10:09 AM
Unknown
ஆசியக் கண்டத்தில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள ஊட்டியில் விளையும் ஒரு வகைப்பழம் துரியன்.
இது பலாப்பழம் போல இருக்கும். பலாப்பழத்தில் முட்கள் இருப்பது போல இதன் மேல்தோல் கரடுமுரடாக இருக்கும். ஆனால், பலாப்பழத்தை விட, அளவில் சிறிய பழம் இது.
ஆகஸ்டு மாதம் இந்த பழத்தை அறுவடை செய்வர். ஆண்மை குறைவு போக்கும் அற்புத சக்தி இதற்கு உண்டு. அதனால் இதன் விலையும் அதிகம்தான். மஞ்சள் காமாலை நோயையும் குணப்படுத்தும் சக்தி உடையது. சாக்லேட், கேக், ஐஸ்கிரீம், பானங்கள் போன்றவை தயாரிப்பிலும் துரியன் பழம் பயன்படுகிறது.
7:04 PM
Unknown
சென்னை, செப்.23 : திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலை கண்காணிப்பதற்காக 3 பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
இந்த தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 5 கம்பெனி துணை ராணுவம் திருச்சி வருகிறது என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் ,தமிழ்நாட்டில் 18 வயது முடிந்தவர்கள் அடுத்த மாதம் 24-ந் தேதி தொடங்கும் வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது தங்களது பெயர்களை சேர்த்துக்கொள்ளலாம் என தெரிவித்தார் .
5:52 PM
Unknown
தமிழ் படங்களில் நடிப்பதை குறைத்து விட்டு மலையாள படங்களில் அதிக ஆர்வம் காட்டி நடித்து வருபவர் நடிகை பத்மப்ரியா. மலையாளத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் பத்மப்ரியா.
தற்போது நயிகா என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். அந்த காலத்து அழகு நடிகை சாரதாவின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம். ஜெயராஜ் இயக்கத்தில் இப்படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், என்னைப் பொறுத்தவரை நல்ல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளதாக கருதுகிறேன். அதேசமயம், கிளாமராக நடிப்பதிலும் ஆட்சேபனை இல்லை. அப்படி வாய்ப்பு வரவில்லை. இதனால் பெரிய அளவில் நடிக்கவில்லை. ஆனால் அது கஷ்டமான விஷயமும் இல்லை. கதைக்குத் தேவைப்பட்டால் நிர்வாணமாகக் கூட நடிக்கலாம் என்பதுதான் எனது பாலிசி. பெண்களை கவர்ச்சியை விட்டுத் தனித்துப் பார்க்க முடியாது. அதேசமயம், அவர்களை செக்ஸியாக மட்டுமே சித்தரிப்பது என்பதை என்னால் ஏற்க முடியாது, என்று கூறியுள்ளார்.
10:47 AM
Unknown
அதிமுக உள்ளாட்சிதேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. இதையடுத்து வேறு வழியின்றி தேமுதிகவும் தனித்து போட்டி என்று அறிவித்துள்ளது.
அதிமுகவின் புறக்கணிப்பு குறித்து அமைதி காத்து வந்த விஜயகாந்த், அதிமுகவுக்கு எதிராக தனது கட்சியினர் மத்தியில் நிலவி வந்த கொந்தளிப்பை உணர்ந்தே தனித்துப் போட்டியிடும் முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் ஒதுக்கவில்லை என்று தேமுதிக தொண்டர்கள் ஆவேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதே போல் இப்போதும் அதிமுகவுக்கு எதிராக கிளம்பியுள்ளனர்.
இன்று தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்ற அறிவிப்பு வந்ததை சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் கல்யாண மண்டப வளாகத்தில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் குவிந்திருந்த தேமுதிகவினர் வரவேற்று கொண்டாடினர்.
அப்போது தேமுதிக தொண்டர்கள், தனித்துப் போட்டியிடுவது என்பது எங்களுக்குப் புதிதல்ல. ஆரம்பத்திலிருந்தே நாங்கள் தனித்தே செயல்பட்டு வந்துள்ளோம். அப்படித்தான் நாங்கள் வளர்ந்தோம். எனவே இது எங்களுக்குப் புதிதல்ல.
