11:08 AM
Unknown
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பரிக்கல் கிராமத்தில் நரசிங்கபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஜெயலலிதா, சசிகலா இருவரும் இரவில் வந்து வணங்கி செல்வது வழக்கம். சசிகலா, அடிக்கடி இந்த கோவிலுக்கு வந்து பரிகார பூஜை செய்து செல்வார். இதனால் இந்த கோயில் மிக பிரபலம் ஆனது.
இந்த கோவிலின் குருக்கள் ரமணி பட்டாச்சாரியார். ஜெயலலிதா, சசிகலா வந்து பூஜைகள் செய்து வருவதால், சுற்று வட்டார பகுதியில் இந்த குருக்கள் மிகப்பிரபலம்.
கடந்த திமுக ஆட்சியில், இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து, பணி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கிருஷ்ணமுர்த்தி என்பவரை பணியில் அமர்த்தினார்கள்.
தற்போது மீண்டும் அதிமுக ஆட்சியை பிடித்ததும், தான் மீண்டும் கோயில் குருக்கள் ஆக வேண்டும் என்று அதிமுக தலைமையிடம் கேட்டார்.
இதற்கு அதிமுக தலைமையில் ஒப்புதல் தந்தது. இன்று (12.11.2011) அவர் மீண்டும் கோயில் பொறுப்பை ஏற்கவிருந்தார்.
இந்நிலையில் அவர் நேற்று இரவு 8 மணிக்கு, டூவீலரில் தனது வீட்டிற்கு போகும்போது ரயில்வே கிராசிங்கில் ஒரு மாருது ஆம்னி வேன் இவரது டூவீலரை இடித்துள்ளது. அதில், கீழே விழுந்த குருக்களை, மாருதி வேனுக்குள் அள்ளிப்போட்டுக்கொண்டு சென்றூவிட்டது மர்ம கும்பல்.
இந்த சம்பவம் தொடர்பாக, திருநாவலூர் போலீலில், குருக்களின் மனைவி வத்சலா புகார் கொடுத்துள்ளார். போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
7:13 AM
Unknown
குளுகோஸ் மாற்றத்தினால் பல்வேறு நோய்களுக்கு குழந்தைகள் ஆளாகின்றனர். குறிப்பாக அவர்கள் சர்க்கரை நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.
தாயின் கருப்பையில் எடை குறைவாக வளர்ந்து பிறக்கும் குழந்தைகளுக்கு இன்சுலின் குறைபாடு ஏற்படுகிறது. ஏனெனில் இன்சுலின் ஹார்மோன் தாயின் கர்ப்பபைக்குள் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக உள்ளது.
இன்சுலின் குறைபாட்டால் வளர்ந்த பின்னர் சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்பு உருவாகிறது. எடை குறைவாக பிறக்கும் சில குழந்தைகளின் உடலில் திடீரென சில மாற்றம் ஏற்படுகிறது. இதன் மூலம் அவர்களின் எடையும், கணையத்தின் அளவும் அதிகரிக்கிறது.
அதே நேரத்தில் 2 1/2 கிலோவுக்கும் குறைவான எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு மிக சிறிய அளவிலான கணையம் வளர்கிறது. இந்த காரணங்களாலும் அவர்களின் உடலில் சர்க்கரை நோய் ஏற்படக்கூடிய நிலை உண்டாகிறது.
இந்த தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே, கர்ப்பிணி பெண்கள் 2 1/2 கிலோ முதல் 3 1/2 கிலோ எடையுள்ள குழந்தையை பெற சத்தான உணவை சாப்பிட வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
7:06 PM
Unknown
சினேகாவுக்கும் எனக்கும் ஆரம்பத்தில் தொழில் ரீதியான நட்புதான் இருந்தது. நாளடைவில் சினேகா நடவடிக்கையில் ஈர்ப்பானேன்.
அவர் பெரிய நடிகை. ஆனாலும் அந்த தலைக்கனம் கொஞ்சமும் இல்லை. பந்தா இல்லாமல் பழகுவார். எளிமையாக நடந்து கொள்வார். அந்த குணங்கள் எனக்கு பிடித்தது. சினேகா வாழ்க்கை பூரா என்னுடன் இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். மூன்றரை வருடம் எங்களுக்குள் காதல் இருந்தது. ஆனாலும், அவசரப்படாமல் ஒருவரையொருவர் முழுமையாக புரிந்து கொள்ள கால அவகாசம் எடுத்தோம். நிறைய யோசித்தோம். விவாதித்தோம். அதன் பிறகு திருமணம் செய்து கொள்வதென முடிவு எடுத்தோம்.
