Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, March 4, 2012

விரைவில் சிங்க வேட்டையில் இறங்கும் சூர்யா!!

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, பிரகாஷ் ராஜ் நடித்து வெளிவந்த படமான சிங்கம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட். 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் 67கோடி வரை வசூல் செய்தது.

முதல் பாகத்தில., “சிங்கத்த போட்டோல பாத்துருப்ப, Zooல பாத்துருப்ப, சினிமால பாத்துருப்ப. வெறித்தனமா காட்டுல வேட்டையாடி பாத்துருக்கியா, ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்றா.. பாக்குறியா... பாக்குறியா...”என்ற வசனம் மிகப் பிரபலமானது.

இயக்குனர் ஹரி சிங்கம் படத்தின் முடிவிலேயே அடுத்த பாகத்திற்கான அஸ்திவாரத்தை போட்டிருந்தார். அடுத்த பாகத்தை எடுக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறது ”சிங்கம் 2” படக்குழு. முதல் பாகத்தில் நடித்த கதாபாத்திரங்கள் இரண்டாம் பாகத்திலும் தொடர்வார்களா என்பது பற்றிய தகவல்களை படக்குழு தெரிவிக்கவில்லை.

ஹீரோயினாக அனுஷ்கா நடிப்பாரா? இல்லையா? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால் 3 டன் வைட்டுடன் சிங்கம்-2 கூடிய விரைவில் கர்ஜிக்கும் என்பது மட்டுமே அறிந்த தகவல்.

Saturday, March 3, 2012

விண்ணில் பறக்கும் வித்தியாச கார் விரைவில் யு எஸ் சில்!!

அமெரிக்காவில் மசாசு செட் மாகாணத்தில் உள்ள டெர்ராபுஜியா என்ற நிறுவனம் பறக்கும் கார் தயாரித்துள்ளது. இந்த காரில் விமானத்தில் உள்ளது போன்று இறக்கைகள் உள்ளன. அவை விண்ணில் பறக்கும் போது 30 வினாடிகளில் பறவை போன்று தனது சிறகை (இறக்கையை) விரிக்கும்.

தரை இறங்கி கார் ஆக மாறியவுடன் அவை மடிந்து விடும். பெட்ரோல் மூலம் விண்ணில் பறக்கும் இந்த கார் மணிக்கு 110 மைல் வேகத்தில் 460 மைல் தூரம் பறக்க கூடிய திறன் படைத்தது.

இந்த காரின் விலை ரூ.1 கோடியே 40 லட்சம். அடுத்த மாதம் (ஏப்ரல்) 6 முதல் 15-ந் தேதி வரை நியூயார்க்கில் சர்வதேச ஆட்டோ கண்காட்சி நடக்கிறது.

அதில் கார் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. இப்போதே இந்த காருக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பலர் ஆர்டர் கொடுத்துள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் 100 பறக்கும் கார்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுவதாக டெர்ராபுஜியா கம்பெனியின் அதிகாரி அன்னா ரேக் டயட்ரிச் தெரிவித்துள்ளார்.

பார்ட்டிகளுக்கே பார்ட்டிவைத்த பெருமை விஜய்க்கு!!

சினிமா நட்சத்திரங்களுக்கான கிரிக்கெட் போட்டி கடந்த ஜனவரி 13-ஆம் தேதி துவங்கி பிப்ரவரி 12-ஆம் தேதி வரை நடைபெற்றது.சினிமா நட்சத்திரங்கள் தங்களது மொழி வாரியாக பிரிக்கப்பட்டு அவரவர் அணிக்காக விளையாடினர்.

இந்த தொடரில் விஷால் தலைமையில் களம் இறங்கிய தமிழ் நடிகர்களின் சென்னை ரைனோஸ் அணி சிறப்பாக விளையாடி கோப்பையை கைபற்றியது. சென்னையில் தெலுகு வாரியர்ஸ் அணியை எதிர்த்து சென்னை ரைனோஸ் விளையாடிய செமி பைனல் மேட்சை நடிகர் விஜய் கலந்து கொண்டு உற்சாகத்துடன் பார்த்து ரசித்தார்.

