Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, October 11, 2012

இந்து மத்தத்தின் பெயரால் நடக்கும் இனக்கொ(லை)டுமைகள்?


குஜராத்தின் முதல்வரும்,பா.ஜ.க என்ற மதவாத கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான நரேந்திர மோடி அதிகாரபூர்வமாக தனது மாநிலத்தின் பெயரை மாற்றியுள்ளார்.

ஒரு சமூகத்தை முழுமையாக அழிக்க வேண்டும் என்றால் முதலில் அந்த சமூகத்தின் வரலாற்றுத் தொடர்புகளையும் பாரம்பர்ய சின்னங்களையும் அழித்துவிட்டால் அந்த சமூகம் தொடர்பு அறுந்த சமூகமாக, முகவரி இல்லாத நாடோடி சமூகமாக மாறிப்போகும். பிறகு அந்த சமூகத்தை அழிப்பது மிகவும் எளிது. இப்படி குறிவைத்து அழிக்கப்பட்ட பல சமூகங்களின் வேதனை நிறைந்த வரலாற்று சம்பவங்களை உலக வரலாற்று ஏடுகளில் காணலாம்.

சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் ஹிட்லர் மற்றும் முஸோலினியின் பாசிச நாஜி கொலைகார கூட்டம் இப்படித்தான் உலகின் பல பாகங்களிலும் தங்களது இன வெறி கொள்கைகளை நிலைநிறுத்தியது.

அத்தகைய பாசிச வெறியர்களிடம் பாடம் பயின்ற சங்பரிவார கும்பல் இந்தியாவிலும் அதுபோன்ற இனவெறி நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது. சகிப்புத் தன்மைக்கு பெயர் பெற்ற இந்து மதத்தின் பெயரால் இந்த கொடுமைகளை இவர்கள் நடத்துவது தான் மிகப்பெரிய அக்கிரமம். அதனால் தான் இந்து மதத்தில் உள்ளவர்களின் 1 சதவீத ஆதரவைக் கூட இவர்களால் பெற இயலவில்லை. இந்து மக்களாலேயே புறக்கணிக்கப்பட்ட இந்த சங்பரிவார், அந்த மதத்தின் பெயரை பயன்படுத்தி இனவெறி, மதவெறியை தூண்டுகின்றனர்.

இதுபோன்ற மனிதவிரோத வேலைகளை இவர்கள் தொடர்ந்து செய்வதற்கு ஏற்ற இடமாக மோடி ஆட்சி செய்யும் குஜராத் மாநிலம் கிடைத்திருக்கிறது. மோடியின் அட்டூழியங்களை நாம் நினைவுபடுத்த தேவையில்லை. காரணம் அந்த கொடூர கொலைகள் எல்லாம் நல்லோர்கள், நடுநிலையாளர்கள் நெஞ்சை விட்டு என்றைக்கும் மறையப் போவதில்லை.

இன அழிப்பு தொடர்கிறது மோடியின் காட்டுமிராண்டி ஆட்சியில்: தற்போது குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத் என்ற 600 ஆண்டு வரலாற்றுப் பெயரை அம்தாவாத் என்று அரசின் அத்துனை அறிவிப்பு ஏடுகள் மற்றும் பெயர் பலகைகளிலும் மாற்றி தனது நெஞ்சில் எரிந்து கொண்டிருக்கும் முஸ்லிம் விரோத எண்ணத்திற்கு மேலும் தீ மூட்டி குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்.

கி.பி. 1411 இல் முஸ்லிம் மன்னர் அகமது ஷா அவர்களால் உருவாக்கப்பட்ட நகரம் தான் அகமதாபாத். இன்றைக்கு இந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் ஜவுளி தயாரிப்பிற்கு உலகளவில் பெயர் பெற்ற நகரமாக விளங்குகிறது.

அகமதாபாத் மொத்த மக்கள் தொகையில் 20 விழுக்காடு மக்கள் முஸ்லிம்கள். மேலும் தேசத் தந்தை காந்தியடிகளின் சபர்மதி ஆஸ்ரமம் அகமதாபாத்தில் தான் உள்ளது. அகமதாபாத் என்ற முஸ்லிம் பெயரை மாற்றிட வேண்டி தேசவிரோத சக்திகள் பல முறை முயன்றும் முடியவில்லை. தற்போது மோடியின் கைங்கர்யத்தால் மாநகராட்சியின் பதிவேடுகளும் மாற்றப்பட்டுள்ளன. இதை குஜராத்திலிருந்து வெளிவரும் எந்த பத்திரிகைகளும் எதிர்ப்பு தெரிவிக்காமல் காவியில் கலந்து சங்கமமாகிவிட்டன.

இந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சி, நிர்வாகமுறை, அவர்களின் தியாகம் போன்ற வரலாற்று உண்மை நிகழ்வுகளை பதிவு செய்து வைக்கப்பட்டிருந்த வரலாற்று ஏடுகள் அனைத்தையும் வெள்ளையர்கள் ஆட்சியில் அடியோடு தீவைத்துக் கொளுத்தினர். உண்மைச் செய்திகள் அடுத்தடுத்த தலைமுறைக்கு செல்லக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தனர். பிறகு வெள்ளையர்களே அன்றைய சங்பரிவார் துணை கொண்டு முஸ்லிம் மன்னர்களைப் பற்றி கட்டுக்கதைகளை வரலாறு என்ற பெயரில் எழுதி வைத்தனர். அவற்றைதான் இன்றைய வரலாற்றுப் பாடங்களில் குழந்தைகளுக்குக் கற்றுத் தருகின்றனர்.

இவற்றை மாற்றி உண்மையான செய்திகளை தெரிந்து கொள்வதில், அவற்றை தங்களது பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்ப்பதில் முஸ்லிம்கள் போன்ற இன மத ரீதியான சிறுபான்மை சமூகம் என்றைக்கு ஆர்வம் காட்டுகிறதோ, அவற்றை நிலைநிறுத்துவதற்கு என்றைக்கு போராட துணிகிறதோ அதுவரையிலும் இது போன்ற அநியாயக்காரர்களின் ஆட்டூழியங்கள் இந்நாட்டில் தொடரத் தான் செய்யும். சட்டத்தால் எல்லாம் இவர்களை ஒன்றும் செய்துவிட இயலாது.

Tuesday, October 9, 2012

விஜய்க்கு செய்த பிளான் சல்மானுக்கு வொர்க்கவுட் ஆகுமா?

இயக்குனர் ராஜமௌளி இயக்கத்தில் ரசிகர்களின் பேராதரவு பெற்ற படம் நான் ஈ. படத்தில் சின்ன ஈ செய்யும் சேட்டைகள் குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவர்களையும் கவர்ந்தது. படம் முடிந்து பெயர் ஓடிக்கொண்டிருக்கும் போது நடனமாடும் ஈ, நடிகர் விஜய் திருமலை படத்தில் ஆடிய ஸ்டெப்களை போடுவது ரசிகர்களை கவர்ந்தது.

இப்போது இயக்குனர் ராஜமௌளி ‘நான் ஈ’ படத்தை இந்தியில் வெளியிட இருக்கிறார். இந்தி ரசிகர்களைக் கவரும் நோக்கில் படத்தில் முடிவில் ஈ நடனமாடும் அந்த சில நிமிட காட்சிகளை மட்டும் மறுபடியும் கிராஃபிக்ஸ் செய்து அதில் விஜய் போல ஆடிய ஸ்டெப்களுக்கு பதிலாக, இந்தி நடிகர் சல்மான்கான் போல ஈ நடனமாடும் காட்சிகளை உருவாக்கியிருக்கிறார்கள்.

அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள் கொண்ட விஜய், சல்மான்கான் ஆகியோரின் ஸ்டெப்களை போட்டு அனைத்து தரப்பு ரசிகர்களையும் தன் பக்கம் இழுக்கும் இயக்குனர் ராஜ மௌலியின் பிளான் இந்தியில் வெற்றி பெறுகிறதா என பார்ப்போம்.

