Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, February 17, 2012

மத வாத இயக்கமல்ல! தீவிரவாத இயக்கம்!! யெச்சூரி!?

புது தில்லி: ஆர்எஸ்எஸ் இயக்கமானது மதவாத இயக்கம் மட்டுமல்ல, பயங்கரவாத இயக்கம் என்பது மீண்டும் நிரூபணமாகி யுள்ளது.

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த செüகான், நீண்ட காலமாக ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருப்பவர். இந்த அமைப்பின் பல்வேறு நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

2008-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி மாலேகாவ்னில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல், ஹைதராபாத்தில் மெக்கா மஸ்ஜித்தில் 2007-ம் ஆண்டு மே 18-ம் தேதி நடைபெற்ற தாக்குதல் மற்றும் ஆஜ்மீர் தர்காவில் 2007-ம் ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு உள்ள தொடர்புகள் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவங்களைத் தொடர்ந்து இந்தியாவில் பரவிவரும் ஹிந்துத்வா பயங்கரவாதம் வெளி உலகுக்குத் தெரியவந்துள்ளது என்று யெச்சூரி கூறினார். பயங்கரவாதத்துக்கு ஜாதி,மத பேதம் இல்லை என்பது புலனாகியுள்ளது. 2008-ம் ஆண்டு நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் கவுன்சில் கூட்டத்தில் நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங்தளம் அமைப்புகள் மேற்கொள்ள விருந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் பற்றிய தகவல் வெளியானது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தீவிரவாதத் தன்மை, நாட்டின் பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது குறைத்துக் காட்டப்பட்டது. நாட்டின் முக்கியப் பிரச்னைகள் கிடப்பில் போட்டப்பட்டன. தங்களது அரசு 5 ஆண்டுக்காலம் பதவியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக கூட்டணிக் கட்சியினருக்கு ஆதரவாக செயல்பட்டனர்.

2002-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறை போல நாடு முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார். 2003-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரையான காலத்தில் பல்வேறு வழக்குகள் மீதான விசாரணை பாரபட்சமாக நடத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் நான்டெட், பார்பானி, ஜால்னா, ஜலேகாவ்ன் ஆகிய பகுதிகளிலும் உத்தரப் பிரதேச த்தில் மாவ் மற்றும் கான்பூரிலும், தமிழகத்தில் தென்காசியிலும் வழக்குகள் பாரபட்சமாக நடந்துள்ளன.

இத்தகைய மதவாத அமைப்புகளின் செயல்பாடுகளை சகித்துக்கொள்ளும் போக்கு ஏற்புடையதல்ல. தங்களது இயக்கத்தில் சிலரது செயல்பாடுகள் இயக்கக் கொள்கையிலிருந்து சற்று விலகிச் செல்வதாக ஆர்எஸ்எஸ் குறிப்பிடுகிறது. அதற்காக ஒட்டுமொத்த இயக்கத்தைக் குறைகூறாதீர்கள் என்றும் வலியுறுத்துகிறது.

ஆனால் இவ்விதம் கூறுவதில் அர்த்தமில்லை. மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேயின் சகோதரர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தங்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தீவிர உறுப்பினர்கள் என்று குறிப்பிட்டுள்ளார் என்பதையும் யெச்சூரி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆர்எஸ்எஸ் இயக்க நிறுவனரான டாக்டர் ஹெக்டேவாருக்கு முன்னு தாரணாக விளங்கியவர் பி.எஸ் மூன்ஞ்சே. இவர் இத்தாலிக்கு சென்று பாசிச சர்வாதிகாரி முசோலினியை 1931-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி சந்தித்துப் பேசியுள்ளார். மூன்ஞ்சே தனது டைரியில், மார்ச் 20-ம் தேதி எழுதிய விவரத்தில், பாசிச இயக்கத்தால் தான் ஈர்க்கப்பட்டதைக் குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர் படையை உருவாக்குவதன் மூலம் இதை சாத்தியமாக்கமுடியும் என்ற முசோலினியின் கருத்தை அவர் ஏற்றார். இதையடுத்து நாடு திரும்பிய அவர் நாசிக்கில் 1935-ம் ஆண்டு மத்திய ஹிந்து ராணுவ கல்வி மையத்தை தொடங்கினார். இந்த மையம்தான் இப்போது ஹிந்துத்வா தீவிரவாத பயிற்சி மையமாக மாறிவிட்டது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மதச்சார்பற்ற நாடாக திகழும் இந்தியாவை, ஹிந்துக்களின் நாடாக மாற்றும் முயற்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பு தீவிரமாக உள்ளது என்று யெச்சூரி குறிப்பிட்டுள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் சதியை முறியடிக்க வேண்டும் என்று கம்யூனிச தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Thursday, February 16, 2012

எப்படி இருந்த நான் இப்படி ஆய்ட்டேன்! தனுஷ்!!

மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தனுஷ், 2004-ம் ஆண்டு ஐஸ்வர்யாவை திருமணம் செய்த பின்னர், யாரும் என்னை ஒரு நடிகராகவோ அல்லது தனுஷ் என்றோ பார்ப்பதில்லை. ரஜினியின் மருமகனாகத்தான் பார்க்கின்றனர்.

அதற்கு முன்பு வரை எனக்கு இருந்த பெயர், புகழ் எல்லாம் ரஜினியின் மருமகன் ‌என்ற பட்டம் அடித்து சென்றுவிட்டது. இதனால் நான் என்னுடைய சுய அடையாளத்தையே இழந்துவிட்டேன்.

எந்த நிகழ்ச்சியில் பங்‌கேற்றாலோ அல்லது பத்திரிக்கையாளர்களை சந்தித்தாலோ அவர்கள் கேட்கும் முதல் கேள்வி, ரஜினியின் மருமகன் என்பதை எப்படி உணர்கிறீர்கள்.

திருமணம் ஆன பிறகு என்னிடம் அதிகம் கேட்கப்பட்ட கேள்வி இது தான். இப்போது அந்த கேள்வி படிப்படியாக குறைந்து இருக்கிறது. ஆனாலும் ஆரம்பத்தில் முதல் கேள்வியாய் கேட்டவர்கள் இப்போது இடையில் கேட்கின்றனர். இனி வருங்காலத்திலும் அதுவும் இருக்காது என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தனுஷ் இவ்வாறு கூறியிருப்பது ரஜினி குடும்பத்திலும், அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.   அபிதாப்பச்சன், ஷாருக்கான் எல்லாம் தனுஷை புகழ்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் ரஜினிதான்.  

அவரால்தான் தனுஷ் என்கிற நடிகர் என்று பெரிய அளவில் அடையாளப்பட்டார். இவர் என்னடான்னா அடையாளத்தை இழந்துவிட்டேன் என்கிறாரே என்று ரஜினி ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர்

பாதுகாப்பானதா பாராசிட்டமால்! மருத்துவ எச்சரிக்கை !!

பாராசிட்டமால் மாத்திரைகளையோ, சிரப் களையோ தொடர்ந்து உபயோகிப்பவர்களுக்கு லிவர் மற்றும் கிட்னி தொடர்பான பிரச்சினைகள் வர வாய்ப்பிருப்பதாக சமீபத்திய மருத்துவ ஆய்வறிக்கைகள் எச்சரிக்கின்றன.

இனி மேல் பாராசிட்டமால் (அசிட்டமி னோபென்) மருந்துகளை தயாரிப்பவர்கள் தங்களது நுகர்வோர்களுக்கு இந்த மருந்தை உட்கொள்வதால் லிவர் ,கிட்னி டேமேஜ் மற்றும் அலர்ஜியினால் உண்டாகும் பக்க விளைவுகள் ஏற்படும் என்று ஒவ்வொரு மருந்து பாட்டில் ரேப்பர்கள் மற்றும் மாத்திரைப் பட்டைகளில் எச்சரிக்கை வெளியிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டாக்டர்கள் பரிந்துரைக்கும் பிரஸ்க்ரிப்சன் களை பேசன்டுகள் பெரும்பாலும் சரியாகப் புரிந்து கொள்வதே இல்லை.காய்ச்சல் என்று வரும் கைக்குழந்தைகளுக்கு டாக்டர்கள் 5 ml பாராசிட்டமால் சிரப்(டானிக்) பரிந்துரைத்தால் குழந் தையின் பெற்றோர்களில் சிலர் போதிய விஷய ஞானம் அற்று தவறுதலாக 5 ml அளவுக்கு பாராசிட்டமால் ட்ராப்ஸ் (சொட்டு மருந்து) கொடுத்து விடுகிறார்கள். சிரப்பை விட இந்த ட்ராப்ஸ்கள் அதிக செறிவானவை. இத்தனை செறிவான மருந்தை உட்கொள்வதால் குழந் தைக்கு அலர்ஜியாகி பக்க விளைவுகள் ஏற்பட்டு மறுபடியும் மருத்துவரை நாடும் நிலை ஏற்பட்டு விடுகிறது. மேலும் இப்படியே தொடர்ந்து மருந்துகளைக் கொடுத்து வந்தால் கடைசியாக அது கடுமையான ரீனல் டிஸ்ஆர்டர்களில் கொண்டு விடுகிறது. பெரும்பான்மையான லிவர் மற்றும் கிட்னி டேமேஜ்கள் ஏற்பட இப்படியான கவனக்குறைவே முதலும் முக்கியமுமான காரணமாகி விடுகிறது.