சென்னை அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நடிகர் விஜய் சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் சென்னை ரைனோஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஆட்டநாயகர்களுக்கு பார்ட்டி வைத்துள்ளார்.

இந்த பார்ட்டியில் சில நடிகைகளும் கலந்து கொண்டுள்ளார்கள்.,இதனால் பார்ட்டிகளுக்கே பார்ட்டிவைத்த பெருமை விஜய்க்கு.

Friday, March 2, 2012

இத்தனை கோடிகளா சூப்பிரண்ட் ஜெய்லரிடம்!?

போபால்: மத்தியபிரதேச மாநில ஜெயில் சூப்பிரண்ட் ஒருவரின் வீட்டில் லோக் ஆயுக்தா போலீஸார் நடத்திய சோதனையில் ரூ.5 கோடி மதிப்பிலான சொத்துக்களுக்குரிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் மத்திய சிறையில் கண்காணிப்பாளராக பணிபுரிபவர் புருஷோத்தம் சோம்குன்வர். இவர் தனது வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துகளைக் குவித்துள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில், இவரது வீடுகளில் லோக் ஆயுக்தா போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.

சோம்குன்வரின் இந்தூர் மற்றும் போபாலில் உள்ள வீடுகளில் 40-க்கும் மேற்பட்ட போலீஸார் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் ரொக்கப் பணம் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

ஐந்து பங்களாக்கள், மருத்துவமனை, நான்கு கடைகள், ஐந்து இடங்களில் நிலங்கள் ஆகியன இவருக்கு உள்ளதாக போலீஸ் அறிவித்துள்ளது.

பார்வா, பலாஸி, கம்கேரா ஆகிய இடங்களில் 14 ஏக்கர் நிலம், இந்தூரில் 35 லட்சம் மதிப்பிலான வீடு ஆகியவையும் இவற்றில் அடங்கும். 7.64 லட்சம் ரூபாய் ரொக்கம் வீட்டிலும், வங்கியில் 70 லட்சம் ரூபாயும், 8.48 லட்சம் ரூபாய் மதிப்பிலான எல்.ஐ.சி பாலிசியும் போலீஸார் கண்டுபிடித்தனர்.

குழந்தைகளையும் பாதிக்கும் பு(ப)கை பழக்கம்!

நியூயார்க்: குழந்தைகளுக்கு கூட ரத்த புற்று நோய் ஏற்படுகிறது. இது குறித்து அமெரிக்காவில் உள்ள குழந்தைகள் நல மையம் ஆய்வு மேற்கொண்டது.

அதில் குழந்தை கருவில் இருக்கும்போது பெற்றோர் அதாவது தாயோ, தந்தையோ அதிக அளவில் சிகரெட் பிடிப்பதால் ரத்து புற்று நோய் ஏற்படக்கூடிய சாத்திய கூறு உருவாகிறது.

பொதுவாக பெண்களை விட ஆண்கள்தான் சிகரெட் புகைக்கின்றனர். மனைவிக்கு குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு ஆண் நாள் ஒன்றுக்கு 15 சிகரெட்டுக்கு மேல் பிடித்தால் ரத்த புற்று நோய் தாக்கக்கூடிய ஆபத்து ஏற்படும் என்றும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

பீடி, சிகரெட் வாங்க குழந்தைகளை கடைகளுக்கு அனுப்புவதால் அவர்களுக்கும் சிறுவயதிலேயே புகை பிடிக்கும் பழக்கத்தை கற்றுக்கொள்கிறார்கள்.

Thursday, March 1, 2012

மாறிக்கொண்டு போகும் மவுசு! மாறாத ரவுசு!!

தமிழ் பட உலகில் நகைச்சுவை நடிகரின் மவுசு மட்டும் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்.,ஆனால் ரவுசு மட்டும் மாற்றாமல் ஆளாளுக்கு வித்தியாசப்படுகிறது.

