Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, November 22, 2014

பால் கொடுத்தால் அம்மா அழகாயிடுவாங்க!?

தாய் பால் கொடுத்தால் அம்மா அழகாயிடுவாங்க ஒரு நிஜம்.
குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டுவதன் மூலம் அழகு கெட்டுவிடும் என்று பெண்கள் மத்தியில் தவறான கருத்து உள்ளது. குழந்தைப் பேறுக்குப் பின்பு சரியான வழிமுறைகளைப் பின்பற்றினால் உடல் கட்டமைப்பைச் சீராகப் பராமரிக்க முடியும். குழ ந்தைப் பேறுக்குப் பின் பெண்கள் குண்டாவது உண்டு.

தாய்ப்பால் கொடுக்கும் போது, உடல் பருமனானது படிப்படியாகக் குறைந்து பழைய நிலைமைக்கு வரும். தாய்ப்பால் தொடர்ந்து கொடுக்கும்போது ஆக்சிடோசின் ஹார்மோன் சுரப்பும் அதிகரிக்கும். இதனால் கருப்பை சுருங்கி, பிரசவத்துக்கு முன்பு உள்ள நிலையை அடையும். கருப்பைப் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளும் குறையும்.
தாய்ப்பால் கொடுத்துவரும் தாய்மார்களுக்குக் குழந்தை பிறந்து நான்கு மாதங்கள் வரை மாதவிடாய் தள்ளிப்போகும். இது அடுத்த குழந்தைக்கான வாய்ப்பைத் தள்ளிப்போடவும் உதவுகிறது. ஆனால், இதற்கு மாறாக சிலருக்கு மாதவிடாய்ச் சுழற்சி ஏற்படவும் செய்யலாம். அது அவர்களது உடல் அமைப்பு, ஹார்மோன் மாற்றத்தைப் பொருத்தது. பிரசவக் காலத்தில், ஜெஸ்டேஸ்னல் டயபட்டிஸ் (Gestational Diabetes) பாதிப்பு இருந்தால் தாய்க்கு டைப்&2 சர்க்கரை வியாதி வரும். ஆனால், தாய்ப்பால் கொடுத்து வந்தால் இந்தச் சர்க்கரைப் பாதிப்பும் வருவதில்லை. மேலும், தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாயின் மன அழுத்தம் குறைந்து ஒருவிதமான திருப்தியை உணர முடியும்.
பிரசவம் முடிந்த 3 முதல் 10 மாதங்களுக்குள் உடலும் மார்பகங்களும் 60 சதவிகிதம் தன் நிலைக்கு வந்துவிடும். தாய்ப்பால் கொடுப்பது முழுமையாக நிறுத்தப்பட்டதும் மார்பகங்கள் முழுமையான தன்னிலைக்கு வந்துவிடும். இதற்கு கர்ப்ப காலத்தில் இருந்தே சரியான அளவில் பிரேஸியர் அணிவது உதவும். பிரேசியர் அணிவதால் சரியான அளவில் பால் சுரக்காது அல்லது பால் கட்டும் என்கிற மூட நம்பிக்கையும் பலரிடம் இருக்கிறது. இதில் உண்மை கிடையாது. பிரசவம் முடிந்ததும் தவறாமல் பிரேஸியர் அணிய வேண்டும்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!