புரட்சிக் கலைஞர் கூறியதால்தான் கடந்த தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து செயல்பட்டோம். ஆனால் எங்களை முதுகில் குத்தி விட்டது அதிமுக.
இந்தத் தேர்தலில் அதிமுகவை எதிர்த்து நாங்கள் போட்டியிடப் போகிறோம். அவர்களை தோற்கடிப்பதோடு மட்டுமல்லாமல் டெபாசிட் இழக்க வைத்து நாங்கள் யார் என்பதைக் காட்டுவோம்’’ என்று கொதித்தனர்.
7:02 AM
Unknown
பிரிட்டன் வாழ் தமிழர்கள் எதிர் வரும் நவம்பர் 2 ஆம் தேதி அன்று “Heart 2 Heart” என்னும் நடை பயணம் ஒன்றை பேர்மிங்காமில் இருந்து ஆரம்பித்து லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் வரை தொடரவுள்ளனர்.
இந்த நடை பயணத்திற்கு பிரிட்டன் வாழும் அனைத்து சமூகத்தவரையும் உள்வாங்கி அவர்களுக்கிடையில் உள்ள வேறுபாடுகளையும் கடந்து முதன் முதலாக நடத்தப்படும் நடைபயணமாக இருக்குமென நம்பப்படுகிறது. இப்பயணமானது “The Royal British Legion” க்கும் ஈழத்தில் உள்ள ஆதரவற்றோர் இலங்களுக்கும் ஆதரவையும் நிதியையும் திரட்டும் நோக்கில் நடாத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு நாள் நடைபயணத்தை பிரிட்டனின் சுதந்திரத்துக்கும் பாதுகாப்புக்கும் போராடி மடிந்த, மடிந்து கொண்டிருக்கின்ற மறவர்களை நினைவுகூரும் நவம்பர் இரண்டாம் தேதியில் பர்மிங்காமில் ஆரம்பிக்கவுள்ளதாக பிரிட்டன் தமிழர்கள் அறிவித்துள்ளனர்.
அத்துடன் எமது இளைய சமுதாயத்தினர் இன்று இந்நாடுகளின் அனுபவிக்கும் சுதந்திரத்தினை அடைவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட தியாகங்களை நினைவுகூருவதோடு இன்றும் விடுதலைக்காகவும், சுதந்திரத்திற்காகவும் போராடும் மக்களுக்கும் உறுதுணையாக இருப்பார்கள் என்பதும் இப்பாதயாத்திரையை ஏற்பாடு செய்பவர்களின் நம்பிக்கையாகும். ஆகவே பிரிட்டன் வாழ் அனைத்து மக்களின் பங்களிப்பினையும் ஆதரவினையும் அவர்கள் வேண்டி நிற்கிறார்கள்.
5:12 PM
Unknown
செய்தியாளர்களிடம் பாஸ்வான் கூறியது., பரமக்குடியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து பல நாள்கள் ஆன பிறகும் முதலமைச்சர் ஜெயலலிதா அங்குச் செல்லவில்லை., பாசிச போக்கையே அறிவுருத்துகிறது, பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறவில்லை. அங்கு என்ன நடந்தது என்பதை ஆராயாமல் போலீஸôருக்கு சாதகமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
காவல் துறை கைகளில் துப்பாக்கிகள் கொடுக்கப்பட்டிருப்பது, பொது மக்களை துப்பாக்கியால் சுட்டு கொல்வதற்கு அல்ல. மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி கொண்டு அவர்களை பாதுகாப்பதை விட்டவிட்டு கலவரத்தை சமாளிக்க முடியாமல் துப்பாக்கி மூலம் உயிர்களை பறித்தது கடைந்தெடுத்த பாசிச பயங்கரவாதம்.
இது தமிழ்நாடு அளவிலான பிரச்னை மட்டும் இல்லை. தேசிய அளவிலான பிரச்னை., சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்கக் கோரி, செப்டம்பர் 30-ல் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தமிழக அரசைக் கலைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசிடம் முன்வைப்போம்.
தமிழ்நாடு சமூக நல்லிணக்கம் போற்றப்பட்டு வந்த மண்.,மேலும் இந்த பாசிச வாதிகளை ஆட்சியில் வைத்திருப்பது அதிக ஆபத்து இங்கு இனிமேலும் இதுபோன்றச் சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்றார்.
