Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, July 6, 2011

அதிக உடல் திறனுக்கு உகந்தது பீட்ரூட்!!

லண்டன்: சைக்கிள் வீரர்களின் சக்தியை பீட்ரூட் ஜுஸ் அதிகரிக்கும். சமீபத்தில் எக்சீடர் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், பீட்ரூட் ஜுஸ் குடிக்கும் சைக்கிள் வீரர்களுக்கு சக்தி அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இயற்கையாக பீட்ரூட்டில் அதிக அளவு நைட்ரேட் உள்ளது. இது தடகள வீரர்களின் திறமையை பாதிக்கும் என கருதப்பட்டது. இதுகுறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது பீட்ரூட் ஜுஸ் குடித்தால் சக்தி அதிகரிக்கும் என தெரிய வந்துள்ளது.

சைக்கிள் ஓட்டும் வீரர்களுக்கு இந்த ஜுஸ் கொடுக்கப்பட்டது. அப்போது அவர்கள் வழக்கத்தை விட அதிக தூரம் கடந்து சாதனை படைத்தனர். பீட்ரூட் ஜுஸ் தசைகளுக்கும், இருதய நாளங்களுக்கும் அதிக சக்தி கொடுப்பது தெரிய வந்தது.

பச்சை காய்கறிகளை உணவில் சேர்த்து மருத்துவரிடமிருந்து பாதுகாத்துகொள்ளுங்கள்.

ஒரு விசயத்திலாவது நாம் ஒன்று பாடுவோமே! ஈழத்திற்கு!!

சென்னை, ஜூலை.6: இலங்கைத் தமிழருக்கு ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் வகையில் அகில இந்திய அளவில் இயக்கம் நடத்த இந்திய கம்யூனிஸ்டு நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் தமிழகத்திலும், இந்தியாவின் பிற மாநிலத் தலைநகர்களிலும் ஜூலை 8-ம் தேதி நடத்தப்பட உள்ள இயக்கத்தில் கலந்துகொள்ளுமாறு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராஜபட்ச போர்க் குற்றவாளி என ஐ.நா. விசாரணைக் குழு அளித்தப் பரிந்துரையை ஏற்று சர்வதேச நீதிமன்றம் அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை நடவடிக்கைகளை எடுக்கவும், இந்திய அரசு முன் வரவேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் ஒரே மனதாக நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தை ஆதரித்தும், இலங்கைத் தமிழருக்கு ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் வகையிலும் அகில இந்திய அளவில் இயக்கம் நடத்த இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் தேசியக் குழு நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் தமிழகத்திலும் இந்தியாவின் பிற மாநிலத் தலைநகர்களிலும் ஜூலை 8-ம் தேதியன்று நடத்தப்பட உள்ள இயக்கத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழர்கள் அனைவரையும் வேண்டிக் கொள்வதாக நெடுமாறன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

# ஈழத்திற்காக எதை செய்தோம் நாம், இந்த ஒன்றிலாவது ஒன்றுபட்டு நம் எதிர்ப்பை கான்பிப்போமே. நம் உறவுகளுக்கு ஒரு ஆறுதலுக்கு. #

சந்திரனில் இன்னும் பறந்து கொண்டு இருக்கும் தேசிய கொடி

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு நீல் ஆம்ஸ்ட்ராங், புஷ் அல்டிரின் ஆகியோர் சந்திரனில் அமெரிக்காவின் தேசிய கொடியை நட்டி பறக்க விட்டனர். அதை தொடர்ந்து ஆய்வுக்காக 6 முறை சென்ற அமெரிக்க விஞ்ஞானிகள் தங்கள் நாட்டு கொடியை அங்கு நாட்டினர்.

இந்நிலையில் அந்த கொடிகள் இன்னும் அங்கு பறந்து கொண்டிருக்கின்றனவா? என்பதை அறிய கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த சாந்தா பார்பரா லிப்ராதியின் ஆன்னி என்பவர், ஆய்வு மேற்கொண்டார்.

அதில் அமெரிக்க விஞ்ஞானிகள் சந்திரனில் நாட்டிய 4 கொடிகள் பட்டொளி வீசி பறக்கின்றன. 2 கொடிகள் மட்டும் காணவில்லை. அவை சந்திரனில் வெளியாகும் வாயுக்களால் சிதைந்து கிழிந்து இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

Tuesday, July 5, 2011

கமல் நடித்த படத்தில் நடிக்க போட்டி போடும் ஹிந்தி நடிகர்கள்!

1990ல் கமல்ஹாசன் வெவ்வேறு கேரக்டரில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற, "மைக்கேல் மதன காமராசன்" படத்தை இப்போது இந்தியில் ரீ-மேக் செய்ய போட்டா போட்டி நடந்து வருகிறது.

நடிப்பு மட்டுமல்லாது காமெடி, நடனம், டைரக்ஷன் என சகல வித்தைகளும் தெரிந்த சகலகலா வல்லவனான, உலக நாயகன் கமலுக்கு காமெடி ரீதியாக வெற்றி பெற்ற படங்கள் பல உண்டு. அந்தவகையில் 1990ல் கமல் நான்கு வேடங்களில் நடித்து, மாபெரும் வெற்றி பெற்ற காமெடி படம் "மைக்கேல் மதன காமராசன்". சிங்கீத சீனிவாச ராவ் இப்படத்தை இயக்கி இருந்தார்.