தேனிலவுக்கு பாய் விரித்த பாசிசம்! செங்கொடி கம்பத்தில் பறந்த காவி!?



ஒரு காலத்தில் கடும் பகைவர்களாக இருந்த ஆர்.எஸ்.எஸ்.ஸும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இன்று கேரளாவில் தேனிலவில் கொஞ்சிக் குலாவுகின்றன.

சமீபத்தில் வடக்கு கேரளாவிலுள்ள கண்ணூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பி. ஜெயராஜன் அகில பாரதீய வித்தியார்த்தி பரிஷத்(ABVP) என்ற ஹிந்துத்துவ ஃபாசிஸ்டுகளின் மாணவர் அமைப்பைச்  சார்ந்தவரான சச்சின் கோபால் கொல்லப்பட்டதையடுத்து அவர் வீட்டுக்குச் சென்று “துக்கம் விசாரித்து விட்டு” வந்தார்.
பதிலுக்கு அதே மாவட்டத்திலுள்ள பானூர் என்ற ஊரிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் தாக்கப்பட்டதையடுத்து ஆர்.எஸ்.எஸ். குலக் கொழுந்துகள் அந்த அலுவலகத்தைப் பார்வையிட்டு “துக்கம் விசாரித்து விட்டு” வந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஹிந்துத்துவ ஃபாசிஸ்டுகளின் மலையாளப் பத்திரிகையான “கேசரி”யில் ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது. இந்தக் க்ட்டுரையை ஆர்.எஸ்.எஸ்.ஸின் “அறிவுஜீவிகளின்” பிரிவான பாரதீய விசார கேந்திரத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் டி.ஜி. மோகன்தாஸ் எழுதியுள்ளார்.
இந்த இரு அமைப்புகளும் ஒன்று சேர வேண்டும், “நண்பர்களாக” மாறவேண்டும் என்று அந்தக் கட்டுரையில் அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
கடந்த இருபதாண்டுகளில் ஆர்.எஸ்.எஸ்.ஸும், கம்யூனிஸ்ட் கட்சியும் கொலை மோதல்களில் ஈடுபட்டதில் 150 வரை அவர்களது உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது கண்ணூர் மாவட்டத்தில் மட்டும் நடந்தது. அப்படியிருக்க இப்பொழுது இந்தக் “கொள்கை கோமேதகங்கள்” ஒன்று சேரக் காரணம் என்ன?
சோழியன் குடுமி சும்மா ஆடுமா? காரணம் இருக்கிறது. கடந்த காலங்களில் இந்த இரு கொலைகார அமைப்புகளும் தங்களைத் தாங்களே வெட்டிக் கொள்வார்கள். அத்தோடு முஸ்லிம்களையும் கொன்றொழித்தார்கள். முஸ்லிம் சொத்துகளைச் சூறையாடினார்கள். ஆனால் சமீப காலங்களில் தென்னிந்தியாவில் முஸ்லிம்களிடம் ஏற்பட்டுள்ள எழுச்சியின் பயனாக அவர்களால் இப்பொழுது பழைய மாதிரி வாலாட்ட முடியவில்லை. பழைய வேகத்தில் அவர்களால் முஸ்லிம்களைத் தாக்க முடியவில்லை. முஸ்லிம்களிடம் ஏற்பட்டுள்ள எழுச்சி எனும் தடுப்புச் சுவரில் அவரகளின் தலை இப்பொழுது மோதுகின்றது.
ஒரு தரப்புச் சேதங்களே இருந்த காலம் போய் இன்று இரு பக்கமும் சேதங்கள் ஏற்படுகின்றன. ஆக, இருவருக்கும் பொது எதிரியான முஸ்லிம்களை “எதிர் கொள்வதற்கு” இன்று இந்த இரு குண்டர் அமைப்புகளும் ஒன்று சேர முயற்சி செய்கின்றன.
அதன் விளைவாகத்தான், ஃபாசிச “கேசரி”யில் வெளிவந்துள்ள அந்தக் கட்டுரை கம்யூனிஸ்ட் கட்சியினரை ஆகா, ஓகோ என்று புகழ்கின்றது. ஆர்.எஸ்.எஸ்.ஸில் நாத்திகர்கள் நுழையக் கூடாது என்றும் இல்லை, கம்யூனிஸ்ட் கட்சியில் நம்பிக்கையாளர்கள் நுழையக் கூடாது என்றும் இல்லை என்று ஆரூடம் சொல்கிறது. கம்யூனிஸ்ட் கட்சி அப்துந் நாஸர் மஃதனியின் பி.டி.பி. கட்சியுடன் கூட்டணி வைத்தது என்பதால் அது முஸ்லிம் அடிப்படைவாதத்தை ஆதரிக்கிறது என்பது உண்மையில்லை என்கிறது. அது தேர்தல் கூட்டணி மட்டும்தான் என்று சமாதானம் கூறுகிறது.
இந்த இரு அமைப்புகளும் ஊழலுக்கெதிராகப் “போராடும்” அமைப்புகளாம், ஆதலால் இரண்டும் இணைவது காலத்தின் கட்டாயமாம் என்று கட்டுரையாளர் கூறுகிறார். இருந்தாலும் ஃபாசிசம் பாசத்தை அதிகம் காட்டவிடாமல் பார்த்துக்கொள்கிறது. அதாவது, இந்தக் கருத்து கட்டுரையாளரின் சொந்தக் கருத்து என்றும், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வக் கருத்து இல்லை என்றும் ஹிந்துத்துவ ஃபாசிசத் தலைவர்கள் கூறும் அதே வேளை, “யாரும் எங்களுக்குத் தீண்டத்தகாதவர்கள் இல்லை” என்று தெளிவு படுத்தியுள்ளார்கள்.
இதனைப் படித்தவுடன் அவர்களிடம், அதாவது அவாள்களிடம் தலைவிரித்தாடும் தீண்டாமையை யாரும் எண்ணிவிட வேண்டாம். அவர்கள் சொல்வது “அரசியலில் யாரும் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தரப் பகைவர்களும் இல்லை” என்ற அரதப் பழமொழி உண்டல்லவா, அதைத்தான் நவநாகரிகமாகச் சொல்லியுள்ளார்கள்.
இதைத்தான் பா.ஜ.க. தலைவர் ஓ. ராஜகோபால் இப்படிச் சொல்கிறார் : “அரசியல் கட்சிகள் ‘பொதுவான காரியத்திற்காக’ ஒன்று சேர்வதில் தவறில்லை. அரசியலில் நிரந்தரப் பகைவர்கள் இல்லை!”
இந்தப் “பொதுவான காரியத்திற்காக” என்றால் முஸ்லிம்களைக் கொல்வதற்காக என்று நாம் விளக்கிச் சொல்லத் தேவையில்லை. சிறு குழந்தைக்குக் கூட இந்த மொழி புரியும்.
ஆனால் கீழே உள்ள “கொள்கைக் குன்றுகளான தொண்டர் குண்டர்கள்” ஒன்று சேரத் துடிக்கும் பொழுதும், மேலே உள்ள கொள்கைக் குலக் கொழுந்துகளான தலைவர்களுக்கு இதனை ஜீரணிக்க கால அவகாசம் தேவைப்படுகிறது. அதனால்தான் “கேசரி”யில் வெளிவந்துள்ள கட்டுரை குறித்து கருத்து தெரிவித்த சி.பி.எம்.மின் ஆட்சிக்குழு உறுப்பினர் எம்.ஏ. பேபி இவ்வாறு கூறுகிறார்: “வகுப்புவாத சிந்தனையையும், ஃபாசிசத்தையும் பரப்புவதுதான் ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கை. அதனைத் தனிமைப்படுத்துவதுதான் எங்கள் நோக்கம். இருவரும் ஒன்று சேரவேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. அவர்கள்தான் ஆசைப்படுகிறார்கள்.”
ஆக, வேதாளம் கிளம்பியது ஹிந்துத்துவ ஃபாசிசப் புற்றிலிருந்துதான் என்கிறார் அவர். அதனால்தானோ என்னவோ வடக்கு கேரளாவில் குறிப்பாக கண்ணூர் மாவட்டத்தில் வெட்டு குத்து கொலைப் பகையோடு காலங்கடத்திக் கொண்டிருந்த இந்த இரு அமைப்பினருக்கிடையில் கடந்த ஆறு மாதங்களாக எந்தப் பெரிய வன்முறைகளும் நடைபெறவில்லை என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
முஸ்லிம்களைக் கொல்வதற்கு, முஸ்லிம் சொத்துகளைச் சூறையாடுவதற்கு, முஸ்லிம் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்வதற்கு, முஸ்லிம் பிஞ்சுக் குழந்தைகளை வெட்டிப் பிளந்து போடுவதற்கு – மொத்தத்தில் முஸ்லிம் ரத்தத்தைக் குடிப்பதற்கு எவ்வளவு பெரிய கொடும் பகையாளர்களும் ஒன்று சேர்வார்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
* மாற்று*

