Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, October 7, 2011

இன வெறியர்களிடமிருந்து ஈழம் காக்கப்படுமா?

நியூயார்க் : ஐ.நா.தலைமை அலுவலகம் முன்பு பொங்கு தமிழ் எழுச்சி இயக்கம் சார்பில் தமிழர்கள் அணி திரண்டனர். அவர்கள் மத்தியில் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் பேசியதாவது,

சிங்கள ஆதிக்கத்தின் பிரதிநிதிகளாக உள்ளவர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கின்றோம். நீங்கள் நீதியின் பிடியிலிருந்து தப்ப முடியாது. அதுமட்டுமின்றி, ஆயிரம் ஆயிரமாய் எம் தமிழ் மக்களைக் கொன்றொழித்த குற்றவாளிகளுக்கும் நாங்கள் ஒன்றைக் கூற விழைக்கின்றோம்.

எம் உறவிகளை ஆயிரக்கணக்கில் நீங்கள் அழித்தாலும் தமிழீழம் பற்றிய எம்பற்றுறுதியினை உங்களால் என்றும் அழித்துவிட முடியாது. சிங்கள ஆட்சியாளர்கள் நீங்கள் எம் மாவீரர் துயிலும இல்லங்களையும், அவர் தம் கல்லறைகளையும் அழித்திருக்கிறீர்கள். ஆனால், தமிழினம் தொடர்ந்து பொங்கி எழுந்து நிற்கின்றது என்பதை இந்த பெரு நிகழ்வு காட்டுகின்றது.

எமது மக்களை சிங்கள இனவெறி பிடித்த ஓநாய்களிடம் விட்டு விட்டு வெளியேறாதீர்கள் என்று உருக்கமானதோர் வேண்டுகோளை 2006ல் ஐ.நா.விடம் விடுத்தோம். ஆனால், ஐ.நா.அதிகாரிகள் வெளியேறிவிட்டனர்.

அன்று முதல் சிங்களவர்களை மட்டும் கொண்டுள்ள இலங்கையின் ஆயுதப் படைகள் செய்த அட்டூழியங்களை நாம் ஒன்றன்பின் ஒன்றாக ஐ.நா.வுக்கு எடுத்துக்கூறி வந்துள்ளோம். வைத்தியசாலைகள் தாக்குதல்களுக்கு உள்ளாகியதை தெரிவித்தோம். பாதுகாப்பு வலையங்களும், தாக்கப்பட்ட சம்பவங்களையும் ஐ.நா.வின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.

தமிழ் மக்களை ஆயிரம் ஆயிரமாய் கூட்டம் கூட்டமாகக் கொன்று குவித்ததையும், நாம் ஐ.நா.விற்கு எடுத்துக் கூறி வந்தோம். தமிழ் இனத்தை முற்றாகவோ அன்றி ஒரு பகுதியையோ அழித்து விடுவது தான், உண்மையில் அங்கு நடைபெற்றுக்கொண்டிருந்தவை இன அழிப்பு என்பதை தெளிவாக உலகுக்குக் கூறி வந்தோம்.

எனினும் எங்கள் அபயக்குரல், செவிடன் காதில் ஊதிய சங்காக, உலக நாடுகளின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தி படைத்த நாடுகளின் செவிகளில், அதிலும் குறிப்பாக ஐ.நா.வின் செவிகளில் விழவில்லை. எது எவ்வாறாயினும் எமது நிலைப்பாட்டின் உண்மைத் தன்மை இறுதியாக ஐ.நா. பொதுச்செயலாளரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையினால் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.

@ நம் இன உறவுகளுக்காக ஒன்று திரள்வோம் நாம் ஒவ்வொருவரும்.

குடி பழக்கத்திற்கு மாத்திரைகள் அறிமுகம் !

லண்டன், மது குடிப்பதை கட்டுப்படுத்தும் மாத்திரை தயாரிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மது போதைக்கு ஏராளமானவர்கள் அடிமைகளாக உள்ளனர்.

அவர்களை மது குடிப்பதில் இருந்து கட்டுப்படுத்த தற்போது புதிய மாத்திரையை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். இந்த மாத்திரை சாப்பிட்டவுடன் மது குடித்தால் ஏற்படும் போதை உணர்வு முகத்தில் உண்டாகும். அதை தொடர்ந்து அதிக அளவு மது குடிப்பது கட்டுப்படுத்தப் படும்.

இந்த மாத்திரை சாப்பிடுவதால் வேறு எந்த பக்க விளைவு பாதிப்பு ஏற்படாது. இந்த மாத்திரைகள் முதலில் எலிகளுக்கு சோதனை நடத்தப்பட்டது. அது வெற்றிகரமாக முடிந்தது. எனவே, அந்த மாத்திரைகளை போதை அடிமைகளாக இருக்கும் மனிதர்களுக்கும் பயன்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அந்த மாத்திரைகள் விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க் கப்படுகிறது.

Thursday, October 6, 2011

தீபாவளி ரேசில் வின் பண்ணுமா சிம்புவின் ஒஸ்தி !!

தரணி இயக்கியுள்ள சிம்பு நடித்த ஒஸ்தி படம் இந்த ஆண்டு தீபாவளி சினிமா ரேஸில் குதித்துவிட்டது.

