Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, September 19, 2011

அம்பலமாகும் நரேந்திர கேடியின் செயல் ? சாராபாய் வாக்குமூலம்

அகமதாபாத் : குஜராத்தில் நடந்த பெரும் கலவரம் தொடர்பாக நான் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த பொது நலன் வழக்கை சீர்குலைக்க, எனது வக்கீல்களுக்கு லஞ்சம் கொடுத்தார் முதல்வர் நரேந்திர மோடி என்று பிரபல நடனக் கலைஞர் மல்லிகா சாராபாய் பரபரப்புக் குற்றம் சாட்டியுள்ளார்.

குஜராத்தில் 2002ம் ஆண்டு நடந்த (பல்லாயிரக்கணக்கான சிருபான்மையினரை கொன்று குவித்த, நரேந்திர கேடியும் ஹிந்துத்துவா தீவிரவாத வெறியர்களும்) பெரும் கலவரத்திற்குப் பின்னர் அந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொது நலன் மனுவைத் தாக்கல் செய்தார் சாராபாய். அதில் குஜராத் கலவரத்தைத் தடுக்க மாநில அரசும், முதல்வர் நரேந்திர மோடியும் ஆக்கப்பூர்வமாக, தீவிரமாக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கை சீர்குலைப்பதற்காக மக்கள் பணத்தை எடுத்து எனது வக்கீல்களுக்கு லஞ்சமாக கொடுத்தார் மோடி என்று இன்று குற்றம் சாட்டியுள்ளார் சாராபாய்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அப்போது மாநில உளவுத்துறை தலைவராக இருந்த ஆர்.பி.ஸ்ரீகுமார் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் ஆகியோரை அழைத்து, எனது வக்கீல்களுக்கு வழக்கை சீர்குலைப்பதற்காக ரூ.10 லட்சம் பணம் தரும்படி உத்தரவிட்டார் மோடி.

இதுதொடர்பாக ஸ்ரீகுமார் சமீபத்தில் நானாவதி மற்றும் அக்ஷய் மேத்தா கமிஷன் முன்பு நேரில் ஆஜராகி இதுதொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் கடந்த மே மாதம் நானாவதி கமிஷன் முன்பு ஆஜரான சஞ்சீவ் பட்டும், வக்கீல்களுக்கு லஞ்சம் கொடுக்க உளவுத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியை பயன்படுத்துமாறு தனக்கு மோடி உத்தரவிட்டதாக கூறியுள்ளார் என்றார் சாராபாய்.

நிறுத்துங்கள் வலி நிவாரண மாத்திரைகளை !!

லண்டன், மூட்டு வலி உள்ளிட்ட உடலில் ஏற்படும் பல்வேறு வலிகளை போக்க மாத்திரைகளை சாப்பிடுகின்றனர். அந்த மாத்திரைகள் பல ஆண்டுகள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக புற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து பாஸ்டனில் உள்ள ஹார்வர்டு மருத்துவ கல்லூரி பேராசிரியர் டாக்டர் இங்யங் ஷோ தலைமையிலான குழுவினர் 1 லட்சத்து 25 ஆயிரம் பேரிடம் ஆய்வு மேற்கொண்டனர்.

அவர்களில் வலி நிவாரணத்துக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக மருந்து மாத்திரைகள் சாப்பிடுபவர்களில் 51 சதவீதம் பேர் சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

Sunday, September 18, 2011

சிநேகத்தின் ஆசை !?

புன்னகை இளவரசி என்ற பெயருடன் கோலிவுட்டை வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சினேகா, தமிழைப் போலவே தெலுங்கு படங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், நான்கு படமாக இருந்தாலும் அது ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்க கூடிய அளவிற்கு நல்ல படமாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை என்று கூறியிருக்கிறார்.

பிரிவோம் சந்திப்போம், பார்த்திபன் கனவு போன்ற படங்களில் வருகிற மாதிரியான ரோல்களில் நடிக்க காத்திருகிறேன். அதனால்தான் நிறைய படங்களில் நடிக்க முடியவில்லை என்று கூறும் சினேகா, தெலுங்கில் நாகார்ஜுனாவுடன் நடித்த ராஜன்னா, சுந்தர்.சியுடன் நடிக்கும் முரட்டுக்காளை ஆகியவை நிச்சயம் கைகொடுக்கும் என நம்பிக்கையோடு காத்திருக்கிறாராம்.

இந்திய ஸ்நேக்ஸ் மேல் காதல் கொள்ளும் வெளிநாட்டவர்கள் !

