Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, April 17, 2011

தொட்டியும் ஆட்டுவார்கள் பிள்ளையும் கிள்ளுவார்கள்??

சென்னை : தமிழக மீனவர்கள் படுகொலைக்கு காரணமான இலங்கை அரசை கண்டித்து சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்' என, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு,இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண மத்திய, மாநில அரசுகள் பல முயற்சிகள் எடுத்தன. இலங்கை அதிபர் ராஜபக்ஷேவும் பல நேரங்களில் உறுதியளித்தும், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை படையினரின் தாக்குதல் நின்றபாடில்லை.

தற்போது நான்கு மீனவர்கள் சிங்களப் படையினரால் கடுமையாக தாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொலைச் செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் படுகொலைக்கு காரணமான இலங்கை அரசை கண்டித்து இன்று காலை 10 மணிக்கு, சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு, தமிழக காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு தங்கபாலு தெரிவித்துள்ளார். பதவியில் இருக்கும் இவர்கள் எதையும் செய்யவில்லை போராட்டம் என்கிற கண் துடைய்ப்பு.

Saturday, April 16, 2011

பூத்தில் நாக்குமூக்க ஆடிய, த்ரிஷா!

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் நேற்று முன்தினம் 13ம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஓட்டளிக்க காலையிலேயே கர்ப்பிணி பெண்கள், வயதான தாத்த, பாட்டி முதல் இளைஞவர்கள் வரை அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டளித்தனர்.

இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரசான்சிஸ் சேவியர் பள்ளியில் ஓட்டுபோட தனது தாயார் உமா, பாட்டி சாரதா ஆகியோருடன் 1மணிக்கு சென்றார் நடிகை த்ரிஷா. அப்போது த்ரிஷா வரிசையில் நிற்காமல் நேராக ஓட்டுபோடும் அறைக்கு சென்றார். அப்போது அவருக்கும், வரிசையில் நின்றுகொண்டிருந்த ஒரு வாக்காளருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து நடிகை த்ரிஷா விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது, ஓட்டும்போடும் போது என்னை வரிசையில் நிற்கும்படி சொன்னது தவறல்ல. ஆனால் அந்த வாக்காளர் சொன்ன விதம் தான் தவறானது. நடிகையென்றால் என்ன கேவலமானவர்களா..? வரிசையில் நின்று ஓட்டுப்போடுங்கள் என்று அன்போடு கூறியிருந்தால் நானும் வரிசையில் நின்றிருப்பேன். ஆனால் அந்த வாக்காளர் முரட்டுதனமாக பேசியதால் நானும் அவருடன் தகராறில் ஈடுபட வேண்டியதாயிற்று. என்னிடம் அன்போடு பேசினார், நானும் அன்போடு பேசுவேன். அதை‌விட்டு முரட்டுதனமாக பேசுபவர்களிடம் நானும் அப்படித்தான் பேசுவேன். அது என்னுடைய சுபாவம் என்கிறார்.

முரசை , வரவேற்கும் பெண்கள்!!

தமிழக சட்டசபை தேர்தலில் பல தொகுதிகளில் வழக்கத்தை விட அதிகமாக பெண்கள் ஓட்டளித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி(தனி) தொகுதிகளில் ஆண் வாக்காளர்களை விட பெண்கள் அதிகமாக வாக்களித்துள்ளளர். குறிப்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் போட்டியிடும் ரிஷிவந்தியம் தொகுதியில் ஆண்களை விட கூடுதலாக 12 ஆயிரத்து 475 பெண்கள் ஓட்டளித்துள்ளனர். ரிஷிவந்தியம் தொகுதி ஓட்டுப்பதிவு விவரம் வருமாறு:-

மொத்த வாக்குகள் -2,06,725 பதிவானவை - 1,71,067 ஆண்கள் - 79,296 பெண்கள் - 91,771 எனவே இந்த தேர்தலில் தமிழகமே பரபரப்புடன் எதிர்நோக்கும் தொகுதிகளில் ஒன்றான ரிஷிவந்தியம் தொகுதியின் தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் சக்தியாக பெண் வாக்காளர்கள் உள்ளனர்.

சினிமாவில் கதாநாயகனாக நடித்து நகர்புறத்தை விட கிராமப்புற ரசிகர்களிடம் கூடுதல் வரவேற்பை பெற்றுள்ள விஜயகாந்துக்கு ரிஷிவந்தியம் தொகுதி தேர்தலில் பெண் வாக்காளர்களின் ஆதரவு அதிகம் உள்ளதா? என்பது ஓட்டு எண்ணிக்கை நாளான வருகிற 13-ந்தேதி தெரியவரும்.

கோட்டை யாருக்கு! ரிலாக்ஸ் ப்ளீஸ்!!

ஒரு விசயத்தை நியாயமான முறை "அனலைஸ்" பண்ணனும்! அப்படி பண்ணத் தெரியலைனா சும்மா மூடிக்கிட்டு இருக்கனும்! நானும் "அனலைஸ்" பண்ணுறேன்னு எதையாவது உனக்கு சாதகமா பேசுறது "பார்ப்பனத்தனம்"! அதைத்தான் இந்த 75% வாக்குப்பதிவை ஹிந்துப் பத்திரிக்கையில் இந்த வெங்கட்டரமணன் செய்துள்ளார்!

