Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, May 10, 2013

விரல் உறிஞ்சும் பழக்கம் உண்டா குழந்தை!?

கட்டைவிரலை உறிஞ்சும் பழக்கம் கொண்ட குழந்தைகளுக்கு மனதில் ஒரு வித பயம், தனிமையில் இருக்கிறோம் என்கின்ற செயல்பாடுகளின் காரணமாகவே குழந்தைகள் கட்டை விரலை உறிஞ்சுகின்றனர். அதிகமான இளம் குழந்தைகள் கட்டை விரலை உறிஞ்சுவதால் பசி உணர்விலிருந்து விடுபடுவதற்கானவழியாக கருதுகின்றனர்.

கட்டை விரலை உறிஞ்சும் அதிக குழந்தைகள் உணவில் கவனம் செலுத்துவதில்லை.. இதனால் குழந்தைகளுக்கு எடை குறைவாகவே உள்ளது.. இது குழந்தைகளுக்கான ஒரு ஆறுதல் நடவடிக்கை மட்டுமே. இதை குழந்தைகள் வழக்கமாக கடைபிடிக்க அனுமதிக்ககூடாது.. குழந்தைகளின் விரல் உறிஞ்சும் பழக்கதால் பெற்றோர்கள் எப்படி நிறுத்துவது என கவலை படுகின்றனர்.

நான்கு வயது வரை குழந்தைகள் கட்டை விரலை உறிஞ்சுவது பிரச்சனையில்லை அதற்கு மேல் குழந்தைகள் விரல் உறிஞ்சினால் பற்களில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். நான்கு மற்றும் ஐந்து வயதிலிருந்து கட்டை விரலை உறிஞ்சும் பழக்கம் தொடர்ந்தால் பற்களில் வெடிப்பு ஏற்பட்டு அதுவே தீவிர பிரச்சனையாக மாறும்.

குறிப்பிட்ட வயதிற்கு மேலாகியும் இந்த பிரச்சனை தொடர்வதால் பற்கள் நெருக்கமாக மற்றும் வளைந்து ஏதேனும் பொருட்களை கடிப்பதிலும் பிரச்சனைகளை ஏற்படுத்தும். குழந்தைகள் பேசுவதில் பிரச்சனை உருவாகலாம். அல்லது ஏதேனும் விழுங்குவதிலும் பிரச்சனை ஏற்படக்கூடலாம். முன் பற்கள் புடைப்பு மற்றும் இடப்பெயர்ச்சிஏற்படும்.

பற்களின் வடிவக்கேடு குழந்தையின் முகதோற்றம் பாதிக்கும். மேலும் உணர்ச்சிகரமான சிக்கல்களை ஏற்படுத்தும். பெரும்பாலான குழந்தைகளின் இந்த நடவடிக்கை தங்கள் புகுமுக பள்ளி ஆண்டுகளில் இது ஒப்பீட்டளவில் பாதிப்பை விளைவிக்காது. குழந்தைகள் வாயில் கட்டை விரலை வைக்கும் போது கிருமிகள் வாய்வழியாக வயிற்றுக்குள் நுழைந்து விடும் என்பதை அவர்களுக்கு தெரிவியுங்கள்.

உங்கள் குழந்தைகள் கட்டை விரலை சப்பும் பழக்கத்தை விடவில்லை எனில் உங்கள் குழந்தையின் மீது கூடுதல் கவனம் செலுத்தி கவனிக்க வேண்டும். ஆரோக்கியமாக குழந்தைகள் இருக்க மன அழுத்தம் ஏதேனும் இருப்பின் அதை சரிசெய்ய வேண்டும். மேலும் உங்கள் குழந்தையின் குறிக்கோள்களை முன்னேற்றங்களை பாராட்டுங்கள் அவர்களுக்கு ஏதேனும் வெகுமதி அளித்து பாராட்டு தெரிவிப்பின் குழந்தையின் மனநிலை மாறுபடும். மருத்துவரிடம் சென்று பல்லுக்குகிளிப் ஒன்று வாங்கி மருத்துவரின் ஆலோசனையுடன் மாட்டிவிடுங்கள்.

Thursday, May 9, 2013

நானே இந்து என் சமூகத்தை நானே இழிவாகக் காட்டுவேனா?

"ஐயா, நானே ஓர் இந்து. என் சமூகத்தை நானே இழிவாகக் காட்டுவேனா? மதத்தின் பெயரால் நடத்தப்பட்டுள்ள படுபாதகக் குற்றங்கள்தான் இங்கே விசாரிக்கப்படவேண்டும். என் மத விருப்பங்களை அல்ல.’- ஆஷிஷ் கேத்தன்.

பாசிசத்தின் காரிருள் இந்நாட்டின் ஆட்சி, அதிகார, நீதி, ஊடக துறைகளையெல்லாம் சூறையாடி வரும் வேளையிலும் நீதியை நிலைநாட்டும் உறுதியுடன் சிலர் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்களில் ஒருவர் தாம் ஆஷிஷ் கேத்தன். எந்தவொரு முஸ்லிம் அமைப்புகளும் செய்ய இயலாத அர்ப்பணிப்புமிக்க காரியங்களை உயிரை பணயம் வைத்து 6 மாத காலம் டெஹல்காவுக்காக ஹிந்துத்துவா பயங்கரவாதிகளை நேரடியாக சந்தித்து பேட்டியெடுத்து உலகிற்கு அவர்களின் கோர முகத்தை அம்பலப்படுத்திய ஆஷிஷ் கேதான் என்ற பத்திரிகையாளரை இந்திய முஸ்லிம்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.

இன்று பிழைப்புக்காய் மாறடித்து, எந்த அறமும் இல்லாது ஊடகங்களை கழிவறைகளாக மாற்றும் பத்திரிகையாளர் மத்தியில் எந்த சமரசமும் இல்லாமல் ஆஷிஷ் கேத்தன் செய்ததை நாங்கள் நன்றியுடன் நினைவுகூறுகிறோம்.

அவரது 60 மணி நேரப் வீடியோ பதிவுகளில் கொலைகாரர்கள், காவல்துறை உயரதிகாரிகள், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள், அரசு வழக்கறிஞர்கள் என பலர் தோன்றி தங்களின் வீரதீரச் செயல்களை விரிவாக வர்ணித்தார்கள் .கோத்ராவில் ரயிலை எப்படி எரித்தார்கள், அதில் இருந்த கரசேவகர்களை எல்லாம் எப்படி நம் என் உயிர் தோழன் படத்தில் வரும் நாயகனைப் போல சங் பரிவார் ஆட்களே பலி கொடுத்தார்கள் என்பதையும் ஆதாரங் களுடன் மிக துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டினார் ஆஷிஷ் கேத்தன். அதன் பின் சிலரைப் பிடித்து மிரட்டி எப்படி எல்லாம் தவறான வாக்குமூலங்களைப் பதிவு செய்து கோத்ராவின் மிகவும் மதிக்கத்தக்க இஸ்லாமியத் தலைவர்களை சிறையில் அடைத்தார்கள் என்பதையும் இந்த வீடியோ பதிவுகள் உறுதிப்படுத்தின.

