Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, May 7, 2012

எத்தனை காலம் வாழ்தோம் என்பதைவிட! எப்படி,...?

நாம் உண்ணும் உணவுதான் நம் ஆயுளை தீர்மானிக்கிறது. கொழுப்பு சத்துள்ள உணவுகள்தான் ரத்தநாளங்களில் படிந்து இதயத்தை செயல்படவிடாமல் தடுக்கிறது. இதனால் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படவும் காரணமாகிறது. இதயத்திற்கு இதம் தரும் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியத்தோடு ஆயுளை அதிகரிக்கலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

ஆயுள் அதிகரிக்கும் தயிர்: தயிர் அதிசயம் மிக்க உயிருள்ள உணவு. தயிரின் மகத்துவம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாகவே 3000 வருடங்களுக்கு முன்பே மொஹஞ்சோதாரே ஹரப்பா நகரத்தில் தெரிந்துள்ளது. அமெரிக்காவில் ஜலர்ஜியா மாகாணத்தில் மட்டும் அதிகம் பேர் 100 வயதிற்கு மேல் வாழ்வதை ஆராய்ந்தபோது அவர்கள் அதிகம் உணவில் தயிர் சேர்த்துக் கொள்கின்றனர் என தெரிய வந்தது.

தயிரில் லேக்டோடைசில்ஸ் மற்றும் லெபிடா என்ற நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. இவை நம் வயிற்றில் தீய கிருமிகள் வராமல் தடுக்கிறது. நமது கிராம மக்கள் கூறுவது போல் "ரத்தம் செத்துப்போகாமல்'' செய்து தயிரின் ஸ்பெஷல் ஆக்சன் குடல் சுழற்சி, குடல் புண், பெருங்குடல் புற்றுநோய் வராமல் தயிர் காப்பாற்றும்.

தயிரிலுள்ள கால்சியம் எலும்புகள் தேயாமல் காப்பாற்றுகிறது. எலும்பில் உள்ள மஜ்ஜையில் அதிக அளவில் செல் உருவாக தயிர் உதவுகிறது. கொலஸ்ட்ரால் அளவை குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தி தருகிறது. மலச்சிக்கல் இல்லாமல் வாழ ரத்தக்கசிவை தடுக்கும் விட்டமின் கே உருவாக உதவும். வழி வகுக்கிறது. இது பி. காம்ப்ளக்ஸ் வைட்டமின் குறைபாட்டை தவிர்க்கிறது. வயிற்றில் அதிக வாயு ஏற்படுவதை தடுக்கிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. தோலை மினு மினுப்பாக வைக்கிறது.

இதயத்தை சீராக்கும் மீன்: மீன் மனிதனின் ஆயுள் மற்றும் அறிவை வளர்க்கும் திறன் கொண்டது. 30 வருடங்கள் முன்பு அலாஸ்காவில் மற்றும் பின்லாந்தில் வாழும் எஸ்கிமோக்களுக்கு இதயநோய் வராமலே இருப்பது கண்டு ஆச்சரியப்பட்டு ஆராயும்போது அவர்கள் தினமும் அதிக அளவு மீன் சாப்பிடுவதுதான் காரணம் எனத் தெரிந்தது.

மீனிலிருந்து ஒமேகா-3 என்ற செறிவற்ற கொழுப்பு கிடைப்பதால் அது ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துகிறது. இருதய துடிப்பை சீராக வைக்கும். திறமை மீனுக்கு உண்டு.

இதயத்திற்கு ஏற்ற சாக்லேட்: பனாமா நாட்டைச் சேர்ந்த சன்ப்ளாஸ் தீவில் வாழும் மக்களுக்கு உள்நாட்டு பகுதியில் வாழ்வோரைக் காட்டிலும் 6 மடங்கு குறைவாகவே இதயநோய் ஏற்படுகிறது. இதற்கு காரணம் நாம் தண்ணீர் சாப்பிடுவது போல அவர்கள் எக்கச்சக்கமாக தினம் கோகோ பானம் அருந்துவது தான். இதிலுள்ள இசபிளரனாய்ட்ஸ் என்ற பொருள். ரத்தக்குழாய்களை இளமையாக வைக்கிறது. இதனால் அவர்களின் உடலில் ரத்த ஓட்டம் தங்கு தடையின்றி மடை திறந்த வெள்ளம் போல் உடலின் பல பாகங்களுக்கும் பாய்வதால் அவர்களிடம் ரத்தக் கொதிப்பு, சிறுநீரகக் கோளாறு சர்க்கரை நோய் மூளைச்சிதைவு நோய் எட்டியும் பார்ப்பதில்லை. ஆனால் டார்க் சாக்லேட்தான் சாப்பிடவேண்டும். மில்க் சாக்லேட்டில் செறிவு கொழுப்பு இருப்பதால் அதனால் இதுபோன்ற நன்மைகள் கிடைக்காது.

கருப்பு திராட்சை சத்துக்கள்: கருப்பு திராட்சையில் உள்ள சத்துக்கள் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கும் உடலை ஆரோக்கியமாக வைக்கும். ஞாபகசக்தியை வளர்க்கும். தினம் தினம் கறுப்பு திராட்சை சாப்பிட்டால், தலைமுடி நரைக்காமல், இரும்பு போன்ற இதயத்துடன் வாழலாம். அதேபோல் பாதாம், முந்திரி, காரைப் பருப்பு, வால்நட் ஆகியவற்றில் செறிவற்ற கொழுப்பு உள்ளதால் அவை இதயத்தை பாதுகாக்கும்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு: அமெரிக்காவை விட ஒகினாவா என்ற ஜப்பானிய தீவில் 100 வயதிற்கு மேற்பட்டவர்கள் 5 மடங்கு அதிகம். இதற்கு சர்க்கரை வள்ளிக்கிழங்குதான் காரணம் என்று கண்டறியப்பட்டது. ஆலிவ் எண்ணெய் அளவிற்கு சர்க்கரை வள்ளிக் கிழங்கு உடலை ஆரோக்கியமாக வைக்கின்றன. இவற்றில் வைட்டமின் தாதுப்பொருட்கள் மற்றும் அபூர்வமான ஆன்டி ஆக்சிடேன்ட்டு உள்ளன.