`பெல்' போய் `புயல்' வந்தது. புயல் போய் ...சின்ன வாணர் வந்தார். இவருக்குப் பின்னால், ..தானம் வந்தார். இப்போது தானம் போய், ..த்யன் வந்து இருக்கிறார்! ..தானத்தை விட, ..த்யன் கைவசம் அதிக படங்கள் ஒப்பந்தம் ஆவதாக கேள்வி!

இதில் ஏதாவது புர்ந்ததா ஒன்னும் புரிலையா? பெல் (கவுண்டமணி, புயல் வைகை புயல் (வடிவேல்) சின்ன கலைவாணர் விவேக், தானம் சந்தானம், த்யன் சத்யன். புருஞ்சுதா.

காந்தியை கொன்ற கொலைகார கூட்டத்தை சேர்ந்த முதல்வர்!?

புதுடெல்லி: நரமோடியால் முன்னின்று நடத்தப்பட்ட குஜராத் கலவரம் நடைபெற்று தற்போது ஆண்டுகள் முடிவுற்ற நிலையில் அதனுடைய நினைவுதினம் இறைவணக்கங்கள், மெழுகுவத்தி ஏற்றுதல், கருத்தரங்கங்கள் மற்றும் மாநாடுகள் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நினைவுபடுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் டெல்லியைச் சேர்ந்த பேஷன் டிசைனரான அசீமூர் ரஹ்மான் தனக்கென தனி பாணியில் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

அசீமூர் ரஹ்மான் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா உட்பட பல அரசியல் தலைவர்களுக்கு ஆடைகளை வடிவமைத்துள்ளார். இவர் கடந்த திங்கள் குஜராத் கலவரத்திற்கு தனது எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக நரமோடிக்கு ரத்தம் பதிந்த காதி குர்தா ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

காதி காந்தியடிகளின் கொள்கைகளை எடுத்துக் கூறவும் மற்றும் ரத்தத்தை அவரின் தலைமையில் கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த படுகொலைகளை ஞாபகப்படுத்தவும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் கலவரம் நடந்து 10 வருடம் கழிந்தும் மோடியால் அந்த கரையை இன்னும் துடைக்க முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் ரஹ்மான் தான் செய்த ஆடை வடிவமைப்பை குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த வேலைபாடுகளை கோத்ரா ரயில் எரிப்பிற்குப்பின் பின் குஜராத்தில் நடந்த கலவரத்தின் நினைவுச் சின்னமாக கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தாம் குஜராத்தில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு மிகவும் வருந்துவதாகவும் எனவே தனது சொந்த ரத்தத்தை குர்தாவில் தெளித்து மோடிக்கு அனுப்பியுள்ளதாகவும் இது மோடி தனது பொறுப்பை உணர்வதற்கே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கலவரம் நடந்து 10 வருடங்கள் ஆகியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றும் இன்னும் பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக ஓடிக்கொண்டு இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Wednesday, February 29, 2012

வதந்திகளை ஒதுக்கிவிட்டு துப்பாக்கியில் சுறுசுறுப்பாகி விட்ட விஜய்!

துப்பாக்கி படத்தை பற்றி தினம் ஒரு செய்தி வெளிவந்து கொண்டு இருக்கிறது. இருந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு சுறுசுறுப்பாக பாடலில் இறங்கிவிட்டார் விஜய்.

துப்பாக்கியில் விஜய் ஹீரோவாக நடித்து இருப்பதுடன், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அசத்தலான பார்ட்டி சாங் ஒன்றும் பாடியிருக்கிறார்.

இதுகுறித்து ஹாரிஸ் தனது ப்ளாக்கில் கூறியிருப்பதாவது, சும்மா ஒரு முயற்சியாகத்தான் விஜய்யை பாட வைத்தோம். ஆனால் அதுவே ரொம்ப நன்றாக வந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். மேலும் ரெக்காரீடிங் தியேட்டரில் விஜய் பாடிய போட்‌டோவையும் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே விஜய் பல படங்களிலும், ரசிகர்களின் விருப்பத்திற்காக பல மேடைகளிலும் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சிம்ம சொப்பனமாக உலவிய ஹாக்கர்ஸ் சிக்கினார்கள்! இண்டர்போல்

