Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, May 13, 2011

ஜெ, பதவி ஏற்பு விழாவுக்கு முன்னாள் காதலன் அழைப்பு?

புது தில்லி : தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்கும் விழாவில் கலந்து கொள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு அதிமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து முன்னாள் காதலன் நரேந்திர மோடி, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலிதாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார். அப்போது பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கும்படி ஜெயலலிதா அவரைக் கேட்டுக் கொண்டார்.

கை கழுவிய தமிழக மக்கள், கருத்து சொல்லும் கலைஞர்!! தேர்தல் "11

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. இதில் அ.தி.மு.க. பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. தி.மு.க கூட்டணி குறைந்த இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்டுள்ள தோல்வி காரணமாக முதலமைச்சர் கருணாநிதியும், அமைச்சர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

தேர்தல் முடிவு குறித்து முதலமைச்சர் கருணாநிதி கூறுகையில்,”தமிழ்நாட்டு மக்கள் எனக்கு நல்ல ஓய்வு கொடுத்து இருக்கிறார்கள்” என்றார்.

இந்த தோல்வி குறித்து கனிமொழி கூறுகையில்,”தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்” என்றார்.

மேலும் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி நாளை நடைபெறும் 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான விசாரணையை பாதிக்காது எனவும் கூறியுள்ளார்.

காமடி ஆகிப்போன காமடி பீஸ், அடுத்து என்ன கலக்கத்தில்? தேர்தல் "11

சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட வடிவேலு, தேமுதிக தலைவர் விஜயகாந்தை குடிகாரன் என்று பேசி கடுமையாக தாக்கினார். வடிவேலுவின் காமெடியான பேச்சை கேட்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். வந்தவர்கள் எல்லாம் திமுக கூட்டணிக்குத்தான் ஓட்டு போடுவார்கள் என்று நினைத்த வடிவேலு, தனது பேச்சில் மேலும் மேலும் கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தத் தொடங்கினார்.

தேர்தல் பிரசாரத்தை முடித்த பின்னர் அளித்த பேட்டியில் கூட, செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் வரவேற்பு அதிக அளவில் இருந்ததாகவும், திமுக மாபெரும் வெற்றி பெறும் என்றும் கூறினார். இப்போது திமுக அதிர்ச்சி தோல்வியை சந்தித்துள்ளது. இது யாரை பாதிக்கிறதோ இல்லையோ... வடிவேலுவை நிச்சயம் பாதிக்கும் என்கிறார்கள் கோடம்பாக்கத்து முக்கிய புள்ளிகள். சக நடிகர் என்று கூட பாராமல் ஏக வசனத்தில் பேசி விஜயகாந்தை விமர்சித்ததால் சில சினிமா வாய்ப்புகளை இழந்திருக்கும் வடிவேலுவின் கதி இனி என்னவாக இருக்கும்? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. ‌அதிமுக ஆட்சியை பிடிக்கும் நிலைமையை நெருங்கியதுமே, சென்னை சாலிகிராமத்தில் உள்ள வடிவேலு வீடு முன் கல் மற்றும் உருட்டுக்கட்டைகளுடன் திரண்ட தேமுதிகவினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அங்கு போலீசார் விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் முடிவைத் தொடர்ந்து வடிவேலுவின் அடுத்த ஸ்டெப் என்னவாக இருக்கும்? என்ற ‌கேள்வி எழுந்துள்ள நிலையில் இருவேறு விதமாக பேசப்பட்டு வருகிறது. ஒன்று போயஸ் கார்டன் சென்று சமாதானம் ஆவது; இன்னொன்று திமுகவிலேயே ஐக்கியமாவது. இந்த இரண்டில் ஒரு முடிவைத்தான் வடிவேலு எடுக்கக் கூடும் என கோடம்பாக்கத்தில் பேச்சு எழுந்துள்ளது. இதற்கிடையில் மதுரையில் மத்திய அமைச்சர் அழகிரியின் வீட்டுக்கு சென்ற வடிவேலு, அழகிரியுடன் சிறிது நேரம் பேசினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை.

'நச்' ன்னு வைத்த கடைசி.....,சல்யூட்? தேர்தல் '11

சென்னை : சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அரசு உயரதிகாரிகள் கருணாநிதியிடமிருந்து வெள்ளிக்கிழமை விடை பெற்றனர்.

தலைமைச் செயலாளர் மாலதி, முதல்வரின் அரசுச் செயலர் எஸ்.கே.பிரபாகர், சட்டத் துறைச் செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட பல அதிகாரிகள் மற்றும் போலீஸ் துறை உயரதிகாரிகளும் கருணாநிதியைச் சந்தித்தார்கள்.

அப்போது அதிகாரிகள் இதுவரை ஒத்துழைப்பு கொடுத்ததற்கு கருணாநிதி நன்றி தெரிவித்துள்ளார். பதிலுக்கு அவர்களும் நன்றி தெரிவித்து விட்டு விடை பெற்றனர்.

வீழ்ந்தது பணநாயகம்.., எழுந்தது ஜனநாயகம்!! தேர்தல் 2011

கடந்த ஐந்து ஆண்டுகளில் தலைவிரித்து ஆடிய ஆளுங்கட்சியின் ஊழல், சினிமாத் துறை, தொழில் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் கபளீகரம் செய்ய முயன்ற ஒரு குடும்ப ஆதிக்கம், கடுமையான மின்வெட்டு, இலங்கையில் நிகழ்ந்த இனப்படுகொலைக்கு மத்திய அரசுக்கு துணைநின்ற துரோகம், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, விலைவாசி உயர்வு போன்றவற்றுக்கு எதிராக மக்கள் தீர்ப்பளித்துள்ளனர்.

