Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, May 17, 2013

மக்களை (ஏ)மாற்றும் மானம் கெட்டவன்?

நரமோடியின் அனுதாபிகள் பலர் நரமோடி ஒரு பிரமச்சாரி என்று இன்றும் நம்பி வருகின்றனர்.  காவி  கொடி பிடிக்கும் கூட்டங்களும் பணம் பெற்று பொய்களை மட்டும் பரப்பிவரும் ஊடகங்களும். இன்றும். நரமோடியை ஒரு அயோக்கியனை அவதார புருஷராகவே சித்தரித்து வருகின்றது.   

உண்மையில் நரமோடி...யசோதா பாய் மோடி (ஜஷோடாபென் மோடி) என்னும் பெண்ணை மணமுடித்து பின் அவரை கைவிட்ட கதையை....2009-இல் வெளிவந்த பத்திரிகை மூலம் வெளிச்சத்திற்கு வந்தது ...ஆனால் மற்ற பெரும்பான்மையான காவி....ஊடகங்கள்...இதனை வழக்கம் போல் "பத்திரிக்கை தர்மமாக" கருதி...முக்கியத்துவம்கொடுக்கப்படாமல்...இரட்டடிப்பு செய்துவிட்டன... யசோதா பாய் மோடி...மணமுடிக்கும் முன்னர் நரமோடி தடைசெய்யப்பட்ட பால்ய விவாகத்தை....தான் சார்ந்த ஹிந்துமத கொள்கையின் அடிப்படையில்...முன்னரே....முடித்து இருந்ததும்...அப்பத்திர்க்கையின் மூலமே அன்று வெளிச்சத்திற்கு வந்தது.

மனைவி யசோதா பாய் மோடி ...பானஸ் காந்தா மாவட்டம்...ரஜோஷனா கிராமத்தில்...ஒரு ஆசிரியையாக.....பணிபுரிந்து....வருவதும்...ஒரே ஒரு அறை மட்டும் உள்ள ஒரு சிறிய வீட்டில்...பலவாழ்வாதார...கஷ்டங்களுக்கிடையே தனிமையில் வசித்துவருவதும்...அப்பத்திரிக்கையின் மூலமே....வெளிச்சத்திற்கு வந்தது.

நரமோடி சாதாரண நபராக இருந்து பின்னர்...மனைவியை கைகழுவி விட்டது வரை அப்பத்திரிக்கையின் மூலம்கொண்டுவரப்பட்டது...மனைவியோ கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்...ஒரு நாள் தன்னை நாடிவருவார்...என்று தான் நம்புவதாக அந்த பத்திரிக்கைக்கு தெரிவித்து இருந்தார்.. நரமோடியின்....வெறுப்பையும்..கோபத்தையும் தான் சம்பாதிக்க நேரிடும் என்ற அச்சத்தால்.. தான் இதுவரை உண்மைகளை....கூற முயலவில்லை என்றும் பேட்டியில் தெரிவித்திருந்தார்.

பொண்டாட்டிக்கு ஒரு நல்ல புருஷனாக இல்லாதவர்...நாட்டிற்கு நல்ல பிரதமராக இருக்க முடியுமா..? மனைவியின் உணர்வுகளை புரியாமல்...அவளை கைகழுவியவர்....இன..மத..மொழி..என பல்வேறு இந்தியமக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள இயலுமா...? ஒரு சிறு மாநிலத்திலேயே...முஸ்லிம்களை..அவர்களின் மத நம்பிக்கைகளை...அனுசரித்துபோகும்..மனப்பக்குவம் இல்லாதவர்....நடுநிலையாக....மக்களை...ஆளத் தெரியாதவர்....அரவணைத்து செல்ல தெரியாதவர்...மாநில முதல்வராக....இருந்து...முஸ்லிம்களுக்கு எதிராக கலவரங்களை ....முன்னின்று நடத்தியவர். பல்வேறு....சமயத்தவர்களும்...நம்பிக்கைகளையும்...கொண்ட பல மாநிலங்கள் ஒருங்கிணைந்த நம் இந்திய நாட்டை எந்த...அடிப்படையில்...அமைதியாகவும்...நேர்மையாகவும்....ஆளப்போகிறார் என்று... நரமொடியின் அனுதாபிகளும்...காவி ஊடகமும்....தான் பதில் சொல்ல வேண்டும்.... சொல்வார்களா...?

நமது கேள்வி: ஒரு பெண்ணை காப்பாத்த தெரியாத ஒருவருக்கு நாட்டை ஒப்படைத்தால் என்ன நடக்கும் அறிவுள்ளவரே சிந்தியுங்கள் 

Thursday, May 16, 2013

கச்சா எண்ணெய்க்கும் தேங்காய் எண்ணெய்க்கும் என்ன தொடர்பு ?

கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை என்பது தான் அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது !!! பிறர் தெரிந்து கொள்ள பகிருங்கள் நண்பர்களே.

சரி .., வேறு என்ன தேங்காய் எண்ணெய்க்கு பதில் வேறு என்ன இருக்க முடியும் ? தேங்காய் விலை கூடும் போதெல்லாம் தேங்காய் எண்ணையின் விலை கூடுவதில்லை பின் எப்போது தான் கூடுகிறது ?கச்சா எண்ணெய் விலை கூடும் போது தான் விலை கூடுகிறது .. கச்சா எண்ணெய்க்கும் தேங்காய் எண்ணெய்க்கும் -என்ன தொடர்பு ?

தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மினரல் ஆயில் என்ற பெட்ரோலிய கழிவுடன் தேங்காய் எண்ணெய் எசன்ஸ் கலந்து தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மார்க்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது.

மினரல் ஆயில் என்றால் என்ன ? பெட்ரோலியப் பொருகளின் ஆக கழிவு பொருளே மினரல் ஆயில் என்னும் அமெரிக்க மண்ணெண்ணெய் என்னும் லிக்யுட் பேரபின் ஆகும்.

கச்சா எண்ணையிலிருந்து அதீத கடைசி பொருளே இந்த மினரல் ஆயில் ஆகும் .கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து, பெட்ரோல், டீசல், கெரசின், நாப்தலீன், மெழுகு என மொத்தம் 24 வகையான பொருட்கள் எடுக்கப்பட்டு எஞ்சியிருப்பது “மினரல் ஆயில்’. இதற்கு நிறமோ, மணமோ இருக்காது.இதன் அடர்த்தி அதிகம். எந்த வகை எண்ணையுடனும் எளிதாக கலப்படம் செய்து விடலாம்.

பாராசூட் முதல் ஹெர்பல் என்னும் ஹிமாலயா கம்பெனி வரை ..ஜான்சன் பேபி ஆயில் முதல் சோப்பு வரை எல்லாவிதாமான முக லோஷன்களிலும் இந்த மினரல் ஆயில் என்னும் அரக்கன் இருக்கிறான் என்பது வேதனையான விஷயம் தான்

தேங்காய் எண்ணெய் என்று நாம் இது வரை நம்பி இருக்கிற -மினரல் ஆயில் கலந்த கம்பெனிகள் தயாரிக்கிற தேங்காய் எண்ணெய் இவைகள் johnson baby oil, amla hair oil, clinic plus, ervamartin hair oil, etc.. பட்டியல்கள் நீண்டு கொண்டே போகிறது பக்கங்கள் பத்தாது.


மினரல் ஆயில் சேர்த்தல் பக்க விளைவுகள் வருமா ?
1.தோல் வறண்டு போகும், முடி தனது ஜீவன் இழந்து வறண்டு போகும்.
2.முடி கொட்டும், முடி சீக்கிரம் வெள்ளையாகும்.
3.அரிப்பு வரும்.
4.ஆராய்ச்சிகள் குழந்தைகளுக்கு பயன்படுத்த தடை விதிக்கிறது.

