Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, July 18, 2011

அதை" விட இதற்குத்தான் அதிகம் ஆசை படுகிறார்கள் பெண்கள் !!

லண்டன், பார்ட்னருடன் செக்ஸில் ஈடுபடுவதை விட, கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடுவதையே பெண்கள் அதிகம் விரும்புகின்றனர் என்று ஆய்வு என்று தெரிவிக்கிறது. இங்கிலாந்தைச் சேர்ந்த டொரிடோஸ் என்னும் நிறுவனம், கம்ப்யூட்டர் விளையாட்டுக்கள் தொடர்பான ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வில் தெரிய வந்துள்ள விபரங்கள் வருமாறு:-

ஆண்களை விட, பெண்கள்தான் அதிகமாக கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாட விரும்புகின்றனர். செக்ஸை அனுபவிப்பதை விட, கம்ப்யூட்டர் விளையாட்டில்தான் அதிக திருப்தி கிடைப்பதாக பெண்களில் பலர் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆண்கள் 22.3 சதவிகிதம் நேரத்தையும், பெண்கள் 23.2 சதவிகிதம் நேரத்தையும் விளையாட்டில் செலவிடுகின்றனர்.

பார்ட்னர்களுடன் படுக்கை அறையை பகிர்ந்து கொள்வதை விடுத்து, பெட் ரூமிலேயே விடிய விடிய கம்ப்யூட்டர் விளையாட்டில் மூழ்கும் பெண்களின் சதவிகி தமும் கணிசமாக உள்ளன. அதேபோல, கம்ப்யூட்டர் விளையாட்டுக்கு அடிமை யான பெண்களிடம் ஷாப்பிங் செய்வது குறைந்துள்ளது. இவர்கள் நண்பர்கள், கணவர்கள் உறவினர்களிடம் இருந்து தனிமைப்பட்டு வருகின்றனர்., இவ்வாறு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுபற்றி, மனித உறவுகள் நிபுணர் டக்ளஸ் வீஸ் தெரிவித்துள்ள கருத்தில், கம்ப்யூட்டர் விளையாட்டில் மூழ்கிப்போகும் நபர்கள் தங்களது வாழ்க்கை துணை, நண்பர்கள், உறவுகள் போன்றவற்றை இழக்க நேரிடும். அவர்கள், தனிமையில் தள்ளப்பட்டு, ஒருவிதமன நோய்க்கு ஆளாகும் ஆபத்தும் உள்ளது என்று எச்சரித்துள்ளனர்.

கதை விடும் கள்ள "சாமி" யார் கல்லா கட்டும் பத்திரிக்கைகள் !

2010 மார்ச் முதல் வாரத்தில் வெளியான நித்யானந்தா - நடிகை ரஞ்சிதா சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகள் பெரும் அதிர்வை உண்டாக்கின. இதையடுத்து நித்யானந்தா தலைமறைவானார். பின்னர் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளியே உள்ள நித்யானந்தா கடந்த 13.07.2011 அன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய நித்யானந்தா நக்கீரன் உள்ளிட்ட சில ஊடகங்கள் வழக்கறிஞர் ஸ்ரீதர் மூலம் பணம் கேட்டு மிரட்டியதாக பொய் குற்றச்சாட்டை கூறினார்., இதையடுத்து, 'நக்கீரன் வெளியிட்டது உண்மையான வீடியோ காட்சிகள்தான் என்பதில் உறுதியாக இருக்கிறோம். சட்டப்பூர்வமாகவும் இதனை நிரூபிப்போம். வீடியோ காட்சிகள் போலியானவை என்று சொல்லும் நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் நீதிமான்கள், சட்ட வல்லுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தடயவியல் நிபுணர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 100 பேர் முன்பாக இந்த வீடியோ காட்சிகள் போலியானவை என்பதை நிரூபிக்கத் தயாரா என்று நக்கீரன் பகிரங்கமாக சவால் விடுகிறது.

இந்த சவாலை எதிர்கொண்டு, தங்களின் பரிசுத்தத் தன்மையை நிரூபிக்க நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் தயாரா?' என்று நக்கீரன் கூறியிருந்தது.

இந்நிலையில் சென்னையில் 18.07.2011 அன்று செய்தியாளர்களை சந்தித்த நித்யானந்தாவின் வழக்கறிஞராக இருந்த ஸ்ரீதர்., எனக்கும் நக்கீரனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நித்யானந்தா தொடர்பான வழக்கை நான்தான் நக்கீரன் மீது தொடர்ந்தேன். நான் எந்தக் கட்சியையும் சாராதவன். நித்யானந்தா எனக்கு வந்து ஒரு கிளைண்ட்.

நித்தியானந்தாவுக்கு யாரோ தவறான ஒரு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்கள். தேவையில்லாமல் அவர் நக்கீரன் மற்றும் சில ஊடங்களை மட்டும் குற்றம் சாட்டியிருக்கிறார். அன்றைக்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உள்பட அனைத்து ஊடங்களும் நித்யானந்தா பற்றிய செய்திகளை வெளியிட்டது. யாரும் நித்யானந்தாவை மிரட்டவில்லை.

இந்த சிடி விஷயம் பற்றி தெரிந்தது 5 பேர்தான். நித்யானந்தா, ரஞ்சிதா, லெனின் தர்மானந்தா, ஆர்த்திராவ். நித்யானந்தா என்னிடம் சொல்லும்போது, சிடி உண்மையானது என்றார். அப்போது அட்வைஸ் பண்ணினோம். உண்மையான சிடியாக இருந்தால் தாமதப்படுத்த வேண்டாம். கன்சல்டிங் பாட்னர் என்று சொல்லிவிட்டு கேஸில் இருந்து தப்பிக்க பாருங்க. அதைவிட்டுட்டு ரொம்ப டீப்பா போனீங்கன்னா டிரபுள் வரும். அதற்கேற்ற மாதிரி அவர் ஒத்துக்கிட்டார்.

