Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, January 8, 2012

சின்ன சின்ன ஆசையில் சினேகா !!

கோச்சடையான் படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடிக்கும் சினேகா, இந்த வாய்ப்புகாக பல படங்களை கைவிட்டார்.

ரஜினியுடன் நடிப்பதே அவர் வாழ்வில் பெரிய மைல்கல் என்று ரசிகர்கள் கருத்து கூறினாலும், ”ஒரு படத்திலாவது வில்லியாக நடிக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள்” என்று புன்னகைக்கிறார் சினேகா.

”என் குறிக்கோளை அடைய பிரசன்னாவுடனான திருமணம் ஒரு தடையாக இருக்காது” என்றும் கூறியுள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் முன்பை விட பளிச்செனவும், அழகாகவும் காணப்பட்ட சினேகாவிடம் முகத்தில் கல்யாண கலை வந்துவிட்டதாக சொல்ல வழக்கம் போல சிரித்துவிட்டு பேச ஆரம்பித்தார்.

சமீபத்தில் அவர் நடித்த தெலுங்கு படம் ஹிட்டாகியுள்ளதால் ரொம்பவே சந்தோஷமாக இருப்பதாக கூறும் சினேகா, விரைவில் கோச்சடையான், மற்றும் டைரக்டர் G.N.R.குமரவேலன் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக சொன்னார்.

சத்தான உணவு உன்கிறதா உங்கள் குழந்தைகள்!

வளரும் பருவத்தில் குழந்தைகள் சாப்பிடும் உணவு சுவையாக இருந்தால் மட்டும் போதாது; சத்தானதாகவும் இருக்க வேண்டும்.

பொதுவாக, ஒரு வயதில் இருந்து ஆறு வயது வரை ஆண் குழந்தையாக இருந்தாலும் பெண் குழந்தையாக இருந்தாலும் ஒரே மாதிரியான ஊட்டச் சத்துக்கள்தான் தேவைப்படும். ஏழு வயது முதல் இருபாலருக்கும் தேவைப்படும் சத்துக்களில் சிறிது மாற்றம் ஏற்படும்.

இந்த வயதில் சிறுவர்களைவிட சிறுமிகளுக்கு அதிக எடை கூடும். காரணம் – ஹார்மோன் மாற்றங்கள்.

உங்கள் குழந்தைகள் உணவை ருசித்து, ரசித்து, நன்றாக மென்று, உமிழ்நீருடன் கலந்து சாப்பிட உற்சாகப்படுத்துங்கள்.

Saturday, January 7, 2012

கண்டிசனோடு ஏலம் விடப்படும் டைட்டானிக் பொருட்கள்

இங்கிலாந்தின் சவுத்தம்ப்டான் பகுதியில் இருந்து கடந்த 1912ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி டைட்டானிக் சொகுசு கப்பல் நியூயார்க் நோக்கி தனது பயணத்தை துவக்கியது. உலகிலேயே அப்போது மிகப்பெரிய சொகுசு கப்பல் இதுதான்.

கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பல தனியார் நிறுவனங்கள் ஆய்வு செய்தன. அதில் இருந்து பல அரிய பொருட்களை மீட்டு வந்தன. இந்நிலையில், கப்பலில் கிடைத்த மிகச்சிறிய ஹேர்பின் முதல் கப்பலின் உடைந்த இரும்பு பாகங்கள் வரை 5,000 அரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றை வரும் ஏப்ரலில் ஏலம் விட அமெரிக்காவின் நியூயார்க் குர்ன்சே ஏல நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கப்பலில் பொருத்தி இருந்த கலைநயமிக்க பாகங்கள், தகரங்கள், பயணிகளின் பர்ஸ், கூலிங் கிளாஸ்கள் உள்பட பல பொருட்கள் ஏலத்துக்கு தயாராக உள்ளன. எனினும், டைட்டானிக் பொருட்களை தனியாருக்கு விற்க கூடாது. பொருட்களை ஏலம் எடுப்பவர்கள், அவற்றை நன்கு பராமரிக்கவும், அவ்வப்போது பொதுமக்கள் காட்சிக்கு வைக்கவும் ஒப்புக் கொள்ள வேண்டும். இதுபோன்ற பல நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொள்பவர்களுக்கே டைட்டானிக் பொருட்களை விற்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நியூயார்க் குர்ன்சே ஏல நிறுவனம் ஏற்கனவே டயானாவின் நகைகள், அமெரிக்க அதிபர் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்ட போது பாதுகாப்புக்கு சென்ற போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிள் போன்ற பல அரிய பொருட்களை ஏலம் விட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கொலை வெறியுடன் அலையும் கொ (லை) ள்கை கூட்டம்?

சேலம் பழைய பேருந்து நிலையம் கடைகளில் அராஜகத்தின் உச்சத்திற்கு சென்றனர்.

