Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, November 24, 2013

படுக்கை அரை காட்சிக்கு10 லட்சம் ?


‘யு டியூப்பில் வெளியிடுவேன்’ என மிரட்டல் மனைவியை நிர்வாணமாக படம் பிடித்து 10 லட்சம் கேட்ட டாக்டர் கைது திருவனந்தபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்.

திருவனந்தபுரம் ஸ்ரீகாரியம் அருகே உள்ள செருவைக் கல் பகுதியை சேர்ந்தவர் வித்யாதரன். இவரது மகன் ஜெயகிருஷ்ணன் (27). பல் டாக்டரான இவர் தற்போது கோதமங்கலத்தில் உள்ள பல் மருத்துவ கல்லூரியில் எம்.டி.எஸ். படித்து வருகிறார். கடந்த செப்.15ம் தேதி இவருக்கும் அடூர் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. 


மனைவியுடனான படுக்கையறை காட்சிகளை அவருக்கு தெரியாமல் ஜெயகிருஷ்ணன் வீடியோ எடுத்துள்ளார். மேலும் அவரை நிர்வாணமாக்கி புகைப்படமும் எடுத்துள்ளார். இவை அனைத்தையும் லேப்டாப்பில் பதிவு செய்தார். மனைவியை மது குடிக்கவும், ஆபாச படங்கள் பார்க்கவும் ஜெயகிருஷ்ணன் வற்புறுத்திள்ளார். இதற்கு மனைவி மறுக்கவே அவரை கொடுமைப்படுத்த தொடங்கினார். 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு மனைவியை எர்ணாகுளத்துக்கு அழைத்து சென்ற ஜெயகிருஷ்ணன் நடுரோட்டில் அவரை இறக்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து தனது பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டு நடந்தவற்றை அந்த பெண் கூறினார். அவர்கள் உடனடியாக அங்கு வந்து அவரை அழைத்து சென்றனர். இந்நிலையில், மனைவியின் பெற்றோரை தொடர்பு கொண்ட ஜெயகிருஷ்ணன், எனக்கு ரூ.10 லட்சம் தராவிட்டால் உங்களது மகள் என்னுடன் இருக்கும் படுக்கையறை காட்சிகள், நிர்வாண புகைப்படங்களை யு டியூப்பில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். 

இதில் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் பெற்றோர் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் நாசரூதீன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, ஜெயகிருஷ்ணனை கைது செய்தனர். மேலும் அவரது வீட்டில் இருந்து லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டரை பறிமுதல் செய்தனர்.

Thursday, November 21, 2013

உணர்வு! செல்பேசி ரிங் அடிப்பது போல?

சிட்னி: 21ம் நூற்றாண்டில் பல ஆயிரம் பேருக்கு தொற்றியுள்ள ஒரு நோய் என்றால் அது பெனோமேனன் நோய்தான்.

அதாவது உங்கள் அருகில் அல்லது உங்கள் பாக்கெட்டில் இருக்கும் செல்பேசி ரிங் அடிப்பது போல உணர்ந்து அதை எடுத்துப் பார்க்கிறீர்கள். ஆனால் அதில் எநத அழைப்பும் வந்திருக்கவில்லை. இதுபோல பலரும் பல சமயங்களில் செய்திருப்போம். ஆனால் இதுவும் ஒரு வகை நோய் என்கிறது மருத்துவ உலகம்.

செல்பேசியை தொடர்பு கொள்ள வரும் எலக்ட்ரிக்கல் சிக்னல்கள், மனித உடலில் உள்ள நரம்புகளை தாக்கும் போது போன் அடிப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுவதாக சிட்னி பல்கலைக்கழகத்தின் சைக்காலஜி பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

Sunday, November 17, 2013

அமெரிக்காவையே அசத்திய ஆச்சரிய மனிதர்!!

20 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த வரலாற்று நாயகர்களில் ஒருவர் தான் இந்த மால்கம் x என்ற சகோதரர். அமெரிக்காவில் தலைவிரித்து ஆடிய இனவெறிக்கு எதிராக போராடி அதில் வெற்றியும் கண்ட ஒரு வரலாற்று நாயகன்.

சிறுவயதில் தந்தையை இழந்து, தாய் மனநிலை பாதிக்கப் பட்டு, கல்வி நின்று போய் தவறான வழிக்கு சென்ற மால்கம் x ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு குற்றத்திற்காக 10 ஆண்டுசிறை தண்டனை வழங்கப் பட்டு சிறையில் அடைக்கப் படுகிறார். (அங்குதான் அவருக்கு இஸ்லாம் அறிமுகமானது).

சிறையில் இருந்து விடுதலையாகி 1952 ஆம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு தன்னை நேசனல் ஆஃப் இஸ்லாம் என்ற இயக்கத்தில் ஐக்கியப் படுத்திக் கொண்டு இனவெறிக்கு எதிராக போராடியவர்.

ஆப்ரிக்க அமெரிக்கர் (கருப்பர்கள்) இனத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான் உயர்ந்தவர்கள் மற்றவர்கள் அனைவரும் அவர்களுக்கு கீழே தான் என்றும் முக்கியமா வெள்ளையர்கள் அனைவரும் சாத்தான்கள் என்ற எண்ணம் கொண்டிருந்த சகோதரர் மால்கம் x அவர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை ஏற்படுகிறது.

அது அவர் இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் புனிதப் பயணமான ஹஜ் பயணத்தை மேற்க் கொள்கிறார். அங்கு அவர் பார்த்த காட்சி அவரை உறைய வைத்து விட்டது. "வெள்ளையர்கள்,கருப்பர்கள் என மக்கள் எந்த வித நிறம் இனம் பாராமலும் பழகிய காட்சி அவருக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது.

ஆப்ரிக்க அமெரிக்கர்கள் தான் சிறந்தவர்கள் என்ற அவரின் எண்ணமும்,வெள்ளைக்காரர்கள் மீதான அவரின் தவறான எண்ணமும் மாறி மனிதர்கள் அனைவரும் சமம் என்ற கொள்கைக்கு அவரை வரசெய்தது.

அதற்கு பிறகு யாரையும் இழிவாக கருதாமல் இஸ்லாம் காட்டி தந்த வழிமுறையோடு தொடர்ந்து கறுப்பின மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்து வந்த சகோதரர் மால்கம் x. மக்களும் சாரை சாரையாக தங்களை இஸ்லாத்தில் ஐக்கியப் படுத்திக் கொண்டு மால்கம் x அவர்களின் பின்னால் அணி திரள ஆரம்பித்தார்கள்.

1965 ஆம் ஆண்டு மக்கள் மத்தியில் இஸ்லாமிய உரை நிகழ்த்திக் கொண்டிருந்த வேளையில் மர்ம நபர்களால் சுட்டுக் கொள்ளப் பட்டார்.

#இதுதான் இஸ்லாத்தின் மகிமை.நபி(ஸல்) அவர்கள் கொண்டுவந்த கொள்கை இன்றளவும் செய்து கொண்டிருக்கும் ஒரு அற்புதம்.எந்த கொள்கையாலும் செய்ய முடியாத அறபுதம்.

நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள் மக்களே அறிந்து கொள்ளுங்கள் ஒரு கருப்பன் வெள்ளையனை விடவோ, ஒரு வெள்ளையன் கருப்பனைவிடவோ, ஒரு அரபி அரபி அல்லாதவனை விடவோ எந்த சிறப்பும் இல்லை.உங்கள் இறை அச்சம் மட்டுமே உங்களை இறைவனிடத்தில் நீங்கள் யார் சிறந்தவர்கள் என்று நிரூபிக்கும் என்ற நபி(ஸல்) அவர்களின் அறிவுரை இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்ற ஒவ்வொரு முஸ்லிமும் இன்றளவும் கடைப் பிடிக்கும் கொள்கை.

