Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, July 12, 2011

சச்சினின் கனவு நனவாகுமா ?

லண்டன் : இங்கிலாந்து தொடரே என் கனவு என இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் இன்று லண்டன் கிளம்பி சென்றனர். இது குறித்து இங்கிலாந்து பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ள சச்சின் டெண்டுல்கர், நான் சாதனைகள் குறித்து சிந்திக்கவில்லை. தொடரை சிறப்பாக விளையாடுவது குறித்து சந்திக்கின்றேன்.

சாதனைகளை முறியடிப்பதே எனது திறமையின் ரகசியம் அல்ல. கிரிக்கெட் தொடரை அனுபவித்து விளையாடுவதால் விளையாட்டின் திறன் அதிகமாகும். இதுவே எனக்கு முக்கியம். தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணமல்ல. ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்து கொண்டுள்ளேன். எவ்வாறு ஆட்டத்தை உற்சாகப்படுத்துவது மற்றும் விளையாட்டை எவ்வாறு மேம்படுத்துவது குறித்து சிந்திக்கின்றேன். நாளை என்ன நடக்கும்என்பதை யாராலும் தெரிந்து கொள்ள முடியாது என கூறியுள்ளார்.

வாக்காளர்களுக்கு அ தி மு க கொடுத்த அன்பு பரிசு!! கலைஞர் ?

சமச்சீர் கல்வி பிரச்சனையும், வரிச்சுமையும் வாக்களித்த மக்களுக்கு அதிமுக அரசு அளித்துள்ள பரிசு என, திமுக தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கலைஞர், திமுக திராவிடர்களின் நலனுக்காக எப்போதும் பாடுபடும் இயக்கம் என்று கூறினார்.

விலைவாசி வெகுவாக உயர்ந்துள்ள நிலையில் 3 ஆயிரத்து 900 கோடி ரூபாய்க்கு வரிகளில் அதிமுக அரசு மாற்றம் செய்து சுமையை ஏற்றி இருப்பதும், சமச்சீர் கல்வி பிரச்சனையில் பள்ளிகள் திறந்து இரண்டு மாதமாகியும், பாடம் படிக்க இயலாமல் மாணவர்களும், பெற்றோர்களும் தள்ளாடுவதற்கும் அதிமுக அரசுக்கு வாக்களித்த மக்களே காரணம் என்று கலைஞர் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் நடத்திய பேச்சுவார்த்தை விவரங்கள் திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பின்னர் வெளியிடப்படும். மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்தும், திமுக பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

போக்குவரத்துக்காக விஜய்யின் கல்யாண மண்டபம் இடிபடுமா?

கடந்த தி.மு.க., ஆட்சியில் மேம்பால பணிகளுக்காக விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் மண்‌டபம் இடிக்கப்பட்டது போல, இப்போது போரூர் மேம்பால பணிகளுக்காக விஜய்யின் திருமண மண்டபத்தையும் இடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

சென்னை, போரூர் சிக்னல் அருகே அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தீர்க்கும் பொருட்டு அப்பகுதியில் ரூ.34கோடி செலவில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள கடைகளை அகற்ற உத்தரவிடப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணிகளும் ஆரம்பித்துவிட்டன. இன்று காலை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தலைமையில் 100க்கு அதிகமான ஊழியர்கள் வந்தனர். ஜேசிபி இயந்திரம் மூலம் கடைகளை இடித்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.

இதனிடையே, இதே பகுதியில் நடிகர் விஜய்க்கு சொந்தமான சங்கீதா திருமண மண்டபம் இப்பகுதியில் உள்ளது. மேம்பால பணிகளுக்காக விஜய்யின் திருமண மண்படத்‌தின் முன்பக்கம் இடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், கடைகள் இடிக்கப்படுவதால் வியாபாரிகள் திரண்டு வந்தனர். பிரச்னை ஏற்படுவதை தவிர்க்க போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் இடிக்கப்பட்டதால் அப்போதைய ஆளுங்கட்சியான தி.மு.க.,வுடன் நேரடியாக ‌மோதத்தொடங்கினார் விஜயகாந்த். அதுபோல் இப்போது விஜய்யின் திருமண மண்டபமும் இடிக்கப்பட இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Monday, July 11, 2011

அடிக்கடி தண்ணிர் குடிப்பதனால் ஆரோக்கியம் உண்டா?

ஆரோக்கியமாக உள்ளவர்கள் போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் உடலில் இருந்து கழிவுகள் முழுமையாக வெளியேறாது. இதனால் சிறுநீர் வெளியேறும்போது எரிச்சல் ஏற்படும். ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு தினமும் இரண்டு லிட்டர் வரை சிறுநீர் வெளியேறினால் இயல்பு நிலை.

இதயநோய், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப் படி குடிநீரின் அளவை நிர்ணயித்துக்கொள்வது அவசியம். ஏனெனில், கூடுதல் தண்ணீரை வெளியேற்ற இதயம் அதிகமாக ரத்தத்தை பம்ப் செய்ய வேண்டியிருக்கும். ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் குடித்தால் போதுமானது. 

அதேபோல் சிறுநீர் அடிக்கடி வெளியேறக் கூடாது. ஆரோக்கியமாக உள்ளவர்கள் 4 முதல் 6 மணி நேரத்திற்கு ஒரு முறைதான் சிறுநீர் கழிக்க வேண்டும். இதற்கு குறைந்த நேரத்தில் சிறுநீர் கழித்தால் உடனே மருத்துவரிடம் ஆலோசனை செய்யவும் சிறுநீரகத்தில் பிரச்னை, மது குடித்தல், புகைப்பழக்கம் சிறுநீர் தொற்று, முதுமை என அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு பல காரணங்கள் உண்டு.

முதுமையில் புராஸ்டேட் சுரப்பி வீக்கம் காரணமாகவும் அடிக்கடி சிறுநீர் வெளியேறும். ஆனால் குளுகுளு அறையில் இருப்பது, பரபரப்பாக செயல்படுவது,பதற்றத்தில் இருக்கும் நேரங்களில் சிறுநீர் கழிக்கும் உணர்வு அடிக்கடி ஏற்பட்டால் அதனால் எந்தப் பிரச்னையும் இல்லை.