பாரிஸ்: உலக நாடுகளுக்கு தலைவலியை ஏற்படுத்திய ஹாக்கர்களின் குழு சிக்கியுள்ளது. தென் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் நடந்த தீவிர பரிசோதனையில் ஹாக்கர்கள் என சந்தேகிக்கப்படும் இருபத்தைந்து நபர்கள் இண்டர்போல் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனானிமஸ் ஹாக்கர் மூவ்மெண்ட் என்ற அமைப்பைச் சார்ந்தவர்கள் கைதாகியுள்ளதாக கருதப்படுகிறது.

அர்ஜெண்டினா, சிலி, கொலம்பியா, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் உள்துறை அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் பரிசோதனை நடந்ததாக இண்டர்போல் அறிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களின் வயது 17-40 ஆகும்.

கொலம்பியாவின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் அதிபரின் இணையதளங்களை சீர்குலைக்க இவர்கள் திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. பிப்ரவரி மாதம் ஹாக்கர்கள் குறித்து இண்டர்போல் விசாரணையை தீவிரப்படுத்தியிருந்தது.

ஒழுக்கக்கேடான விசயத்தில் உள்துறை அமைச்சகத்தின் நிலைப்பாடு?

புதுடெல்லி: இந்தியாவில் ஓரினச் சேர்க்கையை அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சகம் அவசர கதியில் அறிக்கையொன்றை வெளியிட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.

ஓரினச் சேர்க்கை தவறல்ல எனறு கடந்த 2009-ம் ஆண்டில் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாகவும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாயா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ஓரினச்சேர்க்கை முற்றிலும் ஒழுக்ககேடான செயல். இது இந்திய கலாச்சாரம், பாரம்பரியம், சமூக ஒழுக்கம் மற்றும் வாழ்க்கை நடைமுறைக்கு எதிரானது. மேலும் இது இயற்கைக்கும் முரணானதாகும்.

மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் கலாச்சாரம் உலகளவில் பேசப்படும் உயர்வான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்திய கலாச்சாரம் மற்ற கலாச்சாரங்களை விட மாறுபட்டது. எனவே, ஓரினச் சேர்க்கையை இந்தியாவில் அனுமதிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. இதனை அடிசனல் சோலிசிட்டர் ஜெனரல் பி.பி.மல்ஹோத்ரா நீதிமன்றத்தில் அளித்தார். ஆனால் இதுக்குறித்த செய்திகள் வெளியான உடனே மத்திய உள்துறை அமைச்சகம் உடனடியாக மறுப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இவ்விவகாரம் கேபினடின் பரிசீலனையில் இருப்பதாகவும், உயர்நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து அப்பீல் அளிக்க முடிவாகவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, February 28, 2012

அமலுக்கு வருகிறது பிரிட்டன் விசா புதிய விதிமுறைகள்!

லண்டன், பிப். 29: பிரிட்டனின் குடியேற்ற விதிமுறைகளில் புதிய திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இதன்படி அந்நாட்டில் நிரந்தரமாக வாழும் உரிமை பெற்றிருக்கும் இந்தியர்கள், பயோமெட்ரிக் குடியிருப்பு உரிமம் எனப்படும் புதிய அட்டையைப் பெற விண்ணப்பிக்க வேண்டும்.,சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுப்பதற்காக இந்த விதிமுறை கொண்டு வரப்பட்டிருப்பதாக் கூறப்படுகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பாக பிரிட்டனில் குடியேறிய இந்தியர்களில் பெரும்பாலானவர்கள், அந்நாட்டு குடியுரிமையைப் பெறுவதற்குப் பதிலாக நிரந்தரமாக வாழும் உரிமையை மட்டும் பெற்றுக் கொண்டனர். அத்துடன் இந்தியக் குடியுரிமையையும் வைத்திருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் புதிய விதிமுறைகள் பொருந்தும்.

