Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, August 8, 2011

கொலைகாரனுக்கு சங்கு ஊத வாரீர்! தீர்வு காண வாரீர் !! வை கோ

சென்னை : "ஈழத்தமிழர்" பிரச்னைக்காக வரும் 12ம் தேதி, டில்லியில் ம.தி.மு.க., போராட்டம் நடத்தும், என வைகோ தெரிவித்துள்ளார்.

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: சிங்கள ராணுவ தாக்குதலில், லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். உலகத் தமிழர்கள் விம்மி அழுதபோது, மத்திய அரசு, இலங்கை முப்படைகளுக்கு ஆயுதம், பணத்தை அள்ளித் தந்து, விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இயக்கியது, மன்னிக்க முடியாத துரோகம்.

ஈழத் தமிழர்களை கொடூரமாக அழித்த காட்சிகளைப் பார்த்து, உலகின் பல்வேறு நாடுகளில், சிங்கள அரசுக்கு எதிராக கண்டனக் குரல் ஓங்கி வருகிறது. மத்திய அரசு தனது துரோகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, இலங்கை அரசுக்கு எதிரான நிலையை எடுக்க வேண்டும்.

பிரச்னைக்கு, சுதந்திரத் தமிழ் ஈழம் மட்டுமே தீர்வு என்பதால், உலக நாடுகள் கண்காணிப்பில், பொது ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். புலம் பெயர்ந்த தமிழர்களும் ஓட்டளிக்கும் வாய்ப்பளிக்க ஐ.நா., நடவடிக்கை எடுக்கக் கோரி, வரும் 12ம் தேதி, டில்லி பார்லிமென்ட் அருகே உள்ள, ஜந்தர் மந்தரில், என் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. ஈழத்தமிழ் உணர்வாளர்கள் இதில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

காயம் காரணமாக கட்டாய ஓய்வு! ஜாகிர் !!

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான். ஆக்ரோஷமாக பவுலரான இவர் அடிக்கடி காயத்தால் அவதிப்படுகிறார். தற்போது இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் காயம் காரணமாக விலகியுள்ளார். இது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் 13 ஓவர் வீசி இருந்த நிலையில் இடது தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதில் இருந்து அவரால் மீள முடியாததால் தற்போது தொடர் முழுவதும் விலகியுள்ளார். உடல் தகுதி குறித்த அக்கறையின்மையால் அவர் அடிக்கடி காயத்தால் சிக்குகிறார்.

முன்னணி பவுலரான அவர் தனது உடல் தகுதி குறித்து கவலைப்படாமல் இருப்பது ஆச்சரியமானது.12 ஆண்டு கால தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஜாகீர்கான் பலமுறை காயத்தால் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் குதிங்காலில் ஏற்பட்ட காயத்தால் ஆஸ்திரேலிய தொடரில் இருந்து பாதியில் விலகினார். 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் இடது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக போட்டியில் ஆடவில்லை.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் காயத்தால் விலகினார். அதே ஆண்டு டிசம்பர் மாதம் தசைப்பிடிப்பால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடவில்லை. இந்த ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு ஐ.பி.எல். போட்டியில் விளையாடினார்.

அதில் ஏற்பட்ட காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆடவில்லை. முழு உடல் தகுதி பெறாமலேயே தற்போது இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இடம் பெற்றார். ஒரு இன்னிங்சில் கூட அவரால் முழுமையாக பந்து வீச முடியாமல் போனது ஏமாற்றமே. பொதுவாக வேகப்பந்து வீரர்கள் காயப்படுவது தவிர்க்க முடியாது.

துள்ளி குதித்து பந்துவீசும் போது கணுகாலில் காயம் ஏற்படுவது சகஜமானது. பெர்ட்லீ, மெக்ராத் போன்ற வீரர்கள் இதே மாதிரி காயம் அடைந்து இருக்கிறார்கள். ஆனால் சரியான உடற்பயிற்சி இருந்தால் இது மாதிரியான காயத்தை தவிர்க்கலாம்.

ஏற்கனவே பரிதாப நிலையில் இருக்கும் இந்திய அணிக்கு ஜாகீர்கான் தொடர்ந்து ஆடாதது மிகப்பெரிய இழப்பாகும். 32 வயதான ஜாகீர்கான் 79 டெஸ்டில் விளையாடி 273 விக்கெட்டும், 191 ஒருநாள் போட்டியில் விளையாடி 273 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளார்.

Sunday, August 7, 2011

கண்ணின் ஒளியை முற்றிலும் பறிக்கும் காரணிகள் !?

உலகில் பல மக்கள் கண் பார்வையை இழக்க காரணம், ‘க்ளோகோமா". இது கண்ணின் ஒளியை முற்றிலும் பறிக்கக் கூடியது.

கண்களின் அழுத்தத்தை தக்க வைக்கும் அளவுக்கு வேண்டிய கண்ணீர், வெளியேறி விட,கண்களில் மெல்ல அழுத்தம் அதிகமாகும்.இந்த அதிகரித்த அழுத்தத்தை ‘க்ளோகோமா’ என்பர். இதனால் கண் நரம்பு பாதிகக்கப்பட, பார்வை மெதுவாகக் குறையும்.

க்ளோகோமாவின் அறிகுறிகள் : கண்களின் அழுத்தம் அதிகமாகும். ஆனால் 30% நோயாளிகளுக்கு இந்நோய்க்கான அறிகுறி தெரிவதில்லை.நோயின் தன்மை அதிகமாக, ஒரு சிலருக்கு கண்களில் கண்ணீர் வெளிவராது அல்லது எரிச்சல் அல்லது அரிப்பு என்று கண்கள் பாதிக்கப்படும்.ஒரு சிலருக்கு கண்களில் வலி அல்லது தலைவலி ஏற்படும். 40 வயதுக்கு முன்பே, ஒரு சிலருக்கு கண்ணாடி அணியும் சூழ்நிலை உருவாகும். எதிரே உள்ள எண் வேகமாக பெரிதாகும். வெயிலில் செல்லும்போது சிக்கலும், இரவில் வெளிச்சத்தில் வானவில் போன்ற வண்ணங்களும் ஏற்படும்.

