Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, March 12, 2012

தெலுங்கில் தம்மு கட்டிய த்ரிஷா!!

நடிகை திரிஷா நடிப்பில் உருவாகியிருக்கும் தெலுங்குப்படமான தம்மு படத்தில் அவர் துணிச்சலாக கவர்ச்சி காட்டியுள்ளார். இதுவரை நடித்த கவர்ச்சி எல்லையை இப்படத்தில் தாண்டி உள்ளதாக தெலுங்கு பட உலகம் கிசு கிசுக்கிறது.

ஆபாச படத்தில் நடிப்பது போன்று ஆடைகளை களைந்து ஒரு காட்சியில் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதேநேரம் புதுமுக நடிகைகளின் போட்டியை சமாளிக்கத்தான் த்ரிஷா இதுபோன்ற காட்சிகளில் நடிக்க சம்மதித்து இருப்பதாகவும் திரையுலகில் பேசப்படுகிறது.

இதனால் கோபமடைந்த த்ரிஷா பேட்டியொன்றில், என்னை இளமையாக காட்ட கவர்ச்சி காட்சிகளில் துணிந்து நடிப்பதாக வெளியான செய்திகள் தவறானவை. தம்மு படத்தில் கதைக்கு தேவைப்பட்டதால் அப்படி நடித்தேன். படத்திற்கும், கதைக்கும் தேவைப்பட்டால் எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன், என்று கூறியிருக்கிறார்.

Sunday, March 11, 2012

இந்தியாவின் சூப்பர் பவர் கனவு நிறை வேறுமா...??

லண்டன்: உலகில் வல்லரசாக மாறவேண்டும் என்று கனவு காணும் இந்தியாவின் விருப்பம் அவ்வளவு எளிதாக நிறைவேறாது என்றும், அதற்காக நீண்டகாலம் காத்திருக்க வேண்டும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கணாமிக்ஸ் அண்ட் பொலிட்டிக்கல் சயன்ஸ் ஆய்வு இந்தியாவின் கனவுகளுக்கு கரி நிழலை சாத்துகிறது.

ஜனநாயகம், பொருளாதார வளர்ச்சி ஆகிய விஷயங்களில் இந்தியா வெகுவாக முன்னேறிய பொழுதும் உள்நாட்டு பிரச்சனைகள்தாம் இந்தியாவின் சூப்பர் பவர் நம்பிக்கைக்கு தடைகற்களாக மாறியுள்ளதாக ஆய்வு கூறுகிறது.

தீவிரமான ஊழல், திறமையற்ற ஆட்சியாளர்கள், பணக்காரர்-ஏழை இடைவெளி, சமூக மோதல்கள், உள்நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், மத தீவிரவாதம் ஆகியன பலகீனத்திற்கு காரணமான காரணிகளாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு, நிர்வாகம், கலாச்சாரம், சுற்றுச்சூழல், சமூகம் ஆகிய துறைகளில் விரிவான ஆய்வை நடத்தி ஒன்பது வல்லுநர்கள் இணைந்து இந்தியா அடுத்த வல்லரசா? என்ற தலைப்பிலான ஆய்வறிக்கையை தயாரித்துள்ளனர்.

உள்நாட்டு பலகீனங்களில் உழலும் இந்தியாவுக்கு உலக வல்லரசு என்ற தகுதியை பெறுவதோ, சீனாவின் செல்வாக்கிற்கு இணையாக மாறுவதோ எளிதானதல்ல என அந்த ஆய்வு கூறுகிறது. நாட்டை பின்னோக்கி இழுத்துச் செல்லும் அடிப்படை பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் சூப்பர் பவரை குறித்து கனவு காண்பது என்பது இந்தியாவுக்கு உகந்தது அல்ல என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

லண்டன் ஸ்கூல் வரலாற்றுப் பிரிவில் பேராசிரியர் ராமச்சந்திர குஹா, ராஜீவ் சிபல், இஷ்கந்தர் ரஹ்மான், நிகோலஸ் ப்ளேரல், ஓலிவர் ஸ்ட்ரூங்கல், ஹாரிஸ் வாங்கடே, முகுலிகா பானர்ஜி, ஆண்ட்ரூ சாஞ்சஸ் மற்றும் சந்தீப் சென்குப்தா ஆகியோர் ஆய்வறிக்கையை தயாரித்துள்ளனர்.

