Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

Saturday, January 24, 2015

இண்டர்நெட் இல்லா வாட்ஸ் அப் வசதி!?

இண்டர்நெட் இல்லாமல் வாட்ஸ் அப்பை "சிம்" மூலம் பயன்படுத்தும் வசதி: இத்தாலி நிறுவனம் கண்டுபிடிப்பு.

இன்றைய நவீன கால கட்டத்தில் வாட்ஸ் அப் பயன்படுத்துவது இளைஞர்களின் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அவர்களுக்கு என்றே புதிய வரப்பிரசாதமாக இண்டர்நெட் இல்லாமல் ஒரு சிம் மூலமாக (what sim) வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் வசதியை இத்தாலியைச் சேர்ந்த மேனுவல் ஜனில்லா கண்டுபிடித்துள்ளார்.. இந்த வாட் சிம்மை பயன்படுத்தி, உலகம் முழுவதும் உள்ள நண்பர்களுக்கு மெஸேஜ் அனுப்பலாம். இதற்கு வை-பை வசதியோ அல்லது டேட்டா கார்டு இணைப்போ அவசியம் இல்லை.

வாட் சிம் குறித்த ரிப்போர்ட் தற்போது வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் போது சிம்மிற்கு நாம் ரீசார்ஜ் செய்யும் டேட்டா அளவிற்கே பயன்படுத்த முடியும். டேட்டா தீர்ந்துவிட்டால் பயன்படுத்த முடியாது. அதன்பின் பயன்படுத்த மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இதன் காரணமாக நாம் பயணத்தின் போது சிரமம் ஏற்படும்..

எனவே இதற்கு மாற்றான தீர்வை வாட் சிம் என்ற புதிய சிம்மை, இத்தாலியைச் சேர்ந்த ஜீரோ மொபைல் நிறுவனம் உலகம் முழுவதும் 150 நாடுகளில் 400 மொபைல் ஆப்ரேட்டர்களுடன் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சிம்மை பயன்படுத்தி, யாருக்கு வேண்டுமானானும் மெஸேஜ் அனுப்ப முடியும். இருக்கும் இடத்தில் இருந்து உலகின் எந்த மூளைக்கு சென்றாலும், அதற்கு ஏற்பே வேறு நெட்வொர்க் மாறிவிடும். இதற்கு ரோமிங் கட்டணம் கிடையாது. நீங்கம் செல்லும், மாநிலம் , அல்லது நாட்டில் உங்களுக்கு எந்த சிக்னல் சிறப்பாக கிடைக்கிறதோ, அது தானாக கனெக்ட்டாகி விடும். இந்த சிம், பயணம் செய்பவர்களுக்கு வரப்பிரசாதமாகும். தங்களது அன்பானவர்களுடன் எப்போதும் வாட்ஸ் அப்பில் இணைந்திருக்கலாம்.

வாட் சிம்மின் விலைஇந்த சிம்மின் விலை வெளிநாட்டு பண மதிப்பில் 10 பவுண்டு என்றும் இந்திய மதிப்பில் ரூ 714 என்று  சிம்மை கண்டுபிடித்துள்ள ஜீரோ மொபைல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வாட் சிம் ஆயுட் கால சிம்மாகும்.

ஆனால் இந்த சிம்மில் மெஸேஜ் மட்டுமே இலவசமாக அனுப்ப முடியும், மல்டிமீடியா மெஸேஜ்களான போட்டோ, வீடியோ, ஆடியோ பைல்களை இலவசமாக அனுப்ப முடியாது. அதற்கு நாம் தனியாக ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.

இருந்தபோதிலும் இதில் சில வசதிகளை அந்த சிம் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி கிரெடிட் பாயிண்டுகளை கலெக்ட் செய்து கொண்டால் அதற்கு ஏற்றவாறு இலவசமாக அனுப்ப முடியும்.  இந்தியாவில் 150 கிரெடிட்டுகளை கலெக்ட் செய்தால் போட்டோக்களையும், 600 கிரெடிட்டுகளை பெற்றால் வீடியோ மெசேஜ்களையும், 30 கிரெடிட்டுகளை பெற்றால் வாய்ஸ் மெசேஜ்களையும் இலவசமாக அனுப்ப முடியும். வெளிநாட்டு பண மதிப்பில் குறைந்த பட்சம் 5 பவுண்டுக்கு ஒரு ரீசாரஜ் செய்தால், 1000கிரெடிட்டுகளை பெறலாம். அதிகபட்சமாக 50 பவுண்டுகள் ரீசார்ஜ் செய்து கொண்டு 10000 கிரெடிட்டுகளை பெற முடியும்.. இதன் இந்திய மதிப்பிற்கு ஏற்ப நாமும் ரீசார்ஜ் செய்து கொண்டு கிரெடிட் பாயிண்டுகள் பெறலாம்.

Saturday, January 10, 2015

கணினி அடிக்கடி பாதிப்பு சரிசெய்ய!?

கணினியில் ஏதாவது பிரச்சனையா, என்னமோ ஆயிடுச்சு என்று பதறி அடித்துக்கொண்டு கம்ப்யூட்டர் பொறியாளரை அழைக்காமல் உங்களால் என்ன செய்ய முடியும் என்று பாருங்கள். ஒரு சிறிய பிரச்சனைகளுக்காக ரிப்பேர் செய்பவரை அழைத்தால், இது தான் சந்தர்ப்பம் என உங்களிடம் கறக்க முடிந்த அளவு கறந்துவிடுவார்.

எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் முதலில் உங்கள் கணினியில் ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். ரீஸ்டார் செய்தும் பிரச்சனை நீடித்தால், இதற்கு முன் கணினியின் ஓஎஸ் அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை சரி பார்த்து கொள்ளுங்கள், சரியான அப்டேட் செய்யப்படாத சமயங்களில் பாதிப்புகள் அதிகம் ஏற்படும்.

கணினியில் அடிக்கடி ஏற்படும் சில பாதிப்புகளும் அதை சரி செய்யும் முறைகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கணினி வேகம் குறைவாக இருக்கின்றது: ஓஎஸ் இருக்கும் ஹார்டு டிரைவ் ஸ்பேஸ் கனிசமான அளவு காலியாக இருக்க வேண்டும், அவ்வாறு இல்லாத சமயத்தில் ஸ்பேஸ் காலி செய்வது அவசியமாகின்றது. மேலும் temp பைல்களை அடிக்கடி நீங்கவேண்டும். அதற்கு ccleaner மென்பொருள் உபயோகிக்கலாம்.

நீண்ட நேரம் எடுக்கும் பதிவிறக்கங்கள்: நீங்கள் அதிவேக இன்டெர்நெட் உபயோகப்படுத்தியும் குறைவான வேகத்தில் பைல்கல் டவுன்லோட் ஆகும். முதலில் உங்கள் இன்டர்நெட்டின் வேகத்தை speedtest.net என்ற இணையதளத்தின் மூலம் சரிபார்த்துக்கொள்ளுங்கள். ஸ்பீட் குறைவாக காட்டினால் இன்டர்நெட் நிறுவனம் வழங்கிய கனெக்ஷன் குறைபாடு. அதேவேகம் காட்டியும் டவுன்லோட் ஆகவில்லையெனில் உங்கள் கணினியில் idm டவுன்லோடர் உபயோகியுங்கள்.

ரீஸ்டார்ட்டிங்: சில ஹார்டு வேர் பிரச்சனைகளை சரி செய்வது சிரமமாக தான் இருக்கும். கணினி அடிக்கடி ரீஸ்டார்ட் ஆவதற்கு முக்கிய காரணம் வைரஸ், ஆட்வேர், அதிக படியான சூடாக இருக்கலாம். கணினியில் விசித்திர சத்தம் கேட்டால் அதை கழற்றி நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.

பாப் அப்: இன்டெர்நெட் பயன்படுத்தாமல் இருந்தாலும் கணினியில் நிறைய விளம்பரங்கள் தெரிகின்றதா, அப்படியானால் உங்க கணினியில் ஆட்வேர் இன்ஸ்டால் செய்திருப்பீர்கள், இதை சரி செய்ய நிறைய டூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில பிசி ஸ்பீடு அப், பிசி ஸ்பீடு ப்ரோ, இவைகளில் எதையாவது பயன்படத்தலாம்.

கூகுள்: ப்ரவுஸர் ஹைஜாக் செய்பவர்கள் உங்களது தகவல்களை கூகுள் தேடல்களின் மூலம் சுலபமாக களவாட முடியும், இதை தவிற்க ரியல்-டைம் ஆன்டிவைரஸ் பயன்படுத்துவது சிறந்தது.