ஆலிவ் (olive) என்பதிலேயே Live என்று ஆசிர்வாதம் செய்வதும் பொதிந்துள்ளது. 40 வருடங்கள் மேலைநாடுகளில் செய்த ஆராய்ச்சிகளில் ஆலிவ் எண்ணெயில் செறிவற்ற கொழுப்பு இருப்பதால் அது நம் உடலில் ஆக்ஸிகரணம் ஏற்படுவதை தடுத்து மூப்பு ஏற்படாமல் தடுப்பது தெரிய வந்துள்ளது. ஆலிவ் எண்ணெயை நாம் செய்யும் காய்கறி சாலட்களில் கலந்து சாப்பிடுவது நல்லது. இது இதயத்தை காக்கும்.

Sunday, May 6, 2012

நண்பன்டா! நண்பனுக்காக!! விஜய்!!!

பிரபுதேவா இயக்கத்தில், அக்ஷ்ய் குமார், சோனாக்ஷி சின்ஹா நடித்து வரும் சிறுத்தை படத்தின் இந்தி ரீ-மேக் ரவுடி ரத்தோர்.

இப்படத்தின் சூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் நடிகர் விஜய்யை அக்ஷ்ய் குமாருடன் ஒரு பாட்டுக்கு நடனம் ஆட திட்டமிட்டார் நடிகர் பிரபுதேவா. விஜய்யும், பிரபுதேவா மீதுள்ள நட்பால் ஓ.கே.‌ சொன்னார்.

அதன்படி விஜய் - அக்ஷ்யகுமார் இணைந்து ஆடிய நடன காட்சியை பிரபுதேவா படமாக்கினார். இருவருக்கும் பிரபுதேவாவே டான்ஸ் மாஸ்டராக இருந்து நடனம் சொல்லி கொடுத்து ஆட வைத்தார்.

தற்போது ஏ.ஆர்.முருகதாஸின் துப்பாக்கி படத்தில் பிஸியாக இருக்கும் விஜய், பிரபுதேவாவுக்காக சில நாட்கள் தேதி ஒதுக்கி இப்படத்துக்காக நடனம் ஆடி கொடுத்துள்ளார், அதுவும் சம்பளம் வாங்கமாலேயே...!

Saturday, May 5, 2012

ஆங்கிலம் என்று அசந்துவிட வேண்டாம்! வந்துவிட்டது கூகுளின் புது வசதி!!

ஹைதராபாத்: ஆங்கிலம் சரியாக புரியவில்லை என்ற கவலை உங்களுக்கு இனி தேவையில்லை. இனி எந்த மொழியில் மின்னஞ்சல் வந்தாலும் அதை உங்களுக்கு புரிந்த மொழியில் மாற்றிக்கொள்ள முடியும். இந்த வசதியை உங்களுக்கு கூகிள் இணையதள சேவை நிறுவனத்தின் ஜிமெயில் வழங்க உள்ளது.

ஜிமெயில் சேவையைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இன்னும் ஓரிரு நாள்களில் இந்தச் சேவை கிடைக்கும். மின்னஞ்சலின் மேற்பகுதியில் இருக்கும் ‘டிரான்ஸலேட்’ என்கிற பொத்தானை இயக்குவதன் மூலம் தேவையான மொழிக்கு மின்னஞ்சலை மொழிபெயர்க்க முடியும் என்று கூகுள் ‘டிரான்ஸலேட்’ சேவையின் மேலாளர் ஜெஃப் சின் தெரிவித்தார்.

இந்தத் தகவல் கூகுள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பூவில் வெளியிடப்பட்டிருக்கிறது.

முன்னதாக கூகுளின் பரிசோதனை முயற்சிகள் இடம்பெறும் ‘லேப்ஸ்’ பகுதியில் வழங்கப்பட்டிருந்த தானியங்கி செய்தி மொழிமாற்ற சேவைக்கு ஜிமெயில் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததால், ஜிமெயிலிலும் இதைப் பயன்படுத்தும் யோசனை முன்வைக்கப்பட்டது.

Friday, May 4, 2012

வயாகரா! உணர்வை தூண்டும் மாத்திரை இனி வேண்டாம்! ஆய்வில்!!

வயாகரா மாத்திரை ஆண்களின் பாலியல் உணர்வை தூண்டும் என்ற கருத்து நிலவி வருகிறது. இனி வயாகரா தேவையில்லை. சூரிய குளியலே போதும் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

ஆஸ்திரியாவில் உள்ள கிரேஷ் மருத்துவ பல் கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. பொதுவாக ஆண்களின் ரத்தத்தில் உள்ள டெஸ்டோ டெரோன் என்ற ஹார்மோன் “பாலியல்” ஆர்வத்தை தூண்டுகிறது. இதற்கு வைட்டமின் “டி” அதிக அளவில் தேவைப்படுகிறது.

வைட்டமின் டி சூரிய ஒளி மூலமும், இறைச்சி, மீன் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதாலும் உற்பத்தி ஆகிறது. எனவே சூரிய குளியலே போதும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இந்த புதிய ஆய்வின் மூலம் ஒரு மணி நேரம் சூரிய வெளிச்சத்தில் படுத்தபடி சூரிய குளியல் செய்தாலே போதும் ரத்தத்தில் பாலியல் உணர்வை தூண்டும் டெஸ்ட் டோடெரோன் அளவு 69 சதவீதம் உயர்கிறது என்று தெரிய வந்துள்ளது., இந்தியா வெப்ப நாடாக இருப்பதால்தான் இத்தனை மக்கள் தொகையோ.?