யார் யாருக்கு ஏற்படும் : 35 வயதான பிறகு இந்நோய் சுமார் 4% பேருக்கு ஏற்படும். வயது ஆக ஆக இதன் சதவிகிதமும் அதிகமாகும்.பரம்பரையாக இந்தக் குறைபாடு உள்ள குடும்பத்தின் உறுப்பினர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

சர்க்கரை நோய் அல்லது ‘மயோபியா’(மைனஸ் கண்ணாடி அணிந்தவர்கள்) உள்ளவர்கள் அவ்வப்போது கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்., குழந்தைகள் பிறக்கும்போதே க்ளோகோமா ஏற்படும் வாய்ப்பு உண்டு. க்ளோகாமாவுக்கான சிகிச்சை முறைகளும் உண்டு.

அக்யூட் க்ளோகோமா : ஒரு சில நோயாளிகளுக்கு கண்களில் அதிக வலி இருக்கும்.இது ஹைப்பர் மெட்ரோபிக் பார்வைக் கோளாறு உள்ள பெண்களுக்கு அதிகம் ஏற்படும்.

35 வயதுக்கு மேல் அனைவரும் கண் பரிசோதனை செய்து சொள்வது நல்லது. அவசியம் ஏற்பட்டால் ‘கம்ப்யூட்டரைஸ்டு ஆட்டோ மெடட் பேரா மீட்டரிÕ மூலம் கண் பரிசோதிக்கப்படும்.

சிகிச்சை முறை : மருந்து மாத்திரைகளாலும் கண்களின் அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முடியும். தேவைப்பட்டால் அறுவை சிகிச்சையும் செய்யப்படும்.

‘ட்ரேபேக்யூலெக்டாமி’ என்ற மைக்ரோ சர்ஜரியுடன் வேறு சில மருந்துகளும் அளிக்கப்பட, 90% பேருக்கு க்ளோகோமா பூரணமாக குணமாகி, உள்ளது., லேசர் அறுவை சிகிச்சை மூலம் ஆரம்பக்கட்ட க்ளோகோமாவை குணப்படுத்த முடியும்.

இவ்வாறு ட்ரே பேக்யூ லெக்டாமி செய்த பிறகு நோய் கட்டுப்படவில்லை எனில் சிறப்பு வகை வால்வ் பயன்படுத்தி கண்களின் அழுத்தம் கட்டுப்படுத்தப்படும்.

போராட்டத்தில் இறங்கிய பொதுமக்கள்! லண்டனில்..

லண்டனில் இளைஞர் ஒருவர் துப்பாக்கி சூட்டினால் பலியானதையடுத்து, காவல்நிலையம் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மார்க் டக்கன் என்ற 26 வயது இளைஞர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கூறி போலீசார் சுட்டுக்கொன்றனர்., இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் கடந்த இரு நாட்களாக டாட்டன் காம் நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் திடீரென வன்முறையில் இறங்கினர்.

சாலையில் சென்றுகொண்டிருந்த காவல்துறை வாகனங்கள் மீது கற்களை வீசி ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இரண்டு போலீஸ் கார்கள், இரண்டு அடுக்கு பேருந்து, கட்டிடங்கள் உள்ளிட்டவற்றை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தீ வைத்து கொளுத்தினர்., கலவத்துக்கு காரணமான 150க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Saturday, August 6, 2011

விஜயயை பார்த்து ஏன் பயப்படுகிறார் பாலா ?

விஜய் என்னை பயப்பட வைக்கிறார் என்று டைரக்டர் பாலா கூறியிருக்கிறார். டைரக்டர் விஜய் இயக்கத்தில், விக்ரம், அனுஷ்கா, அமலாபால் நடித்து செம ஹிட் ஆகியிருக்கும் "தெய்வத்திருமகள்" வெற்றியை பகிர்ந்து கொள்ளும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார் டைரக்டர் பாலா. அவர் பேசி முடிந்ததும் படத்தின் டைரக்டர் விஜய் கண்கள் குளமாகி நின்றன. அப்படியென்ன பேசினார் பாலா?.

நான் எடுத்த இரண்டு படங்களில் விக்ரம் நடிச்சிருந்தார். அந்த படங்களை விட இந்த படத்தில்தான் எனக்கு விக்ரமின் நடிப்பு ரொம்ப பிடிச்சிருந்தது. "தெய்வத்திருமகள்" படம் பார்த்துட்டு நான் கண்கலங்கினேன். உண்மையில் விஜய் என்னை பயப்பட வைக்கிறார். நான் அஞ்சுவது அவரது டைரக்ஷனை பார்த்துதான் என்று பாலா பேசியதை கேட்டதும், கிடைக்காத பெரிய விருது கிடைத்த சந்தோஷத்தில்தான் கண்களை குளமாக்கிக் கொண்டார் டைரக்டர் விஜய்.

மலட்டு தன்மைக்கு மாற்று கண்டுபிடிப்பு !ஆண்களுக்கு!!

வாஷிங்டன்: மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்ட ஆண்கள் குழந்தை பேறு இன்றி தவிக்கின்றனர். எனவே அவர்களின் இந்த குறையை போக்க விஞ்ஞானிகள் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கியோபோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜப்பான் கருத்தரிப்பு மைய நிபுணர்கள் சமீபத்தில் இதுகுறித்த புதுமையான ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

எலியின் கருவில் உள்ள ஸ்டெம்செல்களில் இருந்து தரம் வாய்ந்த திசு செல்களை ஆய்வகத்தில் வைத்து தயாரித்தனர். அவற்றை மலட்டுதன்மையுடன் இருந்த ஒரு எலியின் விரை பைக்குள் செலுத்தினர். அது இயற்கையானதை போன்று செயற்கையான விந்தணுவை உற்பத்தி செய்தது. அவற்றை எலியின் கரு முட்டையில் செலுத்தினர்.

இதை தொடர்ந்து உடல் நலத்துடன் கூடிய எலிக்குட்டிகள் பிறந்தன. எனவே இதே முறையை மலட்டுத்தன்மை நோயில் சிக்கி தவிக்கும் ஆண்களின் உடலில் பயன்படுத்தவும் நிபுணர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதன் மூலம் மலட்டுத் தன்மை பாதித்துள்ள ஆயிரக்கணக்கான ஆண்கள் பயன்பெற முடியும் என கருதுகின்றனர். இந்த சிகிச்சை முறை ஆண்களுக்கு வரபிரசாதமாக இருக்கும்.