ஹிந்து பத்திரிக்கை, அதிமுக கூட்டணியை ஆதரிப்பது எல்லோருக்குமே அழகா தெளிவாகத் தெரியும். 75% மேலே தமிழ் நாட்டில் ஓட்டுக்கள் விழுந்து இருப்பதை அனலைஸ் பண்ணும் இந்த வெங்கட்ட ரமணனோட முயற்சி என்னனா, 75% வாக்குப் பதிவால தமிழ்நாட்டு மக்கள் அதிருப்தியை காட்டுவதாகக் கதைவிட்டு அதிமுக கூட்டணி செவிக்கும்னு சொல்லனும்!

சப்போஸ், நாளைக்கு திமுக கூட்டணி செவிச்சால்? அதை மட்டும் காசு கொடுத்து செவிச்சதா சொல்லுவானுக!

1984 லயே நின்னுட்டாரு! ஏன்? அதுக்குக்கு கீழே போனா பிரச்சினைபோல. அதான் அதோட நின்னுபுட்டாரு!

சரி இதிலிருந்து அதிமுக கூட்டணி செயிக்கும்னு இந்த வெங்காயம் சொல்றதுக்கு உள்ள காரணங்கள்! (சும்மா சொல்றதை சொல்லிட்டு ஒரு கேள்விக்குறியும் போட்டுக்குவானுக!) ஒவ்வொரு முறை ஆட்சி மாற்றம் நடக்கும்போது மக்கள் அதிக வாக்குப் பதிவு செஞ்சாங்களாம்!

Does the significantly large voter turnout in 2011 hold any implications for the outcome? The provisional polling figure of over 75 per cent in Wednesday's election is the highest since 1967, when the Congress was knocked down by the DMK to set off an unbroken era of regional party rule in Tamil Nadu since then. Does this mean, as in 1967, any voter anger is at work against the government of the day?

The Opposition camp led by the AIADMK would certainly like to believe so, and the party is already anticipating a landslide in its favour.

* 1967 வைப் பத்திப் பேசனும்னா ஏன் 1967ல இருந்து 2011 வரை வாக்குப்பதிவு விழுக்காடுகள் கொடுக்கவில்லை! அப்படி கொடுக்காத பட்சத்தில் எதுக்கு 1967 க்கு எதுக்கு தாவுற!!

* 1980, 1977 வாக்குப்பதிவு டேட்டா கொடுக்கப்படவில்லை! 1977 ல் என்னனு பார்த்தால் "Polling for the election was held on 10 June 1977. Turnout among the voters was 61.58 %." 1977 ல ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது!! 62% ஒண்ணும் அதிகமான வாக்குப் பதிவு இல்லை! அப்போ மக்கள் ஒண்ணும் எழுச்சியடையவில்லையா?! இருந்தும் ஆட்சி மாற்றம் நடந்து இருக்கு!

* 1984 ல ஆட்சி மாற்றம் நடக்கவில்லை! இருந்தும் மக்கள் அதிக வாக்குப்பதிவு செஞ்சிருக்காங்க (73%)! எழுச்சி அடைந்தும் ஆளுங்கட்சிதான் ஆட்சியைப் பிடிச்சது!

* மேலும் மேலே உள்ள "டேட்டா"ப்படி பார்த்தால் ஜெயா VS மு.க போட்டினு வரும்போது 67% மேலே ஓட்டுப்பதிவு நடந்த (அதாவது அதிக அளவில்) ஒவ்வொரு முறையும் திமுக ஆட்சியை பிடிச்சு இருக்கு! அப்போ இந்த முறையும் (2011) திமுக ஆட்சியைப் பிடிக்கும்னு சொல்லலாம்! அது ஏன் உன் கண்களுக்குத் தெரியலை?!

என்ன ஒரு கேவலமான அனாலிஸில் வெங்கட்ட ரமணா!!! இந்தமாதிரி கேணத்தனமான வாக்குப் பதிவை வச்சு "அனலைஸ்" பண்ணுறதுக்கு சும்மா "ஆத்தா வாழ்க"னு ஒரு ஆர்ட்டிக்கிள் போட்டு இருக்கலாம்!

Bottomline: This Venkatramanan's analysis of "high poll turn out" favors AIADMK alliance theory is nothing but BULLSHIT! The whole article and his speculations are nothing but garbage!

நன்றி : வருண்.

இலங்கை ராணுவம் போர் குற்றவாளிகளே? ஐ.நா!!

விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதலின்போது, இலங்கை ராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ஐநா நிபுணர் குழு தனது அறிக்கையி்ல கூறியுள்ளது.

ஐநா பொதுச்செயலர் பான் கீ மூனிடம் சமர்ப்பிக்கப்பட்ட அந்த அறிக்கை இலங்கை அரசிடம் ஓரிரு நாட்களுக்கு முன்னர் அளிக்கப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ள விவரங்கள் இன்னும் பகிரங்கமாக வெளியிடப்படவில்லை. எனினும், அந்த அறிக்கையின் சில தகவல்களை கொழும்புவைச் சேர்ந்த ஐலேண்ட் நாளிதழ் பிரசுரித்துள்ளதை மேற்கொள் காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்த வன்னிப் பகுதியில் உள்ள மருத்துவமனைகளை குறிவைத்து இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும், போருக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் சில தளபதிகளை ராணுவம் கொன்றதாகவும் ஐநா நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கூந்தல் அழகாகவும் அடர்த்தியாகவும் வளர

இன்றைய காலத்தில் சுத்தமான நீர் இல்லாததாலும், இயற்கை முறையில் தலைக்குக் குளிக்காமல் இரசாயனக் கலப்பு நிறைந்த ஷாம்பு, சோப்பு போன்றவற்றால் குளிப்பதாலும் இளம் வயதிலேயே தலை முடி கொட்டி விடுகிறது.