ஒரு பாடலுக்கு மட்டும் மல்லிகா ஷெராவத் ஆடியுள்ளார். அந்தப் பாடலை டி ராஜேந்தரும் எல் ஆர் ஈஸ்வரியும் பாடியுள்ளனர். ஏற்கெனவே தீபாவளி பந்தயத்தில் விஜய்யின் வேலாயுதம், சூர்யாவின் ஏழாம் அறிவு, தனுஷின் மயக்கம் என்ன போன்ற படங்கள் உள்ளன.

இவற்றுடன் ஒஸ்தியும் சேர்ந்துள்ளது. இதுகுறித்து இயக்குநர் தரணி கூறுகையில், சாதாரண காலத்தில் வெளியாவதைவிட, பண்டிகை நாட்களில் வெளியாகும் படங்களுக்கு 10 சதவீதத்துக்கு மேல் கூடுதல் வருவாய் கிடைக்கும். அதை இழக்க விரும்பவில்லை என்றார். அக்டோபர் 26-ம் தேதி 300-க்கும் மேற்பட்ட அரங்குகளில் திரையிடத் திட்டமிட்டுள்ளனர்.

காவி வாதிகளுக்கு நடுவே காந்திய வாதி ! சன்னி வைத்யா "95 !!

மும்பை : குஜராத் போலிஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டின் கைதை தொடர்ந்து, அவருக்கு ஆதரவாக பல்வேறு மனித உரிமை ஆணையங்கள் ஒன்று திரண்டுள்ளன.

குஜராத் அரசிற்கெதிராக உண்மைகளை வெளிக்கொணற்பவர்களை மோடி அதிகாரத்தை பயன்படுத்தி பயத்தை உருவாக்குவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஜனநாயகத்திற்கு எதிரான சர்வாதிகார இப்போக்கை கண்டித்து மாநில அளவில் போராட்டங்களை நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அவசர கால சூழ்நிலை போன்ற ஒன்று தற்போது குஜராத்தில் நிலவுகின்றது. இப்போது நமது எதிர்ப்பை நாம் வெளிப்படுத்தவில்லை என்றால் நிலைமை இன்னும் மோசமாகும் என்பதாக பழம்பெரும் காந்தியவாயான சன்னி வைத்தியா தெரிவித்துள்ளார்.

‘என்னுடைய வயது தற்போது தொன்னூற்றி ஐந்து(95), பொது வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறலாம் என்று நினைத்தேன், ஆனால் தற்போது குஜராத்தில் அறிவிக்கப்படாத அவசரகால நிலை ஏற்பட்டுள்ளது, இங்கு யார் அரசிற்கெதிராக குரல் கொடுத்தாலும் சிறைக்குச் சென்றாக வேண்டிய நிலையுள்ளதாக’ காந்தியவாதி வைத்தியா மேலும் தெரிவித்தார்.

குஜராத் போலிஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டின் கைதை சர்வாதிகாரம் என்று கூறிய அவர், இப்போகிற்கெதிராக மக்கள் இனியும் மௌனம் காக்காமல், எங்களுடன் போரட்டத்தில் இணைய வேண்டும் என்பதாக அவர் கேட்டுக்கொண்டார். எங்கு உண்மைகள் வெளிவந்துவிடுமோ என்று பயந்துள்ள மோடி அரசு, அதிகார துஷ்ப்ரயோகம் செய்து அதற்கெதிராக குரல் கொடுப்பவர்களை நசுக்க முயல்கின்றது. இதன் மூலம் உண்மையை கூற விரும்புபவர்களை பயமுறுத்தும் போக்கை கையாண்டுள்ளதாக மதசார்பற்ற ஜனநாயக தலைவர் வாரிகநாத் ராத் கூறியுள்ளார்.

அரசு பயந்து போயுள்ளது, மக்கள் முட்டாள்கல்லர், சரியான தருணத்தில் அரசிற்கு அவர்கள் பாடம் புகட்டுவார்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மற்றொரு பிரபல சமூக ஆர்வலரான தீஸ்தா செதல்ச்வாத் கூறுகையில், மோடி அரசின் அராஜகங்களை மக்களிடமே கொண்டு செல்ல நாங்கள் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். உண்மையை கூற முன்வரும் மற்ற ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு நாங்கள் ஆதரவளிக்கத் தயாராக உள்ளதாகும் அவர் மேலும் கூறினார்.

செய்த தவறை மீண்டும் செய்யாதிருங்கள் ! குஷ்பூ வேண்டுகோள் !!

திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் இம்மாதம் நடைபெறுகிறது. திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை ஆதரித்து நடிகை குஷ்பு 05.10.2011 அன்று திருச்சியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பேசினார்.

பிரச்சாரத்தில் பேசிய குஷ்பு : ஒரு வருத்தமான செய்தியோடு என்னுடைய பேச்சை ஆரம்பிக்கிறேன். அதிமுகவின் அமைச்சர் மரியம் பிச்சை அவர்கள் ஒரு எதிர்பாராத விபத்தில் மரணம் அடைந்தது வருத்தமான விஷயம். எதிர்பாராத மரணத்தினால் இந்த தொகுதிக்கு மீண்டும் தேர்தல் வந்திருக்கிறது. ஒரு ஐந்து மாதம் கூட இல்லாமல், மீண்டும் உங்களை சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை.

