Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, May 24, 2014

ஈழ வியாபாரத்தில் கொள்ளை லாபம்!?

மோடி பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சேவின் வருகை உறுதியாகிவிட்டது! -செய்தி.

ஈழ வியாபாரத்தில் கொள்ளை லாபம் கண்டு கொழுத்துப்போன கருப்புத்துண்டு கோமாளி வைகோ, காந்திக்கும் கோட்சேவுக்கும் பிறந்த அவமானக்குழந்தை தமிழுருவிமணியன் ஆகியோர் எங்கிருந்தாலும் மேடைக்கு வாங்க சாமி. இதுபற்றி காவிகளிடம் கேட்டால் இது சார்க் நாடுகளின் நட்புறவு மேம்பட என்பார்கள், இதையேதான் காங்கிரஸும் செய்தது, அப்போது கொந்தளித்தீர்கள்.
நாளை மோடியும் இலங்கை செல்வான், ராஜபக்சே தோட்டத்தில் மாலை உலா வருவான். இலங்கைக்கு காங்கிரஸ் செய்து வந்த எல்லாம் விஷயங்களையும் மோடியும் செய்வான், இன்னும் சில வாரங்களில் தமிழக மீனவன் தாக்கப்படுவான், கச்சத்தீவிலிருந்து விரட்டியடிக்க படுவான்,

பெட்ரோல் விலை சீறாக உயரும்,சமையல் கேஸ்விலையும் அவ்வண்ணமே பாயும், விவசாயி தூக்கில் தொங்குவான், அம்பானி தங்கத்தட்டில் உண்ணுவான், அடானி மின்கொள்ளையடிப்பான், ஏழை ஏழையாகவே மடிவான், முதலாளி பெருமுதலாளியாவான், ஆதிவாசி விரட்டப்படுவான், பழங்குடியன் புரட்டப்படுவான்,

மலைகளும் .இயற்கை வளங்களும் டாடாவின் மடியிலே கொட்டப்பட்டு ஆளும் வர்க்கம் சன்மானங்கள் பெறுவர். இதையெல்லாம் மக்கள் அறிவர், போராடத்துணிவர், நாடெங்கும் மோடி அலையை மக்களின் எதிர்ப்பு அலை விழுங்கும், அப்போது இருக்கவே இருக்கு வாஜ்பாய் உத்தி. பாகிஸ்தான் மீது போர் தொடுக்கப்படும், போராடிய மக்களெல்லாம் திசைதிருப்பப்பட்டு தேசபக்தியில் மூழ்கடிக்கப்படுவர்,

4 ஆண்டுகளிலேயே பாராளுமன்றம் கலைக்கப்படும், மக்களின் உணர்ச்சியை துணைக்கு வைத்துக்கொண்டு மீண்டும் மோடி அதிகாரம் பிடிப்பான்! இதுதான் சங்பரிவார் உத்தி.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் நடந்தே தீரும்,அவமானத்தால் கழுவில் தொங்காமல் இந்த வைகோவும் மணியனும் அப்போதும் வாழ்வார்கள்!!.
@ ஊடகங்களின் மாய வெளிச்சத்தை வைத்துக்கொண்டு சிந்தனைகடத்தல் நடத்தித்தானே ஆட்சிக்கு வரமுடிந்தது? பொராமையோ காழ்ப்புணர்ச்சியோ கொண்டு அலைந்த நிலையில் நாம் அல்ல.சிரிது காலம் பொருமை காக்கலாம். எந்த கழிவை காங்கிரஸ்மீது பூசிவிரட்டினார்களோ அதே கழிவை இவர்கள் உண்ணுகிறார்களா என பார்ப்போம்.

இனி  மோ(கே)டி தறுதலைகளை தமிழ்நாட்டில் கால் வைக்க அனுமகாதீர்கள்  தமிழ் உணர்வு உங்களிடமிருந்தால். இருவருமே இனப்படுகொலையாலன்கள் மறுக்க, மன்னிக்க முடியா உண்மை.

Sunday, May 18, 2014

கரியை முகத்திலும் பூசிக்கொண்ட இந்தியர்கள்!?

பெரும் தொழில் நிறுவனங்களை நடத்தும் ‘கார்ப்பரேட்’ நிறுவனங்களுக்கு 2005-2006 ஆம் ஆண்டில் இந்திய அரசு தள்ளுபடி செய்த வரியைக் கணக்கிட்டால் சராசரியாக ஒரு நிமிடத்துக்கு ரூ.7 மில்லியன்.
தங்கம்-வைரத்துக்கு தள்ளுபடி செய்துள்ள வரி கடந்த 36 மாதங்களில் ‘2 ஜி’ அலைவரிசை ஊழலுக்கு சமம்.
2005-லிருந்து 2013 வரை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட வருமான வரி, சுங்க வரி, ‘கஸ்டம்ஸ் டூட்டி’ ரூ.31,111,69 (ரூபாய் 31 லட்சத்து 111 ஆயிரத்து 69 கோடி ரூபாய்)(2005 ஆம் ஆண்டிலிருந்து, 2013 ஆம் ஆண்டுக்குள் தள்ளுபடி விகிதம் 130.53 சதவீதம் அதிகரிப்பு)
தங்கம், வைரம் மற்றும் நகைகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ரூ.3,14,456 கோடி.
கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு இவ்வளவு பெரும் தொகையை தள்ளுபடி செய்த நிதியமைச்சர் ப.சிதம்பரம், இந்தியாவில் தனி நபர் நேரடி வருமான வரி 5.5 சதவீதமாகவும், மறைமுக வருமான வரி 4.4 சதவீதமாகவும் மிக மிகக் குறைவாகவே உள்ளது என்றும் கவலைப்படுகிறார். தள்ளுபடி பற்றி அவர் கவலைப்படவில்லை! நாட்டை “தேசபக்தர்கள்” கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து விட்டார்கள்!
காங்கிரஸ் அரசிடமிருந்து யார் யாரெல்லாம் தள்ளுபடிகளையும் , சலுகைகளைப் பெற்றார்களோ அவர்கள்தான் இந்த தேர்தலில் மோடியை முன்னிலைப் படுத்தியவர்கள். 10 ஆண்டுகள் காங்கிரசை வைத்து அவர்கள் ஆடிய ஆட்டம்தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அத்துனை ஊழல்களுக்கும் முழுமுதற்காரணம். ஆனால் மக்களால் காங்கிரஸ் தூக்கி எறியப் படலாம் என்று அனுமானித்தவர்கள் மோடியை வைத்து அடுத்துவரும் ஆட்சியில் விளையாடத் தயாராகி விட்டனர்.
இந்த கூத்து தெரியாமல் சாமானிய இந்தியன் கரியை தன் விரலில் மட்டுமல்ல முகத்திலும் பூசிக்கொண்டான். பாவம் இந்தியன் !! நானும் தான்!! (ந. கிருஷ்ணன்).