Monday, October 8, 2012

பொய்யுரைத்து போக்கிரித்தனம் செய்யும் பொ(பே)ய் அரசு?

டெல்லி: விநியோகஸ்தர்களுக்கான கமிஷன் தொகையை உயர்த்துவதற்காக சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலையில் ரூ. 11.42 உயர்த்தப்பட்டுள்ளது. சிலிண்டர் மானிய கட்டுப்பாட்டுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்துள்ள இந்நிலையில், சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

வீடுகளுக்கான சிலிண்டர் விநியோகத்திற்கு இதுவரை 25 ரூபாய் 83 காசுகள் கமிஷனாக வழங்கப்பட்டு வந்தது. இந்த தொகை தற்போது 37 ரூபாய் 25 காசுகளாக உயர்த்தி வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயுக்கான விநியோகஸ்தர்களின் கமிஷன் உயர்த்தப்பட்டிருப்பதால் இது நுகர்வோர் தலையில்தான் போய் விழும்.

இதனிடையே, பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 23 பைசாவும், டீசலுக்கு 10 பைசாவும் விநியோகஸ்தர்களுக்கான கமிஷன் தொகையை உயர்த்த பெட்ரோலிய அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு கமிஷன் தொகை உயர்த்தப்பட்டால் பெட்ரோல், டீசல் விற்பனை விலையும் விரைவில் உயர்த்தப்படும் என தெரிகிறது.

கமிஷன் தொகை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் சிலிண்டர் விலை உயர்வு குறித்து இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அதிகாரபூர்வமாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியேற்ற நாள் முதல் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் உயர்த்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. பொதுமக்களைப் பற்றி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு கடுகளவும் கவலை இருப்பதாக தெரியவில்லை. ஆனால் பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் இதனை நியாயப்படுத்தி வருகின்றனர் பிரதமரும், அமைச்சர்களும்.,ஆனால் மக்களோ கோபத்தில் அவரவருக்கு அங்கலாய்த்து கொண்டு உள்ளனர்.

Sunday, October 7, 2012

பெண்களுக்கு மிகவும் பொருத்தமான பழங்கள்

கருப்பு திராட்சையில் வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்து அதிகம் காணப்படுகிறது. இதில் போலிக் அமிலம் இருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.

பலர் கர்ப்பகாலங்களில் சாப்பிடக்கூடாது, குழந்தை கருப்பாக பிறக்கும் என்பார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, நீங்கள் சாப்பிடுவது குழந்தைக்கும் நல்லது தாய்க்கும் நல்லது.

தர்பூசணி பழத்தில் தண்ணீர்ச்சத்து அதிகம் இருக்கும். வைட்டமின் ஏ சத்து மற்றும் போலிக் அமிலம் அதிகம் காணப்படுவதால் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மிகவும் நல்லது. தாய்மார்கள் விரும்பிச் சாப்பிடலாம்.

அத்திப் பழச்சாறு ஆண்களைவிட பெண்கள் மிக முக்கியமாக சாப்பிட வேண்டிய சாறு. ஏனெனில் பெண்களுக்கு ஏற்படும் சத்துக்குறைவு(இரத்தசோகை) பிரச்சனைகளை சரி செய்கிறது. உடலில் இரத்தத்தைச் சுத்திகரிக்கக் கூடியது. இதில் இரும்புச்சத்து அதிகம். பெண்கள் அதிகமாக சாப்பிட வேண்டும். சோர்வாக இருக்கும் போது சாப்பிட்டால் உடனடியாக சுறுசுறுப்பு வரும்.

Saturday, October 6, 2012

காதலுக்கு தாஜ்மகால்! கல்யாணம் ஆன தம்பதிகளுக்கு!!

மொகாலய மன்னர் ஷாஜஹான், அவரது மனைவி மும்தாஜ் நினைவாக கல்லறை காதல் ஓவியமான தாஜ்மஹாலை கட்டினான்.  இதை கட்ட 22 வருடங்கள் ஆனது. காதலர்களின் நினைவுச் சின்னமாக விளங்கும் இந்த உலகப் புகழ்பெற்ற வெள்ளை மாளிகை 'தாஜ்மஹால்' கட்டிடத்தைப் போல் நான்கு மடங்கு பெரிய தாஜ் அரேபியா என்ற ஒரு மாதிரி தாஜ்மஹாலை கட்ட துபாய் கட்டுமானக் கம்பெனி முடிவு செய்துள்ளது.

அதற்குரிய வரைபடங்கள் வரையும் வேலைகளிலும் அவர்கள் இறங்கியுள்ளனர். துபாய் நாட்டின் எமிரேட்ஸ் சாலையில் உள்ள 4 கோடியே 10 லட்சம் சதுர அடிகொண்ட பால்கன் அதிசய நகரத்தின் மையப்பகுதியில் அது அமையவுள்ளது.

இரண்டு வருடங்களில் கட்டி முடிக்க முடிவு செய்துள்ள இந்த தாஜ் அரேபியா கட்டிடத்திற்கு 100 கோடி டாலர் செலவிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

தாஜ் அரேபியா என்ற கட்டிடம் காதல் மற்றும் காதல் லீலைகளின் நினைவு அடையாளமாக விளங்கும். மேலும் உலகின் மிகப்பெரிய கல்யாண மண்டபமும் அதில் இடம்பெறும். 7 கட்டிடங்களை எல்லைகளாக கொண்டு கட்டப்படவுள்ள இந்த தாஜ் அரேபியாவில், சேவை ஆட்களுடன் கூடிய 200 குடியிருப்புகளும், 300 அறைகளுடன் கூடிய ஐந்து நட்சத்திர ஓட்டலும் இருக்கும்.

துபாயின் இந்த பால்கன் அதிசய நகரமானது, உலக அதிசயங்களாக விளங்கும் பிரமிடுகள், தொங்கும் தோட்டம், ஈபிள் டவர், தாஜ்மஹால், சீனப் பெருஞ்சுவர் மற்றும் பைசா நகரச் சாய் கோபுரம் ஆகியவற்றை உள்ளடக்கி நாட்டின் பாரம்பரிய சின்னமாக விளங்கும் என்று கூறப்படுகிறது.

Friday, October 5, 2012

3500 கோடியை நிறுத்திவிட்டு! 1400 கோடியை நிருத்தக்கூடாதாம்!?