பழைய பேருந்து நிலையம் அருகிலேயே சேலம் தெற்கு சட்டமன்ற அலுவலகம் உள்ளது அங்கு இருந்து கிளம்பிய அ.தி.மு.க.வினர் முழு போதையில் கடைகளில் தொங்கிய நக்கீரன் விளம்பர பேப்பர்களை கிழித்தனர். உள்ளே கடைகளுக்குள் இருந்து நக்கீரனை பறித்தனர் எதற்காக பரிக்கிறீர்கள் என கடை உரிமையாளர்கள் கேட்க 'கெட்ட வார்த்தையில் பேசிய அ.தி.மு.க.வினர்' நக்கீரனை பறித்து எடுத்து சென்றனர். உடனே பணம் கேட்க ,'அம்மா ஆட்சியிலா பணமா கேட்குற என்று 50க்கும் மேலானா நக்கீரனை எடுத்து சென்றனர். அந்த பகுதியில் அனைத்து கடைகளிலும் இதே நிலைமை தான். பேருந்து நிலையத்தில் இருந்து எட்டும் தூரத்தில் இருக்கும் சேலம் டவுன் காவல்துறை கண்டுகொள்ளவே இல்லை.

காவல்துறை எதிரிலேயே ஒரு பீடா கடை உள்ளது அங்கு குவிந்த கரைவேட்டிகள் அந்த கடையில் இருந்த பெண்மணியை மிரட்டிவிட்டு 17 நக்கீரனை பறித்து சென்றனர். இதை வேடிக்கை பார்த்தபடியே இருந்தது காவல்துறை

ஒருபக்கம் பறித்தபடி இருக்க மறுபக்கம் சட்டமன்ற அலுவலகம் திரண்ட தெற்கு எம்.எல்.ஏ மற்றும் மா.செ வான எம்.கே.செல்வராஜ் மற்றும் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ வெங்கடாசலம் ஆகியோர் கடும் கோபத்தில் பேச தொடங்கினர் என்ன பண்ணலாம் என திட்டமிட்டனர்

நக்கீரன் ஏஜண்ட் அலுவலகம் அடித்து நொறுக்கலாம் என ப்ளான் போட்டனர் ஆனால் அது எங்கு உள்ளது என தெரியாததால் குழம்பினர் நக்கீரன் நிருபரை அடிக்கலாமா? என பேசினர். இவ்வாறு திட்டமிட்டபடி இருக்க 50க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் குவிய தொடங்கினர். அவர்களை எல்லாம் திரட்டி கொண்டு அருகில் இருந்த அண்ணா சிலை அருகே சென்று நக்கீரன் இதழ்களை எரித்தனர்.

அங்கேயே நக்கீரன் அலுவலகம் எங்க இருக்கு தேடுங்கடா என சில அ.தி.மு.க.வினர் கத்த டூ வீலரில் நமது அலுவலகத்தை தேட கிளம்பியது ஒரு கும்பல்., காட்டுமிராண்டிதனமாக அடித்து உதைக்க வெறியேறிய கண்களோடு சீறிக்கொண்டு சுற்றி வந்தனர் ஜனநாயகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுகவினர்.

Friday, January 6, 2012

சிங்களத்தியின் பிடியில் சிக்கிக்கொண்ட கருணா ?

இலங்கையில் தமிழ் மக்களுக்காக போராடிய விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பிரபாகரன் தலைமையிலான படையில் கிழக்கு மாகாண படையை நிர்வகிக்கும் கர்னல் பொறுப்பில் இருந்தவர் விநாகமூர்த்தி முரளீதரன் என்ற கருணா.

ஒரு கட்டத்தில் இவர் செய்த நிதிமுறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து பிரபாகரன் இவரைக் கண்டித்தார். உடனே தனது பொறுப்பில் இருந்த வீரர்களுடன் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறிய கருணா, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்ற தனி அமைப்பை தொடங்கினார்., அத்துடன் விடுதலைப்புலிகள் இயக்க வீரர்கள் மீதும் தாக்குதல் நடத்தினார். பின்னர் ராஜபக்சே அரசிடம் விலை போனார்.

கடந்த 2008ம் ஆண்டு ராஜபக்சே கட்சியில் சேர்ந்த கருணா, தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். பின்னர் 2009ம் ஆண்டு இவருக்கு தேசிய ஒருமைப்பாட்டு துறை அமைச்சர் பதவியையும் ராஜபக்சே வழங்கினார்.

சொகுசு வாழ்க்கையை அனுபதிதுக்கொண்டிருக்கும் கருனா, அவ்வப்போது வெளிநாடுகளுக்கும் சென்று அங்குள்ள தமிழின ஆதரவாளர்களையும் சந்தித்து அவர்களையும் தங்கள் பக்கம் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் கருணாவின் துரோகத்தை மறக்க தமிழர்கள் ஒருபோதும் தயாராக இல்லை. அவரை புறக்கணித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 1ம் தேதி இலங்கை ஓட்டல் ஒன்றில் புத்தாண்டை மது விருந்துடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இவரது அலுவலகத்தில் அந்தரங்க பெண் உதவியாளராக இருப்பவர் சாந்தினி. இவருடன் மிக நெருக்கமாக ஆடிப்பாடி மகிழ்ந்துள்ளார் கருணா.

இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. இவையெல்லாம் கருணா மீது ஏற்கவே உலகத்தமிழர்களுக்கு இருக்கும் கோபத்தை பன்மடங்கு அதிகரிக்கச்செய்துள்ளன.