@ஒவ்வொரு ஊரிலும் ஆங்காங்குள்ள பெரிய குற்றவாளிகளை நாம் தலைவர்களாக்கி இருக்கின்றோம். அங்கு அவர்கள் விஷமம் (சதி) செய்து கொண்டிருப்பார்கள். 

Sunday, May 11, 2014

ரசிகர்களை நன்கு அறிந்த ரஜினி கலைஞர்!!


என்னை பொறுத்தவரை கலைஞர் அவர்களுக்கும், ரஜினிகாந்த் அவர்களுக்கும் அதிக வித்தியாசமில்லை.

* இருவருமே அவர்களின் ரசிகர்களின்/தொண்டர்களின் பலத்தை தன் குடும்ப வளர்ச்சிக்காக மட்டுமே பயன் படுத்துபவர்கள்.

* இருவருமே "நீங்கதான் எனக்கு எல்லாமே" என்று தமிழர்களை ஏமாற்ற தெரிந்தவர்கள்.

* இருவருமே யாருக்குமே வழி விடாமல் இன்னும் பதினாறு வயசு என கற்பனையிலேயே இருப்பவர்கள்.

* இருவருமே "இதுதான் எனக்கு கடைசி (படம்/தேர்தல்) என்று எப்போது தேர்தல்/படம் வந்தாலும் சொல்பவர்கள்.

* இருவருமே வியாபார யுக்தி தெரிந்தவர்கள்.

* இருவருமே தக்க சமயத்தில் ஒதுங்கி பாதுகாப்பான இடத்திற்கு நகர்ந்து விடுபவர்கள்...

* இருவருமே அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடி வாழ்க்கையை தொடங்கி இன்று கோடிகளில் புரள்பவர்கள்.

* இருவருமே எத்தனை ஆதாரங்கள் காட்டினாலும் சொன்னாலும் "என் தலைவன் தான் சிறந்தவன்" என்று மூச்சை பிடித்து பேசும் செம்மேறி ஆட்டுகூட்டத்தை சேர்க்க தெரிந்தவர்கள்.More info plz visit: 

http://dinaex.blogspot.com/2013/05/blog-post_18.html?m=0

Sunday, May 4, 2014

முதல் உண்மை செய்தி வெளி வருகிறது!?

உண்மையிலேயே ஒன்றும் புரியலே! எல்லா மீடியாக் காரனும் காவல் துறை விசாரணையை தொடங்கு முன்னே அவனவன் இஷ்டத்திற்கு பேசுறான். பாகிஸ்தான் சதி. ஜாகிர் ஹுஷைன் பங்கு என்று. இதிலே வேறே ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் எல்லா ஊடகங்களிலும் வந்து வழக்கம் போல முஸ்லிம்கள் மேலே பழியை போடுறாங்க!. என்னையா நடக்குது இங்கே!.கைது செய்யப்பட்டுள்ள ஜாகிர் ஹுசைனுக்கும் சென்னை ரயில் குண்டு வெடிப்புக்கும் தொடர்பில்லை. 

முதல் உண்மை செய்தி வெளி வருகிறது: ரயிலில் இருந்து வேகமாக இறங்கி ஓடிய ஒருவர் மீது இப்போது சந்தேகம் திரும்பியுள்ளது.அவர் தான் குற்றவாளி என்று கூற முடியாது. அவரது நடவடிக்கை சந்தேகத்தை கிளப்பியது. அவர் விசாரணைக்கு ஒத்துழைத்தால் நல்லது. இதுவரை குண்டு வெடிப்புக்கான காரணம் தெரியவில்லை. CBCID IG மகேஷ்..செய்தியாளர்களிடம் பேட்டி.
இந்தியாவில் குண்டு வெடிக்குது என்றால் பிடிபடுகிறவன் முஸ்லிமாக இருந்தால் மட்டும் போதும் வேறு எந்த ஆதராமும் தேவையில்லை காவல் துறைக்கு அவனை குற்றவாளி என்று நிருபனவாகும் முன் இஸ்லாமிய தீவிரவாதம் சொல்லிவிடும் வந்தேறி ஊடகங்கள். 

ஊடகங்களே! உங்களின் இந்த போக்கினை இனியாவது மாற்றிக் கொள்ளுங்கள். இல்லையெனில் கொந்தளித்துக் கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்திற்கு பகையாளி ஆவீர்கள்.

துரோகிகளே! இனி மக்களை இலகுவாக ஏமாற்றிவிடலாம் என்கிற போக்கு இனியும் முடியாது. .நீளமான தாடி வைத்திருப்பவர்களையும், தொப்பி அணிந்த எல்லோரையும் சந்தேகிப்பது என்பது, நெத்தியில் பட்டையும், கழுத்தில் திருநீறு கொட்டையும், காவியும் அணிந்து கொண்டிருக்கும் எல்லோரையும் சந்தேகிப்பதற்கு சமம்.

எங்கே குண்டு வெடிப்பு நிகழ்ந்தாலும், இந்திய முஹாஜிதீன்கள் என்ற ஒரு போலி முகவரி உளவுதுறைக்கும், விபச்சார பத்திரிக்கையும் எப்படி கிடைக்கிறது? எந்த வித விசாரணைய்யையும் தொடங்காமல் இந்திய முஹாஜிதீன்கள் என்ற ஒரு பொய் அமைப்பின் மீது இவர்கள் பழி போட காரணம் என்ன?

இவை அனைத்துக்கும் காரணம், இந்த இந்திய முஹாஜிதீன்கள் என்பது இந்திய உளவுத்துறையால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை பாத்திரம். உண்மையில் அது ஆஸ் எஸ் எஸ் அமைப்பே இந்திய முஹாஜிதீன் என்பது. உளவுத்துறையில் காவிகளின் கைங்காரியம் என்பதை இதிலிருந்து நாம் விளங்கிக்கொல்லாம்.




Sunday, April 27, 2014

நிரந்தர நோயாளிகளாக்கும் உணவு! எச்சரிக்கை!?

