Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, July 11, 2012

பெண் முதல்வரால் பெண்களுக்கு எதிரான குற்றம் குறைவா?

தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. கடந்தாண்டில் மட்டும், கடத்தல், பலவந்தப்படுத்துதல் தொடர்பான சம்பவங்கள், முந்தைய ஆண்டை விட, 19 சதவீதம் அதிகரித்து உள்ளது.

பெண்களுக்கு, சமுதாயத்தில் ஓரளவு அங்கீகாரம் கிடைத்தாலும், அவர்கள் மீதான அடக்குமுறைகள், தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இது, வளர்ந்து வரும் சமுதாயத்தில், ஆண், பெண் இனப் பாகுபாட்டை அதிகரிக்குமே தவிர, பெண்களுக்குரிய முறையான அந்தஸ்தை தராது.

தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை பொறுத்தமட்டில், கற்பழிப்பு, மானபங்கம், கடத்தல், வரதட்சணை கொடுமை, பெண் குழந்தைகள் இறக்குமதி, பாலியல் துன்புறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ், வழக்குகள் பதியப் படுகின்றன. பெண்கள் வன்கொடுமைச் சட்டம் வந்த பிறகு, இதர சட்டப் பிரிவுகளுடன் சேர்த்து, இப்பிரிவின் கீழும் வழக்கு பதியப்படுகிறது.

சினிமா மோகத்தில் உள்ள சிறுமியரை, வேறு மாநிலங்களில் இருந்து கடத்தி வந்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் சம்பவங்கள், முந்தைய காலகட்டங்களில் அதிகளவில் நடந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளில், இதுபோன்ற குற்றங்கள் குறைந்துள்ளன.மேலும், வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ் வரும் புகார்கள் மற்றும் பாலியல் கொடுமைகள் குறித்த புகார்களின் எண்ணிக்கையும், கணிசமாக குறைந்துள்ளன.

தமிழகத்தில் சிறுமிகள் உள்பட பெண்கள் கடத்தல் சம்பவங்கள் 1743 நடந்துள்ளது. ஆந்திராவில் இது 1612 ஆகவும், கர்நாடகத்தில் 1395 ஆகவும், கேரளாவில் 299 ஆகவும் இருந்தது.

தமிழகத்தைப் பொறுத்தவரை பெண்கள், சிறுமிகள் கடத்தல் தவிர மற்ற கடத்தல் சம்பவங்களின் எண்ணிக்கை 241 ஆக இருந்தது. இதையும் சேர்த்தால்மொத்தம் 1984 கடத்தல் சம்பவங்கள் தமிழகத்தில் நடந்துள்ளன.

* அமெரிக்க அதிபர் ஒபாமாவோ துப்புரவு தொழிலாளிக்கு சாதாரணமாக கை கொடுக்கிறார், ஆனால் இந்த மிருகொமோ காலில் விழ வைக்கிறது என்ன கொடுமை. காலில் விழுபவரை வேண்டாம் என்று கூட தடுப்பதில்லை.

Tuesday, July 10, 2012

சிறுபான்மையினர் பயத்ததுடன் வாழும் முதல் மாநிலம்! கேசுபாய்!?

அஹ்மதாபாத்: குஜராத் மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க முதல்வரும், முன்னணி தலைவர்களில் ஒருவருமான கேசுபாய் பட்டேல், குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடியை சராமாரியாக குற்றம் சாட்டியுள்ளார்.

பா.ஜ.க வின் முன்னணி அமைப்பு ஒன்று நடத்திய மாநாட்டில் கலந்துகொண்டு அவர் கூறியது:

“உங்களுக்கு தெரியும், இங்கு ஒருவர் பொய் பேசுவதில் ஏகாதிபத்தியவாதியாக திகழ்கிறார் என்பது. ‘ஸத்பாவனா மிஷன்’ என்ற பெயரில் மோடி மக்களுக்கு சேவைபுரிய திட்டம் ஒன்றை துவக்கினார். ஆனால், உண்மையில் என்ன நடந்தது? என்பதை தாமதிக்காமல் அனைவரும் கண்டுகொண்டனர்., மேலும் சிறுபான்மையினர் பயத்ததுடன் வாழும் முதல் மாநிலம் இந்தியாவிலே குஜராத்தான் என்றார்.

இதர சமூகத்தினருக்கு கொடுமை இழைக்கவும், அவர்களுடன் சகிப்புத் தன்மையற்ற முறையில் பழகவுமே இத்திட்டம் உபயோகமானது.

சிறந்த நிர்வாகம் என்பது அன்பு மற்றும் அச்சமில்லாத சூழலாகும். ஆனால், எதிர்பாராதவிதமாக இன்று குஜராத்தில் அன்பு என்பது காணாமல் போய்விட்டது. மக்கள் பயத்தில் வாழ்கின்றனர். இதே ரீதியில் சென்றால் அடுத்த தேர்தலில் பலன் மாற்றமாக இருக்கும்.

பா.ஜ.க உறுப்பினர் பதவியை புதுப்பிக்க மாட்டேன். அடுத்த தேர்தலில் 3-வது அணியை உருவாக்குவதற்கான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளேன்.” என்று கேசுபாய் கூறினார்.

