Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, March 31, 2012

வாக்கிட்ட மக்களுக்கு வாக்கரிசி போடும் ஜெயா அரசு!!

சென்னை: மின் தடையால் இருண்ட மாநிலமாக மாறிவரும் தமிழகத்தில் புதிய மின்கட்டண உயர்வு மூலம் தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஆளும் அ.இ.அ.தி.மு.க அரசு. ஏற்கனவே பேருந்து கட்டணம், பால் விலை உயர்வு ஆகியவற்றால் அவதிக்குள்ளாகும் மக்களை வாட்டும் விதமாக வெளியாகியுள்ள இக்கட்டண உயர்வு ஒரு வருடத்திற்காம். இந்த கட்டண உயர்வு வரும், ஏப்ரல் 1- முதல் அமலுக்கு வருகிறது.

எவ்வளவுதான் மக்களை விரோத ஆட்சியை நடத்தினாலும் காசு கொடுத்தால் ஓட்டுக்கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆட்சிபுரியும் அ.இ.அ.தி.மு.க அரசின் தொடர் அராஜ போக்கை இம்மின்கட்டண உயர்வு உணர்த்துகிறது.

மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கோரிக்கை வைத்தது. கடந்த 2004ம் ஆண்டுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்படவேயில்லை. கடந்த திமுக ஆட்சியில் ஒரு சில பிரிவுகளுக்கு மட்டுமே மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

இப்படி மின் கட்டணம் உயர்த்தப்படாமலேயே இருப்பதால் மின்வாரியம் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது என்று தமிழக அரசு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் எடுத்துரைத்தது. மேலும் எந்த பிரிவுக்கு எவ்வளவு கட்டணம் உயர்த்தலாம் என்பதையும் அரசு முடிவு செய்து ஆணையத்திடம் கடந்த நவம்பர் மாதம் தெரிவித்தது.

இதையடுத்து ஆணையம் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து பொது மக்களிடம் கருத்து கேட்டது. அதன் பிறகு மின் கட்டணத்தை எவ்வளவு உயர்த்துவது, வீடுகள், தொழிற்சாலைகள், உயர் அழுத்த மின்சார பயன்பாடிற்கான கட்டணத்தை எவ்வளவு அதிகரிப்பது என்பதை ஆணையம் முடிவு செய்தது.

மேலும் சிறு தொழில்கள், குடிசை தொழில்களுக்கான கட்டண உயர்வை அமுல்படுத்துவது குறித்தும் முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர்கள் நாகல்சுவாமி, வேணுகோபால் ஆகியோர் மின்கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டனர்.

விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தொடரும் என்றும், விசைத்தறிக்கு 500 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது., இந்த கட்டண உயர்வு மூலம் ஓர் ஆண்டிற்கு ரூ.7874 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் அரசுக்கு கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மக்களை ஏமாற்றும் இந்த த(பாசிச)அரசு இதன் அபாய காரணத்தை உணர்ந்தும் கூடங்குளம் மின்சாரம் முழுமையாக தமிழ் நாட்டுக்கே என்று மேலும் ஏமாற்ற பார்க்கிறார் ஜெயலலிதா.

Friday, March 30, 2012

மாரடைப்பை முன்கூட்டியே அறிய முடியும் விஞ்ஞானிகள்!

நியூயார்க்: சிகரெட் பிடிப்பவர்கள், உடல் குண்டானவர்கள் மற்றும் ரத்தத்தில் கொழுப்பு சத்து இருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. ஆனால் இவர்களுக்கு எப்போது நெஞ்சுவலி மற்றும் மாரடைப்பு ஏற்படும் என்பதை டாக்டர்களால் முன் கூட்டியே அறிய முடிவதில்லை.

தற்போது ஒரு சிறிய ரத்த பரிசோதனை மூலம் மாரடைப்பு நோய்க்கான அறிகுறிகளை கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ரத்தத்தில் உள்ள எண்டோ திலியல் செல் (உள் அடுக்கு படலம்) மாரடைப்பு நோயாளிகளுக்கு வழக்கத்தை விட மிகப் பெரிய மாறுபட்ட வடிவிலும், அதிக எண்ணிக்கையிலும் இருக்கும். அதை வைத்து மாரடைப்பு நோய் ஏற்படுவதை முன் கூட்டியே அறிய முடியும்.

இதற்கான சோதனையை மாரடைப்பு ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 50 பேரிடம் நடத்திய சோதனையில் நிபுணர்கள் கண்டுபிடித்தனர். இந்த சோதனை இன்னும் 2 ஆண்டுகளில் நடை முறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Thursday, March 29, 2012

நயன் பிரபுவை ஒன்று சேர்த்து வைக்கிறாரா முன்னாள் நடிகை!