கூடங்குளத்தில் ரஷியா நாட்டு உதவியுடன் ரூ.13 ஆயிரத்து 615 கோடி செலவில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் மின் உற்பத்தியை தொடங்க அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த ஒரு ஆண்டாக இந்த போராட்டம் நடக்கிறது. (இன்றைய செய்தி)

1.75 லட்சம் கோடி,1 .86 லட்சம் கோடி இதை எல்லாம் ஊழல் மூலம் பெற்றும் ,இழந்தும் இருக்கும் இந்த அரசு மக்களின் உயிரை பறிக்கும் அபாயம் உள்ள அணு உலையே நிறுவிய 13000 கோடியே இந்த மக்களுக்காக இழந்தால் என்ன ஆகப்போகிறது. நம் நாட்டின் வளர்ச்சி இதை இழந்தால் கெடாது. நீங்கள் ஊழல் செய்வதை நிறுத்தி, நாட்டில் நடக்கும் ஊழலையும் தடுத்தாலே நம் நாடு நல்ல வளர்ச்சி அடையும். முடியுமா? உங்களால்..? தகுதி உண்டா..?

கூடன்குளம் போராட்டத்தினால் தான் தமிழ்நாட்டில் மின்வெட்டு நிலவுகிறது என்று கூறுகிற அதிமேதாவிகள். ஈ வி கே எஸ் இளங்கோவன்,நாரயணாசாமி,ஞானதேசிகன்,சிதம்பரம் கருணாநிதி,ஜெயலலிதா, ராமகோபாலன், பொன்ராதகிருஷ்னண் அவர்களிடம் ஒரு கேள்வி :

போராட்டதை இப்பொழுதே நிறுத்திக்கொள்ள தயார் அணு உலை செயல்பட தொடங்கியபின் தமிழ்நாட்டில் மின்வெட்டு இருந்தால்,..? நீங்கள் யாரும் இந்தியாவிலேயே இருக்க மாட்டோம் என்று உத்திரவாதம் தர தயாரா.?!!

தமிழ்நாட்டில் மின் பற்றாகுறை 3500.. மெகவாட் கூடன்குளம் அணு உலையிலிருந்து தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் மின்சாரம் 60. மெகா வாட் என தமிழ்நாடு மின்சாரவாரியம் அறிக்கை கொடுத்துள்ளது.

நமது கேள்வி:  கூடங்குள அணு உலைக்கு 1400 கோடி சிலவு செய்தாகிவிட்டது நிறுத்தமுடியாது உயர் நீதி மன்றம்!! அப்போ..! 3500 கோடி சிலவு செய்துவிட்ட சேதுசமுத்திர திட்டத்தை (பரதேசி இராமர் பாலம்) மட்டும் நிறுத்தலாமா?

Thursday, October 4, 2012

கவிஞர் தாமரைக்கு பிடித்த தமிழ் ஹீரோ

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, காஜல் அகர்வால் ஜோடியாக நடித்து வருகிற அக்டோபர் 13-ஆம் தேதி வெளியாகவிருக்கும் ‘மாற்றான்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது.

மாற்றான் படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

பாடலாசிரியர் கவிஞர் தாமரை பேசுகையில் ” சூர்யாவிற்கு பாட்டு எழுதுவது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இந்த இசையில் பாடி நடிக்கும் போது சூர்யாவின் முகபாவணை எப்படி இருக்கும் என்பதை மனத்திரையில் கற்பனை செய்துகொண்டே தான் ’யாரோ யாரோ’ பாடலை எழுதினேன். சூர்யா மிகச் சிறந்த நடிகர் என்பதால் பாடல் நன்றாகவே வந்துள்ளது” என்று கூறினார்.

Wednesday, October 3, 2012

கூகுளை எதிர்த்து கோதாவில் இறங்கிய ஈரான்!!

டெஹ்ரான்: இணையதள தேடுதல் பொறியான கூகுள் மற்றும் அதன் மின்னஞ்சல் சேவையான ஜி-மெயிலுக்கு மாற்றீடாக புதிய இணையதளத்தை உருவாக்கும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டுள்ளது.

ஃபக்ர் என்ற பெயரில் தேடுதல் பொறியையும், ஃபஜ்ர் என்ற பெயரில் மின்னஞ்சல் சேவையையும் துவக்கும் முயற்சியில் ஈரான் உள்ளது. இஸ்லாத்திற்கு எதிரான திரைபடத்தின் ட்ரைலரை யூ ட்யூபில் இருந்து நீக்கம் செய்ய கூகுள் மறுத்ததை தொடர்ந்து ஜி-மெயிலை ஈரான் முடக்கியது. ஈரானில் 50 சதவீதம் பேர் இணையதளத்தை உபயோகிக்கின்றனர்.

இந்நிலையில் ஜிமெயிலை முடக்கியது பயனீட்டாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனை கவனத்தில் கொண்டு புதிய தேடுதல் பொறி மற்றும் மின்னஞ்சல் சேவையை உருவாக்கும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டுள்ளது.

Tuesday, October 2, 2012

உணவு மூலம் உடல் ஆரோக்கியம் அழகும் பெற!!

இன்றைய காலத்தில் அனைவரும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக சாப்பிடும் முன்பு, அதிகமான அளவு உண்ணக்கூடாது என்பதற்காக சூப்பை சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

ஏனெனில் அதை சாப்பிட்டால், பாதி வயிறு நிறைந்துவிடும். மேலும் சூப் பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அதிலும் ஏதேனும் குளிர் காலம், மழைக் காலம் என்றால் போதும், அந்த நேரத்தில் அடிக்கடி சூப் சாப்பிட வேண்டும் என்பது போல் தோன்றும். அவ்வாறு சாப்பிடும் சூப்பில் தக்காளி சூப்பில் நிறைய சத்துக்கள் உள்ளன. இதனை குடிப்பதால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் குறையும். சொல்லப்போனால் இது ஒரு சிறந்த டயட் மேற்கொள்ளும் போது உடலில் சேர்த்துக் கொள்வதற்கு ஏற்ற பொருள். அது எப்படியென்று கேட்கிறீர்களா? சரி, இப்போது அதைப் பற்றி படித்து தெரிந்து கொள்ளங்கள்.

* உடல் எடையை குறைக்க சிறந்த பொருளான இந்த தக்காளி, உடலில் உள்ள அதிகமான கலோரியுன் அளவை கரைத்துவிடுவதோடு, உடலில் கொழுப்புகள் சேராமல் தடுக்கிறது. அதுமட்டுமல்லாமல், தக்காளியில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் மிகவும் குறைவு. அதிலும் இந்த தக்காளியை ஆலிவ் ஆயிலுடன் சூப் செய்து சாப்பிட்டால், ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமும், டயட்டிற்கு டயட் ஆகவும் இருக்கும். மேலும் தக்காளியில் தண்ணீர் மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், நீண்ட நேரம் பசியெடுக்காமல் இருக்கும். ஆகவே எடை எளிதில் குறையும்.

* இந்த சூப் சிவப்பு நிறத்தில் இருக்கும் தக்காளியால் செய்யப்படுவதால், புற்றுநோய்க்கு சிறந்தது. ஏனெனில் தக்காளியில் லைகோபைன் மற்றும் காரோட்டீனாய்டு என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், அது ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும். மேலும் இதனை தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடித்து வந்தால், மார்பக புற்றுநோய் மற்றும் பல புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம்.

* உடலில் உள்ள அதிகமாக இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால்கள், உடலில் சேராமல் தடுக்கும் மற்றும் இரத்த அழுத்தம் ஏற்படுவதையும் குறைக்கும். அதனால் இதயத்தில் ஏற்படும் இதய நோய்கள், கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கும். மேலும் இந்த தக்காளியில் வைட்டமின் பி, பொட்டாசியம் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது. ஆகவே தக்காளி சூப்பை குடிப்பது நல்லது.

* புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த முடியாமல் இருப்பவர்கள், நீண்ட நாட்கள் ஆரோகக்கியமாக வாழ தக்காளி சூப்பை குடித்தால், உடலில் புகை பிடிப்பதால் ஏற்படும் நோய்களை தடுக்கலாம். அதுவும் தினமும் ஒரு பௌல் தக்காளி சூப்பை குடிப்பது நல்லது. ஏனெனில் அதில் உள்ள சத்துக்கள், புகை பிடிப்பதால் உடலை அழிக்கும் பொருளான கார்சினோஜென்னின் சக்தியை குறைத்துவிடுகிறது.

* தினமும் தக்காளி சூப்பை குடித்து வந்தால், சருமம் நன்கு அழகாக, பட்டுப் போன்றும், முகப்பரு மற்றும் சூரிய கதிர்களால் சருமத்தில் ஏற்படும் பழுப்பு நிறம் நீங்கிவிடும். அழகை மட்டும் பெறாமல், அதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே எலும்புகள், பற்கள் மற்றும் கண் பார்வைக்கு மிகவும் சிறந்தது.

எனவே, தக்காளி சூப் நல்லதா கெட்டதா என்று நினைத்து எதற்கும் பயப்படாமல், இனிமேல் சந்தோஷமாக விரும்பி குடித்து வாருங்கள், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, அழகும் பெறும்.

Monday, October 1, 2012

கரையோடிப்போன காவல்துறைக்கு கடிவாலமிடுவது யார்!?

புதுடெல்லி: போலி ஆவணங்களை ஜோடித்து தீவிரவாதம், தேச துரோகம் தொடர்பான வழக்குகளை பதிவுச் செய்யும் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் நீதிமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

டெல்லி கான்ஸ்ட்யூசன் க்ளப்பில் வைத்து கடந்த செப்டம்பர் 28,29 தேதிகளில் ‘ஜோடிக்கப்பட்ட வழக்குகள் மீதான மக்கள் விசாரணை’ (‘people’s hearing on fabricated cases’) நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட நபர்களின் வாதங்களை கேட்ட பிறகு முன்னாள் நீதிபதி ராஜேந்திர சச்சார், டாக்டர் பினாயக்சென், டாக்டர் ராம் புன்யானி, அஜித் ஸாஹி, ஸபா நக்வி ஆகியோர் அடங்கிய மக்கள் நீதிமன்றம் போலி ஆவணங்களை ஜோடித்து வழக்குகளை பதிவுச் செய்யும் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தது.

மக்கள் நீதிமன்றத்தில் பங்கேற்ற டாக்டர் பினாயக் சென் கூறியது: “நாட்டில் அனைத்து சிறுபான்மையின மக்களும் வேட்டையாடப்படுகின்றார்கள். உலகமயமாக்கல், கார்ப்பரேட் மயமாக்கல் தொடர்பாக இந்தியாவில் ஏராளமான மோதல்கள் நடக்கின்றன. இத்தகைய விவகாரங்களில் சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் தீர்வு காண முயலவேண்டும். ஜனநாயக விழுமியங்களை கைகழுவும் அரசு, மக்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து கூட்டமாக வெளியேற்றி நிலையான வறுமையின் பால் தள்ளிவிடுகிறது. இது தொடர்ந்தால் இனப்படுகொலைக்கு இணையான சம்பவங்கள் அரங்கேறும்.

பிரபல சமூக ஆர்வலரும், எழுத்தாளருமான ராம் புன்யானி கூறியது: “பொய்வழக்குகளை ஜோடிக்கப்பட்டது தொடர்பான ஆதாரங்கள் ஒவ்வொரு தினமும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய பிரச்சனைகளை தீர்க்க தேசிய மனித உரிமை கமிஷன் சிறப்பு டெஸ்கை நிறுவவேண்டும். இஸ்லாமிய பயங்கரவாதம்என்ற பிரச்சாரம் வரலாற்றுரீதியான முட்டாள்தனமாகும். ஒரு மத பிரிவினரின் நாகரீகத்தின் மீதான தலையீடாகும்” என்றார் ராம்புன்யானி.

பிரபல பத்திரிகையாளர் அஜித் ஸாஹி கூறியது: “பல காரியங்களில் கருத்து வேறுபாடுகள் நிலவினாலும் அரசுத் துறைகள் பொய்யான வழக்குகளை ஜோடிப்பதில் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டங்களை சீர்குலைக்க மக்களை பீதிவயப்படுத்தும் முயற்சிகளே இவை.” என்று அஜித் ஸாஹி கூறினார்.

தேசத்துரோகம், தீவிரவாதம் தொடர்பான பொய் வழக்குகளை ஜோடிக்கப்படுகின்றன. இதன் பெயரால் போலி என்கவுண்டர்கள் நடந்தேறுகின்றன. குறிப்பிட்ட மதப் பிரிவினரை தீவிரவாதிகளாக சித்தரிக்கின்றனர் என்று மக்கள் நீதிமன்றம் கூறியது.

நிரபராதிகளை கைது செய்யும் போலீசாருக்கு சுதந்திரமாக இயங்கும் வாய்ப்பை அளிக்கும் வகையில் நீதிபீடத்தின் புறத்தில் இருந்து துயரமான நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன. போலீஸ் மற்றும் அரசின் இத்தகைய தரம் தாழ்ந்த செயல்களை குறித்து பரிசோதித்து, இத்தகைய காரியங்களுக்கான பொறுப்பை அவர்கள் மீது சுமத்தவேண்டும்.

(போலி ஆவணங்களை ஜோடித்து தீவிரவாத வழக்குகளை பதிவுச் செய்யும் போலீஸ் (குஜராத்) முகமூடியை கிழித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்., H.L. DATTU மற்றும் C.K. PRASAD)

இத்தகைய ஜோடிக்கப்பட்ட வழக்குகளின் விபரங்களை பதிவுச்செய்து ஒன்றாக்க வேண்டும். பொய் வழக்குகளில் சிக்கியவர்களை விடுவிக்க தனிப்பிரிவுகளை ஏற்படுத்தவேண்டும். அவர்கள் விடுதலையாகும் வரை அவ்வழக்குகளை நடத்தவேண்டும். வழக்குகளை உயர்நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்லவேண்டும். தேசத்துரோகம், தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை நடத்த தேசிய-மாநில மனித உரிமை கமிஷனின் கீழ் தனியாக பிரிவு ஒன்றை நிறுவவேண்டும். இவ்வழக்குகளை சர்வதேச சிவில் ஃபாரம்களுக்கு கொண்டு செல்லவேண்டும். போர் ஒழுக்கங்கள் தொடர்பான சர்வதேச சட்டங்களை இதில் பிரயோகிக்கலாமா? என்பது குறித்து ஆராயவேண்டும்.

UAPA, POTA போன்ற தீவிரவாத-தேசத்துரோக குற்றங்களை சுமத்தும் சட்டங்களை வாபஸ் பெறவேண்டும். கலவரத்தில் பாதிக்கப்படும் மக்களுக்கு பாரபட்சமில்லாமல் சிகிட்சை வசதிகள் கிடைப்பதற்கு இந்தியன் ரெட்க்ராஸ், ஐ.சி.ஆர்.சி ஆகியன அமல்படுத்தும் உடன்படிக்கை போன்ற சட்டநடைமுறைகளை மனித உரிமை அமைப்புகள் உருவாக்கவேண்டும். போலி என்கவுண்டர்கள், காணாமல் போகுதல், கஸ்டடி கொலைகள் ஆகியவற்றைக் குறித்த பொறுப்புணர்வு அரசுக்கு ஏற்படவேண்டும் உள்ளிட்ட சிபாரிசுகளை மக்கள் நீதிமன்ற நீதிபதிகள் சிபாரிசுச் செய்தனர். இந்நிகழ்ச்சியை 30க்கும் மேற்பட்ட அமைப்புகள் இணைந்து ஏற்பாடுச் செய்தன.