பொதுத்தேர்தல் முடிந்தவுடன் நான் அப்பொழுதே பத்திரிகைக்கு பேட்டி அளித்தேன். மக்கள் ஒரு தவறு செய்துவிட்டார்கள். அதை இந்த ஐந்து வருடத்திற்குள் உணர்வார்கள் என்று சொன்னேன். ஆனால், அதை நீங்கள் மூன்றே மாதத்தில் உணர்ந்திருப்பீர்கள்.

தப்பு செய்வது மனித இயல்புதான். நான் கூட சினிமா உலகத்துக்கு வரும்போது, சின்ன சின்ன தவறுகள் செய்திருக்கிறேன். தமிழ் தெரியாமல், தமிழ்க் கலாச்சாரப்படி சேலை உடுத்த தெரியாமல், தமிழ் பேச தெரியாமல் என்னை வைத்து இயக்கிய தயாரிப்பாளர்கள், ஆலோசகர்கள் கொடுத்த அறிவுரையை ஏற்று என்னை மாற்றிக்கொண்டேன்.

தாமஸ் ஆல்வா எடிசன் கூட பல்பை கண்டுபிடித்தார். இப்ப அந்த பல்பு உங்கள் வீட்டில் எரியாது. அது வேற விஷயம். அந்த பல்பை கண்டுபிடிப்பதற்கு முன் 990 தடவை அவர் தவறு செய்தார். ஆனால் அவர் சரிசெய்த போதுதான் உலகம் பிரகாசித்தது. நீங்களும் செய்த தவறை திருத்துவதற்கு ஒரு சரியான வாய்ப்பு. அந்த வாய்ப்பு திருச்சி மேற்கு தொகுதி மக்களுக்கு மட்டும் கிடைத்திருக்கிறது. இவ்வாறு குஷ்பு பேசினார்.

Wednesday, October 5, 2011

தோல்வியை ஒப்புக்கொள்ளும் தோனி !!

சென்னை, அக்.5: சாம்பியன்ஸ் லீக் 20-20 போட்டித் தொடரில் தோல்வியுற்று விரைவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியது நல்லதற்கே என்றார் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி. இதற்குக் காரணமாக அவர் சுட்ட்டிக்காட்டியது, வரும் அக்டோபர் 14ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அதற்குத் தயாராக நல்ல இடைவெளி கிடைக்கும் என்று கூறியிருக்கிறார்.

இந்த சாம்பியன்ஸ் லீக் 20-20 தொடரில் தோல்வியுற்று விரைவில் வெளியேறியது மட்டுமல்ல, நடப்பு சாம்பியனாக இருந்துகொண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தள்ளப்பட்டது சென்னை ரசிகர்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இதே ஏமாற்றத்தை தோனி வெளிக்காட்டினாலும், அடுத்து நடக்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்கு நன்கு தயாராக இந்த இடைவெளி தேவைப்படுகிறது. அதற்கு இந்தத் தோல்வி உதவியிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சாம்பியன்ஷிப் தொடரில் ஒரு கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் தோனிக்கு மிகப் பெரிய தோல்வி கிட்டியிருக்கிறது. போதிய ஓய்வு இன்றி இடைவிடாமல் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறார் என்பதோடு, அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாயிருப்பதே இத்தகைய தோல்விக்குக் காரணம் என்றும் கருதப்படுகிறது.

எனினும், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங், இவ்வளவு சீக்கிரம் படுதோல்வியடைந்து சென்னை அணி வெளியேறுவது மிகவும் துரதிருஷ்டவசமானது, இவ்வளவுக்கும் அவர்கள் தங்கள் சொந்த மண்ணில் சொந்த ரசிகர்கள் முன்னிலையில் ஆடினர் என்பது கவனிக்க வேண்டியது என்கிறார். சென்னை அணியில் உள்ள சுரேஷ் ரெய்னா, அஸ்வின் ஆகியோருக்கும் இந்தத் தோல்வி மூலம் இங்கிலாந்து தொடருக்கு தயாராவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஆனால், கடந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது, இந்திய அணி, பெயருக்கு ஒரு வெற்றியைக் கூடப் பதிவு செய்யவில்லை. தோல்வி முகமாகத் திரும்பிய அணி, இப்போது இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

வடிவேலை கழட்டிவிட காரணம் அரசியல் பின்னணியா?

கடந்த சட்டமன்ற தேர்தலில் வடிவேல் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஆனபிறகு படத்தில் நடிக்காமல் இருந்து வந்தார். வடிவேலு மீண்டும் நடிப்பாரா? என சினிமா ரசிகர்களின் மனதில் தொடர்ந்து கேள்வி எழுந்து வந்தது.

இந்நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை வடிவேலு ஆரம்பித்துவிட்டார் எனவும் சுந்தர்.சி இயக்கும் படத்தில் வடிவேலு நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் பரவி வந்தது.

இதுகுறித்து சுந்தர் சி கூறுகையில், தான் இயக்கும் புதிய படத்தில் வடிவேலு நடிப்பதாக வெளிவந்த செய்திகள் தவறானவை என மறுப்பு தெரிவித்து இருக்கிறார். இவ்வாறு வெளியான செய்திகள் அனைத்துமே வதந்தி எனவும் கூறியுள்ளார்.

காரணம் அரசியல் பின்னணியா பொருத்து இருந்து பார்ப்போம். பழம் பழுத்தால் பஜாருக்கு வரும்.

குஜராத் கேடிகளால் தனது கணவருக்கு ஆபத்து? சஞ்சீவ் பட் மனைவி !?