தேங்காய் எண்ணெய் வாங்குவதாக இருந்தால் பக்கத்தில் எண்ணெய் ஆட்டும் மில்களில் இருந்து வாங்குங்கள் ..டப்பாக்களில் அடைத்து ,பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் தேங்காய் எண்ணெய் யை வாங்காதீர்கள்.

குறிப்பு -நல்ல தேங்காய் எண்ணெய் முடியை நன்கு வளர வைக்கும் ..கலப்படமில்லா தேங்காய் எண்ணெய் முடி வளர கருக்க உதவும் என்பது மறுக்க முடியாத உண்மை.

Wednesday, May 15, 2013

விந்தணு வீரியத்தை குறைக்கும் பழக்கம்?

ஒரு பெண்ணைத் தாயாக்க (அதாவது தன் மனைவியை தாயாக்க) வேண்டுமானால் ஆணுக்கு கீழ்க்கண்ட தகுதிகள் இருக்க வேண்டும் என்கிறது விஞ்ஞானம்.

1. உடலுறவின்போது வெளிப்படும் விந்தின் அளவு குறைந்தது 2 மில்லி லிட்டர் இருக்க வேண்டும்.

2. விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை 20 மில்லியன் இருக்க வேண்டும்.

3. 70 சதவீதத்திற்கு மேலான உயிரணுக்கள் உயிர்த்தன்மையுடன் இருக்க வேண்டும்.

4. 30 சதவீதத்திற்கு மேலான அணுக்கள் உருச்சிதைவில்லாமல் இருக்க வேண்டும்.

5. விரைவாக ஊர்ந்து செல்லும் அணுக்களின் எண்ணிக்கை 25 சதவீதத்துக்கு மேலாக இருக்க வேண்டும்.


இப்படி இருந்தால் மட்டுமே அப்பாவாதற்கு அவர் முழுத்தகுதி உடையவர் ஆவார். 


புரதச் சத்து, வைட்டமின் ஈ மற்றும் பி காம்ப்ளக்ஸ் குறைவான உணவுகளை உண்டு வரும் ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதேபோல் விந்தணு வீரியத்தை குறைக்கும் மது, சிகரெட் புகைக்கும் ஆண்களுக்கும் ஆண்மைக் குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. ஏனெனில் சிகரெட்டில் இருக்கும் நிகோட்டின், உயிரணுக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதோடு, விந்தணுக்கள் ஊர்ந்து செல்லும் தன்மையையும் பாதிக்கிறது. எனவே அப்பா ஆகும் ஆசையுள்ள ஆண்கள் மது, சிகரெட்டைத் தவிர்ப்பது நல்லது. எனவே மேற் சொன்னவைகளை கடைப்பிடித்து (மது, புகை) தம்பத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Monday, May 13, 2013

அக்கறை கொண்ட அரசா ஜெயா அரசு!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த ஒரு அரசும் மக்களுக்கான நலத்திட்டம் தீட்டும் பொழுது அந்த திட்டம் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் மனதில் கொண்டுதான் தீட்டப்பட வேண்டும். 

ஆனால், நகர்ப்புற ஓட்டுக்களை தக்கவைக்க குறுகிய கண்ணோட்டத்தில் கொண்டுவரப்பட்ட ஜெயாவின் கவர்ச்சி திட்டமான "ஒரு ரூபாய் இட்லி" திட்டம் மாநிலத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் நடைமுறைபடுத்தப்படுவதை பாராட்டும் சிலருக்கு என்ன வகையான மனப்போக்கு என்பது புரியவில்லை. உண்மையாக மக்களின் மேல் அக்கறை கொண்ட அரசாக இருந்தால் இந்த திட்டத்தை முதலில் விவசாயம் இல்லாமல் அவதிப்படும் மிக ஏழ்மையில் இருக்கும் கிராமப்புறங்களில் அறிமுகபடுத்தி இருக்க வேண்டும்.

இந்த திட்டமே வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு ஓட்டுக்காக உருவாக்கப்பட்ட ஒரு குறுகிய கால திட்டம் என்பதும், இந்த திட்டத்தை ஒருபோதும் யாராலும் நாடு முழுதும் அமல்படுத்த முடியாது என்பது ஜெயாவுக்கும் தெரியும். சில மாதங்களாக ஜெயாவால் அவசரம் அவசரமாக அறிவிக்கப்படும் திட்டங்களை நீங்கள் கூர்ந்து கவனித்தால் ஜெயாவின் மோசடியான உள்நோக்கத்தை புரிந்து கொள்ள முடியும்.

ஜெயாவின் மோசடிக்கு ஒரே ஒரு உதாரணம், ஆட்சிக்கு வந்து மூன்று மாதத்தில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக ஆக்கப்படும் என்ற பச்சை பொய்யை நம்பி மக்கள் ஏமாந்து இன்றுவரை அவதிப்படுவதே போதுமானது.

@ ஆட்சி நிர்வாகம், மக்களுக்கான நீண்ட கால திட்டம் பற்றி எதுவும் சிந்திக்க தெரியாத ஒரு சராசரி முன்னாள் கவர்ச்சி நடிகை ஜெயாவுக்கு நாடு முழுதும் அமல்படுத்த முடியாத ஒரு ரூபாய் இட்லி போன்ற கவர்ச்சி திட்டங்களை அறிவிக்கும் அளவுக்குத்தான் அறிவு இருக்கும், அல்லது முந்தைய ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு முடியும் தருவாயில் இருக்கும் திட்டங்களை திறந்து வைத்து தன்னால் உருவாக்கப்பட்ட திட்டம் என்று கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் அறிவித்துக் கொள்ள முடியும்.

Sunday, May 12, 2013

அரைக்கால் டவுசரை கண்டு அச்சப்படும் இந்தியா?

நாட்டின் முதுகெலும்பாக இருக்கவேண்டிய உள்துறையோ ஒரு அமைப்பை கண்டு அச்சபடுகிறது என்றால் அது மிகை இல்லை.

ஆர்.எஸ்.எஸ்ஸின் மையங்களில் ஆயுதபயிற்சியை கண்டுகொள்ளாத காவல்துறை,உள்துறை மற்றும் இந்திய அரசு. 

இந்துத்துவா தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளின் மையங்களில் நடக்கும் ஆயுதப்பயிற்சிகளை மத்திய, மாநில அரசுகளும் காவல்துறை, உளவுத்துறையும் கண்டுகொள்ளாமல் உள்ளன.

நாக்பூர், புனே மற்றும் போன்ஸாலா ராணுவ பள்ளிக்கூடத்தில் மிகச்சிறந்த ஆயுதப்பயிற்சிகள் தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற தளபதிகள் சிலரும் இப்பயிற்சி மையங்களில் பயிற்சிகளை அளிக்கின்றனர். மாலேகான் - நந்தத் ஆகிய இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய குற்றவாளிகள் போன்ஸாலாவின் ஆசிரியர்கள் ஆவர். தண்டயுத்தா, களரி, ஆயுத பயிற்சி முறைகள், நெருப்பு வளையத்தின் உள்ளே குதிக்கும் ராணுவ பயிற்சி முறைகள் உள்ளிட்ட பயிற்சிகள் இம்முகாம்களில் அளிக்கப்பட்டு வருகின்றன. இம்முகாம்களில் பங்கேற்று பின்னர் ஆர்.எஸ்.எஸ்ஸில் இருந்து வெளியேறிய பலர் ஊடகங்களில் இத்தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

21 நாட்கள் நீண்ட முகாம்களில், இதில் பங்குபெறும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களை தவிர வேறு ஆர்.எஸ்.எஸ் காரர்களை கூட உள்ளே நுழைய அனுமதிப்பதில்லை. தற்போது கேரளா மாநிலத்தில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ் ஆயுதப் பயிற்சி முகாமில் தமிழகத்தைச் சார்ந்தவர்களும் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது. கேரள மாநிலம் பெரும்பாவூர் வளையன் சிறங்கரா என்.எஸ்.எஸ் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் 378 பேரும், பாறசாலையில் உள்ள பாரதீய வித்யா பீடம் செண்ட்ரல் பள்ளிக்கூடத்தில் 343 பேரும் ஆர்.எஸ்.எஸ்ஸின் கேரள மாநிலத்தில் உள்ள முக்கிய ஆயுத பயிற்சி மையமான வியாஸா வித்யாபீடத்தில் 342 பேரும் பங்கேற்பதாக ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிகாரப்பூர்வ ஏடே கூறுகிறது.