எதிர்காலத்தில், அதிகார துஷ்பிரயோகத்தையும், ஊழல் பணத்தையும் கொண்டு, எவரும் தேர்தலில் வெல்ல முடியாது எனும் சரியான பாடத்தை வாக்காளர்கள் கற்பித்துள்ளனர். தமிழக சட்டசபை தேர்தலில், கடந்த ஐந்து ஆண்டுகளாக, தி.மு.க., அரசின் மக்கள் விரோதப் போக்கை எதிர்த்து, மக்கள் வாக்கு அளித்துள்ளனர், இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. இத்தேர்தல் ஒரு பாடம், புதிய ஆட்சியில் அமரப்போகும் ஜெயா உணர்த்து நடந்து கொள்ளனும், நம்புவோம்.

எலுமிச்சையில் எத்தனை விஷயங்கள் !

எலுமிச்சையில் செடி எலுமிச்சை, கொடி எலுமிச்சை என இரண்டு வகை உண்டு. வைட்டமின் சி, சுண்ணாம்புச்சத்து, செம்புச்சத்து கொண்டுள்ள எலுமிச்சை பல்வேறு பலன்களை தருகிறது.

தேள் கொட்டினால் அந்த இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரண்டு துண்டையும் தேய்க்க விஷம் இறங்கும். தலைவலிக்கு கடுங்காபியில் எலுமிச்சையின் சாற்றை கலந்து கொடுத்தால் உடனே குணமாகும்.

நீர் சுருக்கு, பித்தநோய், வெட்டை சூடு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு எலுமிச்சம் பழச்சாற்றுடன் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால் தகுந்த நிவாரணம் பெறலாம். மயக்கம், வாந்தி, வாய் குமட்டல், நீர்வேட்கை, வெறி, கண் நோய், காது வலி போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை எலுமிச்சம் பழத்திற்கு உண்டு.

எலுமிச்சம் பழச்சாற்றை தலையில் தேய்த்து தலை முழுகி வர பித்தம், வெறி, உடல் உஷ்ணம் தணியும். அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தால் எலுமிச்சை சாற்றில் கரிய போளத்தை(கரிய போளம் என்பது கற்றாழையின் உலர்ந்த பால். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) சேர்த்து காய்ச்சி அடிபட்ட இடத்தில் பூசிவர ரத்தக்கட்டு கரையும்.

நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சை பழத்தில் துளையிட்டு விரலை அதனுள் சொருகி வைக்க வலி குறையும். எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் தீரும். இதனுடன் மோர் கலந்து குடிக்க ரத்த அழுத்தம் குறையும்.

சிலருக்கு பாதத்தில் எரிச்சல் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் மருதாணியை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து பாதத்தில் தடவி வந்தால் எரிச்சல் குணமாகும். சிறிதளவு எலுமிச்சை இலைகளை அரைத்து சாறு பிழிந்து, அதனுடன் சிறிது உப்பு சேர்த்து நீரில் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும். எலுமிச்சம்பழத்தின் விதைகளை நீரில் போட்டு காய்ச்சி அதில் இருந்து எழும் ஆவியை முகத்தில் படும்படி பிடிக்க நீர்பினிசம் தீரும்.

சீரகத்தை எலுமிச்சம் பழச்சாற்றில் 2 நாள் ஊற வைத்து பின் அந்த சாற்றுடன் வெயிலில் காய வைக்கவும். நன்றாக காய்ந்ததும் மீண்டும் எலுமிச்சம் பழச்சாற்றில் ஓர் இரவு ஊற வைத்து மீண்டும் வெயிலில் காய வைக்கவும். நன்றாக உலர்ந்தபின் அதை எடுத்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு தேன் அல்லது தண்ணீரில் கலந்து மூன்று வேளை சாப்பிட்டுவர அஜீரணம், பித்தம் தணியும். ரத்த அழுத்தம் சீராகும்.

பாலியல் விவகாரத்துக்கு பரிகாரம் சொல்கிறார், சங்கராச்சாரி!!

சேலத்தில் உள்ள சங்கரமடத்திற்கு பக்தர்களுக்கு ஆசி(?) வழங்கவந்த சங்கரராமன் கொலை புகழ் சங்கராச்சாரி, பாப்ரி மஸ்ஜித் பிரச்சனைக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காண முடியாது என நிருபர்களிடம் பேட்டியளித்துள்ளார். சங்கரராமன் கொலை வழக்கில் சிக்கியதால் வண்டவாளங்கள் எல்லாம் வெளியாகி சீரழிந்தவர் தாம் சங்கராச்சாரி.

ஆன்மீகப்போர்வையில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு சேவை செய்வது வரும் சங்கராச்சாரி பாலியல் தொடர்பான அசிங்கங்களிலும் பெரும் கில்லாடியாவார். பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் முன்பே சமாதானப் பேச்சு என்ற பெயரில் நாடகமாடி தலையிட்டுவருகிறார். சில புறம் போக்குகளை கையில் பிடித்துக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் ஏஜண்டாக மாறி முஸ்லிம்கள் பாப்ரி மஸ்ஜிதை விட்டுக் கொடுக்க தயாராகி விட்டதாக கதையளந்துள்ளார்.

