Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, October 14, 2011

உடலுக்கு உற்சாகமும் மகிழ்ச்சியும் தரும் உடற் பயற்சி !

* மூளை செல்களின் ஆயுள் நீட்டிக்கப்படுகிறது.

* மூளையின் நரம்பு செல்களின் எண்ணிக்கை பெருகுகிறது.

* நரம்பு செல்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருக்கிறது.

* ரத்த ஓட்டம் செம்மைப்படுத்தப்படுகிறது.

* அல்ஸைமர், டெம்னீஷியா போன்ற நினைவாற்றல் தொடர்பான நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.

* வயதாவதால் ஏற்படும் மறதியைக் குறைக்கிறது.

* பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் உதவுகிறது.

* நினைவாற்றல், கவனம் செலுத்துதல், மனத்தை ஒருமுகப்படுத்துதல், ஆகியவற்றை மேம்பாடு அடையச் செய்கிறது.

* உற்சாகமும் மகிழ்ச்சியும் கொண்ட மனோ நிலையைத் தருகிறது.

நீண்ட இடைவெளிக்குப்பிறகு இனியாவை இயக்கம் இமயம் !?

வாகைசூட வா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக களமிறங்கி இருப்பவர் இனியா. முதல்படத்திலேயே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி வெற்றி வாகை சூடியுள்ளார்.

இதன் பிரதிபலனாக பாரதிராஜா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது இனியா. தமிழ் சினிமாவின் இயக்குநர் இமயம் என்று போற்றப்படும் டைரக்டர் பாரதிராஜா, நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கும் படம் அன்னக் கொடியும் கொடி வீரனும்.

இப்படத்தின் நாயகனாக பார்த்திபன் நடிக்கிறார். இவருடன் நடிகை மீனாள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் படத்திற்கான நாயகி மட்டும் முடிவாகாமல் இருந்தநிலையில், வாகைசூட வா படத்தில் இனியாவின் நடிப்பை பார்த்து வியந்துபோய், அவரையே நடிக்க வைக்க இருக்கிறார் பாரதிராஜா. விரைவில் படத்தை பற்றிய முழுஅறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

Thursday, October 13, 2011

தேர்தலில் ஜெயிக்க குடி மகனுக்கு டோர் டெலிவரி !!

செஞ்சி : உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவியை விட, ஊராட்சி தலைவர் பதவிக்கே, போட்டி அதிகமாகி உள்ளது.

இவர்கள் பதவியை பிடிக்க, ஓட்டுக்கு பணம், பரிசுப் பொருள் கொடுப்பது ஒரு பக்கம் இருந்தாலும், குடிமகன்களை திருப்திபடுத்த தவறுவதில்லை. இதுவரை வேட்பாளர்களை தேடிச் சென்ற குடிமகன்களுக்கு மட்டுமே, "குவார்ட்டர்' பாட்டில் கிடைத்து வந்தது. இந்த முறை, செஞ்சி ஒன்றியம் சிங்கவரம் கிராமத்தில், தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள் சிலர், மாலை நேரமானதும், குடிமகன்களின் வீடுகளுக்கே, "குவார்ட்டர்' பாட்டில்களை, "டோர் டெலிவரி' செய்துள்ளனர்.

இத்தகவல் மற்ற கிராமங்களுக்கும் பரவி, "திட்டத்தை நம்ம ஊரிலும் அமல்படுத்தினால் நல்லா இருக்குமே...' என, மற்ற ஊரில் உள்ள குடிமகன்கள் பலரும் ஆதங்கப்படுகின்றனர்.

தீவிரவாதத்தை காட்டும் தீவிரவாதிகள் ??

ஊழல் ஒழிப்பு மற்றும் பலமான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் சமூக சேவகர் அன்னா ஹசாரேயின் குழுவில் இடம் பெற்றுள்ளவர்களில் முக்கியமானவர் பிரசாந்த் பூஷன். பிரபலமான சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர். இவர் நேற்று மாலை சுப்ரீம் கோர்ட்டிற்கு எதிரேயுள்ள, புதிதாக கட்டப்பட்ட வழக்கறிஞர்கள் சேம்பரில் உள்ள தன் அறையில் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, பிரசாந்த் பூஷனை சந்திக்க தாங்கள் அனுமதி வாங்கியிருப்பதாகக் கூறிக் கொண்டு, இரண்டு வாலிபர்கள் (ஸ்ரீராம்சேனா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்) அவரது அலுவலகத்திற்குள் வேகமாக நுழைந்தனர். உள்ளே நுழைந்த இரண்டு பேரும் பிரசாந்த் பூஷனை சரமாரியாக தாக்கினர்; அடித்து, உதைத்தனர். அவரை நாற்காலியில் இருந்து கீழே இழுத்துப் போட்டு தாக்கியதோடு, நெஞ்சிலும் மிதித்தனர். இந்தத் தாக்குதலில், பூஷனின் சட்டை கிழிந்ததோடு, அவரின் மூக்குக் கண்ணாடியும் கீழே விழுந்து நொறுங்கியது.