வெளி மாநிலங்களைச் சார்ந்தவர்கள் பங்கேற்கும் பயிற்சி முகாம் பேராமங்கலம் என்ற இடத்தில் உள்ள ஸ்ரீதுர்கா விலாஸம் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் நடைபெறுகிறது.

தற்போது நடைபெற்று வரும் பயிற்சி முகாம்களில் ஆயுத பயிற்சியை அளிப்பது வெளிமாநிலங்களைச் சார்ந்த ஆயுத பயிற்சியாளர்கள் என்றும், இம்முகாம்களில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய தலைவர்கள் பங்கேற்பதாகவும் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன., 
பயங்கரவாத அரைக்கால் டவுசரை கண்டு உளத்துறை அமைச்சகமே அச்சப்படுவதாக மனித ஆர்வகளர்களின் கருத்து.(இந்த பயங்கரவாத அமைப்பிடம் உள்துறை அமைச்சர் சிண்டே மன்னிப்பு கேட்டதை நினைவில் கொள்க).

Saturday, May 11, 2013

ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்?

எல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்...

இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்

ஆண் என்பவன் யார்?

ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.

அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான்.

அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான்.

பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி தியாகம் செய்கிறான்.

தன் மனைவி மற்றும் குழந்தைகள் மீதான அன்பை இரவுகளில் நீண்ட நேரம் வேலை செய்வதன் மூலம் தியாகம் செய்கிறான்.

அவன் அவர்களின் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் உருவாக்குகிறான் ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த தன் வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறான்.

எனவே அவன் தன் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக எந்தவித குறையும் சொல்லாமல் தன் இளமையை தியாகம் செய்கிறான்.

அவன் மிகவும் கஷ்டப்பட்டாலும், தன் தாய், மனைவி, தன் முதலாளி ஆகியோரின் இசையை (திட்டுகள்) கேட்க வேண்டியுள்ளது.

எல்லா தாயும்,மனைவியும் முதாலாளியும் அவனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிக்கின்றனர்.

இறுதியில் மற்றவர்களின் சந்தோசத்திற்காக விட்டுக்கொடுத்
து கொண்டிருப்பதன் மூலம் அவன் வாழ்க்கை முடிகிறது.

பெண்கள உங்கள் வாழ்வில் ஒவ்வொரு ஆணையும் மதியுங்கள். அவன் உங்களுக்காக என்ன தியாகம் செய்துள்ளான் என்பதை நீங்கள் எப்போதும் அறியப் போவதில்லை.

அவனுக்கு தேவைப்படும்போது உங்கள் கரங்களை நீட்டுங்கள் அவனிடமிருந்து இருமடங்காக நீங்கள் அன்பை பெறுவீர்கள். ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள்.

அமைதி கொள்வோம். இது ஆண்களின் அன்பு வேண்டுகோள்.

Friday, May 10, 2013

விரல் உறிஞ்சும் பழக்கம் உண்டா குழந்தை!?

கட்டைவிரலை உறிஞ்சும் பழக்கம் கொண்ட குழந்தைகளுக்கு மனதில் ஒரு வித பயம், தனிமையில் இருக்கிறோம் என்கின்ற செயல்பாடுகளின் காரணமாகவே குழந்தைகள் கட்டை விரலை உறிஞ்சுகின்றனர். அதிகமான இளம் குழந்தைகள் கட்டை விரலை உறிஞ்சுவதால் பசி உணர்விலிருந்து விடுபடுவதற்கானவழியாக கருதுகின்றனர்.

கட்டை விரலை உறிஞ்சும் அதிக குழந்தைகள் உணவில் கவனம் செலுத்துவதில்லை.. இதனால் குழந்தைகளுக்கு எடை குறைவாகவே உள்ளது.. இது குழந்தைகளுக்கான ஒரு ஆறுதல் நடவடிக்கை மட்டுமே. இதை குழந்தைகள் வழக்கமாக கடைபிடிக்க அனுமதிக்ககூடாது.. குழந்தைகளின் விரல் உறிஞ்சும் பழக்கதால் பெற்றோர்கள் எப்படி நிறுத்துவது என கவலை படுகின்றனர்.

நான்கு வயது வரை குழந்தைகள் கட்டை விரலை உறிஞ்சுவது பிரச்சனையில்லை அதற்கு மேல் குழந்தைகள் விரல் உறிஞ்சினால் பற்களில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். நான்கு மற்றும் ஐந்து வயதிலிருந்து கட்டை விரலை உறிஞ்சும் பழக்கம் தொடர்ந்தால் பற்களில் வெடிப்பு ஏற்பட்டு அதுவே தீவிர பிரச்சனையாக மாறும்.

குறிப்பிட்ட வயதிற்கு மேலாகியும் இந்த பிரச்சனை தொடர்வதால் பற்கள் நெருக்கமாக மற்றும் வளைந்து ஏதேனும் பொருட்களை கடிப்பதிலும் பிரச்சனைகளை ஏற்படுத்தும். குழந்தைகள் பேசுவதில் பிரச்சனை உருவாகலாம். அல்லது ஏதேனும் விழுங்குவதிலும் பிரச்சனை ஏற்படக்கூடலாம். முன் பற்கள் புடைப்பு மற்றும் இடப்பெயர்ச்சிஏற்படும்.

பற்களின் வடிவக்கேடு குழந்தையின் முகதோற்றம் பாதிக்கும். மேலும் உணர்ச்சிகரமான சிக்கல்களை ஏற்படுத்தும். பெரும்பாலான குழந்தைகளின் இந்த நடவடிக்கை தங்கள் புகுமுக பள்ளி ஆண்டுகளில் இது ஒப்பீட்டளவில் பாதிப்பை விளைவிக்காது. குழந்தைகள் வாயில் கட்டை விரலை வைக்கும் போது கிருமிகள் வாய்வழியாக வயிற்றுக்குள் நுழைந்து விடும் என்பதை அவர்களுக்கு தெரிவியுங்கள்.

உங்கள் குழந்தைகள் கட்டை விரலை சப்பும் பழக்கத்தை விடவில்லை எனில் உங்கள் குழந்தையின் மீது கூடுதல் கவனம் செலுத்தி கவனிக்க வேண்டும். ஆரோக்கியமாக குழந்தைகள் இருக்க மன அழுத்தம் ஏதேனும் இருப்பின் அதை சரிசெய்ய வேண்டும். மேலும் உங்கள் குழந்தையின் குறிக்கோள்களை முன்னேற்றங்களை பாராட்டுங்கள் அவர்களுக்கு ஏதேனும் வெகுமதி அளித்து பாராட்டு தெரிவிப்பின் குழந்தையின் மனநிலை மாறுபடும். மருத்துவரிடம் சென்று பல்லுக்குகிளிப் ஒன்று வாங்கி மருத்துவரின் ஆலோசனையுடன் மாட்டிவிடுங்கள்.

Thursday, May 9, 2013

நானே இந்து என் சமூகத்தை நானே இழிவாகக் காட்டுவேனா?

"ஐயா, நானே ஓர் இந்து. என் சமூகத்தை நானே இழிவாகக் காட்டுவேனா? மதத்தின் பெயரால் நடத்தப்பட்டுள்ள படுபாதகக் குற்றங்கள்தான் இங்கே விசாரிக்கப்படவேண்டும். என் மத விருப்பங்களை அல்ல.’- ஆஷிஷ் கேத்தன்.