Thursday, May 3, 2012

எத்தனை மருத்துவ குணம் இப் (சீதா) பழத்தில்

சீதாப் பழம் பற்றி பலர் அறிந்திருப்பீர்கள் Custard apple என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த சீதாப்பழம் பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது.

இப்பழத்தின் தோல் விதை, இலை மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால்தான் அதிக இனிப்புசுவையை தருகிறது.

ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது

பழத்தில் உள்ள சத்துக்கள்: சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, போன்றவை இப்பழத்தில் அடங்கியுள்ளன.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இலைகள்: சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. சயரோக நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.

முகப் பருக்கள் குணமடையும்: சீத்தாப் பழத்தோடு உப்பு கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் பூசினால் உடனடியாக குணமடையும்.

மேனி பளபளப்பாகும்: விதைகளை பொடியாக்கி சமஅளவு பொடியுடன் பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்துவிடும்.

சீத்தாப்பழ விதை பொடியோடு கடலைமாவு கலந்து எலுமிச்சை சாறு கலந்து குளித்து வர முடி உதிர்வது கட்டுப்படும்.

சிறிதளவு வெந்தயம், பாசிப்பயறு இரண்டையும் கலந்து இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து சீத்தாப் பழ விதையின் பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்து வர தலைமுடி குளிர்ச்சி பெறும். பொடுகு மறையும்.

மேனியை பளபளப்பாக்குவதில் சீத்தாப்பழ விதை தூள் முக்கிய பங்காற்றுகிறது. விதையின் தூளில் தயாரிக்கப்பட்ட தேநீர் அருந்தினால் உடலுக்கு உற்சாகம் ஏற்படும்

எலும்பு பலமடையும்: சீத்தாபழத்தில் உடலை வலிமையாக்கும் சக்தி அதிகம் காணப்படுகிறது. இதைச் சாப்பிட இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம் கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும். எலும்பு, பற்கள் பலமடையும். சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும் ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.

நினைவாற்றல் அதிகரிக்கும்: சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்.

சீதாப்பழம் பற்றிய சில பொதுவான தகவல்கள்:
சீதா (Annona squamosa), வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில் முதன் முதலில் விளைந்த அனோனா (Annona) சாதியைச் சேர்ந்த தாவர இனமாகும்.

இது எட்டு மீட்டர் உயரம் வளரக்கூடிய சிறிய மரமாகும். அனோனா சாதி இனங்களில், இதுவே உலகெங்கும் அதிகம் விளைவிக்கப்படுவதாகும்.

பல்வேறு நாடுகளில் இம்மரம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, தைவானில் இப்பழம் புத்தர் தலை என்றழைக்கப்படுகிறது. ஈழத் தமிழரால் இப்பழத்தை அன்னமுன்னா பழம் என்றும் அழைக்கப்படுகின்றது.

பெரும்பாலான அனோனா சாதி இனங்களைப் போல் சீதா மரமும் மிதவெப்பப் பகுதிகளிலேயே (subtropical) நன்றாக வளரும் என்றாலும், நன்றாகப் பாதுகாக்கப்படும் பட்சத்தில், குளிர்காலங்களில் 28 F வெப்பத்தில் கூட உயிர் வாழும்.

சீதா மரம் நன்றாக காய்க்கக்கூடியது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பத்து முதல் 20 பவுண்டு எடையளவுக்கு பழங்களை ஈனக்கூடியது.

காய்கள் மரத்தில் பழுக்கா என்பதால், அவற்றை பறித்து வீட்டில் ஓய்வாக இருக்கும் போது உண்ணத்தக்கவை சீதாப் பழங்கள். பழத்தின் ஓடுகள் மெதுவாக விரிசல் விடும்போது அவற்றை பறித்து வைக்கலாம்.

சிறிதளவு அழுத்தம் தந்தால் பழத்தின் உருவம் சிதையும் நிலை வரும்போது, பழம் உண்ணத்தக்க சுவை நிலையை எட்டிவிட்டது என அறியலாம். சீதாப் பழங்கள் அதிக கலோரிகள் கொண்டதாகவும் இரும்புச்சத்து மிக்கதாகவும் இருக்கும். தலைப்பேன்களை ஒழிக்கும் மருத்துவ குணத்தை சீதாப்பழம் கொண்டிருப்பதால், இந்தியாவில், இப்பழம் கூந்தல் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது.

Wednesday, May 2, 2012

செக்ஸ் சாமிக்கு சப்போர்ட் செய்யும் ஹிந்து மதவாதம்!?

பெங்களூர்: ஆபாசமாக மீடியாக்களில் வளம் வந்தவர் நித்யானந்தா இவருக்கு முன்பு காஞ்சி சங்கரச்சாரி இதற்கு முன்பு அயோத்தியை ஆண்டதாக கூறும் பரதேசி ராமன் இப்படி நீண்டு கொண்டே போகும் ஹிந்து கடவுள்கள். அந்தவரிசையில், இந்த ஆதீன பதவி ஒன்றும் புதிதல்ல இவர்களுக்கு.(செக்ஸ் சாமிகளுக்கு)

நடிகை ரஞ்சிதாவுடன் ஆபாச லீலைகளை அரங்கேற்றிய நித்தியானந்தாவுக்கு தமிழகத்தின் மிகப்பெரிய ஆதீனமாக கருதப்படும் மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீன பதவி வழங்கப்பட்டுள்ளது.