ஹெல்சின்கி(பின்லாந்து):இந்தியர்களுக்க ‌சொந்தமான (ஸ்நேக்ஸ்) சமோசா, குளோப்ஜாமூன் போன்ற திண்பண்டங்கள் பின்லாந்த நாட்ட‌வரை வெகுவாக கவர்ந்துள்ளது.

பின்லாந்து நாட்டில் வசித்து வரும் இந்தியர்கள் நடத்தி வரும் ஓட்டல்களான நமஸ்கார், காந்தி, சாம்ராட், மகாராஜா, இந்தியன்தந்தூர், மற்றும் அன்னபூர்ணாவில் சமோசா, சிக்கன் கறி, புரோட்டா போன்றவை விற்பனைசெய்யப்படுகி்ன்றன.

மேற்கண்ட திண்பண்டங்கள் மற்றும் உணவு வகைகளை ருசிப்பதற்காக அந்நாட்டின் துணை அதிபர் அர்ஜாசோமினென் கூறுகையில் தன்னுடைய வீட்டை வாரத்திற்கு ஒரு முறை பூட்டி விட்டு இந்திய ஓட்டல்களுக்கு சென்று வருவதாக குறிப்பிட்டுள்ளார். ச‌மோசா ஒன்றின் விலை 3.10 யூரோ(ரூ.185), குளோப்ஜாமூன் 5 யூ‌ரோ(ரூ. 305) என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.இந்திய உணவு வகைகள் ருசி்ப்பதில் பின்லாந்து நாட்டவர்கள் காதல் கொண்டுள்ளனர் என்பது இந்திய ஓட்டல்களில் கூடும் கூட்டமே அதற்கு சாட்சியாக விளங்குகிறது.

விலை போன கேப்டன் வாங்கிக்கொண்ட தலைவி? தொண்டர்களிடையே சலசலப்பு !?

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட கலவரத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 6 பேர் பலியானார்கள். இதில் பலத்த காயம் அடைந்து மதுரை, ராமநாதபுரம் அரசு மருத்துவமனைகளில் 17 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் பரமக்குடிக்கு நேரில் சென்று துப்பாக்கி சூட்டில் பலியான குடும்பத்தினரை சந்தித்து நிதி உதவி அளித்து வருகின்றனர். மேலும் துப்பாக்கி சூட்டில் பலியானோர் குடும்பத்திற்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டம் அறிவித்து உள்ளனர்.

ராமநாதபுரம் அடுத்த காரனேந்தல் கிராமத்தை சேர்ந்த தலித் சமுதாயத்தை சேர்ந்த தே.மு.தி.க. தொண்டர்கள், நிர்வாகிகள் தே.மு.தி.க. தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சி தலை வருமான விஜயகாந்த் இதுவரை பரமக்குடி வராததை கண்டித்து அதிருப்தியில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை காரனேந்தல் தே.மு. தி.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் விஜயகாந்த் சந்தித்து ஆறுதல் கூறாததை கண்டித்தும்,

கலவரம் குறித்து மவுனம் சாதித்து வருவதை கண்டித்தும் தே.மு.தி.க. கிளை செயலாளர் முருகேசன் தலைமையில் தொண்டர்கள் தே.மு.தி.க கொடி கம்பங்களை வெட்டி சாய்த்தனர். மேலும் உறுப்பினர் கார்டு, கொடிகளை தீயிட்டு எரித்தனர். விஜயகாந்த்துக்கு எதிராக கோஷம் எழுப்பினர்., கேப்டன் "ஜெயா" விடம் விலைபோகிவிட்டரா என்று தொண்டர்களுக்கு சந்தேகம் வந்தவிட்டது இதனால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

அதேபோல காவனூரில் கிளை செயலாளர் சசிகுமார் தலைமையிலும், வன்னிவயலில் ஒன்றிய துணைத்தலைவர் ரவீந்திரன் தலைமையிலும் தே.மு.தி.க. கொடிகளை எரித்தனர்., இதனால் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

பசங்க படத்தின் மூலம் தேசிய விருது பெற்றவரின் புதுப்படம்

பசங்க படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமானவர் பாண்டிராஜ். முதல்படத்திற்கே தேசிய விருது பெற்ற அவர், புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

இப்படத்திற்கு மெரினா என்று பெயரிட்டுள்ளார். படத்தின் நாயகனாக விஜய் டி.வி., புகழ் சிவகார்த்திகேயன் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கும் ஜோடியாக களவாணி புகழ் ஓவியா நடிக்கிறார்.

