Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, January 23, 2011

இலங்கை கடற்படைக்கு சாவு மணி என்று அடிக்கப்படும்?

வேதாரண்யம், ஜன. 23: நாகை மாவட்டம், கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தினர். வேதாரண்யம் பகுதி மீனவர் ஜெயக்குமாரின் கழுத்தில் கயிற்றினால் சுருக்கிட்டு இழுத்துக் கொன்றிருக்கின்றனர். பின்னர், படகில் பிரேதத்தை அப்படியே போட்டுவிட்டு சென்றுவிட்டனர்.

கடலில் குதித்து நீந்திக் கொண்டிருந்த ராஜேந்திரனும், செந்திலும் ஜெயக்குமாரின் சடலத்துடன் கரை திரும்பி உள்ளனர். ஜெயக்குமாரைக் கொன்ற இலங்கை கடற்படையின் காட்டுமிராண்டித்தனமான கொடுஞ் செயலுக்கும், கடிதம் எழுதுதல், தந்தி அடித்தல் போன்ற கபட நாடகங்களை நடத்தியே, தமிழக மீனவர்கள் அன்றாடம் கொல்லப்படுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் முதல்வர் கருணாநிதிக்கும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது என்பது தொடர் கதையாக ஆகிவிட்டது. இலங்கை அரசை இந்திய அரசு கடுமையாக எச்சரிக்காததே இது போன்ற அவல நிலைமைக்கு காரணம். இது போன்ற மனிதாபிமானமற்ற செயல்கள் இலங்கை கடற்படையினரால் இனி நடத்தப்பட்டால் இலங்கை அரசு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்ற வகையில் மத்திய அரசின் நடவடிக்கை அமைய வேண்டும்.

அரசியல் மட்டுமே, கேப்டன்!

நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான விஜயகாந்த் ‌சினிமாவுக்கு முழுக்கு போட்டுள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடை‌பெறவிருப்பதைத் தொடர்ந்து அரசியலில் முழு கவனம் செலுத்துவதற்காக சினிமாவுக்கு முழுக்கு போட்டிருக்கிறார்.

சினிமாவையும், அரசியலையும் தமது இரண்டு கண்ணாக பார்த்தவர் எம்.ஜி.ஆர். அவரைபோலவே வரவேண்டும் என்ற நோக்கத்தில் அரசியல் களம் புகுந்துள்ள விஜயகாந்த் நடிப்பு, அரசியல் என்றில்லாமல் சமீபத்தில் வெளியான விருதகிரி படம் மூலம் இயக்குநர் அவதாரமும் எடுத்தார். ஆனால் விருதகிரி படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் தமது அடுத்தபடத்தையும் இவரே இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாயின. இதற்கான அறிவிப்பு வெளிவர இருந்தநிலையில் அதனை தள்ளிப்போட்டுள்ளார் கேப்டன். இதுகுறித்து விசாரித்தபோது, தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தற்காலிகமாக தமது அடுத்தபட படத்திற்கான வேலையை தள்ளிபோட்டதாக தெரிகிறது.

தற்போது அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ள விஜயகாந்த், எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் சேலத்தில் நடந்த மாநாட்டில் தி.மு.க., அரசை தாக்கி பேசினார். மேலும் முதல்வர் கருணாநிதி போட்டியிடும் தொகுதியில், அவரை எதிர்த்து போட்டியிடப் போவதாகவும் அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சிஎன்என்.

வருகிறது தடா?

ஜெனீவா : பிட்சா, பர்கர் போன்ற, "ஜங்க் புட்' உணவு விற்பனையைத் தடை செய்வது குறித்து, விரைவில் முடிவெடுக்கப்படும் என, ஐ.நா.,வின் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. உலகளவில் பிட்சா, பர்கர், நூடுல்ஸ் போன்ற விரைவு வகை உணவுகளை உண்பதன் மூலம், நான்கு கோடி குழந்தைகள், அதிக எடை மற்றும் குண்டாக இருப்பதாக, ஐ.நா.,வின் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்த வகை உணவுகளை உண்பதன் மூலம், கட்டுப்படுத்த முடியாத அளவில் உடலில் கொழுப்பு அதிகரித்து, அதனால், ஆண்டுதோறும் எதிர்பாராத மரணங்களும் நிகழ்கின்றன.இதனால், இவ்வகை உணவுகள் விற்பனையைக் கட்டுப்படுத்துவது அல்லது தடை செய்வது குறித்து, இந்தாண்டு செப்டம்பர் 19 மற்றும் 20 தேதிகளில் நடக்கும் ஐ.நா., பொதுக் குழுவில் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்தாலோசிக்க உள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

Saturday, January 22, 2011

அமெரிக்க விஞ்ஞானிகள் பரபரப்பு!

வேற்றுக் கிரகவாசிகள் (ஏலியன்) பூமிக்கு வந்து மனிதர்களுடன் சண்டையிடுவது போல் ஹாலிவுட் திரைப்படங்களில் நாம் பார்ப்பது விரைவில் நிஜமாக வாய்ப்பு உண்டு, என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க விண்வெளி அமைதி நடவடிக்கைகள் கமிட்டி சார்பில் "ஏலியன்கள் பூமியை தாக்கினால் என்ன செய்வது' என்பது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்படி பூமிக்கு வரும் ஏலியன்கள் வன்முறை வெறியர்களாக இருப்பர் எனவும், இங்குள்ள இயற்கை வளங்களை சுயநலம் காரணமாக சுரண்டுவர் எனவும் அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

அறிவியல் முதல் மதம் வரையில் உள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்தி, பூமியை தாண்டியுள்ள கிரகங்களில் ஏலியன் போன்ற உயிரினங்கள் ஏதேனும் இருக்கிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்படி ஏலியன் அல்லது பிற உயிரினங்கள் இருந்தால், அவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான சாத்தியக்கூறுகளையும் அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

அவ்வாறு ஏலியன்கள் பூமிக்கு வரும்போது, நாம் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் அவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பூமிக்கு வரும் ஏலியன்கள் வன்முறையில் ஈடுபட்டால், அவர்களை விண்வெளி அமைதி நடவடிக் கைகளில் ஈடுபடுவதற்காக, அமெரிக்கா சார்பில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள பிரிவினர் சமாளிப்பர் எனவும்; உலக நாடுகள் அனைத்தும் இந்த விஷயத்தில் அரசியல் மற்றும் ஜாதி மதபேதம் ஏதும் இல்லாமல் ஒருங்கிணைந்து செயல்படுவதோடு, இதற்காக சர்வதேச கண்காணிப்புக் குழு ஒன்றையும் ஏற்படுத்த வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்க விஞ்ஞானிகளின் கருத்து, அறிவியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கேம்பிரிட்ஜ் பல்கலை விஞ்ஞானிகள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பரிணாமவியல் பேராசிரியர் சைமன் கான்வே மோரிஸ் கூறும்போது, "பூமியை தாண்டியுள்ள இந்த பிரபஞ்சத்தில் "ஏலியன்' என குறிப்பிட்ட யாரும் இருக்க வாய்ப்பில்லை. மற்ற கிரகங்களில் உயிரினங்கள் இருந்தால், அது டார்வின் கொள்கை அடிப்படையில் தான் தோன்றி வளர்ச்சி பெற்றிருக்க முடியும்.ஹாலிவுட் படங்களில் வருவது போல், விகாரமான தோற்றங்களில் இருக்க வாய்ப்பில்லை. மேலும், அவர்கள் வன்முறையில் ஈடுபட்டு, பூமியில் உள்ள வளங்களை ஒருபோதும் சுரண்டவும் வாய்ப்பில்லை. ஏலியன் குறித்த அச்சம் தேவையற்றது' என்றார்.