பாசிசத்தின் காரிருள் இந்நாட்டின் ஆட்சி, அதிகார, நீதி, ஊடக துறைகளையெல்லாம் சூறையாடி வரும் வேளையிலும் நீதியை நிலைநாட்டும் உறுதியுடன் சிலர் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்களில் ஒருவர் தாம் ஆஷிஷ் கேத்தன். எந்தவொரு முஸ்லிம் அமைப்புகளும் செய்ய இயலாத அர்ப்பணிப்புமிக்க காரியங்களை உயிரை பணயம் வைத்து 6 மாத காலம் டெஹல்காவுக்காக ஹிந்துத்துவா பயங்கரவாதிகளை நேரடியாக சந்தித்து பேட்டியெடுத்து உலகிற்கு அவர்களின் கோர முகத்தை அம்பலப்படுத்திய ஆஷிஷ் கேதான் என்ற பத்திரிகையாளரை இந்திய முஸ்லிம்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.

இன்று பிழைப்புக்காய் மாறடித்து, எந்த அறமும் இல்லாது ஊடகங்களை கழிவறைகளாக மாற்றும் பத்திரிகையாளர் மத்தியில் எந்த சமரசமும் இல்லாமல் ஆஷிஷ் கேத்தன் செய்ததை நாங்கள் நன்றியுடன் நினைவுகூறுகிறோம்.

அவரது 60 மணி நேரப் வீடியோ பதிவுகளில் கொலைகாரர்கள், காவல்துறை உயரதிகாரிகள், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள், அரசு வழக்கறிஞர்கள் என பலர் தோன்றி தங்களின் வீரதீரச் செயல்களை விரிவாக வர்ணித்தார்கள் .கோத்ராவில் ரயிலை எப்படி எரித்தார்கள், அதில் இருந்த கரசேவகர்களை எல்லாம் எப்படி நம் என் உயிர் தோழன் படத்தில் வரும் நாயகனைப் போல சங் பரிவார் ஆட்களே பலி கொடுத்தார்கள் என்பதையும் ஆதாரங் களுடன் மிக துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டினார் ஆஷிஷ் கேத்தன். அதன் பின் சிலரைப் பிடித்து மிரட்டி எப்படி எல்லாம் தவறான வாக்குமூலங்களைப் பதிவு செய்து கோத்ராவின் மிகவும் மதிக்கத்தக்க இஸ்லாமியத் தலைவர்களை சிறையில் அடைத்தார்கள் என்பதையும் இந்த வீடியோ பதிவுகள் உறுதிப்படுத்தின.

பாபு பஜ்ரங்கி பல கொலைகளைச் செய்துவிட்டு நான் அவர்களை எல்லாம் கொன்ற பிறகு மகாராணா பிரதாப் ஆக உணர்ந்தேன் என்கிறான். மதன் சாவல், தான் எப்படி காங்கிரஸ் எம்.பி இஷான் ஜாப்ரியைத் தரை-யில் எட்டி உதைத்து, அவரைத் துண்டு துண்டாக வெட்டி, உயிருடன் தீயிட்டுக் கொளுத்தினோம் என்பதைத் துல்லியமாகக் கூறுகிறான். இன்னும் மூன்று மணி நேரம் மட்டுமே உள்ளது காரியத்தை முடிக்க என்பதை எப்படிக் கொலை-காரர்களுக்குத் தெரிவித்தான் என்பதை மங்கிலால் ஜெயின் பரபரப்புடன் விவரிக்கிறான். இது வரலாறு காணாததாக இருக்க வேண்டும் என்று தங்களின் தலைமை எப்படி உத்தரவிட்டது என்பதைப் பதிவு செய்கிறான் தீபக் ஷா. ராக்கெட் செலுத்தும் கருவியைத் தயாரித்ததை ஒரு விஞ்ஞானியைப் போல் விளக்கும் ஹரேஷ் பட்டுக்குப் பின்னர் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி கொடுத்து அழகு பார்த்தான் நரேந்திர மோடி. நாங்கள் கொடுத்த ஆயுதங்களின் எண்ணிக்கையைப் பார்த்து எங்கள் ஆட்களே திகைத்துப் போனார்கள் என்று மேலும் கூறுகிறான் ஹரேஷ் பட். எப்படி இந்த இனப்படுகொலையின்போது குஜராத் காவல்துறையினரின் கண்களும் வாயும் மூடப்பட்டிருந்தது என்கிறான் பாபு பஜ்ரங்கி. நரேந்திர மோடி காவல்துறையை எங்களுக்காகப் பணிபுரியச் செய்தார் என்கிறான் வி.எச்.பி. தலைவர் ராஜேந்திர வியாஸ். ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்தபோது எப்படி கொலைகாரர்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி இருந்தது என்பதைக் கூறுகிறான் திமந்த் பட். காவல் துறையினரே எப்படி 70 -& 80 பேரைக் கொன்றார்கள் என்பதை சுரேஷ் ரிச்சர்ட் நினைவு கூர்கிறான். என்னை வெளியே கொண்டு வர நரேந்திர மோடி மூன்று முறை நீதிபதிகளை மாற்றினார் என காலரைத் தூக்கி விட்டுச் சொல்கிறான் பாபு பஜ்ரங்கி. இதே பாபு பஜ்ரங்கியைத்தான் நரேந்திர மோடி பல மாதங்கள் ராஜஸ்தானின் மௌண்ட் அபுபில் உள்ள பெரும் சொகுசு மாளிகையில் மறைத்து வைத்திருந்தான். கொலைகளைச் செய்தவர்கள் மீதான சில வழக்குகள் வலிமையற்றவை. கடவுளின் ஆசிர்வாதத்தால் சமாளித்தோம் என பெருமூச்சு விடுகிறான் மூத்த வழக்கறிஞரும் வி.எச்.பி. பொதுச்செயலாளருமான திலிப் திரிவேதி. மேலும் நீதிபதி கே.ஜி.ஷா நம்முடைய ஆள், நீதிபதி நானாவதிக்குப் பணம்தான் குறி என்கிறான் குஜராத் மாநில வழக்கறிஞர் அரவிந்த பாண்டியா.

சிறப்புப் புலனாய்வுக் குழு முன்னால் தான் ஆஜராக விரும்புவதாக ஆஷிஷ் கேத்தன் தானே மனு செய்தார். அவர் அழைக்கப்பட்டார். அவர் தனது விரிவான வாக்குமூலங்களையும் 60 மணி நேர காட்சிக் கோப்புக ளையும் அந்தக் குழுவிற்குக் கொடுத்தார். அதன் பின் தொடர்ந்து பல முறை சென்று வாக்குமூலங்கள் அளித்தார். அதில் பாபு பஜ்ரங்கி, மாயா கோட்னானிக்கு எதிராகப் பல நுணுக்கமான தகவல்களை வழங்கினார் ஆஷிஷ். நீதிமன்றங்களில் தொடர்ந்து ஆஜராகிக் கொண்டேயிருந்தார் ஆஷிஷ். பல முறை அவரிடம் வேண்டாத கேள்விகள், குதர்க்கமான கேள்விகள் என அவரை ஆத்திரப்படுத்தும் விதமாகவே நீதிபதிகளும், அரசு வழக்கறிஞர்களும் நடந்து கொண்டார்கள். இப்ப கூட நீங்க ரகசிய காமிரா வச்சிருக்கீங்களா என்றார் நீதிபதி ஜோஷி. அவர் எல்லா குற்றவாளிகளின் முன்னணியில் ஆஷிஷிடம் அவரது குடும்பத்தார், அவரது வீடு, அது வாடகை வீடா, எத்தனை ஆண்டுக-ளாக இந்த விலாசத்தில் குடியிருக்கிறார் என அங்கு நீதிமன்ற அறையில் இருக்கும் கொலைகாரர்களுக்குத் தகவல் தருவதற்காகவே விசாரனையை நடத்தினார். டெல்லியில் ஒரு புகழ்பெற்ற பெரிய பத்திரிகையில் பணியாற்றும் ஒரு பத்திரிகையாளனுக்கே இப்படிப்பட்ட மரியாதை என்றால், பாதிக்கப்பட்ட ஏழை சாட்சிகளை எப்படி நடத்தியிருப்பார்கள்.

