Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, August 14, 2011

ராகு காலம் பார்க்கும் ராங்கி நாயகி !

65வது சுதந்திர தின விழா நாளை கொண் டாடப்படுகிறது. சுதந்திர மற்றும் குடியரசு தினத்தில் காலை 8 மணி முதல் 8.30 மணிக்குள் அரசு அலுவலகம், பள்ளிகளில் தேசிய கொடி ஏற்றப்படும். ஆனால், இந்தாண்டு தமிழகத்தில் காலை 9.30 மணிக்கு கொடியேற்றப்படும் என ஜெயா அரசு திடீரென அறிவித்துள்ளது.

திங்கட்கிழமை காலை 7.30 மணி முதல் 9 மணி வரை ராகு காலம் என்பதால், கொடியேற்றும் நேரம் மாற்றப்பட்டுள்ள தாக கூறப்படுகிறது.

அதிமுக அரசு பொறுப்பேற்று முதல் சுதந்திர தின விழா நடைபெற உள்ளது. இதனால் ராகு காலத்தில் கொடியேற்றாமல், நல்ல நேரத்தில் கொடியேற்ற அரசு உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்ற னர்.

முன்னதாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு அலுவலகங்களுக்கு அனுப்பிய அழைப்பிதழில் 15ம் தேதி காலை 8.30 மணிக்கு சுதந்திர தின விழாவில் கலெக்டர் கொடி ஏற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த அழைப்பிதழ்கள் தற் போது திரும்ப பெறப்பட்டு, 15ம் தேதி 9.30 மணிக்கு சுதந்திர தின விழாக்கள் நடைபெறும் என புதிய அழைப்பிதழ் அரசு அலு வலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

** கொடியேற்ற நேரம் பார்க்கும் இவா (பார்ப்பனீயம்) நாடு எங்க விளங்கபோகுது.? **

Saturday, August 13, 2011

நன்மை பயக்கும் நடைப்பயிற்சி ...

நடைப்பயிற்சி ஓர் அற்புதமான பயிற்சியாகும். இது இரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, இரத்தத்தில் உள்ள தீய கொழுப்புச் சத்தின் (Low-density lipoprotein – LDL) அளவைக் குறைத்து, நரம்புகளுக்குப் புத்துணர்வு தந்து, எலும்புகளையும் உறுதியாக்குகிறது.

எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும், உடலுக்கு வலுவான கட்டமைப்பு அளித்து ஆரோக்கியமானதாக இருக்க விரும்புபவர்களுக்கும் நடைப் பயிற்சி ஓர் எளிய உடற்பயிற்சியாக உள்ளது.

வேகமாக நடத்தல் எனும் பயிற்சியை மேற்கொள்பவர்களுக்கு மாரடைப்பு மற்றும் இதர இதயநோய்களின் தாக்குதல்கள் இப்பயிற்சியை மேற்கொள்ளாதவர்களோடு ஒப்பிடுகையில் பாதிக்கும் மேலாக குறைவாக உள்ளது என்று சமீபத்திய ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

நீங்கள் வேலைக்கு செல்லும் பயணத்தில் அதிகமாக நடக்க முனையுங்கள், இரயிலுக்கோ பேருந்துக்கோ நடந்து செல்லுங்கள் , உங்கள் வாகனங்களை அலுவலகத்திலிருந்து சற்று தொலைவில் நிறுத்தி வைத்து நடந்து செல்லுங்கள். கடைகளுக்கு நடந்து செல்லுங்கள்., நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் தூய்மையான காற்று வீசும் பகுதிகளில் நீண்ட நடை பயணம் சென்று மகிழுங்கள்.

1. நெஞ்சை நிமிர்த்தி முன்னோக்கிப் பார்த்தவராக (தரையை பார்க்காமல்) இருபது அடி முன்னோக்கியவாறு நடங்கள்.

2. நெஞ்சை உயர்த்தியவாறு தோள்களைச் சாதாரணமாகவும் கைகளைத் தளர்வாகவும் வைத்திருங்கள்.

3. கைகளை முன்னும் பின்னும் ஒரே சீராக ஆட்டியவாறு (பக்கவாட்டில் ஆட்டாமல்), அதேவேளை நெஞ்சுப் பகுதியை விட உயர்த்திவிடாமல் நடந்து செல்லுங்கள். அதற்கேற்றவாறு உங்கள் கால்களும் பின் தொடரும்..

4. உங்கள் அடிவயிற்றை கெட்டியாகவும் உறுதியாகவும் வைத்த நிலையில் முதுகை சமமாக நிமிர்த்தியவாறு உடலைச் சற்றே முன்புறம் சாய்த்தவாறு நடங்கள்.

5. ஒரு நேர்கோட்டில் நடப்பதை போல் பாவனை செய்யுங்கள். அடிகளை சற்று அதிகமாக எட்டி வைத்து நடப்பதைக் கட்டுப்படுத்துங்கள். வேகமாக செல்ல வேண்டுமானால், காலடிகளை அருகருகே வைத்து விரைவாக நடங்கள்.

6. நடக்க காலை உயர்த்தும் போது உங்கள் முன்னங்கால் விரல்களால் உடலை உந்தித் தள்ளியவாறும், காலை பூமியில் வைக்கும் போது குதிகாலை பூமியில் முதலில் பதிய வைத்தவாறும் இதே சுழற்சியாக முன்னங்கால் விரல்களையும் இயற்கையான ஸ்ப்ரிங் போன்ற நரம்புகளின் உதவியால் உடலை முன்னோக்கி செலுத்துங்கள்.

7. இயல்பாக சுவாசியுங்கள். நடக்கும் போது ஆழமாக ஒரே சீரான வேகத்தில் சுவாசித்து உயிர்வளி (Oxygen) அதிகமான அளவில் உட்செலுத்திக்கொள்ளுங்கள். நடக்கும் போது வேகமாகவும் அதே நேரத்தில் மூச்சிறைக்கும் அளவிற்கு இல்லாமலும் பார்த்துக் கொள்ளுங்கள்.

