Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, June 28, 2011

உடலுக்கு உறுதியையும் பாதுகாப்பையும் தரும் கொய்யா!!

குறைந்த விலையில் நிறைந்த தரம் என்றால் அதற்கு எடுத்துக்காட்டு கொய்யாப்பழம். அதன் சத்துக்களும், மருத்துவக்குணங்களும் வியப்பானவை.

* ஆரஞ்சை விட அதிக அளவில் வைட்டமின் `சி' உள்ள பழம் கொய்யா. இந்த பழத்தில் வைட்டமின் ஏ, பி ஆகிய சத்துக்களும் அதிகமாக காணப்படுகின்றன. வாழைப்பழத்தில் உள்ளதை விட கூடுதலாக பொட்டாசியம் சத்தும் உள்ளது.

* கொய்யாக்காய் உடலுக்கு உறுதியையும், தோலுக்கு பாதுகாப்பையும் தருகிறது.

* தோல் நோய்களை நீக்கி, மென்மையான சருமத்தைப் பெறவும், சருமம் பளிச்சிடவும் கொய்யா உதவுகிறது.

* தோலில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கி, இழந்த இளமைப் பொலிவை மீட்டுத்தருகிறது.

* அதிக உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. மலச்சிக்கலைத் தீர்க்கிறது.

தினம் ஆப்பில் : மருத்துவரிடம் செல்லவேண்டாம்.

தினம் செர்ரி : மருத்துவமனை செல்லவேண்டாம்.

பெண் போ ( லி ) லீஸ் !!!

மதுரையில் ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் போலீஸ் உடையில் இளம்பெண் ஒருவர் பொதுமக்களிடம் இன்று மிரட்டி வசூல் செய்துகொண்டிந்தார். அப்போது அந்த பக்கமாக வந்த அண்ணாநகர் காவல் நிலைய போலீஸுக்கு அந்த இளம்பெண்ணின் நடவடிக்கை சந்தேகத்தை கொடுத்தது.

அவரிடம் எந்த காவல் நிலையத்தில் பணிபுரிகிறீர்கள் என்று கேட்க, முன்னுக்குபின் முரணான பதிலைச்சொல்ல அவரை விசாரணைக்கு அழைத்துச்சென்றன., அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஏ.சி. வெள்ளைத்துறை தலைமையிலான டீம் தனி அறையில் வைத்து அந்த இளம்பெண்ணிடம் விசாரணை செய்தது.

விசாரணையில் தனது பெயர் ராணி என்றும், தனக்கு 18வயது ஆகிறது எனறும் குறிப்பிட்டுள்ளார்., அவர் மேலும், ‘’எனக்கு 10 போலீஸ் அதிகாரிகளூடன் தொடர்பு இருக்கிறது. அவர்கள் எனக்கு பண உதவி செய்து வந்தார்கள். தற்போது அந்த அதிகாரிகளால் பாதிக்கப்பட்டிருக்கிறேன்.

நான் கடந்த ஒரு வருடமாக போலீஸ் உடையில் பொதுமக்களை ஏமாற்றி வருகிறேன். எனக்கு அந்த 10 அதிகாரிகள் ஆதரவாக இருக்கின்றனர்’’ என்று அதிர்ச்சிகரமான வாக்குமூலம் அளித்துள்ளார்., ராணி சொல்வது உண்மைதானா என்று தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆஸியில், சில்மிசத்தில் சிக்கிக்கொண்ட இந்தியர்!!

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மூன்று இளம்பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இந்தியர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.

சிவகுமார் சிதம்பரம், 40, கடந்த 1995ம் ஆண்டில், ஆஸ்திரேலியாவுக்குச் சென்றார். இவர் பல்வேறு சந்தர்ப்பங்களில், 10 வயது மற்றும் ஏழு வயது அக்கா, தங்கைகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும், மெல்போர்ன் நகரில் தாயை சந்திக்க, பஸ்சில் சென்ற பெண்ணிடம் இவர் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்பட்டது.

இந்து மற்றும் கிறிஸ்துவ மதம் சார்ந்த குழுக்கள் மூலம் இப்பெண்களின் அறிமுகம் இவருக்கு கிடைத்ததாகத் தெரிகிறது.இது தொடர்பான வழக்கு, விக்டோரியா கோர்ட்டில், விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவகுமாரின் வக்கீல் டேவிட் ரேக், "சிவகுமார் இந்து மதத்தில் பற்று கொண்டிருப்பவர்; அவர் தவறு செய்யவில்லை' என்றார். ஆனால், அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, குற்றவாளி என கோர்ட் அறிவித்தது.

# காசு பார்க்க வந்துவிட்டு கட்சயை (ஜட்டி) அவிழ்த்தால் ,....

Monday, June 27, 2011

சுய மரியாதை சித்தாந்தம் பேசும் ஷ்ரேயா!

மதுபழக்கத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே போய்கிறது. குறிப்பாக இப்போது பெண்களும் அதிகளவில் குடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

மதுபழக்கத்தை ஒழிக்க இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்து பல்வேறு முயற்சிகளை எடுத்து கொண்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் மகாராஷ்டிரா அரசு 25வயதுக்கு உட்பட்டவர்கள் குடிக்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் இதுபற்றி விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் நடிகை ஸ்ரேயா.

