Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, September 5, 2011

விண்கலம் மூலம் சரக்கு போக்குவரத்து நாசா !!

நியூயார்க், : அமெரிக்காவில் கடந்த 1920 முதல் 1930-ம் ஆண்டு வரை விண்கலங்கள் மூலம் சரக்கு போக்குவரத்து நடந்தது. அப்போது ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துகள் நடந்தது இந்நிலையில் 1937-ம் ஆண்டு நியூஜெர்சியில் உள்ள ஹின்டென்பார்க் நகரில் மிகப்பெரிய விபத்து நடந்தது. அதில், 36 பேர் பலியானார்கள். அதைத் தொடர்ந்து விண்கலம் மூலம் சரக்குகளை அனுப்புவது நிறுத்தப்பட்டது.

தற்போது அவை லாரிகள், ரெயில்கள் மற்றும் கப்பல்கள் மூலம் பெருமளவில் அனுப் பப்படுகின்றன. இதனால், கூடுதல் நேரமும் அதிக பொருட்செலவும் ஏற்படுகிறது. மேலும், போக்குவரத்து நெரிசலும் உருவாகிறது. இதை தடுக்க மீண்டும் விண்கலம் மூலம் சரக்குகளை அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அதற்காக மிகவும் பாதுகாப்பான பலூன் போன்ற விண்கலத்தை அமெரிக்காவின் “நாசா” மையம் வடிவமைத்து வருகிறது.

இதற்கு முன்பு சுருட்டு வடிவலான சரக்கு விண்கலம் இருந்தது. தற்போது, இது கட்டை வடிவில் மிகவும் சக்திவாய்ந்த வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த சரக்கு விண்கலத்தின் முன்மாதிரி வடிவம் அடுத்த ஆண்டில் தனது சோதனை ஓட்ட பயணத்தை தொடங்க உள்ளது. வருகிற 2020-ம் ஆண்டில் உலகம் முழுவதும் இது செயல்பட தொடங்கும். இதன் மூலம் நூற்றுக்கணக்கான டன் சரக்குகள் ஏற்றுமதி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கைதாவாரா களவானி தமிழக முதல்வர் ஜெயா? கோர்ட் அதிரடி!?

புதுடில்லி : தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு கோர்டில் நடந்துவருகிறது., இந்த வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு பெங்களூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் பெங்களூர் கோர்ட் இதனை ஏற்க மறுத்து விட்டது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்டில் ஜெ., மனு செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்டில் நடந்தது. குற்றம் சாட்டப்பட்டவர் கோர்ட்டில் ஆஜரவாதிலிருந்து விலக்கு அளிக்குமாறு கேட்பது வழக்கை தாமதப்படுத்தும் நோக்கமாக இருக்கும் செயலாக இருக்கும் என கோர்ட் கருதுகிறது . விலக்கு அளிக்க எந்த முகாந்திரமும் இல்லை. எனவே நேரில் ஆஜராக வேண்டும் வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.,இல்லையேல் வாரன்ட் பிரபிக்கப்படும் என்று நீதிபதி கூறினார்.

மேலும் அவர் ஆஜராகும் தேதியை சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும். அவர் கூறும் நாளில் விசாரிக்க நாங்கள் நீதிமன்றத்திற்கு ஆணையிடுகிறோம். பாதுகாப்பு தொடர்பான பிரச்னை இருக்கிறது என்று கூறினால் கூடுதல் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்ய ஆணை பிறப்பிக்கின்றோம் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

*இன்னும் ஐந்து ஆண்டுகளில் முடிந்த அளவுக்கு களவாங்குவார் இந்த களவானி முதல்வர்.

கொசுவர்த்தி உபயோகிப்பவர்களே சற்று கவனியுங்கள் அதிர்ச்சி தகவல் !?

புதுதில்லி : ஒரு கொசுவர்த்திச் சுருள் உமிழும் புகை 100 சிகரெட்டுகளின் புகைக்குச் சமமானது என்றும், இது இந்தியாவில் ஏராளமானோரைப் பாதிக்கிறது என்றும் ஒரு நிபுணர் கருத்து தெரிவித்துள்ளார்.

“நிறைய மக்களுக்கு இது தெரிவதில்லை. ஆனால் ஒரு கொசுவர்த்திச் சுருள் உங்கள் நுரையீரலுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு 100 சிகரெட்டுகள் ஏற்படுத்தும் பாதிப்புகளுக்கு ஈடானது. இது சமீபத்தில் மலேசியாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது” என்று நெஞ்சு ஆராய்ச்சி நிறுவனம் (Chest Research Foundation) இயக்குனர் சந்தீப் சால்வி கூறினார்.