3:19 PM
Unknown
சினமாவில் அறிமுகமாக மொழி முக்கியம் அல்ல என்பதை நெடுங்காலமாக உணர்த்தி வருகிறது தமிழ் சினிமா துறை. அவ்வப்போது புதுமுகங்களை இறக்குமதி செய்து ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்து வருகின்றனர்.
அந்தவரிசையில் தமிழ்சினிமாவின் இப்போதைய புதுவரவு ரிச்சா. தெலுங்கில் ரானாவுடன் லீடம் படம் மூலம் அறிமுகமாகி, முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை கொடுத்தவர். இதுதவிர சந்திரமுகி-2 உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
தெலுங்கில் நடித்து வந்த ரிச்சாவை, தமிழில் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் டைரக்டர் செல்வராகவன். அவர் இயக்கியுள்ள மயக்கம் என்ன படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ளார். இந்தபடம் வெளிவருவதற்கு முன்பே அடுத்தபடியாக சிம்புவுடன் ஒஸ்தி படத்தில் ஜோடி போட்டு இருக்கிறார்.
ஒஸ்தியில் நடித்து வரும் ரிச்சாவிடம், தனுஷ், சிம்பு இருவரில் யார் உங்க பெஸ்ட் ப்ரெண்ட் என்று கேட்டால் ரொம்ப விவரமாக இரண்டு பேருமே தான் என்கிறார். நடிப்பு விஷயத்தில் தனுஷ் நிறைய விஷயங்கள் சொல்லி கொடுத்தார். சிம்புவை பொறுத்தவரை நடன காட்சியின் போது பொறுமையாக இருந்து எனக்கு ஸ்டெப்பெல்லாம் சொல்லி கொடுத்தார். தனுஷ், சிம்பு தவிர இன்னும் நிறைய நடிகர்கள் என் லிஸ்ட்டில் இருக்காங்க என்று ரிச்சாக சொல்லுகிறார் ரிச்சா.
10:30 AM
Unknown
கோவையில் வருகிற 25 - ந் தேதி தே.மு.தி.க. 7 - ம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் நடைபெறுகிறது என்றும், இதில் கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசுகிறார் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து விஜயகாந்தை வரவேற்று பல்வேறு இடங்களில் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் தெற்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் பஸ் நிறுத்தத்தில் மிகப் பெரிய பேனர் வைக்கப்பட்டு இருந்தது.
இந்த பேனரை நேற்று இரவு மர்ம ஆசாமிகள் பிளடோல் கிழித்து சேதப்படுத்தி விட்டனர்.
இந்த தகவல் கிடைத்ததும் தே.மு.தி.க. வினர் 50 - க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர். இதனால் பரபரப்பு உருவானது. பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் போலீசார் அங்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
பேனர் கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். ஆனாலும் அங்கு பதட்டம் நிலவுகிறது., விஜயகாந்த் வரவேற்பு பேனர் கிழிக்கப்பட்டதற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் கீர்த்தி சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
@ நேற்று ஜெ வால் கலட்டிவிடப்பட்டது வை கோ, இன்று கேப்டன் நாளை..,?
7:33 AM
Unknown
நகரி, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபுநாயுடு தனக்கு ரூ.39 லட்சம் சொத்து மட்டுமே இருப்பதாக அறிவித்துள்ளார். இதற்கு நடிகை ரோஜா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஐதராபாத்தில் ரோஜா கூறியதாவது : ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகி விடாது. சந்திரபாபு நாயுடுவிடம் வேலை பார்க்கும் காவலாளிக்கு கூட அவரை விட அதிகமாக சொத்து இருக்கும். சந்திரபாபுநாயுடு பொது மக்களை ஏமாற்றுகிறார்.
9 ஆண்டு முதல்- மந்திரியாக இருந்த சந்திரபாபு நாயுடுவுக்கு இவ்வளவுதான் சொத்தா? எங்களுக்கு அதை விட அதிகமாக இருக்கிறதே என்று அவரைப்பார்த்து பொதுமக்கள் சிரிக்கிறார்கள். அவரது கட்சி எம்.எல்.ஏ.க்களும் அவரை கிண்டலாக பார்க்கிறார்கள்.