முடி என்னமோ எளிதாகக் கொட்டி விடுகிறது. ஆனால் அதனை மீண்டும் முளைக்க வைக்கவோ, மேலும் முடி கொட்டாமல் காப்பாற்றுவதோ இன்றைய மருத்துவத்தில் பெரும் சவாலாக உள்ளது.

வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்து விட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம். வெந்தயத்தை பொடி செய்து அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மாயமாகிவிடும். சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.

கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால் காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.

Friday, April 15, 2011

தேர்தல் முடிந்தது! வெற்றி யாருக்கு!! பயத்தில் சர்வே?

கடந்த ஏப்.,13ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. தமிழகத்தில், 77.8 சதவீதம் ஓட்டு பதிவானது. 1967ம் ஆண்டு 76.57 சதவீதம் ஓட்டு பதிவானது தான் சாதனையாக இருந்தது. தற்போது, அது முறியடிக்கப்பட்டுள்ளது.

மே 13ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. வெற்றி, தோல்வி குறித்து அறிந்து கொள்வதில் அரசியல் கட்சியினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். பெரும்பாலானோர், பூத் ஏஜன்டுகள் மூலம், ரகசிய சர்வே எடுத்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட வேட்பாளர் போட்டியிடும் தொகுதியில் உள்ள அனைத்து பூத்களிலும், ஏஜன்டுகளிடம் ஒரு பட்டியலை வழங்கியுள்ளனர்.

அதில், ஓட்டளிக்க தகுதியுடைய ஆண், பெண் வாக்காளர்கள், பதிவான ஓட்டு விவரம் ஆகிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதில், தி.மு.க.,வுக்கு சாதகமாக விழுந்த ஓட்டுகளை தனியாக பட்டியலிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலின் இறுதியில், கருத்து என்று எழுதப்பட்டு, மூன்று கேள்விகளின் அடிப்படையில் புள்ளி விவரங்களை தொகுத்து வழங்குமாறு, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வழக்கு தொடரும்., A. R. R

கத்ரினா கைப் தோன்றும் விளம்பரம் ஒன்றில் ஸ்லம்டாக் மில்லினர் படப் பாடல் ஒன்று இடம்பெற்றிருப்பதை எதிர்த்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கு தொடரவிருக்கிறார்.

பிரபல இந்தி நடிகை கத்ரினா கைப் நடித்த விளம்பர படம் சமீபத்தில் ரிலீசானது. அதில் ஸ்லம்டாக் மில்லினர் பாடலை பயன்படுத்தி இருந்தனர். இந்த விளம்பரத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த ஏ.ஆர்.ரஹ்மான் விளம்பரத்துக்கு எதிராக வழக்கு தொடர முடிவு செய்துள்ளார். பாடலின் முழு உரிமையும் ரஹ்மானிடம்தான் உள்ளது. கத்ரீனா விளம்பரத்தை உருவாக்கியவர்கள் ரஹ்மானிடம் எந்த அனுமதியும் பெறவில்லை.

ரஹ்மான் தரப்பில் இதுபற்றி கூறும்போது, "விளம்பர படத்தை தயாரித்தவர்களிடம் எனது வக்கீல்கள் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டு வருகிறார்கள். விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடவடிக்கை கத்ரீனாவுக்கு எதிரானதல்ல. காபிரைட் உரிமையை மீறும் வகையில் விளம்பரம் தயாரித்தவர்கள் மீதுதான் என்றார்.

Thursday, April 14, 2011

ஏ சி, உபோயோகிப்பவரா! உங்களுக்காக!!

எப்போதும் “ஏசி’ அறையில் அமர்ந்திருப் பது, வெயிலில் தலைகாட்டாமல் இருப்பது போன்றவை வைட்டமின் – டி சத்துக்குறைவில் கொண்டுபோய் விட்டு விடும். வைட்டமின் – டி குறைபாட்டால், எலும்பு பாதிப்பு அதிகமாக ஏற்படும்.

ஏன் வருது?

* எப்போதும் அறைக்குள் முடங்கியிருப்பது.
* அடிக்கடி சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது.
* கால்சியம் சத்து குறைவாக எடுத்துக்கொள்வது.
* வைட்டமின் சத்தில்லா காய்கறி உணவு அதிகம் சாப்பிடுவது.
* அதிக பனி உள்ள பகுதியில் வசிப்பது.

தடுப்பு வழி

* ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 30 நிமிடமாவது வெயிலில் உடல் பட வேண்டும்.
* ஒரு லிட்டர் பாலுக்கு இணையான கால்சியம் உணவு தேவை.
* மாமிச உணவுகளில் கால்சியம் சத்து அதிகம்.

எப்போதும் “ஏசி’ அறையில் இருப்பது இப்போது அதிகமாகி வருகிறது. சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றும் இளம் தலைமுறையினருக்கு வெயில் என்றாலே தெரியாத நிலை ஏற்படுகிறது. இதனால், அவர்களுக்கு வைட்டமின் – டி சத்து குறைவாக வாய்ப்பு அதிகம் என்பதால் எலும்பு பாதிப்பு அதிகமாக வரும்.

சர்வே சொல்லுது: இது போல, சமீபத்தில் வட மாநிலங்களில் எடுத்த சர்வேயில், 75 சதவீத மக்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு வைட்டமின் – டி சத்து குறைபாடு உள்ளதும் தெரியவந்தது. இதனால், வைட்டமின் – டி சத்துக்குறைபாட்டை நீக்க மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் தனி திட்டத்தை தீட்டி வருகிறது. கிராமங்களில் சூரிய ஒளி படுவது அதிகம்; ஆனால், உணவில் கால்சியம் சத்து குறைவு. ஆனால், நகர்ப்புறங்களில், சூரிய வெளிச்சம் படுவது குறைவு; ஆனால், உணவில் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கிறது.