வெற்றி பட வரிசையில் சேருமா வேலாயுதம்? விஜய் !?

விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. ஜெயம் ரவி அண்ணன் ஜெயம் ராஜா இயக்கி உள்ளார். ஆஸ்கார் பிலிம்ஸ் வி. ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார்.

45 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் இது தயாராகி உள்ளது., இப்படத்தின் பூஜை சென்னையில் ரசிகர்கள் முன்னிலையில் நடந்தது. இதுபோல் பாடல் வெளியீட்டு விழாவையும் ரசிகர்கள் முன்னிலையில் நடத்துகின்றனர்.

இவ்விழா வருகிற 28-ந் தேதி மதுரையில் நடக்கிறது., இப்படத்தை வெற்றிப்பட வரிசையில் சேர்ப்பதற்காக விழாவில் பங்கேற்க வரும்படி ரசிகர்களுக்கு விஜய் அழைப்பு விடுத்துள்ளார்., விழா ஏற்பாடுகளை ஆஸ்கார் ரவிச்சந்திரன் செய்து வருகிறார்., மதுரைக்கு வாருங்கள் என்று ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் விஜய்.

** தமிழக தேர்தலுக்கு பிறகு வரும் படம் என்பதால் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கிறார்கள்., இப்படத்தின் வெற்றி தோல்வியை வைத்துதான் அரசியல் பிரவேசம் என்று ஆய்வாளர்கள் கருத்து. **

Friday, August 12, 2011

ஐ டி யை தொடர்ந்து இந்தியாவில் முதன்மை பெரும் பெங்களூர் !

பெங்களூர் : வீடியோ கான்பரன்சிங் மூலம், மருத்துவ ஆலோசனைகளை அளிப்பதில், பெங்களூரு நகரம், நாட்டின் மற்ற நகரங்களை விட, முன்னோடியாக உள்ளது' என, ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் பிரபலமான, "கேபிள் மற்றும் ஒயர்லெஸ் வேர்ல்டுவைடு' என்ற தொலைத் தொடர்பு நிறுவனம், வீடியோ கான்பரன்சிங் மற்றும் தகவல் தொடர்பு மூலமாக, மருத்துவ ஆலோசனைகளை வழங்கும் நகரங்கள் குறித்த ஆய்வை நடத்தியது. இதில், சர்வதேச அளவில் சிறப்பாகச் செயல்படும் நகரங்களின் பட்டியலில்,பெங்களூரு இடம் பிடித்துள்ளது.

மிகத் தீவிரமான நோய்களைத் தவிர, சாதாரண நோய்களுக்கு, நேரடியாக மருத்துவமனைக்குச் சென்று, சிகிச்சை பெறுவதை விட, வீடியோ கான்பரன்சிங் மற்றும் தகவல் தொடர்பு மூலமாகவே, மருத்துவ ஆலோசனைகளைப் பெற்று, அதன் வாயிலாக சிகிச்சை பெறுவதையே, 54 சதவீத இந்தியர்கள் விரும்புகின்றனர்' என்றும், ஆய்வில் கூறப்பட்டுள்ளது.பெங்களூரு நாராயணா ஹிருதாலயா மருத்துவமனையின், டெலிமெடிசின் பிரிவு தலைவர் டாக்டர் அபய் சிங்கவி இதுபற்றி கூறுகையில், தற்போது, நேரடியாக மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை, கணிசமாகக் குறைந்து விட்டது.வீடியோ கான்பரன்சிங் மூலம், தங்களுக்கு உள்ள பிரச்னைகளை விளக்கி, அதன் வாயிலாக சிகிச்சை பெறுவதையே, பெரும்பாலானோர் விரும்புகின்றனர்'' என்றார்.

பெங்களூர் மனிபால் ஹெல்த் என்டர்பிரைசஸ் தலைவர் டாக்டர் நாகேந்திர ஸ்வாமி கூறுகையில், எங்களுக்கு நாட்டின் பல நகரங்களில், 15 மருத்துவமனைகள் உள்ளன. இதுதவிர, காத்மாண்டுவிலும் ஒரு மருத்துவமனை உள்ளது.வீடியோ கான்பரன்சிங் மூலம் சிகிச்சை பெற, சிறப்பு மருத்துவர்கள், ஒரே இடத்தில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எந்த இடத்திலிருந்து வேண்டுமானாலும், நோயாளிகள், சிறப்பு மருத்துவர்களை தொடர்பு கொண்டு, தங்களுக்குத் தேவையான ஆலோசனைகளைப் பெற முடியும் என்றார்.

கருவில் உள்ளதை கண்டு கொள்ள !

வாஷிங்டன் : தாய் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை கண்டுபிடிக்க அலட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவி பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் கருவுற்று 4 1/2 மாதத்துக்கு பிறகே ஆணா, பெண்ணா என்பதை கண்டுபிடிக்க முடியும்.

ஆனால் இப்போது புதிய முறையை பயன்படுத்தி கருவுற்ற 1 1/2 மாதத்திலேயே குழந்தையின் பாலினத்தை கண்டுபிடித்து விடலாம் என்று அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தாயின் ரத்த மாதிரியை எடுத்து அதில் உள்ள மரபணு மூலம் (டி.என்.ஏ.) 1 1/2 மாதத்தில் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

இதுதொடர்பாக அவர்கள் 57 விதமான ஆய்வுகளை நடத்தியுள்ளனர். 6500 கருவுற்ற பெண்களை இதற்காக அவர்கள் பயன்படுத்தி உள்ளனர். இதில் 1 1/2 மாதத்திலேயே 99 சதவீதம் சரியாக குழந்தைகளின் பாலினத்தை கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

இதன் மூலம் ஆரம்பத்திலேயே குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டு பிடித்து தாய்க்கு தேவையான சிகிச்சைகளை அளிக்க முடியும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

யு எஸ் பொருளாதார நிலையும் இந்திய ஐ டி துறையும் !