இதையடுத்து ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் சிடியில் இருந்தது நான்தான் என்று ஒப்புக்கொண்டார். அப்போது யோக நிலையில் இருந்ததாக கூறியிருந்தார். அதைப்போல ரஞ்சிதாவும், ஆமாம் நான் சாமிக்கு சேவை செய்வேன் என்று பேட்டி கொடுத்தார்.

தற்போது சிடி பொய் என்று கூறுகின்றனர். இது வழக்கை திசை திருப்பும் செயல். அந்த சிடியை பார்த்தால் நித்யானந்தா எழுந்து கையை நீட்டி அங்கபாரு என்று சொல்லும்போது, ரஞ்சிதா அதுவெல்லாம் ஒன்றும் இல்லை படு என்று சொல்லுகிற மாதிரி இருக்கும். அதை உன்னிப்பா கவனித்தால் தெரியும். கண்டிப்பா ரஞ்சிதா படுக்கை அறை காட்சியை, போக்கஸ் லைட் நடுவில் எடுத்திருக்காங்க அப்படியின்னா வேர்க்க விறுவிறுத்துதான் எடுத்திருப்பாங்க.

Sunday, July 17, 2011

ஹிந்தி "கோ" வுக்கு இத்தனை போட்டியா?

தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட்டான கோ படம், இந்தியிலும் எடுக்கப்படுகிறது. இதில் ஜீவா கேரக்டரில் நடிக்க பாலிவுட் முன்னணி நடிகர்கள் ஷாகித் கபூர், ரன்பீர் கபூர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா, அஜ்மல், கார்த்திகா, பியா ஆகியோர் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற படம் கோ. இந்த படம் ஏற்கனவே தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு அங்கும் வசூலை குவித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தை பார்த்த பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், கோ படத்தை இந்தியிலும் எடுக்க முடிவு செய்தார்.

ஆரம்பத்தில் இப்படத்தின் நாயகனான ஜீவா கேரக்டரில் அக்ஷய் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது அக்ஷய் அதில் நடிக்க விரும்பவில்லை என்றும், அதற்கு பதிலாக இளம் நடிகர் ஒருவரை நடிக்க முயற்சிப்பதாகவும், இதற்காக பாலிவுட்டின் இளம் மற்றும் முன்னணி நடிகர்களான ஷாகித் மற்றும் ரன்பீர் கபூர் இடையே கடும் போட்டி நிலவுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அஜ்மல் நடித்த வசந்த் கேரக்டரில் அவரே நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

செக்ஸ் புகாரில் சிக்கிக்கொண்ட இந்தியன் டாக்டர் யு.எஸ்சில் !!

நியூயார்க், ஜூலை. 17 இந்தியாவைச் சேர்ந்தவர் ராகேஷ் பூன் (53). இவர் அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் குழந்தைகள் நல டாக்டராக பணி புரிகிறார். இவர் தன்னிடம் சிகிச்சை பெற வரும் சிறுமிகளை பரிசோதனை செய்ய வேண்டும் என தனியாக அழைத்து செல்வார்.

பின்னர் அவர்களை நிர்வாணமாக வீடியோ மற்றும் போட்டோ எடுத்து கொள்வார். அந்த போட்டோவுடன் தனது நிர்வாண படத்தை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செய்து வைத்து இருந்தார்.

இதை தொடர்ந்து அவர் மீது நியூயார்க் போலீசில் செக்ஸ் புகார் கூறப்பட்டது. எனவே அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், அவர் மீது 60 குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

குடும்பம் செழிக்க பெண் கல்வி முக்கியமான ஒன்று

குடும்ப வளர்ச்சிக்கு பெண் கல்வி மிகவும் அவசியம். எனவே, பெண்கள் அனைவரும் கல்வி அறிவு பெற வேண்டும். பெண் குழந்தைகள் பிறந்தால், அதை சுமையாக கருதாமல், ஆரோக்கியமாக வளர்த்து, படிக்க வைக்க வேண்டும், என கலெக்டர் மதிவாணன் பேசினார்.

மாவட்ட குடும்ப நல செயலகம் சார்பில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு கருத்தரங்கு, திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் நேற்று நடந்தது. சுகாதார பணிகள் இணை இயக்குனர் திருமலைசாமி பேசுகையில், "மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும்; வீட்டுக்கு ஒரு குழந்தை அவசியம்; இரண்டாவது குழந்தை ஆடம்பரம்; மூன்றாவது குழந்தை ஆபத்து என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தை திருமணம், சிசு கொலையை தடுக்க வேண்டும்" என்றார்.

கலெக்டர் மதிவாணன் பேசியதாவது: குடும்ப வளர்ச்சிக்கு பெண் கல்வி மிகவும் அவசியம். எனவே, பெண்கள் கல்வி அறிவு பெற வேண்டும். பெண் குழந்தை பிறந்தால், அதை சுமையாக கருதாமல், ஆரோக்கியமாக வளர்த்து, படிக்க வைக்க வேண்டும். பெண்கள் படிக்கும்போது விழிப்புணர்வு ஏற்படும். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்பும், பெண்கள் இருப்பார்கள் என்பது மாறி, தமிழக முதல்வரில் துவங்கி, அனைத்து இடங்களிலும் பெண்களே முன்னணி யில் உள்ளனர்.

கலங்கரை விளக்கை போன்றவர்கள் பெண்கள். அவ்விளக்கு வெளிச்சம் தரும் அளவுக்கு, குடும்பம் பிரகாசிக்கும். குடும்பம் முன்னேறினால், கிராமம் முன்னேறும்; கிராமம் முன்னேறினால் நாடு முன்னேறும், என்றார்.

