Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, June 23, 2011

காங், (கை) விட்டதால், (கை) தொழில் ஒன்று கற்றுக்கொள் மகளே!

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்பி கனிமொழி, அங்கு பெண் கைதிகளுக்கான 6ம் எண் பிரிவில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கனிமொழி மெழுகுவர்த்தி செய்யக் கற்று வருவதாக சிறைதுறை அதிகாரிகள் தெரிவித்தனர். கைதிகள் உபயோகமாக நேரத்தை செலவிடும் வகையில் இந்த தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் மெழுகுவர்த்திகள் சிறையிலுள்ள விற்பனை மையத்தின் மூலமாகவே பொது மக்களுக்கு விற்கப்படுகின்றன.

இந்த மையத்தில்தான் சக கைதிகளிடம் மெழுகுவர்த்தி செய்ய கனிமொழி கற்று வருகிறார். அதே நேரத்தில் தனது பெரும்பாலான நேரத்தை புத்தகங்கள் படிப்பதிலும் எழுதுவதிலும் செலவிட்டு வருகிறார்.

தனது ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டாலும் அதை சாதாரணமாகவே எடுத்துக் கொண்டு சக கைதிகள், காவலர்களிடம் இயல்பாகப் பழகி வருவதாகவும் கூறுகின்றனர்.

# (கை) தொழில் ஒன்று கற்றுக்கொள் கவலையெல்லாம் மாற மகளே! என்று தந்தை அட்வைஸ் செய்திருப்பாரோ.#

கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா?

மதுரை மேலூரை சேர்ந்தவர் சின்னகுரும்பன். இவரது மகள் 2009ல் தனது காதலனுடன தலைமறைவு ஆனார்.

இதையடுத்து மகளைக்காணவில்லை என்று சின்னகுரும்பன், மதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். பின்னர் மதுரை நீதிமன்றத்தில் காதலனுடன் ஆஜராகி காதலனுடந்தான் செல்ல விருப்பம் என்று தெரிவித்தார் சின்னகுரும்பன் மகள்.

ஆனால் மேஜர் ஆகாததால், அரசு இல்லத்திற்கு அனுப்பியது நீதிமன்றம்., இந்நிலையில் கடந்த வாரம் தந்தைக்கு கடிதம் எழுதி, என்னை அழைத்துச்செல்லுங்கள் என்று கேட்டிருக்கிறார்.

இதையடுத்து தனது மகளின் கடிதத்தை காட்டி தன்னுடன் அழைத்துசெல்ல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார் சின்னகுரும்பன்., இதனால் இன்று கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள் சின்னகுரும்பனுன் அவரது மகளும். மகளின் காதலனுன் அங்கே ஆஜராகவும் அதிர்ச்சியானார் சின்னகுரும்பன்.

அடுத்த அதிர்ச்சியாக, நீதிமன்றத்தில், நான் இப்போது மேஜர். அதனால் எனக்கு காதலனுடன் போகத்தான் விருப்பம்ம். இதைச்சொன்னால் என் அப்பா கோர்ட்டுக்கு வரமாட்டார். அதனால்தான் அவரிடம் பொய்சொன்னேன் என்று சொன்னார்.

கோர்ட்டும் மகளை காதலனுடன் செல்ல உத்தரவிட்டதால் கலங்கிய கண்களூடன் வீடு திரும்பினார் சின்னகுரும்பன்.

Wednesday, June 22, 2011

கலைஞர் மேல் அக்கறைபடும் ஜெயா?

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கை, முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாபஸ் பெற்றுக்கொண்டார். நாடாளுமன்ற வளாகத்தில் எம்.ஜி.ஆர். சிலையை நிறுவுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் பற்றி முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 22.11.06 அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு எதிராக சில கருத்துகளை தெரிவித்து இருந்தார்.

இந்த அறிக்கை தன்னை அவதூறு செய்வதாக கூறி, ஜெயலலிதா மீது, கருணாநிதி வழக்கு தொடர்வதற்கு அனுமதி அளித்து 28.12.06 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதனடிப்படையில் கருணாநிதி சார்பில் அப்போதைய சென்னை நகர குற்றவியல் அரசு வக்கீல் 12.1.07 அன்று ஜெயலலிதா மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ஜெயலலிதா 17.1.07 அன்று மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கில் பொதுத்துறை செயலாளர், சென்னை நகர குற்றவியல் அரசு வக்கீல், கருணாநிதி ஆகியோரை பிரதிவாதியாக ஜெயலலிதா சேர்த்திருந்தார். அந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி பி.ஜோதிமணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், வழக்கை திரும்பப் பெற்றுக்கொள்ள மனுதாரர் விரும்புவதாக கூறினார். அதைத்தொடர்ந்து நீதிபதி பி.ஜோதிமணி, `ஜெயலலிதா தொடர்ந்துள்ள வழக்கை திரும்ப பெறுவதாக அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் வாதிட்டார்.