இந்தத் திடீர் தாக்குதலை சற்றும் எதிர்பாராத, பூஷன் அலுவலக ஊழியர்களும், மற்றவர்களும் அங்கு கூடி, தாக்குதல் நடத்தியவர்களை பிடிக்க முற்பட்டனர். அதில், ஒரு வாலிபர் சிக்கினார்; மற்றொரு வாலிபர் தப்பி ஓடி விட்டார். பின்னர் பிடிபட்ட நபரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். தாக்குதலுக்கு ஆளான பிரசாந்த் பூஷனை, ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்தியாவை பல மாநிலமாக உடைக்க போவது இந்துத்துவ தீவிரவாதிகள்தான் வேறு யாருமல்ல.

உணவு பழக்கம் சீராக இருந்தால் உடல் உறுப்புகளும் சீராக இயங்கும்!

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த ஆய்வில், நாம் எப்படி சாப்பிடுகிறோம்? என்ன சாப்பிடுகிறோம்? என்பனவற்றை பொறுத்தே நம் உடல் நலம் அமையும் என்று கண்டுபிடித்துள்ளனர்.

உணவு பழக்கம் சீராக இருந்தால் நம் உடல் உறுப்புகளும் சீராக இயங்கும். உங்கள் உடல் வாக்கு எத்தகைய உணவு வகைகள் சிறப்பாக உள்ளதோ அவற்றையே தேர்வு செய்தால் நோய் எதுவும் வராமல் வாழலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

பொதுவாக எல்லாருக்கும் காய்கறி வகை உணவுகளே நல்ல பலன்களைத் தரும் என்று கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக சிறுநீரகம் நன்றாக இயங்க காய்கறி, சைவ உணவே சிறந்தது என்று அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

Wednesday, October 12, 2011

வியந்து நான் மீண்டும் விஜய்யுடன் நடிக்க ஆசை! பிரியங்கா!!

கடந்த சிலதினங்களுக்கு முன் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கட் இறுதிபோட்டியை காண வந்திருந்தார்.

அப்போது பேட்டியளித்த ப்ரியங்கா சினிமாவில் நான் அறிமுகமானது கொலிவுட்டில் தான். முதல்படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்தேன். விஜய் மீது எனக்கு எப்பவும் தனி விருப்பம் உண்டு., அவருடன் நடித்ததை என்னால் மறக்க முடியாது. விஜய் மட்டுமல்லாது இங்குள்ள பல நடிகர்களையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

தமிழ் சினிமா முன்பை விட தற்போது பலமடங்கு மாற்றம் கண்டுள்ளது., சமீபத்திய சில தமிழ் படங்களை பார்த்து வியந்து போனேன். எனக்கும் தமிழ் படங்களில் நடிக்கவும், குறிப்பாக என்னுடைய முதல் நடிகர் விஜயுடன் மீண்டும் நடிக்க ஆர்வமாய் இருக்கிறேன். எனது கனவு நிறைவேறினால் மிகழ்ச்சியடைவேன்.

ஷெங்கன் விசாவுக்கு புது முறை அறிமுகம்! ஐரோப்பிய யூனியன்

லண்டன் : ஐரோப்பாவின் போர்ச்சுகல் முதல், நார்வே வரையிலான, 25 நாடுகள் கொண்ட நிலப் பரப்பு, "ஷெங்கன்' என அழைக்கப்படுகிறது.

இந்நாடுகளுக்குச் செல்ல, இந்நிலப்பரப்பைச் சேர்ந்தவர்களுக்கு எவ்வித விசாவும் தேவையில்லை. ஆனால், பிற நாட்டவர் செல்ல, "ஷெங்கன்' விசா வாங்க வேண்டும். இப்போது இந்த விசாவில் புதிய முறையை ஐரோப்பிய யூனியன் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, விரல் ரேகைகள், முகப் பதிவு உள்ளிட்ட, "பயோமெட்ரிக்' முறைகளைப் பயன்படுத்தி விசா வழங்கப்படும். இதுகுறித்து ஐரோப்பிய யூனியன் வெளியிட்ட அறிக்கையில், "இதன் மூலம் விசா விண்ணப்பங்கள் தங்கு தடையின்றி விரைவில் வழங்கப்படும். விசா மோசடிகளும் தடுக்கப்படும்' என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, 13 கோடி, "ஷெங்கன்' விசாக்கள் வழங்கப்படுகின்றன. இவற்றின் எண்ணிக்கை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர்கள் முதல் மனித உரிமை ஆர்வலர்கள் வரை!?

