Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, September 12, 2011

களவாணி படம்போல் மணமகளை கடத்திய மணமகன் !

நாகை மாவட்டம் மயிலாடுதுறை கழுக்காணி முட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் திவ்யா. (வயது 23). இவருக்கும் சிதம்பரம் அருகே உள்ள முட்லூர் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (30) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்கள் திருமணம் வருகிற 30ந் தேதி நடைபெறுவதாக இருந்தது.

நிச்சயிக்கப்பட்ட ரவிச்சந்திரன் மீது போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் இருப்பது பெண் வீட்டாருக்கு தெரிய வந்தது. எனவே பெண் வீட்டார் இந்த திருமணத்தை நிறுத்தி விட்டனர். இதற்கிடையே கடந்த 9ந் தேதி வீட்டில் இருந்த திவ்யா திடீர் என மாயமானார். அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் தனது மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்த திவ்யாவின் தாயார் மணிமொழி மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார். புகார் மனுவில் தனது மகள் திவ்யாவை ரவிச்சந்திரன், அவரது சகோதரர் ராமச்சந்திரன் ஆகியோர் காரில் கடத்தி சென்று உள்ளனர். எனவே அவர்களிடம் இருந்து திவ்யாவை மீட்டு தரவேண்டும் என்று கூறி உள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் திவ்யா காட்டுமன்னார் கோவிலில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி சிதம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அப்போது திவ்யாவுக்கும் அதே கல்லூரியில் படித்த ரவிச்சந்திரனுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

தற்போது ரவிசந்திரனின் நடவடிக்கை சரி இல்லை என்று கூறி திவ்யாவின் பெற்றோர் திருமணத்தை நிறுத்தியதால் காதலர்கள் ஊரை விட்டு ஓடி உள்ளனர். மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஊழல் ஒப்பாரி வைக்கும் ப ஜ க தன் சுத்தம் பேணுவதில்லை

பெங்களூர்,செப்.12 :​ முன்னாள் முதல்வர் எடியூரப்பா முதல்வராக இருக்கும்போது சிவில் காண்ட்ராக்ட் கொடுத்தது சரியே என்று கீழ் கோர்ட்டு தீர்ப்பு அளித்த விபரத்தை அளிக்கும்படி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பா.ஜ. தலைவரும் கர்நாடக மாநில முன்னாள் முதல்வருமான எடியூரப்பா மீது தொடரப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு குறித்து மாநில ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. வழக்கு விசாரணை நேற்றும் நடைபெற்றது. அப்போது எடியூரப்பா சார்பாக வழக்கறிஞர் எல். நாராயணசாமி ஆஜரானார். அப்போது அவர் கூறுகையில் எடியூரப்பா முதல்வராக இருக்கும்போது சிவில் காண்ட்ராக்ட் விடுத்தது சட்டப்பூர்வமானதுதான் என்று டிவிஷன் பெஞ்ச் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது என்றும் அது தொடர்பான விபரத்தை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய கொஞ்சம் கால அவகாசம் வேண்டும் என்றும் கோரினார்.

இதனையொட்டி அடுத்த விசாரணை வரும் 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. எடியூரப்பாவின் மகன்கள் மற்றும் மருமகன் ஆகியோர்களுக்கு பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகள் (பொது சொத்துக்களை அபகரித்தது, முதல்வர் பெயரை உபயோகித்து லஞ்சம் பெற்றது) லஞ்ச பணத்தின் மூலம் வாங்கப்பட்டது என்றும் எடியூரப்பா முதல்வராக இருக்கும்போது மேல் அப்பரா நீர்பாசன இரண்டாவது திட்டப்பணியை ஒரு தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக காண்ட்ராக் விடுக்கப்பட்டதாகவும் அதில் ரூ.13 கோடி லஞ்சமாக கிடைத்தது என்றும் அதை வைத்துத்தான் எடியூரப்பாவின் மகன்களும், மருமகனும் பண்ணைகளை வாங்கியதாகவும் குற்றஞ்சாட்டி மதசார்பற்ற ஜனதாதளத்தின் எம்.எல்.சி.யும் கட்சியின் செய்தி தொடர்பாளருமான ஒய்.எய்.வி தத்தா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் தமக்கு முன்ஜாமீன் தர வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டில் எடியூரப்பா ரிட்மனு தாக்கல் செய்துள்ளார். எடியூரப்பா மீது லோக் ஆயுக்தா போலீசாரும் ஊழல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Sunday, September 11, 2011

18 முன்பே ஆசைப்படும் இளம் பெண்கள் ! யுனிசெப் !!

கொல்கத்தா : பெண்களின் திருமண வயது 21 என அரசு அறிவித்துள்ளது. அதை மீறி மேற்கு வங்காள மாநிலத்தில் 18 வயதுக்கு முன்பே பெண்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். இதுகுறித்து “யூனிசெப்” நிறுவனம் ஒருஅறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது, மேற்கு வங்காள மாநிலத்தில் 18 வயதுக்கு முன்பே அதிக அளவில் பெண்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். குறிப்பாக முர்ஷிதாபாத், பிர்புர், தால்யா, புருலியா ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் இந்த திருமணங்கள் நடைபெறுகின்றன. இந்த மாவட்டங்களில் இதுபோன்ற திருமணங்கள் 53.9 சதவீதம் நடக்கிறது.