அதற்கான மனுவையும் அவர் தாக்கல் செய்தார். வழக்கு வாபஸ் பெறப்படுவதை அடுத்து, அந்த வழக்கு தொடர்பாக ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று உத்தரவு பிறப்பித்தார்.

இரு ஸ்டார்கள் சந்தித்துக்கொண்டனர்

சென்னை, ஜூன் 23: சிங்கப்பூரில் ஓய்வெடுத்து வரும் நடிகர் ரஜினிகாந்தை தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியும், கன்னட நடிகர் அம்பரீஷும் புதன்கிழமை சந்தித்து நலம் விசாரித்தனர்.

சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிறுநீரக பாதிப்புக்காக ரஜினிகாந்த் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில், அவர் கடந்த 15-ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதையடுத்து சிங்கப்பூரில் அவர் ஓய்வெடுத்து வருகிறார். ரஜினிகாந்தைப் பார்க்க அவரது நெருங்கிய நண்பர்களும் நடிகர்களுமான சிரஞ்சீவி, அம்பரீஷ் ஆகியோர் சிங்கப்பூர் சென்றார்கள்., ரஜினிகாந்த் தங்கியுள்ள குடியிருப்புக்கு சென்று அவரிடம் உடல் நலம் விசாரித்தனர். "ரஜினி குணமடைந்துவருகிறார். சென்னை திரும்புவதற்கு ஆர்வமாக இருக்கிறார்' என்று சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

ரஜினியைச் சந்திக்க சிங்கப்பூர் சென்ற சிரஞ்சீவியும், அம்பரீஷும் மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கும் சென்று வந்ததாகத் தெரிகிறது.

பெற்ற பெண் குழந்தையை புறக்கணிக்கும் பெற்றோர்கள்!?

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் கருணை இல்லம் நடத்தி வரும், மேரி. இவரது வீட்டுக்கு பக்கத்தில் கடந்த 18.06.2011 அன்று இரவு, முப்பது வயது மதிக்கத்தக்க, மனநலம் பதிக்கப்பட்ட ஒரு பெண் பிறந்து சில நிமிடங்களே ஆன ஒரு குழந்தையை கையில் வைத்துக்கொடிருந்தார்.

அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் மேரிக்கு தகவல் கொடுத்ததால் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்த அந்த குழந்தையை மீட்ட மேரி, மருத்துவமனையில் சிகிச்சை கொடுத்து, கடந்த 20.06.2011 அன்று சேலம் மாவட்ட ஆட்சியர் மகரபூசனத்தை சந்தித்து இக்குழந்தையை தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் ஒப்படைத்தார்.

சேலம் மாவட்டத்தில் தொட்டில் குழந்தைகள் திட்டத்தில், கடந்த 1991 ம் அண்டு முதல் 989 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளார்கள்., இவற்றில், 69 ஆண் குழந்தைகளும், 916 பெண்குழந்தைகளும், 3 பாலினம் அறிய முடியாத குழந்தைகளும் உள்ளார்கள் என்று சமூகநலத்துறை அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

அரசு மருத்துவமனைகளில் வைக்கப்பட்டிருந்த தொட்டிலில் போடப்பட்ட இக்குழந்தைகள், அரசால் அங்கீகரிக்கப்பட தத்து மையங்கள் மூலம் தகுதி வாய்ந்த பெற்றோர்களுக்கு தத்து கொடுக்கப்பட்டுள்ளர்கள் என்று தெரிவித்தார்கள்

A T M மெசினில் இத்தனை விசயங்களா? பெண்களுக்காக

மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கைரேகையால் இயக்கும் சிறப்பு ஏடிஎம் மையம் மாவட்டத்தில் முதல்முறையாக திண்டுக்கல்லில் அமைக்கப்பட்டுள்ளது.

மகளிர் சுய உதவிக்குழு மூலம் பெண்கள் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெறுவதுடன் அவர்கள் சார்ந்த குடும்பமும் வளர்ச்சி பெற்று வருகிறது. பெற்ற கடனை முறையாக அவர்கள் திரும்ப செலுத்துவதால் வங்கிகளும் போட்டி போட்டுக் கொண்டு கடனுதவி அளித்து வருகின்றன. மேலும் இவர்களின் விற்பனைப் பொருட்களைச் சந்தைப்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டன.

