Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, February 7, 2012

ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு! இந்தியா இலங்கை!!

மெல்போர்ன்: முத்தரப்பு தொடரில் இன்று இந்திய அணி, இலங்கையை சந்திக்கிறது. உலக கோப்பை பைனலுக்குப் பின் இரு அணிகள் மோதும் போட்டி என்பதால் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது. இன்று மெல்போர்னில் நடக்கும் இரண்டாவது போட்டியில் இந்திய அணி, ஜெயவர்தனா தலைமையிலான இலங்கை அணியை சந்திக்கிறது.

இந்திய அணியை பொறுத்தவரை முதல் போட்டியில் நீக்கப்பட்ட சேவக், இன்று களமிறங்குகிறார். உலக கோப்பை தொடருக்குப் பின் அணிக்கு திரும்பிய சச்சினின், 100வது சதம் அடிக்கும் முயற்சி தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. காம்பிர் பின்தள்ளப்படுவார். "மிடில் ஆர்டரில்' விராத் கோஹ்லி, ரெய்னா இடம் உறுதி. ரோகித் சர்மாவுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கலாம். கேப்டன் தோனி நிலைத்து நின்று ஆட வேண்டும்.

டெஸ்ட் தொடரில் இந்திய அணி சார்பில் அதிக விக்கெட் கைப்பற்றிய ஜாகிர் இன்று அணிக்கு திரும்பலாம். பிரவீண் குமாருடன், கடந்த போட்டியில் அசத்திய வினய் குமார் மீண்டும் ஜொலிக்க முயற்சிக்க வேண்டும். ஆடுகளம் வேகத்துக்கு சாதகமானது என்பதால் சுழற்பந்து வீச்சாளர் இடத்தை ராகுல் சர்மா தட்டிச் செல்வார் என்று தெரிகிறது. இதனால் இன்று அஷ்வின் அல்லது , "ஆல் ரவுண்டர்' ரவீந்திர ஜடேஜாவுக்கு ஓய்வு கிடைக்கலாம்.

கடந்த 2008 தொடரில் பெர்த் டெஸ்டில் இர்பான் பதான் அசத்தி இருந்ததால், இன்று ஒருவேளை களமிறங்கலாம். இது தோனி கையில் தான் உள்ளது.

ஆபாச படம்பார்த்த அமைச்சர்களை படம்பிடித்த டி வி சேனல்கள்!

கர்நாடக சட்டசபை கூட்டத்தில், நேற்று மதியம்,எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, "பா.ஜ., ஆட்சியில், தலித்துகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது' என, ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தார்.

முதல்வர் சதானந்த கவுடா, அமைச்சர்கள், உறுப்பினர்கள் சபையில் இருந்தனர். சித்தராமையா பேச்சை, முதல்வர் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அமைச்சர் கோவிந்த் கார்ஜோல், "காங்கிரஸ் ஆட்சியின் போதும், தலித்துகள் தாக்கப்பட்டனர்,' என்று தெரிவித்தார்.

இந்த விவாதத்தை கவனிக்காமல், கூட்டுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் சவதி, தன் மொபைல் போனை ஆன் செய்து, அதில் ஆபாச படத்தை ஆர்வமாக பார்த்து கொண்டிருந்தார். இதை அருகிலிருந்த பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சி.சி.பாட்டீலும் ரசித்துக் கொண்டிருந்தார். இதை அங்கிருந்த கன்னட "டிவி' சேனல்கள் அனைத்தும் படம் பிடித்து, உடனடியாக ஒளிபரப்பியது. இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.

பல சர்ச்சைகளுக்கு பிறகு மீண்டும் நயன்தாரா!

நடிகை நயன்தாரா பல சர்ச்சைகளுக்கு பிறகு தற்போது மீண்டும் கோடம்பாக்கம் திரும்பிவிட்டார். நடிகர் அஜீத்துடன் ஏற்கனவே பில்லா, ஏகன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்போது மீண்டும் அஜீத்குமாருடன் ஜோடி சேர்கிறார். இந்த படத்தில் நடிகர் ஆர்யாவும் இன்னொரு நாயகனாக நடிக்கிறார்.

