Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, January 24, 2015

இண்டர்நெட் இல்லா வாட்ஸ் அப் வசதி!?

இண்டர்நெட் இல்லாமல் வாட்ஸ் அப்பை "சிம்" மூலம் பயன்படுத்தும் வசதி: இத்தாலி நிறுவனம் கண்டுபிடிப்பு.

இன்றைய நவீன கால கட்டத்தில் வாட்ஸ் அப் பயன்படுத்துவது இளைஞர்களின் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அவர்களுக்கு என்றே புதிய வரப்பிரசாதமாக இண்டர்நெட் இல்லாமல் ஒரு சிம் மூலமாக (what sim) வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் வசதியை இத்தாலியைச் சேர்ந்த மேனுவல் ஜனில்லா கண்டுபிடித்துள்ளார்.. இந்த வாட் சிம்மை பயன்படுத்தி, உலகம் முழுவதும் உள்ள நண்பர்களுக்கு மெஸேஜ் அனுப்பலாம். இதற்கு வை-பை வசதியோ அல்லது டேட்டா கார்டு இணைப்போ அவசியம் இல்லை.

வாட் சிம் குறித்த ரிப்போர்ட் தற்போது வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் போது சிம்மிற்கு நாம் ரீசார்ஜ் செய்யும் டேட்டா அளவிற்கே பயன்படுத்த முடியும். டேட்டா தீர்ந்துவிட்டால் பயன்படுத்த முடியாது. அதன்பின் பயன்படுத்த மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இதன் காரணமாக நாம் பயணத்தின் போது சிரமம் ஏற்படும்..

எனவே இதற்கு மாற்றான தீர்வை வாட் சிம் என்ற புதிய சிம்மை, இத்தாலியைச் சேர்ந்த ஜீரோ மொபைல் நிறுவனம் உலகம் முழுவதும் 150 நாடுகளில் 400 மொபைல் ஆப்ரேட்டர்களுடன் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சிம்மை பயன்படுத்தி, யாருக்கு வேண்டுமானானும் மெஸேஜ் அனுப்ப முடியும். இருக்கும் இடத்தில் இருந்து உலகின் எந்த மூளைக்கு சென்றாலும், அதற்கு ஏற்பே வேறு நெட்வொர்க் மாறிவிடும். இதற்கு ரோமிங் கட்டணம் கிடையாது. நீங்கம் செல்லும், மாநிலம் , அல்லது நாட்டில் உங்களுக்கு எந்த சிக்னல் சிறப்பாக கிடைக்கிறதோ, அது தானாக கனெக்ட்டாகி விடும். இந்த சிம், பயணம் செய்பவர்களுக்கு வரப்பிரசாதமாகும். தங்களது அன்பானவர்களுடன் எப்போதும் வாட்ஸ் அப்பில் இணைந்திருக்கலாம்.

வாட் சிம்மின் விலைஇந்த சிம்மின் விலை வெளிநாட்டு பண மதிப்பில் 10 பவுண்டு என்றும் இந்திய மதிப்பில் ரூ 714 என்று  சிம்மை கண்டுபிடித்துள்ள ஜீரோ மொபைல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வாட் சிம் ஆயுட் கால சிம்மாகும்.

ஆனால் இந்த சிம்மில் மெஸேஜ் மட்டுமே இலவசமாக அனுப்ப முடியும், மல்டிமீடியா மெஸேஜ்களான போட்டோ, வீடியோ, ஆடியோ பைல்களை இலவசமாக அனுப்ப முடியாது. அதற்கு நாம் தனியாக ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.

இருந்தபோதிலும் இதில் சில வசதிகளை அந்த சிம் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி கிரெடிட் பாயிண்டுகளை கலெக்ட் செய்து கொண்டால் அதற்கு ஏற்றவாறு இலவசமாக அனுப்ப முடியும்.  இந்தியாவில் 150 கிரெடிட்டுகளை கலெக்ட் செய்தால் போட்டோக்களையும், 600 கிரெடிட்டுகளை பெற்றால் வீடியோ மெசேஜ்களையும், 30 கிரெடிட்டுகளை பெற்றால் வாய்ஸ் மெசேஜ்களையும் இலவசமாக அனுப்ப முடியும். வெளிநாட்டு பண மதிப்பில் குறைந்த பட்சம் 5 பவுண்டுக்கு ஒரு ரீசாரஜ் செய்தால், 1000கிரெடிட்டுகளை பெறலாம். அதிகபட்சமாக 50 பவுண்டுகள் ரீசார்ஜ் செய்து கொண்டு 10000 கிரெடிட்டுகளை பெற முடியும்.. இதன் இந்திய மதிப்பிற்கு ஏற்ப நாமும் ரீசார்ஜ் செய்து கொண்டு கிரெடிட் பாயிண்டுகள் பெறலாம்.

Sunday, January 18, 2015

விஜய் பின்வாங்க காரணம் இதுவோ!?

பீ கே படத்தை பார்த்த இயக்குனர் சங்கர் படம் பிடித்துப்போனதால் இதை தமிழில் விஜயை வைத்து செய்யலாம் என்று இருக்காமல் விஜய்க்கு தொலைபேசியில் அழைத்து  பீகே படத்தை பார்க்கும் படியும், அதை ரீமேக் செய்தால் நடிப்பீர்களா என்றும் ஷங்கர் கேட்டதாகவும் கேள்வி. விஜய்க்கு பீகே படம் பிடித்தால் ரீமேக் செய்யும் முயற்சியில் இறங்குவாராம் ஷங்கர். இது பழைய செய்தி.

ஆனால், விஜய் படத்தை பார்த்துவிட்டு  படம் பிடித்திருந்தும் இப்படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்து உள்ளார். காரணம் இதுவாக இருக்கலாம் என்று கோலிவூட்டில் செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளது.

காரணம் வேறு எதுவாக இருக்க முடியும் தீவிரவாத ஆர் எஸ் எஸ்ஸின் கிளை அமைப்பான சங்க பரிவாரங்களின் (திரை அரங்கம் சூறை - பஜ்ரங்தள் வன்முறை வெறியாட்டம். இந்தியாவின் தீவிரவாத இயக்கங்களான RSS, VHP, பஜ்ரங்தள் போன்ற தீவிரவாத இயக்கங்க) மும்பை, கல்கத்தா போன்ற பெரும் நகரங்களில் சினிமா தியேட்டர்களை உடைத்து நாசம் செய்ததுதான் விஜய் பீ கே படத்தை கை விட காரணமாக இருக்கலாம் என்பது நம் கருத்து.

சரி நாம் விசயத்துக்கு வருவோம் இப்படத்தை எதிர்க்க காரணம்தான் என்ன.

பீகே சினிமாவை சங்பரிவார்கள் எதிர்க்க காரணம் போலி சாமியார்களின் முகத்திரையை அது கிழித்து ஏறிகிறது என்பது ஒரு காரணமாக இருந்தாலும் முக்கியமான கரணம் அது அல்ல.

சாதாரணமாகவே இந்திய சினிமாக்களில் பாகிஸ்தானிகள் என்றால் அது காட்டு மிராண்டிகள் தீவிரவாதிகள், மனுஷத்துவம் இல்லாதவர்கள் என்ற ஒரு மாய பிம்பத்தை சினிமா துறையினர் ஏற்படுத்தி வைத்துள்ளார்கள். அதை முதல் முதலாக உடைத்து எரிகிறது பீகே சினிமா.