“குஜராத்தில் மக்களின் நிலைமை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. 6 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலைச் செய்துள்ளனர். ஃபெஸ்டிவெல்கள்(திருவிழாக்கள்) நடத்தி மக்களை மயக்கி அவர்களை எதிர்க்கும் வலுவில்லாதவர்களாக மோடி மாற்றி வருகிறார்” என்று இன்னொரு முன்னாள் முதல்வரும், பா.ஜ.கவின் தலைவர்களில் ஒருவருமான சுரேஷ் மேத்தா தெரிவித்துள்ளார்.

Monday, July 9, 2012

கர்ப்பிணி பெண்கள் கவனிக்க வேண்டியவை!

லண்டன்: பெண்கள் கர்ப்ப காலங்களில் சரியான முறையில் உணவுக்கட்டுப்பாட்டை பேணுவது அவர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஆரோக்கியத்திற்கு ஒரு சேர நன்மை விளைவிக்கும் என பிரிட்டீஷ் மெடிக்கல் இதழில் வெளியான ஆய்வறிக்கை கூறுகிறது.

உணவுக் கட்டுப்பாடு குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பு அளிப்பதுடன் பிரசவ வேளையில் அபாய சூழலை குறைக்கவும் உதவிகரமானது.

ஏழாயிரத்திற்கும் அதிகமான கர்ப்பிணிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வை அடிப்படையாக கொண்டு பிரிட்டீஷ் மருத்துவ இதழ் இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

கர்ப்ப கால வேளைகளில் பெண்களின் உடல் எடை அதிகரிப்பது வழக்கமானது என்பதால் பெரும்பாலும் அவர்களது ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு காரணமாக அமைவது ஆய்வில் கண்டறியப்பட்டது என லண்டன் பல்கலைக்கழக டாக்டர் ஷக்கீலா தங்கரத்தினம் கூறுகிறார்.

உணவுக் கட்டுப்பாட்டிற்கும், குழந்தையின் எடைக்கும் தொடர்பில்லை என்று அவர் கூறினார். உணவு கட்டுப்பாட்டை மேற்கொண்டால் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு கேடாகும் என்பதில் உண்மை இல்லை என்று இந்த ஆய்விற்கு தலைமை தாங்கிய டாக்டர்.ஷக்கீலா ராஜரத்தினம் விளக்கமளிக்கிறார்.

Sunday, July 8, 2012

புதிய மாடல்கள் மேல் பிரியப்படும் விஜய்!!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரியம் இருக்கும் ஆனால் தளபதிக்கோ டிரைவிங் செய்வதென்றால் செம பிரியம், அதுவும் புது மாடல் கார்கள் என்றால் சொல்லவேண்டியதில்லை.

அதனால், தன் நட்புவட்டார நடிகர்கள் யாராவது, புதிதாக கார் வாங்கி இருப்பதாக சொன்னால், படப்பிடிப்பு இல்லாமல் ஓய்வாக இருக்கும் நாளில், அந்த காரை தனது வீட்டுக்கு கொண்டு வரச்சொல்லி ஓட்டி மகிழ்கிறார்.

சமீபத்தில் கூட காமெடி நடிகர், "புரோட்டா சூரி, தான் புதிதாக கார் வாங்கி இருக்கும் சந்தோஷத்தை விஜய்யிடம் பகிர்ந்தார். காரை கொண்டு வரச் சொல்லி, தன் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் சிறிது நேரம் ஓட்டிப் பார்த்து விட்டு, சூரிக்கு கொஞ்சம் பணமும் கொடுத்து, கார் வாங்கியதற்காக வாழ்த்து சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார் விஜய்.

Saturday, July 7, 2012

நவம்பரில் உலாவவிட்ட வைரஸ் வரும் 9ல் ஆக்டிவ்! ஓர் எச்சரிக்கை!!

வாஷிங்டன்: ஏய் வைரஸ் வரப்போகுதாமே என்ன செய்யப்போகிறாய் என்ற பேச்சுத்தான் தற்போது எங்குப்பார்த்தாலும் தகவல் பரிமாறக்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் இணையத்தை முடக்கி உங்களின் கணினியை செயல் இழக்கச்செய்து விடும். இது புதிதாக தாக்குதலை தரப்போவதில்லை என்ற நிம்மதியான தகவல் வல்லுநர்கள் தெரிவித்தாலும் ஏற்கனவே உங்கள் கம்ப்யூட்டரில் இந்த வைரஸ் இருந்தால் வரும் 9 ம்தேதி அம்பேல்தான் என்கின்றனர். கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள்.

