Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, March 21, 2011

வை.கோ.வுக்கு ஆதரவு கரம் நீட்டும், கி.வீரமணி

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் உங்களுக்கு இழைக்கப்பட்ட "பொடா' கொடுமையை அரசியல் காரணமாக நீங்கள் மறந்திருக்கலாம். ஆனால், இன உணர்வுள்ள நாங்கள் என்றும் மறந்ததில்லை. சகோதர பாசம் என்பது தேவை வரும்போது பீறிட்டுக் கிளம்பும் என்பது இயல்பானதே.

அரசியலில் இன்னொரு தேர்தல் வரும்வரை சும்மா இருப்போம் என்ற நிலைப்பாடு சரியானதுதானா என்பதை சற்று நிதானமாக யோசியுங்கள். ம.தி.மு.க.வின் எதிர்காலத்தைப் பற்றி உணர்ச்சி வயப்படாமல் யோசியுங்கள். அரசியல் கட்சி நடத்துவோர் ஜனநாயகத்தில் வாக்களிக்காமல் புறக்கணிப்பது நல்லதா?

சுயமரியாதையோடு தீர்மானம் நிறைவேற்றியுள்ளீர்கள் என்றாலும் தங்களது அரசியல் பாதையை தீர்மானியுங்கள். தி.மு.க.வோடு ஒன்றாக இணைந்துவிட வேண்டும் என்று கூட சொல்ல மாட்டேன். தனித்தனி அரசியல் கட்சிகளானாலும் தாய்க் கழகமான தி.மு.க.வின் கொள்கைகளும், லட்சியங்களும், ம.தி.மு.க.வின் லட்சியங்களும் ஒன்றுதான். ஆயிரம் கோபதாபங்கள் நமக்குள் இருப்பினும் நீரடித்து நீர் விலகாது என்ற பழமொழிக்கேற்ப நாம் அனைவரும் ஓர் அணியில் நிற்க வேண்டும்.

எனவே, தி.மு.க. கூட்டணியை ஆதரிக்கும் நிலைப்பாட்டினை எடுங்கள். நிதானமாக யோசியுங்கள். தோழர்களுடன் கலந்து துணிந்து முடிவெடுங்கள். ஆட்சிக்கு வரும் முன்னரே இப்படி அலட்சியப்படுத்தும் ஜெயலலிதா, தப்பித்தவறி ஆட்சிக்கு வந்தால் எப்படி விஸ்வரூபம் எடுத்து அழிக்க முற்படக்கூடும் என்பதையும் எண்ணிப்பாருங்கள். எந்த உள்நோக்கமோ, அரசியல் லாபங்களோ இல்லாமல் விடுக்கப்படும் வேண்டுகோள் இது. தங்களது மனப் புண்ணுக்கு மருந்து என்று கருதியே இந்த யோசனை. இது குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு அவர் திங்கள்கிழமை கடிதம் எழுதியுள்ளார். நாம் தொலைநோக்குப் பார்வையோடு சிந்திக்க கடமைப்பட்டவர்கள் என்பதால்தான் இந்த வேண்டுகோள்' என்று கி. வீரமணி கூறியுள்ளார்.

கொள்ளை கும்பலுக்கு, மத்திய அரசு சலுகை?

2011-12-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் மருத்துவமனைகளில் 25-க்கும் மேற்பட்ட படுக்கை வசதியும், குளிர்சாதன வசதியும் கொண்டவற்று 5 சதவீத சேவை வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியது.

இப்போது பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை நடைபெறும் கூட்டத் தொடரில் மருத்துவமனைக்கு சேவை வரி விதிக்கும் முடிவை ரத்து செய்யுமாறு வலியுறுத்துவர் என்று தெரிகிறது. பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு பல்வேறு தரப்பிலிருந்து ஆலோசனைகளும், கோரிக்கைகளும் வந்துள்ளன. அதனடிப்படையில் சில மாற்றங்களை செய்ய உத்தேசித்துள்ளதாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். வரி விதிப்பு தொடர்பாக எம்.பி.க்கள் பலர் விடுத்த கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த வாரம் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது பெரும்பாலான எம்.பி.க்கள், சர்ச்சைக்குரிய இந்த வரிவிதிப்பைக் கைவிடுமாறு கோரியுள்ளனர். இது தவிர, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மீதான குறைந்தபட்ச மாறுதலுக்குள்பட்ட வரி விதிப்பு (மேட்) 18.5 சதவீதமாக உள்ளதிலும் மாற்றம் கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. அத்துடன் ஆயத்த ஆடைகள் மீதான 10 சதவீத வரி விதிப்பு முறையிலும் மாற்றம் கொண்டு வருவார் என்று தெரிகிறது. கடந்த வாரம் நாடு முழுவதும் பின்னலாடைத் தொழில் நிறுவனங்கள் நாடு முழுவதும் இரண்டு நாள் வேலை நிறுத்தம் மேற்கொண்டன. உறுப்பினர்களின் விவாதத்துக்குப் பிறகு புதன்கிழமை நிதியமைச்சர் பிரணாப் பதிலளிக்க உள்ளார். அப்போது புதிய வரி விதிப்புகளை அவர் ரத்து செய்வார் என்று தெரிகிறது.

காமடி பிசாகுமா? கலைகட்டுமா??

நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஆதரவாக நடிகர் வடிவேலு பிரச்சாரம் செய்ய உள்ளார். சென்னையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்த பின்னர் இதனை தெரிவித்தார்.