பாபு பஜ்ரங்கி பல கொலைகளைச் செய்துவிட்டு நான் அவர்களை எல்லாம் கொன்ற பிறகு மகாராணா பிரதாப் ஆக உணர்ந்தேன் என்கிறான். மதன் சாவல், தான் எப்படி காங்கிரஸ் எம்.பி இஷான் ஜாப்ரியைத் தரை-யில் எட்டி உதைத்து, அவரைத் துண்டு துண்டாக வெட்டி, உயிருடன் தீயிட்டுக் கொளுத்தினோம் என்பதைத் துல்லியமாகக் கூறுகிறான். இன்னும் மூன்று மணி நேரம் மட்டுமே உள்ளது காரியத்தை முடிக்க என்பதை எப்படிக் கொலை-காரர்களுக்குத் தெரிவித்தான் என்பதை மங்கிலால் ஜெயின் பரபரப்புடன் விவரிக்கிறான். இது வரலாறு காணாததாக இருக்க வேண்டும் என்று தங்களின் தலைமை எப்படி உத்தரவிட்டது என்பதைப் பதிவு செய்கிறான் தீபக் ஷா. ராக்கெட் செலுத்தும் கருவியைத் தயாரித்ததை ஒரு விஞ்ஞானியைப் போல் விளக்கும் ஹரேஷ் பட்டுக்குப் பின்னர் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி கொடுத்து அழகு பார்த்தான் நரேந்திர மோடி. நாங்கள் கொடுத்த ஆயுதங்களின் எண்ணிக்கையைப் பார்த்து எங்கள் ஆட்களே திகைத்துப் போனார்கள் என்று மேலும் கூறுகிறான் ஹரேஷ் பட். எப்படி இந்த இனப்படுகொலையின்போது குஜராத் காவல்துறையினரின் கண்களும் வாயும் மூடப்பட்டிருந்தது என்கிறான் பாபு பஜ்ரங்கி. நரேந்திர மோடி காவல்துறையை எங்களுக்காகப் பணிபுரியச் செய்தார் என்கிறான் வி.எச்.பி. தலைவர் ராஜேந்திர வியாஸ். ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்தபோது எப்படி கொலைகாரர்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி இருந்தது என்பதைக் கூறுகிறான் திமந்த் பட். காவல் துறையினரே எப்படி 70 -& 80 பேரைக் கொன்றார்கள் என்பதை சுரேஷ் ரிச்சர்ட் நினைவு கூர்கிறான். என்னை வெளியே கொண்டு வர நரேந்திர மோடி மூன்று முறை நீதிபதிகளை மாற்றினார் என காலரைத் தூக்கி விட்டுச் சொல்கிறான் பாபு பஜ்ரங்கி. இதே பாபு பஜ்ரங்கியைத்தான் நரேந்திர மோடி பல மாதங்கள் ராஜஸ்தானின் மௌண்ட் அபுபில் உள்ள பெரும் சொகுசு மாளிகையில் மறைத்து வைத்திருந்தான். கொலைகளைச் செய்தவர்கள் மீதான சில வழக்குகள் வலிமையற்றவை. கடவுளின் ஆசிர்வாதத்தால் சமாளித்தோம் என பெருமூச்சு விடுகிறான் மூத்த வழக்கறிஞரும் வி.எச்.பி. பொதுச்செயலாளருமான திலிப் திரிவேதி. மேலும் நீதிபதி கே.ஜி.ஷா நம்முடைய ஆள், நீதிபதி நானாவதிக்குப் பணம்தான் குறி என்கிறான் குஜராத் மாநில வழக்கறிஞர் அரவிந்த பாண்டியா.

சிறப்புப் புலனாய்வுக் குழு முன்னால் தான் ஆஜராக விரும்புவதாக ஆஷிஷ் கேத்தன் தானே மனு செய்தார். அவர் அழைக்கப்பட்டார். அவர் தனது விரிவான வாக்குமூலங்களையும் 60 மணி நேர காட்சிக் கோப்புக ளையும் அந்தக் குழுவிற்குக் கொடுத்தார். அதன் பின் தொடர்ந்து பல முறை சென்று வாக்குமூலங்கள் அளித்தார். அதில் பாபு பஜ்ரங்கி, மாயா கோட்னானிக்கு எதிராகப் பல நுணுக்கமான தகவல்களை வழங்கினார் ஆஷிஷ். நீதிமன்றங்களில் தொடர்ந்து ஆஜராகிக் கொண்டேயிருந்தார் ஆஷிஷ். பல முறை அவரிடம் வேண்டாத கேள்விகள், குதர்க்கமான கேள்விகள் என அவரை ஆத்திரப்படுத்தும் விதமாகவே நீதிபதிகளும், அரசு வழக்கறிஞர்களும் நடந்து கொண்டார்கள். இப்ப கூட நீங்க ரகசிய காமிரா வச்சிருக்கீங்களா என்றார் நீதிபதி ஜோஷி. அவர் எல்லா குற்றவாளிகளின் முன்னணியில் ஆஷிஷிடம் அவரது குடும்பத்தார், அவரது வீடு, அது வாடகை வீடா, எத்தனை ஆண்டுக-ளாக இந்த விலாசத்தில் குடியிருக்கிறார் என அங்கு நீதிமன்ற அறையில் இருக்கும் கொலைகாரர்களுக்குத் தகவல் தருவதற்காகவே விசாரனையை நடத்தினார். டெல்லியில் ஒரு புகழ்பெற்ற பெரிய பத்திரிகையில் பணியாற்றும் ஒரு பத்திரிகையாளனுக்கே இப்படிப்பட்ட மரியாதை என்றால், பாதிக்கப்பட்ட ஏழை சாட்சிகளை எப்படி நடத்தியிருப்பார்கள்.

”ஒரு சாதாரண, எளிய நிருபனாகிய என்னால் இவ்வளவு முக்கிய ஆதாரங்களைத் திரட்டி வர முடிந்தால், சர்வ அதிகாரமும் கொண்ட உங்கள் அணியால் அனைத்தையும் கொண்டுவரமுடியும் என்றேன் இந்த ஸ்டிங் ஆபரேஷனை நான் மேற்கொண்டதன் நோக்கம் என்ன? இந்துக்களைத் தவறானவர்கள் என்று காட்டுவதா? என்று அதிகாரி கேட்டார் .நான் சொன்னேன். ‘ஐயா, நானே ஓர் இந்து. என் சமூகத்தை நானே இழிவாகக் காட்டுவேனா? மதத்தின் பெயரால் நடத்தப்பட்டுள்ள படுபாதகக் குற்றங்கள்தான் இங்கே விசாரிக்கப்படவேண்டும். என் மத விருப்பங்களை அல்ல.’

எடிட் செய்யப்படாத 60 நிமிட வீடியோ இந்த ஆதாரம் நாடு முழுவதையும் உலுக்கியெடுக்கும். மோடி பதவி விலகவேண்டியிருக்கும் கொலைகாரர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என்று நாங்கள் நம்பினோம்.ஆனால் நடக்கவில்லை என்று வருத்ததுடன் கூறுகிறார் ஆஷிஷ் கேத்தன்.

பாதிக்கப்பட்ட ஆதரவற்ற சமுதாயத்திற்காக உயிரை பணயம் வைத்து நீதிக்காக போராடிய ஆஷிஷ் கேத்தன் அவர்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்க பிராத்திப்போம் நாம். 

Wednesday, May 8, 2013

டீ காபிக்கு பேப்பர் கப்'களை பயன்படுத்துபவரா!?

ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவர் தினமும் இரவில் வயிற்று வலியால் கஷ்டபட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம்.

அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார், அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர் "கப்'களில், டீ, காபி குடிப்பது வழக்கம்! அந்த, "கப்'கள் மூலமாகத்தான், நண்பர் வயிற்றில் மெழுகு அதிகமாகி, வயிற்று வலிக்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார் டாக்டர்.

அவர் மேலும், தற்காலத்தில் பெரும்பான்மையான அலுவலகக் கேன்டீன்களில், "பேப்பர் கப்'களை பயன்படுத்தி வருகின்றனர். மலிவான, தரம் குறைந்த காகிதங்களால் செய்யப்படும் "கப்'கள், தண்ணீராலோ, திரவத்தாலோ கரைந்து விடக் கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில், மெழுகு பூசப்படுகிறது.

இப்படி மெழுகு பூசப்பட்ட "கப்'களில், மிக சூடான, டீயோ, காபியோ நிரப்பப்படும் போது, அந்த வெப்பம் காரணமாக, "கப்'பிலிருக்கும் மெழுகு உருகி, டீ அல்லது காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள் சென்று விடுகிறது. அது, நாளடைவில், வயிற்றில் பல உபாதைகளை தோற்றுவிக்கிறது.

"டீ, காபி அருந்துவதற்கு, கண்ணாடி அல்லது செராமிக் "கப்'களே சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டம்ளர் களையும் உபயோகிக்கலாம். ஆனால், எந்த நிலையிலும் பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான, "கப்'களை உபயோகிக்க கூடாது. இல்லையேல், ஆரோக்கியத்தை பலிகொடுக்க வேண்டி வரும்...' என்று கூறினார் டாக்டர்.

அவர் கூறிய இந்த அறிவுரைகள், விலை மதிப்பில்லாதது; அனைவரும் அதை பின்பற்ற வேண்டும்.

Tuesday, May 7, 2013

அறிவில் அகிலம் தொடும் அபிராமி?

சாதிக்க துடிப்பவருக்கு அங்க குறைவு ஒன்றும் ஒரு குறையில்லை என்பதற்கு அறிவில் அகிலம் தொடும் அபிராமி ஓர் உதாரணம்.

கல்விக்கு உயரம் ஒரு தடையா? இல்லவே இல்லை என சாதித்து காட்டியுள்ளார் மூன்று அடி உயரம் உள்ள 28 வயது பெண் அபிராமி.

'என் சொந்த ஊர் சங்ககிரி அருகே உள்ளே நல்லப்பநாயக்கன்பட்டி. என் அப்பா அம்மா இருவரும் பூ விற்கும் கூலி வேலை செய்பவர்கள். நான் பிறக்கும் போதே வளர்ச்சி குறைந்த மாற்று திறனாளி. என் உடலிற்கு தான் வளர்ச்சி குறைவு என் சிந்தனைக்கு இல்லை.... என்னால் முடிந்த அளவு படித்து பி.காம் முடித்து எம்.காம் பவானியில் படித்து முடித்தேன்.