நயன்தாரா உடனான காதலுக்காக முதல் மனைவியை விவாகரத்து செய்தார் பிரபுதேவா. நயன்தாராவும், பிரபுதேவா மீதுள்ள காதலால் மதம் எல்லாம் மாறினார். இவருக்காக அவரும், அவருக்காக இவரும் என்று ஈருடல் ஓருயிராக இருந்த பிரபுதேவா-நயன்தாரா ஜோடி.

இப்போது அந்த காத‌லை உதறி தள்ளிவிட்டு தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பிரபுதேவா தன்னுடைய இந்தி பட வேலைகளிலும், நயன்தாரா மீண்டும் சினிமாவிலும் நடிக்க தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில் நயன்தாரா-பிரபுதேவா இடையே சமரம் செய்து வைக்க நடிகை குஷ்பு முயற்சி செய்வதாக தவகல் வெளியானது. ஆனால் இதனை அவர் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, பிரபுதேவா-நயன்தாரா இருவருமே என்னுடைய நல்ல நண்பர்கள். அதிலும் பிரபுதேவா என்னுடைய நீண்டநாள் நண்பர். அவர் நடிக்க வருவதற்கு முன்பே அவரை எனக்கு தெரியும். என்னுடைய ஒரு படத்திற்கு அவர் தான் நடன அமைப்பாளர். எவ்வளவு நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைக்க கூடாது.

நயன்தாரா-பிரபுதேவா விஷயத்திலும் அப்படிதான். அவர்கள் இருவருக்குள்ளும் என்ன பிரச்னையோ தெரியவில்லை அது அவர்களுடைய சொந்த விவகாரம். இதில் நான் தலையிட விரும்பவில்லை. நான் ஒன்றும் தரகர் கிடையாது. இதுபோன்ற செய்திகள் எல்லாம் எப்படி கிளம்புகிறது என்றே தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

Wednesday, March 28, 2012

மக்களை நம்ப வைக்க நாடக மாடிய போயஸ் கூட்டணி!?

சசிகலா புதன்கிழமை (28.03.2012) காலை விடுத்த அறிக்கையில்: ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள் எனக்கு வேண்டாதவர்கள். அவருக்கு எதிராக துரோகம் இழைத்தவர்களை மன்னிக்க முடியாது. அவர்களின் உறவை துண்டித்து விட்டேன்.

எம்எல்ஏ, அமைச்சர் பதவியில் இருக்க வேண்டும், பொது வாழ்வில் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. ஜெயலலிதாவுக்கு உண்மையான தங்கையாகவே இருக்க விரும்புகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவை அவரது போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்று சசிகலா சந்தித்தார்.

இச்சம்பவம் பற்றி தலைமை நீதிபதி கூறும்போது மக்களையும் நீதிமன்றத்தையும் நம்ப வைக்க நாடக மாடிய (ஜெயா சசி) போயஸ் கூட்டணி., மேலும் எவ்வளவு தற குறைவாக ஜெயா நடந்து கொண்டார் என்றார்.

Tuesday, March 27, 2012

எதிர்பார்ப்பில் A R R கம்போஸிங்கில் விஜய்!!

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், யோகன் அத்தியாயம் ஒன்று என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இந்தபடத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைக்க இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்திதான்.

இப்போது புதிய செய்தி என்னவென்றால், யோகன் அத்தியாயம் படத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் பாட இருப்பது தான்.

விஜய்க்கு பாட்டு பாடுவது ஒன்றும் புதிதல்ல, ஏற்கனவே நிறைய படங்களில் பாடியுள்ளார். இப்போது கூட தான் நடித்து வரும் துப்பாக்கி படத்தில் அசத்தலான பாட்டு ஒன்று பாடியிருக்கிறார்.

அதனால் விஜய்-ஏ.ஆர்.ரஹ்மானின் காம்பினேஷன் எப்படி இருக்கும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Monday, March 26, 2012

காலவரையற்ற வேலை நிறுத்தம் குஜராத் மோ(கே)டிக்கு.எதிராக!

ஆமதாபாத்: குஜராத்தில் 6 மருத்துவ கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 2500 டாக்டர்களும், பல்வேறு மருத்துவமனை டாக்டர்களும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவக்கி உள்ளனர்.

அரசு அல்லாத மருத்துவ கல்லூரிகளை ஆசிரியர்களின் சம்பள அடிப்படையில் தங்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மருத்துவமனை பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தலைமை டாக்டர் ஒருவர் கூறும்போது; இது பற்றி பலமுறை மாநில முதல்வர் நரேந்திர மோ(கே)டி யிடம் புகார் செய்தும் எந்த பலனுமில்லை ஆதலால் இம்முடிவை நாங்கள் எடுத்தோம் என்றார்.