மெரினா கடற்கரையை மட்டும் வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் விளிம்பு நிலை சிறுவர்களை மையப்படுத்தி இந்தப் படத்தை எடுக்கிறாராம் பாண்டிராஜ். படத்தின் கதை மெரினாவை மையப்படுத்தியே வருகிறது, ஆனால் சமீபகாலமாக மெரினாவில் படப்பிடிப்புகளுக்கு அனுமதி தரப்படுவதில்லை. சில காட்சிகளை மட்டும் ஸ்பெஷல் பர்மிசன் வாங்கி மெரினாவில் படமெடுத்த பாண்டிராஜ், மற்றி காட்சிகளை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடற்கரையை மெரினாவைப்போல் மாற்றி படம்பிடிக்கவுள்ளார்.

Saturday, September 17, 2011

தலைவர்களை சந்திக்காமல் ஐ நா வில் பங்கேற்பு! மன்மோகன்சிங்

புதுடெல்லி, செப்.18 : ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன்சிங் 21-ந்தேதி அமெரிக்கா புறப்படுகிறார்.

பிரதமருடன் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், வெளியுறவு செயலாளர் ரஞ்சன் மத்தாய்,

பிரதமரின் முதன்மை செயலாளர் டி.கே.ஏ.நாயர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவும் நியூயார்க செல்கிறது. ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்க வரும் பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மன்மோகன்சிங் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

எனினும் அங்கு அவர் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மற்றும் பாகிஸ்தான் பிரதமர் கிலானி ஆகியோரை சந்திக்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

காதலுனுக்கு வாழ்த்து செய்தி அனுப்பிய காதலி ?

அகமதாபாத் : அமைதி(?), மத நல்லிணக்கத்திற்காக!(?) (2002 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தலைவிரித்தாடிய குஜராத் இனப்படுகொலை. பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான பெண்களின் கற்புகள் சூறையாடப்பட்டது. கர்ப்பிணிகள், குழந்தைகள், ஊனமுற்றவர்கள் உட்பட எந்த ஒரு முஸ்லிமும் தப்பவில்லை. 2 மாதங்கள் சட்டம்ஒழுங்கு சீர்கெட்டு இந்திய இறையாண்மையே சீரழிக்கப்பட்டது.)

3 நாள் உண்ணாவிரதம் இருக்கப் போகும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா ஆதரவு தெரிவித்துள்ளார். அதிமுக சார்பில் இந்த உண்ணாவிரதத்தில் மைத்ரேயன், தம்பிதுரை ஆகிய எம்பிக்கள் பங்கேற்கவுள்ளனர்.

குஜராத் மதக் கலவர வழக்கில் நரேந்திர மோடியை விசாரிப்பது குறித்து கீழ் நீதிமன்றம்தான் முடிவு செய்ய முடியும். இதில் நாங்கள் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து இந்த உண்ணாவிரதத்தை அறிவித்தார் மோடி.

நாளை முதல் இந்த உண்ணாவிரதம் தொடங்கவுள்ளது. இந் நிலையில் இந்த உண்ணாவிரதத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அதிமுக எம்பிக்கள் மைத்ரேயன், தம்பிதுரை ஆகியோர் நரேந்திர மோடியை அகமதாபாத்தில் சந்தித்து ஜெயலலிதாவின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மன அழுத்தத்தை போக்க மறக்காமல் செய்ய வேண்டியவை

எல்லா துறையிலும் எல்லா பணிகளிலும் அனைவரும் ஒருவிதமான மன இறுக்கத்துடனேயே சுழன்று கொண்டிருக்கிறார்கள்.

மனிதனுக்கு வரும் நோய்களில் 75 முதல் 90 வரை நோய்கள் அழுத்தமான சூழல் காரணமாக வருவதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இந்த மன அழுத்தத்தை குறைக்க சில வகையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இருக்கையில் அமர்ந்தவாறே இந்த உடற்பயிற்சியை செய்யலாம்.

* தலையை இடதுபக்கமாக சாய்த்து இடதுபக்க காது தோற்பட்டையில் படும்படி சாய்த்து நன்றாக அழுத்தத்தை கொடுக்கவும்.வலது கையை தலையில் சிறிது அழுத்துவதன் மூலம் அழுத்தத்தைக் கொடுக்கலாம்.

* இதே போன்று சமநிலையான, இறுக்கமற்ற நிலையில் தலையை வலது பக்கமாக சாய்த்து வலதுபக்க காது தோற்பட்டையில் படும்படி சாய்த்து நன்றாக அழுத்தத்தை கொடுக்கவும்.

* ஒரு நிலையில் இருந்து கொண்டு கண்களை இமைக்காது இடமிருந்து வலதுபக்கமாக தலையை சுழற்றவும், இவ்வாறே ஒரு நிலையில் இருந்து கொண்டு கண்களை இமைக்காது வலதுபக்கமிருந்து இடது பக்கமாக தலையை சுழற்றவும்.