பொய் வழக்குகளால் பொங்கி எழுந்த கலைஞர் ?

திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கலைவாணன் கைதை கண்டித்து திருவாரூரில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் கலைஞர் தலைமையேற்று இக்கூட்டத்தில் பேசினார்.

அப்போது அவர், ’பொய் வழக்குகளை பொங்கி எழுந்து கண்டிக்கிறோம் என்று இங்கு பேசினார்கள். பொய் வழக்குகள் மட்டுமல்ல; இன்று அராஜக வழக்குகளாக இன்றைக்கு தொடங்கப்படுகின்றன.

கலைவாணன் மீது முதலில் இரண்டு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் எங்கே.,? ஜாமீன் வாங்கிவிட்டு வந்துவிடுவாரோ என்றுதான், அழுத்தம் திருத்தமாக ஆப்பு அடிக்கவேண்டும் என்று மூன்றாவது முறையாக என்ன வழக்கு போடலாம் என்று யோசித்து பார்த்து, தங்களையே ஒரு முறை கண்ணாடியில் பார்த்துக்கொண்டு குண்டர் சட்டம் என்ற ஒரு சட்டத்தை இன்றைக்கு தம்பி கலைவாணன் மீது ஏவியிருக்கிறார்கள்.

ஏறக்குறைய மரண தண்டைக்கு ஒப்பானதுதான், தூக்கு தண்டனைக்கு ஒப்பானதுதான் குண்டர் சட்டம். கலைவாணனை பார்த்தால் அவர் குண்டர் இல்லை. நாட்டுலே உள்ள குண்டர்களையெல்லாம் விட்டுவிட்டு கலைவாணன் மீது குண்டர் சட்டமா?

ஒரு கலைவாணனை அடக்கிவிட்டால். இன்னொரு கலைவாணன் கிடைப்பது சுலபமல்ல; கலைவாணன் சிந்துகின்ற ஒரு துளி ரத்தம்;அதிலே ஆயிரக்கணக்கான கலைவாணன்கள் தமிழகத்திலே முளைப்பார்கள்.

திமுகவை அடியோடு வீழ்த்திவிட வேண்டும் என்று ஒரு கூட்டம் துடிக்கிறது. திமுகவை அழித்துவிட்டால், தாராளமாக ஆட்சி நடத்தலாம். எவனையும் வாடா போடா என்று பேசலாம் என்றூ நினைக்கிறார்கள். நான் எவ்வளவு நாளைக்கு இருப்பேனோ என்று தெரியாது. நான் இருக்கும் வரைக்கும் சரி, எனக்குப்பின்னும் யாராலும் திமுகவை அழிக்க முடியாது.

** யார் யாரோ தண்டிக்கப்படுகிறார்கள். ஆனால் ஒரு அம்மையார் உயர் ஜாதியிலே பிறந்துவிட்டதால் அவருடைய வழக்கு கிட்டத்தட்ட 14 வருடங்களாக நடைபெற்று வருகின்றன’’ என்று பேசினார்.

இந்தியர்களின் லஞ்சம் வாங்கும் போக்கு யு எஸ் சிலும் !?

நியூயார்க் : அமெரிக்காவில் மாபெரும் மருத்துவ காப்பீட்டு மோசடியில் ஈடுபட்ட 19 அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாபுபாய் படேல் (49) என்ற அமெரிக்க வாழ் இந்தியர் அங்கு மருந்தாளுநர் ஆக உள்ளார். அமெரிக்கா முழுவதும் பல பினாமி பெயர்களில் 26 மருந்துக் கடைகளை அவர் நடத்தி வருகிறார்., மேலும், ஏராளமான மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுத்து, மருந்துகளை கட்டாயமாக தனது கடைகளில் வாங்க வற்புறுத்தியுள்ளார்.

மெடிகேர், மெடிக்எய்ட் மற்றும் தனியார் மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களின் அட்டைகளை வைத்திருப்பவர்கள், காப்பீட்டு திட்டத்தில் பணத்தை பெற பாபுபாய் படேல் நடத்தும் மருந்து கடைகளில்தான் வாங்க வேண்டும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கு டாக்டர்களும், மருத்துவமனைகளும் பாபுபாய் படேலுக்கு உடந்தையாக இருந்துள்ளதாக தெரிகிறது.

மேலும் நோயாளிகளுக்கு தாங்களே மருந்துகளைத் தரும் சில மருத்துவமனைகள், அதற்கான பில்களை பாபுபாய் படேலின் நடத்தும் மருந்துக் கடைகளின் பெயரில் தயாரித்துள்ளன., மிக்சிகன் மாகாணத்தில்தான் இந்த மோசடி பெரிய அளவில் நடந்துள்ளது. மன அழுத்தத்தைப் போக்கும் மருந்துகள், போதை பொருள் அடங்கிய வலி நிவாரணிகள் போன்ற மருந்துகளை, மருத்துவர்களின் பரிந்துறையின்றி பாபுபாய் படேல் நடத்தும பார்மஸிகள் விற்பனை செய்துள்ளன.

இதற்காக பல முக்கிய மருத்துவமனைகள், மனநல மருத்துவர்கள் லஞ்மாக பணம், பரிசுப் பொருள்களை பாபுபாய் படேல் கொடுத்துள்ளார்., இது போன்ற முறைகளில் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து பணத்தை அவர்கள் சுருட்டியுள்ளனர். மோசடியின் முக்கிய புள்ளியான பாபுபாய் படேல் மீது 34 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் இவர்கள் மோசடியில் ஈடுபட்டு பல லட்சம் ரூபாயை சுருட்டியுள்ளனர்.

இந்த வழக்கில் 26 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 19 பேர் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் ஆவார்கள். தினேஷ்குமார் படேல், அனிஷ் பவ்சார்,அஸ்வினி சர்மா,பினாகின் படேல், கார்த்திக் ஷா உள்ளிட்ட மருந்தாளுநர்களும், பால் பெட்டார் போன்ற பிரபல டாக்டர்களும், உளவியல் நிபுணர்கள் சன்யானி எட்வர்ட்ஸ் போன்றவர்களும் அடங்குவர்.