முதலில் சினேகாவுக்கு புடவை வாங்கி கொடுத்தேன். அது அவருக்கு ரொம்ப பிடித்தது. எனக்கு சினேகா விலை உயர்ந்த கைக்கடிகாரம் வாங்கி கொடுத்தார். நாங்கள் ரொம்ப நெருக்கமான பிறகு சினேகாவுக்கு அவரது பிறந்த நாளில் `ஐ பேட் வாங்கி கொடுத்தேன். இரு குடும்பத்தாரும் திருமணத்துக்கு சம்மதித்து விட்டனர். விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெறும். அதன் பிறகு திருமண தேதியை முடிவு செய்வோம் என்றார்.
இது மனிதர் உணர்ந்துகொள்ள மனித காதல் அல்ல அதையும் தாண்டி, எல்லா வசனமும் பேசலாம் ஆனால் சினேகாவிடம் இப்போது காட்டும் அன்பைப்போல் கல்யாணத்திற்குப்பிறகும் தொடரட்டும், மேல் குறிப்பிட்டவைகளை எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்திருந்து காதல் மனைவியை காதலியுங்கள்., வாழ்த்துக்கள்.
11:50 AM
Unknown
வீதிகள் தோறும் நமது அரசு மதுபானகடைகளை திறந்து வைத்துள்ளது. இப்போது தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூலமாக கடந்த ஆண்டு 14,965 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும். இந்த வருமானத்தை அடுத்த அண்டில் 20 ஆயிரம் கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளது தமிழக அரசு.
இதையடுத்து வியாபாரத்தை அதிகப்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு மாவட்ட தலை நகரங்களிலும், நவீன வசதிகளுடன், குளிரூட்டப்பட்ட பிரமாண்டமான அளவில் இருக்கும் “எலைட் ஷாப்” என்ற பெயரில் மதுபான கடைகளை திறக்கவும், அது தவிர மாவட்டம் தோறும் ஐந்து இடங்களில் சாதாரண மதுபானகடைகளை திறக்கவும் கோட்ட முதுநிலை மேலாளருக்கு அதிகாரம் அளித்துள்ளது தமிழக அரசு.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், ஐந்து சாதாரண டாஸ்மாக் கடைகளையும், இரண்டு “எலைட் ஷாப்” கடைகளையும் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்து வருகிறார்கள் மண்டல மேலாளர்கள்.
இந்த “பார்”களில் மற்ற “டாஸ்மாக்” பாரில் இருப்பதை காட்டிலும் கொஞ்சம் கூடுதல் “சேவை”க்கட்டணம் வசூலிக்கப்படும் என்று பெயர் சொல்ல விரும்பாத ஒரு அலுவலர் கூறினார்.
அரசு மக்களுக்கு செய்யும் “நல்ல சேவை” மக்களை போதையில் ஆழ்த்தியால்தான் நாட்டை பற்றி நினைக்காமல் அடுத்த தேர்தல் வந்தால் இவரையே முதல்வர் ஆக்குவார்கள் மக்கள்., வாழ்த்துக்கள் முதல்வரே.
7:04 AM
Unknown
கொல்கத்தா : கொல்கத்தாவை சேர்ந்தவர் மஹிமா கன்னா (வயது 23). பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். இதை முடித்த உடன், எம்.பில். ஆய்வு படிப்பை அமெரிக்காவில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் தொடர்ந்தார். 2010-11-ம் கல்வி ஆண்டு எம்.பில். (பொருளியல்) ஆய்வு படிப்பு மாணவ- மாணவிகளில் உயர் ரேங்கில் தேர்ச்சி பெற்றார்., அமெரிக்காவின் உயரிய விருதும் இவருக்கு கிடைத்துள்ளது.
இதையடுத்து, இப்பல்கலைக்கழகத்தின் கவுர பரிசான ஸ்டீவன்சன் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதை வாங்கும் மூன்றாவது இந்தியர் மஹிமா கன்னா ஆவார். நோபல் பரிசு பெற்றவரும் இந்திய பொருளாதார மேதையான அமர்தியா சென் 1956-ல் இவ்விருதை பெற்றார். இவ்விருதை பெற்ற முதல் இந்தியர் இவர். அடுத்து 1967-ல் தேஸ்குப்தா என்ற கேம்பி ரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியருக்கு கிடைத்தது. இப்போது மஹிமா கன்னா இந்த விருது வென்றுள்ளார்.