காதல்,சண்டைக்கு முக்கியத்துவம், விஜய்

தொடர்ந்து ஆக்ஷன் படங்களாக நடித்துவந்த விஜய் மீண்டும் "பூவே உனக்காக", "காதலுக்கு மரியாதை" படங்களின் பாணியில் சென்டிமெண்ட் கலந்த ஒரு காதல் கதையில் நடிக்கிறார். வழக்கமான பஞ்ச் டயலாக்குகள் இல்லை. அதே நேரத்தில் அசினிடம் விஜய் பேசும் காதல்மொழிகள் நெஞ்சம் தொடுமாம்.

காதல்படம்தான் என்றாலும் சண்டைக்காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக் கிறார்கள். பாங்காங்கில் பரபரப்பான சண்டைக்காட்சி ஒன்று படமாக்கப் பட்டிருக்கிறது. சண்டைக்காட்சியில் டூப் இல்லாமல் விஜய் நடித்ததைப் பார்த்து அசந்துபோன மார்ஷியஸ் ஆர்ட்ஸ் மாஸ்டர் அவரைப் பாராட்டி கேடயம் ஒன்றை வழங்கி இருக்கிறார். மேட்டுப்பாளையத்தில் ஓடும் ரயில் ஒன்றிலும் சில சண்டைக்காட்சிகளைப் படமாக்கியுள்ளனர். இதிலும் டூப் போடாமல் மொத்த யூனிட்டையும் அலற அடித்திருக்கிறார் விஜய்.

புனே'யில் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் ஒரு பாடலையும், மலேசியாவில் நடுக்கடலில் ஒரு பாடலையும் படமாக்கி இருக்கிறார்கள்.

ஒரிஜினல் பாடிகாட் படத்தில் நாயகியாக நடித்திருந்தது நயன்தாரா. என்றாலும் ரீமேக்கில் விஜயோடு ஜோடி சேர்ந்திருப்பது அஸின். படத்தின் முக்கியமான மற்றொரு பலம் ராஜ்கிரண். டப்பிங் பேசும்போது அவரே கண்கலங்கிவிட்டார் என்கின்றன தகவல்கள்.

படத்தின் கடைசி இருபது நிமிடங்களும் "காதலுக்கு மரியாதை" படத்தில் இடம்பெற்றதைப்போல உள்ளத்தை உருக்கும்வகையில் எடுக்கப்பட்டுள்ளதாம்.

நடிப்பு: விஜய், அஸின், ராஜ்கிரண், வடிவேலு இசை: வித்யாசாகர், இயக்கம்-சித்திக்.

நடிகர் விஜய், இயக்குநர் சித்திக் இருவரும் மீண்டும் இணைந்திருக்கும் படம். ப்ரெண்ட்ஸ் படத்தில் நடித்த வடிவேலுவும் இந்தக் கூட்டணியில் இடம்பெற்றிருப்பது கூடுதல் பலம்.

நம் மன்னர்கள் வெல்வார்களா? இன்று!

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என் முன்னிலையில் இருந்தது.

போர்ட் எலிசபெத்தில் நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில், முதலில் பேட் செய்த தென் ஆப்ரிக்க அணி 7 விக்கெட்டுக்கு 265 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி சொதப்பியது. ரோகித் சர்மா(1), யுவராஜ்(12), ரெய்னா(20), தோனி(2), யூசுப் பதான்(2) ஏமாற்றினர். துணிச்சலாக போராடிய விராத் கோஹ்லி அரைசதம் கடந்து ஆறுதல் அளித்தார். இந்திய அணி 32.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. ஆட்டத்தை தொடர முடியாததால், "டக்வொர்த் - லீவிஸ்' விதிமுறைப்படி இந்திய அணி, தென் ஆப்ரிக்காவிடம் 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தொடர் 2-2 என சம நிலையை எட்டியது. விராத் கோஹ்லி 87 ரன்களுடன் அவுட்டகாமல் இருந்தார்.

தென் ஆப்ரிக்க அணியின் பலம் வேகப்பந்து வீச்சுதான். இதுவரை 11 விக்கெட் வீழ்த்திய டிசோட்சபே, மார்கல் (8), ஸ்டைன் (6) ஆகியோர் மிரட்டலான பார்மில் உள்ளனர். சுழலில் போத்தா, பீட்டர்சன், டுமினியும் அவ்வப்போது அசத்துவது அணியின் வெற்றிக்கு உதவியாக உள்ளது.

பைனல் போன்ற இன்றைய போட்டியில், சாதிக்க தோனி தலைமையிலான இந்திய அணியும், சொந்த மண்ணில் சோகத்தை தவிர்க்க, தென் ஆப்ரிக்க அணியும் போராடும் என்பதால், கடுமையான போட்டியை எதிர்பார்க்கலாம்.

தோனி ராசி,ஒருநாள் அணியின் கேப்டனாக தோனி பொறுப்பேற்ற பின், அன்னிய மண்ணில் நடந்த இரு அணிகள் இடையிலான ஒருநாள் போட்டித் தொடரில், இந்திய அணி தான் கோப்பை வென்றுள்ளது. இலங்கையில் இரு முறை 3-2, 4-1 (2008-2009), நியூசிலாந்தில் 3-1 (2009), வெஸ்ட் இண்டீசில் 2-1 (2009) என, தொடர்ந்து நான்கு தொடர்களில் வெற்றிக் கோப்பையுடன் திரும்பியது. இம்முறை, இந்த ராசி தொடருமா?
இம்மைதானத்தில் இதுவரை.

இந்தியாவுக்குக் சாதகமான மைதானமாக செஞ்சுரியனை குறிப்பிடலாம். இங்கு பங்கேற்ற 9 போட்டிகளில் 4ல் வெற்றி, 4ல் தோல்வியடைந்தது. ஒரு போட்டிக்கு முடிவில்லை. இதில் தென் ஆப்ரிக்காவுடன் பங்கேற்ற 3 போட்டியில் 2ல் வென்றுள்ளது.

இந்தியா அதிகபட்சமாக 276/4 (பாகிஸ்தான், 2003) ரன்கள் எடுத்தது. தென் ஆப்ரிக்க அணி அதிகமாக 392/6 (பாகிஸ்தான், 2007) ரன்கள் எடுத்துள்ளது.

செக்ஸ் மாத்திரை 'வயகரா' ஆய்வில் தகவல்!

உடலுறுவுக்கு ஊக்கம் அளிக்கும் மிக பிரபலமான மாத்திரையான 'வயகரா' அதை உட்கொள்ளும் பாதி பேருக்கு பயனளிப்பதில்லை என்று லண்டனில் பிரிட்டிஷ் சொஸைட்டி ஆப் செக்ஸ்வுல் மெடிசைனின் முன்னாள் தலைவரும், பிரிமின்கம் உள்ள குட் ஹோப் என்ற மருத்துவமனையின் யுரோலோஜிஸ்ட் நிபுணருமான டாக்டர் ஜியோப்ஃபிரே தெரிவித்துள்ளார்.