சந்திரபாபுநாயுடு பினாமி பெயரில் பல இடங்களில் சொத்து வைத்துள்ளார். அவரது சொந்த தொகுதியான குப்பந்தில் 100 ஏக்கர் விவசாய பண்ணை வைத்துள்ளார். சென்னை, பெங்களூர், சிங்கப்பூரிலும் அவருக்கு சொத்து உள்ளது. அவர் அளவுக்கு அதிகமாக சொத்து குவித்ததாக 10 ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமி சிவபார்வதி வழக்கு தொடர்ந்தார். அதற்கு சந்திரபாபுநாயுடு தடை வாங்கி விட்டார்.
தைரியம் இருந்தால் அவர் வழக்கை சந்திக்க வேண்டியதுதானே. சந்திரபாபுநாயுடு தனது சொத்துக்கள் ரூ.39 லட்சம் மட்டுமே என்பதை நிரூபிக்க அவராகவே சி.பி.ஐ. விசாரணை வைத்துக்கொள்வாரா?, இவ்வாறு நடிகை ரோஜா கூறினார்.
7:23 PM
Unknown
இந்த ஆண்டில் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் 3ம் இடத்தில் இருந்த ஜப்பான் 4வது இடத்துக்குத் தள்ளப்படும்.
கடந்த 2010ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அடிப்படையில் அமெரிக்க முதலிடத்திலும் சீனா மற்றும் ஜப்பான் ஆகியவை முறை யே 2 மற்றும் 3ம் இடத்திலும் உள்ளன. இந்தியா 4வது இடத்தில் இருந்தது. அதாவது இந்தியாவின் ஜிடிபி 190.82 லட்சம் கோடியாக இருந்தது. இது ஜப்பானின் ஜிடிபியான 202.57 லட்சம் கோடியைவிட சிறிதளவு குறைவு.
அப்போதைய பொருளாதார வளர்ச்சி விகிதத்தின்படி 2013&14 நிதியாண்டில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்திய பொருளாதாரம் 3ம் இடம் பிடிக்கும் என மதிப்பிடப்பட்டது.
ஆனால், அண்மையில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக ஜப்பானை பின்னுக்குத் தள்ளி, இந்த ஆண்டிலேயே இந்தியா 3ம் இடம் பிடிக்கும் என கிரிசில் பொருளாதார வல்லுநர் சுனில் சின்ஹா கூறியுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் பயங்கர பூகம்பம் மற்றும் சுனாமி ஜப்பானை தாக்கியது. இதனால் அந்நாட்டு பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த ஆண்டில் ஜப்பான் பொருளாதார வளர்ச்சி 0.7 சதவீதமாக சரியும் என ஐஎம்எப் கூறியுள்ளது. அதேநேரம் இந்திய பொருளாதாரம் 8.2 சதவீதம் வளரும் என கூறியுள்ளது. இந்த ஆண்டில் ஜப்பானும், இந்தியாவும் 3ம் இடத்துக் போட்டி போடும் முன்கூட்டியே ஐஎம்எப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
6:51 PM
Unknown
இரவில் முன் கூட்டியே தூங்க சென்று அதிகாலையில் கண் விழிப்பது உடல் நலத்துக்கு நல்லது. அவர்கள் சொல்வாக்கு மற்றும் அதிக ஆயுளுடன் திகழ்வார்கள் என கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்னரே பெஞ்சமின் பிராங்க்ளின் என்ற அறிஞர் தெரிவித்து இருந்தார். அது முற்றிலும் உண்மை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இங்கிலாந்தில் உள்ள ரோம்ப்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதற்காக சுமார் 1100 ஆண்கள் மற்றும் பெண்களை தேர்ந்தெடுத்தனர். அவர்களில் அதிகாலையிலேயே எழுபவர்கள் ஒல்லியாகவும், நல்ல உடல் நலத்துடனும் இருந்தனர். இதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.