இந்நிலையில் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது இந்தபடத்தை இந்தியில் ரீ-மேக் செய்ய பலத்த போட்டி நடந்து வருகிறது. ஒருபக்கம் சல்மான் கானை ஹீரோவாக்கி, இந்தபடத்தை எடுக்க தீவிர முயற்சி செய்து வருகிறார் ஃபராக். மற்றொரு பக்கம் டைரக்டர் ப்ரியதர்ஷன், அக்ஷய் குமாரை இந்தபடத்தில் நடிக்க வைக்கும் முயற்சியில் இருக்கிறார். இருவரில் யாருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கபோகிறது என்பது தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்திய ரயில்வேயில் இ டிக்கெட் (முன் பதிவு)

புதுதில்லி, ஜூலை.5: இந்திய ரயில்வே புதிய இ-டிக்கெட் சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த சேவையில் முகவர்களுக்கு இடமில்லை. தனிப்பட்ட நபர்கள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.

ஐஆர்சிடிசி இ-டிக்கெட் போல் இல்லாமல், இந்திய ரயில்வேயின் புதிய சேவையில் பயண முகவர்களுக்கும், வர்த்தக அமைப்புகளுக்கும் இடமில்லை. தனிப்பட்ட பயனாளிகள் மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர் என ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஐஆர்சிடிசி சேவையில் பயண முகவர்கள் டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

புதிய இ-டிக்கெட் சேவையின்படி, தனிப்பட்ட வாடிக்கையாளர்கள் முதல்முறை தாங்களாகவே பதிவுசெய்துகொண்டு இந்த சேவையைப் பெறலாம். பதிவுசெய்வதற்கு கட்டணம் எதுவும் இல்லை.

தொடக்கத்தில் ஒரு வாடிக்கையாளர் ஒரு மாதத்துக்கு அதிகபட்சம் 8 பரிமாற்றங்கள் வரை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார். தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளுக்கு 5 ரூபாயும், இதர வகுப்புகளுக்கு 10 ரூபாயும் சேவைக்கட்டணமாக வசூலிக்கப்படும்.

ஐஆர்சிடிசியில் தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளுக்கு 10 ரூபாயும், இதர வகுப்புகளுக்கு 20 ரூபாயும் சேவைக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்த புதிய சேவையை www.indianrailways.gov.in இணையதளத்தின் மூலம் பெறலாம்.

இந்த சேவை தொடங்கப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.,பகல் 12.30 மணியில் இருந்து இரவு 11.30 மணி வரை இந்த சேவையைப் பயன்படுத்தலாம்.

ஆந்திரத்தில் அதிர்ச்சி!! வெளிநாட்டு மாணவர்களுக்கு திருமணம்?

ஆந்திராவுக்கு மாணவர் விசாவில் வரும் வெளிநாட்டவர்கள், அங்குள்ள ஏழை பெண்களை திருமணம் செய்து கொண்டு, தாயகம் திரும்பும் போது, விவாகரத்து செய்து விட்டு செல்கின்றனர்.

ஐதராபாத்துக்கு வரும் சூடான், சோமாலியா உள்ளிட்ட நாட்டவர்கள், அங்குள்ள ஏழை இளம் பெண்களை திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணத்துக்கு முன்பாக, அந்த பெண் குடும்பத்தினரிடம் வெற்று தாளில் கையெழுத்து வாங்கி கொள்கின்றனர். ஏழை மைனர் பெண்களை திருமணம் செய்து வைக்க புரோக்கர்களும் அதிக அளவில் இங்கு உள்ளனர்.

இவர்கள், வெளிநாட்டவர்களிடம், 50 ஆயிரம் ரூபாய் வரை கமிஷன் பெற்றுக்கொண்டு, மைனர் பெண்களை திருமணம் செய்து வைக்கின்றனர். ஐதராபாத்தில் தங்கியிருக்கும் காலம் வரை இந்த பெண்களுடன் வாழும் வெளிநாட்டவர்கள், தாயகம் திரும்பும் போது இந்த பெண்களை விவாகரத்து செய்து விட்டு செல்கின்றனர்.ஆந்திர போலீசார் சமீபத்தில் இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு சூடான் நாட்டு மாணவர்கள், புரோக்கர்கள் உட்பட, ஆறு பேரை கைது செய்தனர். சமீபத்தில் இது போன்று ஏழு சம்பவங்கள் நடந்துள்ளன.

மைனர் பெண்களை திருமணம் செய்து கொள்ளும் வெளிநாட்டு நபர்கள், தங்கள் நண்பர்களுடன் இந்த பெண்களை பாலியல் ரீதியாக பகிர்ந்து கொள்ளும் கொடுமையும் நடக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன், இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்ட வெளிநாட்டு நபர், தன் நண்பருடன் சேர்ந்து பாலியல் கொடுமை செய்ததால், அப்பெண், அவர்களிடமிருந்து தப்பி வந்து போலீசில் சரணடைந்தார்.

ஐதராபாத் துணை போலீஸ் கமிஷனர் வினித் பிரிஜ்லால் இது குறித்து குறிப்பிடுகையில், "வெளிநாட்டில் பெரிய செல்வந்தர் எனக்கூறி ஏழை இளம் பெண்களை திருமணம் செய்து கொண்டு அவர்களை குறுகிய காலத்தில் விவாகரத்து செய்யும் நிகழ்ச்சி அதிகளவில் நடக்கிறது.

