6:58 AM
Unknown
மல்லிகைப் பூவை நம் இந்தியப் பெண்கள் தலையில் சூடிக்கொள்வார்கள். காரணம் மல்லிகைப்பூவானது மணத்தைக் கொடுப்பதுடன் உடல் சூட்டையும் தணித்து மன ஆறுதலையும் அளிக்கிறது.
மல்லிகைப் பூவிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும். சரும எரிச்சல் நீங்கும். சரும பாதிப்புகளைப் போக்கும்.
கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். கண் பார்வை நரம்புகளில் வறட்சித் தன்மையைப் போக்கி பார்வையை தெளிவாக்கும். கண் எரிச்சல், பார்வைக் கோளாறுகள் நீங்கும். பித்தத்தை தணித்து சீராக்கும்.
தலையில் நீர் கோர்த்தல், ஒற்றைத் தலைவலி போன்றவற்றிற்கு மல்லிகை எண்ணெய் சிறந்தது.
ஆறாத புண்களை ஆற்றும் தன்மை மல்லிகை எண்ணெய்க்கு உண்டு.
மல்லிகைப் பூவை நன்கு கையில் வைத்து கசக்கி நெற்றியில் தடவினால் தலைவலி நீங்கும்.
உடலில் வீக்கம் உள்ள பகுதிகளில் மல்லிகைப்பூவை அரைத்து பூசிவர வீக்கம் மறையும்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பில் பால் கட்டிக்கொண்டு அவதிப்படுவார்கள். இவர்கள் மல்லிகைப்பூவை அரைத்து மார்பின்மீது பூசிவந்தால் பால் கட்டுதல் நீங்கி சீராகும்.
தேங்காய் எண்ணெய் - 100 மி.லி.
உலர்ந்த மல்லிகைப்பூ - 5 கிராம்
கறிவேப்பிலை -10 இலை
எடுத்து காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம்.
மல்லிகை மணத்திற்கு மட்டுமல்ல, மருத்துவத்திற்கும் என்பதை புரிந்து அதனைப் பயன்படுத்தி ஆரோக்கியம் பெறுவோம்., மணத்தோடும் மருத்துவ குணமும் சேர்ந்தவை தான் மலர்கள்.
7:03 PM
Unknown
கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை தமன்னா, கல்லூரி படம் மூலம் பிரபலமானார்.
தொடர்ந்து விஜய், தனுஷ், கார்த்தி, ஜெயம் ரவி என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு, முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டு இருந்த தமன்னா, திடீரென தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கி தெலுங்கு பக்கம் போனார். இதற்கு காரணம் தமிழில் பிரபல நடிகர் ஒருவருடன் ஏற்பட்ட காதல் தோல்வி தான் என்று கிசுகிசுக்கப்படுகிறது.
இந்நிலையில் தெலுங்கில் தீவிரமாக நடித்து வரும் தமன்னாவிடம், ஏன் தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கிவீட்டீர்கள் என்று கேட்டால், தமிழ் பட உலகை விட்டு நான் ஒதுங்கவில்லை. தெலுங்கில் நடித்து ரிலீசான படங்கள் ஹிட்டானதால் நிறைய பட வாய்ப்புகள் வந்தன. மூன்று படங்களில் பிசியாக நடித்து வருகிறேன். விரைவில் தடம்மாறி இங்கு தமிழ் படமொன்றிலும் ஒப்பந்தமாக இருக்கிறேன். சினிமாவில் வெற்றி தோல்வி, ஏற்றம் இறக்கம் நிறைந்ததுதான் வாழ்க்கை என்பதை புரிந்து வைத்துள்ளேன். கடினமாக உழைத்தால்தான் வெற்றி கிடைக்கும். மீண்டும் தமிழ்படங்களில் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.
10:43 AM
Unknown
வேலூர் மாவட்டம் காட்பாடி துணை சுகாதார நிலையத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் கணக்கில் வராத 20 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.
டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு உதவி திட்டத்தின் கீழ், கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் 6 ஆயிரம் ரூபாய் நிதியை லஞ்சம் பெற்றுக்கொண்டு வழங்குவதாக வந்த ரகசிய தகவலையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர்.
கிராம சுகாதார செவிலியராக பணியாற்றி வரும் சரளா என்பவரிடம் இதுகுறித்து விசாரணை லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரிடம் இருந்து கணக்கில் வராத 20 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். 20 கர்ப்பிணி பெண்களுக்கு காசோலை வழங்கியபோது, ஒரு காசோலைக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம், 20 ஆயிரம் ரூபாயை சரளா வசூலித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் பயனாளிகளுக்கு வழங்க வைத்திருந்த 90 ஆயிரம் மதிப்புடைய காசோலைகளையும் போலீசார் கண்டுபிடித்தனர்., பின்பு கைதுசெய்தனர்.