இதுகுறித்து தனது டுவிட்டர் இணையதளத்தில் அவர் கூறியிருப்பவதாது, 18வயதில் ஒருவருக்கு ஓட்டுபோடும் உரிமை, திருமணம் செய்யும் உரிமை வந்துவிடுகிறது. அப்படி இருக்கையில் தண்ணியடிக்க மட்டும் 25வயசா...? என்ன ஒரு முட்டாள்தனம் என்று கூறியிருக்கிறார். ஸ்ரேயாவின் இந்த பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் இந்தபிரச்சனை பூதாகரமாக வெடிக்கவும் அதற்கு ஸ்ரேயா மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, தனிமனிதன் ஒருவன் சுயமாக முடிவெடுக்க, அவனுக்கு முழுஅதிகாரமும் உண்டு. எந்த வயதில் எதை செய்யலாம், செய்யக்கூடாது என்று அவனுக்கு தெரியும். இதைத்தான் நான் கூறினேனே தவிர, மற்றபடி குடிபழக்கத்தை பற்றி நான் எதுவும் வாதம் செய்யவில்லை. இனி இதுபற்றி நான் ‌எதுவும் பேசவிரும்பவில்லை. என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறியிருக்கிறார்.

ஈழ தமிழர்கள் தங்களது பூர்வீகத்தை தெரிந்துகொள்ள?

கொழும்பு : இந்திய வெளியுறவு அமைச்சகம், "டிரேசிங் த ரூட்' என்ற பெயரில், இலங்கை வாழ் தமிழர்களின் பூர்வீகத்தை கண்டுபிடித்து தரும் பணியை துவக்கியுள்ளது.

இதுகுறித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில், "இந்தியாவில் பூர்வீகத்தை அறிந்து கொள்ள விரும்பும் இலங்கை வாழ் தமிழ் மக்கள், கொழும்பில் உள்ள இந்திய தூதரகம், யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பன்தோட்டாவில் உள்ள இந்திய துணை தூதரகம், கண்டி நகரில் உள்ள துணை ஹை கமிஷன் அலுவலகம் ஆகியவற்றில் விண்ணப்பிக்கலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் கடந்த 2008ம் ஆண்டில் துவங்கப்பட்டது.

விண்ணப்பத்திற்கான கட்டணத் தொகை 72 ஆயிரத்து 480 ரூபாய். விண்ணப்பிக்கும் போதே கட்டணத்தொகையை செலுத்திவிட வேண்டும். விண்ணப்பதாரரின் பூர்வீகத்தை கண்டுபிடிக்க முடியாவிட்டால், கட்டணத்தில், 48 ஆயிரத்து 320 ரூபாய் திரும்ப வழங்கப்படும்.

இலங்கையில், கடந்த 1981ம் ஆண்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அந்நாட்டு மொத்த மக்கள் தொகையில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தமிழர்கள் 5.5 சதவீதம், இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழர்கள் 12.7 சதவீதம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மத்தியில் உள்ள மலைப்பகுதிகளில் அதிகளவில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தமிழர்கள் வசிக்கின்றனர். இவர்களில் பலர், அரசியல், வர்த்தகம், விளையாட்டு ஆகிய துறைகளில் சிறந்து விளங்குகின்றனர். உதாரணத்திற்கு, விளையாட்டுத் துறையில், இலங்கை கிரிக்கெட் அணியில் உள்ள விக்கெட்கீப்பர் முத்தையா முரளிதரனை கூறலாம்.

உலக மக்கள் தொகையைப்போல் இதிலும் போட்டி!!

பாஸ்டன் : "கடந்த 1980க்குப் பின், உலகளவில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரு மடங்காக, அதாவது 34.7 கோடியாக அதிகரித்துள்ளது. இவர்களில் மூன்றில் ஒரு பங்கினர், இந்தியா மற்றும் சீனாவில் உள்ளனர்' என, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம், அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகம், லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரி ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோர் குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தின. இம்பீரியல் கல்லூரி பேராசிரியர் மஜீத் எஸ்ஸாடி தலைமையில் நடந்த இவ்வாய்வில் தெரிய வந்துள்ளதாவது:

கடந்த 1980ம் ஆண்டுகளில், வயது வந்தவர்களில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 15 கோடியே 30 லட்சமாக இருந்தது. 2009ல் இந்த எண்ணிக்கை 28 கோடியே 50 லட்சமாக உயர்ந்தது. தற்போது, இது 34 கோடியே 70 லட்சமாக அதிகரித்துள்ளது. இவர்களில், 13 கோடியே 80 லட்சம் பேர் இந்தியா மற்றும் சீனாவில் வசிப்பவர்கள். மூன்று கோடியே 60 லட்சம் பேர் ரஷ்யாவில் உள்ளனர். வளர்ந்த நாடுகளில் அமெரிக்காவில் தான் நீரிழிவு நோய் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. மேற்கு ஐரோப்பாவில் மிகக் குறைவாக உள்ளது.

உலகின் ஒவ்வொரு பகுதியில் உள்ளவர்களையும் நீரிழிவு நோய் பாதிப்பது பொதுவானதாக உள்ளது. அதற்கு காரணம், இந்த நோய் வராமல் தடுக்க முடியாது. இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, June 26, 2011

மதுவுக்கு அடிமையாகும் மங்கைகள்

மதுரை:  உலக மது, போதை விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு மதுரை மிஷன் மருத்துவமனை சார்பாக நடந்த போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் பெண்களும் குடிபோதைக்கு அடிமையாகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

பேரணிக்கு தலைமை வகித்து பேசிய மருத்துவமனையின் மனநல மருத்துவர் டாக்டர் எம். கார்த்திகேயன் கூறுகையில், மது உடல் நலத்தை கெடுப்பதுடன், மன நலத்தையும் பாதிக்கிறது. குடும்ப பிரச்சனை, விவாகரத்து, சாலை விபத்து, பொருளாதார பிரச்சனைகள் மற்றும் வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு மிகப்பெரிய காரணமாக அமைகிறது.