தாய் யுக்கும் செய் யுக்கும் நல்லது தாய்ப் பால்

சென்னை: குழந்தைகளுக்கு தாய்ப் பால் கொடுக்கும் பழக்கம், கடந்த 5 ஆண்டுகளில், கணிசமாகக் குறைந்துள்ளது. ஐ.நா., துணை அமைப்பான, "யுனிசெப்,' கடந்த ஆண்டு நடத்திய ஆய்வில், 40 சதவீத பெண்களே, 6 மாதங்கள் வரை, தாய்ப் பால் கொடுக்கின்றனர் என தெரிய வந்துள்ளது.

ஆறு மாதங்கள் வரை, துணை உணவு இல்லாமல், தாய்ப் பால் மட்டுமே கொடுக்கும் பெண்களின் எண்ணிக்கை, 20 சதவீதம் தான் என்பதும், இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. "பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப் பால் சிறந்த மருந்து; தாய்ப் பால் கொடுப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. அறிவுத் திறன் மேம்படுகிறது. இதனால், பிறந்த ஒரு மணி நேரத்துக்குள், தாய்ப் பால் கொடுப்பதால் பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம், 20 சதவீதம் வரை குறைகிறது' என, பல்வேறு ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, தாய்ப் பால் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை, பெண்களிடம், குறிப்பாகக் கர்ப்பிணி பெண்களிடம் வலியுறுத்த, ஆகஸ்ட் முதல் வாரத்தை, தாய்ப் பால் வாரமாக கொண்டாட, ஐ.நா., சபை வேண்டுகோள் விடுத்தது. அன்று முதல், ஒவ்வொரு ஆண்டும், இந்தியா உள்ளிட்ட, 120 நாடுகளில், ஆகஸ்ட் முதல் வாரம், தாய்ப் பால் வாரமாக அனுசரிக்கப்படுகிறது. தாய்ப் பால் கொடுக்க வலியுறுத்தி, இந்த வாரம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் பயனாக, தாய்ப் பால் கொடுக்கும் பழக்கம், படிப்படியாக அதிகரித்தது. 1998ம் ஆண்டில் 50 சதவீதமாகவும், 2005ல் 55 சதவீதமாகவும் உயர்ந்தது. ஆனால், கடந்த ஆண்டு, "யுனிசெப்' நடத்திய ஆய்வில், தாய்ப் பால் கொடுக்கும் பழக்கம், 40 சதவீதமாகக் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ஜெயச்சந்திரன், இது குறித்து கூறும்போது, வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது, கூட்டுக் குடும்பம் குறைந்து, தனிக் குடும்பங்கள் பெருகி வருவது ஆகியவையே, தாய்ப் பால் கொடுக்கும் பழக்கம் குறைந்ததற்கு முக்கியக் காரணம்.,ஆறு மாதங்கள் வரை தாய்ப் பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதால் தான், அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பை, முதல்வர் ஜெயலலிதா 6 மாதமாக உயர்த்தியுள்ளார் என்றார்.

அரசு குழந்தைகள் மருத்துவமனை கூடுதல் பேராசிரியர் ரமா சந்திரமோகன் கூறியதாவது: பெரும்பாலான பெண்கள், முதல் 3 மாதங்களுக்கு, தாய்ப் பால் கொடுப்பதை நிறுத்துவது கிடையாது. ஆனால், பிறந்த வீட்டிலிருந்து கணவன் வீட்டுக்குச் சென்றதும் வீட்டு வேலைகள், கணவரை கவனிப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்துவதால், தாய்ப் பால் கொடுக்க நேரம் குறைந்து விடுகிறது. தாய்ப் பால் கொடுப்பதற்கு மாமியார், கணவரின் ஆதரவு அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்கள், பல மணி நேரம் பால் கொடுக்காமல் இருப்பதால், பால் சுரப்பு குறைந்து விடும். இதனால் நாளடைவில் பால் கொடுப்பதும் நின்றுவிடும். அரசு ஊழியர்களைப் போன்று, தனியார் நிறுவன ஊழியர்களுக்கும், 6 மாதங்கள், மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

குழந்தைக்கு பால் கொடுக்கக் கூடாது என, எந்தத் தாயும் நினைப்பதில்லை. ஆனால், அவர்களுக்கு சரியாக வழிகாட்டுவதில்லை. குழந்தை பிறந்த முதல், 3 நாள்கள் மிக முக்கியம். குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில், பால் கொடுக்க வேண்டும். துவக்கத்தில் பால் அதிகம் சுரக்காது. இதனால், பல பெண்கள், குழந்தைக்குப் பால் போதாது என நினைத்து, புட்டிப் பாலை நாடுகின்றனர். துவக்கத்தில் பால் குறைவாக சுரந்தாலும் தொடர்ந்து கொடுக்கும்போது பால் சுரப்பது அதிகரிக்கும்.

Thursday, August 4, 2011

படத்தை பார்த்து பதில் சொல்லாத விஜய்! பதறிய டைரக்டர் !!

டைரக்டர் ராஜா இயக்கத்தில் வேலாயுதம் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தின் சூட்டிங் சமீபத்தில்தான் முடிந்தது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் வேலாயுதம் படத்தை போட்டுப் பார்த்த நடிகர் விஜய், தனது கருத்து எதுவும் சொல்லாமல் படம் முடிந்ததும் அமைதியாகக் கிளம்பி சென்றுவிட்டாராம் விஜய். பக்கத்திலிருந்த டைரக்டர் ராஜாவிடம் கூட எதுவும் சொல்லவில்லையாம். விஜய் கருத்து எதுவும் சொல்லாததால், டைரக்டர் ராஜா ரொம்பவே டென்ஷன் ஆகி விட்டாராம்.