குஜராத்தை முதல் மாநிலமாக மாற்றுவது இருக்கட்டும் முதலில் அரசு ஊழியர்களுக்கும், மக்களுக்கும் அவர்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்துவிட்டு பின்பு செய்யட்டும். தன் புகழ் பாடும் குஜராத் கேடி.

Sunday, March 25, 2012

எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாயா (சச்சின்) நம்மாளு!!

மும்பை: சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக சதத்தில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் சச்சின். அவரின் சாதனையை பாராட்டி பத்திரிகை ஆசிரியர்கள் சார்பில் மும்பையில் பாராட்டு விழா நடந்தது.

விழா முடிந்ததும், பத்திரிகை ஆசிரியர்களுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் அவர் கூறியதாவது: இந்திய அணி ஜெயிக்க வேண்டும் என நோக்கத்தில் தான் விளையாடி வருகிறேன். எனது சாதனைகளுக்காக நான் கிரிக்கெட் விளையாடவில்லை. சதத்தில் சதம் அடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது காலத்தில் உலகக்கோப்பையை இந்தியா வென்றது ஒரு மிகப்பெரிய சாதனையும், மகிழ்ச்சியும் ஆகும்.

எனது சாதனையை இந்தியர் முறியடிப்பார், எனது ஓய்வு குறித்து பல்வேறு செய்திகள் வருகின்றன. நான் எப்போது ஒய்வு ‌பெற வேண்டும் என்பதை யாரும் எனக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. நேரம் வரும்போது நானே ஓய்வை அறிவிப்பேன். இதுவரை ஓய்வு பற்றி சிந்திக்கவில்லை. விருப்பம் உள்ளவரை இந்தியாவுக்காக ஆடுவேவன்.

சச்சின் கூறுவது பொருத்தமாக பட்டாலும் இப்பெரும் புகழும் இருக்கும்போதே கிரிக்கெட்டிலிருந்து தானாக ஒய்வு பெற்றால் பெரும் புகழுடன் அவரிடமிருக்கும் இல்லையேல் ரசிகர்கள் மற்றும் செலக்ட்டர்களால் ஒதுக்கப்படுவார்.

உடல் பருமனுக்கு உணவுதான் காரணமா! ஆய்வு தகவல்!!

லண்டன்: பசி இல்லாவிட்டாலும், ஒரு சிலர் எப்போதும் எதையாவது சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள் அவர்கள் சாப்பாட்டு ராமன், பெருந்தீனி தின்பவர்கள் என்பன போன்ற ஏராள பேச்சுகளுக்கு ஆளாக்கின்றன.

அவர்கள் விரும்பி பெருந்தீனி சாப்பிடுவது இல்லை, அதற்கு அவர்களின் உடலில் உள்ள ஒருவித மரபணுவே காரணம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழக மெடிக்கல் சென்டரின் விஞ்ஞானிகள் எலிகளிடம் இதுகுறித்து ஆய்வு நடத்தினார்கள். அப்போது அதில் இருந்த பி.டி.என்.எப். என்ற மரபணு உடைந்து அது சாப்பிட்டது போதும் என்ற கட்டளையை மூளைக்கு செல்லவிடாமல் தடுக்கிறது.

அதனால்தான் பசி இல்லாவிட்டாலும் எலி தொடர்ந்து எதையாவது தின்று கொண்டே இருந்தது. அதன் மூலம் உடல் எடை பெருத்து கொளுத்து விட்டது. இதை மரபணு மனிதர்களின் உடலிலும் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

எலிகளின் உடலில் நடப்பது போன்றே மனிதர்களின் உடம்பிலும் இதுபோன்ற மாற்றங்கள் நடக்கலாம் என கருதுகின்றனர். இதனால்தான் தொடர்ந்து சாப்பிட்டு உடல் குண்டாகி விடுகிறது.

இந்த பி.டி.என்.எப். மரபணுவை தாயின் கருப்பையில் இருக்கும் குழந்தைகளிடம் கண்டறிந்து அதற்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, March 24, 2012

கம்பி நீட்ட பார்த்த இளைஞனை கம்பி என்ன வைத்த இத்தாலி இளைஞி?

தேனி: திண்டுக்கல்லை சேர்ந்தவர் இந்தர்கணேஷ்,28. அமெரிக்காவில் கப்பலில் பணிபுரிகிறார். இவர், தன்னுடன் வேலை பார்க்கும் இத்தாலி பெண் லியோநினா,28,வுடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார். நிச்சயதார்த்தம்: இந்தர்கணேஷ் இரண்டு மாதங்களுக்கு முன், தேனியை சேர்ந்த மீன் வியாபாரி ஜெயபால் மகளை திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் செய்தார்.