இவை தவிர லேசான காய்ச்சலுக்கும் கூட டெம்பரேச்சர் சோதித்துப் பார்க்காமல் டாக்டர்கள் கடுமையான காய்ச்சலுக்குப் பரிந்துரைத்த அதே அளவு பாராசிட்டமால் மருந்தை உட்கொள்வ தாலும் மேற்சொன்ன விளைவுகள் ஏற்படலாம். பெயின் கில்லர்கள் எடுத்துக் கொள்பவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் தங்களது கிட்னி ஆரோக்யமாக இருக்கிறதா எனத் தொடர்ந்து பரிசோதிக்கத் தவறக்கூடாது. ஏனெனில் இன்றைய நிலையில் சிறுநீரக பாதிப்பு என்று வரும் நோயாளிகளில் 8 முதல் 10 சதவிகிதம் பேர்களுக்கு கடுமையான பாதிப்புகளுக்கு தொடர்ந்து பாராசிட்டமால் மருந்துகள் எடுத்துக் கொள்வதே காரணங்களாக இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.

Wednesday, February 15, 2012

வெளிநாடுவாழ் இந்தியர்களின் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி! ரிசர்வ் வங்கி!!

மும்பை, பிப். 16: இந்தியாவில் சொத்துகளை வாங்கும்போது அது தொடர்பான பரிவர்த்தனை விவரங்களை வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாக்கல் செய்யத் தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி புதன்கிழமை தெரிவித்தது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாட்டினருக்கும் இது பொருந்தும்.

வெளிநாட்டினர் இந்தியாவில் அசையாச் சொத்துகளை வாங்கும்போது, அது தொடர்பான பரிவர்த்தனை விவரங்களை 90 நாள்களுக்குள் ரிசர்வ் வங்கியிடம் அளிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

வெளிநாடுவாழ் இந்தியருக்கும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கும் இது பொருந்துமா என்கிற குழப்பம் நீடித்து வந்தது. இதைப் போக்கும் வகையிலேயே ரிசர்வ் வங்கி இப்போது விளக்கம் அளித்திருக்கிறது.

மீண்டும் சிம்பு வலையில் சிக்குமா இந்த சிட்டு?

பிரபுதேவாவை காதலிப்பதற்கு முன்னர் சிம்புவை காதலித்தவர் நடிகை நயன்தாரா. சிம்புவுடனான காதலும் முறிந்து, இப்போது பிரபுதேவாவுடனான காதலும் முறிந்து தவித்து வரும் நயன்தாரா, மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

 முதற்கட்டமாக தெலுங்கில் ஒருபடத்திலும் தமிழில் அஜித் ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் நயன்தாராவுக்கு தூது விட்டு இருக்கிறாராம் சிம்பு. அதாவது தன்னுடைய அடுத்த படத்தில் நயன்தாரா தான் நடிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இதற்காக இயக்குநர் ஒருவரும் நயன்தாராவிடம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

 மீண்டும் ரீ-என்ட்ரி ஆகியிருக்கும் நயன்தாராவை, சிம்புவுடன் ஜோடி சேர்த்து படம் இயக்கினால், படம் ஹிட்டாவதோடு, நல்ல வசூலும் பெறும் என்பது அந்த இயக்குநரின் நம்பிக்கை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்...!

ஆரோக்கியம் அதிகரிக்க அக்ரூட்! ஆய்வில்!!

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் அக்ரூட்டுக்கு முதலிடம் கொடுக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

 உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்தால் மாரடைப்பு உள்ளிட்ட இதய பாதிப்புகள் தாக்கும் அபாயம் ஏற்படும். உடல் பருமன் மற்றும் கொழுப்பு சத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு உணவு முறைகளே முதல் காரணமாக கூறப்பட்டாலும் போதிய உடற்பயிற்சி இன்மையும் ஒரு காரணம். இந்நிலையில் இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் ‘வால்நட்’ எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