இரண்டே நிமிடங்களில் நீங்கள் வேக வேகமாய்ச் சமைத்துத் தரும் ஆசை ஆசையாய் நம் வீட்டுக் குழந்தைகள் அள்ளிச் சாப்பிடும் நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு என்றால் நம்புவீர்களா? ஆம். நம்புங்கள் என்கிறார் ப்ரீத்தி ஷா. சும்மா இல்லை. ஆராய்ச்சி ஆதாரங்களோடு.

யார் இந்த ப்ரீத்தி ஷா? என்ன ஆராய்ச்சி அது? அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொது மேலாளர் ப்ரீத்தி ஷா. இன்சைட்’ என்கிற நுகர்வோர் விழிப்பு உணர்வு இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார்.

விளம்பரங்களால் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்து எண்ணற்ற வீடுகளில் காலை உணவாகிவிட்ட நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான உணவுதானா என்று தெரிந்துகொள்ள விரும்பினார் ப்ரீத்தி ஷா. இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் 15 நிறுவனங்களின் நூடுல்ஸ்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

நூடுல்ஸில் இவ்வளவு சத்துக்கள் இருக்க வேண்டும் என்று இந்தியாவில் இதற்கான அளவு மதிப்பீடுகள் ஏதும் இதுவரை வரையறுக்கப்படாததால், இங்கிலாந்தின் உணவுத் தரக் கட்டுப்பாட்டு முகமையின் அளவுகளை வைத்து இந்தத் தரச்சோதனை நடந்தது. இதில் வெளியான முடிவுகள் மூலமாகத்தான் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் ப்ரீத்தி ஷா.

ஆய்வு சொல்லும் முடிவுகள்: சோதனை செய்யப்பட்ட எந்த முன்னணி நிறுவனங்களின் நூடுல்ஸும் விளம்பரங்களில் காட்டப்படுவதுபோல ஏகப்பட்ட சத்துக்களை உள்ளடக்கியதாகவோ, குழந்தைகள் உடல் நலனுக்கு முற்றிலும் நன்மை பயப்பதாகவோ இல்லை.

அனைத்து நூடுல்ஸ்களிலும் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் எக்கச்சக்க மடங்கு அதிகமாக உப்பு மற்றும் கொழுப்பு உள்ளன. நூறு கிராம் நூடுல்ஸில் 130 முதல் 600 மில்லி கிராம் வரை அனுமதிக்கப்பட்டசோடியம் அளவாகும்.

ஆனால், இந்தியாவில் விற்கப்படும் வெவ்வேறு நூடுல்ஸ் நிறுவனங்களின் தயாரிப்புகளில் 821 மில்லி கிராம் முதல் 1943 மில்லி கிராம் வரை சோடியம் இருந்திருக்கிறது. கொழுப்பும் மிகுதி. ஆனால் தேவையான மற்ற சத்துக்களோ சொல்வதைவிடக் குறைந்த அளவில்! மிகக் குறைந்த அளவுக்கே நார்ச்சத்து, புரதம், கால்சியம் ஆகியன உள்ளன.

இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிதல், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் எனப் பல்வேறு ஆபத்துகளுக்கும்குழந்தைகள் ஆளாக நேரிடும்.

ப்ரீத்தி ஷா சொல்கிறார் . ''ஆய்வு முடிவுகளைப் பார்த்தபோது அதிர்ந்துபோனேன். இது தொடர்பாக விளக்கம் கேட்டு 15 நிறுவனங்களுக்கும் ஆய்வு நிறுவனம் சார்பில் கடிதம் அனுப்பினோம். ஆனால், இதுவரை அந்தக் கடிதங்களுக்கு எந்த நிறுவனமும் பதில் அளிக்கவில்லை. கம்பு, வரகு, சாமை, தினை, கேழ்வரகு என்று எவ்வளவோ சத்து மிக்க சிறுதானியங்கள் விளையும் மண் இது.

ஆனால், அவற்றை எல்லாம் இருட்டடிப்பு செய்துவிட்டு, விளம்பரங்கள் மூலம் சந்தையைப் பிடிக்கும் பெருநிறுவனங்கள் இந்திய மக்களை குழந்தைப் பருவத்தில் இருந்தே அடிமைப்படுத்துகின்றன.

பெற்றோர்கள் இந்த விஷயத்தில் விழிப்பு உணர்வோடு இருக்க வேண்டும். குப்பை உணவின் மூலமாக ஏற்படும் வளர்ச்சி உண்மையானது அல்ல. நாளை நம் குழந்தைகள் நிரந்தர நோயாளிகளாக நாமே காரணம் ஆகிவிடக் கூடாது'' என்றார் அக்கறையுடன். உண்மைதான்.

எச்சரிக்கை: இந்த காலகட்டத்தில் எந்த விஷயத்தையுமே விழிப்பு உணர்வுடன்தான் அணுக வேண்டும்!. 
உங்கள் ஷேர் ஒரு உயிரை கூட காப்பாற்றலாம். 

Sunday, April 20, 2014

அதிசயங்களே அசந்த உலக அதிசயம்!!


இது கூட உலக அதிசயம் தங்க! அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம் உங்களை அசர வைக்க இதோ!!.

இரண்டு பெண்கள் அருகருகில் இருந்தும் பேசாமல் இருந்தால் அது உலக அதிசயம்

கணவன் பேசும் போது மறு பேச்சு பேசாமல் மு ழுவதையும் காது கொடுத்து கேட்கும் பெண்கள் இருந்தால் அது உலக அதிசயம் .

காதலனுக்கு செலவு வைக்காமல் தனது பில்களையெல்லாம்­ தானே செலுத்தும் காதலி இருந்தால் அது உலக அதிசயம்...

மேக்கப் போடாமல் வீட்டிற்கு வெளியே போகும் பெண்கள் இருந்தால் அது உலக அதிசயம்

உன்னை மட்டும் காதலிக்கிறேன் என்று ஒரே ஒரு பெண்ணிடம் சொல்லும் ஆண்கள் இருந்தால் அது உலக அதிசயம்

பேஸ்புக்கில் பெண்கள் சொல்லும் மொக்கைகளுக்கு ஒரு லைக்ஸும் விழாமல் இருந்தால் அது உலக அதிசயம்

பேஸ்புக்கில் ஆண்கள் சொல்லும் நல்ல கருத்துகளுக்கு சில லைக்ஸாவது கிடைத்து இருந்தால் அது உலக அதிசயம்

தமிழ் நலனுக்காக உண்மையாக பாடு படும் ஒரு தலைவர் இருந்தால் அது உலக அதிசயம்

இங்கிலிஷில் பேசி பீலா விடாத தமிழ் கல்லூரிப் பெண்கள் இருந்தால் அது உலக அதிசயம்

கல்யாணம் ஆகி குழந்தை பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகும் கணவனை குறை சொல்லாமல் நேசிக்கும் பெண்கள் இருந்தால் அது உலக அதிசயம்

செய்திளை திரிக்காமல் வெளியிடும் பத்திரிக்கைகள் வந்தால் அது உலக மகா அதிசயம்

Sunday, April 13, 2014

மறந்துவிட்ட இயற்கை வைத்தியம்!!