மாவோயிஸ்டுகளின் ஆயுத போராட்டம், தீவிர ஹிந்துத்துவா வாதிகளின் வகுப்புவாத மனோபாவம், தரமில்லாத அரசியல் தலைமை, பொறுப்புணர்வு இல்லாத ஊடகங்கள், வளங்கள் அளவுக்கு அதிகமாக சுரண்டப்படல், அரசியல் கூட்டணிகளின் காரணமாக உருவாகும் பொருத்தமில்லாத கொள்கைகள் ஆகியன இந்தியாவின் முக்கிய சவால்களாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

பன்முகத் தன்மையில் ஒருமை என்ற இந்தியாவின் சிறப்பை பாதுகாக்கும் நிறுவனங்கள் ஒவ்வொன்றின் பழுதுகளை சரி செய்வதும், புதிய நிறுவனங்களை உருவாக்குவதும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான ஒரே வழியாகும். இது கடினமான தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய அதிக காலம் தேவைப்படும் பணியாகும் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சர்வதேச அளவில் இந்தியாவின் பொருளாதார பலம் பிரதிபலிக்க இன்னும் கால அவகாசம் தேவைப்படுகிறது என்று பொருளாதார வல்லுநர் டி.ராஜீவ் சிபல் கூறுகிறார்.

சர்வதேச அளவில் தீரமிக்க முடிவுகளை எடுக்காமல் தயங்கி நிற்கும் இந்தியாவின் முன்னால் வளர்ச்சி சிரமமானது என்று இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையை குறித்து ஆய்வுச் செய்த ஓலிவர் ஸ்ட்ரூங்கல் கூறுகிறார்.

Saturday, March 10, 2012

கருப்பு பட்டியலில் இஸ்ரேலிய ராணுவ தொழிற்சாலை?

டெல்லி: இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையிலான ராணுவ வர்த்தகம் சூடு பிடித்துள்ள நிலையில் இஸ்ரேலின் முக்கிய ராணுவ தளவாட உற்பத்தியாளரான இஸ்ரேல் ராணுவ தொழிற்சாலை (Isreal military industries ) இந்தியாவால் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

அந்த நிறுவனம் ஒப்பந்தங்களை பெற லஞ்சம் தொடர்பான வேளைகளில் ஈடுபடுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளதால் இந்தியா இந்த முடிவினை எடுத்துள்ளது.

இஸ்ரேலின் நிறுவனம் உட்பட மேலும் ஐந்து நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் செய்தி குறிப்பு குறிப்பிடுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தங்களுக்கு இந்த 6 நிறுவனங்களில் நடக்கும் தில்லுமுல்லுகள் குறித்து தெளிவான ஆதாரம் கிடைத்துள்ளதை வைத்து தாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் இஸ்ரேல் ராணுவ தொழிற்சாலை தரைப்படை, கப்பற்படை மற்றும் வான் படைகளுக்கு தேவையான ஆயுதங்களை தயாரித்து அளிக்கும் நிறுவனம் ஆகும். மேலும் இந்நிறுவனம் இஸ்ரேலின் அரசுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இஸ்ரேல் நிறுவனம் உட்பட கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் தாங்கள் ஒப்பந்தம் பெற சட்டத்திற்கு புறம்பான வேலைகளை செய்வதாக தங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளது என்று சி.பி.ஐ யும் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்கு டாட்டா அஜ்மலுக்கு பேட்டா!!

டைரக்டர் ருத்ரன், வெற்றி செல்வன் என்ற பெயரில் ஒரு புதிய படத்தை உருவாக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் அஜ்மலும், அவருக்கு ஜோடியாக ராதிகா ஆப்டேவும் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் கதையை முதலில் விஜய்க்காக தான் உருவாக்கினாராம் டைரக்டர் ருத்ரன். கதையையும் விஜய்யிடம் கூற அவரும் நடிப்பதாக சொல்லியிருந்தார். இந்நிலையில் சில பல காரணங்களால் விஜய் நடிக்க முடியாமல் போக, அவருக்கு பதிலாக அஜ்மலை நடிக்க வைத்திருக்கிறார்.

இப்படத்தின் சூட்டிங் வளர்ந்து வருகிறது. மதன் கார்கி பாடல் வரிகள் எழுத, மணிசர்மா இசையமைத்து வருகிறார். முன்னதாக இப்படத்திற்கு 3வது முறையாக தலைப்பை மாற்றியிருக்கிறார் இயக்குநர்., ஏற்கனவே ரணம் என்று வைத்து, பின்னர் சத்யவான் என்று மாற்றி, இப்போது வெற்றி செல்வன் என்று வைத்திருக்கிறார்.

Friday, March 9, 2012

நாப்கின் வழங்கி சாதனை படைக்கப்போகும் ஜெயா! தேர்தல் ஸ்பெஷல்?