பென்சில்வேனியாவில் உள்ள ஸ்க்ராட்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக ஆய்வு நடத்தினர். உடலில் கொழுப்பு அதிகம் இருந்த ஆண், பெண் ஏராளமானோர் வயது வித்தியாசமின்றி தேர்வு செய்யப்பட்டனர். முதல்கட்ட பரிசோதனைகளை தொடர்ந்து ஒரு வார காலம் அக்ரூட் பருப்புகள் கொடுத்து கண்காணிக்கப்பட்டனர். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்திருந்தது. இதன்மூலம் கொழுப்பை அக்ரூட் கரைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆய்வு முடிவு குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் வருமாறு: உடலில் கொழுப்புச்சத்து அளவாக இருப்பது அவசியம். உணவு முறைகளே உடலில் கொழுப்பு அதிகரிக்க முக்கிய காரணம். அக்ரூட், உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

முந்திரி, பாதாம் உள்ளிட்ட சுமார் 7 வகையான கொட்டைகளுடன் ஒப்பிடும் போது அக்ரூட்டில்தான் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டிஆக்சிடன்ட் அபரிமிதமாக இருப்பதுதான் இதற்கு காரணம். இவை கொழுப்பை எளிதில் கரைக்க வல்லது என்பதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இது நோய்த்தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளித்து ஆரோக்கியத்துக்கு வகை செய்யும். உரிய உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருத்துவ அறிவுரை மற்றும் சிகிச்சைகள் மூலம் உடல் கொழுப்பை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tuesday, February 14, 2012

வயதை கேட்டு வம்பிளுப்பவர்களுக்கு! த்ரிஷா !!

அஹமது இயக்கத்தில் தன்னை விட சிறியவரான ஜீவாவுடன் கைகோர்த்து தனது இளமையை அவர்களுக்கு நிரூபிக்கப் போகிறாராம் த்ரிஷா. த்ரிஷா சில நாட்களாகவே நிகழ்ச்சிகளுக்கு வரும் போது மேக்கப் இல்லாமல் வந்தார்.

மூத்த நடிகை என்று மற்றவர்கள் பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஏன் மேக்கப் இல்லாமல் வெளியே வருகிறீர்கள் என்று கேட்ட போது த்ரிஷா “ யாருக்காகவும் மேக்கப் போட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. நான் நானாகவே இருக்கிறேன்.

மற்ற்வர்கள் பேசும் பேச்சு என்னை பாதிக்காது. நான் நடித்து வெளியான “பாடிகாட்” படத்தை பார்த்துவிட்டு பேசட்டும் நான் மூத்த நடிகையா? என்று. அடுத்து ஜூனியர் என்.டி.ஆர் உடன் ”தம்மு” என்ற படத்தில் நடித்து வருகிறேன். இயற்கையான தோற்றமே பெண்களுக்கு அழகு.

பெண்களுக்கே இருக்கும் ஆசையினால் தான் கண்களுக்கு மட்டும் சிறிது மேக்கப் போடுகிறேன். பொருத்தமான ஆடை அணிவதே எனக்கு அழகு. நான் நல்ல கதைக்காக காத்திருப்பதை உணராத சிலர் என் வயதை பற்றி குறை கூறுகின்றனர்.” என்று நன்றாக காய்ச்சி விட்டார்.

5 ஆண்டுகளாக தேடப்படும் தீவிரவாதி கைது ?

புதுடெல்லி, பிப். 14: 5 ஆண்டுகளுக்கு முன்னர் சம்ஜௌதா விரைவு ரயில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் 68 பேர் கொல்லப்பட்டனர்.

இதில் ரயில்களில் குண்டுகளை வைத்து வெடிக்கச் செய்த இந்துவா தீவிரவாதி கமல் சௌஹான் ஞாயிறன்று இந்தூரில் கைது செய்யப்பட்டான்.

2007ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி டெல்லியில் இருந்து பாகிஸ்தானின் லாகூர் நகருக்குச் சென்ற சம்ஜௌதா ரயிலின் இரண்டு பெட்டிகளில் குண்டுகள் வெடித்தன. இந்த விபத்தில் பலியான 68 பேரில் ஏராளமானோர் பாகிஸ்தானியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, February 13, 2012

வேண்டாண்டா இந்த காதலர் தினம்!!

இனக் கவர்ச்சிக்காகவோ, அல்லது வெறும் சவால்களுகாக, போட்டிக்காக காதல் செய்யக்கூடாது. ஏன்னா காதல் விளையாட்டு பொருள் இல்லை..., வேணும்னா ஜெயிக்றதும், வேனாட்டி தோக்கிறதுக்கும்.