என்னடா இது... படம் பிடிக்கவில்லையா? என நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், விஜய் தன்னிடம் பேசியதாக டைரக்டர் ராஜாவின் தந்தை எடிட்டர் மோகன், கூறியிருக்கிறார். அப்போது, படம் பார்த்துவிட்டு மிகவும் உணர்ச்சி வசப்பட்டதால் விஜய் எதுவும் பேசவில்லையாம். படம் மிகப் பெரிய வெற்றிபெறும் என விஜய் கூறியதோடு, உன்னை வெகுவாகப் புகழ்ந்தார்," என்று கூறியுள்ளார் எடிட்டர் மோகன்.

இதுபற்றி டைரக்டர் ராஜா கூறுகையில், விஜய் மிக எளிமையான இனிய மனிதர். அவருடன் பணியாற்றியது மறக்க முடியாதது. இந்த படத்தில் அவர் புதிய அவதாரம் எடுத்துள்ளார். அவருக்கு படம் மிகவும் பிடித்துவிட்டது. ரசிகர்களுக்கு இந்தப் படம் திகட்டாத விருந்தாக அமையும், என்றார்.

அம்பானியின் கனவு இல்லம் அரங்கேறிய விதம்!!

மும்பை : ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தன்னுடைய 27 அடுக்கு கொண்ட ஆடம்பர கனவு இல்லம் கட்ட வக்ப் நிலத்தை முறைகேடாக வாங்கியது தொடர்பான பிரச்சனையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மகாராஷ்டிரா அரசு தடுமாற்றத்தில் உள்ளது.

முகேஷ் அம்பானி வக்ப் நிலத்தை ருபாய் 20 கோடி கொடுத்து வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு இப்பிரச்சனை தொடர்பாக மாநில அரசுக்கு வரைந்துள்ள கடிதத்தில் நில விவகாரம் குறித்து விசாரிக்க மத்திய புலனாய்வுக் குழுவை பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டது. ஆனால் மகாராஷ்டிர மாநில அரசு சிபிஐ விசாரணை குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

மும்பை போஷ் அல்டாமவுண்ட் ரோட்டில் இருக்கும் வக்ப் இடத்தில் முகேஷ் அம்பானி கனவு இல்லம் கட்டத் தொடங்கியதிலிருந்து இப்பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது குறிப்பிடத்கது.

கடந்த திங்கள் அன்று மாநிலங்கள் அவையில் எதிர்கட்சித் தலைவர் ஏக்நாத் கஹட்சே இது குறித்து கேள்வி எழுப்பினார். மேலும் ஏக்நாத் கூறுகையில் ரூபாய் 500 கோடி மதிப்புடைய நிலத்தை கரிம்பாய் இப்ராஹிம்பாய் கோஜா டிரஸ்ட் வெறும் 21 கோடிக்கு விற்றுள்ளதாகவும் உண்மையில் இந்த நிலம் முஸ்லிம் சமூக பிள்ளைகள் படிக்க பள்ளிக்கூடம் கட்ட ஒதுக்கப்பட்ட நிலம் எனவும் அவர் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா சிறுபான்மையினர் துறை அமைச்சர் ஆரிப் நசீம் கான் மத்திய அரசிடம் இருந்து நிலம் தொடர்பாக கடிதம் வந்தது எனவும் கடிதம் குறித்து கடந்த ஜூலை 25 தாம் தேதி மாநில உள்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதாகவும் ஆனால் உள்துறையின் நிலை இதுவரை என்னவென்று தமக்குத் தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுளார். மேலும் கான் கூறியதாவது மகாராஷ்டிரா அரசு கடந்த 2004 ஆம் ஆண்டு இந்நிலம் தொடர்பான பரிவர்த்தனையில் டிரஸ்ட்டிற்கு ஒரு கடிதம் அனுப்பியதாகவும் மேலும் டிரஸ்ட்டிடம் இருந்து 16 லட்சம் ரூபாய் பெற்றவுடன் அக்கடிதத்தை திரும்ப பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் இவ்விவகாரம் குறித்து மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் R .R .பாட்டீல் கடிதம் குறித்து சட்டத்துறையில் ஆலோசனை பெற்ற பிறகே எந்த கருத்தையும் கூற இயலும் எனத் தெரிவித்தார்.

மேலும் கடந்த 2007 ஆம் ஆண்டு அன்றைய சிறுபான்மையினர் துறை அமைச்சராக இருந்த அனீஸ் அஹ்மத் இந்த நில பரிவர்த்தனையில் பல குளறுபடிகள் நடந்திருப்பதாகவும் எனவே நிலத்தை மகாராஷ்டிரா வக்ப் வாரியமே திரும்ப எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். ஆனால் விலாஸ்ராவ் தேஷ்முக் நில பரிவர்த்தனையில் எந்த குளறுபடிகளும் நடைபெறவில்லை எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, August 3, 2011

என் (ணை) ன வளம் இந்த திரு நாட்டில் ! சவூதி !!

ரியாத்: எண்ணை வளம் மிக்க நாடான சவுதி அரேபியாவில் மிக உயரமான கட்டிடம் கட்டப்பட உள்ளது. செங்கடல் நகரம் என்றழைக்கப்படும் ஜெட்டா நகரில் 1000 மீட்டர் உயரத்தில் இக்கட்டிடம் உருவாக உள்ளது. இக்கட்டிடம் சுமார் 2 சதுர மைல் பரப்பளவில் கட்டப்படுகிறது. இதற்கு கிங்டம் டவர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதில் ஓட்டல்கள், அடுக்குமாடி ஆடம்பர வீடுகள், அலுவலகங்கள் என அனைத்து வசதிகளும் இடம் பெறும். இந்த கட்டிடம் கட்டுவது குறித்து கடந்த 2008-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால் 2009-ம் ஆண்டு தொடக்கத்தில் உலக அளவில் பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து அதில் மாந்த நிலை ஏற்பட்டது.

கடந்த ஆண்டு துபாயில் புர்ஜ்காலிபர் என்ற கட்டிடம் திறக்கப்பட்டது. 160 மாடிகளை கொண்ட 822 மீட்டர் உயர கட்டிடமான இது உலகிலேயே மிக உயரமானது என்ற பெருமை பெற்றது. தற்போது இதை பின்னுக்கு தள்ளிவிட்டு சவுதி அரேபியா ஜெட்டாவில் 1000 மீட்டர் உயரத்தில் கட்டப்பட உள்ள இந்த கிங்டம்டவர் உலகின் மிகப்பெரிய கட்டிடம் என்ற அந்தஸ்தை பெற உள்ளது.