சில, பல மாதங்களுக்கு முன்னர் நடிகரும், தே.மு.தி.க., தலைவருமான விஜயகாந்துக்கும், வடிவேலுவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையை யாரும் மறந்திருக்க மாட்டார். வடிவேலு வீட்டின் மீது கல்லை எறிந்து பெரும் ரகளை செய்தனர் தே.மு.தி.க.,வினர். இதனால் கொதித்து போன வடிவேலு வருகிற சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் நிற்கும் தொகுதியில் அவரை எதிர்த்து நானே போட்டியிட்டு அவரை தோற்கடிப்பேன் என்று ஆவசேமாக கூறியிருந்தார். இப்போது தேர்தலும் வந்துவிட்டது. வடிவேலு, விஜயகாந்‌த்தை எதிர்த்து போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தலில் போட்டியிடுவது குறித்து வடிவேலு இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியிடவில்லை.

இந்நிலையில் தி.மு.க.,வுக்கு அதரவாக வடிவேலு பிரச்சாரம் செய்ய இருக்கிறார். இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் இன்று(21.03.11) சந்தித்து பேசினார் வடிவேலு. வருகிற 23ம் தேதி முதல் தனது பிரச்சார பயணத்தை தொடங்கும் வடிவேலும் தமிழகம் முழுவதும் தி.மு.க.,வுக்கு ஆதரவாக ஓட்டு சேகரிக்க இருக்கிறார்.

84 தொகிதிகளில், நேருக்கு நேர்!

சென்னை : வரும் சட்டசபை தேர்தலில் 84 தொகுதிகளில் தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் நேரிடையாக மோதுகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க., தனது வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தது. இன்று 160 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அ.தி.மு.க.,அறிவித்து விட்டது. தே.மு.தி.க., தனது முதல் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. காங்கிரஸ் மற்றும், இடதுசாரி கட்சிகள் அறிவிக்க வேண்டும். இதனிடையே 84 தொகுதிகளில் தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் நேரிடையாக மோதுகின்றன. மேலும் அ.தி.மு.க., காங்கிரசை எதிர்த்து 38 தொகுதிகளிலும், 21 தொகுதிகளில் பா.ம.க.,வை எதிர்த்தும், 8 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை எதிர்ததும், 6 தொகுதிகளில் கொ.ம.க..,வை எதிர்த்தும் போட்டியிடுகிறது. இதேபோல் தே.மு.தி.க., 18 தொகுதிகளில் தி.மு.க.,வை எதிர்த்தும், 15 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்தும், 6 தொகுதிகளில் பா.ம.க.,வை எதிர்த்தும் போட்டியிடுகின்றது. மார்க்சிஸ்ட் கட்சி 4 தொகுதிகளில் தி.மு.க,வை எதிர்த்து போட்டியிடுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 7 தொகுதிகளில் தி.மு.க., வை எதிர்த்து போட்டியிடுகிறது.

துபாய் புர்ஜ் கலிபா கட்டடத்தின் உச்சியில் சாகசம்

உலகிலேயே மிகவும் உயரமான கட்டடத்தின் உச்சியில், தனி ஆளாக நின்று, சாகசம் செய்து, சாதனை செய்ய முடியுமா? முடியும் என நிரூபித்துள்ளார் டாம் குரூஸ் என்ற இந்த ஆசாமி. உயிரை துச்சமென மதித்து, மிகவும் ஆபத்தான சாகசங்களை செய்து காட்டுவதுதான் இவர் வேலை.

உலகின் மிகவும் உயரமான கட்டடம் துபாய் நகரில் உள்ளது. புர்ஜ் கலிபா என்ற இந்த கட்டடத்தின் உயரம், 2,717 அடி. உலகின் உச்சி பகுதி என கருதப்படும் இந்த கட்டடத்தின் மேல் உள்ள மொபைல் போன் டவரில் ஏறி, அதன் உச்சியில் அமர்ந்து, நின்று, தண்ணீர் குடித்து என, பல சாகசங்களைச் செய்துள்ளார் டாம் குரூஸ். இந்த கட்டடத்தின், 124வது மாடியில் கண்காணிப்பு கோபுரம் ஒன்று உள்ளது. அந்த கோபுரத்தின் வெளியே உள்ள கண்ணாடியை பிடித்தபடி, தாவித்தாவி சென்று சில நாட்களுக்கு முன் சாதனை செய்தார் டாம். அதன் பின், கட்டடத்தின் உச்சியில் உள்ள கோபுரத்தில் ஏறி சாதனை படைக்க முடிவு செய்தார்.

அவரது சாதனை நிகழ்ச்சி முழுவதும் ஹெலிகாப்டரில் பறந்தபடி வீடியோ படம் பிடிக்கப்பட்டது. கோபுரத்தின் உச்சியில் ஏறிய டாம், அங்கிருந்த மொபைல் ஆன்டனா மீது உட்கார்ந்து, தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்தார். இந்த சாகச நிகழ்ச்சிகள் அனைத்தையும் கீழே கூடி நின்ற மக்கள், வீடியோ திரையில் பார்த்து, ஆச்சரியமும், குதூகலமும் அடைந்தனர்.

Sunday, March 20, 2011

இதயமே இதயமே, (டோன்ட் டென்சன்!!)