அந்த மாநிலத்தில் உள்ள 19 மாவட்டங்களில் ஜலா பைகுரியில் 17.5 சதவீதம் பெண்கள் 18 வயதுக்கு கீழ் திருமணம் செய்துள்ளனர். இதுதான் மிக குறைந்த அளவு ஆகும். கொல்கத்தாவில் 19.04 சதவீதம் பெண்கள் குறைந்த வயதில் திருமணம் செய்துள்ளனர். இதன் மூலம் பெண்களின் கல்வி வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு வறுமையும், வரதட்சணை கொடுமையுமே காரணம் என “யூனிசெப்” நிறுவனத்தின் மேற்கு வங்காள பிரிவின் தலைமை கள அதிகாரி லோரி கால்வோ தெரிவித்துள்ளார். இத்தகைய திருமணங்களை தடுக்க பெண்களுக்கு கல்வி அறிவு கொடுப்பது அவசியம். அதன் மூலம் விழிப்புணர்வு பெறும் அவர்கள் வேலை வாய்ப்பு பெறுவர்.

இதனால் வறுமையும், நோய் கொடுமையும் ஒழியும் என்றும் அவர் கூறினார். 18 வயதுக்கு முன்பே பெண்கள் திருமணம் செய்து கொள்வதை தடுக்க மேற்கு வங்காள அரசும் நடவடிக்கை எடுத்துள்ளது. பஞ்சாயத்து அமைப்புகள் மற்றும் சமூக நல தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் பெற்றோர்கள் மற்றும் கிராம பெரியவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் பழைய மொழி ஆனால் இன்று

லண்டன், “வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்” என்பது பழமொழி, மன அழுத்தமே பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக உள்ளது.

அதாவது, மன அழுத்தம் உடையவர்கள் ஆல்கஹால், போதை மருந்து மற்றும் சிகரெட் புகைத்தல் போன்ற கெட்ட பழக்கவழக்கத்துக்கு ஆளாகின்றனர். அதுவே அவர்களுக்கு மிக கொடிய நோய்களை ஏற்படுத்துகிறது.

எனவே, மன அழுத்தம் உள்ளவர்கள் அதுபோன்ற கெட்ட பழக்கத்தை விட்டு தினமும் 15 நிமிடம் சிரித்தாலே போதும். உடல் நலம் மேம்படும். அவர்களை நோய் அண்டாது என இருதய நோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வாய்விட்டு சிரிப்பது தான், நல்லது. வாய்க்குள்ளேயே சிரிக்கும் நமட்டு சிரிப்பும், மூச்சு வாங்க சிரிக்கும் சிரிப்பும் உடல் நலத்துக்கு கேடானது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

நாள் ஒன்றுக்கு ஒரு குழந்தை 300 முதல் 400 தடவை சிரிக்கிறது. பெரியவர்கள் 15 தடவை சிரிக்கின்றனர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

போலிஸ் உதவியுடன் நடந்த சினிமா தயாரிப்பாளர்கள் கூட்டம் !

சென்னை, செப். 11 : தமிழ்திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து ராம.நாராயணன் விலகியதையடுத்து பொறுப்பு தலைவராக எஸ்.ஏ.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து சங்க பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று ஒரு பிரிவினர் வற்புறுத்தினர். இதற்கு இன்னொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சங்கத்தில் தவறுகள் நடந்துள்ளதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். இது தொடர்பாக ஏற்கனவே இரு பிரிவினருக்கும் மோதலும், கைகலப்பும் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி பிலிம் சேம்பரில் பொதுக்குழுவை கூட்ட ஏற்பாடு நடந்தது. ஆனால் அரங்கு சிறியதாக இருப்பதாகவும், போதிய இட வசதி இல்லாததாலும் பாதுகாப்பு அளிக்க முடியாது என்றும் போலீசார் தெரிவித்ததால் அக் கூட்டம் ரத்தானது.

பின்னர் தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூடி அக் டோபர் 9-ந் தேதி சங்கத்துக்கு தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தது. தேர்தல் அதிகாரியும் நியமிக்கப்பட்டார். இதனை தயாரிப்பாளர்களின் ஒரு பிரிவினர் எதிர்த்தனர். தேர்தல் அதி காரியை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினர். சில பிரச்சினை குறித்து விவாதிக்க தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சிறப்பு கூட்டம் பிலிம் சேம்பரில் இன்று காலை நடந்தது. எஸ்.ஏ.சந்திரசேகரன், தலைமை தாங்கினார்.