பொறியியல் கல்லூரியின் நெருக்கடியால் நொந்த மாணவர்கள் !!

சென்னை : பொறியியல் கவுன்சிலிங்கில், தனியார் கல்லூரியில் சேர்க்கை உத்தரவு பெறும் மாணவர்கள், உடனடியாக கட்டணத்தை செலுத்த வேண்டும் என, பல்வேறு கல்லூரிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன.

பணம் கட்டிய பின், மருத்துவம் உள்ளிட்ட பிற படிப்புகளுக்கு மாற முடிவெடுத்தால், கட்டிய பணம் திரும்பத் தர முடியாது என கல்லூரிகள் கூறுவதால், என்ன செய்வதென புரியாமல் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். மருத்துவ படிப்புகளுக்கான முதல் கட்ட கவுன்சிலிங் ஏற்கனவே முடிந்து விட்டது. இரண்டாம் கட்ட கவுன்சிலிங், இம்மாத இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மருத்துவம் மற்றும் பொறியியல் ஆகிய இரண்டிற்கும் விண்ணப்பித்த மாணவர்களில் பலருக்கு, மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தும், அதை உதறிவிட்டு, பொறியியலில் சேர்ந்துள்ளனர். அதேபோல், பொறியியலில் அண்ணா பல்கலையில் சேர வாய்ப்பு கிடைத்தும், அதில் சேராமல், மருத்துவ படிப்புகளை தேர்வு செய்துள்ளனர்.

முதல்கட்ட மருத்துவ படிப்பு கவுன்சிலிங்கில் இடம் கிடைக்காத பல மாணவர்கள், இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கை எதிர் பார்த்து காத்திருக்கின்றனர். இந்த மாணவர்களில் பலருக்கு, பொறியியல் கவுன்சிலிங்கில் அழைப்பு வந்துவிட்டதால், அதை நிராகரிக்க மனமில்லாமல் கவுன்சிலிங்கில் பங்கேற்று, சேர்க்கை உத்தரவுகளை பெற்றுள்ளனர். எனினும், மருத்துவ படிப்பிற்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் வரை, பொறியியல் கல்லூரிகளில் சேராமல் காத்திருக்கலாம் என நினைத்திருந்த மாணவர்களுக்கு, தனியார் கல்லூரிகளின் அறிவிப்பு இடியாக விழுந்துள்ளது.

கவுன்சிலிங்கில், தனியார் பொறியியல் கல்லூரிகளை தேர்வு செய்துள்ள மாணவர்கள், இம்மாதம் 20ம் தேதிக்குள் நடப்பு கல்வியாண்டிற்கான கட்டணத்தை முழுவதும் செலுத்த வேண்டும் என, கல்லூரி நிர்வாகங்கள் தரப்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள், வேறு முடிவு எடுத்துவிடக் கூடாது என்பதற்காகவும், அவர்களை, "பிடித்து' வைத்து விட வேண்டும் என்பதற்காகவும், கட்டணத்தை செலுத்துமாறு, கல்லூரி நிர்வாகங்கள் வற்புறுத்தி வருகின்றன. பணத்தை கட்டிய பின், வேறு படிப்புகளுக்கு மாற நினைத்தால், கட்டிய பணம் திரும்பக் கிடைக்காது என கூறுவதால், மருத்துவ கவுன்சிலிங்கை எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர்கள், பெரும் தவிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

கேப்டனின் கேள்வி ? பதில் !!

தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த், தனியார் டி.வி.யில் நேயர்கள் இ மெயில் மூலம் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது நேயர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு விஜயகாந்த் அளித்த பதில்களும் வருமாறு.

கேள்வி: லோக்பால் மசோதா குறித்து உள்கள் கருத்து என்ன?

பதில்: லோக்பால் மசோதாவை நான் வரவேற்கிறேன். மக்களால் தேர்ந்தெடுப்பவர்களை மக்கள் கேள்வி கேட்பதில் தவறு இல்லை. பிரதமரை லோக்பால் மசோதாவின் வரம்புக்குள் கொண்டுவருவது தப்பு இல்லை.

கேள்வி: அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைந்துள்ளதால், உங்களை நம்பிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், நீங்கள் வேதனையோடு இருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாரே?

பதில்: எங்கள் கட்சியின் அவைத்தலைவரும், இளைஞர் அணி செயலாளரும் முதல் முறையாக அ.தி.மு.க. அலுவலகத்தில் காலடி எடுத்து வைக்கும் போதே எங்களுக்கு துணை முதல் அமைச்சர் பதவி வேண்டாம்; கூட்டணி மந்திரி சபையிலும் இடம் வேண்டாம் என்று சொல்லிவிட்டுத்தான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச போனார்கள்.

எங்களின் ஒரே எண்ணம் கருணாநிதி ஆட்சியில் இருக்கக்கூடாது என்பதுதான். இதற்காகத்தான் அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு சென்றோம். மு.க.ஸ்டாலின் திடீர் என்று இப்படி ஒரு கருத்தை சொல்லுவார் என்று நான் நினைக்கவில்லை.

கேள்வி: கடல் பகுதியில் மீன் பிடிக்கும் மீனவர்கள் தினமும் துப்பாக்கியால் சுடப்படுகிறார்கள். இதற்கு ஒரு விடிவு கிடையாதா?

பதில்: இலங்கை அரசும், இந்திய அரசும் தேவை இல்லாமல் கவுரவம் பார்த்துக் கொண்டு செயல்படுகின்றன. மீனை யார் எங்குவேண்டுமானாலும் பிடித்துக் கொள்ளலாம் என்று இரண்டு அரசும் பேசி முடிவு செய்தால் இந்த பிரச்சினையே ஏற்படாது என்றார்.

சங்கரராமன் கேசை நடத்தி சங்கராச்சாரியை உள்ளே தள்ள ஜெயா உத்தரவு

புதுச்சேரி, ஜூலை. 11 காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுவை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ராமசாமி முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட 24 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இதில் ரவிசுப்பிரமணியம் அப்ரூவரானார். இந்த வழக்கில் அரசு சாட்சிகளாக 370 பேர் சேர்க்கப்பட்டனர்., கேசை நடத்தி சங்கராச்சாரியை உள்ளே தள்ள ஜெயா உத்தரவு பிரப்பித்திருபதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பு பெண் விசயத்தில் ஜெயலலிதா உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் நினைவில் கொள்க.