இத்தகவல் இந்தர்கணேஷ் நண்பர்கள் மூலம் லியோநினாவுக்கு தெரிய வந்துள்ளது.கெஞ்சல்: அமெரிக்காவில் இருந்து திண்டுக்கல் வந்த லியோநினா, இந்தர்கணேஷ் வீட்டிற்கு சென்றார். தனக்கும்-இந்தர்கணேஷிற்கும் உள்ள தொடர்பை கூறி, தேனி பெண்ணுடன் திருமணம் செய்யக்கூடாது என கணேஷின் பெற்றோரிடம் முறையிட்டுள்ளார். தீர்வு கிடைக்காததால், தேனி பெண் நிச்சயதார்த்த போட்டோ ஆல்பத்தில் இருந்த ஸ்டுடியோவிற்கு போன் செய்து, ஜெயபால் மொபைல் எண்ணை வாங்கி தகவல் தந்தார். ஜெயபால் தன் குடும்பத்துடன் இந்தர்கணேஷ் வீட்டிற்கு சென்றார். அங்கு ஜெயபால் காலில் விழுந்த லியோநினா கதறி அழுதுள்ளார்.

நான்கு ஆண்டுகளாக கணவன், மனைவியாக வாழ்வதாகவும், இனிமேல் ஒரு பெண் தங்கள் வாழ்க்கையில் குறுக்கே வரக்கூடாது. மீறி திருமணம் நடந்தால் வக்கீல் மூலம் அந்த திருமணத்தை எதிர்க்க உள்ளதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து ஜெயபால் தனது மகளுக்கு நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தி போலீசில் புகார் செய்தார்.

வழக்கு: இந்தர்கணேஷ் மீது தேனி போலீசார் வழக்குபதிவு செய்ததை உறுதி செய்த பின் லியோநினா அமெரிக்கா கிளம்பினார். அதுவரை திண்டுக்கல்லில் 23 நாட்கள் இந்தர்கணேஷ் வீட்டில் தங்கியிருந்தார்.புத்திசாலி: ஜெயபால் கூறுகையில்,""லியோநினா புத்திசாலி. தங்கள் திருமண வாழ்க்கைக்கான ஆதாரங்களை சேர்த்து வைத்துள்ளார். திருமண ஆதாரமாக 63 போட்டோக்களை எங்களுக்கு அனுப்பி உள்ளார். எனது புகார்படி போலீசார் இந்தர் கணேஷை கைது செய்தனர்,'' என்றார்.

Friday, March 23, 2012

கூடங்குளம் போராட்டக்காரர்களை மிரட்டும் பாசிச அரசு!!

திருநெல்வேலி:கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்த கரை கிராமத்தில் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அணு உலை எதிர்ப்புக்குழு தலைவர் உதயகுமார் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க செல்ல முயன்ற ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் பொதுச்செயலாளர் நெல்லை முபாரக், பெரியார் திராவிட கழகத்தலைவர் கொளத்தூர் மணி, நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பு தலைவர் சீமான் உள்பட 500க்கும் மேற்பட்டோர் இன்று (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக பாளையங்கோட்டையில் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மறுமலர்ச்சி திமுக, எஸ்.டி.பி.ஐ, பாப்புலர் ஃப்ரண்ட் உட்பட பல்வேறு அமைப்பினர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டம் முடிந்ததும் வைகோ, நெல்லை முபாரக், கொளத்தூர் மணி உள்ளிட்டோர் பேரணியாக இடிந்தகரை நோக்கிச் செல்ல முயற்சித்தனர். ஆனால் போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் பாளையங்கோட்டை, கூடங்குளம் பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இப்போராட்டம் பற்றி மனித ஆர்வலர் கூறும்போது: கூடங்குளம் போராட்டக்காரர்களை ஜெயா அரசு (பார்ப்பனிய பாசிச) அடக்குமுறையை கட்டவிழ்த்து உள்ளது என்றார், மேலும் அவர் கூறுகையில் இந்த அடக்கு முறையால் மக்கள் ஒன்றும் பயந்தவர்களாகவோ அல்லது இந்த போராட்டத்தை விட்டு ஒதுங்கிவிடுவார்கள் என்று மத்திய மாநில அரசுகள் நினைக்க வேண்டாம் என்றார்.

உடலுக்கு முக்கிய பங்காற்றும் முருங்கை!!!

* வாரத்தில் ஒருமுறையோ, இரண்டு முறையோ முருங்கைக்காயை உணவாக உபயோகித்து வந்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்திகரிக்கப்படும்.

* முருங்கை இலையில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்துகள் இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்தசோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். அதோடு, பல் கெட்டிப்படும். தோல் நோய்கள் நீங்கும்.

* முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். மேலும், தாது விருத்தியும் உண்டாகும்.