குடும்பத்தில் அப்பா குடித்தால், மகனும் குடிக்கும் சூழல் உருவாகிறது. 14 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இப்போதை பழக்கத்திற்கு மிகவும் அடிமையாக உள்ளனர். ஆண்களில் பெரும்பாலானோர் வாழ்வில் ஒரு முறையாவது மது அருந்தியுள்ளனர். 35 சதவீதம் பேர் தொடர்ச்சியாக மது அருந்துகின்றனர். இதனை தனி மனித சீர்கேடாக பார்க்காமல் இதனை ஒரு நோய் எனக்கருதி சிகிச்சை மேற்கொள்ளவேண்டும், தகுந்த மருந்து மாத்திரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கலாம். டாக்டரின் ஆலோசனை இல்லாமல் மருந்துக்கடைகளில் தூக்க மாத்திரைகள், வலி மாத்திரைகள் வாங்கி உட்கொள்ளும் நிலை உள்ளது. இது தவறு. இவ்வாறு அவர் பேசினார்.

பேரணியை துவக்கி வைத்த தேசிய மாணவர் படை குரூப் கமாண்டர் கர்னல் பி.வேணுகோபால் கூறுகையில், என்.சி.சி. மாணவர் படையைச் சார்ந்தவர்கள் இன்று சமுதாயத்தில் வரதட்சணை கொடுமை, தீவிரவாதம் மற்றும் மது, போதை ஒழிப்பதற்கு முழுமையாக பாடுபடவேண்டும் என்றார். நேற்று நடைபெற்ற பேரணியில் லேடிடோக் கல்லூரி, செளராஸ்டிரா கல்லூரி, பாத்திமா கல்லூரி, மீனாட்சி கல்லூரியைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணியில் பல்வேறு சமூக சீர்கேடுகளை விளக்கும் அரக்கன் போன்ற பொம்மை செய்யப்பட்டு ஊர்வலமாக வந்தது.

இந்திய வம்சாவளி பெண்ணுக்கு இங்கலாந்தில் விருதுடன் ரூ 7.5 லட்சம்!

லண்டன்: பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஞ்சலி ஜோசப்,33 என்ற பெண் எழுதிய நாவலுக்கு, உலகின் கவுரவமான இரு விருதுகள் கிடைத்துள்ளன.

கடந்த 1978ல் மும்பையில் பிறந்த அஞ்சலி ஜோசப், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் டிரினிட்டி கல்லூரியில் ஆங்கிலம் பயின்றார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள சோர்போன் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலம் கற்பித்தார். இவர் எழுதிய முதல் நாவல் "சரஸ்வதி பார்க்'. ஹார்ப்பர் காலின்ஸ் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட இந்நாவல், மும்பையின் புறநகர்ப் பகுதி ஒன்றில் நடக்கும் காதல் கதையை மையமாகக் கொண்டது.

லண்டனில் இயங்கும், "தி சொசைட்டி ஆப் ஆதர்ஸ்' என்ற அமைப்பு ஆண்டு தோறும், "பெட்டி பிராஸ்க்' என்ற விருதை வழங்குகிறது. காமன்வெல்த் நாடுகளில் வசிக்கும், 35 வயதுக்குட்பட்டவர்கள் முதன் முதலாக எழுதும் நாவல்களில் சிறந்தவற்றுக்கு இவ்விருது வழங்கப்படும். அதேபோல் லண்டனில், டெஸ்மாண்ட் எலியட் என்ற பதிப்பாசிரியரின் பெயரில் இயங்கி வரும் அறக்கட்டளையால் "டெஸ்மாண்ட் எலியட்' விருதும், ஆண்டுதோறும் சிறந்த ஆங்கில நாவலுக்கு வழங்கப்படும். இந்தாண்டுக்கான இந்த இரு விருதுகளும், அஞ்சலி ஜோசப் எழுதிய "சரஸ்வதி பார்க்' நாவலுக்குக் கிடைத்துள்ளன.

இரு விருதுகளும் தலா, 10 ஆயிரம் பவுண்டுகள் (ஏழரை லட்ச ரூபாய்) ரொக்கப் பரிசு கொண்டவை.லண்டனில் இருந்து வெளிவரும், "தி டெய்லி டெலிகிராப்' பத்திரிகை, இந்தாண்டுக்கான, 40 வயதுக்கும் குறைந்த 20 நாவலாசிரியர்களுள் ஒருவராக அஞ்சலியை தேர்ந்தெடுத்துள்ளது. தற்போது, பாரிஸ், லண்டன் மற்றும் மும்பையில் நடக்கும் கதை ஒன்றை மையமாகக் கொண்டு, தன் இரண்டாவது நாவலை எழுதி வருகிறார் அஞ்சலி.

நல்ல செய்தி, நன்மைக்கு உதவலாமே நாமும்

திருச்சியில் யூத் எக்ஸ் னோரா இன்டர் நேசனல் அமைப்பு மற்றும் நடிகர் விவேக் ரசிகர் மன்றம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் நிழ்ச்சி நடந்தது. இதில் நடிகர் விவேக் கலந்து கொண்டு மரக்கன்றுகள் வழங்கி பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம், ‘’நான் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை சந்தித்த போது மரங்களின் நிலமை பற்றி ஒரு கவிதை புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். அதில் மரம் தனது அவலநிலைப்பற்றி கூறுவதுபோல கவிதை இருந்தது. இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் 100 கோடி மரக்கன்று நடவேண்டும்.