இதில் 189 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு அவர்களுடைய வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டது. அதில் 92 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர். இந்த வழக்கில் இறுதியாக வழக்கின் விசாரணை அதிகாரி சக்திவேலுவிடம் விசாரணை நடத்தப்பட்டது. இன்று அவரிடம் குற்றம் சாட்டப்பட்ட தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணை மேற்கொண்டனர். அப்போது சக்திவேல் கொடுத்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இன்றுடன் சாட்சிகள் விசாரணை முடிவடைந்ததையடுத்து இந்த வழக்கை நீதிபதி ராமசாமி வருகிற 18-ந்தேதிக்கு தள்ளி வைத்தார். மேலும் அன்று வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட 24 பேரும் ஆஜராக வேண்டுமென்று உத்தரவிட்டார்.

Sunday, July 10, 2011

இலங்கை போர்குற்ற ஓடியோ தயாரித்தவர் கைது

கொழும்பு : இலங்கை ராணுவத்தின் போர் குற்றம் என்ற பெயரில், பொய்யான வீடியோவை தயாரித்ததாக, பிரிட்டன் குடியுரிமை பெற்ற ஒருவரை, இலங்கை போலீசார் கைது செய்தனர்.

இலங்கையில், ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக் கட்ட போரின் போது, இலங்கை ராணுவ வீரர்கள், போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. ராணுவ வீரர்கள், மனித உரிமைகளை மீறி செயல்படுவது, கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் கண்களை கட்டி, துப்பாக்கியால் சுடுவது, பெண் விடுதலைப் புலிகளை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்ற வீடியோவை, பிரிட்டனின் சேனல்-4 என்ற "டிவி' சமீபத்தில் ஒளிபரப்பியது. இது, உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பிரிட்டன் "டிவி' நிறுவனத்துக்கு, போர்க்குற்றம் என்ற பெயரில், பொய்யான வீடியோவை தயாரித்து வழங்கியதாக, பிரிட்டன் குடியுரிமை பெற்ற, கந்தனம் ஜெகதீஷ்வரம் என்ற நபரை, இலங்கை போலீசார் கைது செய்துள்ளனர். இவர், இலங்கையை பூர்வீகமாகக் கொண்டனர்.

இதுகுறித்து இலங்கை போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கைது செய்யப்பட்டுள்ள நபர், கடந்த 21 ஆண்டுகளாக பிரிட்டனில் வசித்து வருகிறார். அவ்வப்போது இலங்கைக்கு வந்து செல்வார். இலங்கை ராணுவ வீரர்கள் போர்க்குற்றத்தில் ஈடுபட்டது போன்ற பொய்யான வீடியோவை, இவர் தயாரித்து, சேனல்-4 நிறுவனத்துக்கு வழங்கியது தெரியவந்தது. கண்டியில் உள்ள அவரது வீட்டில் இருந்து, 71 டி.வி.டி.,க்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவரை கைது செய்வதற்கு, கொழும்பு கோர்ட்டில் அனுமதி வாங்கப்பட்டுள்ளது. பொய்யான வீடியோ காட்சிகளை தயாரித்ததன் மூலம், நாட்டின் புகழுக்கும், ராணுவத்துக்கும் அவமதிப்பை ஏற்படுத்திய குற்றத்துக்காக, இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

வடிவேலு சிங்கமுத்தின் தொடரும் அக்கப்போரு!

நடிகர் வடிவேலுக்கு இந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக எந்த அரசியல் அனுபவமும் கிடையாது. என்னை போன்றவர்கள் எழுதி கொடுத்த வசனங்களை பேசி நடித்து மக்களிடம் கைதட்டல் வாங்கியதை வைத்து மக்கள் ஆதரவு தனக்கு இருப்பதாக கருதினார்.

நகைச்சுவை நடிகர்களுக்கு இனம், மொழி கிடையாது. யார் நடித்தாலும் கைதட்டி ஆரவாரம் செய்வார்கள். அந்த கைதட்டலை பார்த்து தான் சொன்னால் தமிழக மக்கள் ஊழல் ஆட்சிக்கு மீண்டும் ஓட்டுபோடுவார்கள் என்று வடிவேலு கணக்கு போட்டது தப்பாக முடிந்து விட்டது. நடிகர் விஜயகாந்த் குடிகாரர் என்று வடிவேலு பிரச்சாரம் செய்தார். ஆனால் வடிவேலு மொடாக்குடிகாரர் என்பது எனக்கு தெரியும் என்றார்.

நடிகர் வடிவேலுவுடன் மீண்டும் இணைந்து நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு, அவர் நடிக்கிறாரா?'' என்று திருப்பி கேட்டார். வடிவேலு இடத்தை நிரப்பும் வகையில் அவர் போல் நடிப்பீர்களா?' என்று கேட்டபோது, தமிழ்நாட்டு மக்களின் வெறுப்புக்கு ஆளாக விரும்பவில்லை. தற்போது திரைத்துறையில் அவரை விட சிறந்த காமெடி நடிகர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் என்றார்.

Saturday, July 9, 2011

படிப்பை வீணாக்கும் ஜெயாவுக்கு எதிரி கலைஞரா., கல்வியா?

கல்வியின் முக்கியத்துவத்தை தமிழகத்தில் அனைத்து கட்சியினரும் உணர்ந்துள்ளனர். இதில் ஒவ்வொரு கட்சியனருக்கும் மாற்றுக் கருத்துகள் இருக்கலாம்., ஆனால் அனைவரும் அடிப்படையில் தரமான கல்வி வேண்டும் என்பதைத்தான் கருதுகிறார்கள். உயர்கல்வி வரை அந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும்.

ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் போதிய கல்வி அறிவு இல்லாததாலேயே வறுமை நிலவுகிறது. வன்முறைச் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. அங்கெல்லாம் பள்ளிகள் மிகக்குறைவு., ஆனால் தமிழகத்தில் ஆரம்பக் கல்வி எல்லோருக்கும் கிடைக்கிறது. ஆனால் அந்த கல்வியின் தரம் உயர்ந்துள்ளதா? என்பதைப் பார்க்க வேண்டும்.

எனது காலத்தில் 40 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற நிலை இருந்தது. இப்போது அது 50 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற நிலை உள்ளது., அடுத்த தலைமுறையில் ஓர் ஆசிரியருக்கு 60 மாணவர்கள் என்ற நிலை வந்துவிடக்கூடாது. இதனால்தான் ஓர் ஆசிரியருக்கு 30 மாணவர்கள் என்ற விதி இப்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலை நாடுகளில் 25 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் உள்ளார்.

ஒவ்வொரு குழந்தையும் 10-ஆம் வகுப்பு வரை கட்டாயம் படிக்க வேண்டும். அதற்காகத்தான் இலவச கட்டாயக் கல்வியும் வந்துள்ளது., ஆசிரியர்களை அலுவலக பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது. ஆனால் 10 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

தமிழகத்தில் சமச்சீர் கல்வி சர்ச்சை பொருளாக மாறியுள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. மாணவர்களுக்கு திங்கள்கிழமை பாடப்புத்தகம் வழங்கப்படுவதாக கூறுகிறார்கள். அப்படி கொடுத்தால் வரவேற்கத்தக்கது. சமச்சீர் கல்வி சர்ச்சைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன். கடந்த மார்ச் 31 வரை ரூ. 43 ஆயிரம் கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இது வரும் ஆண்டுகளில் ரூ. 60 கோடி முதல் ரூ. ஒரு லட்சம் கோடி வரை உயரும்.

கல்விக்கடனை திரும்ப செலுத்துவதற்கான காலத்தை 7 ஆண்டுகளில் இருந்து 15 ஆண்டுகளாக அறிவிக்கலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றார் ப. சிதம்பரம்.

இந்த மாநாட்டில் எம்.பி.க்கள் விஸ்வநாதன், கே.எஸ். அழகிரி, முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் காசி, பொதுச் செயலாளர் அப்துல்மஜீத் தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

# தமிழக அரசின் ஆனவம் அடக்கப்படுமா? #

கடலை போடுவதற்கு பதிலாக சமூக சேவை செய்து காட்டிள்ள இளைஞர்கள்

இளைய தலைமுறை, எப்போதும் மொபைல் போனில் வெட்டியாக அரட்டை அடிப்பதையும், விடிய விடிய எஸ்.எம்.எஸ்.,சில், "கடலை' போடுவதையும், மொபைல் போன் வாங்கித் தரும் பெரியவர்கள் ரசிப்பதில்லை. இதற்கு மறுபக்கமும் உள்ளது என்பது போல், இளைஞர்கள் கூட்டம், குறுந்தகவலை, சமூக சேவைக்காக பயன்படுத்திக் காட்டியுள்ளது. 

சேலம் மாவட்டம், ஊஞ்சகாடு பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ். இவர் தன் மொபைலில் இருந்து, தினமும் காலையில், 200 பேருக்கு, "தகவல் மேடை' என்ற பெயரில், பொது அறிவு செய்திகளையும், மாலை, "உங்களின் சிந்தனைக்கு' என்ற தலைப்பில், அறிஞர்களின் சிந்தனைகள், போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் தினங்களில் அன்றைய தினத்தின் சிறப்பு, அதற்கான அவசியம் குறித்து குறுந்தகவல் அனுப்புகிறார்.

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள், "நீங்கள் தினமும் அனுப்பிய பொது அறிவு, அறிஞர்களின் பொன்மொழி ஊக்கமாக இருந்தது. தேர்வில் கேட்கப்பட்ட பல கேள்விக்கான பதில்களை, நீங்கள் எஸ்.எம்.எஸ்., அனுப்பியுள்ளீர்கள்' என்ற போது, உண்மையாகவே சிலிர்த்து போனேன்,'' என கூறிய தேவராஜ், "தேவா எஸ்.எம்.எஸ்., நெட்' என்ற பெயரில், குறுஞ்செய்தி வட்டாரத்தை நடத்தி வருகிறார்.புதுக்கோட்டையைச் சேர்ந்த விஜயகுமார், "இனியா' என்ற பெயரில் குறுந்தகவலாக வாரம் ஒரு முறை வெளியாகும் இதழை நடத்துகிறார்.

இலக்கியம், அறிவியல், சமூக விழிப்புணர்வு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட இந்த இதழுக்கு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் உள்ளனர். இதில் வெளியாகும் கவிதைகள், "ஏழைதாசன்' என்ற சிற்றிதழில் வெளியாகின்றன.""புதிதாக எழுத வருகிறவர்களை ஊக்குவிப்பது தான், குறுந்தகவல் இதழின் நோக்கம்,'' என்ற விஜயகுமார், ""பிரபல பத்திரிகைகளுக்கு படைப்புகளை அனுப்பி, பிரசுரமாகாத படைப்பாளர்கள் பலரை ஊக்குவிப்பது தான், எங்கள் பணி. அதை முடிந்த அளவிற்கு சரியாக செய்து வருகிறேன். நான் ஒரு சிலருக்கு அனுப்புவேன். அவர்கள் இதழோட தரத்தை பார்த்து, பலருக்கு அனுப்புறாங்க...'' என்கிறார்.

சென்னையில், எஸ்.எம்.எஸ்., வட்டார நண்பர்களுக்காக வலைப்பூ bcsms.blogspot.com) நடத்தும் சந்திரசேகர், தினமும் 350 பேருக்கு, பயனுள்ள செய்திகளை, காலை மற்றும் மாலையும் அனுப்புகிறார்.நண்பர் வட்டாரங்களில் வரும் சிறந்த குறுஞ்செய்திகளை, தன் வலைப்பூவில் பதித்து, உலகின் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார். இவரது குறுஞ்செய்திகள், திருநங்கைகள், குழந்தைத் தொழிலாளர் என, சமூக பிரச்னைகளைப் பேசுகின்றன.