6:47 AM
Unknown
சென்னை : நிலையான சுற்றுச்சூழல் நிலையை, தமிழகம் எட்டுவது கடினம்' என, யுனிசெப் அமைப்பின், தமிழக மற்றும் கேரள மாநிலத்திற்கான தலைவர் சதீஷ்குமார் பேசினார்.
ஆண்டுதோறும், அக்.15ம் தேதி, உலக கை கழுவுதல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை தேனாம்பேட்டையில், உலக கை கழுவுதல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. அவ்வை இல்லம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர், கை கழுவுதலின் அவசியத்தை விளக்கும் பாடல்கள் மற்றும் நாடகங்களை நடத்திக் காட்டினர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற, யுனிசெப் அமைப்பின் தமிழக மற்றும் கேரள மாநிலத்திற்கான தலைவர் சதீஷ்குமார் பேசியதாவது: சோப்பு உபயோகித்து கை கழுவுதலை தொடர்ந்து கடைப்பிடித்தால், குழந்தைகள் இறப்பை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். மத்திய அரசு, சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஆனால், இதுகுறித்த விழிப்புணர்வு, மக்களிடம் சரியாக சென்றடையவில்லை. கடந்த 2000ல், புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்கு திட்டத்தை, ஐ.நா., அறிவித்தது. இதன்படி, நிலையான சுற்றுச்சூழல் நிலையை, தமிழகம் எட்டுவது கடினம்' என்றார்.
அரசியல் வாதிகள் பதவியில் அமர்ந்ததும் தங்களுக்கு சொத்து குவிப்பதும் தன்னை சார்ந்தவர்களுக்கு பதவிகள் வழங்குவதும்தான் இவர்கள் முதல் வேலை.
1:20 PM
Unknown
நயன்தாரா மீதுள்ள காதல் மோகத்தால், காதலித்து திருமணம் செய்த முதல் மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார் பிரபுதேவா. கூடவே ரமலத்திற்கு கோடிக்கணக்கான சொத்துக்களையும் எழுதி கொடுத்தார்.
விவாகரத்து பெற்று மனைவியை பிரிந்தாலும், பிரபுதேவாவுக்கு பிள்ளைப்பாசம் விட்டபாடில்லை. இதன் காரணமாக ரமலத்தை விட்டுப் பிரிந்த பின்னரும் கூட மும்பையிலிருந்து, சென்னைக்கு ஓடி வந்து பிள்ளைகளைப் பார்த்து வந்தார். சமீபத்தில் சூட்டிங் செல்வதாக நயன்தாராவிடம் பொய் சொல்லி, தனது பிள்ளைகளை பார்க்க வந்துள்ளார் பிரபுதேவா. இந்த விஷயம் நயன்தாரா காதுகளுக்கு எட்ட இருவருக்கும் இடையே பிரச்சனை உருவாகிவிட்டது. பிள்ளைகளைப் பார்ப்பதாக இருந்தால என்னை மறந்து விடு, என்று கூறி விட்டு கேரளாவுக்குப் போய் விட்டார் நயன்தாரா.
நயன்தாராவை சமாதானம் செய்ய பிரபுதேவாவும் கேரளா பறந்துள்ளார். ஆனால் வீட்டுக்குள்ளேயே விடாமல் கதவை அடைத்துவிட்டார். சுமார் இரண்டு மணி நேரமாக வீட்டிற்கு வெளியே நின்று மனம் நொந்து சென்னை திரும்பினார். ஆனால் இப்படியொரு பிரச்சனை நடக்கவே இல்லை என்றும், நாங்கள் எப்போதும் போல சந்தோஷமாகத்தான் இருக்கிறோம் என்று நயன்தாரா கூறி வருகிறார்.
இதுஒருபுறம் இருக்க, பிரபுதேவாவின் அப்பா சுந்தரமும், நயன்தாரவுக்கு ஆதரவாக பேசி வருகிறாராம். அதுதான் முதல் மனைவியை அத்து விட்டாச்சே, அப்புறம் இன்னும் என்ன பாசம் வேண்டி இருக்கு என்று வார்த்தையால் தினம், தினம் பிரபுதேவாவை சுடுகிறாராம். இப்படி மாறி, மாறி நயனதாராவும், தனது தந்தையும் பேசி வருவதால், என்ன செய்வது என்று புரியாமல் பெரும் தவிப்பில் இருக்கிறாராம் பிரபுதேவா. தனது பிள்ளைகளை விட்டுப் பிரிவது எப்படி என்பது தெரியாமல் விழிக்கிறாராம்.