தமிழ் நாட்டில் 100 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்து உள்ளோம். டிசம்பர் 2011க்குள் 10 லட்சம் மரக்கன்றுகளை நட முடிவு செய்து உள்ளோம். இதற்காக மரக்கன்றுகள் வழங்கி வருகிறோம். வனத்துறை அமைச்சர், சமூக நல ஆர்வலர்கள், தொழில் அதிபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உதவிகளையும் நாடி வருகிறோம்.

நான் அடுத்து கந்தா படத்தில் நடித்து வருகிறேன். இதில் மரங்களை அழித்து ரியல் எஸ்ட்டேட்டில் நிலத்தை விற்ற விவசாயி கடைசியில் சித்தாளாக மாறியதுடன் இலவச அரிசிக்கு வரிசையில் காத்திற்கும் அவலம் பற்றி கூறியுள்ளேன். மரங்களை வளர்த்தால் தான் எதிர்காலம் வளமாகும்’’ என்று கூறினார்.

நாமும் மரம் வளர்த்து பயனடைவோமா.

Saturday, June 25, 2011

சிறு நீரகம் (பிரச்சினை) என்றால் சிந்தனைக்கு வருவது

சிவப்பு, வெள்ளைன்னு ரெண்டு வகையான முள்ளங்கி இருக்குது. இதுல, வெள்ளை முள்ளங்கி தான் மருந்தாகவும், உணவாகவும் சாப்பிட ஏற்றது. சிவப்பு முள்ளங்கி கொஞ்சம் சுவையாக இருக்கும், அவ்வளவு தான்! முள்ளங்கியைப் பொறுத்தவரை, கிழங்கு, இலை, விதை மூன்றுமே மருத்துவக் குணமுள்ளவை.

சமைக்கும்போதும், சாப்பிடும்போதும் முள்ளங்கியில இருந்து வெளியாகுற வாசனை சிலருக்குப் பிடிக்காது. சாப்பிட்ட பிறகும் நாம விடுற மூச்சிலும், வியர்வையிலும் கூட இந்த வாசனை இருக்கும். கந்தகமும், பாஸ்பரசும் இதுல அதிகமா இருக்குறது தான் அதுக்கு காரணம்.

உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இயல்புடையது முள்ளங்கி. பச்சிளம் குழந்தைகளைத் தாக்குற ஜலதோஷம், வயிற்றுப் பிரச்சினைகளுக்கு, முள்ளங்கிப் பிஞ்சோட சாறு நிவாரணம் தரும். இட்லி வேகவைப்பது மாதிரி முள்ளங்கிப்பிஞ்சை ஆவியில வேக வைத்து, அதுல இருந்து சாறு எடுத்து பாலாடையில வச்சி குழந்தைகளுக்கு ஊட்டலாம்.

குழந்தைகள் குடிக்க மறுத்தால், கொஞ்சம் தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுக்கலாம். இப்படிச் செய்தால் மலச்சிக்கல், சளித் தொந்தரவு போன்ற பிரச்சினைகள் இருக்காது. சிறுநீர்ப்போக்கு இயல்பாக இல்லாமல் இருப்பது, சிறுநீர்ப் பாதையில பிரச்சினை உள்ள பெரியவர்களும் இந்த முள்ளங்கிச் சாற்றைக் குடிக்கலாம்.

முள்ளங்கிக்கீரையை எண்ணெய் விட்டு நன்கு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டா நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கும். இருந்தாலும், இதை அடிக்கடி சாப்பிட்டா வயிற்றில் பொருமல், எரிச்சல் போன்ற பிரச்சினைகள் வரும். எனவே, அளவா சாப்பிடுறது நல்லது.

மத்திய அமைச்சர் மாறன் சீட் இனி காலி?

புது டெல்லி ஜூன் : 26, "2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க.தலைவர் கருணாநிதியின் மகள் கனி மொழி ஆகியோர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

ஆனால் ஆ.ராசா பிரச்சினையை போல தயாநிதி மாறன் பிரச்சினயை கொண்டு போக காங்கிரஸ் விரும்பவில்லை என்று அதனால் தயாநிதி மாறனை அமைச்சர் பதவியிலிருந்து விலகிக்கொள்ளுமாறு தயாநிதி மாறனுக்கு காங்கிரஸ் சிக்னல் கொடுக்கலாம என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு தலைவர் கூறியுள்ளார்.

அமைச்சரவை கூட்டத்திலும் இதர அரசு விழாக்களிலும் கலந்து கொள்ளுமாறு மாறனுக்கு தி.மு.க. அனுமதி அளித்துள்ளது., தயாநிதி மாறன் ராஜிணாமா செய்து விட்டால் நிலைமை மேலும் மோசகமாகலாம் என்ற கோணத்தில் தி.மு.க.மேலிடம் இவ்வாறு கூறியிருக்கலாம எனறும் கூறப்படுகிறது., ஆனால் எதிர்க்கட்சிகளின் வற்புறுத்தலால் மத்திய அமைச்சரவையிலிருந்து தயாநிதி மாறன் நீக்கப்படலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்போவதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருக்கிறார். எனவே இந்த அமைச்சரவை மாற்றம் விரைவில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது., அப்படி அமைச்சரவை மாற்றம் நடக்கும் பட்சத்தில் மத்திய அமைச்சரவையிலிருந்து தயாநிதி மாறன் நீக்கப்படலாம் என்று விஷமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்தியரை நாடு கடத்தும் முயற்சி தற்காலிக நிறுத்திவைப்பு, அமெரிக்கா!