சங்கராச்சாரியின் பார்வையில் சுமூக தீர்வு என்பதே பாப்ரி மஸ்ஜிதை முஸ்லிம்கள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு தாரை வார்க்க வேண்டுமென்பதே!உ.பி.மாநில சுன்னி வக்ஃப்போர்டு உச்ச நீதிமன்றத்தில் அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை ஏற்றுக் கொண்டு விசாரணைக்கு எடுத்து முந்தைய அலகாபாத் உயர் நீதிமன்ற கட்டப்பஞ்சாயத்து தீர்ப்புக் குறித்து விசித்திரமான விந்தையான தீர்ப்பு என கருத்து தெரிவித்துள்ள நிலையில் சுன்னி வக்ஃபோர்டு சமாதானத்திற்கு தயாரானதாக பொய்களை புழுகியுள்ளார் சங்கராச்சாரி.

பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் பிரதிகள் உறுப்பினர்களாக செயல்படும் முஸ்லிம் தனியார் சட்டவாரியம் பாப்ரி மஸ்ஜித் நில உரிமையியல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடுவது என முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் சங்கராச்சாரியுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த முஸ்லிம்கள் முன்வந்தார்கள் என தெரியவில்லை. பொதுவாக சமயம் தொடர்பான பிரச்னைகளுக்கு நீதி மன்றத்தை அணுகாமல் பேசித் தீர்ப்பதே நல்லது என சங்கராச்சாரி கூறுவதற்கு காரணம், சங்கரராமன் கொலைவழக்கு ஆன்மீகம் தொடர்பானது எனவே அதில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என மறைமுகமாக கூற வருகிறாரோ என்னவோ? சமாதானம் என்ற பெயரில் பாப்ரி மஸ்ஜித் நிலத்தை களவாட திட்டமிடும் சங்கராச்சாரி போன்ற ஒழுக்கங்கெட்ட ஆன்மீக கயவர்களிடம் முஸ்லிம்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும்!

தேர்தலில் தோல்வி அடைந்தும் தொடரும் கூட்டணி?

புது தில்லி : தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தோல்வியடைந்ததன் காரணமாக, திமுக- காங்கிரஸ் உறவு பாதிக்காது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

தமிழகத் தேர்தல் முடிவுகள் குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்றதற்குக் காரணம், திமுகவுடனான கூட்டணியா அல்லது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடா என கேட்கிறீர்கள்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக தனியாகப் போட்டியிட்டது. ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் அக்கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது.

இதையடுத்து தேமுதிகவின் வாக்குகள், அதிமுகவுக்கு கிடைத்ததால் அக்கூட்டணிக்கு வெற்றி கிடைத்ததா அல்லது அவர்களது வெற்றிக்கு வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என்பதை நாங்கள் ஆராய்ந்து பார்க்கவேண்டும். திமுகவுடன் கூட்டணி அமைத்ததால்தான் காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டதா என்பது குறித்து ஆலோசிக்க இது சரியான தருணம் அல்ல.

தமிழகத்தில் நடந்த ஒவ்வொரு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகும் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் தற்போது மாற்றத்தை ஏற்படுத்தவே வாக்களித்திருக்கின்றனர். தற்போது ஆட்சியில் இருப்பவர்கள், மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வது என்பது தமிழகத்தில் சிரமமான ஒன்று. இதையும் நாம் மனதில் கொள்ளவேண்டும்.

இந்தத் தேர்தல் தோல்வியால், திமுக- காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்படுமா எனக் கேட்கிறீர்கள். எங்களது கூட்டணி இதுவரை ஸ்திரமாக உள்ளது. கடந்த ஆண்டுகளில் திமுகவுடன் கூட்டணி அமைத்து நாங்கள் பல தேர்தல்களில் போட்டியிட்டு இருக்கிறோம். பல வெற்றிகளையும் பார்த்திருக்கிறோம். தற்போது தோல்வியைச் சந்தித்துள்ளோம். இப்போதைய சூழலில் எங்களது கூட்டணியில் எவ்வித மாற்றமும் இல்லை. அது தொடரும் என்றார் அவர்.

Wednesday, May 11, 2011

தேர்தல் ஆணையத்திற்கு மெசேஜ் அனுப்பிய, ஜெயா!

தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, படிவம் 20ல் வாக்குகள் பதிவு செய்யப்படும் தகவலை கட்சி முகவர்கள் கண்காணிக்க அனுமதிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ஜெயலலிதா தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் 2009 நாடாளுமன்றத் தேர்தலின்போது, சிவங்கங்கை தொகுதியில் வாக்குகளின் எண்ணிக்கை, படிவம் 20ல் பதிவு செய்யும்போது முறைகேடுகள் நடந்துள்ளன.

அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் பெற்ற வாக்குகள் காங்கிரஸ் வேட்பாளர் ப. சிதம்பரத்துக்கும், ப. சிதம்பரம் பெற்ற வாக்குகள் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் பெயரிலும் படிவம் 20ல் மாற்றி பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகாரிகள் மற்றும் முகவர்களால் எழுத்தால் பதிவு செய்யப்பட்ட வாக்கு எண்ணிக்கை தகவல்கள், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களால் படிவம் 20ல் மாற்றி பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு, சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குடி பகுதியில் 31வது பிரிவில் வாக்கு எண்ணிக்கை மாற்றி பதிவு செய்யப்பட்ட விவரத்தை இத்துடன் இணைத்துள்ளேன். ஆளுங்கட்சியான திமுக அரசுக்கு ஆதரவாக இவ்வாறு டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களால் வாக்கு எண்ணிக்கை விவரங்கள் மாற்றப்பட்டுள்ளன. அவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, தேர்தல் அதிகாரிகள் மற்றும் முகவர்கள் பதிவு செய்யும் வாக்கு எண்ணிக்கையும், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் பதிவு செய்யும் வாக்கு எண்ணிக்கை விவரங்களும் ஒன்றாக உள்ளதா என்பதை சரிபார்க்க தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணையம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு சரிபார்த்த பின்னரே இறுதி தேர்தல் முடிவை வெளியிட வேண்டும்.