அஹ்மதாபாத் : கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டை குஜாராத் காவல்துறை கைது செய்ததை பல சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பை தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளதை தொடர்ந்து அவரது மனைவி ஸ்வேதாவும், தனது கணவரை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தினர்.

இப்பேரணியில் பல கல்லூரி மாணவ மாணவிகளும் கலந்துக் கொண்டு சஞ்சீவ் பட் கைதுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த பேரணி மனித உரிமை ஆர்வலர்கள் மூலமாக நடத்தப்பட்டது.

இந்த பேரணியில் குஜராத் அரசிற்கு (நரேந்திர கேடி) எதிராக ‘ஹம் ஹோங்கே கம்யாப்’ என்று உச்ச்சரித்தப்படி சஞ்சீவ் பட்டின் வீட்டில் ஆரம்பித்து ‘ஹெல்மெட் சர்கிள்’ வரை இந்த பேரணி நடைபெற்றது.

சஞ்சீவ் பட் கைது செய்த நாள் முதல் குஜராத்தின் இளைஞர்கள் பலர் சமூக கூட்டங்களை ஏற்படுத்தியும் “நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் ஸ்வேதா” என்றும் அவரது மனைவிக்கு ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.

Tuesday, October 11, 2011

தி மு க வை நம்பிய வடிவேல் ! அ தி மு க வை நம்பும் சிங்க முத்து !!

தமிழக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடிகர் சிங்கமுத்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

கருணாநிதியை வடிவேலு 3 முறை சந்தித்ததார். இதனால் தி.மு.க. எதிர்க்கட்சியாக கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. வடிவேலு நடிகர் அல்ல. தி.மு.க.வை அழிக்கவே அங்கு போய் சேர்ந்திருக்கிறார். அவர் ராசி அந்தக் கட்சியை இல்லாமல் செய்யப் போகிறது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகள்தான் உள்ளன.

ஆனால் சட்டசபை தேர்தலில் தி.மு.க. 250 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று பேசியவர்தான் வடிவேலு. கருணாநிதியை நம்பி ஊர் ஊராக பேசிய வடிவேலு இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் கடனாளியாகி உள்ளனர், என்றார்.

@ வடிவேல் செய்ததைபோல் அரசியல் தலைமையை நம்பி இவரும் செய்கிறார்., நாளை வடிவேல் போல் அந்தரத்தில் விட்டுவிடுவார்கள் இவர்கள் புரிந்து நடந்து கொண்டால் சரி.

இதய நோய் தடுக்கும் சக்தி இந்த தாவர வகைக்கு உண்டு

லண்டன் : சூப்பர் பிரக்கோலியை(பச்சைப் பூக்கோஸ், loctose ) உண்பதால் புற்று நோய், இருதய நோய் வராமல் தடுக்கலாம் என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கணடறிந்துள்ளனர்.

சூப்பர் பிரக்கோலியை உண்பதால் புற்றுநோய்,இருதய நோய் வராமல் தடுக்கலாம் என்று நார்விச்சில் உள்ள உணவு ஆராய்ச்சி மற்றும் ஜான் இன்னீஸ் மையத்தில் உள்ள குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

சாதாரண பிரக்கோலியை விட சூப்பர் பிரக்கோலியில் குளுக்கோராஃபின் எனப்படும் ஊட்டச்சத்து மூன்று மடங்கு அதிகம் உள்ளது. குளுக்கோராஃபின் ஊட்டச்சத்து புற்று நோய், இருதய நோய் வராமல் பாதுகாக்க உதவுகிறது.

இது குறித்து இங்கிலாந்து நாட்டின் அறிவியல் துறை அமைச்சர் டேவிட் கூறுகையில் இது சிறந்த கண்டுபிடிப்பாகும்.இதன் மூலம் எங்கள் உடல் நலமும்,பொருளாதாரமும் முன்னேற்றம் அடையும் என்றும் தெரிவித்தார். சூப்பர் பிரக்கோலி என்பது காலி ஃபிளவர் பூ போன்று காணப்படும் காய்கறி வகையைச் சார்ந்தது ஆகும்.இதை பச்சைப் பூக்கோஸ் என்றும் அழைப்பர்.

Monday, October 10, 2011

அத்வானி ர (த்) த யாத்திரை நடத்தி "ரா" கோயில் கட்ட திட்டம் அம்பலம் ?