கே.எம்.ஆர்., மூலிகை நெட் குறுஞ்செய்தி இதழ், சமீபத்தில், 1,500 நாள் வெற்றி விழாவை கொண்டாடியுள்ளது. மூலிகை குறித்து இளைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, இந்த குறுந்தகவல் இதழ் நடத்தப்படுகிறது. இதிலிருந்து தினமும் 700 பேருக்கு தகவல் அனுப்பப்படுகிறது.இந்த இதழின் தொடர்ச்சியான வேண்டுகோளை ஏற்று, பலர் இயற்கை உணவு முறைக்கு மாறியுள்ளனர். ""நாளுக்கு நாள் விஞ்ஞானத்தின் பிடியில் சிக்கி, இயற்கையை மறந்து வருகிறோம்.

இதை மாற்ற வேண்டும் என்பது தான் என் கொள்கை. அதற்கு எஸ்.எம்.எஸ்., இதழை பயன்படுத்தி வருகிறேன்,'' என கூறுகிறார், மூலிகை நெட் நடத்தும், சென்னையைச் சேர்ந்த, விஜயகுமார்.ரசிக்கவும், அறிவை வளர்த்துக் கொள்ளவும் என்பது மட்டும் இல்லாமல், பலரின் வாழ்வில் நல்ல பயனைத் தந்துள்ளது குறுந்தகவல் வசதி. ""என் தங்கை திருமணத்திற்கு காசில்லாமல் சிரமப்பட்ட போது, என் நெருங்கிய நண்பன் மூலமாக, எஸ்.எம்.எஸ்., வட்டார நண்பர்களுக்கு செய்தி பரவி, அவர்கள் அளித்த நிதியுதவியுடன் என் தங்கை திருமணம் நடந்தது,'' என, கண்களில் நீர் வழிய சொல்கிறார், குறுந்தகவல் வட்டாரத்தில் பங்கேற்கும் புவனேந்திரன்.

கவர்ச்சிக்கு முழுக்கு போட்டுவிட்டு நடிப்பில் மூழ்கும்! அனுஷ்கா

நடிகை அனுஷ்கா, மதராசபட்டினம் படத்தை தொடர்ந்து டைரக்டர் விஜய் அடுத்து இயக்கி இருக்கும் படம் தெய்வத்திருமகள். இப்படத்தில் மனவளர்ச்சி குன்றியவராக நடித்திருக்கிறார் விக்ரம். இவருடன் அனுஷ்கா, அமலாபால், சந்தானம், நாசர், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இப்படம் ஜூலை 15ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.

அதில் பேசிய படத்தின் டைரக்டர் விஜய், விக்ரம் இந்தபடத்தில் மனவளர்ச்சி குன்றிய இளைஞராக, மிகுந்த சிரமப்பட்டு நடித்துள்ளார். இதற்காக தனது எடையில் 10கிலோவை குறைத்திருக்கிறார். இந்தபடம் ஒரு ஆவணப்படமோ, கலைப்படமோ அல்ல. முழுக்க முழுக்க ஒரு கமர்ஷியல் படம். படத்தில் ஒவ்வொரு ஆர்டிஸ்டும் தங்களது முழுதி‌றமையை இந்தபடத்தில் காண்பித்து இருக்கின்றனர். அதேபோல் இந்தபடத்தில் அனுஷ்காவின் நடிப்பு முக்கியமானது.

முதலில் அவரை இந்த படத்திற்காக ஒப்பந்தம் செய்தபோது, இந்த கேரக்டருக்கு அவர் சரிபட்டு வருவாரா...? என சிறு சந்தேகம் இருந்தது. ஆனால் முதல்நாள் சூட்டிங்கின் போதே அந்த கேரக்டராகவே மாறி நடித்தார். அனுஷ்கா ஒரு சிறந்த நடிகை. அவர் நடிகை சாவித்ரி போல வருவார். தமிழ் சினிமாவில் அவரது நடிப்பு நிச்சயம் பேசப்படும். இதுவரை கவர்ச்சியாகவே தெரிந்த அனுஷ்கா, இந்தபடத்தில் துளியும் கவர்ச்சியில்லாமல், ஒரு நல்ல வலுவான கேரக்டரில் நடித்துள்ளார்.

பிஞ்சு நெஞ்சில் நஞ்சை விதைக்கும் பள்ளிகள்!!

நெல்லை மாவட்டம் புளியங்குடி நகரில் உள்ள பள்ளிகளில் குறிப்பாக 12 தனியார் தமிழ் வழி உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகள் 10 மற்றும் +2 தேர்வுகளில் நூறு சதவீதம் தேர்ச்சி என்று காட்டுவதற்காக சில குள்ளநரித்தன காரியங்களை மேற்கொண்டுள்ளன.

தங்களிடம் பயிலும் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண் வாங்கும் மாணவர்களை கட்டாயமாக வெளியேற்றுகின்றனர். இச்சம்பவம் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடருவதை கண்டு, பெற்றோர்களும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களும் திகைத்தனர். அதோடு வெளியேற்றப்படும் மாணவ மாணவிகள் வேறு பள்ளிகளில் தங்களது படிப்பை தொடருவதற்கு முயன்றாலும் அங்கேயும் அவர்களுக்கு முட்டுக்கட்டைகள்.

இதனால் மனம் புழுங்கிய பெற்றோர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட முதண்மை கல்வி அலுவலர், தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் போன்றவர்களுக்கு புகார் மனு அனுப்பினர். இதனையடுத்து இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது அரசு.

புகாருக்குள்ளான புளியங்குடியின் அந்த 12 தனியார் பள்ளியின் பொறுப்பாளர்களை ஆவணங்களோடு வரவழைத்து விசாரணை நடத்தினார் தென்காசி கல்வி மாவட்ட அலுவலர் ஜெயக்கண்ணு. அப்போது குறிப்பிட்ட மூன்று பள்ளிகளில் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளில் சில மாணவர்களுக்கு சான்றிதழ் கொடுத்து வெளியேற்றப்பட்டது தெரியவந்தது.