வாஷிங்டன் : இந்தியாவைச் சேர்ந்தவர் மந்தீப் சகால். கலிபோர்னியாவில் மருத்துவம் படித்து வருகிறார். இவரும், இவரது தாயார் ஜகதீஷ் கவுரும், 1997ல், இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறினர். இவர்களிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததை அறிந்த அமெரிக்க அதிகாரிகள், சட்ட நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதையடுத்து, தனக்கு அரசியல் தஞ்சம் அளிக்கும்படி அமெரிக்க அரசிடம், ஜகதீஷ் கவுர் மனு அளித்தார். இது தொடர்பான விசாரணை, ஆறு ஆண்டுகளாக நடந்து வந்தது. அரசியல் தஞ்சம் அளிக்க முடியாது என, அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஜகதீஷ் கவுர், கடந்தாண்டு கைது செய்யப்பட்டார். உடல்நல பிரச்னை காரணமாக, பின்னர் விடுவிக்கப்பட்டார். இருந்தாலும், ஜகதீஷ் கவுரும், மந்தீப் சகாலும், அமெரிக்க அதிகாரிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தனர். இருவரையும் இந்தியாவுக்கு ஜூன் 22 க்குள் நாடு கடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, மந்தீப் சகாலின் நண்பர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர், நாடு கடத்தும் முயற்சியை அமெரிக்க அரசு கைவிட வேண்டும் என, பிரசாரம் மேற்கொண்டனர்.

இந்நிலையில், நாடு கடத்தப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், அமெரிக்க அரசு, இந்த விவகாரத்தில் ஒரு முடிவை அறிவித்தது. இதன்படி, ஜகதீஷ் கவுரையும், மந்தீப் சகாலையும் இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சியை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக, அமெரிக்க அரசு அறிவித்தது.

இந்தா அந்தா என்று இழுத்தடிக்கப்பட்டு முடிவுக்கு வந்த படம்

"வேலாயுதம்", "நண்பன்" படத்தை தொடர்ந்து விஜய் அடுத்து, சீமான் இயக்கும் "பகலவன்" படத்தில் நடிக்கப்போவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் விஜய் நடிக்கப்போவதாக ஒரு செய்தி அடிபடுகிறது. இந்தா, அந்தா, என கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேலாக இழுத்தடித்து கொண்டே வருகிறது.

இதனையடுத்து விஜய், "வேலாயுதம்", "நண்பன்" படத்திற்கு கால்ஷீட் கொடுத்து அதில் நடிக்க தொடங்கிவிட்டார். சிறைவாசம் முடித்து வந்த சீமான் உடனே "பகலவன்" படத்திற்கான வேலையை தொடங்க ஆரம்பித்தார். இதுதொடர்பாக விஜய்யையும் சந்தித்து பேசினார். இதனால் "நண்பன்" படத்தை அடுத்து, "பகலவன்" படத்தில் தான் விஜய் நடிப்பார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய விஜய்யை டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் சந்தித்து பேசினார். அப்போது ஒரு அருமையான கதை ஒன்றை ‌ரெடி பண்ணி, அதை விஜய்யிடம் காண்பித்து இருக்கிறார். விஜய்க்கும் கதை பிடித்து போக அவரும் நடிப்பதாக கூறிவிட்டாராம். படத்தில் விஜய்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகை சோனம் கபூர் நடிப்பதாகவும், விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை விஜய், முருகதாஸ் நடிக்க ஒப்புக்கொண்டால் அவரது படத்தில், விஜய் நடிப்பது இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, June 24, 2011

மார்பக புற்று நோய்க்கு மருந்து !

எனக்குச் சாப்பாடு இல்லாவிட்டாலும் பரவாயில்லை. காபி இல்லாமல் இருக்க முடியாது என்று பெருமையாகச் சொல்லிக் கொள்பவரா நீங்கள்? நீங்கள் பெருமைப்படுவதற்கு கூடுதலாக இன்னொரு விஷயம் இப்போது கிடைத்துவிட்டது.

காபி குடிப்பது மார்பகப் புற்றுநோய் வருவதைக் குறைத்துவிடுகிறதாம்., ஸ்வீடனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரே வயதிலுள்ள பெண்களை வைத்து ஆராய்ச்சி செய்து பார்த்ததில் இது தெரிய வந்திருக்கிறது.

காபி குடித்த பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் மிகக் குறைவாகவும், காபி அருந்தாத பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகள் அதிகம் இருப்பதையும் கண்டுபிடித்து இருக்கிறார்கள் அவர்கள்.

ஆனால் காபி குடிப்பது, எந்தவிதத்தில் பெண்களின் உடலில் செயல்பட்டு புற்றுநோய் வருவதைக் குறைக்கிறது என்பதை இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

நீங்கள் காபி பிரியரா?, இனிமேல் காலையில் எழுந்ததும் கண்களைத் திறக்காமலேயே காபியை ரசித்து அருந்தலாம்!

ஸ்பெக்ட்ராம் புகழ் ராஜா மனைவி வருமான வரித்துறை அழைப்பு?

திருச்சி,ஜூன் 25 முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் மனைவி மற்றும் உறவினர்களிடம் நேற்று திருச்சி வருமானவரி அலுவலகத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, கனிமொழி, கலைஞர் டி.வி நிர்வாக இயக்குநர் சரத்குமார் மற்றும் சிலர் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். ராசா கைது செய்யப்பட்டபோது சி.பி.ஐ பெரம்பலூர் மற்றும் திருச்சியில் உள்ள அவரது வீடு மற்றும் உறவினர்களிடம் ஊழல் தொடர்பான விசாரணை நடைபெற்றது.