புது தில்லி:  சிறையில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று குஜராத் அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை கடிதம் அனுப்பியுள்ளது.

சஞ்சீவ் பட்டின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரது மனைவி ஸ்வேதா மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இது தொடர்பாக மத்திய உள்துறைச் செயலர் ஆர்.கே. சிங் தலைமையில் தில்லியில் செவ்வாய்க்கிழமை உயர் நிலைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சக உயரதிகாரி ஒருவர், "சஞ்சீவ் பட், அவரது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்ய வேண்டும்' என்று குஜராத் அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.சஞ்சீவ் பட்டின் உயிருக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக தனியாக ஆய்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

போலீஸ்காரர் கே.சி. பந்த் என்பவரை மிரட்டி வாக்குமூலம் பெற்று சில ஆவணங்களில் கையெழுத்து வாங்கியதாக சஞ்சீவ் பட் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சில நாள்களுக்கு முன்பு அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக அவரது மனைவி ஸ்வேதா, மத்திய உள்துறை அமைச்சகர் ப. சிதம்பரத்துக்கு கடிதம் அனுப்பினார். அதில், தனது கணவர், குடும்பத்தினர் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, ஜாமீன் கோரி சஞ்சீவ் பட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சில அரசியல்வாதிகளின் தூண்டுதளால் போலீஸ்காரர் கே.சி. பந்த் செயல்படுகிறார் என்றும் தன் மீது பொய் வழக்கு போடப்பட்டிருக்கிறது., மோடியும் அவரை சார்ந்த ஹிந்துத்துவவாதிகளால் கணவருக்கு ஆபத்து என்றும் கூறியுள்ளார்.

2002-ல் குஜராத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக முதல்வர் மோடிக்கு எதிராக சஞ்சீவ் பட், உண்மையை கூறி வருவது நினைவுகூரத்தக்கது.

Tuesday, October 4, 2011

உடல் நலத்துக்கு பலனலிக்குமா பழச்சாறு ?

லண்டன். தினமும் காலையில் எழுந்ததும் பழச்சாறு குடிப்பது உடல் நலத்துக்கு உகந்தது என்ற பொதுவான கருத்து நிலவுகிறது.

தற்போது இது உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. தினசரி பழச்சாறு சாப்பிடும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அதில், பழச்சாறு சாப்பிடு பவர்களுக்கு புற்றுநோய் ஆபத்து ஏற்படுவது தெரியவந்தது. அதில் உள்ள சர்க்கரை புற்றுநோயை உருவாக்குவது கண்டறியப்பட்டது. குறிப்பாக, டப்பாக்களிலும், பாக்கெட்டுகளிலும் அடைக்கப்படும் பழச்சாறுகளில் அவை கெட்டுப்போகாமல் இருக்க பல மூலப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.

அவை குடல் புற்றுநோயை ஏற்படுத்துகின்றன. நாள் ஒன்றுக்கு 3 டம்ளருக்கு மேல் குடிப்பவர்களுக்கு இது போன்ற புற்றுநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

அடுத்த படத்திற்கு தயாராகும் தல !?

தமிழ் மட்டுமல்லாது ஆந்திராவிலும் சக்கபோடு போட்ட படம் காஞ்சனா.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரையும் ரசிக்கவும், மிரட்டவும் செய்த இப்படத்தை, சமீபத்தில் அஜித் பார்த்தாராம். பார்த்தமட்டில் அ‌சந்தே போய்விட்டாராம். உடனே லாரன்ஸின் உதவியாளரை போனில் தொடர்பு ‌கொண்டு நான் உடனே லாரன்சை பார்க்கணும் என்று கூறியுள்ளார். அஜித்தின் அழைப்பை ஏற்று லாரன்ஸூம் உடனே அஜித்தை சந்தித்து பேசியுள்ளார்.

இந்தபடத்தின் திரைக்கதை ரொம்பவே தன்னை கவர்ந்துவிட்டதாவும், படம் ரொம்பவே சூப்பராக வந்திருப்பதாகவும் லாரன்ஸை வெகுவாக பாராட்டினாராம் அஜித். அப்படியே எனக்கும் ஒரு நல்ல கதை இருந்தா சொல்லுங்க, நாம ரெண்டுபேரும் சேர்ந்து ஒருபடம் பண்ணலாம் என்று கூறினாராம். அநேகமாக பில்லா-2 படத்திற்கு பிறகு அஜித், லாரன்ஸ் படத்தில் நடித்தாலும் நடிப்பார் என்று கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

கேப்டனுக்கு சாக் ட்ரிட்மென்ட் கொடுக்கும் ஜெயா !!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோயிலில் இன்று இரவு 7.45க்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த், தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

இதற்கு முன்னதாக அவரின் பிரச்சாரத்திற்கான அனுமதியை முறையாக நகர கட்சியினர் வாங்கியிருந்தனர். மூன்று மணி அளவில் அவரது பிரச்சாரம் குறிப்பிடப்பட்டிந்தாலும் தேர்தல் காரணமாக வரும் வழிகளில் அவரது பிரச்சார இடங்கள் அதிகப்படுத்தப்பட்டன. அதன் காரணமாக அவர், சங்கரன்கோயில் வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டது.

இதனிடையே பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்காக மைக் செட்டுகள் கட்டப்பட்டிருந்தன. விஜயகாந்த் வர காலதாமதம் ஆனதால், கூட்டம் திரண்டு வந்துகொண்டே இருந்தது.