எந்நேரமும் பதட்டம், டென்ஷன் உள்ளவர்களுக்கு இருதய துடிப்பும், ரத்தக்கொதிப்பும் அதிகரிக்கிறது. ரத்தநாளங்களில் அடைப்பு ஏற்படுவதுடன் அதன் சுருங்கும் தன்மையும் அதிகரிக்கிறது. பதட்டமான சூழ்நிலையில் பணியாற்றுவோருக்கு உடல் ஆரோக்கியத்திற்கு குறிப்பாக இருதயத்திற்கு பாதிப்பு ஏற்படும் தன்மை அதிகம்.

மேலும் மாரடைப்பு வர முதன்மையான காரணம் புகைப்பிடிக்கும் பழக்கமே. சமீபத்தில் நடந்த ஒரு மருத்துவ ஆராய்ச்சியில் சிகரெட்டால் இருதயத்திற்கு வரும் பாதிப்பு, சர்க்கரை, ரத்தக்கொதிப்பு போன்றவற்றால் வரும் தன்மையை விட அதிகம் என கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக சிறு வயதில் ஏற்படும் மாரடைப்புக்கு புகைப்பழக்கமே முதன்மை காரணம். புகை பழக்கத்தால் ரத்தக்குழாயில் உள்ள சிறிய அடைப்புகளில் கீறல் ஏற்பட்டு ரத்தக்கட்டி உண்டாகி மாரடைப்பு ஏற்படுகிறது.

புகைப்பழக்கம் உடலின் பல பாகத்தையும் பாதித்தாலும் இருதயத்தையே அதிகம் பாதிக்கிறது. புகைப் பழக்கத்தை நிறுத்தினால் இருதயத்திற்கு கிடைக்கும் நன்மை ஆஞ்சியோ பிளாஸ்டி, பைபாஸ் சர்ஜரியை விட அதிக பலன் தரும். பதட்டமான சூழ்நிலையை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. இது தவிர யோகா, தியானம் போன்றவையும் பெரிதும் உதவுகின்றன.

ஆணவப்போக்கும், அவமதிப்பும்!

தமிழக அரசியலில் பழுத்த அரசியல் வாதியும், ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருபவருமான ம.தி.மு.கவின் பொதுச் செயலாளர் வைகோ அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் ஆணவப் போக்கினால் அவமதிப்புக்குள்ளாகி கடைசியில் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க கூட்டணியில் தொகுதிகளை ஒதுக்குவதில் ஏற்பட்ட சச்சரவால் அக்கூட்டணியிலிருந்து வெளியேறிய வைகோவிற்கு ஜெயலலிதா 35 தொகுதிகளைக் கொடுத்து திக்குமுக்காட வைத்தார். அன்றிலிருந்து அம்மாவின் நிழலில் ஒதுங்கிய வைகோவிற்கு கஷ்டகாலம் விஜயகாந்தின் வடிவில் வந்தது.

வருகிற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவை எப்படியேனும் வீழ்த்தி அரியணையில் ஏறத்துடிக்கும் செல்வி ஜெயலலிதா, அ.தி.மு.கவின் வாக்கு வங்கியில் வேட்டுவைக்கும் விஜயகாந்தை தனது கூட்டணிக்குள் இழுத்தார். பின்னர் அவருக்கு வைகோ ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. பல்வேறு சிறுகட்சிகளுடன் தொகுதி உடன்பாட்டையெல்லாம் முடித்துவிட்டு ம.தி.மு.க வை கண்டுகாணாமல் இருந்த ஜெயலலிதா, திடீரென 160 சீட்டுகளுக்கான அ.தி.மு.க வேட்பாளர்களை தன்னிச்சையாக அறிவித்து கூட்டணிக் கட்சிகளை கதி கலங்கவைத்தார்.

இவரது அதிரடியால் ஆட்டங்கண்ட கூட்டணிக் கட்சியினர் மூன்றாவது அணி கோஷத்தை எழுப்பி அம்மாவை அதிரவைத்தனர். உடனடியாக அனைத்துக் கூட்டணிக் கட்சிகளை விடிய விடிய சந்தித்துப்பேசி சமாதானம் பேசி அவர்களது கோரிக்கையை நிறைவுச்செய்தார். ஆனால், ம.தி.மு.க வின் கோரிக்கையை அவர் ஏற்பதாக இல்லை. முந்தைய தேர்தலில் 35 இடங்களை அளித்தவர் இத்தேர்தலில் 8 அல்லது 9 தொகுதிகளை அளிப்பதாக கூறி ம.தி.மு.கவை மட்டந்தட்டினார். கடைசியில் கூட்டணிக் கட்சியினரின் வற்புறுத்தலுக்கிணங்க 12 தொகுதிகளை மட்டுமே தர முடியும் எனக்கூறி ம.தி.மு.கவை திண்டாட வைத்தார் ஜெயலலிதா.