அதே நேரத்தில் ஆந்தை போன்று இரவு முழுவதும் கண் விழித்து விட்டு மிகவும் தாமதமாக படுக்கையை விட்டு எழுபவர்கள் உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும் தொலைத்தவர்களாக இருந்தனர். எனவே அதிகாலையிலேயே எழுந்து வழக்கமான தங்கள் பணிகளை தொடங்குபவர்கள் உடல் நலத்துடன் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
12:52 PM
Unknown
புதுடெல்லி, செப் 21 ; இந்தியாவின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன் சவுரவ் கங்குலி கூறுகையில், மூத்த வீரர்கள் இந்த நேரத்தில் ஓய்வு பெறுவது சரி இல்லை மற்றும் தேர்வாளர்கள் அவர்களை விளையாட்டை விட்டு விலகவும் கட்டாயப்படுத்த கூடாது என்றார்.
சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் மற்றும் வி.வி.எஸ்.லக்ஷ்மண் போன்ற வீரர்கள் தங்கள் செயல் திறன் எப்போது குறைகிறது என்று தீர்மானிக்கிறார்களோ அப்போது தாங்களாகவே விலகலாம் என கங்குலி தெரிவித்தார் .
10:22 AM
Unknown
புதுடெல்லி : தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் இரண்டு ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகளான சனாதன் சஸ்தா மற்றும் அபினவ் பாரத் ஆகிய அமைப்புகளை முழுமையாக தடைச் செய்ய வேண்டும் என்று மகாராஷ்டிரா போலீஸ் பரிந்துரை செய்துள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற கோவா குண்டுவெடிப்பில் சனாதன் சாஸ்தாவின் பங்கு நிரூபணம் ஆனது மேலும் கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த மலேகான் குண்டுவெடிப்பில் அபிநவ் பாரத்தின் பங்கு அம்பலம் ஆனது.
லெப்டினென்ட் கர்னல் ஸ்ரீகாந்த ப்ரோகித், அஜய் ரஹீர்கர், ரமேஷ் உபாதை மற்றும் சம்மர் குல்கர்னி ஆகிய அபினவ் பாரத்தின் உறுப்பினர்கள் கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த மலேகான் குண்டுவெடிப்பில் மும்பை தீவிரவாத தடுப்பு பிரிவு மற்றும் சிபிஐ யால் கைது செய்யப்பட்டு குற்றவாளிகள் என்று தெரியவந்தது.
அதேபோல் சனாதன் சாஸ்தாவின் பதினோரு உறுப்பினர்கள் கோவா குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டிருப்பதை தேசிய புலானாய்வுக் குழு கண்டறிந்தது.
மகாராஷ்டிரா போலீஸின் இந்த நடவடிக்கை இம்மாதத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து மாநில உள்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவிக்கையில், இவ்வமைப்புகள் தடைச் செய்யப்படுவது குறித்து விசாரணை நடந்து வருகிறது. எனினும் தங்களிடம் இருக்கும் ஆதாரங்களை வைத்து அபினவ் பாரத் மற்றும் சனாதன் சாஸ்தாவை தீவிரவாத தடுப்பு சட்டத்தின் அடிப்படையில் தடை செய்யக்கோரி மகாராஷ்டிரா காவல்துறை பரிந்துரை செய்ததாகவும் கூறியுள்ளார்.
குண்டுவெடிப்பில் தொடர்புடைய இவ்வமைப்புகளுக்கு எதிராக அரசின் நடவடிக்கை என்ன என்றும் இவ்வமைப்புகள் தடை செய்யப்படுமா என்றும் கேட்கப்பட்டதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் சம்ஜோதா எக்ஸ்பிரஸ், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் மற்றும் அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பில் இதுவரை எந்த குறிப்பிட்ட அமைப்பின் செயலும் உறுதி செய்யப்படவில்லை. எனினும் குற்றம் சாட்டப்பட்டுள்ள சுவாமி அசீமானந்,தேவேந்திர குப்தா மற்றும் லோகேஷ் ஷர்மா ஆகியோர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்தவர்கள் என்று தெரிவித்துள்ளார்.
தேசிய புலனாய்வுக் குழு இம்மூன்று வழக்கிகளிலும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. 2006 மாலேகான் குண்டு வெடிப்பில் மும்பை தீவிரவாத தடுப்பு பிரிவும், சிபிஐ-யும் சிமி மீது குற்றம் சாட்டினர். ஆனால் சுவாமி அசீமானந்த் மாலேகான் குண்டு வெடிப்பில் தொடர்புடையது தங்கள் அமைப்புதான் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததால் இவ்வழக்கு தேசிய புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
7:08 AM
Unknown
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சே நியூயார்க் சென்றுள்ளார்.
