11:47 AM
Unknown
சென்னை: பேஸ்புக்கில் நான் கணக்கு தொடங்கவில்லை. எனது பெயரில் நிறையே போலி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன என்று ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா விளக்கம் அளித்துள்ளார்.
பேஸ்புக்கில் எனது பெயரில் நிறைய போலி கணக்குகள் உள்ளன. அந்த கணக்குகள் எதுவுமே என்னுடையது அல்ல. அந்த கணக்குகளில் எனது படங்களையும் நான் தெரிவித்த கருத்துக்களையும் போட்டு வைத்துள்ளனர்.
நான் பேஸ்புக்கில் இல்லை என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன். டுவிட்டரில் மட்டும் இருக்கிறேன் என்று செளந்தர்யா தெரிவித்தார்.
"பேஸ்புக்" மற்றும் "ட்விட்டர்" போன்ற சமூக வலைத்தளங்களில் உலா வருபவர்கள் பெரும்பாலும் பொய்களையே கூறிவருவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
7:15 AM
Unknown
லண்டன்: மான் ஏசியன் அவார்ட் இலக்கிய விருதிற்கான இறுதிப் பட்டியலில் மூன்று இந்தியர்களின் நாவல்கள் இடம்பெற்றுள்ளன.
அமிதவ் கோஷின்ரிவர் ஆஃப்ஸ் மோக், ராஹுல் பட்டாச்சாரியா வின்த ஸ்லை கம்பெனி ஆஃப் பீப்பில் ஹூக்யர், ஜஹ்ன விபரூவாவின் ரிபெர்த் ஆகிய நாவல்கள் 2011-ஆம் ஆண்டிற்கான மான் ஏசியன் இலக்கிய விருதிற்கான இறுதிப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
பாகிஸ்தானின் ஜமீல் அஹ்மத், தென்கொரியாவின் க்யூங்க் சுக்ஷின், சீனாவின் யான் லியாங்கே, ஜப்பானின் பனானா யோஷி மோட்டோ ஆகியோரும் இறுதிப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
ஆசிய நாடுகளைச் சார்ந்த எழுத்தாளர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட மிகச்சிறந்த நாவலுக்கு 30 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும். உள்ளூர் மொழிகளில் எழுதப்பட்ட நாவல் ஆங்கிலத்தில் மொழிப் பெயர்க்கப்பட்டாலும் அவற்றையும் பரிசுக்காக பரிந்துரைக்கலாம்.
இறுதிப் பட்டியலில் இடம் பிடித்த நூல்கள் எல்லாம் மிகச்சிறந்த தரம் வாய்ந்தவை என விருது தேர்வு கமிட்டி கூறியுள்ளது. நவம்பரில் வெளியிட்ட பட்டியலில் 5 எழுத்தாளர்கள் இடம்பெற்றனர்.அருந்ததிராய், தெஹல்கா எடிட்டர் தருண் தேஜ்பால் ஆகியோர் இறுதிப் பட்டியலில் இடம்பெறவில்லை.
11:11 AM
Unknown
நண்பன் படத்தில் விஜய்யுடன் நடித்த அனுபவத்தை பற்றி ஸ்ரீகாந்த் சொல்லும் போது ரொம்பவே வியப்படைகிறார்.
அவர் கூறுகையில், எந்த பந்தாவும் இல்லாம ரொம்ப எளிமையானவர் தான் விஜய்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது. படத்தில் அவரோட டெடிகேஷன், அந்த கடின உழைப்பு என்னை பிரமிக்க வச்சிருக்கு. நெருடல் இல்லாத நடிப்பு, சின்சியாரிட்டி தான் விஜய்யை இந்த அளவிற்கு கொண்டு போயிருக்குன்னு நினைக்கிறேன். நண்பன் படத்தில் அவருடன் நடித்தது நல்ல அனுபவத்தை தந்தது.
"என் ப்ரெண்ட போல யாரு மச்சான்" என்ற பாட்டை கிட்டத்தட்ட 25 வருஷ பழைய வாட்டர் டேங்கில் வைத்து சூட் பண்ணினோம். அங்கு சூட்டிங் நடந்த அனுபவத்தை இப்ப நினைச்சாலும் பயமா இருக்கு. படத்தோடு முதல் சாங்கும் அதுதான். கிட்டத்தட்ட 14நாட்கள் சூட்டிங் நடந்தது. சூட்டிங் ஆரம்பிக்கும் வரை ரொம்ப அமைதியா இருப்பார் விஜய், ஆனால் சூட்டிங் ஆரம்பிச்சுட்டா அந்தகாட்சியில் பின்னி எடுத்திடுவார். ரொம்ப ஹோம்வொர்க் பண்ணக்கூடியவர். அதனால் விஜய்யை பார்க்கும் போதெல்லாம் ரொம்ப வியந்து பார்ப்பேன் என்கிறார்.