பயோமெட்ரிக் குடியிருப்பு உரிமம் என்பது ஒரு மின்னணு அடையாள அட்டையைப் போன்றதாகும். சம்பந்தப்பட்டவரின் பெயர், பிறந்தநாள், பிறந்த இடம் உள்ளிட்ட சுயவிவரங்களுடன், கைரேகை, முகப் பதிவு ஆகியவை அதில் அடங்கியிருக்கும்.

குடியேற்ற நிலை, பிரிட்டனில் அவர் பெற்றிருக்கும் உரிமைகள் போன்றவை பற்றி விவரங்களையும் இந்தஅட்டையின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்தியர்கள் மட்டுமல்லாமல், பல ஆண்டுகளுக்கு முன் பிரிட்டனில் குடியேறிய பெரும்பாலான பிற நாட்டவர்களும் புதிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டியிருக்கும்.

அனுமதியில்லாமல் பிரிட்டனில் பணிபுரிந்து வரும் பிற நாட்டவர்களை குடியேற்றத்துறை அதிகாரிகள் கைது செய்யும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. புதிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்தப்பட்டால், இதுபோன்ற சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை உடனடியாக கண்டுபிடிக்க முடியும் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யாம்பா வடிவேலு சங்கரன் கோயில் செல்லவில்லையா?

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரசாரத்தில் நடிகர் வடிவேலு பங்கேற்பாரா, மாட்டாரா? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்திலும், திரையுலக வட்டாரத்திலும் எழுந்துள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள வடிவேலு.

என் தாய் சரோஜினி உடல் நலக்குறைவு காரணமாக மதுரை ஐராவத நல்லூரில் மருத்துவமனையில் உள்ளார். அதனால் என்னால் சங்கரன்கோவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடமுடியவில்லை, என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் தனது பேட்டியில், வடிவேலுவுக்கு அரசியல் எல்லாம் தேவையா என்று சிலர் கேட்கிறார்கள். ஓட்டுப்போடும் அத்தனை பேரும் அரசியல்வாதிகள்தான். ஓட்டுப்போடும் மக்களில் நானும் ஒருவன் என்பதால் நானும் அரசியல்வாதிதான். தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று என்னை கேட்கிறார்கள். காலமும், சூழ்நிலையும் நிர்ப்பந்நதிக்கும்போது மக்களை சந்திப்பேன்.

நான் யாருக்கும் பயந்து ஓடி ஒளிந்து கொள்ளமாட்டேன். தீவிர அரசியலில் குதிப்பேன். அரசியலுக்கு நான் வரக்கூடாது என்று சொல்வது அபத்தம். நிச்சயமாக அரசியலுக்கு வந்தே தீருவேன். என்னை யாரும் தடுக்க முடியாது. திரையுலகம் என்னை ஒதுக்கி ஓரங்கட்டிவிட்டதாக சொல்கிறார்கள். விரைவில் நான் கதாநாயகனாக நடிக்கும் புதுப்பட அறிவிப்பு வெளிவரும் என்று கூறியிருக்கிறார், வடிவேலு.

Monday, February 27, 2012

சோடை போகும் கிரிக்கெட்! வாகை சூடப்போகும் ஹாக்கி!!

புதுடெல்லி: 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்கு இந்திய ஆண்கள் ஹாக்கி அணி தகுதி பெற்றுள்ளது.

இன்று புதுடெல்லியில் நடைபெற்ற தகுதிச்சுற்று இறுதி போட்டியில் பிரான்ஸ் அணியை 8-1 என தோற்கடித்ததன் மூலம் 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒலிம்பிக்கில் காலடி எடுத்து வைத்துள்ளது இந்திய அணி.

கடந்த 2008ம் ஆண்டு சீனாவில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியா தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது., இன்றைய போட்டியில் சந்தீப் சிங் 5 கோல்கள் அடித்தார். இதன் மூலம் இத்தொடரில் அவர் அடித்த மொத்த கோல்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

8 முறை ஒலிம்பிக் சாம்பியனாக முடிசூடியுள்ள இந்திய ஹாக்கி அணி, இடையே திடீர் வீழ்ச்சிக்கு பிறகு மீண்டும் இப்போட்டிகளுக்கு தகுதி பெற்றிருப்பது இந்திய ரசிகர்களிடையே உற்சாகத்தை அதிகரித்துள்ளது. எனினும் நேற்று மகளிருக்கான தகுதி சுற்று இறுதி போட்டியில் இந்திய அணி தெ.ஆபிரிக்கவிடம் தோற்றதன் மூலம் ஒலிம்பிக்கில் நுழையும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.