எதிர்வரும் 23ம் தேதி நடைபெறும் மாநாட்டில் ராஜபட்சே உரையாற்றுகிறார்.
இந்த நிலையில் இலங்கை அரசு மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுத்து, ஐ.நா. மாநாட்டில் கலந்து கொள்ள வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை அங்கேயே கைது செய்ய வேண்டும் என்றும், தனி தமிழ் ஈழம் அமைய ஐ.நா. தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், இந்தியா போன்ற நாடுகள் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொங்குதமிழ் உரிமை முழுக்கம் என்ற பெயரில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஐ.நா. அலுவலகம் இருக்கும் ஜெனீவா நோக்கி புறப்புட்டுக்கொண்டிருக்கின்றனர்.
5:33 PM
Unknown
மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் 32ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு செப்டம்பர் 17ம் தேதி, சென்னை தென்னிந்திய திரைப்பட வர்த்தக வளாகத்தில் நடிகர் எம்.ஆர்.ராதா பற்றிய கல்லூரி மாணவர்கள் சிலர் இணைந்து இயக்கி தயாரித்திருந்த, "என் பார்வையில் நடிகவேள்" எனும் குறுந்தகடு வெளியீட்டு விழா நடைபெற்றது. முனைவர் அகிலா சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், குறுந்தகட்டின் முதல் பிரதியை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு வெளியிட, இயக்குநர் பி.வாசு பெற்றுக் கொண்டார்.
திரையுலக பிரபலங்கள் முக்தா சீனிவாசன், கவிஞர் பிறைசூடன், நடிகர்கள் சார்லி, வாசு விக்ரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசிய இவ்விழாவில், இயக்குநர் பி.வாசு பேசுகையில், இந்த ஜென்ரேஷன் இளைஞர்களையும், மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதா கவர்ந்திருப்பதற்கு சான்று தான் இங்கு குழுமியிருக்கும் இளைஞர்கள் கூட்டம். அவர்கள் இக்குறும்படத்தை தயாரித்து இயக்கி இருக்கும் தங்களது நண்பருக்காக வந்திருந்தாலும் சரி, எம்.ஆர்.ராதாவிற்காக வந்திருந்தாலும் சரி, நான் எல்லாம் எம்.ஆர்.ராதாவின் தீவிர ரசிகனாக, அவரது படங்களை பார்த்து வளர்ந்தவன். அந்த காலங்களில் சில படங்கள் நாயகர்களுக்காக ஓடும். சில படங்கள் பேனருக்காக ஓடும், சில படங்களோ அப்பட நாயகர்களுக்காக ஓடும். ஆனால் எம்.ஆர்.ராதா நடித்த ரத்தக்கண்ணீர் அவரது நடிப்பிற்காக மட்டுமே ஓடிய படம். அவர் தனது வாரிசுகளுக்கு விட்டுச் சென்ற மாபெரும் சொத்து ரத்தக்கண்ணீர் படம் தான் என்றால் மிகையல்ல.
நான் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் படம் இயக்க செய்கிறேன். அங்கெல்லாம் எம்.ஜி.ஆர்.,சிவாஜிக்கு ஈக்குவலாக தெரிந்த போன தலைமுறை தமிழ் நடிகர் எம்.ஆர்.ராதா அண்ணன் மட்டுமே. கன்னடத்தில் என்னை ரத்தக்கண்ணீர் படத்தின் செகண்டு பார்ட்டை இயக்கித்தரச் சொன்னார்கள். அவர்களிடம் நான் ஒரு வருடம் டைம் கேட்டிருக்கிறேன். காரணம் அவரது நடிப்பு, அதன் மீதான பயம் தான்.