ஆர்யாவும் நயன்தாராவும் நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படம் வெற்றிபெற்றது. இதையடுத்து அஜீத்குமார், ஆர்யா, நயன்தாரா மூவரும் இணைந்து நடிக்க உள்ள படத்தை விஷ்ணுவர்த்தன் இயக்குகிறார்.

இயக்குனர் விஷ்ணுவர்த்தன் நயன்தாராவிடம் கதை சொன்னபோது அவருக்கு பிடித்து போக உடனே சம்மதம் தெரிவித்துள்ளார். இப்படத்தில் நடிப்பதற்காக நயன்தாராவுக்கு ரூ.1 1/2 கோடி சம்பளம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

Monday, February 6, 2012

சிம்புவுடன் நடிக்க எச்சரிக்கை செய்யும் கோலிவூட் !!

சிம்புவுடன் நடிக்க ஒப்பந்தமானால் கவனமாக இருக்கவேண்டும் பரவலாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகை தீக்ஷா, சிம்புவுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சிம்புவுடன் நடிக்க ஒப்புக் கொள்வதில் சற்று எச்சரிக்கையாக இருங்கள் என்று அவருக்கு சிலர் அவருக்கு அறிவுறை கூறியுள்ளனர்.

இதுபற்றி தீக்ஷா கூறுகையில், நான் சிம்புவுடைய தீவிர ரசிகை, யார் என்ன சொன்னாலும் நான் கேட்க மாட்டேன். சிம்பு என்னிடம் தேதிகள் கேட்டால் அடுத்த வினாடியே கொடுப்பேன் என்று அவர் உற்சாகமாக சொன்ன செய்தி காற்று வாக்கில் சிம்புவின் காதுகளுக்கு சென்றுள்ளது.

இதனால் தன்னுடைய வேட்டை மன்னன் திரைப்படத்தில் தீக்ஷாதான் நடிக்க வேண்டும் என்று சிம்பு கூறியுள்ளார்.

Sunday, February 5, 2012

பால் கலக்காத டீ பருகிப்பாருங்கள் பலன் நிச்சயம்! ஆய்வில்!!

லண்டன்: உடல் பருமன் மற்றும் எடையை குறைக்க படாத பாடுபடுகின்றனர். மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவது மற்றும் உடற் பயிற்சி போன்றவற்றை மேற்கொள்கின்றனர். அத்துடன் பால் கலக்காத வெறும் டீயை மட்டும் குடித்தால் போதும்.

உடல் எடை அதிகரிக்காமல் கணிசமாக குறையும் என ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஏனெனில், தேயிலையில் உடல் எடையை குறைக்கக்கூடிய பல மூலப்பொருட்கள் உள்ளன. ஆனால், அதில் கலக்கப் படும் பசும் பாலில் கொழுப்பு சத்து அதிகம் உள்ளது. அது உடல் எடையை குறைப்பதற்கு பதிலாக அதிகரிக்க செய்து விடுகிறது.

எனவே தான் பால் கலக்காத கடும் டீயை குடிக்க வேண்டும் என விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதே நேரத்தில் பால் கலக்காமல் குடிக்கும் வெறும் டீ ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. தினமும் 3 கப் வெறும் டீயை குடித்தாலே போதும். ரத்த அழுத்தம் குறையும் என ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

ஆய்வு இருக்கட்டும் நம் ஊர் பாட்டி வைத்தியம் ஒன்னு சொல்றேன் கேட்டுங்குங்கோ, பால் கலக்காத டீயில் ஒரு ஸ்லைஸ் லெமன் துண்டை நறுக்கிபோட்டு குடியுங்க பிந்தம், பேதி, வய்ற்று வலி போன்ற வயிற்று கொலறேல்லாம் மறைந்திடும். ஒரு தபா செய்து பாருங்கங்க்கோ.

தோல்வியை தழுவிய இந்தியா! ஹியூமன் ரைட்ஸ் குற்றச்சாட்டு!!