இந்த தகவலை சவுதி அரேபியாவின் கோடீசுவரரும், இளவரசருமான அல்வாலீட்பின் தலால் தெரிவித்துள்ளார்.

இனாம் கொடுப்பதாக ஜெயா! பதில் அறிக்கை விட்ட கலைஞர்!?

தமிழக முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கை தமிழர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருப்பது தொடர்பாக திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இது வரவேற்கப்பட வேண்டிய திட்டம்தான். இதனால் மாதம் ஒன்றுக்கு 55 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய்தான் செலவாகும் என்று கூறியுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் கலைஞர் கூறியிருப்பதாவது, கடந்த 2008ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில், இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு கப்பல் மூலமாக முதல் கட்டமாக 80 ஆயிரம் குடும்பங்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, சர்க்கரை, சோப்பு மற்றும் துணிவகைகள் கொண்ட 10 கோடியே ஆறுலட்சம் ரூபாய் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டது.

இந்த நிவாரணப் பொருட்களுடன் இலங்கையில் துயருறும் தமிழ் மக்களுக்காக தமிழக அரசு திரட்டிய நிதியில் எஞ்சிய 25 கோடி ரூபாய் நிதி உதவியாக வழங்கப்பட்டது.

கடந்த 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன், அகதிகள் முகாம்களில் தங்கியிருப்போருக்கு வழங்கப்பட்ட நிதியுதவி உயர்த்தப்பட்டது. முகாம்களில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி, வண்ண அடையாள அட்டைகள், இரண்டு வருடங்களக்கு ஒருமுறை சமையல் பாத்திரம், ஈமச்சடங்கு செய்வதற்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை ரூ.2,500ஆக உயர்த்தப்பட்டது என பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டது.

2004-2005ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் அகதிகள் முகாம்களுக்கு செலவிடப்பட்ட மொத்த தொகை 28 கோடி ரூபாய்தான். ஆனால் கடந்த 2008-2009ஆம் ஆண்டில் 48 கோடியே 58 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது.

திமுக அரசு ஐந்தாவது முறையாக பதவியேற்றவுடன், இலங்கை தமிழர்கள் தமிழகத்தில் தங்கியுள்ள முகாம்களை பார்வையிட்டு அளித்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு சார்பில் 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் பிரச்சனை குறித்து தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதிமுக அரசு அறிவித்துள்ள ஆயிரம் ரூபாய் ஓய்வூதியத்தையும், திமுக ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளையும் ஒப்பிட்டு பார்த்து இலங்கை தமிழர்களுக்கு அதிக உதவி செய்தது எந்த ஆட்சி என்பதை முடிவு செய்யலாம். இவ்வாறு திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

எந்த பயமுமில்லை எப்பொழுது அழைத்தாலும் வர தயார் வடிவேல்!!

தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனம் ஏலத்தில் விட்ட நிலத்தை ரூ.20லட்சத்திற்கு வாங்கியதாகவும், அதை போலி ஆவணம் தயாரித்து நடிகர் வடிவேலு வாங்கியுள்ளதாக, சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி பழனியப்பன் என்பவர் புகார் கொடுத்திருந்தார்.

இந்தவழக்கு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் வடிவேலு தலைறைவாகிவிட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் வடிவேலோ நான் எங்கும் ஓடவில்லை, போலீசார் எப்போது கூப்பிட்டாலும் விசாரணைக்கு வருவேன் என்று கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், நிலமோசடி செய்ததாக என் மீது புகார் கொடுத்துள்ளனர். மேலும் நான் தலைமறைவாகிவிட்டதாவும் செய்திகள் வெளியாகியுள்ளன. உண்மையை சொல்லணும்னா, இதில் ஏமாந்தவனே நான் தான். வாங்கிய இடத்தை பறிகொடுத்து போய் நிற்கிறேன். 2002-ல் அந்த நிலத்தை எனக்கு விற்றார்கள். 2006-ல் அங்கு காம்பவுண்டு சுவர் போட்டேன். 2009-ல் பழனியப்பன் வாங்கியதாக உரிமை கொண்டாடிட்டு வந்து நின்னார். நான் பதறி போனேன்.

அவர் 2006-ல் அந்த இடத்தை வாங்கியதாக சொன்னார்கள். இ.சி. பார்த்து இருந்தால் என் பெயர் வந்து இருக்கும். அதை எப்படி வாங்கினார் என்று புரியவில்லை. ஒரிஜினல் பத்திரம் காணாமல் போச்சு என்று விற்றவர் மேல் கோர்ட்டில் வழக்கு போட்டு இருக்கிறேன். அந்த நபர் யார் என்று மக்களுக்கு தெரியும். பழனியப்பன் செங்கல்பட்டு கோர்ட்டில் 2009-ல் என் மேல் வழக்கு போட்டார். 2011 வரை அவர் கோர்ட்டுக்கே வரவில்லை. முக்கியமான ஒருத்தர் மூலமா ரூ.1 கோடி தந்தால் விலகிக்கிறேன் என்றார். நான் மறுத்து விட்டேன். இரண்டு வழக்குகள் மீதும் விசாரணை நடந்துட்டு இருக்கு.

உலகம் பூரா குழந்தைகள், பெண்கள், வயசானவங்க, இளைஞர்கள் என எல்லாரையும் சிரிக்க வைச்சு சம்பாதித்த பணத்தில்தான் இந்த சொத்துக்களை வாங்கினேன். ஆனால் மோசடி பத்திரம் மூலம் இதை வாங்கியதாக சொல்றாங்க. நான், என் பொண்டாட்டி, குழந்தை எல்லோரும் போலி பத்திரம், தயாரிக்கிறத குடிசை தொழிலாவா செய்துட்டு இருக்கோம். எனக்கு படிப்பறிவு குறைவு, பத்திரங்களில் உள்ள விஷயங்கள் தெரியாது. அதனால் ஏமாற்றப்பட்டேன். என் குல தெய்வமான அய்யனார் சாமி முன்னால் நின்று பணத்தை கொடுத்தேன். எல்லாத்தையும் வாங்கிட்டு, மோசடி சொத்தை வாங்கி கொடுத்து என்னை ஏமாற்றி விட்டனர். என் மீதான புகாரை சட்ட ரீதியா சந்திப்பேன்.