மறந்துவிட்ட இயற்கை வைத்தியத்தில் எவ்வளவு நன்மைகள், அத்துடன் எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் நம் உடல் உறுப்புகளை நன்றாக இயங்க வைக்கலாம் வாங்க.

* விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டால் பித்தத்தைக் குறைக்கலாம்.

* பசுநெய், தயிர் கலந்து சாப்பிட்டு வந்தால் நரைமுடி கருமையாக மாறும்.


* சுக்கு, பால், மிளகு, திப்பிலி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.

* உப்பு நீரை வாயில் வைத்து தொண்டை வரை படும்படி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி குணமாகும்.

* முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால், இருமல் உடனே நிற்கும்.

* கோதுமை கஞ்சியை மாதவிடாய் இருக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால், உடற்சோர்வு நீங்கி பலம்பெறும்.

* தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வர ஆண்மை பெருகும், தாது விருத்தியாகும்.

* பூண்டு, வெங்காயம் அதிகம் உணவில் சேர்த்து வந்தால் தேவையற்ற கொழுப்பு குறையும்.

* கரும்பு தோகையை எரித்து சாம்பலாக்கி வெண்ணெயுடன் கலந்து உதட்டு வெடிப்புக்குப் போட்டால் உடனே குணமாகும்.

* அல்லி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து இரவில் முகத்தில் பூசி காலையில் குளித்து வர முகப்பருக்கள் ஒழியும்.

* எலுமிச்சம்பழத்தின் சாறை ஓரிரு துளிகள் காதில் விட காது வலிதீரும்.

* குடல்புண் குணமாகவும், வயிற்றுப்புழுக்கள் அழியவும் அகத்திகீரை நல்ல உணவு.

* தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினசரி ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல் பலப்படும்.

* அத்திபழம் தினந்தோறும் 5 சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி சரியாகும்.

* முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால் இருமல் உடனே நிற்கும்.

Monday, April 7, 2014

இணையத்தில் இலவசமாக பெற!?

என்னதான் மென்பொருள் மற்றும் விளையாட்டுக்கள் இலவசமாக download செய்தாலும் அதை நாம் குறைந்தது 15 நாட்கள் அல்லது அதிகமாக 40 நாட்கள் மட்டுமே உபயோகிக்க முடியும், அதற்கு பிறகு அந்த மென்பொருள் Register பன்ன வேண்டும் என ஒரு செய்தியை எமக்கு காட்டும். 

அப்படி நாம் பயன்படுத்தும் 15 அல்லது 40 நாட்களில் அதனுடைய பயனை நாம் முழுமையாக அடைந்து கொள்ள முடியாது. அதாவது குறிப்பிட்ட வசதியை மட்டும் தான் தருவார்கள்.

மென்பொருளுடைய சீரியல் நம்பரை வழங்குவதன் மூலம் அந்த மென்பொருளுடைய உண்மையான பயனை நாம் அனுபவிக்க முடியும். அதாவதுஅனைத்து வசதிகளையும் பெற்றுக்கொள்ள முடியும். இதெல்லம் உண்மைதான் ஆனால் நமக்கு Trial version தான் இலவசமாககிடைக்கும் என்று தெரியும் அதற்கான சீரியல் நம்பரும் கிடைப்பதென்பது சில பேருக்கு தெரியாமல் இருக்கலாம். (அதான் இப்ப தெரிந்து விட்டதே), குறிப்பிட்ட மென்பொருளுடைய சீரியல் நம்பரை இலவசமாகத்தர சில இணையத்தளங்கள் இருக்கின்றன அவை:


01 http://www.youserials.com/
02 http://www.egydown.com/
03 http://serialnumber.in/
04 http://www.serials4u.com/
05 http://www.serialhint.com/
06 http://www.cserial.com/
07 http://www.serials.be/
08 http://www.findserialnumber.com/

நீங்கள் தேடும் மென்பொருளுடைய சீரியல் நம்பர் கிடைக்கா விட்டல் ஒரு வாரம் அல்லது இரண்டுவாரத்திற்கு பிறகு அங்கு சென்று தேடினீர்கள் என்றால் கிடைக்கும்.

Sunday, March 30, 2014

குஜராத்தை கொடுத்தற்கே இவ்வளவு!?

கேரளாவைச் சேர்ந்த பெண் சாமியார் அமிர்தானந்தமாயிக்கும் அவரது சீடர்களுக்கும் இடையேயான பாலியல் தொடர்பு குறித்து அவரது அந்தரங்க செயலாளராகப் பணியாற்றிய 'கெயில் ட்ரெட்வெல்' என்பவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

கேரளாவின் கைரேலி பீப்பிள் என்ற தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "அமிர்தானந்தமயி முக்கிய சீடர்களுடன் பாலியல் உறவில் ஈடுபடுவதை நான் நேரில் கண்டுள்ளேன். என்னை மடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தவர் பாலு என்ற அமிர்தசுரபானந்தா சுவாமி ஆவார். அமிர்தானந்தாமயி உடன் தவறான உறவை இவர் வைத்துள்ளார்.

பின்னர் நான் மடத்தை விட்டு வெளியேறியபோது மடத்தின் நிர்வாகிகள் என்னை பின் தொடர்ந்தனர். ஆஸ்திரேலியாவில் எனக்கு சொந்தமாக 15 ஆயிரம் டாலர் செலவில் ஆசிரமம் கட்டி தருவதாக அமிர்தானந்தாமயி-யின் மடம் வாக்குறுதி அளித்தது. மடத்திற்கு எதிராக நான் வழக்கு தொடருவேன்." என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கெயில் ட்ரெட்வெல் தான் எழுதிய 'ஹோலி ஹெல்’என்ற நூலில் அமிர்தானந்தமாயி குறித்து பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடியின் ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள்.