பெங்களூர் அருகே உள்ள பிடாதியில் உள்ள நித்தியானந்தாவின் தியான பீட தலைமை அலுவலக வளாகத்தில் வைத்து முடிசூட்டல் நிகழ்ச்சி நடந்துள்ளது. மதுரை ஆதீனமாக தற்போது உள்ள அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிகர், நித்தியானந்தாவுக்கு கிரீடம் சூட்டி தனது அடுத்த வாரிசாக நித்தியானந்தாவை அறிவித்தார்.

பின்னர் மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் பேசுகையில், மதுரை ஆதீனத்தின் 293வது குரு மகா சன்னிதானமாக நித்தியானந்தாவை நாங்கள் இன்று அறிவித்து பிரகடனம் செய்கிறோம். அவர்தான் மதுரை ஆதீனத்தின் சட்டப்பூர்வமான அடுத்த மகா குரு சன்னிதானம். அவர் இனி ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச நித்தியானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியா ஸ்வாமிகள் என்று அழைக்கப்படுவார்.

மதுரை ஆதீன மடத்தின் வழிபாடு உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மதுரை ஆதீனத்தை அவர் இனி முழுமையாக செயல்படுத்துவார்.

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள மதுரை ஆதீனத்திற்குச் சொந்தமான 1250 ஏக்கர் நிலம், கோவில்கள் மற்றும் அனைத்து அசையும், அசைய சொத்துக்களையும் இனிமேல் நித்தியானந்தரே நிர்வகிப்பார் என்றார் அவர்.

ஆபாச லீலைகள் புரிந்து அசிங்கப்பட்ட ஒருவருக்கு மதுரை ஆதீன பட்டம் வழங்கப்பட்டதன் பின்னணி என்ன?

கோயில் நிர்வாகத்துறையை சேர்ந்த ஒருவர் கூறுகையில்: எல்லாம் அரசியல் பின்னணிதான், (சென்ற மாதம் அசோக் சின்காவை சந்தித்துவந்தார் நித்யானந்தா) மேலும் அவர் கூறுகையில் அடுத்தது பி ஜே பி, ல் சீட் கொடுத்து அரசியல் பிரவேசமும் உண்டு என்றார் அவர்., என்ன கருமமோ அந்த மாதிரியான தொழில் சொய்தால்தான் இதுபோன்ற பதவிகள் தேடி வருமோ?, வாழ்க இந்து சடங்குகளும் ச(ம்)மாச்சாரங்களும்!!! அன்பர்களுக்கு இந்து என்கிற இந்த மதம் தேவைதானா? யோசிப்பார்களா!

Tuesday, May 1, 2012

முதன் முறையாக விஜய்?

'
இது நாள் வரை செய்திராத விஜய் இப்போது டான்ஸ் களத்தில் கச்சை கட்டியுள்ளார்., அதுவும் இங்கு அல்ல வடக்கில்.

விக்ரமுடு' படம் தமிழ் மட்டுமின்றி, கன்னடம், பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படம் இந்தியிலும் ரவுடி ரத்தோர் என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது.

இந்தியில் அக்ஷய் குமார் கதாநாயகனாக நடிக்க, சோனாக்ஷி சின்ஹா கதாநாயகியாக நடிக்க, பிரபுதேவா இப்படத்தை இயக்குகிறார்.

தற்போது கிடைத்துள்ள தகவலின்படி ரவுடி ரத்தோர் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலில் இளையதளபதி விஜய் நடனம் ஆட இருக்கிறார்.

இதுகுறித்து விஜயை பிரபுதேவா சந்தித்து பேசியபோது, விஜய் நடனம் ஆட சம்மதித்திருக்கிறார்.

ரவுடி ரத்தோர் படத்தின் பாடலில் ஆடுவதன் மூலம், முதல் முறையாக விஜய் இந்திக்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது., வடக்கிலும் கலக்கல் ஆட்டத்தை எதிர்பார்க்கலாம் என்று சொல்லுங்க.

Monday, April 30, 2012

மினி உலகக் கோப்பையை தூக்கி எறிந்த ஐ சி சி!!

துபாய்: மினி உலகக் கோப்பை என்றழைக்கப்பட்ட 50 ஓவர் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிட்யை 2013-ம் ஆண்டுடன் முடிவுக்கு கொண்டு வர சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி முடிவு செய்துள்ளது.

2015-ம் ஆண்டு முதல் டெஸ்ட், ஒருநாள், இருபது ஓவர் என ஒவ்வொரு போட்டிக்கும் ஒரே சாம்பியன்ஸ் டிராபிதான் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் மினி உலகக் கோப்பை என்றழைக்கப்படும் சாம்பியன் டிராபியை கைவிட ஐசிசி முடிவு செய்துள்ளது.

2017-ம் ஆண்டு முதல் உலகக் கோப்பை டெஸ்ட் போட்டி அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தப் போட்டி நாக் அவுட் முறையில் நடத்தப்படுகிறது. அதனால் 2013-ம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணையில் இருந்து சாம்பியன்ஸ் டிராபி போட்டி நீக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைமைச் செயல் அதிகாரி ஹாரூண் லோர்கட் கூறுகையில், “கிரிக்கெட் அட்டவணையைப் பார்த்தீர்களானால் அதில் சாம்பியன்ஸ் டிராபி போட்டி அட்டவணை இருக்காது. எதிர்காலத்தில் அந்தப் போட்டியை நடத்துவதில்லை என்று கைவிட்டுவிட்டதே அதற்குக் காரணம். டெஸ்ட் போட்டியில் உலகச் சாம்பியன் பட்டத்துக்கான போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.