* இடது கையை மடித்து நெஞ்சுப்பகுதிக்கு மேலாக வலபக்க தோற்பட்டையில் படும்படி செய்து அழுத்தத்தை கொடுக்கவும்.

* வலது கையை மடித்து நெஞ்சுப்பகுதிக்கு மேலாக இடதுபக்க தோற்பட்டையில் படும்படி செய்து அழுத்தத்தை கொடுக்கவும்.

* இருக்கையில் அமர்ந்தவாறே குனிந்து உங்களது பாதங்களை தொடவும்.

* இருக்கையில் அமர்ந்தவாறே கைகளை முன்நோக்கி நீட்டி இருகைகளையும் ஒன்று சேர்த்து பாதங்களைத் தொட முயற்சித்து அழுத்தத்தை கொடுக்கவும்.

* வலதுகயை நீட்டி தூக்கி பெருவிரல் மற்றும் நடுவிரல்களுக்கு மாறி மாறி அழுத்தத்தை கொடுக்கவும், இதேபோல் இடது கைக்கும் செய்யவும். இந்த பயிற்சிகளை நீங்கள் வாரத்தில் 3- 4 தடவைகள் செய்யலாம்.மன அழுத்தம் குறையும்

Friday, September 16, 2011

ரத்த யாத்திரை நாயகனுக்கனுக்காக சிலவிட்டது பல கோடி ! செஹ்லா !!

போபால் : அரசுப் பணத்தை தவறாகப் பயன்படுத்தி வருவதாக மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் மீதும், உயர் அதிகாரிகள் மீதும் படுகொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் செஹ்லா மசூத் அந்த மாநில ஊழல் கண்காணிப்பு தலைமை ஆணையருக்கு புகார் தெரிவித்து கடிதம் எழுதியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

போபாலில் அவர் கொல்லப்படுவதற்கு 2 வாரங்களுக்கு முன்பு ஆகஸ்ட் 1-ம் தேதி ஷீலா அந்த கடிதத்தை எழுதியுள்ளார். மத்தியப் புலனாய்வுத் துறை நடத்திய விசாரணையின்போது கைப்பற்றப்பட்ட அவரது தனிப்பட்ட ஆவணங்களில் அந்த கடிதம் இருந்துள்ளது.

அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் துணையுடன் மாநில விருந்தோம்பல் துறையின் நிதி பெருமளவு முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக செஹ்லாவின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பஞ்சமார்ஹிக்கு பாஜக தலைவர் அத்வானி தனிப்பட்ட முறையில் வந்தபோது மத்தியப் பிரதேச அரசு ரூ 5 கோடி பணம் செலவு செய்ததாகவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. அத்வானி போபாலில் இருந்து பஞ்சமார்ஹிக்கு சென்று, திரும்பிவர அரசு ஹெலிகாப்டர் வழங்கப்பட்டுள்ளது என செஹ்லா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்., தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் இந்த விவரங்களைப் பெற்றதாக செஹ்லா அதில் தெரிவித்துள்ளார்.

@ ரத யாத்திரை என்ற பெயரில் ரத்த யாத்திரை நடத்திய பரதேசி.

உணர்வு தூண்டப்படும் உண்ணா விரதம்?

மாதத்தில் ஒரு நாள் உண்ணாவிரதம் கடைபிடித்தால் இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்கலாம் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

உண்ணாவிரதம் தொடர்பாக யுடா பகுதியைச் சேர்ந்த 200 நபர்களின் ஆரோக்கியம் மற்றும் பழக்க வழக்கங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வின் போது நடத்தப்பட்ட எக்ஸ்ரே பரிசோதனையில் உண்ணாவிரதம் மேற்கொள்ளாத நபர்களில் 75 சதவீதத்தினருக்கு ஆர்ட்ரிஸ் ரத்தக்குழாய்கள் குறுகி இருப்பது தெரியவந்தது.

ஆர்ட்ரிஸ் ரத்தக்குழாய்கள் இதயத்தில் இருந்து உடலின் இதர உறுப்புகளுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய் ஆகும். ஆர்ட்ரிஸ் குழாய்கள் குறுகினால் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு இதய நோய்கள் மற்றும் நீரிழிவு நோய் பாதிப்புகள் ஏற்படலாம். அடிக்கடி உணவை தவிர்த்த நபர்களில் 63 சதவீத பேருக்கு ஆர்ட்ரிஸ் குழாய் அடைப்பு இருப்பது ஆய்வில் தெரியவந்தது.

உண்ணாவிரதத்தை குறிப்பிட்ட கால இடைவெளியில் மேற்கொள்வதால் நீரிழிவு விகிதத்தை குறைக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. உண்ணாவிரதம் மேற்கொள்ளாத நபர்களிடம் இரண்டாவது கட்ட சோதனையை ஆய்வாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.