காதல் என்கிற மாயையில் இவர்கள் செய்யும் அனாச்சாரம் கண்டு சகிக்க முடியாத ஒன்று.,மேலும் இந்த காதலர்கள் தினம் வெளிநாடுகளில் வியாபார நோக்குடன் ஒரு விழா நடத்துகின்றனர் இதில் வேறு ஒன்றுமில்லை இதை கொண்டாட.

ஆனால் இந்தியாவில் இது ஒரு (பண்பாட்டு சீரழிவு) வெளிநாட்டு மாயை அன்றி வேறேதுமில்லை.,காதல் என்கிற பெயரில் சீறலியாதீர்கள், ஞாபகம் வச்சுக்கொள்ளுங்கள்.

பரபரப்பை ஏற்படுத்திய இணையதள செய்தி !!

மெக்சிகோ: மெக்சிகன் இணையதளம் ஒன்றில், அழகான குழந்தை விற்பனைக்கு உள்ளது. அதன் உறுப்புகள் தேவைப்படுவோர் வாங்கிக் கொள்ளலாம் என்ற விளம்பரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விளம்பரத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து விளம்பரம் நீக்கப்பட்டுவிட்டது. விளம்பரத்தை பதிவு செய்தவர் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த செயலை அடுத்து, இணையதளத்தில் மனிதர்களை, உடல் உறுப்புகள் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது என்ற விதிமுறை பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒபாமாவுக்கு பெருகிவரும் ஆதரவு !

வாஷிங்டன், பிப். 13: அமெரிக்காவில் விரைவில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிடும் ரிபப்லிகன் கட்சித் தலைவர் மிட் ரோம்னியை விட 6 புள்ளிகள் முன்னணியில் உள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.

கடந்த வாரம் நடைபெற்ற இந்த கருத்துக் கணிப்பில் ஒபாமாவிற்கு 51% சதவீத வாக்குகளும், ரோம்னிக்கு 45% வாக்குகளும் பதிவாகியுள்ளது.

Sunday, February 12, 2012

மிக்சி கிரைண்டருக்கு மின்சாரம் யார் கொடுப்பார்! கேப்டன் ஆவேசம்!?

அருப்புக்கோட்டையில் நடந்த திருமண விழாவில் விஜயகாந்த் பேசியதாவது:

சட்டசபையில் என்ன நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும். அதற்கு தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டும். என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தனர். எனக்கு எதைப் பற்றியும் பயம் கிடையாது. மக்கள் பிரச்னைகளைத் தான் பேசினேன்; இனியும் பேசுவேன். சபை நாகரிகம் எனக்கு தெரியும். 13 ஆண்டுகளாக பெங்களூரில் வழக்கு நடந்து வருகிறது. அதை உங்களால் தீர்க்க முடியவில்லை. தினமும் 8 மணி நேர மின் தடை, தொழில் முடக்கம், மாணவர்கள் படிப்பு கேள்விக்குறியாகியுள்ளது. மின்சாரத்திற்காக என்ன திட்டம் தீட்டினீர்கள்.

சங்கரன்கோவில் இடைத் தேர்தலுக்கு மிக்சி, கிரைண்டர் கொடுக்கப்படுகிறது. மின்சாரம் இருந்தால் தானே ஓடும். என்னை சீண்டிப் பார்க்காதீர்கள்; பல உண்மைகளை சொல்ல வேண்டியிருக்கும். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களை சட்டசபையில் பேச விடுங்கள். நீங்களாகவே பேசுவதற்கு மட்டும் சட்டசபை கிடையாது. டான்சி வழக்கில் என் கையெழுத்து இல்லை என்று சொல்கிறீர்கள். என் வாயை கிளறாதீர்கள். நான் பேச ஆரம்பித்தால், கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையாகி விடும்,'' என விஜயகாந்த் பேசினார்.

ஆசிரியயை கொலை செய்த மாணவனின் வாக்குமூலம்?

சென்னை பாரி முனையில் புனித மேரி மேல் நிலைப்பள்ளியில் 9-வது வகுப்பு பயிலும் மாணவன் கடந்த வியாழக்கிழமை தனது ஆசிரியை உமா மகேஷ்வரியை கத்தியால் குத்தி கொலைச் செய்தான். இச்சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட மாணவனிடம் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து பல மணிநேரம் விசாரணை நடத்தினர். அப்பொழுது மாணவன் கூறியது:

நான் எனது பெற்றோருக்கு ஒரே மகன் என்பதால் அவர்களுக்கு செல்லப் பிள்ளையாக இருந்தேன். தினமும் 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை பாக்கெட் மணி கிடைக்கும். ஹிந்தி எனக்கு சரியாக புரியாது. ஆதலால் ஹிந்தி பாடத்தில் எனக்கு மதிப்பெண்கள் குறைவாக கிடைக்கும். இதனை எனது ஸ்கூல் டைரியில் எழுதி பெற்றோர்களிடமிருந்து கையெழுத்து வாங்கி வர ஆசிரியை உமா மகேஷ்வரி கூறினார். தொடர்ச்சியாக 13 தடவை இவ்வாறு டைரியில் எழுதினார். கடந்த மாதமும் டைரியில் என்னைப் பற்றி மோசமாக அறிக்கை எழுதியதால் பெற்றோர்கள் என்னை கண்டித்தனர். இதனால் ஆசிரியை மீது எனக்கு கோபம் ஏற்பட்டது.