தமிழகம் முழுவதும் கிராமப்புற வளர் இளம் பெண்களின் சுகாதாரத்தை காக்க இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம் ரூ.42 கோடியில் இந்த ஆண்டு செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

அதன்படி, மாநிலம் முழுவதும் கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் 10 முதல் 19 வயதுள்ள வளர் இளம் பெண்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதற்கிடையில், பிரசவிக்கும் தாய்மார்கள் 7 லட்சம் மற்றும் 700 பெண் சிறை கைதிகளுக்கும் சேர்த்து கிராமப்புற பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டமாக விரிவுபடுத்தப்பட்டது.

அதன்படி, சுமார் 40 லட்சம் பேருக்கு சானிட்டரி நாப்கின் வழங்க பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. திட்டத்தின்படி, 2 மாதத்துக்கு ஒரு முறை 3 பாக்கெட் அடங்கிய 18 நாப்கின்கள் வழங்கப்படும்.

மேலும், நலவாழ்வு புத்தகம் ஒன்று தனியாக அளிக்கப் படும். அதில், வளர் இளம்பெண்கள் கடைபிடிக்க வேண்டிய சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு தகவல்கள் இடம்பெற்றிருக்கும். நாப்கின்கள் வழங்கும் தேதியும் குறிக்கப்படும்.

‘புது யுகம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தில் மாணவிகளுக்கு அந்தந்த பள்ளியில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படும். அதேபோல் கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், அரசு மருத்துவமனை மற்றும் சிறை அதிகாரிகள் மூலம் மற்றவர் களுக்கு நாப்கின் வழங்கப்படும். ‘புது யுகம்’ திட்டத்தை மார்ச் 26க்குள் முதல்வர் தொடங்கி வைப்பார் என்று சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அன்றாட தேவைகளை விட்டுவிட்டு (மின்சாரம்,பால், பஸ் கட்டணம்) ஆடு கொடுக்கிறேன் ஆட்டுக்கல் கொடுக்கிறேன் என்று தேர்தல் பயத்தில் உளறிக்கொண்டு அலைகிறார் முதல்வருக்கு தகுதி அற்ற முதல்வர்.

ஹீரோக்களை வளைக்க கற்று வைத்திருக்கும் அங்காடித்தெரு நாயகி!!

"அங்காடித்தெரு’ அஞ்சலி என்பதே பெயராக மாறும் அளவிற்கு அந்த படத்தின் மூலம் புகழ்பெற்றார் நடிகை அஞ்சலி. கற்றது தமிழ், அங்காடித்தெரு படங்களுக்காக பிலிம் ஃபேர் அவார்ட் வாங்கினார் அதன் பின் மங்காத்தா எங்கேயும் எப்போது என எல்லாமே வெற்றிப் படங்கள் தான்.

முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்கும் அளவிற்கு மார்கெட் வளர்ந்த பிறகு “யாரையாவது காதலிக்கிறீர்களா?“ என்பது அனைத்து நடிகைகளிடமும் கேட்கப்படும் கேள்வி தான் என்றாலும் அஞ்சலியிடம் கேட்காமல் விடவில்லை.

இந்த கேள்விக்கு அஞ்சலி “ ஆம் நான் கூட காதலிப்பேன். எல்லா நடிகர்களையும் காதலிப்பேன். அனைத்து நடிகர்களுடனும் நடித்து படத்தில் அவர்களை காதலித்துவிடுவேன். அதன் பிறகு தான் என் வாழ்வின் உண்மையான ஹீரோவை கண்டுபிடிக்க வேண்டும்“ என்று சிரித்த முகமாக பதிலளித்தார்.

அஞ்சலி அடுத்ததாக சுந்தர்.சி இயக்கத்தில் மசாலா கஃபே என்ற படத்தில் விமல், சிவா என இரண்டு கதாநாயகன்களுடன் நடிப்பதை பற்றி பேசும்போது அதை விடுங்க சார் என்று ஆர்வத்துடன் அஞ்சலி பேசுவது அவர் நடிக்கும் தெலுங்கு படத்தை பற்றித் தான்.

“மகேஷ் பாபு, வெங்கடேஷ் ஆகிய இரு டிரெண்ட்செட் தெலுங்கு நடிகர்களும் இணையும் படம் “சீதம்மா வகிட்லோ ஸ்ரீமல்லி செட்டு“. இந்த படத்தில் சீதம்மா என்ற கேரக்டரில் தான் நான் நடிக்கிறேன்“ என்று பெருமிதம் அடைகிறார். இந்த படம் தனக்கு நல்ல பிரேக்காக அமையும் என்பது அஞ்சலியின் எதிர்பார்ப்பு., ஹீரோக்களை எப்படி வளைக்கலாம் என்று அங்காடித்தெரு நாயகி கற்று வைத்துள்ளார். ஆல்த பெஸ்ட் அஞ்சலி.

Thursday, March 8, 2012

மகளிர் தின ஸ்பெஷல்!!

