Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, December 10, 2011

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லா இந்திய நகரம் !?

புதுடெல்லி: இந்தியாவில் சாலை வழி பயணங்கள், குறிப்பாக டெல்லியில் பயணிப்பது பெண்களுக்கு பாதுகாப்பாக இல்லை என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

டி.என்.எஸ் மார்க்கெட் ரிசர்ச் ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய ஆய்வில் பங்கேற்ற பெண்களில் மெட்ரோ நகரத்தில் உள்ள 51 சதவீதத்திற்கு அதிகமானோர் சாலை வழி பயணம் பாதுகாப்பாக இல்லை என கருதுகின்றனர்.

டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களை சார்ந்த பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இவர்களில் 73 சதவீதம் பேர் இரவில் தனியாக பயணிக்க அஞ்சுகின்றனர். 87 சதவீதம் பேர் டெல்லியை பாதுகாப்பற்ற நகரமாக கருதுகின்றனர். ஆனால் 74 சதவீதம் பேர் மும்பையை ஒப்பீடு செய்தால் பாதுகாப்பானது என கூறுகின்றனர்.

நான்கு நகரங்களை சார்ந்த 760 பேர் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

Friday, December 9, 2011

டெலிவரிக்கு பிறகு மீண்டும் ஆசையில் ஐய்ஷு !!

உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது. கர்ப்பமாக இருந்ததால் கடந்த ஒரு ஆண்டாக நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தார் ஐஸ். குழந்தை பிறந்த பிறகு, தொடர்ந்து அவர் நடிப்பாரா, இல்லையா என்ற சந்தேகம் ரசிகர்களை வாட்டி வதைத்து வந்தது.

இந்த சந்தேகத்துக்கு இப்போது விடை கிடைத்துள்ளது. பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் 1999-ல் வெளிவந்த சூப்பர்ஹிட் படம் ஹம் தில் தே சுகே சனம். இதில் சல்மான்கான், ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தனர். இதே ஜோடியை வைத்து தனது கனவு படமான பாஜிராவ் மஸ்தானி என்ற படத்தை இயக்க இருப்பதாக பன்சாலி 2003-ம் ஆண்டு அறிவித்திருந்தார். வெறும் அறிவிப்போடு நின்றிருந்த அந்த பிராஜக்ட்டை மீண்டும் தூசி தட்டி எடுத்திருக்கிறார் பன்சாலி. ஏற்கனவே திட்டமிட்டபடி, ஹீரோயின் ஐஸ்தான்.

ஹீரோ.. சல்மான் கான் அல்ல. அவருக்கு பதிலாக ஷாருக் கான். ஐஸ்வர்யாவுக்கும், சல்மானுக்கும் ஆகாது என்பதால் இந்த அதிரடி மாற்றம். குழந்தை பெற்ற ஐஸ்வர்யா ராயை சமீபத்தில் சந்தித்து வாழ்த்து சொன்ன பன்சாலி, படம் சம்பந்தமாகவும் அவர் காதில் போட்டு வைத்தார். குழந்தையை கவனிப்பதில் முழு நேரத்தையும் செலவிட்டு வரும் ஐஸ், இடையே கதை பற்றி பேச நேரம் ஒதுக்கினார். இயக்குநர் சொன்ன கதையை ரசித்து கேட்ட அவர், உடனே ஓகே சொல்லிவிட்டார். அடுத்த ஆண்டு ஏப்ரல் வாக்கில் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.

அமெரிக்க முதுகலை மாணவியின் தமிழக ஆசை

"ஏக்கமாக உள்ளது!' தமிழக வேளாண்மை பல்கலைக்கழகத்தில் முதுகலை உழவியல் படிக்க வந்திருக்கும் அமெரிக்க மாணவி மேகன்: அமெரிக்காவின் கடைக்கோடி கிராமம் ஒன்றில் வசிக்கும், சிறு விவசாயக் குடும்பம் என்னுடையது. விவசாயம் தான் என் வருங்காலத்திற்கான விருப்பமாக இருந்ததால், "கர்னல்' வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பில் சேர்ந்தேன்.

தமிழக வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன், "கர்னல்' பல்கலைக்கழகம் ஏற்படுத்திக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தப்படி, இரண்டு பல்கலைக்கழகங்களில் இருந்தும், 50 மாணவர்கள், 15 நாள் கல்விப் பயணமாக இடம் மாறினோம். அப்படி, இங்கு வந்து சென்றவர்களில், நானும் ஒருத்தி. இங்குள்ள விவசாயிகள், நிலத்தை உணவு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாகப் பார்க்காமல், மண்ணைத் தாயாக, போற்றியதையும், நுணுக்கமான இந்திய விவசாய முறைகளையும் பார்த்த போதே, தமிழக வேளாண்மைப் பல்கலையில், முதுகலை சேர வேண்டும் என்று முடிவெடுத்தேன். இன்னும் இரண்டாண்டுகளுக்கு கோவையில் தான் படிப்பு. நடவு, களை, அறுவடை என, விவசாயத்தில் பெண்களின் பங்களிப்பு, ஆண்களுக்கு நிகராக உள்ளது.