* முருங்கை இலைச்சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால் ரத்தம் சுத்தமாகும். எலும்புகள் வலுவாகும். கர்ப்பிணிப் பெண்களும் இதை உட்கொண்டு வரலாம்.

* முருங்கை இலை காம்புகளை நறுக்கி, மிளகு ரசம் வைத்து, சாப்பாட்டுடன் சேர்த்து உட்கொண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் நீங்கும். அதேவேளையில், அது சிறுநீரைப் பெருக்கும்.

* முக்கிய பங்காற்றும் முருங்கக்காயை உணவில் சேர்த்து நாமும் பலன் பெறலாமே.

Thursday, March 22, 2012

விஜய் அஜித்தை பார்த்து பிரமித்து புகழும் சூர்யா!

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8 மணிக்கு ”நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி” என்ற தலைப்பில் நடிகர் சூர்யா நடத்தும் ஒரு கோடிக்கான கேம் ஷோ ஒன்று ஒளிபரப்பாகிறது.

இதில் அவ்வளவு எளிதில் விடை கண்டுபிடிக்க முடியாத அறிவுப்பூர்வமான(!) பல கேள்விகள் தினமும் கேட்கப்படுகின்றன. சூர்யா ஒரு நடிகன் என்பதை ஒதுக்கிவிட்டு அனைத்து ரசிகர்களும் இந்த நிகழ்ச்சியை ரசித்து பார்க்கின்றனர். நிகழ்ச்சியில் மற்ற நடிகர்களைப் பற்றிய கேள்விகள் வரும் போது சூர்யாவிடம் அவர்களை பற்றி பேச மக்கள் சிறு தயக்கம் காட்டுகின்றனர்.

ஆனால் சூர்யா சாதாரணமாக அவர்களை பற்றி பேசுகிறார். அஜித், விஜய் ஆகியோரைப் பற்றி சூர்யா இந்நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். “ திருமணத்திற்குப் பிறகு புதுமணத் தம்பதிகள் கொண்டாடும் முதல் தீபாவளிக்கு பெயர் என்ன?” என்று சூர்யா கேட்ட போது நிகழ்ச்சியில் பங்கேற்றவர் தலை தீபாவளி என்பதை தல தீபாவளி என்று மாற்றி(எப்புடியெல்லாம் ட்விஸ்ட் பண்ணுறாங்க பாருங்க) ”உங்க முன்னாடி எப்படி தல பற்றி பேசுவது” என்று கேட்டார்.

அதற்கு சூர்யா “ஓ நீங்க அப்படி வர்றீங்களா. தல எப்பவுமே தல தாங்க” என்று கூறினார். மற்றொரு நாள் நடந்த நிகழ்ச்சியில் ”நண்பன் திரைபடத்தில் வரும் பிரபலமான ஆங்கில வசனம் எது?” என்று கேட்டார். நண்பன் படம் விஜய் நடித்த படம் என்பதால் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர் சூர்யாவிடம் “விஜய் நல்லவரா? கெட்டவரா?” என்று கேட்டார்.

அந்த கேள்விக்கு சூர்யா “அவர் ஏன் கெட்டவரா இருக்கனும். அவரது படங்களை பார்த்து நான் பிரம்மித்துள்ளேன். கல்லூரியிலிருந்தே அவரது வளர்ச்சியை பார்த்துக் கொண்டிருப்பவன் நான். எனது ”அகரம் பவுண்டேஷனு”க்காக ஒரு குறும்படத்தில் நடிக்க அவருக்கு போன் செய்து கேட்ட போது ”அதுக்கென்ன மாமா பன்னிடலாம் மாமா” என்று கூறினார்.

அவருடைய காமெடியும், தன்னம்பிக்கையும் தான் அவரிடம் எனக்கு பிடித்தது” என்று பதிலளித்தார். அதன் பின் அந்த கேள்விக்கு மிகவும் யோசித்து(!) சரியான பதில் சொல்லப்பட்டது.

நடிகர்களிடமோ ஓர் ஒற்றுமை ஆனால் ரசிகர்களிடமோ வேற்றுமை!,ரசிகர்களான நாமும் இதை பின்பற்றலாமே!! செய்வோமா?.

Wednesday, March 21, 2012

கிரிக்கெட் ஆடிய ரெய்னா இப்போ நடிகையுடன்!

இந்திய கிரிக்கெட் வட்டாரத்திலும் கிசுகிசுக்கப்படுகிறது. பாலிவுட்டின் வளர்ந்து வரும் நடிகைகளில் அனுஷ்கா சர்மாவும் ஒருவர்.

யாஷ் சோப்ராவின், ரப் நே பனாதி ஜோடி என்ற படம் மூலம் அறிமுகமான அவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து இப்போது முன்னணி நடிகையாக உயர்ந்து வருகிறார்.