ஈழம் திரும்புபவர்களுக்கு மேலும் கொடுமை! சர்வததேச மனித உரிமை!!

கொழும்பு, பிப் 27: இலங்கையில் ராணுவ தாக்குதலுக்கு பயந்து வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்றவர்கள் உலகில் பல்வேறு நாடுகளிலும் தஞ்சம் அடைந்து உள்ளனர். தற்போது இலங்கையில் போர் முடிந்து விட்டதால் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்து குடியுரிமை பெறாதவர்களை அந்த நாடுகள் இலங்கைக்கு திருப்பு அனுப்பி வருகின்றனர்.

அப்படி இலங்கைக்கு திரும்பி வருபவர்கள் விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்யப்படுவதாகவும், பெண்கள் கற்பழிக்கப்படுவதாகவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் புகார் கூறியுள்ளது. ஆடைகளை அகற்றியும், சிகரெட்டால் சுட்டும் சித்ரவதை செய்வதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் கூறியுள்ளனர்.

இதேபோல தமிழ் பெண்கள் பலர் கற்பழிக்கப்பட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக மனித உரிமை அமைப்பு கூறியிருக்கிறது. எனவே வெளிநாடுகள் தமிழர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்து உள்ளது.

இங்கிலாந்தில் இருந்து ஒரு குழுவை விரைவில் திருப்பி அனுப்புவதாக இருந்தது. அவர்களையும் திருப்பி அனுப்ப வேண்டாம் என்று மனித உரிமை அமைப்பு கேட்டு கொண்டுள்ளது.

Sunday, February 26, 2012

விஜய்யின் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் !!

துப்பாக்கி படத்தின் ஷூட்டிங் ஃபெப்சி தொழிளாலர்களின் சம்பளப் பிரச்சினைக்காக சில நாட்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது., அதோடு (இந்த சீனை அந்த நடிகர் நடிப்பது போல் நடியுங்கள்.. இந்த நடிகர் பெர்மார்மன்ஸ்சை கொஞ்சம் இமிடேட் பண்ணுங்க என்றெல்லாம் சொல்லி கடுப்பு ஏத்தியதால் விஜய் காட்டத்தில் இருந்தார் என்பது நமக்கு தெரிந்ததே)

போலிஸ் பின்னணியில் முருகதாஸ் இயக்கும் முதல் படம் இது தான். துப்பாக்கியில் விஜய் காவல் துறையின் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக நடிக்கிறாராம். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு.

ஹாரிஸ் ஜெயராஜ் காக்க காக்க, சாமி போன்ற படங்களில் போலிஸுக்கான பின்னணி இசையில் பிரமாதப்படுத்தியிருந்தார். அதை விட அதிகமாக இந்த படத்திற்கு உழைத்திருக்கிறாராம்.

என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் விஜய்யின் துப்பாக்கி சமாதனத்திற்கு பிறகு மீண்டும் துவக்கப்பட்டதாக கோலிவுட்டில் செய்திகள் வெளியாகி உள்ளது.

Saturday, February 25, 2012

கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற அரபு அமீரக துரித தொடர் வண்டி!

துபையில் செயல்பட்டு வரும் மெட்ரோ துரித தொடர் வண்டிச்சேவை கின்னஸ் உலக சாதனையில் இடம் பெறுகிறது.

துபையில் மெட்ரோ துரித தொடர்வண்டி சேவை நடைபெற்று வருகிறது. "ஓட்டுனர் இல்லாமல் இயங்கும்" இந்த மெட்ரோ சேவை 75 கிலோ மீட்டர் களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. சிகப்பு மற்றும் பச்சை வழி என இரண்டு வழிகளில் இந்த சேவை இயங்கி வருகிறது.