இறைவன் நாடினால் மரணிக்கும் வரை நான் உட்பட எந்த ஒரு முஸ்லிமும் இந்தக் கொள்கையை விட்டு விலகமாட்டோம்., சகோதரர் மால்கம் x அவர்களை பற்றி மேலும் தகவல் தெரிந்து கொள்ள : http://www.ethirkkural.com/search/label/Malcolm%20X.

(மேலே உள்ள படம்: இதை பார்க்கும் பொழுதே உடல்கள் சிலிர்க்கிறது இந்த இடத்தில தான் பிறை 8 அன்றில் இருந்து பிறை 10 அன்று ஹஜ் கடமை பூர்த்தியாகும் வரை ஏழை பணக்காரன், கருப்பன் வெள்ளையன்,அரேபியன் அரபி அல்லாதான் என எந்த வித வித்தியாசமும் இல்லாமல் இங்கு அமைக்கப் பட்டுள்ள கூடாரங்களில் தங்க வேண்டும்.

அனைவருக்கும் இங்கே ஒரே மாதிரியான இருப்பிடம், உடை என இறைவன் முன் எவனுக்கும் எந்த சிறப்பும் இல்லை என்ற உணர செய்யும் ஓர் அற்புதமான இடம்.மனிதர்களின் அகம்பாவம் அழிந்து போக செய்யும் இடம்).

Friday, November 15, 2013

குடி குடியை கெடுக்கும் குளிர் பானம் உடல் நலத்தை கெடுக்கும்!

பாரிஸ்: மனித வாழ்க்கையில் முக்கிய அம்சமாக மாறிவிட்ட குளிர்பானங்கள் (சாஃப்ட் ட்ரிங்க்ஸ்) நீரிழிவு நோய்க்கான வாய்ப்பை அதிகரிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உடலுக்கு அதிகமான அளவில் சர்க்கரை கிடைப்பது குளிர்பானங்கள் மூலமாகும். இக்காரியத்தில் ஐஸ் க்ரீம், மிட்டாய்களை குளிர்பானங்கள் பின்னுக்குத் தள்ளிவிட்டன. க்ரெடிட் நியூஸ் ரிசர்ச் இன்ஸ்ட்யூட் நடத்திய ஆய்வு இதனை தெரிவிக்கிறது.

ஒரு கப் குளிர்பானத்தில் எட்டு ட்யூஸ்பூன் சர்க்கரை அடங்கியிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது மனித உடலில் சாதாரணமாக இருக்க வேண்டிய சர்க்கரையின் அளவை விட அதிகமாகும். உடல் பருமனுக்கு காரணம் குளிர்பானங்கள்தாம் என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சர்க்கரை திரவ நிலையில் உடலுக்குள் சென்றால் விரைவாக உடலுக்குள் கரைந்து பெரிய அளவில் கலோரி ஒன்றிணைந்து உடலுக்குள் நுழைவதற்கு காரணமாகிறது. ஆகையால் பெரும்பாலோருக்கு டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமன் ஏற்பட காரணமாகிறது.

உலக மக்களின் 20 சதவீதம் பேரும் உடல் பருமனாக உள்ளார்கள். அமெரிக்கா, பிரேசில், ஆஸ்திரேலியா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் குளிர்பானங்களின் பயன்பாடு அதிகமாகும். சீனர்கள்தாம் குறைந்த அளவில் சர்க்கரையை உபயோகிக்கின்றனர். தினமும் ஏழு ஸ்பூன் சர்க்கரையை மட்டுமே அவர்கள் பயன்படுத்துகின்றனர். குடி குடியை கெடுக்கும் குளிர் பானம் உடல் நலத்தை கெடுக்கும் புதுமொழி, ஆதலால் குளிர் பானத்திற்கு பதிலாக வென்ணீர் குடியுங்கள் உணவுக்கு பின்.

Monday, November 11, 2013

வாழ்க்கையை திருப்பி தர முடியுமா உங்களால்??

மேல் படத்தை நன்கு அவதானியுங்கள் எந்த குற்றமும் புரியாமல் சந்தேகத்தின் பெயரிலேயே பல வருடங்கள் ஜெயில் வாழ்க்கை இவருடைய இளைமையை திருப்பி தர முடியுமா கா(வி)வல்துறை அல்லது இந்திய அரசாங்கம்?.

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு : 12 ஆண்டுக்குப் பிறகு 'நிரபராதி' என 'முஹம்மத் ஹனீப்' விடுவிப்பு!

ஊர் திரும்ப பணமில்லாமல் மேலும் 2 மாதம் ஜெயிலில் வேலை செய்த அவலம் !!

சோக கதை கேட்டு தாய் உள்ளிட்ட கிராம மக்கள் கண்ணீர் !!!

அப்பாவி விடுதலைப் பற்றி எந்த ஒரு ஊடகமும் பெரியதாக அலட்டிக் கொள்ளவில்லை. முஸ்லிம் பெயரில் ஒருவன் சிக்கினால் மட்டும் முதல் பக்கத்தில் செய்தி போட்டு காசு பார்க்கும் விபச்சார ஊடகங்கள் கைது செய்யப் பட்டவர்  அப்பாவி என்று விடுவிக்க பட்டால் அச் செய்தியை பற்றி கண்டுக் கொள்வதே இல்லை .

காவல்துறை யாரை தீவரவாதிகள் என்று பிடிக்கிறதோ அவர்கள் மீதுள்ள குற்றம் நிரூபிக்கப் படும் வரை அனைவரும் அவர்களை தீவிரவாதி என்று தான் சொல்ல வேண்டும்.அவர்களுக்கு யாரும் சப்போர்ட் செய்ய கூடாது.அப்படி செய்தால் அவர் தேச துரோகி என்று கூப்பாடு போடும் போலி நியாயவான்களே.

இவரின் 12 வருட வாழ்க்கையை திருப்பி தர முடியுமா உங்களால்??

இவர் அனுபவித்த சொல்லனா துயரங்களுக்கு நிவாரணம் தர முடியுமா உங்களால்??

தொலைந்த அவரின் இளைமையை திருப்பி தரமுடியுமா உங்களால்??

அவர் தாய் பட்ட வேதனைகளுக்கு ஆறுதல் சொல்லி அவரின் மனதை தேற்ற முடியுமா உங்களால்??

இது முதல் முறையா நடக்கிறது நமது நாட்டில் .நாட்டில் இதுவல்லவே முஸ்லிம்களுக்கு எதிரான தொடர்கதையாக இருக்கிறது.

நாட்டை சூரையாண்டவர்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்க அப்பாவிகள் ஆண்டுக் கணக்கில் சிறைவாசம் அனுபவித்து விட்டு தங்கள் வாழ்க்கையை இழந்து நாடு ரோட்டில் நிற்பதா?? இந்த அவல நிலை, நிச்சயம் சத்தியம் வெல்லும்.
 

Friday, November 8, 2013

மதமோ! இந்துக்களை ஏமாற்ற IPS அதிகாரி!?