சான்றிதழ் மாணவர்களுக்கு கொடுக்கும் முன்னரே பெற்றோர்கள் இதைப் பெற்றுக்கொண்டதுபோல, பள்ளி நிர்வாகம் கையெழுத்து வாங்கியது அம்பலமானது. இதனையடுத்து இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது என அப்பள்ளிகளை கடுமையாக எச்சரித்த தென்காசி கல்வி மாவட்ட அலுவலர் ஜெயக்கண்ணு, இனிமேல் இதுபோன்ற மாணவர்களை வெளியேற்ற மாடடோம் என்ற எழுத்துபூர்வமான உறுதிமொழியையும் வாங்கிக்கொண்டார்.

இந்த அறிக்கைகள் மாவட்ட முதண்மை கல்வி அலுவலர், மாநில பள்ளி கல்வித்துறை இயக்குநர் மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சிருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தீண்டாமை ஒரு மனித நேயமற்ற செயல். பெருகுற்றம் என்று போதிக்கின்ற தமிழ்வழி பள்ளிகளிலேயே மாணவர்களை இனப்பாகுபாடு செய்வதும், ஒரு தீண்டாமையே என்கிறார்கள் புளியங்குடி மாணவர் பெற்றோர் கழகத்தினர்.

பூட்டிய வீட்டில் பிணம்! என்ன நடக்கிறது தெரியாத பக்கத்து வீட்டுக்காரர்

சிட்னி, ஜூலை.8 ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரின் புறநகர் பகுதியில் வசித்தவர் நடாலிஉட். 80 வயதை தாண்டிய இந்த பெண் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது உறவினர் அருகில் உள்ள ஊரில் வசித்து வருகிறார். அவர் எப்போதாவது வந்து நடாலி உட்டை பார்த்து செல்வார். சில வருடமாக உறவினர் அவரை பார்க்க வரவில்லை.

இந்த நிலையில் கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து, இவருக்கான பென்சன் தொகை டெலிவரி ஆகாமல் சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கே திரும்பிச் சென்றுள்ளது. மின் கட்டணம் கட்டாததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டது. இதனால் அந்த வீடு இருளில் கிடந்தது. நடாலிஉட் வீட்டை விட்டு வெளியேறி வேறு எங்கோ சென்றுவிட்டார் என்று, பக்கத்து வீட்டுக்காரர்கள் கருதினர்.

நடாலி உட்டின் உறவினர் 8 ஆண்டுகளுக்கு பிறகு, நேற்று முன்தினம் அங்கு வந்தார். அப்போது நடாலியின் படுக்கை அறையில் எலும்புக் கூடுகள் மட்டுமே கிடந்தன. இதையடுத்து, அவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்து எலும்பு கூடுகளையும், மண்டை ஓட்டையும் சேகரித்து, ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பினர்.

இதில் இறந்தவர் நடாலிதான் என்றும், இறந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதும் தெரிய வந்தது. இத்தனை ஆண்டுகளாக பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்றே தெரி யாமல் அண்டை வீட்டார் இருந்துள்ளனர்.

Friday, July 8, 2011

குடும்பத்துக்கு தாரைவார்த்ததால் மீண்டும் கிட்டுமா ? முக்கிய முடிவு

மத்திய அமைச்சரவை மாற்றத்தில் அமைச்சர் பதவிகளை வழங்குவது குறித்து தி.மு.க., தலைவர் கருணாநிதியை, மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று சந்தித்துப் பேசுகிறார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் ராஜா, கனிமொழி ஆகியோரைத் தொடர்ந்து தயாநிதி மாறனும் சிக்கியுள்ளார். இதனால், அவர், மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஊழல் குற்றச்சாட்டிற்காக இரண்டு அமைச்சர்கள் அதுவும் தி.மு.க., என்ற ஒரே கட்சியில் குறுகிய கால இடைவெளிக்குள் ராஜினாமா செய்திருப்பது, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்நிலையில், மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதில், தி.மு.க.,வுக்கு அமைச்சர் பதவி அளிப்பது குறித்து காங்கிரஸ் ஆலோசித்து வருகிறது. முக்கிய கூட்டணிக் கட்சியாக இருக்கும் தி.மு.க.,வின் இரண்டு கேபினட் அமைச்சர்களும் பதவியை விட்டு போய்விட்டதால், அந்த காலியிடங்களை எப்படி நிரப்புவது என்ற கேள்வி எழுந்துள்ளது.தி.மு.க., சார்பில் என்ன முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என்பது இதுவரை தெளிவாகவில்லை. புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பதா, வேண்டாமா என்பது குறித்து இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இப்போதைய இக்கட்டான சூழ்நிலையில் அமைச்சர் பதவி தேவை தானா என்று ஒருதரப்பு கருதுகிறது.

ஆனால், இதுவரை கிடைத்த வாய்ப்புகள் எல்லாவற்றையுமே குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே தலைமை தாரை வார்த்தது. இப்போது, குடும்ப ஆதிக்கம் சற்று தளர்ந்துள்ள நிலையில், அமைச்சர் பதவி வாய்ப்பு வருகிறது என்றால் அதை கட்சிக்காரர்களுக்கு அளிப்பதில் என்ன தவறு என்று இன்னொரு தரப்பு கருதுகிறது.இந்த சூழ்நிலையில் இது பற்றி முக்கிய ஆலோசனை நடத்துவதற்காக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, சென்னை வருகிறார். இவர் இன்று காலை, கோபாலபுரத்தில் தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசவுள்ளார்.

தனிமையும் தற்காப்பும் பெண்களுக்கு !

தற்போது வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை தாக்கி கொள்ளையடிப்பது தொடர்கிறது. வீட்டில் தனியாக இருக்கும் போது, அடையாளம் தெரியாத நபர்களை யாரையும் உள்ளே அனுமதிக்கக் கூடாது. வியூ பைண்டர், கதவு செயின், கிரில் கேட் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

* நகை பாலீஷ், தெருவில் கலவரம் எனக் கூறி பெண்களை ஏமாற்றி கொள்ளை அடிக்கின்றனர். வீட்டில் உள்ள தந்தை, கணவர்களுக்கு தெரியாமல் பணப் பரிவர்த்தனை செய்து மாட்டிக் கொள்ளாதீர்கள்.