இந்தியாவின் பாரம்பரிய வேளாண்மை முறை, மனித குலத்திற்கு தீங்கு செய்யாததாக உள்ளது. அதன் சிறப்பான இயற்கை விவசாயம் குறித்து ஆராய்ச்சி செய்வது, என் அடுத்த திட்டம். உணவிற்குப் பதிலாக, வைட்டமின் மாத்திரைகளை சாப்பிடுவதற்கு இணையானது தான், ரசாயனத்தில் விளையும் உணவுகள் அனைத்தும். ஆனால், அதுதான் எங்கள் நாட்டில் கிடைக்கும். இறக்குமதி செய்த, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை, பல நாட்கள் கழித்து வாங்கிச் சாப்பிடுவோம். காலையில், பறிக்கும் காய், கனிகளை மதிய உணவிற்குச் சமைத்துச் சாப்பிடும் உங்களைப் பார்க்கும் போது, ஏக்கமாக உள்ளது. இங்குள்ள இளைஞர்கள், அமெரிக்க கனவு காண்கின்றனர். ஆனால், எனக்கு இந்தியக் கனவு தான் உள்ளது.

அமெரிக்க ஆசையில் நாம்., இந்திய ஆசையில் அமெரிக்க மாணவி மேகன், எல்லா வளமும் இருந்து வெளிநாடு ஆசையில் நாம் இருக்குறோம். நெற்களஞ்சியமான தஞ்சை இப்போது கட்டட களஞ்சியமாக காட்சி அளிக்கிறது விலை நிலங்களில் கட்டடங்களும் சாயப்பட்டரையும் கட்டி நிலத்தை வினாக்கிவிட்டோம், இனி உணவுக்கு பதில் மாத்திரைகள்தான் உட்கொள்ளவேண்டும். சிந்திக்கட்டும். ஆட்சியாளர்கள்., மக்களும்.

Thursday, December 8, 2011

கண்ணியம் மிக்கவர்களா கயவர்களா இந்திய காவல்துறை ?

ஹைதராபாத்: மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் அநீதியாக சிறையிலடைக்கப்பட்டு போலீஸின் கொடுமைக்கு ஆளான முஸ்லிம் இளைஞர்களுக்கு 70 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க ஆந்திரபிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கில் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்ட 70 இளைஞர்கள் நிரபராதிகள் என்பது நிரூபணமானதால் இழப்பீடு வழங்க முடிவுச் செய்ததாக ஆந்திரபிரதேச மாநில அரசு கூறியுள்ளது.

இழப்பீட்டு தொகையில் 20 பேருக்கு மூன்று லட்சம் ரூபாய் வீதமும், 50 பேருக்கு 20 ஆயிரம் ரூபாய் வீதமும் வழங்கப்படும். தேசிய சிறுபான்மை கமிஷனின் பரிந்துரையின் அடிப்படையில் இத்தொகை வழங்கப்படுகிறது.

முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து சிறையிலடைத்து கொடுமைப்படுத்திய போலீசாரின் சம்பளத்தில் இருந்து இத்தொகையை ஈடாக்கவேண்டும் என சிறுபான்மை கமிஷன் சிபாரிசு செய்திருந்தது.

2007-மே மாதம் 18-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஜும்ஆ தொழுகையின் போது ஹைதராபாத் நகரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இக்குண்டுவெடிப்பில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தை தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் அநியாயமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஐந்து பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். சம்பவம் நிகழ்ந்து மறுதினம் ஏராளமான முஸ்லிம் இளைஞர்களை கைது செய்த ஆந்திர போலீஸ், ஹர்கத்துல் ஜிஹாதுல் இஸ்லாமி(ஹுஜி), லஷ்கர்-இ-தய்யிபா, இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம்(சிமி) ஆகிய இயக்கத்தை சார்ந்தவர்கள் என குற்றம் சாட்டியது.

வழக்கில் அநியாயமாக கைது செய்யப்பட்ட அனைத்து நிரபராதிகளிடமும் மன்னிப்புக் கோருவேன் என ஆந்திர மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி அறிவித்துள்ளார். இவர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கவேண்டும் என நேற்று முன்தினம் ஆந்திர சட்டசபையில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீனின் தலைவர்(எம்.ஐ.எம்) அக்பருத்தீன் உவைஸி வலியுறுத்தினார்.

காவல்துறையுளும் ஆர் எஸ் எஸ் புகுந்துவிட்டார்கள் என்பதற்கு மேற் படித்தவைகளிருந்து நாம் புரிந்து கொள்ளாலாம். (உண்மையான குற்றவாளி ஆர் எஸ் எஸ் வெறியர்கள்தான் என்பது பின்பு ஊர்ஜிதமானது.அவர்கள் தற்போது கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள் )

தன் வாயால் கெட்ட வடிவேல் !!!