நாயகன் பாகிஸ்தான் இளைஞன் (கவிஞன்) ஒருவனை வெளிநாட்டில் வைத்து காதலிக்கும் நாயகி தன பெற்றோரிடம் அந்த ஆசையை கூற பெற்றோர்கள் தங்களின் ப்வெரைட் சாமியாரிடம் அதை எடுத்து சொல்ல பாகிஸ்தானிகள் நமது எதிரிகள் அவர்கள் நம்மை ஏமாற்றி விடுவார்கள் நீ அவனை நம்ப வேண்டாம் அவன் உன்னை ஏமாற்றி விடுவான் என்று சாமியார் ஆருடம் சொல்லவும் அது போலவே நடந்தும் விடுகிறது. படத்தில் தேவை இல்லாததாக நாம் கருதும் இந்த பதினைந்து நிமிட காட்சிதான் இந்த சினிமாவுக்கு உயிர் நாடியாக உள்ளது.

படத்தின் முடிவில் தான் சொன்னது பிரகாரம் தான் பாகிஸ்தானி நாயகியை ஏமாற்றி விட்டு விட்டு ஓடியதாக பெருமை பேசும் போலி சாமியாருக்கு ஏமாற்றியது பாகிஸ்தானி நாயகன் இல்லை இந்திய நாயகிதான் என்ற உண்மையை  பீகே எடுத்து கூறும் காட்சி மற்றும் பாகிஸ்தான் எம்பஸி பெண்களின் கண்ணியமான டெலிபோன் உரையாடல்கள் மற்றும் நாயகனின் நாயகிக்கான காத்திருப்பு என பாகிஸ்தானிகளை இதுவரை எந்த இந்திய சினிமாவும் காட்டாத ஒரு கோணத்தில் இந்த பீகே காண்பித்ததே காவிகளின் கோபத்திற்கு முக்கிய காரணமாக நான் கருதுகிறேன்.

பீகே என்னை ரொம்ப பாதிச்சிட்டு போல இருக்கப்பா.

Saturday, January 10, 2015

கணினி அடிக்கடி பாதிப்பு சரிசெய்ய!?

கணினியில் ஏதாவது பிரச்சனையா, என்னமோ ஆயிடுச்சு என்று பதறி அடித்துக்கொண்டு கம்ப்யூட்டர் பொறியாளரை அழைக்காமல் உங்களால் என்ன செய்ய முடியும் என்று பாருங்கள். ஒரு சிறிய பிரச்சனைகளுக்காக ரிப்பேர் செய்பவரை அழைத்தால், இது தான் சந்தர்ப்பம் என உங்களிடம் கறக்க முடிந்த அளவு கறந்துவிடுவார்.

எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் முதலில் உங்கள் கணினியில் ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். ரீஸ்டார் செய்தும் பிரச்சனை நீடித்தால், இதற்கு முன் கணினியின் ஓஎஸ் அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை சரி பார்த்து கொள்ளுங்கள், சரியான அப்டேட் செய்யப்படாத சமயங்களில் பாதிப்புகள் அதிகம் ஏற்படும்.

கணினியில் அடிக்கடி ஏற்படும் சில பாதிப்புகளும் அதை சரி செய்யும் முறைகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கணினி வேகம் குறைவாக இருக்கின்றது: ஓஎஸ் இருக்கும் ஹார்டு டிரைவ் ஸ்பேஸ் கனிசமான அளவு காலியாக இருக்க வேண்டும், அவ்வாறு இல்லாத சமயத்தில் ஸ்பேஸ் காலி செய்வது அவசியமாகின்றது. மேலும் temp பைல்களை அடிக்கடி நீங்கவேண்டும். அதற்கு ccleaner மென்பொருள் உபயோகிக்கலாம்.

நீண்ட நேரம் எடுக்கும் பதிவிறக்கங்கள்: நீங்கள் அதிவேக இன்டெர்நெட் உபயோகப்படுத்தியும் குறைவான வேகத்தில் பைல்கல் டவுன்லோட் ஆகும். முதலில் உங்கள் இன்டர்நெட்டின் வேகத்தை speedtest.net என்ற இணையதளத்தின் மூலம் சரிபார்த்துக்கொள்ளுங்கள். ஸ்பீட் குறைவாக காட்டினால் இன்டர்நெட் நிறுவனம் வழங்கிய கனெக்ஷன் குறைபாடு. அதேவேகம் காட்டியும் டவுன்லோட் ஆகவில்லையெனில் உங்கள் கணினியில் idm டவுன்லோடர் உபயோகியுங்கள்.

ரீஸ்டார்ட்டிங்: சில ஹார்டு வேர் பிரச்சனைகளை சரி செய்வது சிரமமாக தான் இருக்கும். கணினி அடிக்கடி ரீஸ்டார்ட் ஆவதற்கு முக்கிய காரணம் வைரஸ், ஆட்வேர், அதிக படியான சூடாக இருக்கலாம். கணினியில் விசித்திர சத்தம் கேட்டால் அதை கழற்றி நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.

பாப் அப்: இன்டெர்நெட் பயன்படுத்தாமல் இருந்தாலும் கணினியில் நிறைய விளம்பரங்கள் தெரிகின்றதா, அப்படியானால் உங்க கணினியில் ஆட்வேர் இன்ஸ்டால் செய்திருப்பீர்கள், இதை சரி செய்ய நிறைய டூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில பிசி ஸ்பீடு அப், பிசி ஸ்பீடு ப்ரோ, இவைகளில் எதையாவது பயன்படத்தலாம்.

கூகுள்: ப்ரவுஸர் ஹைஜாக் செய்பவர்கள் உங்களது தகவல்களை கூகுள் தேடல்களின் மூலம் சுலபமாக களவாட முடியும், இதை தவிற்க ரியல்-டைம் ஆன்டிவைரஸ் பயன்படுத்துவது சிறந்தது.

வைபை: அடிக்கடி வைபை கனெக்ஷன் டிஸ்கனெக்ட் ஆனால் கணினி வைபை வட்டத்தில் இருக்கின்றதா என்பதை பாருங்கள், பின் கணினியின் வயர்லெஸ் டிரைவ்கள் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் சரி பார்த்துக் கொள்ளுங்கள். வேறு ஏதேனும் பிரச்சனை இருந்தால், single click solve internet problem மென்பொருள்களை உபயோகப்படுத்துங்கள்.

இன்டெர்நெட் பாதுகாப்பு: இணைய பாதுகாப்பு சான்றிதழ் சரி இல்லை என்ற பிரச்சனையா, பழைய கணினிகளில் சிமோஸ் பேட்டரி சரியாக வேலை செய்யாததால் இந்த பிரச்சனை ஏற்படுகின்றது, அதை சரி செய்ய கணினியின் நேரம் மற்றும் தேதியை சரியாக வைத்தாலே போதுமானது.

ப்ரின்டர்: ப்ரின்டர் அப்டேட் சரியாக இருக்கின்றது, போதுமான பேப்பர் மற்றும் டோனர் என அனைத்தும் சரியாக இருக்கும் போதும் ப்ரின்ட் ஆகவில்லை என்றால், ப்ரின்டரை முழுமையாக கழற்றி மாட்டவும், அதன் பின் ப்ரின்டர் ஆஃப்லைன் சரி பார்க்க வேண்டும்.

ஈமெயில் அட்டாச்மென்ட்: சில சமயங்களில் ஈமெயில் அட்டாச்மென்ட் டவுன்லோடு ஆகவில்லை என்றால், ஈமெயில் ஃபைல் எம்மாதிரியானது என்பதை பாருங்கள், அதன் பின் ஃபைல் எக்ஸ்டென்ஷனை ரீனேம் செய்தால் வேலை முடிந்தது.

மென்பொருள்: அதிகம் பயன்படுத்தும் மென்பொருள் புதிய கணினியில் வேலை செய்யாவிட்டால் ஜாவா மற்றும் ப்ளாஷ் ஸ்க்ரிப்ட்கள் தான் முக்கிய காரணமாக இருக்கும், இவைகளை அனைத்து பிரவுஸர்களும் இன்ஸ்டால் செய்ய உதவும்.