Tuesday, May 10, 2011

அதிக சம்பளம் வாங்கும் இந்தியர், யு. எஸ், சில்! ஸ்ட்ரீட் பத்திரிகை

பாஸ்டன் : அமெரிக்காவில், அதிக சம்பளம் பெறும், தலைமை நிர்வாக அதிகாரிகள் சி.ஈ.ஓ., பட்டியலில் இந்தியர்கள் ஐந்து பேர் இடம் பெற்றுள்ளனர்.

அமெரிக்காவின், வால் ஸ்டிரீட் பத்திரிகை, சமீபத்தில், அமெரிக்க கம்பெனிகளின் தலைமை நிர்வாக அதிகாரிகளின், கடந்தாண்டு, சம்பளம், தொடர்பான ஆய்வு மேற்கொண்டது. மொத்தம் 350 கம்பெனிகளின், தலைமை நிர்வாக அதிகாரிகள் பட்டியலில், இந்தியர்களான பெப்சி நிறுவன இந்திரா நூயி, "ஆபீஸ்மேக்ஸ் 'ரவி சாலிகிராம்," மோட்டரோலா 'சஞ்சய் ஜா, "குவெஸ்ட் டயக்னாஸ்டிக்' சூர்யா மகோபத்ரா, "சிட்டிகுரூப்' விக்ரம் பண்டிட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

கடந்தாண்டு (2010), இந்திரா நூயி, 64 கோடி ரூபாய் வருமானத்துடன் இந்தியர்களில் முதல் இடத்தில் இருக்கிறார். இவருக்கு அடுத்து, 55 கோடி ரூபாயுடன் ரவி சாலிகிராம், 54 கோடியே 83 லட்சம் ரூபாயுடன் சஞ்சய் ஜா வருகின்றனர். இச்சம்பளப்பட்டியலில், வியாகாம் தலைமை நிர்வாக அதிகாரி பிலிப்பி டவ்மான் 387 கோடியே 78 லட்சத்துடன் முதல் இடத்தில் இருக்கிறார். ஆரக்கிள் நிறுவனர் லேரி எலிசன், 315 கோடியே 56 லட்சம் ரூபாயுடன் 2ம் இடத்தில் உள்ளார்.

போர் குற்றவாளியை தண்டிக்க போராட்டம்!! கனடாவில்

இலங்கையின் போர்க்குற்றங்களை விசாரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி கனடாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

போர் குற்றங்கள் தொடர்பாக விசாரணை ஒன்றை நடத்துமாறு கோரி கனடாவில் வசிக்கும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உள்ளிட்ட உலகில் உள்ள ஏனைய ஜனநாயக நாடுகள் இணைந்து இந்த விசாரணையை நடத்த வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஐ.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் இறுதி நாட்களில் மனித உரிமை மீறில்கள் மற்றும் போர் குற்றங்கள் இடம்பெற்றிருப்பதற்கான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், கனேடிய தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

Monday, May 9, 2011

மார்க்கை வைத்து காசு பார்க்கபோகும் தனியார் பள்ளிகள்!!

நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில், மாநில அளவிலான, முதல் மூன்று இடங்களையும், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் பிடித்து சாதனை படைத்துள்ளன. அரசு பள்ளியோ, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் இருந்து ஒரு மாணவர் கூட, மாநில அளவிலான இடத்தை பிடிக்கவில்லை. இதன்மூலம், "தரமான கல்வியை வழங்குவது தனியார் பள்ளிகளே என்ற வாதம்' எடுபட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள, 50 ஆயிரம் பள்ளிகளில், ஒன்று முதல், பிளஸ் 2 வரை, ஒரு கோடி மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில், 75 லட்சம் பேர், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கின்றனர். 25 லட்சம் பேர், தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர்.பெரும்பான்மை மாணவர்கள், அரசு பாடத்திட்டத்தின் கீழ், கல்வி பயின்றாலும், கல்வித் தரத்தில், அரசு பள்ளிகளை விட, தனியார் பள்ளிகள், குறிப்பாக, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சிறந்து விளங்குகின்றன. இதனால், பொதுத்தேர்வுகளில், தனியார் பள்ளி மாணவர்கள், அதிக மதிப்பெண்கள் பெறுகின்றனர்.பொறியியல் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளிலும், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கே அதிகளவில் இடம் கிடைக்கின்றன. இவற்றின் அடிப்படையில், தனியார் பள்ளிகள் மட்டுமே தரமான கல்வியை வழங்கி வருகின்றன என்றும், தனியார் பள்ளிகளின் பாடத்திட்டம் தான் தரமான பாடத்திட்டம் என்றும், தனியார் பள்ளி சங்க நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

இவர்களின் வாதத்திற்கு தகுந்தாற்போல், ஒவ்வொரு ஆண்டு பொதுத் தேர்விலும், தனியார் பள்ளி மாணவர்கள் சாதித்து வருகின்றனர். நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில், மாநில அளவிலான மூன்று இடங்களையும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களே தட்டிச் சென்றுள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரைச் சேர்ந்த ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, மாநில அளவில் முதல் இடத்தையும், மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. மீதமுள்ள நான்கு இடங்களையும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளே பிடித்துள்ளன. பெரும்பான்மை மாணவர்கள் பயிலும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் இருந்து, ஒரு மாணவர் கூட, மாநில அளவில் மதிப்பெண் பெறவில்லை.

