Loading...

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, August 31, 2011

வெளிநாட்டில் கல்வி கற்க ஆசையா? இதோ அறிய வாய்ப்பு

சென்னை: வெளிநாட்டில் கல்வி கற்க செல்லும் மாணவர்களுக்கு, கடந்த 20 வருடங்களாக ஆலோசனை வழங்கிவரும், குளோபல் ரீச்(Global Reach) எனும் அமைப்பு, தற்போது, மாணவர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பை வழங்கவுள்ளது. சென்னையிலுள்ள பார்க் ஷெரட்டன் ஹோட்டலில், வரும் செப்டம்பர் 5ம் தேதி, நியூசிலாந்து நாட்டின் 8 பல்கலைக்கழகங்கள்...

ஆரிய வந்தேறிகளை வந்த வழியே விரட்டப்பட வேண்டும்

சென்னை: இந்தியாவில் உள்ள தமிழர்கள் தாங்கள் முதலில் இந்தியர்கள் இல்லை என்றால் அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு செல்ல வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நாம் அனைவரும் முதலில் இந்தியர்கள். இரண்டாவதாகத்தான் தமிழர்கள். வைகோ தெலுங்கில் இருந்து...

ஐய்ஷுக்கு ஐய்சு வைக்க மற்றுமொரு விருந்து

மும்பை : பாலிவுட் நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய்க்கு, பழசி ராஜா புரஸ்காரம் சார்பில் அபிநயா கலா ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. போராட்ட வீரர் பழசி ராஜா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் ஆண்டுதோறும், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கவுரவகக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது....

Tuesday, August 30, 2011

பெண்கள் வெட்கம் தயக்கத்தை விட்டு விழிப்புணர்வு வேண்டும்

பெண்கள் புற்றுநோய் பற்றி இன்னும் கூடுதல் விழிப்புணர்வு பெறவேண்டும். மார்பக புற்றுநோய் ஏற்பட்டால் வெட்கத்தோடு அதை மறைத்துவிடுகிறார்கள். முற்றிய பின்பே சிகிச்சைக்கு வருகிறார்கள். அதுபோல் கருப்பை வாய் புற்றுநோயிலும், நோய் அறிகுறிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கிறார்கள்., பெண்கள் வெட்கம்,...

சின்னத்திரையில் சிக்கிய ஹா(ர்)ட் செய்தி !!

சின்னத்திரை டாக் ஷோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் பார்த்திபன் ரூ. 1 கோடி சம்பளம் கேட்டதாக வெளியாகியிருக்கும் செய்திதான் இன்றைய சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையின் ஹாட் நியூஸ். தினம் தினம் புதிது புதிதாக முளைத்து வரும் சின்னத்திரைகளில் புதுமையான நிகழ்ச்சிகளை புகுத்துவதில் போட்டிகள் தொடர்ந்து...

வெளிநாடுகளிலிருந்து மனப்பெண்கள் இறக்குமதி !?

பெய்ஜிங், ஆக. 30சீனாவில் ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற கட்டாய சட்டம் அமலில் உள்ளது. எனவே, அந்த குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என இந்நாட்டு மக்கள் விரும்புகின்றனர். எனவே, கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என ஸ்கேன் மூலம் கண்டறிகின்றனர். பெண் குழந்தையாக இருந்தால் அதை கருவிலேயே அழித்து...

Monday, August 29, 2011

தமிழ் மக்களுக்கு செய்யாத இவா? ஈழத்திற்கா செய்யப்போகிறார்!?

29.8.2011 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண். 110 ன் கீழ் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் அளிக்கப்பட்ட அறிக்கை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் எனக்கு இருப்பது போலவும், அந்த அதிகாரத்தை...

இதயத்துக்கு இதம் தரும் பப்பாளி

கடுமையான காய்ச்சலைக் குணப்படுத்த உதவும் பப்பாளி இலை கஷாயம் இதய நோயாளிகளுக்கும் நல்லது. முக்கியமாக அடிக்கடி இதயத் துடிப்பு அதிகரிப்பதால் அவதிப்படும் நோயாளிகளுக்கு பப்பாளி இலை கஷாயம் சிறந்த பலனளிக்கும்.பப்பாளி இலை கஷாயம் நோயாளியை அமைதிப்படுத்தி, இதயத்துடிப்பைக் குறைத்து நிவாரணம் அளிக்கிறது. இதய நோயாளிகளுக்கு...