மூன்று தினங்களுக்கு முன்பு தியேட்டருக்கு சென்று ‘அக்னிபாத்’ என்ற ஹிந்து சினிமாவை பார்த்தேன். அதில் வரும் கொலைக் காட்சிகளைப் போல உமா மகேஷ்வரியையும் கொலைச் செய்ய திட்டமிட்டேன். வீட்டிற்கு அருகில் உள்ள கடையில் இருந்து ரூ.20 கொடுத்து கத்தி ஒன்றை வாங்கினேன். அதனை காகிதத்தில் பொதிந்து பள்ளிக்கூடத்திற்கு சென்றேன். சினிமாவில் கண்டது போல ஆசிரியையின் கழுத்திலும், நெஞ்சிலுமாக ஐந்து இடங்களில் கத்தியால் குத்தினேன். இவ்வாறு மாணவன் வாக்குமூலம் அளித்துள்ளான்.

கொலைச் செய்த மாணவனுக்கு நண்பர்கள் யாரும் இல்லை என்றும், யாரிடமும் பேசாத குணமுடையவன் என்றும் போலீசார் கூறுகின்றனர். உடல் வளர்ச்சி அதிகமாக இருப்பதால் அவனது வயதை உறுதிச்செய்ய மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் ஜுவைனைல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு ரிமாண்ட் செய்து சிறுவர்கள் சிறையில் மாணவன் அடைக்கப்பட்டான். கொலைச் செய்யப்பட்ட ஆசிரியை உமா மகேஷ்வரியின் உடல் வெள்ளிக்கிழமை சென்னையில் அடக்கம் செய்யப்பட்டது.

தன்னுடைய பாக்கட்டை நிறப்புவதை விட்டுவிட்டு சமூக அக்கறையுடன் கொஞ்சம் படமெடுத்தால் இதுபோன்ற சம்பவங்களை தடுக்கலாம்.,சினி துறையை சார்ந்தவர்கள் சிந்திப்பார்களா?

Saturday, February 11, 2012

நாளுக்கு நாள் வெளுக்கும் மோடியின் காவி சாயம்!? சஞ்சீவ் பட்?

ஆமதாபாத்: குஜராத் கலவரம் தொடர்பான ஆவணங்களை அந்த மாநில அரசும், சிறப்பு விசாரணைக்குழுவும் சேர்ந்து அழித்துவிட்டதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் குற்றம்சாட்டியுள்ளார்.

குஜராத் கலவரம் தொடர்பாக விசாரிக்கும் நானாவதி கமிஷனுக்கு சனிக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் பட் மேலும் கூறியிருப்பது: 2002-ல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப்பின் குஜராத்தில் நிகழ்ந்த கலவரம் தொடர்பான முக்கிய ஆதாரங்களை மோடி தலைமையிலான மாநில அரசும், கலவரத்தை விசாரிக்க மாநில அரசு அமைத்த சிறப்பு விசாரணைக்குழுவும் அழித்துவிட்டன.

அதிகாரத்தில் உள்ள நபர்கள், சட்டத்துக்குமுன் விசாரணைக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக மிகவும் மோசமான இந்த காரியத்தை நடத்தியுள்ளனர். இது தொடர்பாக மாநில நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி, உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று சஞ்சீவ் பட் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக குஜராத்தில் கலவரம் நடந்தபோது, "ஹிந்துக்கள் தங்கள் கோபத்தை வெளிக்காட்டுவதைத் தடுக்க வேண்டாம்' என்று மோடி கூறியதாக, நானாவதி கமிஷன் முன்பு சஞ்சீவ் பட் சாட்சியம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவுக்கு தூதுவிடும் விஜய் !?

மதுரையில் உள்ள ஒரு தியேட்டருக்கு சென்ற விஜய் அங்கு ரசிகர்களிடம் பேசிவிட்டு அதன் பின் நிரூபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது விஜய் “ அரசியல் பற்றிய கேள்விகள் இங்கு வேண்டாம்.சினிமா பற்றி மட்டும் இப்போது பேசுவோம் என்றார்.