மோடி போன்ற ஒரு ஃபாசிஸ்டுக்கு நிச்சயம் மதமோ மத நம்பிக்கைகளோ பொருட்டல்ல என்பதை அழுத்தமாகச் சுட்டிக்காட்டினார் மருதையன். ராமர் கோயில் கட்டுவேன் என்று அன்று அத்வானி சொன்னதற்குக் காரணம் உண்மையிலேயே ராமர்மீது அவருக்கு இருந்த பக்தி அல்ல; வகுப்புவாதத்தைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் அடைவதற்காகவே அவர் அப்படிச் சொன்னார். அந்த வகையில் அத்வானி, மோடி உள்ளிட்ட இந்துத்துவப் பரிவாரங்களின் அரசியல் என்பது இந்துக்களை ஏமாற்றி, அவர்களுடைய இறை நம்பிக்கையை ஏமாற்றி மேற்கொள்ளப்படும் அரசியல் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

தன்னுடைய அரசியல் லாபத்திற்காக அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து போலி என்கவுண்டரில் கொலை செய்து வந்த மோடி, தன்னுடைய கட்சியில் செல்வாக்கு பெற்ற தலைவராக உருவாகி வந்த தன் அரசியல் எதிரியான முன்னால் உள்துறை அமைச்சர் ஹரேன் பந்த்யாவை கொலை செய்து விட்டு பழியை முஸ்லிம் இளைஞர்கள் மீது போட்டுள்ள விபரம் தற்போது வெளியாகியுள்ளது .

மார்ச் 2003 இல் அகமதாபாத் லா கார்டன் பகுதியில் வைத்து ஹரேன் பந்த்யா சுட்டுக்கொல்லப்பட்டார் .இக்கொலை வழக்கில் ஹைதராபாத்தை சேர்ந்த அஸ்கர் அலி மற்றும் 12 பேர் கைது செய்யப்பட்டனர் .

ஹரேன் பாண்டியாவின் தந்தை வித்தல்பாய் ''தன் மகன் அரசியல் எதிரியான மோடியால் கொலை செய்யப்பட்டதாகவும், இவ்வழக்கில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள தாகவும் குற்றம்சாட்டினார். அப்பொழுது மத்தியில் இருந்த BJP அரசு மோடியை காப்பாற்றியது.

2011 ம் ஆண்டு குஜராத் உயர் நீதி மன்றம் அஸ்கர் அலி உள்ளிட்ட 12 பேரை விடுதலை செய்தது.


ஹரேன் பாண்டியாவின் மனைவி ஜக்ருதி விடுதலையான அஸ்கர் அலியை நேரில் சந்தித்து போது ''போலீசார் அவரை அடித்து துன்புறுத்தி அவர் மீது பொய் வழக்கு போடப்பட்டதையும் கண்டறிந்து ,தன் கணவரின் கொலையில் சம்பந்தப்பட்ட உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார் .

இந்நிலையில் சொராபுதீன் போலி என்கவுண்டர் கொலையில் கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஒரு IPS அதிகாரி '' ஹரேன் பாண்டியா கொலை பற்றியும் யார் கொலை செய்ய சொன்னார்கள் என்பதை பற்றியும் சிபிஐ அதிகாரிகளிடத்தில் கூறியுள்ளார். இக்கொலை வழக்கில் மோடி கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

@ குஜராத்தில் நடைபெறுவது அம்பானி, டாடா போன்ற பெரும் முதலாளிகளுக்கான அரசு மட்டுமே; வளர்ச்சி என்று சொல்லப்படுவது அவர்களுக்கான வளர்ச்சி மட்டுமே என்பதை அழுத்தமாகப் பதிவு செய்தார் மருதையன். மோடியும் கூடாது, காங்கிரஸ், மூன்றாவது அணி ஆகியவற்றாலும் பலனில்லை என்றால் என்னதான் வழி? ஒன்று, தேர்தல் புறக்கணிப்பு. இரண்டாவது, புரட்சி. ‘மக்கள் எழுச்சியடைந்து வீதிக்கு வந்தால்தான் மாற்றம் சாத்தியம். புரட்சி என்பது நாமே தேர்ந்தெடுப்பதல்ல. அதைவிட்டால் வேறு வழியில்லை என்னும் நிலைக்கு நம்மை இன்று கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது இன்றைய சூழல்.’(பொய்யைப் பரப்பியே ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று மனப் பால் குடிக்கிறார்கள்).

Monday, November 4, 2013

கர்ப்பிணிகள் கவனிக்க வேண்டிய மாதம்!

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளது. எனவே கர்ப்பிணிகள், முதல் மூன்று மாதங்களில் உண்ணும் உணவுகளிலும், செயல்களிலும் கவனத்துடன் நடக்க வேண்டியது அவசியமாகிறது. மேலும் மருத்துவர்களே, இந்த காலங்களில் பெண்களை நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டுமென்றும் பரிந்துரைப்பார்கள். 

கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். ஏனெனில் இந்த சத்துக்கள் தான் கருவில் உள்ள சிசுவின் வளர்ச்சியை அதிகரிக்கக்கூடியது. அதிலும் புரோட்டீன் கருவின் வளர்ச்சியை சீராக வைக்கவும், கால்சியம் குழந்தையின் எலும்புகள் வலுவோடு இருப்பதற்கும் உதவும். எனவே கர்ப்பிணிகள், இந்த காலங்களில் இந்த சத்துக்கள் நிறைந்த உணவை தவறாமல் சாப்பிட வேண்டும். சரி, இப்போது கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் எந்த உணவுகளையெல்லாம் தவறாமல் சாப்பிட வேண்டும் என்று பார்ப்போமா!!!

பசலைக் கீரை: பசலைக் கீரையில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், தாயின் உடலில் இரத்தமானது அதிக அளவில் உற்பத்தியாவதோடு, கருவில் உள்ள சிசுவிற்கும் அதிக அளவில் இரத்த ஓட்டமானது அதிகரிக்கும்.

பாதாம்: பாதாமில் வைட்டமின் ஈ, ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் புரோட்டீன் அதிகமாக நிறைந்துள்ளது. ஆகவே அதிக அளவில் கர்ப்பிணிகள் சாப்பிட, கருவிற்கு தேவையான புரோட்டீன் சத்தானது கிடைக்கும்.

சிக்கன்: கர்ப்பிணிகளுக்கு சிக்கன் ஒரு பாதுகாப்பான உணவு. ஏனெனில் இதனை முதல் மூன்று மாதங்களில் அதிகம் உணவில் சேர்த்தால், இந்த காலத்தில் ஏற்படும் காலை மயக்கம் மற்றும் சோர்வானது நீங்கும். மேலும் சிக்கனில் இரும்புச்சத்தானது இருப்பதால், உடலில் இரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.

அஸ்பாரகஸ்: கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் மட்டும் உடல் இயங்காது. அந்த சத்து உடலில் உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி நிறைந்து உணவுகளையும் சாப்பிட வேண்டும். இத்தகைய வைட்டமின் டி சத்து, அஸ்பாரகஸில் அதிகம் உள்ளது. மேலும் இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், காலை மயக்கமானது நீங்கும்.

வெண்டைக்காய்: பலர் இந்த காலத்தில் வெண்டைக்காயை அதிகம் தேர்ந்தெடுத்து சாப்பிடமாட்டார்கள். ஆனால் இதில் நிறைய சத்துக்கள் உள்ளன. அதிலும் பிரச்சனையில்லாமல் நடப்பதற்கான ஃபோலிக் ஆசிட் அதிகம் உள்ளது. அதுமட்டுமல்லாமல், கர்ப்பிணிகள் இதனை சாப்பிட்டால், நீரிழிவு பிரச்சனை வராமல் தடுக்கலாம்.