கருணாவின் சுயரூபத்தை பாருங்கள் என்று தமிழர்கள் தங்கள் கொதிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். தமிழினத்தை காட்டிக்கொடுத்தற்கு ராஜபக்சே கொடுத்த பரிசுதான் இந்த சிங்களப்பெண் சாந்தினி என்றும் கடுமையாக சாடியுள்ளனர்.

விஜய் சூர்யா யார் முன்னனி ஏ ஆர் முகதாஸ் !!

விஜய்யின் நடிக்கும் நண்பன் பொங்கல் ரிலீசுக்கு தயாராக இருக்க நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. இந்தியாவின் மிக முக்கியமான ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் கைவண்ணத்தில் விஜய் நடிக்கும் அதிரடி காட்சிகளை படமாக்கி வருகிறார் முருகதாஸ்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யின் உற்சாகத்தையும் உழைப்பையும் பார்த்த முருகதாஸ் தன் நட்பு வட்டாரத்தில் விஜய்யை வியந்து பாராட்டி வருகிறாராம்.

ஏழாம் அறிவு படத்தின் அறிவிப்பு விழாவில், நான் எந்தக் கதையை எழுதினாலும் அந்த கதாபாத்திரத்தில் சூர்யா தான் என் நினைவுக்கு வருகிறார். அவரை என்னால் தவிர்க்க முடியவில்லை. அவரை மனதில் வைத்துத்தான் என்னால் எல்லாக் கதைகளையும் எழுத முடிகிறது என்று சூர்யாவையும் ஏகத்துக்கும் புகழ்ந்தார் ஏ.ஆர்.முருகதாஸ்.

சினிமாவுல இதெல்லாம் ஜகஜமப்பா! கமல் நடித்த நாயகன் பட பாணியில் துப்பாக்கி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Thursday, January 5, 2012

பாக்கிஸ்தான் கொடி ஏற்றிய! 6 தீவிரவாதிகள் கைது!?

பெங்களூர்: கர்நாடகா மாநிலம் சிந்தகியில் அரசு அலுவலகத்தின் முன்னால் உள்ள கொடி மரத்தில் பாகிஸ்தான் கொடியை ஏற்றியது தொடர்பாக ஆறு ஹிந்துத்துவா தீவிரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஸ்ரீராமசேனா ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கத்தின் மாணவர் பிரிவை சார்ந்தவர்கள் ஆவர். பிஜாப்பூர் மாவட்ட தலைநகரில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள சிந்தகி நகரத்தில் உள்ள தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள மினி விதானசவுதா என்று அழைக்கப்படும் வளாகத்தில் புதுவருட தினத்தில் பாக்.கொடி ஏற்றப்பட்டிருந்தது. இச்சம்பவத்தை தொடர்ந்து ஹிந்துத்துவா அமைப்புகள் கண்டனம் தெரிவித்து களமிறங்கின.

பாகிஸ்தான் கொடியை ஏற்றியதன் பின்னணியில் முஸ்லிம்கள் தாம் என குற்றம் சாட்டி கபட வேடதாரிகளான ஹிந்துத்துவா அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மேலும் பாக்.கொடி ஏற்றியதை கண்டித்து அப்பகுதியில் வி.ஹெச்.பி, பஜ்ரங்தள் உள்ளிட்ட ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் முழு அடைப்பையும் நடத்தின. இச்சம்பவத்தின் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயன்ற பா.ஜ.க, கொடி ஏற்றப்பட்ட இடத்தை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சிகளையும் நடத்தியது.

பிஜாப்பூர் நகரத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பும் இதைப் போன்றதொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால், குற்றவாளிகள் மீது போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஊர்மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். (இச்சம்பவம் குறித்து வந்தேறி பார்ப்பன நாளேடு எந்த செய்தியையும் வெளியிடவில்லை.)

காசு கொடுத்தால் கால் முழம் துணி மதி! மலபார் நடிகை!!

தமிழ், தெலுங்கு, கன்னட,மலையாள படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஸ்வேதா மேனன். அம்மணியின் கவர்ச்சியில் மயங்காத இளசுகளே இல்லை என்கிற அளவுக்கு கவர்ச்சி விருந்து படைத்து வரும் ஸ்வேதா, வசந்தபாலனின் அரவான் படத்தில் நடித்துள்ளார்.

படம் இன்னமும் ரிலீஸ் ஆகாத நிலையில், ஸ்வேதாவின் கேரக்டர் பற்றிய செய்தி வேகமாக பரவி வருகிறது. படத்தில் அம்மணி விலைமாது கேரக்டரில் நடித்துள்ளாராம். சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட ஸ்வேதா, திருமணத்துக்கு பிறகு நடிக்கும் முதல் படம் இது. அந்த படத்தில் இப்படியொரு கேரக்டரில் நடித்திருக்கிறீர்களே, உங்கள் கணவர் எதுவும் சொல்லவில்லையா? என்றால்... ம்கூம் என்று கூறி பெரிய விளக்கமே கொடுக்க ஆரம்பித்து விடுகிறார்.