அப்போது ராசாவிற்கு சொந்தமான சொத்து ஆவணங்களை கைப்பற்றினர். கைப்பற்ற பட்ட சொத்து ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறை துணை இயக்குநர் ஆல்பர்ட் மனோகரன் தலைமையில் திருச்சி, பெரம்பலூரில் விசாரணை நடைபெற்றுவந்தது. இது தொடர்பாக ராசாவின் மனைவி பரமேஸ்வரி, ராசாவின் சகோதரர் ராமச்சந்திரன், சகோதரி மகன் பரமேஸ்குமார், சகோதரி மகள் மற்றும் ஆடிட்டர்களான பிரான்சிஸ், முத்துக்குமாரசாமி, சுரேஷ்குமார் ஆகியோரும் ஆஜராக உத்தரவிட்டிருந்தனர். அதன்படி நேற்று காலை அந்த 7 பேரும் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகினர்.

ராசாவின் மனைவி பரமேஸ்வரி, ராமச்சந்திரன், பரமேஸ்குமார் ஆகிய 3 பேரிடம் வருமான வரித்துறை அலுவலகத்தில் தனி அறையில் விசாரணை நடத்தினர்.

உற்பத்தியில் உலக சாதனை படைக்கபோகுது! ஐ நா தகவல்

புதுடில்லி : நடப்பு 2011ல், உலகளவில் நெல் உற்பத்தி 71.30 கோடி டன்னாக உயர்ந்து, புதிய சாதனை படைக்கும் என, ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் துறை தெரிவித்துள்ளது.

சென்ற 2010ம் ஆண்டு, சர்வதேச அளவில் நெல் உற்பத்தி, 69.60 கோடி டன் என்ற புதிய சாதனை அளவை எட்டியது. மேலும், நெல் அரவைக்கு பிறகான அரிசியின் அளவு, முந்தைய ஆண்டை விட, 1.8 சதவீதம் அதிகரித்து, 46.40 கோடி டன்னாக உயர்ந்து, புதிய சாதனை படைக்கப்பட்டது. நடப்பாண்டு, இந்த சாதனை முறியடிக்கப்படும் என, ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் துறை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் பருவ நிலை சாதகமாக உள்ளதால், சர்வதேச அளவில் நெல் உற்பத்தி, சென்ற ஆண்டை விட, 2.5 சதவீதம் அதிகரித்து, 71.13 கோடி டன்னாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து நெல் அரவைக்கு பிறகான அரிசியின் அளவும், 47.60 டன் என்ற அளவில் அதிகரிக்கும் என மதிப் பிடப்பட்டுள்ளது.ஆசிய அளவில் நெல் உற்பத்தி 2.5 சதவீதம் உயர்ந்து, 64.50 கோடி டன் என்ற அளவை எட்டும். நெல் அரவைக்கு பிறகான அரிசியின் அளவும் 43 கோடி டன்னாக உயரும். இந்தியா, சீனா, பாகிஸ்தான் நாடுகளில் நடப்பாண்டு நெல் விளைச்சல் அதிகம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.இந்தியாவை பொறுத்தவரை, நடப்பு 2010-11ம் பருவத்தில், நெல் அரவைக்கு பிறகு கிடைக்கும்,அரிசியின் அளவு அரிசி உற்பத்தி 9.41 கோடி டன்னாக இருக்கும் என,மத்திய வேளாண் அமைச்சகத்தின் மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், தொடர் மழை மற்றும் வெள்ளம் காரணமாக இலங்கையின் நெல் உற்பத்தி குறையும். நிலநடுக்கம், ”னாமி தாக்குதல், அணு உலை கசிவு உள்ளிட்டவற்றால் ஜப்பானிலும் நெல் உற்பத்தி சரிவடையும் என கணிக்கப்பட்டுள்ளது.ஜப்பானில், ”னாமி தாக்குதலால் டொஹொகு மாவட்டத்தில் நெல் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் 43 ஆயிரம் எக்டேர் பயிர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளதால், 3 லட்சம் டன் நெல் உற்பத்தி குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பாண்டில் ஜப்பானில் நெல் உற்பத்தி 3 சதவீதம் குறைந்து, ஒரு கோடி டன் என்ற அளவிற்கு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஆப்ரிக்காவில் நடப்பாண்டு நெல் உற்பத்தி, கடந்தாண்டு போலவே இருக்கும். மேற்கு ஆப்ரிக்காவில் நெல் உற்பத்தி உயரும் என்ற போதிலும், எகிப்து, மடகாஸ்கர் நாடுகளில் நெல் உற்பத்தி குறையும் என, ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் துறை தெரிவித்துள்ளது.கடந்தாண்டு லத்தீன் அமெரிக்கா, கரீபியன் நாடுகளில் குறைந்திருந்த நெல் உற்பத்தி நடப்பாண்டில் அதிகரித்துள்ளது. அர்ஜென்டினா, பிரேசில், கொலம்பியா, உருகுவே, வெனி”லா நாடுகளில் நெல் உற்பத்தி உயர்ந்துள்ளது.

பெண் முன்னேற்றம் ஆணுக்கு தடையா?

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் வெகுவாக முன்னேறி விட்டார்கள்தான். பெண்களின் பங்கு என்பது உலகில் மிக முக்கியமானது. அவர்கள் இல்லாமல் ஆண்களால் பெரிதாக எதையும் சாதித்து விட முடியாது.

உண்மையில் ஒரு ஆணை விட ஒரு பெண்ணால்தான் ஒரு வியாபார ஸ்தலத்தையோ, அல்லது ஒரு பெரிய நிறுவனத்தையோ கூட்டாகக் கொண்டு நடத்தி கூடுதலாக வெற்றி பெற வைக்க முடியும்.