மகளிர் தினத்தில் இதை ஏன் பதிவிடுகிறேன் என்றால் மோடியிடம் குஜராத்தை கொடுத்தற்கே இவ்வளவு கொடுமை மகளிர்க்கு இழைக்கப்படுகிறது என்றால் நாட்டை கொடுத்தால் எப்படியிருக்கும் என்று மகளீரே தாங்கள் யோசிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு.

கேரள பெண் செக்ஸ் சாமியார் சீடர்களுக்கிடையே உள்ள பாலியல் தொடர்பு அம்பலமாகி உள்ள நிலையில் இந்த குஜராத் கேடி தன்னை பிரமச்சாரி என்று சொல்லி கொள்ளும் இந்த மதம் பிடித்தவன்  (மோடி) இப்படிபட்ட அசிங்கங்களுடன் உட்கார்ந்து இருப்பதும் எவ்வளவு கேவலத்திலும் கேவலம், சிந்திப்பீர் நாட்டை கொடுத்தால் என்னாகும் என்று?.


Sunday, March 23, 2014

ரசத்தின் ரகசியம் இதுதாங்கே!?

பலருக்கு சமையல் என்றாலே அலர்ஜிதான் போங்க  ரசத்தின் ரகசியம் இதுதாங்கே. நம் இன்றைய வாழ்வில் உடலுக்கு நன்மை தராத எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளையும், கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவையும் தான் அதிகமாக எடுத்துக் கொண்டு வருகிறோம். அப்படிப்பட்ட சூழலில் வாரத்தில் ஒரு நாளாவது இதுபோன்ற மருத்துவ குணமுள்ள உணவை எடுத்துக் கொண்டால் நல்லது. இது ஒரு மருத்துவ குணமுள்ள ரசம். ஜலதோஷம், தொண்டை கரகரப்பு, உடல்வலி, அஜீரணம் இவற்றால் அவதிப்படுபவர்கள் இந்த ரசத்தை சாப்பிடலாம். மற்றவர்களும் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். 


கண்டந்திப்பிலி ரசம்: தேவையானப் பொருட்கள், கண்டந்திப்பிலி – ஒரு மேசைக்கரண்டி, தக்காளி – ஒன்று, கொத்தமல்லி – ஒரு கொத்து, வேக வைத்த பருப்பு – கால் கப், புளி தண்ணீர் – அரை கப், உப்பு – ஒன்றரை தேக்கரண்டி, மிளகு, சீரகப் பொடி – ஒரு தேக்கரண்டி, மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி, நெய் – 2 தேக்கரண்டி, எண்ணெய் – ஒரு தேக்கரண்டி.

தக்காளியை கழுவி விட்டு நீளவாக்கில் நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 

கொத்தமல்லியை ஆய்ந்து கழுவி எடுத்துக் கொள்ளவும். 

கண்டந்திப்பிலியை பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு எண்ணெய் சட்டியில் கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீரை ஊற்றி, அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளித் துண்டங்களைப் போட்டு கரண்டியை வைத்து நன்கு மசித்து விடவும்.

அதனுடன் மிளகு, சீரகத் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் ஒன்றரை தேக்கரண்டி கண்டந்திப்பிலிப் பொடி போட்டு 15 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்.

ரசம் ஒரு கொதி வந்ததும் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பருப்பை அதனுடன் சேர்த்து கலக்கி விட்டு 3 நிமிடம் கொதிக்க விடவும். பருப்பு சேர்ப்பதால் ரசம் நன்கு சுவையாக இருக்கும். ரசம் 3 நிமிடம் நன்கு கொதித்து நுரைத்து வரும் போது மேலே கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.

பிறகு இரும்பு குழிக்கரண்டி அல்லது சிறிய வாணலியில் 2 தேக்கரண்டி நெய் அல்லது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடிக்க விடவும்.

கடுகு வெடித்ததும் மீதம் உள்ள கண்டந்திப்பிலி பொடியை போட்டு தாளித்து அதை ரசத்தில் ஊற்றி அதே கரண்டியை வைத்து ரசத்தை கலக்கி விடவும்.

இப்போது சுவையான கண்டந்திப்பிலி ரசம் தயார். உடல் அலுப்பினை போக்குவதற்கு இந்த கண்டந்திப்பிலி ரசம் கைகண்ட மருந்து.

Sunday, March 16, 2014

ஸ்ட்ரிக்ட்லி ஓவர் 18 ப்ளீஸ்!?

(எச்சரிக்கை: பதினெட்டு வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் படிக்கவும்...!) ஒன்லி 18 ப்ளீஸ்.

"புத்தாண்டு" வந்த புராணக்கதை...!

நாரதருக்கு ஒருமுறை விரகதாபம் அதிகமாகிவிட்டது. கிருஷ்ணனிடம்" நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் உல்லாசமாக இருக்கிறீர்களே… எனக்கு ஒரே ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?" என்று கேட்டார். 

அதற்கு கிருஷ்ணன், "நான் உடன் இல்லாமல் வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள்” என்றார்.

உடனே நாரதர், அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியவில்லை. 

கிருஸ்ணனரின் ஆண்மைத் திறத்தை (!)க் கண்டு அவர் மீதே மோகம் கொண்டார் நாரதர். இதை கிருஸ்ண்ணிரடமும் சொன்னார்.

அதற்கு கிருஸ்ணர், “யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய். பிறகு என்னிடம் வா" எனச் சொல்ல, நாரதரும் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார்.

அதன் பின், கிருஷ்ணரும் நாரதரும் அறுபது வருடங்கள் கூடி வாழ்ந்தனர். அவர்களுக் , அறுபது பிள்ளைகள் பிறந்தன. அவர்கள்தான் பிரபவ தொடங்கி அட்சய முடிய உள்ள அறுபது வருடங்கள்! (ஆதாரம்: அபிதான சிந்தாமணி - 1392ஆம் பக்கம்).


விஷயம் என்னவென்றால் பார்ப்பண பயங்கரவாதிகளால் உருவாக்கப்பட்டதுதான் இந்(து)த மதம் ஆணோடு ஆண புணர்வது, பெண்ணுடன் பெண் புணர்வு. இதைதான் கோயிலில் சிற்பமாக காண சகிக்காத அசிங்கங்களை அரங்கேற்றி இருக்கிறார்கள் பார்ப்பன பயங்கரவாதிகள். இப்பதிவு யார் மனதையும் புண் படுத்துவதற்கு அல்ல புரிய வைப்பதற்கு.