பெரம்பலூர்: இன்பத்தை கருவாக்கினாள் பெண், உலகத்தில் மனிதனை உருவாக்கினாள் பெண், விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் விலையற்ற செல்வம் பெண் என்ற பாடல் வரிகள் பெண்ணின் பெருமையை விவரிக்கின்றன.

மனைவி, தாய், குடும்பத் தலைவி என பல பரிணாமங்களாக பெண்கள் திகழ்கின்றனர்.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காட்டில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பில் மாபெரும் பெண்கள் விழுப்புணர்வு கருத்தரங்கம் MGM கோல்டன் மஹாலில் மார்ச் 3 தேதி மாலை 3:15 மணியளவில் கருத்தரங்கு நடைபெற்றது.

நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாவட்டத் தலைவர் ஆ.மெகராஜ் பேகம் ஆலிமா தலையுரையாற்றினார். NWF இன் மாநில தலைவர் A. பாத்திமா ஆலிமா மற்றும் மாநில செயலாளர் ரஜியா பானு ஆலிமா ஆகியோர் பெண்கள் விழிப்புணர்வு குறித்து சிறப்புரை ஆற்றினர்.

இக்கருத்தரங்கு நிகழ்ச்சியில் 600 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

புத்துணர்வுக்கு ஆரஞ்சு மிஸ் பண்ணிடாதிங்க!!

எல்லா சீசனிலும் மக்களை தேடி வரும் பழங்களுள் ஒன்று... ஆரஞ்சு. பல நோய்களை முன்கூட்டியே வராமல் தடுக்கும் மகத்துவமும் இதில் உண்டு. சில உணவுகளை சாப்பிட்டதும் அவை உடலில் சில மாற்றங்களை ஏற்படுத்தி பித்த நீரை அதிகம் சுரக்கச் செய்கின்றன. இதனால் உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகள் முடக்கப்படுகின்றன.

இந்த பித்த நீர், ரத்தத்தில் கலந்து ரத்தத்தில் உள்ள இரும்புச் சத்துக்களை அழித்து விடுகிறது. இதனால் ரத்தம் அசுத்த மடைகிறது. மேலும், பித்த நீர், தலைக்கேறி கண் பார்வை நரம்புகளை பாதிப்படையச் செய்கிறது. அதோடு ஞாபக மறதியும் ஏற்படுகிறது. சருமத்தை பாதித்து சுருங்கச் செய்கிறது. தலைமுடி நரைக்கச் செய்கிறது.

இதுபோல் இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுகளை 300 கலோரி அளவு சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் கழித்து ரத்தத்தை பரிசோதித்துப் பார்த்தால் பித்த நீர் அதிகம் சுரந்து ரத்தத்தில் கலந்திருப்பதை அண்மையில் கண்டறிந்துள்ளனர். இந்த பித்த நீர் அதிகம் சுரப்பதை தடுக்கவும், உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் பழங்களில் முக்கியமான ஒன்றாகத் திகழ்கிறது ஆரஞ்சு.

ஆரஞ்சு பழச்சாறு சாப்பிட்டவர்களின் ரத்தத்தில் பித்த நீரில் அளவு குறைவாக இருப்பது ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆரஞ்சு பழச்சாறில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கிறது. உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கிறது.

ஸோ... ஆரஞ்சை எங்கேப் பார்த்தாலும் `மிஸ்' பண்ணிடாதீங்க...

Wednesday, March 7, 2012

விஜய்க்கு தம்பி என்ற செய்தியால் கோபத்தின் உச்சியில் இயக்குனர்!

துப்பாக்கிப் படத்தில் இளையதளபதிக்கு தம்பியாக ஜெய் நடிக்கிறார் என்று வெளியானது செய்தியல்ல.. வெறும் வதந்தி தான் என்று தெளிவுபடுத்தியுள்ளார் அப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்.

துப்பாக்கிப் படத்தில் ஜெய் நடிக்கவேயில்லை. மேலும், விஜய்க்கு தம்பி என்ற ஒரு கதாபாத்திரமே படத்தில் இல்லை. இவ்வாறு இருக்கும் போது இப்படி ஒரு புரளி எவ்வாறு கிளம்பியது என்று கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார் இயக்குனர்.

புரளிகளுக்கு பதில் சொல்வதற்காகவே பிளாக்குகளையும், டிவிட்டர் பக்கங்களையும் சினிமா உலகத்தினர் அதிகமாக பயன்படுத்த வேண்டி உள்ளது என்றும் அவர் வருத்தப்படுகிறார்.

துப்பாக்கிப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தில் விஜய் ஆக்சன் ஹீரோவாக மிளிர்கிறார் என்கிறது படக்குழு.