ஆரஞ்சு: ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், அவை தாயின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுநோய்கள் எதுவும் தாக்காமல் தடுப்பதோடு, அதில் உள்ள ஃபோலிக் ஆசிட் குழந்தை பிறப்பதில் உண்டாகும் பிரச்சனையை தடுக்கும்.

ப்ராக்கோலி: சாதாரணமாகவே ப்ராக்கோலியில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளது. அதிலும் இதனை கர்ப்பிணிகள் அதிகம் உணவில் சேர்த்தால், அதில் உள்ள இரும்புச்சத்து, தாயின் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

முட்டை: முட்டையில் அதிக அளவில் புரோட்டீன் நிறைந்திருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஆகவே கர்ப்பிணிகள் தினமும் 2 முட்டைகளை சாப்பிட்டு வருவது, தாய்க்கு மட்டுமின்றி, குழந்தைக்கும் நல்லது.

சால்மன்: பொதுவாகவே மீனில் ஒமோக-3 ஃபேட்டி ஆசிட், கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் இருப்பதால், கர்ப்பிணிகள் மீன் சாப்பிடுவது நல்லது. ஆனால் அவற்றில் சால்மன் என்ற மீனில் மற்ற மீன்களை விட, அதிகமான அளவில் இத்தகைய சத்துக்கள் நிறைந்துள்ளன.

தயிர்: பால் பொருட்களில் ஒன்றான தயிரில் கால்சியம் அதிகம் இருக்கிறது. மேலும் கர்ப்பமாக இருக்கும் போது சில பெண்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்படும். இத்தகைய எரிச்சலை தணிக்கும் வகையிலும், உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளவும், தயிரை அதிகம் சாப்பிடுவது நல்லது.

Friday, November 1, 2013

ஏன் ஆதரிக்கிறேன் ஆதரிக்கச்சொல்கிறேன்!?

கடவுளே இல்லை என்று சொல்லும் பொழுது பிறகென்ன மதம்....? எந்த மத நம்பிக்கையும் கிடையாது. அணைத்து மதங்களும் படிப்படியாக களைந்து பிடுங்கி ஏறிய வேண்டும். இந்த உலகில் இருந்தே, ஏனென்றால் மதங்களை வைத்துதானே மக்களை கொள்கிறார்கள் அதிலும் குறுப்பிட்ட மதத்தவர்களை.

இதன் முன் தேவையாக இன்று உலகம் முழுக்க அடிமை சமூக....கொடுங்கோல் அரசிடம் இருந்து முழு விடுதலை வேண்டி போராடிக் கொண்டிருக்கிறார்கள் இஸ்லாமியர்கள்.

இன்று உலகெங்கும் இஸ்லாமிய மதம் மிக கொடூரமாக ஒடுக்கப்படும் மதமாக உள்ளன... தமிழர்களைப் போலவே...!.

நான் ஏன் இஸ்லாமியர்களை ஆதரிக்கிறேன் மேலும், ஆதரிக்கச்சொல்கிறேன் விஷயம் ரொம்ப சிம்பிள்.

ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம் என்ற மூன்று பெரிய மனித வளர்ச்சிக்கான அடிப்படையை தூக்கி எரிந்து விட்டு இஸ்லாமிய மதவாதம் தான் அனைத்திற்கும் காரணம் என்று கூக்குரல் இடுகிறது  குல விரோதிகள்.

பிரித்தானியர்களால்....ஐரோப்பியர்களால்....யூத வெறிகொண்ட இஸ்ரேல், இந்திய பார்ப்பனிய  சாதி வெறி கொண்டவர்களால் இன்று உலக மக்கள் படும் துன்பங்களுக்கு அவர்களின் அத்துணை பிரச்சனைகளுக்கும் முதலும் முடிவுமான பிரச்னை இஸ்லாமிய மதமும் அதனை ஏற்றுக் கொண்டவர்களும் தான் என்று சொல்கிறார்கள் மேற்கண்ட மனித குல விரோதிகள்.

(இது தான் யூத இனவெறி) இன்றைய தேவையே.?  வெளிப்படையான அரசு..  99 சதவீத மக்களுக்கான அரசு. அதி உயர் ஜனநாயகம்...!

இவைதான் இற்றைய தேவை. இவற்றை தர மறுப்பதோடு அல்லாமல் இஸ்லாமிய மதமே அனைத்திற்கும் காரணம் என்று கூறும் இவ(வா)ர்கள். (இந்த அசிங்கங்க அய்யோக்கியத்தன எண்ணம் கொண்டவர்கள்).

யார் ஒருவரும் சமூக ஜனநாயகத்திற்கு.மனித குலத்திற்கு எந்த பங்களிப்பையும் செய்து விட முடியாது என்று கூறுகிறேன் நான்...!(சங்கிலிக்கருப்பு ).

@ மேற் சொன்ன மனித குல எதிரிகள் யார் என்று பார்த்தால் சட்ரென்று விளங்கிவிடும் உன்னவந்த வீட்டிற்கும் ஒண்ட வந்த நாட்டிற்கும் துரோகம் செய்கிறார்களே அவர்கள்தான், யார் அவர்கள் ஒன்று இஸ்ரேல் (பாலஸ்தீன்), மற்றொன்று ஆரியன் (பார்ப்பனர்கள்) இந்தியா.

Tuesday, October 29, 2013

பன்னாட்டு வலைக்குள் விழும் விவசாயம்?

பன்னாட்டு நிறுவங்களை தடை செய்யச்சொல்வதன் நோக்கம் இதுதான் புரிந்துகொள்ளுங்கள்.  நீங்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய செய்தி. 

10 ரூபாய்க்கு விற்றுகொண்டிருந்த தக்காளி ஏன் ரூ.35 முதல் ரூ.45 வரை விற்கிறது. இதற்கு அப்பாவி விவசாயிகளா காரணம்..? இல்லை, இல்லை. இந்த முதலாளித்துவ சமுதாயம் தான் காரணம். படிப்பதை நிறுத்தி விடாதீர்கள்..!! இதன் பின்னணி என்ன.?

தக்காளி 10 ரூபாய்க்கு விற்று கொண்டிருந்தது நல்ல உற்பத்தி தட்டுபாடு இல்லை. அதனால் மலிவு விலைக்கு விற்பனை ஆனது. இதை பொறுக்க முடியாத நமது அருமைமிகு கொள்ளை கூட்டம் விவசாயிகளிடம், " நான் உங்களுக்கு 1 கிலோ தக்காளிக்கு 12 ருபாய் தருகிறேன், அனைத்து தக்காளியையும் நானே வாங்கிகொள்கிறேன்" என்று கூறி விலை பேசி "ஆனால் நான் கேட்கிற போதுதான் நீங்க செடியில் இருந்து பறித்து தர வேண்டும், அது வரை தக்காளி, செடியிலேயே இருக்கட்டும்" என்று ஒரு நிபந்தனையும் போட்டார்கள். விவசாயிகள் என்ன செய்வார்கள், அவர்கள் ஏதோ லாபம் கிடைகின்றது என்று ஒப்புக்கொண்டனர். இது ஒரு வித்தியாசமான தக்காளி தட்டுப்பாட்டை உருவாக்கும் முறை. பல குடோன்களிலும் தக்காளியை கொண்டுபோயும் பதுக்கினார். பிறகு, தக்காளி தட்டுபாடு வராமல் என்ன செய்யும்.?