அ.தி.மு.க தரும் தொகுதிகளைப் பெற்று தேய் பிறையாக மாறுவதை விட தேர்தலை புறக்கணிப்பதே மேல் என்ற முடிவுக்கு வந்துள்ளது. அதிமுக கூட்டணித் தொடர்பான பேச்சுவார்த்தையின் போது நடத்தியவிதத்தால் ம.தி.மு.கவினர் ஒவ்வொருவரின் உள்ளமும் காயப்பட்டுப் போனது என வைகோ கூறியுள்ளார். சுயமரியாதையை இழக்கமாட்டோம், உள்ளத்தை காயப்படுத்தி விட்டார்கள் எனக் கூறும் வைகோவுக்கு இப்பொழுதுதான் ஞானோதயம் பிறந்திருக்கிறது போலும். தன்னை தி.மு.கவிலிருந்து வெளியேற்றிய பொழுது தனக்காக தீக்குளித்து இறந்துபோன தொண்டர்களின் உணர்வுக்கு (அரசியல்வாதிகளுக்கெல்லாம் தீக்குளிக்கும் மூடத்தனம் இந்தியாவில்தான் அரங்கேறுகிறது என்பது வேறுவிஷயம்). மதிப்பளிக்காமல் மீண்டும் தன்னை அவமானப்படுத்தி வெளியேற்றிய தி.மு.கவுடன் வைகோ கூட்டணி வைத்தவுடனேயே அவருக்கிருந்த சுயமரியாதை போய்விட்டது.

உறுதியான பொன்னியின் செல்வனில் ஏ.ஆர்.ஆர்

மணிரத்னம் அடுத்து இயக்கும் பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கல்கியின் நாவலை மையமாக வைத்து உருவாக போகும் இப்படத்தில் விஜய், விஷால், ஆர்யா, தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, அனுஷ்கா ஆகியோர் நடிக்கின்றனர். மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக இப்படத்தை எடுக்க திட்டமிட்டு இருக்கிறார் மணிரத்னம்.

இத‌னிடையே இப்படத்திற்கு யார் இசையமைப்பார் என்ற கேள்வி எழுந்தது? வழக்கம் போல் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மணிரத்னம் தன்னுடைய பழைய ஆஸ்தான இசையமைப்பாளரான இளையராஜாவை இசையமைக்க திட்டமிட்டு இருந்ததாக செய்திகள் வெளியாகின. மேலும் இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானும், இளையராஜாவும் சேர்ந்து இசையமைக்க போவதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் எதிர்பார்த்தது போலவே இறுதியாக ஏ.ஆர்.ரஹ்மானே இப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பயனுள்ள உடற்பயிச்சி, நீச்சல்

1. நீச்சல் என்பது ஒரு வகையான கலை மட்டும்லல நல்ல உடற்பயிச்சியும் தான்.

2. தினமும் 1 மணி நேரம் நீச்சல் பயிற்சி செய்தால் உடலில் உள்ள ஊளைச் சதைகள் குறையும்.

3. கை, கால் மற்றும் தொடைப்பகுதியில் உள்ள தசைகள் வலுப்பெறும்.

4. நன்கு பசி எடுக்கும். கை, காலை குடைச்சல் மற்றும் மூட்டு வலிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

5. இரத்த ஓட்டம் சீராகிறது.

6. நன்கு மூச்சு விடுவதற்கு நுரையீரல் பகுதி விரிந்து காணப்படும்.

7. நல்ல மன ஒருமைப்பாட்டையும், தன்னம்பிக்கையையும் தருகிறது.

8. சிறந்த முதலுதவிக்கலையாகவும், தற்காப்புக்கலையாகவும் விளங்குகிறது.

9. ஆரோக்கியம் மற்றும் அழகை பராமரிக்க நீச்சல் உதவுகிறது.

10. ஒரே நேரத்தில் தசை, இருதயம், என அனைத்துப்பகுதிகளும் இயங்குகிறது

தேர்தலுக்குப்பிறகு அரசியல் கட்சிகளின் ரகசியத்திட்டம்?

தி.மு.க., கூட்டணி ஆரம்பத்தில் அமைதியாக துவங்கினாலும், திடீரென பிரச்னை பூதாகரமானது. கூட்டணியில் இடம்பெற்றுள் முக்கிய கட்சியான காங்கிரஸ், 63 தொகுதிகள் கேட்டு அடம்பிடித்தது. பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தும் எவ்வித பலனும் ஏற்படவில்லை.கேட்ட தொகுதிகளைப் பெற்று விடுவதில் மட்டுமே காங்கிரஸ் அக்கறை காட்டியது. மேலும் அந்த 63 தொகுதிகள் எவை எவை என்பதையும் பட்டியலிட்டு, தி.மு.க., தலைமைக்கு காங்கிரஸ் நெருக்கடி கொடுத்தது. முரண்டு பிடித்த காங்கிரசை மிரட்டும் வகையில், தி.மு.க., உயர்மட்டக்குழு கூடி, மத்திய அமைச்சரவையில் இருந்து விலகல் என்ற முடிவை அறிவித்தது. அதை அரங்கேற்றுவதற்காக தி.மு.க., மத்திய அமைச்சர்கள் டில்லி சென்றனர். தி.மு.க., உயர்மட்ட குழு அறிவித்ததற்கு நேர்மாறான காட்சிகள் அங்கு அரங்கேறின. இதையடுத்து, காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகளை தி.மு.க., ஒதுக்கீடு செய்தது. காங்கிரஸ் கேட்ட தொகுதிகளும் தாரைவார்க்கப்பட்டன. பா.ம.க., - விடுதலைச் சிறுத்தைகள் கேட்ட தொகுதிகளாலும் உள்ளுக்குள் பிரச்னை ஏற்பட்டு, பின் சமாதானம் ஏற்பட்டது.