Saturday, January 3, 2015

பீ கே சொல்லும் செய்தியும் சர்ச்சையும்!?

3 இடியட்டுக்கு பிறகு அதே இயக்குனர் மற்றும் நாயகனை கொண்டு வெளிவந்து திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் பி கே. படம் சொல்லும் செய்தியும், சர்ச்சைகளும்.

வேற்று கிரகத்திலிருந்தது பறக்கும் தட்டில் வந்து பூமியில் இறங்குகிறார் பிகே (அமீர்கான்)! அது இறங்கிய இடம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம். அந்த பறக்கும் தட்டின் சாவி அவர் கழுத்தில் ஜொலிக்கிறது. பூமியில் அனைவரும் தங்கள் உடம்பை மறைத்துக் கொண்டு கண்ணியமாக செல்வதை ஆச்சரியத்தோடு பார்க்கிறார். அந்த வழியே வந்த ஒரு வழிப்போக்கன் இவரது கழுத்தில் ஜொலிக்கும் அந்த சாவியை ஏதோ விலையுயர்ந்த ஆபரணம் என்று தவறாக கருதி பிகேயிடமிருந்து பிடிங்கிக் கொண்டு ஓடி விடுகிறார். அந்த சாவி இல்லாமல் அவரது கிரகத்துக்கு திரும்ப முடியாது. எனவே அந்த சாவி எவ்வாறு கிடைக்கப் பெற்று திரும்பவும் தனது கிரகத்துக்கு செல்கிறார் என்பதுதான் கதை.

பூமியில் மக்களிடம் பேசுவதற்காக போஜ்பூரி பாஷையை கற்றுக் கொள்கிறார் பிகே. அந்த மக்களிடம் தனது சாவி எங்கு கிடைக்கும் யாரைப் பார்க்கலாம் என்று கேட்க, 'கடவுளை பார்.. அவரிடம் கோரிக்கை வை' என்கின்றனர் எல்லோரும். 

ஒரு கடைக்கு செல்கிறார். 

'எனக்கு கடவுள் வேண்டும்'

'15 ரூபாய், 25 ரூபாய், 50 ரூபாய் எந்த கடவுள் வேண்டும்?' கடைக்காரர் சாமி சிலைகளை காட்டி கேட்கிறார்.

'எனது கோரிக்கை ஒன்றுதான். எல்லா கடவுளும் ஒன்றுதான் எனும் போது எனக்கு விலை குறைந்த கடவுளை தரவும்'

'அப்போ 15 ரூபாய் கடவுளை தருகிறேன்' 

கடைக்காரர் சிலையை தர வாங்கிக் கொள்கிறார் பிகே. 

அடுத்து கதாநாயகி ஒரு பாகிஸ்தானிய முஸ்லிமை (அஃப்ராஸ்) பெல்ஜியத்தில் காதலிக்கிறாள். இந்த செய்தியை தனது பெற்றோருக்கு தெரிவிக்கிறார். 'இந்துவாக எங்கள் குடும்பத்தில் பிறந்த நீ ஒரு முஸ்லிமை காதலிப்பதா? கூடாது இதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்' என்று எதிர்க்கின்றனர் பெற்றோர். கதாநாயகியின் தந்தை தனது குருவான துறவியிடம் இந்த செய்தியை கொண்டு செல்கிறார். 

'பாகிஸ்தானிகள் நம்பிக்கை துரோகம் செய்து விடுவார்கள். உனது வாழ்வு வீணாகி விடும்' என்று அந்த துறவி கதாநாயகியை மிரட்டுகிறார். 'இல்லை! எனது காதலன் எனக்கு நம்பிக்கை துரோகியாக மாட்டான். நான் அவனைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன்' என்று கண்டிப்புடன் கூறி தொடர்பை துண்டிக்கிறாள் கதாநாயகி.

அந்த துறவி சொன்னது போல் நம்மை இந்த பாகிஸ்தானி ஏமாற்றி விடுவானா என்ற யோசனையில் ஆழ்ந்த போது காதலனும் அருகில் வருகிறான். 

'நாம் நாளை திருமணம் முடிக்கிறோம்' - இது நாயகி.

'ஏன் என்ன அவசரம்?' -பாகிஸ்தானி.

'அதெல்லாம் ஒன்றுமில்லை. நாளை நமது திருமணம் ரிஜிஸ்டர் ஆபிஸில் நடக்கிறது. மறக்காமல் வந்து விடு'.

மறுநாள் ரிஜிஸ்டர் ஆபிஸில் கதாநாயகி காத்திருக்கிறாள். ஆனால் சிறுவனொருவன் ஒரு காகிதத்தை கொடுக்கிறான். அதில் 'மன்னிக்கவும். திருமணம் முடிக்கும் மன நிலையில் நான் இல்லை' என்று எழுதியிருந்தது. தனது பெற்றோரும் துறவியும் சொன்னது சரியாகி விட்டதே என்று எண்ணி அழுதவளாக இந்தியா திரும்புகிறாள். ஆனால் இந்த பெண்ணை குடும்பத்தில் பெற்றோர் சேர்க்கவில்லை. எனவே ஒரு செய்தி சேனலில் ரிப்போர்ட்டராக சேருகிறார். 

அங்குதான் பிகேயை சந்திக்கிறாள். அதன் பிறகு பாகிஸ்தானி அவளை ஏமாற்றவில்லை, அந்த துண்டு சீட்டு வேறொரு பெண்ணுக்கு வந்தது, தவறாக கதாநாயகியிடம் கொடுக்கப்பட்டது என்பதை பிகே வெளிப்படுத்தி எல்லா நாட்டிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே உள்ளனர் என்பதை விளக்குகிறார்.

மூன்று மதத்தையும் இந்த படத்தில் ஒரு பிடி பிடிக்கிறார் இயக்குனர். மூன்று மதங்களிலும் புரோகிதம் எந்த அளவு வேரூன்றியுள்ளது என்பதை அழகாக விவரிக்கிறார். 'பெண்கள் கல்வி கற்கக் கூடாது' என்று இஸ்லாம் சொல்லவில்லை. பிறகு ஏன் பெண்கள் கல்வி கற்பதை எதிர்க்கிறீர்கள்? அந்த அதிகாரத்தை உங்களுக்கு கொடுத்தது யார்?' என்ற கேள்வியையும் வைக்கிறார் டைரக்டர். இந்த கேள்வியானது, தாலிபானிய மனப்போக்கு கொண்டவர்களை பார்த்து கேட்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. 

கடவுளுக்கு நாம் கோரிக்கை வைக்க இடையில் இந்த இடைத்தரகர்களான புரோகிதர்கள் எதற்கு என்று பல இடங்களில் கேள்வி கேட்கிறார். "ஒரு தாய் தனது குழந்தைக்கு பசியறிந்து சோறு ஊட்டுகிறாள். அதற்கு காணிக்கை எதுவும் வாங்குவதில்லை. தாயை விட மேலான இறைவனிடம் கோரிக்கை வைக்க உண்டியலில் பணத்தை போடச் சொல்கிறீரே! இப்படி உண்டியலில் பணம் போடச் சொல்லி கடவுள் உங்களுக்கு கட்டளையிட்டாரா?' - சரியான கேள்வி தான். 

இப்படத்தை தடை செய்ய வேண்டுமென்றும், மக்கள் பார்க்க கூடாதென்றும் சிலர் சர்ச்சைகளை ஏற்படுத்துவது கவலைக்குரியது. இன்று நாட்டின் சில இடங்களில் திரையரங்குகள் நொறுக்கப்பட்டுள்ளன. சமயங்களில் சொல்லப்படாத பழக்கங்களை விட்டொழிப்பது தான் ஆரோக்கியமான நல்வாழ்விற்கு வழிவகுக்கும். இதற்கு எந்த மதமும்/மார்க்கமும் விதிவிலக்கல்ல.