உடனே டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ், ரிலையன்ஸ் ப்ரெஷ், காய்கறி கடைகளிலும் தக்காளி 45 ரூபாய் வரை விற்பனை ஆனது. இந்த கொள்ளையர்கள் கொத்து எடுத்து வயலுக்கு போய் சம்பாதிச்சார்களா ..? நீர் பாசனம் செய்து உற்பத்தி செய்தார்களா ..? பிறகு ஏன் இவர்களுக்கு மட்டும் இத்தனை லாபம்..? நமது நாட்டிலே ஒரு நாளைக்கு 30 நொடிக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்வதாக ஒரு அறிக்கை கூறுகின்றது. இப்படிப்பட்ட கொள்ளையர்களால் இத்தனை விவசாயிகள் தற்கொலை செய்து இருக்கிறார்கள்.

இங்கே உழைக்கும் விவசாயிகளுக்கு உண்மையான உரிய பணம் போய் சேருவது இல்லை..!! இப்படிபட்ட முதலாளித்துவ சமுதாய கொள்ளையர்களுக்கு யார் இடம் கொடுத்தது..? நாம் தான். தவறுகளை தட்டி கேட்க பெரிதாக யாரும் இல்லாதால்தான் அவர்கள் மட்டும் வளர்ந்து விவசாயிகள் தற்கொலை செய்வதற்கு காரணமாயிற்று.

இப்படி அவர்கள் மட்டும் வளர்ந்து கொண்டே போனால், நாம் இதை கவனிக்காமல் இருந்தால், நமக்கு கையில் பணம் இருக்கும், ஆனால் அரிசி, காய்கறிகள் வாங்க கடைகள் இருக்காது. உற்பத்தி செய்ய விவசாயிகள் இருக்க மாட்டார்கள், இறந்து விடுவார்கள்...!!இங்கே அரிசி, காய்கறிகள், தானியங்கள், பழங்கள் உற்பத்தி செய்கிறவர்களுக்கே அவை அனைத்தும் கிடைப்பதில்லை.

30 நொடிக்கு ஒரு விவசாயி இறக்கிறார் என்பது ஒரு தகவல் மட்டும் அல்ல.. இது ஒரு வலி. படித்து "உணர்ந்து" கொண்டவர்களுக்கு அந்த வலி தெரியும். (பன்னாட்டு நிறுவங்களை இந்தியாவில் கொண்டு வந்து அவர்கள் நிர்ணயிக்கும் விலையில் பொருட்களை வாங்கி பயன்பெறுங்கள் அவர்கள் நிர்ணயித்த வி(வ)லைக்கு விழுங்கள் !?.)

Saturday, October 26, 2013

நீ எல்லாம் ஒரு இந்துவா!?

"இந்து மதத்தை அசிங்கபடுத்துகிராயே நீ எல்லாம் ஒரு இந்துவா ..??" தங்களுக்குப் பெரிய சாதி என்கிற பட்டம், அந்தஸ்து இருந்தால் போதும் அதற்காக எந்தக் காரியத்தையும் செய்யலாம்.

சக இந்துவை மனிதாபிமானம் இன்றி தீண்டத் தகாதவன், இழி சாதி, கீழ் சாதி  என்றெல்லாம் சொல்லி அவமதிக்கிராயே நீ எல்லாம் ஒரு இந்துவா.. ??

சக இந்துவை கீழ் சாதி என்று சொல்லி அவனை தொட்டாலே தீட்டு என்று சேரிக்குள் தள்ளிவிட்டாயே நீ எல்லாம் ஒரு இந்துவா .. ??

சக கோவிலுக்குள் நுழைந்தால் அவனை கீழ் சாதி என்று சொல்லி உதைத்து வெளியே தள்ளுகிறாயே நீ எல்லாம் ஒரு இந்துவா ... ??

முதலில் நீ மனிதனாக மாறு பிறகு வந்து உன் மதத்திற்கு வக்காலத்து வாங்கு பார்ப
னனே !?.

இன்று பார்ப்பனர்கள் எது எப்படிப் போனாலும் தங்களுக்குப் பெரிய சாதி என்கிற பட்டம், அந்தஸ்து இருந்தால் போதும் அதற்காக எந்தக் காரியத்தையும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் என்பதை உயர் தர்ம மாக அல்(ல)வா கொண்டிருக்கிறார்கள்.

@ சிந்திக்க: உன்னை கீழ்சாதி என்று வெளியே தள்ளும் மதத்திலிருந்து வெளியேறு அல்லது பார்ப்பனனை வெளியேற்று.

Thursday, October 24, 2013

பருமனைக் குறைக்க பல வழிகள்!

உடல் எடை குறைய, பருமனைக் குறைக்க பல வழிகள்!

* இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு கரண்டி சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, கால...ையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் (Gingerol), ஜின்ஜிபெரின் (Zingiberine) மற்றும் தேன் ஆகியவை செரிமானத்தைத் தூண்டுவதுடன் தேவையற்ற கொழுப்பையும் எரிக்கும். 

* கீழாநெல்லி, வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, நெல்லிக்காய் சம அளவு எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் நீரில் கலந்து உண்ண, உடலின் கொழுப்பு குறைந்து, எடையும் சீராகும். 

* சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மூக்கிரட்டை, சீரகம், திப்பிலி, மிளகு, ஓரெடை எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தேனில் உண்ண உடல் எடை குறையும்.

* பெருஞ்சீரகத்தைப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அருந்த, உடல் எடை குறையும்.

* எலுமிச்சைச் சாறு ஒரு கரண்டி சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கலந்து பருக வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் கொழுப்பைக் குறைத்து உடலின் எடையையும் குறைக்கிறது. 

* நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஒட்டுதல், யோகா, தியானம், முதலியவற்றை மேற்கொண்டால் உடல்பருமன் நிச்சயம் குறையும்.

* சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்:தக்காளி, கோஸ், பப்பாளி, வெள்ளரி, தர்பூசணி, புரூகோலி, ஆப்பிள், ஓட்ஸ், வால்நட், பாதாம், பருப்பு வகைகள், மோர்.

* நீக்க வேண்டிய உணவுப் பொருட்கள்:இனிப்புகள், வெள்ளை ரொட்டி, பட்டை தீட்டப்பட்ட தானியங்கள், துரித வகை உணவுகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு மிகுந்த உணவு வகைகள். தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

Tuesday, October 22, 2013

மோடியை எதிர்க்கும் முட்டாள்களே!?

பாரதீய ஜனதா முகநூல் பிரிவு என்னும் பக்கத்தில் இந்த படத்தையும் அது சம்பந்தமான கேள்விகளையும் கேட்டு இருக்கிறார்கள்.

அதற்கு பல நண்பர்கள் பதில் கேள்விகளை கேட்டும் எவரும் இது வரை பதில் அழிக்க வில்லை.

அதில் ஒரு நண்பர் கேட்ட கேள்விகளை இங்கு கொடுத்து இருக்கிறேன்.

மோடி தனிப்பட்டமுறையில் எனக்கு விரோதியல்ல.

1. இந்தியர்களின் எழுச்சி நாயகன் மோடி என்றால், இந்திய விடுதலைக்காக போராடியவனா அல்லது இந்திய மாநிலங்களின் உரிமைக்காக போராடிய போராளியா?

2. சாதியையும் ,மதத்தையும் ஒழித்து.மனித நேயத்தைகாக்க போராடும் போராளியா?

3. கோத்தா ரயில் எரிப்பு சம்பவம்,பெஸ்ட் பேக்கரி எரிப்பு போனற சம்பவத்துக்கும் மோடி கூறும் பதில் என்ன..!