புதுடெல்லி : உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.கவின் முக்கிய அஜண்டா (பரதேசி) ராமர் கோவில் கட்டுவதுதான் என்பது உறுதியாகியுள்ளது.

மாநிலத்தில் நடைபெறவிருக்கும் இரண்டு யாத்திரைகள் அயோத்தியில் சென்று அடையும் எனவும், அங்குவைத்து தலைவர்கள் வெற்றிக்காக முயல்வோம் என உறுதிமொழி எடுப்பார்கள் என பா.ஜ.க அறிவித்துள்ளது.

ஊழலுக்கு எதிராகவும், உ.பியில் நடக்கும் வன்முறைகளுக்கு எதிராகவும் நடத்தப்பட்டும் ஜனஸ்வாபிமான் யாத்திரா இம்மாதம் 13-ஆம் தேதி வாராணாசியிலிருந்தும், மதுராவிலிருந்தும் துவங்கும் என கட்சியின் துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

மதுராவிலிருந்து துவங்கும் யாத்திரைக்கு கட்சியின் முன்னாள் தலைவர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்குகிறார். வாராணாசியிலிருந்து துவங்கும் யாத்திரைக்கு கல்ராஜ் மிஷ்ரா தலைமை தாங்குகிறார்.

வாராணசியிலிருந்து துவங்கும் யாத்திரையை கொடி அசைத்து துவக்கி வைக்கிறார் எல்.கே.அத்வானி. வருகிற நவம்பர் 16,17 தேதிகளில் இரு யாத்திரைகளும் அயோத்தியை சென்று அடையும். அங்குவைத்து உறுதிமொழிக்கான நிகழ்ச்சி நடைபெறும்.

5000 கிலோமீட்டர் தொலைவைக் கொண்ட இந்த யாத்திரை 62 மாவட்டங்கள், 37 சட்டமன்ற தொகுதிகளை கடந்து செல்லும். பாப்ரி மஸ்ஜிதை மூன்றாக பங்குவைக்கும் அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை வைத்து முடிந்தவரை ஆதாயம் தேட தீர்மானித்துள்ளதாக பா.ஜ.க தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாப்ரி மஸ்ஜித் நிலத்தை ராமர் பிறந்த இடம் என வெளிப்படுத்துவதுதான் நீதிமன்ற தீர்ப்பு எனவும் 2012 சட்டமன்ற தேர்தலில் முக்கிய அஜண்டாவாக இதனை உயர்த்தி பிடிப்போம் என அத்வானி முன்னரே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமன்னா விட்டதை பால் நடிகை பிடித்துக்கொண்டார் !

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி, மாமனாருடன் சல்லாபித்த காட்சிகளால் பல்வேறு தரப்பினரின் கண்டனத்தை சம்பாதித்து, ஒருவழியாக மைனா மூலம் நல்ல பெயரை பெற்றவர் நடிகை அமலா பால்.

போதாக்குறைக்கு விக்ரமின் தெய்வத்திருமகளில், வேறு வெயிட்டான ரோல் கிடைத்தது. அழகும், நடிப்பும் சேர்ந்து ரசிகர்களை அமலாபால் பக்கம் கட்டிப் போட்டது.

ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாகி விட்டதால் வாய்ப்புகளுக்கு பஞ்சம் இருக்குமா என்ன? அமலா பாலுக்கு முன்னணி ஹீரோக்கள் பலரும் தூது விட ஆரம்பித்தார்கள். அந்த நேரத்தில்தான் சிலபல மனச்சிக்கலை சந்தித்த தமன்னா, கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்சினிமாவை விட்டு விலக ஆரம்பித்தார்.

கிட்டத்தட்ட தெலுங்கு திரையுலகிற்கே தமன்னா இடம்பெயர்ந்து விட்ட நிலையில், அவரது இடம் அமலாபாலுக்கு கிடைத்துள்ளதாகவே கருதுகிறார்கள் கோடம்பாக்க புள்ளிகள். சமீபத்தில் தமன்னாவை சந்தித்த அமலா பால் இந்த விஷயத்தை தமன்னாவிடம் பகிர்ந்துள்ளார். அம்மணியும், அப்படியா? என்று கேட்டு அமலாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தாராம்.

தமிழ் சினிமாவில் இருந்து முழுதாகவே ஒதுங்கி விட்ட நடிகை தமன்னா இடத்தை அமலா பால் கெட்டியாக பிடித்து விட்டார் என்பதுதான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் டாக்.

உலக தரத்தில் ஒன்று கூட இல்லை இந்தியாவில் !?