Saturday, July 16, 2011

துபாயில் பெருந்தலைவருக்கு பெரும்விழா எடுத்த தமிழ் மக்கள்

துபாய் அல்நாதாவில் துபாய் நாடார் சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 109-வது பிறந்தாநாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவினை தலைவர் செந்தில்குமார் நாடார் துவக்கி வாழ்த்துரையாற்ற, துணைத்தலைவர் ராமமூர்த்தி நாடார், மற்றும் செயலாளர் சுபாஷ் நாடார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்.

தொடர்ந்து பிறந்தாநாள் விழாவினை கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் காமராஜர் பிறந்தநாளை உலக நாடார் தினமாக கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதுரை ராமசந்திரன் நாடாருக்கு பொன்னாடை போர்த்தி முடிவில் மதகை பிரபு நாடார் நன்றி உரை நிகழ்த்தினார்.

# பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கு சத்துணவு என்கிற திட்டத்தை ஆரம்பித்து வைத்த பெருந்ததலைவர் காமராஜ். #

அமெரிக்கா விசா பெற போலி ஆவணம்! உடன் நடவடிக்கை உஷார்!!

சென்னை : போலி ஆவணங்கள் கொடுத்து, அமெரிக்க விசா பெற விண்ணப்பித்த, இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவரை ராயப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம், ஐதராபாத், மல்காஜ்கிரியைச் சேர்ந்தவர் தயானந்த், 32. குஜராத், மைசாலா மாவட்டத்தைச் சேர்ந்த தர்மிஸ்தா, 20. இவர்கள் இருவரும், அமெரிக்கா செல்வதற்காக மும்பையை சேர்ந்த ஜான்கிர் என்ற ஏஜன்ட்டை அணுகினர். அப்போது, தயானந்த், தர்மிஸ்தாவை தன் மனைவி என்று கூறி விண்ணப்பித்தால், உடனடியாக விசா கிடைக்கும் என்று ஜான்கிர் கூறினார்.

இதையடுத்து, இருவரும் கணவன், மனைவி என்பதற்காகன போலி ஆவணங்களை தயாரித்து, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்தில், விசாவிற்காக விண்ணப்பித்தனர். தூதரக அதிகாரிகள் விண்ணப்பத்தை பரிசீலித்தபோது, ஆவணங்கள் போலியானவை என்பது தெரியவந்தது. அமெரிக்க தூதரக உதவி மண்டல பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அதிகாரி கெல்லி பார்ட்டின் அளித்த புகாரின் பேரில், ராயப்பேட்டை போலீசார் தயானந்த் மற்றும் தர்மிஸ்தாவை கைது செய்தனர்.

அதே போல், நேற்று முன்தினம் மாலை 3:20 மணிக்கு கோவையில் நர்சாக பணியாற்றும் டாடாபேடு, ஹட்கோ காலனியைச் சேர்ந்த, ராசேல் மங்களம் செனார், 53, என்பவர், தன்னை ஆசிரியர் எனக் கூறி, போலி ஆவணங்கள் மூலம் விசா பெற முயன்றார். அவர் மீது தூதரக அதிகாரி கொடுத்த புகாரின் பேரில், ராயப்பேட்டை போலீசார், அவரையும் கைது செய்தனர்.

சீமானிடம் சிக்கி தவித்தேன், விஜயலட்சுமி !!

நடிகை விஜயலட்சுமி விஸ்வரூபம் எடுத்துள்ளார். கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் இவர் திரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் மீது பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.


தன்னை காதலித்து விட்டு திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார் சீமான் என்று போலீசில் புகார் கொடுத்தார்.

இந்நிலையில் தற்போது, 3 ஆண்டுகள் தன்னுடன் வாழ்ந்துவிட்டு தன்னை திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் தனது வீட்டில் சீமான் காதலர் தினம் கொண்டாடிய படங்களை வெளியிட்டுள்ளார்.

Friday, July 15, 2011

சொர்கத்து கனி மாதுளை

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளைன்னு மொத்தம் மூன்று வகையான மாதுளை இருக்குது. குடல் அழற்சியைப் போக்குற சக்தி புளிப்பு மாதுளைக்கு உண்டு. இது, உணவு செரிக்கிறதையும் துரிதப்படுத்தும். மேலும், குடல்ல ஏற்படுற இயல்பான மாற்றங்களையும் சரி செய்யும் ஆற்றல் அதுக்கு உண்டு.

இனிப்பு மாதுளை, உடல் சூட்டைத் தணித்து, ரத்த விருத்தியைப் பெருக்கும். அதுமட்டுமல்லாம, உடல் பலவீனத்தைப் போக்கி, தெம்பு கொடுக்கும். மாதுளையோட பூ, பழம், விதை, பட்டைன்னு எல்லாமே உணவாகவும், மருந்தாகவும் பயன்படுது.

வைட்டமின் `சி' மற்றும் `பி' இதுல அதிகமா இருக்குது. மேலும், இதயநோய் மற்றும் புற்றுநோய் ஆபத்தைக் குறைக்கும் வேதிப்பொருட்களும் நிறைய இருக்குது. வாந்தி, மயக்கம், நாக்குல நீர் சுரக்குறது போன்ற பிரச்சினைகளுக்கு மாதுளை ஜுஸ் சிறந்த மருந்து.

ஆனால், எப்போதும் போல இதை ஜுஸ் போடக்கூடாது. மாதுளை முத்துக்களை ஒரு மெலிசான துணியில போட்டுப் பிசையணும். பிறகு துணியைப் பிழிஞ்சா, சாறு வரும். அதுல கற்கண்டைப் பொடிசெய்து போட்டு கலக்கி குடிச்சா, வாந்தியும் நிற்கும்.,நாக்குல நீர் சுரக்குற தொந்தரவும் இருக்காது.