என் கணவர் என்னை ரொம்பவே புரிஞ்சு வச்சிருக்காரு. கவர்ச்சி காட்சியில் எனக்கு என்ன வேணும் என்பதை கூட அருகிலிருந்து கவனிக்கிறார்னா பாருங்களேன். சூட்டிங் நேரத்தில் எனக்கு ஒத்தாசையாக இருப்பவரும் அவரே, என்று கூறும் ஸ்வேதா, அரவான் பட சூட்டிங்கின்போது தனது கணவரையும் கூடவே வைத்துக் கொண்டாராம்.(எல்லாம் பணம் படுத்தும் பாடுதான்)

மிதமான உணவு அளவான ஓய்வு நன்மை பயக்கும்

நிறையப் பேரு வயிறை குப்பைத்தொட்டி மாதிரி நினைக்கிறதுனால வர்ற பிரச்சனைதான் இது. பசிக்குத்தான் உணவு.. வயிற்றின் நான்கில் ஒருபங்கு உணவும், இரண்டு பங்கு தண்ணீரும், 1 பங்கு காற்றும் இருக்கணும்கிறது மருத்துவர் அறிவுரை. யார் கேக்கிறாங்க.. வயிறு புடைக்க சாப்பிடறது செரிமான கருவிகள சோர்வுகொள்ளச் செய்யுமே தவிர அவற்றை இயங்க வைக்க உதவாது..

மிதமான உணவு.. அளவான ஓய்வு.. இது ரெண்டும்தான் சுகமான வாழ்வு.,உண்டி சுருங்குவது பெண்டிற்கு மட்டுமல்ல.., ஆண்களுக்கும்கூட நல்லதுதான்..

கண்டதையும் கண்ட நேரத்தில உள்ளே தள்ளி வயிற்ற நிரப்பினா அது என்ன செய்யும். அரைக்க முடிந்ததைத்தான் அரைக்கும். மற்றவையெல்லாம் குப்பைதான். செரிக்காது.. நெஞ்சு எரியும்.. வயிறு பொருமும்.. மலச்சிக்கல உண்டாக்கும். தூக்கம் வராது..

பசிக்கு உணவு எப்படி அவசியமோ, அதமாதிரி ஆரோக்கியத்திற்கு அளவும் அவசியம், அதுவும் சுகாதாரமான உணவா இருக்கணும்.

இப்போ என்னமோ பட்டணத்துப் பசங்களெல்லாம் ஏதோ பீஸாவாமுல்ல.. அத மல்லுக்கட்டி உள்ள தள்ளுறானுக.. வயிறு என்னத்துக்கு ஆகும்.. எளிதில செரிக்கும் உணவுதான நல்லது...

போகட்டும் இனியாவது இதையெல்லாம் நினைவில வச்சிக்க.. இப்போ நாஞ் சொல்ற மருந்த கேட்டுக்க..

இஞ்சி -1 துண்டு, பூண்டு- 4 பல்,வெற்றிலை- 2, முருங்கை இலை- 1 கைப்பிடி, நல்ல மிளகு - 4

இவைகளை இடிச்சி சாறு எடுத்து தண்ணில கலந்து குடிச்சிக்கிட்டு வா.. இது சாதா வயிற்று வலிக்கு நல்லது... குழந்தைகள் வயித்துவலிக்கும் இத கொடுக்கலாம்.. கெடுதல் கிடையாது.

Wednesday, January 4, 2012

சென்னையை கலக்க இருக்கும் A R R ன் எண்ணற்ற வாய்ப்புகள் !!

சென்னை, ஜன.5: இந்தியா-ஜெர்மனி இடையே கடந்த 60 ஆண்டுகளாக உள்ள தூதரக உறவைக் கொண்டாடும் வகையில் "எண்ணற்ற வாய்ப்புகள்' என்ற தலைப்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, லாப் இந்தியா என்ற தனியார் நிறுவனம் சார்பில் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

ஜெர்மனியில் உள்ள பேபல்ஸ்பெர்கை சேர்ந்த தி ஜெர்மன் ஃபிலிம் இசைக் குழு சார்பில் புது தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் கிளாசிக் இன்கான்டேஷன்ஸ் என்ற தலைப்பில் இசை நகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இந்த நிகழ்ச்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பிரபல பாடல்கள், பின்னணி இசை ஆகியவை இசைக்கப்பபடும்.

இது குறித்து சென்னையில் புதன்கிழமை ஏ.ஆர்.ரஹ்மான் செய்தியாளர்களிடம் கூறியது: எனது இசை நிகழ்ச்சிகள் பெரும்பாலும் பாடல் வரிகள், நடனங்கள் இல்லாமல் நடைபெற்றது கிடையாது. இவை இல்லாமல் இசை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்று நீண்ட நாள்களாக எண்ணியிருந்தேன்.