Sunday, December 28, 2014

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க!?

வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை தெரிந்து கொள்ள புதிய ஏற்பாடு (Must Share it Friendss)

வாக்காளர் பட்டியலில் நமது பெயர் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள தேர்தல் ஆணையம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடந்து வருகிறது. 

வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதையும் பொதுமக்கள் அந்த முகாம்களுக்கு சென்று பார்க்கலாம்.மேலும், கூடுதலாக சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்திலும் சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் 1950 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால், தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா, இல்லையா என்பது குறித்து தெரிவிக்கப்படும். இது இலவச தொலைபேசியாகும்.அதேபோன்று, செல்போன் மூலம் எஸ்எம்எஸ் செய்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம். 

அதற்கு, EPIC என்று டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு, வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து 94441 23456 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். 24 மணி நேரத்திற்குள் தேர்தல் அலுவலகத்தில் இருந்து விவரம் தெரிந்துகொள்ளலாம். பெயர் இல்லை என்றாலும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்படும்.

Sunday, December 21, 2014

இப்படியா இதயமெல்லாம் பதறுகிறது!?

பாகிஸ்தான் பெஷாவரிலுள்ள இராணுவப் பள்ளியில் நடைபெற்ற வெறிச்செயல் மிக மிக மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது வடிகட்டிய, ஈனத்தமான, கோழைத்தனமான செயல். (மோடி என்கிற யோக்கியன் கண்டனம்).

இந்தக் கொடூரத்தைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சரி-  சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

உயிரிழந்த மாணவர்களை இறைவன் சுவனப் பூங்காவில் நுழைவிப்பானாக.  குழந்தைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் என்ன ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை.

பயங்கரவாதிகளுக்கு மதம், நாடு, மொழி  என்பதெல்லாம் எதுவும் இல்லை என்று மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டடுள்ளது.

இந்த தாக்குதல் மனிதாபமானமற்ற செயல் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இதை ஒரு போதும் இஸ்லாம் ஆதரிக்க வில்லை, இதை செய்தவர்கள் மனித மிருங்கங்கள் அவர்கள் என்ன காரணம் சொன்னாலும் அதை ஏற்க முடியாது.

காரணமின்றி மனித உயிர்களோடு விளையாடுபவன் இசுலாமியோனோ, இந்துவோ அல்ல கிர்ஸ்தவனோ யாராக இருந்தாலும் சரி, விடுதலை புலிகளாக இருந்தாலும் சரி, சிங்கள அரக்கர்களாக இருந்தாலும், சரி நம் நாட்டு குஜராத் தன் இன கொலையாளி காவி பயங்கரவாதிகள் மோடி உள்பட எவரானாலும் சரி, அவர்கள் மனித இன துரோகிகள் மட்டும் அல்ல. இறை துரோகியும் ஆவார்கள் அவர்களை நாம் மன்னிக்க முடியாது.

அதே நேரம் இஸ்லாமியன் செய்தால் அது கொடுங்கோல் அதை மற்றவன் (ஹிந்துத்துவா தீவிரவாதிகள்) செய்தால் கண்மூடி இருக்கும் நம் நாட்டு மன சாட்சி அற்ற மக்கள் மனித நேயத்தை பற்றி பேசுவது கேலிதனமனது அவர்கள் உண்மையில் மனித உயிர்களை நேசிக்கவில்லை.

நடு நிலையாக பேசும் பிறமத சகோதரர்களும் இருக்கின்றார்கள் என்பதும் உண்மை.

(படம்:போஸ்னியாவிலே முஸ்லீம்களை கொன்று குவிக்க கம்யூனிஸ்ட் ராட்கோ மிலாடிக்கை தூண்டிய எது?). 

குஜராத்தில் மனித குலமே வெட்கப்படும்படி இந்துத்துவ தீவிரவாதிகள் நரரமோடியின் உதவியுடன் தாங்கள் செய்த படுகொலைகளையும், கற்பழிப்புகளையும் (மோடியின் அயோக்கியதனத்தை) தட்டிகேட்கவும் எந்த ஒரு வந்தேறி நாய்களுக்கும் வாயில்லை!!. இதுதான் நம் கேள்வி?.

Sunday, December 7, 2014

ஐயே.. என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்!?

பண்டைய கால தமிழர்களின் உணவு முறை: முஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் பலரைப் பார்த்துள்ளோம். ஆதி கால தமிழர்கள் அசைவப் பிரியர்களாகவே இருந்துள்ளனர். பின்னால் வந்த ஆரியனால் தமிழர்களின் கலாசாரம் மறையத் தொடங்கி ஆரிய கலாசாரம் தமிழகமெங்கும் ஏன் இந்தியா முழுவதுமே பரவத் தொடங்கியது. நமது முன்னோர்கள் எந்த அளவு அசைவப் பிரியர்களாக இருந்துள்ளனர் என்பதனை சங்க கால தமிழர்களின் வரலாற்று நூல்களிலிருந்து சிலவற்றைப் பார்ப்போம்.

குறிஞ்சி,பாலை,முல்லை,மருதம்,நெய்தல் என்ற ஐவகை நிலத்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்.அந்த தமிழர்கள் உண்ட உணவைப்பார்ப்போம்.


குறிஞ்சி நிலத்தவர் உணவு: சோழ நாட்டு குறிஞ்சி நில மக்கள் தேனையும்,கிழங்கையும் உண்டார்கள்.பிற நிலத்தாருக்கும் விற்று மீன்,நெய்யையும் நறவையும் வாங்கி வந்தார்கள்.-(பொருநாநூற்றுப்படை.213-214.)

திணைச் சோறும் நெய்யில் வெந்த இறைச்சியையும் உண்டனர்.(மலைபடுகடாம்-168-169)

குறிஞ்சி நிலத்தார் பெண் நாய் கடித்த உடும்பின் இறைச்சியையும் கடமான் இறைச்சியையும்,பன்றி இறைச்சியையும் உண்டனர். ( மலைபடுகடாம்-171-183)

மலை நாட்டை காவல் புரிந்த வீரர் இறைச்சியையும் கிழங்கையும் உண்டனர்.மலை மீது நடந்து சென்ற கூத்தர் தினைப்புனத்து காவலனால் கொல்லப்பட்ட காட்டுப்பன்றியின் மயிரைப்போக்கி மூங்கில் பற்றியெரியும் நெருப்பில் வதக்கி உண்டனர்.(243-249 ).

பாலை நிலத்தார் உணவு: ஓய்மானாட்டுப் பாலை நில மக்களான வேட்டுவர்கள்,இனிய புளிங்கறி எனப்படும் சோற்றையும் ஆமாவின் சூற்றிறைச்சியையும் உண்டனர். (சிறு நாநூற்றுப் படை-175-177).தொண்டை நாட்டு பாலை நில மக்கள் புல்லரிசியை சேர்த்து நில உரலில் குத்திச் சமைத்த உணவை உப்புக்கண்டத்துடன் சேர்த்து உண்டனர். (பெ.ஆ.படை.95-100).மேட்டு நிலத்தில் விளைந்த ஈச்சங்கொட்டை போன்ற நெல்லரிசி சோற்றையும் உடும்பின் பொரியலையும் உண்டனர். (பெ.ஆ.படை.130-133).