இந்த 3 பேரில் அமர்தியா சென்னும், மஹிமா கன்னாவும், பொருளாதார பாடத்தில் ஒரே பிரிவை எடுத்து ஆய்வு செய்து எம்.பில் பட்டம் பெற்றுள்ளனர். இதன் மூலம் அமர்தியா சென்னின் சாதனையை இவர் சமன் செய்துள்ளார்.
மஹிமா தற்போது மும்பையில் வர்த்தக கணிப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இந்தியாவிலேயே தொடர்ந்து பணிபுரிவேன் வேலைக்காக வெளி நாடு செல்ல மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.
7:09 PM
Unknown
திரைப்பட கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்ற தமிழ், கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். கதாநாயகியாக மதுஸ்ரீ அறிமுகம் ஆகிறார். இவர்களுடன் நீபா, மாலினி, சார்லி, பாண்டு, பூவிலங்கு மோகன், டி.பி.கஜேந்திரன், சிசர்மனோகர், காதல் சுகுமார் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
சென்னை, மதுரை, ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி ஆகிய இடங்களில் வளர்ந்த இந்த படம் முடிவடைந்தது. படம் தணிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், சமீபகால படங்களில் வெட்டு, குத்து, ரத்தம் இல்லாத தரமான படம் என்று பாராட்டி, `யு சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.
இந்த படத்துக்கு, ஆதிஷ் உத்திரியன் இசையமைத்து இருக்கிறார். திரைப்பட கல்லூரி மாணவரான ஜி.கனகராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.ஜி.அலிகான், எம்.கவுரிசங்கர் ஆகிய இருவரும் இயக்கியுள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை தயாரித்திருக்கிறார் எம்.கவுரிசங்கர்.
தாயை மதிக்காத பிள்ளை, கடைசியில் என்ன நிலையை அடைவான்? என்பதை கருவாக வைத்து உருவாகி வரும்`வழிவிடு கண்ணே வழிவிடு.
12:40 PM
Unknown
அய்ஸ்வால் : மிசோரம் மாநிலத்தில், 39 பெண்களை மணந்து, 160 குடும்ப உறுப்பினர்களுடன் ஒன்றாக வசித்து வருகிறார், ஒரு அதிசய மனிதர்.
வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் உள்ளது பக்தவாங் டியாங்னுவாம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சையோனா, 67. விவசாயம், மரச்சாமான் தயாரித்தல் உள்ளிட்ட தொழில்களை நடத்தி வரும் சையோனாவுக்கு, 39 மனைவிகள்.
முதல் மனைவியின் பெயர் ஜதியாங்கி, 71. இவருக்கு ஏழு குழந்தைகள். கடைசி மனைவி பெயர் வன்லால்சியாமி, 31. இவருக்கு, ஐந்து வயது மகள் இருக்கிறாள். சையோனாவுக்கு, 15 மருமகள்கள் உள் ளனர். 29 மகள்கள் திருமணமாகி, கணவருடன் தனியாக வசிக்கின்றனர்.
நான்கு மாடி கட்டடத்தில், 101 பெரியவர்களும், 59 சிறுவர்களும் ஒரே குடும்பமாக வசிக்கின்றனர். கடந்த, 2000ம் ஆண்டு சையோனா, கடைசி திருமணம் செய்து கொண்டார். ஒட்டு மொத்த குடும்பத்தினரும், ஒரே சமையல் அறையில் சமைத்து, ஒன்றாக சாப்பிடுகின்றனர்.
காலை உணவுக்கு 50 கிலோ அரிசியும், இரவு உணவுக்கு 35 முதல் 50 கிலோ தானியத்தையும் சமைக்கின்றனர். அத்துடன் ஒவ்வொரு நாளும் 25 கிலோ உருளைக்கிழங்கு, 15 கிலோ பருப்பு மற்றும் ஏராளமான அளவில் காய்கறிகள் இவர்களின் வீட்டிற்கு தேவைப்படுகின்றன. மாமிசம் சமைத்தால், ஒரு நாளைக்கு 45 கிலோ மாமிசம் சமைக்கின்றனர்.