உடலுறவில் நாட்டம் இருந்தும் ஆண்குறியில் விறைப்பு தன்மை குறைந்தவர்கள் உட்கொள்ளும் மாத்திரை வயகரா. இந்த மாத்திரை பல பெயர்களில் வந்தாலும் 'வயகரா' என்ற மூல வேதியியல் கொள்கை பெயரில் அறியப்படுகிறது. இது ஆணுறுப்பில் உள்ள நொதியம் (enzyme) என்னும் புரதப் பொருளில் வேதியியல் வினைகளை விரைவாக செய்யத்தூண்டி ஆண் உறுப்பை விரைக்க செய்வதால் உலகம் முழுவதிலும் விரைப்பு தன்மை குறைந்த ஆண்களால் பயன்படுத்தப்படுகிறது. வருடத்திற்கு பல மில்லியன் டாலருக்கு விற்பனை ஆகும் இந்த மாத்திரை பாதி பேருக்கு வேலை செய்வதில்லை. வெறும் 'வயாகரா'வினால் மட்டும் அவர்களுது விரைப்பு தன்மை யை அதிகரிக்க முடியாது என்று கூறியுள்ளனர்.

ஒரளவுக்கு ஏற்கனவே உடலுறவுக்கு தேவையான ஹார்மோன்கள் இருப்பவர்களுக்கு தான் இது வேலை செய்வதாக கூரியுள்ள அவர் இதை பயன்படுத்துவதற்கு பதிலாக இரத்த பரிசோதனை செய்து 'டெஸ்டோஸ்டிரோன்' (testosterone) என்னும் ஹார்மோன் எண்ணிக்கை பொருத்து தகுந்த மாத்திரை மற்றும் அரைத்திண்மக் கரைசல் போன்ற விலை குறைந்த வழிமுறைகளையே பின்பற்றலாம் என்று கூறியுள்ளார்.

ஆகவே செக்ஸ் குறைபாடு உள்ள அனைவரும் 'வயகரா' மாத்திரை உட்கொண்டால் பூரன உடலுறவு கொள்ளலாம் என்ற நம்பிக்கை கொள்வது தவறு என்று அவர் டெய்லி மெயில் என்ற ஆங்கில பத்திரிகையில் பேட்டி அளித்துள்ளார்.

நல்ல எதிர்காலத்தை அமைக்கும் தொழிற்கல்வி

இந்தியாவில் சுற்றுலா துறை வெகுவேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் ஹோட்டல்களின் எண்ணிக்கையும் பெருகுகிறது. இதனால் நட்சத்திர ஹோட்டல்களில் சமையல் பணிபுரியும் "செப்களின் தேவையும் உயர்ந்துள்ளது.

"கேட்டரிங்" எனப்படும் சமையல் பணி தற்போது அதிக சம்பளம் தரும் வேலையாக உள்ளது. நட்சத்திர ஹோட்டல்களில் பணிபுரியும் போது வெவ்வேறு வகையான உணவுகளை, பல்வேறு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்றபடி சமைத்து வழங்கும் வாய்ப்பு கிடைக்கிறது. உணவைருசியாக சமைத்தால் மட்டும் போதாது. அதை பரிமாறும் முன் சிறப்பாக "டிசைன்" செய்து பரிமாற வேண்டியது அவசியம். சமையலிலும் கிரியேட்டிவிட்டியை பயன்படுத்துபவரே சிறந்த "செப்" ஆக முடியும். தனியாக "கேட்டரிங்" மட்டும் படிப்பதை விட ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பதே சிறந்தது. ஹோட்டல் பற்றிய முழுமையான அறிவை இதன் மூலம் பெற முடியும்.

"செப்" ஆக பிரகாசிக்க வேண்டுமெனில்

1. கடினமாக உழைக்க தயாராக இருக்க வேண்டும்.

2. சோதனை முயற்சிகளை கைவிட கூடாது.

3. வெவ்வேறு வகையான வாடிக்கையாளர்களை கையாள பொறுமை அவசியம்.

4. சுத்தத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

இந்தியாவில் மக்கள் தொகையும், வருமானமும் அதிகரித்த படி இருக்கிறது. எனவே உணவுக்கான தேவை எப்போதும் குறையப்போவதில்லை. குறிப்பாக கணவன், மனைவி இருவரும் வேலை செய்யும் சூழல் இருப்பதால் இன்று ஹோட்டல்களை நாடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புதிதாக டிரைனி "செப்"ஆக பணிபுரிபவர்களுக்கே ரூ. 5 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. திறமைக்கு ஏற்றபடி ஒரு வருடத்தில் சம்பளத்தை 15 ஆயிரமாக கூட அதிகரிக்கின்றனர்.

ஹோட்டல்களில் மட்டுமின்றி கப்பல்கள், கிளப்புகள், ஆஸ்பத்திரிகள், "பாஸ்ட் புட்"விடுதிகள் என பல இடங்களில் "செப்"கள் பணியாற்றலாம். ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து உள்ளதால், "செப்"கள் சத்தான உணவுவகைகளையே சமைக்க வேண்டும்.

"செப்" ஆக சாதிக்க வேண்டுமெனில் கல்வித்தகுதி மட்டும் போதாது. அனுபவ அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். நட்சத்திர ஹோட்டல்களில் "அப்ரன்டீஸ் செப்" ஆக நுழைபவர்கள், "எக்ஸ்கியூட்டிவ் செப்" தலைமை ஏற்கும் முன் பல படிகளை கடக்க வேண்டும். 10 முதல் 12 ஆண்டுகள் வரை கடினமாக உழைக்க தயாராக இருப்பவர்கள்லட்சகணக்கில் சம்பாதிக்க முடியும்.

இந்த துறையில் உள்ள சாதகங்கள்

1. பெரிய ஹோட்டல்களில் பணிபுரிய வாய்ப்பு கிடைப்பதால் முக்கிய மனிதர்களில் பழக்கம் கிடைக்கும்.

2. வெளிநாடுகளில் மிகவும் மதிக்கப்படும் ஒரு துறையாக இது உள்ளது.

3. சமையல் செய்வதால் மனஅழுத்தம் குறைகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

சமையலில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருப்பது உண்மை.

சதாம் ஹுசைனின் நாவல் திரைப்படமாகிறது

லண்டன், ஜன.22 : முன்னாள் ஈராக் அதிபரும், கைக்கூலிகளால் தூக்கிலிடப்பட்ட சதாம் ஹுசைன் எழுதிய நாவல் ஹாலிவுட்டில் திரைப்படமாக தயாரிக்கப்படவிருக்கிறது.

சதாமின் 'ஸபீபாவும் மன்னரும்' என்ற காதல் நாவலை பாரமவுண்ட் நிறுவனம் திரைப்படமாக தயாரிக்கிறது.

2000 ஆம் ஆண்டு வெளியான இந்நாவல் சாதாரண பெண்ணான ஸபீபாவுடன் மத்திய கால ஆட்சியாளர் ஒருவர் காதல் வயப்படுவதை கூறுவதாகும். இந்நூல் அதிகளவில் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

பாரமவுண்ட் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் பிரபல நடிகை சச்சா பரோன் கோஹெனை நடிக்க வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக சன் ஆன்லைன் தெரிவிக்கிறது.

'ப்ரூனோ' 'பாரக்' திரைப்படங்களின் இயக்குநர் லாரி சார்ல்ஸ் இத்திரைப்படத்தை இயக்கவிருக்கிறார்.

மாத்யமம்.

Friday, January 21, 2011

மலுஞ்சு போச்சு ஆபாச சி டி!