வைபை: அடிக்கடி வைபை கனெக்ஷன் டிஸ்கனெக்ட் ஆனால் கணினி வைபை வட்டத்தில் இருக்கின்றதா என்பதை பாருங்கள், பின் கணினியின் வயர்லெஸ் டிரைவ்கள் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் சரி பார்த்துக் கொள்ளுங்கள். வேறு ஏதேனும் பிரச்சனை இருந்தால், single click solve internet problem மென்பொருள்களை உபயோகப்படுத்துங்கள்.

இன்டெர்நெட் பாதுகாப்பு: இணைய பாதுகாப்பு சான்றிதழ் சரி இல்லை என்ற பிரச்சனையா, பழைய கணினிகளில் சிமோஸ் பேட்டரி சரியாக வேலை செய்யாததால் இந்த பிரச்சனை ஏற்படுகின்றது, அதை சரி செய்ய கணினியின் நேரம் மற்றும் தேதியை சரியாக வைத்தாலே போதுமானது.

ப்ரின்டர்: ப்ரின்டர் அப்டேட் சரியாக இருக்கின்றது, போதுமான பேப்பர் மற்றும் டோனர் என அனைத்தும் சரியாக இருக்கும் போதும் ப்ரின்ட் ஆகவில்லை என்றால், ப்ரின்டரை முழுமையாக கழற்றி மாட்டவும், அதன் பின் ப்ரின்டர் ஆஃப்லைன் சரி பார்க்க வேண்டும்.

ஈமெயில் அட்டாச்மென்ட்: சில சமயங்களில் ஈமெயில் அட்டாச்மென்ட் டவுன்லோடு ஆகவில்லை என்றால், ஈமெயில் ஃபைல் எம்மாதிரியானது என்பதை பாருங்கள், அதன் பின் ஃபைல் எக்ஸ்டென்ஷனை ரீனேம் செய்தால் வேலை முடிந்தது.

மென்பொருள்: அதிகம் பயன்படுத்தும் மென்பொருள் புதிய கணினியில் வேலை செய்யாவிட்டால் ஜாவா மற்றும் ப்ளாஷ் ஸ்க்ரிப்ட்கள் தான் முக்கிய காரணமாக இருக்கும், இவைகளை அனைத்து பிரவுஸர்களும் இன்ஸ்டால் செய்ய உதவும்.

Monday, November 3, 2014

Pendrive ல் இருக்கும் ஆனா இருக்காது!?

தகவல்களை சேமித்து வைக்க பெரும்பாலான நபர்கள் USB Pendrive-களை பயன்படுத்துவார்கள். இதில் முக்கியமான பிரச்னை வைரஸ் பிரச்னை, வைரஸ்கள் மிக சுலபமாக Pendrive-ல் புகுந்து, தகவல்களை பாதிக்கிறது. அப்போது கணனியில் Pendrive-வை ஓபன் செய்தால் எந்த தகவலும் இருக்காது. ஆனால் Properties சென்று பார்க்கும் போது பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும்.

கோப்புகளை மீண்டும் திரும்ப பெறுவதற்கு, எந்தவொரு மென்பொருளையும் உங்கள் கணனியில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை.

இதற்கு முதலில்,

1. Pendrive-யை கணனியில் சொருகி கொள்ளுங்கள்.

2. Start –> Run –> cmd –> Enter கொடுக்கவும்.

3. இப்போது உங்கள் Pendrive எந்த டிரைவில் இருக்கிறது என பாருங்கள். இதற்கு My Computer சென்று தெரிந்து கொள்ளலாம்.

4. உதாரணமாக E: டிரைவில் Pendrive இருக்கிறது என வைத்து கொள்வோம், அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

5. அதன் பின் attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள், ஒவ்வொரு பகுதிக்கும் Space சரியாக கொடுக்கவும்.

சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள், உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.

Saturday, October 25, 2014

நம்மிடம் வந்த ஒரு முகநூல் கேஸ்!?

ஒரு பெண் திருமணமானவர் ஒரு பெண் குழந்தை உண்டு கணவரும் அப்பாவும் வெளிநாட்டில் இவர் அம்மாவின் பராமரிப்பில் (இந்தம்மா பேஸ்புக்கில்).

அடிக்கடி மகளின் படத்தை முகநூலில் இட்டு லைக் வாங்குவார் கமெண்ஸில் பூரிப்பார் ,இவ்வழியில் நட்பில் இணைந்தார் ஒருவர். அவர் மகளைப் புகழ்ந்து அடிக்கடி இன்பாக்ஸ்இல் ஜொள்ளு வடித்திருக்கிறார் ,ஒருநாள் "இந்த குட்டி இவளோ அழகா இருக்கே இவங்கள பெத்த அம்மா எவளோ அழகா இருப்பாங்க ப்ளீஸ் ஒரு போட்டோ காட்டக்கூடாதா?" என் வழிந்துள்ளார்.

பெண் அப்படியே அங்கமெல்லாம் பூரித்து ஒரு படத்தை அனுப்பிவிட்டார்- அடுத்து அதை பார்த்த நபர் "என்னங்க க்ளோஸாவே இல்ல இன்னொரு படம் நல்ல மேக்கப் போட்டு க்ளோஸா அனுப்புப்பா என்றதும் (பெண் உஷாராகி "உங்க படம் அனுப்புங்க அப்பதான் நான் அனுப்புவேன் என்று சொல்ல) அவர் ஒரு பிரபலமல்லாத ஹிந்தி மாடலிங் ஆளின் படத்தை அனுப்பி இது நான் தான் இப்ப கொஞ்சம் கருத்துட்டேன் துபாய் ல என் வேலை அப்படி என்று புளுகியிருக்கார்.

பொண்ணு அவர் அழகுல மயங்கி அவர் கேட்ட போதல்லாம் டிசைன் டிசைனா படம் எடுத்து அனுப்பிடுச்சு ஆனால் அண்ணன் அப்பறம் தான் வேலையை காட்ட ஆரம்பிச்சிருக்கார்.

அசிங்கமான படங்கள் கேட்டு தொல்லை ,இந்த பெண் சந்தேகம் கொண்டு உங்க அம்மா தங்கை படமிருந்தால் எனக்கு அனுப்புங்க என்று கேட்க அவர் மறுத்துவிட்டார்(அப்படி யாரும் இருந்தாதானே அனுப்புவான் இந்த நாயெல்லாம் என்னைக்கோ குடும்பத்தை விட்டு விரட்டி இருப்பாங்க).

மேற்கொண்டு படங்கள் அனுப்பாத காரணத்தால் அவன் மிரட்ட ஆரம்பிக்க இந்த பொண்ணுக்கு டர்ர்ர்ரு ஸ்டார்ட்.

அவன் மேல் இருந்த அதீத நம்பிக்கையில் துபாயில் அவள் கணவர் தந்தை இருக்கும் இடங்களையும் தெரிவித்திருக்கிறாள் - இதுபோதும் அவனுக்கு அவளை மிரட்ட அவள் கெஞ்சியும் அவன் விடவில்லை இந்தப்பெண் ப்ளாக் செய்தும் அவன் வேறு பெயர்களில் முன்பே நட்பில் இணைந்திருந்தபடியால் தப்பிக்க முடியவில்லை.

உதவி கேட்டு நம் சகோதரர் ஒருவரை அனுகவே அவர் உன் ஐடியை டீஆக்டிவேட் செய் வேறு ஐடியில் அவன் நட்பு வட்டத்து பெயர்களை (mutual friends )இணைக்க வேண்டாம் என்றும் அந்நிய ஆடவருடன் சகஜமாக பேச உங்களுக்கு எப்படி துணிச்சல் வருகிறது என்றும் உங்கள் குடும்பத்தில் உங்களுக்கு கொடுக்கப்படும் சுதந்திரத்தை ஏன் இப்படி அசிங்கப்படுத்துகிறீர்கள் என்றும் செமத்தியாக திட்டி அனுப்பினார்.

அடுத்தவன் யாரென்றே தெரியாமல் எப்படி அவன் அனுப்பிய படத்தை நம்பினாய்,உன் புருஷனை விட அந்த கேவலப்பட்ட நாய் எந்த விதத்தில் உயர்ந்தவன் ,வெளிநாட்டில் இருக்கும் உன் கணவன் உன்னோடு பேசிக்கொள்ளத்தானே இந்த அனுமதியை உனக்கு வழங்கியுள்ளான் அதை நீ அத்துமீறலாமா? என்று அறிவுரை கூறப்பட்டது.