இதை காரணம் காட்டி காசு பார்த்தாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை.

மூட்டு வலியா, முக்கால்வாசி தீர்ந்தது!,ஆலோசனைகள்

மரம் வாழ்ந்த பின்பு பலகையாகிறது. சந்தன மரம் மட்டும் வாழ்ந்தபின்பும் சந்தனமாகவே இருக்கிறது. ஒப்பற்ற மனித சமுதாயம் மட்டும் வாழும் போதே மூட்டுவலியால் முக்கி, முனங்கி இயக்கம் தடைப்பட்டு மூலையில் ஏன் முடங்க வேண்டும்.

உடல் பருமன் அடைவது போல், இதயமும், மூட்டும் பெரிதாவதில்லை. எனவே அதிக உடல் எடையால் அடிக்கடி மூட்டு வலியால் அவதிப்படும் அன்பர்கள். (நெல்லி, வெண்ப+சனி, கொள்ளு சூப், சாப்பிட வலி குறையும்) நரம்பு பிடிப்பால் சிதைந்து வரும் மூட்டு வலியை முருங்கையும் முடக்கற்றானும் சரி செய்யும்.

முறையான தூக்கம், சாந்தி ஆசனம், தியானம், நல்ல இசை, வழிபாடு முதலியவைகளால் அருமையான மனநலம் பெற்று பிட்ய+ட்டரி சுரப்பிகள் சிறப்பாக இயங்கச் செய்யலாம். குளிர்காலத்தில் உடல் சூடு குறைவதானலும் நரம்புகள் பிடிப்பும், தசை இறுக்கம் மிகுவதாலும் வேர்வை சுரப்பிகள், தோல் சுருங்குவதாலும் மூட்டுக்களின் தரையில் வேலை செய்தாலும், உட்கார்ந்தாலும், படுத்தாலும் மூட்டு வீக்கம், வலி, வளையும் தன்மை அதாவது முடக்குவதாகும் உண்டாகிறது.

பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனையால் இரத்த சோகையால் வந்த மூட்டு வலியை மாதுளையும், பேரீட்சையும் சரிசெய்யும். கால்சியம் குறைவால், எலும்பு மஜ்ஜை குறைவால் ஏற்படும் வலியை கீரைச் சாறுகள். முந்திரி, கோஸ், முருங்கை, உணவில் சேர்த்து சரிசெய்யலாம். வாயுப் பிடிப்பால் விளைத்திடும் மூட்டு வலியை போக்க ப+ண்டு சூப், வெங்காய பச்சடி அருந்த வேண்டும்.

மூட்டுவலி பெருக சில காரணி உணவுகள்:

1. அதிய அளவு காபி, டீ அருந்துதல்

2. அதிக அளவு எண்ணெய் உணவுகள் சாப்பிடுதல்

3. கடல் உப்பு, உணவில் அதிகம் சேர்த்தல்

4. வெள்ளைச் சீனி சேர்த்த இனிப்புகள், பானங்கள் எடுத்தல்

5. அசைவ உணவு

6. மொச்சை, பட்டாணி, தட்டைபயறு, உருளை

7. பதப்படுத்திய இரசாயன குளிர்பானங்கள் எலும்புகளை உருக்கி சிதைத்து விடுகின்றன.

8. மன உளைச்சல், மனபயம், மன சோர்வுகளால் தூக்கமின்மை ஏற்பட்டு பிட்ய+ட்டரி சுரப்பிகளின் இயக்கம் சீர்குலைந்தால் மூட்டு வலி அதிகரித்திட வாய்ப்புகள் உண்டு.

எளிய தீர்வுகள்
9. மூன்றுநாள் உபவாசம் (அ) பழச்சாறு நோன்பு 30 நாட்களுக்குள் மூட்டுவலி விரட்டிவிடும்.

10. தினமும் மூன்று நிமிட முழங்கால் விரல்களில் கொடுக்கும் பயிற்சி.

11. தினமும் மூட்டுகளைச் சுற்றி ஈரத்துணியால் பட்டி போட்டால் 30 நாளில் குணமாகும்.

12. இரவு நேர மண்ப+ச்சும், மண்பட்டியும் பகல் நேர மூட்டு வலியை போக்கும்.

13. எண்ணெய் இல்லாத உணவுகள் எவ்விதமூட்டிவலியையும் போக்கும்.

14. வெள்ளைப+ண்டு, முடக்கற்றான், மூட்டு வலியை ஒட ஒட விரட்டும்.

15. வஜ்ஜிராசனம், பத்மாசனம், உட்கடாசனம், தாளாசனமும் கருடாசனம்,
பாதங்குஸ்தாசனம், படகு ஆசனம், விருச்சிகாசனம் முதலிய ஆசனங்கள் செய்தபின் சாந்தி ஆசனம் செய்து வந்தால் மூட்டுவலி உடலை விட்டு ஓடிவிடும்.

16. காலை, மாலை, கனி உணவு உண்பார் கடும் மூட்டு வலியாயினும் கலங்கிடார்.

தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ் கொடுத்த தேர்தல் அதிகாரி??