ஆபாசத்தை அள்ளி தொளிக்கும் இன்டர்நெட் சென்டர் !!

கோவை மாநகர எல்லைக்குள் பள்ளி, கல்லூரி அருகிலும், பிற இடங்களிலும் எண்ணற்ற " இன்டர்நெட் பிரவுசிங் சென்டர்கள்' செயல்படுகின்றன.

சில பிரவுசிங் சென்டர்களில் "பிரைவெசி' என்ற பெயரில் முழுமையாக மூடப்பட்ட நிலையில் "கேபின்'கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், இன்டர்நெட் பிரவுசிங் செய்யும் நபர்கள் ஆபாச படங்களை பார்ப்பதாகவும், சிலர் ஜோடியாக வந்து ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடுவதாகவும் போலீசாருக்கு அடுத்தடுத்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. மேலும் சிலர், தங்களது வேண்டாத நபர்களின் போட்டோவை "மார்பிங்' செய்து, ஆபாச படமாக இன்டர்நெட்டில் உலவ விடுவதாகவும் "சைபர் கிரைம்' போலீசாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

இதைத்தொடர்ந்து, பிரவுசிங் சென்டர் நடத்துவோருக்கு போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பிரவுசிங் சென்டர் நடத்துவோர், கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கட்டாயம் "லைசென்ஸ்' பெற வேண்டும். கம்ப்யூட்டர் அறையின் உள்பகுதியில் முழுமையாக மூடப்பட்ட நிலையில் "கேபின்' அமைக்கக் கூடாது. வெளியில் இருந்து பார்க்கும்போது கம்ப்யூட்டர் ஸ்கிரீனுக்கு மேற்பகுதியை மறைக்கும் வகையில் 2.5 அடி மட்டுமே தடுப்பு அமைத்திருக்க வேண்டும். பிரவுசிங் சென்டருக்கு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலண்டர் ஆண்டு கணக்கீட்டின்படி லைசென்ஸ் வழங்கப்படும்; கட்டணம் 75 ரூபாய். லைசென்ஸ் காலக்கெடு முடியும் தருவாயில், அதாவது ஜனவரியில் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

பிரவுசிங் சென்டரின் உரிமையாளர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பொறுப்பாளர், லைசென்ஸ் விதிமுறைகளுக்கு கட்டுப்படுவதாக 20 ரூபாய் முத்திரைத்தாளிலான உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டு, "நோட்டரி பப்ளிக்' வக்கீலிடம் ஒப்புகை சான்று பெற்று சமர்ப்பிப்பது அவசியம்.

லைசென்ஸ் பெற்ற பின், பிரவுசிங் சென்டர் நடத்துவதற்கான விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். பிரவுசிங் செய்ய வரும் நபர்களின் அடையாள அட்டையை பரிசோதித்து, அதிலுள்ள விபரங்களை பதிவேட்டில் எழுதி வைக்க வேண்டும். வாடிக்கையாளர் எந்த கம்ப்யூட்டரில் பிரவுசிங் செய்கிறார், உள்ளே நுழைந்த நேரம் என்ன, வெளியேறிய நேரம் என்ன, பிரவுசிங் செய்ய எந்த வகையான அடையாள அட்டையை சமர்ப்பித்துள்ளார் என்ற விபரங்கள் பதிவேட்டில் இடம்பெற்றிருக்க வேண்டும். இந்த ஆவணங்களை ஓராண்டு வரை பராமரித்து, போலீசார் கோரும்போது சமர்ப்பிக்க வேண்டும்.

ஆட்சேபகரமான இணைய தளங்களை வாடிக்கையாளர்கள் பயன்படுத்ததாதவாறு பிரவுசிங் சென்டர் உரிமையாளர் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் எந்தெந்த இணைய தளங்களை பார்வையிட்டு பயன்படுத்தியுள்ளனர் என்பதை கண்டறியும் வகையிலான பிரத்யேக "சாப்ட்வேர்'களை பிரவுசிங் சென்டரில் நிறுவியிருக்க வேண்டும். அதுபற்றிய விபரங்களையும் ஓராண்டு வரை பராமரிக்க வேண்டும்.

பிரவுசிங் சென்டர் காலை 8.00 முதல் இரவு 11.00 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் (சிறப்பு அனுமதி கேட்போரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்). வழக்கு விசாரணைக்காக தேவைப்படும் ஆவணங்களை போலீசார் கேட்கும் போதும், சோதனை நடத்தும்போதும் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும். இதுபோன்ற சோதனைகளின்போது இன்ஸ்பெக்டர் மற்றும் அந்த அந்தஸ்துக்கும் மேல் பதவியில் உள்ள அதிகாரிகள் மட்டுமே ஈடுபடுபவர்.

அரசிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய வக்கீல்கள்

சென்னை : ஐகோர்ட்டுக்கு முதல்வர் ஜெயலலிதா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பதிலுக்கு அ.தி.மு.க., வழக்கறிஞர்களும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதனால், ஐகோர்ட் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ஐகோர்ட் வளாகத்தில், மாற்றுமுறை தீர்வு மையம் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா 16ம் தேதி நடக்கிறது. இதில், தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார். இவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., வழக்கறிஞர்கள் வி.பி.ஆர்.இளம்பரிதி, மாதவரம் செந்தில் உள்ளிட்ட பலர், ஐகோர்ட் வாயில் அருகில் ஆர்ப்பாட்டம் செய்தனர். முன்னதாக, ஐகோர்ட் பதிவாளர் ஜெனரலிடம், தி.மு.க., வழக்கறிஞர்கள் இளம்பரிதி, எஸ்.ராஜகுமார், சி.ஜெயப்பிரகாஷ், சுகேந்திரன் ஆகியோர் தரப்பில் மனுவும் அளிக்கப்பட்டது. தி.மு.க., வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்து முடித்த உடன், அங்கு அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் ராஜேந்திர நரசிம்மன், திவாகர் உள்ளிட்ட பலர் குவிந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு வழக்கறிஞராக பொறுப்பு வகிக்கும் சிலரும் கலந்து கொண்டனர். ஐகோர்ட் வளாகத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் திரண்டதால், பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல், ஆர்ப்பாட்டம் அமைதியாக நடந்து முடிந்தது.