கே.ஆர்.ஜி., கே.முரளீதரன், அன்பாலயா பிரபாகரன், காஜாமொய்தீன், கதிரேசன், சத்யஜோதி தியாகராஜன், இபுராகிம் ராவுத்தர், ஏ.எஸ்.அழகப்பன், கலைப்புலி தாணு, கே.ஆர்., தேனப்பன், கலைப்புலி சேகரன், தங்கர் பச்சான், ஆர்.பி.சவுத்திரி, சக்தி.சிதம்பரம். நடிகர்கள் கருணாஸ், சரவணன், மன்சூர் அலிகான், பாபுகணேஷ், மற்றும் திருமலை, பவுத்திரன், இயக்குனர் சேகர், சவுந்தர் கேசவன், பட்டியல் சேகர், கபார், ஜெயதேவி, நாஞ்சில் பி.சி.அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் காரசார விவாதம் நடந்தது. சிலர் கணக்கு விவரங்களை கேட்டனர். முறைகேடு நடந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினர். இதனால் கூட்டத்தில் கூச்சலும், ரகளையும் ஏற்பட்டது. உறுப்பினர்களை அமைதியாக இருக்கும் படி எஸ்.ஏ.சந்திரசேகர் கேட்டுக் கொண்டார். ஆனாலும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டியபடியே பேசிக் கொண்டிருந்தனர். இதனால் கூச்சல், அமளி நீடித்தது. மோதலை தவிர்க்க ஏராளமான போலீசார் குவிக் கப்பட்டனர். தொடர்ந்து விவாதம் நடந்தது.

Saturday, September 10, 2011

நுண்ணறிவு திறன் பாதிக்கின்ற நோய்! புதிய ஆய்வு !!

ஒரு மனிதனின் சிறந்த நுண்ணறிவுத் திறனுக்கு(ஐகி), அவரது கல்வியை விட, நல்ல ஆரோக்கியமே இன்றியமையாதது என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

அமெரிக்காவின் நியூமெக்சிகோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்களின் குழு, அமெரிக்கா முழுவதும் பரவலாக, மக்களின் நுண்ணறிவுத் திறனை(IQ) சோதித்ததில், தொற்று நோய்கள், IQ திறன்களை பாதிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன என்று தெரிவிக்கின்றனர்.

மனிதர்கள், குறிப்பாக குழந்தைகள், தங்களின் மூளை இயங்குவதற்கு, அதிகளவிலான ஆற்றலை செலவழிக்கின்றனர். ஆனால், தொற்றுநோய் போன்ற வியாதிகள் தாக்கும்போது, இந்த ஆற்றல் பெருமளவில் உறிஞ்சப்பட்டு, நுண்ணறிவு மேம்பாடு தடைபெறுகிறது.

இந்த தொற்றுநோய்கள்தான், உலகின் பல்வேறு பகுதிகளில், மனிதனின் IQ வேறுபட்டிருப்பதற்கான காரணம். இது எங்கே அதிகமாக இருக்கிறதோ, அங்கே IQ குறைவாகவே இருக்கும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஒரு மனிதன் தனது பூர்வீக இருப்பிடத்தை விட்டு, வாழ்வதற்காக வேறிடம் சென்று குடியேறும்போது, புதிய சூழலை பழகிக்கொள்வதற்காக மூளையானது சிறப்பாக தயாராகிறது. இதனால், அத்தகைய மனிதர்களின் IQ அதிகமாக உள்ளன என்று பழைய கருத்தாக்கங்கள் தெரிவித்தன.

ஆனால், அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வானது, அந்தப் பழைய கருத்தாக்கத்தை பொய்யாக்கி விட்டது. ஏனெனில், அமெரிக்காவில் ஒரே நிலையிலுள்ள பல மாநிலங்களில் IQ விகிதங்கள் மாறுபட்டு இருந்தன. IQ விகிதங்கள் குறைந்திருந்த மாநிலங்களில், தொற்றுநோய் பிரச்சினைகள் இருந்தன. IQ விகிதம் அதிகமிருந்த மாநிலங்களில் அந்த பிரச்சினைகள் இல்லை. மற்றபடி, அந்த மக்களுக்கும், மாநிலங்களுக்கும் வித்தியாசங்கள் எதுவுமில்லை.

அதேசமயம், IQ சிக்கலானது, ஜீன் தொடர்புடையதாக இருந்தால், அதை மாற்றுவது கடினம் என்றும் அந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

டாப்சி" யின் தில்லு யாருக்கு வரும் !!

படப்பிடிப்பு நடக்கும் இடம் உள்ளூராக இருந்தாலும் சரி, வெளியூராக இருந்தாலும் சரி, கதாநாயகி நடிகையுடன் அவரது குடும்பத்தினர் யாரேனும் கூடவே வருவார்கள்.

தமிழ் திரையுலக நடிகைகளில் எல்லோரும் இப்படிப்பட்ட குடும்பத்திரின் துணையுடன்தான் படப்பிடிப்புக்கு வந்து செல்வார்கள்.

ஆனால் ஒரு நாயகி மட்டும் தில்லாக தனியே வந்து போகிறார். அவர் வேறு யாருமல்ல ‘ஆடுகளம்’ படத்தில் அறிமுகமான டாப்ஸிதான்.

ஆனால் நடிகை இலியானா தனது தாய், தந்தை, சகோதரர்-சகோதரிகள் மற்றும் பாதுகாவலர்களுடன் ஒரு பட்டாளத்தையே அழைத்துக்கொண்டு வருகிறார். அந்த வகையில் டாப்சி அதிக செலவு வைக்காததால், தயாரிப்பாளர்கள் மத்தியில் நல்ல பெயர் வாங்கியிருக்கிறார்!

Friday, September 9, 2011

உதவியாளருக்கு 34 நிறுவனங்கள், ராம் தேவ்க்கு ?