எனக்குள் நம்பிக்கை நிறைய உள்ளது. ஆனால், எங்களை போன்ற மாற்று திறனாளிகளை நம்பும் சமூகம் தான் இல்லை. எனவே, சரியான வேலை கிடைக்கவில்லை நான் பயின்ற தனியார் கல்லூரியிலேயே தற்காலிக உதவியாளராக பணியாற்றி வருகிறேன்... அந்த வருமானம் என் குடும்பத்திற்கு போதவில்லை. என் தம்பி தற்போது பி.எஸ்.சி படித்து வருகிறான் அவனையும் மேல் படிப்பு படிக்க வைக்க வேண்டும். இதற்கு நான் நிறைய சம்பாதிக்க வேண்டும். எனவே என்மேல் நம்பிக்கை வைத்து மாற்று திறனாளிகள் சிறப்பு பிரிவின் கீழாவது அரசு சார்பில் ஏதாவது பணி வழங்க வேண்டும்....அவ்வாறு வழங்கினால் என் பணியை நேர்மையாகவும் சிறப்பாகவும் செய்து தேசத்தை காத்து அதன் வழி என் குடும்பத்தையும் வளர்த்துகொள்வேன் எனக்கொரு வாய்ப்பு தாருங்கள்' என சேலம் மாவட்ட ஆட்சியர் க.மகரபூசனத்திடம் மனு கொடுத்தார்... அவர் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார்.

சினிமா நடிகைகளுக்கு கொடுக்கிற ஆதரவ இந்த மாதிரி பெண்களுக்கு கொடுங்க.உடலின் உயரம் குறைவு ஆளுமைமிக்க அபிராமியின் அறிவின் உயரம் அகிலம் தொடுகிறது.

Monday, May 6, 2013

சாதிவெறியை சாய்ப்போம்! மதவெறியை மாய்ப்போம்!?

அனைத்து சிறுபான்மையினருக்கும் அன்பான வேண்டுகோள்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை குறிவைத்து, தலித் மக்களை எதிரிகளாகக் காட்டி, வன்னியர் வாக்குகளை ஒருங்கிணைப்பதற்காக பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுவரும் பா.ம.க.வைப் போலவே பா.ஜ.க.வும் செயல்பட்டு வருகிறது.

நாகர்கோவில், கோவை, குன்னூர் என பா.ஜ.க.வுக்கு ஓரளவு செல்வாக்கு உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில் கடந்த சில மாதங்களாக வேண்டுமென்றே பதற்றத்தை ஏற்படுத்தி, முஸ்லிம்களை எதிரிகளாகக் காட்டி இந்து ஓட்டுக்களை ஒருங்கிணைக்க பா.ஜ.க முயன்று வருகிறது.

மதவெறியின் கோரப்பிடியில் சிக்கி சின்னாபின்னமான கோவை மாநகரம், இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் எதைப்பற்றியும் கவலைப் படாமல் தமது சொந்த அரசியல் அறுவடைக்காக பா.ஜ.க மீண்டும் அங்கு கலவர நெருப்பை பற்றவைக்கிறது.

(ஒரு வாரத்தில் தமிழ்நாடு முழுவதும்: 513 பஸ்கள் சேதம் அடைந்துள்ளன., 13 அரசு மற்றும் தனியார் பஸ்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன., இதனால் ரூ.2 கோடிக்கும் மேல் சேதம் ஏற்பட்டிருக்கும் என தெரிய வந்துள்ளது., 20 புளியமரங்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன., 160 மரங்கள் வெட்டப்பட்டு ரோடுகளின் குறுக்கே போட்டு வாகன போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தப்பட்டது.)

சுய ஆதாயத்துக்காக சமூக அமைதியை குலைக்கும் வகையில் செயல்பட்ட பா.ம.க.வை தனிமைப்படுத்தும் நோக்கில், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும், ஜனநாயக சக்திகளையும் சந்தித்து விடுதலைச் சிறுத்தைகள் முறையிட்டது போல், இஸ்லாமிய கூட்டமைப்பினரும் செயல்பட்டு பா.ஜ.க.வை தனிமைப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

பா.ம.க.வின் சாதிவெறி எந்த அளவுக்கு ஆபத்தானதோ, அதை விடவும் ஆபத்தானது பா.ஜ.க.வின் மதவெறி.

சாதிவெறியை சாய்ப்போம்; மதவெறியை மாய்ப்போம்! (நன்றி: ஆளூர் ஷாநவாஸ்.)

Sunday, May 5, 2013

தொடு திரை தொழில்நுட்பம் குழந்தைகளை பாதிக்குமா?

லண்டன்: தொடு திரை (டச் ஸ்க்ரீன்) வசதி கொண்ட ஸ்மார்ட் ஃபோன்களும், டேப்ளெட்டுகளும்(கையடக்க கணினி) சிறு குழந்தைகளின் கற்றலுக்கு நல்லது என்று புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கும் வேளையில், இக்கருத்தை சில விஞ்ஞானிகள் மறுக்கின்றனர்.
பொதுவாக சிறு குழந்தைகள் மணிக்கணக்கில் தொடுதிரை கணினிகள், கணினிகள், தொலைக்காட்சிகளின் முன்னால் செலவிடுவது தவறு என்றும், இதனால் அவர்களின் மூளையின் கற்றல் திறன் பாதிக்கப்படும் என்றும் விஞ்ஞானிகள் ஏற்கெனவே பரவலாக கவலைகள் வெளியிட்டு வரும் நிலையில், இந்த பிரச்சனை குறித்து விஸ்கான்ஸின் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் முடிவுகள் இந்த கவலைகள் பெருமளவு தேவையற்றவை என்று கூறியிருக்கிறது.
பொதுவாகவே ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இயற்கையிலேயெ தொழில்நுட்பத்தை அறிந்துகொள்வதில் கூடுதல் ஆர்வம் இருக்கிறது. எனவே அந்த வயது குழந்தைகளின் கைகளில் ஒரு புதிய தொழில்நுட்பக் கருவியை கொடுத்தால், பெரியவர்களை விட இயல்பாக அந்த கருவியை ஆராய்ந்து அதை கையாள்வதில் அவர்கள் பெரும்பாலும் வெற்றி பெறுவார்கள். இந்த பின்னணியில் இரண்டு வயது குழந்தைகளிடம், தொடுதிரை கையடக்க கணினிகள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆய்வு செய்த விஸ்கான்ஸின் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், குழந்தைகளின் கற்றலை இந்த தொடுதிரை கணினிகள் ஊக்குவிக்கின்றன என்று தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாக தொடுதிரை கணினிகளில் இருக்கும் கேம் அதாவது விளையாட்டு அல்லது காணொளியானது இண்டர் ஆக்டிவ்வாக, அதாவது குழந்தை அதை தொடத்தொட வெவ்வேறு புதிய தகவல்கள், படங்கள், ஒலிகள் அல்லது காணொளிகள் வரும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தால், அது, அந்த குழந்தைகளின் கற்றலை ஊக்குவித்து, குழந்தைக்கு உதவுகிறது என்று இந்த ஆய்வாளார்கள் தெரிவித்திருக்கிறார்கள்.இரண்டுவயது குழந்தையின் பார்வையில் இந்த தொடுதிரைகணினியின் விளையாட்டுக்கள் எவ்வளவுக்கெவ்வளவு இண்டராக்டிவ் ஆக இருக்கிறதோ அந்த அளவுக்கு குழந்தைக்கு இவை பிடிக்கின்றன என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த தொடுதிரைகளுடன் அதிகம் புழங்கும் குழந்தைகள் வேகமாக அதில் சொல்லப்படும் செய்திகளை உள்வாங்கிக்கொள்கின்றன என்று கூறுகிறார் இந்த ஆய்வு நடத்திய விஞ்ஞானிகளில் ஒருவரான மனித வளம் மற்றும் குடும்பநல படிப்புகளுக்கான துணைப் பேராசிரியர் ஹெதர் கிர்கோரியன்.மேலும் காண்களால் அறிவதில் மட்டுமல்ல, புதிய வார்த்தைகளை கற்பதிலும் இந்த தொடுதிரை கணினிகள் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு உதவுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். எனவே, தொடுதிரை கணினிகள் குழந்தைகளின் கற்றல் திறனுக்கு உதவுகிறதே தவிர, அதை எதிர்மறையாக பாதிக்கவில்லை என்கிறது இந்த ஆய்வு. ஆனால், இந்த ஆய்வின் முடிவுகளில் இருந்து மாறுபடுகிறார் குழந்தை மனநல மருத்துவர் அரிக் சிக்மன். தற்கால குழந்தைகள் திரைகள் முன்னால் மணிக்கணக்கில் செலவிடுவதாக கூறும் அரிக் சிக்மன், தொலைக்காட்சி, கணினி, தொடுதிரை கணினி, ஸ்மாட்ர்போன்கள் என்று சராசரியாக தற்கால குழந்தைகள் ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் திரையின் முன்னால் செலவிடுவது அவர்களின் கற்றல் திறனை பாதிக்கிறது என்கிறார்.
இவரது அய்வில் தற்போது பிறக்கும் ஒரு குழந்தை ஏழு வயதாகும் போது அதில் ஒரு ஆண்டு காலத்தை திரைக்கு முன்னால் செலவிட்டிருக்கும் என்று கணக்கிட்டிருக்கிறார். அதாவது இன்று பிறக்கும் குழந்தை தொலைக்காட்சி, கணினி, தொடுதிரை கணினி, ஸ்மார்ட்போன் என்று தினசரி அது ஏதோ ஒரு திரையின் முன்னாள் செலவிடும் மொத்த நேரத்தையும் கணக்கிட்டால், அந்த குழந்தைக்கு ஏழு ஆண்டு ஆவதற்குள், அது ஒரு ஆண்டை திரைக்கு முன்னால் கழித்திருக்கும் என்பது இவரது கணக்கு.
இது குழந்தைகளின் மூளைவளர்ச்சிக்கும், கற்றல் திறனுக்கும் நல்லதல்ல என்பது இவரது வாதம். இந்த வாதத்தை மறுக்கும் விஸ்கின்ஸான் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், பெற்றோர்களுக்கு இரண்டு யோசனைகளை அளிக்கிறார்கள். முதலாவது, சிறுகுழந்தைகள் சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கு அதிகமாக திரை முன்னால் இருக்க அனுமதிக்காதீர்கள் என்பது முதல் யோசனை. அதாவது, தொலைக்காட்சி, கணினி, தொடுதிரை கணினி என்று எல்லாவகையான திரைகளின் முன்பும் சேர்த்து குழந்தைகள் ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு மணிகளுக்கு மேல் இருக்க அனுமதிக்கக் கூடாது என்பது முதல் யோசனை.
இரண்டாவது, தொடுதிரை கணினியில் இருக்கும் கேம்கள் மற்றும் அப்ளிகேஷன்கள் போன்றவற்றை தேர்வு செய்வதில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்துகிறார்கள். தொடுதிரைகணினியில் குழந்தை செலவழிக்கும் நேரத்தைப் போலவே, அது இந்த திரையின் முன்னால் என்ன செய்கிறது என்பதும் முக்கியம் என்பதை எல்லா விஞ்ஞானிகளுமே வலியுறுத்துகிறார்கள்.
தொடுதிரை என்கிற புதிய தொழில்நுட்பம் எதிர்கால தலைமுறையினரின் வாழ்வில் பிரிக்கமுடியாத அங்கமாக மாறிவருவதை சுட்டிக்காட்டும் ஆய்வாளர்கள், இதை தங்களின் குழந்தைகளுடைய நன்மைக்கு பயன்படுத்தும் ஒட்டுமொத்த பொறுப்பும் பெற்றோர்களின் கையிலேயே இருக்கிறது என்பதை வலியுறுத்துகிறார்கள்.