* பெண்களுக்கு எதிரான குற்றங்களில், 30 சதவீதம் வீட்டில் தான் நடக்கிறது. ஆபாச படங்களை காட்டுவது, ஆபாச ஜோக் சொல்வது, ஆபாச புத்தகங்களை கொடுப்பது, தவறான எண்ணத்துடன் தொட்டு பழகுவது என அலுவலகத்தில் பெண்களுக்கு பல செக்ஸ் தொந்தரவுகள் வரலாம்.இது குறித்து, முதலில் போலீசில் புகார் அளிக்க வேண்டும்.

சுப்ரீம் கோர்ட்டின் 1998ம் ஆண்டு தீர்ப்புப்படி, ஒவ்வொரு அலுவலகத்திலும் பெண் தலைமையில் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும்.இதில் வக்கீல், போலீஸ், பெண்கள் சங்க பிரதிநிதி இடம்பெற வேண்டும். விசாகா கமிட்டி முழுமையாக செயல்படாத போது இது குறித்து, அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லலாம்..

* யாராவது உங்களைத் தாக்க வந்தால், குடை உள்ளிட்ட ஆயுதங்கள் மூலம் திருப்பித் தாக்குங்கள். உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான உங்களுக்கு உரிமை உண்டு.

* பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு தேவையான தற்காப்பு பயிற்சியை போலீசார் தற்போது சொல்லி தருகிறார்கள். .

* ஆட்டோவில் ஏறும்முன், அதன் எண்ணை குறித்து கொள்ளுங்கள்.

* அடுக்குமாடி குடியிருப்புகளில் பகலிலும் செக்யூரிட்டி பணியில் இருக்க வேண்டும்.

* நடந்து செல்லும் போது மொபைல்போனில் பேசாதீர்கள். உங்களைச் சுற்றி யார் இருக்கிறார்கள் என கவனியுங்கள்.,இனி உஷார்தானே நீங்கள்.

மீண்டும் சூடு பிடிக்கும் வடிவேலு விவகாரம்

நடிகர் வடிவேலு அலுவலகம் விருகம்பாக்கம் வேதாசலம் தெருவில் உள்ளது. இந்த அலுவலகத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 14-ந்தேதி நடிகர் சிங்கமுத்துவும் அவருடன் சிலரும் சேர்ந்து தாக்கினார்கள். இது தொடர்பாக வடிவேலுவின் மானேஜர் சங்கர் விருகம் பாக்கம் போலீசில் புகார் செய்தார்.

இந்த வழக்கு விசாரணை சைதாப்பேட்டை 23-வது கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. மாஜிஸ்திரேட்டு அகிலா ஷாலினி முன்னிலையில் நடிகர் சிங்கமுத்து ஆஜர் ஆனார்.

இந்த வழக்கில் நடிகர் வடிவேலுவின் மானேஜர் சங்கரிடம் சிங்கமுத்து வக்கீல் அறிவழகன் குறுக்கு விசாரணை செய்தார். அப்போது சம்பவம் நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியை வடிவேலு சந்தித்தது தெரியுமா? என்று கேட்டார். அதற்கு சங்கர் தெரியும் என்று பதில் அளித்தார்.

நடிகர் வடிவேலு தூண்டுதலின் பேரில் பொய்யான புகார் தந்து நீங்கள் சாட்சி சொல்கிறீர்கள் என்று வக்கீல் கேட்டதற்கு இல்லை என்று சங்கர் கூறினார். சம்பவம் நடந்தபோது வடிவேலு எங்கு இருந்தார் என்று கேட்டதற்கு கொடைக்கானலில் படப்பிடிப்பில் இருந்ததாக தெரிவித்தார்.

இந்த சம்பவத்திற்கு முன்னால் அதே தெருவில் வசிக்கும் படத்தயாரிப்பாளர் கண்ணன் வீட்டில் பட்டாசு வெடித்ததற்கான வழக்கு இருப்பது தெரியுமா? என்று கேட்டதற்கு தெரியும் என்றார். பட்டாசு வெடிப்பு வழக்கிற்கு பிறகு வடிவேலு அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததே என்பதற்கு அது எனக்கு ஞாபகம் இல்லை என்றார். தொடர்ந்து விசாரணை நடந்தது.

Thursday, July 7, 2011

தனியாக வந்த பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற சாமியார் !

திருநெல்வேலி : நெல்லை லாட்ஜில் தனியாக வந்த பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற போதை சாமியார் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி வண்ணார்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணன், கேரள மாநிலம் கோவளம் லாட்ஜ் ஒன்றில் மேலாளராக பணிபுரிகிறார். இவரது லாட்ஜ்க்கு அடிக்கடி வந்துசென்ற சோட்டானிக்கரையை சேர்ந்த சாமியார் நந்தகுமார்(40) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சாமியார் சோதிடம் பார்த்து சொன்னவை நடப்பதாக கிருஷ்ணன் நம்பினார்.

நேற்று சாமியார் நந்தகுமார் நெல்லையில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்தார். கிருஷ்ணன் நெல்லையில் உள்ள தமது மனைவி லலிதாவுக்கு போன் செய்து, சாமியார் நெல்லை வந்துள்ள தகவலை தெரிவித்தார். லலிதா, களக்காட்டை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி பானுமதி(38) க்கு ஜோதிடம் பார்க்க அழைத்துச்சென்றார்.

லாட்ஜ் அறையில் சாமியார் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. அவர் அறைக்குள் வந்த பெண்களிடம் வாய்க்கு வந்தபடி உளறியுள்ளார். பின், இருவரின் தலைமுடியை பிடித்து இழுத்து ஒருவர் தலையை இன்னொருவர் தலையோடு மோதியுள்ளார். சேலையை பிடித்து இழுத்துள்ளார். தலைகளை மோதச் செய்ததால் ஏற்பட்ட காயத்தால் இருவரும் அழுதபடியே வெளியேவந்தனர். தலைவிரி கோலமாக வந்த அவர்கள் ஜங்ஷன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து போதை சாமியார் நந்தகுமாரை கைது செய்தனர்.