உண்ணாவிரதம் இருப்பதால் மனித வளர்ச்சிக்கு தேவையான ஹோர்மோன் குறிப்பிட்ட அளவு தூண்டப்படுகிறது. மனித உடலில் வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தி கொழுப்பை குறைக்க உதவுகிறது. கொழுப்பு குறைவதால் இதய நோய்களை தவிர்க்கலாம்.

இது ஆயிவில் கூறபட்ட தகவல் ஆனால் இதை நோன்பு என்றும் இதனை வருடத்தில் ஒரு மாதமும், மாதத்தில் மூன்று நாள்களும் கடைபிடிப்பதால் உடல் ஆரோக்கியத்துடனும், மற்றவர்களின் பசியை உணரக்கூடிய மன நிலையும் அதனால் மற்றவர்களின் கஷ்டத்திற்கு உதவும் மனோபக்குவமும் உண்டாகும் என்று இஸ்லாமியர்களின் இறுதி தூதர் முஹம்மது நபி 1400 வருடத்திற்கு முன்பே கூறியிருக்கிறார்கள் அதை தான் இன்று ஆய்வில் கண்டு பிடித்தும் உள்ளார்கள்.

நடிகர் சங்கத்திலிருந்து அதிரடி நோட்டீஸ் நடிகைகளுக்கு!

தமிழ் படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என்று கடந்த வாரம் சென்னையில் கூடிய நடிகர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அக்டோபர் 30-ந்தேதிக்குள் உறுப்பினராக கெடு விதிக்கப்பட்டு உள்ளது. இது போல் தெலுங்கு நடிகர் சங்கமும் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தி, தமிழ், மலையாள நடிகைகள் பலர் தெலுங்கு படங்களில் நடிக்கின்றனர். அங்கு சம்பளம் அதிகம் என்பதால் தெலுங்கில் நடிக்க கதாநாயகிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆனால் அவர்கள் தெலுங்கு நடிகர்கள் சங்கத்தில் இதுவரை உறுப்பினராகவில்லை. இதையடுத்து உறுப்பினராகாத நடிகைகள் பட்டியலை தெலுங்கு நடிகர் சங்கம் தயார் செய்தது.

அவர்களுக்கு இன்னும் 15 நாட்களில் உறுப்பினராக வேண்டும் என்று கெடு விதித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. நடிகைகள் திரிஷா, ஜெனிலியா, ஸ்ரேயா, இலியானா, டாப்சி, சினேகா, தமன்னா, நித்யாமேனன் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

15 நாட்களுக்குள் உறுப்பினராகாவிட்டால் தெலுங்கு படங்களில் நடிக்க தடை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

பசுத்தோல் போர்த்தியவரின் பதவி பறிக்கப்படுமா ! ட்ராபிக் ராமசாமி ?

புது தில்லி : தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக வழக்கு உள்ளதால் அவரை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் "டிராபிக்' ராமசாமி உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தார்.

அவர் சார்பில் வழக்குரைஞர் ஹரிகிருஷ்ணா 25 பக்கம் கொண்ட மனுவை தாக்கல் செய்தார். அதன் விவரம்., உயர் பதவி வகிப்பவர்கள் அப்பழுக்கற்றதன்மை வாய்ந்தவராக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக இருந்த சி.வி. தாமûஸப் பதவி நீக்கம் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர் பதவிகளில் இருப்பவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தால் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்ப அதிகாரம் உள்ளது என்று தாமஸ் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இது போன்ற குற்றச்சாட்டுகளில் தனி நபரின் குணத்துக்குத்தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமே தவிர பதவிக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது என்று 2009-ல் நீதிபதி கண்ணதாசன் வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவாண் ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.

தமிழக முதல்வராக உள்ள ஜெயலலிதா மீது கடந்த 14 ஆண்டுகளாக சொத்துக் குவிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது. அவர் முதல்வர் பதவியில் நீடிக்கக் கூடாது. அவரைப் பதவி நீக்கம் செய்ய உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டவர்கள் உயர் பதவியில் வகிக்கக் கூடாது என்பன தொடர்பான விதிமுறைகளை உச்ச நீதிமன்றம் வகுக்க வேண்டும் என்று அவர்களின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Thursday, September 15, 2011

ஆசி ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு உதவும் எந்திர மனிதன் !