டைரக்டர் ஷங்கரை பற்றி பேசிய ஸ்ரீகாந்த், கடும் உழைப்பாளி அவர். பாட்டையே படமா எடுக்க கூடியவர். ரொம்ப ப்ரெண்ட்லி டைப். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
6:59 AM
Unknown
சிங்கப்பூர்: ஹாங்காங்கைச் சேர்ந்த ஒரு நிறுவனம், ஆசிய நாடுகளில், எந்த நாட்டில் அதிகார முறைமை சிறந்த முறையில் செயல்படுகிறது, எந்த நாட்டில் மிக மோசமாக செயல்படுகிறது என்பதைக் கண்டறிய சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தியது.
இதன் படி, மொத்தம் 10 இடங்களில், 2.25 புள்ளிகள் பெற்று சிங்கப்பூர் முன்னணியில் உள்ளது. இதையடுத்து ஹாங்காங், தாய்லாந்து, தைவான், ஜப்பான், தென் கொரியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. மலேசியாவை அடுத்து, சீனா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் உள்ளன. ஆனால் 9.21 புள்ளிகள் பெற்று இந்தியா கடைசியில் உள்ளது.
இதுகுறித்து அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இந்தியாவில் உள்ள அதிகார வர்க்கம் அதாவது அதிகாரிகள் திறமை குறைந்தவர்களாக உள்ளனர். இவர்கள் மீது, ஊழல் உள்ளிட்ட மிகப் பெரியளவிலான புகார்கள் கூறப்படுகின்றன. இது இந்தியாவில் முதலீடு செய்ய வரும் அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு மிகப் பெரிய தலைவலியாக உள்ளது. குறிப்பாக, இந்திய அதிகார முறைமையில், போதுமான உட்கட்டமைப்பு வசதி இல்லாதது, ஊழல், அதிகாரிகள் லஞ்சத்துக்கு ஆசைப்படுவது போன்றவை பெரும் பிரச்னைகளாக உள்ளன.
நிறுவனங்கள் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதன் மூலம், தங்களுக்கு சாதகமான காரியங்களை நிறைவேற்றிக் கொள்கின்றன. மேலும், இந்தியாவில், தாறுமாறான மற்றும் கடும் சுமையை ஏற்படுத்தக் கூடிய வரிகள், சுற்றுச் சூழல் மற்றும் பிற கட்டுப்பாடுகள் ஆகியவை, அந்நிய நாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதைத் தடுக்கின்றன. இதனால் அந்நிறுவனங்களுக்குப் பெருமளவில் செலவு ஏற்படுகிறது. இந்திய கோர்ட்டுகளுடன் மல்லுக்கட்டுவதை விட அவற்றைத் தவிர்ப்பதையே நிறுவனங்கள் விரும்புகின்றன. தவறான முடிவுகள் எடுக்கப்படும் போது அதற்கு இந்திய அதிகாரிகள் பொறுப்பேற்பதே இல்லை.
6:27 PM
Unknown
2002ம் ஆண்டு தமிழில் ரீலிஸ் ஆகி சக்கை போடு போட்ட படம் ரமணா. டைரக்டர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜயகாந்த் ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். இப்படம் தமிழகமெங்கும் வெற்றிகரமாக ஓடி வசூலை வாரி குவித்தது.
இந்நிலையில் ரமணா படத்தை பார்த்த நடிகர் ஷாரூக் கான், அப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து ஏற்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து டைரக்டர் ஏ.ஆர்.முருகதாசே படத்தை இயக்கவுள்ளார். இந்தி ரமணாவில் ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடிக்க கூடும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் அவர் இப்படத்தில் நடிக்க ஆர்வத்துடன் ஒப்புக்கொண்டு இருக்கிறாராம். பிரசவத்துக்கு பிறகு ஐஸ்வர்யாராய் நடிக்கும் முதல் படம் இதுவாகும். விரைவில் இந்தி ரமணா சூட்டிங் தொடங்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
9:24 AM
Unknown
நோ மொ ஃபோபியா என்றால் நோ மொபைல் ஃபோபியா என பொருள். மொபைல் ஃபோனை உடன் எடுத்துச் செல்ல மறத்தல், மொபைல் ஃபோனின் பேட்டரி ரிப்பயர் ஆகுதல், சார்ஜ் தீர்ந்து போதல் ஆகிய வேளைகளில் ஏற்படும் கவலைதான் நோ மொ ஃபோபியா ஆகும். இக்கவலை வளர்ந்து வளர்ந்து மனோ நோயாக மாறிவிடுமாம்.
சாதாரணமாக இதற்கெல்லாம் யாரும் சிகிட்சையோ, கவுன்சிலிங்கோ பெறுவதில்லை.
என்ன டெக்னாலஜி என்றாலும் அதில் நன்மையும், தீமையும் உண்டு. மனிதர்களின் குணநலனின் அடிப்படையில்தான் அதிகமாக பாதகம் ஏற்பட வாய்ப்புள்ளது. இளம் பெண்களை காதல் வலையில் சிக்கவைப்பதில் பெற்றோரால் வாங்கி கொடுக்கப்படும் மொபைல் ஃபோன்களும் அதிக பங்கை வகிக்கிறது.