Monday, July 4, 2011

"நர" பலிக்கு சிறுவன் பலி, கோயிலை சூறையாடிய பொதுமக்கள் !

தூத்துக்குடி: தூத்துக்குடி ஜோதிபாசுநகரை சேர்ந்தவர் வேல்ராஜ். மளிகை கடை வைத்துள்ளார். அங்குள்ள கருமாரியம்மன் கோவில் நிர்வாகியாகவும் உள்ளார். இவரது மகன் குணா என்ற குணசேகர் (வயது 8). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம்வகுப்பு படித்து வந்தான்.

நேற்று மாலை வழக்கம் போல் டீயூசனுக்கு செல்வதாக கூறி சென்றான். இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவனது பெற்றோர் டியூசன் சென்டருக்கு சென்று விசாரித்தனர். டியூசன் ஆசிரியர் குணசேகர் டியூசனுக்கு வரவில்லை என்று கூறியதால் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து குணசேகரை தேடும் பணியில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் தாளமுத்து நகர் போலீசில் வேல்ராஜ் புகார் செய்தார். போலீசாரும் வேல்ராஜை தேட ஆரம்பித்தனர்.

இந்தநிலையில் வேல்ராஜ் வீட்டின் அருகே உள்ள காளி கோவில் கிணற்றில் சிறுவன் பிணம் கிடப்பதாக தகவல் கிடைத்தது. தகவல் அறிந்ததும் குணசேகரின் பெற்றோர், உறவினர்கள், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோவில் கிணற்றை பார்வையிட்டனர். அப்போது கிணற்றில் இறந்து கிடந்தது குணசேகர் என்பது தெரியவந்தது.

பின்னர் கிணற்றில் இருந்து உடல் மீட்கப்பட்டு பார்த்த போது குணசேகர் கையில் வெட்டுக்காயம் இருந்தது. இதனால் குணசேகர் நரபலி கொடுக்கப்பட்டிருப்பதாக கருதி அப்பகுதி பொதுமக்கள் காளி கோவிலுள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர்.

மேலும் கோவிலுக்கு தீயும் வைத்தனர். . உடனே போலீசார் தூத்துக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். வேல்ராஜ் நிர்வகித்து வரும் கருமாரியம்மன் கோவிலில் கடந்த வாரம் கும்பாபிஷேகம் நடந்தது. இது தொடர்பாக அவருக்கும், அவரது வீட்டருகே காளி கோவில் வைத்திருக்கும் ஆறுமுகம் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஆறுமுகம், குணசேகரை நரபலி கொடுத்திருக்கலாம் என கருதி பொதுமக்கள் கோவிலை சூறையாடினர். காளி கோவில் நிர்வாகி ஆறுமுகம், அவரது மனைவி நாச்சியார், மகன்கள் லட்சுமணபாண்டியன்(வயது 20), ராமர்பாண்டியன்(20), திருமூர்த்தி(18) ஆகிய 5 பேரையும் சரமாரி தாக்கினர். உடனே போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கோவிலை சூறையாடிய பொதுமக்களை போலீசார் தடுத்ததனர். எனினும் நிலைமை கட்டுக்குள் வராததால் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். நள்ளிரவு 1மணியளவில் நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு ஏ.எஸ்.பி. சோனல் சந்திரா விரைந்து வந்து விசாரணை நடத்தினார். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இன்று காலை பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குணசேகர் நரபலி கொடுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு காரணமான ஆறுமுகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். குணசேகர் சாவு குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

ஆசியில் அனுமதி மறுப்பு! இந்தியருக்கு!?

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓட்டலில், தலைப்பாகை கழற்ற மறுத்த இந்தியரை, ஓட்டலுக்குள் அனுமதிக்க மறுத்த விஷயம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்தியரிடம் மன்னிப்பு கேட்க ஓட்டல் நிர்வாகமும் முயற்சித்து வருகிறது.

ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் நகரில் உள்ளது, ராயல் இங்கிலீஷ் ஓட்டல். இந்த ஓட்டலுக்கு சீக்கிய மதத்தைச் சேர்ந்த, ஆஸ்திரேலியா வாழ் இந்தியர் ஒருவர், தலைப்பாகை அணிந்து சென்றார். ஓட்டலின் வாசலில் காவலுக்கு நின்றவர், இவரை தடுத்து, தலைப்பாகையை கழற்ற வலியுறுத்தினார். இதற்கு இந்தியர் மறுக்கவே, ஓட்டலுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இச்சம்பவம் ஆஸ்திரேலியா வாழ் இந்தியர்கள் இடையே, பலத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அந்த ஓட்டலின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "பாதுகாப்புப் பணிக்கு வசதியாக தலைப்பாகையை கழற்ற வேண்டும் என்பது ஓட்டலின் கொள்கை. இந்த குறிப்பிட்ட சம்பவத்தில், தலைப்பாகை அணிந்து வந்தவரை கழற்றும்படி வலியுறுத்தி இருக்கக் கூடாது. மன்னிப்பு கேட்பதற்காக, பாதிக்கப்பட்வரை தேடி வருகிறோம். ஓட்டலின் கொள்கையை சரியான முறையில் கையாள்வது பற்றி, காவலர்களுக்கு மீண்டும் அறிவுறுத்தி வருகிறோம்' என்றார்.ஆஸ்திரேலியாவின் ஏ.பி.சி., ரேடியோவை தொடர்பு கொண்டு, ஒருவர், இப்புகாரை தெரிவித்த பின்னர் இச்சம்பவம் பலத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதுகுறித்து, இந்திய வம்சாவளி மக்களுக்கான, உலக அமைப்புத் தலைவர் உமேஷ் சந்திரன் பிரிஸ்பேனில் கூறுகையில், "சீக்கிய மதத்தினர் தலைப்பாகை அணிவது என்பது மரியாதைக்குரியது. இதுபோன்ற சம்பவம் இதுவரை நடந்தது இல்லை. போலீஸ் துறையில் தலைப்பாகைக்கு சிறப்பான மரியாதை அளிக்கப்படுகிறது. போலீஸ் பணியிலிருக்கும் இந்தியர் கூட தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படுகிறது' என்றார்.