அறிவியல், சுற்றுச்சூழல் மையம் (Centre for Science and Environment), மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்தியக் குழு (Indian Council for Medical Research), இந்திய மருத்துவர் சங்கம் (Indian Medical Association) ஆகிய அமைப்புகள் இணைந்து “காற்று மாசுபடுதலும், நமது உடல்நலமும்” (Air Pollution and Our Health) என்ற தலைப்பில் ஒரு மாநாட்டை நடத்தினர். அந்த மாநாட்டில் பேசும்பொழுதுதான் சந்தீப் சால்வி இந்த அதிர்ச்சிகர தகவலைத் தெரிவித்துள்ளார்.

காற்று மாசுபடுதலினால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு மிகக் குறைவாக உள்ளதாக அவர் கூறினார்.

நமது இந்திய மருத்துவர்களிடம் “ஆராய்ச்சி கலாச்சாரம்” மிகக் குறைந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், உள்ளரங்க காற்று மாசுவும் உடல்நலத்திற்கு அதிக தீங்கை விளைவிக்கக் கூடியது என்று கூறினார்.

இந்த மாநாட்டில் மருத்துவர்களும், உடல்நல ஆராய்ச்சியாளர்களும் கலந்துகொண்டனர். அவர்கள் பேசும்பொழுது தலைநகர் புதுதில்லியில் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசு பற்றி குறிப்பிட்டனர். ஆய்வுகளின்படி டெல்லி மக்கள்தொகையில் 55 சதவீதம் பேர் முக்கிய சாலைகளுக்கு 500 மீட்டர் தள்ளியே வசிக்கின்றனர். ஆதலால் இவர்களுக்கு நிறைய நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றனர்.

விஷாலுடன் இணையும் பிரபு தேவாவின் வெடி வெடிக்குமா?

"வெடி" படத்தின் ஆடியோ வெளியீட்டை முன்னிட்டு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பிரபுதேவா, விஷால் இருவரிடமும் பர்ஸனல் கேள்விகள் வேண்டாம், படத்தை பற்றி மட்டும் கேள்வி கேட்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் பிரஸ்மீட் ஆரம்பமானது.

இயக்குநர் பிரபுதேவா ஆஹா, ஓ‌ஹோ, அப்படி, இப்படி... என்று "வெடி" படத்தை பற்றி வெடித்து முடித்ததும், நிருபர்கள் சிலர் "வெடி" பற்றி ஏதேதோ கேள்வி கேட்க, எங்களுக்கா நிபந்தனை...? என வித்தியாசமாக வெடித்தெழுந்த நிருபர் ஒருவர், பிரபுதேவா, உங்கள் வாழ்க்கையில் வெடித்த விஷயங்கள்தான் "வெடி" படமா...? என வில்லங்கமான கேள்வியை போட, டென்ஷனான பிரபுதேவா, அதை வெளிக் காட்டிக்கொள்ளாமல், நீங்க எதை கேட்கறீங்க...? என்ன கேட்கறீங்க...? என வினாவினார்.

நிருபரும் விடாமல் இல்ல, பொதுவாக இயக்குநர்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை, தங்களது படங்களில் காட்சிப்படுத்துவார்கள். நீங்களும் அப்படி சின்ன வயதில் இருந்து உங்கள் வாழ்க்கையில் வெடித்த விஷயங்களை, வெடி படத்தில் பயன்படுத்தினீர்களா...? என கேட்கிறோம் என விளக்கம் கொடுக்க, உஷாரான பிரபுதேவா, நான் "போக்கிரி" படத்தில் அண்டர் க்ரவுண்ட் தாதாக்களின் வாழ்க்கையை படமாக்கினேன். அதற்காக நான் அது மாதிரி தாதாவாக வாழ்ந்தேனா என்ன...? அப்படியெல்லாம் எதுவுமில்லை என்று எஸ்கேப் ஆனார்.