# தன்னுடைய சொத்து குவிப்பு வழக்குக்காக கோர்ட் வாசல்படி மிதிக்காதவர் கல் நட்டு விழாவுக்கு வருகிறார் என்ன பொறம்போக்கு தனம். #

Thursday, July 14, 2011

கர்ப்பம், மூளை வளர்ச்சிக்கு மீன் போல் உணவுண்டோ

கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மிக நன்றாக இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும, பிறக்கும் குழந்தைக்கு மூளை தொடர்பான நோய்கள் வராமலும் தவிர்க்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.

லண்டன் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் தேசிய நல்வாழ்வு மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த விவரங்கள் தெரியவந்தன. இது தொடர்பாக 11,875 கர்ப்பிணிப் பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டு இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வை முன்னின்று நடத்திய பேராசிரியர் ஜேக் வின்க்லெர் கூறுகையில், கர்ப்ப காலத்தில் அதிகமான மீன்கள் உண்ணும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மிகுந்த புத்திக் கூர்மையுடன் இருக்கும்.

அந்த சிசுக்கள் வயிற்றில் இருக்கும்போது மூளை தொடர்பான நோய்கள் தாக்குவதும் குறைவாக இருக்கும். குழந்தைகளின் மூளையும் சிறப்பாக வளர்ச்சி அடையும். கர்ப்பிணிகளாக இருக்கும்போதே ஆரம்பித்து, பிரசவசத்துக்குப் பின் குழந்தைகளிடமும் இந்த ஆய்வு தொடர்ந்தது.

அதில், கர்ப்பத்தின்போது மீன்கள் அதிகம் உண்ட தாய்களின் குழந்தைகளின் புத்திக் கூர்மையும், அவர்களது கை-கண் இணைந்து செயல்படுவதும், தகவல் தொடர்பும் மிகச் சிறப்பாக இருப்பது தெரியவந்துள்ளது.

மூளை வளர்ச்சிக்கு முக்கியமான ”omega-3 fatty acids’ (docosahexaenoic acid) மீன்களில் அதிகமாக காணப்படுவதே இதற்குக் காரணம். தாய், சிசுவின் உடலில் ”omega-3 fatty acids’ அளவு மிகவும் குறைவாக இருந்தால் குழந்தைகளுக்கு புத்தி மழுங்கவும் வாய்ப்புள்ளது.

32 வார கர்ப்ப காலத்தில் வாரத்துக்கு 340 கிராமுக்குக் குறைவாக மீன் உண்டவர்களின் குழந்தைகளுக்கு புத்திகூர்மை குறைவாகவே இருந்தது. அதிகம் உண்டவர்களின் குழந்தைகள் அகிக ஐ.கியூவுடன் மிக சுட்டியாக உள்ளன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது

கொலை களத்திற்கு செல்ல கொலை நடுங்கும் ஆசி வீரர்கள்!!

மெல்போர்ன் : இலங்கை போர் தொடர்பான "கொலைக்களம்' வீடியோ காரணமாக, ஆஸ்திரேலிய வீரர்கள் இலங்கை தொடரை புறக்கணிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் மாதம், இலங்கை செல்லும் ஆஸ்திரேலிய அணி 2 "டுவென்டி-20', ஐந்து ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது., இதனிடையே இலங்கை போரில் நடந்த படுகொலை தொடர்பாக, இங்கிலாந்தின் "சானல் 4' "டிவி' வெளியிட்ட "சிடி' உலகம் முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் இங்கிலாந்தில், இலங்கை அணி பங்கேற்ற போட்டிகளின் போது, தமிழ் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.

இது ஆஸ்திரேலியாவிலும் எதிரொலித்துள்ளது. இதையடுத்து அங்குள்ள மக்களிடம் "தி ஏஜ்' நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் 81 சதவீதம் பேர், ஆஸ்திரேலிய அணி, இலங்கை செல்லக்கூடாது என்று தெரிவித்துள்ளனர். அதாவது 3,527 பேரில் 2,856 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் சீனியர் வீரர்கள் உட்பட சிலர், இலங்கை செல்ல விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளனர்.

# ஈழ மக்களை மக்களாக பார்க்காவிட்டாலும் மனிதனாக பார்க்கா வேண்டாமா, இது தான் உலகேங்கும் எதிரொலிக்குது. #

பிஞ்சு நெஞ்சங்களின் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் !?

மேட்டூர்: பிழைப்பு தேடி பெற்றோர் வெளியூர் சென்று விடுவதால், மேட்டூர் கிராமங்களில், குழந்தைகள் தனியாக வாழ்க்கை நடத்தும் அவலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, காவிரி கரையோரத்தில் கோல்நாயக்கன்பட்டி, பொறையூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு விவசாய தொழிலாளர்களே அதிகம் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் கரும்பு வெட்டுதல், மரம் வெட்டும் வேலைக்காக, குடும்பத்துடன் வெளியூர் சென்று தங்கி விடுகின்றனர். தொடர்ந்து, மூன்று முதல் ஆறு மாதம் வரை வெளியூர்களில் முகாமிட்டு வேலை செய்கின்றனர். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் பெற்றோர், குழந்தைகளை சொந்த ஊரில் உள்ள உறவினர், வயதான பெற்றோர் பராமரிப்பில் விட்டுச் செல்கின்றனர். வெளியூர் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களின் குழந்தைகள் தனியாகவும், மற்றவர்கள் பராமரிப்பில் இருந்து, பள்ளிக்கு சென்று படிக்கின்றனர். பெரும்பாலான குழந்தைகள் உறவினர் ஆதரவின்றி தனியாக சமைத்து, சாப்பிட்டு பள்ளிக்கும் செல்லும் அவலமும் நடக்கிறது.