வீட்டு வேலைகளில் யார், யார் என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் என்பதை முதல் மனைவி தீர்மானிக்கிறார். வீட்டில் உள்ள ஆண்களை மற்ற வேலைகளுக்கு அனுப்புகிறார் சையோனா. வீடு கட்டுமானப் பணி மற்றும் தோட்ட வேலைகள் போன்றவற்றுக்கும் ஆட்களை அனுப்புகிறார்.
7:02 AM
Unknown
அஹ்மதாபாத்: 2002-ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையின் போது சர்தார்புராவில் 33 பேரை உயிரோடு தீவைத்து கொலைச் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 73 பேரில் 42 நபர்களை குஜராத் விரைவு நீதிமன்றம் விடுவித்துள்ளது. மீதமுள்ள 31 பேர் குற்றவாளிகள் என அறிவித்தது.
2002 பிப்ரவரி 28-ஆம் தேதி இரவில் இவ்வழக்கு தொடர்பான மிகக் கொடூரமான சம்பவம் நிகழ்ந்தது.சர்தார்புரா வீடுகளில் அத்துமீறி நுழைந்த ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் வீடுகளை தீவைத்துக் கொளுத்தினர். இதில் வீடுகளிலிருந்த 20 பெண்கள் உள்பட 33 பேர் உடல் கருகி இறந்தனர்.
கொலை, கொலைமுயற்சி, கலவரம், தீவைப்பு, குற்றகரமான சதித்திட்டம் ஆகிய வழக்குகள் ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் மீது சுமத்தப்பட்டுள்ளன., இதற்கு முழு காரணம் குஜராத் அரசையே சாரும் ஏனென்றால்., சம்பவம் நேரும்போது குஜராத் அரசும், அரசு அதிகாரிகளும் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.
இது அனைத்தும் எதார்த்தமாக நடந்தது அன்று, திட்டமிட்டு சிறுபான்மையினரை கொள்ளவும், அவர்கள் சொத்துக்களும் சூறை ஆடவும் இந்த ஹிந்துத்துவா தீவிரவாதிகளால் திட்டமிட்ட சதி, இதுதான் ஜன நாயக நாடு நம்புவோம். குஜராத்தை ஆள்வது முதல்வர் முகமூடியில் இருக்கும் ஒரு கேடி.
7:07 PM
Unknown
பட வாய்ப்புகள் குறைய குறைய அதிரடியாக தனது பெயரை செய்தி தாள்களில் உலவ விட்டுக்கொண்டுள்ளார் நடிகை அமலா பால்.
அதன் முன்னோட்டமாக நடிகை அமலாபால், காத்திருங்கள் கவர்ச்சியில் கலக்குவேன் என்று கூறியிருக்குகிறார்.
படங்களில் வரும் காட்சிகளில் மட்டுமே கலக்குவார் என்று எதிர்பார்த்தால், சினிமா சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கண்களை விரிக்க வைக்கும் வகையில் கவர்ச்சி உடை அணிந்து கலக்குகிறார்.
4:38 PM
Unknown
தமிழ்நாடு அரசு 12000 மக்கள்நல பணியாளர்களை திடீரென வேலைநீக்கம் செய்துள்ளது. இது அதிர்ச்சியளிக்கின்றது. அவர்கள் பணியில் சேர்ந்தபின் மூன்றாவது முறையாக செய்யப்படும் வேலை நீக்கம் ஆகும் இது.
ஆட்சிகள் மாறும்போது பணிநீக்கம் செய்வதும் பணியிலமர்த்துவதும் என்று பந்தாடும் போக்கு உள்ளது. இது சரியல்ல. இப்பணியாளர்கள் வேலையில் சேர்ந்து 20 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. வயதும் அதிகரித்து விட்டது. இச்சூழ்நிலையில் அவர்களது நீண்ட பணி அனுபவம் வயது ஆகியவற்றை கருத்தில் கொண்டு பணிநீக்கத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்.
இந்தப்பணி அவசியமல்ல என அரசு கருதுமேயானால், இப்பணியாளர்களை அரசின் இதரத் துறைகளிலுள்ள காலிப் பணியிடங்களில் அவர்களது அனுபவம் கல்வித் தகுதிக்கேற்ப அரசுப் பணிகளில் அமர்த்த நடவடிக்கை மேற்கொள்ள முன்வர வேண்டும்.