பெண்களே! முகநூல் ஒரு இருள் உலகம் இங்கு எல்லோருக்கும் ஒரு கரிய முகம் உண்டு உங்கள் படங்களை எத்தன்மை வாய்ந்ததாயினும இங்கு பதிவிட வேண்டாம்.

உங்களை அறிந்த மக்கள் நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்பதை நன்கறிவார்கள் அதுபோல நீங்கள் அறியாத நண்பர்கள் எத்தன்மைவாய்ந்தவர் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்!

அப்படி கட்டாயம் உங்கள் முகத்தை வெளிப்படுத்தியே ஆகவேண்டும் என்றால் அதனால் வரும் பின்விளைவுகள் மற்றும் இழப்புகளை தாங்கிக்கொள்ள தயாராய் இருங்கள்!

அந்த துணிச்சல் இருந்தால் இந்த அறிவுரையை தூக்கி எறியுங்கள் ! செல்போன்கள் எதிர்விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. இதில் பாதிக்கப்படுபவர்கள் குறிப்பாகப் பெண்கள் தான். 

அறிமுகம் இல்லாத நபர்களிடம் உங்கள் செல்போன் எண்ணை பகிர்ந்துகொள்வதை தவிர்த்துவிடுங்கள். தேவையற்ற நபர்களிடம் தேவையற்ற பேச்சுக்கள் அறவே வேண்டாம். அறிமுகம் இல்லாத, அவ்வளவாக பழக்கமில்லாத நபர்களிடம் சொந்த தகவல்களை பகிர்வது, வீட்டுக்குள் அனுமதிப்பது போன்ற செயல்களையும் பெண்கள் கட்டாயம் தவிர்த்துவிடுங்கள். விக்கிறவனுக்கு ஒரு கண் போதும், வாங்குகிறவனுக்குத் தான் ஆயிரம் கண்கள் வேண்டும் என்றொரு பழமொழி தமிழில் உண்டு. அது போல ஆண்களை விட பெண்கள் எப்போதும் ஒரு படி மேலே ஜாக்கிரதை உணர்வோடு செயல்பட்டால் இது போன்ற சுய கவுரவத்திற்கு இழுக்கு ஏற்படும் நிலைமையிருந்தும், சமூக நெருக்கடிகளில் இருந்தும், பல இழப்புகளிலிருந்தும் தங்களை காப்பாற்றிக் கொள்ளமுடியும்.

Friday, August 29, 2014

இணையத்தில் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்!?

இணையத்தில் கண்காணிக்கப்படுவதும், கவனிக்கப்படுவதும்தான் இப்போதைய இணைய யதார்த்தம். தேடியந்திரங்களில் துவங்கி மின்வணிக தளங்கள் வரை எல்லா விதமான தளங்களும் இணையவாசிகளின் ஒவ்வொரு அடியையும் கவனித்து குறிப்பெடுக்கின்றன.

அதாவது டிராக் செய்கின்றன. பொருத்தமான விளம்பரத்தை அளிக்கவும், பயனாளியின் எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு செயல்படவும் இவ்வாறு செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் அரசுகள் இமெயில் வாசகங்களையும் தேடல் பதங்களையும் கண்காணித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டுமா? அதற்கான எளிய வழியை மொசில்லா (Mozilla) முன் வைத்துள்ளது. பிரபலமான இணைய உலாவியான பயர்பாக்ஸ் பின்னே இருக்கும் மொசில்லா அமைப்பு இதற்காக ‘லைட்பீம்’ (Light Beam) எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

பயர்பாக்ஸ் உலாவிக்கான சேர்க்கையாக (add on) அறிமுகமாகியுள்ள இந்த சேவையை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் இணையத்தில் உலாவும்போது எப்படி எல்லாம் உங்களைப்பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த கண்காணிப்பின் விவரங்களை இந்த சேவை காட்சிரீதியாக தோன்றச் செய்கிறது.

லைட்பீம் சேவையை உலாவியில் இயக்கியதும், இணையதளத்திற்கு செல்லும் போதெல்லாம் அந்த தளத்தில் இருந்து உங்களைப் பற்றிய விவரங்கள் எப்படி சேகரிக்கப்படுகின்றன என்பது வரைபட சித்திரமாக காட்டப்படுகிறது. எந்த தளங்கள் எல்லாம் தகவல்களை சேகரிக்கின்றன என்பதை இந்த வரைபடம் உணர்த்தும். முதல் தளத்தில் இருந்து அடுத்த தளத்திற்கு செல்லும் போது அந்த தளத்தில் எப்படி விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன என்பதும், இந்த தளங்களிடையே உள்ள பரஸ்பர தொடர்பையும் தெரிந்து கொள்ளலாம்.

குறிப்பிட்ட பகுதியில் கிளிக் செய்தால் கண்காணிப்பின் இயல்பு பற்றிய மேலதிக விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இந்த வரைபடத் தோற்றம் தவிர, கடந்த 24 மணி நேரத்தில் எந்த தளங்கள் விவரங்களை சேகரித்தன என்பதையும் தெரிந்து கொள்ளும் வசதி இருக்கிறது.

இணையத்தில் கண்காணிப்பு எப்படி செயல்படுகிறது, நீங்கள் உலாவும் தளங்கள் எப்படி மற்ற தளங்களுடன் உங்கள் இணைய நடவடிக்கை விவரங்களை பகிர்ந்து கொள்கின்றன போன்ற விஷயங்களை இதன் மூலம் நீங்கள் புரிந்து கொள்ளலாம். கண்காணிப்பை அடையாளம் காட்டும் இந்த சேவை மூலமான தகவல்கள் எதுவுமே சேகரிக்கப்படுவதில்லை என்கிறது மொசில்லா. ஆனால் நீங்கள் விரும்பினால் இந்த விவரங்களை பகிர்ந்து கொள்ள முன் வரலாம். கண்காணிப்பு விவரங்களை புரிந்து கொள்வதற்கான பொது கையேட்டிற்கு இதன் மூலம் பங்களிக்கலாம் என்கிறது மொசில்லா.

கடந்த 2011-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கொல்யூஷன் எனும் வசதியின் நீட்சியாக இந்த லைட்பீம் உருவாகி இருக்கிறது.

Saturday, July 5, 2014

ஆபாச தளங்களை பார்க்காமல் பாதுகாக்க!?

அநேகமாக நம் எல்லோரது வீட்டிலும் லேப்டாப் இருக்கிறது இதனை நாம் மனைவி பிள்ளைகள் என எல்லோரும் தினசரி உபயோகப் படுத்துகிறோம். பல தகவல்களை Google ல் நாம் தேடும் போது யதேச்சையாகவோ அல்லது தவறான ஸ்பெல்லிங் ஏற்படும் போதோ ஆபாசமான தகவல்கள், மற்றும் படங்கள் என வந்து மிகுந்த தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விடுகின்றது என்பது உண்மையே இதனை சீர் செய்ய இந்த பதிவு மிகுந்த உபயோகமாக இருக்கிறது.


எனவே முடிந்தவரை பலருக்கும் இதை SHARE செய்யுங்கள் என கேட்டுக் கொள்கிறேன் ஆபாச தகவல் Google தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..? நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம்..


முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள். பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள். அல்லது http://www.google.com/preferences ஓபன் பண்ணுங்கள்.. Safe serch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள் அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள். Locking Process நடைபெறும் பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள். 

அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்த அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் . நீங்கள் இதனை Unlock செய்ய மீண்டும் Search setting சென்று unlock என்று மாற்றிவிடுங்கள். google எவ்வளவு பாதுகாப்பானது பாருங்கள்  Setting போய் பாத்துட்டு அட ஆமா இருக்கு'ல ன்னு சும்மா இருக்காம... setting correct' பண்ணுங்க. ஆமா!!.

Monday, April 7, 2014

இணையத்தில் இலவசமாக பெற!?

என்னதான் மென்பொருள் மற்றும் விளையாட்டுக்கள் இலவசமாக download செய்தாலும் அதை நாம் குறைந்தது 15 நாட்கள் அல்லது அதிகமாக 40 நாட்கள் மட்டுமே உபயோகிக்க முடியும், அதற்கு பிறகு அந்த மென்பொருள் Register பன்ன வேண்டும் என ஒரு செய்தியை எமக்கு காட்டும். 

அப்படி நாம் பயன்படுத்தும் 15 அல்லது 40 நாட்களில் அதனுடைய பயனை நாம் முழுமையாக அடைந்து கொள்ள முடியாது. அதாவது குறிப்பிட்ட வசதியை மட்டும் தான் தருவார்கள்.