பொறையூரை சேர்ந்த செந்தில் மகள் தவசியம்மாள் (10), நந்தினி (8). தவசியம்மாள், பொறையூர் அரசு பள்ளியில், 5ம் வகுப்பும், நந்தினி, 3ம் வகுப்பும் படிக்கின்றனர். இவர்களின் பெற்றோர் கரும்பு வெட்டும் வேலைக்கு சென்று, பல மாதங்கள் அங்கேயே தங்குவதால், குழந்தைகள் இருவரும் கிராமத்தில் உள்ள வீட்டில் தனியாக வசிக்கின்றனர். உறவினர்கள் அருகில் இருந்த போதிலும், அவசர உதவி மட்டும் செய்கின்றனர்.

தவசியம்மாள் கூறியதாவது: என் பெற்றோர், பெரும்பாலான மாதங்களில் வெளியூரிலேயே தங்கி விடுகின்றனர். நாங்கள் படிக்க வேண்டும் என்பதால், கிராமத்திலேயே விட்டுச் சென்றுள்ளனர். நான் சிறு வயதிலேயே சமையல் செய்ய கற்று கொண்டேன். காலையில் சமையல் செய்து, தங்கையையும் சாப்பிட வைத்து பள்ளிக்கு அழைத்து செல்வேன். மதியம் பள்ளியில் சாப்பிடுவோம். மாலை வீட்டுக்கு வந்ததும் துணிகளை துவைத்து விடுவோம். காலையில் சமைத்த சாப்பாடு மீதம் இருந்தால், இரவில் சாப்பிடுவோம். இல்லாவிட்டால், மீண்டும் சமையல் செய்து சாப்பிடுவோம். தங்கை உடன் இருப்பதால், ஆறுதலாக உள்ளது.

இரவு படுக்கும்போது பெற்றோர் நினைவு வரும். அப்போது, அழுதவாறு அப்படியே தூங்கி விடுவேன் என்றார். கோல்நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பல குடும்பங்கள் கரும்பு வெட்டும் வேலைக்காக வெளியூர்களுக்கு சென்று விடுவதால், தவசியம்மாள், நந்தினி போல ஏராளமான குழந்தைகள் பெற்றோர் அரவணைப்பின்றி வயதான பாட்டி வீட்டிலும், உறவினர்கள் வீட்டிலும் வசிக்கின்றனர். குழந்தைகள் பிஞ்சு வயதிலேயே, பெரிய மனுஷிகள் போல் மாறி, தங்கள் தேவைகளை, தாங்களே பூர்த்தி செய்து வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

மனித சமுதாயத்துக்கு ஏற்பட்ட மோசமான பேரிடி!! ஐ நா

மொகதிசு : "உலகிலேயே சோமாலியா நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி, பசி, பட்டினி, மனிதச் சமுதாயத்திற்கு ஏற்பட்ட மோசமான பேரிடர்' என ஐ.நா.,வின் அகதிகளுக்கான உயர் கமிஷன் தெரிவித்துள்ளது. ஆப்ரிக்க நாடுகளில் சோமாலியா, எத்தியோப்பியா மற்றும் கென்யாவில் ஏற்பட்டுள்ள வறட்சியால், அந்நாட்டு மக்கள் உணவின்றி நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். கென்யாவில் தடாப் என்ற இடத்தில் உள்ள அகதிகள் முகாமில், இந்நாடுகளைச் சேர்ந்த மக்கள் வருகின்றனர்.

இந்த முகாமை பார்வையிட்ட ஐ.நா.,விற்கான அகதிகள் உயர் கமிஷன் தலைவர் அன்டோனியோ கட்டர்ரஸ் கூறியதாவது: கென்யாவில் தடாப்பில் உள்ள அகதிகள் முகாமில், 3 லட்சத்து 80 ஆயிரம் அகதிகள் உள்ளனர். சோமாலியாவில் ஏற்பட்டுள்ள வறட்சி, மனிதச் சமுதாயத்திற்கு ஏற்பட்ட மோசமான பேரிடர். முகாமிற்கு வரும் வழியில் ஒரு தாய், தனது மூன்று குழந்தைகளையும் பட்டினிக்கு பலி கொடுத்துவிட்டார். முகாமில் இருப்பவர்கள் பரம ஏழைகள். 50 சதவீத குழந்தைகள் சத்து குறைபாட்டால் நோஞ்சானாக உயிருடன் போராடி, பல குழந்தைகள் இறக்கின்றன. சத்து குறைபாட்டால், பல குழந்தைகள் தோலுரிந்து காணப்படுகின்றன.

வறட்சியால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் வெளியேறி வருகின்றனர். இந்த முகாம்களில் உணவுக்காக மற்றும் பெயர்களை பதிவதற்காக நாள் கணக்கில் அகதிகள் காத்திருக்கின்றனர். சோமாலியா, எத்தியோப்பியா, கென்யா எல்லைகளில் உள்ள இடங்கள் அதிகளவில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள மூன்று முகாம்களும் நிறைந்துவிட்டதால், முகாம்களுக்கு வெளியே ஏராளமான பிளாஸ்டிக் ஷீட்களால் மூடப்பட்ட கொட்டகைகளை அமைத்துக் கொண்டு தங்கும் அவலம் காணப்படுகிறது. இவ்வாறு கட்டர்ரஸ் கூறினார்.