இந்நிலையில் இவர், இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான சுரேஷ் ரெய்னாவுடன் காதல் வலையில் சிக்கியுள்ளார். கடந்த சில மாதங்களாக இவருவரும் ஒன்றாக சுற்றி திரிவதாக கூறப்படுகிறது.

மேலும் கடந்த ஆண்டு இந்திய அணி ஆஸ்‌திரேலிய சுற்று பயணம் சென்ற போது, அனுஷ்கா தன்னுடைய சூட்டிங்கை ரத்து செய்துவிட்டு ரெய்னாவுடன் ஊர் சுற்றியதாகவும் கூறப்படுகிறது. இதனால் இவர்கள் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

Tuesday, March 20, 2012

கூடங்குளம்! கலை கூத்தாடியின் கபட நாடகம் வெட்ட வெளிச்சம்?

நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலையம் குறித்த தமிழக அரசின் (கூத்தாடி ஜெயா) நிலைப்பாடு நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தின் மூலம் வெட்ட வெளிச்சமானது. இதையடுத்து கூடங்குளம் போராட்டக் குழுவினரைக் கைது செய்ய ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து இடிந்தகரை விரைந்த உதயக்குமார், அங்குள்ள லூர்து மாதா சர்ச் வளாகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுடன் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார்.

தொடர்ந்து அங்கேயே தங்கியிருக்கும் அவர் இன்று 2வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரைக் கைது செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர். ஆனால் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உதயக்குமார் அமர்ந்திருப்பதால் மக்கள் தடுப்பை மீறிச் சென்றால் ஏதாவது பிரச்சினையாகி விடுமோ என்று போலீஸார் அஞ்சுகின்றனர். இதனால் மக்களுடன் பேச்சுவார்த்தையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். உதயக்குமாரைக் கைது செய்ய ஒத்துழைப்பு தருமாறு அவர்கள் கோரி வருகின்றனர்.

இதுகுறித்து ஐஜி ராஜேஷ் தாஸ் கூறுகையில், உதயக்குமாரை போலீஸாரிடம் ஒப்படைக்கும்படி மக்களை கேட்டு வருகிறோம். இதற்காக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் ஒத்துழைப்புடன் உதய குமாரைக் கைது செய்வோம். எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படுவார் என்றார்.

இந்நிலையில் தமிழக அரசின் இம்முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்று மாவட்டங்களை சேர்ந்த 15,000 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. மேலும் அவர்கள் கூடங்குளத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் அவர்கள் கடல் வழியாக கூடங்குளம் வர துவங்கியுள்ளனர். இதனால் இப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

சமூகத்துக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய விஷயங்களிலிருந்து விடுதலை!!

இஸ்தான்புல்: ஃபேஸ்புக், ட்வீட்டர் ஆகிய சமூக இணையதளங்களை போன்ற ஒரு புதிய சமூக இணைத்தளம் வருகின்ற ரமலான் மாதம் அறிமுகமாகவுள்ளது.

ஹலால் சம்மந்தமான இந்த இணைய தளத்திற்கு ‘சலாம் வேர்ல்ட் – Salam World’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது முஸ்லிம்களுக்கான ஒரு பாதுகாப்பு வலைத் தளமாகவும், பிரபல சமூக வலைத் தளமான ஃபேஸ்புக்கிற்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் இஸ்லாத்தில் அனுமதிக்கப் படாதவை இந்த வலைத் தளத்தில் அனுமதிக்கப்பட மாட்டது. உதாரணமாக குற்ற நடவடிக்கைகள், ஏமாற்றுதல், சூதாட்டம் மற்றும் போதை விளம்பரங்கள் போன்ற இஸ்லாத்திற்கு எதிரான அனைத்தும் இதில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.

இது போன்ற வலைத் தளத்தினை உருவாக்குவதன் நோக்கமே தீங்கு விளைவிக்க கூடிய விசயங்களில் இருந்து விடுதலை பெறவும், கலாச்சாரம் மற்றும் குடும்ப பின்னணியின் மதிப்பை அங்கீகரிக்கவும், முஸ்லிகளின் தேவையை உணர்ந்தே இந்த ‘Salam World’ சமூக இணையத தளம் ஆரம்பிக்கப்படுகிறது.

மேலும் ஹுர்ரியத் தினசரி ஊடங்கத்திற்க்கு பேட்டி அளித்த வலைத் தளத்தின் உரிமையாளர் அப்துல் வாஹீத் நிஜாயோவ், முஸ்லிம்களுக்கு இணையத்தளத்தில் அத்துணை பிரதிநிதித்துவம் இல்லாமல் இருக்கிறது, நாம் இந்த சூழ்நிலையை மாற்ற வேண்டும், மேலும் இணையத்தள மஸ்ஜித்தை கட்டவில்லை, மாறாக ஹலாலான ஒரு சூழ்நிலை மாற்றத்தை முஸ்லிம்களுக்கு இடையில் ஏற்ப்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

இன்னும் மூன்று வருடங்களில் குறைந்தது 50–மில்லியன் பயனாளர்களை இந்த இஸ்லாமிய இணையதளம் கைப்பற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.