Sunday, August 28, 2011

தூக்கு தண்டனையை எதிர்த்து தமிழ் அமைப்புகள்

வேலூர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை செப்டம்பர் 9ம் தேதி நிறைவேற்றப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த நிலையில் அவர்கள் அடைக்கப்பட்டுள்ள வேலூர் மத்திய சிறைக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களின் தண்டனையைக் குறைக்க...

விஜய்யின் பாதுகாப்புக்கு மேலிட உத்தரவு! பதற்றத்துடன் போலீஸ் !!

வேலாயுதம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்காக மதுரைக்கு நடிகர் விஜய் விமானம் மூலம் (28.08.2011) வந்தார். இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 1.40 மணிக்கு வந்திறங்கிய விஜய்யை வரவேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விமான நிலையத்தில் குவிந்தனர். 75 வாகனங்களுக்கு மேல் விமான நிலைய வரவேற்பு வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. மதுரை...

கர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக்கிய உணவு வகைகள்

* ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் இவைகளை சேர்த்து முப்பது நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். * 2 அத்திப்பழங்கள், 2 பேரீச்சை, சிறிதளவு உலர் திராட்சை இவற்றை காலையில் சாப்பிட்டு வந்தால் கருத்தரித்த பெண்ககளுக்கு எடை குறைவு,...

Saturday, August 27, 2011

மோடி அரசை மீறி லோகாயுக்த ! குஜராத் ஆளுநர் !?

காந்திநகர் : மோடி அரசை மீறி குஜராத் மாநில ஆளுநர் லோகாயுக்தாவை எதிர்பாராதவிதமாக நியமித்துள்ளார். முந்தைய வழக்கங்களை மீறி ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.எ.மேத்தாவை ஆளுநர் தலைவராக தேர்வுச் செய்துள்ளார். முன்னர் ஆர்.எ.மேத்தாவை லோகாயுக்தவாக உயர்நீதிமன்றம் அரசுக்கு சிபாரிசுச் செய்திருந்தது. ஆனால்,இதுவரை...

குறைவான தூக்கம் உடலுக்கு கேடு விளைவிக்கும்! ஆய்வில் !

தூங்காதே தம்பி தூங்காதே என்ற பாட்டினை கேட்டிருப்பீர்கள்.ஆனால் தூங்கினால்தான் ஆற்றல் கிடைக்கும் என்பதையும் நாம் உணர வேண்டும். நாள் முழுவதும் உழைக்கும் நம்முடைய உடல் உறுப்புகள் ஓய்வெடுக்க தூக்கம் அவசியமாகிறது. சில நாட்கள் தூங்காமல் இருந்தால் ரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை...

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏத்த படம்! விஜய் !!

வேலாயுதம்" படம் பற்றியும், இசை வெளியீட்டு விழா குறித்தும், ரசிகர்களுக்கு விஜய் அளித்து பேட்டியில் கூறியிருப்பதாவது, நான் ரொம்ப நாளாக எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கிற படம் "வேலாயுதம்". இப்படத்தை ரசிகர்களை கொண்டுதான் ஆரம்பித்தோம். அதுபோல் ஆடியோ ரிலீசையும் ரசிகர்கள் முன்னிலையில் நடத்த விரும்பினோம்....

செப்டம்பர் 9 வேலூர் சிறை சாலை ! ரத்தாகுமா !?

புதுடெல்லி : முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 பேருக்கு வருகிற செப்டம்பர் 9-ஆம் தேதி தண்டனை நிறைவேற்றப்படும் என வேலூர் சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது. இவ்வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரரறிவாளன் ஆகியோரின் தண்டனை அடுத்த...

Friday, August 26, 2011

அவசர நிலை பிரகடனம் அமெரிக்காவில்!?

வாஷிங்டன், ஆக. 26 அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள தென்மேற்கு அட்லாண்டிக் கடலில் உள்ள பகாமாஸ் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளது. தற்போது அது கடும் புயலாக மாறியுள்ளது. அதற்கு “இரேனி” என பெயரிட்டுள்ளனர். அந்த புயல் நாளை (சனிக்கிழமை) வடக்கு கரோலினாவில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது....

இதயத்தை காப்போமா...! எப்படி?

1. மீன் தவிர அத்தனை அசைவ உணவுகளையும் தவிர்த்தல் நல்லது. 2. ஒரு முட்டையில் 210 மி.கி கொலஸ்ட்ரால் இருக்கின்ற காரணத்தினால் அது கூடவே கூடாது. 3. பேக்கிங் பவுடர் சேர்த்துச் செய்தவை, நெய், வெண்ணெய், சீஸ், தேங்காய், காபி, டீ, உருளைக்கிழங்கு சிப்ஸ், டின்னில் அடைச்ச உணவுகள், தக்காளி சாஸ் கெட்ச்சப், ப்ரோஸன்...

குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் இல்லை என்கிறது! விஞ்ஞானம்?

லண்டன்: குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்ற கருத்து நிலவுகிறது. தற்போது எலி போன்ற விலங்கினத்தில் இருந்து தோன்றியதாக தெரிய வந்துள்ளது. பாலூட்டி ஆன அந்த விலங்கினத்தின் பெயர் ஜுராமயா சினென்சிஸ். இவை “டயனோசரஸ்” வாழ்ந்த காலத்தில் வடகிழக்கு சீனாவில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் இவற்றின்...

இன (ஈழ) கொலைகாரனுக்கு நெருக்கடிகள் தருமா யு எஸ் !?

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் சம்பந்தமாக ஐ.நா.சபை நடத்தவிருக்கும் கூட்டத்தை முன்னிட்டு, அடுத்த வாரம் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்கத்தூதர் ராபர்ட் பிளேக் இலங்கைக்கு வரவிருப்பதாகவும், அப்போது அவர் அரசு உயர் அதிகாரிகளிடம் பேசவிருப்பதாகவும் இலங்கையைச் சேர்ந்த அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்....

Thursday, August 25, 2011

அடங்கா பிடாரியை அடக்குவோம் ஆட்சிக்கு வந்ததும் அழகிரி!!

திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அட்டாக் பாண்டியை மு.க.அழகிரி இன்று (25.08.2011) சந்தித்துப் பேசினார். பின்னர் வெளியே வந்த மு.க.அழகிரியிடம், திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கைது செய்யப்பட்டுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர், ஜெயலலிதா அரசின் 100 நாள் சாதனையில்...

உடலுக்கும் உள்ளத்திற்கும் உற்சாக டானிக்!

உங்களுக்கு நீச்சல் தெரியுமா? என்று கேட்டால், நம்மில் பலர் தேமே என்று விழிப்பார்கள். கிராமப்புற மக்களின் வாழ்வியலோடு ஒன்றாக கலந்துவிட்ட நீச்சல், நகர்புறங்களில் நீச்சல் குளம் கொண்ட மிகப்பெரிய பங்களாக்கள், பண்ணை வீடுகளில் வசிக்கும் மேல் தட்டு மக்களுக்கு உரிய ஒன்றாகத்தான் இருந்து வருகிறது. உண்மையைச்...

Wednesday, August 24, 2011

எத்தனை உயிரினங்கள் இவ்வுலகில் !?

லண்டன், ஆக 24:கனடாவில் உள்ள பல்ஹவுசி பல்கலைக்கழக விஞ்ஞானி போரிஸ்வோர்ம் தலைமையிலான குழுவினர் உலகில் வாழும் உயிரினங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். படம் : காட்டெருமையை முழுங்கிய மலை பாம்பு அதை தொடர்ந்து 87 லட்சத்து 40 ஆயிரம் உயிரினங்கள் உலகில் வாழ்ந்து வருகின்றன என தெரிவித்துள்ளனர். தற்போது 23 சதவித...

பெரும் தலைகள் இணையும் விஜய்யின் புதுப்படம்

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக, "மதராசபட்டினம்" புகழ் எமி ஜாக்சன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வேலாயுதம், நண்பன் படத்தை தொடர்ந்து விஜய், அடுத்து கவுதம் மேனன் படத்தில் நடிக்கிறார். இந்தபடத்திற்கு "யோஹன் அத்தியாயம் ஒன்று" என்று பெயரிட்டுள்ளனர்....

சி டி யை கண்டு பயப்படும் கள்ளச்சாமியார்!

சென்னை: சங்கர்ராமன் கொலை வழக்கை விசாரித்து வரும் நீதிபதியுடன் ஜெயேந்திரர் தொலைபேசியில் பேசுவது போன்ற ஆடியோ சிடி வெளியாகியுள்ளது. நீதிபதிக்கு பணம் கொடுத்து வழக்கிலிருந்து தப்பிக்க ஜெயேந்திரர் முயல்வதாக இந்த சிடி உரையாடல் மூலம் தெரிய வருவதாகவும், இதனால் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும்...