இப்போது பேபல்ஸ்பெர்கை சேர்ந்த புகழ்பெற்ற இசைக் குழு சார்பில் பாடல் வரிகள், நடனம் இல்லாமல் இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இந்தக் குழுவி 100 கலைஞர்களுக்கும் மேல் பங்கு பெறுகின்றனர். இதில் நான் இசையமைத்த ரோஜா, பம்பாய், எந்திரன் உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்கள் மற்றும் பிற மொழிகளில் வெளியான ஸ்வதேஷ், தி ரைசிங், எலிசபத்: தி கோல்டன் ஏஜ் ஆகிய திரைப்படங்களின் பாடல் மற்றும் பின்னணி இசை மற்றும் திரைப்படங்களின் தீம் இசை ஆகியவை இசைக்கப்படவுள்ளன.

இதன் மூலம் திரைப்படங்களில் வரும் இசை மற்றும் பின்னணி இசை குறித்து இசை ஆர்வலர்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும்., சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளேன். மேலும், என்னுடைய கே.எம். இசைப் பள்ளியைச் சேர்ந்த பாடகர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். இந்த ஆண்டு தமிழில் வெளியாகவுள்ள திரைப்படங்கள் உள்பட 4 படங்களுக்கு இசை அமைத்து வருகிறேன் என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறினார்.

எதார்த்த நடிப்பால் கவர்ந்த கஞ்சா கருப்புக்கு அடித்தது அதிர்ஷ்டம்!

எதார்த்த நடிப்பாலும், எல்லாரையும் கவரும் சிரிப்பாலும் ரசிகர்களை சிரிக்க வைத்து கொண்டு இருப்பவர் காமெடி நடிகர் கஞ்சா கருப்பு.

டைரக்டர் பாலாவால் அறிமுகப்படுத்தப்பட்ட கஞ்சா கருப்பு இன்று டாப்-5 காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதுநாள்வரை காமெடி நடிகராக இருந்து வந்த இவரை, ஒருவர் ஹீரோவாக்கியுள்ளார். புதுமுக இயக்குநர் தனசேகர், "மன்னார் வளைகுடா" என்ற பெயரில் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். அதில் கஞ்சா கருப்பு தான் ஹீரோ.

மனித உணர்வுகளை மையமாக வைத்து கடல்சார்ந்த கதையை தாங்கி, இதுவரை யாரும் சொல்லாத விஷயத்தை சொல்ல வருகிறார் புதுமுக இயக்குநர் தனசேகர். படத்தில் கஞ்சா கருப்புக்கு ஜோடியாக காவேரி என்பவர் நடிக்கிறார். சென்னை, ராமேஸ்வரம், பாண்டிச்சேரி போன்ற கடல்சார்ந்த இடங்களை தேர்ந்தெடுத்து படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

படத்தின் சிறப்பு அம்சமாக வெளிநாட்டுக்காரர்களையும் நடிக்க வைத்துள்ளனர். இதற்காக ஜெர்மன் மாடல் சந்திரா ராமு, அமெரிக்காவை சேர்ந்த அமி, ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜெஸி ஆட்ஸ் போலன் உள்ளிட்டவர்களையும் கஞ்சா கருப்போடு சேர்ந்து மன்னார் வளைகுடா படத்தில் நடிக்க வைத்துள்ளார் டைரக்டர்.

கோரப்புயல் சம்பவத்தால் கோபத்தின் உச்சிக்கு சென்ற மக்கள்

கோரப் புயல் தாக்குதலில், 46 ஆயிரம் மின் கம்பங்கள், 5,000 டிரான்ஸ்பார்மர்கள், 120 துணை மின் நிலைய உபகரணங்கள், 30 பெரிய டவர்கள், 10 ஆயிரத்து 470 கி.மீ., மின் கண்டக்டர்கள் (மின் கம்பி) பாதிக்கப்பட்டன. இதனால், மாவட்டமே சின்னாபின்னமாகியது.

கடந்த 30ம் தேதி முதல், மக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழக அரசு மீட்புப் பணிக்காக, பேரிடர் மேலாண்மை திட்ட இயக்குனர் அபூர்வா தலைமையில், ஐந்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். புயலுக்குப் பின், கடலூர் நகரில் எங்கு பார்த்தாலும் சுழலும் விளக்குகள் பொருத்தப்பட்ட கார்கள், "ஜி' பொறிக்கப்பட்ட வாகனங்கள் சுழன்று வந்து கொண்டிருக்கின்றன.

மீட்புப் பணியே முடியாததால், மாவட்ட நிர்வாகத்தால் நிவாரணப் பணிக்குச் செல்ல முடியவில்லை. மின் துறையில் தினமும் 1,000 பேர் இரவு பகலாக பணியாற்றி, வெறும் 35 டிரான்ஸ்பார்மர்கள் மட்டுமே சரிசெய்து, இதுவரை 2 கி.மீ., தூரம் தான் மின்சாரம் கொண்டு வரப்பட்டுள்ளது. கிராம சாலைகளில் விழுந்துள்ள மின் கம்பங்கள், மரங்களை அப்புறப்படுத்தாததால், தொடர்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையைக் கடந்து ஐந்து நாட்களாகியும், கிராமப் பகுதிகளில் மீட்புப் பணி துவக்கப்படாததால், மக்கள் அரசின் (ஜெயலிதா) மீது கடும் கோபம் கொண்டுள்ளனர்.