லண்டன் : உலகின் மிகச்சிறந்த 200 பல்கலைக்கழகங்களில் இந்தியாவுக்கு இடம் கிடைக்கவில்லை. ஐ.ஐ.டிக்கள், ஐ.ஐ.எம்கள் உள்ளிட்ட இதர கல்வி நிறுவனங்களின் பட்டியலிலும் இந்தியாவுக்கு இடம் கிடைக்கவில்லை.

பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ’டைம்ஸ் ஹையர் எஜுகேஷன்’ என்ற மாத இதழ் இப்பட்டியலை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவைச் சார்ந்த பல்கலைக்கழகங்கள் இப்பட்டியலில் முன்னணி வகிக்கின்றன. 200-ல் 75 பல்கலைக்கழகங்களும் அமெரிக்காவைச் சார்ந்தவையாகும். முதல் பத்து இடங்களை அமெரிக்காவின் 7 பல்கலைக்கழகங்களும், பிரிட்டனைச் சார்ந்த 3 பல்கலைக்கழகங்களும் கைப்பற்றியுள்ளன. ஜெர்மனி 12, ஹாலந்து 12, கனடா 9, ஆஸ்திரேலியா 8 பல்கலைகழகங்கள் 200 பல்கலைகழகங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

ஆசியாவைச்சார்ந்த டோக்கியோ பல்கலைக்கழகம்(ஜப்பான்) 30-வது இடத்தையும், பெகிங் பல்கலைக்கழகம்(சீனா) 49-வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்தியாவிலிருந்து மும்பை இந்தியன் இன்ஸ்ட்யூட் ஆஃப் டெக்னாலஜி(ஐ.ஐ.டி) 317-வது இடத்தை பிடித்துள்ளது.

முன்னணியில் உள்ள மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களில் எல்லாம் ஏராளமான இந்திய மாணவர்கள் பயில்கின்றனர். பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களை இந்திய மாணவர்கள் பெரிதும் விரும்புகின்றனர்.

அமெரிக்காவில் கலிஃபோர்னியா இன்ஸ்ட்யூட் ஆஃப் டெக்னாலஜி முதல் இடத்தையும், ஹாவர்டு பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. ஸ்டான்ஃபோர்ட்(அமெரிக்கா), ஆக்ஸ்ஃபோர்ட்(பிரிட்டன்), ப்ரின்ஸ்டன்(அமெரிக்கா), கேம்ப்ரிட்ஜ்(பிரிட்டன்), மாஸேசூட் இன்ஸ்ட்யூட் ஆஃப் டெக்னாலஜி(அமெரிக்கா), இம்பீரியல் காலேஜ் லண்டன்(பிரிட்டன்), ஷிகாகோ(அமெரிக்கா), கலிஃபோர்னியா-பெர்க்லி(அமெரிக்கா), யேல்(அமெரிக்கா), கொலம்பியா(அமெரிக்கா), கலிஃபோர்னியா-லாஸ் ஏஞ்சல்ஸ்(அமெரிக்கா), ஜான் ஹாப்கின்ஸ்(அமெரிக்கா), இ.டி.இஸ்ஸட் சூரிக்(ஸ்விட்சர்லாந்து), பென்சில்வானியா(அமெரிக்கா), யூனிவர்சிடி காலேஜ் லண்டன்(பிரிட்டன்), மிஸ்ஸிகன்(அமெரிக்கா), யூனிவர்சிடி ஆஃப் டொராண்டா(கனடா), கோர்னெல்(அமெரிக்கா) ஆகியன வரிசைக்கிரமமாக 3 முதல் 20 இடங்களை பிடித்துள்ள இதர பல்கலைக்கழகங்களாகும்.

Sunday, October 9, 2011

அதிகம் தூங்கினால் தூங்குமூஞ்சி ? தூங்காவிடில் ??

மனுசனோட தினசரிச் செயல்கள்ல குறிப்பிடத்தக்கது, தூக்கம். தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு தூங்கி ஓய்வெடுக்கலைன்னா, மறுநாள் அவனால ஒழுங்கா வேலை பார்க்க முடியாது.

நாள் முழுவதும் உழைக்கிற நம்முடைய உடல் உறுப்புகள் ஓய்வெடுக்கத்தான் இந்தத் தூக்கம் அவசியமாகுது (சில உறுப்புகள் 24 மணி நேரமும் இயங்குவது தனிக்கதை.).