நடிகர் திலகம் சிவாஜியே ஒருமுறை என்னிடம், டேய் நான் ஷூட்டிங்போனா அந்தப்படத்துல, ஸ்பாட்டுல ரங்காராவ், ராதா அண்ணன் இரண்டுபேரும் இருந்தா உஷாரா இருப்பேன். காரணம் கொஞ்சம் ஏமாந்தா அவங்க இரண்டு பேருமே நம்மை தூக்கி சாப்பிட்டு விடுவார்கள்... என்பார். அப்படிப்பட்ட மாபெரும் நடிகர் எம்.ஆர்.ராதா என்ற பி.வாசு, என் பார்வையில் நடிகவேள் குறும்படத்தை இயக்கி, தயாரித்த எஸ்.மதன், ஆர்.தினேஷ் இருவரையும் பாராட்டினார்., முன்னதாக இந்நிகழ்ச்சியை தயாரிப்பாளர் ஆர்.தினேஷின் தந்தை எம்.ரமேஷ் பாபு ஒருங்கிணைப்பு செய்து வரவேற்புரையாற்றினார்.
10:42 AM
Unknown
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்தவர் மாலினி முர்மு. இவருக்கு வயது 22. இவர் பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐஐஎம்) நிறுவனத்தில் எம்பிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், சில நாட்களாக வகுப்புக்கு செல்லாமல் விடுதியில் உள்ள தனது அறையில் முடங்கி கிடந்தார். 19.09.2011 அன்று மாலை அவரது தோழிகள் வந்து பார்த்தபோது, அறையின் கதவு பூட்டிக்கிடந்தது. பல முறை தட்டியும் திறக்காததால், காவலாளிகள் கதை உடைத்தனர். உள்ளே மாலினி முர்மு தற்கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்தார்.
இணையதளத்தின் மூலம் அவர் வாலிபர் ஒருவரை தீவிரமாக காதலித்ததும், அவருடனான உறவு முறிந்ததால் ஏற்பட்ட விரத்தியின் காரணமாகவே, மாலினி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தற்கொலைக்கு முன்பு அந்த வாலிபருக்கு இணையதளம் மூலம் மாலினி எழுதியுள்ள கடிதத்தையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த தற்கொலை சம்பவம் ஐஐஎம் கல்லூரி நிர்வாகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மாலினியின் பெற்றோரும் இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். உடலை பெற்றுக்கொள்ளுவதற்காக மாணவியின் பெற்றோர் ஜார்க்கண்டில் இருந்து பெங்களூருக்கு வந்தனர்.
தற்கொலைக்கான காரணத்தை தனது லேப்டாப்பில் மாலினி குறித்துவைத்துள்ளார். தனது நண்பர் தன்னைவிட்டு பிரிந்துவிட்டதால் தற்கொலை செய்துகொள்வதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
மாலினி அந்த அறையில் வேறு மாணவிகளின் துணை இல்லாமல் தனியாகத்தான் தங்கியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். பெங்களூரில்தான் அவரது நண்பரும் இருந்துள்ளார் என்றும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அவர்கள் பிரிந்துள்ளனர் என்றும் போலீசார் தெரிவித்தனர். ஃபேஸ்புக் சமூகவலைத்தளம் மூலம் போலீசார் இதைக் கண்டுபிடித்துள்ளனர்.
ஃபேஸ்புக்கில் அந்த நண்பர் மாலினியைப் பிரிவது குறித்து கருத்து தெரிவிக்கையில், என்னுடைய கேர்ள்ஃபிரண்டை விட்டு விலகிவிட்டேன். இன்று சுதந்திரமான நாளாக உணர்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ஐஐஎம் அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டனர். நண்பர் பிரிந்ததால் ஐஐஎம் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டது பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
8:41 AM
Unknown
சென்னை, செப். 20 : அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் 35 நிமிடம் பாட நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட குழப்பத்தால் பள்ளிகள் 15 நாட்கள் தாமதமாக திறக்கப்பட்டன.
பள்ளிகள் தாமதமாக ஜூன் 15-ந்தேதி தொடங்கின. சமச்சீர் கல்வியை அமல் படுத்துவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே நடைமுறைப் படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டன.