தி.மு.க., கூட்டணியில் இந்நிலைமை என்றால், ஆரம்பத்தில் இருந்தே பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அ.தி.மு.க., கூட்டணியிலும் குளறுபடி ஏற்பட்டது. கூட்டணிக் கட்சிகளை கலந்தாலோசிக்காமல், திடீரென 160 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அ.தி.மு.க., தலைமை. இதனால் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்த தே.மு.தி.க., மற்றும் கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர், ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர். மூன்றாவது அணி அமையும் என்ற பரபரப்பும் எழுந்தது. நிலைமை பூதாகரமாவதை உணர்ந்த அ.தி.மு.க., தலைமை, கூட்டணிக் கட்சிகளை அழைத்து சமரசம் செய்தது. அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் நடந்த நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பின், கூட்டணிக் கட்சிகள் எதிர்பார்த்த தொகுதிகள் வழங்க முடிவானது.

இரு தரப்பிலும் உள்ள அனைத்துக் கட்சிகளும், மே மாதம் 13ம் தேதி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முயற்சியிலேயே முனைந்துள்ளன. அவற்றில் எந்தக் கூட்டணியிலும் முரண்பாடு இல்லை. ஆனால், மே 13ல் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, தொங்கு சட்டசபை தான் அமையும் என இரு கூட்டணியிலும் உள்ள கட்சிகள் உறுதியாக நம்புகின்றன. அப்படி ஒரு நிலைமை ஏற்படும்பட்சத்தில், தங்கள் கையில் லகான் இருக்க வேண்டும் என்பதற்காகவே, அத்தனை கட்சிகளும், தொகுதியின் எண்ணிக்கையில் மட்டுமல்லாமல், தொகுதியின் பெயர்களையும் முடிவு செய்வதில் உறுதியாக இருக்கின்றன.

Saturday, March 19, 2011

குளறுபடியில் வாக்காளர் அடையாள அட்டை!

வாக்காளர் அடையாள அட்டைகளில் பெயர் மற்றும் ஊர் பெயர்கள் தவறாக அச்சிடப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அரசின் பல்வேறு திட்டங்களுக்கு அடையாள அட்டையாக பயன்படுத்தலாம் என்று கூறி விநியோகம் செய்யும் அட்டையில் பொறுப்பற்ற முறையில் தகவல்கள் கொடுக்கப்பட்டு இருப்பதால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்.13ம்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தேர்தலில் நிற்கின்ற கட்சிகளின் கூட்டணியில் அவ்வப்போது பரபரப்பு உருவாகி பல்வேறு மாற்றங்களும் ஏற்பட்டு வருகிறது.

இவையனைத்தும் மீடியாக்கள் கொண்டு வந்து பொதுமக்களுக்கு தெரிவிப்பதால் தேர்தல் குறித்த விஷயங்களை அறிந்து கொள்கின்றனர். ஆனால் தேர்தலில் அடிப்படையாக கருதப்படும் வாக்காளர் அடையாள அட்டை விஷயத்தில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மிகவும் கவனக்குறைவாக நடந்து கொள்வது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கி வருகிறது. ஏனெனில் தவறான முறையில் அச்சிட்டு தரும் இதே அதிகாரிகள் எதிர்காலத்தில் அரசு திட்டம் சம்பந்தமாக வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தும் போது ஏராளமான கேள்வியை கேட்க தவறுவதில்லை என்கின்றனர்.

விநியோகம் செய்த வாக்காளர் அடையாள அட்டையில் அரசு முத்திரை மறைந்தும், சாதாரணமாக அனைவரும் எளிதில் உச்சரிக்கும் கிருஷ்ணன் என்ற பெயரை ஆங்கிலத்தில் காரசனியன் என்றும், அவரது தந்தை பெயரான மணவாளன் என்பதை தமிழில் மாணவளகா என்றும், ஆங்கிலத்தில் மணவிலாக் என்றும், இதே ஆளின் மனைவி பெயரான சுசிலாராணி என்பதை தமிழில் சுசிலியாராணி என்றும், அவரது கணவர் பெயரை கரஸ்நயன் என்றும் அச்சிட்டுள்ளனர், என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலே குறிப்பிட்டுள்ள பெயர்கள் எவையுமே வாயில் நுழையாத வெளிநாட்டு பெயர்கள் அல்ல என்பதால் சரியாக அச்சிட்டு வழங்கியிருக்கலாம் என்பதே பொதுமக்களின் விருப்பமாகும். மேலும் அரசு வழங்கும் வாக்காளர் அடையாள அட்டையை தயாரிக்கும் அதிகாரிகள் தகுதியை பொறுத்தவரை குறைந்தபட்சம் பட்டதாரிகளாகவே இருக்க வேண்டும்.

அழகிரிக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை!

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மார்ச் 1-ம் தேதி அமலுக்கு வந்தது. மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் அழகிரி அரசு முறைப் பயணமாக தில்லியிலிருந்து சென்னைக்கு மார்ச் 2-ம் தேதி விமானத்தில் பயணம் செய்தார். அங்கிருந்து மார்ச் 4-ம் தேதி மதுரைக்குச் சென்று அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக பத்திரிகை செய்திகளை மேற்கோள்காட்டி தேர்தல் ஆணையத்துக்கு புகார் வந்தது.

இதுதொடர்பாக அவருக்கு விளக்கம் கேட்டு மார்ச் 5-ம் தேதி தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது. மறுநாள் இதற்கு அழகிரி பதில் அளித்திருந்தார். தான் முதல் முறையாக மக்களவை உறுப்பினரானதால் தனக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் சரிவரத் தெரியவில்லை என்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்றும் தனது விளக்கத்தில் அழகிரி தெரிவித்திருந்தார்.