தவளை தன் வாயால் கெடுவது போல, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், திமுக.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதாக சொல்லி எக்கு தப்பா பேசி, சினிமா வாய்பே இல்லாத அளவுக்கு தள்ளப்பட்டார் நடிகர் வடிவேலு.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர், மீண்டும் திரையில் வரப்போகிறார் வடிவேலு. நடிகர் பிரசாந்த் நடிப்பில், அவரது அப்பா தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள மம்பட்டியான் படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வடிவேலு. படம் முழுக்க பிரசாந்த் உடன் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடத்தில் வருகிறார் வடிவேலு. வடிவேலுவின் இந்தவேடம், ஒரிஜினல் படமான மலையூர் மம்பட்டியானில் கவுண்டமணி செய்த மைனர் வேடமாகும்.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, எந்த ஒரு டைரக்டரும் வடிவேலுவை வைத்து இயக்க முன்வராத நிலையில், தியாகராஜன் மட்டும் வடிவேலுவை வைத்து தைரியமாக படத்தை இயக்கியுள்ளார். ஏற்கனவே வின்னர் படத்தில் பிரசாந்த் உடன் வடிவேலு நடித்த காமெடி மிக பிரபலம். அதன்படியே இந்தபடத்திலும் வடிவேலுவை நடிக்க வைத்திருக்கிறார் தியாகராஜன்.

இப்படம் வருகிற 16ம் தேதி முதல் உலகமெங்கும் ரிலீசாக இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு வருடமாகவே வடிவேலுவை திரையில் பார்க்காமல் ஏங்கி தவித்த ரசிகர்களுக்கு, இந்த படம் பழைய சரவெடி வடிவேலுவை நிச்சயம் பிரதிபலிக்கும் என நம்பலாம்.

Wednesday, December 7, 2011

மலிவு விலை மயக்கத்துக்கு அடிமையாகும் பள்ளி மாணவர்கள்!!

மது, ஹெராயின், கஞ்சா போன்றவை தான் போதை தரும்' என கருதினால், நீங்கள் விவரம் தெரியாதவர்கள் என்று அர்த்தம். பள்ளி மாணவர்களிடம் கேளுங்கள், "பெட்ரோல், பஞ்சர் ஒட்டும் பேஸ்ட், இங்க்கை அழிக்கும் ஒயிட்னர்' என, எந்தெந்த பொருட்களில் போதை இருக்கிறது என, "கிறக்கத்துடன்' கூறுவர்.

நேற்று மதியம், மதுரை ஒத்தக்கடையில், அரசுப் பள்ளி 10ம் வகுப்பு மாணவர் ஒருவர், "கிறங்கி' விழுந்தார். பல் உடைந்தும், முகத்தில் காயம் ஏற்பட்டும், தற்போது, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இவரது இந்நிலைக்கு காரணம், "ஒயிட்னர்!'. பெட்ரோல் விற்கிற விலையில், அதை வாங்கி, "மோப்பம்' பிடித்து, போதை ஏற்ற முடியாது என்பதால், இவரை போன்ற சில மாணவர்களுக்கு, மலிவான விலையில் கிடைக்கும், "ஒயிட்னர்' போதையை தருகிறது. பள்ளி இடைவேளையின்போது, வெளியே வந்து, மூக்கால் ஒரு இழுப்பு இழுத்துக் கொண்டு, பள்ளி முடியும் வரை, போதையுடன் இருக்கின்றனர். ஆசிரியர்கள் கண்டித்தும், மாணவர்கள் திருந்தவில்லை. போலீஸ் மிரட்டியும் பயப்படவில்லை. பெற்றோரும் கண்டிப்பதாக இல்லை.

இதுகுறித்து, அப்பகுதி எவர்சில்வர் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் அலி கூறுகையில், "பலமுறை மாணவர்களை கண்டித்து விட்டோம். திருந்துவதாக இல்லை. இவர்கள் மீது, பள்ளி நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே திருந்துவர். மாணவர்களுக்கு படிப்பை மட்டும் கற்றுத் தராமல், போதையால் ஏற்படும் விபரீதங்களையும், ஆசிரியர்கள் பாடம் எடுத்தால், மாணவர்கள் இதிலிருந்து விடுபட வாய்ப்புண்டு'' என்றார்.

இந்த போதையால் ஏற்படும் பாதிப்பு குறித்து, மூளை நரம்பியல் டாக்டர்கள் கூறுகையில், "இதே போல் நகப் பூச்சு, பெயின்ட் போன்றவற்றை நுகர்ந்தும், போதை ஏற்றுகின்றனர். காரணம், அதில் உள்ள காரீயம். இது அதிகரிக்கும்போது, நரம்பு செல்களை பாதிக்கிறது. தொடர்ந்து உடம்பில் இருந்தால், மூளை, தண்டுவடமும், மனநலமும் பாதிக்கப்படும். இவர்களிடம், "கவுன்சிலிங்' செய்வதன் மூலம் திருத்த முடியும்'' என்றனர்.

குடல் புண்ணிலிருந்து விடுபட பச்சை வாழை

உள் குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது.

பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.