நியூயார்க்: மனித உரிமை மீறல்களை தடுப்பதில் இந்தியா தோல்வியை தழுவியுள்ளதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற சர்வதேச மனித உரிமை இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியாவில் கஸ்டடி மரணங்களும், போலீஸ் சித்திரவதைகளும் அதிகரித்துள்ளது. சிறுபான்மை மக்களை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்ட சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இந்திய அரசு தோல்வியை தழுவியுள்ளது என்று மனித உரிமைகளைக் குறித்த 2011 ஆம் ஆண்டு அறிக்கையில் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த திங்கள் கிழமை இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: ஜம்மு-கஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் செலுத்தும் மாநிலங்கள் ஆகியவற்றில் மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் பாதுகாப்பு அதிகாரிகள் பெரும்பாலும் பாதுகாக்கப்படுகிறார்கள். மனித உரிமை மீறல் குற்றங்களில் ஈடுபடுவோர் ஒரு போதும் தண்டனையில் இருந்து தப்பிக்க இடம் அளிக்கக் கூடாது. சித்திரவதைகளுக்கு பின்னால் யார் செயல்படுகின்றார்கள் என்பது தெளிவான பிறகும் அவர்களை விசாரணைச் செய்வதில் இந்தியா தோல்வியை தழுவியுள்ளது.

அதேவேளையில் இந்தியா-பங்களாதேஷ் எல்லை பகுதியில் எல்லைப் பாதுகாப்பு படை(பி.எஸ்.எஃப்) நடத்தும் கொலைகள் குறைந்துள்ளன.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டம்(AFPSA) வாபஸ் பெறுவதற்கான முயற்சிகளை ராணுவம் தடுக்கிறது. ஆயிரக்கனக்கான கஷ்மீரிகள் காணாமல் போயுள்ளனர். அவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா? என்பது கூட அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. கஷ்மீரில் பல்வேறு பகுதிகளில் 2,730 இறந்த உடல்கள் அடையாளம் காணப்படாமல் கடந்த ஆண்டு அடக்கம் செய்யப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலிலும், மனித உரிமை கவுன்சிலிலும் உறுப்பினரான இந்தியாவின் குரலுக்கு சர்வதேச அளவில் செல்வாக்கு இருந்தாலும் இலங்கை, சிரியா, மியான்மர், சூடான் ஆகிய நாடுகளில் நடக்கும் மனித உரிமை மீறல்களை குறித்து மெளனம் சாதித்தது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விஜய் ரசிகர்களை சந்திக்கும் காரணம் இதுவோ ?

கோவை மாவட்டத்தில் நண்பன் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்குகளுக்கு புதன்கிழமை வந்து நடிகர் விஐய் ரசிகர்களை சந்தித்தார்.

பின்னர் மாலையில் நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் கலந்து கொண்ட விஜய், ஆதாரவற்ற முதியோர்களுக்கு உடை மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு லேப் டாப் ஆகியவற்றை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், பல படங்களில் நடித்திருத்தாலும் நண்பன் படத்தில் உள்ள கதை, நடிப்பு மற்றும் வசனம் ஆகியவை தனக்கு திருப்புமுனையாக அமைந்தது. ரசிகர்கள் தான் படத்தின் முழு வெற்றிக்குக் காரணம், அவர்கள் இல்லையென்றால் தனக்கு இந்தப் புகழும், பெருமையும் கிடைத்திருக்காது என்றார்.

ரசிகர்கள் சந்திப்பு, பொருட்கள் வழங்குதல் எல்லாம் ஒரு பப்ளிசிட்டிக்காகவும், அரசியலில் நுழைவதற்கான அடித்தளமாகத்தான் இந்த ஏற்பாடு என்றது கோடம்பாக்க குருவி ஒன்று.

Saturday, February 4, 2012

டம்மி ரூபா நோட்டும் கொலை கொள்ளை விளையாட்டும்! கவனத்திற்கு!!

பணம் பத்தும் செய்யும்' என்பது, "பணம் இருந்தால் எதுவும் செய்யலாம்,' என, மாறியது. நாளடைவில் அதுவே, "பணத்திற்காக எதையும் செய்யலாம்,' என்ற நிலைக்கு மாறிவிட்டது.

சமூகத்திற்கு எதிரான ஒவ்வொரு நடவடிக்கையும், பணத்தை சார்ந்தே உள்ளது. அடுத்த தலைமுறையாவது, இதிலிருந்து விடுபட வேண்டும் என்பதே, பலரின் எதிர்பார்ப்பு. அதற்கும் வேட்டு வைக்க களமிறங்கிவிட்டன "ரூபாய் நோட்டு விளையாட்டு'.