Saturday, May 4, 2013

எது மத சார்பற்ற நாடு?

இந்தியா மத சார்பற்ற நாடு என்று எல்லாரும் நினைத்துக்கொண்டு இருக்கிறீர்களா? மேலே படியுங்கள் நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை. பாகிஸ்தான் தேர்தலில் ஹிந்துக்களுக்கு "ரிசர்வ்" தொகுதிகள்.

மத சார்பற்ற நாடு என சொல்லிக் கொள்ளும் இந்தியாவில், முஸ்லிம்களுக்கு கல்வியில் இட ஒதுக்கீடு கொடுக்கவே தடைகள் உள்ள நிலையில்.

"முஸ்லிம் நாடு" என பிகடனப்படுத்திக் கொண்டு செயல்படும் பாகிஸ்தானில், உள்ளூர் முதல் நாடாளுமன்றம் வரை ஹிந்துக்களுக்கு "ஹிந்து ரிசர்வ்" தொகுதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

பாகிஸ்தானில் அடுத்த மாதம் (11/05/13) நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், ஹிந்துக்களுக்கு கணிசமான தொகுதிகளை "ரிசர்வ்" தொகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அங்கு முஸ்லிம்கள் போட்டியிடவே முடியாத அளவுக்கு ஹிந்துக்களுக்கு அரசியல் அதிகாரத்தில் பங்கு கொடுத்துள்ளது, பாகிஸ்தான் அரசு.

மொத்தமுள்ள 342 நாடாளுமன்ற (National Assembly) தொகுதிகளில், 10 தொகுதிகள் ஹிந்துக்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது.

மாகாண வாரியாக நடை பெறும் (PROVINCIAL ASSEMBLIES) சட்டமன்றத் தேர்தல்களிலும் "ஹிந்து ரிசர்வ்" தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தவிர, 104 உறுப்பினர்களை கொண்ட "செனட் சபை"யிலும் 10 ஹிந்துக்கள் இடம் பெறும் வகையில், பாகிஸ்தானின் அரசியல் சாசனத்தின் 18வது பிரிவில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, நீதிமன்றமும் அதனை அங்கீகரித்து விட்டது.

மேலும், பாகிஸ்தானின் 1975 ம் வருடத்திய தேர்தல் சட்டத்தின் 51வது பிரிவிலும் திருத்தம் செய்யப்பட்டு விட்டது.

4 மாகாணங்களில் உள்ள மொத்த சட்டசபை தொகுதிகள்: 577., அதில் "ஹிந்து ரிசர்வ்" தொகுதிகளின் எண்ணிக்கை 23

பஞ்சாப் மாகாணத்தில் 8, சிந்துவில் 9, NWFP-ல் (பெஷாவர்) 3, பலூசிஸ்தானில் 3 என, மொத்தம் 23 தொகுதிகளில் முஸ்லிம்கள் போட்டியிடவே முடியாது. 

முஸ்லிம்களை கருவறுக்கும் இங்குள்ள பாசிச சக்திகளுக்கும், பாகிஸ்தானின் பரந்த மனப்பான்மைக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது.(இதையெல்லாம் 
மக்களுக்கு அறியத்தருவது  இல்லை வந்தேறி பார்ப்பன ஊடகங்கள்).

Friday, May 3, 2013

பாலியல் பலாத்கார காரணம் இதுவோ?

பெண்களுக்கான பாலியல்வன்முறைகள் அதிகரிக்க அவர்கள் அணியும் ஆடைகள்தான் காரணம் என்பதை தற்போது அனைத்து தரப்பினரும் உணர்ந்து வரும் இவ்வேளையில் பெண்கள் கற்பழிக்க படுவதற்கு காரணம் என்ன என்று நாங்கள் ஓட்டெடுப்பு நடத்தினால்.  அதிகபட்ச நபர்கள் பெண்கள் அணியும் அரை குறை ஆடை தான் என்று ஓட்டு அளித்து இருந்தார்கள் இன்று நாம் நிறைய இடங்களில் பார்க்கிறோம் பெண்கள் அரை குறை ஆடை அணிந்து தான் வருகிறார்கள். பார்க்கும் ஆண்களை சபலபடவைக்க இதவும் ஒரு காரணமாகவே அமைகிறது. அதற்க்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான் உன்னுடைய வீட்டை சுற்றமாக்கு நாடு தானாகவே சுற்றமாகும்

அப்படி அரை குறை ஆடை அணிவது நம் சகோதரியாக கூட இருக்கலாம் நாம் பிள்ளைகளாக கூட இருக்கலாம் . முதலில் அவர்களுக்கு வீட்டில் ஒழுக்க நெறிகளை சொல்லி கொடுத்து வளர்ப்பது நமது தலையா கடமை இருக்கிறது . வீட்டில் தந்தை அண்ணன் ,தம்பி , மற்றும் வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவரும் இருக்கிறார்கள் அவர்களை மீறி எந்த பெண்ணும் அரை குறை ஆடை அணிவது இல்லை முதலில் நமது வீட்டில் உள்ள பெண்களின் ஆடை கொஞ்சம் ஆபாசமாக தெரிந்தால் கண்டிப்பாக கண்டிப்பது நமது கடமை .அதை விட்டு விட்டு அவர்களை நாம் அரை குறையாக ஆடை அணியவைத்து ஷாப்பிங் மாலுக்கும் பீசிக்கும் ,படத்திற்கும் அழைத்து கொண்டு திரியும் நிறைய தாய் தந்தை இருக்கிறார்கள் அவர்களை பார்க்கும் போது தான் அரை குறை ஆடை அணியும் பெண்கள் மீது தவறு இல்லை அவர்களின் தாய் தந்தை சகோதர்கள் மீது தான் தவறு என்று தெள்ள தெளிவாக தெரிகிறது . இவர்கள் தன்னுடைய சகோதிரிகளை அரை குறை ஆடை அணியவைத்து எப்படி அழைத்து வருகிறார்கள் என்று தெரியவில்லை ?உண்மையில் சிந்திக்க வேண்டிய விசையம் தான்.