கூடவே இது தெலுங்கில் ஹிட் ஆன "சவுரியம்" படத்தின் தமிழ் ரீ-மேக், இதில் விஷால் பிரபாகரன் எனும் பாத்திரத்தில் நடிப்பதால், ஆரம்பத்தில் இந்தபடத்திற்கு பிரபாகரன் என பெயர் சூட்டினோம். அதன்பின் சில பிரச்சனைகளால் "வெடி" என்று மாற்றிவிட்டோம் என்று சிரித்தவரிடம், நிருபர் ஒருவர், இந்தபடம் நிலமோசடி தொடர்பான கதையா...? என கேட்க, அதற்கு பிரபுதேவா, நான் தான் முன்னரே இது தெலுங்கு "சவுரியம்" படத்தின் ரீ-மேக் என்று சொன்னேனே. அதில் நிலமோசடியும் ஒரு சில இடங்களில் வரும். அது தமிழிழும் வருகிறது அவ்வளவே என்றார்.

Sunday, September 4, 2011

இந்து முன்னணி தீவீரவாதிகள் சிறையில்?

சென்னை, செப் 4 : சென்னையில், விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. இதில், 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி,

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி மற்றும் இதர அமைப்புகளின் சார்பில், சென்னையின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த, ஆயிரத்து 341 சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.

திருவல்லிக்கேணியில், தடை செய்யப்பட்ட பகுதியில், ஊர்வலமாக செல்ல முயன்ற இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் உள்ளிட்ட, 90 பேர் போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் போலீஸ் லத்தி சார்ஜ் செய்ததில் பிள்ளையாரை தெருவில் போட்டு விட்டு ஓடினர்., பின்னர் போலீஸ் துரத்தி பிடித்து சிறையில் தள்ளினோம்., என்றார் போலீஸ் கமிஷனர் திரிபாதி,

சொத்து விவரங்களை வெளியிட்ட மத்திய அமைச்சர்கள் !

புதுடெல்லி : மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பங்கு பெறும் அமைச்சர்கள் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட்டனர்.

263 கோடி ரூபாய் சொத்துள்ள கமல்நாத் தான் அமைச்சர்களில் அதிக சொத்துள்ளவர். வெறும் 32 லட்சம் ரூபாய் சொத்துள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.ஆண்டனி தான் அமைச்சர்களில் ஏழை!

வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவின் பெயரில் 22 லட்சம் ரூபாய் சொத்துள்ளது. ஆனால் அவரின் மனைவியின் பெயரில் 12 லட்சம் ரூபாய் சொத்துள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு 5 கோடி ரூபாய் சொத்து உள்ளது. இதில் 1.8 கோடி அசையா சொத்தாகவும், 3.2 கோடி வங்கி வைப்புத் தொகையாகவும் உள்ளது. சண்டிகரிலுள்ள 90 லட்சம் மதிப்புள்ள வீடும், புதுதில்லியில் வசந்த்கஞ்சிலுள்ள 88 லட்சம் மதிப்புள்ள அபார்ட்மெண்டும் அசையா சொத்துகளில் அடங்கும்.

நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு 1.8 கோடி மதிப்பிலான சொத்து உள்ளது. இதில் 62 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஓர் அசையா சொத்தும், இன்னும் சில சொத்துகளும், வங்கி வைப்புத் தொகையும் அடங்கும்.

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு 11 கோடி மதிப்புள்ள சொத்தும், அவருடைய மனைவி நளினி சிம்பரத்தின் பெயரில் 12.8 கோடி மதிப்புள்ள சொத்தும் உண்டு.

விவசாயத்துறை அமைச்சர் சரத் பவாருக்கு வங்கி வைப்புத் தொகையும், பல்வேறு கம்பெனிகளில் போடப்பட்டுள்ள முதலீட்டுப் பங்குகளுமாகச் சேர்த்து 12 கோடி சொத்து உண்டு.

பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தேவுக்கும், அவருடைய மனைவிக்குமாகச் சேர்த்து 15.2 கேடி ரூபாய்க்கு சொத்து உள்ளது.

முன்னாள் ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறனுக்கு 2.94 கோடி மதிப்புள்ள சொத்து உண்டு. அவருக்கும், அவருடைய மனைவிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் பங்குகள் உண்டு.

மரத்து போதல் அறியா பாதம் ! டிப்ஸ் ?

என்ன அறிகுறி? : பாதம் மட்டும் மரத்துப் போதல்.

என்ன வியாதி : நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.

டிப்ஸ் : பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

Note:- பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது.,நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.

Saturday, September 3, 2011

ரசிகர் மன்ற விழாவில் வேண்டுகோள் வைத்த விஜய் !