Sunday, September 30, 2012

தனியா போய் வாய்ப்பு கேட்ட தகராறு! தண்ணியோட போய் கேட்ட வரலாறு

தவளை தன் வாயால் கெடுவது போல, சட்டசபை தேர்தலில், திமுக.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதாக சொல்லி எக்கு தப்பா பேசி, சினிமா வாய்பே இல்லாத அளவுக்கு தள்ளப்பட்டார் நடிகர் வடிவேலு.

இம்சை அரசன் 23ஆம் புலிகேசியின் இரண்டாம் பாகம், தெனாலிராமன் ஆகிய இரண்டு கதைகளை ஓ.கே செய்து வைத்திருக்கிறார். ஆனால் இந்த படங்களை பணம் போட்டு தயாரிக்கத்தான் யாரும் முன்வரவில்லை. இதனால் அடுத்து நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று சொல்லிக்கொண்டு மதுரைக்கும் சென்னைக்கும் பறந்து கொண்டிருக்கிறார் வடிவேலு.

இந்த நிலையில், சமீபத்தில் வடிவேலு சொந்தமாக படம் தயாரித்து நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதைப்பற்றி வடிவேலுவுடன் காமெடி காட்சிகளில் நடிக்கும் சில நடிகர்களிடம் விசாரித்தபோது, அவராவது சொந்த காசில் படம் எடுப்பதாவது என்கிறார்.

யாராவது பணம் போட்டால் வேண்டுமானால் நடிப்பார். ஒருநாளும் சொந்த காசில் படம் எடுக்க மாட்டார் அவர். அவருடன் எந்நேரமும் இருக்கும் நடிகர்கள் நாங்கள். அவர் எவ்வளவு பெரிய கஞ்சன்,வறட்டு கவுரவம் பிடிப்பவர் என்று எங்களுக்குத்தானே தெரியும். அதனால் அந்த செய்தி கண்டிப்பாக உண்மையாக இருக்காது என்கிறார்.

Saturday, September 29, 2012

சிக்கு புக்குவில் சிக்கும் எதிர்கால மாண(னை)விகள்!!

ஆடலுடன் பாடலைக்கேக்க சுகம் சுகம் இது பாட்டு அதே போன்று பிஞ்சுக்களின் எண்ணமும் நச்சத்திர ஹோட்டல்களில் மதுக்கூடங்களில் பாடல்களுடன். 'பப்பு'களில் "டிஸ்கொ'வாக. (இன்று மாணவி நாளை ஒருத்தருக்கு மனைவியாக போகிறவள்)

தலைநகரில் பதினெட்டைத் தொடாத சிறுவர்கள் மதுக்கோப்பைகளுடன் ஆ(கூ)டல் அழகியருடன் மயங்கி சரிந்து சீரழியும் காட்சிகளை இந்த இடங்களில் அன்றாடம் காண முடிகிறது.

சென்னை எழும்பூர் ஸ்டார் ஓட்டலில் ப்ளஸ்-டூ படிக்கும் மாணவர்கள் சிலர் உடன்படிக்கும் மாணவிகளோடு வந்து மதுபோதையில் குத்தாட்டம் போட்டு அதன் உச்சகட்டமாக தாக்குதலில் ஈடுபட்டது லேட்டஸ்ட் அவலம். மற்ற இடங்களில் உள்ள ஓட்டல்களில் நிலவரம் எப்படி? விசாரித்தோம்.

மூன்று மற்றும் ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஓட்டல்கள் அந்தந்த அடையாளத்துடன் அழைக்கப் பட அதற்கு கீழுள்ளவைகள் வெறுமனே நட்சத்திர ஓட்டல்கள் என்ற அடையாளத்துடன் ஜொலிக்கின்றன.

இது தவிர பண்ணை வீடுகள், "பொட்டீக்' என்ற பெயரில் அழைக்கப்படும் சிறு சிறு சொகுசு குத்தாட்ட விடுதிகள், "பார்'களுடன் நடனமிடும் "பப்'பு வகைகள் என்று சீரழிவுக்கு பல முகங்கள் கணக்கில் காட்டப்படுகின்றன.

முதலில் "பப்'புகள் பற்றி விசாரித்தோம். சனி, ஞாயிறுகளில் "பப்'பே கதியாக கிடந்து பொருளாதார ரீதியாக சுருண்டிருக்கும் கோபி என்ற இளைஞர் நம்மிடம், ""கிழக்கு கடற்கரைச் சாலையில் கண்ணுக்குத் தெரிகிற அளவில் 36 "பப்'புகள் உள்ளன. தெரியாதவை நிறைய... பார் லைசென்ஸை மட்டுமே வாங்கிக் கொண்டு நடனம், சூதாட்டம் என அத்தனை அம்சங்களையும் இங்கே செய்து கொண்டி ருக்கிறார்கள். மற்ற நாட்களில் எப்படியோ தெரியாது. சனி, ஞாயிறுகளில் இரவு 7 மணிக்கு நான் உள்பட குறைந்தபட்சம் நூறு பேராவது "பப்'புகளில் டான்ஸ் ஆடுவோம் என்றார் மப்பில் இல்லை இல்லை பப்பில்.

Friday, September 28, 2012

பிழைக்க வந்தவருக்கு ஒட்டு போட்டா ..! தன் புத்தியை காண்பிக்கிறார்!?


தமிழகத்தில் இன்று ஹாட் டாபிக் பவர் கட், நாயை குளுப்பாட்டி நாடு வீட்டில் வைத்தாலும் அது என்னத்தையோ கிளப்பிக்கிட்டு அதை துன்னதான் போகும் என்பார்கள்.


வேலை தேடி வந்தவருக்கு (படத்தில் நடிக்க) ஒட்டு போட்டால் அவர் தன் புத்தியைத்தான் காண்பிக்கிறார். அந்தவகையில் தமிழகத்துக்கு கிடைத்த தரித்திரியம் பாசிச ஜெயா செய்யும் அடாவடி அரசியலும், கூடங்குளத்திற்கு வலு சேர்ப்பதற்காக பாசிச புத்தியை கையாளுகிறார். மின்  வெட்டை அதிகமாக்கி  மக்களை தவிக்கவைத்து கூடன்குள அணு மின் நிலையம் வேண்டும் என நியாயப்படுத்த பார்ப்பனிய தந்திர  புத்தியை கையாளுகிறார்.

ஒருமணி நேரத்திற்கொருமுறை பவர் கட் என்பதுதான் தமிழகத்தின் தற்போதைய நிலவரம். (நாடுவிட்டு நாடு வந்தவர்). நாளொன்றுக்கு 12 மணி நேரத்திற்கும் குறையாமல் இருளில் மூழ்கிக் கிடக்கிறது தமிழகம். பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களையும் வாட்டி வதைக்கும் ஜெ. அரசின் இந்த துன்பச் சாதனைக்கு எதிராக மக்கள் கிளர்ந் தெழுந்துப் போராடுவதைப் பல ஊர்களிலும் காண முடிகிறது.

அரசியல் கட்சிகளின் ஆதரவை எதிர்பார்க்காமல், அந்தந்த பகுதியில் உள்ள மக்களும் தெருவுக்கு வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய கோஷங்களிலும் கோப வார்த்தை களிலும் ஜெ.அரசு வறுத்தெடுக்கப்படுகிறது. "கரண்ட்டு தர முடியாத கையாலாகாத அரசு' என்று வெளிப்படையாக விமர்சிக்கிறார்கள் மக்கள்.

அவர்களின் பாதிப்பை தமிழகத்தின் பல பகுதிகளிலும் நேரில் காண முடிந்தது. டாலர்களில் பொருளாதாரத்தை மேம்படுத்தும் தொழில்நகரங் களான கோவை, திருப்பூர் பகுதிகளில் தற்போது நாள்தோறும் 16 மணி நேரம் பவர் கட். அதனால் 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட, 8 லட்சத்திற்கும் அதிகமானத் தொழிலாளர்கள் நடுரோட்டில் நிற்கிறார்கள். பொது மக்கள் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி யுள்ளனர்.