புற்றுநோயும் வரும்: வைட்டமின் -டி சத்துக் குறைபாட்டால், சுவாசகோளாறு முதல் புற்றுநோய் வரை கூட வர வாய்ப்பு அதிகம். காசநோய்க்கும் இது காரணமாக அமைகிறது. வயது, கல்வி, பொருளாதார நிலை போன்றவற்றை தாண்டி பல தரப்பினரிலும் வைட்டமின் – டி சத்துக் குறைபாடு உள்ளது தெரியவந்துள்ளது. வைட்டமின் “டி’ இருந்தால் தான் கால்சியம் சத்தை கட்டுப்படுத்தும்; அதை கட்டுப்படுத்தாமல் போனால் பல பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது.

பொரிக்கியான போலீஸ்!! பொறுமை இழந்த பொதுமக்கள்?

காஞ்சிபுரத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்த மத்திய ரிசர்வ் போலீஸ்காரர் ஒருவர், மாணவி ஒருவரிடம் அத்துமீறி நடந்து கொண்டதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சியையடுத்த விஷ்ணு காஞ்சியில், தமிழக தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ராஜஸ்தானில் இருந்து வந்திருந்த மத்திய ரிசர்வ் போலீசார், விஷ்ணு காஞ்சியிலுள்ள ஒரு மகாலில் தங்கியிருந்தனர். ஊர் திரும்ப தயாராகியிருந்த நிலையில், இன்றிரவு அவ்வழியே நடந்து சென்ற பிளஸ் 2 மாணவி ஒருவரை, அங்கிருந்த சி.ஆர்.பி.எப்., போலீஸ்காரர் ஒருவர் கையை பிடித்து இழுத்து வம்பு செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் போலீஸ் காரரை கைது செய்ய கோரி, விஷ்ணுகாஞ்சி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கலை இழந்த அரசியல்! கலை இழக்கப்போகும் இலங்கை அணி?

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் இலங்கை அணி தோல்வி அடைந்ததால், கேப்டன் பதவியில் இருந்து குமார சங்ககரா பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், புதிய கேப்டனாக ஏஞ்சலோ மேத்யூஸ் அல்லது திலகரத்ன தில்ஷான் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் பரவின. இந்த இருவரில் ஒருவரை கேப்டனாக்க முன்னாள் கேப்டன் குமார சங்ககராவும் ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதே கருத்தை அரவிந்த டி சில்வா தலைமையிலான வீரர்கள் தேர்வுக் குழுவும் கூறியது.

ஏஞ்சலோ மேத்யூஸ் கொழும்புவைச் சேர்ந்த தமிழர். திலகரத்ன தில்ஷான் இஸ்லாமியராக இருந்து புத்த மதத்துக்கு மாறியவர். இதனால் இவர்களில் ஒருவரை அணி கேப்டனாக நியமிக்க இலங்கை அரசு ஒப்புதல் தரவில்லை என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும், சிங்கள வீரர் ஒருவரை கேப்டனாக நியமிக்க அரசு தரப்பு விரும்புவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய இழுபறி காரணமாகவே இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தேர்வுக் குழு பதவி விலகியதாகவும் இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீண்டும் வம்பிழுக்கும், வடிவேல்!!

நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் நடிகர் வடிவேலு, அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில் 13.04.2011 அன்று விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட சாலிகிராமம், கே.கே.சாலை காவேரி உயர்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச் சாவடியில், நடிகர் வடிவேலு ஓட்டளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு, நலத்திட்டங்களை செயல்படுத்தியதன் மூலம், இத்தேர்தலில் தி.மு.க., அமோகமாக வெற்றி பெறும். ஏழை, எளிய மக்களுக்கு முதல்வர் கலைஞர் நிறைய நலத்திட்டங்களை வழங்கியுள்ளார்.

குறிப்பாக வியாபாரிக்கு தான் தொழில் செய்யத் தெரியும்; விவசாயிக்கு தான் உழத் தெரியும். மன்னனுக்கு தான் ஆளத் தெரியும்; அந்த மன்னன் முதல்வர் கலைஞர் தான். அவர் ஆறாவது முறையாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி. திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி கூட்டணி. எதிரணி கூட்டணி வெத்து கூட்டணி என்றார்.

Wednesday, April 13, 2011

வழங்கப்பட இருந்தது பலகோடி! வழக்கு பதிவு சில நூறு!!

புது தில்லி : தமிழகத்தில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த ரூ. 54 கோடி பறிமுதல் செய்யப்பட்டது, இது தொடர்பாக 521 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மாலை 5 மணி நிலவரப்படி தமிழகத்தில் 75.21 சதவீதம், புதுவையில் 83.62 சதவீதம் வாக்குகள் பதிவாகின. கடந்த தேர்தலின் போது தமிழகத்தில் 70.84 சதவீதம், புதுவையில் 84 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த தேர்தலின்போது வாக்களர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 54.17 கோடி பிடிபட்டுள்ளது.