மென்பொருளுடைய சீரியல் நம்பரை வழங்குவதன் மூலம் அந்த மென்பொருளுடைய உண்மையான பயனை நாம் அனுபவிக்க முடியும். அதாவதுஅனைத்து வசதிகளையும் பெற்றுக்கொள்ள முடியும். இதெல்லம் உண்மைதான் ஆனால் நமக்கு Trial version தான் இலவசமாககிடைக்கும் என்று தெரியும் அதற்கான சீரியல் நம்பரும் கிடைப்பதென்பது சில பேருக்கு தெரியாமல் இருக்கலாம். (அதான் இப்ப தெரிந்து விட்டதே), குறிப்பிட்ட மென்பொருளுடைய சீரியல் நம்பரை இலவசமாகத்தர சில இணையத்தளங்கள் இருக்கின்றன அவை:


01 http://www.youserials.com/
02 http://www.egydown.com/
03 http://serialnumber.in/
04 http://www.serials4u.com/
05 http://www.serialhint.com/
06 http://www.cserial.com/
07 http://www.serials.be/
08 http://www.findserialnumber.com/

நீங்கள் தேடும் மென்பொருளுடைய சீரியல் நம்பர் கிடைக்கா விட்டல் ஒரு வாரம் அல்லது இரண்டுவாரத்திற்கு பிறகு அங்கு சென்று தேடினீர்கள் என்றால் கிடைக்கும்.

Tuesday, February 18, 2014

ஏ.டி.எம். வசதிக்கு பின்னால் சில பிரச்சினை!?

வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதை ஒரு நிமிடத்திலேயே முடித்துத்தரும் ஏ.டி.எம். இந்த ஹை-டெக் யுகத்தில் நமக்கெல்லாம் வரப்பிரசாதம்தான். ஆனால் எந்த ஒரு வசதிக்கும் பின்னால் சில பிரச்னைகள் ஒளிந்திருக்கும்.

ஏ.டி.எம். பயன்படுத்தும் போது நீங்கள் மிகவும் பாதுகாப்பாக உங்கள் பணத்தைக் கையாள உதவும் வகையில் இதோ சில டிப்ஸ்கள்:

வரிசையில் நின்று பணம் எடுக்கும் அளவுக்கு பிஸியாக இருக்கும் ஏ.டி.எம். பூத்துகளையே தேர்ந்தெடுங்கள். அதுபோல ஒரே அறையில் இரண்டு மெஷின்கள் இயங்கும் பூத்துகளை இரவு வேளைகளில் பயன்படுத்துவதை தவிருங்கள். ஏ.டி.எம்.மைப் பயன்படுத்தும் ஆரம்பகாலத்தில் நம்பிக்கையான ஒருவரின் துணை அவசியம்.

பெரியகடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகளில் கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதி இருக்கிறது. சில நாணயக் குறைவான நிறுவனங்களில் உங்கள் கார்டை தேய்த்துப் பணம் பெற்ற பிறகு, ரகசியமாக தாங்கள் வைத்திருக்கும் இன்னொரு மெஷினிலும் தேய்த்துக் கொள்வார்கள். இதன் மூலம் உங்கள் கார்டின் அனைத்து விவரங்களும் அந்தத் திருட்டு மெஷினில் பதிவாகிவிடும். பிறகு ஒரு போலி கார்டைத் தயாரித்து உங்கள் பணத்தை அபேஸ் செய்துவிடுவார்கள். எனவே உங்கள் கார்டை தேய்க்கும் போது உங்கள் கண்கள் அதிலேயே கவனமாக இருக்க வேண்டும் என்பதை மறவாதீர்கள்.

முடிந்த மட்டிலும் உங்கள் கணக்கு இருக்கும் வங்கியின் ஏ.டி.எம்.மைப் பயன்படுத்துவதே சிறந்தது. இதனால் சிலசமயம் பணம் வருவதில் கோளாறு ஏற்பட்டாலோ, அல்லது பணம் வராமல் தொகை உங்கள் கணக்கில் கழிக்கப்பட்டாலோ மேற்கொண்டு நாம் எடுக்க வேண்டிய முயற்சிகளுக்கான நடைமுறைகள் கொஞ்சம் எளிதாக இருக்கும்.


(வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே தற்போது ஏ.டி.எம். பரிவர்த்தனை வாயிலாக பணத்தை ரொக்கமாக பெற முடியும்.வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு, வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அனுப்பும் பணத்தை ஏ.டி.எம். மூலம் பெறும் வசதியை அறிமுகப்படுத்துவதற்கு ரிசர்வ் வங்கி கொள்கை அளவில் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.).

Sunday, January 26, 2014

குப்பை தொட்டியாகும் இந்தியா !?

ஜெர்மன் நாட்டில் பெர்லின் நகரில் வசிக்கும் நண்பர் ஒருவர், சமீபத்தில் சென்னை வந்து இருந்தார். பெங்களூரு அவரது சொந்த ஊர். ஜெர்மனியில் குடியேறி 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அங்கு, "பென்ஸ்' மோட்டார் தொழிற்சாலையில், "பிட்டர்' ஆக வேலை செய்கிறார். உடைந்த தமிழில் பேசுவார்.

பிட்டராக இருந்தாலும் விபவரமானவர்; பல சப்ஜெக்ட்களிலும் ஞானம் உள்ளவர். அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது, பலஅரிய தகவல்கள் கிடைத்தன.

அது தம்பி... இப்போது இந்தியாவுலே பென்ஸ் கார் 45 லட்ச ரூபாய்க்கு கூட கிடைக்குது. ஆஹா ஜெர்மன் நாட்டு கார்ன்னு பணக்காரங்களும், பெரிய தொழில் அதிபர்களும் போட்டி போட்டுக்கிட்டு வாங்கறாங்க. இந்தக் கார்ல இருக்கிற பல முக்கியமான பாகங்கள், கியர் பாக்ஸ் உட்பட, இந்தியாவுலே, "டாட்டா' கம்பெனியிலே செஞ்சு, ஜெர்மனிக்கு வருது. நாங்க, அதை அங்கே பூட்டி, பல நாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கிறோம்!.

இதுக்கு காரணம் என்ன தெரியுமா? ஜெர்மனியிலே அந்த பாகங்களை உற்பத்தி செய்ய ஆகும் செலவில் கால்வாசி செலவு தான் ஆகிறது இந்தியாவில். நாங்கள், எங்களுக்குத் தேவையான டிசைன் மற்றும் மூலப் பொருட்களைக் கொடுத்து விடுகிறோம்... இங்கே லேபர், "சீப்!' அது ஜெர்மானியர்களுக்கு பெரிய, "அட்வான்டேஜ்' ஆகிப் போகிறது.

இந்தியாவில் லேபர் எவ்வளவு, "சீப்' என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன் கேட்டுக்க தம்பி...' என்றவர், தம் சட்டைப் பையில் இருந்து, ஒரு காகிதத்தை எடுத்துப் படித்துக் காட்டினார்.

ஒரு ஜெர்மன் தொழிலாளிக்கு குடுக்கற சம்பளத்திலே இரண்டு அமெரிக்க தொழிலாளியை வேலைக்கு அமர்த்தலாம்... இல்லே, தைவான் நாட்டுத் தொழிலாளி ஐந்து பேரையோ, பிரேசில் நாட்டு தொழிலாளி எட்டுப் பேரையோ வேலைக்கு வைத்துக் கொள்ள முடியும். ஆனா, இந்தியாவின் கதையோ அபாரம்... ஒரு ஜெர்மன் தொழிலாளியின் சம்பளத்தில் 128 இந்திய தொழிலாளிகளை வேலைக்கு வைத்துக் கொள்ளலாம்ன்னா பாரேன்.

இந்திய தொழிலாளியின் குறைந்தபட்ச சம்பளம் மணிக்கு 25 ரூபாய்ன்னா, ஜெர்மன் தொழிலாளியின் சம்பளம் மணிக்கு 1,150 ரூபாய்! அப்புறம் ஏன் ஜெர்மன் தொழில் அதிபர்கள், புதிய பொருளாதாரக் கொள்கை வந்த பின்னே இங்கே மூலதனத்தைக் கொட்டத் தயங்கப் போறாங்க.