டி.என்.எஸ்.,( டொமைன் நேம் சிஸ்டம் ) என்பது நாம் வைத்துள்ள தளத்தின் முகவரியை கணினிக்கு புரியும் வகையில் ஐ.பி.எண்ணாக மாற்றி அந்த தளங்கள் திறக்க உதவுகிறது. தற்போது டி.என்.எஸ்.,சேஞ்சர் ( அலூரியன் மால்வேர் ) என்ற வைரஸ் உருவாக்கி இதன் மூலம் உங்கள் சிஸ்டத்தை செயல் இழக்கச்செய்யும் நாச வேலையில் அயல்நாட்டவர்கள் 7 பேர் இறங்கினர். இது கடந்த நவம்பரில் பரப்பி விடப்பட்டது. இதன் மூலம் பல கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டன. மேலும் பாதிப்பில் இருந்து தப்பிக்க இதனை அமெரிக்க உளவு பிரிவு எப்.பி.ஐ., மாற்று சர்வரை நிறுவி உதவியது. இந்த சர்வரை நிறுத்திட முடிவு செய்திருப்பதால் இந்த வைரஸ் மீண்டும் வரும் 9 ம் தேதி செயல்பட துவங்கி விடுமாம். இதனால் உலகம் முழுவதும் பல லட்ச கம்யூட்டர்கள் செயல் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வைரஸ் பாதிப்பு உள்ளதா என கண்டறியுங்கள் : எனவே டி.என்.எஸ்., சேஞ்சர் என்ற வைரஸ் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்று அறிந்து முன்சோதனை செய்து கொள்ளவும். பெரும் கார்ப்ரேட் நிறுவனங்கள் ஆண்டி வைரஸ் வைத்திருப்பதால் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும். நடுத்தரமானவர்கள் இது போன்று ஆண்டிவைரஸ் வைக்காத பட்சத்தில் பாதிப்பு வர வாய்ப்புகள் அதிகம். எனவே தங்களின் கம்ப்யூட்டர்களில் இது போன்று வைரஸ் பாதிப்பு உள்ளதா என கண்டறிய நீங்கள் www.dns-ok.us கிளிக் செய்தால் பாதிக்கப்டாமல் இருந்தால் பச்சைக்கலரில் வரும். பாதிக்கப்பட்டிருக்குமானால் சிவப்பு நிற இமேஜ் வரும். வரும் 9 ம்தேதி என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர் இன்டர்நெட் உபயோகிப்பாளர்கள்.

வைரசை முற்றிலுமாக அழிக்க : ஒருவேளை உங்கள் கணினி பாதிக்க பட்டிருந்தால் முதலில் இந்த படிவத்தை forms.fbi.gov/dnsmalware பூர்த்தி செய்யவும்.

உங்கள் கணினியில் இருந்து அந்த வைரசை நீக்குவது எப்படி என இங்‌கே விளக்கம் தரப்பட்டுள்ளது. விண்டோஸ் XP, Vista, 7 கணினிகளுக்கு: DNS Changer வைரசை கணினியில் இருந்து நீக்குவதற்காக பிரபல ஆன்ட்டிவைரஸ் நிறுவனமான அவிரா ஒரு புதிய மென்பொருளை உருவாக்கி உள்ளனர். இந்த லிங்கில் Avira DNS Repair சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

டவுன்லோட் ஆகியதும் exe பைலை இரண்டு கிளிக் செய்து இன்ஸ்டால் செய்ய தொடங்கியவுடன் கீழே இருப்பதை போல வந்தால் உங்கள் கணினி பாதுக்காப்பாக உள்ளது. ஆகவே இந்த மென்பொருள் உங்கள் கணினியில் இன்ஸ்டால் ஆகாது.ஒருவேளை பாதிக்கப்பட்டிருந்தால் இந்த மென்பொருள் அந்த வைரசை கண்டறிந்து உங்கள் கணினியில் இருந்து அழித்து விடும்.

மேக்(Mac) கணினிகளுக்கு: மேக் கணினிகளில் இருந்து இந்த வைரசை நீக்க இந்த மென்பொருளை DNS Changer Removal Tool டவுன்லோட் செய்து நீக்கி கொள்ளலாம்.

Friday, July 6, 2012

ரத்த தானம் யார் கொடுக்க கூடாது? தானம் கொடுக்கும் முன்பு!?

உயர் ரத்த அழுத்தத்துக்கு சிகிச்சை பெறுபவர்கள், சர்க்கரை நோய்க் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், பால்வினை நோய் உள்ளவர்கள், வலிப்பு நோயாளிகள், நுரையீரல் நோய் உள்ளவர்கள், ஹெபடைடிஸ் பி.சி. வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோர், போதைப் பழக்கம் உள்ளவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் ஆகியோர் ரத்ததானம் செய்யக்கூடாது.

மருத்துவமனைகளில் எல்லா உயிர்களையும் காப்பாற்றும் அளவுக்கு ரத்தம் கிடைக்கிறதா?

தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 4.5 கோடி. இவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் ஆண்டுக்கு ஒருமுறை ரத்தம் தானம் செய்தாலே, ரத்தத்தின் தேவை முழுவதும் பூர்த்தியாகிவிடும். ரத்தம் இன்றி உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுத்து விடலாம்.

தானம் கொடுத்த பிறகு ரத்தம் எடுத்த இடத்தில் புண் ஏற்படுமா?

புண் ஏற்படாது. தானம் கொடுத்த பிறகு ரத்தம் எடுத்த இடத்தில் போடப்படும் பிளாஸ்திரியை நான்கு முதல் ஆறு மணி நேரத்திற்கு எடுக்காமல் இருப்பது நல்லது. எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பது நல்லது. தானம் கொடுத்த பிறகு 24 மணி நேரத்துக்காவது மது அருந்தாமல் இருப்பது நல்லது.

ரத்ததானம் செய்வதற்கு முன்பு மோர் உள்பட அதிக அளவு பானங்களைக் குடிப்பதும் நல்லது. ரத்ததானம் செய்ய 10 நிமிடங்களே ஆகும். ஒருவருக்கு தொலைபேசி செய்ய ஆகும் நேரத்தை விடக் குறைவுதான்.

Thursday, July 5, 2012

அபாயத்தை நோக்கி இருக்கிறோம்! அமெரிக்க ஆய்வு மையம்!!