கல்லூரிகள் நிரம்பிய கோவை நகரில் ஆபாச "சிடி' புழக்கம் அதிகரித்துள்ளது. வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்து தனியார் விடுதிகள், வீடுகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கு, ஆபாச "சிடி'க்கள் "டோர் டெலிவரி' செய்யப்படுகின்றன. இதற்கான ஏஜன்ட்கள் மற்றும் "சப்ளை பாய்'கள் பெருகியுள்ளனர். ஒருமுறை சப்ளை செய்த "சிடி'யை இரண்டு நாள் கழித்து திரும்ப பெற்றுக்கொள்ளும் ஏஜன்ட்கள், மாதம் முழுவதும் 10 முதல் 15 "சிடி'க்களை சப்ளை செய்கின்றனர். இதற்கான கட்டணமாக மாதம் ரூ.200 வரை வசூலிப்பதாக கூறப்படுகிறது. ஆபாச "சிடி' தேவை அதிகரித்துள்ள நிலையில் கோவை நகரில் ஆபாச "சிடி' மற்றும் புதுப்பட "சிடி'யை நகலெடுப்போரும் பெருகியுள்ளனர். நாளொன்றுக்கு நகரில் மட்டும் 20 ஆயிரம் "சிடி' நகலெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. பீளமேடு, சரவணம்பட்டி, கரும்புக்கடை பகுதிகளில் "சிடி' நகலெடுப்பு மையங்கள் ரகசியமாக செயப்படுகின்றன.

மணல் கடத்தல், ரேஷன் அரிசி கடத்தல், விபச்சார விடுதி நடத்துதல், லாட்டரி வியாபாரம், ஆபாச "சிடி' தயாரித்தல் உள்ளிட்ட குற்றங்கள் மலிந்துவிட்டன. கிரிமினல்களுடன் கைகோர்த்து மாமூல் பெறும் போலீஸ் அதிகாரிகளை மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினர் வேடிக்கை பார்ப்பது, வியப்பாக உள்ளது.

மாநகர் மற்றும் புறநகர் போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றும் இன்ஸ் பெக்டர்களில் பலர் லஞ்ச முறைகேடுகளில் ஊறித்திளைக்கின்றனர். கோவை மாநகர போலீஸ் எல்லைக்குள் குனியமுத்தூர், செல்வபுரம் பகுதிகளில் இருந்து அதிகளவில் ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. பல்வேறு பகுதி ரேஷன் கடைகளில் அரிசியை சேகரிக்கும் ஏஜன்ட்கள் வீடு, குடோன்களில் பதுக்கி கேரளாவுக்கு கடத்துகின்றனர். சரக்கு வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் கடத்தல் நடக்கிறது. கோவை நகரைச் சேர்ந்த சீனி, குருவையா, சங்கரன், உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், உள்ளூர் ஸ்டேஷன் போலீசாருக்கு மாதம் 3,000 முதல் 10 ஆயிரம் ரூபாயும், உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு 6,000 ரூபாய் வரையும் மாமூல் தருகின்றனர்.

ஸ்டேஷன் ரைட்டர்கள் மற்றும் ஏஜன்ட்கள் மூலமாக இன்ஸ்பெக்டர்கள் பணம் வசூலிக்கின்றனர். உணவுக்கடத்தல் தடுப்பு போலீசாரை பொருத்தவரை, கடத்தல் தடுப்பு நடவடிக்கையை இரண்டாம் பட்சமாகவே மாற்றிவிட்டனர்; முதல் பணியே மாமூலாக மாறிவிட்டதால், ரேஷன் அரிசி கடத்தல் மதுக்கரை, வாளையார், வேலந்தாவளம், க.க.,சாவடி வழியாக வெளிப்படையாக நடக்கிறது.

கோவை நகரில் சிங்காநல்லூர், பீளமேடு, சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விபச்சாரம் நடக்கிறது. சென்னையில் விபச்சார தடுப்பு பிரிவு போலீசாரால் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பிரபல பெண் புரோக்கர், தற்போது ஜாமீனில் வெளிவந்து கோவை, பீளமேடு ஏர்போர்ட் பகுதியில் விபச்சார விடுதி நடத்துகிறார். அதே போன்று, இதற்குமுன் லாட்டரி வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த சுரேஷ் என்ற நபர், தற்போது சரவணம்பட்டியில் விபச்சார விடுதி நடத்துவதாக கூறப்படுகிறது. வெளிமாநில இளம் பெண்களை அழைத்து வந்து விபச்சாரம் நடத்தும் இவருடன் சரவணம்பட்டி போலீசார் மிக நெருக்கம். மாதம் 20 ஆயிரம் ரூபாய் மாமூல் பெற்று விடுதிக்கு "லைசென்ஸ்' வழங்கியுள்ளனர். சிங்காநல்லூர் பகுதியிலும் விபச்சார விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய காலனி, திருநகரில் நேற்று முன்தினம் ரெய்டு நடத்திய போலீசார், ஒரு பெண் மற்றும் நான்கு ஆண்களை கைது செய்தனர்; பல பெண்களை தப்பவிட்டு விட்டனர். இப்போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள் இன்னும் இரண்டு விபச்சவிடுதிகள் செயல்படுவதாக கூறப்படுகிறது.

மதுக்கடைகளில் மாமூல்: "டாஸ் மாக்' மதுக்கடைகள் காலை 10.00 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10.00 மணிக்கு மூடப்பட வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதிகாலையிலேயே கடைகள் திறக்கப்பட்டு இரவு 10.00 மணிக்கு பிறகும் பல பகுதிகளில் மது வியாபாரம் நடக்கிறது. கடைகள் மட்டுமின்றி, பார்களும் எந்த விதிமுறைகளுமின்றி செயல் படுகின்றன, கடை ஒன்றுக்கு மாதம் தோறும் 5,000 ரூபாய் வரை மாமூல் வசூலிக்கின்றனர் சில இன்ஸ்பெக்டர்கள்.

விஜய்யின் மனக்குமுறல் பேட்டி!

எத்தனையோ படங்களுக்கு சி்க்கல்கள் வந்திருக்கிறது; ஆனால் காவலனுக்கு கொடுக்கப்பட்டு வரும் பிரச்னைகள் புதிய அனுபவமாக இருக்கிறது. அந்த பிரச்னைகளுக்கு காரணம் யார்? அது எங்கிருந்து வருகிறது? யார் தூண்டி விடுகிறார்கள்? எதனால் நெருக்கடி கொடுத்தார்கள்? என்பது எனக்கு தெரியவில்லை என்று நடிகர் விஜய் கூறியுள்ளார். காவலன் படம் எதிர்பார்த்தபடியே வெற்றிக்கனியை சுவைத்து விட்ட மகிழ்ச்சியுடன், அடுத்த படமான வேலாயுதத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய். காவலனுக்கு கொடுக்கப்பட்டு வரும் இடையூறுகள் மற்றும் எதிர்கால திட்டம் குறித்து சூட்டிங் ஸ்பாட்டிலேயே அவர் பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது:

காவலன் படத்தை ரிலீஸ் செய்வதற்குள் நிறைய பிரச்னைகளை சந்திக்க வேண்டியதாகி விட்டது. இதற்கு முன்பும் சில படங்களில் பிரச்னைகள் வந்தது உண்டு. பொருளாதார ரீதியாக பல படங்களுக்கு உதவி செய்து இருக்கிறேன். பணம் பெரிய பிரச்சினையே அல்ல. காவலன் படத்தில் சில மோசமான பிரச்சினைகளை சந்திக்க வேண்டியதிருந்தது. அந்த பிரச்சினைகளுக்கு காரணம் யார், அது எங்கிருந்து வருகிறது, யார் தூண்டிவிடுகிறார்கள்? என்று எனக்கு தெரியவில்லை. புது அனுபவமாக இருந்தது. பிரச்சினைக்கு காரணம் தெரியவில்லை. இன்றுவரை அது புரியவில்லை. சில பல பிரச்னைகள் காரணமாக, காவலன் படத்தை ஜனவரி 14ம்தேதி கொண்டுவர முடியவில்லை. என்றாலும், அந்த பிரச்சினைகளை எல்லாம் தாண்டி காவலன் படத்துக்கு மக்கள் வரவேற்பு கொடுத்து இருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் 350 தியேட்டர்களில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. கஷ்டமான சூழ்நிலையில், என் கூட இருந்து உதவி செய்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி.