முன்பெல்லாம் காகிதத்தால் ஆன "டம்மி ரூபாய் நோட்டுகள்' குழந்தைகளுக்காக விற்பனைக்கு வரும். அவை சிறிதாக இருக்கும் என்பதால், "டம்மி' என்பதை எளிதில் கண்டுபிடித்து விடலாம். தற்போது விற்பனைக்கு வருபவை, பளபளக்கும் தாளில், அச்சு அசல் ஒரிஜினல் ரூபாய் நோட்டு போல உள்ளன. மூன்று நோட்டுகளின் விலை ஒரு ரூபாய். இதை வைத்து, சிறுவர்கள் பலரும் பல்வேறு விளையாட்டுகளை விளையாடுகின்றனர். சில குழந்தைகள் சேமிப்பு குறித்து விளையாடுவது ஆரோக்கியம் தான்.

அதே நேரத்தில், ஆள் கடத்துதல், கொலை, கொள்ளையடிப்பது போன்ற விளையாட்டுகள் தான், இதை வைத்து பிரதானமாக நடக்கிறது. தன் குழந்தைகளை குதூகலப்படுத்துவதாக நினைத்து, டம்மி ரூபாய் நோட்டுகளை பெற்றோர் வாங்கித்தருகின்றனர். பின்னணியில் நடக்கும் விபரீத விளையாட்டுகளை அவர்கள் அறிவதில்லை. சினிமாவும், "டிவி'யும் தன் பங்கிற்கு சமூக சீரழிவை ஊக்குவித்து வரும் நிலையில், இது போன்ற விளையாட்டுகள் அடுத்த தலைமுறைக்கு சவாலாக அமையலாம்.

இந்திய கிரிக்கெட் அணிமேல் நம்பிக்கை இழந்த ஸ்பான்சர்!!

புதுடெல்லி, பிப். 5: இந்திய கிரிக்கெட் அணிக்கு அளித்து வந்த ஸ்பான்சர்ஷிப்பை விலக்கிக் கொள்வதாக சாகாரா இந்தியா அறிவித்துள்ளது.

மேலும், ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடும் புனே வாரியர்ஸ் அணியின் உரிமையையும் திரும்ப ஒப்படைக்க உள்ளதாக சகாரா இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கீழ் இயங்கும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தங்களது ஸ்பான்சர்ஷிப்பை விலக்கிக் கொள்வதாக சகாரா இந்தியா கூறியுள்ளது.

எல்லாம் நம் இந்திய அணியின் தோல்வி மேல் தோல்விதான்.

சூர்யாவை புது உச்சிக்கு கொண்டு செல்லப்போகும் புது படம் !

கே.வி.ஆனந்த் இயக்கதில் சூர்யா, காஜல் அகர்வால் நடித்துக் கொண்டிருக்கும் படம் மாற்றான். சூர்யாவின் படங்களிலேயே மாற்றான் புதிய இடத்தை பிடிக்கும் என்பது படக்குழுவினரின் நம்பிக்கை. சூர்யா இந்த படத்தில் காப்பவன், அழிப்பவன் என இரு முகங்களில் நடிக்கிறார்.

இந்த படத்தில் சூர்யாவின் செயல்கள் அனைத்தும் பிரம்மிக்கும் விதத்தில் இருக்கும் எனவும், ஹாலிவுட் ஹீரோக்கள் செய்ய அஞ்சும் சாகசங்களை எல்லாம் செய்கிறார் என்றும் கூறுகின்றனர். இதற்காகத் தான் “ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டூடியோஸை” இயக்குனர் தேர்ந்தெடுத்தார் போல.

கிளைமேக்ஸ் காட்சி ரசிகர்கள் ஆச்சரியப்படும் விதத்தில் இருக்குமாம். பாகிச்தான் பார்டரில் படப்பிடிப்பைத் தொடங்கிய மாற்றான் படக்குழு ரஷியாவில் சில முக்கிய காட்சிகளை படாமாக்கியது. இப்போது அமெரிக்கா செல்ல ரெடியாகிறதாம் படக்குழு. ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

Friday, February 3, 2012

2 ஜி ன் முறைகேடும் உச்ச நீதிமன்ற அதிரடியும் !!