இதெல்லாம் முன்னாடியே யோசித்திருக்க வேண்டும் பிரபுதேவா சார்! பிள்ளை பாசம் என்ன அவ்வளவு சீக்கிரத்தில் விட்டுவிடுமா, இது புதுசு (நயன்) மவுசாகத்தான் இருக்கும் நாளை வேர்ரோறொன்று வந்தால் ..,?
6:07 AM
Unknown
காலைல லேட்டா எழுந்தாலே முதல்ல இந்தப் பிரச்சினைதான் வரும். (ஹ அட்ச்ச்ச்) ஸ்கூல், காலேஜ், வேலைக்கு போறவங்க எல்லாரும் பரபரப்பா அப்போ தான் கிளம்பிட்டு இருப்பாங்க. அதனால, எல்லா வேலையும், வீட்ல வேகவேகமா நடக்கும். அந்த வேகத்தில குளிச்சா தலையைக் கூட ஒழுங்கா துவட்ட மாட்டோம். (ஹ அட்ச்ச்ச்)
அப்படியே அந்த ஈரத்தலைல எண்ணெயைத் தேய்ச்சிடுவோம். அப்புறம் என்ன ஜலதோஷம்தான். தும்மல், இருமல், மூக்கடைப்பு, தலைவலின்னு எல்லாம் வரிசையா வரும். சரி, இந்த ஜலதோஷம் நமக்கு மட்டும்தான் வருதான்னு நீங்க ரொம்ப `பீல்' பண்ணா தீங்க. அதைப் பற்றி எனக்கு தெரிஞ்ச சில தகவலை உங்களுக்கும் சொல்றேன்.
ஜலதோஷம்ங்கறது ஒருவித அலர்ஜி சம்பந்தமான நோய். இது வந்தா, 3 அல்லது 4 நாட்கள் வரை இருக்கும். இந்த நோய் உலகம் முழுவதும் பரவி இருக்குற நோய் தான். மனிதர்களுக்கு `ரைனோ' என்ற வைரசின் மூலம் ஜலதோஷம் உண்டாகுது.
இந்த வைரஸ் 130 டிகிரி செல்சியஸ் வரை உள்ள வெப்பநிலையை கூடத் தாங்குமாம். இதை முழுமையாக அழிக்க எந்தவிதமான மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லையாம். ஆஸ்பிரின் போன்ற மருந்துகள் எல்லாம் ஜலதோஷத்தால் உருவாகும் தலைவலியை மட்டும்தான் போக்குமாம்.(ஹ அட்ச்ச்ச்)
5:01 PM
Unknown
தெலுங்கானாவுக்கு ஆதரவாக பேச மறுத்த நடிகை ஸ்ரேயாவின் கார் மீது தெலுங்கான ஆதரவாளர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அல்லரி நரேஷ் என்பவரும் தெலுங்குப்படத்தில் நடித்து வருகிறார் ஸ்ரேயா. ஐதராபாத்தில் உள்ள ரங்கா பல்கலைக்கழகத்தில் அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது.
அப்போது அங்கு வந்த தெலுங்கானா ஆதரவாளர்கள் படப்பிடிப்பை நிறுத்த வேண்டும் என்று கூச்சலிட்டனர். தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்றால், ‘’ஜெய் தெலுங்கானா’’ என்று முழக்கம் இட வேண்டும் என்று மிரட்டினர்.
இதற்கு ஸ்ரேயே மறுத்துவிட்டார். இதனால் ஆத்திர மடைந்த தெலுங்கானா ஆதரவாளர்கள் ஸ்ரேயாவின் கார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் ஸ்ரேயாவின் கார் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின., இது குறித்து ஸ்ரேயா, ’போராட்டக்காரர்கள் என்னிடம் நடந்துகொண்டது எந்தவிதத்தில் நியாயம்? ஜெய் தெலுங்கானா என்று கூறச்சொல்கிறார்கள். கற்களை வீசி தாக்குகிறார்கள்.
ஆனால் இந்த சம்பவங்களை போலீசார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். சுதந்திர நாட்டில் இதுதான் பாதுகாப்பா? என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
11:01 AM
Unknown
மும்பை: 37 பேர் படுகொலைக்கு காரணமான 2006 முதல் மலேகான் குண்டுவெடிப்பை ஆர்.எஸ்.எஸ் தங்களது துணை அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் என்ற அமைப்பை பயன்படுத்தியுள்ளது நிரூபணமாகியுள்ளது. வழக்கை விசாரித்துவரும் என்.ஐ.ஏ இதனை கண்டறிந்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ்ஸின் முஸ்லிம்கள் மத்தியில் செயல்படும் இயக்கம்தான் முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச். பணமும், இதர வசதிகளும் வாக்குறுதியளிக்கப்பட்டு செயல்படும் இவர்களை ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்திவருகிறது என முன்னரே குற்றச்சாட்டு எழுந்தது.