ஜெயலலிதாவை எஸ்.ஏ.சந்திரசேகர் சந்தித்து பேசியது குறித்தும், அரசியல் பிரவேசம் குறித்தும் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையி்ல், ஜெயலலிதா அம்மாவை சந்திப்பதற்கு எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. சந்தித்தோம். அது எல்லோருக்கும் கிடைக்காது. இதற்கு முன்பு ராகுல்காந்தியை நான் சந்தித்ததும் இதுபோல்தான் அமைந்தது. அரசியலில் நுழைவதற்கு இது சரியான நேரம் அல்ல. ஒரு நடிகராக நான் மக்களுக்கு அறிமுகமானேன். இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. காவலன் பிரச்னைகளுக்கும், அரசியலுக்கும் முடிச்சு போட நான் விரும்பவில்லை, என்றார்.

விஜய் அ.தி.மு.க. கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்வாரா? என்று ஜெயலலிதாவிடம் கேட்டதற்கு, அதை அவரிடம்தான் கேட்க வேண்டும் என்று ஜெயலலிதா பதில் அளித்திருந்தார். வருகிற தேர்தலில், அதிமுகவுக்கு ஆதரவாக நீங்கள் பிரசாரம் செய்வீர்களா? என்ற கேள்விக்கு, பிரசாரம் செய்வது பற்றி இன்னமும் முடிவு செய்யவில்லை என்றார்.

சினிமா ஆசை மோசம், பரபரப்பு!

சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாக கூறி பிளஸ் 2 மாணவியிடம் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட புதுமுக டைரக்டர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை தி.நகர் அபிபுல்லா ரோட்டில் ஜீனியஸ் பிலிம்ஸ் சிட்டி என்ற பெயரில் தனியார் திரைப்பட கல்லூரி ஒன்று செயல்பட்டு வந்தது. இதன் உரிமையாளர் பெயர் அரவிந்த் ஜி மேத்தா. இவர் சொந்த தயாரிப்பாக நி‌லவே வருக என்ற பெயரில் புதுப்படம் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டார். இதற்காக புதுமுக நடிகர் - நடிகைகள் தேவை என பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தார். விளம்பரத்தை பார்த்து ஏராளமானோர் சினிமா ஆசையில் அரவிந்த்தை சந்தித்தனர். அவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி ஏமாற்றி விட்டதாக போலீசுக்கு புகார் வந்தது. போலீசார் அரவிந்தை அழைத்து விசாரித்ததில், படம் இறுதிகட்டத்தை எட்டி விட்டதாகவும், விரைவில் ரீலிஸ் செய்து விடுவேன் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி விட்டனர்.

இந்நிலையில் ஊட்டியை சேர்ந்த ராணுவ பெண் அதிகாரி ரீட்டா என்பவர் தேனாம்பேட்டை போலீசில் ஒரு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், டைரக்டர் அரவிந்த் பத்திரிகைகளில் கொடுத்திருந்த விளம்பரத்தை பார்த்து, பிளஸ் 2 படித்துக்கொண்டிருந்த எனது மகள் ஜெனீபரை சினிமாவில் நடிக்க வைக்க முடிவு செய்தேன். அரவிந்த்தை பார்த்து பேசியபோது, `அவர், எனது மகளை அவரது படத்தில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாக சொன்னார். இதற்காக ரூ.நான்கரை லட்சம் பணமும் கொடுத்தேன். சினிமா படப்பிடிப்பும் நடந்தது. எனது மகளும் கலந்துகொண்டு நடித்தாள். ஆனால் திடீரென்று படப்பிடிப்பு எதுவும் நடக்கவில்லை. டைரக்டர் அரவிந்த்தின் அலுவலகமும் பூட்டி கிடக்கிறது. இதனால் எனது மகளின் படிப்பு வீணானதோடு, என்னுடைய பணமும் பறிபோய்விட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

இதையடுத்து டைரக்டர் அரவிந்‌தை போலீசார் அழைத்து விசாரித்தனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

எனது சொந்த ஊர் மணப்பாறை. நான் திரைப்பட கல்லூரி நடத்தி வருகிறேன். எனது திரைப்பட கல்லூரியில் நடிப்பு பயிற்சி, டைரக்ட் பயிற்சி, இசை பயிற்சி, எடிட்டிங் பயிற்சி போன்ற பாடப்பிரிவுகளில் மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து வந்தேன். 6 மாத பயிற்சிக்கு ரூ.5 ஆயிரமும், ஒரு வருட பயிற்சிக்கு ரூ.9 ஆயிரமும் மாணவ-மாணவிகளிடம் கட்டணம் வசூலித்து வந்தேன். என்னிடம் பயிற்சி பெற்ற மாணவ - மாணவிகளை வைத்து `நிலவே வருக' என்ற பெயரில் சொந்தமாக படம் தயாரித்தேன். அதன் டைரக்டரும் நான்தான். போதைப்பொருளுக்கு அடிமையான ஒரு மாணவி படும் கஷ்டங்களை பின்னணியாக வைத்து இந்த படத்தை எடுத்தேன். ஜெனீபர்தான் கதாநாயகியாக நடித்தார். படம் நன்றாக வளர்ந்தது. கிட்டத்தட்ட படம் முழுக்க எடுத்துவிட்டேன். 4 நாள் சூட்டிங் மட்டுமே பாக்கி இருந்தது. ஏற்கனவே ரூ.14 லட்சம் செலவு செய்துவிட்டேன். மேலும் ரூ.10 லட்சம் தேவைப்பட்டது. அந்த பணத்தை என்னால் புரட்டமுடியவில்லை. அதனால்தான் படத்தை முழுமையாக எடுத்து வெளியிடவும் முடியவில்லை. யாரிடமாவது பைனான்ஸ் வாங்கி படத்தை வெளியிட ஏற்பாடுகள் செய்து வந்தேன். ஆனால் அதற்குள் ஜெனீபரின் தாயார் போலீசில் புகார் கொடுத்துவிட்டார். அரவிந்த் மீது போலீசார் மோசடி சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.

பிளஸ்2 மாணவி தவிர, 83 வயது மூதாட்டியையும் பாட்டி வேடத்தி்ல் நடிக்க வைப்பதாக கூறி அரவிந்த் ஏமாற்றியிருக்கிறாராம். இதேபோல சினிமா கனவுகளாலும், ஆசையாலும் ஏராளமான அப்பாவி இளைஞர்கள் அரவிந்திடம் பணத்தை இழந்துள்ளனர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் சினிமா ஆசை காட்டி ஏராளமாவர்களை ஏமாற்றியவர் குற்றவாளியா? அல்லது சினிமாக்காரர்களின் உண்மை முகம் தெரியாமல் சினிமா மோகத்தால் பணத்தை அள்ளிக் கொடுத்த அப்பாவிகள் குற்றவாளிகளா? சினிமா ஆசையால் பள்ளிப்படிப்பை பாதியில் விட்டு சீரழிந்திருக்கும் அந்த பிளஸ்2 மாணவி குற்றவாளியா?