இதனால் யாரோ ஒருவரின் (ஜெயா) தூண்டதலின் பேரில் ஸ்பாட்டுக்கு வந்த சங்கரன்கோயில் போலீசார் மைக் செட்டுகள் அனைத்தையும் ஆட்டோவில் அள்ளிப்போட்டுக்கொண்டு சென்றனர்.

இதனால் ஆத்திரமான விருதுநகர் மாவட்ட தேமுதிக செயலளாள்ர் ராஜா, மாநில கேப்டன் மன்ற செயலாளர் செரீப் போன்றவர்கள், டிஎஸ்பி மதிவாணணோடு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர் ஏதோ ஒன்று சொல்ல, கட்சிக்காரர்கள், நாங்கள் முன் அனுமதி வாங்கயபோதே கண்டிஷனை சொல்ல வேண்டியதுதானே. இப்போது வந்து சொல்கிறீர்கள் என வாக்குவாதம் செய்தனர்.

இதனிடையே நடந்தவற்றை விஜயகாந்துக்கு தகவல் கொடுத்தனர். நீங்கள் பேசவிருந்த மைக்கையும் பறித்துக்கொண்டு சென்றுவிட்டார்கள் போலீசார் என்று விஜயகாந்த்திடம் தகவல் தெரிவித்தனர்., இதன் பின்னர் சங்கரன்கோயில் வந்த விஜயகாந்திற்கு, கட்சியினரால் உடனடியாக புது மைக் தரப்பட்டது.

Monday, October 3, 2011

உலகம் முழுவதும் நெஞ்சத்தில் வைத்து நேசிக்கும் நெஞ்சங்கள் !

லண்டன், தேச பிதா அண்ணல் காந்தியடிகளின் பிறந்த தினமான அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

உலக நாடுகள் அக்டோபர் 2ம் தேதியை சர்வ தேச அஹிம்சை தினமாக அனுசரிக்க வேண்டும் என ஐ.நா. சபையில் 2007 ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இங்கிலாந்தில் லண்டன் மாநகரில், மேயர் அப்துல் காதிர் உள்பட ஏராளமானோர் தாவிஸ்டாக் சதுக்கத்தில் காந்தியடிகளுக்கு அஞ்சலி செலுத்தினர். அங்குள்ள மகாத்மா காந்திசிலைக்கு மாலை அணிவித்த காதிர்,காந்தியடிகளுக்கு புகழாரம் சூட்டினார்.

காந்தியடிகளின் அஹிம்சை கொள்கை இன்றைக்கும் பொருந்தும் என இங்கிலாந்திலுள்ள இந்திய தூதரக அதிகாரி ராஜேஷ் பிரசாத் கூறினார்.

ரஷிய தலைநகர் மாஸ்கோவிலும், அங்குள்ள இந்தியர்கள் காந்தியடிகளுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

அன்றும் இன்றும் என்னிடம் உள்ளது ! த்ரிஷா !!

தமிழ், தெலுங்கு திரையுலகில் புதுமுக நடிகைகள் நிறையபேர் அறிமுகமாகி வருவதால் த்ரிஷா போன்ற நடிகைகளுக்கு மார்க்கெட் சரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

புதுமுக நடிகைகள் வரவால் த்ரிஷாவுக்கு வாய்ப்புகள் குறைந்து விட்டது. புதுப்படங்களில் ஒப்பந்தம் செய்ய அவரை யாரும் அணுகவில்லை என்றும் செய்திகள் கசிந்துள்ளன. இதனை நடிகை த்ரிஷா மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், புது நடிகைகளால் எனக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டன என்பதில் உண்மை இல்லை. என் மேல் தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன. தெலுங்கில் கங்கா என்ற படம் கைவசம் உள்ளது. தமிழிலும் ஒரு படத்தில் நடிக்கிறேன்.

என் செல்வாக்கு சரியவில்லை. ரசிகர்கள் தொடர்ந்து என் படங்களை ரசிக்கிறார்கள். திறமை இருந்தால் தான் சினிமாவில் நிலைக்க முடியும். நான் என்னுடைய திறமையை நம்பிதான் வந்தேன். சினிமாவில் பத்து வருடத்துக்கு மேலாக இருக்கிறேன். அறிமுகமான போது எவ்வளவு வரவேற்பு இருந்ததோ அதே வரவேற்பு இப்போதும் இருக்கிறது, என்று கூறியுள்ளார்.

இ டிக்கெட் அறிமுகம் இன்றே பதிவு செய்துகொள்ளுங்கள் !

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்களிலும் அறிமுகப்படுத்தப்படுகிறது. டிக்கெட் கவுண்டரில் காத்து நிற்காமல் வீட்டில் இருந்தபடியோ, கம்ப்யூட்டர் மையத்தின் மூலமோ, டிராவல் ஏஜென்சி மூலமோ இனி பஸ்சிற்காக முன் பதிவு டிக்கெட் உறுதி செய்து கொள்ளலாம்.

எந்த ஊரில் இருந்து எங்கு செல்ல வேண்டுமானாலும் அரசு நீண்ட தூர பஸ்களுக்கு இந்த வசதி வழங்கப்படுகிறது. அரசு விரைவு போக்குவரத்து கழகம் விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி போக்குவரத்து கழக பஸ்களுக்கும் இ.டிக்கெட் மூலம் முன் பதிவு செய்து கொள்ளலாம்.

சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லவும், திருப்பதி, புதுச்சேரி, பெங்களூர் போன்ற அண்டை மாநில நகரங்களுக்கு செல்லவும் அரசு விரைவு பஸ்களில் ஆன்-லைனில் முன்பதிவு செய்யலாம். ஒரு மாதத்திற்கு முன்பாக பயணத்திட்டத்தை வகுத்து அதற்கேற்றவாறு அரசு பஸ்களில் முன் பதிவு செய்து கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கலாம்.

மேலும் தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, ரம்ஜான் போன்ற பண்டிகை காலங்களிலும், கோடை விடுமுறை காலங்களிலும் இந்த திட்டத்தில் முன் பதிவு செய்து பயணம் செய்யலாம். ஆன்லைன் மூலம் இ.டிக்கெட் பெறும் வசதி செய்யப்படுவதால் தேவையற்ற அலைச்சல், கால விரயம், காத்திருத்தல் போன்றவற்றை தவிர்க்கலாம்.

www.tnstc.in என்ற இணையதளத்தின் வழியாக அரசு பஸ்களில் இன்று முதல் இ.டிக்கெட் முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.

இதையடுத்து எந்த இடத்தில் இருந்தும் அரசு பஸ்களில் பயணம் செய்ய முன் பதிவு சேவை தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, செயலாளர் பிரபாகர்ராவ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

பஸ் இ.டிக்கெட் பெறுவதற்கு தூரத்திற்கு ஏற்றவாறு கட்டணம் மாறுபடுகிறது. ஆன்-லைன் முன் பதிவுக்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பஸ்களின் தடம் எண், எங்கிருந்து எங்கே செல்ல வேண்டும், பணம் செலுத்தும் முறை, தேதி, எத்தனை பேர் பயணம் செய்கிறார்கள் போன்ற தகவல்களை இணைய தளத்தின் வழியாக பதிவு செய்யும் போது இ-டிக்கெட் பெற்று கொள்ளலாம்.

பயணத்தின் போது இ.டிக்கெட் பயணிகள் அடையாள சான்றினை வைத்திருக்க வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு பயணம் செய்ய விரும்புவோர் இந்த வசதியை உடனே பெற்றுக் கொள்ளலாம்.

ஆன்லைனில் பிரசார யுத்தம் தமிழகத்தில் ?

சென்னை : பேஸ்புக் மூலம் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்வதில் சென்னை மேயர் வேட்பாளர்களான சைதை துரைசாமியும், மா.சுப்பிரமணியும்! இணையத்தில் போட்டிபோடுகின்றனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிவிட்டரை தனது பிரசாரத்துக்கான களங்களுள் ஒன்றாக பயன்படுத்திக் கொண்டார், பராக் ஒபாமா..

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸும் பிஜேபியும் தத்தமது அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் மூலமாகவும் பிரசாரத்தை மேற்கொண்டன.

அண்மையில் நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையே ஆன்லைனில் பிரசார யுத்தமே நடந்தது.

இப்போது முதல் முறையாக சமூக வலைத்தளத்தை தீவிரமாக நாடியிருக்கிறது, தமிழக அரசியல் சமூகம்!

சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியும், திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியமும் பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கை தங்கள் பிரசாரக் களமாக பயன்படுத்தி வருகின்றனர்.

ஆன்லைன் சென்னைத் தமிழர்களையும், இளைஞர்களையும் வசீகரிப்பதில் இவ்விரு வேட்பாளர்களும் சிரத்தையுடன் செயல்பட்டு வருகின்றனர்.

ஃபேஸ்புக்கில் கணக்கைத் தொடங்குவதில் முந்திக் கொண்ட அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமிக்கு இன்றைய நிலவரப்படி 4,500 நண்பர்கள் கடந்துவிட்டனர்.

அதேவேளையில், தற்போது 1,200 நண்பர்களைக் கொண்டுள்ள திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியம், இந்த எண்ணிக்கையை கூட்டுவதில் முனைப்புடன் இருக்கிறார்.

இவ்விருவரின் ஃபேஸ்புக் ‘wall’களிலும் இவர்களது ஆதரவாளர்களும் அவ்வப்போது ஆதரவு கருத்துகளையும், பிரசார வார்த்தைகளையும், வாழ்த்துகளையும் பதிந்துவிட்டுச் செல்கிறார்கள்.

சைதை துரைசாமி ஃபேஸ்புக்கில் நண்பர்கள் வட்டத்தை விரிவுபடுத்தியிருந்தாலும், மா.சுப்பிரமணியன் தனது நிலைத் தகவலை வெளியிட்டு, செயல்பாட்டில் முன்னிலை வகிக்கிறார்.

தற்போது பிரசாரம் மேற்கொண்டுள்ள இடம், அடுத்து செல்லவிருக்கிற இடம், பிரசாரத்தில் கிடைத்த வரவேற்பு… என அடிக்கடி மா.சுப்பிரமணியத்தின் ஃபேஸ்புக்கில் தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது. இதனிடையே, கடந்த 5 ஆண்டுகளில் சென்னை மேயராக செய்த சாதனைகளையும் எடுத்துவிட்டு கவனத்தை ஈர்க்கிறார் அவர்!