புதுடெல்லி, செப். 9 : யோகா குரு ராம்தேவ் பெயரில் எந்த நிறுவனமும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் அவரது உதவியாளரை இயக்குனராக கொண்டு 34 நிறுவனங்கள் செயல்படுகின்றன என்று மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

இதுபற்றி பாராளுமன்றத்தில் கம்பெனி விவகாரங்கள் துறை இணை மந்திரி ஆர்.பி.என்.சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது.

யோகா குரு ராம்தேவ் பெயரில் நிறுவனங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால், அவரது நெருங்கிய உதவியாளரான ஆச்சார்யா பாலகிருஷ்ணன் பெயரில் 34 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களுக்கு ஆச்சார்ய பாலகிருஷ்ணன் தான் தலைவராக உள்ளார். இந்த நிறுவனங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.265 கோடி வருவாய் ஈட்டப்படுகிறது., இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

*சிரியவைகளை ஊதி பெரிதாக்கும் பார்ப்பன ஊடகங்கள் இதை கண்டு கொள்வது இல்லை. ஏன் ?

அதி போதை கணவனை அடக்கிய மனைவி ..?

சென்னை யானைகவுனியைச் சேர்ந்தவர் சுப்ரமணி; ஆட்டோ டிரைவர். சிறு வயதிலேயே, குடிப் பழக்கத்துக்கு அடிமையானார். எப்போதும், மயக்கத்தில் இருந்தார். இவருக்கு, மாடம்பாக்கத்தைச் சேர்ந்த சரளா என்கிற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர்.

இருவரும், தனிக்குடித்தனம் நடத்தினர். குடித்து விட்டு வந்து, மனைவியுடன் தகராறு செய்வார். முதல் குழந்தையை கருவுற்றிருந்த போது, பெற்றோர் வீட்டுக்கு சரளா சென்றார். அங்கும், குடித்து விட்டு சென்று தகராறு செய்தார். பெண் குழந்தை பிறந்தும், அவளை பார்க்க செல்லவில்லை. பெரியவர்கள் பேசி சமாதானம் செய்தனர். சில மாதங்கள் குடித்தனம், அதன் பின் தகராறு என சென்றது. இரண்டாவதாக சரளா கருவுற்றார். குழந்தை பிறப்பதற்கு முந்தைய தினமும் தகராறு தான். மனைவியின் கழுத்தில் கிடந்த தாலியை கழற்றி வீசியுள்ளார். இரண்டாவதும், பெண் குழந்தை பிறந்தது. இவரது அடாவடி தாங்காமல், போதை மீட்பு மையத்தில் இவரை சேர்த்தனர். அங்கு தொடர்ந்து சிகிச்சைப் பெற்றார். போதையின் பிடியில் இருந்து மீண்டார்.

இதற்கிடையில், இரண்டு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு கஷ்டப்பட்ட சரளா, ஜீவனாம்சம் தரக் கோரி, சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். வழக்கு விசாரணைக்கு வந்தது. தான் திருந்தி விட்டதாகவும், மதுவை தொடுவதில்லை என்றும், மனைவியிடம் கூறியுள்ளார். இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. இவ்வழக்கு குடும்ப நல கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, சுப்ரமணி சார்பில், வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜரானார். வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக, சரளா தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கை வாபஸ் பெற நீதிபதி அனுமதித்தார். இருவரும் ஒன்றாக வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.

பல கோடிகளில் சிக்கி தவிக்கும் குஜராத் கேடி!?

புதுடெல்லி : குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியும் அவரது அமைச்சரவை சகாக்களும் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை ஊழல் புரிந்துள்ளதாக சமூக ஆர்வலர் டீஸ்டா ஸெடல்வாட் புகார் அளித்துள்ளார்.

குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு அளித்துள்ள மனுவில் டீஸ்டா குறிப்பிட்டுள்ளதாவது: அரசு பொது கருவூலத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி அரசு நிலங்களை பெரும் தொழில் அதிபர்களுக்கு பங்கீடு செய்து சொந்த லாபத்தை முதல்வர் மோடி உள்ளிட்டவர்கள் சம்பாதித்துள்ளனர்.

குஜராத்தில் நடைபெற்றுவரும் இந்த பெரும் ஊழலை சி.பி.ஐயோ அல்லது தேசிய புலனாய்வு ஏஜன்சியோ(என்.ஐ.ஏ) விசாரிக்க வேண்டும்.

டீஸ்டா இந்த புகார் மனுவுடன் மோடி மற்றும் அவரது சகாக்களின் பல்வேறு ஊழல்கள் குறித்த ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார். பெரும் தொழில் அதிபர்களுக்கு அரசு நிலத்தை பங்கீடு செய்து அளித்தது பொதுநலனை கருதி அல்ல. மாறாக முதல்வரும், அமைச்சர்களும் தங்களது பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளனர். ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி இவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

முதல்வரே நேரடியாக இந்த ஊழல்களில் ஈடுபட்டுள்ளதால் மாநில ஏஜன்சிகளின் விசாரணை சரியாக அமையாது. மாநிலத்தின் உயர் அதிகாரிகளும், சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் அமைச்சர்களின் தனிப்பட்ட பணியாளர்களைப் போல பணியாற்றுகின்றனர்.