Tuesday, August 23, 2011

இந்திய கார்கள் என்றால் அலறும் அமெரிக்கர்கள்

ஹூஸ்டன் : பெரும்பான்மையான அமெரிக்கர்கள், இந்தியா மற்றும் சீன கார் தயாரிப்பு நிறுவனங்களின் கார்களை வாங்க விரும்பவில்லை என, சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. சீனாவின் பி.ஒய்.டி., செரி மற்றும் இந்தியாவின் மகிந்திரா போன்ற கார் தயாரிப்பு நிறுவனங்கள், விரைவில் அமெரிக்காவில் தங்கள் தொழிற்சாலைகளைத்...

அறப்போராட்டம் என்ற பெயரில் சாராய பார்ட்டி?

புதுடெல்லி:வலுவான லோக்பால் சட்டத்தை வலியுறுத்தி அறப்போராட்டம் நடந்து வரும் ராம்லீலா மைதானத்தில் நேற்றிரவு சுமார் 30 பேர் அநாகரீகமாக நடந்து கொண்டனர். ராம்லீலா மைதானத்தில் தாராளமாக சாப்பாடும் சாராயமும் விநியோகித்தனர்., இதில் மப்பு ஏறிய சிலர் ரகளையில் ஈடுபட்டனர். நிருபர்கள் தங்கி இருந்த கூடாரத்துக்குள்...

Monday, August 22, 2011

அதிக வைட்டமின்களும் அதிக ஊட்ட சத்துக்களும் உள்ளது முட்டையில்

தேர்வுல `முட்டை' வாங்குன அனுபவம் உங்களுக்கு இருக்கா? நான் ரொம்ப சமத்துப்பா! எல்லாத்துலேயும் நூத்துக்கு நூறு வாங்கலாம்னு பார்ப்பேன். ஆனா, முடியாது. அதுக்காக முட்டையெல்லாம் வாங்க மாட்டேன். இன்னைக்கு நாம பார்க்கப்போறது தேர்வுல வாங்குற முட்டை இல்ல, சாப்பிடுற கோழி முட்டையில என்னென்ன சத்துகள் இருக்குதுன்னு...

சர்வாதிகாரியாக நடந்து கொள்ளும் ஜெயா! ஸ்டாலின் காட்டம் !?

தஞ்சாவூர் திலகர் திடலில் முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி தலைமையில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. பொய் புகார் அளிப்பவர்கள் மீது உச்சநீதிமனறம் வரை சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கல்வியில் வேறுபாடு இருக்கக் கூடாது...

திருட்டு வி சி டி யை தடுக்க புதிய ஏற்பாடு

ஒரு படம் ரிலீசாவதற்கு முன்பே, அந்தபடம் திருட்டு வி.சி.டி.,யாகவும், ஆன்லைனிலும் ஒளிப்பரப்பாகி விடுகிறது. இதனை தடுக்க திரைத்துறையினரும், அரசும் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் எந்த பலனும் இல்லை. இந்நிலையில் இதனை தடுக்கும் பொருட்டு புதிய தொழில்நுட்பம் ஒன்றை புகுத்தியுள்ளது, பி.வாசு...

Sunday, August 21, 2011

செல்போன் மூலம் சேவை வங்கிகளில்

கோயம்பேடு : கரூர் வைஸ்யா வங்கியில் இருந்து மற்ற வங்கிகளுக்கு, பண பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து வங்கி சேவைகளையும், மொபைல்போன் மூலம் செயல்படுத்தும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது'' என, கரூர் வைஸ்யா வங்கியின் நிர்வாக இயக்குனர் வெங்கட்ராமன் பேசினார். கரூர் வைஸ்யா வங்கியில் ஆண்டுக்கணக்கில்...

அமெரிக்க சந்தையில் அதிக வரவேற்பு இந்திய மாம்பலத்திற்கு

வாஷிங்டன் : சுமார் 3 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட அல்பான்சோ மற்றும் பாகிஸ்தானில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட சவுசா உள்ளிட்ட ரக மாம்பழங்களுக்கு அமெரிக்க சந்தையில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. மாம்பழ பிரியர்களிடம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால் இந்தியா மற்றும்...

Saturday, August 20, 2011

இந்திய வீடுகளில் கொடுமைக்கு ஆளாகும் பெண்கள்

புதுடெல்லி : இந்தியாவில் 35 சதவீத பெண்கள் உடல் ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ கொடுமைகளை அனுபவிப்பதாக மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் கிருஷ்ணா தீரத் தெரிவித்துள்ளார். 2005-2006 ஆண்டில் தேசிய குடும்ப நல சர்வேயில் இவ்விஷயம் தெரியவந்ததாக அவர் மக்களவையில் தெரிவித்தார். திருமணமான 40 சதவீதமான பெண்களும்...

