைந்திருக்கலாம்.
வாட் சிம்மின் விலைஇந்த சிம்மின் விலை வெளிநாட்டு பண மதிப்பில் 10 பவுண்டு என்றும் இந்திய மதிப்பில் ரூ 714 என்று சிம்மை கண்டுபிடித்துள்ள ஜீரோ மொபைல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வாட் சிம் ஆயுட் கால சிம்மாகும்.
ஆனால் இந்த சிம்மில் மெஸேஜ் மட்டுமே இலவசமாக அனுப்ப முடியும், மல்டிமீடியா மெஸேஜ்களான போட்டோ, வீடியோ, ஆடியோ பைல்களை இலவசமாக அனுப்ப முடியாது. அதற்கு நாம் தனியாக ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.
இருந்தபோதிலும் இதில் சில வசதிகளை அந்த சிம் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி கிரெடிட் பாயிண்டுகளை கலெக்ட் செய்து கொண்டால் அதற்கு ஏற்றவாறு இலவசமாக அனுப்ப முடியும். இந்தியாவில் 150 கிரெடிட்டுகளை கலெக்ட் செய்தால் போட்டோக்களையும், 600 கிரெடிட்டுகளை பெற்றால் வீடியோ மெசேஜ்களையும், 30 கிரெடிட்டுகளை பெற்றால் வாய்ஸ் மெசேஜ்களையும் இலவசமாக அனுப்ப முடியும். வெளிநாட்டு பண மதிப்பில் குறைந்த பட்சம் 5 பவுண்டுக்கு ஒரு ரீசாரஜ் செய்தால், 1000கிரெடிட்டுகளை பெறலாம். அதிகபட்சமாக 50 பவுண்டுகள் ரீசார்ஜ் செய்து கொண்டு 10000 கிரெடிட்டுகளை பெற முடியும்.. இதன் இந்திய மதிப்பிற்கு ஏற்ப நாமும் ரீசார்ஜ் செய்து கொண்டு கிரெடிட் பாயிண்டுகள் பெறலாம்.
0 comments :
Post a Comment