முதலமைச்சருக்கு உண்டான தகுதியே இல்லாமல் தரம் தாழ்ந்து நடந்து கொள்ளும் ஜெயலலிதா., பந்தாடும் போக்கை இவர் நிறுத்தாவிடில் கூடிய விரைவில் மக்களால் வெறுக்கப்பட்டு விரட்டப்படுவார்.
10:30 AM
Unknown
புதுடில்லி : வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான டில்லி டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள போதிலும், மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் 76 ரன்னில் ஆட்டமிழந்து சத சாதனையை இப்போட்டியிலும் தவற விட்டிருப்பது அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள், 1 டுவென்டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா வந்துள்ளது. டெஸ்ட் தொடரின் முதல் போட்டி டில்லியில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 304 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அணியின் துவக்க வீரர்கள் சிறப்பாக விளையாடிய போதிலும், மற்ற வீரர்களின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் இல்லை.
நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் எல்பிடபிள்யூ முறையில் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். 2ம் இன்னிங்சில் இந்திய வீரர்கள் சிறப்பாக பந்துவீச, வெஸ்ட் இண்டீஸ் அணி, 180 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனையடுத்து, 276 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கான 276 ரன்களை எடுத்து 5 விக்கெட் வி்த்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், தொடரில் 1-0 கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
7:16 AM
Unknown
1.தூக்கம் வராமல் கஷ்டப்படுகிறவர்கள் சுத்தமான தேனை இரவில் ஒரு அவுன்ஸ் சாப்பிட்டால் போதும் தூக்கம் தானாக வரும். மேலும் இரவில் சிறிது சூடான பாலில் தேன் கலந்துண்டல் நன்றாக தூக்கம் வரும்.
2.மலச்சிக்கல் உண்டாகாது. வயிறு சுத்தமாகி விடும்.
3.இரவில் சிறுநீர் கழிக்க அடிக்கடி எழுந்து கஷ்டப்படும் மக்கள் தேனை சாப்பிட்டால் அது சிறுநீரைக்கட்டுப்படுத்தும்.
4.கர்ப்பிணிகளுக்கு தேன் மிக மிக நல்ல அமுதமாகும்.
5.காட்டில் வாழும் மக்கள் தம் கைக்குழந்தைகளுக்கு இரவில் தேன் கொடுக்கின்றனர். கைக்குழந்தைகளுக்கு வயதுக்குத் தகுந்த அளவில் தேனைக் கொடுத்தால் குழந்தை நன்றாகத் தூங்குமாம். மேலும் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்த பெரியவர்கள் எல்லோரும் தேனை உண்டார்களாம்.
6:42 PM
Unknown
நடிகை ஹன்சிகாவை, ஜூனியர் குஷ்பு என்று பலரும் வர்ணித்து வருகிறார்கள். இதுபற்றி கருத்து தெரிவித்த ஹன்சிகா, என்னைப் போய் குஷ்பு மேடத்துடன் இணைத்துப் பேசுகிறார்கள். இது எனக்குப் பெருமையாக உள்ளது. அதேசமயம், நான் எங்கே அவர் எங்கே என்று அடக்கத்துடன் கூறியிருந்தார்.
இந்நிலையில், தன்னுடன் ஹன்சிகாவை ஒப்பிட்டுப் பேசுவது குறித்து நடிகை குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் கருத்தில், உண்மையைச் சொல்வதாக இருந்தால், என்னை விட ஹன்சிகாதான் அழகாக இருக்கிறார்.
நான் நடிக்க வந்தபோது எப்படி இருந்தேனோ அதை விட அழகாக இருக்கிறார். அருமையாக நடிக்கிறார். எனவே என்னை அவருடன் ஒப்பிட முடியாது, என்று கூறியுள்ளார்., இருவரும் மாறி மாறி புகழ்ந்து தள்ளுகிறார்கள் என்கிறது கோலிவுட்.
11:25 AM
Unknown
முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், அனைத்து சாட்சிகளையும் விசாரித்து முடித்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த ஜெயலலிதா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டது.
ஆனால், ஜெயலலிதா தரப்பில், வீடியோ கான்பரன்ஸ் அல்லது ஸ்டேட்மென்ட் மூலம் பதிலளிப்பதாகக் கூறி தாக்கல் செய்த மனுவை கோர்ட் நிராகரித்தது. இதையடுத்து, சுப்ரீம் கோர்ட் சென்ற ஜெயலலிதாவுக்கு, அக்., 20ம் தேதி கண்டிப்பாக பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என பணித்தது.