குடும்பக்கட்டுப்பாடு செய்த பின்பும் கர்ப்பம் தரித்த 531 பெண்கள்!!

புவனேஷ்வர் : ஒரிஸ்ஸா மாநிலத்தில் குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் குழந்தை பிறப்பதற்கு தடை ஏற்படுத்தும் அறுவை சிகிட்சை செய்துக் கொண்ட 531 பெண்கள் மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளனர். சட்ட சபையில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் சுகாதாரத்துறை குடும்பநல அமைச்சர் பிரசன்னா ஆச்சார்யா இதனை தெரிவித்தார்.,...

Friday, August 19, 2011

தனது துணை பற்றி கூறும் தமன்னா

நான் இன்னும் குட்டிப் பொண்ணுதான். 3 வருஷம் கழித்துதான் கல்யாணம் பற்றி யோசிப்பேன் என்று நடிகை தமன்னா கூறியுள்ளார். வேலூரில் நகைக்கடை திறப்பு விழாவுக்கு வந்த நடிகை தமன்னா, ரசிகர்களின் கூட்டத்தை பார்த்து பிரமித்து விட்டாராம். ரசிகர்களிடம் இருந்து பாதுகாப்பாக கடைக்குள் சென்ற அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார்....

ஈடு இணை இல்லா செயல் புரியும் வாழை !

வாரம் ஒரு நாள் முழுவதும் வாழைப்பழங்களாகவே உண்டு வேறு எந்த உணவுகளையும் பானங்களும் அருந்தாமல் உபவாசம் போல் இருக்கலாம்.  நம் உடலில் சேர்ந்துவிடும் அமிலங்களை அழித்து வெளியேற்றுவதில் வாழைப்பழம் ஈடு இணைஇல்லாமல் செயல் புரிகிறது, இதர உணவுகளுடன் உண்ணப்படும் வாழைப்பழம் முழுமையாக செயல்பட இயலுவதில்லை....

45 வயதை தாண்டியவர்களுக்கு

45வயதுக்கு மேற்பட்டவர்கள் தமது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும், நோய்களின்றி வாழவும், எஞ்சிய காலத்தில் மற்றவர்களின் தயவின்றி சுதந்திரமாக உலா வரவும், அருகில் உள்ள ஒரு உடற்பயிற்சிக் கூடத்துக்குச் சென்று உடல் பயிற்சிகளில் ஈடுபட வேண்டியது அவசியமாகும். இவ்வாறு புதிய ஆய்வறிக்கை ஒன்றில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது....

Thursday, August 18, 2011

வைரஸ் கிருமிகள் ஏற்படுத்தும் ரத்த மன அழுத்தம்

பெய்ஜிங்: மன அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் போன்றவற்றால் ரத்த அழுத்தம் நோய் ஏற்படுவதாக கூறப்படுகிறது. தற்போது அந்த நோய்க்கு பொதுவான வைரஸ் கிருமிகளே காரணம் என தெரிய வந்துள்ளது. சீனா தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள சாயோயங் இருதய நோய் ஆஸ்பத்திரியின் டாக்டர் யங் தலைமையிலான குழுவினர் ஒரு ஆய்வு மேற்கொண்டனர்....

போலி ஆவணங்களால் ஏமாற்றப்பட்ட வடிவேல் !?

சென்னை அசோக் நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி பழனியப்பன், நடிகர் வடிவேலு மீது சென்னை புறநகர் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். தாம்பரம் இரும்புலியூர் பகுதியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனம் ஏலத்தில் விட்ட நிலத்தை ரூ. 20 லட்சத்துக்கு வாங்கியதாகவும், அதை போலி ஆவணங்கள் தயாரித்து நடிகர்...

குஜராத் கேடிக்கு செக் வைத்த காங்கிரஸ் !!

அஹ்மதாபாத் : ஊழலை விசாரிக்கும் லோகாயுக்தா என்றாலே மோடி மிரளுவதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. நரேந்திரமோடியின் (நர மாமிச கேடி) ஆட்சியில் நடந்துள்ள ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த உடனடியாக லோகாயுக்தாவை கொண்டுவரவேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுத்தொடர்பாக குஜராத் மாநில சட்டமன்ற எதிர்கட்சியான...

Wednesday, August 17, 2011

சீனாவுக்கு அடுத்து இந்திய மாணவர்கள் வருகை அதிகரிப்பு!