Tuesday, March 6, 2012

தேர்தல் கோவாவை தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் ஒதுக்கப்பட்ட

டெல்லி: மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவின் படி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் முலாயாம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அக்கட்சியின் வேட்பாளர்கள் 224 தொகுதிகளில் வென்றுள்ளனர்.

இரண்டாவது இடத்தை ஆளும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், 3வது இடத்தை பாஜகவும் பிடித்துள்ளன. காங்கிரஸ் 4வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

வெற்றி பெற்ற கட்சிகளின் விபரம்:

உத்தர பிரதேசம் » சமாஜ்வாடி வெற்றி- 224

உத்தரகண்ட் » காங்கிரஸ் ‌வெற்றி- 32

பஞ்சாப் » அகாலி அணி வெற்றி- 68

மணிப்பூர் » காங்கிரஸ் வெற்றி- 42

கோவா » பா.ஜ., வெற்றி- 26

கோவாவை தவிர மற்ற எல்லா மாநிலங்களும் டெபாசிட் இழந்த ப ஜ க., மதத்ததை வைத்து ஆட்டம்போடும் ப ஜ க (ஹிந்துத்துவா கட்சிகளுக்கு) பெரிய அ(இ)டி .

(தேர்தல் முடிவுகளால் போயஸ் கார்டனில் இப்போதே கிளி பிடிக்க ஆரம்பித்துள்ளது.)

கண் பார்வைக்கும் உடல் சருமத்திற்கும் முட்டைக்கோஸ்

கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்யும். இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வைக்கு சிறந்தது.

மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும். அஜீரணத்தால் உண்டாகும் வயிற்றுவலியை நீக்கும்.

சரும வறட்சியை நீக்கும். சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும்.

வியர்வைப் பெருக்கியாக செயல்படும். சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும்.

எலும்புகளுக்கு வலு கொடுக்கும். இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.

பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும்.

நரம்புகளுக்கு வலு கொடுக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.

தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும்.

உடல் சூட்டைத் தணிக்கும். நாள்பட்ட மலச்சிக்கலைப் போக்கும். குடல் சளியைப் போக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

தலைமுடி உதிர்வதைக் குறைக்கும். மயிர்க்கால்களுக்கு பலம் கொடுக்கும்.

முட்டைகோஸின் பயன்களை அறிந்து அதனை நம் உணவில் சேர்த்து நீண்ட ஆரோக்கியம் பெறுவோமாக..நாம்!

Monday, March 5, 2012

சினிமாவில் ஆட்டம்போட்ட குஷ்பூ இப்போ ஐ நா வில்?

நாட்டின் எதிர்காலமே அடுத்த தலைமுறையினரான இளைஞர்களின் கையில்தான் ஒப்படைக்கப்பட உள்ளது. 2013 இளைஞர்களின் தன்னிகரற்றத் திறமையை வெளிக்கொணர வேண்டும். அதற்கான சிறப்புக்கூட்டம் ஐ.நா. சபையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் கலந்து கொள்ளவும், இளைஞர்களைப் பற்றியும், இளைய தலைமுறையினர் பற்றியும் சிறப்பு‌ரையாற்ற அழைப்பு விடுத்திருந்தனர்.

2013ல் இளைய தலைமுறையினரின் 70 சதவீத ஆற்றலை நாட்டின் வளர்ச்சிக்கு எப்படியெல்லாம் உபயோகிப்பது என்பது பற்றிய கருத்தரங்கில் கலந்து கொண்டு பேச வாய்ப்பளித்தமைக்கு ஐ.நா. சபைக்கு தமிழர்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகில் தினமும் 20 டாலருக்கு குறைவாக வருமானம் உள்ள அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை உயர்த்த, இளைஞர்களை எத்தகைய முயற்சியில் ஈடுபட வைக்க வேண்டும் என்று பேச போகிறேன். அதற்கான கூட்டம் மார்ச் 15ம் முதல் 18ம் தேதி வரை ஐ.நா. சபை சார்பில், கென்யாவில் உள்ள நைரோபியில் நடைபெற இருக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காக கென்யாவுக்கு கிளம்புகிறேன்.

இன்றைய உலகின் ஒவ்வொருவரின் வெற்றியிலும் இளையதலைமுறையினரின் பங்கு அதிகம் இருக்கிறது. அது தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற கருத்தை பிரதிபலிப்பேன் என்று கூறியுள்ளார்.

மகாத்மா காந்தி கனவுகண்ட இந்தியா வேண்டுமா! இல்லை..!?