ஏற்கனவே, சோமாலியாவில் ஒரு கோடி மக்கள் மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை எதிர்பார்த்திருப்பதாக, உலக உணவு திட்டம் மதிப்பீடு செய்துள்ளது. மேலும், 20 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐ.நா.,விற்கான குழந்தைகள் நிதி அமைப்பு கணக்கிட்டுள்ளது.

Wednesday, July 13, 2011

சிங்க முத்துக்கும் மலையாள நடிகைக்கும் அடித்த ஜாக்பாட் !!

2ஜி ஸ்பெக்டரம் ஊழலை மையப்படுத்தி அதே பெயரில் உருவாகி வரும் புதிய படத்தில் இடம்பெறும் ரியல் கேரக்டர்கள் யார் யார் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த கேரக்டர்களில் நடிக்கப்போகும் நட்சத்திர தேர்வு நடந்து வருகிறது.

முக்கியமான கேரக்டரான அரசியல் தரகர் நீரா ராடியா கேரக்டரில் நடிகை லட்சுமி ராய் நடிக்கப்போவதாக முதலில் செய்திகள் வெளியாயின. இப்போது சாந்தினி என்ற மலேசிய நடிகை நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. படத்தில் இடம்பெறும் மற்ற நட்சத்திரங்கள் பற்றிய பட்டியல் இன்னமும் வெளியாகாத நிலையில், கனிமொழி கேரக்டரில் நடிக்கப்போவது யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மட்டுமல்லாமல்... அரசியல்வாதிகள் மத்தியிலும் எழுந்தது.

இந்நிலையில் கனிமொழி கேரக்டரில் நடிக்க ஒரு நடிகையை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அவர் பெயர் லட்சுமி ராமகிருஷ்ணன். பாஸ் என்கிற பாஸ்கரன், நான் மகான் அல்ல, யுத்தம் செய், பொன்னர் சங்கர் உள்ளிட்ட படங்களில் அம்மா வேடத்தில் நடித்தவர்தான் இந்த லட்சுமி ராமகிருஷ்ணன். கேரளாவை பூர்வீகமாக கொண்ட லட்சுமியிடம் கனிமொழி கேரக்டர் பற்றி கூறியதும், டபுள் ஓ.கே. சொல்லி விட்டாராம். அதேபோல மு.க.அழகிரி வேடத்தில் சிங்கமுத்து நடிக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறுவர்கள் சிக்கி தவிக்கு புகை பழக்கம் ! ஓர் ஆய்வு

புதுடெல்லி:பாலிவுட் திரைப்பட நடிகர்கள் புகைப்பிடிக்கும் காட்சிகள் திரைப்படத்தில் இடம்பெறுவது இளம் தலைமுறையினர் இந்த மோசமான பழக்கத்திற்கு தூண்டுகோலாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

மாணவர்கள்தாம் இதனை ஒருமுறையாவது உபயோகித்து பார்ப்போமே! என்று விரும்புவதாகவும் பின்னர் அவர்கள் புகைக்கு அடிமையாக மாறுவதாகவும் பிரிட்டீஷ் மெடிக்கல் ஜெர்னல் வெளியிட்டுள்ள ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த ஆய்வு 12 வயதிற்கும் 16 வயதிற்கும் இடையேயான 3956 சிறுவர்களிடம் நடத்தப்பட்டது. புதுடெல்லியில் 12 பள்ளிக்கூடங்களில் இருந்து தேர்வுச்செய்யப்பட்ட மாணவர்களை 2009-ஆம் ஆண்டுமுதல் கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்பட்டனர். ’பாலிவுட் திரைப்படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகளும் இளையதலைமுறையின் புகைப்பிடிக்கும் பழக்கமும்’ என்ற தலைப்பில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

சிறுமிகளை விட சிறுவர்கள்தாம் திரைப்படத்தை பார்த்து போதையூட்டும் பொருட்களை பயன்படுத்த துவங்குகின்றனர் என ஹெல்த் ப்ரமோஷன் அண்ட் டொபாக்கோ கண்ட்ரோல் தலைவர் டாக்டர்.மோனிக்கா அரோரா தெரிவிக்கிறார்.

டாக்டர் கவுரங் நாஸர் இந்த ஆய்விற்கு தலைமை வகித்தார். புகையிலை நிறுவனங்களின் சின்னங்களை பதித்துள்ள ஆடைகளையும் இதரப்பொருட்களையும் உபயோகிக்க விரும்புபவர்கள் புகைப்பழக்கத்திற்கு அடிமையாக அதிக வாய்ப்புள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

Tuesday, July 12, 2011

இன (வெறி) படுகொலைக்கு இதோ ஓர் எடுத்துக்காட்டு !!!

சரஜிவோ: போஸ்னியா முஸ்லிம்களுக்கு ஸ்ரெப்ரெனிகாவின் நடுங்கும் நினைவுகள் மனதை விட்டு அகலவில்லை. 1992-95 காலக்கட்டத்தில் நடந்த போஸ்னியா முஸ்லிம் இனப்படுகொலையின் இறுதிக்கட்டத்தை செர்பியாவின் இனவெறிப்பிடித்த ராணுவம் நிறைவேற்றியது ஸ்ரெப்ரெனிகாவின் 8000க்கும் அதிகமான முஸ்லிம்களை கூட்டாக படுகொலை செய்தபிறகாகும். இரண்டாவது உலகப்போருக்கு பிறகு ஐரோப்பிய மண்ணில் நிகழ்ந்த மிகப்பெரிய கூட்டுப்படுகொலையாகும்.