நம் தமிழ் நாட்டில் இன்று தாவணி என்று சொல்லுவார்கள் அப்படி என்றால் என்ன வென்று கேட்கும் அளவிற்கு போய் கொண்டு இருக்கிறது . இன்று நிறைய சகோதரிகள் சுடிதாருக்கு துப்பட்டா அணிவதே இல்லை கேட்டால் நாகரிகம் என்று சொல்லுகிறார்கள் எப்படி வேண்டுமானாலும் வாழ்வது வாழ்க்கை அல்ல இப்படி தான் வாழ்வது என்பது தான் வாழ்க்கை.

பெண்கள் அரைகுறை ஆடை ,இறைவனின் படைப்பில் பெண்கள் ஒரு அழகான படைப்பு ,இன்றோ பெண்களின் சுதந்திரம் என்ற போர்வையில் நாகரிகம் என்ற போர்வையில் பெண்களை போதை பொருளாக கண்பிப்பது இதற்கு பெண்களின் இயக்கங்கள் மௌனம் சாதிப்பது இது தான் பெண் சுதந்திரமா??? இதுவும் ஒரு பெணிற்கு எதிரான விபசாரமே அதுவும் corporate விபச்சாரம்.

இன்று இந்தியாவில் பெண்களின் நிலை என்ன நாகரிகம் வளர வளர பெண்கள் பாலியல் கொடுமைகளும் ,கற்பழிப்புகள் அதிகமானது என்று சொன்னால் மிகை ஆகாது ! இதிலிருந்து உடை கட்டுபாடும் இது போன்ற குற்றங்களை தடுபதற்கான ஒரு வழி என்பது நிதர்சனமான உண்மை . இன்று மத்திய பிரதேசத்தில் ஒரு சட்டம் இயற்ற பட்டது பெண்களின் மீது acid உற்றினால் 3 லட்சம் அபரதாமம் ! என்ன ஒரு கடுமையான சட்டம் ,இந்த சட்டத்தை இயற்றிவர்கள் மீது தான் முதலில் acid எரிய வேண்டும்.. பெண்கள் கற்பழிக்க படுவத
ற்கு அரைகுறை ஆடை மட்டும் காரணமாகவும் எடுத்து கொள்ள முடியாது .

இன்று நாம் தொலை காட்சிகளில் நாம் குடும்பத்தோடு பார்க்க முடிகிறதா முகம் சுளிக்கும் வனமாகவே இருகிறது .தந்தை பிள்ளைகளோடு தொலை காட்சியே பார்க்க முடியவில்லை இன்று சாதாரண விளம்பரத்தில் கூட ஆபாசம் தொலைகட்சியே திறந்தாலே ஆபாசமாக தான் இருக்கிறது . கிரிக்கெட் ஐ .பி .எள் . விளையாட்டிலும் கூட ஆபாசம் தேவை படுகிறது பெண்களை போதை பொருளாகவே பயன்படுத்துகிறார்கள் இதை எல்லாம் பார்த்து மக்களின் மனம் மரத்து போய் விட்டது உடை கட்டுப்பாடு இருந்தாலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் சில காமவெறி கொண்ட கயவர்களால் நடந்து கொண்டு தான் இருக்கிறது இவர்களை தண்டிக்க எப்படி பட்ட சட்டம் இயற்றலாம் ??? கடுமையான சட்டங்கள் வராதவரை இது போன்ற அனச்சாரங்களுக்கு முடிவிற்கே வராது.

Thursday, May 2, 2013

ஆப்பிளை பற்றி அறியாத செய்தி?

An apple a day keeps the doctor away... இப்படி ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உள்ளது. அதாவது தினசரி ஒரு ஆப்பிள் பழத்தை உண்ணுவதன் மூலம் வைத்தியர்களை நம் அருகில் நெருங்கவிடாமல் வைத்திருக்கலாம். அதாவது நோய்கள் இன்றி வாழலாம். இது பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்த விடயம். இதில் புது விடயம் என்னவென்றால் இந்த ஆப்பிள் பழங்களை அவற்றின் தோலுடன் சாப்பிட வேண்டும் என்பது தான்.

ஆப்பிள் பழத்தின் தோலில் காணப்படும் மெழுகுத் தன்மை கொண்ட பளபளப்பும், அதனோடு இணைந்த இரசாயனமும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை அளிக்கக் கூடியது என்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் பழத் தோலில் காணப்படுவது அர்சோலிக் அமிலமாகும். இது தசைகளை ஆரோக்கியமாகக் கட்டி எழுப்பக்கூடியது. இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பு அளவை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கக் கூடியது.

இதன் ஒட்டுமொத்த அர்த்தம் ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிளைச் சாப்பிடுவதால் மனிதனது சுகாதாரம் வியக்கத்தக்க ஆரோக்கியத்தைக் கொண்டிருக்கும் என்பது தான். அர்சோலிக் அமிலமானது மிகவும் சுவாரஸ்யமான ஒரு இயற்கை மூலப் பொருள் என்று இந்த ஆய்வை நடத்தியுள்ள டாக்டர். கிறிஸ்டோபர் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார். 

ஆப்பிள் தோல்களில் காணப்படும் இது இயல்பான ஒரு ஆகாரமாகவும் உள்ளது என்று கூறும் டாக்டர் ஆடம்ஸ் உடலில் ஹார்மோன்களின் தாக்கம் பற்றி ஆராயும் ஒரு அமெரிக்க நிபுணராவார். முதுமை அடைகின்றபோது தசைகள் சோர்வடைவது அல்லது நலிவடைவது ஒரு பொதுவான பிரச்சினையாகும். வயதான காலத்தில் இது பல நோய்களுக்கும் காரணமாகின்றது. இதற்கு குறிப்பாக மருந்துகளும் கிடையாது.

இதற்கு மாற்று வழி தான் என்ன என்று லோவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர். ஆடம்ஸ் தலைமையிலான குழுவினர் ஆராய்ந்தபோதுதான் ஆப்பிள் பழம் மற்றும் அதன் தோல் என்பனவற்றின் மகிமை உணரப்பட்டுள்ளது. எனவே ஆப்பிள் தோளை இனி சீவி எறிய வேண்டாம், அதை அப்படியே தோலுடன் சாப்பிடுங்கள் என்று மக்களுக்கு இந்த ஆய்வாளர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்

Wednesday, May 1, 2013

* மே 1 இசை, இரைச்சலா இன்பமா?

இசைப்பிரியர்கள் இசையைக் கேட்பதில் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என எச்சரி்க்கை விடுத்துள்ளார் துபையைச் சேர்ந்த செவிப்புலனாய்வாளர் டாக்டர் ஏ.வி.ரேஷா, துபையில் உள்ள மெட்கேர் என்ற மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். இவர் செவி மற்றும் கேட்கும் திறனை ஆய்வு செய்யும் ஆய்வாளர் (audiologist).

தற்போது எம்பி 3 மூலமாக பாட்டு கேட்பது மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஆனால் இந்த பிளேயரில் சிறிதளவு சத்தத்துடன் தொடர்ந்து கேட்டாலும் காது கேட்கும் திறனை இழக்கும் ஆபத்துள்ளதாக டாக்டர் ரேஷா தெரிவித்துள்ளார். சத்தத்தின் அளவை டெசிபல் என்று குறிப்பிடுகின்றனர். 90 டெசிபல் சத்தத்துடன் 8 மணிநேரம் ஒருவர் இசையைக் கேட்டால் கண்டிப்பாக அவருடைய கேட்கும் சக்தியை இழந்து விடுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார். மிகுந்த சந்தடிமிக்க நெடுஞ்சாலையில் ஏற்படும் இரைச்சலை 90 டெசிபலுக்கு உதாரணமாக கூறலாம்.

இந்த சத்தத்தின் அளவு 5 டெசிபல் அதிகரித்தால் 4 மணி நேரம் கேட்டாலே அவருடைய கேட்கும் திறன் பாதிக்கப்படும் என்றும் 100 டெசிபல் என்றால் 2 மணி நேரத்திலே இந்த பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார் இந்த ஆய்வாளர். இசையை கேட்கும்போது எம்பி3 பிளேயர் உட்பட எந்த பிளேயராக இருந்தாலும் அதனுடைய சத்தத்தின் அளவை 50 சதவிகிதம் வைப்பதுதான் பாதுகாப்பானது என ஆலோசனை வழங்கியுள்ளார். 90 சதவிகித சத்தத்துடன் கேட்டால் 15 நிமிடங்களுக்கு மேல் கேட்கக் கூடாது மற்றும் தரம் வாய்ந்த ஹெட்போன்களை பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் ரேஷா.  