குஜராத்தில் சட்டம் முழுமையாக தோல்வியை தழுவிவிட்டது. ஊழலுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை பதிவுச்செய்யக் கூட போலீசாரால் இயலவில்லை என டீஸ்டா மேலும் தெரிவித்துள்ளார்.

ரத்த அழுத்தம் பெரியவர்களுக்கு மட்டும்தானா ? பணக்கார நோயா?

குழந்தைகளையும் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற வியாதிகள் தாக்குகின்றன, சென்னையைச் சேர்ந்த ஒரு மருத்துவமனை, புள்ளி விவரங்களுடன் வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கை திகைக்க வைக்கிறது.

30, 40 ஆண்டுகளுக்கு முன்பு… ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இதெல்லாம் ‘பணக்கார நோய்கள்’. ஆனால், கால மாற்றத்தில்… ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடுகளைக் கடந்து, எல்லோரையும் அவை வருத்திக் கொண்டிருக்கின்றன சமீப வருடங்களாக. அதன் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியாக, இப்போது டீன் ஏஜ் மற்றும் சிறுவயது குழந்தைகளையும் அந்த நோய்கள் ஆட்டிப் படைக்க ஆரம்பித்திருப்பது… கொடுமையிலும் கொடுமை!

இதுகுறித்து குழந்தைகள் நல மருத்துவர்டம் கேட்டபோது, “குழந்தைகளுக்குக்கூட இம்மாதிரியான பெரும் பிரச்னைகள் வருவதற்கு காரணம் அவர்கள் சாப்பிடும் உணவு, வாழ்க்கை முறை மற்றும் மரபியல் காரணி…” என்று முக்கியமானவற்றை பட்டியலிட்டார்.

சரியான நேரத்தில் உணவு, உறக்கம், காற்றோட்டமான சூழ்நிலை மாலையில் விளையாட்டு போன்ற சூழ்நிலைகளை பெரியோர்களான நாம்தான் உருக்குவாக்கி கொடுக்கவேண்டும்., என்ன இதன்படி செய்வோமா.

Thursday, September 8, 2011

யு எஸ் சில் சந்தி சிரிக்கும் இந்திய மருத்துவத்துறை !!

நியூயார்க், செப்.8: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மருத்துவ காப்பீட்டில் நிகழ்ந்த ஊழல் தொடர்பாக 9 இந்திய மருத்துவத் துறையினர் உள்பட 90 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மொத்தம் 1,320 கோடிக்கு மேலாக மருத்துவ காப்பீட்டு ஊழல் புரிந்துள்ளதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தவறான சான்றிதழ் மூலம் மருத்துவ காப்பீட்டை இவர்கள் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவின் 8 நகரங்களில் இது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டதில் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக அமெரிக்க நீதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வரி செலுத்தும் மக்களின் பணத்தை இவர்கள் அனைவரும் தங்கள் சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்தியதாக நீதிபதிகள் தெரிவித்தனர்., சிகாகோவில் கிளினிக் நடத்தி வந்த நீலேஷ் படேல் மீதும் டெட்ராய்ட் நகரில் ரெஹான், தெüசிப் மான், ஜானகி செட்டியார், ஜிகார் படேல், ஹேதல் பரோட், சீனிவாஸ் ரெட்டி , ராம் சந்த் ராம்ரூப் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள 90 பேரின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மருத்துவ திட்டத்தில் முறைகேடு செய்தல், அன்னியச் செலாவணி மோசடி உள்ளிட்ட வழக்குகளும் போடப்பட்டுள்ளன.

பல்வேறு மருத்துவ திட்டங்களுக்கு செலவிட்டதாக மருத்துவக் காப்பீடு மூலம் இவர்கள் பணம் பெற்றுள்ளனர். தெரபி, மனநலம் சார்ந்த சிகிச்சை, சைக்கோ தெரபி, மருத்துவ உபகரணங்கள் வாங்கியது உள்ளிட்டவை பெயரில் இவர்கள் பணம் பெற்றுள்ளனர்., டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவத் தொழில் சார்ந்தவர்கள் உள்ளிட்டோரும் இதில் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

டெல்லி குண்டு வெடிப்பு! வழக்கம்போல் பொறுப்பேற்கும் இ மெயில் !?

டெல்லி: டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று நடந்த குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஹர்கத்-உல்-ஜிகாத் அல்-இஸ்லாமி (Huji-ஹூஜி) அமைப்பு பொறுப்பேற்புளளதாக பல்வேறு ஊடகங்களுக்கு இமெயில் வந்துள்ளது என செய்திகள் வெளிவந்துள்ளன.

இது தொடர்பாக அந்த தீவிரவாத இயக்கத்திடமிருந்து harkatuljihadi2011@gmail.com என்ற முகவரியிலிருந்து வந்துள்ள அந்த மெயிலில், இந்தத் தாக்குதலுக்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம். அப்சல் குருவின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால், இந்தியாவின் எல்லா முக்கிய நீதிமன்றங்களையும் உச்ச நீதிமன்றத்தையும் தாக்குவோம் என்று கூறப்பட்டுள்ளது.