Tuesday, December 6, 2011

காதல் கல்யாணத்திற்கு ப்ரேக் போடும் சினேகா!!

சினேகாவுக்கும், பிரசன்னாவுக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இதனை பிரசன்னா சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இது குறித்து அவர் கூறும்போது, அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்தபோது இருவருக்கும் தொழில் ரீதியான நட்பு இருந்தது. அதன் பிறகு சினேகா நடவடிக்கைகளில் ஈர்ப்பானேன். அவர் பெரிய நடிகை ஆனாலும் தலைக்கனமோ, பந்தாவோ இல்லாமல் பழகினார். அந்த குணங்கள் எனக்கு பிடித்தது.

மூன்றரை வருடங்கள் எங்களுக்குள் காதல் இருந்தது. அவசரப்படாமல் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள கால அவகாசம் எடுத்தோம். நிறைய யோசித்தோம். இறுதியில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தோம். இரு வீட்டு குடும்பத்தினரும் திருமணத்துக்கு சம்மதித்து விட்டனர். திருமணம் மற்றும் நிச்சயதார்த்த தேதிகளை அவர்கள் முடிவு செய்வார்கள் என்றார்.

திருமணம் குறித்து சினேகா இதுவரை எதுவும் பேசாமல் இருந்தார்., திருமணம் எப்போது என்று அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது உடனடியாக திருமணம் செய்து கொள்ளமாட்டோம் என்றார்., இது பிரசன்னாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளமான பேஸ்புக்கில் இந்திய மாணவன் தேர்வு !!

புதுடில்லி : சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனம், சர்வதேச அளவில் பிரபலமான சமூக வலைதளமான பேஸ்புக், தங்களின் நிறுவனத்துக்கு, திறமையான ஆட்களைத் தேர்வு செய்யும் பணியை தீவிரப்படுத்தி வருகிறது.

கடந்தாண்டு இந்தியாவில் இருந்து இரண்டு மாணவர்களை, வளாகத் தேர்வு மூலம், இந்நிறுவனம் தேர்வு செய்தது. இதில் ஒருவர், சென்னை ஐ.ஐ.டி.,யில் படித்த மாணவர்.

இந்தாண்டும் டில்லி ஐ.ஐ.டி.,யில், பேஸ்புக் நிறுவனம் சார்பில் வளாகத் தேர்வு நடந்தது. இதில், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும், அன்கூர் தாகியா என்ற மாணவர் தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு, ஒரு ஆண்டுக்கு 65 லட்ச ரூபாய் சம்பளமாக தரப்படும் என, அந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது. தாகியா, படிப்பு முடிந்தவுடன், கலிபோர்னியாவில் உள்ள பேஸ்புக் நிறுவனத்தில், புரோகிராமராக பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்.

இதுகுறித்து தாகியா கூறுகையில்,"பேஸ்புக் வலைதளத்தில் பணிபுரிய வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. தற்போது அது நிறைவேறியுள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.

Monday, December 5, 2011

மிதுன் இர்பான் பதானுக்கு வாய்ப்பு

ஆமதாபாத், டிச.6: ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இருந்து பிரவீண் குமார் காயம் காரணமாக விலகியதால் அவருக்குப் பதில் அபிமன்யூ மிதுன் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணியில் இர்ஃபான் இடம்பெற்றுள்ளார். உமேஷ் யாதவ் முன்னதாகவே ஆஸ்திரேலியாவுக்கு செல்லவிருப்பதால் கடைசி 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடமாட்டார். அவருக்குப் பதிலாகவே பதான் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றபடி ஒருநாள் அணியில் எந்த மாற்றமும் இல்லை.

2009-ம் ஆண்டில் இருந்து பதானுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஓரம் கட்டப்பட்டிருந்த பதான், ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடி 21 விக்கெட் வீழ்த்தியதைத் தொடர்ந்து இப்போது மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அணி விவரம்: வீரேந்திர சேவாக் (கேப்டன்), கெüதம் கம்பீர், விராட் கோலி, பார்திவ் படேல், ரோஹித் சர்மா, வினய் குமார், இர்ஃபான் பதான், அபிமன்யூ மிதுன், வருண் ஆரோன், அஸ்வின், மனோஜ் திவாரி, ரவீந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா, அஜிங்க்யா ரஹானே, ராகுல் சர்மா.

நண்பனை ஹிட் படமாக்க அமீர் அழைப்பு! ஷங்கர்

இந்தியில் சூப்பர் ஹிட்டாகி, வசூலை வாரி குவித்த படம் 3 இடியட்ஸ். அமீர்கான், மாதவன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இப்படம் தமிழில், நண்பன் என்ற பெயரில் உருவாகியுள்ளது.

விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இப்படத்தின் சூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் படத்தின் ஆடியோ ரிலீசை வருகிற 15ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளனர். நடிகர், நடிகைகளின் நடனம், பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது. இந்த விழாவுக்கு நடிகர் அமீர்கானை அழைக்க முடிவெடுத்துள்ளனர். அவரை அழைத்து வரும் முயற்சியில் இயக்குனர் ஷங்கர் ஈடுபட்டுள்ளார்.