Sunday, July 3, 2011

துபாயில் வேலை வாய்ப்பு!

கீழ் காணும் பணிகளுக்கு துபையில் உள்ள பிரபல நிறுவனத்துக்கு நேர்முக தேர்வு சென்னையில் நடைபெற உள்ளது தகுதியுடையோர் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுகிறோம்.

INTERVIEW FOR THE FOLLOWING CATEGORIES ON 04.07.2011 AT 9 AM FOR DUBAI

FACILITIES ENGINEER
FACILITIES SUPERVISOR
SENIOR SUPERVISOR - MEP
SUPERVISOR - HVAC
SUPERVISOR - MECHANICAL
SUPERVISOR - PLUMBING
SUPERVISOR - ELECTRICAL
SUPERVISOR - ELECTRONICS
BMS OPERATOR
SENIOR HVAC TECHNICIAN
HVAC TECHNICIAN
AC TECHNICIAN
ASST. AC TECHNICIAN
SR. TECHNICIAN - MECHANICAL
TECHNICIAN - MECHANICAL
TECHNICIAN - ELECTRONICS
TECHNICIAN - APPLIANCE
SENIOR TECHNICIAN - ELECTRICAL
TECHNICIAN - ELECTRICAL
ELECTRICIAN
ASST. TECHNICIAN - ELECTRICAL
PLUMBING SUPERVISOR
SR. PLUMBER
PLUMBER
MASON TEAM LEADER
MASON
CARPENTER
PAINTER
BMS HELPER
SENIOR CHEMICAL TECHNICIANS
ITI HOLDERS (FRESHERS IN ELECT & A/C) - TECHNICAL TRAINEES

OVERSEAS MANPOWER CORPORATION LTD.,
48, DR. MUTHULAKSHMI SALAI,
ADYAR, CHENNAI 600020.
குறிப்பு : நிறுவனத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டியது அவசியம்., உங்கள் கடமை.

முட்டை பிரியரா நீங்கள் ,....

நீங்கள் முட்டையை விரும்பி சாப்பிடுபவரா? அப்படியென்றால், காலையில் அதை உணவாக எடுத்துக்கொள்ளுங்கள்; உடல் எடை கூடிவிடும் என்று புலம்ப வேண்டாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழக உணவுத்துறையின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

"பொதுவாக காலை உணவுடன் முட்டை சேர்த்துக்கொள்வதால் நம் உடலுக்கு அதிக அளவிலான புரோட்டீன் கிடைக்கிறது. அது, நம் உடலின் சக்தியை நீட்டிக்கச் செய்வதோடு, நீண்ட நேரத்திற்கு வயிறு நிறைந்திருப்பது போன்ற உணர்வை தருகிறது.

அதனால், மதிய உணவு மற்றும் மாலை சிற்றுண்டி நேரத்தில் கலோரிகள் அதிகம் நிறைந்த உணவை நாம் சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்படாது. இந்த வழக்கத்தை கடைபிடிப்பதன் மூலம் நம் உடலில் சேரும் கலோரிகளின் அளவு குறைக்கப்படும்.

இது தொடரும் பட்சத்தில் உடலில் அதிக அளவில் கொழுப்பு சேர்வது, அதாவது எடை அதிகரிப்பது தவிர்க்கப்படும்'' என்றனர். மேலும் அவர்கள் இதுபற்றி கூறும்போது, "நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் உயர்தர புரோட்டீன் சேர்ந்தால் ஒட்டுமொத்த உடல் நலனுக்குமே நல்லது.

குறிப்பாக, புரோட்டீன் அதிகம் நிறைந்த முட்டையை காலை உணவில் சேர்க்கலாம். இரண்டு விதமான அமெரிக்க உணவு முறையை ஆய்வுக்கு உட்படுத்தியபோது இந்த தகவல் எங்களுக்கு தெரியவந்தது'' என்று தெரிவித்தனர்.

கவர்ச்சிகளை (ஆபாசம்) கண்டுகொள்ளுமா கவர்மென்ட்

கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து, படம் எடுத்தால், தியேட்டரில் 15 நாட்கள் ஓடினால் போதும், கணிசமான பணம் பார்த்துவிடலாம் என்ற நினைப்பில், "ஏடா கூட தலைப்புகளுடன் கவர்ச்சிப் படங்கள் எடுக்க களமிறங்கியுள்ளனர்.