சைதை துரைசாமியின் ஃபேஸ்புக் பக்கத்தைப் பொருத்தவரையில், அவர் பதியும் தகவல்களை விட அவரிடம் நண்பர்களாக இணைந்த ஆதரவாளர்கள் வந்து இட்டுவிட்டுச் செல்லும் பகிர்வுகள் தான் மிகுதி. ஆனால், அவரது தன்னம்பிக்கை ஆன்லைன்வாசிகள் பலரையும் வியக்க வைத்திருக்கக் கூடும். ஏற்கெனவே வைத்திருந்த கணக்குடன், ‘சென்னை மேயர்’, ‘சென்னை மேயர் 2011′ எனப் பற்பல கணக்குகளில் புதுப்புது ஃபேஸ்புக் பக்கங்களில் புகுந்திருக்கிறார்!

Sunday, October 2, 2011

போராட்டத்தால் இருட்டில் மூழ்கப்போகும் தென் இந்தியா !!

ஹைதராபாத் : தனி மாநிலம் கோரி தெலுங்கானாவில் நடக்கும் போராட்டத்தால் தென் இந்தியா முழுவதும் இருட்டில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சிங்கரேணி நிலக்கரி சுரங்கம் போராட்டத்தால் மூடப்பட்டுள்ளதால் மின் உற்பத்திக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மின் உற்பத்தி பாதிப்பினால் தமிழ் நாடு மற்றும் கர்நாடக ஆகிய மாநிலங்களில் மின் தடை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிங்கரேணி நிலக்கரி சுரங்கத்தின் பணியாளர்கள் தெலுங்கானா கோரிக்கைக்கு அதரவு தெரிவிக்கும் விதமாக பணி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் 2600 மெகாவாட் திறன் கொண்ட ராமகுண்டம் தேசிய அனல் மின் நிலையம் நிலக்கரி பற்றாக்குறையால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும் ராமகுண்டம் தேசிய அனல் மின் நிலையத்திலிருந்து தமிழ் நாட்டிற்கு 780 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாடு மின்சார துறை பெறுகிறது. எனவே இவ்வனல் நிலையம் மூடப்பட்டுள்ளதால் தமிழ் நாட்டிற்கு 780 மெகாவாட் மின்சாரம் கிடைக்காமல் தடைபடும்.

இதிலிருந்து தமிழ் நாடு மற்றும் கர்நாடகாவில் வசிக்கும் மக்கள் தெலுங்கானா போராட்டத்தால் பாதிப்புக்குள்ளாவார்கள் என்பது உறுதியாகிறது. மேலும் இந்த பாதிப்பினால் ஏற்கனவே இருக்கும் இரண்டு மணி நேரம் மின்வெட்டுடன் சேர்த்து மேலும் அரை மணி நேரம் மின்வெட்டு செய்ய தமிநாடு மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கர்நாடகாவில் ஏற்கனவே மின் தட்டுப்பாடு காரணமாக போராட்டங்கள் வெடித்துள்ளதால் கர்நாடக அரசு கடந்த சனிக்கிழமை முதல் பஞ்சாபிலிருந்து மின்சாரம் வாங்குவதாக மின்சார துறை அமைச்சர் ஷோபா கரண்ட்லஜே தெரிவத்துள்ளார்.

Saturday, October 1, 2011

உடல் நலத்துக்கு நன்மை பயக்கும் சிரிப்பு

லண்டன் : சிரிப்பு தான் உலகின் சிறந்த மருந்து என்பது நமக்குத் தெரிந்ததுதான். ஆனால் சமீபத்திய ஆய்வு ஒன்று, மூளைக் கோளாறால் (டிமென்ஷியா) பாதிக்கப்பட்ட வயதானோருக்கு சிரிப்பு அருமருந்தாகப் பயன்படுவதாகத் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள 36 மருத்துவமனைகள் மற்றும் 400 வீடுகளில், கடந்த மூன்றாண்டுகளாக வயதானோரிடையே ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் நடத்திய இதில், விளையாட்டுகள், நகைச்சுவை மற்றும் பாடல்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. ஆய்வாளர்கள் தினசரி மருத்துவமனைகள் மற்றும் வீடுகளுக்குச் சென்று வயதானோருடன் பேசி சிறிது நேரம் இருப்பர். அப்போது, விளையாட்டு, நகைச்சுவை போன்றவற்றை அவர்களுடன் பகிர்ந்து கொள்வர்.

இந்த ஆய்வில், 200 வீடுகளில் உள்ள வயதானோரைச் சந்திக்கும் ஆய்வாளர்கள், விளையாட்டு போன்ற எதையுமே பயன்படுத்தாமல் வெறுமனே பேசி விட்டு வந்து விடுவர். ஆய்வின் இறுதியில், வயதானோர் குறிப்பாக, பல்வேறு நோய்களால் மூளைக் கோளாறு ஏற்பட்டு அதனால் பாதிக்கப்பட்டோர், விளையாட்டு, நகைச்சுவை போன்றவற்றால் மூளைக் கோளாறின் பாதிப்பில் இருந்து, 20 சதவீதம் விடுபட்டது தெரியவந்தது

கருத்தடை சாதனங்களை கண்டுக்காவிடில் கைமீறும்! ஐ நா?