சமீபகாலமாக தமிழ் படங்களின் ஆடியோவை, பாலிவுட் பிரபலங்களை வைத்து ரிலீஸ் செய்யும் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே பெப்சி விஜயன் தன்னுடைய மார்க்கண்டேயன் படத்தின் ஆடியோ ரிலீசுக்கு சல்மான் கானை அழைத்து வந்தார். அதேபோல் தமிழ் ரா-1 படத்தின் ஆடியோவை, படத்தின் நாயகன் ஷாரூக்கானை வைத்து ரிலீஸ் செய்தனர். அந்தவரிசையில் இப்போது நண்பன் படத்தின் ஆடியோவையும் அமீர்கானை வைத்து வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Sunday, December 4, 2011

தீவிரவாதம் என்கிற மாயையில் தகவல்களை திருடும் வ(க)ல்லரசுகள் அசாஞ்ஜே!!

புதுடெல்லி: உலகெங்கும் உள்ள அரசாங்கங்கள் இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் எனும் போர்வையில் தனி மனித சுதந்திரத்தை அளவுக்கு மீறி கட்டுப்படுத்துவதாகவும் தனி நபர்களின் அனுமதியில்லாமல் அவர்களின் தொலைபேசி உரையாடல்களையும் மின்னஞ்சல்களையும் கண்காணிப்பதன் மூலம் அவர்களின் அந்தரங்கத்தில் தலையிடுவதாகவும் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்ஜே பரபரப்பு தகவலை தெரிவித்தார்.

லண்டனிலிருந்து வீடியோ கான்பரசிங் மூலம் பேசிய அசாஞ்ஜே தன் உரையில் இந்தியர்களின் சுவிஸ் வங்கி விபரம் அடுத்த ஆண்டு வெளிவரலாம் என்றும் மேலும் இந்தியாவின் சிபிஐ மற்றும் மத்திய அரசின் மெயில்களை ஹேக் செய்து தகவல்களை சீனா உறிஞ்சுவதாகவும் அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக சீனா இக்காரியத்தை செய்வதாகவும் உலகெங்கும் உள்ள அரசாங்கங்கள் மின்னஞ்சல்களையும் தொலைபேசிகளையும் கண்காணிப்பது தீவிரவாதிகளை பிடிப்பதற்காக அல்ல என்றும் தங்கள் அரசின் வளர்ச்சிக்கே என்றும் கூறினார்

அமெரிக்க நிறுவனங்களான லாக்ஹீட் மார்டின் மற்றும் போயிங் போன்றவைகள் இது மாதிரி தகவல்களை திருடி விற்பதில் முண்ணணியில் உள்ளன என்றும் எச்சரித்த அசாஞ்சே இஸ்லாமிய தீவிரவாதம் எனும் மாயை இவர்களின் சதித்திட்டத்தை மறைக்கவே என்றும் கூறினார்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தை அமுல்படுத்தியதின் மூலம் மேற்கு நாடுகளை விட தனி நபர் சுதந்திரம் இந்தியாவில் மேம்பட்டதாக இருக்கிறது என்றும் அசாஞ்சே கூறினார்.

மனிதனுக்கு மிகவும் துன்பம் தருவது எது !?

மனிதர்களுக்கு மிகவும் துன்பமானது எது என்று கேட்டால், பிறப்பும், இறப்பும் தான்., பல பிறவிகள் எடுப்பதால், பல முறை இந்தத் துன்பங்களை ஜீவன் அனுபவிக்கிறது; அதே போல், இறக்கும் போதும் துன்பம் தான். நோய்வாய் பட்டு படுத்து விடுகிறான். அப்போது அவனுக்கு, "நோயும், பாயும்'தான் துணை.

"பாயும்தான் துணை' என்பதன் பொருள் என்னவெனில், வயதான காலத்தில், பிழைக்க மாட்டான் என்ற நிலை வரும் போது, இவனை மெத்தையிலா படுக்க வைப்பர்? ஒரு பாயை விரித்து - அதுவும் கூட பழைய பாயாக இருக்கும் - அதில், படுக்க வைத்து விடுவர். அந்த பாய் தான் இவருக்குத் துணை.

அந்த நேரம் கண் பஞ்சடைத்து விடும்; காது கேட்காது; உடலில் வலிமை இராது. கஞ்சி குடித்தால் கூட ஜீரணமாவது கஷ்டம். வைத்தியர் வந்து கையை பிடித்துப் பார்த்து, "அக்னி மந்தம்' என்பார். அதாவது, வயிற்றில் ஜட ராக்னியின் உஷ்ணம் குறைந்து விட்டது என்று பொருள்., இப்படி அக்னி மந்தம் ஏற்பட்டு விட்டால், எதை சாப்பிட்டாலும், ஜீரணமாகாது., அந்த நேரம் தான் பல வித எண்ணங்கள் தோன்றும். "அடடா... வீட்டை யாருக்கு எழுதி வைப்பது, நிலம் யாருக்கு, நகை, பணத்தை யாருக்குக் கொடுப்பது...' என்றெல்லாம் எண்ணம் வரும். கடைசியில் எதையும் சரிவர செய்யாமல், போய் விடுகிறான்.