(சமீபத்தில் ராஜிவ் கொலை விவகாரத்தில் தூக்கு தண்டனை பெற்ற மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, காஷ்மீர் சட்டமன்றத்தில் அப்சல் குருவின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.) இதனை திசைதிருப்பும் முயற்சியாக கூட நடந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

இந்த மெயிலை என்.ஐ.ஏ (National Investigation Agency) உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், முழுமையாக விசாரித்த பின்னரே இது தீவிரவாத ஆர் எஸ் எஸ் சின் கைவருசையா அல்லது ஹூஜிக்கு இதில் தொடர்புள்ளதா என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று என்ஐஏ டைரக்டர் ஜெனரல் சின்ஹா கூறியுள்ளார்.

*இதுநாள்வரை நடந்த குண்டு வெடிப்புகளை ஆர் எஸ் எஸ் நடத்தி விட்டு சிறுப்பான்மையர் குறிப்பாக முஸ்லிம்கள் மேல் பலியை போட்டது, இந்த முறையாவது சரியான விசாரணையை மேற்கொள்ளுமா அல்லது ஹிந்துத்துவா பின் செல்லுமா? இந்திய அரசு.

காசு பார்க்க தெலுங்கு ப(ட)டை எடுக்கும் பால் நடிகை ?

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி, மைனா மூலம் வெற்றி நாயகியாக வலம் வருபவர் நடிகை அமலா பால்.

சமீபத்தில் வெளியான தெய்வத்திருமகள் படத்தில் பள்ளி தாளாளராக நடித்து அனைவரையும் பாராட்டையும் பெற்றி அமலா பாலுக்கு நீண்ட நாட்களாகவே ஒரு ஆசை இருந்து வந்தது. அதுதான் டோலிவுட் ஆசை. எப்படியாவது தெலுங்கு படவுலகில் நுழைந்து அங்கேயும் முன்னணி வெற்றி நாயகியாக வலம் வர வேண்டும் என நினைத்த அமலா, பக்கம் அதிர்ஷ்ட காற்று வீசத் தொடங்கியிருக்கிறது.

ஆம்! தற்போது முரளி மகன் அதர்வாவுடன் அமலா ஜோடி சோர்ந்த முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தை தெலுங்கிலும் எடுத்து வருகின்றனர். நிரந்தரம் நீ வூகாலே என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் அம்மணி தான் கதாநாயகி. அமலா பால் தெலுங்குத் திரையுலகிற்கு வருவதையறிந்த தெலுங்கு பட அதிபர்கள் சிலரும் அமலாவை அணுக ஆரம்பித்திருக்கிறார்களாம்.

தனக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை பார்த்து மிரளாத அமலா, நிரந்தரம் நீ வூகாலே படம் ரீலிஸ் ஆன பிறகுதான் புதிய படங்களில் கமிட் ஆவேன் என்று கூறி வருகிறாம். படம் ஹிட் ஆனால் தெலுங்கிலும் ஒரு கை பார்க்கம் திட்டத்தில் இருக்கிறாராம் அமலா பால்.

Wednesday, September 7, 2011

தேவையான புரதம் உடலுக்கு தேவை

நமது உடலுக்கு ஒரு கிலோகிராம் எடைக்கு ஒரு நாளைக்குத் தேவைப்படும் புரதத்தின் அளவு 0.8 கிராம்கள். இது ஆரோக்கியமான அமெரிக்கர்களை வைத்துச் செய்யப்பட்ட ஆய்வின் முடிவு.

வளரும் குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள், நோயாளிகளுக்கு என்றால், இந்த அளவை விட கூடுதலாக புரதம் தேவைப்படும்.

உடலின் ஒரு கிலோகிராம் எடைக்கு 2 கிராம் என்னும் அளவை விட புரதத்தின் அளவு அதிகரித்தால், அதைச் சுத்திகரிக்க சிறுநீரகங்கள் அதிகம் சிரமப்பட நேரிடும். உடலில் அதிகமாக உள்ள புரதம் ரியாவாக மாறி, சிறுநீருடன் வெளியேறும்போது உடலில் உள்ள கால்சியமும் சேர்ந்து வெளியேறி விடுகிறது.

இது எலும்புகளுக்குக் கெடுதல்களை உண்டாக்கி, காலப்போக்கில் `ஆஸ்டிரியோ போறோசிஸ்' என்ற நோயையும் உண்டாக்கி விடுகிறது. அளவுக்கு மீறினால், புரதமும் நஞ்சுதான்.

நிகழ்ச்சிகளில் தமிழ் பாடலை பாடி அசத்தும் அமெரிக்கர்கள் !!

தமிழ்நாட்டில் பிறந்த பலரும் ஆங்கிலத்தில் பேசுவதில் ஆர்வம் காட்டி வரும் இக்காலகட்டத்தில், தமிழ் சினிமா பாடலை உற்சாகமாக தமிழில் பாடி மகிழ்ந்து வருகிறார்கள் அமெரிக்காவைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள்.