சென்னை, ஆக. 12 : அமெரிக்காவில் 2008-ம் ஆண்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதில் இருந்து மீளவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் எந்த பலனும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அமெரிக்காவின் கடன் தரமதிப்பீடு குறியீடு திடீரென குறைந்துள்ளது. கடன் தரமதிப்பீடு இதற்கு முன்பு உயர்ந்த குறியீடான “ஏஏஏ” என்ற அளவில் இருந்தது. அது இப்போது “ஏஏ+” என்ற அளவில் குறைந்துள்ளது.

ஒரு நாட்டின் கடன் தரமதிப்பீடு அதிகமாக இருந்தால் தான் மற்ற நாடுகள் அந்த நாட்டின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும். ஆனால் இப்போது அமெரிக்காவில் கடன் தரமதிப்பீடு குறைந்து விட்டதால் வெளிநாட்டில் இருந்து வரும் கடன் பத்திர முதலீடு குறைந்து விடும். இதனால் அமெரிக்காவுக்கு கடும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க அமெரிக்கா போராடி வருகிறது.

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு இந்தியாவை தாக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே அமெரிக்க கடன் தரமதிப்பீடு குறைந்ததுமே இந்தியாவில் பங்குசந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. இதனால் பல நிறுவனங்கள் நஷ்டங்களை சந்தித்து வருகின்றன.

இந்த நிலையில் இந்திய கம்ப்யூட்டர் துறைக்கும் கடும் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இந்தியாவில் கம்ப்யூட்டர் துறை முன்னணி தொழில் துறையாக உள்ளது. இந்த துறையில் மட்டும் 25 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இதன்மூலம் இந்தியாவுக்கு ஆண்டுக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம் வருகிறது. இந்திய உள்நாட்டு உற்பத்தியில் இதன் பங்கு 5.19 சதவீதம் ஆகும்.

ஆனால் கம்ப்யூட்டர் துறை வருமானம் பெரும் பகுதி அமெரிக்காவில் இருந்தே வருகிறது. “அவுட்சோர்சிங் பணிகள்”, சர்ப்ட்வேர் ஏற்றுமதி மூலம் இந்த வருமானங்கள் கிடைக்கிறது. இந்திய சாப்ட்வேர் ஏற்றுமதியில் 61.5 சதவீத வருமானம் அமெரிக்காவில் இருந்தே கிடைக்கிறது. அதாவது ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி சாப்ட்வேர் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதைதவிர பெருமளவு அவுட்சோர்சிங் பணிகளும் அமெரிக்கா நிறுவனங்களுக்கே செய்யப்படுகின்றன.

அமெரிக்க பொருளாதாரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் இந்த பணிகளில் பாதிப்பு ஏற்படலாம் என கருதப்படுகிறது. அமெரிக்காவில் தற்போது பலருக்கு வேலைவாய்ப்பு இல்லை. அங்கு 9.1 சதவீதம் பேர் வேலையில்லாமல் தவிப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. எனவே அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கே வேலை கொடுக்க வேண்டும் என்ற கோஷம் எழுந்துள்ளது.

அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் பணிகளை அவுட்சோர்சிங் முறையில் வெளிநாட்டில் கொடுப்பதற்கும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. எனவே அவுட்சோர்சிங் பணிகளை அமெரிக்கா குறைத்து கொண்டால் அது கம்ப்யூட்டர் துறைக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தும்.

சமீபத்தில் ஏற்பட்ட அமெரிக்க பொருளாதார பாதிப்பால் இந்திய கம்ப்யூட்டர் நிறுவனங்களின் பங்குகள் பெருமளவு சரிந்துள்ளன. இன்போசிஸ் நிறுவன பங்குகள் 4.73 சதவீதமும், டிசிஎஸ் பங்குகள் 4.49 சதவீதமும், விப்ரோ பங்குகள் 2.5 சதவீதமும் சரிந்துள்ளன. இதைபோல மற்ற நிறுவனங்களின் பங்குகளும் சரிந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் இந்த நிறுவனங்களுக்கு பெரும் நஷ்டம் உருவாகும். இது ஊழியர்களையும் பாதிக்கும் நிலை உருவாகலாம்.

ஆனால் அமெரிக்க பொருளாதார பாதிப்பு கம்ப்யூட்டர் துறைக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இல்லை என்று இந்திய கம்ப்யூட்டர் நிறுவன கூட்டமைப்பான “நாஸ்காம்” தெரிவித்துள்ளது.

2008-ம் ஆண்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது நாங்கள் அமெரிக்க நிறுவனங்களுடன் சில மாற்றங்களை உருவாக்கி கொண்டோம். எனவே எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு நாங்கள் சில திட்டங்களை உருவாக்கி இருக்கிறோம். இதனால் அச்சப்பட தேவையில்லை என்று நாஸ்காம் கூறியுள்ளது.

விப்ரோ நிறுவன தலைமை நிர்வாகி குரியன் கூறும்போதும், எந்தவித எதிர்விளைவு வந்தாலும் அதை தாங்கும் வகையில் இந்திய கம்ப்யூட்டர் துறைகள் உள்ளன. எனவே பெரிய பாதிப்புகள் ஏற்படாது என்றார்.

Thursday, August 11, 2011

சினிமா சைடு டிஷ்ஷாக தொழிலில் முழு கவனம் பானு!

நடிகை சேனா உள்ளிட்ட பல நடிகைகள் நகைக்கடை, பேஷன் ஷோரூம், ஹோட்டல்கள் என்று நடத்தி வருகின்றனர். அந்த பட்டியலில் தாமிரபரணி பானுவும் இணைந்திருக்கிறார். அவர் கொச்சியில் பியூட்டி பார்லர் ஒன்றை தொடங்கியுள்ளார்.