2013-ம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி போட்டி இங்கிலாந்தில் நடைபெறுகிறது. அதுதான் கடைசி சாம்பியன்ஸ் டிராபி. இந்தப் போட்டி 1998-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1998, 2000, 2002, 2004, 2006, 2009 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றுள்ளது.

Sunday, April 29, 2012

சூர்யா! கார்த்தி!! குழம்பிய இயக்குனர்?

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருந்ததால் கண்டிப்பாக வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் கார்த்தி அல்லது சூர்யா ஆகிய இருவரில் ஒருவர் தான் நடிப்பார் என பேசப்பட்டது.

ஆனால் கதைக்கு பொருத்தமாக இயக்குனர் யாரை தேர்ந்தெடுப்பார் என்ற கேள்வியை கேள்விக்குறி தாங்கிக் கொண்டிருந்தது. தனது மகளின் கோடை விடுமுறையை குளுமையாகக் கொண்டாட வெளிநாடு சென்றிருக்கும் வெங்கட் பிரபு, அடுத்த படத்தின் ஹீரோ கார்த்தி தான் என அறிவித்துவிட்டாராம்.

எனது கதையம்சத்தை வைத்து பார்த்தால் அந்த கதாபாத்திரத்திற்கு கார்த்தி தான் பொருந்துவார். எதிர்காலத்தில் சூர்யாவுடன் ஒரு படம் பண்ணுவேன் என கூறியிருக்கிறார்.

இந்த படத்திற்கு ’பிரியாணி’ என பெயர் வைத்திருக்கிறார்களாம்.

Saturday, April 28, 2012

விசேஷ ஜீரண நீர் சுரக்கும் வெள்ளரி!!

வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும், உடலைக் குளிரவைக்கும். வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை.

ஆனால் தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் போன்றவை உண்டு. இவற்றைவிட நம் இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் வெள்ளரியில் மிகுதி. ஈரல், கல்லீரல் இவற்றில் சூட்டைத் தணிக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு இருப்பதால் அப்பாகங்களில் ஏற்படும் நோய் தணியும். செரிமானம் தீவிரமாகும்,

பசி அதிகரிக்கும். வெள்ளரிக்காயை உண்ணுகையில் பசிரசம் என்னும் விசேஷ ஜீரண நீர் சுரக்கிறது என்பதும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு. புகைப் பிடிப்போரின் குடலை நிகோடின் நஞ்சு சீரழிக்கிறது. நஞ்சை நீக்கும் அற்புத ஆற்றல் வெள்ளரிக்காய்க்கு உண்டு.

மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது வெள்ளரி. மூளை வேலை அதிகம் செய்து கபாலம் சூடு அடைந்தவர்களுக்கு குளிர்சியும், மூளைக்குப் புத்துணர்ச்சியும் வெள்ளரிக்காய் வழங்கும். நுரையீரல் கோளாறுகள், கபம், இருமல் உள்ளவர்கள் வெள்ளரிக்காயைச் சாப்பிடுவது நல்லதல்ல.

Friday, April 27, 2012

அமெரிக்காவால் அவமானப்பட்ட முதல் மாநில முதல்வர்!!

வாஷிங்டன்: எந்த ஒரு மாநில முதல்வரும் இந்த அளவுக்கு இதுவரை அவமானபட்டதில்லை அதுவும் இது நான்காவது முறை.

நரேந்திரமோடிக்கு விசா மறுத்ததில் மாற்றமில்லை என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. அமெரிக்க விசா வழங்குதுறையின் செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நூலண்ட் புதனன்று வழமையான செய்தியாளர் சந்திப்பில் இச்செய்தியை உறுதிபடுத்தினார். "எங்கள் நிலையில் எவ்வித மாற்றமும் இல்லை"என்றார் அவர்.

கடந்த இருவாரங்களுக்கு முன்பு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ வால்ஷ் என்பவர் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரிக்கு எழுதிய கடிதத்தில் இது பற்றி வினவியிருந்தார். அவ்வினவுக்கு விடையிறுக்கும் விதமாகவே நூலண்ட் இவ்வாறு கூறினார். "இவ்விதயத்தில் பொதுவான விதிமுறைகளின்படியே செயல்படுகிறோம்" ஒரு இனப்படுகொளை நடக்க காரணமானவராக இருக்கிறார் மோடி என்றார் அவர்.

இந்த அறிவிப்பிற்கு முன்னதாக, இந்திய அமெரிக்க முஸ்லிம் சங்கம் என்னும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் அமைப்பு, மோடிக்கு விசா வழங்குவதில்லை என்று 2005ல் அமெரிக்கா எடுத்த முடிவை மாற்றக் கூடாது என்று கோரியிருந்தது.

தனது ஆட்சியில் ஒரு சமூகத்தையே கொன்று குவித்தான் (தமிழின இனப்படுகொலை) ராஜபக்சே, இதேபோல்தான் இந்த வந்தேறி மனித குலமே வெட்கப்படும்படி இந்துத்துவ தீவிரவாதிகள் நரேந்திரமோடியின் உதவியுடன் படுகொலைகளையும் கற்பழிப்புகளையும் செய்தார்கள்., இந்த கொடிய செயல்களை முன்னின்று நடத்தி பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்றொழித்த நரேந்திர மோடியை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி அவனை தூக்கிலிட வேண்டும். மனிதாபிமானம் இன்னும் மீதமிருக்கிறது என்பதை நிரூபிக்க இது ஒன்றுதான் தற்போதைய தீர்வாகும்.

ஆனால் இந்தியாவில் இன்னும் இவன் ஒரு மாநில முதல்வர். இந்தியாவை ஆளும் காங்கிரசோ, இந்தியாவோ நடு நிலைமையானவைகள் அல்ல என்று இதிலிருந்து நாம் விளங்கிக்கொள்ளலாம்.