இதில் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினரால் ரூ. 29.87 கோடியும், மாநில காவல்துறையினரால் ரூ. 9.24 கோடியும், வருமான வரித் துறையினரால் ரூ. 15.06 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக பல்வேறு கட்சியினர் மீது மொத்தம் 521 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன் 54,314 வாக்குச் சாவடிகளில் 45 வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிவர இயங்காததை கண்டுபிடித்து, அவற்றுக்குப் பதிலாக புதிய வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

தமிழகத்தில் முதல் முறையாக 9,500 வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் வாக்குப் பதிவு செய்வதை நேரிடையாக வெப் கேமரா மூலம் கண்காணித்து உள்ளோம். இதைத் தவிர 28,909 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெறுவதை விடியோ கேமரா மூலம் பதிவு செய்துள்ளோம். தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் 54,314 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. தேர்தல் நேர்மையாகவும் அமைதியாகவும் நடைபெறுவதை கண்காணிக்க 121 பொதுப் பார்வையாளர்கள், 3,258 தேர்தல் செலவு கண்காணிப்பாளர்கள், 6,788 நுண் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். வாக்குச் சாவடி காவல் பணி 32 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மேற்பார்வையில் காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்டது. தமிழகம் முழுவதும் அனைத்து தேர்தல் பணிகளுக்குமாக மொத்தம் 2,88,749 துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

புதுவையை பொறுத்தவரை வாக்குப்பதிவு நடைபெற்றபோது பழுதான 3 வாக்கு பதிவு எந்திரங்கள் உடனடியாக மாற்றப்பட்டன. 30 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற்றது. வன்முறை, வாக்குவாதம் போன்ற எதுவும் நடைபெறவில்லை. அனைத்து 867 வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பதிவு விடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது. 12 தேர்தல் பார்வையாளர்களும், 42 தேர்தல் செலவு கண்காணிப்பாளர்களும் ஆய்வு செய்தனர். தேர்தல் பணிகளில் 6,089 துணை ராணுவ பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என்றார் அவர்.

சூப்பர் ஸ்டார் வாக்களித்த ஓட்டுச்சாவடி 169

நடிகர் ரஜினிகாந்த் இன்று பகல் 10.45 மணிக்கு ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வாக்கு சாவடிக்கு காரில் வந்தார். அந்த கல்லூரி வளாகத்தில் வேறு, வேறு இடங்களில் 3 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 167, 168, 169 ஆகிய எண் கொண்ட அந்த மூன்று வாக்குச்சாவடிகளும் பொது வாக்குச்சாவடிகளாகும்.

நடிகர் ரஜினி வாக்களிக்க வேண்டிய ஓட்டுச்சாவடி 169-வது எண் ஓட்டுச்சாவடியாகும். இது ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி போர்டிகோ பகுதியில் இருந்தது. ரஜினியின் காரும் மிகச்சரியாக அந்த வாக்குச்சாவடி அருகில் வந்து நின்றது. கருப்பு பேண்ட், ப்ளு கலர் சட்டை, கூலிங் கிளாஸ் அணிந்து வந்திருந்த ரஜினி அந்த ஓட்டுச்சாவடிக்குள் செல்ல முயன்றபோது திடீரென அவரை, அவருடன் வந்தவர்கள் வேறு பகுதிக்கு அழைத்துச் சென்று விட்டனர்.

கல்லூரிக்குள் நுழைந்து விட்ட ரஜினி அங்கு ஓட்டுச் சாவடி இல்லாததால் திரும்பினார். இதையடுத்து அவரை 167-வது ஓட்டுச்சாவடிக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்த தேர்தல் அதிகாரிகள், உங்கள் பெயர் 169-வது வாக்குச்சாவடியில் உள்ளது. அது எதிர்புறம் உள்ளது. அங்கு செல்லுங்கள் என்றனர்.

இதையடுத்து ரஜினி அங்கிருந்து நடந்தே 169-வது வாக்குச்சாவடிக்கு வந்தார். அலைக்கழிக்கப்பட்ட அவர் விறுவிறுவென உள்ளே சென்றார். ரஜினி ஓட்டுப்போடுவதை படம் பிடிக்க தொலைக் காட்சி, பத்திரிகை போட்டோ கிராபர்கள் நூற்றுக்கும் மேல் திரண்டிருந்தனர். இதனால் ரஜினி சற்று சிரமத்துக்குள்ளானார். மின்னல் வேகத்தில் வாக்களித்த அவர் அதே வேகத்தில் புறப்பட்டார்.

கிடுக்குபிடி, தேர்தல் ஆணையம்! தப்பித்த வாக்காளர்கள்!!

எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு, தேர்தல் கமிஷன் சட்ட விதிமுறைகளை கெடுபிடியாக கடைபிடித்ததால், கடந்த தேர்தல் காலங்களில் இருந்த பரபரப்பும், தேவையற்ற ஆர்ப்பாட்டங்களில் இருந்தும் மக்கள் தப்பினர்.

அதே நேரம், பணப் பட்டுவாடாவை தடுக்க, தேர்தல் கமிஷன் அதிரடியாக களம் இறங்கிய போதும், போலீசாரின் ஒத்துழைப்பு இல்லாமல் பல இடங்களில் பணப் பட்டுவாடாவை தடுக்க முடியாமல் போனது. சில இடங்களில் எதிர்க்கட்சிகளும், சில இடங்களில் பொதுமக்களும் பணப் பட்டுவாடாவை தடுக்க எடுத்த முயற்சிக்கு, தேர்தல் அலுவலர்கள் கை கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