மெல்போர்ன், செப். 15 : ஆஸ்திரேலியாவில் ஆஸ்பத்திரிகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமற்றதாக இருப்பதாக கடத்த 2008-ம் ஆண்டு கார்லிங் கமிஷன் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதை தொடர்ந்து நோயாளிகளுக்கு தேவையான சத்தான உணவு வகைகளை வழங்க ஆஸ்பத்திரி நிர்வாகங்கள் முடிவு செய்துள்ளன.

அதை தொடர்ந்த சிட்னியில் உள்ள ராயல் நார்த் ஷோர் என்ற ஒரு தனியார் ஆஸ்பத்திரி சத்தான உணவுகளை எந்திர மனிதன் என்றழைக்கப்படும் “ரோபோ”க்கள் மூலம் வழங்க முடிவு செய்துள்ளது. அதற்கான ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இவை முற்றிலும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு அதில் அவற்றின் செயல் பாடுகள் பதிவு செய்யப்பட் டிருக்கும்.

இந்த ரோபோக்கள் கம்ப்யூட்டர் டிராலியின் மூலம் ஆஸ்பத்திரி முழுவதும் வலம் வரும். நோயாளிகளுக்கு தேவையான உணவு வகைகள், துணி மணிகள் மற்ற பொருட்களை வழங்கும். இவை நடமாடும் வழித்தடங்களும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். அதன்படி அவை செயல்படும்.

நோயாளிகளுக்கு ரோபோக்கள் உணவு வழங்கும் செயல்பாடு அடுத்த ஆண்டு இறுதியில் நடை முறைக்கு வரும் என ராயல் நார்த் ஷோர் ஆஸ்பத்திரி அறிவித்துள்ளது.

முள்வேலி முகாம்களில் தவிக்கும் தாயக தமிழர்கள் !?

கொழும்பு, செப். 15 : போர் முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் இலங்கை ராணுவ முகாம்களில் எந்த அடிப்படை வசதிகள் இல்லாமல் 2 லட்சம் தமிழர்கள் தவிக்கின்றனர்.

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே இறுதிகட்ட போர் நடந்தது. அப்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த தமிழர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர், அவர்கள் அனைவரும் இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அகதிகள் முகாம்கள் என அழைக்கப்படும் முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டனர்.

போர் முடிந்த பிறகு மீண்டும் அவர்கள் வாழ்ந்த பகுதியில் மறு குடியமர்த்தப்படுவார்கள் என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் போர் முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் அவர்களில் மிக சிலர்தான் மறு குடியமர்த்தப்பட்டுள்ள னர். பெரும்பாலானவர்கள் இன்னும் முள்வேலி முகாம்களில் சிக்கி தவிக்கின்றனர். இவ்வாறு சுமார் 2 லட்சம் தமிழர்கள் தவிப்பதாக தமிழர் தேசிய கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து அக்கட்சி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இறுதி கட்ட போர் முடிந்து 2 ஆண்டுகளாகியும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தங்கியிருந்த 2 லட்சம் தமிழர்கள் இன்னும் ராணுவ முகாம்களிலேயே அடைபட்டு கிடைக்கின்றனர். அவர்களில் பெரும் பாலானவர்கள் யாழ்ப்பாணத் தில் உள்ள வலிகாமம், திரிகோணமலையில் உள்ள சாம்பூர் மற்றும் வன்னி பகுதியை சேர்ந்தவர்கள். முகாம்களில் இருந்து அனுப்பபட்டவர்களில் சிலர் வாழ்வதற்கு அடிப்படை வசதி இல்லாத நிலையில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்களின் வீடுகள் மற்றும் விளை நிலங்கள் மெஜாரிட்டியாக வாழும் சிங்களர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது சட்டத்துக்கு புறம்பானது. முல்லைத் தீவு மற்றும் வடமராச்சி பகுதியில் உள்ள இந்து கோவில்கள், மசூதிகள், கிறிஸ்தவ தேவாலயங்கள் இடிக்கப்பட்டுள்ளன. அங்கு பல அவமதிப்புகளும், கலாச்சார சீரழிவுகளும் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

*அரசும், ஆட்சியாளர்களும் ஓட்டுவங்கிகள் மட்டுமே இவர்களை நம்புவது வீண், நாம் நம் உறவுக்காக ஒன்றுபட்டு ஒரு அணியாக குரல்கொடுப்போம் வாருங்கள் தமிழராக இருப்பின்.

அனுபவங்களை பகிர்ந்து கொள்ள அறிய வாய்ப்பு துபாயில் ?