”ஒரு சாதாரண, எளிய நிருபனாகிய என்னால் இவ்வளவு முக்கிய ஆதாரங்களைத் திரட்டி வர முடிந்தால், சர்வ அதிகாரமும் கொண்ட உங்கள் அணியால் அனைத்தையும் கொண்டுவரமுடியும் என்றேன் இந்த ஸ்டிங் ஆபரேஷனை நான் மேற்கொண்டதன் நோக்கம் என்ன? இந்துக்களைத் தவறானவர்கள் என்று காட்டுவதா? என்று அதிகாரி கேட்டார் .நான் சொன்னேன். ‘ஐயா, நானே ஓர் இந்து. என் சமூகத்தை நானே இழிவாகக் காட்டுவேனா? மதத்தின் பெயரால் நடத்தப்பட்டுள்ள படுபாதகக் குற்றங்கள்தான் இங்கே விசாரிக்கப்படவேண்டும். என் மத விருப்பங்களை அல்ல.’

எடிட் செய்யப்படாத 60 நிமிட வீடியோ இந்த ஆதாரம் நாடு முழுவதையும் உலுக்கியெடுக்கும். மோடி பதவி விலகவேண்டியிருக்கும் கொலைகாரர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என்று நாங்கள் நம்பினோம்.ஆனால் நடக்கவில்லை என்று வருத்ததுடன் கூறுகிறார் ஆஷிஷ் கேத்தன்.

பாதிக்கப்பட்ட ஆதரவற்ற சமுதாயத்திற்காக உயிரை பணயம் வைத்து நீதிக்காக போராடிய ஆஷிஷ் கேத்தன் அவர்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்க பிராத்திப்போம் நாம். 

Wednesday, May 8, 2013

டீ காபிக்கு பேப்பர் கப்'களை பயன்படுத்துபவரா!?

ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவர் தினமும் இரவில் வயிற்று வலியால் கஷ்டபட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம்.

அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார், அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர் "கப்'களில், டீ, காபி குடிப்பது வழக்கம்! அந்த, "கப்'கள் மூலமாகத்தான், நண்பர் வயிற்றில் மெழுகு அதிகமாகி, வயிற்று வலிக்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார் டாக்டர்.

அவர் மேலும், தற்காலத்தில் பெரும்பான்மையான அலுவலகக் கேன்டீன்களில், "பேப்பர் கப்'களை பயன்படுத்தி வருகின்றனர். மலிவான, தரம் குறைந்த காகிதங்களால் செய்யப்படும் "கப்'கள், தண்ணீராலோ, திரவத்தாலோ கரைந்து விடக் கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில், மெழுகு பூசப்படுகிறது.

இப்படி மெழுகு பூசப்பட்ட "கப்'களில், மிக சூடான, டீயோ, காபியோ நிரப்பப்படும் போது, அந்த வெப்பம் காரணமாக, "கப்'பிலிருக்கும் மெழுகு உருகி, டீ அல்லது காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள் சென்று விடுகிறது. அது, நாளடைவில், வயிற்றில் பல உபாதைகளை தோற்றுவிக்கிறது.

"டீ, காபி அருந்துவதற்கு, கண்ணாடி அல்லது செராமிக் "கப்'களே சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டம்ளர் களையும் உபயோகிக்கலாம். ஆனால், எந்த நிலையிலும் பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான, "கப்'களை உபயோகிக்க கூடாது. இல்லையேல், ஆரோக்கியத்தை பலிகொடுக்க வேண்டி வரும்...' என்று கூறினார் டாக்டர்.

அவர் கூறிய இந்த அறிவுரைகள், விலை மதிப்பில்லாதது; அனைவரும் அதை பின்பற்ற வேண்டும்.

Tuesday, May 7, 2013

அறிவில் அகிலம் தொடும் அபிராமி?

சாதிக்க துடிப்பவருக்கு அங்க குறைவு ஒன்றும் ஒரு குறையில்லை என்பதற்கு அறிவில் அகிலம் தொடும் அபிராமி ஓர் உதாரணம்.

கல்விக்கு உயரம் ஒரு தடையா? இல்லவே இல்லை என சாதித்து காட்டியுள்ளார் மூன்று அடி உயரம் உள்ள 28 வயது பெண் அபிராமி.

'என் சொந்த ஊர் சங்ககிரி அருகே உள்ளே நல்லப்பநாயக்கன்பட்டி. என் அப்பா அம்மா இருவரும் பூ விற்கும் கூலி வேலை செய்பவர்கள். நான் பிறக்கும் போதே வளர்ச்சி குறைந்த மாற்று திறனாளி. என் உடலிற்கு தான் வளர்ச்சி குறைவு என் சிந்தனைக்கு இல்லை.... என்னால் முடிந்த அளவு படித்து பி.காம் முடித்து எம்.காம் பவானியில் படித்து முடித்தேன்.

எனக்குள் நம்பிக்கை நிறைய உள்ளது. ஆனால், எங்களை போன்ற மாற்று திறனாளிகளை நம்பும் சமூகம் தான் இல்லை. எனவே, சரியான வேலை கிடைக்கவில்லை நான் பயின்ற தனியார் கல்லூரியிலேயே தற்காலிக உதவியாளராக பணியாற்றி வருகிறேன்... அந்த வருமானம் என் குடும்பத்திற்கு போதவில்லை. என் தம்பி தற்போது பி.எஸ்.சி படித்து வருகிறான் அவனையும் மேல் படிப்பு படிக்க வைக்க வேண்டும். இதற்கு நான் நிறைய சம்பாதிக்க வேண்டும். எனவே என்மேல் நம்பிக்கை வைத்து மாற்று திறனாளிகள் சிறப்பு பிரிவின் கீழாவது அரசு சார்பில் ஏதாவது பணி வழங்க வேண்டும்....அவ்வாறு வழங்கினால் என் பணியை நேர்மையாகவும் சிறப்பாகவும் செய்து தேசத்தை காத்து அதன் வழி என் குடும்பத்தையும் வளர்த்துகொள்வேன் எனக்கொரு வாய்ப்பு தாருங்கள்' என சேலம் மாவட்ட ஆட்சியர் க.மகரபூசனத்திடம் மனு கொடுத்தார்... அவர் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார்.

சினிமா நடிகைகளுக்கு கொடுக்கிற ஆதரவ இந்த மாதிரி பெண்களுக்கு கொடுங்க.உடலின் உயரம் குறைவு ஆளுமைமிக்க அபிராமியின் அறிவின் உயரம் அகிலம் தொடுகிறது.

Monday, May 6, 2013

சாதிவெறியை சாய்ப்போம்! மதவெறியை மாய்ப்போம்!?

அனைத்து சிறுபான்மையினருக்கும் அன்பான வேண்டுகோள்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை குறிவைத்து, தலித் மக்களை எதிரிகளாகக் காட்டி, வன்னியர் வாக்குகளை ஒருங்கிணைப்பதற்காக பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுவரும் பா.ம.க.வைப் போலவே பா.ஜ.க.வும் செயல்பட்டு வருகிறது.

நாகர்கோவில், கோவை, குன்னூர் என பா.ஜ.க.வுக்கு ஓரளவு செல்வாக்கு உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில் கடந்த சில மாதங்களாக வேண்டுமென்றே பதற்றத்தை ஏற்படுத்தி, முஸ்லிம்களை எதிரிகளாகக் காட்டி இந்து ஓட்டுக்களை ஒருங்கிணைக்க பா.ஜ.க முயன்று வருகிறது.

மதவெறியின் கோரப்பிடியில் சிக்கி சின்னாபின்னமான கோவை மாநகரம், இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் எதைப்பற்றியும் கவலைப் படாமல் தமது சொந்த அரசியல் அறுவடைக்காக பா.ஜ.க மீண்டும் அங்கு கலவர நெருப்பை பற்றவைக்கிறது.