தேசம் பற்றி பேசும் தேச துரோகிகள்??

கொச்சி:’ஆரோக்கிய உரிமை’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த மனித உரிமை ஆர்வலர் டாக்டர்.பினாயக்சென்னை தீவிரவாத சங்க்பரிவார மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பியின் உறுப்பினர்கள் தடுக்க முயன்றது சட்டக்கல்லூரியில் சலசலப்பை உருவாக்கியது. போலீஸார் வந்து நிலைமையை அமைதிப்படுத்தினர்.

‘பினாயக் சென் வெளியேறு!’ என்று கோஷமிட்டு வந்தே மாதரம் என கூச்சலிட்ட ஏ.பி.வி.பியினர் நிகழ்ச்சி நடக்கும் ஹாலில் ஜன்னல் வழியாக காகிதங்களை சுருட்டி வீசினர். மாவோயிஸ்ட் என்றும் தேசத்தை காட்டிக் கொடுத்தவர் என்றும் தேசப்பக்தியில்(?) ஊறிப்போன ஏ.பி.வி.பியினர் பினாயக் சென்னை தடுக்க முயன்றனர். கருத்தரங்கை சீர்குலைக்க முயன்ற ஏ.பி.வி.பியினரை போலீஸார் வெளியேற்றினர்.

தேசத்தை காட்டி கொடுத்ததும், தேசத்தந்தை காந்திஜியை சுட்டு கொன்றதும் இந்த ஆர் எஸ் எஸ் தீவிரவாத அமைப்பு அதன் கிளைதான் சங்கபரிவாரம்தான் என்பது நாடறிந்த உண்மை.

தேச தந்தையை கொன்ற கும்பலுக்கு தேசப்பற்றை பற்றி பேச (ஹிந்துத்துவா தீவிரவாதிகளுக்கு) என்ன தகுதி உள்ளது.

Monday, March 19, 2012

சிம்பு தனுசை தொடர்ந்து விஜய்க்கும் ஆசை

சிம்புவின் ‌லவ் ஆந்த்தம், தனுஷின் சச்சின் ஆந்த்தம் ஆகியோரைத் தொடர்ந்து இப்போது விஜய்க்கும் ஒரு ஆந்த்தம் உருவாகி இருக்கிறது. விஜய் ஆந்த்தம் என்ற பெயரில் உருவாகி இருக்கும் இந்த ஆல்பத்தை எங்கேயும் எப்போதும் படத்தில் பஸ்சில் இளம் பெண்ணை காதலிக்கும் கேரக்டரில் நடித்த வாட்சன் உருவாக்கி இருக்கிறார்.

விஜய்க்கு ஆந்த்தம் உருவாக்கியது ஏன்...? என்பது குறித்து வாட்சன் கூறுகையில், விஜய் தான் என்னுடைய பேவரேட் ஆக்டர். அவருடைய நடிப்பு, ஸ்டைல், நடனம் எல்லாமே எனக்கு பிடிக்கும். அவருக்காக ஒரு ஆல்பம் உருவாக்க வேண்டும் என்பது என்னுடைய ரொம்பநாள் ஆசை. அதன்படி இந்த ஆல்பத்தை உருவாக்கினேன்.

தற்போது யூ-டியூப்பில் இந்த ஆல்பம் வெளியாகி இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த ஆல்பத்தை பார்த்து ரசித்து இருக்கிறார்கள். மேலும் இந்த ஆல்பத்தை பார்த்து விஜய் சாரும் என்னையும் எனது குழுவையும் அழைத்து பாராட்டினார். அவர் அழைத்து பாராட்டியது ரொம்பவே மகிழ்ச்சி அளிப்பதாக கூறியிருக்கும் வாட்சன், இப்போது ஒரு பாட்டு தான் வெளியிட்டு இருக்கிறோம். இனி தொடர்ந்து இரண்டு-மூன்று பாடல்களை வெளியிட உள்ளோம் என்று கூறியுள்ளார்.

Sunday, March 18, 2012

உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யும் மதவாத அமைப்பு!?

ஜெனீவா, மார்ச். 19: இலங்கை போர்க்குற்றம் இழைத்ததாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் தாக்கல் செய்துள்ளது. இந்த தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது.

ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், நார்வே, பெல்ஜியம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. சீனா, ரஷியா உள்ளிட்ட நட்பு நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக உள்ளன.

