Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, December 29, 2010

இந்தியா வெற்றி


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரானஇரண்டாவது டெஸ்டில் இந்திய அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றிபெற்றது.இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது இந்தியா.டர்பனில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வி.வி.எஸ்.லட்சுமண் அதிகபட்சமாக 38 ரன்கள் எடுத்தார்.தென்னாப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெயின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.பின்னர் தனது முதல் இன்னிங்ûஸ விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 131 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய வீரர்கள் ஜாகீர்கான் 3 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 228 ரன்களை குவித்தது. லட்சுமண் அதிகபட்சமாக 96 ரன்கள் குவித்தார்.  தென்னாப்பிரிக்கத் தரப்பில் மோர்கல், சோட்சோபி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.முன்னதாக 3-வது நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்திருந்தது. காலிஸ் 12 ரன்களுடனும், டிவில்லியர்ஸ் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 4-வது நாள் ஆட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இந்திய பெüலர்கள் ஆதிக்கம் செலுத்தினர். அணியின் ஸ்கோர் 123 ரன்களை எட்டியபோது காலிஸ் 17 ரன்களில் ஸ்ரீசாந்த் பந்துவீச்சில் வீழ்ந்தார். ஸ்ரீசாந்த் வீசிய பவுன்சரை காலிஸ் தவிர்க்க முயன்றபோது பந்து அவரது குளோவ்ஸில் பட்டு சேவாக்கின் கையில் தஞ்சம் புகுந்தது. அடுத்து டிவில்லியர்ûஸ 33 ரன்களில் ஹர்பஜன் வெளியேற்ற இந்திய வீரர்களிடையே நம்பிக்கை அதிகரித்தது.பின்னர் வந்த பவுச்சர் (1), ஸ்டெயின் (10), ஹாரிஸ் (7) ஆகியோரை இந்திய வீரர் ஜாகீர்கான் அடுத்தடுத்து வீழ்த்தி தென்னாப்பிரிக்காவை தோல்வியின் விளிம்பிற்குக் கொண்டுவந்தார். பின்னர் வந்த மோர்கல் 20 ரன்களில் ஆட்டமிழக்கவே, அடுத்துவந்த சோட்சோபி ரன் எடுக்காமலேயே ரன் அவுட் ஆனார். இதனால் தென்னாப்பிரிக்காவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆஸ்வெல் பிரின்ஸ் 39 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.இந்திய வீரர்கள் ஜாகீர்கான், ஸ்ரீசாந்த் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.சிறப்பாக விளையாடி ரன் குவித்து அணியின் வெற்றிக்கு உதவிய லட்சுமண் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.இதன்மூலம் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலைப் பெற்றுள்ளன.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!