கணவனின் தம்பியை விரும்பும், அண்ணியை மையமாக வைத்து கடந்த வருடம், "உயிர் படமும், மாமனாரை விரும்பும் மருமகளை மையமாக வைத்து, "சிந்து சமவெளி, படமும், இளம்பெண்ணை பலான நோக்கத்தில் இம்சிக்கும், "மிருகம் படங்களும் வந்தன. இப்படங்கள் சர்ச்சைகளில் சிக்கினாலும், தயாரிப்பாளர்களை நஷ்டப்படாமல் காப்பாற்றி விட்டது என்று கோலிவுட்டில் அப்போது பேசப்பட்டது. ஆனாலும், இடையில் சில மாதங்கள் கவர்ச்சிபடங்கள் ஏதும் வெளிவரவில்லை.

தற்போது, நடிகைகளின் கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன், "சாந்தி அப்புறம் நித்யா, இளமை காதல், அரங்கேற்ற நாள், ஒரு சந்திப்பில், அநாகரிகம் படமும், பல வருடங்களுக்கு முன் மலையாளத்தில் ஜெயபாரதி நடித்த, "ரதிநிர்வேதம் படம், தற்போது, ஸ்வேதா மேனன் நடிப்பில் மீண்டும் மலையாளத்திலும், தமிழிலும் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இப்படங்களின் சுவர் விளம்பரங்களில், அரை குறை ஆடைகளுடன் நடிகைகளின் படங்கள் இடம்பெற்றுள்ளன. போலீசாரின் நெருக்கடியை மீறி, சென்னையில் பல இடங்களில் இப்படங்களின் ஆபாச போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. பத்திரிகைகளிலும் கவர்ச்சிகரமாக விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.

சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் இப்படிப்பட்ட படங்களை சென்சார் போர்டு எப்படி அனுமதிக்கிறது, என்று விசாரித்த போது, "சென்சாருக்கு வரும் படங்களில், சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் காட்சிகள், வசனங்கள் இருந்தால் தயவு, தாட்சண்யமின்றி வெட்டி விடுவோம். இப்படிப்பட்ட, பல படங்கள் மற்ற மாநிலங்களில் சென்சார் செய்யப்பட்டு வந்து விடுகின்றன. இதனால், படம் வெளியாகும் வரை, இப்படங்கள் குறித்து ஏதும் நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. தியேட்டர்களுக்கு ரசிகர்களை இழுப்பதற்காக இப்படங்களுக்கு தயாரிப்பாளர்கள், நடிகைகளின்,"கவர்ச்சி படங்களை போட்டு, விளம்பரம் செய்யும் நிலையும் உள்ளது. (இதில் சென்சார் போர்ட் வேறு) அரசும், போலீசாரும் இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தி மு க, குடும்ப அரசியல் கட்சியா? விளக்கம் தரும் அழகிரி!?

மதுரை முன்னாள் துணைமேயரும், மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. பொருளாளருமான மிசா.எம்.பாண்டியன்- பாண்டி செல்வி தம்பதியரின் மகள் பா.பாண்டிராணிக்கும், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர்- கிரகலெட்சுமி தம்பதியரின் மகன் தங்க அரவிந்த்துக்கும் இன்று காலை மதுரை சத்திய சாய் நகரில் உள்ள தயா மகாலில் திருமணம் நடந்தது.

திருமணத்தை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நடத்தி வைத்தார்., விழாவில் அவர் பேசும்போது, ’’தமிழ்நாட்டிலேயே மதுரை மாவட்டத்திற்குதான் கடந்த தி.மு.க. ஆட்சியில் முதியோர் உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் அதிக அளவில் செய்யப்பட்டு உள்ளது. அப்படி இருந்தும் மதுரை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் போய்விட்டது.

எனது கட்சிக்காரர்களுக்குதான் நிறைய உதவிகள் செய்து இருக்கிறேன். கடந்த தேர்தலில் தோல்வி என்றதும் மாற்றுக்கட்சிகாரர்களை விட நமது கட்சிக்காரர்கள் (தி.மு.க.) குடும்ப அரசியல் செய்வதாக விமர்சனம் செய்கிறார்கள்.

இது எனது மனதுக்கு வேதனை அளிக்கிறது. நமது கட்சிக்காரர்களின் குடும்ப நிகழ்ச்சியில் எனது குடும்பத்தினர் பெயரையோ படத்தையோ இனி போட வேண்டாம்., அப்படி போட நினைத்தால் பேரறிஞர் அண்ணா படம், தலைவர் கருணாநிதி ஆகியோரின் பெயர் படத்தை மட்டும் போட்டால் போதும். மனப்பூர்வமாக என் படத்தையோ என் பெயரையோ போட நினைத்தால் மட்டும் போடுங்கள்.

என் குடும்பத்தினரின் படத்தையோ பெயரையோ போடவேண்டாம். அவ்வாறு செய்தால் அண்ணாவின் மீது ஆணையிட்டு சொல்கிறேன் நான் அந்த நிகழ்ச்சிக்கு வரமாட்டேன். கட்சியில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக இருந்து கட்சி வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்’’என்று பேசினார்.

யான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெருக!!

மாஸ்கோ : வாத்சாயனர் எழுதிய, "காமசூத்ரா' முதன் முறையாக, ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்படுகிறது.