இந்த பிறப்பு, இறப்பு, மூப்பு, நோய்கள் எல்லாமே மனிதனின் பாவங்களின் பலன் தான். ஒரு வீடு கட்டப்படுகிறது. அதுதான் பிறப்பு. அந்த வீடு பிறகு பழுதடைந்து விடுகிறது; அதுதான் நோய். உடனே, பழுது பார்க்கப்படுகிறது; இதுதான் சிகிச்சை. அப்படியும் அது நாளடைவில் ஒவ்வொரு இடமாக இடிந்து விழுகிறது. இதுதான் அதன் மூப்பு. பிறகு, பழுது பார்த்தும் பயனில்லாமல் இடிந்து விழுந்து விடுகிறது; இதுதான் அதன் இறப்பு., எந்தப் பொருளுக்கும், எந்த மனிதனுக்கும் இது போன்ற பிறப்பு, நோய்கள், மூப்பு, இறப்பு என்பவை உண்டு. ஆகவே, கடைசியில் இறப்பு என்பது நிச்சயமானது.

(சொந்தங்கள் அனைத்தும்: பணம், நகை, சொத்துக்கள் இருந்தால் உள்ளே இல்லையென்றால் வெளியே உள்ள திண்ணைதான் ஊன் உறக்கம் தங்குமிடம் அனைத்தும் வயதானவர்களுக்கு.)

நன்றி, சகோதரி ராஜம்.

Saturday, December 3, 2011

தைரியமாக தந்திருக்கும் "போராளி" விமர்சனம்

சசியும், நரேஷும் போட்டிபோட்டு நடித்துள்ளனர் என்றே சொல்லவேண்டும்., ஏனென்றால். படம் துவங்கியவுடன் சீட் நுனிக்கு வந்தால் படம் முடியும் வரை நம்மை அப்படியே உட்கார வைத்து விடுகின்றன கதாபாத்திர அமைப்பு., (தைரியமாக தந்திருக்கும் இயக்குனரை பாராட்டலாம்.)

ஒரு அபார்ட் மென்டுக்கு சசிகுமாரும் அல்லரி நரேஷும் குடி வருகிறார்கள், அங்கே இருபவர்களுகெல்லாம் உதவி செய்து நல்ல பெயரை பெறுகிறார்கள், ஆனால் அங்கே இருபவர்களுகேல்லாம் அதிர்ச்சியான செய்தி ஒன்று வருகிறது கிரமத்தி சசியும் நரேஷும் மன நிலை தவறியவர்கள் என்று,.. ஏன் அப்படி ஆனார்கள்.

கதை என்ன என்பதை முடித்தவரை சுவாரசியமாக கொடுத்திருகிறார் சமுத்திரகனி தெலுங்கு நடிகராக இருந்தாலும் நன்றாக நடித்திருக்கிறார் நரேஷ்., சசிக்குமார் மிகச்சரியாக பாத்திரத்திற்கு பொருந்துகிறார். இயல்பாக நடிக்கிறார். தன்னம்பிக்கையுடன் கூடிய கதாபாத்திரம். சில நாட்களாக மனம் சரியில்லாமல் இருந்த எனக்கு அந்த கதாபாத்திரம் தான் தன்னம்பிக்கையை ஊட்டியுள்ளது.

நரேஷ் துடிப்பாகவும் நகைச்சுவையுடனும் நடித்துள்ளார். நாக்கை கடித்துக் கொள்ளும் போது கண்கலங்க வைக்கிறார். காதலுக்காக அவர் முயற்சிக்கும் ஒவ்வொரு காட்சியும் சிரிப்பை வரவழைக்கிறது. கவிதை சொல்லும் போது இரண்டு புள்ளி ஒரு ஆச்சரியக்குறியுடன் நம் மனதில் அமர்ந்து கொள்கிறார்.

சுவாதி நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ்த்திரையில் தோன்றுகிறார். பார்க்க அட்டகாசமா ஆக்ரோசமான உள்ளார். கஞ்சா கருப்பு, பரோட்டா சூரி தங்களுக்கு கொடுத்த பாத்திரத்தை உணர்ந்து நன்றாக நடித்துள்ளனர்., எப்போதும்போல் இதிலும் ஹாட்ரிக் அடிக்கும் சசி கூட்டணி., தெலுங்கு உரிமையை நரேஷ் வங்கி இருபதாக கோலிவுட் பட்சி பல்லிளிக்கிறது.

புதிதாக துவக்கப்பட உள்ள பேஸ்புக், அஸிமோவ்

இஸ்தான்புல்: ஃபேஸ்புக்கின் மாதிரியில் முஸ்லிம் இளைஞர்களுக்காக சமூக இணையதளம் ஒன்று துவங்கவிருக்கிறது.