குழந்தைகள் 15 வயதாகும்வரை அவர்களுக்கு மொபைல் ஃபோன்களை வாங்கிக் கொடுக்காதீர்கள் என லண்டனில் இண்டிபெண்டண்ட் ஸ்கூல்ஸ் கவுன்சில் சேர்மன் பர்னபி லினன் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கம்ப்யூட்டர் உபயோகத்தை ஒன்று அல்லது இரண்டு மணிநேரமாக கட்டுப்படுத்த வேண்டும் எனவும் லினன் கூறுகிறார். கட்டுப்பாடில்லாத கம்ப்யூட்டர் பயன்பாடு குழந்தைகளின் வாசித்தல் மீதும், உரையாடல் மீதும் வெறுப்பை உருவாக்குகிறது. இதனால் அவர்களின் ஆளுமைத் தன்மை(personality) பாதிப்படைகிறது.
தொலைக்காட்சியை பார்ப்பதிலும் கட்டுப்பாட்டை ஏற்படுத்துதல் அவசியம். இதுவெல்லாம் ஐரோப்பாவிற்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் பொருந்தும். ஏனெனில் உலகில் மொபைல் ஃபோன் பயனீட்டாளர்களில் ஐந்தில் ஒருவர் இந்தியர் ஆவார். மூன்று வருடத்திற்குள் மொபைல் டிஜிட்டல் சமூகத்தில் இந்தியா முதலிடத்தை பிடிக்கும் என கருதப்படுகிறது.
ஆகையால் குழந்தைகள் டெக்னாலஜியின் அடிமைகளாக மாறிவிடாமல் பாதுகாக்க வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும்.
8:00 PM
Unknown
கவர்ச்சி நடிகை, தயாரிப்பாளர், பெண் தொழில் அதிபர் என பன்முகங்கொண்ட சோனாவுடன் சர்ச்சையில் சிக்கி, கசப்பான அனுபங்கள் ஏற்பட்ட பிறகு எஸ்.பி.பி.சரன், சோனாவின் தோழர்கள் வெங்கட்பிரபு,நடிகர்கள் சிவா,வைபவ் உள்ளிட்டவர்கள் சகிதமாக, கலந்து கொண்ட சினிமா விழா தான் சத்யம் திரையரங்கில் நடைபெற்ற அட்டகத்தி பட ஆடியோ வெளியீட்டு விழா.
ஒரு காலத்தில் அவரது அப்பா எஸ்.பி.பி.மாதிரி கொழுக் மொழுக் என்று இருந்த சரண்., சமீபமாக உடல் மெலிந்து நலிந்து பார்க்கவே பரிதாபமாக காணப்படுகிறார். வெளியில் டயட் என்று சொன்னாலும் அடிக்கடி அயல் நாடுகளுக்குச் செல்லும் சரண்., அங்கு கொழுப்பு உறிஞ்சும் சிகிச்சையை அடிக்கடி மேற்கொண்டதால் இப்படி ஆகிவிட்டிருக்கிறார் எனத் தகவல் தெரிவிக்கிறது.
இது ஒரு பக்கம் என்றால் இவரால் சர்ச்சைக்குள்ளான நடிகை சோனா சமீபமாக மலேசியா சென்று மப்பும் மந்தாரமுமாக இருந்த தன் உடல் எடையை குறைப்பதற்கு கொழுப்பு உறிஞஅசும் சிகிச்சையை மேற்கொண்டு பத்து கிலோவிற்கும் மேல் குறைத்து சரணை விட மெலிதான தோற்றத்தில் கோலிவுட்டில் சமீபமாக வளைய வருகிறார். உடம்பை குறைப்பதில் கூட இருவருக்கும் இடையே இப்படி ஒரு போட்டியா என மூக்கின் மேல் விரலை வைத்து பார்க்கிறது கோலிவுட்!
8:40 AM
Unknown
· மூச்சு இரைக்க நடக்கக்கூடாது.·காலை, மாலை நடந்தால் மிகவும் நல்லது.
· நடக்கும்போது நடையில் மட்டும்தான் கவனம் இருக்க வேண்டும். மனம் அமைதியோடு இருக்க வேண்டும்.
· நடக்கும் பொழுது பாதம் முழுக்க ஒரே சீராக அழுத்தம் கொடுத்து நடக்க வேண்டும். நிதானமாக நடக்க வேண்டும்.
· தினசரி நடப்பது அவசியம்.
· நடக்கும்போது நடையைத் தடுக்காதவாறு தொளதொளப்பான ஆடைகளை அணிய வேண்டும்.
· கால்களில் மென்மையான அதிக இறுக்கம் இல்லாத காலணியை அணியவேண்டும்.
உடற்பயிற்சி : நடைப்பயிற்சி செய்ய இயலாதவர்கள் அதாவது உடல் பருமன், மூட்டுகளில் வலி உள்ளவர்கள் உடற்பயிற்சி செய்து நீரிழிவு நோயின் கடும் தாக்குதலில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு முன்பு டாக்டரை கலந்து ஆலோசித்து என்ன மாதிரியான உடற்பயிற்சி எவ்வளவு நேரம் செய்யலாம் என்பதை தீர்மானிக்க வேண்டும்.
உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு போன்ற எல்லாவற்றையும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் கடைப் பிடித்து இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க முயற்சிக்க வேண்டும். இந்த கட்டுப் பாடுகளுடன் இருந்தால் நீரிழிவு நோய் இருந்தாலும் வெகு நாட்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் சுகமாக வாழலாம். நிதானமான நடை உடல் நலத்தையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.
6:09 PM
Unknown
பெரும்பாலான தியேட்டர்களில் பெரிய நடிகர்களின் படங்கள் ஆக்கிரமிப்பதால், சிறு பட்ஜெட் படங்கள் முடங்கி வருகின்றன. இதனை தடுக்கும் பொருட்டு, இனி பண்டிகை நாட்களில் மட்டுமே பெரிய நடிகர்கரின் படங்களை ரிலீஸ் செய்வதென்று தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து இயக்குநரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறுகையில், தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான தியேட்டர்களை பெரிய பட்ஜெட் மற்றும் பெரிய நடிகர்களின் படங்கள் ஆக்கிரமித்து கொள்கிறது. இதனால் சின்ன பட்ஜெட் படங்கள் பல முடங்கி போய் உள்ளன. கடந்த ஆண்டு தணிக்கை செய்யப்பட்டு கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீசாகமால் முடங்கி போய் உள்ளன.
இதனால் படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு பெருத்த நஷ்டம். இந்த நிலைமையை சரிசெய்யும் பொருட்டு, பெரிய நடிகர்களின் படங்களை ஏப்ரல் 14, மே 1, ஆகஸ்ட் 15, தீபாவளி மற்றும் பொங்கல் ஆகிய 5 தினங்களில் மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துள்ளோம். இதன் மூலம் சின்ன பட்ஜெட் படங்களுக்கும் போதிய தியேட்டர் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
10:53 AM
Unknown
தமிழ் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் மோகன் நாராயணன் நக்கீரனின் தீவிர வாசகர்களில் ஒருவர். இவரது மகன் ஸ்ரீராம் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். நக்கீரனில் வெளியாகும் முக்கிய செய்திகளை ஸ்கேன் செய்து தனது மகன் ஸ்ரீராமுவுக்கு இமெயிலில் அனுப்புவது மோகன் நாராயணனின் வழக்கம்.
நாசா இன்ஜினியர்களின் வீடுகளுக்கு திடீர் விசிட் அடிப்பது அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வழக்கமாம்.
அதன்படி , ஜனவரி 8 அன்று ஸ்ரீராமின் வீட்டுக்கு எதிர்பாராமல் வருகை தந்த ஒபாமாவிடம் ஸ்ரீராம் நக்கீரனில் வெளியாகியிருந்த சிறுமி ஹெலன் கோர்டன்ஸ் பற்றிய கட்டுரையை மகிழ்ச்சியுடன் படித்துக்காட்டி ஆங்கிலத்தில் விளக்கம் அளித்திருக்கிறார்.
அதைக் கேட்டு மகிழ்ந்த ஒபாமா, அக்கட்டுரையை எழுதிய ரவிவர்மனின் மெயில் ஐடிக்கு ஒரு குறுஞ்செய்தியை உடனடியாக அனுப்பி வைத்திருக்கிறார்., அதில் வெள்ளிவிழா கொண்டாடும் நக்கீரன் வாரமிருமுறைக்கு தனது மேலான வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டி இருக்கிறார்.
{அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம்: மாடுகளை உணவுக்கு கொல்லாவிட்டாலும் மாட்டுத் தோலின் மதிப்பினால் பார்பனர்கள் மாடுகளை அடித்து தோல் உறித்து பதப்பப்படுத்தப்படும் தொழிற்சாலைகளை தற்காலத்திலும் நடத்தியே வருகின்றனர். ஆக கொல்லாமை அறம் என்பது வெறும் உணவு சார்ந்த ஒன்று என்ற அளவில் தான் தற்பொழுது உள்ளது, மற்றபடி அதில் உயர்வு தாழ்வு என்பதெல்லாம் இக்காலத்தில் எடுபடாத ஒன்று.
மாட்டுகறி உண்ணுவது தவறல்ல என்று வழியுறுத்த அவற்றை உண்ணுபவர்களைத் தூற்றாதீர்கள் அவர் பார்பனர் என்றாலும்.,இந்தியாவில் அதிகம் தோல் பதனிடும் தொழிற்சாலை பார்ப்பனர்களுக்கு சொந்தமானது இருந்தும் மாடுகளை வெட்டக்கூடாது என்று இரட்டை வேடமிடுகின்றனர்.)
12:44 PM
Unknown
கோச்சடையான் படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடிக்கும் சினேகா, இந்த வாய்ப்புகாக பல படங்களை கைவிட்டார்.
ரஜினியுடன் நடிப்பதே அவர் வாழ்வில் பெரிய மைல்கல் என்று ரசிகர்கள் கருத்து கூறினாலும், ”ஒரு படத்திலாவது வில்லியாக நடிக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள்” என்று புன்னகைக்கிறார் சினேகா.