Sunday, March 9, 2014

வாழ்க்கை ஒரு வட்டம்!?

ஒரு ஊரில் ஒரு குயவன் அவன் தாய், மனைவி, மற்றும் மகனுடன் வாழ்ந்து வந்தான். குயவனின் மனைவிக்கு அவளது மாமியாரைப் பிடிக்கவில்லை.

அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பத் துணிந்தாள். குயவனை தினமும் நச்சரித்தாள்.

அவனது அம்மாவை பக்கத்தில் ஒரு வீட்டில் குடியமர்த்தும் படி சொன்னாள்.

வெகு நாட்கள் குயவன் அவள் சொன்னதை காதிலேயே போட்டுக் கொள்ளாமல் இருந்தான்.

மனைவி விடாமல் நச்சரித்தாள். அவனது அம்மாவிற்குத் தனியாக இருந்தால் ஒரு குறையும் வராது என்றும், அவரது சாப்பாட்டுத் தேவையைத் தான் கவனித்துக் கொள்வதாகவும் சொன்னாள். ஒரு நாள் குடியானவனுக்கு நச்சரிப்புத் தாங்க முடியவில்லை.

அம்மாவைப் இருபது அடி தள்ளியிருந்த ஒரு வீட்டில் குடியமர்த்தினான்.

மனைவி மாமியாரிடம் குயவன் செய்த தட்டு ஒன்றைக் கொடுத்து, வேளாவேளைக்குத் தன் வீட்டுக்குத் தட்டை எடுத்து வந்தால் அதில் உணவு நிரப்பித் தருவதாகவும், அதை மாமியார் அவர் வீட்டுக்கு எடுத்துச் சென்று மகிழ்ச்சியாகச் சாப்பிடலாம் என்றும் கூறினாள்.

மாமியாருக்கு இது அவமானமாகத் தோன்றினாலும், தன் மகனுக்காக வாயைத் திறக்காமல் மருமகள் சொன்ன வழியில் வாழ்ந்து வந்தாள்.

பேரனுக்குப் பாட்டி வீட்டை விட்டுப் போனது அறவே பிடிக்கவில்லை. அவன் அம்மாவுக்குத் தெரியாமல் சில சமயம் பாட்டி வீட்டிற்குச் சென்று விளையாடுவான்.

அவன் வளர வளர குயவன் மண்பாண்டம் செய்வதைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான். சில சமயம் குயவன் வேலை செய்யாத mபோது அவனது இயந்திரத்தை மகன் இயக்கிப் பார்க்க ஆரம்பித்தான். ஒரு நாள் மகனுக்கு அப்பாவைப் போலவே மண்பாண்டம் செய்ய வந்தது. மிகச் சிறு வயதிலேயே அவன் அப்பாவின் தொழிலைக் கற்றுக் கொண்டான்.

அவன் முதல் முதலில் தன் அம்மாவுக்கு அருமையான தட்டு ஒன்றைச் செய்தான். அதை அவன்அம்மாவிடம் கொடுத்த போது அவள் மகனின் திறமையை நினத்து பெருமைப் பட்டாள். தனக்கு அவன் முதலில் பொருள் செய்து கொடுத்ததை எண்ணி அளவில்லா மகிழ்ச்சி அடைந்தாள்.

தனது சிறிய மகனை இவ்வாறு கேட்டாள்: "மகனே! நீ செய்த தட்டு மிக அருமை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது .

எத்தனையோ பாண்டங்கள் இருக்கும் போது ஏன் எனக்கு ஒரு தட்டைச் செய்து தர வேண்டும் என்று உனக்குத்,தோன்றியது?" மகன் குழந்தைத் தனமாகச் சொன்னான்:

"அம்மா! ஒரு நாள் நான் அப்பாவைப் போலக் கல்யாணம் செய்து கொள்வேன். அப்போது நீ பாட்டியைப் போல பக்கத்து வீட்டுக்குப் போய் விடுவாய் அல்லவா. அப்போது உனக்கு என் மனைவி தினமும் சாப்பாடு கொடுக்க ஒரு தட்டு வேண்டுமல்லவா! அதைத்தான் உனக்கு நான் இப்போது செய்து கொடுத்தேன்"  


@ வாழ்க்கை ஒரு வட்டம்! இன்று நீ பிறறுக்கு செய்வதை நாளை பிறர் உனக்கு செய்வர்.

Sunday, March 2, 2014

இதயம் வலிமை பெறும் இதழ் !!

செம்பரத்தம் பூ: இந்தப்பூவில் 5 பூவின் இதழ்களை 200 மில்லி நீரில் விட்டுக் கஷாயமாக்கி சர்க்கரை கூட்டி 2 வேளை 5 நாட்கள் பருகி வர இதயம் வலிமை பெறும்.

தும்பைப்பூ: இம்மலரை கஷாயம் வைத்துப் பருகுவதால் காய்ச்சல் நீங்குவதோடு தொண்டைக்கட்டும் இளகும். இம்மலரை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி வாரம் ஒரு முறை தலைமுழுகி வர ஜலதோஷம் சீதள சம்பந்தப்பட்ட நோய்கள் விலகும்.

மாதுளம் பூ: உலர்ந்த பூவை இடித்துத் தூள் செய்து வேளைக்கு 10 கிராம் தயிரில் போட்டு கலக்கி தினம் 2 வேளை பருகி வர இரத்தபேதி, சீதபேதி நீங்கி சிறுகுடலுக்குப் பலத்தைக் கொடுக்கும். பெண்களின் கருப்பை சுத்தம் அடையும்.

மருதோன்றி பூ: உறக்கம் வராமல் தவிப்பவர்கள் இந்த மலரை தலையணைக்குப் பக்கத்தில் வைத்து உறங்கச் செல்ல 10 நிமிடத்தில் உறக்கம் வரும்.

Sunday, February 23, 2014

மோடி கூட்டத்தில் குண்டு வெடிப்பதேன் !?

மோடி சொல்கிறார் - குண்டு வெடித்த பிறகு இனிமேல் குண்டு வெடிக்காது - நாம் மாநாட்டை தொடங்குவோம் என்று.( யாரா இருந்தாலும் மேடைல பாம் இருக்கு - என்று சொன்னாலே - கூட்டத்தை கேன்சல் பண்ணிடுவார்கள்).