2006 மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அப்ரார் அஹ்மத் என்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் அனுதாபி, தானும் தனது நண்பனும் இணைந்து குண்டுவெடிப்பை நிகழ்த்தியதை ஒப்புக்கொண்டதாக என்.ஐ.ஏ அறிவித்துள்ளது.இவர் இவ்வழக்கில் அப்ரூவர் ஆவார்.
வழக்கில் கைதுச்செய்யப்பட்டுள்ள இதர எட்டு முஸ்லிம் இளைஞர்கள் நிரபராதிகள் என்பது ஏற்கனவே நிரூபணமாகியுள்ளது. அவர்களுக்கு ஜாமீன் வழங்குவதை எதிர்க்கமாட்டோம் என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று முன் தினம் அறிவித்திருந்தார்.
குண்டுவெடிப்பை நிகழ்த்த அப்ராருக்கும், அவரது நண்பருக்கும் பெருந்தொகை வழங்கப்பட்டுள்ளது என என்.ஐ.ஏ தெரிவிக்கிறது. அவரது நண்பர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.மத்திய பிரதேசத்தைச்சார்ந்த ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கான சுனில் ஜோஷி, ராமச்சந்திர கல்சங்கரா, சந்தீப் டாங்கே ஆகியோர் குண்டுவெடிப்பில் முக்கிய சூத்திரதாரிகளாவர்.
மூத்த ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் மூலமாக சுனில் ஜோஷியை அப்ரார் அறிமுகமானார் என அப்ராரின் மனைவி கூறியதாகவும் என்.ஐ.ஏ கூறுகிறது. குண்டுவெடிப்பு நிகழ்த்துவதற்கு திட்டம் தீட்ட குஜராத்தில் பரத் ரிதேஷ்வர் என்பவரின் வீட்டிற்கு அப்ரார் சென்றிருந்ததாகவும் அவர் சம்மதித்துள்ளார்.
ஹிந்துத்துவ பயங்கரவாதி அஸிமானந்தாவின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் வாயிலாக இந்தியாவில் நடந்த பல குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் பங்கு வெட்ட வெளிச்சமானது.
7:36 PM
Unknown
மத்தியில் ஆளும் கூட்டணியில் ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு என்பது முற்றிலுமாக இல்லை. காங்கிரஸ் கட்சியை எந்த விதத்திலும் நாங்கள் சார்ந்திருக்கவில்லை. மத்தியில் ஆளும் காங்கிரஸ்தான், திரிணமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளை நம்பி ஆட்சி நடத்தி வருகிறது.
இப்படி கூறுவதால், மத்திய அரசை நான் மிரட்டுகிறேன் என்று அர்த்தம் இல்லை. தொடர்ந்து பெட்ரோல் விலையை உயர்த்தி வருவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது மக்களை பெரிதும் பாதிக்கும் விஷயம். கடந்த ஓராண்டில் 11 முறை பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை.
இப்போதைய விலை உயர்வை உடனடியாக வாபஸ் பெற்றாக வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை தொடர்ந்து உயர்த்துவதைத்தான் நடைமுறையாக வைத்துள்ளனர். இதனை ஏற்கவே முடியாது.
பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளது தொடர்பாக மத்திய அமைச்சர்கள் ஜெய்ராம் ரமேஷ், ஆனந்த் சர்மா ஆகியோரிடம் பேசினேன். எங்கள் கட்சியின் முகுல் ராய், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் பேசினார்., ஆனால் இது விஷயத்தில் தன்னால் எதுவும்செய்ய முடியாது என்று பிரணாப் கூறிவிட்டார் என்றார் மம்தா.
6:10 PM
Unknown
தாய் பால் கொடுத்தால் தனது அழகு போய்விடும், சீக்கிரம் வயதானவர்கள்போல் காட்சி அளிக்கும் பலராலும் பேசப்படும் விஷயம் அப்படி இல்லை, விளக்கம் கீழே.
புட்டிப்பால் தருவதினால் குழந்தைக்கு அடிக்கடி நோய் வருவதுடன் பணமும் வீணாகச் செலவிடப்படுகிறது.
வாந்தி, பேதி மற்றும் காதில் சீழ் வடிவது போன்ற முக்கிய நோய்கள் புட்டிப் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. தாய்ப்பால் ஊட்டுவதால் தனது அழகு சீர் குலைந்து விடும் என சில தாய்மார் தவறாக கருதுகின்றனர்.