குளிர் சூழ்ந்த வட அமெரிக்காவின் வட பகுதியான மிக்சிகன் மாகாணத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய ஓக்லாண்ட் பல்கலைக்கழக மாணவர்கள்தான் தமிழ் பாடலை தங்குதடையின்றி பாடி தமிழுக்கு புகழ் சேர்த்திருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட பட்டங்களை வழங்கி வரும் இந்த பல்கலைக்கழத்தில் இசை, திரையரங்கு, டான்ஸ் ஆகியவற்றை மையப்படுத்தி ஒரு துறை இயங்கி வருகிறது. இசையிலும், சினிமா மற்றும் நடனத்திலும் ஆர்வம்மிக்க ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த துறையை சேர்ந்த ஓக்லாண்ட் சோரல் குழு தான், நம் தமிழ் சினிமா பாடல் ஒன்றை பல்வேறு நிகழ்ச்சிகளில் பாடி அசத்தி வருகிறது.

ஏ.வி.எம்., தயாரிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற, "சிவாஜி" படத்தில் இடம்பெற்ற "பல்லேலக்கா... பல்லேலக்கா..." என்ற ஹிட் பாடல்தான் அது. பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதிய பாடல் வரிகளுக்கு, ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் போட்டிருந்த இசை, அப்போதே சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே கவர்ந்தது.

படம் ரிலீஸ் ஆன நாட்களில் தமிழகத்திலும், உலகெங்கிலும் தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் ஒலிந்த அந்த பாடலை, தற்போதும் தமிழகத்தில் பாட்டுக் கச்சேரிகளில் கேட்கலாம். இந்த பல்லேலக்கா இசை தமிழர்களை கவர்ந்தது போலவே, ஓக்லாண்ட் சோரல் குழுவையும் கவர்ந்து விட்டதுபோலும். அமெரிக்க மாணவர்களின் அழகான தமிழ் உச்சரிப்பில் உருவான அந்த பல்லேலக்கா பாடல் சமீப காலமாக இணையத்தில் வலம் வரத் தொடங்கியுள்ளது. நம்மூர் மேடை கச்சேரிகளில் பாடுவதைப்போலவே கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள், இசைக்கருவிகளை இசைத்தபடியும், இசைக்கேற்ற நடனம் ஆடியபடியும் பாடும் பாடல் அனைவரையும் நிச்சயம் கவர்ந்திழுக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்த குழு ஒருமுறை மட்டும் இதுபோன்ற பாடல்களை பாடுவதில்லையாம்; பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் இதுபோன்ற பிரபலமான பாடல்களை, விதவிதமான மொழிகளில் பாடி பாராட்டினைப் பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் தெரியாத, தமிழைப் படிக்காத அந்த மாணவர்கள் வெறும் மொழி உச்சரிப்பை மட்டும் புரிந்து கொண்டு அழகாக பாடுவதை கேட்கும்போது தமிழுக்கு பெருமை கிடைத்திருப்பதை உணர முடிகிறது அல்லவா? நாமெல்லாம் ஆங்கிலத்துக்கு மாறும்போது அமெரிக்கர்கள் தமிழ் பாடல் மூலம் பேருமை சேர்க்கிறார்கள்.

பொடுகு தொல்லையிலிருந்து பூர்ண குணமடைய ...

செண்பக மரப்பட்டையும் வேப்ப மரப்பட்டையும் சம அளவு எடுத்து இடித்து, 4 மடங்கு நீர்விட்டு, காய்ச்சி, பாதியாக வற்றியதும் வடிகட்டி காலை, மாலை இரண்டுவேளை குடித்துவர குளிர் சுரம் தீரும்.

செண்பக மரப்பட்டையை ஒன்றிரண்டாக இடித்து 20 பங்கு நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி தினமும் இருவேளை குடித்துவர நாட்பட்ட குன்மம் (வயிற்றுப்புண்) குணமாகும்.

செண்பக பூவில் இருந்து நறுமண எண்ணெய், அத்தர் போன்றவை எடுக்கப்படுகின்றன. இந்த பூவில் நறுமண எண்ணெய் இருப்பதால் பூ உலர்ந்த பின்னரும் இதனை பூச்சிகள் அரிக்காது.

செண்பக மொட்டு, கார்போகரிசி, வெந்தயம், அருகம்புல் ஆகியவற்றை இடித்து தேங்காய் எண்ணெயில் கலந்து சூரிய ஒளியில் 10 நாட்கள் வைத்திருக்க வேண்டும். பின்னர், அதை தலையில் தேய்த்து வர பொடுகு, சொறி, சிரங்கு போன்ற தொல்லைகள் தீரும்.

செண்பகப்பூ, சாத்திரபேதி, வெட்டிவேர், விலாமிச்சுவேர், தக்கோலம், நெற்பொரி, சுக்கு ஆகியவற்றை தலா 5 கிராம் அளவு எடுத்து, அரை லிட்டர் மாதுளம் பழச்சாற்றில் அரைத்து கலக்கி சாப்பிட குளிர் சுரம் நீங்கும்.

செண்பகப்பூ எண்ணெய் கண் நோய்க்கு சிறந்த மருந்து. இது, மூட்டு வாதத்தையும் குணமாக்கும். பூச்சிக்கொல்லி மருந்தாகவும் இது செயல்படுகிறது.

செண்பகப் பூவிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகை எண்ணெய் வாசனை திரவியங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்த எண்ணெயை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்தல் குணமாகும். மேலும் தலைவலி, கண்நோய்கள் குணமாகும்., மேலும் இந்த எண்ணெய் கீல் வாத வலியை குணமாக்கும்.