இதையடுத்து ஆகஸ்டு மாதம் 2-வது வாரத்தில் இருந்து பள்ளிகளுக்கு சமச்சீர் புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டன. காலாண்டு தேர்வு 22ந்தேதி தொடங்குகிறது.மாணவர்களுக்கு பாடங்கள் நடத்த போதிய காலம் இல்லாததால் பாட வேளை நேரத்தை 35 நிமிடம் அதிகரித்து நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகள், மேல் நிலைப்பள்ளிகள், 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை உள்ள மாணவர்களுக்கு பாடங்களை முடிக்கும் வகையில் பள்ளி பாடவேளை நேரம் 40 முதல் 45 நிமிடங்கள் இருக்க வேண்டும். இத்துடன் மாதந்தோறும் இரண்டு சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த வேண்டும். பாட வேளை நேரத்தை அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7:01 AM
Unknown
லண்டன், செப். 20 : லண்டனில் சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவு, காபி பிரியர்களுக்கு மட்டுமல்ல, காபி கடை உரிமையாளர்களுக்கும் மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.
ஸ்வீடனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிலர் காபி குடிப்பதால் ஏற்படும் சாதக, பாதகம் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
1960-ம் ஆண்டு முதல் பல லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளையும் இவர்கள் அடிப்படையாக எடுத்துக்கொண்டனர்., அதில் கண்டறியப்பட்ட முடிவுகள் குறித்து "டெய்லி எக்ஸ்பிரஸ்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது., தினமும் ஒரு கோப்பை காபி குடித்தால் மூளை நாளங்களில் ரத்தம் உறையும் அபாயம் 14 சதவீதம் வரை குறைகிறது.
மூன்று முதல் நான்கு கோப்பை காபி குடிப்போருக்கு 17 சதவீதம் வரை இந்த அபாயம் குறையும் என குறிப்பிடப்பட்டுள்ளது., தேநீர் போன்ற பானங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் என்ற வேதிப்பொருள் உள்ளது. இவை பக்கவாதம் போன்ற அபாயங்களை தடுப்பதில்லை. ஆனால், காபியில் இந்த வேதிப் பொருள் இல்லை என்பதால் தாராளமாக குடிக்கலாம்.
இதன் மூலம் மூளை நாளங்களில் படியக்கூடிய கொழுப்பு கரைக்கப்படுகிறது. அதே நேரம், ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் அபாயம் காபி குடிப்பதால் உருவாகும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
@ அதற்காக காலை முதல் இரவு வரை அல்ல, இரண்டு அல்லது மூன்று கப் போதுமானது., மீறினால் அமிர்தமும்,...
5:59 PM
Unknown
தேனி,செப் 20 : தமிழகத்தில், புகைப்பட வாக்காளர் பட்டியலை வெளியிட்டதில், தேனி மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல்களில், இதுவரை புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல், இந்தியாவில் எந்த மாநிலங்களிலும் வெளியிடவில்லை, தமிழகத்தில், மற்ற மாவட்டங்களில் புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி, முழுமை அடையவில்லை.
தேனி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் என, அனைத்து உள்ளாட்சி அமைப்பு வாரியாக, புகைப்பட வாக்காளர் பட்டியல் முழுமையாக வெளியிடப்பட்டதாக, கலெக்டர் பழனிசாமி தெரிவித்தார்.
11:30 AM
Unknown
மங்காத்தாவின் சூப்பர் ஹிட் வெற்றியால், மீண்டும் வெங்கட்பிரபு கூட்டணியில், அஜித் ஒரு படம் பண்ணப்போவதாகவும், அந்தபடத்தில் அஜித்துடன், சிம்புவும் சேர்ந்து நடிக்க போவதாகவும், இப்படத்தை பல வெற்றி படங்களை கொடுத்த ஏ.எம்.ரத்னம் தயாரிக்க இருப்பதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தல ஓகே சொன்னதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை தயாரிப்பது ஏ.எம்.ரத்னம் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், இப்படத்தை வெங்கட்பிரபு இயக்கவில்லை என்பதும் தெளிவாகியுள்ளது. மேலும் இப்படத்தை அஜித்திற்கு, பில்லா படத்தை கொடுத்த விஷ்ணுவர்தனே இயக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே அஜி்த் இப்போது நடித்து வரும் பில்லா-2-வை, விஷ்ணுவர்தன் தான் முதலில் இயக்குவதாக இருந்து, பின்னர் அவர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சக்ரி டோல்டி அந்த பொறுப்பை ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.