நிலமோசடி புகாரில் போலீஸ் தேடுது, நான் தலைமறைவாயிட்டேன் என்றெல்லாம் செய்தி வருது. நான் எங்கும் ஓடல, அப்படியே போனாலும் ஒண்ணு சென்னைக்கு போவேன், இல்லேன்னா மதுரைக்கு போவேன். போலீஸ் தேடலுக்கு பயந்து போய் ஒளிய, நான் என்ன எனகவுன்டர் குற்றவாளியா பயப்பட நான் எங்கும் ஓட மாட்டேன். போலீஸ் எப்ப கூப்பிட்டாலும் விசாரணைக்கு போவேன் என்றார்.

Tuesday, August 2, 2011

எத்தனை மருத்துவ குணம் காய் கனிகளில்

......ரோஜா அர்த்தர் : முக வசீகரம் கூடும்.

......பாதாம்பருப்பு + தேங்காய் : ஞாபகசக்தி கூடும்

......ஆத்திப்பழம் : அம்மை குணமாகும்

......எலுமிச்சை தோல் : பற்கள் பளபளக்கும்

......பால் + கசகசா : தூக்கம் வரும்

.....கோதுமை, பீன்ஸ் : நரம்பு உறுதியாகும்

.....கருந்துளசி : பேன்களை ஒழிக்கும்

.....மல்லிகை இலை : கண் சிவப்பை போக்கும்

.....ரோஜா குல்கந்து : மலச்சிக்கல் நீங்கும்

.....வேப்பெண்ணெய் : மூக்கடைப்பு நீங்கும்

.....வெங்காயம் : நோய் தடுப்பு கூடும்

.....ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு, காரட் : இருதயம் பலம் பெறும்

.....மாம்பழ ஜூஸ் : நரம்புத் தளர்ச்சி போக்கும்

.....ஐஸ் : மூக்கில் வரும் ரத்தம் தடுக்கும்

.....புதினா : கர்ப்பிணிகள் வாந்தியை நிறுத்தும்

.....சுக்கும், பெருங்காயம், பசும்பால் : தலைவலி நீங்கும்

.....குப்பை மேனி : மலேரியா தீரும்.

.....பேரிச்சை : கொழுப்பை நீக்கும்

.....டீ : வயிற்றுக் கடுப்பு போக்கும்

.....கொய்யாப்பழம் : நீரிழிவு போக்கும்

.....செம்பருத்தி : உடல் சூடு தணியும்

.....காரட் ஜூஸ் : ரத்த சோகை தீரும்.

.....முட்டைகோஸ் : அல்சர் தீர்க்கும்

.....மருதாணிப்பூ : சுகமானதூக்கம் தரும்

.....நெல்லிக்காய் : எலும்பு வளர்ச்சியடையும்

மனிதன் செய்ய முடியாததை ரோபோ செய்யும் !!

வாஷிங்டன்: தண்ணீரில் நடக்க வேண்டும் என்பது மனிதனின் கனவாக உள்ளது. அதை நிறைவேற்றும் வகையில் சீன விஞ்ஞானிகள் தண்ணீரில் நடக்கும் அதிசய ரோபோவை கண்டுபிடித்துள்ளனர்.

பூச்சி போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த “ரோபோ”வால் தண்ணீரில் நடக்க மட்டுமின்றி ஓடவும் முடியும். தண்ணீரில் நடக்கும் ரோபோவுக்கு அசையக்கூடிய தடுப்புகள் போன்ற 2 கால்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதுதவிர தண்ணீரை நீந்தி கடக்கக்கூடிய வகையில் வயர்களால் ஆன 10 கால்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவைகளை இயக்க கூடிய வகையில் 2 மிக சிறிய எந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மிகவும் எடை குறைவானது. தண்ணீரில் மூழ்கி மீண்டும் மேல் எழுந்து வரக்கூடியது. சீனாவை சேர்ந்த ஷிஜியாங் பல்கலைக்கழகத்தின் கெமிக்கல் என்ஜினீயரிங் பேராசிரியர் குயின்மின்பான் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதுபோன்ற “ரோபோ”க்கள் ராணுவ உளவு பணிக்கும், தண்ணீரில் மாசுபட்டதை கண்டறியவும் மற்றும் பல செயல்பாடுகளுக்கும் பயன்படும் என விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்துள்ளனர்.

அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் காமெடி கிங் !

காமெடி கிங் என்று ரசிகர்களால் அழைக்கபெறும் கவுண்டமணி, நீண்ட ஓய்வுக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.

1980-90களில் காமெடியில் கொடி கட்டி பறந்தவர் கவுண்டமணி. டைரக்டர் பாரதிராஜாவின், "16 வயதினிலே" படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். தனக்கென்று ஒரு ஸ்டைல், லொள்ளான பேச்சு உள்ளிட்டவைகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. அதிலும் நடிகர் செந்திலுடன் இவர் சேர்ந்து பண்ணிய காமெடிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. கவுண்டமணி-செந்தில் காமெடிக்காவே "கரகாட்டக்காரன்" உள்ளிட்ட பல படங்கள் 100நாட்களையும் தாண்டி தியேட்டர்களில் ஓடி, வசூலையும் குவித்தது.

காமெடியில் கொடிகட்டி பறந்த கவுண்டமணி, கடந்த சில ஆண்டுகளாகவே நடிக்காமல் இருந்து வருகிறார். இதற்கு காரணம் அவரது உடல்நிலை ஒத்துழைக்காதது தான். இந்நிலையில் கவுண்டமணி மீண்டும் நடிக்க இருப்பதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது உடல்நிலை சீரான நிலைக்கு வந்துவிட்டதாகவும், மீண்டும் நடிக்கக்கூடிய அளவுக்கு அவருக்கு தெம்பு வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் சில இளம் இயக்குநர்கள் கூட சமீபத்தில் அவரை சந்தித்தாகவும், சில படங்களில் அவர் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் தெரிகிறது.