பவுண்டரி நடத்தும் ரங்கராஜன், "நான் காஸ்டிங் ஜாப் ஆர்டர் எடுத்துட்டுப்பண்ணிட்டிருக்கேன். என்கிட்ட 20 பேர் வேலை செய்றாங்க. ஒரு மாசத்துல மட்டும் 60 டன் காஸ்டிங் டெலிவரி கொடுத்துக்கிட்டிருந்தேன். உற்பத்தி செலவு போக மாசம் 60ஆயிரம் ரூபாய் நிற்கும். இப்போது கரண்ட் கட்டால மாசம் 40ஆயிரம் லாஸ் ஆகுது.

தொழிலாளர்களும் 500, 600ன்னு சம்பாதிச்சிக்கிட்டிருக்காங்க. இப்ப எப்ப கரண்ட்டு வரும்னு 12 மணி நேரம் காத்திருந்து, ஒரு மூணு மணி நேரம் வேலை செஞ்சி 150 ரூபாய் சம்பாதிக்கிறாங்க.. அவங்களால எப்படி குடும்பத்தைக் காப்பாத்த முடியும்? இப்படித் தினமும் கரண்ட்டை கட் பண்றதுக்கு, வாரத்தில் மூணு நாள் முழுசா கரண்ட்டைக் கட் பண்ணி, தொழிற்சாலைகளுக்கு லீவு விட்டுட்டு, மீதி நாலு நாள் கரண்ட் சப்ளை பண்ணி முழுசா வேலை பார்க்க அனுமதிச்சா முதலாளி-தொழிலாளி இரண்டு பேருக்குமே நல்லது'' என்கிறார்.

Thursday, September 27, 2012

அதிபர் தேர்தலுக்காக ஆடைகளை துறக்க தயாராகும் ஆடல் அழகி!

எதற்கெடுத்தாலும் ஆடைகளை துறக்க தயாராகுவது தற்போது ஒரு பேசனாக மாறிவிட்டது இப்போது., அந்த வகையில்.

வாஷிங்டனில் கடந்த திங்கட்கிழமை இரவு, பாப் பாடகி மடோனாவின் இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் ரசிகர்களின் மத்தியில் மடோனா பேசுகையில்:

தேர்தலில் அவர் 2வது முறையாக வெற்றி பெற்றால், எல்லாவற்றையும் துறக்க நான் தயார். என் ஆடைகளை துறக்க தயார். நல்லதோ கெட்டதோ அவருக்கு ஓட்டு போடுங்கள். அவர் நாட்டுக்கு நம்பிக்கை அளிப்பவராக இருக்கிறார்’’என்று கூறினார்.

அத்துடன் திடீரென தனது மேலாடையை கழற்றி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அவரது முதுகில் ஒபாமா என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அதை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

Wednesday, September 26, 2012

காவலர்களா க(போ)வோதிகளா இந்திய காவல்துறை?

புதுடெல்லி: முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க அரபு மற்றும் உருது மொழியில் எழுதப்பட்ட நர்ஸரி புத்தகங்களையும், கவிதைகளையும் ஆதாரமாக காட்டும் இழிவான நிலைக்கு இந்திய போலீஸ் தள்ளப்பட்டுள்ளது.

தடைச் செய்யப்படாத புத்தகங்களையும், திருக்குர்ஆன் வசனங்களையும், இஸ்லாத்தைக் குறித்த பாடப் புத்தகங்களையும் கைப்பற்றி இவை ‘நாங்கள் தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றிய ஆதாரங்கள்’ என்று போலீஸ் கூறியுள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்திய அரசால் அநியாயமாக தடைச் செய்யப்பட்ட சிமி என்ற இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தின் உறுப்பினர்களான அப்பாவி இளைஞர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க நீதிமன்றத்தில் போலீஸ் ஆதாரமாக இவற்றை தாக்கல் செய்துள்ளது. இத்தகவலை பிரபல ஆங்கில ஏடான த இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

சிமி இயக்கம் தடைச் செய்யப்பட்ட பிறகு அந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் என்று குற்றம் சாட்டி போலீஸ் கைது செய்து பின்னர் மலேகான் குண்டுவெடிப்பின் சூத்திரதாரி என குற்றம் சாட்டிய ஷபீர் அஹ்மத் மஸீஹுல்லாஹ் மற்றும் மும்பையில் இருந்து கைது செய்யப்பட்ட நஃபீஸ் அஹ்மத் ஆகியோரிடமிருந்து கைப்பற்றியது இத்தகைய புத்தகங்களாகும்.

2006-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி நஃபீஸ் மற்றும் ஷபீரை கைது செய்த பிறகு போலீஸ் நஃபீஸின் வீட்டில் சோதனை நாடகத்தை நடத்தியது. அப்பொழுது அங்கிருந்து கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் கறுப்பு ரெக்ஸின் பையில் இருந்தவை குழந்தைகளுக்கான மாத இதழ் உமங், சிமி தடைச்செய்யப்படுவதற்கு முன்பாக அந்த இயக்கத்தை அறிமுகப்படுத்தும் கட்டுரைகள் ஆகியனவாகும்.

2008-ஆம் ஆண்டு இந்தூரில் இருந்து சிமி உறுப்பினர் என குற்றம் சாட்டி கைது செய்யப்பட்ட யூனுஸ் கானுக்கு எதிராக போலீஸ் தாக்கல் செய்த ஆதாரம், இந்தியாவில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் நிலைமையை விளக்கும் கட்டுரையாகும். சிமி தலைவர்களுக்கு நார்கோ அனாலிஸிஸ் (உண்மைக் கண்டறியும் சோதனை) டெஸ்ட் குறித்து 2008 ஏப்ரல்9-ஆம் தேதி தைனிக் ஜாக்ரன் பத்திரிகையும் இதனை ஆதாரமாக வெளியிட்டது. யூனுஸ் 1999-ஆம் ஆண்டு முதல் 2000-ஆம் ஆண்டு வரை சோட்டி காவல் டோலி மஸ்ஜிதில் திருக்குர்ஆனை கற்றுக் கொடுத்தார் என்ற மிகப்பெரிய அதிர்ச்சி(???)யான தகவலும் நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டது.

மத்தியபிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்ட ஃபைஸல், இர்ஃபான், ஷாக்கிர் ஆகியோருக்கு எதிராக தொழுகை, நோன்பு, ஸக்காத், ஹஜ் ஆகிய கட்டாயக் கடமைகள் குறித்து ஒரு முஸ்லிம் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய சட்டத்திட்டங்கள் அடங்கிய உருது புத்தகத்தை விசாரணை அதிகாரி விக்ரம்சிங் தீவிரவாதத்திற்கு ஆதாரமாக தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தார்.

இந்தூரில் அப்துல் ரஸ்ஸாக்கிற்கு எதிராக தாக்கல் செய்த ஆதாரம் என்ன தெரியுமா? புதுடெல்லியில் ஒரு பதிப்பகம் வெளியிட்ட முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ‘லைஃப் ஆஃப் முஹம்மது’ என்ற நூலாகும். மேலும் ‘ஹிந்து மதமும் ஏகத்துவக் கொள்கையும்’, ‘திருக்குர்ஆனை கற்கும் முறை’ ஆகிய நூல்களும் தீவிரவாதத்திற்கு ஆதாரமாக தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

மத்தியபிரதேசத்தைச் சார்ந்த ஜாமீருக்கு எதிராக தாக்கல் செய்த ஆதாரம் – ஹிந்து ஐக்கியவேதி என்ற ஹிந்துத்துவா அமைப்பின் வகுப்புவாத செயல்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தின் நகல்கள் ஆகும்.