டெல்லி: 2ஜி வழக்கில் தொடர்புடைய அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களின் ஸ்பெக்ட்ரம் லைசென்களையும் உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

11 தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 122 லைசென்ஸ்களையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த 122 லைசென்ஸ்களில் 85 லைசென்ஸ்கள் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

ரத்து செய்யப்பட்ட லைசென்ஸ்களில் டாடா நிறுவனத்தின் 3 லைசென்ஸ்களும், வீடியோகான் நிறுவனத்தின் 21 லைசென்ஸ்களும், லூப் டெலிகாம் நிறுவனத்தின் 21 லைசென்ஸ்களும், யூனிநார் நிறுவனத்தின் 22 லைசென்ஸ்களும், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் 13 லைசென்ஸ்களும், சிஸ்டமா-ஸ்யாம் நிறுவனத்தின் 21 லைசென்ஸ்களும், எடிசலாட்-டிபி நிறுவனத்தின் 15 லைசென்ஸ்களும், எஸ் டெல் நிறுவனத்தின் 6 லைசென்ஸ்களும், ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் 9 லைசென்ஸ்களும் அடக்கம்.

இந்த அனைத்து லைசென்ஸ்களையும் ரத்து செய்யுமாறு மத்திய தொலைத் தொடர்புத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்குத் தொடர்பாக தன்னிடம் உள்ள அனைத்து ஆவணங்களையும் மத்திய கண்காணிப்பு ஆணையத்திடம் (Central Vigilance Commission- CVC) ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளது.

இந்த 122 லைசென்ஸ்களையும் ரூ. 9,000 கோடிக்கு விற்றார் ராசா. இதனால் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டதாக மத்திய அரசின் கணக்குத் தணிக்கைத் துறை குற்றம் சாட்டியிருந்தது.

முறைகேடு விற்பனைக்கு அபராதம்
இந்நிலையில் முறைகேடாக 2ஜி லைசென்ஸ் பெற்றவுடன் தங்களது நிறுவன பங்குகளை அதிக விலைக்கு விற்று லாபமடைந்த 3 தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஸ்வான் டெலிகாம், யூனிடெக் வயர்லெஸ், எஸ்டெல் ஆகியவை தலா ரூ.5 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதே போல விதிகளை மீறிய லூப் டெலிகாம், ஸ்யாம் சிஸ்டமா ஆகியவை தலா ரூ. 50 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும்.

இந்த 5 நிறுவனங்கள் உள்பட முறைகேடாக லைசென்ஸ் பெற்ற அனைத்து நிறுவனங்களின் லைசென்ஸ்கள் அடுத்த 4 மாதங்களுக்கு மட்டுமே செல்லும்.

லைசென்ஸ் வினியோகம் புதிய விதிமுறைகளை தொலைத் தொடர்பு ஆணையமான டிராய் வகுக்க வேண்டும். புதிய விதிமுறைகளின் கீழ் 2ஜி லைசென்ஸ்களை மீண்டும் விற்பது குறித்து மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

நீதிபதிகள் கங்கூலி,சிங்வி ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் இந்தத் பரப்பரப்பு தீர்ப்பை வழங்கியது. இந்த வழக்கில் தீர்ப்பு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 17ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மூன்றில் ஒரு பங்கு குற்றம் செல்போன்களால் ?

புதுடெல்லி: செல்போன்களில் நாளுக்கு நாள் புதிய வசதிகளும், தொழில்நுட்பங்களும் அறிமுகமாகி வரும்நிலையில், இதைப் பற்றி கவலை தரும் இன்னொரு தகவலும் வெளியாகியுள்ளது.

வரும் 2013ம் ஆண்டில் இந்திய நீதிமன்றங்களில் பதிவாகும் மூன்றில் ஒரு பங்கு வழக்குகளில் செல்போன்கள் எதாவது ஒரு விதத்தில் தொடர்புடையதாக இருக்கும் என்று உச்சநீதிமன்ற வழக்கறிஞரும், இணையம் தொடர்பான சைபர் சட்ட வல்லுனருமான பவன் துக்கல் கூறியுள்ளார்.