Thursday, January 20, 2011

முதலிரவை சந்திக்கும் தம்பதியருக்கு!

திருமணம் நிச்சயமான நாள் முதல் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, முதலிரவைப் பற்றிய பயமும், ஆர்வமும் பாடாய் படுத்த ஆரம்பித்து விடுகிறது. யார் மூலமாகவோ கிடைக்கிற பூடக அறிவுரைகளும், தகவல்களும் மனத்தைக் குழப்ப ஆரம்பித்து விடுகின்றன. இதனாலே யே பல தம்பதியருக்கு முதலிரவு திகிலிரவாகவே அமைந்து விடுகிறது. அந்த இரவு அமைதியாகக் கழிய இதோ சில ஆலோசனைகள்…. முதலிரவு என்றாலே அன்று தான் உடல்களின் சங்கமம் நிகழ்ந்தாக வேண்டும் என்றில்லை.

கணவன், மனைவி ஆகி விட்டாலும் கூட தேவையான அறிமுகமும், நெருக்கமும் இல்லாமல் உடலுறவை மேற்கொள்வது சரியில்லை. முதல் இரவில் உறவைத் தவிர்க்க சுகாதார மற்றும் மருத்துவ அடிப்படையிலான காரணங்கள் உண்டு. திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாள் முதல் சடங்கு, சம்பிரதாயங்கள் என்ற பெயரில் இருவருக்கும் ஏகப்பட்ட அலைச்சல் இருக்கும். வீட்டில், கல்யாண சத்திரத்தில் என எங்கு பார்த்தாலும் கூட்டத்தின் நடுவே இருக்க வேண்டியிருக்கும்.

அதன் மூலம் பரவும் நோய்கள், தண்ணீர் மாற்றம், கழிப்பறைப்பிரச்சினை, அவசரக் குளியல் என ஏகப்பட்ட காரணங்களால் இருவரின் உடல்களுமே அவ்வளவாக சுத்தமாக இருக்காது. இந்நிலையில் முதல் நாளே உறவை வைத்துக் கொள்வது இருவருக்குமே ஆரோக்கியமானதல்ல. முதல் நாளே உறவைத்துவக்கும் தம்பதியருக்கு ஹனிமூன் டிஸிசஸ் வரும் வாய்ப்புகள் அதிகமாம். இதில் பல வியாதிகள் அடக்கமாம். பிறப்புறுப்பையும், மூத்திரக்காயையும் வெகுவாகப் பாதிக்கும் இந்த வியாதிகள் அவசர கோலத்தில், ஆரோக்கியமற்ற சூழ் நிலையில் உறவு கொள்ளும் தம்பதியருக்குக் கட்டாயம் வருமாம். முதலிரவன்று நன்றாகக் குளியுங்கள். ஆடம்பர நகைகள் மற்றும் உடைகளைத் தவிருங்கள்.

அளவோடு சாப்பிடுங்கள். உடலும், மனமும் லேசாக இருந்தாலே டென்ஷன் பறந்துவிடும். தாம்பத்தியத்திற்குத்தான் லாயக்கானவர்தான் என்பதை நிரூத்தாக வேண்டும் என்ற துடிப்பு இருவருக்குமே இருக்கும். அதன் விளைவாக முதல் இரவின் போது இருவருக்குமே அளவுக்கதிக டென்ஷன் இருக்கும். அந்த டென்ஷனுடன் உறவு கொள்ளும் போது அது பூர்த்தியாகாமல் இருக்கும். அதனால் முதல் நாளே இருவருக்குள்ளும் ஒரு வித அதிருப்தி உருவாகலாம். முதலிரவன்று புதுமண தம்பதியர் இருவரும் மனம் விட்டுப் பேசிக் கொள்ள நிறைய நேரத்தை எடுத்துக் கொள்ளலாம்.

இருவரின் விருப்பு, வெறுப்புகள், குடும்ப சூழ்நிலை பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளலாம். சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம். பேசி முடித்ததும் அன்றிரவு இருவரும் நன்றாக ஓய்வெடுத்துக் கொள்வது நல்லது. தண்ணீர், பால், பழம் என எதையுமே தனித்தனியே சாப்பிடுவது நல்லது. வெறும் உள்ளங்கை ஸ்பரிசமே போதும். அதுவே ஓராயிரம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்.

உறவை பலப்படுத்தும். எச்சிற்பட்டுக் கொள்ளாமல் முத்தமிட்டுக் கொள்ளாமல், உடல் நெருங்காமல் பக்கத்தில் படுத்தாலும் தனித் தனியே படுத்து சீக்கிரமே தூங்கி விடுவது நல்லது. இதுவே நல்ல துவக்கம். முதலில் இருவருக் குமிடையேயான தயக்கங்கள், கூச்சங்கள் தகர்க்கப்பட வேண்டும். அதன் பிறகான தாம்பத்திய உறவின் துவக்கமே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படை.


ஆம்னஸ்டி கோரிக்கை! போர்குற்றம் தொடர்பாக விசாரணை?

இலங்கை அதிபர் ராஜபக்ஷே மீதான போர்குற்ற புகார்கள் குறித்து உடனடியாக விசாரிக்க வேண்டும் என ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் , மனித உரிமை கழகம் , அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்ஷே அமெரிக்காவுக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் அமெரிக்கா வரும் நிலையில் , ஆம்னஸ்டி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்தப் போர் உலகநாடுகளின் ஆதரவுடன் நடத்தப்பட்டது என்ற உண்மை இப்போது மெல்ல, மெல்ல வெளியே வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, இந்தப் போருக்கு இந்தியா கணிசமான உதவிகளை வழங்கியுள்ளது. கடந்த வாரம், இந்தியாவின் பி.ரி.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த ஒரு செய்தியில் புலிகளுக்கு எதிரான போரின்போது இந்தியா ராடர்களையும், விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும், கடற்படைக் கப்பல்களையும் வழங்கியதை உறுதிப்படுத்தியது. விடுதலைப்புலிகளின் வான் தாக்குதல் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக இந்தியா இந்த உதவிகளை வழங்கியிருந்தது.

இலங்கைக்கு இந்தியா 'இந்திரா' ரக ராடர்களை வழங்கிய விவகாரம் முன்னரே வெளிச்சத்துக்கு வந்திருந்தது. அந்த ராடர்களை இயக்கியது இந்திய விமானப் படை அதிகாரிகள் தான் என்பதையும் பி.ரி.ஐ. உறுதி செய்துள்ளது. இவர்கள் தாக்குதல் நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை என்றும், இலங்கைப் படைகளின் தளங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளிலேயே ஈடுபடுத்தப்பட்டதாகவும் அந்தச் செய்தி கூறியுள்ளது.

Wednesday, January 19, 2011

தமிழகத்திற்கு பெருமை! இந்தியாவிலேயே இரண்டாவது.