இதுபற்றி பானு கூறுகையில், நான் தமிழில் புதுமுகங்கள் தேவை என்ற படத்திலும், மலையாளத்தில் ஜெயராம் ஜோடியாகவும் நடித்துக் கொண்டிருக்கிறேன். நல்ல கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறேன். அதனால் தான் நிறைய படங்களில் நடிக்க முடியவில்லை. கொச்சியில் உள்ள பனம்பில்லி நகரில் ஸ்டுடியோ ரிவைவ் என்ற பெயரில் பியூட்டி பார்லர் ஒன்றை தொடங்கியுள்ளேன்.

அழகுக்கலை குறித்து படித்துள்ள என் அம்மாதான் அதை நிர்வகிக்கப் போகிறார். சினிமாவை மட்டும் நம்பி இருந்தால் கஷ்டம்தான். எனவேதான் ஏதாவது செய்யலாமே என்று நினைத்து, பியூட்டி பார்லரை திறந்துள்ளேன். நான் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது, என்றார்.

கணினி முன் அமர்ந்து வேலை செய்பவரா! கட்டாயம் இதை படியுங்கள்!!

பெரும்பாலும், கடின உழைப்பில் ஈடுபடுபவர்களை விட, அமர்ந்தபடியே வேலை செய்பவர்களுக்குத்தான் அதிகமான பிரச்சினைகள் வருகின்றன.

முதலில் கணினி முன் அமர்ந்து பணியாற்றுபவர்களைப் பார்க்கலாம்.

நமது முதுகெலும்பானது கேள்விக்குறியைப் போன்ற அமைப்பில் இருக்க வேண்டும். ஆனால், கூன் போட்டு அமர்ந்தபடியே வேலை செய்வதால் நமது முதுகெலும்பு ஆங்கில எழுத்தான சி- யைப் போன்று ஆகிவிடுகிறது.

முதுகெலும்பில் இப்படி ஒரு மாற்றம் ஏற்படுவதால், முதுகெலும்பின் ஒரு சில தட்டுகளில் இருக்கும் திரவம் அழுத்தத்தின் காரணமாக வெளியேறுகிறது. இதனால் முதுகுவலி ஏற்படுகிறது.

மேலும், கால்களை ஒரே மாதிரியான நிலையில் வைத்து பணியாற்றுவதும் தவறு. அவ்வப்போது கால்களின் நிலையை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். கால்கள் ஒரே அழுத்தமான நிலையில் இருப்பதால், உடலில் வாயுவின் இயக்கம் ஓரிடத்தில் தடைபட்டு அங்கு வலி ஏற்படுகிறது. எனவே உடலை அவ்வப்போது தளர்வாக வைத்துக் கொள்வதும், கை, கால்களின் நிலையை மாற்றிக் கொண்டிருப்பதும் அவசியமாகிறது.

எந்த ஒரு செயலுக்கும் எதிர்மறையான ஒரு செயலை நாம் செய்தால் அது நல்ல பலனை அளிக்கும். அதாவது கூன் போட்டு அமர்ந்தபடியே இருக்கும் நாம், அவ்வப்போது, பேக் ஸ்ட்ரிச் எனப்படும் பின்பக்கமாக வளைவதை செய்யலாம்.

அதுபோலவே குவிந்தபடி நம் கைகளை வைத்திருப்பதை மாற்றி, விரல்களை பின்பக்கமாக வளைக்கும் எளிய பயிற்சிகளை செய்யலாம்.

அவ்வப்போது எழுந்து நடந்து சென்றுவிட்டு வரலாம். தண்ணீர் குடிக்கவோ, மற்றவர்களிடம் அலுவலக சந்தேகம் கேட்கவோ 1 மணி நேரத்திற்கு ஒரு முறையாவது நடந்து செல்வது நல்லது.

மேலும், கணினியை நாம் குனிந்தபடி பார்க்கும் வகையில் வைத்துக் கொள்ள வேண்டும். சிறிது கூட நமது தலை நிமிர்ந்தபடி இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், எளிதில் நமது கழுத்தின் நரம்புகளில் வலி ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

ஒரே இடத்தில் நிற்கும்போது இரண்டு கால்களையும் ஊனி நிற்கக் கூடாது. ஒரு காலில் ஊனி மற்றொரு காலை தளர்வாக விட்டு நின்றால், உடலில் இருக்கும் வாயுவானது சரியான இயக்கத்தில் இருக்கும். எனவே இடுப்புப் பகுதியில் வாயுப் பிடிப்பு என்பது ஏற்படாது.

Wednesday, August 10, 2011

தமிழர்களுக்கு கிடைத்த தீர்ப்பு! ஆரிய வந்தேறிகளுக்கு ஆப்பு !? கலைஞர்

சென்னை : நான் சுவிஸ் வங்கியில் 35 ஆயிரம் கோடி ரூபாய் வைத்திருப்பதாக வந்த செய்தி குறித்து, கோர்ட்டில் வழக்கு தொடர ஆலோசித்து வருகிறேன். சமச்சீர் கல்வி தொடர்பான தீர்ப்பு தமிழர்களுக்கு கிடைத்த தீர்ப்பு, ஆரிய வந்தேறிகளுக்கு ஆப்பு !? என தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று அளித்த பேட்டி : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எப்படியிருந்தாலும், அதை அப்படியே நிறைவேற்றுவேன் என முதல்வர், பேரவையில் அறிவித்துள்ளாரே. அதை நிறைவேற்றுவாரா? தொடர்ந்து கவனிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.

புதிய தலைமைச் செயலகம் கட்டியது குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதே? புதிய கட்டடத்தில்தான் கவர்னர் உரை, பட்ஜெட் உரையும் நடந்துள்ளது. அமைச்சர்கள் தாராளமாக உட்கார்ந்து பத்து கூட்டங்களுக்கு மேல் நடத்தியுள்ளனர். அத்தகைய இடம் போதுமானதாக இல்லை, வசதியானதல்ல என ஒரு பொய்யைக்கூறி, அதைப் புறக்கணிப்பது ஜெயலலிதா அரசை பொறுத்தவரை, சமச்சீர் கல்வியைப் புறக்கணித்தது போலத்தான்.