4. மோடி குஜராத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கிறான் என்றால், அது தான் அவன் வேலை. அதற்காகத்தான் மக்கள் அவனை தேர்ந்தெடுத்தனர். உண்மையில் வளர்சிப்பதையில் சென்றுள்ளதா?

5. மோடி பிரதமர் ஆனால், இருக்கின்ற விலைவாசி குறைந்து விடுமா?

6. இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்திடுமா?

7. அமெரிக்காவின் அதிகாரம் குறைந்திடுமா?

8. இந்திய பண முதலைகளின் ஜால்ராதான் இந்த மோடி என்பதை மறவாதே நண்பா..!

நீ எமக்கு விரோதியல்ல..  உன் பதிவு எமமைப்போன்ற இன உணர்வாளர்ளை காயப்படுத்துகிறது.

நீ எவனுக்கு வேண்டுமானாலும் கூஜா தூக்கு,, ஆனால்....  எங்களையும் தூக்கச் சொல்லாதே,,,

நீ சொன்ன இந்தியர்களில் நானும் ஒருவன். ஆரியமும், அரைக்கால் டவுசரும் இதற்கு பதில் தருவாகளா.? பார்ப்போம்!?.

Sunday, October 20, 2013

கணவர் பணியாற்றுவோர் கவனம்! ஆய்வில்!!

இந்திய மனைவியர் தங்கள் கணவரிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள். அதற்கேற்றபடி கணவர்குலம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வெளிப்பட்ட அம்சங்கள்.

எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமா? எந்நேரமும் நீங்கள் ஓர் அடிமை (அன்புக்கு?!) என்பதை மறந்துவிடாதீர்கள். மனதளவில் அடிமை என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டால் இதுதான் மகிழ்ச்சி என்ற எண்ணமும் தானாக வந்துவிடும்.

குடும்பத்தில் மனைவிதான் Boss. இதை மறந்துடாதீங்க பாஸூ. Boss is always correct என்பது முதலாளித்துவத்தில் மட்டுமல்ல, இந்தியக் குடும்பத்திற்குமான ’விதி’.

கணவர்களே, பேச்சைக் குறையுங்கள். மனைவி எப்போது என்ன பேசினாலும் அதனைக் கவனிக்க வேண்டியது உங்கள் வேலை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மனைவியர் தன்னைப் பற்றியே தன் கணவர் சிந்தித்துக்கொண்டிருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அதனால் எப்போது என்ன யோசனையில் இருந்தாலும், “உன்னைப் பற்றித்தான் யோசித்துக்கொண்டிருந்தேன்” என்று சொல்லத் தயங்காதீர்கள். (அது பச்சைப் பொய் என்பது தெரிந்திருந்தாலும்).“இன்றைக்கு 
நாம வெளியிலே போகலாம்” என்று உத்தரவாதம் கொடுத்தீர்கள் என்றால் அதை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுங்கள். உங்களுக்கு அலுவலகம், அசைன்மென்ட், புராஜக்ட் என எதுவேண்டுமானாலும் முக்கியமாக இருக்கலாம். மனைவியருக்கு கணவன் கொடுத்த உத்தரவாதம்தான் முக்கியம். எனவே உணருங்கள்.

“பராவயில்லீங்க.. இன்னொரு நாள் நாம வெளியிலே போகலாம்” என்று மனைவியர் சொன்னால், அதனை கணவன்மார் உடனே அப்படியே நம்பி சும்மா இருந்துவிடக்கூடாது. மனைவியரின் ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் ஓராயிரம் பொருள் உண்டு. ஆம் என்றால் இல்லை என்றும், இல்லை என்றால் ஆம் என்றும் பல அர்த்தங்கள் உண்டு. அதனை சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுபவனே சரியாகக் கணவன் பணி செய்பவன்.

நீங்கள் ஒரு பெண்ணைப் பற்றிப் பெருமையாகப் பேசுகிறீர்கள் என்றால் அது உங்கள் மனைவியாக மட்டுமே இருக்கவேண்டும். தன்னைப்போல திறமையான ஒரு பெண்ணைத் தன் கணவர் பார்த்திருக்கவே மாட்டார் என்பதுதான் இந்திய மனைவியரின் மனநிலை. எனவே, அலுவலகத்தில் உங்களுடன் பணியாற்றும் பெண்கள் பற்றியோ, ஃபேஸ்புக் இன்பாக்ஸில் வந்து உரையாற்றும் பெண்கள் பற்றியோ பெருமையடித்து, உங்களுக்கு நீங்களே சூன்யம் வைத்துக் கொள்ளாதீர்கள்.

மனைவிக்கு என்ன உடை பிடிக்கும், என்ன நிறம் பிடிக்கும், யார் நடித்த படம் பிடிக்கும், ஹோட்டலில் என்ன டிஷ் பிடிக்கும் என்பதையெல்லாம் தெரிந்து வைத்திருக்கவேண்டியது கணவன்மார்களின் கட்டாயக் கடமைகளில் ஒன்று. மனைவியருக்கு நேற்று ஒன்று பிடிக்கும். இன்று வேறொன்று பிடிக்கும். ஆனாலும் அவர் கேள்வி கேட்கும் நேரத்தில் அவருக்கு எது பிடிக்கும் என்று சொல்லக்கூடிய திறமையான யூகிப்பாளராக நீங்கள் இருக்கவேண்டும். 

மறந்தும்கூட உங்கள் குடும்பப் பெருமைகளைப் பேசாதீர்கள். உங்கள் அப்பா, அண்ணன், தம்பி இவர்களைப் பற்றி பேசுவதைத் தவிருங்கள். உங்கள் அம்மா, அக்கா, தங்கையின் பெருமைகளை மூச்சுவிடவே கூடாது. அதேநேரத்தில் உங்கள் மனைவி அவரது குடும்பத்தினர் பற்றிப் பேச ஆரம்பித்தால் அவர் நிறுத்தும்வரை நீங்கள் தடுக்கவே கூடாது. கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.

மனைவியின் மனமகிழ்ச்சி என்பது கணவனின் பொருளாதார ஆற்றலை சார்ந்தது. நேற்று நீங்கள் வைரத்தில் தோடு வாங்கிக்கொடுத்திருக்கலாம். உங்கள் மனைவியும் சந்தோஷம் அடைந்திருப்பார். ஆனால் பக்கத்து வீட்டுப் பெண்மணியோ, எதிர் வீட்டு அம்மணியோ வைர நெக்லஸ் அணிந்திருப்பதை உங்கள் மனைவி பார்த்துவிட்டால், அத்தனை சந்தோஷமும் காற்றுப்போன பலூனாகிவிடும். வைர நெக்லஸை நீங்கள் வாங்கித்தந்தே ஆகவேண்டும். அதற்குள் எதிர்வீட்டிலும் பக்கத்துவீட்டிலும் புது கார் வாங்கிவிட்டால், நீங்கள் அம்பேல்தான்.
இப்படியிருந்தால் எப்படித்தான் கணவராகப் பணியாற்றுவது எனக் கவலைப்படுகிறீர்களா? 