நண்பன் படம் போலவே இன்னொரு கதை அமைந்தால் கண்டிப்பாக இரண்டு ஹீரோக்களுடன் சேர்ந்து நடிப்பேன்.

ஒரு படம் ஓடுவதும் ஓடாததும் கதை மற்றும் திரைக்கதையின் கையில் தான் உள்ளது. அந்த கதைகளுக்கு நாங்களும் ரசிகர்களாகவே இருக்கிறோம். ஒரு ரசிகனாக அதை உங்களிடம் சேர்க்கிறோம்.

சூர்யாவுடன் நான் இணைந்து நடித்த படத்தின் கதையைப் போல் அமைந்தால் கண்டிப்பாக சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பேன். இப்போது துப்பாக்கி என்ற படத்தில் நடித்து வருகிறேன்.

சிறிய பட்ஜட் படங்கள் புதுமுகங்களுடன் வெற்றி பெற்று வருவது மகிழ்ச்சியடைய வேண்டிய விஷயம். அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். ஏனென்றால் நானும் ஒரு காலத்தில் புதுமுகமாக அறிமுகமானவன் தான்.” என்று கூறினார்.

Friday, February 10, 2012

கொலவெறி காமவெறி கதாநாயகர்களுக்கு மன்னர் ஜவஹர் கண்டனம்!?

சென்னையில் நேற்று பள்ளி ஆசிரியை ஒன்பதாம் வகுப்பு மாணவனால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் நகரையே உலுக்கிவிட்டது. சினிமா, டி.வி.க்களில் வரும் வன்முறை காட்சிகளே இந்த கொலைக்கு காரணம் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர்ஜவகர் வருத்தம் தெரிவித்தார்.

அவர் கூறும்போது, வகுப்பறையில் ஆசிரியை கொலை செய்யப்படும் சம்பவத்தை தமிழ்நாட்டில் கேள்விப்படுவது இதுதான் முதல்முறை. சினிமா, டி.வி.க்களில் வன்முறை தூண்டும் காட்சிகளால் மாணவன் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கலாம்.

மாணவர்களுக்கு ஒழுக்கத்துடன் கூடிய கல்வி அவசியம் என்றார். புரசைவாக்கத்தைச் சேர்ந்த ரமேஷ், சினிமா பாடல்கள்மேல் சாடினார்.

'நல்லபேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே', 'திருடாதே பாப்பா திருடாதே', 'நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி', 'வாழ நினைத்தால் வாழலாம்' என பழைய பாடல்கள் குழந்தைகளை ஒழுக்க சீலர்களாக வளர்க்க பயன்பட்டன.

ஆனால் இப்போது 'ஒய்திஸ் கொலைவெறிடி' 'உதடா அவளா வெட்டுடா அவள', 'எவன்டி உன்ன பெத்தான் கையில கிடைச்சா செத்தான்', 'லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே' என்றெல்லாம் பாடல்கள் வருகின்றன. இவை மாணவர்கள், இளைஞர்கள் மனதில் வன்முறை தனமான வக்கிரங்களை பதிய வைக்கின்றன. ஆசிரியையை மாணவன் கொன்றத்திற்கு இது போன்ற பாடல்கள்தான் காரணம் என்றார்.

மயிலாப்பூரைச் சேர்ந்த கவுதம் கூறும்போது, 'சினிமா பாடல்கள் இப்போதைய தலைமுறையை ஒழுக்கமில்லாதவர்களாக மாற்றி வருகின்றன. சினிமாவில் இருப்பவர்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்' என்றார்.

அஜினா மோட்டோ! அறிந்ததும் அறியாததும் ?

அஜினா மோட்டோ என்பது கரும்பு மற்றும் மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றின் ஊரல்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றது. இதன் வேதிப் பெயர் மோனோ சோடியம் குளுடோமேட் ஆகும்.

இதை உணவுப் பொருட்களில் சேர்த்துக் கொள்வதால் உடல் நலத்திற்குக் கேடு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை உணவில் 3 கிராமுக்கு அதிகமாக அஜினாமோட்டா சேர்த்தால் தலைவலி, நெஞ்சு வலி, குமட்டல், கை கால் மரத்துப் போதல் போன்ற பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்புளளது.