ஆனால் மிகவும் தவறான கருத்து. விஞ்ஞான ரீதியான பார்த்தால் தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் தாயின் மனநலம் பாதுகாக்கப்படுகின்றது. இங்கு தாயின் அழகு கூடுமே தவிர குறையாது. கருப்பைப் புற்று நோய், மார்பகப் புற்று நோய் தாய்க்கு வருவது தடுக்கப்படுகிறது.
தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கும் நிலையில் 98 சதவீத அளவுக்கு கர்ப்பம் ஆவது தடுக்கப்படுகிறது. மேலும் தாயின் கர்ப்பப்பை சுருங்கி பழைய நிலைக்குத் திரும்ப தாய்ப்பால் உதவுகிறது. குழந்தை பிறந்த பின் ஏற்படும் அதிக ரத்தப் போக்கும் தடுக்கப்படுகிறது.
12:13 PM
Unknown
மணிரத்னம் தனது அடுத்த படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி உள்ளார்.
தனது அடுத்த படத்திற்கு நாயகியாக நடிகர் பார்த்திபனின் மகள் கீர்த்தனாவை அவர் தேர்வு செய்துள்ளதாக கோலிவுட்டில் பரவலாக பேச்சு நிலவுகிறது. கீர்த்தனா, சினிமா உலகிற்கு ஒன்றும் புதிதல்ல. இவர் ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் மாதவன்-சிம்ரனின் மகளாக நடித்துள்ளார்.
கீர்த்தனாவை குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்த மணிரத்னம் தற்போது அவரை ஹீரோயினாகவும் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிகிறது. இந்த படத்தில் நடிகர் கார்த்திக்கின் மகன் கெளதம் ஹீரோவாக அறிமுகம் ஆக உள்ளார். மணிரத்னத்தின் இந்த புதிய படத்தில் ஹீரோயின் உறுதி செய்யப்படாத நிலையில் பிற நடிகர்களுக்கான தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. மணிரத்னத்தின் புதிய பட ஹீரோயின் வாய்ப்பு கீர்த்தனாவுக்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
6:08 AM
Unknown
சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற அண்ணா நூற்றாண்டு நூலகத்தை, குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்போவதாக முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
உலகத்தில் உள்ளவர்கள் எல்லாம் இந்த நூலகத்தை பற்றி தொடர்ந்து பாராட்டுகிறார்கள். இதனால் இப்போது இருக்கும் இந்த அரசுக்கு என்ன எண்ணம் வரும் என்றால், இந்த பாராட்டுக்கள் எல்லாம் கடைசியாக எங்குப் போய் சேரும். எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் யாருடைய பெயரை அது சொல்லும் என்ற கேள்வி வருகிறது.
கலைஞர் என்ற பெயர் எந்த இடத்திலும் நிலைப்பெற்றுவிடக் கூடாது. சென்ற ஆட்சியின் சிறப்பு யாருக்கும் போய் சேர்ந்துவிடக் கூடாது என்பதிலே இருக்கிற கவனம், அரசியல் காழ்ப்புணர்ச்சி, இன்னமும் சரியாக சொல்ல வேண்டுமானால், இது ஒரு கொடூர மனத்தின் வெளிப்பாடு என்றுதான் இதனைச் சொல்ல வேண்டும்,. இதற்கு பின்னால் இருந்து தூண்டுகோல் சொட்டதளையன் சோ.
இந்த சண்டி குதிரையை முன்பு எம் ஜி ஆர் அடக்கி வைத்திருந்தார்., இப்போது அடக்குவதற்கு...?
5:10 PM
Unknown
ஏழாம் அறிவு படத்தில் நாயகியாக நடித்திருக்கும் ஸ்ருதி, அந்த படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா இயக்கும் "3" படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்கிறார். மேலும் "ஓ மை பிரண்ட்", "கப்பார் சிங்" ஆகிய தெலுங்கு படங்களிலும் கமிட் ஆகியிருக்கிறார்.
திரைத்துறையில் அடுத்தடுத்த படிகளில் ஏறி முன்னேறிக்கொண்டிருப்பது பற்றி ஸ்ருதிஹாசன் அளித்துள்ள பேட்டியில், வாழ்க்கையில் நான் எந்த முடிவுகளையும் சுயமாக எடுத்துக் கொள்ளலாம். அதற்கான முழு சுதந்திரத்தையும் எனது தந்தை கமல் எனக்கு அளித்து உள்ளார்.