செல்போன் பயன்பாடு அதிகரிப்பதே இதற்கு காரணம் என்ற அவர், இப்போது பெரும்பாலான குற்றங்கள் செல்போன் மூலமே நடக்கின்றன என்றும் கவலை தெரிவித்தார். மக்களின் செல்போன் நடவடிக்கைகளை கண்காணித்து, அதற்கேற்ப ஒழுங்குமுறைகளை உருவாக்க, தனியாக ஒரு சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Thursday, February 2, 2012

தலயையும் தளபதியையும் எதிர்கொள்ளும் புது வரவு !?

பாலிவுட்டில் இருந்து கோலிவுட்டிற்கு புதிய வரவாக வந்திருப்பவர் நடிகர் வித்யூத் ஜம்வால். இவர் இப்போது அஜித்தின் பில்லா-2 படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது.

இந்நிலையில் அடுத்ததாக ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் துப்பாக்கி படம் தான். ‌ஒரே நேரத்தில் அஜித், விஜய் என்று இருவரது படங்களில் மாறி மாறி நடித்து வரும் வித்யூத், அந்த அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், நான் உண்மையிலேயே ரொம்ப அதிர்ஷடக்காரன். அதனால் தான் ஒரே நேரத்தில் முன்னணி ஹீரோக்களான அஜித் மற்றும் விஜய் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அஜித் பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவர் ரொம்ப ஹாட்டான ஆளு, அதேசமயம் தான் செய்யும் எந்த வேலையிலும் முழு திருப்தி இருக்க வேண்டும் என்று எண்ணுபவர். அதேமாதிரி விஜய், ரொம்ப கூலான எனர்ஜிட்டிக் ஆளு. அதேசமயம் தான் ஒரு ஸ்டார் என்ற கர்வம் இல்லாதவர் என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் தான், வித்யூத்திற்கு பாலிவுட்டில் சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

என் காலை பிடிக்காத குறை ஜெயா ! விஜயகாந்த் காட்டம் !!

சென்னையில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த்.

நான் சவால் விட்டேன். கவர்னர் ஆட்சியை வைத்துவிட்டு, தேர்தலை சந்திக்க தயார். அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தால், தாம் உள்பட தேமுதிக உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகிவிட்டு, சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயார். என் மீதான நடவடிக்கையை கண்டித்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சியினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவையில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு மக்கள் பிரச்சனையைப் பற்றி பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டாலும், மக்கள் பிரச்சனையை பேசுவதற்காக தேமுதிக எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு செல்வார்கள். சட்டசபை நிகழ்ச்சிகளை தூர்தர்சனில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். தேமுதிக தொண்டர்களின் விருப்பத்திற்காகவே அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம். சட்டமன்ற தேர்தலில் எங்கள் ஆதரவால்தான் அதிமுக வெற்றி பெற முடிந்தது.

அவுங்க (ஜெ) சொல்றாங்க தகுதியில்லை என்று (முதலில் அவருக்கு உண்டா). தகுதியில்லாத கட்சியுடன் நாங்கள் கூட்டணி வைத்ததற்கு வெட்கப்படுகிறோம். 2004ல் ஒரு நாடாளுமன்ற சீட் கூட வரவிலலை. இவங்க கூட கூட்டணி வைச்சதற்கு நாங்கள் வெட்கப்படுகிறோம். இவங்க வந்து தேடுனாங்க. எப்படி எப்படி கெஞ்சினாங்க. மறந்துவிட்டு பேசுறாங்க. நன்றி கெட்டவங்க. மறந்துவிட்டு பேசுறாங்க. எப்படி கெஞ்சினாங்க என்பது எனக்கு தெரியும். பேசனும் நினைத்தால் நிறைய பேசுவேன். பேசக்கூடாது என்பதற்காக அடக்கிபோகிறேன். இன்னைக்கு மந்திரியா, எம்எல்ஏவாக இருக்கிறவங்க எத்தனைபேர் கெஞ்சினாங்க., எங்கள் காலை பிடிக்காத குறையாக கெஞ்சினார்கள் சொல்லத்தெரியாதா எங்களுக்கு.