துபாய்:  இரண்டாம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு மற்றும் கண்காட்சி துபாயில் உள்ள உலக வர்த்தக மையத்தில், அக்டோபர் 1ம் தேதி முதல் 4 நாள் நடக்கிறது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் கலாசாரம் மற்றும் பொருளாதார நிலை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. தற்போதைய உலகத் தமிழர் நிலை, முதலீட்டு வாய்ப்புகள், தொழில்நுட்பம் ஆகியவை குறித்து பல நிபுணர்கள் உரையாற்றுகின்றனர். உலகம் முழுவதிலுமிருந்து தமிழர்கள் இதில் பங்கேற்று, தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்புகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தனி நபர் மற்றும் குழுவாக ஒன்றிணைந்து சமுதாய வளர்ச்சிக்கு பாடுபடவும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

தொழில் வாய்ப்புகள்- நிதி திரட்டுதல் : இந்த மாநாட்டில் இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், நீதிபதிகள், அதிகாரிகள், கல்வியாளர்கள், தொழில் அதிபர்கள் பலரும் பங்கேற்கின்றனர். மாநாட்டின் முதல் நாளான 1ம் தேதி காலை 9 மணி முதல் 5 மணி வரை பிரதிநிதிகள் பதிவு நடைபெறும். 2ம் தேதி காலை 09:30 மணிக்கு துவக்க விழா; 12 மணிக்கு உருவாகி வரும் தொழில் வாய்ப்புகள்; பகல் 02:30 மணிக்கு திட்டங்களுக்கான நிதி திரட்டுதல், மாலை04:30 மணிக்கு வளர்ச்சிக்கான திட்டங்கள் மற்றும் புதிய கருத்துக்கள் குறித்த உரைகள் இடம் பெறும்.

3ம் தேதி காலை 9 மணிக்கு தொழில் வாய்ப்புகளுக்கான சட்டச் சேவைகள்; 11:30 மணிக்கு இந்தியாவிலும் இதர நாடுகளிலும் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள்; பகல் 2 மணிக்கு அரசின் ‌ஆதரவு மற்றும் சமுதாய இணைப்பு; மாலை 4 மணிக்கு தொழில் வளர்ச்சிக்கான தமிழ் மொழி மற்றும் தகவல் திறன்கள் குறித்த உரைகள் இடம் பெறும்.

4ம் தேதி காலை 9 மணிக்கு ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகள்; பகல் 11:30 மணிக்கு கல்வி நிறுவனங்கள் மற்றும் சேவைகள்; 2 மணிக்கு சுகாதார பாதுகாப்பு சேவைகள் ஆகியவை குறித்த உரைகள் இடம் பெறும். மாலை 4 மணிக்கு விருது வழங்கு விழாவும், நிறைவு விழாவும் நடைபெறும்.

உலகத்தமிழ் மாமணி விருது: உலகத் தமிழர்களுக்கு பல துறைகளிலும் சேவை புரிந்தவர்களுக்கு உலகத்தமிழ் மாமணி என்ற விருது வழங்கப்படுகிறது. மலேசிய தேசிய நில நிதி கூட்டுறவு சங்க செயல் தலைவர் கே.ஆர்.சோமசுந்தரம், ஆஸ்திரேலியா ஸ்பிரிங் பீல்டு நில கார்ப்பரேஷன் தலைவர் மகாலிங்கம் சின்னதம்பி, அமெரிக்கா வேலுச்சாமி என்டர்பிரைசஸ் தலைவர் பி.வேலுச்சாமி, அமெரிக்கா டெக் மகிந்திரா சேவைகள் தலைவர் பால் பாண்டியன், சிங்கப்பூர் இந்திய தொழில் வர்த்தககழக தலைவர் விஜய் அய்யங்கார், எஸ்.கண்ணப்பன், யுஎன்ஐடிஓ., தலைமை இயக்குநரின் முன்னாள் முதன்மை ஆலோசகரான ஆஸ்திரியாவை சேர்ந்த வி.ஜெபமாலை, அமெரிக்கா மைல்ஸ்டோன் மெட்டல்ஸ் தலைவர் ஜி.ராம்பிரசாத், பிரிட்டன் சிறுநீரக நிபுணர் பி.சண்முகராஜ் ஆகியோருக்கு இந்த உலகத் தமிழ் மாமணி விருது வழங்கப்படுகிறது.

இம்மாநாட்டு ஏற்பாடுகளை மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் சம்பத் துபாயில் மாநாட்டு வரவேற்பு குழுத் தலைவரும் ஈடிஏ., குழுமத் தலைவருமான சையது சலாலுதீனைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். மேலும் அவர் ஈடி‌ஏ., குழுமத்தின் செயல் இயக்குநர் அக்பர் கான், மீரான், தைமூர் ஆகியோரையும் மற்றும் துபாயில் பல்வேறு தமிழ்ச் சங்கங்களின் நிர்வாகிகளையும் அவர் சந்தி்த்தார்.