எனவே, ஒவ்வொருவருக்கும் தூக்கம்கிறது ரொம்ப அவசியம். சாப்பிடாம கூட சில நாட்களுக்கு உயிரோட இருந்துடலாம். ஆனா, தூங்காம இருக்க முடியாது. ஒருவேளை நம்மால தூங்க முடியலைன்னா என்ன நடக்கும்? சில நாட்களுக்கு மனுசன் தூங்காம இருந்தால், அவன் ரத்தத்துல இருக்குற வெள்ளை அணுக்களோட எண்ணிக்கை குறைஞ்சி, நோய் எதிர்ப்புத் தன்மையும் குறையுது. தசை களோட வலிமை குறையும்.

ரத்தத்துல சர்க்கரையோட அளவு கட்டுப்பாட்டுல இருக்காது. உடல் வெப்பநிலை மாறுபடும். இதுமாதிரி உடலுக்குச் சிக்கலை உண்டாக்குகிற தூக்கப் பிரச்சினை, உள்ளத்துக்கும் சிக்கலை உண்டாக்குது. தூங்காம இருக்குறதால ரத்தத்துல இருக்குற மனஅழுத்தத்துக்கு காரணமான `கார்ட்டிசோல்' என்கிற ரசாயனத்தோட அளவு கூடுது.

ஞாபகசக்தி குறைவு, வேலைகளில் தவறுகள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் உண்டாகும். உடலையும், மனசையும் ஒருசேர பாதிக்கிற ஆற்றல் தூக்கமின்மைக்கு உண்டு. எனவே, தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு தூங்கி ஓய்வு எடுத்துக்குங்க., ஓ நேரமாச்சு குட் நயிட்.

அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் நித்யா !!

திருவண்ணாமலை நகரை அடுத்த அத்தியந்தல் கிராமத்தில் வெளிநாட்டு நிதி உதவியுடன் நடத்தப்படும் ரங்கம்மாள் மருத்துவமனை உள்ளது.

இந்த மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெரும் வசதி உள்ளது. வெளிநோயாளிகள் பிரிவு, அவசர பிரிவு என செயல்படும் இம்மருத்துவமனையை ரஞ்சிதா புகழ் நித்யானந்தா சொந்தமாக வாங்க விலை பேசிவருவதாக கூறப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நித்தியானந்தா, அவரது சொந்த ஊரான திருவண்ணாமலையில் புதியதாக மருத்துவமனை துவங்க ஆலோசனை நடத்தினார். இதற்காக வெளிநாடுகளில் நிதி பெறவும் முயற்சி செய்துகொண்டிருந்தார்.

அப்போதுதான் நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியானது. இதிலிருந்து தப்பினால் போதும் என அத்திட்டத்தை அப்போதுகைவிட்டிருந்தார்.

தற்போது அவர் மருத்துவமனையை வாங்க நேற்றும் இன்றும் திருவண்ணாமலையில் தங்கி நேரிடையாக பேரம் வருகிறார் என்று கூறப்படுகிறது.

@ இந்த கள்ளச்சாமி ஆஷ்ரமம் வைத்து களவாணித்தனம் செய்து மாட்டிக்கொண்டவன், இப்போது மருத்துவமனை தொடங்கி கரு உண்டாக்கபோகிறாரா.

போலீசா அல்லது பெண்கள் புரோக்கரா ??

காவல்துறை பற்றி சிறு முன்னோட்டம், காவல்துறை என்பது வெறும் சம்பளத்துக்கு மட்டும் வேலை செய்பவர்கள் அல்ல, அவர்களுக்கு கூடுதல் பொறுப்பு அதாவது சமுதாய நலன் பேனி காக்க முழு ஒத்துளைப்புடன் உறுதுணையாக இருக்கவேண்டியவர்கள் அதற்கு மாறாக காசுக்காக, சில சமூக விரோதிகள் (பெண் புரோக்கர்கள்) பின்னால் தன் கடமை மறந்து ஈன செய்கையில் ஈடுபடுகிறார்கள் அவற்றில் சில இங்கு காண்போம்.

கடந்த 2010ம் ஆண்டு அதிகளவாக 3,022 கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், கடந்தாண்டு 580 சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் சி.பி.சி.ஐ.டி.,யின் கடத்தல் தடுப்பு பிரிவின் தகவல் கூறுகிறது.

1. விபசாரத்தில் ஈடுபடும் பெண்கள், புரோக்கர்கள் கைது செய்யப்படும் போது, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு வந்தனர். ஆனால், கடந்த 2012ம் ஆண்டு, சுப்ரீம் கோர்ட், "மீட்கப்படும் பெண்களை பாதிக்கப்பட்டவர்களாக கருதி, அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு பின், பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும்' என்று கூறியது. உண்மையில் காப்பகத்தில் ஒப்படைக்கப்படும் பெண்கள், அடுத்தகட்டமாக பெற்றோரிடம் ஒப்படைக்கப் படுவதில்லை. காவல்துறை உதவியுடன் புரோக்கர்கள் உள்ளே நுழைந்து, பெற்றோர், வழக்கறிஞர்கள் உதவியுடன் அந்தப் பெண்களை மீண்டும் வெளியில் எடுத்து, தொழிலில் மீண்டும் ஈடுபடுத்துகின்றனர்.