அந்த வகையில் நான் பெரிய அதிர்ஷ்டசாலியாக இருக்கிறேன். பண வசதி இருப்பதால் அதிலிருந்து தன்னம்பிக்கை பெறுகிறேன். வெற்றிக்கு கடின உழைப்பும், அர்ப்பணிப்பு தன்மையும் அவசியம் என்பதை உணர்ந்து வைத்துள்ளேன். அதனால்தான் அடுத்தடுத்த படிகளில் ஏறி தந்தை பாணியில் பயணித்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.
10:36 AM
Unknown
புதுடெல்லி: அன்னா ஹஸாரே குழுவினருக்கு கடந்த ஆறுமாதத்தில் நன்கொடையாக 2.94 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதில் 1.14 கோடி ரூபாய் ராம்லீலா மைதானத்தில் 12 தினங்கள் நடந்த உண்ணாவிரதப்போராட்டத்தின் வாயிலாக கிடைத்ததாகும்.
27,505 பேர் நன்கொடை வழங்கியதாக ஹஸாரே குழுவினர் அறிவித்துள்ளனர். இதில் 25 லட்சம் ரூபாய் நன்கொடையாக அளித்தவர்களும் உள்ளனர்.400க்கும் மேற்பட்டவர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொகையை வழங்கியுள்ளனர்.
பணத்தின் உறைவிடத்தை குறித்து தெளிவான விபரங்கள் அளிக்காமல் நன்கொடையாக வழங்கியவர்களின் 42.55 லட்சம் ரூபாய் திருப்பி அளிக்கப்படும் என ஹஸாரே குழுவினர் தீர்மானித்துள்ளனர். ஹஸாரே குழுவினரின் செயலகமான பப்ளிக் காஸ் ரிசர்ச் ஃபவுண்டேசன்(பி.சி.ஆர்.எஃப்) ஏப்ரல் முதல் தேதி துவங்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஹஸாரே குழுவைச்சார்ந்த அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக பொருளாதார ரீதியிலான குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அக்குழுவினரின் தணிக்கை அறிக்கை வெளியிடப்பட்டது. பி.சி.ஆர்.எஃபின் அறங்காவலர்களில் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே போன்ற பிரமுகர்கள் இல்லை என்பது சுவாமி அக்னிவேஷின் குற்றச்சாட்டாகும்.நன்கொடையாக கிடைத்த தொகையிலிருந்து 1.5 கோடி ரூபாய் ஹஸாரே குழுவினர் செலவழித்துள்ளனர்.
அதேவேளையில் அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து கிடைத்த 42.55 லட்சம் ரூபாயை திருப்பியளிக்க ஹஸாரே குழுவினர் தீர்மானித்துள்ளதை குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் கேள்வி எழுப்பியுள்ளார். அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து நன்கொடையை பெறுவதும், அதனை அவர்களுக்கு திருப்பியளிப்பதும் அமானுஷ்ய சக்தி உடையவர்களால் மட்டுமேசெய்யமுடியக்கூடிய வித்தை என திக்விஜய்சிங் கிண்டலாக கூறியுள்ளார்.
இந்த பரதேசிகளுக்கு இவ்வளவு பணம் ஏது, எங்கிருந்து வந்தது எல்லாம் ஹவாலா வெளிநாட்டிலிருந்து வந்து சேர்ந்தது (இது புதுவித ஹை டெக் பிஸ்னஸ்) சாமியார் வேஷம் மாறி இது உண்ணா விரத காசு பார்க்கும் பிஸ்னஸ்., நல்லொழுக்கம் பேசும் இவர்கள் இதுவரை எந்த வரியும் (TAX) இதுவரை கட்டவில்லை. ஆம் இவர்கள்தான் முச்சந்தி பிச்சக்காரர்கலாச்சே.
7:32 AM
Unknown
அவசரகால உலகில் அவசரத்தில் உட்கொள்ளும் உணவுகள் (FAST FOOD) நம் உடலுக்கு எவ்வளவு தீங்குகளை விளைவிக்கிறது, இதுமட்டுமல்ல கூடிய விரைவில் தொப்பை விழுந்து வயதானவர்கள் போல் காட்சி அளிக்கிறது.
நாம் பெரும்பாலும் அரிசி சார்ந்த உணவு வகைகளைத் தான் சாப்பிட்டு வருகிறோம். இந்த வகை உணவுகள் நமக்கு சத்தை அளிப்பதை விட, உடலைப் பெருக்கி விடும் தன்மை கொண்டது. மேலும் கலோரி அளவீடுகள் பற்றி தெரியாமல் வெண்ணெய், இனிப்புப் பண்டங்கள் போன்றவற்றை அதிகமாக சாப்பிடுவதால், தொப்பை, உடல் பருமன் மற்றும் இதயநோய் போன்றவை வந்து விடுகிறது.