கடந்த, 20 ஆண்டுகளில், இந்தியாவில் பல தொழில்களில் முதலீடுகளை செய்துள்ளனர் ஜெர்மானியர்கள்... ஆனால், இதில் சோகமான விஷயம் என்னவென்றால், சுற்றுப்புறச் சூழ்நிலைக்கும், உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கக் கூடிய பாதுகாப்பு அம்சங்கள் குறைந்த, ஜெர்மன் சட்டப்படி அங்கு தடை செய்யப்பட்ட தொழில்கள் தான் இங்கு வந்துள்ளன,' என்றார் அந்த நண்பர்.

புதிய பொருளாதாரக் கொள்கையின் மூலம் வெளிநாட்டு மூலதனத்தை இங்கே குவிப்பதை மட்டுமே அரசு கருத்தில் கொள்ளாமல், நம்நாடு குப்பைத் தொட்டிகளின் சங்கமமாகாமல் பார்த்துக் கொள்வதும் மிக, மிக அவசர அவசியம். 

Tuesday, January 21, 2014

'வைபை'க்கு டாட்டா காட்ட வருகிறது!

இனி இன்டர்நெட் பயன்படுத்த 'வைபை' வசதி இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். ஒரு பல்பை போட்டால் 'லைபை' வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். 

பல காலமாக குழந்தைகளுக்கு டிஜிட்டல் பொம்மை முதல் வீடியோ கேம் வரை, பல்பு முதல் பட்டாசு வரை எல்லாவற்றையும் மலிவு விலையில் அள்ளிக்குவிக்கும் சீனா தான் இப்போது இந்த 'பல்ப்' மூலம் இன்டர்நெட் வசதியையும் கண்டுபிடித்துள்ளது.

ஒரு வாட் பல்பை வாங்கி எரிய விட்டால் போதும், அடுத்த நொடி இன்டர்நெட்டுக்கு உயிர் வந்துவிடும். லைட்டை ஆப் செய்து விட்டால் இன்டர்நெட்டுக்கான 'லைபை' போய் விடும். ஒரு பல்பு எரியவிட்டால் நான்கு கம்ப்யூட்டர் வரைக்கும் இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும்.

விநாடிக்கு 150 மெகாபைட் வேகம் கொண்டதான இந்த ”லைபை” குறித்து இன்னும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. வர்த்தக ரீதியாக பயன்படுத்த முழு அளவில் தயாரிக்கப்படும் என்று இதை கண்டுபிடித்த ஷாங்காய் பல்கலைக்கழக பேராசிரியர் சிநான் கூறினார். லெட் வகை பல்பில் மைக்ரோசிப் பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் அலைக்கற்றைகள் எழுப்பப்பட்டு, இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்படுகிறது. சீனாவில் ஷாங்காயில் கடந்த நவம்பர் 5 ம் தேதி  சர்வதேச கண்காட்சியில் இந்த 'லைபை' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வழக்கமான "வைபை' வசதி, ரேடியோ அலைகளை கொண்டு ஏற்படுத்தப்படுகிறது. அதன் மூலம் இன்டர்நெட் உயிர்பெறுகிறது. ஆனால், இந்த ஒரு வாட் பல்பை வைத்து சீனா, இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும் என்று கண்டுபிடித்துள்ளது. மலிவு விலை பொருட்களை கண்டுபிடித்து உலக நாடுகளில் சந்தையில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ள சீனா வின் 'லைபை' கண்டுபிடிப்பால் தொழில்நுட்ப புரட்சி ஏற்படும் என்று தெரிகிறது.

சீனாவில் மட்டும் 60 கோடி பேர் இன்டர்நெட் வசதி வைத்துள்ளனர். அவர்கள் எல்லாம் 'வைபை'யில் இருந்து தங்கள் சொந்த நாட்டு கண்டுபிடிப்பான 'லைபை'க்கு மாறி விடுவர். மேலும், உலக நாடுகளில் பலவும் இந்த வசதிக்கு மாறினால், 'வைபை'க்கு டாட்டா காட்டும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று கணக்கு போடுகிறது சீனா.

Thursday, November 21, 2013

உணர்வு! செல்பேசி ரிங் அடிப்பது போல?

சிட்னி: 21ம் நூற்றாண்டில் பல ஆயிரம் பேருக்கு தொற்றியுள்ள ஒரு நோய் என்றால் அது பெனோமேனன் நோய்தான்.

அதாவது உங்கள் அருகில் அல்லது உங்கள் பாக்கெட்டில் இருக்கும் செல்பேசி ரிங் அடிப்பது போல உணர்ந்து அதை எடுத்துப் பார்க்கிறீர்கள். ஆனால் அதில் எநத அழைப்பும் வந்திருக்கவில்லை. இதுபோல பலரும் பல சமயங்களில் செய்திருப்போம். ஆனால் இதுவும் ஒரு வகை நோய் என்கிறது மருத்துவ உலகம்.

செல்பேசியை தொடர்பு கொள்ள வரும் எலக்ட்ரிக்கல் சிக்னல்கள், மனித உடலில் உள்ள நரம்புகளை தாக்கும் போது போன் அடிப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுவதாக சிட்னி பல்கலைக்கழகத்தின் சைக்காலஜி பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

Friday, September 13, 2013

தெரிந்து கொள்வோமா தடய அறிவியல்!

தடய அறிவியல் அல்லது தடயவியல் (Forensic Science) என்பது அறிவியலின் உதவியுடன் குற்றச்செயல்களை ஆராயும் ஓர் துறையாகும். குற்றம் நடந்த இடத்தில் கிடைக்கும் தடயங்களை எடுத்து, அவற்றை சோதனைச் சாலைகளில் ஆராய்ந்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் அளவிலான சாட்சியங்களாக தடயவியல் வல்லுனர்கள் மாற்றுகின்றனர். 

குருதி, எச்சில், மயிர், வாகனச் சக்கரங்கள் மற்றும் காலணிகளின் அச்சு, கைரேகை, காலடி தடங்கள் வெடிபொருட்கள், உடலின் பிற திரவங்கள், மதுபானங்கள் போன்றவற்றை தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து முக்கியமான துப்புகளைத் தருகின்றனர். அறிவியல் பூர்வமான ஆதாரங்களாக இவை அமைகின்றன. இது தவிர கையெழுத்து மோசடிகள் குறித்து ஆராய்வதும் இத்துறையில் அடங்கும். வழக்குகளை தீர்க்க உதவும் தகவல்களைச் சேகரித்து தடயவியல் வல்லுனர்கள் காவல்துறைக்கு உதவுகின்றனர். 

மருந்தியல், சோதனை, கள அறிவியல் என்ற மூன்று வகையில் தடவியல் பணி அமைகிறது. காவல்துறை, சட்டஅமலாக்க துறை, பல்வேறு வகையான சட்ட அமைப்புகள், அரசு மற்றும் தனியார் துப்பறியும் நிறுவனங்கள் முதலியன தடய அறிவியல் துறையை நாடுகின்றன.

[1]தற்காலத்தில் பெண் தடய அறிவியல் ஆய்வாளர்கள் இப்பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்: Police forensic investigation in Ashton-under-Lyne, England, using a tent to protect the crime scene. இன்று நவீன தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொள்ளப்படும் சைபர் குற்றங்கள், மருத்துவத்திற்காக பயன்படுத்தப்படும் மருந்துகளை கொண்டு நடத்தப்படும் குற்றங்கள் என குற்றத்தின் வளர்ச்சிக்கேற்ப இந்தக் குற்றங்களைக் கண்டறிய காவல்துறைக்கும், நீதித்துறைக்கும் உதவியாக இருப்பது தடய அறிவியல் ஆகும். கொலை, பாலியல் ரீதியான தொந்தரவுகளை டி.என்.ஏ மூலம் கண்டறிவது, குண்டுவெடிப்பு நடைபெற்ற இடங்களில் கிடைக்கும் தடயங்களை வைத்து அது எந்த மாதிரியான குண்டு என்று கண்டறிவது, ஒரு சில வழக்குகளில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி அல்லது ஆயுதம் எந்த வகையைச் சேர்ந்தது என்பது பற்றிய பல்வேறு முக்கிய தடயங்களை கண்டறிய தடய அறிவியல் வெகுவாக உதவி வருகிறது. பெண்களுக்கு எதிரான கொடுமைகள், போதைப் பொருட்கள் பயன்பாடு போன்ற குற்றங்களைக் கண்டுபிடிப்பதிலும், தடய அறிவியலின் பங்களிப்பு மகத்தானதாக இருந்து வருகிறது.