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.

நேற்று இரவு, ஒட்டன்சத்திரம் உதவி தேர்தல் அதிகாரி (ஏ.ஆர்.ஓ.,) பாலசுப்பிரமணி, ஓட்டு எண்ணிக்கைக்கான டேபிள், சேர்களை மையத்திற்கு லாரியில் கொண்டு வந்தார். லாரியில், பயன்படுத்தாத ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இருந்தன. கண்காணிப்பு பணியில் இருந்த தி.மு.க.,வினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவற்றை, மையத்திற்குள் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர்.

கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க கொண்டு வந்ததாக, உதவி தேர்தல் அதிகாரி கூற, பிரச்னை முடிவுக்கு வந்தது. சம்பவம் குறித்து விளக்கம் தருமாறு, மாவட்ட தேர்தல் அதிகாரி வள்ளலார் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

Sunday, May 8, 2011

வைரஸ் கிருமிகள் முதல், வக்கிரம் நிறைந்த இணையதளத்திற்கு தடை?

இணையதள பத்திரிகைகளுக்கு கட்டுப்பாடு ஏற்படுத்த மத்திய அரசின் முயற்சிகள் முடிவடையும் தருவாயை எட்டியுள்ளது. இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆக்டில் உட்படுத்தி நடைமுறை படுத்தவிருக்கும் இணையதள கட்டுப்பாட்டிற்கான வரைவு மசோதா தயாராகிவிட்டது.

இணைய தளங்களும், வலைப்பூக்களும் கண்காணிப்பது உள்பட கடுமையான கட்டுப்பாடுகள் இம்மசோதாவில் இடம்பெற்றுள்ளன. இணையதள சேவை தருபவர்கள் (ISP), இணயதள சேவையாளர்கள், சமூக நெட்வர்க்குகள் ஆகியன இந்த மசோதாவின் வரையறைக்குள் உட்படும். தற்போதைய இணைய தளங்களை கட்டுப்படுத்தவோ அல்லது தடை செய்யவோ சாத்தியமாகும் முறையில் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

இணையதளத்தில் உண்மை என்ன? என்பது குறித்து பரிசோதித்து விட்டு அவற்றை தடை செய்வதற்கு முன் அனுமதி தேவையில்லை என சட்டம் கூறுகிறது. வலைப்பூக்களுக்கும், ஆன்லைன்களுக்கும், மொபைல் பிசினஸ் ஆகியவற்றிற்கும் முன்னறிவிப்பு இல்லாமலேயே கட்டுப்பாடு விதிக்க மசோதாவில் சட்டப்பிரிவு உள்ளது.

பிறரை அவமானிக்கும் விதமாகவோ, காழ்ப்புணருவுடன் கூடிய செய்தியோ, அந்தரங்கத்தை பாதிக்கும் விதத்திலான செய்தியோ, தவறான புரிந்துணர்வையும், கொந்தளிப்பையும் உருவாக்கக்கூடிய செய்திகளையோ இணையதளங்கள் வழியாக பிரசுரிப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இத்தகையவற்றை பிரசுரித்தால் 36 மணி நேரத்திற்குள் அவற்றை நீக்கம் செய்ய சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 90 தினங்கள் வரை புகார் அளிக்கப்படும் இணையதளங்கள், வலைப்பூக்கள் விசாரணையின் ஒரு பகுதியாக கண்காணிக்கப்படும். ஏதேனும் ஒரு நபர் புகார் அளித்தால் ஐ.எஸ்.பி (இணையதள சேவை தருபவர்) 36 மணிநேரத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தனிநபர்களின் அனுமதியில்லாமல் அவர்களின் புகைப்படங்களை ட்விட்டர், பேஸ்புக், ஆர்குட் போன்ற நெட்வர்க்குகளில் பிரசுரிப்பதும் குற்றமாகும். இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு, ஐக்கியம், தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கு எதிரான கருத்துக்கள் என கருதப்படும் செய்திகளை பிரசுரித்தால் முன்னறிவிப்பு இல்லாமலேயே இவை தடை செய்யப்படும். மேலும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சரியான முகவரியோ அல்லது உரிமையாளர் குறித்த சரியான விபரமோ இல்லாத இணையதளங்களும், வலைப்பூக்களும் தடை செய்யப்படவும் இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பருவமடையாத நபர்களை பாதிக்கக்கூடியவற்றை பிரசுரிப்பது, காப்புரிமை இல்லாதவற்றை டவுன்லோடு செய்வது, பிரசுரிப்பது ஆகியன குற்ற செயல்களாகும்.

இதர நபர்களின் கம்ப்யூட்டர்களுக்கு நாசம் விளைவிக்கும் வைரஸ்களை அனுப்புவதும் குற்ற செயலாகும். கட்டுப்பாடில்லாமல் எத்தகைய செய்தியையும் பிறருக்கு அனுப்புவது, அதிகாரப்பூர்வமாக பிரசுரித்த செய்திகளில் குளறுபடி செய்து வாசகர்களிடம் தவறான புரிந்துணர்வை ஏற்படுத்துவதும் இச்சட்டத்தின்படி குற்றமாகும்.