(ஒரு வாரத்தில் தமிழ்நாடு முழுவதும்: 513 பஸ்கள் சேதம் அடைந்துள்ளன., 13 அரசு மற்றும் தனியார் பஸ்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன., இதனால் ரூ.2 கோடிக்கும் மேல் சேதம் ஏற்பட்டிருக்கும் என தெரிய வந்துள்ளது., 20 புளியமரங்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன., 160 மரங்கள் வெட்டப்பட்டு ரோடுகளின் குறுக்கே போட்டு வாகன போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தப்பட்டது.)

சுய ஆதாயத்துக்காக சமூக அமைதியை குலைக்கும் வகையில் செயல்பட்ட பா.ம.க.வை தனிமைப்படுத்தும் நோக்கில், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும், ஜனநாயக சக்திகளையும் சந்தித்து விடுதலைச் சிறுத்தைகள் முறையிட்டது போல், இஸ்லாமிய கூட்டமைப்பினரும் செயல்பட்டு பா.ஜ.க.வை தனிமைப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

பா.ம.க.வின் சாதிவெறி எந்த அளவுக்கு ஆபத்தானதோ, அதை விடவும் ஆபத்தானது பா.ஜ.க.வின் மதவெறி.

சாதிவெறியை சாய்ப்போம்; மதவெறியை மாய்ப்போம்! (நன்றி: ஆளூர் ஷாநவாஸ்.)

Sunday, May 5, 2013

தொடு திரை தொழில்நுட்பம் குழந்தைகளை பாதிக்குமா?

லண்டன்: தொடு திரை (டச் ஸ்க்ரீன்) வசதி கொண்ட ஸ்மார்ட் ஃபோன்களும், டேப்ளெட்டுகளும்(கையடக்க கணினி) சிறு குழந்தைகளின் கற்றலுக்கு நல்லது என்று புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கும் வேளையில், இக்கருத்தை சில விஞ்ஞானிகள் மறுக்கின்றனர்.
பொதுவாக சிறு குழந்தைகள் மணிக்கணக்கில் தொடுதிரை கணினிகள், கணினிகள், தொலைக்காட்சிகளின் முன்னால் செலவிடுவது தவறு என்றும், இதனால் அவர்களின் மூளையின் கற்றல் திறன் பாதிக்கப்படும் என்றும் விஞ்ஞானிகள் ஏற்கெனவே பரவலாக கவலைகள் வெளியிட்டு வரும் நிலையில், இந்த பிரச்சனை குறித்து விஸ்கான்ஸின் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் முடிவுகள் இந்த கவலைகள் பெருமளவு தேவையற்றவை என்று கூறியிருக்கிறது.
பொதுவாகவே ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இயற்கையிலேயெ தொழில்நுட்பத்தை அறிந்துகொள்வதில் கூடுதல் ஆர்வம் இருக்கிறது. எனவே அந்த வயது குழந்தைகளின் கைகளில் ஒரு புதிய தொழில்நுட்பக் கருவியை கொடுத்தால், பெரியவர்களை விட இயல்பாக அந்த கருவியை ஆராய்ந்து அதை கையாள்வதில் அவர்கள் பெரும்பாலும் வெற்றி பெறுவார்கள். இந்த பின்னணியில் இரண்டு வயது குழந்தைகளிடம், தொடுதிரை கையடக்க கணினிகள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆய்வு செய்த விஸ்கான்ஸின் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், குழந்தைகளின் கற்றலை இந்த தொடுதிரை கணினிகள் ஊக்குவிக்கின்றன என்று தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாக தொடுதிரை கணினிகளில் இருக்கும் கேம் அதாவது விளையாட்டு அல்லது காணொளியானது இண்டர் ஆக்டிவ்வாக, அதாவது குழந்தை அதை தொடத்தொட வெவ்வேறு புதிய தகவல்கள், படங்கள், ஒலிகள் அல்லது காணொளிகள் வரும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தால், அது, அந்த குழந்தைகளின் கற்றலை ஊக்குவித்து, குழந்தைக்கு உதவுகிறது என்று இந்த ஆய்வாளார்கள் தெரிவித்திருக்கிறார்கள்.இரண்டுவயது குழந்தையின் பார்வையில் இந்த தொடுதிரைகணினியின் விளையாட்டுக்கள் எவ்வளவுக்கெவ்வளவு இண்டராக்டிவ் ஆக இருக்கிறதோ அந்த அளவுக்கு குழந்தைக்கு இவை பிடிக்கின்றன என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த தொடுதிரைகளுடன் அதிகம் புழங்கும் குழந்தைகள் வேகமாக அதில் சொல்லப்படும் செய்திகளை உள்வாங்கிக்கொள்கின்றன என்று கூறுகிறார் இந்த ஆய்வு நடத்திய விஞ்ஞானிகளில் ஒருவரான மனித வளம் மற்றும் குடும்பநல படிப்புகளுக்கான துணைப் பேராசிரியர் ஹெதர் கிர்கோரியன்.மேலும் காண்களால் அறிவதில் மட்டுமல்ல, புதிய வார்த்தைகளை கற்பதிலும் இந்த தொடுதிரை கணினிகள் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு உதவுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். எனவே, தொடுதிரை கணினிகள் குழந்தைகளின் கற்றல் திறனுக்கு உதவுகிறதே தவிர, அதை எதிர்மறையாக பாதிக்கவில்லை என்கிறது இந்த ஆய்வு. ஆனால், இந்த ஆய்வின் முடிவுகளில் இருந்து மாறுபடுகிறார் குழந்தை மனநல மருத்துவர் அரிக் சிக்மன். தற்கால குழந்தைகள் திரைகள் முன்னால் மணிக்கணக்கில் செலவிடுவதாக கூறும் அரிக் சிக்மன், தொலைக்காட்சி, கணினி, தொடுதிரை கணினி, ஸ்மாட்ர்போன்கள் என்று சராசரியாக தற்கால குழந்தைகள் ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் திரையின் முன்னால் செலவிடுவது அவர்களின் கற்றல் திறனை பாதிக்கிறது என்கிறார்.
இவரது அய்வில் தற்போது பிறக்கும் ஒரு குழந்தை ஏழு வயதாகும் போது அதில் ஒரு ஆண்டு காலத்தை திரைக்கு முன்னால் செலவிட்டிருக்கும் என்று கணக்கிட்டிருக்கிறார். அதாவது இன்று பிறக்கும் குழந்தை தொலைக்காட்சி, கணினி, தொடுதிரை கணினி, ஸ்மார்ட்போன் என்று தினசரி அது ஏதோ ஒரு திரையின் முன்னாள் செலவிடும் மொத்த நேரத்தையும் கணக்கிட்டால், அந்த குழந்தைக்கு ஏழு ஆண்டு ஆவதற்குள், அது ஒரு ஆண்டை திரைக்கு முன்னால் கழித்திருக்கும் என்பது இவரது கணக்கு.
இது குழந்தைகளின் மூளைவளர்ச்சிக்கும், கற்றல் திறனுக்கும் நல்லதல்ல என்பது இவரது வாதம். இந்த வாதத்தை மறுக்கும் விஸ்கின்ஸான் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், பெற்றோர்களுக்கு இரண்டு யோசனைகளை அளிக்கிறார்கள். முதலாவது, சிறுகுழந்தைகள் சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கு அதிகமாக திரை முன்னால் இருக்க அனுமதிக்காதீர்கள் என்பது முதல் யோசனை. அதாவது, தொலைக்காட்சி, கணினி, தொடுதிரை கணினி என்று எல்லாவகையான திரைகளின் முன்பும் சேர்த்து குழந்தைகள் ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு மணிகளுக்கு மேல் இருக்க அனுமதிக்கக் கூடாது என்பது முதல் யோசனை.
இரண்டாவது, தொடுதிரை கணினியில் இருக்கும் கேம்கள் மற்றும் அப்ளிகேஷன்கள் போன்றவற்றை தேர்வு செய்வதில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்துகிறார்கள். தொடுதிரைகணினியில் குழந்தை செலவழிக்கும் நேரத்தைப் போலவே, அது இந்த திரையின் முன்னால் என்ன செய்கிறது என்பதும் முக்கியம் என்பதை எல்லா விஞ்ஞானிகளுமே வலியுறுத்துகிறார்கள்.
தொடுதிரை என்கிற புதிய தொழில்நுட்பம் எதிர்கால தலைமுறையினரின் வாழ்வில் பிரிக்கமுடியாத அங்கமாக மாறிவருவதை சுட்டிக்காட்டும் ஆய்வாளர்கள், இதை தங்களின் குழந்தைகளுடைய நன்மைக்கு பயன்படுத்தும் ஒட்டுமொத்த பொறுப்பும் பெற்றோர்களின் கையிலேயே இருக்கிறது என்பதை வலியுறுத்துகிறார்கள்.