”என் குறிக்கோளை அடைய பிரசன்னாவுடனான திருமணம் ஒரு தடையாக இருக்காது” என்றும் கூறியுள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் முன்பை விட பளிச்செனவும், அழகாகவும் காணப்பட்ட சினேகாவிடம் முகத்தில் கல்யாண கலை வந்துவிட்டதாக சொல்ல வழக்கம் போல சிரித்துவிட்டு பேச ஆரம்பித்தார்.
சமீபத்தில் அவர் நடித்த தெலுங்கு படம் ஹிட்டாகியுள்ளதால் ரொம்பவே சந்தோஷமாக இருப்பதாக கூறும் சினேகா, விரைவில் கோச்சடையான், மற்றும் டைரக்டர் G.N.R.குமரவேலன் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக சொன்னார்.
7:32 AM
Unknown
வளரும் பருவத்தில் குழந்தைகள் சாப்பிடும் உணவு சுவையாக இருந்தால் மட்டும் போதாது; சத்தானதாகவும் இருக்க வேண்டும்.
பொதுவாக, ஒரு வயதில் இருந்து ஆறு வயது வரை ஆண் குழந்தையாக இருந்தாலும் பெண் குழந்தையாக இருந்தாலும் ஒரே மாதிரியான ஊட்டச் சத்துக்கள்தான் தேவைப்படும். ஏழு வயது முதல் இருபாலருக்கும் தேவைப்படும் சத்துக்களில் சிறிது மாற்றம் ஏற்படும்.
இந்த வயதில் சிறுவர்களைவிட சிறுமிகளுக்கு அதிக எடை கூடும். காரணம் – ஹார்மோன் மாற்றங்கள்.
உங்கள் குழந்தைகள் உணவை ருசித்து, ரசித்து, நன்றாக மென்று, உமிழ்நீருடன் கலந்து சாப்பிட உற்சாகப்படுத்துங்கள்.
7:11 PM
Unknown
இங்கிலாந்தின் சவுத்தம்ப்டான் பகுதியில் இருந்து கடந்த 1912ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி டைட்டானிக் சொகுசு கப்பல் நியூயார்க் நோக்கி தனது பயணத்தை துவக்கியது. உலகிலேயே அப்போது மிகப்பெரிய சொகுசு கப்பல் இதுதான்.
கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பல தனியார் நிறுவனங்கள் ஆய்வு செய்தன. அதில் இருந்து பல அரிய பொருட்களை மீட்டு வந்தன. இந்நிலையில், கப்பலில் கிடைத்த மிகச்சிறிய ஹேர்பின் முதல் கப்பலின் உடைந்த இரும்பு பாகங்கள் வரை 5,000 அரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றை வரும் ஏப்ரலில் ஏலம் விட அமெரிக்காவின் நியூயார்க் குர்ன்சே ஏல நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கப்பலில் பொருத்தி இருந்த கலைநயமிக்க பாகங்கள், தகரங்கள், பயணிகளின் பர்ஸ், கூலிங் கிளாஸ்கள் உள்பட பல பொருட்கள் ஏலத்துக்கு தயாராக உள்ளன. எனினும், டைட்டானிக் பொருட்களை தனியாருக்கு விற்க கூடாது. பொருட்களை ஏலம் எடுப்பவர்கள், அவற்றை நன்கு பராமரிக்கவும், அவ்வப்போது பொதுமக்கள் காட்சிக்கு வைக்கவும் ஒப்புக் கொள்ள வேண்டும். இதுபோன்ற பல நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொள்பவர்களுக்கே டைட்டானிக் பொருட்களை விற்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நியூயார்க் குர்ன்சே ஏல நிறுவனம் ஏற்கனவே டயானாவின் நகைகள், அமெரிக்க அதிபர் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்ட போது பாதுகாப்புக்கு சென்ற போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிள் போன்ற பல அரிய பொருட்களை ஏலம் விட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
10:45 AM
Unknown
சேலம் பழைய பேருந்து நிலையம் கடைகளில் அராஜகத்தின் உச்சத்திற்கு சென்றனர்.
பழைய பேருந்து நிலையம் அருகிலேயே சேலம் தெற்கு சட்டமன்ற அலுவலகம் உள்ளது அங்கு இருந்து கிளம்பிய அ.தி.மு.க.வினர் முழு போதையில் கடைகளில் தொங்கிய நக்கீரன் விளம்பர பேப்பர்களை கிழித்தனர். உள்ளே கடைகளுக்குள் இருந்து நக்கீரனை பறித்தனர் எதற்காக பரிக்கிறீர்கள் என கடை உரிமையாளர்கள் கேட்க 'கெட்ட வார்த்தையில் பேசிய அ.தி.மு.க.வினர்' நக்கீரனை பறித்து எடுத்து சென்றனர். உடனே பணம் கேட்க ,'அம்மா ஆட்சியிலா பணமா கேட்குற என்று 50க்கும் மேலானா நக்கீரனை எடுத்து சென்றனர். அந்த பகுதியில் அனைத்து கடைகளிலும் இதே நிலைமை தான். பேருந்து நிலையத்தில் இருந்து எட்டும் தூரத்தில் இருக்கும் சேலம் டவுன் காவல்துறை கண்டுகொள்ளவே இல்லை.