மாஸ்கோ : "இந்த மாதத்தில், உலகின் மொத்த மக்கள் தொகை எண்ணிக்கை, 700 கோடியாகி விடும். 2100ம் ஆண்டிற்குள், இத்தொகை, ஆயிரம் கோடியாக அதிகரிக்கும்' என, ஐ.நா.,வின் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 1804ம் ஆண்டு வரை, உலகின் மொத்த மக்கள் தொகை 100 கோடியாக இருந்தது. 1960களில், 300 கோடியாக அதிகரித்தது. இன்னும் ஒரு நூற்றாண்டில், ஆயிரம் கோடியாக உயர்ந்து விடும். மக்கள் தொகை அதிகரிப்பு, வளர்ந்து வரும் நாடுகளில் தான் காணப்படுகிறது.

உலகில், மக்கள் தொகை அதிகரிப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ள 10 நாடுகளில், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகிய, மூன்று வளர்ந்த நாடுகள் மட்டும் தான் இடம் பெற்றுள்ளன.இந்த அதிகரிப்புக்கு பொருளாதார வளர்ச்சி, பிறப்பு விகிதம் அதிகரிப்பு, இறப்பு விகிதம் குறைவு ஆகிய காரணங்களை, நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அதேநேரம், கருத்தடை வசதிகளை அதிகளவில் மக்கள் உபயோகப்படுத்தும் போது தான், பிறப்பு விகிதம் குறைய வாய்ப்பு என்று ஐ நா, நிபுணர்கள் கூறுகின்றனர்.

நரேந்திர கேடியின் வஞ்சக செயல் ?

புதுடெல்லி : குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் உண்ணாவிரத நாடகத்தை விமர்சித்து கார்ட்டூன் வரைந்ததற்காக ஹிந்தி மாலை நாளிதழின் கார்ட்டூனிஸ்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபாத் கிரண் என்ற ஹிந்தி மாலை நாளிதழின் கார்ட்டூனிஸ்ட் ஹரீஷ் யாதவ் என்ற மூசவீர்(35) இந்தூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். செப்டம்பர் 20ம் தேதி அவர் வரைந்த கார்ட்டூன் அந்த நாளிதழில் வெளியாகியிருந்தது.

மோடியின் உண்ணாவிரத நாடக மேடையில் சில முஸ்லிம் பெயர்தாங்கி மௌலவிகள் மோடிக்கு தொப்பி அணிய முயற்சி செய்தனர். ஆனால் மோடி அதனை நிராகரித்து அவர்களின் முகத்தில் கரியைப் பூசினார். இந்த நிகழ்வைக் கருப்பொருளாக வைத்துதான் ஹரீஷ் அந்தக் கார்ட்டூனை வரைந்திருந்தார்.

குஜராத் இனப் படுகொலையைத் தலைமையேற்று நடத்திய மோடியை விமர்சித்து மண்டையோட்டுத் தொப்பியை அணிவிக்க முயற்சிப்பதாக இருந்தது அந்தக் கார்ட்டூன்.

அந்தக் கார்ட்டூன் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றதாக பிரபாத் கிரண் ஆசிரியர் பிரகாஷ் புரோஹித் கூறினார். “எதிர்க்கக்கூடிய அளவுக்கு அந்தக் கார்ட்டூனில் ஒன்றும் இல்லை. பா.ஜ.க.வின் சிறுபான்மை அணி மட்டும்தான் அந்தக் கார்ட்டூனை எதிர்த்தது. காவிக் கட்சிக்காரர்கள் பத்திரிகைச் சுரந்திரத்திற்குப் பங்கம் விளைவிக்க முயற்சி செய்கிறார்கள்” என்று அவர் கூறினார்.

யாசகம் கேட்ட பெண்ணுக்கு அடித்தது100 டாலர் !!

மும்பை சிக்னலில் தன்னிடம் பிச்சை கேட்ட பெண்ணுக்கு 100 டாலர் (இந்திய ரூபாயில் 5000) கொடுத்தார். ஹாலிவுட் நடிகையாக இருப்பவர் பாரிஸ் ஹில்டன். கோடீஸ்வரியான இவர், தனியாக அலங்கார பொருட்கள் உள்ளிட்ட பல தொழில்களில் செய்து வருகிறார். இந்தியாவில் தனது பொருட்களை பிரபலப்படுத்து நோக்கோடு மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

இந்நிலையில் மும்பையின் அந்தேரி பகுதியில் சிக்னலுக்காக பாரிஸ் ஹில்டன் கார் நின்று கொண்டிருந்தது. அப்போது கைக்குழந்தையுடன் ஒரு பெண், ஹில்டனின் கார் கண்ணாடி‌யை தட்டி பிச்சை கேட்டுள்ளார். உடனே ஹில்டன் 100 டாலரை கொடுத்துள்ளார். 100 டாலர் என்பது கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் ரூ.5000 ஆகும்.

இந்தியாவில் உள்ள வறுமை நிலையை பற்றி தனது டுவிட்டரில், இந்தியா மிகவும் அழகான நாடு. ஆனால் சில பகுதிகள் வறுமைக் கொடுமை உள்ளது. தெருவில் படுத்துத் தூங்கும் குழந்தைகளைப் பார்த்து என் இதயம் உடைந்துவிட்டது என்று மிகவும் வேதனைபட்டுள்ளார். மேலும் பாலிவுட்டில் இருந்து நடிக்க இரண்டு ஆஃபர்கள் வந்துள்ளதாகவும், வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் இந்தியிலும் நடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!