சமீபத்தில் மக்கள் இயக்கம் சார்பில் நற்பணி விழாவும், `வேலாயுதம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவும் மதுரையில் நடந்தது. அப்போது எனது ரசிகர்களில் சிலர் என் மீதுள்ள அன்பின் மிகுதியால், என்ன கடவுளாக சித்தரித்து சுவரொட்டிகள் ஒட்டியிருந்தார்கள்.

அதைப்பார்த்த அடுத்த வினாடியே ரசிகர்களை அழைத்து, ``இப்படியெல்லாம் போஸ்டர்கள் ஒட்டக்கூடாது. அதை அகற்றி விடுங்கள்'' என்று கண்டிப்புடன் கூறினேன். என் வார்த்தைக்கு கட்டுப்பட்டு ரசிகர்கள் உடனே அதனை அகற்றி விட்டனர்.

இனி இப்படி செய்ய மாட்டோம் என்றும் உத்தரவாதம் தந்தார்கள். முடிந்து போன இந்த விஷயத்தை சிலர் விஷமாக்க முயற்சிக்கிறார்கள். நாங்கள் இதயத்தால் ஒன்றிணைந்தவர்கள். எங்களிடையே சாதி, மதம், இனம் போன்ற பேதங்களை உருவாக்கி, எங்களை பிரிக்கவோ, பிளவுபடுத்தவோ யாராலும் முடியாது.

நான், சாதி, மத, இனத்துக்கு அப்பாற்பட்டு மனிதர்களை மனிதர்களாக பார்ப்பவன். ஆயிரம் பேர்களை படிக்க வைத்துக்கொண்டிருக்கிறேன். அவர்கள் என்ன சாதி- மதம் என்று எனக்கு தெரியாது. என்னிடம் ஐம்பது பேர் வேலை பார்க்கிறார்கள். எனக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ஆயிரக்கணக்கில் நற்பணி இயக்கம் மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் என்ன சாதி-மதம் என்று எனக்கு தெரியாது. எனக்கு தெரிந்ததெல்லாம் தமிழ், தமிழினம் ஒன்றேதான். ஒரு மனிதரை கடவுளாக சித்தரிப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அப்படி ஆர்வம் மிகுதியால் என் ரசிகர்கள் செய்த அந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். இனி, வருங்காலங்களில் கடவுளோடு ஒப்பிட்டு சுவரொட்டிகளோ, நோட்டீசுகளோ வெளியிட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.''

வம்பு இழுக்க வருகிறது வட நாட்டு சாமி ?

சென்னை, செப்.3 விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் கொண்டாப்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 1300 சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

இந்த சிலைகளுக்கு தினமும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு போலீசார் 3 நாட்கள் அனுமதி அளித்துள்ளனர். இன்று மாலை புளியந்தோப்பில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகின்றன.

**பிற மத வணக்க வழிபடும் இடத்தில் அதிகமாக கொட்டு அடித்து வம்பு இழுத்து உயிர் சேதம் ஏற்படுத்தும் இந்த விழா தேவையா?, வம்பு இழுக்க வருகிறது வட நாட்டு சாமி ?

சோனியாவுக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்! ஹரித்ரா!?

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவரில் ஒருவரான முருகனின் மகள் ஹரித்ரா, சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தனது தந்தையின் உயிரைக் காப்பாற்ற உதவுமாறு, என் தந்தையை திருப்பி தரும்படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முருகன் நளினி தம்பதியின் மகளான ஹரித்ரா, ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் உயிரி மருத்துவம் படித்து வருகிறார். அவர் காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

எனது தந்தை அப்பாவி என்றே நம்புகிறேன். பிறந்ததில் இருந்தே தாய் தந்தையைப் பிரிந்து இருக்கும் எனது உணர்வுகளைப் புரிந்து கொண்டு, தந்தை முருகனின் உயிரைக் காப்பாற்ற உதவ வேண்டும். இதற்கு முன் எனது தாயார் நளினியைக் உயிரைக் காத்ததற்கு நன்றி என்று அவர் கூறியுள்ளார்.

பல பரிணாமத்துடன் நடித்த கமல்! புது கெட்டப்பில் !!

மலையாளத்தில் மெகா பட்ஜெட்டில் உருவாக இருக்கும் திப்புவும் உன்னியார்ச்சாயும் என்ற படத்தில் திப்பு சுல்தானாக நடிக்க இருக்கிறார் கமல்ஹாசன்.