கடந்த இரு ஆண்டுகளாக, தமிழகத்தில் நடந்த இடைத்தேர்தல்களில், குறிப்பாக, மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியிலும், கடந்தாண்டு இறுதியாக நடந்த தர்மபுரி மாவட்ட பென்னாகரம் இடைத்தேர்தலிலும், தி.மு.க., எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு, வாக்காளர்களுக்கு, பணத்தை வாரி வழங்கியது. ஒரு ஓட்டுக்கு, 1,000 முதல், 2,000 ரூபாய் வரை வழங்கப்பட்டது.தி.மு.க.,வின் பணப் பட்டுவாடாவை தடுக்க தேர்தல் கமிஷன் எடுத்த நடவடிக்கை எதுவும் பலிக்கவில்லை. பென்னாகரம் இடைத்தேர்தலின் போது, பா.ம.க.,வினர் தேர்தல் பணியில் மிக முக்கிய பங்காக, தி.மு.க.,வின் தேர்தல் பண வினியோகத்தை தடுக்க, பல்வேறு முயற்சிகள் எடுத்ததால், கட்டுக்கட்டாக பணம், வேட்டி, சேலைகள் பிடிக்கப்பட்டன. அதையும் மீறி தேர்தலில் பணப் பட்டுவாடா தடுக்க முடியாமல் போனது.தற்போதைய தேர்தலில், தேர்தல் கமிஷன் பண வினியோகத்தை தடுக்க ஒரு மாதமாக சோதனைச் சாவடிகள் அமைத்தும், பறக்கும் படை அமைத்தும் பண கடத்தலை தடுக்க முயற்சி எடுத்தது. இந்த முயற்சியில் வியாபாரிகளும், அப்பாவி மக்களும் மட்டுமே சிக்கினர்.

தர்மபுரி மாவட்டத்தில் ஐந்து தொகுதியிலும், தி.மு.க., கூட்டணி கட்சியினர் இறுதிக்கட்ட பணப் பட்டுவாடா முயற்சிகளில் களம் இறங்கினர். பல இடங்களில் எதிர்க்கட்சியினர், போலீசாருக்கும் தேர்தல் பறக்கும் படை அலுவலர்களுக்கும் புகார் அளித்தும், முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. பல இடங்களில், அ.தி.மு.க., கூட்டணியினரும் தங்களுக்கு பலகீனமாக உள்ள சில இடங்களில், பணப் பட்டுவாடாவில் இறங்கினர். தி.மு.க., கூட்டணி கட்சியினர், ஓட்டுக்கு, 200 ரூபாய் என, கடந்த மூன்று நாட்களாக வழக்கம் போல் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்துள்ளனர்.

Tuesday, April 12, 2011

வாக்களிக்க,.. வேண்டிய ஆவணங்கள்!?

வாக்குப் பதிவு நடக்கும் நாளில் வாக்களிக்க செல்லும் வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள, தேர்தல் ஆணையம் வழங்கிய புகைப்படத்துடன்கூடிய வாக்காளர் அடையாள அட்டை, தேர்தல் ஆணையத்தால் தற்போது வழங்கப்பட்டு வரும் புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கண்டிப்பாக எடுத்து செல்ல வேண்டும். இந்த இரண்டு ஆவணங்களில் ஏதாவது ஒன்றுகூட இல்லை என்றால் வாக்களிக்க முடியாது.

வாக்காளர் பட்டியல் அல்லது தேர்தல் ஆணையம் வழங்கும் பூத் சிலிப்பில் புகைப்படம் இல்லாதவர்கள் மட்டும் தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள மாற்று ஆவணங்கள் 13ல் ஏதாவது ஒரு ஆவணத்தை காட்டி வாக்களிக்கலாம்.

* பாஸ்போர்ட்,
* ஓட்டுநர் உரிமம்,
* வருமான வரி அடையாள அட்டை (பான்கார்டு).

* மாநில மற்றும் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனம் ஆகியவற்றால் வழங்கப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை.

* 28.2.2011 வரை வங்கிகள் மற்றும் அஞ்சல் துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பாஸ்புக் மற்றும் புகைப்படத்துடன் கூடிய விவசாய அடையாள அட்டை.

* 28.2.2011 வரை வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய முன் னாள் படைவீரர்கள் ஓய்வு ஊதிய குறிப்பேடு, ஓய்வு ஊதிய ஆணை போன்ற ஓய்வு ஊதிய ஆவணங்கள் மற்றும் முன்னாள் படை வீரரின் மனைவி மற்றும் சார்ந்தவர்கள் சான்றிதழ்கள், முதியோர் ஓய்வு ஊதிய ஆணை, விதவை ஓய்வு ஊதிய ஆணை.

* புகைப்படத்துடன் கூடிய சுதந்திர போராட்ட வீரர்களுக்கான அடையாள அட்டை.
* புகைப்படத்துடன் கூடிய பட்டா மற்றும் பதிவு செய்யப்பட்ட சொத்து சம்மந்தப்பட்ட ஆவணங்கள் முதலி யவை.

* 28.2.2011 அன்று அல்லாத அதற்கு முன்பு உரிய அதிகாரிகளால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றுகள்.

* புகைப்படத்துடன் கூடிய ஆயுத உரிமம்
* புகைப்படத்துடன் கூடிய மாற்று திறனாளிகளுக்கான சான்றுகள்
* புகைப்படத்துடன் கூடிய தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட அடையாள அட்டை
* மத்திய தொழிலாளர் துறையால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு இந்த 13 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.

என்றும் இளமையாக இருக்க...!

இளநீரில் இருப்பவை?..சோடியம் குளோரைடு, பொட்டாசியம், தாது உப்புக்கள், நீர்ச்சத்து, கால்சியம், உப்புச்சத்து, வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன.

