பெண்களைக் குறி வைத்துத் தாக்கும் நோய்களில் தைராய்டும் ஒன்று. இது நோய்க் கிருமிகளால் தாக்கப்படுவதில்லை அயோடின் குறைவே இதற்குக் காரணம்.கழுத்தில் மூச்சுக் குழலின் கீழே காணப்படும் தைராய்டு சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மனித உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அயோடின் ஏற்ற இறக்கம் இந்த சுரப்பிகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் தைராய்டு நோய் ஏற்படுகிறது.
தைராய்டு குறைபாடு காரணமாய் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப் போக நேரிடலாம், குறைந்த வயதிலேயே வயதுக்கு வருவதும் உண்டாகலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இன்றுள்ள சூழ்நிலைக்கு 100 க்கு 90 பேருக்கு தைராய்டு பிரச்சினை உள்ளது. உடல் வெயிட் போடுகிறது என்று தெரிந்தவுடன் முதலில் தைராய்டு டெஸ்டு எடுத்து பார்த்துவிட்டு தைராய்டு இல்லையென்றால் வெயிட் குறைவதற்கு எந்த சிகிச்சை நல்லது? என்று தேர்வு செய்து வெயிட்டை குறைப்பது நல்லது. தைராய்டு டி.எஸ்.எச் அளவு அதிகமாக உள்ளது என்று தெரிந்தவுடன் தைராய்டு குறைய ட்ரீட்மெண்ட எடுக்க வேண்டும். டி.எஸ்.எச் அளவு ரத்தத்தில் அதிகமானால் ஹை தைராய்டு (அதிகமான தைராய்டு), கம்மியானால் லோ தைராய்டு உடலில் அயோடின் சத்து குறைந்தால் வீக்கம் வேறு வந்து விடும். சில சமயம் சிறு, சிறு கட்டிகள் தோன்றி கேன்சரா என்று பயம் ஏற்படும். கட்டிகள் என்ன என்பதை ஸ்கேன் மூலம் பார்த்து தெரிவுப்படுத்திக் கொள்ளலாம்.

தைராய்டு சுரப்பி குறைவாக இருந்தால் ஆரம்பத்தில் தெரிந்தோ, தெரியாமல் இருக்கும். முதல் மாற்றம் மாதவிலக்கில் மாற்றம் ஏற்படலாம். (அதிகமாக அல்லது குறைவாக) உடல் பருமன் அதிகமாகி விடும்.
இளம் பெண்களுக்கு கருமுட்டையில் நீர் கட்டிகள் (பாலி சிஸ்டிக் ஓவரியன் டிஸ“ஸ்) இருக்கலாம். சில பெண்களுக்கு குழந்தை பிறப்புக்கு பிறகு தைராய்டு சுரப்பி குறைவாக சுரக்கும். டெலிவரிக்கு பிறகு உடல் குண்டாவது முகம் பருமனாகிவிடும். கைகளில் வீக்கம், கழுத்து பகுதியில் வீக்கம் ஏற்படும். அதிக களைப்பு, குளிர்ச்சியை தாங்க முடியாமல் தோன்றும். கை, கால்கள் உளைச்சல், மூட்டுவலி, ஞாபக மறதி, மனச்சோர்வு அதிகமாகும். சிலருக்கு குரல் மாறும். எச்சில் முழுங்கும் போது வலி ஏற்படும். சருமம் வறண்டு பொலிவு இழந்து காணப்படும். மற்ற நாளமில்லா சுரப்பிகளும் வேலை செய்யாமல் முடி வளர்ச்சி இல்லாமல் முடி கொத்து கொத்தாக கொட்டி சிலருக்கு வழுக்கையே வந்து விடும். கரு முட்டைகள் சரியாக வளர்ச்சியில்லாமல் உடல் பருமன் காரணமாக குழந்தை பிறப்பை தடுத்து விடும்.
டென்ஷன் காரணமாய் தைராய்டு பிரச்சினைகள் வருகிறதென சொல்கிறார்கள் சிலர். சில குழந்தைகள் பிறக்கும் போதே இந்தக் குறைபாட்டுடன் பிறப்பதுண்டு. ஆனாலும் இந்நோய் ஆண்களை விடப் பெண்களை 7 மடங்கு அதிகமாய் தாக்குகிறது. எனவே பெண்கள் இது விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரைகள் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்ப்பதோடு, உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்.
தைராய்டு சுரப்பி, அதிகமாக சுரந்தாலும், கழுத்து வீக்கம், உடல் சூடு, படபடப்பு, வியர்வை அதிகமாகும். நாக்கு வறண்டு, குமட்டல், வாந்தி கூட வரும். சிலருக்கு குறை பிரசவம், கருச்சிதைவு போன்றவை உண்டாகும். சிலருக்கு கண்கள் பெரிதாக வெளியில் விழும் மாதிரி தோன்றும். பார்வை மங்கும். இந்த தைராய்டு பிரச்சினைக்கு வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டும் என்று பலர் நினைத்து கொள்கிறார்கள். இல்லவே இல்லை. சித்தா மருந்திலிருந்து 3லிருந்து 6மாதம் வரை அவரவர் அளவுக்கேற்ப மருந்து எடுத்துக் கொண்டால் மேல் சொன்ன வியாதிகளை அனைவரும் தவிர்க்கலாம்.
சத்துபவுடர்: தனியா 100 கிராம், எள் 50 கிராம், மிளகு 10 கிராம், மிளகாய் 10, கறிவேப்பிலை போன்ற சாமான்களை வறுத்து பொடி செய்து வைத்து கொள்ளவும். உப்பும் சேர்த்துக் கொள்ளவும். தினமும் 1 பிடி சாதத்தில் 1 ஸ்பூன், நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிடவும். இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளவும். தினமும் சாப்பிட்டு வந்தால் பசி மற்றும் பித்த மயக்கம், தலை சுற்றல், வாந்தி, ருசியின்மை குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு கல்லீரல் பிரச்சினை நீக்கி பலப்படுத்துவது உறுதி.
0 comments :
Post a Comment