Saturday, May 4, 2013

எது மத சார்பற்ற நாடு?

இந்தியா மத சார்பற்ற நாடு என்று எல்லாரும் நினைத்துக்கொண்டு இருக்கிறீர்களா? மேலே படியுங்கள் நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை. பாகிஸ்தான் தேர்தலில் ஹிந்துக்களுக்கு "ரிசர்வ்" தொகுதிகள்.

மத சார்பற்ற நாடு என சொல்லிக் கொள்ளும் இந்தியாவில், முஸ்லிம்களுக்கு கல்வியில் இட ஒதுக்கீடு கொடுக்கவே தடைகள் உள்ள நிலையில்.

"முஸ்லிம் நாடு" என பிகடனப்படுத்திக் கொண்டு செயல்படும் பாகிஸ்தானில், உள்ளூர் முதல் நாடாளுமன்றம் வரை ஹிந்துக்களுக்கு "ஹிந்து ரிசர்வ்" தொகுதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

பாகிஸ்தானில் அடுத்த மாதம் (11/05/13) நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், ஹிந்துக்களுக்கு கணிசமான தொகுதிகளை "ரிசர்வ்" தொகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அங்கு முஸ்லிம்கள் போட்டியிடவே முடியாத அளவுக்கு ஹிந்துக்களுக்கு அரசியல் அதிகாரத்தில் பங்கு கொடுத்துள்ளது, பாகிஸ்தான் அரசு.

மொத்தமுள்ள 342 நாடாளுமன்ற (National Assembly) தொகுதிகளில், 10 தொகுதிகள் ஹிந்துக்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது.

மாகாண வாரியாக நடை பெறும் (PROVINCIAL ASSEMBLIES) சட்டமன்றத் தேர்தல்களிலும் "ஹிந்து ரிசர்வ்" தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தவிர, 104 உறுப்பினர்களை கொண்ட "செனட் சபை"யிலும் 10 ஹிந்துக்கள் இடம் பெறும் வகையில், பாகிஸ்தானின் அரசியல் சாசனத்தின் 18வது பிரிவில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, நீதிமன்றமும் அதனை அங்கீகரித்து விட்டது.

மேலும், பாகிஸ்தானின் 1975 ம் வருடத்திய தேர்தல் சட்டத்தின் 51வது பிரிவிலும் திருத்தம் செய்யப்பட்டு விட்டது.

4 மாகாணங்களில் உள்ள மொத்த சட்டசபை தொகுதிகள்: 577., அதில் "ஹிந்து ரிசர்வ்" தொகுதிகளின் எண்ணிக்கை 23

பஞ்சாப் மாகாணத்தில் 8, சிந்துவில் 9, NWFP-ல் (பெஷாவர்) 3, பலூசிஸ்தானில் 3 என, மொத்தம் 23 தொகுதிகளில் முஸ்லிம்கள் போட்டியிடவே முடியாது. 

முஸ்லிம்களை கருவறுக்கும் இங்குள்ள பாசிச சக்திகளுக்கும், பாகிஸ்தானின் பரந்த மனப்பான்மைக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது.(இதையெல்லாம் 
மக்களுக்கு அறியத்தருவது  இல்லை வந்தேறி பார்ப்பன ஊடகங்கள்).

Friday, May 3, 2013

பாலியல் பலாத்கார காரணம் இதுவோ?

பெண்களுக்கான பாலியல்வன்முறைகள் அதிகரிக்க அவர்கள் அணியும் ஆடைகள்தான் காரணம் என்பதை தற்போது அனைத்து தரப்பினரும் உணர்ந்து வரும் இவ்வேளையில் பெண்கள் கற்பழிக்க படுவதற்கு காரணம் என்ன என்று நாங்கள் ஓட்டெடுப்பு நடத்தினால்.  அதிகபட்ச நபர்கள் பெண்கள் அணியும் அரை குறை ஆடை தான் என்று ஓட்டு அளித்து இருந்தார்கள் இன்று நாம் நிறைய இடங்களில் பார்க்கிறோம் பெண்கள் அரை குறை ஆடை அணிந்து தான் வருகிறார்கள். பார்க்கும் ஆண்களை சபலபடவைக்க இதவும் ஒரு காரணமாகவே அமைகிறது. அதற்க்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான் உன்னுடைய வீட்டை சுற்றமாக்கு நாடு தானாகவே சுற்றமாகும்

அப்படி அரை குறை ஆடை அணிவது நம் சகோதரியாக கூட இருக்கலாம் நாம் பிள்ளைகளாக கூட இருக்கலாம் . முதலில் அவர்களுக்கு வீட்டில் ஒழுக்க நெறிகளை சொல்லி கொடுத்து வளர்ப்பது நமது தலையா கடமை இருக்கிறது . வீட்டில் தந்தை அண்ணன் ,தம்பி , மற்றும் வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவரும் இருக்கிறார்கள் அவர்களை மீறி எந்த பெண்ணும் அரை குறை ஆடை அணிவது இல்லை முதலில் நமது வீட்டில் உள்ள பெண்களின் ஆடை கொஞ்சம் ஆபாசமாக தெரிந்தால் கண்டிப்பாக கண்டிப்பது நமது கடமை .அதை விட்டு விட்டு அவர்களை நாம் அரை குறையாக ஆடை அணியவைத்து ஷாப்பிங் மாலுக்கும் பீசிக்கும் ,படத்திற்கும் அழைத்து கொண்டு திரியும் நிறைய தாய் தந்தை இருக்கிறார்கள் அவர்களை பார்க்கும் போது தான் அரை குறை ஆடை அணியும் பெண்கள் மீது தவறு இல்லை அவர்களின் தாய் தந்தை சகோதர்கள் மீது தான் தவறு என்று தெள்ள தெளிவாக தெரிகிறது . இவர்கள் தன்னுடைய சகோதிரிகளை அரை குறை ஆடை அணியவைத்து எப்படி அழைத்து வருகிறார்கள் என்று தெரியவில்லை ?உண்மையில் சிந்திக்க வேண்டிய விசையம் தான்.

நம் தமிழ் நாட்டில் இன்று தாவணி என்று சொல்லுவார்கள் அப்படி என்றால் என்ன வென்று கேட்கும் அளவிற்கு போய் கொண்டு இருக்கிறது . இன்று நிறைய சகோதரிகள் சுடிதாருக்கு துப்பட்டா அணிவதே இல்லை கேட்டால் நாகரிகம் என்று சொல்லுகிறார்கள் எப்படி வேண்டுமானாலும் வாழ்வது வாழ்க்கை அல்ல இப்படி தான் வாழ்வது என்பது தான் வாழ்க்கை.