வாஷிங்டன்: இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் மத சுதந்திரத்தை புனரமைக்க வேண்டும் என்று கோரி அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கோத்ரா ரெயில் பெட்டி எரிப்பு சம்பவத்தின் 10-வது ஆண்டு நினைவு தினத்தில் கெய்த் எலிஸன் என்பவர் இத்தீர்மானத்தை கொண்டுவந்தார்.

டெமோர்க்ரேட்டுகளின் பிரதிநிதியான எலிஸன், 2007 முதல் பிரதிநிதிகள் சபையில் உறுப்பினர் ஆவார். மேல் நடவடிக்கைக்காக தீர்மானம் வெளியுறவு குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. குஜராத் இனப் படுகொலையில் கொலைச் செய்யப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நீதி கிடைப்பதற்கான எவ்வித நடவடிக்கைகளையும் மோடியின் அரசு எடுக்கவில்லை என்று தீர்மானம் குற்றம் சாட்டுகிறது.

குஜராத்தில் மத சுதந்திரம் மறுக்கப்பட்டதை தொடர்ந்து 2005-ஆம் ஆண்டு நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா மறுத்தது. 1998-ஆம் ஆண்டு சர்வதேச மத சுதந்திர சட்டத்தில் இதற்கான அனுமதி உள்ளது என்று தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது. இத்தீர்மானத்தை இந்திய-அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சில் வரவேற்றுள்ளது. இனப் படுகொலையில் கொலைச் செய்யப்பட்டவர்கள் மீதான மிக சிறந்த மதிப்புதான் இந்த தீர்மானம் என்று கவுன்சிலின் அறிக்கை கூறுகிறது.

குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடைபெற்ற வகுப்புக் கலவரங்களின் 10-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக அமெரிக்காவில் சனிக்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது.

அமெரிக்காவைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட இந்திய அமைப்புகள் ஒன்றிணைந்து, மெழுகுவர்த்தி ஏந்தி மோடிக்கு எதிராகவும், கலவரத்தின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டியும் கோஷமெழுப்பினர்.

"இனப்படுகொலைகளுக்கு எதிரான கூட்டமைப்பு' என்ற அணியாக 100-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று திரண்டிருந்தனர். மன்ஹாட்டனில் நடைபெற்ற இந்தப் போராட்டம் காந்தி சிலைக்கு அருகில் நடபெற்றது.

குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும், குற்றவாளிகளை நீதிக்கு முன்னால் நிறுத்த வேண்டும் என்றும் இவர்கள் வலியுறுத்தினர். பெண்களும், சிறுவர்களும் மோடிக்கு எதிராகவும், குஜராத் அரசுக்கு எதிராகவும் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட "இந்திய-அமெரிக்க முஸ்லிம் கவுன்சிலின்' கிழக்குப் பகுதியின் துணைத் தலைவர் முகமது யூசுப் கடானி, "காந்தி கனவு கண்ட இந்தியா வேண்டுமா" அல்லது மோடியின் இந்தியா வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கவே காந்தி சிலைக்கு அருகில் போராட்டம் நடத்துவதாகத் தெரிவித்தார்.

அமெரிக்காவின் மக்கள் பிரதிநிதிகள் சபையில், குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி வழங்கப்படவில்லை என்றும், மாநிலத்தில் மதச் சுதந்திரத்தை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்று சமீபத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்தச் சூழ்நிலையிலேயே மோடிக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றுள்ளது.

Sunday, March 4, 2012

விரைவில் சிங்க வேட்டையில் இறங்கும் சூர்யா!!

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, பிரகாஷ் ராஜ் நடித்து வெளிவந்த படமான சிங்கம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட். 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் 67கோடி வரை வசூல் செய்தது.

முதல் பாகத்தில., “சிங்கத்த போட்டோல பாத்துருப்ப, Zooல பாத்துருப்ப, சினிமால பாத்துருப்ப. வெறித்தனமா காட்டுல வேட்டையாடி பாத்துருக்கியா, ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்றா.. பாக்குறியா... பாக்குறியா...”என்ற வசனம் மிகப் பிரபலமானது.

இயக்குனர் ஹரி சிங்கம் படத்தின் முடிவிலேயே அடுத்த பாகத்திற்கான அஸ்திவாரத்தை போட்டிருந்தார். அடுத்த பாகத்தை எடுக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறது ”சிங்கம் 2” படக்குழு. முதல் பாகத்தில் நடித்த கதாபாத்திரங்கள் இரண்டாம் பாகத்திலும் தொடர்வார்களா என்பது பற்றிய தகவல்களை படக்குழு தெரிவிக்கவில்லை.

ஹீரோயினாக அனுஷ்கா நடிப்பாரா? இல்லையா? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால் 3 டன் வைட்டுடன் சிங்கம்-2 கூடிய விரைவில் கர்ஜிக்கும் என்பது மட்டுமே அறிந்த தகவல்.