பருவநிலை மாறுபாடுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அமெரிக்காவின் தேசிய வளிமண்டல ஆய்வு மையம் ஒரு ஆய்வு நடத்தியது. ஆராய்ச்சி மற்றும் இதில் தெரியவந்த தகவல்கள் பற்றி விஞ்ஞானிகள் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளனர்:

’’இயற்கை மற்றும் மனித இடர்பாடுகளால் பருவநிலையில் கணிசமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. பருவநிலை மாறுபாடுகள், தொடர்ந்து அதிகரித்து வரும் புவி வெப்பம், இதனால் பனிப்பாறை மற்றும் பனிப்படலங்கள் வேகமாக உருகுதல், கிரீன் ஹவுஸ் வாயுக்கள் அதிகம் வெளியாவது, ஓசோன் படலத்தில் ஓட்டை உருவாவது போன்றவற்றால் மனித இனம் மட்டுமின்றி கடல்வாழ் உயிரினங்கள் உள்பட சகல ஜீவராசிகளும் பாதிக்கப்படுகின்றன.

சுற்றுச்சூழல் பாதிப்பு, பருவநிலை மாற்றம் ஆகியவை காரணமாக 1980&ம் ஆண்டில் இருந்ததைவிட புவி வெப்பம் 2010&ல் 0.17 டிகிரி செல்சியஸ் அதிகரித்திருப்பதாக பல்வேறு ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

பனிப்பாறைகள், பனித்தீவுகள் உருகுவதால் 2005&ம் ஆண்டில் இருந்து சராசரியாக ஆண்டுக்கு 2.3 மில்லிமீட்டர் என்ற அளவில் கடல் மட்டம் உயர்வதாகவும் தெரிகிறது. தொடர்ந்து கடல் மட்டம் உயரும் பட்சத்தில் கரீபியன் தீவுகள், மாலத்தீவு, ஆசிய பசிபிக் தீவுக்கூட்டங்கள் உள்ளிட்ட தாழ்வான பகுதிகள் மூழ்கிப் போகும் அபாயம் இருக்கிறது.

பூமியில் மட்டுமின்றி ஆழ்கடல் பகுதியிலும் வெப்பநிலை இயல்பைவிட அதிகரித்தே காணப் படுகிறது. இது கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. வரும் 2020&ம் ஆண்டுக்குள் சுமார் 180 நாடுகளில் பருவநிலைகளில் மிகப்பெரும் மாற்றங்கள் இருக்கும்.

உலக நாடுகள் அனைத்தும் இணைந்து சுற்றுச்சூழலை பாதுகாக்க 100 சதவீத நடவடிக்கை எடுத்து 2100&ம் ஆண்டில் புவி வெப்பத்தை 0.83 டிகிரியாக குறைத்தாலும்கூட, கடல் மட்டம் 14.2 செ.மீ. (ஏறக்குறைய அரை அடி) அளவுக்கும், 2300&ம் ஆண்டில் 24.2 செ.மீ. அளவுக்கும் உயரும்.

மாறாக, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஏனோதானோவென்ற நடவடிக்கை எடுத்தால், 2100&ல் புவி வெப்பநிலை 3.91 டிகிரியாக இருக்கும். இதனால், கடல் மட்டம் 32.3 செ.மீ. (ஒரு அடிக்கு மேல்) உயரும். 2300&ல் கடல் மட்டம் 139.3 செ.மீ. (4.6 அடி) அதிகரிக்கும். பல தொலைவுக்கு ஊருக்குள் கடல் நீர் புகுந்து, பல நகரங்கள், கடலை ஒட்டிய சிறிய நாடுகள், தீவுகள் அழியும்.’’

Wednesday, July 4, 2012

வெற்றி அடைந்த போராட்டம் வாயடைத்த ஜெயா! ஸ்டாலின்!!

சென்னை: சிறை நிரப்பும் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட ஸ்டாலின் மாலை விடுதலை செய்யப்பட்டார்.

மாலையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின், அரசின் அச்சுறுத்தலுக்கு பயப்படாமல் தி.மு.க.,வினர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் போலீசாரின் தகவல்படி 93 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் மிகப்பெரிய வெற்றியாக அமைந்துள்ளது.,ஜெயில் நிரம்பியதை கேட்டு வாயடைத்து போனார் ஜெயா, என்றார் ஸ்டாலின்.

சிறையில் அடைக்க வழியில்லாததால் போலீசார் விடுதலை செய்துள்ளனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட கட்சி தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சிறையில் அடைக்க முடியாத அளவிற்கு போராட்டம் வெற்றி பெற்றுள்ளது என கூறினார்.

எழுச்சியைப் பார்த்த பிறகாவது ஜெ., திருந்த வேண்டும். திருந்துவது மனித இனம் திருந்தாது மிருக ஜெ இனம்.

பதவி விலகுவாரா ப. சிதம்பரம்!!

டெல்லி: சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் அப்பாவி கிராமவாசிகளை சுட்டுக் கொலைச் செய்துவிட்டு 20 மாவோயிஸ்டுகளை சுட்டுக் கொன்றதாக சி.ஆர்.பி.எப் படையால் கூறப்படும் சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த சம்பவம் குறித்து உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் அண்மையில் 200 சி.ஆர்.பி.எப். வீரர்கள் சுற்றி வளைத்து நடத்திய தாக்குதலில் 20 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் சி.ஆர்.பி.எப். முகாமிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த அப்பாவிகளையே படையினர் சுட்டுக் கொன்றதாக கூறப்பட்டது.

இச்சம்பவத்தை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அடங்கிய பிரதிநிதிக் குழுவும் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்து உறுதிச்செய்துள்ளது.