தற்போது `பாஸ்ட்புட்' என்ற பெயரில் நமக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் உணவையே துரித உணவாக்கி விட்டோம். இதனால், கொழுப்பு அதிகரிக்கிறது. அதுமட்டுமல்ல. புற்று நோய், சர்க்கரை நோய் என்று நம் உடலுக்கு புதுப்புது நோய்கள் எல்லாம் தேடி வந்து விடுகின்றன. இவற்றில் இருந்து நம்மை பாதுகாப்பதற்குத் தான் உணவுக்கட்டுப்பாடு தேவை.
இதையே ஆங்கிலத்தில் `டயட் கண்ட்ரோல்' என்று சொல்வர். அதற்காக காலை நேர உணவைத் தவிர்ப்பது நல்லதல்ல. காலையில்தான் அதிக அளவு கலோரிகளுடன் கூடிய உணவை சாப்பிட வேண்டும். நமக்குத் தேவையான கலோரிகளை கணக்கிட்டுக் கொண்டு உணவை சாப்பிடுவது நல்லது. இதனால் உடல் ஆரோக்கியம் சீராகிறது. சராசரி மனிதனுக்கு ஒரு நாளைக்கு 2500 கலோரிகள் தேவை.
5:26 PM
Unknown
கூகுள் வலைதளம் ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் இணைய பயன்பாட்டை அதிகரிக்கும் நடவடிக்கையில் இந்தியாவில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்களுக்கு இலவச இணையதளங்கள் வழங்குகின்றன.
அடுத்த மூன்று ஆண்டுகளில் அரை மில்லியன் ஆன்லைன் வணிகங்கள் பெருகும் நோக்கம் என்று தெரிவித்தது.
12:09 PM
Unknown
புதுடில்லி : தலை சிறந்த ஆங்கில இலக்கியப் படைப்புகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும் "புக்கர் விருது' வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான விருதுக்கு, 90 புத்தகங்கள் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10ம் தேதி, விருதுக்கான புத்தகங்கள் தேர்வு செய்யப்படும். விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட இலக்கிய படைப்புகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 15ம் தேதி ஹாங்காங்கில் அறிவிக்கப்படும்.
இந்தியாவின் சார்பில், அமிதவ் கோஷ் எழுதிய "ரிவர் ஆப் ஸ்மோக்', தருண் தேஜ்பால் எழுதிய "தி வேலி ஆப் மாஸ்க்', ஜானவி பருவா எழுதிய "ரீபர்த்', அணுராதா ராய் எழுதிய "தி போல்டர் எர்த்', ராகுல் பட்டாச்சாரியா எழுதிய "தி ஸ்லை கம்பெனி ஆப் பீப்பீள் ஹூ கேர்' ஆகிய நாவல்கள், புக்கர் விருதுக்காக அனுப்பப்பட்டுள்ளன.
7:42 AM
Unknown
நியூ டெல்லி : நாட்டின் பல இடங்களில் கடந்த வருடம் மட்டும் 5,484 குழந்தைகள் பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், 1,408 குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் அறிக்கையில் அதிர்ச்சி தரும் தகவல் வெளியிடபட்டுள்ளது..
மத்திய பிரதேசத்தில் 1,182 குழந்தைகள் பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்ட அதே சமயத்தில், உத்திர பிரதேசத்தில் 315 குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த இரு குற்றங்களில் இதுவே மிக உயர்ந்த எண்ணிக்கை என்றும் தெரிவித்து உள்ளது.
மகாராஷ்டிராவில் 211 சம்பவங்களில் குழந்தைகள் கொலை செய்யப்பட்டும், பீகாரில் 200 மற்றும் மத்திய பிரதேசத்தில் 124 குற்றங்களும் நடந்துள்ளது. மேலும் கடந்த வருடத்தில் மட்டும் மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம் மற்றும் ஆந்திர பிரதேசம் முறையே 747, 451 மற்றும் 446 சம்பவங்களில் அப்பாவி குழந்தைகள் மீது பாலியல் தாக்குதல் நடை பெற்றுள்ளது. சட்டீஸ்கரில் 382-ம் மற்றும் ராஜஸ்தானில் 369 என பாலியல் கொலைகள் நடந்துள்ளது என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் தலைமையகம் டெல்லியில் மட்டும் 29 குழந்தைகள் கொலை செய்யப்பட்டும், மற்றும் பல சம்பவங்களில் 304 குழந்தைகள் பாலியியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பீகாரில் 1359-ம் , உத்திர பிரதேசத்தில் 1225-ம், மகாராஷ்டிராவில் 749-ம், ராஜஸ்தானில் 706-ம், ஆந்திர பிரதேசத்தில் 581-ம் மற்றும் குஜராத்தில் 565 குழந்தைகளும் கடத்தப்பட்டுள்ளதாக தேசிய மூலதன அறிக்கை தெரிவிக்கிறது., மேற்சொன்ன தகவல் புகார் அளித்தவை மட்டும்.