* மே 1 - சர்வதேச இரைச்சல் விழிப்புணர்வு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. Music Listening happiness in danger?.

Tuesday, April 30, 2013

இப்போது புரிகிறதா ஏன் இதை செய்கிறார்கள்?

ராமாயணம், ர(த்)தயாத்திரை, கரசேவை, விநாயகர் ஊர்வலம், சாகா பயிற்சி & பேரணி, சங் பரிவாரக்காரர்கள் மீதான தாக்குதல் செட்டப்புகள், மதக்கலவரங்கள், குண்டுவெடிப்புகள், பாலியல் வன்கொடுமை, பாகிஸ்தான் சதி... இவை ஏதும் இல்லாமல் இனி ஒரு மக்களைவை தேர்தலை பாஜகவால் சந்திக்க முடியுமா..? 

ஒருவேளை அப்படி சந்தித்தால்..?,  அடுத்த மக்களவையில் வெறும் ரெண்டே... இரண்டு பாஜக எம்பிக்கள் மட்டுமே இருப்பார்கள்.

காரணம், மேலே சொன்ன அவ்ளோவும் நடக்கும் முன்னர் (1989க்கு முன்னர்) இரண்டு பிஜேபி MP க்கள் தான் பார்லிமென்டில் இருந்தார்கள்.

ஆக, அவைதான் பாஜகவின் தேர்தல் வெற்றியின் ரகசியம்
: எங்கெல்லாம் பாஜக தேர்தலில் வெற்றி பெற நினைக்கிறதோ, அங்கெல்லாம் மேலே சொன்னவைகளுல் சில நடக்கின்றன. அதைத்தொடர்ந்து பந்த்-கடையடைப்பு-தீவைப்பு -வன்முறை-தடியடி-துப்பாக்கிச்சூடு- என்று என்னவெல்லாமோ நடந்து... இறுதில் பாஜக அங்கே தேர்தலில் வெற்றி பெறுகிறது..!

'
கோவை-கன்னியாகுமரி-தென்காசி' தமிழ்நாட்டை பொருத்தமட்டில், பாஜக கால் பதிக்க விரும்பும் இந்த மூன்று மக்களவை தொகுதிகளில் உள்ள அப்பாவி மக்கள்தான்... பாவம்.

இதற்கெல்லாம் காரணம் தேடினால் ஆரியன் என்ற அவாக்களின் கைவரிசை இருக்கும் ஆதலால் அடியோடு ஆரியத்தை இந்தியாவை விட்டு ஒழித்தாலே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என்பது திண்ணம்.

Monday, April 29, 2013

கண்டதும் காதல் வலையில் வீழ்வது யார்?

நியூயார்க்:பெண்களை விட காதல் வசப்படுவதில் ஆண்கள் முதலிடம் வகிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. எதிர் பால் இனத்தவரிடம் வெகு சீக்கிரம் வீழ்வது பெண்களை விட ஆண்களே முன்னிலை வகிக்கின்றனர். 48 சதவீதம் இளைஞர்கள் முதல் பார்வையிலேயே காதலில் வீழ்கின்றராம். ஆனால், பெண்களோ 28 சதவீதம் பேர் மட்டுமே முதல் பார்வையில் காதல் வசப்படுகின்றனர். புதிய நூற்றாண்டில் காதல் மற்றும் உறவுகள் குறித்து அறிவதற்காக நடத்தப்பட்ட ஆன்லைன் ஆய்வில் இந்த சுவராஸ்யமான தகவல்கள் தெரியவந்துள்ளன. புதிய தலைமுறையினரின் மாறிய பாலியல் அணுகுமுறையும் , உறவுகளும் அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு நடத்தபப்ட்டது.10 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
பாலியல், ஈர்ப்பு, இதர உடல்ரீதியான சிறப்புகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு 1300 கேள்விகள் அடங்கிய வினாத்தாள் சர்வேயில் பங்கேற்றவர்களிடம் அளிக்கப்பட்டது. ஆய்வில் பங்கேற்ற 74 சதவீதம் பேரும் தங்களின் இணையின் மீது திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்தனர்.15 சதவீதம் பேர் சொந்த இணையை தவிர தவறான உறவையும் வைத்துள்ளனர். மூன்றில் ஒரு பகுதி ஆண்களும், 19 சதவீதம் பெண்களும் திருமணம் அல்லாத முறைகேடான உறவுகளில் விருப்பம் உள்ளவர்கள். கைகளை சேர்த்து பிடித்தல், செல்லப்பெயர் கூறி அழைத்தல், நான் உன்னை விரும்புகிறேன் என்று கூறுதல், முத்தமிடல் ஆகியன தனது இணையிடம் அன்பை வெளிப்படுத்த பெரும்பாலோர் கடைப்பிடிக்கும் வழிமுறைகளாம்.
தகவல் பரிமாற்றம் உறவை வலுப்படுத்துவதாகவும், இது குறையும் வேளையில் உறவு சீர்குலைவதாகவும் ஆய்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

Saturday, April 27, 2013

ரேஷன் கார்டுகளை நிமிடத்தில் புதுப்பிக்க!!

ரேஷன் கார்டுகளை ஒரே நிமிடத்தில் ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளும் வசதிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. 

ரேஷன் கார்டுகள் ஸ்மார்ட் கார்டு முறைக்கு மாற்றப்பட உள்ளன. இதற்கு போதிய அவகாசம் தேவைப்படுவதால் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளே 2012 வருடத்துக்கும் செல்லும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் அந்தந்த கடைகளில் சென்று கார்டை கொடுத்து 2012ம் ஆண்டுக்கான இணைப்புத்தாளை பொருத்தி, கடையில் கையொப்பம் மற்றும் ‘சீல்’ பெற வேண்டும். அப்போதுதான் கார்டுகள் செல்லுபடியாகும் என்று அரசு அறிவித்தது. புதுப்பித்தலுக்கு முதலில் ஜனவரி 31, 2012 வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் அந்த கெடு இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது. தற்போது மார்ச் 31, 2012 வரை புதுப்பித்துக் கொள்ளலாம். பொதுமக்கள் நலன் கருதி ஆன்லைனில் புதுப்பிக்கும் வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும், சிவில் சப்ளைஸ் துறை சார்பில்http://www.consumer.tn.gov.in/ என்ற பெயரில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் ‘கார்டு புதுப்பித்தல் 2012’ என்ற பகுதிக்கு சென்று ரேஷன் கார்டின் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பிறகு அட்டையின் நிறம், குடும்பத்தில் சேர்க்கப்பட வேண்டியவர், நீக்கப்பட வேண்டியவர், சிலிண்டர்கள் விவரம் போன்ற தகவல்களோடு, தொலைபேசி எண் போன்ற விவரங்களையும் இணைய தளத்தில் பூர்த்தி பூர்த்தி செய்ய வேண்டும். அதன்பின்னர், ‘கமெண்ட்ஸ் என்ன?’ என்ற கேள்வி வரும். விருப்பம் இருந்தால் கமெண்ட்ஸ் எழுதலால். இல்லாவிட்டால், ‘இல்லை’ என்று எழுதி, ‘சப்மிட்’ செய்தால் சில நொடிகளிலேயே நமது ரேஷன் கார்டு புதுப்பிக்கப்பட்டு, துணை ஆணையர் கையெழுத்துடன் இணையதளத்தில் ரசீது வருகிறது. 

இந்த ரசீதை கார்டின் பின்பக்கத்தில் ஒட்டிக் கொள்ள வேண்டும். அவரவர் பகுதிக்குட்பட்ட ரேஷன் கடைக்கு சென்று, ஆன்லைன் பதிவு விவரங்களை எடுத்துச் சொல்லி, கார்டில் கையெழுத்து மற்றும் சீல் பெற்றுக் கொள்ள வேண்டும். வேலைப் பளு, குடும்ப சூழ்நிலை காரணமாக பலர் தங்கள் கார்டுகளை புதுப்பித்துக் கொள்ள நேரம் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முறை மூலம் ஒரே நிமிடத்தில் ரேஷன் கார்டு புதுப்பிக்கப்பட்டு ரசீதும் கிடைத்துவிடுவதால் மக்கள் இந்த முறையை பெரிதும் வரவேற்கின்றனர்.

Friday, April 26, 2013

இணைய தளத்தால் இணைந்து இழக்க கூடாததை இழந்த மாணவி?

முகநூலில் முகத்தை காட்டியதன் விளைவு (பேஸ்புக்) காதலால் சிக்கி சீரழிந்த கல்லூரி மாணவி. (பெண்களின் கவனத்திற்கு).