இதைத் தொடர்ந்து மாவட்ட மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் நீதிபதி சச்சார், சுவாமி அக்னிவேஷ், பி.டி. சர்மா போன்ற மனித உரிமை ஆர்வலர்கள், இந்த சம்பவம் குறித்து உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்துக்கு பிரதமர் மன்மோகன்சிங் பகிரங்க மன்னிப்பு கோரவும், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பதவி விலகவும் வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் உள்துறை அமைச்சக அதிகாரிகள் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளனர். சுட்டுக் கொன்றது மாவோயிஸ்டுகள்தான் என்றும் சிறுவர்களை மாவோயிஸ்டுகள் தங்களது படையில் சேர்த்திருக்கின்றனர் என்றும் உள்துறை அமைச்சக வட்டாரங்கள் குற்றத்தை மறைக்கும் நோக்கில் மழுப்பலான பதில்களை கூறி வருகின்றன.

Tuesday, July 3, 2012

இல்லத்தரசிகள் இக்கொடுமைகளுக்கு ஆளாவதேன்?

புதுடெல்லி: இந்தியாவில் ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கு ஒருமுறை தற்கொலை நிகழ்வதாக அரசு அறிக்கை கூறுகிறது. தற்கொலை செய்வோரில் ஐந்து பேரில் ஒருவர் இல்லத்தரசிகள் என்று அவ்வறிக்கை கூறுகிறது.

அண்மையில் வெளியிடப்பட்ட ’இந்தியாவில் விபத்து மரணங்களும், தற்கொலையும்(‘Accidental Deaths and Suicides in India 2011′) என்ற அறிக்கையில் இத்தகவல்கள் அடங்கியுள்ளன.

முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் தற்கொலை சதவீதம் 0.7 சதவீதம் அதிகரித்துள்ளது. 2010-ஆம் ஆண்டு 1,34,599 பேர் தற்கொலைச் செய்துள்ளனர். 2011-ஆம் ஆண்டு 1,35,585 ஆக இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேற்குவங்காளம் தற்கொலையில் முதலிடத்தில் உள்ளது.

குடும்ப பிரச்சனைகள் காரணமாக தற்கொலையில் முதலிடத்தை ராஜஸ்தான் வகிக்கிறது. அடுத்த இடத்தை கேரளா பெற்றுள்ளது.

இதர மாநிலங்களில் கடந்த ஆண்டு தற்கொலைச் செய்துக் கொண்டோரின் எண்ணிக்கை:

தமிழ்நாடு – 15,963, மஹராஷ்ட்ரா – 15,947, ஆந்திரபிரதேசம் – 15,077, கர்நாடகா-12,622

மேற்கண்ட ஐந்து மாநிலங்களில் தற்கொலைச் செய்துக்கொண்டார் நாட்டின் மொத்தம் தற்கொலைச் செய்துக்கொண்டோரின் 56.2 சதவீதம் ஆகும்.

* இல்லத்தரசிலே! எந்த பிரச்சினை வந்தாலும் துணிவோடு எதிர்கொள்ளும் முடியவில்லையா உங்கள்மேல் அக்கறை உள்ளவர்களிடம் உங்கள் பிரச்சினைகளை பகிர்ந்துகொள்ளுங்கள். அவசரப்பட்டு எதையும் ஆராயாமல் செய்யாதீர்,ப்ளீஸ்.

Sunday, July 1, 2012

நித்திக்கு 144..,

கொடைக்கானல்: தியான முகாம் நடத்துவதற்காக கொடைக்கானலில் முகாமிட்டுள்ள நித்யானந்தாவுக்கு, ஓட்டலை விட்டு வெளியில் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல் அட்டுவம்பட்டி "ஸ்டெர்லிங்' ஓட்டலுக்கு, நேற்று இரவு 10 மணிக்கு, நித்யானந்தா, ஏழு சீடர்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தனர். ஜூலை 22 வரை இங்கு தங்கி, வெளிநாட்டு பக்தர்களுக்கு தியான முகாம் நடத்த திட்டமிட்டுள்ளார்.

ஓட்டலில் 60 அறைகள், நித்யானந்தா குழுவினருக்காக பதிவு செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள், தங்கியிருக்கும் பயணிகள் தவிர யாரும் ஓட்டலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. ஐந்து சீடர்கள் வாசலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "அனுமதி பெறாமல் வெளியில் செல்லவேண்டாம் என, நித்யானந்தாவிடம் கூறியுள்ளோம், என்றார்.

* இம்முறையாவது காய் அடிப்பார்களா இக்கள்ளச்சாமிக்கு..???

Saturday, June 30, 2012

விஜய்யின் துப்பாக்கி தடையை தாண்டி வெளிவருமா?

நடிகர் கமல்ஹாசனிடம் உதவியாளராக இருந்தவர் தயாரிப்பாளார் ரவிதேவன். இவரது தயாரிப்பில் லோகியாஸ் இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு ‘கள்ளத்துப்பாக்கி’ என்ற படத்தலைப்பு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு துப்பாக்கி என்று டைட்டில் வைக்கப்பட்டது. துப்பாக்கி படத்தின் டைட்டில் டிசைனும் கள்ளத்துப்பாக்கி படத்தின் டைட்டில் பாணியில் இருந்தது.

இதையடுத்து கள்ளத்துப்பாக்கி குழுவினர் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டனர். தயாரிப்பாளர்கள் சங்கத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆதிக்கம் இருந்ததால் இவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. இதனால் கோர்ட்டுக்கு சென்றனர்.