தமிழக அரசின் செயல்பாட்டால் மாணவர்களின் 100 நாட்கள் படிப்பு கெட்டுப்போயுள்ளதே. அந்த 100 நாள்கள் இழப்பை எப்படி சரிகட்டலாம்?,கல்வியாளர்களையும், குறிப்பாக பள்ளி ஆசிரியர் பிரதிநிதிகளையும் கலந்து, மாணவர்களுக்கு ஏற்பட்ட இடைக்கால இழப்பை எப்படி சரிசெய்வது என முடிவெடுக்க அரசு முன்வரவேண்டும்., இவ்வாறு கருணாநிதி கூறினார்.

கலக்கலான பிள்ளை பெக்க கருவிலேயே..

மண்ணில் பிறக்கையில் எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான். அது நல்லவன் ஆவதும், தீயவன் ஆவதும் அதன் அன்னை வளர்ப்பதிலே என்று ஒரு பாடல் உண்டு. இது ஒருபுறம் இருக்க, கருவில் இருக்கும்போதே ஒரு குழந்தையை அறிவாளி ஆக்கிவிடலாம் என்று கண்டறிந்து இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

ஆணின் உயிரணுவும், பெண்ணின் கருமுட்டையும் இணைந்துதான் ஒரு உயிர் உருவாகிறது. இருந்தாலும், அந்த உயிர் தாயின் கருப்பையில்தான் வளர்கிறது. இதன்மூலம், அந்த குழந்தைக்கும், அந்த தாய்க்கும் இடையேயான பாசப் பிணைப்பு அந்த உயிர் உருவாகும்போதே ஏற்பட்டு விடுகிறது.

சுமார் 10 மாதங்கள் தாயின் கருப்பையிலேயே அந்த உயிர் வளர்ந்து குழந்தையாகிறது. அந்த 10 மாத காலத்தில், கருவுற்ற பெண் அறிவுப்பூர்வமான விஷயங்களை அதிகம் படிப்பதாலும், பேசுவதாலும் மற்றும் மன மகிழ்ச்சியாக இருப்பதாலும், பிறக்கப்போகும் குழந்தையை அறிவுள்ள குழந்தையாக மாற்ற முடியும் என்று கண்டறிந்து இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது என்ன எண்ணுகிறாளோ, அதைப் பொறுத்துதான் குழந்தையும் உருவாகிறது. அதனால், தாயானவள் நிறைய விஷயங்களை அந்த கர்ப்பக் காலத்தில் கற்றுக்கொண்டால், அவளுக்கு பிறக்கும் குழந்தையும் அறிவுப்பூர்வமானதாக பிறக்கும் என்றனர்.

Tuesday, August 9, 2011

தாங்க முடியா தலை வலியா? சிறு பயிற்சி

நம் மூக்கில், இரண்டு துவாரங்களையும் சுவாசிக்க / காற்றை வெளியிட உபயோகிக்கிறோம்.

தலைவலி வரும் போது, வலது துவாரத்தை மூடி, இடது துவாரம் வழியாக சுவாசிக்கவும். ஐந்தே நிமிட நேரத்தில் தலைவலி காணாமல் போய் விடும்.

மிகவும் களைப்பாக இருக்கிறதா? இடது துவாரத்தை மூடி, வலது துவாரம் வழியாக சுவாசிக்கவும். சிறிது நேரத்தில் களைப்பு போய் விடும்.

மலேசியாவில் பொழுது போக்கிற்காக ஆடியது ரம்மி போனது ஐந்து உயிர்

கோலாலம்பூர் : மலேசிய நாட்டின் கேடா மாநிலத்தில், காசு வைத்து சூதாடிக் கொண்டிருந்த 5 பேர் போலீஸôரைப் பார்த்ததும் ஆற்றில் குதித்து தப்ப முயன்று வெள்ளத்தில் மூழ்கினர்.

40 வயது முதல் 50 வயது வரை உள்ள 5 பேர் ஆற்றங்கரையோரம் சந்தித்துக் கொண்டனர். உடனே பொழுது போவதற்காக காசு வைத்து சூதாடத் தொடங்கினர். ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தபோது தங்களைப் போலீஸôர் சூழ்ந்துகொண்டதை உணர்ந்தனர்.

சூதாடினால் நீதிமன்றத்தில் ஆறு மாதம் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிப்பார்கள். எனவே போலீஸôரிடம் சிக்கக்கூடாது என்று தீர்மானித்த 5 பேரும் போலீஸôரே எதிர்பாராத வண்ணம் வெள்ளம் கரை புரண்டோடிய ஆற்றில் குதித்துவிட்டனர்.

நீச்சல் தெரிந்திருந்தும் வெள்ளத்தின் வேகத்தைச் சமாளிக்க முடியாமல் அப்படியே ஆற்றில் மூழ்கினர். அவர்கள் வெளியில் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் ஆற்றின் கரையோரமே ஓடிய போலீஸôர் அவர்கள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டதை முதலில் உணர்ந்தனர். பிறகு அவர்களின் குடும்பத்தாருக்குத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

Monday, August 8, 2011

கொலைகாரனுக்கு சங்கு ஊத வாரீர்! தீர்வு காண வாரீர் !! வை கோ

சென்னை : "ஈழத்தமிழர்" பிரச்னைக்காக வரும் 12ம் தேதி, டில்லியில் ம.தி.மு.க., போராட்டம் நடத்தும், என வைகோ தெரிவித்துள்ளார்.

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: சிங்கள ராணுவ தாக்குதலில், லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். உலகத் தமிழர்கள் விம்மி அழுதபோது, மத்திய அரசு, இலங்கை முப்படைகளுக்கு ஆயுதம், பணத்தை அள்ளித் தந்து, விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இயக்கியது, மன்னிக்க முடியாத துரோகம்.