‘என் கணவர் எனக்கே எனக்கானவர்’ என்பதுதான் இந்திய மனைவியரின் மிகப்பெரும் பெருமிதமாக உள்ளது. அதனால் உங்கள் அன்பை வெளிப்படுத்தத் தயங்காதீர்கள். உனக்காகத்தான் வாழ்கிறேன் என்பதை சின்னச்சின்ன வெளிப்பாடுகள் மூலம் நிரூபியுங்கள். ‘ஐ லவ் யூ’ என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துங்கள். காசா, பணமா? அன்பான வார்த்தைகளால் உங்களை நிரூபியுங்கள். உண்மையான அன்புக்கு ஈடுஇணை ஏதுமில்லை. குடும்பத்தின் சிறந்த பணியாளர் விருது உங்களுக்குக் கிடைக்கும்.

Thursday, October 17, 2013

ஜெயலலிதாவின் மின்சார ஸ்டண்டு!

பதவிக்கு வருமுன் ஓட்டுக்களை ஆட்டையைப் போட ஜெயலலிதாவின் தேர்தல் வாக்குறுதி!

இலவச மும்முனை இணைப்புக்கள் அனைவருக்கும் வழங்கப்படும்.

தமிழ்நாட்டை கருணாநிதி இருண்ட கண்டமாக ஆக்கிவிட்டார் என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் தமிழ்நாட்டை மின்மிகை மாநிலமாக மாற்றுவேன்.

இனி தமிழ்நாட்டில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.

இன்றைய ஜெயலலிதாவின் மின்சார ஸ்டண்டு!

2 மின் திட்டங்களை செயல்படுத்த ரூ.1500 கோடி பணம் வேணும்: பிரதமருக்கு ஜெ. கடிதம்.

தமிழகத்தில் இரு மின்திட்டங்களை செயல்படுத்த ரூ.1500 கோடி ரூபாய் நிதி கேட்டு மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அரசு உதவி செய்தால் தான் மின்சாரம் கிடைக்கும் என்று கூறி ஓட்டுக் கேட்டு இருக்கவேண்டும்.

திமுக வெற்றி பெற்றிருந்தால் காங்கிரசுடன் இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி இதை கருணாநிதியே எப்போவோ கேட்டு செய்து இருப்பாரே! இது நாள் வரை தமிழ்நாட்டில் மின்வெட்டு இருந்திருக்க வாய்ப்பு இருந்திருக்காதே.

ஆத்தா! எதுக்க இப்ப இந்த ஸ்டண்டு..? மத்திய அரசு பணம் கொடுக்காததால் தான் தமிழ்நாட்டில் மின்ன்சார வெட்டு அதிகமாகிப் போச்சு என்று தேர்தல் நேரத்தில் மோடிக்கு ஓட்டுக் கேட்கவா..?

தமிழக மக்கள் மரக்கட்டைகள் அல்லர், ஜெயலலிதாவின் தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் இன்னும் மறக்கவில்லை என்று நியாபகப்படுத்துகிறோம்.

Tuesday, October 15, 2013

இனிமையான உறவு எது தெரியுமாங்க!?

கணவன் மனைவி ஒன்றாக வாழ்ந்து விட்டு இருவருக்குள்ளும் புரிந்து கொள்ளாமல் பிரச்சினையை பேசி தீர்க்காமல் பிரிகிறார்களே அவர்களுக்கு.

கணவன்-மனைவி உறவு எவ்வளவு இனிமையானது தெரியுமாங்க. அந்த உறவில் வரும் சின்னச் சின்ன ஊடல்கள், சண்டைகளுக்காக வக்கீலிடம் ஏங்க நீங்க போகனும். கோர்ட்டு கேசுன்னு ஏங்க நீங்க அலையனும். உங்களுக்கு உங்க பிரச்சினைகளை பேசித் தீர்க்க முடியாதா.?

உங்க ரெண்டு பேருக்கும் இடையில் சின்னச் சின்ன சண்டைகள் வரும் போது விவாகரத்து வரைக்கும் ஏங்க போக ட்ரை பண்னுரிங்க...?? பிரச்சினைகள் வரும் போது உங்களது பசுமையான பழைய நினைவுகளை ஒரு முறை நினைத்துப் பாருங்க.

அந்த நினைவுகள் எவ்வளவு அழகான சோலையாக இருக்கும் தெரியுமா...??? நீங்க ரெண்டு பேரும் ஒரு செடியில் பூத்த பூவாக இருப்பீர்கள் தெரியுமா..?? அந்த நினைவுகள் உங்களுக்கு சொர்க்கமாகவும் அந்த சொர்க்கத்தில் ஆதாம்-ஏவாலாகவும் நீங்கள் இருப்பீர்கள் தெரியுமா...??

உங்களுக்குல் சண்டைகள் வரும் போது ஒருத்தரோடு ஒருத்தர் மனம் விட்டுப் பேசுங்க. அவ யாருங்க உங்களுக்கு நீங்க தாலி கட்டிய மனைவி. அவரு யாருங்க உங்களுக்கு நீங்க கட்டிய கணவர். உங்க ரெண்டு பேரோட உறவுக்கு மேல ஒரு உறவு இந்த உலகத்தில் இருக்குமா சொல்லுங்க...??

நீங்க ஒருத்தரை ஒருவர் விவாகரத்து செய்யும் போது உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடாதா...??? உங்களுக்குத் தான் நிம்மதியான வாழ்க்கை அமையுமா....??? உங்க ரெண்டு பேரோட காதல் உங்கள் மனதில் ஏதோ ஒரு மூலையில் குத்திக் கொண்டு இருக்கும் அல்லவா புரிந்துகொள்ளுங்கள் ப்லீஸ்.  (சம்மாந்துறை அன்சார்).

@ எவ்வளவு பெரிய சண்டை என்றாலும் உங்கள் இருவர் பற்றி மட்டும் தான் பேச வேண்டும் கணவன் குடும்பத்தாரை பற்றி மனைவியும், மனைவியின் குடும்பத்தாரை பற்றி கணவனும் பேசவே கூடாது, தவறுகளில் மிகப்பெரிய தவறு இது.

Saturday, October 12, 2013

டிவி நிகழ்ச்சிகளில் அஜால் குஜால்!?

திரிபுரா மாநிலத்தில் சில ஜோசியர்கள் டிவியில் விளம்பர நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இதேபோல் சாமியார்கள் என்றும் மந்திரவாதிகள் என்றும் தங்களை அழைத்துக்கொள்ளும் சிலரும் டிவியில் நிகழ்ச்சி நடத்துகின்றனர்.

இந்த நிகழ்ச்சிகளின் மூலம் இவர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர் என்று திரிபுரா அரசு குற்றம் சாட்டியுள்ளது. 

சில மாதங்களுக்கு முன்பு அகர்தலாவில் உள்ள ஒரு வீட்டில் ஒரு பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. குடும்பத்தின் நலனுக்காக சில சித்து வேலைகளை செய்ய வேண்டும் என்று கூறி பாபா கமல்ஜேடி என்ற மந்திரவாதியை அழைத்து வந்தனர். ஆனால் இந்த நபர் அந்த வீட்டில் இருந்த ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டார்.

சாமியார்களும், மந்திரவாதிகளும், ஜோசியர்களும் கேபிள் டிவி நடத்துபவர்களிடம் நிகழ்ச்சி நடத்த உரிமை பெறுகின்றனர். 

இவர்கள் நகரில் உள்ள ஓட்டல்களில் அறை எடுத்து தங்கிக்கொள்கின்றனர். டிவி நிகழ்ச்சிகளில் இவர்கள் தங்களுக்கு தெய்வீக சக்தி இருப்பதாக விளம்பரம் செய்கிறார்கள். சில மந்திர, தந்திர நிகழ்ச்சிகளை டிவியில் செய்து காட்டுகின்றனர். தொலைபேசியில் கேள்வி கேட்டு இறுதியில் தங்களை நேரில் சந்திக்கும்படி சாமியார்களும், ஜோசியர்களும், மந்திரவாதிகளும் அழைப்பு விடுகின்றனர்.