கள்ளத்துப்பாக்கி குழுவினரின் மனுவை விசாரித்த நீதிபதி, விஜய் நடித்து வரும் படத்திற்கு துப்பாக்கி என்று டைட்டில் வைக்கக்கூடாது என அந்த டைட்டிலுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இது விஷயமாக கள்ளதுப்பாக்கி பட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவத்தார். சுமூக தீர்வுகண்டு படம் துப்பாக்கி பெயரிலேயே வெளியாகுமா? wait & see.

Friday, June 29, 2012

இனி அல்கஹால் தேடி அலைய வேண்டியதில்லை?

உலக முழுவதும் பிரபலமான கோக கோலா, பெப்சி போன்ற குளிர்பானங்களை 6 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் அருந்துகின்றனர்.

ஆனால், இந்தக் குளிர்பானங்களில் 10 மில்லிகிராம் அளவுக்கு ஆல்கஹால் கலப்பு உள்ளதாக, பிரான்ஸ் நாட்டின் நுகர்வோர் தேசிய மையத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கோலாவில் சேர்க்கும் நச்சு கலந்த அமிலம் கேன்சரை உண்டு செய்யும், சிறுக சிறுக உள் எலும்புகளை அறித்துவிடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்., உலக சுகாதார மையமும் எச்சரித்துள்ளது இத்தயாரிப்பை.

வெளிநாட்டு மோகத்தில் இதை அருந்துவதை தவிர்த்து உடல் நலம் பேணுவோமா நாம்.

Thursday, June 28, 2012

தொற்று கிருமிகளாலும் புற்றுநோய் வர வாய்ப்பு! புதிய ஆய்வு!!

பாரிஸ்: பிரான்சில் உள்ள சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பு (International Agency for Research on Cancer in Lyon) நடத்திய ஆய்வில் உலக அளவில் புற்றுநோய் வரும் நபர்களில் ஆறில் ஒருவருக்கு இந்த நோய் கிருமித் தொற்றுக்களினால் (Bacteria, viruses and parasites) ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.

மக்களுக்கு வருகின்ற புற்றுநோய்களில் ஒரு பங்கு தவிர்க்கக்கூடிய மற்றும் குணப்படுத்தக்கூடிய கிருமித் தொற்றுகளினால் ஏற்படுகிறது என இந்த ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது. அவ்வாறெனில்,கிருமித் தொற்றினால் புற்றுநோய் வருபவர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு கிட்டத்தட்ட இருபது லட்சம் ஆகும்.

வளர்ந்து வரும் நாடுகள் என்று எடுத்துக்கொண்டால் கிருமித் தொற்றினால் ஏற்படுகின்ற புற்றுநோய்களின் விகிதாச்சாரம் மேலும் அதிகம் என்று இந்த ஆய்வு கூறுகிறது.

புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கிருமித் தொற்றுக்களை தடுப்பூசிகள் மற்றும் கிருமித் தொற்று சிகிச்சை முறைகள் கொண்டு கட்டுப்படுத்த கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இந்த அமைப்பு வாதிடுகிறது. புற்றுநோயையும் தொற்று நோயாக அங்கீகரிக்க வேண்டும் என இந்த அமைப்பு கோருகிறது.

Wednesday, June 27, 2012

சகுனி நாயகன் அரசியல் பிரவேசமா?

கார்த்தி நடித்த 'சகுனி' படம் கடந்த 22-ந்தேதி ரிலீசானது. மொத்தம் 1,154 தியேட்டர்களில் 'சகுனி' திரையிடப்பட்டு 'சிறுத்தை' படத்தின் வசூலை 3 நாட்களில் முறியடித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து 'சகுனி' படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. விழாவில் கமலா தியேட்டர் அதிபர் வள்ளியப்பன் பேசும்போது, சினிமாவில் தொடர்ந்து வெற்றிப்படங்களாக கொடுத்து வரும் கார்த்தி அரசியலுக்கு வர வேண்டும் என்றார். அதற்கு முன்னோட்டமாக அரசியல் படமான 'சகுனி'யில் நடித்துள்ளார் என்றும் குறிப்பிட்டார்.

சென்னை, செங்கல்பட்டு விநியோகஸ்தர் சங்க தலைவர் கலைப்புலி சேகரன் பேசும்போது, கார்த்தி தொடர்ந்து வெற்றிப்படங்கள் கொடுத்து வருகிறார். அதற்காக அவர் அரசியலுக்கு வரவேண்டிய அவசியம் இல்லை. கார்த்தி அரசியலுக்கு வரக்கூடாது என்றார். நடிகர் நாசர் பேசும்போது, கார்த்தியை அரசியலுக்கு அழைக்க வேண்டாம் என்றார்.

பின்னர் கார்த்தி பேசிய தாவது: சகுனி' படத்தில் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை சிரித்து ரசித்து பார்க்கிறார்கள். வசூலில் எனது முந்தைய படத்தை விட பெரிய அளவில் சகுனி போய் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சகுனி அரசியல் கதையாக இருந்தாலும் வலுவாக அரசியலுக்குள் செல்லாமல் காமெடியாக நகர வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த உணர்வில்தான் இந்த படத்தில் நடிக்கவும் செய்தேன்.