முதல் முறை எம்.பி. என்பதால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டாம் என தேர்தல் கமிஷன் முடிவு செய்தது. இதையடுத்து அரசுப் பயணமாக அவர் தில்லியிலிருந்து சென்னைக்கும் அதன் பிறகு மதுரைக்கும் சென்ற வகையில் ஏற்பட்ட விமானக் கட்டணம் உள்ளிட்ட இதர பயணக் கட்டணங்கள், தங்கும் விடுதி ஆகிய செலவு தொகையை அரசுக்குத் திரும்பச் செலுத்தவேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாது அவர் கவனமாக இருக்கவேண்டும் என்று தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது.

விஜயை எச்சரித்த குஷ்பூ?

அரசியலுக்கு வந்தால் கஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அரசியல் ஆசையில் இருக்கும் நடிகர் விஜய்க்கு, நடிகை குஷ்பு எச்சரிக்கை விடுத்துள்ளார். நடிகர் விஜய் வரும் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார் என்றும், அதிமுகவுக்கு ஆதரவாக அறிக்கை மட்டுமே விடுப்பார் என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரோ... இந்த தேர்தலுக்கு பிறகு விஜய் தனிக்கட்சி தொடங்கி, முழுநேர அரசியலில் ஈடுபடுவார் என்று கூறி வருகிறார்.

இந்நிலையில் விஜய்யின் அரசியல் பிரவேசம் பற்றி சமீபத்தில் தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்ட நடிகை குஷ்பு அளித்த பேட்டியில், மக்கள் பணிகளில் ஈடுபட விரும்பும் யாரும் அரசியலில் ஈடுபடலாம். விஜய்யும் தாராளமாக வரலாம். ஆனால் சினிமா வேறு அரசியல் வேறு என்பதை உணர வேண்டும். சினிமாவில் நடிக்கும்போது ரசிகர்கள் கைதட்டுவார்கள். விசில் அடித்தும் ரசிப்பார்கள். அவர்கள் எல்லோருடைய ஓட்டும் நமக்குத்தான் விழும் என்று எதிர்பார்த்து அரசியலுக்கு வரக்கூடாது. சினிமாவை விட அரசியல் உண்மையிலேயே கஷ்டமான விஷயம்தான், என்று கூறியுள்ளார்.

நடிகை குஷ்பு திமுகவில் இணைந்த நாள் முதலே கட்சிப்பணிகளை ஆற்றத் தொடங்கி விட்டார். அவருக்கு இந்த தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட சீட் கிடைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் கடைசியில் அவருக்கு சீட் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, March 18, 2011

சூப்பர் மூன் பார்க்கலாமா!

கோலாலம்பூர்: பூமிக்கு மிக அருகில் இன்று சந்திரன் வருவதால், மிகப் பெரிய அளவில் அது தெரியும். "சூப்பர் மூன்' என்று அழைக்கப்படும் இந்த சந்திரனால் தான் பூமியில் தற்போது பல்வேறு அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன என்று பரப்பப்படும் வதந்திகள் பொய்யானவை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பூமியை சந்திரன் நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இந்த நீள்வட்டப்பாதை இரு இடங்களில் பூமிக்கு நெருக்கமாக வரும். அந்தப் பகுதியில் சந்திரன் வரும் போது வழக்கத்தை விடப் பெரிதாகத் தெரியும்.இன்று பூமியில் இருந்து மிகக் குறைந்த தொலைவான 3,56,577 கி.மீ., தொலைவில் சந்திரன் தோன்றும். அதனால், அது உருவ அளவில் சற்றுப் பெரிதாகவும், அதிக ஒளியுடையதாகவும் இருக்கும். கடந்த 18 ஆண்டுகளுக்குப் பின், இது போல சந்திரன் பூமியை நெருங்கி வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில், ஜப்பானில் நிகழ்ந்த நிலநடுக்கம், சுனாமி ஏற்பட்டது, சந்திரன் பூமிக்கு மிக அருகில் வருவதால் தான் என்ற கருத்து மக்களிடையே நிலவி வருகிறது. ஆனால், இது வழக்கமான ஒன்று என்றும், இதனால் மக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும், நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தலைவர்களுடன் ஆலோசனை? போயஸ் தோட்டத்தில்!

சென்னை : அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை தே.மு.தி.க.,வின் பண்ரூட்டி ராமசந்திரன், சுதீஸ் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தையின் போது தே.மு.தி.க., போட்டியிட விரும்பும் 41 தொகுதிகள் அடங்கிய பட்டியலை வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் கூட்டணிக் கட்சியினரிடையே தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் இருப்பதால் இன்று தொடங்குவதாக இருந்த தேர்தல் பிரசாரத்தை ஒத்திவைப் பதாக அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார். மேலும் கூட்டணிக் கட்சியினரை சமாதானப்படுத்தும்விதமாக அதிமுக இன்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

# இனிமேல் தொண்டர்களுக்காக உழைக்க வேண்டும்,இல்லை என்றால் கட்சியில் இருக்கும் அணைத்து தொண்டர்களும் வெளிய போவதற்கு வழி வகுத்துவிடும்.

கரு கலைப்பதனால் எதிர்நோக்கும் ஆபத்து?