இடைத்தேர்தல் பாணியை மீட்புப் பணியில் காட்டலாமே! : இடைத்தேர்தல் என்றால், கிராமத்திற்கு ஒரு அமைச்சர், தெருவுக்கு ஒரு எம்.எல்.ஏ., என தொகுதியை முற்றுகையிட்டு, ஒவ்வொருவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் சில கோடி ரூபாயை செலவிட்டு, அப்பகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து ஓட்டுகளைப் பெறுகின்றனர்.

அதேபோன்று, "தானே' புயலில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தில் அனைத்து அமைச்சர்கள், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் முகாமிட்டு, ஒவ்வொருவரும் சில கிராமங்களைப் பிரித்துக் கொண்டு, நிவாரணப் பணியை மேற்கொண்டிருந்தால், அதிகாரிகளும் துரிதமாக செயல்படுவர். அதைக் கண்டு, அந்தந்த பகுதி மக்களும் விழுந்த மரங்கள் மற்றும் மின் கம்பங்களை அகற்றவும், புதிய மின் கம்பங்களை நடுவதற்கும் தாமாகவே முன் வருவர். இதனால், ஓரிரு நாட்களிலேயே மீட்புப் பணியை முழுமையாக நிறைவேற்ற முடியும். மக்களும் இயல்பு நிலைக்கு திரும்புவர். அதன் பிறகு, புயலால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு மேற்கொள்ள வேண்டிய புனரமைப்புப் பணியைத் துவக்க, அரசுக்கும் வசதியாக இருக்கும்.

Tuesday, January 3, 2012

செல்போன் நம்பரை மாற்றுவதுபோல் வங்கிகளை மாற்றும் வசதி

புது தில்லி, ஜன.4: செல்போனில் நம்பர் போர்டபிளிட்டி எனும் வசதி சமீபத்தில் அறிமுகமானது. இதனால் செல்போன் எண்ணை மாற்றாமலேயே விரும்பும் செல்போன் சேவையளிக்கும் நிறுவனத்துக்கு மாறிக் கொள்ளலாம்.

இதேபோன்ற வசதியை வங்கிகளில் சேமிப்புக் கணக்கில் அமல்படுத்துவது குறித்து ஆராயப்படுகிறது. இந்த விஷயத்தில் இப்போது சில தொழில்நுட்ப சிக்கல்கள் உள்ளன. அவை என்னவென்று கண்டறியப்பட்டுவிட்டது. விரைவிலேயே அவை தீர்க்கப்பட்டு இத்தகைய வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று நிதிச் சேவைப்பிரிவு செயலர் டி.கே. மித்தல் தெரிவித்தார்.

நிதியமைச்சகக் கூட்டத்தில் பொருளாதார விவகாரத்துறைச் செயலர் ஆர். கோபாலன், நிதித்துறைச் செயலர் ஆர்.எஸ். குஜ்ரால், தலைமை பொருளாதார ஆலோசகர் கெüஷிக் பாசு ஆகியோர் பங்கேற்றனர்.

வங்கிகள் அடையாளக் குறியீடு, உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளுங்கள் படிவம் (கேஒய்சி), வங்கித் தீர்வு ஆகியன சேமிப்புக் கணக்கைப் பராமரிப்பதில் பின்பற்றப்படும் முக்கிய அம்சமாகும். இவை முறையாக இருந்தால் வேறு வங்கிகளுக்கு மாற்றுவது எளிதாகும்.

கை பேசியில் பதிவு செய்ய வந்துவிட்டது வசதி!

செல்போன் மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை ஐ.ஆர்.சி.டி.சி அமல்படுத்தி உள்ளது.

பதிவு செய்ததும், இணையதள வசதி உள்ள செல்போனில் மட்டுமே இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

செல்போனில் முன்பதிவு செய்ததும், முன்பதிவை உறுதி செய்து ஒரு எஸ்.எம்.எஸ். தகவல் வரும். பயணத்தின் போது இந்த ஸ்.எம்.எஸ். தகவலை காட்டினால் போதும்.

இந்த தகவலை, ரயில்வே அமைச்சக உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது நல்ல முறை,.. காகிதம், இங்க, திரும்ப கிடைக்காத நேரம் எல்லாமே மிச்சம்.

வாயால் வாய்ப்பு இழந்த வடிவேலுக்கு வாய்ப்பு!!

காணாமல் போனவர்கள் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்களில் நடிகர் வடிவேலுவும் ஒருவர். ஆனால் வாய் ஜம்பம் மட்டும் இன்னும் குறையாமல், படங்களில் நடிப்பதை நான் தான் தவிர்த்து வருகிறேன் என தொடர்ந்து கூறி வருகிறார்.

இந்நிலையில், இயக்குனர் சிம்புத்தேவன் தனுஷை வைத்து அவர் எடுக்க இருக்கும் அடுத்த படத்தில் வடிவேலு காமெடியனாக நடித்தால் நன்றாக இருக்கும் என சிபாரிசு செய்திருக்கிறார். ஏற்கனவே தனுஷ் நடித்த படிக்காதவன் படத்தில் வடிவேலு கால்ஷீட் பிரச்னையால் மாற்றப்பட்டார்.