படத்தில் ரஜினி, கமல் என பெயர் சொல்லி அழைப்பது ரசிக்கும்படி இருந்தது. ராதிகா, பிரகாஷ் ராஜ், நாசர் உள்ளிட்ட அனைத்து கேரக்டர்களும் சிறப்பாக அமைந்தன. ஆக்ஷன் இல்லாமல் ஜாலியாக இருக்க ஆசைப்பட்டோம். அப்படியே கதை அமைந்தது. வெற்றியும் பெற்றுள்ளது, இவ்வாறு கார்த்தி பேசினார்.

Tuesday, June 26, 2012

விமானத்தில் பறந்தபடி பேசும் புது வசதி அறிமுகம்!

விமானத்தில் செல்லும்போதும், "மொபைல் போனில்' பேசுவது, உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கொண்ட புதிய விமானத்தை, பிரிட்டனின் விர்ஜின் நிறுவனம், விரைவில் டில்லியிலிருந்து லண்டனுக்கு இயக்கவுள்ளது.

இதுகுறித்து பிரிட்டனின் விர்ஜின் விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஸ்டீவ் ரிக்வே கூறியதாவது:

தற்போது விமானங்களில் பயணிப்போர், "மொபைல் போனில்' பேச முடியாது. ஆனால், நாங்கள் புதிதாக, டில்லியிலிருந்து லண்டனுக்கு, அடுத்த மாதம், 11ம் தேதியில் இருந்து இயக்கவுள்ள, ஏ 330 ரக விமானத்தில், "மொபைல் போனில்' பேசும் வசதியை ஏற்படுத்த உள்ளோம். இதற்காக, அந்த விமானத்தில் "ஏரோ மொபைல்' தொழில்நுட்ப வசதியை ஏற்படுத்தவுள்ளோம்.

இதன் மூலம், அந்த விமானம், தரையிலிருந்து 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தாலும், அதிலிருந்தபடி "மொபைல் போனில்' பேசவும், குறுந்தகவல்களை அனுப்பவும் முடியும். இதுதவிர, தொடு திரை பொழுபோக்கு வசதியையும் அறிமுகப்படுத்த உள்ளோம். அந்த விமானத்தில் மேலும் பல வசதிகளையும் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு ஸ்டீவ் ரிக்வே கூறினார்.

Monday, June 25, 2012

சொந்த மாநிலத்தில் அகதிகளாக வாழும் முதல் மாநிலம்!?


அஹ்மதாபாத்: 2002-ஆம் ஆண்டு ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நரேந்திர மோடியின் ஆசீர்வாதத்துடன் கட்டவிழ்த்துவிட்ட இனப் படுகொலையில் அகதிகளாக்கப்பட்ட 2 லட்சம் முஸ்லிம்களில் 16 ஆயிரம் பேர் இன்றும் தற்காலிக அகதிகள் முகாமில் வாழ்வதாக அரசு சாரா நிறுவனமான ஜன்விகாஸ் கூறுகிறது.


அடிப்படை வசதிகளான சாலை, மின்சாரம், சாக்கடை வசதி எதுவும் இல்லாமல் முற்றிலும் சுகாதாரமற்ற சூழலில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் விஷயத்தில் மோடி அரசு முற்றிலும் புறக்கணிக்கும் கொள்கையை கடைப்பிடித்து வருகிறது.

குப்பை மேடுகளுக்கு அருகே 10 ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் இனப் படுகொலையால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள், ஜன்விகாஸுடன் தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

ஜன்விகாஸ் ஏற்பாடுச் செய்த இன்ஸாஃபி தகர்பர் என்ற நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் தங்களது துயரமான வாழ்க்கையைக் குறித்து விவரித்தனர்.

தங்களின் புகார்களை கூட கேட்க அதிகாரிகள் தயாரில்லை என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷாமா பானு அன்ஸாரி கூறினார்.

நிரம்பி வழியும் சாக்கடைகளில் கழிவு நீர் தங்களின் காலனிக்கு வருவதாகவும், சாக்கடையில் ஒரு குழந்தை சிக்கி இறந்ததாகவும், தொற்று நோய்களும், இதர நோய்களும் பரவுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


மாநிலத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் எவரும் இல்லை என்பதை நம்பச்செய்ய முயற்சிக்கும் அரசு, உண்மைகளின் பால் கண்ணைத் திறக்கவேண்டிய நேரம் இது என்று பீப்பிள்ஸ் யூனியன் ஃபார் சிவில் லிபர்டீஸ்(பி.யு.சி.எல்) செயலாளர் ரோஹித் பிரஜாபதி தெரிவித்தார்.


தங்களுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தால் அகதிகள் காலனியில் வசிக்கும் முஸ்லிம்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தயங்குகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

மூவ்மெண்ட் ஃபார் செகுலர் டெமோக்ரஸியின் பிரகாஷ் ஷா, ஜன்விகாஸ் சி.இ.ஒ விஜய் பார்மர் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த இனப் படுகொலைகளில் அகதிகளாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம்களில் 10 ஆண்டுகள் கழிந்த பிறகும் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் என்.ஜி.ஓக்கள், முஸ்லிம் ஜீவகாருண்ய அமைப்புகள் ஆகியன நிர்மாணித்த தற்காலிக மையங்களில் வசித்து வருகின்றனர்.

Sunday, June 24, 2012

சக்கரை நோயாளிகளுக்கு புதிய மாற்று கண்டுபிடிப்பு!!

அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலை கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் சர்க்கரை நோயாளிகளுக்காக ஒரு புதிய பயனுள்ள சிகிச்சையை கண்டறிந்துள்ளனர்.