2. விபசாரத்தில் இருந்து மீட்கப்படும் பெண்களுக்கான," ஜஸ்ட் டிரஸ்ட்' தன்னார்வ தொண்டு அமைப்பு நடத்தி வரும், ஜெபராஜ் கூறியதாவது : பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான வழக்கு விவரங்களை சிறைத்துறை நன்னடத்தை அலுவலரிடம் ஒப்படைக்க கூடாது. சமூக நலத்துறை நன்னடத்தை அலுவலரிடம் தர வேண்டும். அப்போது தான் பாதிக்கப்பட்ட பெண்களை சீர்திருத்த முடியும். ஐகோர்ட் ஏற்கனவே பிறப்பித்துள்ள வழிகாட்டுதலின்படி, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி தர வேண்டும். ஆனால், அப்படி எதுவும் செய்வதில்லை. அதைச் செய்தால், அவர்கள் மீண்டும் விபசார தொழிலுக்கு வருவதை தடுக்கலாம்.

Saturday, October 8, 2011

எத்தனை புதுமைகள் வந்தாலும் பழைமைக்கு ஈடாகுமா?

ரஷ்யாவின் உக்ளிக் நகரில், அடுத்த மாதம்(நவம்பர்) நான்கு நாட்கள் சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இதில் தமிழ் படங்கள் திரையிடப்பட இருக்கின்றன.

அதில் சிவாஜி கணேசனின் "தில்லானா மோகனாம்பாள்" படத்தையும் திரையிடுகின்றனர். சிக்கல் சண்முகசுந்தரம் எனும் கேரக்டரில் நாதஸ்வர வித்வானாக சிவாஜியும், மோகனா எனும் கேரக்டரில், நாட்டிய பெண்ணாக பத்மினியும் நடித்து இருந்தனர். இவர்களுடன் பாலையா, தங்கவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த இப்படம் மாபெரும் ஹிட்டானது.

அப்படத்தில் இடம்பெறும் “நலம்தானா நலம்தானா உடலும் உள்ளமும் நலம் தானா”, “மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன” போன்ற பாடல்கள் இன்றும் காலத்தால் அழியாதவையாக இருக்கின்றன. இந்நிலையில் சிவாஜியின் பிறந்தநாளையொட்டி, அவரை கவுரவிக்கும் வகையில் இந்தபடம் திரையிடப்படுகிறது.

இந்தியா-சோவியத் வர்த்தக சபை இணைந்து நடந்தும் இத்திரைப்படவிழாவில், "தில்லானா மோகனாம்பாள்" படத்துடன் கோ, தென்மேற்கு பருவக்காற்று, பாஸ் என்ற பாஸ்கரன், அங்காடித்தெரு உள்ளட்ட படங்களும் திரையிடப்படுகின்றன.

மாற்றத்தை விரும்பிய மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்த ஜெயா! ஸ்டாலின் !!

திருச்சி : திருச்சி மேற்கு தொகுதி இடைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தை, தி.மு.க.பொருளாளர் ஸ்டாலின் இன்று துவக்கினார்.

மாலை 04.30 மணியளவில், திருச்சி காஜாமலை காலனியில் பிரசாரத்தை துவக்கிய ஸ்டாலின், எம்.எல்.ஏ. வேட்பாளர் கே.என்.நேரு, மேயர் வேட்பாளர் விஜயா, கவுன்சிலர் வேட்பாளர் சித்ரா உள்ளிட்டோரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது, மாற்றம் வேண்டும் என்று அ.தி.மு.க.விற்கு ஓட்டளித்த தமிழக மக்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. தி.மு.க. வின் சாதனைத் திட்டங்கள் தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதென்றால், அ.தி.மு.க. அரசு கடந்த 5 மாதங்களில் ஒரு நல்ல திட்டத்தை கூட செயல்படுத்தவில்லை. அதற்கு மாறாக, தி.மு.க. முன்னாள் அமைச்சர்களை பொய் வழக்குகளின் மூலம் சிறையில் அடைத்து கட்சியினரை அச்சுறுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.

திருச்சி மக்களுக்கு தற்போது நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. வரும் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க., வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்து அ.தி.மு.க. அரசிற்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.