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், அச்சு மற்றும் எழுதும் காகித உற்பத்தியில் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது, என காகித உற்பத்தி இயந்திரத்தை துவக்கி வைத்து முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

கரூர் மாவட்டம், புகளூரில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன ஆலையில் நிறுவப்பட்டுள்ள அதிநவீன மூன்றாவது காகித உற்பத்தி இயந்திரத்தை, காணொலிக் காட்சி மூலம் துவக்கி வைத்து, முதல்வர் கருணாநிதி பேசியதாவது: முதல் இரண்டு இயந்திரம் மூலம், இந்த ஆலை ஒரு லட்சத்து 80 ஆயிரம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்தது. அதை தொடர்ந்து, இரண்டு காகித உற்பத்தி இயந்திரங்களையும் நவீனமாக்க, புதிய தொழில் நுட்பங்கள் இணைக்கப்பட்டு, அந்த இரண்டு இயந்திரங்கள் மூலம் இந்த ஆலையின் காகித உற்பத்தித் திறன், ஆண்டுக்கு இரண்டு லட்சத்து 48 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக அதிகரித்தது.

இந்நிலையில், தற்போது இந்த ஆட்சியில், செய்தித்தாள் காகித நிறுவனம் 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால், நாள் ஒன்றுக்கு 573 மெட்ரிக் டன் வீதமும், ஆண்டுக்கு மேலும் ஒரு லட்சத்து 55 ஆயிரம் மெட்ரிக் டன் காகிதத்தை உற்பத்தி செய்யும் உலகத்தரம் வாய்ந்த மூன்றாவது அதிநவீன காகித இயந்திரம் இந்த ஆலையில் நிறுவப்பட்டுள்ளது. இதனால், இந்நிறுவனத்தின் காகித உற்பத்தித் திறன் மொத்தம் நான்கு லட்சம் மெட்ரிக் டன் ஆக உயர்ந்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், அச்சு மற்றும் எழுதும் காகித உற்பத்தியில் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இந்த இயந்திரம் குறைந்த தண்ணீர் பயன்பாட்டுடனும், குறைந்த மின்சாரத்தையும் கொண்டும் செயல்படக் கூடியது.

இந்த இயந்திரத்தை துவக்கி வைப்பதுடன், 67 கோடி ரூபாய் மதிப்பில், நாள் ஒன்றுக்கு 600 டன் உற்பத்தி திறன் கொண்ட, திடக்கழிவில் இருந்து சிமென்ட் தயாரிக்கும் ஆலை, 135 கோடி ரூபாய் மதிப்பில் நீராவி மற்றும் மின் உற்பத்தி பிரிவை நவீனப்படுத்தும் திட்டம், 175 கோடி ரூபாய் மதிப்பில் 300 டன் உற்பத்தித் திறன் கொண்ட, காகிதத்தில் இருந்து மை நீக்கிய காகிதக் கூழ் தயாரிக்கும் ஆலை என, 377 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று புதிய திட்டப் பணிகளுக்கும் தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. காகித ஆலை அமைந்துள்ள பகுதியை இணைக்கும் கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில், கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றில், 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் துவக்கி வைக்கப்படுகிறது. இவ்வாறு முதல்வர் பேசினார்.

வர்த்தகத்தில் இந்தியா முதலிடம்

சர்வதேச அளவில், வாகனங்கள் விற்பனையில் இந்தியா பெரும் முன்னேற்றத்தை கண்டுள்ளது. கார்கள் விற்பனையில் இரண்டாவது இடத்தையும், வர்த்தக வாகன விற்பனையில் சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தையும் பிடித்துள்ளது. சர்வதேச அளவில் கார்கள் விற்பனையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சீனா ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் தான் முன்னணியில் இருந்து வந்தன. 

வாகன உற்பத்தியில் கடந்த 2000ம் ஆண்டில் இந்தியா 15வது இடத்தில் இருந்தது. அதாவது மொத்த வாகன உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 1.4 சதவீதம் என்ற அளவில் தான் இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நிலைமை தலைகீழாக மாறி விட்டது. மற்ற நாடுகளை விட வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் சீனாவும், இந்தியாவும் பெரும் முன்னேற்றம் கண்டு வருகின்றன. இது கடந்த 2010ம் ஆண்டில் நன்கு தெரிய வந்துள்ளது. கடந்த 2010ம் ஆண்டின் ஜனவரி முதல் நவம்பர் வரையான, 

வாகன உற்பத்தி மற்றும் விற்பனை விவரம் தெரிய வந்துள்ளது. கார்கள் விற்பனை இந்தியாவில் 31 சதவீதம் அதிகரித்துள்ளது. எனினும், 39 சதவீதத்துடன் சீனா தான் முதலிடத்தில் உள்ளது. 10 சதவீதத்துடன் ஜப்பான், 9 சதவீதத்துடன் பிரேஸில், 5 சதவீதத்துடன் அமெரிக்கா, 3 சதவீதத்துடன் பிரிட்டன் ஆகிய நாடுகள் பின்தங்கிய நிலையில் தான் உள்ளன. சர்வதேச அளவில் மொத்த வாகன உற்பத்தில் இந்தியாவின் பங்களிப்பு 5 சதவீதம் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. 

கார்கள் விற்பனையில் இரண்டாவது இடத்தில் இருந்தாலும், வர்த்தக வாகன விற்பனையில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. 2010ம் ஆண்டின் ஜனவரி நவம்பர் காலகட்டத்தில், 47 சதவீதத்துடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 41 சதவீதத்துடன் சீனா இரண்டாவது இடத்தை தான் பிடித்துள்ளது. எனினும், வட்டி வீதம் அதிகரிப்பு, உற்பத்தி பொருட்களின் விலை உயர்வு ஆகிய காரணங்களால், இந்தியாவில் வாகன உற்பத்தி அதிகரிப்பில் பெரும் முட்டுக்கட்டை காணப்படுகிறது. இல்லாவிடில், கார் விற்பனையில் இந்தியா முதலிடத்தை பிடித்திருக்கும் என்றே கூறப்படுகிறது.

Tuesday, January 18, 2011

கருப்பு பணம்,. இந்திய எத்தனையாவது இடம்?

வாஷிங்டன்: முறைகேடான பணத்தை சேமித்து வைக்கும் ஆசிய நாடுகளில் இந்தியா நான்காமிடத்தை பெறுகிறது என குளோபல் பைனான்சியல் இன்டக்ரிட்டி என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. 

முதலிடத்தை சீனா பிடித்துள்ளது. கடந்த 2000முதல் 2008 வரையிலான காலகட்டங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதன்படி சீனா 2.2 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கும், இரண்டாவது இடத்தை பிடித்துள்ள மலேசியா நாடு 291 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கறுப்பு பணத்தை பதுக்கிவைத்துள்ளது. மூன்றாம் இடம் வகிக்கும் பிலிப்பைன்சில் 109 மில்லியன் அமெரிக்க டாலர் மட்டுமமே பதுக்கிவைத்துள்ளது. 

இந்தியா மற்றும் இந்தோனேஷியா நாடுகள் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இந்நாடுகளின் கறுப்பு பண அளவு சுமார் 104 மில்லியன் ஆகும். கறுப்பு பணத்தை பதுக்கி வைப்பதில் பெரும்பாலும் ஆசிய நாடுகளில் உள்ள வளர்ந்து வரும் நாடுகளே இத்தகைய செயல்களில் ஈடுபட்ட வருவதாக தெரிவித்துள்ளது.

தினம் கிளியும் ஆர் எஸ் எஸ் டவுசர்

ஜன.18: 2006 மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவ குற்றவாளிக்கு உதவியதாக விஜய் அகர்வால் என்பவர் திங்கள்கிழமை (ஜனவரி 17) கைது செய்யப்பட்டார்.

லக்னெüவில் பதுங்கியிருந்த தனியார் கல்வி நிறுவனத்தின் தலைவரான விஜய் அகர்வாலை மும்பை, உத்தரப்பிரதேச பயங்கரவாதத் தடுப்பு போலீஸôர் கைது செய்தனர்.