மருத்துவ குணம்?... தினமும் இளநீர் நம்மை இளமையாக வைத்திருக்கும். குறிப்பாக கோடைக்காலங்களில் உப்புச்சத்தும், நீர்ச்சத்தும், இன்ன பிற பொதுவான சத்துக்களும் உடலில் இருந்து வியர்வை மூலமாக வெளியேறிவிடுவதால் உடல் வெளிறிவிடும். மயக்கம், நாடித்துடிப்பு தளர்வு, தசைகள் இறுகுவது நடக்கும். இதற்கெல்லாம் முக்கியமான காரணம் உடலில் உள்ள உப்பு வெளியேறுவதுதான். இளநீரில் இருக்கின்ற உப்புச் சத்து நம் உடலில் வெப்ப நிலையை சமச்சீராக பாதுகாப்பதோடு, வெப்பநிலையை சரிவர உள் வாங்கி முறையே வெளித்தள்ளுகிறது. இதனால் வேனல்பிடிப்பு, வேனல் அதிர்ச்சி, அயர்ச்சி போன்ற கோடையின் ஆபத்தான விஷயங்கள் இல்லாமல் போகிறது.

எப்படிச் சாப்பிடலாம்?... இளநீரை உடனடியாக குடித்துவிடுவது தான் நல்லது. இரண்டு / மூன்று மணி நேரங்கள் வைத்திருப்பதோ, “ஃபிரிட்ஜில்” வைத்திருந்து குடிப்பதோ அதன் மருத்துவக் குணங்கள் மந்தப்படுத்தக் கூடும். வேண்டுமானால் அரை மணிநேரம் வைக்கலாம். இதில் எதனையும் கலந்து குடிக்கக் கூடாது. சர்க்கரை நோயாளிகள் குறைவாக குடிக்கலாம். சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் குடிக்கக் கூடாது. இதய நோயாளிகளுக்கு இளநீர் இதம்.

இளநீருக்கு மாற்று குளிர்பானமா?... குளிரூட்டப்பட்ட செயற்கை குளிர்பானங்களில் “கார்பனேட்டட் வாட்டரும்”, காற்றும் தான் செயற்கையாக அடைக்கப்படுகிறது. இதில் உடலுக்கு தேவையற்ற கலோரிச் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் உடல் குண்டாகும். எலும்புகள் பலவீனமடையும். குடற்புண் உண்டாகும். இவையெல்லாம் தொடர்ந்து குடிப்பதில் உள்ள பக்க விளைவுகள். ஆக இளநீர் இளமைக்கும் வலிமைக்கும் இதம்.

அரியணையில் அமர்ந்து செய்வாரா? வாய்மூடி கொடாநாடு செல்வாரா??

அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில், தமிழக மீனவர்கள் மீது இனி துப்பாக்கிச் சூடு நடத்தாமல் பார்த்துக் கொள்வோம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா உறுதி அளித்த மறுநாளே தமிழக மீனவர் ஒருவர் மரணமடைந்து இருக்கிறார் என்ற செய்தியைப் பார்க்கும்போது, “கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்” என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.

இம்மாதம் 2-ம் தேதி, ராமேஸ்வரத்திலிருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்ற விக்டர்ஸ், மாரிமுத்து, அந்தோணிராஜ் மற்றும் ஜான்பால் ஆகிய நான்கு மீனவர்கள் ஊர் திரும்பாத சூழ்நிலையில், அண்மையில் விக்டர்ஸ் மற்றும் அந்தோணிராஜ் ஆகியோரது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியையும், மற்ற இரு மீனவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை என்ற செய்தியையும் கேட்டு நான் துயரமும், மிகுந்த வேதனையும் அடைந்துள்ளேன்.

இந்தச் செயல் இலங்கை கடற்படையினரின் சதிச் செயலாக இருக்குமோ என்ற சந்தேகம் தற்போது மீனவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, வழக்கம் போல கடிதம் எழுதி காலத்தைக் கடத்தாமல், கரை திரும்பாத மீதமுள்ள இரு மீனவர்களின் உயிருக்கும், உடைமைக்கும் எவ்வித ஆபத்துமின்றி அவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசையும், தி.மு.க. அரசையும் கேட்டுக் கொள்கிறேன்.

இறந்துபோன தமிழக மீனவர்கள் விக்டர்ஸ் மற்றும் அந்தோணிராஜ் ஆகியோரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மீனவருக்காக வாய்திறக்கும் ஜெயா! அரியணையில் அமர்ந்ததும் செய்வாரா? அல்லது வாய்மூடி கொடாநாடு செல்வாரா.

Monday, April 11, 2011

கையாலாகாத கலைஞர்?

விடுதலைப்புலிகள் ஆதரவு இணையதளமான, "பதிவு' என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தி, இலங்கையில் போர் நடந்து கொண்டிருந்தபோது, போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கும், இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாக பொய் சொல்லி, இலங்கை - இந்தியா இடையேயான கூட்டு சதிக்கு, பலர் உறுதுணையாக செயல்பட்டனர். அவர்களில், தமிழக முதல்வர் கருணாநிதிக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

இலங்கையில் போர் உச்சகட்டத்தை எட்டியிருந்தபோது, இந்தியாவில் லோக்சபா தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தது. காங்கிரஸ் அரசுக்கு எதிராக, தமிழகத்தில் எழுந்த கடும் எதிர்ப்புகள், கருணாநிதிக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தின. கருணாநிதியின் எதிர்காலமும், கேள்விக்குறியாக இருந்த நிலையில், போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் வகையில், கருணாநிதி நாடகம் ஒன்றை ஆரம்பித்தார்.