கி.பி. முதலாம் நூற்றாண்டுக்கும், ஆறாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர் வாத்சாயனர். இவர் எழுதிய,"காமசூத்ரா' என்ற நூல், இந்தியர்களின் புகழ் பெற்ற பாலியல் நூலாக விளங்குகிறது. இந்நூல், பல்வேறு உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

தற்போது, முதன் முறையாக, ரஷ்யாவில் பேசப்படும், "உட்மரூட்' மொழியில் மொழிபெயர்க்கப்படுகிறது. இதை புகழ்பெற்ற கவிஞரும், திரைப்பட எழுத்தாளருமான, "பயோட் சாக்காரோ' மொழிபெயர்க்கிறார். ரஷ்யாவில், உட்மரூட் மொழியை ஐந்து லட்சம் பேர் பேசுகின்றனர்.

Saturday, July 2, 2011

டைட்டானிக்கின் இன்னுமொரு ஆச்சர்யம்!!

டைட்டானிக் கப்பல் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. "மிதக்கும் சொர்க்கம்' என, வர்ணிக்கப்பட்ட இந்த ஆடம்பர சொகுசு கப்பல், 1912ல், தன் முதல் பயணத்தை துவக்கியது., மிகப் பெரிய செல்வந்தர்கள், போட்டி போட்டு, டிக்கெட் வாங்கி, இந்த கப்பலில் பயணித்தனர். வடக்கு அட்லாண்டிக் கடல் பகுதியில் சென்ற போது, கடலில் உருவாகியிருந்த பனிக் கட்டி பாறையில் மோதிய இந்த கப்பல், படிப்படியாக, கடலுக்குள் மூழ்கியது. இந்த சம்பவத்தில் ஏராளமானோர், உயிருடன் ஜல சமாதி ஆயினர்.

இந்த கப்பலின் கேப்டனாக இருந்தவர் எட்வர்ட் ஜான் ஸ்மித்; விபத்தில், இவரும் பலியாகி விட்டார். இவர் பயன்படுத்திய அழகான சிகரெட் பெட்டி ஒன்று, சமீபத்தில் ஏலத்துக்கு வந்தது. அரிய வகை மரக் கட்டையில் வடிவமைக்கப்பட்ட இந்த பெட்டியில், நாற்பது சிகரெட்டுகளை வைக்க முடியும். பெட்டியின் மேலே, டைட்டானிக் கப்பலை வடிவமைத்த, கப்பல் நிறுவனத்தின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. கேப்டன் எட்வர்ட் ஜான் ஸ்மித் பயன்படுத்திய பெட்டி என்பதற்கு ஆதாரமாக, இ.எம்.எஸ்., என்ற ஆங்கில எழுத்துக்கள் இதில் பொறிக்கப்பட்டுள்ளன.

இந்த பெட்டி, பிரிட்டனைச் சேர்ந்த ஹிலாரி மீ என்ற பெண்ணின் வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி ஹிலாரி கூறுகையில், "கேப்டன் எட்வர்டின் மனைவி சாராவிடம் இருந்த இந்த பெட்டியை, என் தந்தைக்கு, யாரோ பரிசாக கொடுத்துள்ளனர்; மற்றபடி, இந்த பெட்டிக்கும், டைட்டானிக் கப்பலுக்கும் உள்ள தொடர்பு பற்றி எனக்கு எதுவும் தெரியாது...' என்றார்.

நூறு ஆண்டுகளுக்கு முன், கடலுக்குள் புதைந்து போன டைட்டானிக் கப்பலுடன் தொடர்புடைய, ஒவ்வொரு பொருளுக்குமே, பெரிய அளவில் இன்னும் கிராக்கி இருப்பது ஆச்சரியமான விஷயம் தான்.

டாஸ்மார்க் கடையில் படத்தை கண்டு பயந்த கழக கண்மணிகள்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் பார்களில் விற்கப்பட்ட தண்ணீர் பாக்கெட்டுகளில் முதல்வர் ஜெயலலிதா படத்துடன் சிவகங்கை மாவட்ட கழகம், அம்மா என்ற பெயர் அச்சிடப்பட்டிருந்தது. இதைப்பார்த்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்த தகவல் காட்டுத்தீ போல் பரவியது.

இதையடுத்து உஷாரான கட்சியினர் போலீசாரிடம் கூறி டாஸ்மாக் பார்களில் உள்ள இத்தகைய தண்ணீர் பாக்கெட்டுகளை உடனே அப்புறப்படுத்தும்படி கேட்டுக் கொண்டனர். தண்ணீர் பாக்கெட்டுகளில் சிவகங்கை மாவட்ட கழகம் என அச்சடிக்கப்பட்டதால் அங்குள்ள பார்களிலும் இந்த பாக்கெட்டுகள் உள்ளதா எனவும் கட்சியினரே விசாரித்தனர்.

தமிழ்முரசில் நேற்று வெளியான இச்செய்தியைப் பார்த்ததும் இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தும்படி ராமநாதபுரம் டிஐஜி சந்தீப்மித்தலுக்கு காவல்துறை தலைமை உத்தரவிட்டது., அவரது உத்தரவுப்படி காரைக்குடி டிஎஸ்பி மங்களேஸ்வரன் விசாரணை நடத்தினார். சிவகங்கை மாவட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. இதனால் அதிமுகவினர் கலக்கமடைந்தனர்.

தென் மாவட்டங்களில் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார சுற்றுப் பயணத்தின்போது வாஷ்கி மினரல்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து 2 லட்சம் பாக்கெட்டுகள் கட்சியினரால் வாங்கப்பட்டு வினியோகிக்கப்பட்டுள்ளது. மீதமிருந்த சில மூட்டைகளை டாஸ்மாக் கடைகளுக்கு விற்றுள்ளனர் என விசாரணையில் தெரியவந்தது.