சிகப்பு வழி 52 கிலோ மீட்டர்களுக்கும் பச்சை வழி 22.69 கிலோமீட்டர்களுக்கும் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு செயல்படும் இந்த மெட்ரோ சே வை உலகத்தின் நீளமான ஆளில்லாத மெட்ரோ என்ற சிறப்பினைப் பெற்றுள்ளது.

இதற்காக கின்னஸ் உலக சாதனையில் இது இடம் பெறுகிறது. கின்னஸ் சான்றிதழை கின்னஸ் மத்திய கிழக்கின் பிராந்திய இயக்குனர் தலால் உமர், துபை சாலை மற்றும் போக்குவரத்து அதிகாரத்தின் தலைவர் மட்டார் அல் தாயிரிடம் வழங்கினார்.

இந்த பெருமையினை அமீரகத்தின் பிரதமரும் துபை அதிபருமான ஷேக் முஹம்மதுக்கு சமர்ப்பிப்பதாக மட்டார் அல் தாயிர் தெரிவித்துள்ளார்.

நடிகையை காப்பாற்றிய தமிழக காவல்துறையின் துணிகர செயல்!

கோவையில் ஆயிரக்கணக்கான ரசிகர்களிடம் சிக்கிக் கொண்டார் நடிகை ஹன்சிகா. அவரை தொட்டுப்பார்க்க ரசிகர்கள் பலர் முண்டியடித்ததால் கைகளிலும், இடுப்பிலும் லேசான சிராய்ப்பு ஏற்பட்டு அவதிக்குள்ளானார்.

கோவை நகருக்கு வந்திருந்த ஹன்சிகாவை பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூடிவிட்டனர். அவரை மிக அருகில் பார்க்கவும், தொட்டுப் பார்க்கவும் முண்டியடித்தனர். இதனால் திணறிப் போனார் ஹன்ஸிகா. பலர் அவரைக் கிள்ளினர். வேகமாக அவரைப் பிடித்து இழுத்ததால் அவர் உடலில் பல இடங்களில் சிராய்ப்பு ஏற்பட்டது.

இதனால் அலறித் துடித்த ஹன்ஸிகாவை பக்கத்திலிருந்த போலீசார் வந்து மீட்டனர். இதுகுறித்து ஹன்ஸிகா கூறுகையில், ரசிகர்கள் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொண்டனர். நல்ல வேளை போலீசார் வந்து மீட்டனர். நிச்சயம் இனி செக்யூரிட்டியை பலப்படுத்தினால்தான் வெளியில் செல்ல முடியும் என்றார். ஏற்கெனவே சென்னையில் இதே போன்ற அனுபவத்துக்குள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

(என்கவுண்டர் மூலம் புகழ்பெற்ற தமிழக காவல்துறை மேலும் புகழ் தேடிக்கொண்டது, தமிழகத்தை குஜராத்தாக மாற்றப்போவதாக ஜெயலலிதா கங்கணம் கட்டிக்கொண்டு உள்ளார் அதற்கு முதற்படிதான் இந்த என்கவுண்டர்.)

Friday, February 24, 2012

காவி கயவர்களின் கண்டிக்கத்தக்க செயல்!!

பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா மற்றும் அவரது உறவினரும், பட்டிமன்ற பேச்சாளருமான ராஜாவிற்கு எதிராக இந்துமுனன்ணியினர் கருப்புக்கொடி கட்டியுள்ள சம்பவம் நெல்லையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி டவுன் பகுதியில் அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் ஒருபகுதியாக, பட்டிமன்றத்திற்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இதற்காக சாலமன் பாப்பையா மற்றும் ராஜா நெல்லைக்கு வருகை தர உள்ளனர்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில், மற்றொரு மத வழிபாட்டு தலத்தில் கலந்துகொண்ட இவர்கள் இந்து கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு வருகை தரக் கூடாது என்பதை வலியுறுத்தி பாப்பையா மற்றும் ராஜா தங்க உள்ள ஹோட்டலைச் சுற்றிலும் இந்துமுன்னணி அமைப்பு சார்பில் கருப்புக்கொடிகள் கட்டப்பட்டுள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதியில் இச்சம்பவம் பற்றி மனித ஆர்வலர் ஒருவர்., காவி கயவர்களின் கண்டிக்கத்தக்க செயல் என்று அவர் சொன்னார்.