குண்டு வெடித்த பிறகு மோடி இடம் - காவல் துறை சில நேரம் காத்திருங்கள் - வேறு ஏதும் குண்டு இருக்கிறதா ? என்று பார்க்கிறோம் என்று சொல்லியும் இல்லை இல்லை  நான் போய் பொய் பேசியே ஆக வேண்டும் என்று அடம் பிடித்து மேடையில் பேசினார்.

அப்படியெனில் இனிமேல் குண்டு வெடிக்காது என்பது மட்டும் எப்படி மோடிக்கு தெரியும் ?

 அவ்வளவ்வு 
தைரியமானவர மோடி.

அப்படியெனில் இனிமேல் நடக்க இருக்கும் எந்த பொது கூட்டத்திற்கும் - மோடி மட்டும் எனக்கு எந்த பொலிசும் தேவை இல்லை - நான் மட்டும் போகிறேன் என்று சொல்ல முடியுமா ? பின் எதற்கு இந்த நாய்க்கு இத்தனை பாதுக்காப்பு.

யாரா இருந்தாலும் - மேடைல பாம் இருக்கு - என்று சொ
ன்னாலே - கூட்டத்தை கேன்சல் பண்ணிடுவார்கள்.

ஆனால் 6 குண்டு வெடித்தும் 5 பேர் செத்த பிறகும் நான் போய் பேசித்தான் ஆக வேண்டும் என்று ஒரு மணி நேரம் பேசி இருக்கிறார் மோடி என்றால் ?
ஏன் மோடி வைத்த குண்டு??.
 
5000 பொலிசார் - பாதுகாப்பு பனியில் ஈடுப்பட்டுள்ளன
ர்  என்பது குறிப்படத்தக்கது.

ஆனால் குண்டு வெடிக்குது என்றால் - யார் குண்டை வைத்தார்கள் - VIP கார்களில் குண்டு எடுத்து செல்ல பட்டதா ? இல்லை போலீசில் பனி புரியும் பிஜேபி யினர் வைத்தனாரா ? யாருயா வைத்தாரகள்? இந்திய முஜாஹிதீனா ?

இந்தியன் முஜாஹிதீன் ஏன் 5000 பொலிசாரின் "மெட்டல் சோதனை கருவி" யில் சிக்கவில்லை?

மேலும் மோடி பேச இருக்கும் இடத்தை - பொலிசார் - குண்டு இருக்கா அல்லது இல்லையா என்று முன்பே செக் செய்து இருக்கிறார்கள் --ஆனால் குண்டை கூட்டம் நடக்கும் போது தான் - கயவர்கள் எடுத்து கொண்டு சென்று இருகின்றனர் ? அதுவும் மோடி வருவதற்கு முன்.

ஏன் ஒரு குண்டு கூட வெடிக்கவில்லை மோடி வந்த பிறகு ...

ஏன் மோடியின் மேடையில் வெடிக்க வில்லை !!
மோடி ஏன் ரிமோட்ட அமுக்க வில்லையா ?

அடுத்து - மோடி கூடத்தில் குண்டு வெடிப்பை பற்றி எதுவும் பேசவில்லை - ஏன் எல்லா மீடியாவும் இப்படி எழுதராங்கா - ரத்த களரியா போய் இருக்கும் என்று மோடி பேசி இருந்தால் ?

ஆனால் அதில் ஒரு உண்மை இருக்கிறது - என்ன உண்மை ? அதான் - ஒரு வேலை - குண்டுவெடிப்பை பற்றி மோடி பேசி இருந்தால் - வாய் தொறந்து மோடியே தனது வாயால் ஒளறி இருப்பார் அதனால் தான் மோடி பேசவில்லை என்று தெரிகிறது.

குண்டு வெடித்தவுடனயே - இந்தியன் முஜாஹிதீன் பேரு மட்டும் வருதே ? யாரு இந்த மிந்தியன் முஜாஹிதீன் ? யாரு இந்த அமைப்போடைய தலைவன் ? இல்லை உண்மை குற்ற வாளிகளை பிடிக்க முடியாமல் போவதால் சில குண்டுவெடிப்பு வழக்குகளில் ..வழக்கை முடிப்பதரக்காக புனையப்பட்ட கற்பனை கதா பாத்திரமா ? ஒலவு துறையால் புனையப்பட்ட கற்பனை பெயர்தான் இந்திய முஜாஹிதீனா ?

மானம்கெட்ட மத்திய உள்துறை விளக்கவேண்டும்.

இந்த குண்டு வெடிப்புக்கும் மட்டும் இல்லமால் -அனைத்து குண்டு வெடிப்பிற்கும் இந்தியன் முஜாஹிதீன் மீது குற்றம் சுத்துவது நியாயமா ? குற்றம் சுமத்தலாம்.

ஆனால் அனைவரையும் விசாரிக்க வேண்டும் அதாவது - பல கோணத்தில் விசாரிக்க வேண்டும் . ஒரு வேலை - இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பு சில குண்டு வெடிப்பை செய்வாதாக உளவு துறை கூறினாலும், நிரூபிக்க முடியவில்லை, ஆனால் ஏன் இந்திய முஜாஹிதீன் என்ற பெயர் யூஸ் பண்ணி மோடி மாறி ஆளுங்க குண்டு வைத்திருக்க கூடாது. சிந்திக்கவும்.

அதான் பலி சுமக்க இந்தியன் முஜாஹிதீன் இருகன்லா - நாம குண்ட போட்டு அனுதாபா ஒட்டு வாங்கலாம அல்லவா !

ஏற்கனவே முஸ்லிம் எல்லாம் நம்ம (மோடி)மேல கோபாம வேற இருக்காங்க - என்று மோடி நினைத்து இதை செய்திருக்க வாய்ப்புகள் அதிகம். போலிஸ் தீவிரமாக மோடியை விசாரிக்க வேண்டும்.

மேலும் மோடியின் கதையை முஸ்லிம்கள் முடிக்கத்தான் வேண்டும் என்று நினைத்திருந்தால்  - கடந்த 12 வருடங்களுக்குலே கிளோஸ் பண்ணி இருப்பார்கள் - ஆனால் முஸ்லிம்கள் விட்டு விட்டார்கள் - கடவுள் ஒருத்தன் இருக்கான் அவன் பார்த்து கொள்வான் என்று அனைத்து கோணத்திலும் போலிஸ் விசாரிக்க வேண்டும் - இந்தியன் முஜாஹிடீனையும் விசாரிக்கவேண்டும் எது உண்மை என்பதை நிரூபிக்க வேண்டும் . ஆனால் இது வரை நடந்த சம்பவங்களில் அனைத்துமே - இந்திய முஜாஹிதீன் என்று சொல்கிறார்கள் அதுதான் காமடியா இருக்கு.