இவர்களால் பொதுமக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இத்தகைய டிவி நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க திரிபுரா அரசு முடிவு செய்துள்ளது. 

. 

Wednesday, October 9, 2013

எவ்ளோ விஷயங்கள் வெது வெதுப்பான நீரில்!

வெது வெதுப்பான அல்லது வெந்நீர் குடிப்பதின் மூலம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்.

* சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடிக் குடித்துவந்தால், வாயுத் தொல்லையே இருக்காது.

* அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே வராது.

* வெந்நீர் ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றுகிறது.

* வயிற்றுப் புண்ணினால் ஏற்படும் வலியைக் குறைக்க, மிதமான சூடான வெந்நீரைச் சிறிது சிறிதாகக் குடிப்பது நல்லது.

* நல்ல பலமான விருந்து சாப்பிட்ட பிறகு வெந்நீரைக் குடித்தால், சாப்பிட்ட விருந்தானது எளிதில் ஜீரணமாகி விடும்.

* மிருதுவான சருமம் பெற, பார்லி ஒரு தேக்கரண்டி போட்டு வேகவிட்ட வெந்நீரை அடிக்கடி குடித்து வர வேண்டும்.

* கால் பொறுக்கும் அளவுக்கு வெந்நீரை ஒரு டப்பில் விட்டு, அதில் கல் உப்பையும் போட்டுக் கலக்கவும். அந்த வெந்நீரில், கால் பாதங்களைப் பதினைந்து நிமிடங்கள் வைத்து எடுத்தால் கால் வலி குறையும்.

* பித்தவெடிப்பு உள்ளவர்கள் வெந்நீரில் கால் பாதங்களை வைத்து எடுத்த பிறகு, பாதங்களை பியூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்தால், நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகி விடும்.

* தாகம் எடுத்தால் பச்சைத் தண்ணீரைக் குடிக்காமல், பொறுக்கும் அளவு சூடான வெந்நீரைக் குடித்து வந்தால், உடம்பில் உள்ள வேண்டாத கழிவுகள் வெளியேறும்.

* சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு, ஒரு தம்ளர் வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

Monday, October 7, 2013

விழுங்கிய கடப்பாரைக்கு சுக்கு கசாயம்!?

பிரதமர் பதவிக்கு நிதீஷ்குமார் தகுதியானவர்-பாஜக தலைவர் சத்ருஹன் சின்ஹா புகழாரம்.

பீகாரில் 17 ஆண்டுகால நிதீஷ்குமார்-பாஜக கூட்டணி கடந்த ஜூன் மாதம் முடிவுக்கு வந்தது.அதை தொடர்ந்து மோடிக்கும் நிதீச்குமாருக்கும் அறிக்கை போர் நீடித்து வந்தது.

மோடி பிரதமர் பதவிக்கு லாயக்கற்றவர் என நிதீஷ் கூறிவந்த நிலையில் பாரதீய ஜனதாகட்சி தலைவர் சத்ருஹன் சின்ஹா பீகர் முதல்வரை புகழ்ந்து அறிக்கை விட்டுள்ளார்.

அதில் பீகாரின் முதல்வர் நிதீஷ்குமார் பிரதமர் பதவிக்குரிய அனைத்து தகுதிகளை உடையவர் எனவும்.அவரது பீகார் மாநில நிர்வாகம் சிறப்பாக செயல்படுகிறது எனவும் கூறியுள்ளார்.

இதனால் பாரதீய ஜனதா கட்சிக்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மோடி ஒரு கேடினு சொல்ல இனியும் பலர் வருவார்கள்....! விழுங்கிய கடப்பாரைக்கு சுக்கு கசாயம் எல்லாம் வேலைக்கு ஆகாது காவிகளே !


மொத்தத்தில் காவி கூடாரம் தீப்பற்றி எரிகிறது.

Friday, October 4, 2013

தமிழ் மலையாளத்தில் வீர வரலாறு !

கோழிக்கோட்: குஞ்ஞாலி மரைக்காயர் வீர வரலாறு மலையாளத்திலும், தமிழிலும் திரைப்படமாக எடுக்கப்படுகிறது. மம்முட்டி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை அமல் நீரத் இயக்குகிறார். 40 கோடி ரூபாய் செலவில் இந்தப் படம் உருவாகிறது.

அடுத்த வருட ஆரம்பத்தில் கோழிக்கோட்டில் இந்தப் படம் வெளியிடப்படும். ஆகஸ்ட் சினிமா என்ற தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. முதலில் இந்தப் படம் மலையாளத்திலும், தமிழிலும் ஒரே நேரத்தில் வெளியிடப்படும். படம் வெளிவந்த பின்னர் தெலுங்கிலும், ஹிந்தியிலும் மொழிமாற்றம் செய்யப்படும்.

மொத்தம் நான்கு குஞ்ஞாலி மரைக்காயர்களின் வீர வரலாறுகள் வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. எந்தக் குஞ்ஞாலி மரைக்காயரின் வரலாறு இத்திரைப்படத்தில் இடம் பெறுகின்றது என்று படத்தின் வெளியீட்டாளர்கள் தெளிவு படுத்தவில்லை.

இந்தியாவில் ஆதிக்கம் செலுத்த வந்த போர்த்துக்கீசியர்களுக்கெதிராக தங்கள் உயிரை துச்சமாக மதித்து வீரத்துடன் குஞ்ஞாலி மரைக்காயர்கள் போரிட்டார்கள். இந்திய சுதந்திரத்தின் வித்துக்களாக இவர்கள் போற்றப்படுகிறார்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் துவக்கப் புள்ளிகளே இவர்கள்தான்!

இந்தப் படம் வெளிவந்தால் அதிக செலவில் எடுக்கப்பட்ட வரலாற்றுப் படமாக இது இருக்கும்.


Tuesday, October 1, 2013

ரோஜா உதடுகளை பெற!!

உதடுகள் அழகாக ரோஜா போன்ற  சிவப்பாக இருக்கத்தான் அனைவரும் விரும்புவார்கள்,ஆனா அவைகளை பராமரிப்பதில்லை. உதடுகளின் வெடிப்புகளுக்குத் தகுந்த சிகிச்சையை செய்ய பலரும் முயல்வதில்லை. வெறும் உதட்டு சாயம் உதடுகளை அழகாக காட்டாது. முறையான எளிய வைத்தியத்தை மேற்கொண்டாலே போதும்.

உதடு வெடிப்புக்கு: சிலருக்கு அதிக குளிர் என்றாலும் சரி, அதிக வெப்பம் என்றாலும் சரி சுத்தமாக ஒத்துக்கொள்ளாது. உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். இன்னும் சிலருக்கு உதடுகள் கறுத்து, வெடிப்புகளும் ஏற்படும்.

இப்படிப்பட்டவர்கள் பாலாடையுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, அதை உதடுகளில் தடவி வந்தால், உதட்டின் கருமை நிறம் மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.

வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தாலும், உதடு வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.

ரோஜாப்பூவின் இதழ்களை எடுத்து காய்க்காத பசும்பாலில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து எடுத்து நன்றாக பிசைந்து அதை உதட்டில் தடவி வந்தால் உதட்டின் வறட்சி, உதடு வெடிப்பு குறைந்து உதடு சிவப்பாகும்.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!