Saturday, March 3, 2012

விண்ணில் பறக்கும் வித்தியாச கார் விரைவில் யு எஸ் சில்!!

அமெரிக்காவில் மசாசு செட் மாகாணத்தில் உள்ள டெர்ராபுஜியா என்ற நிறுவனம் பறக்கும் கார் தயாரித்துள்ளது. இந்த காரில் விமானத்தில் உள்ளது போன்று இறக்கைகள் உள்ளன. அவை விண்ணில் பறக்கும் போது 30 வினாடிகளில் பறவை போன்று தனது சிறகை (இறக்கையை) விரிக்கும்.

தரை இறங்கி கார் ஆக மாறியவுடன் அவை மடிந்து விடும். பெட்ரோல் மூலம் விண்ணில் பறக்கும் இந்த கார் மணிக்கு 110 மைல் வேகத்தில் 460 மைல் தூரம் பறக்க கூடிய திறன் படைத்தது.

இந்த காரின் விலை ரூ.1 கோடியே 40 லட்சம். அடுத்த மாதம் (ஏப்ரல்) 6 முதல் 15-ந் தேதி வரை நியூயார்க்கில் சர்வதேச ஆட்டோ கண்காட்சி நடக்கிறது.

அதில் கார் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. இப்போதே இந்த காருக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பலர் ஆர்டர் கொடுத்துள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் 100 பறக்கும் கார்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுவதாக டெர்ராபுஜியா கம்பெனியின் அதிகாரி அன்னா ரேக் டயட்ரிச் தெரிவித்துள்ளார்.

பார்ட்டிகளுக்கே பார்ட்டிவைத்த பெருமை விஜய்க்கு!!

சினிமா நட்சத்திரங்களுக்கான கிரிக்கெட் போட்டி கடந்த ஜனவரி 13-ஆம் தேதி துவங்கி பிப்ரவரி 12-ஆம் தேதி வரை நடைபெற்றது.சினிமா நட்சத்திரங்கள் தங்களது மொழி வாரியாக பிரிக்கப்பட்டு அவரவர் அணிக்காக விளையாடினர்.

இந்த தொடரில் விஷால் தலைமையில் களம் இறங்கிய தமிழ் நடிகர்களின் சென்னை ரைனோஸ் அணி சிறப்பாக விளையாடி கோப்பையை கைபற்றியது. சென்னையில் தெலுகு வாரியர்ஸ் அணியை எதிர்த்து சென்னை ரைனோஸ் விளையாடிய செமி பைனல் மேட்சை நடிகர் விஜய் கலந்து கொண்டு உற்சாகத்துடன் பார்த்து ரசித்தார்.

சென்னை அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நடிகர் விஜய் சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் சென்னை ரைனோஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஆட்டநாயகர்களுக்கு பார்ட்டி வைத்துள்ளார்.

இந்த பார்ட்டியில் சில நடிகைகளும் கலந்து கொண்டுள்ளார்கள்.,இதனால் பார்ட்டிகளுக்கே பார்ட்டிவைத்த பெருமை விஜய்க்கு.

Friday, March 2, 2012

இத்தனை கோடிகளா சூப்பிரண்ட் ஜெய்லரிடம்!?

போபால்: மத்தியபிரதேச மாநில ஜெயில் சூப்பிரண்ட் ஒருவரின் வீட்டில் லோக் ஆயுக்தா போலீஸார் நடத்திய சோதனையில் ரூ.5 கோடி மதிப்பிலான சொத்துக்களுக்குரிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் மத்திய சிறையில் கண்காணிப்பாளராக பணிபுரிபவர் புருஷோத்தம் சோம்குன்வர். இவர் தனது வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துகளைக் குவித்துள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில், இவரது வீடுகளில் லோக் ஆயுக்தா போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.

சோம்குன்வரின் இந்தூர் மற்றும் போபாலில் உள்ள வீடுகளில் 40-க்கும் மேற்பட்ட போலீஸார் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் ரொக்கப் பணம் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

ஐந்து பங்களாக்கள், மருத்துவமனை, நான்கு கடைகள், ஐந்து இடங்களில் நிலங்கள் ஆகியன இவருக்கு உள்ளதாக போலீஸ் அறிவித்துள்ளது.

பார்வா, பலாஸி, கம்கேரா ஆகிய இடங்களில் 14 ஏக்கர் நிலம், இந்தூரில் 35 லட்சம் மதிப்பிலான வீடு ஆகியவையும் இவற்றில் அடங்கும். 7.64 லட்சம் ரூபாய் ரொக்கம் வீட்டிலும், வங்கியில் 70 லட்சம் ரூபாயும், 8.48 லட்சம் ரூபாய் மதிப்பிலான எல்.ஐ.சி பாலிசியும் போலீஸார் கண்டுபிடித்தனர்.