அடுத்த தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது பற்றி தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கப்படும். சட்டம் ஒழுங்கு சீராக இருந்தால் ஜெயலலிதாவுக்கு ஏன் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. யார் ஏறு முகம், யார் இறங்குமுகம் என்பது மக்கள் வாக்களிக்கும்போது தெரியும். தற்போது சங்கரன்கோயில் இடைத்தேர்தலுக்கு சவால்விடும் அதிமுக, கடந்த ஆட்சியில் ஒரு இடைத்தேர்தலில் கூட வெற்றிப் பெறவில்லை. பென்னாகரத்தில் டெபாசிட்டையும் பறிகொடுத்தது என்றார்.

சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற இசைஞானி!

சென்னை: 23- வது லிம்கா சாதனை புத்தகம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய இசைத்துறையை சேர்ந்த இசையமைப்பாளர் இளையராஜா,

சிதார் இசைக்கலைஞர் பண்டிட் ரவிசங்கர்,வயலின் வித்வான் எல். சுப்ரமணியம், பின்னணி பாடகர் ஜேசுதாஸ், பாடகி ஆஷா போன்ஸ்லே, குல்ஜார் உள்ளிட்ட 10 பேர் இடம்பெற்றுள்ளனர்.

அன்றும் இன்றும் என்றும் மக்களிடையே நீங்கா இடம்பெற்ற பாடல்களை தந்த இசைஞானியை நாமும் பாராட்டலாம்.

Wednesday, February 1, 2012

குடிகாரனும் கூத்தாடியும் விஜயகாந்த்! ஜெயா!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று ( 1.2.2012) ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவேசம் அடைந்தனர்.

கைகைளை நீட்டியும், நாக்கை வெளியே துறுத்தியும் அதிமுக தரப்பினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தை ஆள்பவர் ஒரு கூத்தாடி, எதிர்க்கட்சி தலைவர் குடிகாரர். வாழ்க தமிழகம்!!

நண்பனில் நடிக்க மறுப்பு தெரிவித்தது ஏன் மாதவன் !

இந்தி மொழியில் வெளியான ”3Idiots” படத்தின் ரீமேக் தான் ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்துள்ள ”நண்பன்”. இந்தியில் மாதவன் நடித்திருந்த கேரெக்டரில் தான் ஸ்ரீகாந்த் நடித்துள்ளார்.

ஷங்கருக்கு ரீமேக் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்ததும் இந்தியில் நடித்த அதே கேரக்டரில் நடிக்கும்படி மாதவனிடம் கால்ஷீட் கேட்டுள்ளார். மாதவன் என்னால் முடியாது என்று கூறிவிட்டாராம்.

நண்பன் படத்தில் நடிக்காததால் துளி கூட வருத்தம் இல்லை என்று மாதவன் கூறியுள்ளார். மாதவன் அளித்துள்ள பேட்டியில் ” நான் ஆர்யாவுடன் இணைந்து நடித்துள்ள படம் வேட்டை. இந்த படத்தில் நடித்தது மகிழ்ச்சி என்றால், படம் வெற்றி பெற்றது இரட்டிப்பு மகிழ்ச்சி.

நண்பன் படத்தில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தும் நான் மறுத்துவிட்டேன். நண்பன் படத்தில் நான் நடிக்காதது மகிழ்ச்சியே. இந்தியில் நான் நடித்துள்ள “ஜோடி பிரேக்கர்ஸ்” படம் வெளிவரவிருக்கிறது” என்று கூறினார்.

Tuesday, January 31, 2012

கூடங்குளம் அணு உலை! 10 தீவிரவாதிகள் கைது !?

திருநெல்வேலி: இந்தியாவின் நச்சுக்கிருமியாக மாறியுள்ள ஹிந்துத்துவா பாசிச பயங்கரவாதிகள் எப்பொழுதுமே மக்கள் நலனையோ, நாட்டு நலனையோ கருத்தில் கொள்ளமாட்டார்கள் என்பது அடிக்கடி அவர்களின் நடவடிக்கைகளே நிரூபித்து வருகின்றன.