ஸலாம்வேர்ல்ட்.காம் என்ற பெயரிலான இணையதளம் அடுத்த வருடம் துவங்கும். முஸ்லிம் தொழிலதிபர்கள் சிலர் இத்திட்டத்தை துவக்க உள்ளனர். இளைஞர்களிடையே பொதுவான பார்வை மற்றும் இஸ்லாத்தின் விழுமியங்களை பரப்புரை செய்வதற்கு இந்த இணையதளத்தை துவங்க உள்ளதாக இதன் நிறுவனர்களில் ஒருவரான அஹ்மத் அஸிமோவ் தெரிவித்துள்ளார்.

இஸ்தான்புல்லை தலைமையிடமாக கொண்ட இந்த இணையளத்திற்கு மாஸ்கோவிலும், கெய்ரோவிலும் அலுவலகங்கள் செயல்படும். 30 நாடுகளில் ஒருங்கிணைப்பாளர்கள் செயல்படுவர். மூன்று வருடங்களுக்குள் 50 மில்லியன்(5 கோடி) பயனீட்டாளர்களை ஈர்க்க இயலும் என நம்புவதாக அஸிமோவ் கூறினார்.

Friday, December 2, 2011

லஞ்சம் கேட்ட அதிகாரிக்கு பாம்பை வைத்து பாடம் கற்பித்த ஹக்குல்

பஸ்தி (உ.பி): அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு பாடம் புகட்ட உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் வித்தியாசமான நடவடிக்கை.

பாம்பாட்டியான ஹக்குல் என்பவர் தனது கோரிக்கையை உதாசீனப்படுத்திய ரெவின்யூ அதிகாரிகளின் அணுகுமுறையில் மனம் நொந்துபோய் நாகப்பாம்புகள் உள்பட ஒரு டஜன் பாம்புகளை ரெவின்யூ அலுவலகத்தில் பையில் கொண்டு சென்று விட்டுள்ளார்.

பாம்புகள் அலுவலகத்தின் நாற்காலிகளிலும், மேஜைகளிலும் ஏறி படமெடுத்து ஆட ஆடிப்போன அதிகாரிகள் அலுவலகத்தை விட்டு விரண்டோடியுள்ளனர்.பாம்புகள் படமெடுத்து ஆடுவதை அலுவலகத்திற்கு வெளியே மக்கள் திரண்டு ரசித்துள்ளனர்.

பாம்புகளை பிடித்து அதனை பாதுகாத்து வருபவர் ஹக்குல்.இவற்றை பரிபாலித்து வர தனக்கு நிலம் தேவை என குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு கடிதம் எழுதியிருந்தார்.இதனைத்தொடர்ந்து இவரது கோரிக்கையை நிறைவேற்ற மாநில அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

ஆனால், ரெவின்யூ அதிகாரிகளோ ஹக்குலிடம் நிலம் வழங்க லஞ்சம் கேட்டுள்ளனர்.இதனால் மனம் நொந்துபோன ஹக்குல் லஞ்சம் கேட்ட அதிகாரிகளுக்கு பாடம் புகட்ட பாம்புகள் கொண்டுவந்து அலுவலகத்தில் விட்டுள்ளார்.

பாம்பாட்டியான ஹக்குலின் புகார் கிடைத்துள்ளதாகவும்,அவருக்கு தாமதிக்காமல் நிலம் வழங்கப்படும் என சப் டிவிசனல் மாஜிஸ்ட்ரேட் அறிவித்துள்ளார்.தனது பாம்பு தந்திரம் வெற்றிப்பெற்றதில் மகிழ்ச்சியில் உள்ளார் ஹக்குல்.

தியேட்டர் அதிபர்களால் சிக்கலில் சிம்பு?

இந்தியில் சல்மான்கான் நடித்து ஹிட்டான “டபாங்” படம் தமிழில் சிம்பு நடிக்க “ஒஸ்தி” என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. தரணி இயக்கியுள்ளார். இப்படம் வருகிற 8-ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஒஸ்தி படத்தை திரையிட மாட்டோம் என தியேட்டர் அதிபர்கள் சங்கம் அறிவித்து உள்ளது. இந்த படத்தின் “சாட்டி லைட்” உரிமை பெற்றுள்ள டி.வி. நிறுவனம் தங்களுக்கு தர வேண்டிய டெபாசிட் தொகையை திருப்பி தர வேண்டும் என்றும் பணத்தை தராவிட்டால் ஒஸ்தி படத்தை திரையிட மாட்டோம் என்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் அறிவித்து உள்ளனர்.

இது குறித்து ஒஸ்தி பட தயாரிப்பாளருக்கும் தியேட்டர் அதிபர் சங்கத்துக்கும் இடையே தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடந்தும் முடிவு ஏற்படவில்லை. இன்னும் பேச்சு வார்த்தை நடப்பதாகவும் மாலை முடிவு தெரியும் என்றும் தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்க பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Thursday, December 1, 2011

வாஸ்து பார்ப்பவற்கு வாக்கிட்ட ஏமாளிகள் குஷ்பூ !!