கட்சிக்குள் உள்ள கோஷ்டி பிரச்னையில் யாரையாவது, மேலிடத்தில் மாட்டிவிட்டு பழிவாங்க வேண்டும் என்பதற்காக, திட்டமிட்டு சதிச்செயலில் யாரும் ஈடுபட்டனரா என அதிமுக முக்கிய நிர்வாகிகள் மாறி, மாறி ரகசிய விசாரணை நடத்தி வருவதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அரபு நாடுகளை தொடர்ந்து லண்டனிலும் அறிமுகம்

லண்டன் : ஏடிஏம்மில் பணம் பெற்றுவந்த காலம் மலையேறி போய், தற்போது தங்கம் பெறும் நிலை வந்து விட்டது என்று கூறினால் அது மிகையல்ல, இதற்கு சான்றாக, இங்கிலாந்து ‌தலைநகர் லண்‌டனில், ஏ.டி.எம்மில் தங்கத்தை வழங்கும் மிஷின் நிறுவப்பட்டுள்ளது.

எந்த நாளும், எந்தநேரத்திலும் தங்குதடையின்றி தங்கத்தை நாணயங்களாகவும், கட்டிகளாகவும் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது, இங்கிலாந்தில் வைக்கப்பட்டுள்ள முதல் கோல்டு வெண்டிங் மிஷின் என்பது குறிப்பிடத்தக்கது.

'கோல்டு டு கோ' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மெஷின், வெஸ்ட்பீல்டு ஷாப்பிங் மாலி்ல் வைக்கப்பட்டுள்ளது. வலுவான ஸ்டீல் மற்றும் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த மெஷின் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மெஷினின் மூலம், 1 கிராம் தங்க நாணயம் முதல் கால் கிலோ (அதாவது 250 கிராம்) தங்க கட்டிகளை வரை பெற்றுக்கொள்ளலாம். 1 கிராம் தங்க நாணயம் 40 பவுண்டுகளுக்கும், 250 கிராம் தங்க கட்டி 10,250 பவுண்டுகளாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பவுண்டுகளை இதில் நாம் உட்செலுத்தி, தங்கமாக நாம் அதை வெளிக்கொணரலாம்.

பவுண்டுகளை தவிர்த்து, கிரெடி‌ட் கார்டுகளும் செலுத்தி தங்கத்தை பெற்றுக் கொள்ளலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. எக்ஸ் ஓரியண்டி லக்ஸ் என்ற ஜெர்மனி நிறுவனம், இந்த கோல்டு டு கோ மெஷின்களை உற்பத்தி செய்து அதை நிர்வகித்து வருகிறது. இந்த மெஷின்கள் ஏற்கனவே, ஐரோப்பா, வடஅமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பள்ளி குழந்தைகளை பாழாக்கும் பாட்டாளி மக்கள் கட்சி, ஓர் அதிர்ச்சி !

பல்லடம்: பள்ளி மாணவ, மாணவியரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்த முயற்சி செய்த பா.ம.க.,வினரை, பல்லடம் போலீசார் கடுமையாக எச்சரித்தனர். இதையடுத்து, மாணவ, மாணவியரை அவசரம், அவசரமாக பள்ளிக்கு வேன், காரில் ஏற்றிச் சென்றனர்.

"சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த வேண்டும்; தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் அதிகம் வசூலிப்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்லடம் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பா.ம.க., வினர் அறிவித்திருந்தனர். நேற்று காலை 9.30 மணிக்கே போலீசார் தாலுகா அலுவலகம் முன், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 10.05 மணிக்கு பல்லடம் நகர பா.ம.க., செயலாளர் கோவிந்தராஜ், ஒன்றிய செயலாளர் புரு÷ஷாத்தமன் உட்பட 30 பேர் கட்சிக் கொடிகளுடன், தாலுகா அலுவலகம் முன் திரண்டனர். அப்போது, ஒரு வேனில் இருந்த பள்ளி மாணவ, மாணவியர் சிலரை இறக்கி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்த முயற்சி செய்தனர். இதைப்பார்த்த இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

பா.ம.க., வினரை அழைத்த இன்ஸ்பெக்டர், "யாரைக்கேட்டு பள்ளிக் குழந்தைகளை ஆர்ப்பாட்டத்துக்கு அழைத்து வந்தீர்கள். குழந்தைகளை ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்து வந்தது அவர்களின் பெற்றோர்களுக்கு தெரியுமா? அவர்களின் பள்ளி ஆசிரியர்களுக்கு தெரியுமா? இது தவறான நடைமுறை. உடனடியாக, பள்ளி குழந்தைகளை வேனில் ஏற்றி பள்ளிக்கு அனுப்புங்கள்,' என எச்சரித்தார்.

இதைத்தொடர்ந்து ஒரு வேனிலும், காரிலும் மாணவ, மாணவியர் அவசரம், அவசரமாக ஏற்றப்பட்டு, அவர்கள் படிக்கும் பல்லடம் டி.இ.எல்.சி., நடுநிலைப்பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். இதன் பின்பே பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதித்தனர். ஆர்ப்பாட்டத்தில், பா.ம.க., மாநில துணை பொது செயலாளர் வடிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

Friday, July 1, 2011

கேரள அரசை அடிபனிய வைக்குமா மத்திய அரசு?