Thursday, April 26, 2012

சச்சினுக்கு மத்திய அரசு கொடுத்த பிறந்த நாள் பரிசு!!

இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். நேற்றுடன் 39 வயதை கடந்துள்ள சச்சினுக்கு இந்த பிறந்த நாள் நிச்சயம் மறக்க முடியாததாகவே இருக்கும்.

சர்வதேச போட்டிகளில் நூறு சதங்களை கடந்துள்ள சச்சினுக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்பிய காங்., தலைவர் சோனியாவை இன்று காலை அவரது வீட்டில் தனது மனைவி அஞ்சலியுடன் சந்தித்தார் சச்சின். அது முதலே பற்றிக்கொண்டது பரபரப்பு. சச்சின் ராஜ்யசபா எம்.பி.,யாக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதையடுத்தே இந்த சந்திப்பு நிகழ்வதாக மீடியாக்கள் கொளுத்திப்போட்டன.

தொடர்ந்து அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு சச்சின் அரசியல் பிரவேத்தை வரவேற்கத்துவங்கின. முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சச்சின் ராஜ்ய சபா எம்.பி.,யாவதற்கு வரவேற்பு தெரிவித்தன. தொடர்ந்து சச்சின், பாலிவுட் நடிகை ரேகா மற்றும் தொழிலதிபர் அனு அகா ஆகியோரை ராஜ்யசபா எம்.பி.,யாக பரிந்துரை செய்து மத்திய அரசு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 80ன் கீழ் பரிந்துரை செய்யப்பட்ட இம்மூவரையும் ராஜ்யசபா எம்.பி.,யாக்க ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் இன்றிரவு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து சச்சின் உள்ளிட்ட மூவரும் விரைவில் ராஜ்யசபா எம்.பி.,யாக பதவியேற்பர் என தெரிகிறது.

Wednesday, April 25, 2012

தயாரிக்கும் படத்தில் ரீமாவுக்கு வாய்ப்பளித்த விஜய்!

1980களில் நடிகர் விஜயகாந்த் நடிப்பில், ஏஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர்-டூப்பர் ஹிட்டான படம் சட்டம் ஒரு இருட்டறை. விஜயகாந்திற்கு ஹீரோ அந்தஸ்த்தை ஏற்படுத்தி தந்த படம் இது. இப்படம் இந்தியிலும் ரீ‌-மேக் செய்யப்பட்டு அங்கும் சூப்பர் ஹிட்டானது.

இந்நிலையில் இப்படத்தை மீண்டும் தமிழில் ரீ-மேக் செய்யவுள்ளனர். படத்தின் நாயகனாக பிரபுவின் மகன் விக்ரமும், நாயகியாக கோ கார்த்திகாவும் நடிக்கவுள்ளனர். ‌இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் பியாவும் நடிக்கவுள்ளார். இப்படத்தை நடிகர் விஜய்யே தயாரிக்க இருக்கிறார். விஜய் தயாரிக்கும் முதல்படம் இது.

இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக அதாவது விக்ரம் பிரபுவுக்கு அக்காவாக நடிகை ரீமா சென் நடிக்கவுள்ளார். திருமணத்திற்கு பிறகு அவர் நடிக்கும் முதல்படம் இது. இப்படத்தில் நடிப்பது குறித்து ரீமா கூறியுள்ளதாவது, சட்டம் ஒரு இருட்டறையின் இந்தி பதிப்பான அந்தா கானூன் படத்தை பார்த்தேன். அதில் போலீஸ் அதிகாரியாக ஹேமமாலினி நடித்து இருந்தார். இதுபோன்ற சவாலான வேடங்களில் தான் பெரிதும் நடிக்க விரும்புதாகவும், விஜய்க்காகவும் ஒப்புக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.

Tuesday, April 24, 2012

நாணயத்திற்கு விடை கொடுக்கும் வகையில் கனடாவில் புது முயற்சி!!

ஒட்டவா: மாறிவரும் நவீன உலகில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகும் வேளையில் நாணயங்களுக்கு விடைகொடுக்கும் வகையில் புதிய டிஜிட்டல் கரண்சியை (mintchip) உருவாக்கியுள்ளது கனடாவின் ராயல் கனேடியன் மிண்ட் நிறுவனம்.

கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்ட மிண்ட்சிப் (mint chip) குறித்த வீடியோவில் எப்படியெல்லாம் இந்த மிண்ட் சிப்பை உபயோகிக்கலாம் என்று விளக்கப்பட்டது. ‘மிண்ட் சிப்’ வடிவமைப்பு இன்னும் மெருகூட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்றும் கூறப்பட்டது. பணத்தை விட மிகவும் எளிதாக உபயோகிக்கும் விதமாகவும்; குழந்தைகள் கூட கஷ்டம் இல்லாமல் எளிதாக உபயோகிக்கும் வகையிலும் இது உருவாக்கப்பட்டுள்ளது.

மிண்ட் சிப்பில் பணத்திற்கு சமமான பதிப்பினை மைக்ரோ எஸ்.டி. அல்லது யு.எஸ்.பி. (Micri SD or USB) போன்ற சிப்பில் ஏற்றி ஒரு சிப்பில் இருந்து மற்றொரு சிப்பிற்கும் பணத்தை இடமாற்றம் செய்து (ஏற்றிக்)கொள்ளலாம். இந்த சிப் எந்த ஒரு வங்கியோடும் தொடர்பில் இருக்காது. அதே போல் அதற்கான மையப்படுத்தப்பட்ட தரவுத்தளம் (Centralized Database)எதுவும் இருக்காது.