இது போன்ற பல்வேறு காரணங்களால் உணவுப் பொருட்களில் அஜினா மோட்டா சேர்ப்பது சுகாதாரக் கேட்டை உண்டாக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. 51 வகையான உணவுப் பொருட்களில் அஜினாமோட்டா சேர்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ருசிக்காக உங்களை நீங்கள் அழித்துக் கொள்ளாதீர்கள்.

Thursday, February 9, 2012

களவாணி ஜெயாவை காப்பாற்ற கை கோர்க்கும் காவி அரசு ?

அரசு தலைமை வழக்கறிஞர் பதவியில் இருந்து, ஆச்சார்யா நேற்று (08.02.2012) ராஜினாமா செய்தார். பதவி விலகியது ஏன் என்று ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பதவியிலிருந்து விலகுமாறு கர்நாடக அரசு என்னை தொடர்ந்து வற்புறுத்தியது. இந்த வழக்கு விசாரணையை ஜெயலலிதாவுக்கு ஆதரவாக திசை திருப்ப வேண்டும் என்பதற்காக, பாஜகவின் டெல்லி மேலிடத்தின் உத்தரவின் பேரிலேயே கர்நாடக அரசு எனக்கு நெருக்கடி கொடுத்தது.

பாஜக மேலிடத்தின் இந்த நெருக்கடி எடியூரப்பா முதல் அமைச்சராக இருக்கும் வரை எடுபடவில்லை. தற்போது முதல் அமைச்சர் சதானந்த கவுடா மூலம் அதனை நிறைவேற்ற பாஜக மேலிடம் முயற்சி செய்கிறது. அந்த நேரத்தில் ஆசை காட்டும் விதமாகவே, அரசு தலைமை வழக்கறிஞர் பதவி கொடுக்கப்பட்டது. அதனை ஏற்று சொத்து குவிப்பு வழக்கின் சிறப்பு வழக்கறிஞர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துவிடுவேன் என்று கர்நாடக அரசு தப்புக் கணக்கு போட்டுவிட்டது.

மேலும் ப ஜ க அரசு நெருக்குதல் தந்ததுதான் தலைமை வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறியுள்ளார். (தேர்தல் நேரத்தில் அடி மேல் அடி ப ஜ க வுக்கு ஒருபக்கம் பார்லிமெண்டில் ஆபாச படம்பார்த்த ப ஜ க எம் பி, இன்னொரு பக்கம் இன்று இது, நாளை எதுவோ?)

முதலீட்டை திரும்ப பெரும் ஐக்கிய அரபு குடியரசு !?

புதுடில்லி: 2ஜி விவகாரத்தில், 122 தொலைத்தொடர்பு லைசன்ஸ்களை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்ததையடுத்து.

ஐக்கிய அரசு எமிரேட்சைச் சேர்ந்த எடிசலாட் நிறுவனம், இந்தியாவில் தனது 820 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை திரும்பப்பெற முடிவு செய்துள்ளது.

நம் அரசியல்வாதிகளின் பொரம் (பிற்) போக்கு தனத்தால் பல கோடிகள் இழப்பு?

குஷியாக இருந்த விஜய் ரசிகர்களை கோபப்பட வைத்த முருகதாஸ்?

நடிகர் விஜய் நடித்து வரும் துப்பாக்கி படத்தை திடீரென நிறுத்துவதாக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் அறிவித்துள்ளது விஜய் ரசிகர்களை கோபமடைய செய்திருக்கிறது.

திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் திரைப்படத் தொழிலாளர் சம்மேளமான பெப்சிக்கும் இடையேயான மோதலால் தமிழ் திரைப்பட உலகம் முடங்கியுள்ளது.

இந்நிலையில் கலைப்புலி தாணு தயாரிப்பில் மும்பையில் விஜய்யை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் "துப்பாக்கி" என்ற படத்தை இயக்கி வந்தார்.

பெப்சி- தயாரிப்பாளர்கள் சங்க மோதல் நீடித்து வரும் நிலையில் திடீரென முருகதாஸ் அறிவித்திருப்பது விஜய் மற்றும் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

பெப்சி, தயாரிப்பாளர் சங்க மோதல் எதிரொலியாக பல முக்கியப் படங்களின் படப்பிடிப்பு நடைபெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இயக்குநர் முருகதாஸ், தானாக முன்வந்து துப்பாக்கி படத்தின் ஷூட்டிங்கை காலவரையின்றி நிறுத்தி வைத்திருப்பது விஜய் தரப்பை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து விஜய்யிடம் முருகதாஸ் பேசினாரா என்பது தெரியவில்லை.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரேசகரின் மகன் படமே படப்பிடிப்பைத் தொடர முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது பெப்சி தொழிலாளர்களிடையே கேலியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!