மலையாளத்தில் கடந்த ஆண்டு மம்முட்டியை வைத்து பழசிராஜா என்ற வரலாற்று ஹிட் படத்தை எடுத்தவர் கோகுலம் கோபாலன். இவர் அடுத்து மெகா பட்ஜெட்டில், திப்புவும் உன்னியார்ச்சாயும் என்ற படத்தை தயாரிக்க இருக்கிறார். இந்தபடமும் வரலாற்று சம்பந்தப்பட்ட படம்தான். மன்னர் திப்புசுல்தானின் வாழ்க்கையை மையமாக மைத்து இப்படம் உருவாக இருக்கிறது.

இதில் திப்பு சுல்தான் வேடத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் கதையை ஜான்பால் எழுதியுள்ளார். வயலார் மாதவன் இயக்குகிறார். அடுத்த ஆண்டு மார்ச் மாதம், இப்படத்தின் சூட்டிங் துவங்குகிறது. இதற்காக கமலிடம் நான்கு மாதம் கால்ஷீட் கேட்டுள்ளனர்.

இது குறித்து ஜான்பால் கூறும்போது, கதையை எழுதும்போதே திப்பு சுல்தான் கேரக்டருக்கு கமல்தான் பொருத்தமானவர் என உணர்ந்தோம். அவர் தோற்றம் கம்பீரமாக இருக்கும். வேறு யாரும் அந்த கேரக்டரில் நடிக்க முடியாது. கமலுடன் நடிக்கும் இதர கேரக்டர்களுக்கு நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. யுத்தம், சுதந்திரப் போராட்டம், காதல் போன்ற அம்சங்கள் படத்தில் இருக்கும் என்றார்.

அதிக மரபணு உள்ளவர்களுக்கு உடல் மெலிந்துவிடும்! D N A ஆய்வில்!

லண்டன்: சிலர் உடல் மெலிந்த நிலையில் காணப்படுகின்றனர். அதற்கு மரபணு அதிக அளவில் இருப்பதே காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரி பேராசிரியர் பிலிப் புரோகல் தலைமையிலான குழுவினர் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதற்காக 95 ஆயிரம் பேரிடம் மரபணு (டி.என்.ஏ.) சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில், உடல் நலத்தை பேணி காக்கும் குரோமோ சோம்-16ல் மரபணு அதிக அளவில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும், அவற்றில் உள்ள “ஜீணோம்” என்ற மூலக்கூறில் அதிக துவாரங்கள் இருப்பதாலும் இழப்பு ஏற்படுகிறது. அதனால் தான் நோய் ஏற்பட்டு உடல் மெலிகிறது.

பொதுவாக மரபணு அதிகம் உள்ள குழந்தைகள் சாப்பாட்டை விரும்பி சாப்பிட மாட்டார்கள். அதனால் உடல் ஆரோக்கியமின்றி மெலிந்து காணப்படுகிறார்கள் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Friday, September 2, 2011

இந்தியாவுக்கு வருத்தம் தெரிவித்த யு எஸ் !

வாஷிங்டன் : அமெரிக்க விமான நிலையங்களில், பாதுகாப்பு என்ற பெயரால் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு, அமெரிக்கா வருத்தம் தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு, அமெரிக்க விமான நிலையம் ஒன்றில், பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி, அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீரா சங்கரை, பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அதேபோல், ஹூஸ்டன் விமான நிலையத்தில், ஐ.நா.,வுக்கான இந்திய தூதர் ஹர்தீப் சிங் புரியை, பாதுகாப்பு காரணங்களைக் காட்டி, 30 நிமிடங்கள் தாமதப்படுத்தினர். அவரது டர்பனை கழற்றச் செய்து சோதனையிட்டனர்.

இதுகுறித்து நேற்று, அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் கூறுகையில்,"இந்திய தூதர்களின் முக்கியத்துவம், உயர் நிலையை அறிந்துள்ளோம். அவர்களுக்கு நேர்ந்த சிரமங்களுக்கு வருத்தம் தெரிவிக்கிறோம். எனினும், சில சிறப்பு பாதுகாப்பு பரிசோதனைகளை நாங்கள் செய்யத் தான் வேண்டியிருக்கிறது' என்றார்.

**இந்திய அதிகாரிகளும்தான் இருக்கிறார்கள் தன் நாட்டு மக்களையே மதிக்கத்தெரியாதவர்கள்.

ஹிந்தியில் கோடிகளை குவித்த விஜய்யின் காவலன் !