இணையதள காதலால் பல இளம் பெண்கள் சீரழிந்து வருகிறார்கள். பலரது சோகக்கதையை அறிந்த பிறகும் இணையதள மோகத்தில் சிக்கிக் கொள்ளும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வரிசையில் சென்னையில் ஒரு கல்லூரி மாணவி சீரழிந்து கதறிக்கொண்டு இருக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அந்த பெண் செல்வி (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). எம்.பி.ஏ. படித்து கொண்டு இருக்கும் அவர் புராஜக்ட் செய்வதற்காக சென்னை வந்துள்ளார்.

தேனாம்பேட்டை பகுதியில் தங்கி இருக்கும் செல்வி அங்குள்ள கம்ப்யூட்டர் மையத்திற்கு அடிக்கடி செல்வார். அப்போது பேஸ்புக் மூலமாக கோகுலகிருஷ்ணன் என்பவரின் நட்பு கிடைத்தது. இவர் அந்த கம்ப்யூட்டர் மையத்தின் உரிமையாளரின் நண்பர் ஆவார்.

பேஸ்புக் மூலமாக புராஜக்ட் தொடர்பாக செல்வியும், கோகுலகிருஷ்ணனும் பல தகவல்களை பரிமாறிக்கொண்டனர். இதனால் கோகுலகிருஷ்ணன் மீது செல்விக்கு நம்பிக்கை ஏற்பட்டது. இந்த நிலையில் ஒருநாள் புராஜக்ட்டுக்கு உதவி செய்வதற்காக செல்வியை, கோகுலகிருஷ்ணன் ஆட்டோவில் வெளியே அழைத்து சென்றார். ஆட்டோ நேராக அம்பத்தூர் சென்றது. அங்கு ஒரு கட்டிடத்தின் அருகே சென்றதும் ஏற்கனவே நின்ற நண்பர்களிடம் செல்வியை அவர் அறிமுகம் செய்தார். பின்னர் அவர்களை அனுப்பி விட்டார்.

செல்வியை மட்டும் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று அறையில் பூட்டி வைத்து கற்பழித்தார். இதற்கு உடந்தையாக கம்யூட்டர் மைய உரிமையாளர் இருந்தார். அப்போது அவர்கள் செல்வியை ஆபாசமாகவும் படம் எடுத்துள்ளனர். அவர்களின் பிடியில் சிக்கிய செல்வி கதறி உள்ளார். உடனே கோகுலகிருஷ்ணன் எதுவும் தெரியாததுபோல் வெளியே சென்று விடு இல்லை என்றால் எனது நண்பர்களுக்கும் உன்னை விருந்தாக்கி விடுவேன் என்று மிரட்டினார். இதனால் செய்வது அறியாமல் திகைத்த செல்வி கண்ணீருடன் வெளியேறினார். அதன்பிறகு கோகுலகிருஷ்ணன் ஆபாச செல்போன் படத்தை காட்டியே செல்வியை மிரட்டினார்.

சீரழிந்த செல்வி அவரிடம் நியாயம் கேட்டார். அப்போது உன்னை திருமணம் செய்கிறேன் என கூறி சமாளித்தார். பின்னர் ஒருநாள் செல்வியும், அவரது உறவினர்களும் கோகுலகிருஷ்ணனை தேடி சென்றுள்ளனர். அப்போது ஏற்கனவே ரகசியமாக வேறொரு பெண்ணை கோகுலகிருஷ்ணன் திருமணம் செய்த குட்டு உடைந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வி கண்ணீருடன் நடந்த சம்பவத்தை மனுவாக எழுதி இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். இணையதளம் மூலம் ஏமாறும் இளம்பெண்களுக்கு செல்வி சீரழிந்த கதையும் ஒரு சாட்சியாக இருக்கட்டும்.

Thursday, April 25, 2013

இந்தியர்கள் யார்? வந்தவர்கள் யார்??

அனைத்து முஸ்லிம் மற்றும் மாற்று மத சகோதரர்களுக்கும்.... முஸ்லிம்களை தீவிரவாதியாக சித்தரிக்கும் போக்கு இன்று நேற்று அல்ல., பல காலங்களாக தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. 

முஸ்லிம்களை தீவிரவாதியாக கருதுகிற போக்கு தமிழர்களுடையதோ. அல்லது ஒட்டு மொத்த இந்தியர்களுடையதோ அல்ல.. இவர்களின் மனதில் நச்சுக்கருத்துக்கள் விதைக்கப்பட்டுள்ளது. நச்சுக்கருத்துக்களை விதைத்தவர்கள்....விபச்சார ஊடகத்துறையும்... சதை வியாபாரம் செய்யும் சினிமாத்துறையும்...சுயநல காவிக்கரை படிந்த சில அரசியல்-வியாதிகளாலும் தான். முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்ல , தீவிரவாத முத்திரை குத்தப்பட்டுள்ளனர் என்ற கருத்துக்கள் மக்கள் மத்தியில் இப்பொழுது பரவலாக எழத்தொடங்கியுள்ளது. மக்கள் இப்போது கேள்வி கேட்க துவங்கியதை.. சிந்திக்க துவங்கி இருக்கிறார்கள்.

முஸ்லிம்கள் வந்தேறிகள் அல்ல...இங்கு இருக்கும் பெரும்பான்மையான இந்துக்களும் வந்தேறிகள் அல்ல. இந்தியாவில் இருக்கும் மற்ற பெரும்பான்மையான மதத்தவர்களும்..மற்ற பல்வேறு கொள்கையாளர்களும், நம்பிக்கை கொண்டவர்களும்....வந்தேறிகள் அல்ல..ஆரிய பார்ப்பனர்கள் தான் உண்மையான வந்தேறிகள்....உண்மையிலேயே உங்கள் கூற்றில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்.. இந்திய முஸ்லிம்களுக்கும்...பார்ப்பனர்களுக்கும்... DNA மரபணு சோதனை செய்து இதை தெரிந்து கொள்ளலாம்..முஸ்லிம்களின் மரபணு அவர்கள் சார்ந்துள்ள....வசிக்கின்ற மாநில மக்களுடன்...சமயத்தவர்களுடன்...மற்ற மதத்தவர்களுடைய மரபணுக்களுடன் ஒத்து போகும்.....ஆரிய வந்தேறி பார்ப்பனர்களின் மரபணுவோ.. காலம்காலமாக விரட்டப்பட்டு வரும்...நாடில்லா நாடோடி யூத மக்களுடன் மட்டுமே அவர்களுடைய மரபணு ஒத்துபோகும்...வரலாற்று ரீதியாக வேண்டாம்....மரபணு மூலமாகவே எங்களால் நிருபிக்க முடியும் நாங்கள் மண்ணின் மைந்தர்கள் என்று....நாங்கள் வந்தேறிகள் என்று நிருபிக்க உங்களில் யாருக்க்காவது அந்த தைரியமோ ....ஆண்மையோ உள்ளதா கூறவும்...?--

இஸ்லாம் முகலாயர் காலத்தில் தான், படையெடுப்பின் போது தான் இந்தியாவில் பரவியது எனபது எந்த அளவு தவறான கருத்தோ... அதே போன்றது அரபிகள் 1400 வருடங்களாக தான் (அதாவது முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்திற்கு பிறகுதான்) அரபிகள் இந்தியாவிற்கு வியாபார ரீதியாக வரத்தொடங்கினர் என்பதும் அபத்தமானது..

முஹம்மது நபி (ஸல்) ஓர் இறைகொள்கையை (இஸ்லாத்தை) அரபியருக்கு போதனையை முன்னெடுக்கும் முன்பே அரபியர்கள் இந்தியாவோடும் மற்ற உலக சாம்ராஜ்யங்கள்..சிற்றரசுகள் உட்பட மற்ற கலாச்சார மக்களுடன் வியாபார ரீதியாக தொடர்பில் இருந்தனர்...அக்கால அரபியர்கள் ஓர் இறைக்கொள்கையாளர்களாக (முஸ்லிம்களாக) இருக்கவில்லை... அவர்கள் நெருப்பு வணங்கியாகவோ....யூத..கிருத்துவ..மத நம்பிக்கையாளர்களாகவோ... இன்னும் தத்தமது சுய,நம்பிக்கையை பின்பற்றுபவார்களாகவும் தான் இருந்துள்ளனர்.

இஸ்லாம் இந்தியாவில் இருவேறான சூழ்நிலைகளில் அறிமுகமானது எனபது தான் உண்மை...ஒன்று... இஸ்லாமிய ஓர் இறைகொள்கைகள் அரபியர்கள் மத்தியில் எழுச்சிபெற்று இந்திய வணிகத்தில் ஈடுப்பட்ட அதே அரபியர்களின் மூலமாக பரவியது...அராபிய வணிகர்களின் நேர்மை..கலப்படமின்மை, பொய்யின்றி, செய்த வர்த்தகம்...நம்பகத்தன்மை. இவையே இந்திய மக்களுக்கு வித்தியாசமானதாகவும். ஆச்சரியமாகவும்.. ஒரு அறிமுகமாகவும்..மேலும் அராபியர்களின் கொள்கை கோட்பாடுகளை (இஸ்லாத்தை) அறிவதற்கு ஆவலை தூண்டுவதாகவும் இருந்தது.