சென்னை,ஜூலை.2 - முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சிப்பதை தடுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் உண்மைக்கு மாறான பொய் செய்திகளை பரப்புவதையே கேரள அரசு தொடர்ந்து செய்து வருகிறது. பென்னி குயிக் கட்டிய அணையை சேதப்படுத்த முயன்றாலோ, கேரளத்துக்கு செல்கின்ற அனைத்து பாதைகளையும் மறித்து தமிழகம் பொருளாதார முற்றுகை போட நேரிடும் என்று கேரள அரசுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுக்க வேண்டும். புதிய அணையை கேரள அரசு அமைக்குமானால் பள்ளத்தில் அமையப் போகும் அந்த அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கவே முடியாமல் போய் விடும்.

சுப்ரீம் கோர்ட் அமைத்த 2 நிபுணர் குழுக்களும் முல்லைப் பெரியாறு அமை வலுவாக உள்ளது என்று திட்டவட்டமாக அறிக்கை சமர்ப்பித்துள்ளன. இந்தியாவின் ஒருமைப்பாட்டில் உண்மையிலேயே மத்திய அரசுக்கு அக்கறை இருக்குமானால் கேரள அரசின் அக்கிரமமான போக்கை தடுத்தாக வேண்டும். கேரள அரசு தமிழகத்துக்கு விரோதமாக செயல்பட முனைந்தால் ம.தி.மு.க. நேரடியாக கிளர்ச்சியில் ஈடுபடும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

ஒருத்தர் நாட்டை அடகு வைத்தார், மற்றொருவர் விற்கப்போகிறார்!!

தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி, பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது : கேள்வி: 2006 ம் ஆண்டு முதல் 2011 ம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியின் நிர்வாக திறமையின்மை காரணமாக தமிழ்நாட்டின் கடன் சுமை ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்து விட்டதாக முதல் அமைச்சர் ஜெயலலிதா குற்றஞ் சாட்டியிருக்கிறாரே?

பதில்: 2006 ம் ஆண்டு தி.மு.க. பொறுப்புக்கு வருவதற்கு முன்பாகவே, அதாவது 31 3 2006 அன்றே, தமிழக அரசின் மொத்தக்கடன் பொறுப்பு ரூபாய் 57 ஆயிரத்து 457 கோடி ரூபாயாகும்.

அதாவது அ.தி.மு.க. ஆட்சியிலேயே அந்த அளவிற்கு கடன் சுமையை வைத்திருந்தார்கள். அந்த கடன் தொகை தான் தற்போது ஒரு லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இன்னும் சொல்ல வேண்டுமேயானால் ஜெயலலிதா ஆட்சியிலே இருந்த போது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 22.29 சதவிகிதம் அளவிற்கு கடன் சுமை வைத்திருந்தார். தி.மு.க. ஆட்சியில் கடன் சுமை மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 19.58 சதவிகிதம் தான்.

தி.மு.க. அரசின் மீது ஜெயலலிதா இந்த அளவிற்கு குறை கூறிய போதிலும், இந்தியாவின் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி 9 4 2011 அன்று சென்னையிலே கூறும்போது, "இந்தியாவில் நிதி ஒழுங்கையும், நிலைத்தன்மையையும் திருப்திகரமாக கடைப்பிடித்து வரும் ஒரு சில மாநிலங்களுள் தமிழகமும் ஒன்றாகும். தமிழக அரசின் கடன் அளவு, பரிந்துரைக்கப்பட்ட அளவை விட மிகவும் குறைவாகவே உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து ஒரு நாள் கூட தன் கணக்கில் பணம் இல்லாமல், கூடுதல் வரைவுத் தொகையை ஓவர்டிராப்ட்டை தமிழக அரசு பெற்றதில்லை'' என்று கழக அரசின் நிதி மேலாண்மை குறித்துப் பாராட்டி சொல்லியிருக்கிறார்., இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கையில் கூறியுள்ளார்.

# இலவசம் கொடுத்து கொடுத்து நாட்டை ஊனம் ஆக்கப்போகிறார்கள், மாறி மாறி குற்றம் சொல்வதே பிழைப்பு ஆகி விட்டது. ஆட்சியாளர்களின் ஊழலும் நிர்வாக திறமை இன்மையே கரணம். மக்கள் ஏமாந்தால் தலையில் மிளகாய் கூட அரைத்து விட்டு அதிலும் ஊழல் பண்ணிவிடுவார்கள். #

முறைகேடுடன் மூழ்கி கலைக்கப்பட்டது கிரிக்கெட் வாரியம்!

கொழும்பு : இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைக்கப்படடுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை சேர்ந்தவர்கள் அரசியல் தொடர்பை விட்டுவிடுமாறு ஐ.சி.சி., கேட்டு கொண்டது.

ஆனால் தீடிரென இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டுள்ளதாகவும், உபலி தர்மதாசா தலைமையில் இடைக்கால குழு ஒன்று அமைக்கப்படுவதாக கூறியுள்ளது.

மேலும் புதிதாக கிரிக்கெட் வாரியம் அமையும் போது இந்த குழு தானாக கலைக்கப்படும் என கூறியுள்ளது. ஆனால் வாரியம் கலைக்கப்பட்டதற்கான எந்த வித காரணத்தையும் கூறவில்லை. தற்போது கலைக்கப்பட்டுள்ளள கிரிக்கெட் வாரியம் மீது நிதி முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!