இணையதளம் வழியாக நடைபெறும் பொருளாதார முறைகேடுகள், சூதாட்டம் ஆகியன தடை செய்யப்பட்டுள்ளன. இணையதள சேவையாளர்கள் இந்த சட்டத்தின் பிரிவுகளையும், கட்டுப்பாடுகளையும் பயனீட்டாளர்களுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

இம்மசோதாவில் காணப்படும் பல சட்டப்பிரிவுகளும் அரசு துஷ்பிரயோகம் செய்ய வாய்ப்புள்ளது என மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக இந்தியாவின் பாதுகாப்பு, தேசீயம் ஆகிய பிரயோகங்கள் என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

நன்றாக தூங்குபருக்கு ஞாபகசக்தி அதிகம்! ஆய்வில்

ஞாபக சக்தியை வளர்க்க தூக்கம் உதவுகிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். வாஷிங்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், 24 பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் சிலரிடம் ஒரு சோதனை செய்து பார்த்துள்ளனர். அதன்படி, மாணவர்களுக்கு, கணினியில், வார்த்தை விளையாட்டுகள் கொடுக்கப்பட்டன.

ஒரு மாணவர் குழு, மாலையில் அதற்காகத் தயார் செய்து கொண்டு, மறுநாள் காலையில் வார்த்தை விளையாட்டுப் போட்டியில் ஈடுபட்டனர். மற்றொரு மாணவர் குழு, காலையில் தயார் செய்து, மாலையில் போட்டியில் கலந்து கொண்டனர். இரண்டில் முதல் குழு மாணவர்கள் போட்டியில் வெற்றி பெற்றனர்.

இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது: மனிதனின் மூளையில் பல்வேறு பகுதிகள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இவற்றுக்கிடையில் பலவீனமான ஒருங்கிணைப்பு இருக்கும் பட்சத்தில் அது தூக்கத்தில் பலப்படுத்தப்படுகிறது. மூளையிலுள்ள, “ஹிப்போ கேம்பஸ்” என்ற பகுதி, நீண்ட காலத்துக்கு நினைவுகளை சேமிக்கும் பகுதி. தூக்கத்தின் போது, அன்றைய நினைவுகளை உள்வாங்கி நீண்ட காலப் பகுதியில் சேமித்து வைத்துக் கொள்கிறது.அதனால், சிறு தூக்கம் அல்லது ஆழ்ந்த உறக்கம், ஹிப்போ கேம்பஸ் வேலை செய்ய உறுதுணை செய்யும். அதன் மூலம் நினைவாற்றல் அதிகரிக்கும்.இவ்வாறு ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இலங்கை பயணம் என்கிற கண் துடைப்பு, நடவடிக்கை எப்போது?

கொழும்பு : இலங்கையில் நடந்த போர்க்குற்றம் குறித்து, ஐ.நா., நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளதை அடுத்து, இது குறித்து விவாதிப்பதற்காக, இந்திய அதிகாரிகளின் உயர்மட்டக் குழு, விரைவில் இலங்கை செல்லவுள்ளது. இலங்கையில் இருந்து வெளியாகும் பத்திரிகையில் வெளியாகியுள்ளது.

ஐ.நா., அளித்த அறிக்கையால் எழுந்துள்ள பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக, இந்தியாவின் உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய குழு, விரைவில் இலங்கை செல்லவுள்ளது. இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், ராணுவ செயலர் பிரதீப் குமார் ஆகியோர், இந்திய குழுவில் இடம் பெறக் கூடும்.

இலங்கை அதிபர் ராஜபக்ஷே மற்றும் இலங்கையின் உயர் அதிகாரிகளை, இந்திய குழுவினர் சந்தித்து, இதுகுறித்து பேசவுள்ளனர்.சமீபத்தில், இலங்கையைச் சேர்ந்த உயரதிகாரிகள் சிலர், இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து, இந்திய அதிகாரிகளுடன் பேச்சு நடத்த அனுமதி கேட்டிருந்தனர். ஆனால், இந்திய தரப்பில், இதற்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், இந்திய குழு இலங்கை வந்து சென்றபின், இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ், இந்தியா செல்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, May 7, 2011

சுற்றுசூழல் பாதுகாக்காவிடில், சுனாமியே!! அதிர்ச்சி தகவல்

ஆர்டிக் மற்றும் கிரீன்லாந்து பகுதிகளில் ஏற்பட்டுள்ள தட்ப, வெப்ப நிலை மாற்றத்தால் பனிக்கட்டிகள் அதிகமாக உருகி, ஏராளமான அளவில் நீர் வெளியேறி வருகிறது. இதே நிலை நீடித்தால், வரும் 2100ம் ஆண்டுக்குள் வங்கதேசம் முதல் புளோரிடா வரையிலும், பசிபிக் பெருங்கடலின் தாழ்வான பகுதிகளிலும், லண்டன் முதல் ஷங்காய் வரையிலான நகரங்களிலும் கடல் மட்டம் 1.6 மீட்டர் அளவிற்கு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