மலையாளத்தில் வெளியான பாடிகார்ட் படம் பின்னர் தமிழில் காவலன் என்ற பெயரில் விஜய் நடித்து வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இப்போது ஹிந்தியிலும் பாடிகார்ட் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. இப்படத்தில் சல்மான் கான், கரீனா கபூர் நடித்துள்ளனர்.

ரம்ஜான் பண்டிகையையொட்டி வெளியிடப்பட்ட பாடிகார்ட் தற்போது வசூலில் சாதனை படைக்க ஆரம்பித்துள்ளது. இப்படத்தின் ஒருநாள் வசூல் ரூ.22 கோடியை எட்டியுள்ளதாம். இது உள்ளூர் வசூல் மட்டுமே. இன்னும் உலகளாவிய வசூல் கணக்கிடப்படவில்லை.

இப்படம் சூப்பர் ஹிட் ஆகியிருப்பதால் இப்படத்தின் நடிகர் சல்மான்கான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார். அவரது மகிழ்ச்சிக்கு கூடுதல் காரணமும் உண்டு. அதாவது இவர் நடிப்பில் 2009-ல் வெளியான வான்டட் படம் மெகா ஹிட் ஆனது. 2010-ல் வெளியான தபாங் சூப்பர் ஹிட் ஆனது. அதன் தொடர்ச்சியாக 3-வது முறையாக வெளியான பாடிகார்ட் படமும் வசூலில் கொடிகட்டி பறப்பதால் மிகவும் சந்தோஷமாக உள்ளார். இம்மூன்று படங்களும் ரம்ஜான் அன்று வெளியிடப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வசூலில் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் பாடிகார்ட் படத்தை தயாரித்த ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி ப்ரீத்தி சஹானி கூறுகையில்., இப்படத்திற்கு மிகப் பிரமாதமான வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் நாளில் ரூ. 20 கோடி கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் தற்போது கூடுதலாகவே கிடைத்துள்ளது. முதல் நாள் வசூல் சாதனையில் இது ஒரு மைல் கல் என்றார்.

ரூ. 60 கோடி செலவில் மிக பிரம்மாண்டமாக இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் 2600 பிரிண்டுகளும், வெளிநாடுகளில் 325 பிரிண்ட்களும் போட்டுள்ளனர்., இப்படத்தை மலையாள பாடிகார்டை இயக்கிய சித்திக் இயக்கியுள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சல்மான் கானின் மைத்துனர் அதுல் அக்னிஹோத்ரி தயாரித்துள்ளார். முதல் வாரத்தில் பாடிகார்ட் ரூ. 100 கோடி வசூலை அள்ளும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் வெளியான ஒரிஜினல் பாடிகார்ட் படம் சுமாராகத்தான் போனது என்பது நினைவிருக்கலாம். ஆனால் தமிழிலிலும், இந்தியிலும் இப்படம் மெகா ஹிட் ஆகியுள்ளது ஆச்சரியமானது.

ஆணவம் பிற்போக்குத்தனம் மிகுந்தவர் ஜெயா!? ஸ்டாலின்

கடலூர் : விருத்தாச்சலத்தில் நடந்த தி.மு.க., பொதுக்கூட்டத்தில் பேசிய தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், சட்டப்பேரவையில் தி.மு.க., உறுப்பினர்களுக்கு ஜனநாயகம் மறுக்கப்படுகிறது.

தனித்தனியே பிரித்தாளும் நோக்குடன் இடம் ஒதுக்கப்படுவதால் முடிவு எடுக்க சிரமம் உள்ளது., ஆணவம் மிகுந்தவராக இவரின் பிற்போக்கான நடவடிக்கை முகம் சுளிக்கச்செய்கிறது.

அ.தி.மு.க.,வினர் மீது ஆதாரத்துடன் புகார் அளிதாலும் நடவடிக்கை இல்லை. தி.மு.க.,வினர் மீது பொய் வழக்கு போடுவது தொடர்கிறது என குற்றம் சாட்டினார்.

Thursday, September 1, 2011

அழகுக்கு மட்டுமல்ல மருத்துவத்துக்கும் மருதாணி !

மருதாணிய அரைச்சி நாம எல்லோரும் கை, கால்கள்ல அழகுக்காக போடுவோம். ஆனால், அதுல என்னென்ன மருத்துவக் குணங்கள் இருக்குன்னு தெரியுமா?