ஆயுள் காலம் நீடிக்க ஆரோக்கிய உணவு அவசியம்

ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை உடைய முதியவர்களுக்கு ஆயுள் அதிகம் என ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக எழுபது வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கம் அவர்களது ஆயுட் காலத்தை நீடிப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.

கொழுப்பு சத்துடைய உணவுப் பொருட்களை அதிகமாக உட்கொள்வதனால் அதிக உயிராபத்து ஏற்படக் கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மரக்கறி வகைகள் மற்றும் பழங்களை உட்கொள்ளும் நபர்களின் ஆயுட்காலம் பத்து ஆண்டுகள் வரையில் நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2500 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஐஸ் கிறீம், முட்டை, இறைச்சி வகைகள், பால், சீஸ் போன்ற உணவுப் பொருட்களை உட்கொள்வோர் விரைவில் உயிரிழக்கக் கூடிய அபாயத்தை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Wednesday, September 14, 2011

பொங்குதமிழர் உரிமைக்கு உலகதமிழர்கள் ஒன்று திரள்வீர் !!

தாயகத்தில் தொடரும் சிங்கள அரசின் அடக்குமுறைகளை எதிர்த்து ஐ.நா.சபை முன்றலில் முற்றுகையிடப் போகும் பொங்குதமிழ் உரிமை முழக்கத்திற்கு அனைத்து ஜரோப்பிய தமிழ் மக்களையும் அணி அணியாக திரளுமாறு தமிழக தலைவர்களும் தமிழ் உணர்வாளர்களும் அழைப்பு விடுத்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள், திரைப்பட நடிகரும் தமிழ் உணர்வாளருமான சத்தியராஜ் அவர்கள் மற்றும் மே 17 இயக்கத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் அவர்களும் விடுத்துள்ள அழைப்பு செய்தி தற்போது இணைக்கப்பட்டுள்ளது.

*தாயக மக்களின் அவல நிலைகள், இராணுவத்தினரின் அடாவடித்தனங்கள், மற்றும் தொடரும் இன அழிப்புக்கள் தொடர்பாக ஒருங்கிணைந்து செயல்பட திரண்டு வாரீர்.

கூட்டணியில்லா தனித்து போட்டி! கலைஞர் ?

சென்னை. செப், 14 : நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிடுவதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

மேலும் வருகிற உள்ளாட்சி தேர்தலில் அரசியல் நோக்கிலான கூட்டணி தேவையில்லை என தி.மு.க, முடிவு செய்துள்ளதாகவும், நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் மட்டுமே கூட்டணியுடன் போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

*கூட்டணியில்லா தனித்து போட்டியிடும் தி மு க வெற்றி பெறுமா என்பதுதான் அனைவருடைய கேள்வி, வேணாம் வலிக்குது!

சினிமா நச்சத்திரங்கள் பங்குபெறும் "வாராயோ தோழி" க்கு பாராட்டு விழா!

50ஆண்டுகளுக்கும் மேலாக இசைதுறையாற்றி வரும் பிரபல பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரிக்கு பாராட்டு விழா நடத்தப்படுகிறது.

1958ம் ஆண்டு "நல்ல இடத்து சம்மந்தம்" என்ற படத்தில் "இவரே தான் அவர்... அவரே தான் இவர்..." என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் 1961ம் ஆண்டு வெளிவந்த "பாசமலர்" படத்தில் "வா‌ராயோ தோழி வாராயோ..." என்ற படத்தின் மூலம் பிரபலமானார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் என்று பல்வேறு மொழிகளில் 30ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இதுதவிர சினிமா அல்லாத பக்தி பாடல்கள் "தாயே கருமாரி..", "செல்லாத்தா செல்ல மாரியத்தா..." உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக பக்தி பாடல்களையும் பாடியுள்ளார். கலைமாமணி விருது, எம்.ஜி.ஆர். விருது, வாழ்நாள் சாத‌னையாளர் விருது, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மாநில விருதுகள், இது‌தவிர ‌வெளிநாடுகளில் வாங்கிய பல விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த 50 ஆண்டுகளாக இசைபணியாற்றி வரும் எல்.ஆர்.ஈஸ்வரியை பாராட்டி, ஸ்ரீதேவி பைன் ஆர்ட்ஸ் மற்றும் சாதக பறவைகள் குழு சேர்ந்து அவருக்கு, "பாட்டு ராணிக்கு பாட்டு திருவிழா" என்று ஒரு விழாவை எடுத்து நடத்த போகிறார்கள். இந்த விழா வருகிற 25ம் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. இந்தவிழாவிற்கு பிரபல சினிமா நட்சத்திரங்கள், பின்னணி பாடகர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்க இருக்கின்றனர்.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!