கல்விக்கு கல்வி வணிகர்களை அமைத்த தமிழக அரசு!? உயர் நீதி மன்றம்

சமச்சீர் கல்வி வழக்கு தொடர்பான விசாரணையின் போது சென்னை உயர்நிதிமன்ற தலைமை நீதிபதி தமிழக அரசுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வழக்கு நடைபெறும்போது பழைய பாடத்திட்ட புத்தகங்களை அச்சிட நடவடிக்கை எடுத்தது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள தலைமை நீதிபதி, தமிழக அரசு மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடரக்கூடாது என்றும் கூறினார்., உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் சமச்சீர் கல்வி திட்டம் குறித்து ஆராய தமிழக அரசு நியமித்த 9 பேர் கொண்ட குழு அண்மையில் தமது அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

தமிழ் படிக்கவே தெரியாதவர்களும், கல்வி வணிகர்களையும் கொண்ட இந்த குழு சமச்சீர் கல்வியை குழி தோண்டி புதைக்கும் விதமாக அறிக்கை தயாரித்திருப்பதாக, அரசியல் பாகுபாடின்றி அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த அறிக்கை மீதான வழக்கறிஞர்களின் வாதம் தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் கொண்ட முதண்மை அமர்வு முன்பாக உயர்நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது.

அதிமுக அரசு சார்பாக உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிபி ராவ் தமது வாதத்தை எடுத்துரைத்தார். அப்போது குறிக்கிட்ட தலைமை நீதிபதி இக்பால், வழக்கு விசாரணை முடிவற்கு முன்னதாகவே, பழைய பாடத்திட்டத்தின் நூல்களை அச்சிட தமிழக அரசு டெண்டர் விடுத்தது ஏன்? இதற்காக அரசு மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினார்.

நீதிமன்றத்தை தமிழக அரசு கேலிக்கூத்தாக்குவது வேதனையளிக்கிறது என்றும் தலைமை நீதிபதி கூறினார். நூல்களை அச்சிடுவதை ராவ் ஒப்புக்கொண்டதையும் நீதிபதி பதிவு செய்து கொண்டார்.

சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாத், மாநில கல்வி திட்டம் பற்றி எதுவும் அறியாதவர்கள் அடங்கிய குழுவின் அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று வாதிட்டார்., இந்த வழக்கின் விசாரணை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Wednesday, July 6, 2011

அவசர உலகில்., அவசியமான ஒன்றோ !?

பெரியோர்களால் நிச்சயக்கப்பட்டு, உறவினர்கள் வாழ்த்துடன் தான் வாழ்க்கையை இளம் தம்பதியர் துவக்குகின்றனர். ஆனால், பல்வேறு காரணங்களால் திருமணமான அடுத்த நாளே சிலரிடம் பிரிவினை ஏற்பட்டு விடுகிறது. பெரும்பாலான கணவன் - மனைவிகள் குடும்ப சொத்து, சம்பாத்தியம், வகிக்கும் பதவி ஆகியவற்றால், "ஈகோ' கொள்கின்றனர். இதனால், ஏற்படும் தாழ்வு மனப்பான்மையால் குடும்பத் தகராறு ஏற்பட்டு, பிரிகின்றனர்.

இன்றைய இளம் தலைமுறையினர் குறிப்பாக, ஐ.டி., துறையில் இருப்பவர்கள் பணம் சம்பாதிப்பதையே லட்சியமாகக் கொண்டுள்ளனர். இரவு, பகல் பாராமல் எப்போதும் கம்ப்யூட்டரே வாழ்க்கைத் துணை என நினைக்கின்றனர்.பெற்றோரின் கட்டாயத்துக்காக திருமணம் செய்து கொள்ளும் இவர்கள், கட்டிய கணவரையோ, மனைவியையோ கண்டு கொள்வதில்லை. இதனால், இருவருமே சட்டப்படி பிரிந்து கொள்ள கோர்ட்டை நாடுகின்றனர். இன்றைய நிலவரப்படி, "ஆண்மை குறைவு' விவாகரத்துக்கு அதிகளவு காரணமாக உள்ளது.

ஆனால், கோர்ட்டுக்கு வரும்போது, இது மறைக்கப்பட்டு, "கணவர் டார்ச்சர் தருகிறார்; சந்தேகப்படுகிறார்; வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்கிறார்' என பதிவு செய்யப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, தனிக்குடித்தனம் நடத்த கணவர் வர மறுக்கிறார் என்பது பொதுவான குற்றச்சாட்டாக உள்ளது. தனிக்குடித்தனம் செல்லும் போது, இருவருக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடு, தகராறு இவற்றை தீர்க்க ஆலோசனை கூற பெரியவர்கள் இல்லாததும் விவாகரத்துக்கு முக்கிய காரணம்.விவாகரத்து வழக்கோடு, குடும்ப வன்முறைச் சட்டம் பெண்களுக்கு பெரிதும் உதவுகிறது., கணவரையோ, அவரது குடும்ப உறுப்பினரையோ பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஏற்பட்டால் இந்த சட்டத்தை (தவறாக)பயன்படுத்திக் கொள்கின்றனர்.

கடந்த ஆறு மாதத்தில் மட்டும் 687 விவாகரத்து வழக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டை விட அதிகம். 108 பெண்கள் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர். இவை தவிர, பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்து வாழவும், இரண்டு ஆண்டுகள் மட்டும் பிரிந்து இருக்கவும் அனுமதி கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர்.

சமீப காலமாக, கணவனும், மனைவியும் ஒருமித்த நிலையில் "மியூச்சுவல் டைவர்ஸ்' கேட்டு கோர்ட்க்கு வருவது அதிகரித்துள்ளது. பதிவாகும் மொத்த வழக்குகளில் 25 சதவீதம் வழக்குகள் இந்த வகையில் உள்ளன.

# இருமனம் சேர்ந்தால் திருமணம், வாய் வார்த்தை ஆகிப்போனதில் நிச்சயிக்கப்படும் போதே, விவாகரத்து மனுவும் தயாராகி விடுகிறது. அவசரமான உலகில், குடும்ப வாழ்க்கை சிலருக்கு அவசியமல்லாதது ஆகி வருகிறது. #

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!