(2)[தொகு]தடய அறிவியல் துறையின் பயன்பாடுகள்: நடந்த குற்றத்தில் நீதியை நிலைநாட்டுவதற்கு, உண்மையை கண்கண்டறிதல், சரியான நபர்களை அடையாளம் காணுவதற்குத் தேவையான தடயங்களை எடுத்து அறிவியல் பூர்வமாக நிரூபித்தல் ஆகியவை தடய அறிவியலின் பணியாகும். மேலும் தடயவியல் வல்லுநர்கள் நேரடியாக எந்த வழக்கிலும் நுழைய முடியாது. காவல் துறை இவர்களது தேவையை கருதி அழைக்கும் போது குற்றம் நடந்த இடத்துக்கு செல்வர். குறிப்பிட்ட குற்றத்துக்கு என்று மட்டுமல்லாமல் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, குண்டுவெடிப்பு, விபத்தில் இறந்த மற்றும் சிதைந்த உடல்களை அடையாளம் காண்பது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் தடய அறிவியல் துறை மேற்கொள்கிறது.

[3][தொகு]தடயவியல் நிபுணரின் தகுதிகள்: தடய அறிவியலில் நிபுணருக்குத் தனித்திறனும், தடயங்களை மூன்றாம் கோணத்தில் பார்க்கும் அறிவும் தேவைப்படும். தருக்க சிந்தனையும், ஆர்வமும் உள்ளவராக இருக்க வேண்டும். இயற்பியல் அல்லது உயிரியல் பாடப் பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். புள்ளியியல் தொடர்பான விவரங்களும் அறிந்திருப்பது பயன்தரும். விசாரணையின் போது நடுநிலைமை வகிப்பதும், மனப்பற்றின்மை, மத சார்பின்மை இல்லாதவராக இருப்பதும் தடயவியல் நிபுணருக்குரிய இன்றியமையாத தகுதிகளில் ஒன்று.

[4] [தொகு]பிரிவுகள்: தடய அறிவியலில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. அவைகளுள் சில: கைரேகை, நுண்ணுயிரியல், உளவியல், பல்லமைப்பியல் (பல், ஈறு அமைப்பியலும் நோய்களும் பற்றிய துறை, (Odontology) நோக்குறியியல் (Pathology) [தொகு]தமிழகத்தில் தடய அறிவியல்.

ஆசியாவிலே சென்னையில் தான் முதன்முதலில் (1849-ம் ஆண்டு) தடய அறிவியல் துறை ஆரம்பிக்கப்பட்டது. சென்னை உட்பட ஒன்பது மண்டல அலுவலங்கள் இருக்கிறது. மேலும் 33 இயங்கும் தடய அறிவியல் (Mobile Forensic Science Laboratory) அலுவலகங்கள் இருக்கிறது. சென்னை அலுவலகத்தில் மட்டும் அனைத்து 14 சோதனைகளையும் செய்யும் வசதி இருக்கிறது.

[5] [தொகு]இந்திய கல்வி நிறுவனங்கள்: இந்தியாவில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் தடயவியல் தொடர்பான கல்விகள் வழங்கப்படுகின்றன. மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் தடயவியல் அறிவியல் தொடர்பான மூன்றாண்டு பி.எஸ்சி. படிப்பு வழங்கப்படுகிறது. தில்லி பல்கலைக்கழகத்தில் குற்றத்தடயவியல் மாந்தவியல் (Forensic Anthropology) பிரிவில் பட்டயப்படிப்பு அளிக்கப்படுகிறது. கர்நாடக பல்கலைக்கழகத்தில் (Karnatak University) பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு குற்றவியல் மற்றும் கைரேகை அறிவியல் (Criminology and Forensic Science) விருப்பப் பாடமாகத் தேர்வு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை அண்ணா பலகலைக்கழகம் சென்னைப் பல்கலைக்கழகம் உத்தரப்பிரதேசத்தின் ஜான்சியில் உள்ள புந்தேள்கண்ட் (Bundelhkand) பல்கலைக்கழகம், ஆக்ராவில் உள்ள பீமாராவ் அம்பேத்கர் (Bhimrao Ambedkar) பல்கலைக்கழகம். ஐதராபாது ஒசுமானியா பல்கலைக்கழகம். பாட்டியாலாவில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகம். ஒரிசாவின் (ஒடிசாவில்) புவனேசுவரில் உள்ள உத்கால் (Utkal) பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தடயவியல் தொடர்பான படிப்புகள் வழங்கப்படுகின்றன.

Friday, August 30, 2013

இளிச்சவாயன் இந்திய நுகர்வோர்!?

நம்ம நாட்ல வாங்கற எந்த நிறுவனத்தின் காஸ்ட்லி மொபைலா இருந்தாலும் அது ரெண்டு வருஷத்துக்கு கூட உபயோகிக்க முடியறது இல்ல, ஏன்னா எல்லாம்  தரமின்மைதான்.

மொபைல் வாங்கின மூனு, நாலு மாசத்துக்குள்ளேயே கம்பெனியோட சர்வீஸ் சென்டர் போயிட்டு வருது. வாரண்டி முடிஞ்சு போச்சுன்னா ஏதாவது மாத்தனும்னா மொபைலோட விலையில் பாதிய கேக்கறாங்க சர்வீஸ் சென்டர்கள்ல. நல்லா இருக்கும்போதே எக்ஸ்சேஞ்சுன்னு போனா அடிமாட்டு விலைக்கு கேக்கறாங்க. எந்த நிறுவனத்தின் மொபைலா இருந்தாலும் ஏகப்பட்ட பிரச்சனைகள் வருது. ஆனா இதே மாதிரியான மொபைல்கள் எந்த கம்பெனி தயாரிப்பாக இருந்தாலும் வெளிநாட்லேந்து கொண்டு வந்து யூஸ் பண்ணா நல்லாவே இருக்கு.

நோக்கியாவின் வெளிநாட்டு தயாரிப்புகளின் தரம் இந்தியாவில் தயாரிக்கப்படும் போது இருக்கிறது இல்ல. சோனியும் அப்படித்தான். அதே மாதிரி வெளிநாட்டு தயாரிப்புகள் அங்கிருந்து இந்தியாவிற்கென தயாரித்து வரும்போது அதன் தரம் மிகவும் குறைந்துவிடுகின்றது.

இங்கே தரக்கட்டுப்பாடுகள் சரியான முறையில் கடைபிடிக்கப்படறது இல்ல. கவனிக்க வேண்டியவங்களை கவனித்துவிட்டு இப்படி தரமற்ற தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் தலையில் கட்டிவிடுகின்றார்கள்.

எல்லாவிதத்திலும் இந்தியாவில் நுகர்வோர்கள் தான் இளிச்சவாயர்களாக உள்ளார்கள்.

Monday, July 15, 2013

நாமும் இப்படி செய்து பார்த்தால் என்ன?

நண்பர்களே இரண்டு நிமிடம் ஒதுக்கி இந்த பதிவை படித்து உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். வீட்டிலேயே தயாரிக்கலாம் மின்சாரம்.

குறைந்த செலவில் வீட்டிலேயே காற்றாலையை அமைத்து மின்சாரம் தயாரித்து வருகிறார்கள் இரண்டு இளைஞர்கள்.

தமிழகத்தில் தற்போது நிலவிவரும் மின்சாரத் தட்டுப்பாட்டினால் பொதுமக்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் தங்கள் மின்சாரத் தேவைகளுக்காக, ஜெனரேட்டர் மற்றும் இன்வெர்ட்டர் ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். மின்சாரத் தட்டுப்பாட்டைத் தீர்க்க புது முயற்சியாக, உளுந்தூர் பேட்டையைச் சேர்ந்த சுரேஷ், ராமு என்ற இரு இளைஞர்கள், ஆறாயிரம் ரூபாய் செலவில் காற்றாலையை உருவாக்கியுள்ளனர்.

சுரேஷ், ஐ.டி.ஐ. படித்தவர். ராமு, எலெக்ட்ரீஷியனாக வேலை செய்து வருகிறார். பெரிய காற்றாலைகள்போல் இல்லாமல், வீட்டில் எங்கு வேண்டுமானாலும் வைத்து இயக்கக்கூடிய வகையில் இந்தக் காற்றாலையை இவர்கள் உருவாக்கியுள்ளனர்.

சுரேஷ் வீட்டின் மொட்டை மாடியில் 15 அடி உயர கம்பம் வைத்து அதில் 3 பி.வி.சி. பிளாஸ்டிக் பைப்புகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இறக்கைகளைப் பொருத்தியுள்ளனர். அதில் டைனமோவைப் பொருத்தி இறக்கைகளை சுழலுமாறு வடிவமைத்துள்ளனர். டைனமோவின் ஒரு பகுதியில் சிறிய அளவிலான சக்கரத்தை ஒரு பெல்ட் மூலம் இணைத்துள்ளனர். இதனால் காற்றின் வேகத்திற்கு ஏற்றவாறு இறக்கைகள் சுற்றும்போது அதன் மூலம் டைனமோ மின்சாரம் இயக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது.