முல்லை நிலத்தார் உணவு; பொன்னை நறுக்கினார்ப் போன்ற நுண்ணிய ஒரே அளவுடைய அரிசியை வெள்ளாட்டு இறைச்சியுடன் கூட்டி ஆக்கிய சோற்றையும் (சங்ககால பிரியாணி) திணை மாவையும் உண்டனர். (440-445).

மருத நிலத்தார் உணவு; மருத நில மக்கள் கரும்பும் அவலும் குறிஞ்சி நிலத்தார்க்கு கொடுத்து மான் கறியையும், கள்ளையும் பெற்றுக்கொண்டனர்.(பெ.ஆ.படை. (216-217).ஒய்மானாட்டு மருத நிலத்தார் வெண்சோற்றையும் நண்டும் பீர்க்கங்க்காயும் கலந்த கூட்டையும் உண்டனர். (சி.ஆ.படை.193-195).தொண்டை நாட்டு மருத நிலத்தார் நெல் சோற்றை பெட்டைக்கோழி பொரியலுடன் உண்டனர்.(பெ.ஆ.படை.254-256).

நெய்தல் நிலத்தார் உணவு; நெய்தல் நிலத்தார் நுளைச்சி அரித்த கள்ளையும் உலர்ந்த குழல் மீனின் சூட்டிறைச் சியையும் உட்கொண்டனர்.(சி.ஆ.படை.(156-163).தொண்டைநாட்டுப் பட்டினத்தில்(மாமல்லபுரம்) நெல்லை இடித்து மாவாக்கி ஆண் பன்றிகளுக்கு கொடுத்து கொழுக்க வைத்து அதன் இறைச்சியை சமைத்து உண்டனர்.காவிரிபூம்பட்டினத்து மீனவர் கடல் இறா,வயல ஆமை இரண்டையும் பக்குவம் செய்து உண்டனர். (பட்டினப்பாலை.63-64).கள்ளுக்கடைகளில் மீன் இறைச்சியையும், விலங்கு இறைச்சியும் பொரிக்கப்பட்டு விற்கப்பட்டன. (பட்டினப்பாலை- (176-178).

இவ்வுணவுகள் தாம் அசல் தமிழர்கள் உண்ட அசைவ உணவு. இன்று சைவம் பேசும் தமிழர்கள் எங்கிருந்து வந்தார்கள்.?
 

Monday, December 1, 2014

இந்தியாவின் சாபக்கேடு!?

பள்ளிவாசலில் பாஜக கொடி! வட இந்தியா பள்ளிவாசல் ஒன்றில் பாஜக கொடி நடு ராத்திரியில் ஏரி ஏற்றப்பட்டு வன்முறைக்கு வித்திட்டுள்ளனர்.

* RSS காவிபயங்கரவாதிகள் இந்த நாட்டில் இன்னும் தேசபக்தி வேடம் போட்டு இருக்கிராயே அது தான் இந்த நாட்டிற்க்கே அவமானம்,

* உன்னுடைய சுயலாபத்திற்
காக இந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்கிராயே  அது தான் அவமானம்!"!

* தேசபிதா காந்தியை கொன்றாயே அது அவமானம்,

* வெள்ளையணுக்கு மாமா வேலை பார்த்து இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளை காட்டி கொடுத்தாயே அது அவமானம்!!!!

* சொந்த மாநில மக்களை உன் பிரதமர் நரபலி மோடி கொன்று குவித்தானே அது அவமானம்.

* மரியாதைகுரிய போரில் மடிந்த ராணுவ வீரர்களுக்கு வாங்கிய சவப்பெட்டியில் ஊழல் செய்தாயே அது அவமானம்!!!!

* இந்திய ஜனநாயகத்தையே குழிதோன்டி புதைக்கும் முயற்ச்சியில் ஈடுபடுகிராயே அது அவமானம்!!!!!

* தலித் மக்களை கோவிலுக்குள் விட மறுக்கிறாயே அது அவமானம்!!!!

* மதவெறி, கலவரம், பொய், போட்டோ ஷாப் இதை மட்டுமே செய்து மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்துள்ளாயே இது தான் இந்தியாவின் உச்சகட்ட அவமானம்!!!

* இந்த இந்திய மண்ணில் ஒரு RSS காவி நாய்கள் இருந்தாலும் அது இந்த மண்ணுக்கே அவமானம், இந்துத்துவா இந்தியாவின் சாபக்கேடு. 

நடு ராத்திரியில் ஏரி கட்டி இருப்பானுங்க காவி டவுசர் பகலில் ஏரி கட்டி இருந்தால்,.. காந்திக் காலத்தில் இருந்த பொட்டயாதான் இருக்கானுக்க என்ன செய்வது வம்சாவளி காட்டிக் கொடுத்தும் கூட்டிக் கொடுத்தும் வாழ்ந்தவனுங்க திருந்துவானுங்கலா?.

அந்த கொடியை கோயில்கலில் கொமணம் இல்லாமல் இருக்கும் சிலைக்கு கொமணம் கட்டடுங்கட அவமானம இருக்கு.

இஸ்லாமியர்கள் ஆங்கில அரசுக்கு எதிராக,    தீவிரமாக போராடியவர்களின்  தியாகத்தை, வீரத்தை  சுதந்திரப் போராட்ட  வரலாற்றை  மறைத்து விட்டு, இந்திய மககளுக்கு  தாங்கள் செய்த துரோகத்தை, ஆங்கிலேயருக்கு (கூட்டி கொடுத்தான், காட்டி கொடுத்தான்) தாங்கள் காட்டிய விசுவாச வரலாற்றை  மறைத்துவிட்டு இன்று வசதியாக மக்களின் பார்வையில்   இன்று தேசபக்தி  வேடம் போடுகிறார்கள்.

இந்தியாவை காப்பாற்ற பிறந்த தேசபக்தர்களாக  தங்களை  இப்போது  அடையாள படுத்துகின்றனர்! மேலும் சுதந்திரத்துக்காக  சுகபோகங்களைத் துறந்து போராடியவர்கள் இஸ்லாமியர்கள்  இந்த மண்ணின் மைந்தர்கள் இந்துமத  இழிவை ஏற்றுக் கொள்ளாமல்,  முஸ்லிம்களாக  மதம் மாறியதால். மேலும்,  இந்த தேசத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து தீரமுடன் போராடிய இஸ்லாமியர்களை இன்று தேச விரோதிகளாக, தீவிரவாதிகளாக  காட்டுகிறார்கள் இந்த ஹிந்துத்துவா  தீவிரவாதிகளான ஆரிய வந்தேறிகள். 

Saturday, November 22, 2014

பால் கொடுத்தால் அம்மா அழகாயிடுவாங்க!?

தாய் பால் கொடுத்தால் அம்மா அழகாயிடுவாங்க ஒரு நிஜம்.
குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டுவதன் மூலம் அழகு கெட்டுவிடும் என்று பெண்கள் மத்தியில் தவறான கருத்து உள்ளது. குழந்தைப் பேறுக்குப் பின்பு சரியான வழிமுறைகளைப் பின்பற்றினால் உடல் கட்டமைப்பைச் சீராகப் பராமரிக்க முடியும். குழ ந்தைப் பேறுக்குப் பின் பெண்கள் குண்டாவது உண்டு.