கடந்த 20 மற்றும் 21 ம் தேதிகளில் நீதீபதி மல்லிகார்ஜூனய்யா முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார், இவரிடம் 500 க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. இவை அனைத்தும் சேர்த்த சொத்து மற்றும் நகைகள் தொடர்பானவை.
மீண்டும் 8ம் தேதி ( இன்று ) ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் இன்றும் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். கேள்வி- பதிலை எழுத்து மூலமாக தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது. விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். விலக்கு அளிப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்றும், முதல்வருக்கு வசதி இல்லையென்றால் மாற்று தேதியில் விசாரணையை வைத்து கொள்ள சிறப்பு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யலாம் என்றும் கூறியிருந்தது.
தவறான முன்னுதாரணத்தை மக்களுக்கு காண்பித்து கொடுக்கிறார் தமிழக முதல்வர், கூடிய விரைவில் மக்களிடம் கெட்ட பெயர் வாங்கிவிடுவார் இதில் எந்த சந்தேகமும் இல்லை.
6:58 AM
Unknown
மல்லிகைப் பூவை நம் இந்தியப் பெண்கள் தலையில் சூடிக்கொள்வார்கள். காரணம் மல்லிகைப்பூவானது மணத்தைக் கொடுப்பதுடன் உடல் சூட்டையும் தணித்து மன ஆறுதலையும் அளிக்கிறது.
மல்லிகைப் பூவிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும். சரும எரிச்சல் நீங்கும். சரும பாதிப்புகளைப் போக்கும்.
கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். கண் பார்வை நரம்புகளில் வறட்சித் தன்மையைப் போக்கி பார்வையை தெளிவாக்கும். கண் எரிச்சல், பார்வைக் கோளாறுகள் நீங்கும். பித்தத்தை தணித்து சீராக்கும்.
தலையில் நீர் கோர்த்தல், ஒற்றைத் தலைவலி போன்றவற்றிற்கு மல்லிகை எண்ணெய் சிறந்தது.
ஆறாத புண்களை ஆற்றும் தன்மை மல்லிகை எண்ணெய்க்கு உண்டு.
மல்லிகைப் பூவை நன்கு கையில் வைத்து கசக்கி நெற்றியில் தடவினால் தலைவலி நீங்கும்.
உடலில் வீக்கம் உள்ள பகுதிகளில் மல்லிகைப்பூவை அரைத்து பூசிவர வீக்கம் மறையும்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பில் பால் கட்டிக்கொண்டு அவதிப்படுவார்கள். இவர்கள் மல்லிகைப்பூவை அரைத்து மார்பின்மீது பூசிவந்தால் பால் கட்டுதல் நீங்கி சீராகும்.
தேங்காய் எண்ணெய் - 100 மி.லி.
உலர்ந்த மல்லிகைப்பூ - 5 கிராம்
கறிவேப்பிலை -10 இலை
எடுத்து காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம்.
மல்லிகை மணத்திற்கு மட்டுமல்ல, மருத்துவத்திற்கும் என்பதை புரிந்து அதனைப் பயன்படுத்தி ஆரோக்கியம் பெறுவோம்., மணத்தோடும் மருத்துவ குணமும் சேர்ந்தவை தான் மலர்கள்.
7:03 PM
Unknown
கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை தமன்னா, கல்லூரி படம் மூலம் பிரபலமானார்.
தொடர்ந்து விஜய், தனுஷ், கார்த்தி, ஜெயம் ரவி என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு, முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டு இருந்த தமன்னா, திடீரென தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கி தெலுங்கு பக்கம் போனார். இதற்கு காரணம் தமிழில் பிரபல நடிகர் ஒருவருடன் ஏற்பட்ட காதல் தோல்வி தான் என்று கிசுகிசுக்கப்படுகிறது.