பெண்கள் அரைகுறை ஆடை ,இறைவனின் படைப்பில் பெண்கள் ஒரு அழகான படைப்பு ,இன்றோ பெண்களின் சுதந்திரம் என்ற போர்வையில் நாகரிகம் என்ற போர்வையில் பெண்களை போதை பொருளாக கண்பிப்பது இதற்கு பெண்களின் இயக்கங்கள் மௌனம் சாதிப்பது இது தான் பெண் சுதந்திரமா??? இதுவும் ஒரு பெணிற்கு எதிரான விபசாரமே அதுவும் corporate விபச்சாரம்.

இன்று இந்தியாவில் பெண்களின் நிலை என்ன நாகரிகம் வளர வளர பெண்கள் பாலியல் கொடுமைகளும் ,கற்பழிப்புகள் அதிகமானது என்று சொன்னால் மிகை ஆகாது ! இதிலிருந்து உடை கட்டுபாடும் இது போன்ற குற்றங்களை தடுபதற்கான ஒரு வழி என்பது நிதர்சனமான உண்மை . இன்று மத்திய பிரதேசத்தில் ஒரு சட்டம் இயற்ற பட்டது பெண்களின் மீது acid உற்றினால் 3 லட்சம் அபரதாமம் ! என்ன ஒரு கடுமையான சட்டம் ,இந்த சட்டத்தை இயற்றிவர்கள் மீது தான் முதலில் acid எரிய வேண்டும்.. பெண்கள் கற்பழிக்க படுவத
ற்கு அரைகுறை ஆடை மட்டும் காரணமாகவும் எடுத்து கொள்ள முடியாது .

இன்று நாம் தொலை காட்சிகளில் நாம் குடும்பத்தோடு பார்க்க முடிகிறதா முகம் சுளிக்கும் வனமாகவே இருகிறது .தந்தை பிள்ளைகளோடு தொலை காட்சியே பார்க்க முடியவில்லை இன்று சாதாரண விளம்பரத்தில் கூட ஆபாசம் தொலைகட்சியே திறந்தாலே ஆபாசமாக தான் இருக்கிறது . கிரிக்கெட் ஐ .பி .எள் . விளையாட்டிலும் கூட ஆபாசம் தேவை படுகிறது பெண்களை போதை பொருளாகவே பயன்படுத்துகிறார்கள் இதை எல்லாம் பார்த்து மக்களின் மனம் மரத்து போய் விட்டது உடை கட்டுப்பாடு இருந்தாலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் சில காமவெறி கொண்ட கயவர்களால் நடந்து கொண்டு தான் இருக்கிறது இவர்களை தண்டிக்க எப்படி பட்ட சட்டம் இயற்றலாம் ??? கடுமையான சட்டங்கள் வராதவரை இது போன்ற அனச்சாரங்களுக்கு முடிவிற்கே வராது.

Thursday, May 2, 2013

ஆப்பிளை பற்றி அறியாத செய்தி?

An apple a day keeps the doctor away... இப்படி ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உள்ளது. அதாவது தினசரி ஒரு ஆப்பிள் பழத்தை உண்ணுவதன் மூலம் வைத்தியர்களை நம் அருகில் நெருங்கவிடாமல் வைத்திருக்கலாம். அதாவது நோய்கள் இன்றி வாழலாம். இது பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்த விடயம். இதில் புது விடயம் என்னவென்றால் இந்த ஆப்பிள் பழங்களை அவற்றின் தோலுடன் சாப்பிட வேண்டும் என்பது தான்.

ஆப்பிள் பழத்தின் தோலில் காணப்படும் மெழுகுத் தன்மை கொண்ட பளபளப்பும், அதனோடு இணைந்த இரசாயனமும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை அளிக்கக் கூடியது என்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் பழத் தோலில் காணப்படுவது அர்சோலிக் அமிலமாகும். இது தசைகளை ஆரோக்கியமாகக் கட்டி எழுப்பக்கூடியது. இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பு அளவை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கக் கூடியது.

இதன் ஒட்டுமொத்த அர்த்தம் ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிளைச் சாப்பிடுவதால் மனிதனது சுகாதாரம் வியக்கத்தக்க ஆரோக்கியத்தைக் கொண்டிருக்கும் என்பது தான். அர்சோலிக் அமிலமானது மிகவும் சுவாரஸ்யமான ஒரு இயற்கை மூலப் பொருள் என்று இந்த ஆய்வை நடத்தியுள்ள டாக்டர். கிறிஸ்டோபர் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார். 

ஆப்பிள் தோல்களில் காணப்படும் இது இயல்பான ஒரு ஆகாரமாகவும் உள்ளது என்று கூறும் டாக்டர் ஆடம்ஸ் உடலில் ஹார்மோன்களின் தாக்கம் பற்றி ஆராயும் ஒரு அமெரிக்க நிபுணராவார். முதுமை அடைகின்றபோது தசைகள் சோர்வடைவது அல்லது நலிவடைவது ஒரு பொதுவான பிரச்சினையாகும். வயதான காலத்தில் இது பல நோய்களுக்கும் காரணமாகின்றது. இதற்கு குறிப்பாக மருந்துகளும் கிடையாது.

இதற்கு மாற்று வழி தான் என்ன என்று லோவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர். ஆடம்ஸ் தலைமையிலான குழுவினர் ஆராய்ந்தபோதுதான் ஆப்பிள் பழம் மற்றும் அதன் தோல் என்பனவற்றின் மகிமை உணரப்பட்டுள்ளது. எனவே ஆப்பிள் தோளை இனி சீவி எறிய வேண்டாம், அதை அப்படியே தோலுடன் சாப்பிடுங்கள் என்று மக்களுக்கு இந்த ஆய்வாளர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்

Wednesday, May 1, 2013

* மே 1 இசை, இரைச்சலா இன்பமா?

இசைப்பிரியர்கள் இசையைக் கேட்பதில் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என எச்சரி்க்கை விடுத்துள்ளார் துபையைச் சேர்ந்த செவிப்புலனாய்வாளர் டாக்டர் ஏ.வி.ரேஷா, துபையில் உள்ள மெட்கேர் என்ற மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். இவர் செவி மற்றும் கேட்கும் திறனை ஆய்வு செய்யும் ஆய்வாளர் (audiologist).

தற்போது எம்பி 3 மூலமாக பாட்டு கேட்பது மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஆனால் இந்த பிளேயரில் சிறிதளவு சத்தத்துடன் தொடர்ந்து கேட்டாலும் காது கேட்கும் திறனை இழக்கும் ஆபத்துள்ளதாக டாக்டர் ரேஷா தெரிவித்துள்ளார். சத்தத்தின் அளவை டெசிபல் என்று குறிப்பிடுகின்றனர். 90 டெசிபல் சத்தத்துடன் 8 மணிநேரம் ஒருவர் இசையைக் கேட்டால் கண்டிப்பாக அவருடைய கேட்கும் சக்தியை இழந்து விடுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார். மிகுந்த சந்தடிமிக்க நெடுஞ்சாலையில் ஏற்படும் இரைச்சலை 90 டெசிபலுக்கு உதாரணமாக கூறலாம்.

இந்த சத்தத்தின் அளவு 5 டெசிபல் அதிகரித்தால் 4 மணி நேரம் கேட்டாலே அவருடைய கேட்கும் திறன் பாதிக்கப்படும் என்றும் 100 டெசிபல் என்றால் 2 மணி நேரத்திலே இந்த பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார் இந்த ஆய்வாளர். இசையை கேட்கும்போது எம்பி3 பிளேயர் உட்பட எந்த பிளேயராக இருந்தாலும் அதனுடைய சத்தத்தின் அளவை 50 சதவிகிதம் வைப்பதுதான் பாதுகாப்பானது என ஆலோசனை வழங்கியுள்ளார். 90 சதவிகித சத்தத்துடன் கேட்டால் 15 நிமிடங்களுக்கு மேல் கேட்கக் கூடாது மற்றும் தரம் வாய்ந்த ஹெட்போன்களை பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் ரேஷா.  

* மே 1 - சர்வதேச இரைச்சல் விழிப்புணர்வு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. Music Listening happiness in danger?.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!