ஆனால் இந்த விவகாரத்தில் இந்தியா தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறது. இன்னும் தனது முடிவை அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீது வருகிற 22-ந்தேதி (இந்திய நேரப்படி 23-ந்தேதி அதிகாலை) ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் ஓட்டெடுப்பு நடத்தப்பட உள்ளது.

தற்போதைய நிலவரப்படி இலங்கைக்கு 25 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவுக்கு 22 நாடுகள் மட்டுமே ஆதரவு உள்ளது.

எனவே இலங்கை மீதான போர்க்குற்றம் தீர்மானம் வெற்றி பெறுமா? என கேள்விக்குறி எழுந்துள்ளது. சமீபத்தில் சேனல்-4 தொலைக்காட்சி இறுதி கட்ட போரின் போது இலங்கை சிங்கள வெறி ராணுவத்தின் அட்டூழியங்களை வீடியோவாக வெளியிட்டது. இது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எனவே அமெரிக்காவுக்கு மேலும் பல நாடுகள் ஆதரவு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தீர்மானத்தை வெற்றிபெற செய்ய அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. அதற்காக 100 சிறப்பு பிரதிநிதிகளை ஜெனீவா அனுப்பியுள்ளது.

அதே நேரத்தில் இலங்கையும் இந்த தீர்மானத்தை தோற்கடித்த பகீரத பிரயோகத்தை மேற்கொண்டுள்ளது. தனது பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அனுப்பி ஆதரவு திரட்டி வருகிறது.

இப்படி இருக்க ஆர் எஸ் எஸ் தீவிர மதவாத கட்சி அதன் தொலமை கட்சிகளும் கொலைகாரனுக்கு ஆதரவாக இந்தியாவை இலங்கைக்கு எதிராக கையெழுத்து இடக்கூடாது என சொல்கிறது, ஏன் என்றால் இவர்கள் இந்தியாவுக்குள் பஞ்சம் பிளக்க வந்த (பார்ப்பன) வந்தேறிகள்.

சூர்யாவுடன் இணையும் தமிழ் மற்றும் ஆசிய சூப்பர் ஸ்டார்கள்!!

ஆஸ்கார் ரவிச்சந்திரன் படைப்பில் இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் புதிய படம் தயாராகிறது., இப்படத்தில் விக்ரமிற்கு பதிலாக நடிகர் சூர்யா நடிக்கவிருக்கிறார் என்று புதிய தகவல் வந்துள்ளன.

மேலும், இந்த படத்தில் விஷேசம் என்னவென்றால்..? ஆசியாவின் முன்னணி ஹாலிவுட் நடிகர் ஜாக்கிஜான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். இதை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கௌரவ தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். மொத்தத்தில் ஆசியா சூப்பர் ஸ்டார் ஜாக்கிஜானும், தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் இணைந்து சூர்யாவின் படத்தில் நடிக்கின்றனர்.

ரஜினி, ஜாக்கிசான், சூர்யா, இயக்குனர் ஷங்கர் ஆகியோர் ஒரே கூட்டணியில் இணைவதால், இப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.

Saturday, March 17, 2012

பயங்கரவாதிகளுடன் தொடர்பு கான்க்ளேவ் 2012 பங்கேற்க மறுப்பு! யாதவ்?

லக்னோ: டெல்லியில் நடக்கவிருக்கும் இந்தியா டுடே கான்க்ளேவ் -2012 நிகழ்ச்சியில் உத்தரபிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் பங்கேற்கமாட்டார். பல்வேறு அதிகாரப்பூர்வ பணிகள் இருப்பதால் தன்னால் பங்கேற்க இயலாது என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

இதுக்குறித்து அவர் கூறியது: ’இந்தியா டுடே’ நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கு நேரமில்லை. அமைச்சரவை கூட்டம் இருக்கிறது. அரசு தொடர்பான முக்கிய தீர்மானங்களை எடுக்கவேண்டும். அந்நிகழ்ச்சியை விட எனக்கு முக்கியமானவை இவையாகும்’ என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி பங்கேற்கும் மாநாட்டில் கலந்துகொள்ள பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் அணி கேப்டனும், தெஹ்ரீக்-இ-இன்ஸாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது. இன்று இந்தியா டுடேயின் 2 நாள் நிகழ்ச்சி துவங்குகிறது.

மனித உரிமை ஆர்வலர் கூறும்போது: சல்மான் ருச்டியை வரவேர்ப்பதன்மூலம் இந்தியா டுடே தனது பார்ப்பன பாசிச அரிப்பை தனித்துக்கொல்கிறது, ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளுடன் ருஷ்டிக்கு தொடர்பு இருப்பதாலும் அனைவரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்காமல் ஒதுங்கிக்கொள்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!