தசைவலி மற்றும் தலைவலிக்கு இதை அரைச்சி பற்று போடலாம். தொண்டைல வர்ற கரகரப்பை போக்க, இந்த சாற்றை எடுத்து, நீருடன் கலந்து கொப்பளித்தால் போதும். காலில் வர்ற எரிச்சலைத் தடுக்க இதைப் பசையாக்கி, தடவினா போதும்.

இலையில் இருந்து தயாரிக்கப்படுற களிம்பு நீண்ட நாளா இருக்குற புண்களுக்கு சிறந்த மருந்து. மருதாணியோட வேர், பட்டை உடல் நலத்தை மேம்படுத்துது. இதோட வடிசாறு கல்லீரல், கணையம், தோல் வியாதிகளைப் போக்க உதவுது.

பழங்காலத்துல மருதாணிய சிவப்பு சாயம் மற்றும் நறுமணப் பொருளாக பயன்படுத்துனாங்க. இதோட இலைகள் தலைமுடிகளுக்கு சாயமிடவும், குதிரைகளின் பிடரி, வால்களுக்கு சாயமிடவும் உதவுது., மருதாணி எண்ணெய் `கமகம'ன்னு ரொம்ப வாசமா இருக்கும்.

வாடிக்கையாளர் குழப்பத்தை ஏற்படுத்தும் வங்கி A T M கள்

சென்னை : நகரம், கிராமம் என்ற பாகுபாடு இல்லாமல், எல்ல இடங்களிலும் வியாபித்திருக்கும் ஏ.டி.எம்., இயந்திரங்களை இயக்குவதில் ஒரே மாதிரியான செயல்பாட்டை வங்கிகள் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

உணவகம், மருத்துவமனைகள், பெட்ரோல் "பங்க்'க்கள், பொழுதுபோக்கு "மால்கள்' என பெரும்பாலான இடங்களில் மக்கள் பயன்படுத்துவது, "பிளாஸ்டிக் மணி' என்றழைக்கப்படும் ஏ.டி. எம்., அட்டைகளை தான். பணம் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டு விடுமோ, ஷாப்பிங்கின் போது பணப்பற்றாக்குறை ஏற்பட்டு விடு மோ போன்ற கவலைகளை, நீக்க வந்த நிவாரணி ஏ.டி.எம்., அட் டை.மொபைல் போன்களை போலவே, ஏழை - பணக்காரர், படித்தவர் - படிக்காதவர் என்ற வித்தியாசமின்றி அனைவரிடமும் ஏ.டி.எம்., அட்டை உள்ளது. காரணம், 500 ரூபாய் கொடுத்து கணக்கை துவங்கினாலே, வங்கிகள் ஏ.டி.எம்., அட்டைகள் வழங்கி விடுகின்றன.

மேலும் வங்கிகள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி, தங்களுடைய வங்கியின் ஏ.டி.எம்., மட்டுமல்லாது, பிற வங்கிகளின் ஏ.டி.எம்.,க்களிலும் பணம் எடுத்துக் கொள்ளும் வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.மாதத்திற்கு ஐந்து முறைக்கு மேல் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் ரூபாய் 20ம், பிற ஏ.டி.எம்., பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் ரூபாய் 20ம், ஆண்டு பராமரிப்புக்கென ஒரு தொகையையும் இதற்கென வசூலிக்கிறது.ஏ.டி.எம்., அட்டையை, "ஸ்வைப்' செய்ய முடியாத இடத்திலும், தங்கள் வங்கி ஏ.டி.எம்.,மில் பணம் இல்லாத சமயங்களிலும், வாடிக்கையாளர்கள் வேறு ஏ.டி.எம்.,க்களை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு பயன்படுத்தும் போது, படித்தவர்களே சற்று திணறிப் போகின்றனர், படிக்காதவர்களின் நிலைமையை சொல்ல தேவையில்லை.

தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்கும் முறைக்கும், பிற ஏ.டி.எம்.,மில் பணமெடுக்கும் முறைக்கும் உள்ளமுறை முற்றிலும் வேறாக உள்ளதுதான் இந்த குழப்பத்திற்கு காரணம். ஒவ்வொரு வங்கியையும் பொறுத்து, நான்கிலிருந்து, எட்டு நிலைகளில், பணம் எடுக்கும்படி வடவடிமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஏ.டி.எம்., கார்டை செருகும் நிலையிலும் வித்தியாசம் உள்ளது. சில ஏ.டி.எம்.,க்களில் கார்டை செருகி எடுத்துவிட்டு, மேற்கொண்டு நடவடிக்கைகளை தொடரும்படியாகவும், சில ஏ.டி.எம்.,களில், கார்டு இயந்திரத்திற்குள் உள்ளிழுக்கப்பட்டு, பணம் எடுத்து முடித்த பின் கார்டு வெளிவரும் முறையிலும் உள்ளதால், எளிமையான வசதியைக்கூட பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.சிலவற்றில், பட்டன் முறையும், சிலவற்றில் தொடுதிரை முறையும் உள்ளது.

தொடுதிரை ஏ.டி.எம்., பழுதானா லோ, வேறு ஏதாவது பிரச் னை என்றாலோ புகார் செய்வதற்கான, "டோல் ப்ரீ' எண்கள் அறைக்குள்ளேயே ஒட்டப்பட்டிருக்கின்றன. இருந்தாலும், பெருவாரியான வாடிக்கையாளர்கள் அதை பயன்படுத்துவதில்லை.இந்த பிரச்னையை தீர்க்கும் வகையில் அனைத்து வங்கிகளின் ஏ.டி.எம்., இயந்திரங்களையும் ஒரே மாதிரி வடிவமைப்பதோடு, அவற்றின் செயல்பாட்டையும் ஒரே பாணியில் கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்

மம்தாவுக்கு மாப்பிளை தேடுகிறார்கள் ! அரபுலகில் !!

சிவப்பதிகாரம் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் மம்தா மோகன்தாஸ். குசேலன், குரு என் ஆளு போன்ற படங்களில் நடித்தார்.

தற்போது அருண் விஜய் ஜோடியாக தடையறதாக்க படத்தில் நடித்து வருகிறார். மம்தாவுக்கு பெற்றோர் மாப்பிள்ளை தேடினர்., தற்போது வரன் முடிவாகியுள்ளது. மம்தாவின் சிறு வயது நண்பரையே மாப்பிள்ளையாக தேர்வு செய்துள்ளனர்.

இவர் அரபு நாடு பக்ரைனில் வசிக்கிறார்., திருமண நிச்சயதார்த்தம் நவம்பரில் நடக்கிறது. அடுத்த வருடம் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்., திருமணத்துக்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு வெளி நாட்டில் தங்க முடிவு செய்துள்ளார்.

ஹிந்துத்துவா தீவீரவாதிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல்! நீதி மன்றம்!!

தானே : 2008-ல் தானேயிலும், பன்வேலிலும் நடந்த 3 குண்டுவெடிப்புகளின் வழக்கில் ஹிந்துத்துவ தீவீரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவைச் சேர்ந்த 2 தீவீரவாதிகளுக்கு செஷன்ஸ் நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுஞ்சிறைத் தண்டனை அளித்து தீர்ப்பு கூறியுள்ளது.

ஹனுமந்த் கஸ்கரி, விக்ரம் வினய் பாவே ஆகியோர்தான் அந்தத் தண்டனை பெற்றவர்கள். இவர்கள் குற்றவாளிகள் என்று திங்கள்கிழமை நீதிமன்றம் தீர்மானித்தது.

இந்திய தண்டனைச் சட்டம், குண்டுவெடிப்பு சட்டம் ஆகிய சட்டங்களின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கொலை முயற்சி, கிரிமினல் சதியாலோசனை, சட்டவிரோத நடவடிக்கை ஆகிய கூடுதல் குற்றங்கள் அவர்கள் மேல் கூறியுள்ளது நீதிமன்றம்.

இவர்கள் நடத்திய குண்டுவெடிப்புகளில் 8 பேருக்குப் படுகாயம் ஏற்பட்டது. இருவரும் தலா ரூ. 9500 தண்டனைத் தொகை கட்டவேண்டும்.

எத்தனை நன்மைகள் ஏலத்தில்

வாசனைப் பொருட்களின் அரசி என்று வர்ணிக்கப்படுவது ஏலக்காய். சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் ஏலக்காய் அசைவ உணவுகளுக்கு கூடுதல் சுவை சேர்க்கக்கூடியது. 

ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன. அவை...

* குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும்.

* ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்.

* மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், `ஏலக்காய் டீ' குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது.

* நா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும். அதேநேரம், ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல.

* வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்.

* விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும்.

* வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!