இதனால் தனுஷ், தனது கோரிக்கையை ஏற்றுக் கொள்வாரா என தயக்கத்தில் இருந்தாராம் சிம்புத்தேவன். ஆனால் நடிகர் தனுஷ் பெருந்தன்மையாக, ஏற்கனவே வடிவேலு நிறைய பட்டுவிட்டார் அதனால் இனிமேல் அவர் சரியாக இருப்பார் என்று பரிவோடு சொல்லி பச்சைக் கொடி காட்டியிருக்கிறாம். இதனால் வடிவேலு ரீஎன்ட்ரி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது, இனியாவது வாய்மூடி தன் வேலையை கவனித்தால் மீண்டும் உயரம் எட்டலாம்.

Monday, January 2, 2012

உலக (சமாதான) சாதனைக்காக வேண்டி பூ மாலை கோர்ப்பு

சென்னை, ஜன 3: பல்வேறு விதமான போட்டிகள் மற்றும் அரிய சாதனைகள் செய்து உலக அளவில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிப்பார்கள்.

அந்த வரிசையில் அம்பத்தூர் அன்னை வைலட் கலைக்கல்லூரியும், சேத்துப்பட்டு அரிமா சங்கமும் இணைந்து உலக சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் உலகிலேயே நீளமான பூ மாலை கோர்க்க முடிவு செய்தனர்.

இந்த சாதனை நிகழ்ச்சி நேரு விளையாட்டு அரங்கில் இன்று நடந்தது. தொழில் அதிபர் என்.ஆர். தனபாலன், தலைமை தாங்கினார். மொத்தம் 2 டன் கேந்தி பூக்கள் கொண்டு வரப்பட்டது. 80 பேர் அதனை மாலையாக கோர்த்தனர்.

பின்னர் நேரு ஸ்டேடியத்தை சுற்றிலும் 6 சுற்றுகளாக பூ மாலையை வைத்திருந்தனர். காலை 9 மணிக்கு பூ மாலை கட்டும் பணி தொடங்கியது. 3 மணி நேரத்தில் கட்டி முடித்தனர்.

உலக அளவில் இதற்கு முன்பு அமெரிக்காவில் 3 கி.மீ. நீள பூ மாலை கட்டபட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் மத தலைவர்கள் எஸ்ரா சற்குணம், மகாநமோ தியோரா, மாதாஜி யத்தீஸ்வரி, குமாரபிரியா, ஜியானி பிரதிபால்சிங், எஸ்.எம். இதயதுல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

குழுக்க கோடிகளை கொட்டச்சொள்ளும்! பாலிவுட் நடிகை!!

இந்தியில் சூப்பர் ஹிட்டான சல்மான் கானின் தபாங் படம், தமிழில் ஒஸ்தி என்ற பெயரில் சமீபத்தில் வெளியானது.

இப்போது இதே தபாங் படம் தெலுங்கிலும் ரீ-மேக் ஆக இருக்கிறது. இதற்கு கபார்சிங் என்று பெயரிட்டுள்ளனர். இதில் நாயகனாக பவன் கல்யாணும், நாயகியாக ஸ்ருதிஹாசனும் நடிக்கின்றனர். ஹரிஸ் சங்கர் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் முதற்கட்ட சூட்டிங் நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில், தபாங்கில் வந்த முன்னி, தமிழில் வந்த கலசலா பாடல் போல, தெலுங்கிலும் ஒரு அருமையான குத்தாட்ட பாடல் இருக்கிறதாம். இந்த பாடலுக்கு ஆட தான் நடிகை பிபாஷா பாசுவை அணுகியுள்ளனர் கபார்சிங் படக்குழுவினர்.

பிபாஷாவும் ஓ.கே., சொல்லியிருக்கிறார். ஆனால் அதேசமயம் ரூ.1கோடி சம்பளம் கேட்டாராம். ஒரு பாட்டுக்கு ஒரு கோடியா...! என்று வாயடைத்து போன கபார்சிங் படக்குழுவினர், அவ்வளவு முடியாது வேண்டுமென்றால் ரூ.50 லட்சம் தருவதாக பேசியுள்ளனர். ஆனால் பிபாஷா பாசு முடியாது என்று சொல்லிவிட்டாராம்.

Sunday, January 1, 2012

புத்தாண்டில் எரிச்சலை ஏற்படுத்திய டுவிட்டர்!

லண்டன் : "ட்விட்டர்' சமூக வலைதளம் மூலம் நேற்று முன்தினம், உலகம் முழுவதிலும் உள்ளோர், பரஸ்பரம் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர். இந்நிலையில், பிரிட்டனில் நேற்று முன்தினம், மதிய நேரத்தில், "ட்விட்டர்' ஸ்தம்பித்து விட்டது.

அந்த நேரத்தில், ஜப்பானில் புத்தாண்டு துவங்கிவிட்டதால், "ட்விட்டரில்' வாழ்த்துக்கள் குவிய ஆரம்பித்து விட்டன. அதாவது, நிமிடத்துக்கு, 16 ஆயிரத்து 197 வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இதனால், "ட்விட்டர்' ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஸ்தம்பித்து விட்டது.