நாட்டின் பொருளாதாரத்தையும், மக்களின் நல்வாழ்வையும் கருத்தில் கொண்டு மத்திய அரசால் திட்டமிடப்பட்ட சேது சமுத்திரத் திட்டத்தை முறியடிக்க ராமர் பாலம் என்ற பொய்யை பரப்பி அத்திட்டத்தை சீர்குலைத்தார்கள். ஆனால் கூடங்குளம் அணுமின்நிலையத்தால் ஏற்படும் தற்கால, எதிர்கால அபாயங்களைக் குறித்து அஞ்சி அப்பகுதி சார்ந்த மக்களும், அணு உலை எதிர்ப்பாளர்களும் நடத்திவரும் மனம் தளராமல் தொடர்ந்து நடத்திவரும் போராட்டத்தை ஆரம்பம் முதலே நாடு மற்றும் மக்கள் நலனில் கிஞ்சிற்றும் அக்கறையில்லாத இந்து முன்னணி போன்ற ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் தேசப்பற்று என்ற போலியான போர்வையை போர்த்திக்கொண்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள்.

இந்நிலையில் நீதிக்காக போராடும் ஆர்வலர்கள் மீது ஹிந்து முன்னணி பாசிச வெறியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இச்சம்பவம் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடந்துள்ளது. இத்தாக்குதல் தொடர்பாக போலீசார், ஹிந்துத்துவா பாசிச தீவிரவாதிகள் 10 பேரை கைது செய்துள்ளனர்.

அனுமதி மறுக்கப்பட்ட மு க ஸ்டாலின் !!

சட்டசபையில் திமுக உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா, அவையில் செல்போன் பயன்படுத்தியது தொடர்பான பேரவை உரிமைக் குழுவின் அறிக்கை சட்டசபையில் இன்று (30.01.2012) தாக்கல் செய்யப்பட்டது.

இதனை உடனடியாக எடுத்துக்கொண்ட சபாநாயகர் டி.ஜெயக்குமார், உரிமைக்குழுவின் பரிந்துரையின்படி 10 நாட்களுக்கு டி.ஆர்.பி. ராஜா பேரவை கூட்டத்தில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக அறிவித்தார். இந்தக் காலக்கட்டத்தில் அவர் பேரவை உறுப்பினர் சம்பளம் உள்ளிட்ட, எந்தவித ஆதாயங்களையும் பெற முடியாது என்றும் சபாநாயகர் அறிவித்தார்.


இதையடுத்து உரிமைக்குழுவின் அறிக்கை குறித்தும், தண்டனையை குறைப்பது பற்றியும் திமுக சட்டமன்ற குழுத் தலைவர் மு.க.ஸ்டாலின் பேச முயன்றார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திமுக உறுப்பினர்கள் அனைவரும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

நயனின் சம்பளத்தை கேட்டு புலம்பலில் பலபேர் !!

தமிழ், தெலுங்கில் டாப் நடிகையாக வலம் வந்தவர் நயன்தாரா. பிரபுதேவாவை திருமணம் செய்ய இருந்ததால், தெலுங்கில் ஸ்ரீராம்ராஜ்யம் படத்தோடு நடிப்பிற்கு முழுக்கு போட்டார்.

சினிமாவை விட்டு விலகுவதற்கு முன்பு வரை அவருடைய மார்க்கெட் ரேட்டிற்கு எந்த சரிவும் இல்லை. நல்ல நிலையிலேயே அவர் சினிமாவை விட்டு நீங்கினார். இந்நிலையில் பிரபுதேவா-நயன்தாரா காதலில் விரிசல் ஏற்பட்டு, இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இதனால் நயன்தாரா மீண்டும் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

இப்போது தெலுங்கில் நாகர்ஜூனாவுடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தில் அவருக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் ரூ.1.5 கோ‌டியாம். நயன்தாராவின் இந்த சம்பள ரேட்டை கேட்டு முன்னணி நடிகைகள் பலர் வாயடைத்து போய் உள்ளனராம். நடிப்பிற்கு முழுக்கு போட்டு போன நடிகையை திருப்பி அழைத்து வந்து இவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்களே என்று பலர் புலம்பி வருகின்றனர்.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!