பரமக்குடியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு, அனைத்து கட்சிகளும் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கேட்டுக் கொண்டபோதும், அதற்குமாறாக, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான கமிஷனை அமைத்து கள்ள நாடகம் ஆடி வருகிறது. தி.மு.க. ஆட்சியில், ஒருபோதும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக எவ்வித தீங்கும் நடைபெறவில்லை என்பதை நான் உறுதியாகச் சொல்வேன்.

கோட்டையில் பணிபுரிய வேண்டிய அமைச்சர்கள் எல்லாம், தற்போது திருச்சியில் முகாமிட்டுள்ளனர். தற்போது இங்கு நடைபெறப் போவது சட்டசபை தேர்தல் இல்லை என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள். இது தேர்தல் விதிமுறை மீறல்களுக்கு சமமானது என்று அவர் பேசினார். திருச்சி காஜாமலை காலனியில் பிரசாரத்தை துவக்கிய ஸ்டாலின், மேலபஞ்சப்பூடி, கீழபஞ்சப்பூடி, ராமச்சந்திரா நகர், எடமலைப்பட்டி புதூர், கருமண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். பின், அவர் நாகப்பட்டினம் செல்கிறார்.

சட்டசபை தேர்தலின் மூலம் மாற்றம் வேண்டும் விரும்பிய மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தார் ஜெயா! என்று திருச்சியில் தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் கூறினார்.

நோபல் பரிசு பெற்ற மூன்று பெ (க) ண்மணிகள்

ஆஸ்லோ : ஏமன் நாட்டைச் சேர்ந்த பெண் உட்பட மூன்று பெண்களுக்கு 2011-ம் ஆண்டுக்கான அமைதி நோபல் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

மகளிர் உரிமைகளுக்காகவும், பாதுகாப்புக்காகவும் போராடி வரும் ஏமனின் தவாக்குல் கர்மான், லைபீரியாவின் அதிபர் எல்லென் ஜான்சன் சிர்லீஃப், லைபீரியாவின் லேமா க்போவீ மற்றும் ஆகிய மூவரும் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

“பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக அகிம்சை முறையில் போராடி, அமைதியை நிலைநாட்டும் அரும்பணியை மேற்கொண்டதாற்காக இம்மூவருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது,” என்று அமைதிக்கான நோபல் பரிசு குழு அறிவித்துள்ளது.

அமைதி நோபல் பெறும் மூன்று பெண்களில் ஏமனின் மனித உரிமை ஆர்வலர் கர்மான் ஜனநாயக ஆதரவு இயக்கத்தை முன்நின்று நடத்தி நடத்தி வருகிறார். இவர், அரசியலில் மட்டுமின்றி பத்திரிகையாளராகவும் செயலாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லென் ஜான்சன் சிர்லீஃப் ஆப்பிரிக்காவில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அதிபர் என்ற பெருமைக்குரியவர்.

லைபீரியாவைச் சேர்ந்த மற்றொரு சேவகியான க்போவீ, அமைதிப் போராளியாக பெண்களின் உரிமைக்காக தன்னை அர்ப்பணித்து வருபவர்.

அமைதி நோபல் அறிவிப்பை வெளியிட்ட நோபல் கமிட்டி தலைவர் தோர்ப்ஜோர்ன் ஜாக்லாண்ட், “சமூகத்தின் அனைத்து மட்டத்திலும் ஆண்களுக்குச் சமமாக பெண்களும் செல்வாக்கு பெற்றால் மட்டுமே உலகத்தில் ஜனநாயகத்தையும் அமைதியையும் நிலைநாட்ட முடியும்,” என்றார்.

Friday, October 7, 2011

மாமனார் பாதுகாப்புடன் வெளியில் செல்லும் ஐஸ்வர்யா !!

கர்ப்பம் தரித்த நாள் முதல் வெளி நிகழ்ச்சிகளுக்கு வராமல் வீட்டோடு இருந்து வந்தார் ஐஸ்வர்யா.

இந்த நிலையில் தனது மாமனார், மாமியார் சகிதம் அவர் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். முதலில் சஞ்சய் தத் நடத்திய நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.

அவர் இளம் பிங்க் நிற சேலையில் அழகுற வந்திருந்தார். இந்த சேலை கடந்த ஜனவரி மாதம் நடந்த ஸ்கிரீன் திரைப்பட விருது விழாவில் ஐஸ்வர்யாவின் மாமியார் ஜெயா பச்சன் அணிந்திருந்த சேலையாகும்.

நவம்பர் மாதத்தில் ஐஸ்வர்யாவுக்கு குழந்தை பிறக்கும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனராம். இதனால் பச்சன் குடும்பமே சந்தோஷத்தில் மூழ்கியிருக்கிறது.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!