4:57 PM
Unknown
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தொடங்கியது முதலே உள்ளாட்சி தேர்தல் வரை, விஜய்யின் மக்கள் இயக்கம், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள இசை கல்லூரி மற்றும் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த புது உத்தரவு பிறப்பித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. அதன்படி தமிழகத்தின் மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 17 இசை பள்ளிகளின் தரத்தை உயர்த்த, விஜய்யின் அம்மாவும், டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவியுமான ஷோபா சந்திரசேகருக்கு "கலையியல் அறிவுரைஞர்" எனும் புதுப்பதவியை வழங்கியுள்ளார்.
இவரது பதவியின் முக்கிய நோக்கமே தமிழகத்தில் உள்ள இசை பள்ளிகளின் தரத்தை உயர்த்துவது தான். ஏற்கனவே தமிழகத்தில் உள்ள 4 இசை கல்லூரிகளுக்கும் வீணை காயத்ரி என்பவர் இந்த பதவியை வகித்து வருகிறார்.
சட்டசபை மற்றும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக.,வுக்கு ஆதரவாக விஜய்யின் மக்கள் இயக்கம் செயல்பட்டதன் பிரதிபலனாகத்தான், தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்கை காப்பாற்றும் விதமாக ஷோபா சந்திரசேகருக்கு இந்த பதவி கொடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
7:36 AM
Unknown
குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி, துப்புரவு வசதி, மழைநீர் வடிகால் வசதி உள்ளிட்டவை குறித்து மத்திய நகர்ப்புற அமைச்சகம் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது.
12 மாநிலங்களில் உள்ள 1,405 நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், 50 சதவீத நகரங்களில் இந்த அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என, கண்டறியப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் அமைத்து குடிநீர் வசதி செய்து தரப்பட வேண்டும். ஆனால், 50 சதவீத நகரங்களில் இந்த வசதி செய்து தரப்படவில்லை.
இந்த நகரங்களில், 80 சதவீத வீடுகளில் ஐந்து மணி நேரத்துக்கும் குறைவான அளவே, குழாய் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகின்றன. இந்நகரங்களில் 70 சதவீத வீடுகளில் கழிவறை வசதியோ, கழிவுநீர் அகற்றும் வசதியோ இல்லை.
மகாராஷ்டிராவில் 249 நகரங்கள் உள்ளன. இதில், நவி மும்பை மற்றும் மால்காபூரில் மட்டும் தான் 24 மணி நேர தண்ணீர் சப்ளை உள்ளது. பெரும்பாலான நகரங்களில் பாதாள சாக்கடையே கிடையாது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் 19 இடங்களில் தான் உள்ளது. கர்நாடகாவில் 52 நகரங்களில் மட்டும் கழிவுநீர் அகற்றும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் 124 நகரங்களில் ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் தண்ணீர் சப்ளை செய்யும் வசதி செய்து தரப்படவில்லை.
இந்த நகரங்களில் கழிவுநீர் அகற்றும் வசதியும் இல்லை. மத்திய பிரதேசத்தில் 46 சதவீத நகரங்களில் மட்டுமே தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. இவ்வாறு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமங்கள் எத்தனை எத்தனை. குடிக்க தண்ணீர் இல்லை, மொண்ட தண்ணீர் செல்ல பாதாள சாக்கடை இல்லை, இதையெல்லாம் தட்டி கேட்பது யாரு. இதை விட்டு விட்டு குல்லா போட்டுகொண்டு ஊழலை ஒழிக்கிறேன் என்று புறம்போக்கு தனம் செய்யும் போக்கிரிகளுக்கு புடம் போட்டு ஊதும் பரதேசி நாளிதழ்கள் (தினமணி, தினமலர்) இந்தியா வல்லரசாகும் வெறும் செய்தி தாள்களில் மட்டும்.
ஊழலுக்கு எதிராக அன்னா ஹஸாரே, பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆகியோரை முன்னிறுத்தி ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைப்பு போராட்டம் நடத்தும் வேளையில் கர்நாடகா முதல்வராக பதவி வகித்த எடியூரப்பா புரிந்த நிலபேர ஊழலில் பெரும் பகுதி ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு சென்றுள்ளது.