தாய்ப்பால் கொடுக்கும் போது, உடல் பருமனானது படிப்படியாகக் குறைந்து பழைய நிலைமைக்கு வரும். தாய்ப்பால் தொடர்ந்து கொடுக்கும்போது ஆக்சிடோசின் ஹார்மோன் சுரப்பும் அதிகரிக்கும். இதனால் கருப்பை சுருங்கி, பிரசவத்துக்கு முன்பு உள்ள நிலையை அடையும். கருப்பைப் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளும் குறையும்.
தாய்ப்பால் கொடுத்துவரும் தாய்மார்களுக்குக் குழந்தை பிறந்து நான்கு மாதங்கள் வரை மாதவிடாய் தள்ளிப்போகும். இது அடுத்த குழந்தைக்கான வாய்ப்பைத் தள்ளிப்போடவும் உதவுகிறது. ஆனால், இதற்கு மாறாக சிலருக்கு மாதவிடாய்ச் சுழற்சி ஏற்படவும் செய்யலாம். அது அவர்களது உடல் அமைப்பு, ஹார்மோன் மாற்றத்தைப் பொருத்தது. பிரசவக் காலத்தில், ஜெஸ்டேஸ்னல் டயபட்டிஸ் (Gestational Diabetes) பாதிப்பு இருந்தால் தாய்க்கு டைப்&2 சர்க்கரை வியாதி வரும். ஆனால், தாய்ப்பால் கொடுத்து வந்தால் இந்தச் சர்க்கரைப் பாதிப்பும் வருவதில்லை. மேலும், தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாயின் மன அழுத்தம் குறைந்து ஒருவிதமான திருப்தியை உணர முடியும்.
பிரசவம் முடிந்த 3 முதல் 10 மாதங்களுக்குள் உடலும் மார்பகங்களும் 60 சதவிகிதம் தன் நிலைக்கு வந்துவிடும். தாய்ப்பால் கொடுப்பது முழுமையாக நிறுத்தப்பட்டதும் மார்பகங்கள் முழுமையான தன்னிலைக்கு வந்துவிடும். இதற்கு கர்ப்ப காலத்தில் இருந்தே சரியான அளவில் பிரேஸியர் அணிவது உதவும். பிரேசியர் அணிவதால் சரியான அளவில் பால் சுரக்காது அல்லது பால் கட்டும் என்கிற மூட நம்பிக்கையும் பலரிடம் இருக்கிறது. இதில் உண்மை கிடையாது. பிரசவம் முடிந்ததும் தவறாமல் பிரேஸியர் அணிய வேண்டும்.

Friday, November 14, 2014

தெரியாத துரித உணவு!?

அவசர உலகில் எது நல்லது எது கெட்டது என்று தெரியாமாலேயே நாம் துரித உணவுகளை உட்கொள்கிறோம் அது எப்படிசெய்கிறார்  (தீங்கு விளைவிக்க கூடியது) என்பதை அதன் நடத்துனர் தினேஷ் சொல்கிறார்.

1) பாஸ்ட் புட் கடைகள் வைத்திருக்கும் நாங்கள் அன்று வாங்கிய சிக்கன் மட்டுமே உபயோகப்படுத்துவதில்ல 2 அல்லது 3 நாட்களுக்கு முன் வாங்கிய மிஞ்சிய சிக்கனை தான் அதிகமாக யூஸ் செய்கிறோம் அதை வினிகரில் கழுவி யூஸ் பண்ணும்போது அந்த கேட்டு போன வாடையை கஸ்டமர்கள் அறிவதில்லை.

2) சிக்கன் ரைஸ் செய்யும்போது வெள்ளையாக உள்ள சிக்கனை சிகப்பாக மாற்ற ஆரஞ்சு பவுடரை யூஸ் பண்றோம் .. ஆனால் அது ஒரு தடை செய்யப்பட பொருள் .. அந்த ஆரஞ்சு பவுடரை உங்கள் கையில் கொட்டி திருப்பி கை கழுவினால் கூட அந்த சிகப்பு சாயம் உங்கள் கையில் 2 நாட்களுக்கு இருக்கும் அப்ப அது உங்கள் வைத்துக்குள் போனால்.

3) சோயா சாட்ஸ் .. இதன் விலை அதிகமாக இருப்பதால் இதை நாங்கள் அப்படியே யூஸ் பண்ணுவதில்லை .. மாறாக தண்ணியோ அல்லது ஒரு வாரத்திற்கு முன்னர் யூஸ் பண்ணின என்னையோ கலந்து செய்றோம்.

4) எந்த பாஸ்ட் புட் கடையிலும் சன் பிளவர் எண்ணை யூஸ் பண்ணுவதில்லை .. பாமாயில் தான் யூஸ் பண்றோம்.

5) ரைஸ் கடாயில் யூஸ் பண்ணும் பொது சோரு கடாயில் ஓட்ட கூடாது என்பதற்காக அதிக அளவு பாமாயிலை அதில் கொட்டுகிறோம் ..

6) இன்னொன்னு சொன்ன நம்ப மாட்டிங்க ... அந்த ரைஸ் போட்டு கிண்டும் கடாயீலை நாங்கள் ஒரு வாரத்திற்கு கழுவ மாட்டோம் .. காரணம் அதில் உள்ள என்னை பசை போக கூடாது என்பதற்காக .. நாங்கள் கழுவி எண்ணை பசை போய்விட்டால் அடுத்த நாள் எங்களுக்கு அதிக கேஸ் வேஸ்டாகிவிடும்.

7) அஜினமோட்டோ .. இதை அதிகமாக யூஸ் பண்றோம் .. உடலுக்கு கேடு உண்டாக்கும் பொருள் .. இதை தொட்டு உங்கள் நாக்கில் வைத்தால் அந்த இடம் மரத்து விடும் .. சோதித்து பாருங்கள்.

8) வெள்ளை பெப்பர் .. இதில் வெண்மை நிறத்திற்காக கோல மாவு கலப்படம் செய்ய படுகிறது அதை தான் நாங்கள் உபயோகப்படுகிறோம்.

9) தக்காளி சாஸ் .. இதுவும் நீண்ட நாள் ஸ்டாக் வைத்த , காலாவதியான சாஸ் விலை கம்மியாக கிடைப்பதால் அதை யூஸ் பண்றோம்.

10)சில்லி சாஸ் .. அத கிட்ட பொய் மோர்ந்து பார்த்தா முகம் சுளிக்கிற அளவுக்கு கேட்ட வாடை அடிக்கும் .

இது தான் .. நாங்கள் பாஸ்ட் பபுட் செய்ய யூஸ் பண்ணும் பொருட்கள் .. 5 நிமிசத்துல 8 plate போடுவோம் .. ஒன்னு 50 ருபாயினு வித்தா 400 ருபாய் சம்பாரிப்போம் .. அத நானும் சாப்பிட்டு ஏன் உடலும் கெட்டு விட்டது விட்டது .. மற்றவர்களின் உடலையும் கெடுக்குரெனெ என என் மனசாட்சி உறுத்தியது .. அதனால் அதை மூடிவிட்டு 8000 ருபாய் சம்பளத்திற்கு நிம்மதியாக வேலைக்கு செல்கிறேன்.

-தினேஷ் (பாஸ்ட் புட் கடை வைத்து இருந்தவர் )

Monday, November 3, 2014

Pendrive ல் இருக்கும் ஆனா இருக்காது!?

தகவல்களை சேமித்து வைக்க பெரும்பாலான நபர்கள் USB Pendrive-களை பயன்படுத்துவார்கள். இதில் முக்கியமான பிரச்னை வைரஸ் பிரச்னை, வைரஸ்கள் மிக சுலபமாக Pendrive-ல் புகுந்து, தகவல்களை பாதிக்கிறது. அப்போது கணனியில் Pendrive-வை ஓபன் செய்தால் எந்த தகவலும் இருக்காது. ஆனால் Properties சென்று பார்க்கும் போது பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும்.

கோப்புகளை மீண்டும் திரும்ப பெறுவதற்கு, எந்தவொரு மென்பொருளையும் உங்கள் கணனியில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை.