மஹாராஷ்ட்ராவில் ஃகாலித் முச்சாலாவுக்கு எதிரான ஆதாரம் முஸ்லிம்கள் மீது இழைக்கப்படும் கொடுமைகள் குறித்த புகாராகும். முஸ்லிம்-கிறிஸ்தவ மக்கள் தொகை சதவீதம் அதிகரிப்பதாக குற்றம் சாட்டி ராஷ்ட்ரீய விசார் மஞ்ச் வெளியிட்ட கட்டுரையை கைவசம் வைத்திருந்தது ஜாமீர் செய்த மகா பாவமாக போலீஸ் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

Tuesday, September 25, 2012

விநாயக சதுர்த்தியில் தக்காளி முட்டையில் பரபரப்பு!!

விநாய சதுர்த்தி கடந்த பத்து வருடங்களாக தமிழகத்தில் கோலாகலமாக நடந்து வருகிறது.

இது கோலாகலம் என்ன வென்றால் கொலை கலமாக நடப்பதுதான் இதில் வருந்ததக்கது, என்னவெனில் சாதாரணமாக குளக்கரையில் அமர்ந்திருந்த பிள்ளையாரை தெருவுக்குள் கொண்டுவந்து கொட்டமடித்து மாற்றுமத வணக்ககச்தலத்தில் வேண்டமென்றே அவர்களை வெறுப்பேத்தும் வகையில் கூப்பாடு போடுவது, கற்கள், முட்டை, தக்காளி போன்றவற்றை உள்ளுக்குள் வீசுவதும், ஜன்னல் கண்ணாடிகளை கற்களை எறிந்து உடைப்பதும் இதுதான் இவர்களால் கொண்டாடப்படும் விநாயக சதுர்த்தி விழாவா?

மேலும் இத்தனை அழகாக செய்தவற்றை வேடிக்கையாக கடலில் கறைப்பதுதான் இன்னும் வேடிக்கை இதனால் கடல் அசுத்தமடைகிறது அதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கு இந்த நச்சுத்தன்மையால் உயிரிழக்கவும் நேரிடகிறது. இந்த ஊர்வலத்தால் அரசு, காவல்த்துறை, பொதுமக்கள் அனைவருக்கும் இடையூறாக ஆவது மட்டுமே மிச்சம்.(சில இடங்களில் பரபரப்பு பல இடங்களில் மண்டை உடைப்பு)

இப்பதிவு யார் மனதையும் புண்படுத்துவதற்கு அல்ல புரிந்து கொள்வதற்கு மட்டுமே.(ஆரியமே! உன் சூது தெரியாதர்களிடம் உன் சொரூபத்தை காட்டு, இன உணர்ச்சியை இலக்காதிற்கும் எங்கனிடம் காட்டாதே உன் இறுமாப்பை.  ஆரியம அசுத்தமடைகிறது!)

Monday, September 24, 2012

பெயரை மாற்றி தீபாவளிக்கு வெளியட துடிக்கும் துப்பாக்கி டீம்!

விஜய் - காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கும் படம் ‘துப்பாக்கி’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது.

இதற்கிடையில் ‘துப்பாக்கி’ தலைப்பை விஜய் படத்துக்கு பயன்படுத்தக்கூடாது என எதிர்ப்பு கிளம்பியுள்ளது.‘கள்ளத்துப்பாக்கி’ என்ற பெயரில் இன்னொரு படம் தயாராகிறது. லோகியாஸ் இப்படத்தை இயக்குகிறார்.

‘கள்ளத்துப்பாக்கி’ படக்குழுவினர் ‘துப்பாக்கி’ தலைப்பை விஜய் படத்துக்கு வைக்ககூடாது என்று கோர்ட்டுக்கு போய் உள்ளனர். இதன் மீது விசாரணை நடந்து வருகிறது. இந்த சர்ச்சையால் ‘துப்பாக்கி’ படத்தை விளம்பரப்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.

எனவே தலைப்பை மாற்றலாமா? என ஏ.ஆர்.முருகதாஸ் யோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைப்பு மாற்றப்பட்டால் ‘சரவெடி’ அல்லது ‘மும்பை தமிழன்’ பெயர் வைக்கப்படலாம் என தெரிகிறது.

‘சரவெடி’ தலைப்பு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய பொருத்தமாக இருக்கும் என கருதுகின்றனர். படத்தின் பெரும் பகுதி கதை மும்பையில் நடப்பதால் ‘மும்பை தமிழன்’ பெயரையும் தேர்வு செய்துள்ளனர்.

Sunday, September 23, 2012

இரவல் கொடுக்கும் முன் இரகசியத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள்?

கோவை நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சைபர் சொசைட்டி கோவை கிளை அமைப்பு தலைவர் எஸ்.என். ரவிச்சந்திரன் மாணவ-மாணவிகளிடையே கணினி தொடர்பான விஷயங்களில் மேற்கொள்ள வேண்டிய எச்சரிக்கை அம்சங்கள் குறித்து விளக்கினார்.

சமூக வலைத் தளங்களை கையாளும்போது அதிக கவனமும், முன்னெச்சரிக்கையோடும் செயல்பட வேண்டும். அந்தரங்க தகவல்களை கணினி, மொபைல், சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவதை தவிர்க்க வேண்டும். கணினி, கைப்பேசிகளை யாரிடமும் இரவல் தருவது நல்லதல்ல. வலைத்தளத்தில் பதிவாவது எதுவுமே அழியாது.

உங்களுடைய பிறந்த தேதி, உங்கள் தாயார் பிறந்த தேதி இரண்டு இருந்தாலே போதும், உங்களுடைய ஏ.டி.எம். கணக்கு, கடன் அட்டைச் செயல்பாடு ஆகியவற்றை தவறான வழியில் சமூக விரோதிகள் பயன்படுத்தவோ, முடக்கவோ முடியும். அறிமுகமில்லாத குறுந்தகவல்கள், மெயில்களுக்கு நீங்கள் பதிலளிக்கவோ, திறந்து பார்க்கவோ செய்வது ஆபத்தில் முடியும். கணினியில் எண்டர் எனும் பொத்தான் தான் படுபயங்கரமானது.

புத்தி நுட்பத்தோடும், எச்சரிக்கையோடும் எண்டர் பட்டனை கையாள வேண்டும் என்றார்.,மேற் சொன்னவைகளில் அதிக கவனமாக இருந்து உங்கள் தகவல்களை பாதுகாத்துக்கொளுங்கள்.

Saturday, September 22, 2012

பரபரப்புக்கு பஞ்சமில்லா நித்யாவின் அடுத்த பரபரப்பு!!

மதுரை இளைய ஆதீனமான நித்யானந்தா பரபரப்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாதவர்.

பிரபல நடிகையுடன் சல்லாப வீடியோ, மதுரை இளைய ஆதீனமாக பொறுப்பேற்ற சர்ச்சைக்குப்பின் தற்போது நித்யானந்தா குறித்த பரபரப்பு சற்று அடங்கியுள்ள நிலையில், வந்தேன் பார் என வந்துள்ளது பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் நித்யானந்தா பங்கேற்கும் செய்தி.

இதுகுறித்து அவரது உதவியாளர் டலே பக்வாகர், நித்யானந்தாவை பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு நிகழ்ச்சி நிர்வாகம் தங்களை அணுகியதாகவும், ஆனால் அவர் கலந்து கொள்வாரா இல்லையா என்பது குறித்து இப்போதைக்கு தெரிவிக்க முடியாது என்று கூறிவிட்டார்.

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் பிரபல சமூக சேவகர் அக்னிவேஷ் கலந்து கொண்டு பல்வேறு சமூக அவலங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்., நித்தியின் நீல சுருளையும் இதில் காண்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எங்கே போனார்கள் ஹிந்துயிசம் பேசுபர்கள்.?

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!