குழந்தைகளையும் பாதிக்கும் பு(ப)கை பழக்கம்!

நியூயார்க்: குழந்தைகளுக்கு கூட ரத்த புற்று நோய் ஏற்படுகிறது. இது குறித்து அமெரிக்காவில் உள்ள குழந்தைகள் நல மையம் ஆய்வு மேற்கொண்டது.

அதில் குழந்தை கருவில் இருக்கும்போது பெற்றோர் அதாவது தாயோ, தந்தையோ அதிக அளவில் சிகரெட் பிடிப்பதால் ரத்து புற்று நோய் ஏற்படக்கூடிய சாத்திய கூறு உருவாகிறது.

பொதுவாக பெண்களை விட ஆண்கள்தான் சிகரெட் புகைக்கின்றனர். மனைவிக்கு குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு ஆண் நாள் ஒன்றுக்கு 15 சிகரெட்டுக்கு மேல் பிடித்தால் ரத்த புற்று நோய் தாக்கக்கூடிய ஆபத்து ஏற்படும் என்றும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

பீடி, சிகரெட் வாங்க குழந்தைகளை கடைகளுக்கு அனுப்புவதால் அவர்களுக்கும் சிறுவயதிலேயே புகை பிடிக்கும் பழக்கத்தை கற்றுக்கொள்கிறார்கள்.

Thursday, March 1, 2012

மாறிக்கொண்டு போகும் மவுசு! மாறாத ரவுசு!!

தமிழ் பட உலகில் நகைச்சுவை நடிகரின் மவுசு மட்டும் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்.,ஆனால் ரவுசு மட்டும் மாற்றாமல் ஆளாளுக்கு வித்தியாசப்படுகிறது.

`பெல்' போய் `புயல்' வந்தது. புயல் போய் ...சின்ன வாணர் வந்தார். இவருக்குப் பின்னால், ..தானம் வந்தார். இப்போது தானம் போய், ..த்யன் வந்து இருக்கிறார்! ..தானத்தை விட, ..த்யன் கைவசம் அதிக படங்கள் ஒப்பந்தம் ஆவதாக கேள்வி!

இதில் ஏதாவது புர்ந்ததா ஒன்னும் புரிலையா? பெல் (கவுண்டமணி, புயல் வைகை புயல் (வடிவேல்) சின்ன கலைவாணர் விவேக், தானம் சந்தானம், த்யன் சத்யன். புருஞ்சுதா.

காந்தியை கொன்ற கொலைகார கூட்டத்தை சேர்ந்த முதல்வர்!?

புதுடெல்லி: நரமோடியால் முன்னின்று நடத்தப்பட்ட குஜராத் கலவரம் நடைபெற்று தற்போது ஆண்டுகள் முடிவுற்ற நிலையில் அதனுடைய நினைவுதினம் இறைவணக்கங்கள், மெழுகுவத்தி ஏற்றுதல், கருத்தரங்கங்கள் மற்றும் மாநாடுகள் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நினைவுபடுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் டெல்லியைச் சேர்ந்த பேஷன் டிசைனரான அசீமூர் ரஹ்மான் தனக்கென தனி பாணியில் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

அசீமூர் ரஹ்மான் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா உட்பட பல அரசியல் தலைவர்களுக்கு ஆடைகளை வடிவமைத்துள்ளார். இவர் கடந்த திங்கள் குஜராத் கலவரத்திற்கு தனது எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக நரமோடிக்கு ரத்தம் பதிந்த காதி குர்தா ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

காதி காந்தியடிகளின் கொள்கைகளை எடுத்துக் கூறவும் மற்றும் ரத்தத்தை அவரின் தலைமையில் கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த படுகொலைகளை ஞாபகப்படுத்தவும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் கலவரம் நடந்து 10 வருடம் கழிந்தும் மோடியால் அந்த கரையை இன்னும் துடைக்க முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் ரஹ்மான் தான் செய்த ஆடை வடிவமைப்பை குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த வேலைபாடுகளை கோத்ரா ரயில் எரிப்பிற்குப்பின் பின் குஜராத்தில் நடந்த கலவரத்தின் நினைவுச் சின்னமாக கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தாம் குஜராத்தில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு மிகவும் வருந்துவதாகவும் எனவே தனது சொந்த ரத்தத்தை குர்தாவில் தெளித்து மோடிக்கு அனுப்பியுள்ளதாகவும் இது மோடி தனது பொறுப்பை உணர்வதற்கே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கலவரம் நடந்து 10 வருடங்கள் ஆகியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றும் இன்னும் பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக ஓடிக்கொண்டு இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!