ஈழத் தமிழர்களை கொடூரமாக அழித்த காட்சிகளைப் பார்த்து, உலகின் பல்வேறு நாடுகளில், சிங்கள அரசுக்கு எதிராக கண்டனக் குரல் ஓங்கி வருகிறது. மத்திய அரசு தனது துரோகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, இலங்கை அரசுக்கு எதிரான நிலையை எடுக்க வேண்டும்.

பிரச்னைக்கு, சுதந்திரத் தமிழ் ஈழம் மட்டுமே தீர்வு என்பதால், உலக நாடுகள் கண்காணிப்பில், பொது ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். புலம் பெயர்ந்த தமிழர்களும் ஓட்டளிக்கும் வாய்ப்பளிக்க ஐ.நா., நடவடிக்கை எடுக்கக் கோரி, வரும் 12ம் தேதி, டில்லி பார்லிமென்ட் அருகே உள்ள, ஜந்தர் மந்தரில், என் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. ஈழத்தமிழ் உணர்வாளர்கள் இதில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

காயம் காரணமாக கட்டாய ஓய்வு! ஜாகிர் !!

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான். ஆக்ரோஷமாக பவுலரான இவர் அடிக்கடி காயத்தால் அவதிப்படுகிறார். தற்போது இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் காயம் காரணமாக விலகியுள்ளார். இது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் 13 ஓவர் வீசி இருந்த நிலையில் இடது தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதில் இருந்து அவரால் மீள முடியாததால் தற்போது தொடர் முழுவதும் விலகியுள்ளார். உடல் தகுதி குறித்த அக்கறையின்மையால் அவர் அடிக்கடி காயத்தால் சிக்குகிறார்.

முன்னணி பவுலரான அவர் தனது உடல் தகுதி குறித்து கவலைப்படாமல் இருப்பது ஆச்சரியமானது.12 ஆண்டு கால தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஜாகீர்கான் பலமுறை காயத்தால் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் குதிங்காலில் ஏற்பட்ட காயத்தால் ஆஸ்திரேலிய தொடரில் இருந்து பாதியில் விலகினார். 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் இடது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக போட்டியில் ஆடவில்லை.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் காயத்தால் விலகினார். அதே ஆண்டு டிசம்பர் மாதம் தசைப்பிடிப்பால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடவில்லை. இந்த ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு ஐ.பி.எல். போட்டியில் விளையாடினார்.

அதில் ஏற்பட்ட காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆடவில்லை. முழு உடல் தகுதி பெறாமலேயே தற்போது இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இடம் பெற்றார். ஒரு இன்னிங்சில் கூட அவரால் முழுமையாக பந்து வீச முடியாமல் போனது ஏமாற்றமே. பொதுவாக வேகப்பந்து வீரர்கள் காயப்படுவது தவிர்க்க முடியாது.

துள்ளி குதித்து பந்துவீசும் போது கணுகாலில் காயம் ஏற்படுவது சகஜமானது. பெர்ட்லீ, மெக்ராத் போன்ற வீரர்கள் இதே மாதிரி காயம் அடைந்து இருக்கிறார்கள். ஆனால் சரியான உடற்பயிற்சி இருந்தால் இது மாதிரியான காயத்தை தவிர்க்கலாம்.

ஏற்கனவே பரிதாப நிலையில் இருக்கும் இந்திய அணிக்கு ஜாகீர்கான் தொடர்ந்து ஆடாதது மிகப்பெரிய இழப்பாகும். 32 வயதான ஜாகீர்கான் 79 டெஸ்டில் விளையாடி 273 விக்கெட்டும், 191 ஒருநாள் போட்டியில் விளையாடி 273 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளார்.

Sunday, August 7, 2011

கண்ணின் ஒளியை முற்றிலும் பறிக்கும் காரணிகள் !?

உலகில் பல மக்கள் கண் பார்வையை இழக்க காரணம், ‘க்ளோகோமா". இது கண்ணின் ஒளியை முற்றிலும் பறிக்கக் கூடியது.

கண்களின் அழுத்தத்தை தக்க வைக்கும் அளவுக்கு வேண்டிய கண்ணீர், வெளியேறி விட,கண்களில் மெல்ல அழுத்தம் அதிகமாகும்.இந்த அதிகரித்த அழுத்தத்தை ‘க்ளோகோமா’ என்பர். இதனால் கண் நரம்பு பாதிகக்கப்பட, பார்வை மெதுவாகக் குறையும்.

க்ளோகோமாவின் அறிகுறிகள் : கண்களின் அழுத்தம் அதிகமாகும். ஆனால் 30% நோயாளிகளுக்கு இந்நோய்க்கான அறிகுறி தெரிவதில்லை.நோயின் தன்மை அதிகமாக, ஒரு சிலருக்கு கண்களில் கண்ணீர் வெளிவராது அல்லது எரிச்சல் அல்லது அரிப்பு என்று கண்கள் பாதிக்கப்படும்.ஒரு சிலருக்கு கண்களில் வலி அல்லது தலைவலி ஏற்படும். 40 வயதுக்கு முன்பே, ஒரு சிலருக்கு கண்ணாடி அணியும் சூழ்நிலை உருவாகும். எதிரே உள்ள எண் வேகமாக பெரிதாகும். வெயிலில் செல்லும்போது சிக்கலும், இரவில் வெளிச்சத்தில் வானவில் போன்ற வண்ணங்களும் ஏற்படும்.

யார் யாருக்கு ஏற்படும் : 35 வயதான பிறகு இந்நோய் சுமார் 4% பேருக்கு ஏற்படும். வயது ஆக ஆக இதன் சதவிகிதமும் அதிகமாகும்.பரம்பரையாக இந்தக் குறைபாடு உள்ள குடும்பத்தின் உறுப்பினர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

சர்க்கரை நோய் அல்லது ‘மயோபியா’(மைனஸ் கண்ணாடி அணிந்தவர்கள்) உள்ளவர்கள் அவ்வப்போது கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்., குழந்தைகள் பிறக்கும்போதே க்ளோகோமா ஏற்படும் வாய்ப்பு உண்டு. க்ளோகாமாவுக்கான சிகிச்சை முறைகளும் உண்டு.