இது சக்கரை நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

இந்த சிகிச்சைக்காக ஒரு புதிய ஹார்மோன் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய ஹார்மோன் இன்சுலினுக்கு ஒரு பயனுள்ள மாற்றாக இருக்கிறது. இது இன்சுலின் செய்யும் அதே வேலையை செய்கிறது.

இதற்குண்டான விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார் இதை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.

Saturday, June 23, 2012

வாய்க்கொளுப்பு நடிகருக்கு வாய்ப்பு கிடைக்குமா?

அரசியல் பிரச்னைகள், தனிப்பட்ட பிரச்னைகள் உள்ளிட்ட காரணங்களால் வடிவேலு எந்த படங்களிலும் நடிக்க முடியாமல் இருந்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த மறுபடியும் ஒரு காதல் படத்தில் கூட காமெடியில் அசத்தி இருந்தாலும் கூட இப்படம் நீண்ட இடைவெளிக்கு முன் எடுக்கப்பட்ட படமே.

இந்நிலையில், ஷங்கர் தன் சொந்த பட நிறுவனம் மூலம், எஸ். பிக்சர்ஸ் சார்பில் காதல், கல்லூரி, இம்சை அரசன் 23ம் புலிகேசி, ரெட்டைச்சுழி உள்ளிட்ட படங்களை எடுத்தார். அதில் சில படங்கள் தோல்வியை சந்தித்தால் கொஞ்சம் காலம் பட தயாரிப்பை நிறுத்தி இருந்தார்.

இந்நிலையில் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை சிம்புதேவன் இயக்குவதாகவும், அதில் ஹீரோவாக வடிவேலுவே நடிப்பார் என்றும், அதை ஷங்கரே தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வந்தன. அதுஇப்போது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. சமீபத்தில் டைரக்டர் சிம்புதேவன் திருமண விழாவில் கலந்து கொண்ட டைரக்டர் ஷங்கர், அங்கு வந்த சினிமா பிரபலங்களோடு மனம்விட்டு பேசியிருக்கிறார். பின்னர் சிம்புதேவனுடன் நீண்ட நேரம் அமர்ந்து‌ பேசியுள்ளார் ஷங்கர்.

சிம்புதேவன் தனது உதவியாளர் என்பதால் கூடுதல் அக்கறை எடுத்து கொண்ட ஷங்கர் தயாரிப்பு பொறுப்பை ஏற்க ஓ.கே., சொன்னதும், இயக்குநர் சிம்புதேவன் கல்யாண மகிழ்ச்சியோடு மதுரையிலேயே கதை விவாதத்தில் உட்கார்ந்து விட்டாராம். இவை எல்லாவற்றையும் பார்க்கும்போது, கண்டிப்பாக ஷங்கர் வடிவேலுவுக்கு வாய்ப்பு கொடுப்பார் என தெரிகிறது.

Thursday, June 21, 2012

வரலாறை எதிர்நோக்கி இந்திய ரூபாயின் மதிப்பு!?

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. (வரலாறை எதிர்நோக்கி உள்ளது)

சர்வதேச பங்குச் சந்தை இன்று துவங்கியதுமே இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியை நோக்கி நகர்ந்தது. ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை வர்த்தகம் துவங்கியதும் மிகவும் சரிந்து 56.48 என்ற அளவிற்கு வீழ்ச்சி அடைந்தது.

பிறகு 11.35 மணியளவில் அதில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு, 56.39 என்ற அளவிற்கு உயர்ந்த நிலையில்,பிற்பகல் மீண்டும் சரிந்து 56.57 என்ற அளவிற்கு மிகககடுமையான மற்றும் வரலாறு காணாத வீழ்ச்சியை கண்டது. மேலும் இது வரலாறை எதிர்நோக்கி 60 டாலருக்கு கூடும் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றது.

நேற்று மாலை வர்த்தகம் நிறைவடையும் போது இந்திய ரூபாயின் மதிப்பு 56.15 என்ற அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரூபாயின் மதிப்பு வெகுவாக குறைந்து வருவதால் இந்திய ரிசர்வ் வங்கி அவசர கதியில் செயல்பட்டு ரூபாயைக் காப்பாற்ற நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று தெரிகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவுக்கு வெளிநாட்டு நிதிகள் பெருமளவில் வந்ததால், ரூபாயின் மதிப்பு பெருமளவில் அடி வாங்காமல் தப்பியது. ஆனால் ஏப்ரல், மே மாதத்தில் அன்னிய முதலீடுகள் குறைந்ததாலும், நிதி வரவு இறங்கியதாலும் தற்போது ரூபாயின் மதிப்பு கிடுகிடுவென சரிந்து கொண்டிருக்கிறது.

தொடர்ந்து இந்த நிலை நீடிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். அடுத்த சில நாட்களில் இது மேலும் மோசமாகி ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 60 ஆக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

(படத்தில் உள்ள குமார் என்பவர்தான் இந்த ரூபாயின் சிம்பிளை வடிவமைத்தார் இவருக்கு பாராட்டும், பணமும் கிடைத்தது மத்திய அரசாங்கத்தால் ஆனால் கோயிலில் மந்திரம் சொல்லும் பார்ப்பன குசும்பு இதை வடிவமைத்தலில் தவறு ஆதலால்தான் ரூபாயின் இந்த வீழ்ச்சி என்று இல்லாததை அவுத்து விட்டது, இதை பிரபல தொலைகாட்சியும் ஒளிபரப்பியது)

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!