மற்றொன்று இந்தியாவின் மீது முகலாயர்கள் ஆட்சி அதிகார வளயத்தை, எல்லைகளை விரிவுபடுத்திய போது இஸ்லாத்தின் அறிமுகம் இந்திய மக்களுக்கு கிடைத்தது... இதிலும் இஸ்லாத்தை எற்றுகொண்டவர்களின் நோக்கத்தை இரண்டு வகையாக அறியலாம் ...ஒன்று.. தானே இஸ்லாத்தின் கொள்கைகளை ஏற்று கொள்வது. மற்றொன்று ஹிந்துமத.. பார்ப்பன ஆசான்களாக கொண்ட இந்து அரசர்களின் கொடுமைகளிலிருந்து விடுதலை பெரும் நோக்கத்தில் இஸ்லாத்தை தழுவியது என இரண்டு வகையாக வேறுப்படுத்தி உண்மை நிலையை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம் ...அன்றைய காலக்கட்டத்தில்.. ஆரிய பார்ப்பனர்கள் ஹிந்து மத அரசர்கள் பின்னாளில் மத குருமார்களாக இருந்து பார்ப்பன அல்லாத ஏனைய மக்களை, மற்ற நம்பிக்கை கொண்டவர்களை...ஆட்டிப்படைத்தனர்.

ஏனைய தாழ்ந்த சமூகத்தினரை வஞ்சித்து வந்ததும யாவரும் அறிந்ததே...இந்தியாவில் தோன்றிய புத்த மதம் அழிந்ததே ஆரிய பார்ப்பனர்களாலும். அரசர்களாலேயுமே ஆகும்..பெருவாரியான பௌத்தர்கள் அன்றைய காலக்கட்டத்தில் உயிருக்கு அஞ்சி...இஸ்லாத்தை ஏற்றுகொண்டனர் எனபது தான் உண்மை...மற்ற தாழ்ந்த சமூக மக்கள். விடுதலை ஒன்றையே நோக்காக கொண்டு இஸ்லாத்தை சகோதரத்துவத்தை ஏற்றனர்.

சாதாரண வஞ்சிக்கப்பட்ட, அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் மட்டும் இன்றி கேரளத்தில் "சேரமான் பெருமாள் பாஸ்கர ரவி வர்மா" போன்ற அரசர்களும் இஸ்லாத்தை தழுவியுள்ளனர்..(நிலவு இரண்டாக பிளந்த சம்பவத்தை தொடர்ந்து ...அரபியர்கள் மூலம் முஹம்மது நபி (ஸல்) அவர்களை.. இஸ்லாத்தின் கொள்கைகளை ஏற்றவர்..

(1) பெரும்பான்மையான முஸ்லிம்கள்....இந்தியாவில் வசித்த மாற்று மத கொள்கைகளை பின்புலமாக கொண்டவர்களே.

(2) அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களே இஸ்லாத்தை ஏற்றனர்.

(3) அவர்களின் தாகம் சுய மரியாதை. விடுதலை தான் பிரதானமாக இருந்தது.

(4) இஸ்லாத்தின் கொள்கைகளை அறிந்து, புரிந்து ஏற்றவர்களும் சிலரே....இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்பதே வடிக்கட்டிய பொய்யாகும்..வாளால் ஒருவனின் மனதை மாற்ற முடியுமா..?

தாழ்த்தப்பட்ட மக்களின் காதுகளில் ஈயத்தை காய்ச்சி ஊத்துவதும் அவர்களை மிருகங்களை விட கேவலமாக நடத்தியதையும் எதிர்த்தவர்கள் முகலாயர்கள்... இஸ்லாத்தின் மூலமாக அடிமை முறையிலிருந்து ஒரு விடுதலைக்கான துவாரத்தை.. வாய்ப்பை ஏற்ப்படுத்தியவர்கள் தான் முகலாயர்கள்... (NOTE: சகோதரர்களுக்கு என்னுடைய கருத்துக்களை பதிவுகளை நீங்கள் மற்றவருக்கு பதிலாக மறுபதிவு செய்யலாம் ...உங்களுடைய கருத்துக்களையும் சேர்த்து கொள்ளுங்கள்......தவறானதை சுட்டி காட்டுங்கள் திருத்தி கொள்கிறேன்..)

{இந்தியாவில் வெள்ளைக்கார ஆட்சி இருந்தபோது வில்லியம் பென்டிக்தான், தன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், இறந்த கணவனோடு, உடன் கட்டை ஏற்றும் பழக்கத்தை தடை செய்தார். அதற்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர், 1510 ம்ஆண்டு போர்த்துக்கீசியர் ஆண்ட இந்திய பகுதிகளில் அல் புகர்க் என்பவர், சதி என்ற பெயரில் இறந்த கணவனோடு உயிர் உள்ள மனைவியை கொளுத்துகிற கொடுமையை முற்றிலுமாக ஒழித்தார். 
வந்தேறிகள் யார்..? யார் அந்நியன்..?.   ...ஆரியனே அந்நியன்..!! (நன்றி:வே மதிமாறன்) 

Wednesday, April 24, 2013

வல்லாரை ஒருத்தருகிட்டையும் சொல்லாதே!?

வல்லாரை ஒருத்தருகிட்டையும் சொல்லாதே என்று முன்னோர்கள் இத்தாவர வகைப்பற்றி  சொல்ல கேள்விபட்டிருக்கிறோம், அதன் காரணம் இதுவோ. தாம்பத்யம் நினைவாற்றலுக்கு.

ஞாபக சக்தி: வல்லாரை 150 கிராம், வசம்பு 15 கிராம், பவுடராக்கி தேனில் கலந்து சாப்பிட ஞாபகசக்தி பெருகும். வல்லாரை கீரையை அடிக்கடி சமைத்து உண்டு வந்தாலும் நினைவாற்றல் அதிகரிக்கும்.

வல்லாரை இலை தூள் 100 கிராம், வசம்பு 15 கிராம் இடித்து தூள் செய்து ஒன்றாக கலந்து தினசரி 5 கிராம் தேனுடன் சாப்பிட்டு வந்தால் மந்தபுத்தி மாறும்.

நாள்தோறும் பெரிய நெல்லி ஒன்றை தவறாமல் உண்டு வந்தால் நம் மூளை நல்ல நிலையில் இயங்கும். பீர்க்கன்காய் வேர் கஷாயம் சாப்பிட்டால் மூளை பலம் பெறும். உடலுக்குப் பலம் கொடுக்கும்.

பாதாம்பருப்பு, வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி, மாதுளம்பழம் இவைகளை தினமும் சாப்பிட்டு வர அறிவு விருத்தி, எலும்பு வளர்ச்சி, பித்த சம்பந்தமான வியாதி நீங்கும்.

காச நோய்க்கு மிளகு வைத்தியம்
: காசநோய் தீர மிளகு வைத்தியம் சிறந்ததாகக் கருதப்படுகிறது. அதாவது, தேள் கொடுக்கு இலை, பூ ஆகியவற்றை சிறிது சீரகம், 6 மிளகுடன் அரைத்துக் கொள்ள வேண்டும்.

இதனை ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து ஆட்டுப்பால் விட்டு குடிக்க வேண்டும். இதனை ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்று 48 நாட்கள் சாப்பிட்டு வர காச நோய் குணமாகும்.

இம்மருந்தை உண்ணும் போது புகைப்பிடித்தல், மது, காபி, டீ அருந்துதல் போன்றவைகளைத் நிச்சயமாகத் தவிர்க்க வேண்டும்.

மேக நோய்க்கும், நீரிழிவுக்கும் ஏற்றது
: மேக நோய்க்கும், நீரிழிவு நோய்க்கும் புங்கம் பூவில் தயாரிக்கப்படும் மருந்து மிகவும் ஏற்றதாக விளங்குகிறது. அதாவது, புங்கம் பூவை நிழலில் உலர்த்தி நெய்விட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். இதனை இடித்து சலித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இந்த தூளை 1 அல்லது 2 கிராம் அளவு தேனில் கலந்து காலை, மாலை இருவேளையும் 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுவர வேண்டும். இப்படி செய்தால் எவ்வளவு கடுமையான மேக நோயாக இருந்தாலும் குணமாகிவிடும்.

இந்த மருந்தை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்., 
அதுமட்டுமல்ல தினம் உணவில் சேர்த்து வந்தால் தாம்பத்யம் பெருகும். ஆதால்தான் யாரிடமும் சொல்லாதே என்றார்களோ.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!