டில்லிக்கு தந்தி அனுப்புதல், ஆர்ப்பாட்டம் நடத்துதல், மனிதச் சங்கிலி பேரணிகளை நடத்துதல் என நீண்டுகொண்டே சென்ற கருணாநிதியின் போர் நிறுத்த நாடகம், அக்டோபர் 14ம் தேதி மத்திய அரசுக்கு கெடு விதிக்கும் காட்சியாக மாறியது. "இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், தி.மு.க., எம்.பி.,க்கள் கூண்டோடு ராஜினாமா செய்வர்' என அறிவித்தார்.இதற்கு ஒரு வாரம் முன், இலங்கைத் தமிழக மக்களின் தன்னாட்சியுரிமையை அங்கீகரித்து, ஜெயலலிதா ஒரு அறிக்கையை வெளியிட்டார். இரு தலைவர்களின் நடவடிக்கைகளைக் கண்டு, இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. 1980களில் எம்.ஜி.ஆருடன், புலிகள் நெருங்கிப் பழகிய ஒரே காரணத்திற்காக, விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் கருணாநிதி ஈடுபட்டார். இவரைப்பற்றி புலிகள் நன்கு அறிந்து வைத்திருந்தபோதும், மூத்த அரசியல் தலைவர் என்ற வகையில், அவருடன் நல்லுறவை வைத்துக்கொள்ள புலிகள் பெரிதும் விரும்பினர்.

போரை நிறுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி, புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன், முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதினார். அதற்கு, கருணாநிதி எவ்வித பதிலும் அளிக்கவில்லை. இதற்கிடையே, எம்.பி., பதவியை ராஜினாமா செய்து, கருணாநிதியிடம் கடிதம் கொடுத்தார் கனிமொழி. இது, இலங்கைத் தமிழர்களிடையே இருந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியது.இதற்காக, கனிமொழிக்கும் புலிகள் தரப்பில் ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், எம்.பி.,க்கள் யாரும் ராஜினாமா செய்யவில்லை. தந்தையிடம் கொடுத்த ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற்றுக் கொண்டு, தன் பதவியை தக்க வைத்துக்கொண்டார் கனிமொழி. இதன்மூலம், கூண்டோடு ராஜினாமா என்ற கருணாநிதியின் அறிவிப்பு, முழுக்க முழுக்க நாடகம் என்பது உறுதியானது.

மோடி என்கிற கேடிக்கு எதிராக, அன்னா ஹசாரே!!

அஹ்மதாபாத் : குஜராத் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அர்ஜுன் மோத்வாடியா அம்மாநிலத்தை ஆளும் மோடி அரசுக்கெதிராக ஊழல் எதிர்ப்பு பிரச்சாரம் மேற்கொள்ள காந்தியவாதி அன்னா ஹஸாரேவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவில் ஊழல் ஆட்சியாளர்களை விசாரணைச் செய்யும் லோக்பால் மசோதாவை நிறைவேற்றக்கோரி காந்தியவாதியும், சமூக ஆர்வலருமான அன்னா ஹஸாரே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளார். பின்னர் அவர் பேட்டியளிக்கையில், அனைத்து மாநிலங்களுக்கும் சென்று ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தார். இதனை கருத்தில் கொண்டு குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் மோதிவாடியா அன்னா ஹஸாரேவை குஜராத் மாநிலத்தில் ஊழலை எதிர்த்து பிரச்சாரம் செய்ய அழைப்பு விடுத்துள்ளார்.

இதுக்குறித்து அவர் மேலும் கூறியதாவது: “நரேந்திர மோடியின் அரசு ஒரு லட்சம் கோடி ஊழல் புரிந்துள்ளது. இந்த ஊழல் கடந்த பத்தாண்டுகளாக குஜராத்தை மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சிபுரியும் வேளையில் நடந்ததாகும். சுஜ்லாம் சுஃப்லாம் யோஜ்னா திட்டத்தில் ஏறத்தாழ ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. டாட்டாவின் நானோ கார் திட்டத்திற்கு அனுமதியளித்ததால் அரசுக்கு 31 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பிபபாவ் பவர் நிறுவனம் மற்றும் ஸ்வான் எனர்ஜி நிறுவனத்திற்கும் குஜராத் அரசுக்கும் இடையே நடந்த ஒப்பந்தத்தின் வாயிலாக 10 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

அன்னா ஹஸாரே லோக்பால் மசோதாவுக்காக போராடினார். ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக மோடி அரசு ஆட்சியாளர்களின் ஊழலை விசாரிக்கும் ‘லோகாயுக்தா’வை இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. இவ்வாறு மோத்வாடியா தெரிவித்துள்ளார்.

லோகாயுக்தாவை நியமித்தால் தனது ஊழல் சந்தி சிரிக்கும் என பயந்துதான் அதனை நடைமுறைப்படுத்தாமல் இருந்து வருகிறார் மோடி. சொந்த நாட்டு குடிமக்களான பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை கொடூரமாக கொலைச் செய்வதற்கு தலைமை வகித்த மோடி, தற்பொழுது அம்மாநிலத்தில் முஸ்லிம்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்திவருகிறார். மாநிலத்தை கொள்ளையடிப்பதிலும், குடிமக்களை கொலைச்செய்யத் தூண்டுவதிலும் கைத்தேர்ந்த மோடி தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் வேளையில் ஊழலைக் குறித்தும், குடும்ப ஆட்சியைக் குறித்தும் ரொம்பவே அலட்டிக்கொண்டார். வேதம் ஓதுவது கேடுகெட்ட சாத்தான் என்பது தமிழ வாக்காளர்களுக்கு தெரியாதா என்ன?

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!