காவல்துறை எதிரிலேயே ஒரு பீடா கடை உள்ளது அங்கு குவிந்த கரைவேட்டிகள் அந்த கடையில் இருந்த பெண்மணியை மிரட்டிவிட்டு 17 நக்கீரனை பறித்து சென்றனர். இதை வேடிக்கை பார்த்தபடியே இருந்தது காவல்துறை
ஒருபக்கம் பறித்தபடி இருக்க மறுபக்கம் சட்டமன்ற அலுவலகம் திரண்ட தெற்கு எம்.எல்.ஏ மற்றும் மா.செ வான எம்.கே.செல்வராஜ் மற்றும் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ வெங்கடாசலம் ஆகியோர் கடும் கோபத்தில் பேச தொடங்கினர் என்ன பண்ணலாம் என திட்டமிட்டனர்
நக்கீரன் ஏஜண்ட் அலுவலகம் அடித்து நொறுக்கலாம் என ப்ளான் போட்டனர் ஆனால் அது எங்கு உள்ளது என தெரியாததால் குழம்பினர் நக்கீரன் நிருபரை அடிக்கலாமா? என பேசினர். இவ்வாறு திட்டமிட்டபடி இருக்க 50க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் குவிய தொடங்கினர். அவர்களை எல்லாம் திரட்டி கொண்டு அருகில் இருந்த அண்ணா சிலை அருகே சென்று நக்கீரன் இதழ்களை எரித்தனர்.
அங்கேயே நக்கீரன் அலுவலகம் எங்க இருக்கு தேடுங்கடா என சில அ.தி.மு.க.வினர் கத்த டூ வீலரில் நமது அலுவலகத்தை தேட கிளம்பியது ஒரு கும்பல்., காட்டுமிராண்டிதனமாக அடித்து உதைக்க வெறியேறிய கண்களோடு சீறிக்கொண்டு சுற்றி வந்தனர் ஜனநாயகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுகவினர்.
12:08 PM
Unknown
இலங்கையில் தமிழ் மக்களுக்காக போராடிய விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பிரபாகரன் தலைமையிலான படையில் கிழக்கு மாகாண படையை நிர்வகிக்கும் கர்னல் பொறுப்பில் இருந்தவர் விநாகமூர்த்தி முரளீதரன் என்ற கருணா.
ஒரு கட்டத்தில் இவர் செய்த நிதிமுறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து பிரபாகரன் இவரைக் கண்டித்தார். உடனே தனது பொறுப்பில் இருந்த வீரர்களுடன் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறிய கருணா, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்ற தனி அமைப்பை தொடங்கினார்., அத்துடன் விடுதலைப்புலிகள் இயக்க வீரர்கள் மீதும் தாக்குதல் நடத்தினார். பின்னர் ராஜபக்சே அரசிடம் விலை போனார்.
கடந்த 2008ம் ஆண்டு ராஜபக்சே கட்சியில் சேர்ந்த கருணா, தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். பின்னர் 2009ம் ஆண்டு இவருக்கு தேசிய ஒருமைப்பாட்டு துறை அமைச்சர் பதவியையும் ராஜபக்சே வழங்கினார்.
சொகுசு வாழ்க்கையை அனுபதிதுக்கொண்டிருக்கும் கருனா, அவ்வப்போது வெளிநாடுகளுக்கும் சென்று அங்குள்ள தமிழின ஆதரவாளர்களையும் சந்தித்து அவர்களையும் தங்கள் பக்கம் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் கருணாவின் துரோகத்தை மறக்க தமிழர்கள் ஒருபோதும் தயாராக இல்லை. அவரை புறக்கணித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 1ம் தேதி இலங்கை ஓட்டல் ஒன்றில் புத்தாண்டை மது விருந்துடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இவரது அலுவலகத்தில் அந்தரங்க பெண் உதவியாளராக இருப்பவர் சாந்தினி. இவருடன் மிக நெருக்கமாக ஆடிப்பாடி மகிழ்ந்துள்ளார் கருணா.
இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. இவையெல்லாம் கருணா மீது ஏற்கவே உலகத்தமிழர்களுக்கு இருக்கும் கோபத்தை பன்மடங்கு அதிகரிக்கச்செய்துள்ளன.
கருணாவின் சுயரூபத்தை பாருங்கள் என்று தமிழர்கள் தங்கள் கொதிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். தமிழினத்தை காட்டிக்கொடுத்தற்கு ராஜபக்சே கொடுத்த பரிசுதான் இந்த சிங்களப்பெண் சாந்தினி என்றும் கடுமையாக சாடியுள்ளனர்.
7:18 AM
Unknown
விஜய்யின் நடிக்கும் நண்பன் பொங்கல் ரிலீசுக்கு தயாராக இருக்க நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி படத்தில் நடித்து வருகிறார் விஜய்.
கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. இந்தியாவின் மிக முக்கியமான ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் கைவண்ணத்தில் விஜய் நடிக்கும் அதிரடி காட்சிகளை படமாக்கி வருகிறார் முருகதாஸ்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யின் உற்சாகத்தையும் உழைப்பையும் பார்த்த முருகதாஸ் தன் நட்பு வட்டாரத்தில் விஜய்யை வியந்து பாராட்டி வருகிறாராம்.
ஏழாம் அறிவு படத்தின் அறிவிப்பு விழாவில், நான் எந்தக் கதையை எழுதினாலும் அந்த கதாபாத்திரத்தில் சூர்யா தான் என் நினைவுக்கு வருகிறார். அவரை என்னால் தவிர்க்க முடியவில்லை. அவரை மனதில் வைத்துத்தான் என்னால் எல்லாக் கதைகளையும் எழுத முடிகிறது என்று சூர்யாவையும் ஏகத்துக்கும் புகழ்ந்தார் ஏ.ஆர்.முருகதாஸ்.
சினிமாவுல இதெல்லாம் ஜகஜமப்பா! கமல் நடித்த நாயகன் பட பாணியில் துப்பாக்கி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
7:26 PM
Unknown
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் சிந்தகியில் அரசு அலுவலகத்தின் முன்னால் உள்ள கொடி மரத்தில் பாகிஸ்தான் கொடியை ஏற்றியது தொடர்பாக ஆறு ஹிந்துத்துவா தீவிரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஸ்ரீராமசேனா ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கத்தின் மாணவர் பிரிவை சார்ந்தவர்கள் ஆவர். பிஜாப்பூர் மாவட்ட தலைநகரில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள சிந்தகி நகரத்தில் உள்ள தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள மினி விதானசவுதா என்று அழைக்கப்படும் வளாகத்தில் புதுவருட தினத்தில் பாக்.கொடி ஏற்றப்பட்டிருந்தது. இச்சம்பவத்தை தொடர்ந்து ஹிந்துத்துவா அமைப்புகள் கண்டனம் தெரிவித்து களமிறங்கின.
பாகிஸ்தான் கொடியை ஏற்றியதன் பின்னணியில் முஸ்லிம்கள் தாம் என குற்றம் சாட்டி கபட வேடதாரிகளான ஹிந்துத்துவா அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மேலும் பாக்.கொடி ஏற்றியதை கண்டித்து அப்பகுதியில் வி.ஹெச்.பி, பஜ்ரங்தள் உள்ளிட்ட ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் முழு அடைப்பையும் நடத்தின. இச்சம்பவத்தின் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயன்ற பா.ஜ.க, கொடி ஏற்றப்பட்ட இடத்தை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சிகளையும் நடத்தியது.
பிஜாப்பூர் நகரத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பும் இதைப் போன்றதொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால், குற்றவாளிகள் மீது போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஊர்மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். (இச்சம்பவம் குறித்து வந்தேறி பார்ப்பன நாளேடு எந்த செய்தியையும் வெளியிடவில்லை.)
11:28 AM
Unknown
தமிழ், தெலுங்கு, கன்னட,மலையாள படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஸ்வேதா மேனன். அம்மணியின் கவர்ச்சியில் மயங்காத இளசுகளே இல்லை என்கிற அளவுக்கு கவர்ச்சி விருந்து படைத்து வரும் ஸ்வேதா, வசந்தபாலனின் அரவான் படத்தில் நடித்துள்ளார்.
படம் இன்னமும் ரிலீஸ் ஆகாத நிலையில், ஸ்வேதாவின் கேரக்டர் பற்றிய செய்தி வேகமாக பரவி வருகிறது. படத்தில் அம்மணி விலைமாது கேரக்டரில் நடித்துள்ளாராம். சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட ஸ்வேதா, திருமணத்துக்கு பிறகு நடிக்கும் முதல் படம் இது. அந்த படத்தில் இப்படியொரு கேரக்டரில் நடித்திருக்கிறீர்களே, உங்கள் கணவர் எதுவும் சொல்லவில்லையா? என்றால்... ம்கூம் என்று கூறி பெரிய விளக்கமே கொடுக்க ஆரம்பித்து விடுகிறார்.
என் கணவர் என்னை ரொம்பவே புரிஞ்சு வச்சிருக்காரு. கவர்ச்சி காட்சியில் எனக்கு என்ன வேணும் என்பதை கூட அருகிலிருந்து கவனிக்கிறார்னா பாருங்களேன். சூட்டிங் நேரத்தில் எனக்கு ஒத்தாசையாக இருப்பவரும் அவரே, என்று கூறும் ஸ்வேதா, அரவான் பட சூட்டிங்கின்போது தனது கணவரையும் கூடவே வைத்துக் கொண்டாராம்.(எல்லாம் பணம் படுத்தும் பாடுதான்)
7:12 AM
Unknown
நிறையப் பேரு வயிறை குப்பைத்தொட்டி மாதிரி நினைக்கிறதுனால வர்ற பிரச்சனைதான் இது. பசிக்குத்தான் உணவு.. வயிற்றின் நான்கில் ஒருபங்கு உணவும், இரண்டு பங்கு தண்ணீரும், 1 பங்கு காற்றும் இருக்கணும்கிறது மருத்துவர் அறிவுரை. யார் கேக்கிறாங்க.. வயிறு புடைக்க சாப்பிடறது செரிமான கருவிகள சோர்வுகொள்ளச் செய்யுமே தவிர அவற்றை இயங்க வைக்க உதவாது..