அக்யூட் க்ளோகோமா : ஒரு சில நோயாளிகளுக்கு கண்களில் அதிக வலி இருக்கும்.இது ஹைப்பர் மெட்ரோபிக் பார்வைக் கோளாறு உள்ள பெண்களுக்கு அதிகம் ஏற்படும்.

35 வயதுக்கு மேல் அனைவரும் கண் பரிசோதனை செய்து சொள்வது நல்லது. அவசியம் ஏற்பட்டால் ‘கம்ப்யூட்டரைஸ்டு ஆட்டோ மெடட் பேரா மீட்டரிÕ மூலம் கண் பரிசோதிக்கப்படும்.

சிகிச்சை முறை : மருந்து மாத்திரைகளாலும் கண்களின் அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முடியும். தேவைப்பட்டால் அறுவை சிகிச்சையும் செய்யப்படும்.

‘ட்ரேபேக்யூலெக்டாமி’ என்ற மைக்ரோ சர்ஜரியுடன் வேறு சில மருந்துகளும் அளிக்கப்பட, 90% பேருக்கு க்ளோகோமா பூரணமாக குணமாகி, உள்ளது., லேசர் அறுவை சிகிச்சை மூலம் ஆரம்பக்கட்ட க்ளோகோமாவை குணப்படுத்த முடியும்.

இவ்வாறு ட்ரே பேக்யூ லெக்டாமி செய்த பிறகு நோய் கட்டுப்படவில்லை எனில் சிறப்பு வகை வால்வ் பயன்படுத்தி கண்களின் அழுத்தம் கட்டுப்படுத்தப்படும்.

போராட்டத்தில் இறங்கிய பொதுமக்கள்! லண்டனில்..

லண்டனில் இளைஞர் ஒருவர் துப்பாக்கி சூட்டினால் பலியானதையடுத்து, காவல்நிலையம் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மார்க் டக்கன் என்ற 26 வயது இளைஞர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கூறி போலீசார் சுட்டுக்கொன்றனர்., இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் கடந்த இரு நாட்களாக டாட்டன் காம் நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் திடீரென வன்முறையில் இறங்கினர்.

சாலையில் சென்றுகொண்டிருந்த காவல்துறை வாகனங்கள் மீது கற்களை வீசி ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இரண்டு போலீஸ் கார்கள், இரண்டு அடுக்கு பேருந்து, கட்டிடங்கள் உள்ளிட்டவற்றை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தீ வைத்து கொளுத்தினர்., கலவத்துக்கு காரணமான 150க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Saturday, August 6, 2011

விஜயயை பார்த்து ஏன் பயப்படுகிறார் பாலா ?

விஜய் என்னை பயப்பட வைக்கிறார் என்று டைரக்டர் பாலா கூறியிருக்கிறார். டைரக்டர் விஜய் இயக்கத்தில், விக்ரம், அனுஷ்கா, அமலாபால் நடித்து செம ஹிட் ஆகியிருக்கும் "தெய்வத்திருமகள்" வெற்றியை பகிர்ந்து கொள்ளும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார் டைரக்டர் பாலா. அவர் பேசி முடிந்ததும் படத்தின் டைரக்டர் விஜய் கண்கள் குளமாகி நின்றன. அப்படியென்ன பேசினார் பாலா?.

நான் எடுத்த இரண்டு படங்களில் விக்ரம் நடிச்சிருந்தார். அந்த படங்களை விட இந்த படத்தில்தான் எனக்கு விக்ரமின் நடிப்பு ரொம்ப பிடிச்சிருந்தது. "தெய்வத்திருமகள்" படம் பார்த்துட்டு நான் கண்கலங்கினேன். உண்மையில் விஜய் என்னை பயப்பட வைக்கிறார். நான் அஞ்சுவது அவரது டைரக்ஷனை பார்த்துதான் என்று பாலா பேசியதை கேட்டதும், கிடைக்காத பெரிய விருது கிடைத்த சந்தோஷத்தில்தான் கண்களை குளமாக்கிக் கொண்டார் டைரக்டர் விஜய்.

மலட்டு தன்மைக்கு மாற்று கண்டுபிடிப்பு !ஆண்களுக்கு!!

வாஷிங்டன்: மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்ட ஆண்கள் குழந்தை பேறு இன்றி தவிக்கின்றனர். எனவே அவர்களின் இந்த குறையை போக்க விஞ்ஞானிகள் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கியோபோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜப்பான் கருத்தரிப்பு மைய நிபுணர்கள் சமீபத்தில் இதுகுறித்த புதுமையான ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

எலியின் கருவில் உள்ள ஸ்டெம்செல்களில் இருந்து தரம் வாய்ந்த திசு செல்களை ஆய்வகத்தில் வைத்து தயாரித்தனர். அவற்றை மலட்டுதன்மையுடன் இருந்த ஒரு எலியின் விரை பைக்குள் செலுத்தினர். அது இயற்கையானதை போன்று செயற்கையான விந்தணுவை உற்பத்தி செய்தது. அவற்றை எலியின் கரு முட்டையில் செலுத்தினர்.

இதை தொடர்ந்து உடல் நலத்துடன் கூடிய எலிக்குட்டிகள் பிறந்தன. எனவே இதே முறையை மலட்டுத்தன்மை நோயில் சிக்கி தவிக்கும் ஆண்களின் உடலில் பயன்படுத்தவும் நிபுணர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதன் மூலம் மலட்டுத் தன்மை பாதித்துள்ள ஆயிரக்கணக்கான ஆண்கள் பயன்பெற முடியும் என கருதுகின்றனர். இந்த சிகிச்சை முறை ஆண்களுக்கு வரபிரசாதமாக இருக்கும்.

பொய் வழக்குகளால் பொங்கி எழுந்த கலைஞர் ?

திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கலைவாணன் கைதை கண்டித்து திருவாரூரில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் கலைஞர் தலைமையேற்று இக்கூட்டத்தில் பேசினார்.

அப்போது அவர், ’பொய் வழக்குகளை பொங்கி எழுந்து கண்டிக்கிறோம் என்று இங்கு பேசினார்கள். பொய் வழக்குகள் மட்டுமல்ல; இன்று அராஜக வழக்குகளாக இன்றைக்கு தொடங்கப்படுகின்றன.

கலைவாணன் மீது முதலில் இரண்டு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் எங்கே.,? ஜாமீன் வாங்கிவிட்டு வந்துவிடுவாரோ என்றுதான், அழுத்தம் திருத்தமாக ஆப்பு அடிக்கவேண்டும் என்று மூன்றாவது முறையாக என்ன வழக்கு போடலாம் என்று யோசித்து பார்த்து, தங்களையே ஒரு முறை கண்ணாடியில் பார்த்துக்கொண்டு குண்டர் சட்டம் என்ற ஒரு சட்டத்தை இன்றைக்கு தம்பி கலைவாணன் மீது ஏவியிருக்கிறார்கள்.

ஏறக்குறைய மரண தண்டைக்கு ஒப்பானதுதான், தூக்கு தண்டனைக்கு ஒப்பானதுதான் குண்டர் சட்டம். கலைவாணனை பார்த்தால் அவர் குண்டர் இல்லை. நாட்டுலே உள்ள குண்டர்களையெல்லாம் விட்டுவிட்டு கலைவாணன் மீது குண்டர் சட்டமா?

ஒரு கலைவாணனை அடக்கிவிட்டால். இன்னொரு கலைவாணன் கிடைப்பது சுலபமல்ல; கலைவாணன் சிந்துகின்ற ஒரு துளி ரத்தம்;அதிலே ஆயிரக்கணக்கான கலைவாணன்கள் தமிழகத்திலே முளைப்பார்கள்.

திமுகவை அடியோடு வீழ்த்திவிட வேண்டும் என்று ஒரு கூட்டம் துடிக்கிறது. திமுகவை அழித்துவிட்டால், தாராளமாக ஆட்சி நடத்தலாம். எவனையும் வாடா போடா என்று பேசலாம் என்றூ நினைக்கிறார்கள். நான் எவ்வளவு நாளைக்கு இருப்பேனோ என்று தெரியாது. நான் இருக்கும் வரைக்கும் சரி, எனக்குப்பின்னும் யாராலும் திமுகவை அழிக்க முடியாது.

** யார் யாரோ தண்டிக்கப்படுகிறார்கள். ஆனால் ஒரு அம்மையார் உயர் ஜாதியிலே பிறந்துவிட்டதால் அவருடைய வழக்கு கிட்டத்தட்ட 14 வருடங்களாக நடைபெற்று வருகின்றன’’ என்று பேசினார்.

இந்தியர்களின் லஞ்சம் வாங்கும் போக்கு யு எஸ் சிலும் !?

நியூயார்க் : அமெரிக்காவில் மாபெரும் மருத்துவ காப்பீட்டு மோசடியில் ஈடுபட்ட 19 அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாபுபாய் படேல் (49) என்ற அமெரிக்க வாழ் இந்தியர் அங்கு மருந்தாளுநர் ஆக உள்ளார். அமெரிக்கா முழுவதும் பல பினாமி பெயர்களில் 26 மருந்துக் கடைகளை அவர் நடத்தி வருகிறார்., மேலும், ஏராளமான மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுத்து, மருந்துகளை கட்டாயமாக தனது கடைகளில் வாங்க வற்புறுத்தியுள்ளார்.

மெடிகேர், மெடிக்எய்ட் மற்றும் தனியார் மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களின் அட்டைகளை வைத்திருப்பவர்கள், காப்பீட்டு திட்டத்தில் பணத்தை பெற பாபுபாய் படேல் நடத்தும் மருந்து கடைகளில்தான் வாங்க வேண்டும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கு டாக்டர்களும், மருத்துவமனைகளும் பாபுபாய் படேலுக்கு உடந்தையாக இருந்துள்ளதாக தெரிகிறது.

மேலும் நோயாளிகளுக்கு தாங்களே மருந்துகளைத் தரும் சில மருத்துவமனைகள், அதற்கான பில்களை பாபுபாய் படேலின் நடத்தும் மருந்துக் கடைகளின் பெயரில் தயாரித்துள்ளன., மிக்சிகன் மாகாணத்தில்தான் இந்த மோசடி பெரிய அளவில் நடந்துள்ளது. மன அழுத்தத்தைப் போக்கும் மருந்துகள், போதை பொருள் அடங்கிய வலி நிவாரணிகள் போன்ற மருந்துகளை, மருத்துவர்களின் பரிந்துறையின்றி பாபுபாய் படேல் நடத்தும பார்மஸிகள் விற்பனை செய்துள்ளன.

இதற்காக பல முக்கிய மருத்துவமனைகள், மனநல மருத்துவர்கள் லஞ்மாக பணம், பரிசுப் பொருள்களை பாபுபாய் படேல் கொடுத்துள்ளார்., இது போன்ற முறைகளில் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து பணத்தை அவர்கள் சுருட்டியுள்ளனர். மோசடியின் முக்கிய புள்ளியான பாபுபாய் படேல் மீது 34 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் இவர்கள் மோசடியில் ஈடுபட்டு பல லட்சம் ரூபாயை சுருட்டியுள்ளனர்.

இந்த வழக்கில் 26 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 19 பேர் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் ஆவார்கள். தினேஷ்குமார் படேல், அனிஷ் பவ்சார்,அஸ்வினி சர்மா,பினாகின் படேல், கார்த்திக் ஷா உள்ளிட்ட மருந்தாளுநர்களும், பால் பெட்டார் போன்ற பிரபல டாக்டர்களும், உளவியல் நிபுணர்கள் சன்யானி எட்வர்ட்ஸ் போன்றவர்களும் அடங்குவர்.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!