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளி ரஹில் அடாவுர். இவருக்கு பட்டப்படிப்பு சான்றிதழ் உள்பட சில போலி சான்றிதழ்களை கொடுத்து விஜய் அகர்வால் உதவி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸôர் ஏற்கெனவே கைது செய்தனர்.

ஜாமீனில் வெளிவந்த விஜய் அகர்வால், தலைமறைவாகியிருந்தார். இதையடுத்து அவரை போலீஸôர் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் நடத்திவரும் இன அழித்தொழிப்புகள் ஜெர்மன் நாசிப் படையினரின் யூத இன அழித்தொழிப்பிற்கு சமம் என தெரிவித்தது இஸ்ரேலுக்கு அவமானமாகிவிட்டது போலும்.

இரண்டாம் உலகப் போரில் ஆரிய இன சுத்திகரிப்பில் நம்பிக்கைக் கொண்ட நாசிகள் நடத்திய யூத இன அழித்தொழிப்பையும் குஜராத்திலும் இந்தியாவின் பல பாகங்களிலும் ஹிந்துத்துவா சக்திகள் நடத்திவரும் முஸ்லிம் இனப்படுகொலைகளையும் ஒப்பிடமுடியாது என இஸ்ரேல் தூதரகம் கோபத்தோடு பதிலளித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நாடுமுழுவதும் பல்வேறு அமைப்புகள் போலி வழக்கில் கைதுச் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை உடனடியாக விடுதலைச் செய்யவும், அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ்பெறவும் மத்திய, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை வலியுறுத்தின.

இந்திய வின், 5 போட்டிகளில் 2 - 1

கேப்டவுன் : தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று, தொடர் 1-1 என சமமாக இருந்தது.

இந்நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி, கேப்டவுனில் நடந்தது. "டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் ஸ்மித், பேட்டிங் தேர்வு செய்தார்.

கேப்டவுன் ஒருநாள் போட்டியில், இந்திய பவுலர்கள் ஏமாற்றினாலும் யூசுப் பதான் அபாரமாக செயல்பட்டார். ஜாகிர் கான், வேகத்திலும், ஹர்பஜன் சுழலிலும் சிக்கிய தென் ஆப்ரிக்க அணி, 49.2 ஓவரில் 220 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

இந்திய : யூசுப் பதான் 50 பந்துகளில் 59 ரன், இந்திய பேட்டிங்கில் அதிக பச்சஸ்கோர்.

5 போட்டிகளில் 2 - 1.

யூசுப் வாய்ப்பு:

இந்திய அணியில் காயமடைந்த சச்சினுக்குப் பதில் யூசுப் பதான் இடம் பெற்றார், வாயிப்பை யூசுப் பதான் சரியாக பயன்படித்துக்கொண்டார்.

என் ரசிகர்களுக்கு வியூகம்,.ரஜினி!

சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி தனக்கு ஆதரவான வாக்குகளை தக்க வைக்கும் முயற்சிகளில் திமுக தீவிரமாகியுள்ளது. அதில் ஒரு முயற்சியாக ரஜினிகாந்த் ரசிகர்களை திமுகவுக்கு சாதகமாக திருப்பும் முயற்சிகள் நடந்து வருகிறதாம். அனைத்து மாவட்டங்களிலும் இந்த முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்பட்டாலும் திருச்சியில் பகிரங்கமாகவே இது நடைபெறுகிறது. அமைச்சர் கே.என்.நேரு இந்த முயற்சியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

ரஜினிகாந்த் இதுவரை தீவிர அரசியலில் ஈடுபடவில்லை என்றாலும் அவரும் தமிழக அரசியலில் ஒரு அங்கமாக மாறி பல வருடங்களாகி விட்டது. அவரை வைத்து அரசியல் நடந்து வருவதை அவரும் உணர்ந்திருக்கிறார், அவரது ரசிகர்களும் உணர்ந்துள்ளனர். தேர்தல் சமயங்களில் ரஜினி வாய்ஸ் யாருக்கு என்ற கேள்வி வழக்கமாக எழும். ஆனால் தான் யாரையும் ஆதரிக்கவில்லை என்றும், ரசிகர்கள் தங்கள் மனசாட்சிப்படி யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம் என்றும் ரஜினி கூறி வருகிறார்.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள முக்கிய வாக்கு வங்கிகளில் ஒன்றாக மாறியுள்ள ரஜினி ரசிகர்களின் வாக்குகளை கவர அரசியல் கட்சிகள் பல விதங்களில் முயல்வது ஒரு வழக்கமாக மாறியுள்ளது. அந்த அடிப்படையில் தற்போதைய தேர்தலில் ரஜினி ரசிகர்களின் வாக்குகளை தங்களுக்கு ஆதரவாக வளைக்கும் முயற்சியில், கட்சிகள் இறங்கியுள்ளன. குறிப்பாக திமுக இறங்கியுள்ளதாம்.

முதல்வர் கருணாநிதியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் ரஜினிகாந்த் தொடர்நது பங்கேற்று வருவதை ரசிகர்களிடம் கூறி ரஜினி, திமுகவுக்கு ஆதரவாக இருப்பதாக கூறுகிறார்கள் திமுகவினர் என்று கூறப்படுகிறது. இதை நிரூபிக்கும் வகையில், திருச்சியில் ஞாயிற்றுக்கிழமையன்று திமுகவும், ரஜினி ரசிகர் மன்றமும் இணைந்து பொங்கல் விழாவை நடத்தியுள்ளன.

திருச்சி திருவானைக்காவல்-கொள்ளிடம் சோதனைச் சாவடி அருகேயுள்ள அழகிரிபுரத்தில் திமுகவினரும், புரட்சி மாவீரன் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தினரும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை மாலை பொங்கல் விளையாட்டு விழாவை நடத்தினர்.

இதில் அமைச்சர் கே.என். நேரு கலந்து கொண்டார். அவர் விழாவில் பேசுகையில், விழாவை திமுகவினரும், ரஜினி ரசிகர் மன்றத்தினரும் இணைந்து நடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. ரஜினி சிறந்த ஆன்மிகவாதி; நல்ல மனித நேயமிக்கவர்.

திருச்சியில் சிவாஜி கணேசன் சிலைத் திறப்பு விழா அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க ரஜினிகாந்துக்கும், கமலஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களும் வருவதாக ஒப்புதல் அளித்துள்ளனர் என்றார் நேரு.

விழா நடந்த இடம் அதிமுக சற்று பலமாக உள்ள பகுதியாம். இந்த இடத்தில் வைத்து ரஜினி ரசிகர்களை இணைத்துக் கொண்டு திமுக விழா நடத்தியுள்ளதால் அதிமுவுக்கு எதிராக ரஜினி ரசிகர்களை திருப்பும் செயலாக இது பார்க்கப்படுகிறது.

மேலும், சிவாஜி கணேசன் சிலைத் திறப்பு விழாவுக்கு எப்படியாவது ரஜினியை வரவழைத்து விட்டால் திருச்சியில் ரஜினி ரசிகர்கள் வாக்கு திமுகவுக்குத்தான் என்ற எண்ணமும் திமுகவினர் மத்தியில் பரவியுள்ளது.

ரஜினியை வைத்து நடத்தும் இந்த அரசியல், திமுகவுக்கு தேர்தலில் எந்த அளவுக்கு உதவப் போகிறது என்பது போகப் போகத்தான் தெரியும்

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!