1995 ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி நகரத்தை சுற்றிவளைத்த செர்பியாவின் வெறிப்பிடித்த ராணுவம் ஆண்களையும், ஆண்குழந்தைகளையும் தேடிப்பிடித்து கொலைச்செய்தனர்.ஒரு லட்சம் பேர் போஸ்னியா முஸ்லிம் இனப்படுகொலையில் கொலைச்செய்யப்பட்டனர்.சர்வதேச நீதிமன்றத்தால் இனப்படுகொலை என அறிவிக்கப்பட்ட ஸ்ரெப்ரெனிகா சம்பவத்தின் பயங்கரத்தை கடந்த ஆண்டு அங்கு கண்டுபிடிக்கப்பட்ட கூட்டுக்கல்லறை வெளிக்கொணர்ந்தது.அங்கு கிடைத்த உடல்களை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தியதில் 613 பேர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டனர். ஸ்ரெப்ரெனிகாவில் உயிரோடு வாழ்ந்த நபர்களின் இரத்த மாதிரிகளுடன் ஒப்பீடுச்செய்து ஃபாரன்சிக் வல்லுநர்கள் உடல்களை அடையாளம் கண்டனர். இனப்படுகொலை நிகழ்ந்து 16-வது ஆண்டு நினைவு தினத்தில் ஸ்ரெப்ரெனிகாவுக்கு அருகில் உள்ள போட்டோக்கரியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்ட நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்ரெப்ரெனிகா கூட்டுப்படுகொலையின் உண்மையை செர்பியா மக்கள் இப்பொழுதும் புரிந்துக்கொள்ளவில்லை என பாகிர் இஸ்ஸத் பெகோவிச் தெரிவித்துள்ளார். போஸ்னியாவின் அதிபராக பதவி வகித்த அலிஜா இஸ்ஸத் பெகோவிச்சின் மகன் தான் பாகிர். முஸ்லிம் இனப்படுகொலைக்கு தலைமை வகித்த ராதோவான் கராஜிச் மற்றும் ராத்கோ ம்லாடிச் ஆகியோரை வீரநாயகர்களாக கருதும் செர்பிய மக்கள் உண்மையை புரிந்துக்கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். சமீபத்தில் கைதுச்செய்யப்பட்ட ம்லாடிச் மீதான விசாரணை சர்வதேச நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

# இதோ போல்தான் இலங்கையிலும் காட்டுமிராண்டித்தனம் நடத்தப்பட்டதை யாரும் மறந்து இருக்க முடியாது. #

சென்னையை புகழ்ந்து தள்ளும் ஹிலாரி கிளிண்டன் !

வாஷிங்டன், ஜூலை 12: வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கு ஏற்ற நகரமாக தமிழகத்தின் தலைநகர் சென்னை மாறியுள்ளதாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டே முதல் முறையாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் சென்னைக்கு வர உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இம்மாதம் 19-ம் தேதி இந்தியா வருகிறார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வரும் அவர் 20-ம் தேதி சென்னைக்கு வருகிறார்.

தென்னிந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் சென்னை வளர்ந்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு சென்னை சுற்றுப் பயணத்தின்போது அரசு அதிகாரிகள், தொழிலதிபர்களுடன் ஹிலாரி பேச்சு நடத்துவார் என்று பொருளாதாரம், எரிசக்தி மற்றும் விவசாயத்துறை இணையமைச்சர் ராபர்ட் டி ஹோர்மட்ஸ் தெரிவித்தார். சென்னைக்கு வருவதற்கு தாம் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக ஹோர்மட்ஸ் தெரிவித்தார். 1960-ம் ஆண்டுகளில் கல்லூரி மாணவராக ஒரு மாதம் சென்னையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

இந்தியா-அமெரிக்கா இடையிலான கூட்டுறவு தொடர்பாக வாஷிங்டனில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசுகையில் அவர் இக்கருத்தைத் தெரிவித்தார். கிழக்கு, மேற்கு மையம் மற்றும் அமெரிக்க வர்த்தக மையம் இணைந்து இக்கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் சென்னைக்கு வருவது இதுவே முதல் முறையாகும். சென்னைக்கு வரும் அவர், மறைமலை நகரில் உள்ள ஃபோர்டு கார் தயாரிப்புத் தொழிற்சாலைக்கு செல்வார். மேலும் மிகவும் பிரபலமான மகாபலிபுரத்துக்குச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை மகாபலிபுரத்துக்கு ஹிலாரி செல்லவில்லையெனில், தான் மட்டும் சென்று பார்க்க விரும்புவதாக ஹோர்மட்ஸ் தெரிவித்தார்.

2009-ம் ஆண்டு இரு நாடுகளிடையிலான வர்த்தக உறவை மேம்படுத்துவதற்காக இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களால் இத்தகைய கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த பத்து ஆண்டுகளில் இரு நாடுகளிடையிலான வர்த்தகம் அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்ட ஹோர்மட்ஸ், இதை மேலும் அதிகரிக்க இப்போதைய பேச்சுவார்த்தை உதவும் என்று குறிப்பிட்டார். தில்லியிலும்,சென்னையிலும் நடைபெறும் பேச்சுவார்த்தை மூலம் இருதரப்பு வர்த்தகம் அதிகரிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ராணுவத்தை நவீனமயமாக்க இந்தியா முடிவு செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 3,500 கோடி டாலர் அளவுக்கு ராணுவ நவீனமயமாக்கலுக்கு இந்தியா செலவிட உள்ளது. இதனால் ராணுவ ஆர்டர்கள் அமெரிக்க நிறுவனங்களுக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏற்கெனவே அமெரிக்க நிறுவனங்களுக்கு 800 கோடி டாலருக்கு ஆர்டர் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!