டொரான்டோ : இந்தியா,சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெறும் கருக்கலைப்பின் காரணமாக 2030 ஆம் ஆண்டில் ஆண்களுக்கு திருமணம் முடிக்க மணப்பெண் கிடைப்பது அரிதாகும் என கனேடியன் மெடிக்கல் அசோசியேசன் ஜெர்னலில் வெளியான ஆய்வு தெரிவிக்கிறது.

20 சதவீதம் ஆண்களுக்கு மணப்பெண் கிடைக்கமாட்டார்கள் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது. மேற்கண்ட நாடுகளில் 105 ஆண் குழந்தைகள் பிறக்கும் பொழுது 100 பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கின்றனர். இது சில கொரிய நகரங்களில் 125 வரை எட்டியுள்ளது.

கர்ப்பத்திலிருக்கும் சிசு ஆணா? பெண்ணா? என்பதுக் குறித்து பரிசோதனைச் செய்யும் ஸ்கேனிங் செண்டர்கள் கட்டுப்பாடுகளில்லாமல் செயல்படுவதால் பெண் சிசுக்கொலை அதிகரிப்பதற்கு காரணமாகும்.

Thursday, March 17, 2011

கலைஞரும், காப்பிடு திட்டமும்!

தமிழக அரசின், கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் இருந்து, 30 சதவீத தனியார் மருத்துவமனைகள் விலகிச் செல்வதாக, கடந்த 11ம் தேதி தேர்தல் களத்தில் செய்தி வெளியானது. இதுதொடர்பாக, அத்திட்டத்தைச் செயல்படுத்தி வரும் ஸ்டார் ஹெல்த் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனம் அனுப்பியுள்ள விளக்கத்தின் சாராம்சம்: காப்பீட்டுத் திட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்று வரை, சொந்த காரணங்களுக்காக விலகியுள்ள ஓரிரு மருத்துவமனைகள் தவிர, எந்த மருத்துவமனையும், திட்டத்தின் குறைபாடுகளால் விலகியதில்லை.

தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ இதுவரை, 105 மருத்துவமனைகள் விலக்கி வைக்கப்பட்டுள்ளன. அதன் பின், அவை அளித்த விளக்கத்தின்படி, 72 மருத்துவமனைகள் மீண்டும் இத்திட்டத்தில் இணைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை குறை கூறி, மருத்துவமனைகள் விலகியதாக கூறுவது ஏற்புடையதல்ல. இவ்வாறு ஸ்டார் ஹெல்த் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், சேலம் எஸ்.பி.எம்.எம்., மருத்துவமனை இயக்குனர் தேவராஜன் கூறியதாவது: தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் செயல்பாடு எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. அத்துடன், சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிபந்தனைகள் புரிவது இல்லை. "காப்பீட்டுத் திட்ட அட்டை இருந்தால் போதும்; சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்' என, விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால், நோயாளிகளுக்கு முதல்கட்ட பரிசோதனைகளான, எக்ஸ்-ரே, ஸ்கேனிங், ரத்தப் பரிசோதனை உள்ளிட்டவற்றுக்கு செலவிடப்படும் தொகைகளை, இத்திட்டத்தில் சேர்க்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இன்சூரன்ஸ் நிறுவனத்தினரே, குறிப்பிட்ட தொகையை நிர்ணயம் செய்து, அந்தத் தொகைக்கு மேல் ஆகும் செலவை ஏற்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர். "ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு, இந்நிறுவனத்தின் அனுமதி பெற்ற பின்னரே அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்' எனவும், மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அவர்களின் முன்அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்படும் சிகிச்சைக்கு, இன்சூரன்ஸ் நிறுவனம் பொறுப்பேற்பதில்லை. அத்துடன், குறிப்பிட்ட நாள் மட்டுமே மருத்துவமனையில் தங்கி இருக்க வேண்டும் எனவும் இன்சூரன்ஸ் நிறுவனம் விதிமுறைகளை வகுத்துள்ளது. அறுவை சிகிச்சை முடித்த பின், இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு மருத்துவமனை தரப்பில் அனுப்பி வைக்கப்பட்ட செலவு, "பில்'லில், குறிப்பிட்ட தொகையை மட்டுமே நிறுவனம் வழங்குகிறது. இதனால், மீதி தொகையை நோயாளிகளிடம் இருந்து பெற வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், எட்டு மாதங்களுக்கு முன்பே இத்திட்டத்தில் இருந்து விலகி விட்டோம்.

மூன்றாவது அணி உறவாக காரணம், ஜெயலலிதா?

கூட்டணியில் இருந்து விலக்கியதன் மூலம் மதிமுகவுக்கு புதிய வாசலைத் திறந்து வைத்துள்ளார் ஜெயலலிதா என்றார் மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலர் நாஞ்சில் சம்பத். அதிமுக கூட்டணியில் இருந்து விலக்கியதன் மூலம் மதிமுகவுக்கு புதிய வாசலைத் திறந்து வைத்த அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெரும்பான்மை இல்லாத அரசாக வருவதற்கு மதிமுகதான் காரணம். வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில் மதிமுக உள்ளது. நாங்கள் ஜாதி கட்சி அல்ல. கட்டுமானத்தில் திமுக, அதிமுகவைவிட பலமாகவே உள்ளோம். கூட்டணியில் இருந்தாலும், தனித்து இருந்தாலும் தனித்தன்மையை நாங்கள் இழக்கவில்லை. எதிர்காலத்தில் தமிழக முதல்வராக வைகோ வருவார். அவரை முதல்வராக முன்னிறுத்தும் வாய்ப்பு எங்களுக்கு இப்போது கிடைத்துள்ளது. மதிமுகவை வெளியேற்றியதன் மூலம் அதிமுக தொண்டர்கள் சோர்வுக்கு ஆளாகியுள்ளனர்.