அப்படின்னா, கூடியவிரைவில் ரசிகர்கள் அனைவரும் கவுண்டமணியை புதுதெம்புடன், அதே லொள்ளுடன் திரையில் காணலாம் என்று சொல்லுங்கள்.

Monday, August 1, 2011

ரூ 70 லட்சம் இதென்ன ஆண்டு வருமானாமா? பெண்களின் சிலவு!?

லண்டன்: இது ஏதோ ஒரு பாலிவுட் திரைப்பட நடிகையின் மேக்கப் செலவு என்று நினைத்துவிடாதீர்கள்! பிரிட்டனில் வசிக்கும் பெண்களின் ஆயுள்கால சராசரி மேக்கப் செலவுதானாம் இது.

டெய்லி எக்ஸ்பிரஸ்' என்ற நாளிதழ் பிரிட்டன் முழுக்க 2,200 பெண்களைத் தேர்வு செய்து ஆய்வு நடத்தியபோது இந்தத் தகவல் தெரியவந்தது., வளர் இளம் பருவத்திலும் கன்னியாகவும் இருக்கும்போது செலவிடுவதைவிட திருமணத்துக்குப் பிறகுதான் மேக்கப் செலவு ஏறிக்கொண்டே போகிறதாம்.

சராசரியாக ஒவ்வொரு பெண்ணும் 54 விதமான மேக்கப் சாதனங்களைப் பயன்படுத்துகிறார்களாம். அவற்றை 12 நாடுகளிலிருந்து தருவிக்கின்றனராம். சராசரியாக அதற்கு 37,000 ரூபாய் ஆகிறதாம்., ஏனம்மா, இந்த மேக்கப்புக்கு இவ்வளவு செலவாகிறதே, அத்துடன் எங்காவது புறப்பட வேண்டும் என்றால் நீங்கள் 3 மணி நேரத்துக்கு முன்னாலிருந்தே மேக்கப் போட வேண்டியிருக்கிறதே, இதையெல்லாம் விட்டுவிட்டு எப்படி இருக்கிறீர்களோ அப்படியே போய்விட்டு வரவேண்டியதுதானே?'' என்று நிருபர் கேட்டிருக்கிறார்.

இதையே எங்களுடைய கணவன்மார்களும் கூறி ஆட்சேபம் தெரிவித்தால், அவர்களை விவாகரத்து செய்தாலும் செய்வோமே தவிர மேக்கப் போடாமல் வெளியே போகமாட்டோம்'' என்று பெரும்பாலோர் கூறியிருக்கிறார்கள்., அதுவும் ஒருவகையில் நல்ல முடிவுதான், மேக்கப் இல்லாமல் இவர்களைப் பார்த்து யாராவது பயந்தால் அதன் விளைவை யார் அனுபவிப்பது?

பிரிட்டிஷ் பெண்களுக்கு அவர்கள் பயன்படுத்தும் மேக்கப் சாதனத்தின் தரத்தைவிட, அதன் பிராண்டு பெயர்தான் முக்கியம். எனவே எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று செலவிடுவார்கள் என்று மேக்கப் சாதன தயாரிப்பு நிறுவனத்தார் தெரிவிக்கின்றனர்.

இப்படி வீண் செலவு அதிகமாகிறதே என்ற வருத்தம் ஆண்களுக்கும் இருக்கிறது; இருந்தாலும், ஒரு நாளில் சுமார் 3 மணி நேரமாவது மேக்கப்புக்காகச் செலவழித்து நம்மை வந்து அரிக்காமல் இருக்கிறார்களே என்ற மகிழ்ச்சிக்கு விலையாக இதைக் கொடுத்துவிடுகிறார்கள்.

குற்றத்தை ஒப்புகொண்ட கொலைகாரனுக்கு கொடுப்பார்கள் தண்டனை

கொழும்பு, ஆக:1 இலங்கை இறுதிக்கட்ட போரின்போது, அப்பாவி ஈழ மக்கள் கொல்லப்பட்டது உண்மைதான் என்று சிங்கள (கொலைகார) அரசு முதல் முறையாக ஒப்புதல் அளித்துள்ளது.

அந்த நாட்டின் ராணுவ அமைச்சகம் சார்பாக மனிதாபிமான நடவடிக்கை உண்மை பகுப்பாய்வு என்ற பெயரில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், இறுதிக்கட்ட போரின்போது அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டது உண்மைதான்.

விடுதலைப்புலிகளுடன் நடைபெற்ற கடுமையான சண்டையின்போது, பொதுமக்களின் இறப்பு தவிர்க்க முடியாததாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* கொலைகாரர்கள் ஒப்புககொண்டால் மட்டும் போன உயிர் திரும்ப வரவா போகிறது, கொலைகாரர்களிடம் சிக்கிய எம் ஈழ மக்களுக்கு என்றுதான் விடியுமோ. *

* உலக நாடுகளும், நாமும் இக்கொலைகாரனுக்கு அழுத்தம் கொடுத்து கொண்டு இருக்கவேண்டும் இது நம் கடமையும் கூட.

தமிழகத்தில் மாற்றம் விரும்பியவர்களுக்கு சரியான பாடம்! குஷ்பூ

தமிழக அரசை எதிர்த்து திமுக சார்பில் 01.08.2011 அன்று மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் கலெக்டர் அலுவலகம் முன் திமுக பொருளாளர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பூவும் கலந்து கொண்டார். இதனால் ஸ்டாலினுடன் சேர்த்து குஷ்பூவும் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.

முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டபோது செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு, இந்த ஆர்ப்பாட்டம் எதற்காக என்றால் திமுகவினர் மீது தேவையில்லாமல் பொய் வழக்கு போட்டு கைது செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக அரசின் அராஜகத்தை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு என்ன மாற்றம் வருகிறது என்று பார்ப்போம் என்றார்.

மேலும் தமிழகத்தில் மாற்றம் விரும்பியவர்களுக்கு சரியான பாடம் கொடுத்திருக்கிறார் ஜெயா, அடுத்த தேர்தலில் யாரும் தோற்கடிக்க வேண்டாம் தானே தலையில் அள்ளி போட்டுகொள்ளப்போகிறார் என்று குஷ்பூ பேசினார்.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!