எங்கள் வீட்டில் மின்சாரத் தட்டுப்பாட்டைப் போக்க காற்றாலை மூலம் புதிய மின் உற்பத்தியை தொடங்கத் திட்டமிட்டோம். ஆனால், காற்றாலையை உருவாக்க, எங்களுக்குப் போதுமான உதிரி பாகங்கள் கிடைக்கவில்லை. இதனால் நாங்களே உதிரி பாகங்களை உருவாக்கினோம். பி.வி.சி. பிளாஸ்டிக் பைப்களை வெட்டி இறக்கையாக மாற்றினோம். அதேபோல கிரைண்டரில் பயன்படுத்தும் சக்கரத்தை இதில் பயன்படுத்தியுள்ளோம். டைனமோவில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை, ஒரு மின் கம்பியின் உதவியுடன் பேட்டரியில் சேமிக்கிறோம்" என்கிறார் சுரேஷ்.

ஜெனரேட்டர், இன்வெட்டர் போன்ற சாதனங்களை வாங்கினால் அதிக செலவாகும். வெறும் 6 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவழித்து காற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்கலாம். இதை அனைத்து வீடுகளிலும் பயன்படுத்தலாம்" என்கிறார் ராமு.

மின்தட்டுப்பாடு இல்லாத நேரத்தில்கூட, சுரேஷின் வீட்டில் அவர் தயாரித்திருக்கும் காற்றாலையிலிருந்து பெறப்படும் மின்சாரமே பயன்படுத்தப்படுகிறது. இதனால், மாதம் ரூ.600 மின் கட்டணம் செலுத்தி வந்த சுரேஷ், தற்போது 300 ரூபாய் மட்டுமே கட்டணம் செலுத்துகிறார்.

தேசிய நெடுஞ்சாலைகள், கடலோரப் பகுதிகளில் அதிக அளவு காற்று அடிப்பதால், அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் அனைத்து தேவைகளுக்கும், காற்றைக் கொண்டு தயாரிக்கும் மின்சாரத்தையே பயன்படுத்தலாம். இதற்குத் தேவையான பொருள்களை நிறுவனங்கள் செய்து கொடுத்தால், இன்னும் குறைவான செலவில், அதிகளவில் உற்பத்தியைக் கொடுக்க முடியும்" என்கின்றனர் இந்த இளைஞர்கள்.

சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்கள் இந்த இளைஞர்களை ஊக்குவிப்பதுடன் மக்களுக்கும் உதவும் நோக்கத்துடன் செயலில் இறங்க விண்ணப்பிக்கும் தமிழ் உள்ள
ம்.

Monday, May 20, 2013

இப்படியும் அந்தரங்கத்தை படம் பிடிக்கலாம்?

வெப்கேமிரா வசதியுடன் இணையத் தொடர்பு உள்ள கணிப்பொறி உங்களிடம் இருக்கின்றதா?எச்சரிக்கையாக இருங்கள் உலகின் எந்த மூலையிலிருந்தோ நீங்கள் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.

தன்னுடைய அறையில் தான் உடைமாற்றிய காட்சி எந்த ஆபாச இணையதளத்திலோ விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதைக் கேட்ட அவள் அதிர்ந்துதான் போனாள்.

யாரும் அத்து மீறி அந்த அறைக்குள் நுழையவில்லை?எவருக்கும் மின்னஞ்சல் வழியாகவும், எந்த புகைப்படமோ வீடியோக் காட்சிகளோ அனுப்பவில்லை? பின் தன்னுடைய படுக்கை அறைக்காட்சியை படம்பிடித்தது யார்?

அது எப்படி சாத்தியமாயிற்று?

புனேயில் உள்ள Asian School Of Cyber Law வில் புகார் அளித்தாள். அவர்கள் சொன்ன காரணம் அவளை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஆம் அவளது அறையில் உள்ள வெப்கேமிராதான் அவளை படம் பிடித்திருக்கின்றது.

செய்வதையெல்லாம் செய்துவிட் ஒரு ஓரத்தில் அப்பாவியாய் அமர்ந்திருந்திருக்கிறது அந்த வெப்கேமிரா.

மீடியாத்துறையில் பணிபுரிகின்ற அந்தப் பெண்ணின் பெயர் அனி ஜோலகர் தனது ப்ராஜக்ட்டுக்காக சில படங்களை இணையத்திலிருந்து டவுன்லோடு செய்திருக்கின்றாள்.

ஆனால் அவளுக்குத் தெரியாமலையே கணிப்பொறியில் ட்ரோஜன் என்கிற வைரஸ் /புரோகிராம் வந்து அமர்ந்து கொண்டது

அந்த ட்ரோஜன் என்கிற புரொகிராமின் மூலம் அவளது கணிப்பொறியில் இணைக்கப்பட்டுள்ள வெப்கேமிராவை ரிமொட் முறையில் இயக்கி அவளது அந்தரங்களை படம்பிடித்து அவற்றை ஆபாச இணையதளத்திற்கு விற்றுக் கொண்டிருந்திருக்கின்றான் எவனோ ஒருவன்.

உலகத்தின் இன்னொரு மூலையில் தனது நிர்வாணப்படங்களும் அந்தரங்கங்களும்திரைப்படமாக்கப்படுகின்றதை அறிந்து அதிர்ச்சியானாள்அனி ஜோலகர்.

இணையத் தொடர்புடன் உள்ள அந்த கணிப்பொறியின் வெப்கேமிராவை பெரும்பாலும் அவள் ஆன் செய்தே வைத்திருக்கின்றாள்.

இணையத்தில் உலவிவிட்டு அணைக்காமல் அப்படியே இருந்துவிட்டதுதான்; அவள் செய்த தவறு. கணிப்பொறி இடப்பெயர்ச்சி இல்லாமல்தானே அமர்ந்திருக்கின்றது அதுவென்ன செய்திட முடியும் என்று நீங்கள் சாதாரணமாய் இருந்துவிடமுடியாது. புரிந்து கொள்ளுங்கள் அது நம்மை நோட்டமிட்டுக்கொண்டிருக்கின்றதுவெப்கேமிரா மூலம்.

கொஞ்ச நேரம் கழித்து உபயோகிக்கத்தானேபோகின்றோம் அதற்குள் எதற்கு இணையத்தொடர்பை துண்டிக்கவேண்டும் என்று அலட்சியப்படுத்தினால் நம் அந்தரங்கங்கள் உலகத்தின் பார்வைக்கு வந்துவிடும்.

தங்களது அறையினில் வெப்கேமிராவை வைத்திருப்பவர்கள் மிகவும் கவனமாய் இருக்கவேண்டும்.இணையத் தொடர்பு அவசியம் இல்லையெனில் அதன் இணைப்பையும் வெப்கேமிராவின் இணைப்பையும் துண்டித்துவிடுங்கள். இந்த விழிப்புணர்வினைதங்களுக்கு தெரிந்தவரையிலும் மக்களுக்கு தெரியப்படுத்தினால்தான் அவர்கள் விழிப்புணர்வு அடைவார்கள்’

‘தேவையில்லாமல் வெப்கேமிராவை ஆன் செய்து வைத்திருப்பது அல்லது அதன் தேவைகள் இல்லாவிட்டாலும்அதனை கணிப்பொறியுடன் இணைத்து வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது. நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.பாதிக்கப்பட்ட பெண்கள் நிறையபேர் சமூக சூழலுக்குப் பயந்து அதனை புகார் தெரிவிக்காமல் இருப்பது மிகவும் பரிதாபத்திற்குரியது.’

இணையத்தில் இருந்து படங்களோ அல்லது வேறு சில பைல்களோ டவுண்லோடு செய்யும்பொழுது ட்ரேஜன் ஹார்ஸ் (Trojan Horse) என்கிற வைரஸ் அல்லது வேறு ஏதேனும் வைரஸ் நுழையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதற்குத் தேவையான ஆன்டி வைரஸ் புரொகிராம்களை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.

அது மட்டுமல்ல தேவையில்லாத அல்லது கவர்ச்சியான விளம்பரங்களுடன்வருகின்ற மின்னஞ்சல்களையும் தவிர்த்து விடுங்கள்.