Tuesday, September 6, 2011

மோடியின் குள்ள நரி தனத்தை வெளியிட்ட விக்கிலீக்ஸ் !

நியூயார்க் : மாநில அளவில் தன்னை வலுப்படுத்தியுள்ள நரேந்திர மோடி தற்போது தேசிய அளவில் பெரிய பொறுப்பை வகிக்க ஆயத்தமாகி வருவதாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியுட்டது.

டெல்லி அமெரிக்க தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்ட கேபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குஜராத்தின் சிறுபான்மையினருக்கு எதிரான முதலீட்டு வர்த்தகத்தை பயன்படுத்தி, தேசிய அளவில் மோடி முன்னேறுவதாக கூறப்பட்டுள்ளது. இதனால் மோடி பி.ஜே.பி.யின் விருப்பமான ஒரு தலைவராக விளங்குவது மட்டுமல்லாமல் பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்படும் நபராகவும் திகழ்வதாக அக்கேபிள் தகவல் கூறுகிறது.

இருப்பினும், மோடி பிரதமர் வேட்பாளராக முன்னிருத்தப்பட்டால், மதச்சார்பற்ற அனைத்துக் கட்சிகளும் பி.ஜே.பி.கெதிராக ஒன்று சேரும் என்பதாகவும் அக்கேபிள் தகவல் தெரிவிக்கின்றது.

2005-ம் மறுக்கப்பட்ட அமெரிக்க விசாவினால், மோடி கடும் அதிர்ப்தியில் உள்ளதாக கூறியுள்ள விக்கிலீக்ஸ், இதனால் அமெரிக்காவிற்கெதிராக அவர் செயல்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் கூறியுள்ளது.

*ஒரு தெரு பொறுக்கியாக இருந்து குஜராத் முதல்வர் ஆனவர் இந்த மோடி.

ஜெயா மடியில் விழுந்த சீமான் ?

அம்மாவுக்கு உலக தமிழர் மத்தியில் அம்மாவுக்கு ஏற்பட்ட நற்பெயரை கெடுக்க, புகழை கெடுக்க மத்திய காங்கிரஸ் அரசு., உடனே கருணாநிதி ஆலோசனை சொல்கிறார். இவர் என்ன அம்மாவுக்கு அரசியல் ஆலோசகரா.

இந்த அரசு தமிழனுக்காக ஆளும் அரசாக உள்ளது. வரும் உள்ளாசித் தேர்தலில், அதற்கு அடுத்து வரும் எம்பி தேர்தலில் காங்கிரஸ்காரர்களையும், அந்த கட்சியுடன் கூட்டணி வைத்திருபவர்களையும் ஒரு இடத்தில் கூட ஜெயக்க விடமாட்டேன்.

ஒருத்தன் டெல்லியில் இருந்து, தமிழ்நாட்டு தீர்மானம் எங்களை கட்டுப்படுத்தாது என்கிறான். அப்படி என்றால் உன் முடிவும் எங்களை கட்டுப்படுத்தாது. இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் தேர்தல் வரப்போகிறது. தென் இந்தியா காங்கிரஸ் கட்சியை நான் காலி சென்றுவிடுவேன். கேரளாவில் போய் என் நண்பர்கள் மூலம் என்னுடைய மொழியை பெயர்க்க வைத்து உண்வண்டவாளங்களை எடுத்துச் சொல்வேன். ஆந்திரா சென்று என் அண்ணி நடிகை ரோஜா மூலம் தகவலை மொழிபெயர்ந்து அங்கே உனக்கு ஒரு சீட் கூட கிடைக்காமல் செய்துவிடுவேன். நாங்கள் இருக்கும் வரை நீ ஆட்சிக்கு வர முடியாது.

இந்தியாவை ஆளப்போவதை யார் என்பதை எங்கள் முதல் அமைச்சர் அம்மா தான் தீர்மானிக்கப்போகிறார். அம்மாவே நீங்கள் கவலைப்படாதீர்கள். தென்னிந்தியா முழுவதும் சுற்றி வெற்றிக் கனியை பறித்து வந்து உங்கள் காலடியில் நான், என் தம்பி மார்களும் சமர்ப்பிக்கிறோம்.

*ஜெயலலிதா புகழ் பாடுவது எதற்கு பெட்டி தந்தாரா அல்லது குட்டி தந்தாரா (நடிகையிடமிருந்து காப்பாற்றியது) ஏன் தரம் தாழ்ந்து போனார் சீமான்?

முதல்வர் யோகம் அடித்த த்ரிஷா !

தமிழ், கன்னடத்தில் தயாராகிறது ‘சி.எம்.’ சினிமா. தமிழில் அர்ஜூன், கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிக்கிறார்கள். இந்தப்படத்தில் த்ரிஷா நடிக்கவிருக்கிறார்.

நாயகனும், நாயகியும் இப்படத்தில் முதல்வர்களாக நடிக்கிறார்கள். இரு முதல்வர்களுக்குள் மலரும் காதல்தான் கதை.

தமிழில் அர்ஜூனும், கன்னடத்தில் சிவராஜ்குமாரும் முதல்வர்களாக நடிக்கிறார்கள். இரு மொழிகளிலும் த்ரிஷா முதல்வராக நடிக்கிறார்.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!