ராயல் கனேடியன் மிண்ட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி (Chief Financial Officer) மார்க் புரூல், சாஃப்ட்வேர் நிபுணர்களை இதற்கான ஸ்மார்ட் போன் அப்ளிகேஷன்களை உருவாக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதில் முதல் பரிசு பெறுவோருக்கு 10 அவுன்ஸ் தங்க வேஃபர்கள் (டாலர் 17,000ற்கு சமமானது) வழங்கப்படும் என்றார்.

இதற்கு முன் வந்த ‘பிட்காயின்’ போன்று இதுவும் காணாமல் போகும் என்ற கருத்தினை புரூல் மறுத்துள்ளார்.

Monday, April 23, 2012

விட்ட இடத்தை பிடிக்க வருவதாக கூறும் A R R

கடந்த ஆண்டு ஒரு தமிழ் படத்திற்குக் கூட இசையமைக்காமல் இருந்துவிட்ட ஏ.ஆர். ரஹ்மான், இந்த ஆண்டு தற்போது ஒரு சில தமிழ் படங்களில் இசையமைத்துக் கொண்டிருக்கிறார்.

நான் தமிழில் கடந்த ஆண்டு பணியாற்றாமல் இருந்ததற்கு எந்த காரணமும் இல்லை. சூழ்நிலை அப்படி அமைந்துவிட்டது. அதனை ஈடு செய்யும் வகையில் இந்த ஆண்டு பணியாற்றி விடுவேன் என்கிறார் ரஹ்மான்.

தற்போது ரஜினிகாந்த்தின் கோச்சடையான், கடல் படங்களுக்கு இசையமைத்து வரும் ரஹ்மான், மேலும், மரியான், யோஹன் அத்தியாயம் ஒன்று உள்ளிட்ட சில படங்களில் இசையமைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

கௌதம் வாசுதேவன் இயக்கும் சில தொலைக்காட்சி சீரியல்களுக்கும் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ளார்., இனி சின்னத்திரையிலும் கலக்குவார்ன்னு சொல்லுங்க.

Sunday, April 22, 2012

நடிகையையும் இயக்குனரையும் புகழும் விஜய்!.

தன்னுடன் நடிக்கும் நடிகையையும், தன்னை இயக்கும் இயக்குனரையும் புகழ்கிறார் விஜய்.

முருகதாஸின் பணிகளைப் பார்க்கும் போது எனக்கு இயக்குநர் மணிரத்னம் நினைவுதான் வரும். அவரை எப்போதும் செல்லமாக குட்டி மணிரத்னம் என்று தான் அழைப்பேன் என்கிறார் விஜய்.

நான் நடித்துள்ள ஒரு சில பொழுதுபோக்குப் படங்களில் துப்பாக்கி சிறந்த படமாக இருக்கும். அனைத்து பெருமையும் முருகதாஸையேச் சேரும். ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து எடுத்துள்ளார் என்று முருகதாஸை புகழ்ந்து தள்ளுகிறார் விஜய்.

இப்படத்தில் உங்களுடன் ஜோடியாக நடிக்கும் காஜல் அகர்வால் பற்றி கேட்டதற்கு, தமிழே தெரியாததால் வசனங்களைப் புரிந்து கொள்ள மிகவும் கஷ்டப்படும் காஜல் அகர்வால், ஆனால் வசனம் பேசி நடிக்கும் போது மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார். மிகவும் ஹார்ட் ஒர்க் நடிகை என்றார் விஜய்.

Saturday, April 21, 2012

இந்திய இளைஞர்களை தாக்கும் புற்று என்கிற பயங்கரம்?

புதுடெல்லி: இந்தியாவில் புற்றுநோயால் பலியானவர்களில் 70 சதவீதம்பேர் இளைஞர்கள் என்று தி லான்ஸெட் இதழில் வெளியான ஆய்வறிக்கை கூறுகிறது.

இந்தியாவில் கடந்த 2010 ஆம் ஆண்டில் புற்றுநோய்க்கு பலியானவர்களில் 30-69 வயதுக்குள்ளானவர்கள் 70 சதவீதம்பேர் என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. அதிலும் புகைப்பதால் ஏற்படும் புற்றுநோய் பாதித்து உயிரிழந்தவர்களே அதிகம் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

தி லான்ஸெட் இதழில் வெளியான ஆய்வறிக்கையின் படி, இந்தியாவில் 2010ம் ஆண்டு புற்றுநோய் பாதித்து 5,56,400 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3,95,000 பேர் 30 முதல் 69 வயதுக்குட்பட்டவர்கள்தான். இவர்களில் 2,00,000 பேர் ஆண்கள், 1,95,000 பேர் பெண்கள் ஆவர்.

ஆண்களில் புற்றுநோய் தாக்கி உயிரிழந்தவர்களில் 23 சதவீதத்தினர் வாய்ப் புற்றுநோய் ஏற்பட்டும், 12 சதவீதத்தினர் வயிற்றுப் புற்றுநோயாலும், 11 விழுக்காட்டினர் நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டும் உயிரிழந்துள்ளனர்.

பெண்களில், கழுத்துத் தொடர்பான புற்றுநோய் தாக்கி 17 சதவீதத்தினரும், மார்பகப் புற்றுநோய் தாக்கி 10 சதவீதத்தினரும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 42 சதவீத ஆண்களும், 18 சதவீத பெண்களும் புகைப்பிடிப்பது மற்றும் புகையிலைப் பயன்படுத்தியதால் வரும் புற்றுநோய் தாக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் இவர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தர வயதுடையவர்கள்.

இதன் மூலம், இந்தியா புகையிலைக்கு எதிராக அதிகமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய நிலையிலும், புகையிலைப் பொருட்கள் மீது அதிகமான வரிகளை விதிக்க வேண்டிய நிலையிலும் இருப்பது தெரிய வந்துள்ளது. புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதே இதற்கு சரியான தீர்வாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Friday, April 20, 2012

சேது சமுத்திர திட்டத்துக்கு எதி(ரி)ரானவர்கள் இவர்கள்!?