இதற்கு முதலில்,

1. Pendrive-யை கணனியில் சொருகி கொள்ளுங்கள்.

2. Start –> Run –> cmd –> Enter கொடுக்கவும்.

3. இப்போது உங்கள் Pendrive எந்த டிரைவில் இருக்கிறது என பாருங்கள். இதற்கு My Computer சென்று தெரிந்து கொள்ளலாம்.

4. உதாரணமாக E: டிரைவில் Pendrive இருக்கிறது என வைத்து கொள்வோம், அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

5. அதன் பின் attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள், ஒவ்வொரு பகுதிக்கும் Space சரியாக கொடுக்கவும்.

சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள், உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.

Saturday, October 25, 2014

நம்மிடம் வந்த ஒரு முகநூல் கேஸ்!?

ஒரு பெண் திருமணமானவர் ஒரு பெண் குழந்தை உண்டு கணவரும் அப்பாவும் வெளிநாட்டில் இவர் அம்மாவின் பராமரிப்பில் (இந்தம்மா பேஸ்புக்கில்).

அடிக்கடி மகளின் படத்தை முகநூலில் இட்டு லைக் வாங்குவார் கமெண்ஸில் பூரிப்பார் ,இவ்வழியில் நட்பில் இணைந்தார் ஒருவர். அவர் மகளைப் புகழ்ந்து அடிக்கடி இன்பாக்ஸ்இல் ஜொள்ளு வடித்திருக்கிறார் ,ஒருநாள் "இந்த குட்டி இவளோ அழகா இருக்கே இவங்கள பெத்த அம்மா எவளோ அழகா இருப்பாங்க ப்ளீஸ் ஒரு போட்டோ காட்டக்கூடாதா?" என் வழிந்துள்ளார்.

பெண் அப்படியே அங்கமெல்லாம் பூரித்து ஒரு படத்தை அனுப்பிவிட்டார்- அடுத்து அதை பார்த்த நபர் "என்னங்க க்ளோஸாவே இல்ல இன்னொரு படம் நல்ல மேக்கப் போட்டு க்ளோஸா அனுப்புப்பா என்றதும் (பெண் உஷாராகி "உங்க படம் அனுப்புங்க அப்பதான் நான் அனுப்புவேன் என்று சொல்ல) அவர் ஒரு பிரபலமல்லாத ஹிந்தி மாடலிங் ஆளின் படத்தை அனுப்பி இது நான் தான் இப்ப கொஞ்சம் கருத்துட்டேன் துபாய் ல என் வேலை அப்படி என்று புளுகியிருக்கார்.

பொண்ணு அவர் அழகுல மயங்கி அவர் கேட்ட போதல்லாம் டிசைன் டிசைனா படம் எடுத்து அனுப்பிடுச்சு ஆனால் அண்ணன் அப்பறம் தான் வேலையை காட்ட ஆரம்பிச்சிருக்கார்.

அசிங்கமான படங்கள் கேட்டு தொல்லை ,இந்த பெண் சந்தேகம் கொண்டு உங்க அம்மா தங்கை படமிருந்தால் எனக்கு அனுப்புங்க என்று கேட்க அவர் மறுத்துவிட்டார்(அப்படி யாரும் இருந்தாதானே அனுப்புவான் இந்த நாயெல்லாம் என்னைக்கோ குடும்பத்தை விட்டு விரட்டி இருப்பாங்க).

மேற்கொண்டு படங்கள் அனுப்பாத காரணத்தால் அவன் மிரட்ட ஆரம்பிக்க இந்த பொண்ணுக்கு டர்ர்ர்ரு ஸ்டார்ட்.

அவன் மேல் இருந்த அதீத நம்பிக்கையில் துபாயில் அவள் கணவர் தந்தை இருக்கும் இடங்களையும் தெரிவித்திருக்கிறாள் - இதுபோதும் அவனுக்கு அவளை மிரட்ட அவள் கெஞ்சியும் அவன் விடவில்லை இந்தப்பெண் ப்ளாக் செய்தும் அவன் வேறு பெயர்களில் முன்பே நட்பில் இணைந்திருந்தபடியால் தப்பிக்க முடியவில்லை.

உதவி கேட்டு நம் சகோதரர் ஒருவரை அனுகவே அவர் உன் ஐடியை டீஆக்டிவேட் செய் வேறு ஐடியில் அவன் நட்பு வட்டத்து பெயர்களை (mutual friends )இணைக்க வேண்டாம் என்றும் அந்நிய ஆடவருடன் சகஜமாக பேச உங்களுக்கு எப்படி துணிச்சல் வருகிறது என்றும் உங்கள் குடும்பத்தில் உங்களுக்கு கொடுக்கப்படும் சுதந்திரத்தை ஏன் இப்படி அசிங்கப்படுத்துகிறீர்கள் என்றும் செமத்தியாக திட்டி அனுப்பினார்.

அடுத்தவன் யாரென்றே தெரியாமல் எப்படி அவன் அனுப்பிய படத்தை நம்பினாய்,உன் புருஷனை விட அந்த கேவலப்பட்ட நாய் எந்த விதத்தில் உயர்ந்தவன் ,வெளிநாட்டில் இருக்கும் உன் கணவன் உன்னோடு பேசிக்கொள்ளத்தானே இந்த அனுமதியை உனக்கு வழங்கியுள்ளான் அதை நீ அத்துமீறலாமா? என்று அறிவுரை கூறப்பட்டது.

பெண்களே! முகநூல் ஒரு இருள் உலகம் இங்கு எல்லோருக்கும் ஒரு கரிய முகம் உண்டு உங்கள் படங்களை எத்தன்மை வாய்ந்ததாயினும இங்கு பதிவிட வேண்டாம்.

உங்களை அறிந்த மக்கள் நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்பதை நன்கறிவார்கள் அதுபோல நீங்கள் அறியாத நண்பர்கள் எத்தன்மைவாய்ந்தவர் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்!

அப்படி கட்டாயம் உங்கள் முகத்தை வெளிப்படுத்தியே ஆகவேண்டும் என்றால் அதனால் வரும் பின்விளைவுகள் மற்றும் இழப்புகளை தாங்கிக்கொள்ள தயாராய் இருங்கள்!

அந்த துணிச்சல் இருந்தால் இந்த அறிவுரையை தூக்கி எறியுங்கள் ! செல்போன்கள் எதிர்விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. இதில் பாதிக்கப்படுபவர்கள் குறிப்பாகப் பெண்கள் தான். 

அறிமுகம் இல்லாத நபர்களிடம் உங்கள் செல்போன் எண்ணை பகிர்ந்துகொள்வதை தவிர்த்துவிடுங்கள். தேவையற்ற நபர்களிடம் தேவையற்ற பேச்சுக்கள் அறவே வேண்டாம். அறிமுகம் இல்லாத, அவ்வளவாக பழக்கமில்லாத நபர்களிடம் சொந்த தகவல்களை பகிர்வது, வீட்டுக்குள் அனுமதிப்பது போன்ற செயல்களையும் பெண்கள் கட்டாயம் தவிர்த்துவிடுங்கள். விக்கிறவனுக்கு ஒரு கண் போதும், வாங்குகிறவனுக்குத் தான் ஆயிரம் கண்கள் வேண்டும் என்றொரு பழமொழி தமிழில் உண்டு. அது போல ஆண்களை விட பெண்கள் எப்போதும் ஒரு படி மேலே ஜாக்கிரதை உணர்வோடு செயல்பட்டால் இது போன்ற சுய கவுரவத்திற்கு இழுக்கு ஏற்படும் நிலைமையிருந்தும், சமூக நெருக்கடிகளில் இருந்தும், பல இழப்புகளிலிருந்தும் தங்களை காப்பாற்றிக் கொள்ளமுடியும்.

Thursday, October 16, 2014

ATM குறைகளை நிவர்த்தி செய்ய!