வாஷிங்டன் : அமெரிக்காவில் பல்வேறு பிரிவு பட்டப்படிப்புகளுக்கு படிப்பதற்காக வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தகவல்வெளியிட்டுள்ளது. எனினும் சீனா தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது. அமெரிக்காவில் சி.ஜி.எஸ் எனப்படும் பட்டப்படிப்பு தொடர்பான கல்லூரிக்கு இந்தியா...

வம்பு மட்டுமல்ல இல்லறமும் பேசும் பெண்கள்!

லண்டன்: மற்றவர்கள் குறித்து ஊர் வம்பு பேசுவது பெண்களின் பிறவிக் குணம். அது எந்த காலத்திலும் மாறாது. சமீபத்தில் இது குறித்த ஆய்வு இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்டது. அதில், நாள் ஒன்றுக்கு 298 நிமிடங்கள் அதாவது 5 மணி நேரம் பிறரை குறித்து பெண்கள் ஊர்வம்பு பேசுவது தெரிய வந்தது. குழந்தைகள் பற்றியும்,...

மாரடைப்பை தடுக்கும்(மெல்லோட்டம்)

மெல்லோட்டம் என்பது விரைவான நடைக்கும், வேகமான ஓட்டத்துக்கும் இடைப்பட்ட சீரான தன்மை கொண்ட ஓட்டமாகும். இதை ஆங்கிலத்தில் ஜாக்கிங் (Jogging) என்பார்கள். உடலுக்கு ஏற்ற சீரிய உடற்பயிற்சிகளில் இதுவும் ஒன்று. இந்தப்பயிற்சியும் மாரடைப்பைத் தடுக்க உதவியாக இருக்கிறது. மேலை நாடுகளில் உள்ள பெரும்பான்மையான...

Tuesday, August 16, 2011

அத்வானி கைது அமெரிக்காவில்? ஒரு வருட சிறை !?

நியூயார்க் : உயரே பறந்து கொண்டிருந்த விமானத்தில் பக்கவாட்டு இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக அமெரிக்கவாழ் இந்தியர் கைதுசெய்யப்பட்டார். அவருக்கு ஒரு ஆண்டு சிறையும், 10 ஆயிரம் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது. அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் அத்வானி...

கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் பரிசோதித்து கொள்ள வேண்டிய ஒன்று?

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் நடந்த எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் எச்.ஐ.வி., பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில் "நம் நலம், நம் கையில்' என்ற தலைப்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நாட்டுப்புற கலைநிகழ்ச்சி பொள்ளாச்சி...

Monday, August 15, 2011

கூல் வாட்டர் குடிப்பவர்களே, கவனியுங்கள்! டாக்டர் எச்சரிக்கை!!

இப்போதெல்லாம், நகர்புறங்களில் `பிரிட்ஜ்’ பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதனால், குளிர்ச்சியான தண்ணீர் குடிப்போரின் எண்ணிக்கையும் உயர்ந்துவிட்டது. காலை உணவானாலும் சரி, இரவு உணவானாலும் சரி இந்த குளிர்ச்சியான தண்ணீர்தான் பலரது தாகத்தை தணிக்கிறது. இது மிகவும் ஆபத்தான செயல் என்று எச்சரிக்கிறார்கள்...

தினம் விலை உயரும் ஏரிவாயுக்கு பதிலாக இயற்கை எரிவாயு இறக்குமதி

புதுடெல்லி : டாடா மோட்டார்ஸ் மற்றும் அசோக் லேலண்ட் நிறுவனங்கள் பெட்ரோனெட் நிறுவனத்துடன் இணைந்து வாகனத்துக்கான திரவ இயற்கை எரிவாயு பயன்பாட்டை அறிமுகப்படுத்த உள்ளன. இந்தியாவின் பெட்ரோனெட் எல்.என்.ஜி. லிமிடெட் (பி.எல்.எல்.) நிறுவனம்தான், வெளிநாடுகளில் இருந்து அதிகளவில், திரவ இயற்கை எரிவாயுவை (எல்.என்.ஜி)...

தமிழகத்தை அச்சத்துக்குள்ளாகிய காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடிப்பு

வாஷிங்டன் : சிக்குன்-குனியா காய்ச்சலுக்கான தடுப்பூசி மருந்தை, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கடும் காய்ச்சலோடு மூட்டு வலியை ஏற்படுத்தும் சிக்குன்-குனியா நோய், சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தைப் பாதித்தது. இந்த நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது. தற்போது, அமெரிக்காவின் டெக்சாஸ்...

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!