புதுடெல்லி: சேது சமுத்திரம் தேசிய சின்னமாக அறிவிப்பது குறித்து நீதிமன்றமே முடிவுச் செய்யலாம் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தது.

கூடுதல் சோலிசிட்டர் ஜெனரல் ஹரேன் ராவல், நீதிபதிகள் ஹெச்.எல்.தத்து மற்றும் அனில் ஆர் தாவே ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு அரசு நிலைப்பாட்டை தெரிவித்தனர்.

“சேது சமுத்திரத்தை தேசிய சின்னம் ஆக அறிவிப்பதில் மத்திய அரசின் நிலை என்ன?” என்று ஹரேன் ராவலிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், “சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக நீதிமன்றத்தில் 2008-ம் ஆண்டில் மத்திய அரசு ஒரு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளது. அதில், ‘மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை சரியா, தவறா என்பது போன்ற விவாதத்தில் மத்திய அரசு கருத்து கூறுவது சரியாக இருக்காது’ என்று குறிப்பிட்டுள்ளது. இப்போதும் அதே நிலையில்தான் மத்திய அரசு உள்ளது. அதனால், சேது சமுத்திரம் குறித்து புதிதாக கருத்து தெரிவிக்க ஒன்றும் இல்லை. மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக நீதிமன்றம் எந்த முடிவை வேண்டுமானாலும் எடுக்கலாம்” என்று பதில் அளித்தார்.

அவரது பதிலையே ‘மத்திய அரசின் கருத்து’ என நீதிபதிகள் பதிவு செய்து கொண்டனர். இதையடுத்து இந்த வழக்கு மீதான விசாரணையை ஆகஸ்ட் மூன்றாவது வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

சேது சமுத்திரம் கப்பல் போக்குவரத்து திட்டத்திற்கு முதல் தடையிட்டது ஜெயாலலிதா, சுப்ரமணியம் சுவாமி, ஹிந்துத்துவா தீவிரவாதிகள் மற்றும் பார்ப்பனர்கள், பார்ப்பன நாளேடுகள் மட்டுமே இத்திட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்கின்றனர் என்பது குறுப்பிடத்தக்கது., நினைவு சின்னமாக்க துடிக்கும் இவர்கள் இத்திட்டத்தை தொடங்க ஏன் தடைபோடுகிறார்கள்!?

Thursday, April 19, 2012

கருவறையில் காரியம் (செக்ஸ்) நடத்திய சாமியார் மீண்டும்!

காஞ்சீபுரம் அடுத்த பழைய சீவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவநாதன் (35). இவர் காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகராக இருந்தார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் கருவறையில் பல பெண்களிடம் செக்ஸ் லீலையில் ஈடுபட்டார். இதை தன் செல்போன் மூலம் படம் பிடித்து ரகசியமாக பார்த்து ரசித்து வந்தார்.

இந்த ஆபாச படம் பலரது செல்போனுக்கு பரவியது. இதயடுத்து சிவகாஞ்சி போலீசார் செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். தலைமறைவான தேவநாதன் காஞ்சீபுரம் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

இதனை செல்போனில் படம் பிடித்து அதை காட்டி மிரட்டி அடிக்கடி கோவில் கருவறையில் செக்ஸ் லீலையில் ஈடுபட்டார் என காஞ்சீபுரம் கோர்ட்டில் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.

அர்ச்சகர் தேவநாதன் கடந்த 2010-ம் ஆண்டு ஜாமீன் பெற்று வெளியில் வந்தார். அவரை எந்த கோவிலிலும் அர்ச்சனை செய்யக்கூடாது என கூறப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கு விசாரணை காஞ்சீபுரம் கோர்ட்டில் இருந்து செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.

இந்த கோர்ட்டில் கடந்த 10 மாதங்களாக நீதிபதி இல்லாததால் செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன் வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் தேங்கி கிடந்தன.

இந்த நிலையில் செங்கல்பட்டு தலைமைக் குற்றவியல் நீதிபதியாக பணிபுரிந்த ஆனந்தி, பதவி உயர்வு பெற்று செங்கல்பட்டு மாவட்ட மகளிர் கோர்ட்டின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த 28-ந் தேதி பொறுப்பேற்றார். இதனால் தேங்கி கிடந்த வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியது.

செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன் வழக்கு அடுத்த மாதம் (மே) 16-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.

Wednesday, April 18, 2012

மத்தியில் ஆளும் கட்சி எம் எல் ஏ வை மிரட்டும் பயங்கரவாத எம் பி!!

ராஜ்கோட்: பா.ஜ.கவின் ஜனாகத் தொகுதி எம்.பியான தினுசோலங்கி தன்னை தொந்தரவுச் செய்தும், மிரட்டியும் வருவதாக குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏவான தீர்சிங் பராத் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பது: பா.ஜ.கவின் ஜனாகத் தொகுதி எம்.பியான பயங்கரவாதி தினுசோலங்கியின் உத்தரவு படி கோடிநர் போலீஸ் தனது குடும்பத்தினரை தொந்தரவு செய்துவருகிறது.

ஜனாகத் மாவட்டத்தில் சோலங்கியின் சட்டவிரோத சுரங்கத்தொழில் உள்ளிட்ட சட்டத்திற்கு புறம்பான செயல்களை நான் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தேன். இதன் பெயரால் சோலங்கி தனது அதிகாரத்தை பிரயோகித்து தொந்தரவு செய்து வருகிறார். அவரது மிரட்டலை கவனத்தில் கொண்டு எனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கவேண்டும். இவ்வாறு தீர்சிங் ஆளுநர் கமலாவுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!