மிதமான உணவு.. அளவான ஓய்வு.. இது ரெண்டும்தான் சுகமான வாழ்வு.,உண்டி சுருங்குவது பெண்டிற்கு மட்டுமல்ல.., ஆண்களுக்கும்கூட நல்லதுதான்..
கண்டதையும் கண்ட நேரத்தில உள்ளே தள்ளி வயிற்ற நிரப்பினா அது என்ன செய்யும். அரைக்க முடிந்ததைத்தான் அரைக்கும். மற்றவையெல்லாம் குப்பைதான். செரிக்காது.. நெஞ்சு எரியும்.. வயிறு பொருமும்.. மலச்சிக்கல உண்டாக்கும். தூக்கம் வராது..
பசிக்கு உணவு எப்படி அவசியமோ, அதமாதிரி ஆரோக்கியத்திற்கு அளவும் அவசியம், அதுவும் சுகாதாரமான உணவா இருக்கணும்.
இப்போ என்னமோ பட்டணத்துப் பசங்களெல்லாம் ஏதோ பீஸாவாமுல்ல.. அத மல்லுக்கட்டி உள்ள தள்ளுறானுக.. வயிறு என்னத்துக்கு ஆகும்.. எளிதில செரிக்கும் உணவுதான நல்லது...
போகட்டும் இனியாவது இதையெல்லாம் நினைவில வச்சிக்க.. இப்போ நாஞ் சொல்ற மருந்த கேட்டுக்க..
இஞ்சி -1 துண்டு, பூண்டு- 4 பல்,வெற்றிலை- 2, முருங்கை இலை- 1 கைப்பிடி, நல்ல மிளகு - 4
இவைகளை இடிச்சி சாறு எடுத்து தண்ணில கலந்து குடிச்சிக்கிட்டு வா.. இது சாதா வயிற்று வலிக்கு நல்லது... குழந்தைகள் வயித்துவலிக்கும் இத கொடுக்கலாம்.. கெடுதல் கிடையாது.
6:31 PM
Unknown
சென்னை, ஜன.5: இந்தியா-ஜெர்மனி இடையே கடந்த 60 ஆண்டுகளாக உள்ள தூதரக உறவைக் கொண்டாடும் வகையில் "எண்ணற்ற வாய்ப்புகள்' என்ற தலைப்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, லாப் இந்தியா என்ற தனியார் நிறுவனம் சார்பில் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
ஜெர்மனியில் உள்ள பேபல்ஸ்பெர்கை சேர்ந்த தி ஜெர்மன் ஃபிலிம் இசைக் குழு சார்பில் புது தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் கிளாசிக் இன்கான்டேஷன்ஸ் என்ற தலைப்பில் இசை நகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இந்த நிகழ்ச்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பிரபல பாடல்கள், பின்னணி இசை ஆகியவை இசைக்கப்பபடும்.
இது குறித்து சென்னையில் புதன்கிழமை ஏ.ஆர்.ரஹ்மான் செய்தியாளர்களிடம் கூறியது: எனது இசை நிகழ்ச்சிகள் பெரும்பாலும் பாடல் வரிகள், நடனங்கள் இல்லாமல் நடைபெற்றது கிடையாது. இவை இல்லாமல் இசை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்று நீண்ட நாள்களாக எண்ணியிருந்தேன்.
இப்போது பேபல்ஸ்பெர்கை சேர்ந்த புகழ்பெற்ற இசைக் குழு சார்பில் பாடல் வரிகள், நடனம் இல்லாமல் இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இந்தக் குழுவி 100 கலைஞர்களுக்கும் மேல் பங்கு பெறுகின்றனர். இதில் நான் இசையமைத்த ரோஜா, பம்பாய், எந்திரன் உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்கள் மற்றும் பிற மொழிகளில் வெளியான ஸ்வதேஷ், தி ரைசிங், எலிசபத்: தி கோல்டன் ஏஜ் ஆகிய திரைப்படங்களின் பாடல் மற்றும் பின்னணி இசை மற்றும் திரைப்படங்களின் தீம் இசை ஆகியவை இசைக்கப்படவுள்ளன.
இதன் மூலம் திரைப்படங்களில் வரும் இசை மற்றும் பின்னணி இசை குறித்து இசை ஆர்வலர்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும்., சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளேன். மேலும், என்னுடைய கே.எம். இசைப் பள்ளியைச் சேர்ந்த பாடகர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். இந்த ஆண்டு தமிழில் வெளியாகவுள்ள திரைப்படங்கள் உள்பட 4 படங்களுக்கு இசை அமைத்து வருகிறேன் என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறினார்.