ஓரு விஷயத்தைச் சொன்னால் அதைக் கிரகித்து அதற்குப் பதில் சொல்லும் தன்மை ஆண்களின் மூளையில் ஒரு பங்கு என்றால் அதைக் கிரகித்து பதில் சொல்லும் தன்மை பெண்களின் மூளையில் ஆறு பங்கு. இவைகள் ஆய்வாளர்களின் கண்டு பிடிப்புகள் ஓரு ஆணின் மூளை ஓரு பெண்ணின்; மூளையை விட 130 கிராம் நிறை அதிகமானது.

ஆனால் இரு மூளைகளினதும் செயற்பாடுகள் - ஆதிகாலத்திலிருந்து இன்றைக்கு வரைக்குமான சூழ்நிலைகளுக்கும் வாழ்க்கை முறைகளுக்குமேற்ப இசைவாக்கம் பெற்று வெவ்வேறு வழிகளில் செயற்படுகின்றன.

இங்கு ஆண் உசத்தி என்றோ பெண் உசத்தி என்றோ எதுவும் இல்லை.முன்னர் பெண்கள் வீட்டுக்குள் முடங்க வேண்டியதற்கு காரணங்கள் இருந்தன. இன்று வெளியே சென்றாலும் பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று சில பெண்கள் சிந்திக்கவும் தவறவில்லை.

சிந்திக்கத் தொடங்கிய இப்பெண்களின் விழிப்பு நிலையே இன்று சில ஆண்களுக்குப் பிரச்சனையாக இருக்கிறது. பெண்களிடம் ஏற்பட்ட இந்த மாற்றத்தை ஆண்களின் மூளை ஏற்றுக் கொள்ள முடியாமல் திண்டாடுகிறது.

இந்த உண்மைக் காரணங்களை ஆண் பெண் இருபாலாரும் உணர்ந்து செயற்படும் பட்சத்தில் இந்தப் பெண்ணடிமை, பெண்அடக்குமுறை, பெண்ணை இரண்டாந்தரப் பிரஜையாக எண்ணும் தன்மை எல்லாமே அர்த்தமற்ற செயல்கள் என்பது நன்கு புலப்படும்.

உண்மையில் பெண்ணுக்கு இன்னும் முழுமையான விடுதலை கிடைக்கவில்லை. வெறும் சலுகை மட்டும் வாழ்க்கையில்லை என்பதை பெண்கள் உணர தொடங்கிவிட்டனர்.

புலிகள்மேல் பொய் பிரச்சாரம் செய்யும், குண இரத்தின

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்படுவதற்கு முன்வரும் சகலரும் விடுதலைப் புலிகளிடமிருந்து பணம் பெற்றுக் கொள்வதாக பேராசிரியர் ரொஹான் குணரத்தின குற்றம் சாட்டுகின்றார்.

உலகின் முன்னணி மனித உரிமை அமைப்புக்கள் மட்டுமன்றி சில நாடுகளின் அரசியல்வாதிகளும் அவ்வாறு விடுதலைப் புலிகளிடம் நிதியுதவி பெற்றுக் கொள்வதாக பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.

மனித உரிமை கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச நெருக்கடிக் குழு உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விடுதலைப் புலிகள் நிதி உதவி வழங்கி வருகின்றனர். அது மட்டுமன்றி ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சில அரசியல்வாதிகளும் விடுதலைப் புலிகளின் நிதியைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளே பாரியளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர். மனித உரிமை அமைப்புக்களை புலிகள் தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றனர். சிலர் அந்தப் பொறிக்குள் சிக்கியுள்ளனர்.

உலகின் முன்னணி பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியான போராட்டத்திலிருந்து இலங்கைக்கு எதிரான பிரச்சாரப் போராட்டத்திற்கு மாறியுள்ளனர். ஆனால் விடுதலைப் புலிகளின் பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுக்கக் கூடிய சரியான இராஜதந்திர பொறிமுறை இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்படவில்லை.

புலிகளின் பிரச்சாரப் போராட்டத்திற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதனை இலங்கை அரசியல் தலைமைத்துவங்கள் இன்னமும் தெளிவாக விளங்கிக்கொள்ளாததே அதற்காக காரணமாகும். போலியான தகவல்களின் மூலம் இலங்கையின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதை அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Thursday, June 23, 2011

சாய்பாபா ரகசியத்தை வெளியிட போவதாக, மிரட்டும் அமெரிக்க பக்தர்

நகரி,  - சத்ய சாய்பாபாவின் உயில் ரகசியத்தை ஆறு வாரங்களில் வளியிடப் போவதாக அமெரிக்க பக்தர் ஒருவர் கூறியுள்ளார். புட்டபர்த்தி ஸ்ரீசத்யசாய்பாபா சமீபத்தில் மரணமடைந்தார். இவரது ஆசிரம, அறக்கட்டளை, கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்களின் சொத்துக்கள் தொடர்பாக பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபாவின் ஆசிரமத்தில் இருந்து சமீபத்தில் ரூ. 35 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இப்பணம் கொடிகொண்டா போலீசார் நடத்திய வாகன பரிசோதனையின் போது சிக்கியது. இதையடுத்து கார் டிரைவர் ஹரீஷ்நந்தா, சென்னை தொழிலதிபர் ஒருவரின் கார் டிரைவரான சந்திரசேகர், பெங்களூரைச் சேர்ந்த ஷோகன் ஷெட்டி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதேபோல சாய்பாபா ஆசிரமத்தில் இருந்து சொகுசு பஸ் ஒன்றில் கடத்தப்பட்ட பலகோடி பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து புட்டபர்த்தி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகிறார்கள். அறக்கட்டளை அறக்கட்டளை உறுப்பினர் ரத்னாகர் மற்றும் சென்னை தொழில் அதிபர் ஒருவருக்கும் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். ஆனால் அவர்கள் இதுவரை ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை.