மேலும், சுனாமி தாக்கும் ஆபத்தும் அதிகரிக்கும் என்று கடல் நீர் மட்டம் குறித்த சர்வதேச ஆய்வு தெரிவிக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக பூமி உருண்டையின் வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக, ஆர்டிக் பகுதியில் வெப்ப நிலை உயர்ந்துள்ளது என எட்டு நாடுகள் கொண்ட ஆர்டிக் மானிடரிங், அசெஸ்மென்ட் திட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதனால், பனிக்கட்டிகள் தொடர்ந்து உருகி, ஏராளமான அளவில் நீர் வெளியேறுகிறது. இவ்வாறு வெளியேறும் நீர் கடலில் கலப்பதால் கடல் மட்டம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில், 0.9 மீட்டர் முதல் 1.6 மீட்டர் வரை அதாவது 5 அடி, 3 அங்குலம் வரை கடல் மட்டம் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.உலக தட்ப, வெப்ப நிலை குறித்து ஆய்வு செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு, கடந்த 2007ம் ஆண்டில் நடத்திய ஆய்வில், வரும் 2100ம் ஆண்டில் கடல் மட்டம் 18 முதல் 59 செ.மீ., அளவுக்கு அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடல் மட்டம் உயர்வது குறித்து ஐரோப்பிய தட்ப, வெப்ப நிலை குறித்த அமைப்பின் ஆணையர் ஹெட்கார்டு கூறுகையில், "உலகில், பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் அனைத்துமே அடுத்த சில ஆண்டுகளில் கடல் மட்டம் அதிகரிக்கும் என்று தான் கூறுகின்றன. இது கவலையளிக்கும் ஒரு தகவலாகும்.

இந்நிலையில், தட்ப, வெட்ப சீர்குலைவை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்,' என்று குறிப்பிட்டுள்ளார்.கடல் மட்டம் அதிகரிக்கும் போது மாலத்தீவு உள்ளிட்ட உலகின் சில நாடுகள் மூழ்கிவிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 2100ம் ஆண்டில் 1.6 மீட்டர் அளவிற்கு கடல் மட்டம் அதிகரிக்கப் போகிறது என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடல் மட்டம் அதிகரிப்பால் சுனாமி தாக்குதலும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இதற்கு, சமீபத்திய ஜப்பான் சுனாமியை உதாரணமாக அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். சுற்றுச்சூழலை பாதுகாத்து, வெப்ப நிலை அதிகரிக்காமல் இருக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சர்வதேச அளவிலான இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு கிடைக்கும்.

தேர்தல் ஸ்பெஷல்! போலி வாக்கு இயந்திரம் தயாரிப்பு!!

மிதுனபூர் : மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் போலி வாக்கு இயந்திரம் தயாரித்த 10 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் 6 கட்டங்களாக நடைபெறுகிறது. 5-ம் கட்டத் தேர்தல் நடைபெற்ற சனிக்கிழமையன்று, போலி வாக்கு இயந்திரம் தயாரித்த 10 பேர் போலீஸôரால் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 6 பேர் பான்குரா மாவட்டம் ரகுநாதபூரைச் சேர்ந்தவர்கள். 4 பேர் மேற்கு மிதுனபுரி மாவட்டம் பிங்களா மற்றும் சந்த்ரோகனா பகுதியைச் சேர்ந்தவர்கள்.

இதற்கிடையில், கேஷ்பூர் பகுதி வாக்குச் சாவடியில் வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தடுப்பதாக திரிணமூல் காங்கிரஸôர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து தேர்தல் பார்வையாளர்கள் போலீஸ் படையுடன் அந்த இடத்துக்கு விரைந்தனர்.

ஒன்று திரள்வீர் ஓநாயை உள்ளே தள்ள!! கி வீரமணி

ஈழத் தமிழர்கள் படுகொலை பற்றிய ஐ.நா.குழுவின் அறிக்கையும் மத்திய அரசின் கடமையும் என்னும் தலைப்பில் சிறப்புக் கூட்டம் 6.05.2011 அன்று மாலை 6 மணியளவில் மதுரை சின்னக் கடைத்தெரு பள்ளி வாசல் அருகில் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இலங்கையில் நடைபெற்றது ஒரு இனத்தின் மீது இன்னொரு இனம் தொடுத்த போர். ஹிட்லரை விட பெரிய கொடுங்கோலன் ராஜபச்சே!

ஐ.நா.சபையால் அமைக்கப்பட்ட குழுவின் அடிப்படையில் ராஜபக்சே போர்க்குற்றவாளி எனும் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும. மதுரையில் தமிழ் ஈழ மாநாட்டை முதன் முதலில் திராவிடர் கழகம் நடத்தியது.

அன்று முதல் இன்று வரை தமிழ்ஈழம்தான் தீர்வு என்பதில் தெளிவாக இருக்கிறோம். தமிழ் ஈழம்தான் தீர்வு என் பதை மத்திய அரசு ஏற்க வேண்டிய கட்டாயம் வரும். முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு இலங்கைப் பிரச்சினையிலே ஒரு தெளிவு இருந்தது. ஆனால் அதற்குப் பின்னால் வந்தவர்களுக்கு அந்தத் தெளிவு இல்லை. இனப் படுகொலை எப்படி நடத்தப்பட்டது என்பதை ஐ.நா.சபையால் அமைக்கப்பட்ட குழு விரிவாக எடுத்துரைத்திருக் கிறது.

இந்திய அரசு கவனத்தில் எடுத்தாக தெரியவில்லை. எடுக்க வைக்க நாம் தமிழர்கள் ஒன்றிணைவோம். கருநாடகத்தில், கேரளத்தில் பொதுவான பிரச்சினைகளில் எல்லோரும் கட்சிகளை மறந்து ஒன்றிணைகின்றார்கள். ஆனால் இங்கு இழவு வீட்டிற்கு கூட ஒன்றாகப் போவதில்லை. அரசியல் அந்தப்பாடு படுத்துகிறது. தமிழ் ஈழமே தீர்வு என்பதில் ஒன்றிணைந்து வரும் கட்சிகளோடு சேர்ந்து பேச நாங்கள் தயார். ஜாதி, மத, அரசியல் மறந்து ஈழத் தமிழர்களின் துயர் நீக்க ஒன்றிணைவோம் என்றார்.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!