இந்நிலையில் தெலுங்கில் தீவிரமாக நடித்து வரும் தமன்னாவிடம், ஏன் தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கிவீட்டீர்கள் என்று கேட்டால், தமிழ் பட உலகை விட்டு நான் ஒதுங்கவில்லை. தெலுங்கில் நடித்து ரிலீசான படங்கள் ஹிட்டானதால் நிறைய பட வாய்ப்புகள் வந்தன. மூன்று படங்களில் பிசியாக நடித்து வருகிறேன். விரைவில் தடம்மாறி இங்கு தமிழ் படமொன்றிலும் ஒப்பந்தமாக இருக்கிறேன். சினிமாவில் வெற்றி தோல்வி, ஏற்றம் இறக்கம் நிறைந்ததுதான் வாழ்க்கை என்பதை புரிந்து வைத்துள்ளேன். கடினமாக உழைத்தால்தான் வெற்றி கிடைக்கும். மீண்டும் தமிழ்படங்களில் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.
10:43 AM
Unknown
வேலூர் மாவட்டம் காட்பாடி துணை சுகாதார நிலையத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் கணக்கில் வராத 20 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.
டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு உதவி திட்டத்தின் கீழ், கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் 6 ஆயிரம் ரூபாய் நிதியை லஞ்சம் பெற்றுக்கொண்டு வழங்குவதாக வந்த ரகசிய தகவலையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர்.
கிராம சுகாதார செவிலியராக பணியாற்றி வரும் சரளா என்பவரிடம் இதுகுறித்து விசாரணை லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரிடம் இருந்து கணக்கில் வராத 20 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். 20 கர்ப்பிணி பெண்களுக்கு காசோலை வழங்கியபோது, ஒரு காசோலைக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம், 20 ஆயிரம் ரூபாயை சரளா வசூலித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் பயனாளிகளுக்கு வழங்க வைத்திருந்த 90 ஆயிரம் மதிப்புடைய காசோலைகளையும் போலீசார் கண்டுபிடித்தனர்., பின்பு கைதுசெய்தனர்.
6:47 AM
Unknown
சென்னை : நிலையான சுற்றுச்சூழல் நிலையை, தமிழகம் எட்டுவது கடினம்' என, யுனிசெப் அமைப்பின், தமிழக மற்றும் கேரள மாநிலத்திற்கான தலைவர் சதீஷ்குமார் பேசினார்.
ஆண்டுதோறும், அக்.15ம் தேதி, உலக கை கழுவுதல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை தேனாம்பேட்டையில், உலக கை கழுவுதல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. அவ்வை இல்லம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர், கை கழுவுதலின் அவசியத்தை விளக்கும் பாடல்கள் மற்றும் நாடகங்களை நடத்திக் காட்டினர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற, யுனிசெப் அமைப்பின் தமிழக மற்றும் கேரள மாநிலத்திற்கான தலைவர் சதீஷ்குமார் பேசியதாவது: சோப்பு உபயோகித்து கை கழுவுதலை தொடர்ந்து கடைப்பிடித்தால், குழந்தைகள் இறப்பை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். மத்திய அரசு, சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஆனால், இதுகுறித்த விழிப்புணர்வு, மக்களிடம் சரியாக சென்றடையவில்லை. கடந்த 2000ல், புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்கு திட்டத்தை, ஐ.நா., அறிவித்தது. இதன்படி, நிலையான சுற்றுச்சூழல் நிலையை, தமிழகம் எட்டுவது கடினம்' என்றார்.
அரசியல் வாதிகள் பதவியில் அமர்ந்ததும் தங்களுக்கு சொத்து குவிப்பதும் தன்னை சார்ந்தவர்களுக்கு பதவிகள் வழங்குவதும்தான் இவர்கள் முதல் வேலை.
1:20 PM
Unknown
நயன்தாரா மீதுள்ள காதல் மோகத்தால், காதலித்து திருமணம் செய்த முதல் மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார் பிரபுதேவா. கூடவே ரமலத்திற்கு கோடிக்கணக்கான சொத்துக்களையும் எழுதி கொடுத்தார்.
விவாகரத்து பெற்று மனைவியை பிரிந்தாலும், பிரபுதேவாவுக்கு பிள்ளைப்பாசம் விட்டபாடில்லை. இதன் காரணமாக ரமலத்தை விட்டுப் பிரிந்த பின்னரும் கூட மும்பையிலிருந்து, சென்னைக்கு ஓடி வந்து பிள்ளைகளைப் பார்த்து வந்தார். சமீபத்தில் சூட்டிங் செல்வதாக நயன்தாராவிடம் பொய் சொல்லி, தனது பிள்ளைகளை பார்க்க வந்துள்ளார் பிரபுதேவா. இந்த விஷயம் நயன்தாரா காதுகளுக்கு எட்ட இருவருக்கும் இடையே பிரச்சனை உருவாகிவிட்டது. பிள்ளைகளைப் பார்ப்பதாக இருந்தால என்னை மறந்து விடு, என்று கூறி விட்டு கேரளாவுக்குப் போய் விட்டார் நயன்தாரா.