பணிப்பெண்ணிடம் பாலியல் வன்புணர்வு! நீதிபதிக்கு வலைவீச்சு!?

ஹைதராபாத்: வேலியே பயிரை மேய்ந்த கதைகளுக்கு இந்தியாவில் பஞ்சம் ஏது? காவல் நிலையங்களில் கொலைகளும், பாலியல் வன்புணர்வுகளும் நடந்த செய்திகள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் வீட்டு பணிப் பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு முயன்ற சிவில் நீதிமன்ற நீதிபதியை போலீஸ் தேடி வருகிறதாம்.

ஆந்திர மாநிலம் மெகபூப் நகர் மாவட்டம் கிங்கின் ஜமெட்ல தன்டா பகுதியைச் சேர்ந்தவர் குரவத் பாலசந்தர். அவர் சட்டபள்ளி நகரில் உள்ள நீதிமன்றத்தில் சிவில் நீதிபதியாக உள்ளார்.

அவரது வீட்டில் வேலை பார்க்கும் பெண் 24 வயதாகும் கலா (பெயர் மாற்றம்). அவர் பார்க்க அழகாக இருப்பதால் அவர் மீது நீதிபதிக்கு மோகம் ஏற்பட்டது. அவரை எப்படியும் அடைந்தே தீர வேண்டும் என்று நீதிபதி நினைத்தார். ஆனால் வீட்டில் அனைவரும் இருப்பதால் தனது திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் இருந்தது.

இந்நிலையில் நீதிபதியின் குடும்பத்தார் அவரை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு வெளியூர் சென்றனர். இது தான் சமயம் என்று நீதிபதி வேலைக்காரப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார். இதை சற்றும் எதிர்பாராத அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். நீதிபதியிடம் இருந்து தப்பித்து வீட்டை விட்டு வெளியே ஓடிவிட்டார். உடனே இது குறித்து கம்மம் டி.எஸ்.பி. ரங்கன் கௌடிடம் புகார் கொடுத்தார்.

இதையடுத்து போலீசார் 354வது பிரிவின் கீழ் நீதிபதி பாலச்சந்தர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே பாலசந்தர் நேற்று மதியம் முதல் ஒரு வாரம் விடுமுறை எடுத்துக் கொண்டு வெளியூர் சென்றுவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Thursday, February 23, 2012

சோனியா அகர்வாலின் அடித்த ஸ்டப்

திருமண வாழ்க்கைக்குப் பிறகு சினிமாவுக்கு நடிகைகள் திரும்புவது ஒன்றும் புதிதல்ல என்றாலும், கதாநாயகியாகவே திரும்பியிருக்கும் சோனியா அகர்வால் வானம் படத்தில் நடித்தார்.

தற்போது மேலும் 3 படங்கள் திரைக்கு வரத் தயாராகி வருகின்றன. இதற்காக அவருக்கு நிச்சயம் பாராட்டுக்களைக் கூறத்தான் வேண்டும்.

ஒரு பாராட்டு மட்டும் போதாது போலவே.. ஆம் இன்னும் ஒரு பாராட்டையும் தயாரித்துக் கொள்ளுங்கள். எதற்கு என்றால், வெறும் சினிமாவில் நடிப்பதோடு நின்றுவிடாமல், தற்போது இசைப் பள்ளி ஒன்றையும் துவக்க உள்ளார் சோனியா அகர்வால்.

சென்னையில் வரும் 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று ஹாரிஸ் ஜெயராஜ் இசைப் பள்ளியை துவக்கி வைக்கிறார். இந்த இசைப் பள்ளியை அகர்வாலின் சகோதரர் நிர்வகிக்க உள்ளார். இவர் யுவன் சங்கர் ராஜாவிடம் இசைப் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!