இதனால், ஏற்கனவே வாழ்த்து தெரிவித்தவரும், வாழ்த்து தெரிவிக்கப்பட்டவரும் தங்கள் செய்திகளைக் காண முடியாமல் தவித்தனர். இதன் காரணமாக, பயனாளிகள் கடும் எரிச்சல் அடைந்தனர்.

மேலும், அவர்கள் அனுப்பிய செய்திகளில், "ட்விட்டர் ஈஸ் ஓவர் கெபாசிட்டி என்ற, மூன்று வார்த்தைகள் எனது இன்றைய நாளை வீணாக்கிவிட்டன' எனவும், "இந்த புத்தாண்டில் "ட்விட்டர்' எடுக்க வேண்டிய உறுதிமொழி என்னவென்றால், "இனி நான் எப்போதும் ஓவர் கெபாசிட்டி என்ற நிலைக்குப் போக மாட்டேன்' என்பது தான்' எனவும் கிண்டல் செய்துள்ளனர்.

இனப்படுகொலையாலனுக்கு எதிராக இணையும் இருவர்!?

அஹ்மதாபாத்: குஜராத் முன்னாள் டி.ஜி.பி ஆர்.பி.ஸ்ரீகுமாரும், மோ(கே)டி அரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட்டும் குஜராத் இனப் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்காக தங்களிடையே நிலவிய பகைமையை மறந்துவிட்டு ஒன்றிணைய தீர்மானித்துள்ளார்கள்.

குஜராத் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்காக ஒன்றாக செயல்பட தயார் என சஞ்சீவ் பட் நேற்று முன்தினம் ஒரு காலத்தில் தனது மேல் அதிகாரியான ஸ்ரீகுமாருக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

தங்களிடையே நிலவும் பகையுணர்வு அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு உதவுவதோடு, இனப் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிகிடைப்பது இயலாமல் ஆகிவிடும் என பட் குறிப்பிட்டிருந்தார்.

சஞ்சீவ் பட்டின் கோரிக்கையை வரவேற்பதாகவும், இருவருக்கும் இடையேயான பிரச்சனைகள் தன்னை மிகவும் வேதனை அடையச் செய்ததாகவும் ஸ்ரீகுமார் சஞ்சீவ் பட்டிற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் எதிரிகளுக்கு எதிராக தீரமாக போராடும் சஞ்சீவ் பட்டைப்போன்ற ஒருவருக்கு எதிராக தான் ஒருபோதும் மோசமாக ஒன்றும் செய்யவில்லை என ஸ்ரீகுமார் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். நீதிக்கான போராட்டத்தில் தன்னுடைய அனைத்து உதவிகளையும் சஞ்சீவ் பட் எதிர்பார்க்கலாம் என ஸ்ரீகுமார் சஞ்சீவ் பட்டிற்கு உறுதி அளித்துள்ளார்.

இனப்படுகொலை நிகழ்ந்து 9 ஆண்டுகள் கழித்து நரேந்திர மோ(கே)டிக்கு எதிராக களமிறங்கிய சஞ்சீவ் பட்டின் நடவடிக்கைகள் குறித்து சந்தேகத்தை எழுப்பி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நானாவதி கமிஷனுக்கு ஸ்ரீகுமார் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே அறிக்கை போர் துவங்கியது.

மூன்று முறை அமெரிக்கா செல்வதற்கு முயற்சித்து வெளி ஏற்றப்பட்டன் இந்த மோ(கே)டி.

அந்த மாதிரி விஷயங்களை அதிகம் பார்க்கும் இந்தியர்கள்?

உலக மக்கள் தொகையை ஒப்பிடும் போது சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது.

எனவே செக்ஸ் விஷயத்தில் இந்தியர்கள் அதிகம் நாட்டம் உடையவர்கள் என்பது உலகறிந்தது. இருந்தும் ஆன்லைனில் பார்த்து ரசிப்பதிலும் இந்தியர்கள் ஆர்வம் மிகுந்தவர்கள் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

2011-ம் ஆண்டில் கூகுல் இணைய தளத்தில் செக்ஸ் காட்சிகளை அதிக அளவில் பார்த்து மகிழ்ந்த ஆசிய நாடுகள் குறித்த தகவல் திரட்டப்பட்டது. அதில் டாப் 10 வரிசையில் 7 இந்திய நகரங்கள் இடம் பெற்றுள்ளன. லக்னோ 2-வது இடத்தையும், கொல்கத்தா 3-வது இடத்தையும் பிடித்துள்ளது. புனே 5வது, புதுடெல்லி 6-வது மற்றும் பெங்களூர் 7-வது இடத்தையும் பிடித்துள்ளன.

அதே நேரத்தில் சென்னை 8-வது இடத்தையும் மும்பை 9-வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்திய நகரங்கள் அல்லாத பட்டியலில் இலங்கை தலைநகர் கொழும்பு முதலிடத்தை பெற்றுள்ளது.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!