இந்நிலையில் சாய்பாபாவுக்கு நெருக்கமான அமெரிக்க பக்தர் ஜசஸ் டிரிகேட் புட்டபர்த்தியில் செய்தியாளர்களுக்கு பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்தார். அப்போது அமெரிக்காவில் தான் ஒரு பீர் கம்பெனி நடத்தியதாகவும், அதில் பல ஆயிரம் கோடி பணம் கிடைத்ததாகவும் ஆனாலும் நிம்மதி கிடைக்காததால் போதைக்கு அடிமையானதாகவும் மிகவும் கஷ்டப்பட்டதாகவும் எனவே 20 ஆண்டுகளுக்கு முன்பு தான் சாய்பாபாவைப் பற்றி கேள்விப்பட்டு இந்தியாவுக்கு வந்ததாகவும் தெரிவித்தார்.

அடிக்கடி புட்டபர்த்தி வந்து சாய்பாபாவை சந்தித்து சென்றதாகவும் அவர் தெரிவித்தார். தனக்கும் சாய்பாபாவுக்கு நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது என்றும், கடந்த சில ஆண்டுகளாக புட்டபர்த்தியில் தங்கி இருந்ததாகவும், சாய்பாபா தன்னிடம் மனம் திறந்து பேசியதாகவும், அப்போது அவர் தனக்கு பிறகு வாரிசாக யாரை நியமிப்பது என்பது தொடர்பாக ஒரு உயிலை எழுதப்போவதாகவும், சாய்பாபா தன்னிடம் கூறியதாக ஐசக் டிரிகேட் தெரிவித்தார். இந்த உயில் ரகசியங்கள் தனக்கு தெரியும் என்றும் அந்த விபரங்களை இன்னும் ஆறு வாரத்திற்குள் வெளியிடப் போவதாகவும் அவர் கூறினார்.

# எந்த தேவைகளும் அற்றவன் எவனோ அவனே இறைவனாக இருக்கமுடியும், மேலே நீங்கள் படித்த செய்தி மனிதரை பற்றி #

பெண்களுக்கு பாதுகாப்பு உண்டா பனி இடங்களில் ..,

இவ்வுலகிலே ஏற்படும் எவ்வித பிரச்சினையாக இருந்தாலும் அதில் அதிகம் பாதிக்கப்படுகிறவர்கள் பெண்களும், குழந்தைகளுமே. பெண்களின் நிலையை சற்று ஆராய்ந்து பார்த்தால் எந்த அளவுக்கு அவர்கள் சமுதாயத்திலே பல வகையான வன்முறைகளால் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பது தெளிவாக தெரியும்.

15 முதல் 45 வயதான பெண்களுள் மூன்றில் ஒரு பங்கினர் ஏதாவது ஒரு வகையான வன்முறைக்கு ஆளாகுகின்றனர். ஒட்டு மொத்த பெண்களில் 35% பேர் உடல் ரீதியான மற்றும் பாலியல் ரீதியான வன்முறைகளால் பாதிக்கப்படுகின்றனர். திருமணமான பெண்களில் 46% பேர் பல்வேறு வகையான வன்முறைகளால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வைத் தொடருகின்றனர்.

பெண்கள் கல்வி கற்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள் என்று வெளிப்படையாகத் தெரிந்தாலும், அந்த துறைகளில் உள்ள பெண்கள் பாதுகாப்போடு பணி செய்ய முடிகிறதா என்றால் இல்லை. பெரும்பாலான துறைகள் ஆண்களால் நடத்தப்படுவதாலும் பெரும்பான்மையான உயர் அதிகாரிகள் ஆண்களாக இருப்பதாலும் பெண்கள் எவ்வளவுதான் கல்வி கற்றிருந்தவர்களாக இருந்தாலும் அந்த துறைகளில் உள்ளவர்களால் பலவகை பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர்.

இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு 2010-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதுதான் ""பணி இடங்களில் பாலியல் வன்முறைக்கு எதிரான பெண்கள் பாதுகாப்புச் சட்டம் 2010''. இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் பெண்களுக்கான முழுமையான பாதுகாப்பினை வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லை.

இச்சட்டத்தின் முக்கிய நோக்கமே, பணி இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தருவதே ஆகும். அரசின் இந்த அரிய சட்ட முயற்சி பெண்கள் முன்னேற்றத்திற்கு மிகுந்த பயனளிக்கும். இச்சட்டம் எல்லா இடங்களிலும் பணி செய்யும் பெண்களுக்கு பொருத்தமானதாக உள்ளது.

அரசுத்துறையாகவோ, தனியார் துறையாகவோ, வேறு எந்த நிறுவனங்களாக இருந்தாலோ அங்கு பெண்கள் பாலியல் ரீதியான வன்முறைகளால் பாதிக்கப்பட்டால் இச்சட்டம் மூலம் நீதி பெறலாம். பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் செய்த 90 நாட்களில் விசாரணையை முடித்து நடவடிக்கையை எடுக்க இச்சட்டம் வலியுறுத்துகிறது.

இச்சட்டத்தினை நடைமுறைக்கு கொண்டு வருவது மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொறுப்பாகும். பெண்களின் பாதுகாப்பு கருதி, அவர்களின் பணி இடங்களில் தேவையற்ற வன்முறைச் செயல்களை ஒழிக்கும் முயற்சியில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இச்சட்டம் மிகவும் வரவேற்கப்பட வேண்டியது.

பெண்களின் பாதுகாப்பிற்கு மிகவும் உதவி செய்திடும் வகையில் இச்சட்டம் அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. கூடிய விரைவில் தாமதமின்றி இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், கண்டிப்பாக தொடர்ந்து கொண்டிருக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைச் செயல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!