மிக மிக முக்கியமான செய்தி ATM /BANK சம்பந்தப்பட்டது மறக்காமல் படித்து விட்டு பகிரவும் இதுவரை அதிகாரவர்கத்தினர் அலட்சியபோக்கால் பாதிக்கப்பட்டு வந்த அப்பாவிகள், சாமானியர்கள், வாடிகையளர்கள், படிப்பறிவு குறைவானவர்கள் என பல்வேறு தரப்பினர் இனி பாதிக்கபடுவது குறைந்து கொண்டே வரும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை. அதன் முதல் அங்கம், இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் "ஒபட்சு மேன்" { Ombudsman } என்ற திட்டம் பயனாளர்களுக்கு மிகுந்த சாதகமாகாவும், அசுர வேகத்தில் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்து சிறப்பாக செயலாற்றுகிறது என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் உண்மை.

அப்படியொரு சுவாரசியமான செய்தி தான் நேற்று சென்னையில் நடந்தது. xx(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற வாடிக்கையாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 3000/- பணம் எடுபதற்கு ATM சென்று உள்ளார். அப்போது பணம் வராமல் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது என்ற குறுந்தகவல் (SMS) வந்துள்ளது. உடனே அந்த வாடிக்கையாளர் மிகுந்த ஏமாற்றத்துடன் வங்கியை அணுகி உள்ளார். mவங்கியில் ஒரு கடிதம் எழுதி கொடுங்கள் பணம் வந்தால் தருகிறோம் மேலும் அந்த பணம் எடுத்த சீட்டை இதோடு இணைத்து தாருங்கள் என்று கூறியுள்ளனர்.

இவரும் கடிதம் கொடுத்து காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்து பலமுறை வங்கியை முறையிட்டும் எந்த பலனும் இல்லை. சம்பவம் நடந்த நாள் ஏப்ரல் 10 ம் தேதி,மே 10ம் தேதி வரை காத்திருந்து பலன் இல்லாமல் கடைசியாக மே 28ம் தேதி இறுதியாக வங்கியை தொடர்பு கொண்டார். அப்போதும் எந்தபலனும் இல்லை, பொறுமை இழந்த X தனது நண்பர் திரு YYYYYYY (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் வங்கியில் வேலை செய்பவரும் ஆன அவரிடம் தனக்கு நடந்த இந்த அவல நிலையை சொல்லி உள்ளார்.

அவர் தான் முதன் முதலில் "ஒபட்சு மேன்" { Ombudsman } பற்றி சொல்லி உள்ளார். அதை கேள்வி பட்ட அதே நாளில் தனது அவலத்தை பின்வரும் இணையம் வாயிலாக https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html ஆதங்கமாக தெரிவித்துள்ளார். மே 29 அன்று ரூபாய் 3000/- வங்கி கணக்கில் சேர்ந்துள்ளது. பின்னர் ஜூன் 18ம் தேதி அவருக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 525/-ம் செலுத்தி உள்ளனர். அந்த சம்பந்த பட்ட வங்கி பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரில் அழைத்து கைப்பட கடிதமும் வாங்கி உள்ளனர்.

மேலும் சகல மரியாதையும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. இனி உங்கள் வங்கியும் இதுபோன்ற தவறுகளை செய்தால் நீங்களும் யோசிக்காமல் "ஒபட்சுமேன் { Ombudsman } "https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html   உங்கள் குற்றங்களை பதிவு செயுங்கள். ( can  u do copy past please).

நீங்கள் கூறும் குற்றம் உண்மை என்று நிருபணம் செய்யபட்டால் சமந்தப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யபடும் அளவிற்கு "ஒபட்சு மேன்" க்கு { Ombudsman } அதிகாரம் உள்ளது.
 
மேலும் வங்கி அதிகாரிகளின் குற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் சமந்தப்பட்ட வங்கி கிளை மூடப்படும் அளவிற்கு "ஒபட்சு மேன்" அதிகாரம் உள்ளது. இதை பார்கையில் எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே என்ற பாடல் வரி ஞாபகம் வருகிறது.
 
எல்லாதிற்கும் ஒரு முடிவு வரும் இனி வரும் காலங்களின் ஒவ்வொரு துறைளும் இதுபோன்ற வாடிக்கையாளர் ஆதரவு நிலையம் இயங்கும் காலம் தொலைவில் இல்லை என்பது மட்டும் உண்மை. PL CLICK THIS LINK TO LOG YOUR COMPLAINTS https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html

Friday, October 3, 2014

பாதிப்பு பொது மக்களுக்கே!?

18 ஆண்டுகளாக நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பை நெருங்கியதற்கு நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹாவே மிக முக்கிய காரணம்.

சொத்துக் குவிப்பு வழக்கை தமிழகத்தில் இருந்து பெங்களூருக்கு மாற்றியது முதல், அந்த வழக்கை நடத்த இதுவரை 5 கோடி ரூபாய் செலவாகியுள்ளது.  


மக்கள் வரி பனத்தை கூட்டு கொள்ளையடித்துவிட்டு அப்பாவி மக்களை தூண்டிவிட்டு அனுதாபம் என்ற பெயரிலும் வன்முறை வெரியாட்டம் ஆடும் அதிமுக. 

மாபெரும் அரசு எந்திரத்தின் தூணாக நிற்கும் அரசு அதிகாரிகள்,போலீஸ் சட்டம் ஒழுங்கை பாதுகாக்காமல் இருந்தது ஏன்??. நம்முடைய வரிப்பணத்தில் ஓடும் அரசு பேருந்து மீது தாக்குவதால் நாட்டிற்கோ, ஜெயலலிதாவிற்கோ என்ன லாபம்?. நம் வீட்டு பெண்கள் இது போல போக வழியின்றி, உண்ண உணவகம் இன்றி இருந்தால் நமக்கு எவ்வளவு கஷ்டம் என்பதை உணர்ந்து அரசியல் கட்சியினர் ஆர்பாட்டம் செய்யாமல் இயல்பு வாழ்விற்கு துணை நிற்பதே மனிதாபிமான செயல். உருவ பொம்மை எரிப்பதால் ,மாற்று கட்சி அலுவலகம் தாக்கப்படுவதால் என்ன லாபம்?? அப்பாவி பொது மக்களுக்கு தான் பாதிப்பு.

ஜெயலலிதா மேல் உண்மையான பாசமிருந்தால் உன் வாகனத்தை எரி அதவிட்டுட்டு பொது மக்கள் வர்ர பஸ்ஸ எரிக்கிறது அப்பாவி மக்களே பயப்படுத்துவது இதுவே முதலும் கடசியுமாக இருக்கட்டும். இது அதிமுக மட்டுமல்ல திமுகாவுக்கும்  சேர்த்துதான். இந்த வழக்கு வெற்றிபெற காரணம் முழுக்க முழுக்க நீதிபதி சாரும் ஏனென்றால் இந்த தீர்ப்பை அறிவிக்க எவ்வளவு தைரியம் வேண்டும் அதை மைக்கேல் டி'குன்ஹா  செய்து காட்டினார்.

@ இவர்கள் அன்று கொள்ளை அடித்த சொத்துக்களின் இன்றைய மதிப்பு பல ஆயிரம் கோடிகள். ஆனால் அபராதமோ வெறும் 100 கோடி. இன்று தமிழகத்தில் இவர்கள் போடும் இந்த முதலைக்கண்ணீர் நாடகம் மக்களை இதிலிருந்து திசை திருப்பத்தான். இது போல அடுத்தடுத்து தீர்ப்பு வந்தால் இனி ஊழல் செய்து சொத்து சேர்க்க முடியாதே. பாதிப்பு பொது மக்களுக்கே!?.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!