தென்சென்னை தியாகராய நகர் பகுதி தி.மு.க. சார்பில் தியாகராயநகர் பஸ் நிலையம் அருகே இன்று மாலை 6 மணிக்கு பால் விலை, பஸ் கட்டண உயர்வை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நடிகை குஷ்பு பங்கேற்று பேசினார்., அப்போது அவர், ’தலைமைச்செயலகத்தை வாஸ்து பார்த்து ஒதுக்கி வச்சுட்டாங்க. அதனால அங்கே போக மறுக்கிறாங்க.

எதுக்கெடுத்தாலும் மருத்துவமனை கட்டுகிறேன் என்று சொல்கிறாங்க. மருத்துவமனை மீது அவருக்கு திடீருன்னு அப்படி என்ன ஆசை வந்துவிட்டது என்று தெரியவில்லை.

ஆட்சியில் இல்லாதபோதுதான் கொடநாடு போய் ஓய்வு எடுத்தாங்க. ஆட்சியில் இருக்கும்போதும் கொடநாடு போய் ஓய்வு எடுக்கிறாங்க.

மாற்றம் வேண்டும் என்று மக்கள் ஏதோ ஒரு நம்பிக்கையில் ஓட்டுப்போட்டாங்க. ஆனா, அவுங்க தலையில பாறாங்கல்லை தூக்கிப்போட்டுட்டாங்க.

ஏன் இந்த கொலைவெறி - இதுதான் தமிழக மக்கள் முதல்வர் ஜெயலலிதாவை பார்த்துக்கேட்கும் கேள்வி.

திமுக என்றைக்குமே தோற்காது. மக்கள்தான் தோற்று விட்டார்கள். இதைத்தான் நான் வாக்கு எண்ணிக்கை முடிவின்போதே சொன்னேன்’’ என்று பேசினார்.

நீண்ட ஆரோக்கிய ஆயுள் பெற பீன்ஸ்

பீன்ஸ் இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கரைத்து இரத்தத்தை சுத்தமாக்குகிறது. இரத்தக் குழாய் அடைப்புகளைப் போக்குகிறது. உயர் இரத்த அழுத்தத்தை சீர்செய்கிறது. இதய அடைப்பு, இதய நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

மேலும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து, அதிக உடல் எடையைப் போக்குகிறது.

· பீன்ஸை கொதிக்கவைத்து ஆறிய நீரில் முகம் கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.

· பீன்ஸ் சருமத்தைப் பாதுகாக்கும். வியர்வையைத் தூண்டும்.

· தொண்டைப்புண், வறட்டு இருமல், நாவறட்சி இவற்றைப் போக்கும்.

· கை, கால் நடுக்கத்தைப் போக்கும்.

· நீரிழிவு நோயாளிகள் பீன்ஸை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நோயினால் உண்டான பாதிப்புகள் குறையும்.

· பல் வலியைப் போக்கும். உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து, வாத, பித்த, கபம் என்னும் முக்குற்றத்தை சீராக வைத்திருக்கும்.

· நீண்ட நாள் ஆறாத புண்களின் மீது, பீன்ஸ் வேகவைத்த நீரை ஆறவைத்து புண்களைக் கழுவி வந்தால் புண்கள் விரைவில் ஆறும்.

பீன்ஸை பொரியல், அவியல், சாம்பார் என பலவாறு சமைத்து உண்ணலாம்.

பீன்ஸைப் பயன்படுத்தி நீண்ட ஆரோக்கியம் பெறுவோம்.

Wednesday, November 30, 2011

கதை அம்சமா கட்சை கட்ட ரெடி ஜெனிலியா!!

ஜெனிலியா இரண்டு இந்திப் படங்களில் பிசியாக நடிக்கிறார். ஒரு தெலுங்கு படமும் கைவசம் உள்ளது. தமிழில் அவர் நடித்த `வேலாயுதம்' படம் தீபாவளிக்கு ரிலீசானது. வேறு தமிழில் படங்கள் இல்லை.

தமிழை விட்டு ஒதுங்கி முழுக்க இந்திப் படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளீர்களா? என்று ஜெனிலியாவிடம் கேட்டபோது மறுத்தார். ஜெனிலியா கூறியதாவது

எனக்கு மொழிபேதம் கிடையாது. தமிழ், இந்தி, தெலுங்கு என எல்லா மொழிகளிலும் தொடர்ந்து நடிப்பேன். தமிழில் `வேலாயுதம்' படத்தில் நடித்து உள்ளேன். உருமியிலும் நடித்து இருக்கிறேன். நல்ல கதையம்சம் உள்ள படங்கள் என்றால் சம்பளத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நடிப்பேன்.

செய்யும் தொழிலை முழு ஈடுபாட்டுடன் பயபக்தியோடு செய்தால் வெற்றி பெறலாம். கடுமையாக உழைத்தால் பணம், புகழ் எல்லாம் தானாக வரும். ரிதேஷ்தேஷ்முக்குடன் எப்போது திருமணம் என்று எல்லோரும் கேட்கின்றனர். என் சொந்த விஷயங்களை பேச விரும்பவில்லை. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம்.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!