நயன்தாராவை சமாதானம் செய்ய பிரபுதேவாவும் கேரளா பறந்துள்ளார். ஆனால் வீட்டுக்குள்ளேயே விடாமல் கதவை அடைத்துவிட்டார். சுமார் இரண்டு மணி நேரமாக வீட்டிற்கு வெளியே நின்று மனம் நொந்து சென்னை திரும்பினார். ஆனால் இப்படியொரு பிரச்சனை நடக்கவே இல்லை என்றும், நாங்கள் எப்போதும் போல சந்தோஷமாகத்தான் இருக்கிறோம் என்று நயன்தாரா கூறி வருகிறார்.
இதுஒருபுறம் இருக்க, பிரபுதேவாவின் அப்பா சுந்தரமும், நயன்தாரவுக்கு ஆதரவாக பேசி வருகிறாராம். அதுதான் முதல் மனைவியை அத்து விட்டாச்சே, அப்புறம் இன்னும் என்ன பாசம் வேண்டி இருக்கு என்று வார்த்தையால் தினம், தினம் பிரபுதேவாவை சுடுகிறாராம். இப்படி மாறி, மாறி நயனதாராவும், தனது தந்தையும் பேசி வருவதால், என்ன செய்வது என்று புரியாமல் பெரும் தவிப்பில் இருக்கிறாராம் பிரபுதேவா. தனது பிள்ளைகளை விட்டுப் பிரிவது எப்படி என்பது தெரியாமல் விழிக்கிறாராம்.
இதெல்லாம் முன்னாடியே யோசித்திருக்க வேண்டும் பிரபுதேவா சார்! பிள்ளை பாசம் என்ன அவ்வளவு சீக்கிரத்தில் விட்டுவிடுமா, இது புதுசு (நயன்) மவுசாகத்தான் இருக்கும் நாளை வேர்ரோறொன்று வந்தால் ..,?
6:07 AM
Unknown
காலைல லேட்டா எழுந்தாலே முதல்ல இந்தப் பிரச்சினைதான் வரும். (ஹ அட்ச்ச்ச்) ஸ்கூல், காலேஜ், வேலைக்கு போறவங்க எல்லாரும் பரபரப்பா அப்போ தான் கிளம்பிட்டு இருப்பாங்க. அதனால, எல்லா வேலையும், வீட்ல வேகவேகமா நடக்கும். அந்த வேகத்தில குளிச்சா தலையைக் கூட ஒழுங்கா துவட்ட மாட்டோம். (ஹ அட்ச்ச்ச்)
அப்படியே அந்த ஈரத்தலைல எண்ணெயைத் தேய்ச்சிடுவோம். அப்புறம் என்ன ஜலதோஷம்தான். தும்மல், இருமல், மூக்கடைப்பு, தலைவலின்னு எல்லாம் வரிசையா வரும். சரி, இந்த ஜலதோஷம் நமக்கு மட்டும்தான் வருதான்னு நீங்க ரொம்ப `பீல்' பண்ணா தீங்க. அதைப் பற்றி எனக்கு தெரிஞ்ச சில தகவலை உங்களுக்கும் சொல்றேன்.
ஜலதோஷம்ங்கறது ஒருவித அலர்ஜி சம்பந்தமான நோய். இது வந்தா, 3 அல்லது 4 நாட்கள் வரை இருக்கும். இந்த நோய் உலகம் முழுவதும் பரவி இருக்குற நோய் தான். மனிதர்களுக்கு `ரைனோ' என்ற வைரசின் மூலம் ஜலதோஷம் உண்டாகுது.
இந்த வைரஸ் 130 டிகிரி செல்சியஸ் வரை உள்ள வெப்பநிலையை கூடத் தாங்குமாம். இதை முழுமையாக அழிக்க எந்தவிதமான மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லையாம். ஆஸ்பிரின் போன்ற மருந்துகள் எல்லாம் ஜலதோஷத்தால் உருவாகும் தலைவலியை மட்டும்தான் போக்குமாம்.(ஹ அட்ச்ச்ச்)