ஆகவே நண்பர்களே கணிப்பொறி உபயோகிக்காத நேரங்களில் அதனை அணைத்துவிடுங்கள். இணையத்தொடர்பும்வெப்கேமிரா தொடர்பும் துண்டிக்கப்பட்டிருகின்றதா என்று தயவுசெய்து ஒன்றுக்கு இரண்டுமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

இணையத்தில் உலவும்பொழுது மட்டும் இணையத்தொடர்பினைஇணைத்துவிட்டு மற்றநேரங்களில் அந்த தொடர்பினை கணிப்பொறியிலிருந்து எடுத்துவிடுங்கள். அதுபோலவே வெப்கேமிராவும்.யாருடனும் அவசியம் என்றால் மட்டும் அதனை இணைத்துக் கொள்ளுங்கள். மற்ற நேரங்களில் அவற்றை கணிப்பொறியுடன் இணைக்காமலேயே வைத்திருங்கள்.இல்லையென்றால் உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் படம் எடுக்கப்பட்டுக்கொண்டிருப்பர்கள். அந்த நபர் உங்களுக்கு பக்கத்து அறையில் அல்லது பக்கத்து கண்டத்தில் கூட இருக்கலாம்.

Sunday, May 5, 2013

தொடு திரை தொழில்நுட்பம் குழந்தைகளை பாதிக்குமா?

லண்டன்: தொடு திரை (டச் ஸ்க்ரீன்) வசதி கொண்ட ஸ்மார்ட் ஃபோன்களும், டேப்ளெட்டுகளும்(கையடக்க கணினி) சிறு குழந்தைகளின் கற்றலுக்கு நல்லது என்று புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கும் வேளையில், இக்கருத்தை சில விஞ்ஞானிகள் மறுக்கின்றனர்.
பொதுவாக சிறு குழந்தைகள் மணிக்கணக்கில் தொடுதிரை கணினிகள், கணினிகள், தொலைக்காட்சிகளின் முன்னால் செலவிடுவது தவறு என்றும், இதனால் அவர்களின் மூளையின் கற்றல் திறன் பாதிக்கப்படும் என்றும் விஞ்ஞானிகள் ஏற்கெனவே பரவலாக கவலைகள் வெளியிட்டு வரும் நிலையில், இந்த பிரச்சனை குறித்து விஸ்கான்ஸின் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் முடிவுகள் இந்த கவலைகள் பெருமளவு தேவையற்றவை என்று கூறியிருக்கிறது.
பொதுவாகவே ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இயற்கையிலேயெ தொழில்நுட்பத்தை அறிந்துகொள்வதில் கூடுதல் ஆர்வம் இருக்கிறது. எனவே அந்த வயது குழந்தைகளின் கைகளில் ஒரு புதிய தொழில்நுட்பக் கருவியை கொடுத்தால், பெரியவர்களை விட இயல்பாக அந்த கருவியை ஆராய்ந்து அதை கையாள்வதில் அவர்கள் பெரும்பாலும் வெற்றி பெறுவார்கள். இந்த பின்னணியில் இரண்டு வயது குழந்தைகளிடம், தொடுதிரை கையடக்க கணினிகள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆய்வு செய்த விஸ்கான்ஸின் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், குழந்தைகளின் கற்றலை இந்த தொடுதிரை கணினிகள் ஊக்குவிக்கின்றன என்று தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாக தொடுதிரை கணினிகளில் இருக்கும் கேம் அதாவது விளையாட்டு அல்லது காணொளியானது இண்டர் ஆக்டிவ்வாக, அதாவது குழந்தை அதை தொடத்தொட வெவ்வேறு புதிய தகவல்கள், படங்கள், ஒலிகள் அல்லது காணொளிகள் வரும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தால், அது, அந்த குழந்தைகளின் கற்றலை ஊக்குவித்து, குழந்தைக்கு உதவுகிறது என்று இந்த ஆய்வாளார்கள் தெரிவித்திருக்கிறார்கள்.இரண்டுவயது குழந்தையின் பார்வையில் இந்த தொடுதிரைகணினியின் விளையாட்டுக்கள் எவ்வளவுக்கெவ்வளவு இண்டராக்டிவ் ஆக இருக்கிறதோ அந்த அளவுக்கு குழந்தைக்கு இவை பிடிக்கின்றன என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த தொடுதிரைகளுடன் அதிகம் புழங்கும் குழந்தைகள் வேகமாக அதில் சொல்லப்படும் செய்திகளை உள்வாங்கிக்கொள்கின்றன என்று கூறுகிறார் இந்த ஆய்வு நடத்திய விஞ்ஞானிகளில் ஒருவரான மனித வளம் மற்றும் குடும்பநல படிப்புகளுக்கான துணைப் பேராசிரியர் ஹெதர் கிர்கோரியன்.மேலும் காண்களால் அறிவதில் மட்டுமல்ல, புதிய வார்த்தைகளை கற்பதிலும் இந்த தொடுதிரை கணினிகள் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு உதவுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். எனவே, தொடுதிரை கணினிகள் குழந்தைகளின் கற்றல் திறனுக்கு உதவுகிறதே தவிர, அதை எதிர்மறையாக பாதிக்கவில்லை என்கிறது இந்த ஆய்வு. ஆனால், இந்த ஆய்வின் முடிவுகளில் இருந்து மாறுபடுகிறார் குழந்தை மனநல மருத்துவர் அரிக் சிக்மன். தற்கால குழந்தைகள் திரைகள் முன்னால் மணிக்கணக்கில் செலவிடுவதாக கூறும் அரிக் சிக்மன், தொலைக்காட்சி, கணினி, தொடுதிரை கணினி, ஸ்மாட்ர்போன்கள் என்று சராசரியாக தற்கால குழந்தைகள் ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் திரையின் முன்னால் செலவிடுவது அவர்களின் கற்றல் திறனை பாதிக்கிறது என்கிறார்.
இவரது அய்வில் தற்போது பிறக்கும் ஒரு குழந்தை ஏழு வயதாகும் போது அதில் ஒரு ஆண்டு காலத்தை திரைக்கு முன்னால் செலவிட்டிருக்கும் என்று கணக்கிட்டிருக்கிறார். அதாவது இன்று பிறக்கும் குழந்தை தொலைக்காட்சி, கணினி, தொடுதிரை கணினி, ஸ்மார்ட்போன் என்று தினசரி அது ஏதோ ஒரு திரையின் முன்னாள் செலவிடும் மொத்த நேரத்தையும் கணக்கிட்டால், அந்த குழந்தைக்கு ஏழு ஆண்டு ஆவதற்குள், அது ஒரு ஆண்டை திரைக்கு முன்னால் கழித்திருக்கும் என்பது இவரது கணக்கு.
இது குழந்தைகளின் மூளைவளர்ச்சிக்கும், கற்றல் திறனுக்கும் நல்லதல்ல என்பது இவரது வாதம். இந்த வாதத்தை மறுக்கும் விஸ்கின்ஸான் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், பெற்றோர்களுக்கு இரண்டு யோசனைகளை அளிக்கிறார்கள். முதலாவது, சிறுகுழந்தைகள் சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கு அதிகமாக திரை முன்னால் இருக்க அனுமதிக்காதீர்கள் என்பது முதல் யோசனை. அதாவது, தொலைக்காட்சி, கணினி, தொடுதிரை கணினி என்று எல்லாவகையான திரைகளின் முன்பும் சேர்த்து குழந்தைகள் ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு மணிகளுக்கு மேல் இருக்க அனுமதிக்கக் கூடாது என்பது முதல் யோசனை.
இரண்டாவது, தொடுதிரை கணினியில் இருக்கும் கேம்கள் மற்றும் அப்ளிகேஷன்கள் போன்றவற்றை தேர்வு செய்வதில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்துகிறார்கள். தொடுதிரைகணினியில் குழந்தை செலவழிக்கும் நேரத்தைப் போலவே, அது இந்த திரையின் முன்னால் என்ன செய்கிறது என்பதும் முக்கியம் என்பதை எல்லா விஞ்ஞானிகளுமே வலியுறுத்துகிறார்கள்.
தொடுதிரை என்கிற புதிய தொழில்நுட்பம் எதிர்கால தலைமுறையினரின் வாழ்வில் பிரிக்கமுடியாத அங்கமாக மாறிவருவதை சுட்டிக்காட்டும் ஆய்வாளர்கள், இதை தங்களின் குழந்தைகளுடைய நன்மைக்கு பயன்படுத்தும் ஒட்டுமொத்த பொறுப்பும் பெற்றோர்களின் கையிலேயே இருக்கிறது என்பதை வலியுறுத்துகிறார்கள்.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!