கூட்டணியில் பல கட்சிகளை வைத்துக் கொண்டு அவர்களை கலந்தாலோசிக் காமல் வேட்பாளர் பட்டியலை அறிவித்தன் மூலம் தன்னுடைய முடிவை தானே தேடிக்கொண்டுள்ளார். இதனால், மதிமுக களைத்துப் போகாது. நாங்கள் வெண்கலப் பானை. கீழே விழும் சப்தம் கேட்கும்; ஆனால், உடையாது. வைகோவின் குரல் சட்டப்பேரவையில் ஒலிக்கக் கூடாது என்பதற்காகவே, எங்களை கூட்டணியில் இருந்து விலக்கியுள்ளார் ஜெயலலிதா.

திமுக ஆட்சியை அகற்றவும், அதிமுக ஆட்சி வராமல் தடுக்கவும் நாங்கள் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வோம். 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம். மூன்றாவது அணி அமைந்தால் நாங்கள் இடம் பெற வாய்ப்பு உள்ளது. ஆனால், அந்த அணிக்கு வைகோவை தலைமையேற்ற வைக்க வேண்டும். மற்றவர்கள் தலைமையில் நாங்கள் கூட்டணியில் இடம் பெற முடியாது. மதிமுகவின் பயணம் எந்தத் திசையை நோக்கி இருக்க வேண்டும் என்பது குறித்து சனிக்கிழமை (மார்ச் 19) சென்னையில் நடைபெறும் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுப்போம்' என்றார் அவர்.

காங்கிரஸ்-திமுக இழுபறியில்??

காங்கிரஸ்- திமுக கட்சிகளுக்கு இடையில் புதுச்சேரியில் நடந்த பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை நீடிக்கிறது.

இரண்டு கட்சிகளும் எந்த வகையிலும் விட்டுக்கொடுத்துச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. புதுச்சேரியில் இருப்பது மொத்தம் 30 தொகுதி. இதில் காங்கிரஸ் 20 தொகுதிகளையும், திமுக 13 தொகுதிகளையும் கேட்கின்றன. இதைக் குறைத்துக் கொள்ள புதுச்சேரியைச் சேர்ந்த இக் கட்சிகளின் தலைவர்கள் முன்வரவில்லை. இதைத் தவிர இக் கூட்டணியில் உள்ள பாமக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கும் தொகுதிகள் கொடுத்தாக வேண்டும். இது போன்ற சூழ்நிலையில் தங்கள் கட்சித் தலைமையிடம் இது தொடர்பாக கலந்து ஆலோசித்து பிறகு முடிவைத் தெரிவிப்பதாக இரண்டு கட்சித் தலைவர்களும் கூறி சென்றுவிட்டனர்.

தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் இரண்டு கட்சிகளுக்கும் தொகுதி எண்ணிக்கை முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிக்கும் சூழ்நிலை வந்துவிட்டது. அதனால் இப்போது இந்த இரண்டு கட்சியின் மேலிடங்களும் புதுச்சேரியின் பிரச்னையைப் பேசத் தொடங்கியுள்ளதாகவும், இன்னும் 2 நாளில் சுமுக முடிவு கிடைக்கும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இணையதளம் ஓர் ஒற்றன்! அசாஞ்சே!!

புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக மாணவர்களிடையே அசாஞ்ச் பேசியதாவது : இன்டர்நெட் குறிப்பாக, பேஸ்புக் போன்ற சமூக இணையதளங்கள், ரகசியங்களை திரட்ட, அரசுகளுக்கு நல்ல வாய்ப்பு அளிக்கின்றன.

மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பே, கெய்ரோவில் பேஸ்புக் புரட்சி வெடித்து இருக்க வேண்டும். முக்கிய பங்கேற்பாளர்களை திரட்ட, பேஸ்புக் உதவியாக இருந்தது. இதன் பின்னர் இவர்கள் அடிக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். அரசாங்கம் என்ன செய்கிறது என்பதை தெரிவிக்கும் திறன், இன்டர்நெட்டுக்கு உள்ளது. உலகம் இதுவரை கண்டிராத அளவிற்கு, இன்டர்நெட் ஒரு உளவு இயந்திரமாக செயல்பட்டு வருகிறது. கொடுங்கோல் ஆட்சிகளை அழிக்க தொழில்நுட்ப வளர்ச்சி உதவுகிறது. பேச்சு சுதந்திரத்துக்கோ அல்லது மனித உரிமைக்கோ தொழில்நுட்பம் ஆதரவானது இல்லை. அரசாங்கங்களை உளவு பார்க்க உதவக் கூடியது. அரபு நாடுகளில் எழுந்துள்ள புரட்சிக்கு என்னுடைய இணையதளம் உதவியாக இருந்தது. அமெரிக்க தூதரக அதிகாரிகளின் ஆவணங்கள் வெளியானது மூலம் டுனீசியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இவ்வாறு அசாஞ்ச் பேசினார்.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!