இதையே மாற்றி சிந்துத்து பாருங்கள்  ஆர் எஸ் எஸ் தீவிரவாதிகளோ அல்லது பார்ப்பன பயங்கரவாதிகளோ இருந்தால் இதை எப்போதே செய்துவிட்டு (மோடியை கொன்றுவிட்டு) இந்தியன் முஜாகிதீன் பெயரை ஊடகங்களில் செய்தியை உலாவிட்டு இருப்பார்கள்.

Tuesday, February 18, 2014

ஏ.டி.எம். வசதிக்கு பின்னால் சில பிரச்சினை!?

வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதை ஒரு நிமிடத்திலேயே முடித்துத்தரும் ஏ.டி.எம். இந்த ஹை-டெக் யுகத்தில் நமக்கெல்லாம் வரப்பிரசாதம்தான். ஆனால் எந்த ஒரு வசதிக்கும் பின்னால் சில பிரச்னைகள் ஒளிந்திருக்கும்.

ஏ.டி.எம். பயன்படுத்தும் போது நீங்கள் மிகவும் பாதுகாப்பாக உங்கள் பணத்தைக் கையாள உதவும் வகையில் இதோ சில டிப்ஸ்கள்:

வரிசையில் நின்று பணம் எடுக்கும் அளவுக்கு பிஸியாக இருக்கும் ஏ.டி.எம். பூத்துகளையே தேர்ந்தெடுங்கள். அதுபோல ஒரே அறையில் இரண்டு மெஷின்கள் இயங்கும் பூத்துகளை இரவு வேளைகளில் பயன்படுத்துவதை தவிருங்கள். ஏ.டி.எம்.மைப் பயன்படுத்தும் ஆரம்பகாலத்தில் நம்பிக்கையான ஒருவரின் துணை அவசியம்.

பெரியகடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகளில் கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதி இருக்கிறது. சில நாணயக் குறைவான நிறுவனங்களில் உங்கள் கார்டை தேய்த்துப் பணம் பெற்ற பிறகு, ரகசியமாக தாங்கள் வைத்திருக்கும் இன்னொரு மெஷினிலும் தேய்த்துக் கொள்வார்கள். இதன் மூலம் உங்கள் கார்டின் அனைத்து விவரங்களும் அந்தத் திருட்டு மெஷினில் பதிவாகிவிடும். பிறகு ஒரு போலி கார்டைத் தயாரித்து உங்கள் பணத்தை அபேஸ் செய்துவிடுவார்கள். எனவே உங்கள் கார்டை தேய்க்கும் போது உங்கள் கண்கள் அதிலேயே கவனமாக இருக்க வேண்டும் என்பதை மறவாதீர்கள்.

முடிந்த மட்டிலும் உங்கள் கணக்கு இருக்கும் வங்கியின் ஏ.டி.எம்.மைப் பயன்படுத்துவதே சிறந்தது. இதனால் சிலசமயம் பணம் வருவதில் கோளாறு ஏற்பட்டாலோ, அல்லது பணம் வராமல் தொகை உங்கள் கணக்கில் கழிக்கப்பட்டாலோ மேற்கொண்டு நாம் எடுக்க வேண்டிய முயற்சிகளுக்கான நடைமுறைகள் கொஞ்சம் எளிதாக இருக்கும்.


(வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே தற்போது ஏ.டி.எம். பரிவர்த்தனை வாயிலாக பணத்தை ரொக்கமாக பெற முடியும்.வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு, வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அனுப்பும் பணத்தை ஏ.டி.எம். மூலம் பெறும் வசதியை அறிமுகப்படுத்துவதற்கு ரிசர்வ் வங்கி கொள்கை அளவில் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.).

Monday, February 10, 2014

தம்பதியர் குழந்தை பேறு பெற!!

குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரை ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

எளிமையுடன் எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன.

பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது.

இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண் நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.

கண் பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண் பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும். 
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.

பல் வலி, பல்லசைவு, போன்ற பல வகையான பல் வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

செவ்வாழைப் பழத்தின் சிறப்புகள்: திருமணமான தம்பதியர் குழந்தை பேறு பெற செவ்வாழை அருமருந்தாகும்.

Tuesday, February 4, 2014

உஷார் பெண்களே உஷார் !?

Rohypnol என்ற எளிதில் கரையும் சுவையற்ற மருந்து ஒரு பெண்ணுக்குக் கொடுக்கப்பட்டால், சிறிதுநேரத்தில் போதை ஏறி சொல்வதையெல்லாம் கேட்கும் நிலைக்கு வந்துவிடுவார்களாம்.

இரண்டொரு மணிநேரத்தில் தன்னிலை மறந்து பத்து பனிரெண்டு மணிநேரத்திற்கு மயக்கத்தில் இருக்க நேரிடுமாம். 
 மாத்திரை காமவெறியர்களின் புது ஆயுதம்..! பாலியல் வல்லுறவு உட்படுத்தப்பட்டாலும் விந்தணு சோதனையில் எதுவும் கண்டுபிடிக்க முடியாதாம்.

அதைவிட கொடுமை அந்த பெண் எப்போதுமே கருவுறமுடியாமல் போய்விடுமாம்.

தொடர்ந்து கொடுக்கப்பட்டால் இதற்கு அடிமை ஆகநேரிடுமாம்.

மேலும் பல பக்கவிளைவுகள் உண்டு என்கின்றனர்.

இதேபோல நிறைய வல்லுறவுக்கு வழிவகுக்கும் மருந்துகள் இருக்கின்றன.

அவற்றில் இந்த ரோஹைப்னால் எளிதில் கிடைக்கக்கூடியது.

எனவே, பெண்களே, நீங்கள் இரவுநேரக் கொண்டாட்டங்களுக்குச் செல்லாதவர்களாக இருந்தாலும் எப்போதாவது தனியாக ஒரு இடத்திற்குச் செல்லநேரலாம்.

அல்லது வேறு எதோ ஒரு சூழ்நிலையில் உங்களுக்கு நம்பிக்கையானவர் மூலம் வேறுயாராவது கொடுத்துவிடலாம்.

மூடிய புட்டிகளிலும் ஊசியால் செலுத்தப்பட்டிருக்கலாம்; சுவையும் இருக்காது. எனவே வெளியிடங்களில் எச்சரிக்கையாக இருங்கள்.


இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!