தொடர்ந்து சந்தைப்படுத்தல் நுணுக்கம், வித்தியாசமான பொருட்களை உருவாக்குதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன., இதன் அடுத்தகட்டமாக இந்தியன் வங்கி இவர்களுக்கு சிறப்பு வசதியை செய்து தந்துள்ளது. இதன்படி இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள சுய உதவிக்குழுவினர் கடன் பணம், சிறுசேமிப்புப் பணம் உள்ளிட்டவற்றை கையாள தனி ஏடிஎம் மையத்தை அமைத்துள்ளது., இதில் சுய உதவிக்குழுத் தலைவி, பொருளாளர் இருவரும் தனித்தனியாக தங்கள் கைரேகைகளைப் பதிவு செய்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

ஒருவர் கைரேகை வைத்ததும் அடுத்தவருடைய கைரேகையை வைக்கக் கூறும் வகையில் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், தவறான ரேகைப்பதிவு இருந்தாலும் அவற்றை தெரிவிக்கும்.

Tuesday, June 21, 2011

நெல்லிக்காய் (கனி) எத்தனை மருத்துவ குணம்!

நெல்லிக்காயோட அறிவியல் பேரு... பைலாந்தஸ் எம்ப்ளிகா. நெல்லிக்காய் மரத்தின் இலைகளோட சாறு ரொம்ப நாளா ஆறாம இருக்குற புண்ணுக்கு நல்ல மருந்து. இலையோட வடிசாற்றையும், வெந்தயத்தையும் கலந்து சாப்பிட்டா, வயிற்றுப்போக்கு குணமாகும்.

பட்டையும், வேரும் உடலுக்கு வலு சேர்க்கும். மலர்கள் குளிர்ச்சி தருபவை. வைட்டமின் சி குறைவால வரும் ஸ்கர்வி நோயைத் தீர்க்குது. குளிர்ச்சியைத் தருது. ஜீரணத்தை ஊக்குவிக்குது. சிறுநீரக கோளாறுகளைப் போக்கும். ரத்த சோகை, மஞ்சள் காமாலைக்கு சிறந்த மருந்து இந்த நெல்லிக்காய்தான்.

அது மட்டுமா...இதோட விதைகளை அரைச்சிக் கண்வலிக்கு பூசினா உடனே குணமாகும். இதோட வடிசாறு ஆஸ்துமா கோளாறுக்கும், மூச்சுக்குழல் அழற்சியையும் போக்குது., இப்பவே நெல்லிக்காய சாப்பிட ஆரம்பிச்சிட்டீங்களா..?! நெல்லிக்காய்ன உடனே உங்களுக்கு வேற ஒண்ணும் ஞாபகத்துக்கு வரணுமே...!

கரெக்ட்...நீங்க நெனச்சது சரிதான்.! சங்க இலக்கியத்துல தமிழ் நீண்ட நாள் வாழனும்னு ஆசைப்பட்டு, அதியமான், நம்ம அவ்வையாருக்கு கொடுத்ததும் இதே நெல்லிக்கனிதான்.

கடல் கடந்து இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் இந்திய தூதரகம்!

நியூயார்க், ஜூன் 22 அமெரிக்காவில் இந்தியத் தூதருக்கு எதிராக அவரது வீட்டின் முன்னாள் பணிப்பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நியூயார்க் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பிரபு தயாள் தூதராக பணிபுரிகிறார். அவரது வீட்டில் பர்த்வாய் (45) என்பவர் பணிப்பெண்ணாக முன்பு வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், பிரபு தயாள் மீது அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மாதம் 300 டாலர் சம்பளத்திற்கு, தன்னை பிரபு தயாள் நீண்ட நேரம் வேலை வாங்கியதாகவும், தனது பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக்கொண்டு அவர் தர மறுப்பதாகவும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும், வீட்டில் பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கு அறையில் தான், தனக்கு தூங்குவதற்கு இடம் ஒதுக்கினர் என்றும், பாலியல் ரீதியான முயற்சிகளையும் பிரபு தயாள் மேற்கொண்டார் என்றும் பர்த்வாய் தனது மனுவில் கூறியுள்ளார்., பர்த்வாய்க்கு உதவி வரும் சட்ட உதவி மையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

# இந்தியருக்கு உதவி செய்வதற்குத்தான் தூதரககங்கள் ஆனால் இவாக்கள் மறக்காமல் உபத்திரம் செய்வார்கள்,. பாஸ்போர்ட் புதுப்பிக்க அல்லாது அவுட் பாசில் நாட்டை விட்டு வெளியேற (travel document) போன்ற பணிகளுக்கு சென்றால் குறித்த காலத்தில் செய்து தருவதில்லை, இது போன்று பல விஷயங்கள். இந்திய அரசுதான் இதற்கு தக்க நடவடிக்கை எடுத்து உதவனும். #

இந்நாள், முன்னாள், துணை முதல்வர் தேர்தல் சிலவு கணக்கு!!

தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது தேர்தல் செலவுக் கணக்கை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளனர். சட்டசபைத் தேர்தலில் ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக ரூ.16 லட்சம் வரை செலவு செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது.

ஆனால் முதல்வர் ஜெயலலிதா, ரூ.9.5லட்சமும், திமுக தலைவர் கருணாநிதி ரூ.4.47 லட்சம் மட்டுமே செலவு செய்ததாக கணக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதா பொதுக் கூட்டங்களுக்காக-ரூ.20,650 துண்டுப் பிரசுரங்கள், போஸ்டர்கள், பிரச்சார வீடியோ-ஆடியோ செலவு-ரூ.14,170 டிவி, ரேடியோ, பத்திரிக்கை விளம்பரம்-ரூ.58,300 வாகன செலவு-ரூ.65,700 அலங்காரங்கள் மற்றும் பேனர்கள்-ரூ.32,300 செலவு செய்துள்ளார்

முன்னாள் முதல்வர் கருணாநிதி தேர்தலுக்காக ரூ.4,47,615 மட்டுமே செலவு செய்துள்ளதாகவும், இதில் வாகனங்களுக்கு மட்டும் ரூ.2 லட்சம் செலவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் வெறும் ரூ 3.32 லட்சம் மட்டுமே தேர்தலுக்காக செலவிட்டதாகவும், இதில் பொதுக் கூட்டங்களுக்காக ரூ.66,700ம் கட்அவுட்டுகள், பேனர்கள், அலங்கார வளைவுகளுக்காக வெறும் ரூ.980ம் செலவு செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தலுக்காக ரூ.7.97 லட்சம் செலவு செய்துள்ளதாகவும், காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ரூ.4.04 லட்சமும் செலவு செய்துள்ளதாக கணக்கு தாக்கல் செய்துள்ளனர்., மேலும் தேர்தல் ஆணைய வட்டாரத் தகவலின்படி 223 வேட்பாளர்கள் இதுவரை தங்கள் செலவுக்கணக்கை தாக்கல் செய்யவில்லை. அவர்கள் மீது 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடத் தடை உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தேர்தல் ஆணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Monday, June 20, 2011

பலான படமா பாலா, எதிர்ப்பு வலுக்கிறது !?

கடந்த 17ம் தேதி திரைக்கு வந்தபடம் அவன் இவன். பாலா படமா அல்லது பலான படமான என்று சந்தேகத்தை ஏற்படுத்தும் படமாக அவன் இவன் படம் அமைந்திருப்பதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தபடத்திற்கு சிங்கப்பட்டி ஜமீன் தரப்பில் இருந்து பயங்கர எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. அதாவது படத்தில் ஜமீன் தீர்த்தபதி என்று ஒரு கிராமத்தை காட்டுகிறார்கள். அதில் தீர்த்தபதி எனும் கேரக்டரில் நடித்திருப்பவர், குடிப்பது போன்றும், படத்தின் முடிவில் அவரை நிர்வாணமாய் ஓடவிடுவது போன்றும் காட்சி அமைப்புகள் உள்ளன. அதேபோல் மற்றொரு காட்சியில் சொரிமுத்து என்ற கேரக்டரை உருவாக்கி இந்த கோவிலை நம்பிதான் நீங்க வாழ்ந்திட்டிருக்கிறீங்க என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. இதற்கு அம்பை,ஆலங்குளம் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அம்பை,சிங்கை மற்றும் நெல்லையில் பல இடங்களில் இதுபற்றிய கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அவன்-இவன் படத்துக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக சிங்கம்பட்டி சமஸ்தானம் அறிவித்து உள்ளது.

மேலும் இதில் உள்ள வசனம் ஹிந்துத்துவ சிந்தனை : ஆர்.எஸ்.எஸ்.காரன் மாடு மற்றும் ஒட்டகக் கறி உண்பவர்களை மனுதர்ம அடிப்படையில் தண்டிக்க வேண்டும் என்கிறான். ஆனால் நமது பாலாவோ, ஒட்டக இறைச்சி சாப்பிடுபவனை, மாட்டிறைச்சி சாப்பிடுகிறவன் தண்டிக்க வேண்டும் என்று விரும்புகிறார். இராமகோபாலனுக்கே ஒரு படி மேலே போய் ‘இந்துத்துவ’ வகுப்பு எடுக்கிறார் நமது பாலா.

இந்த இடத்தில் ‘பாலா’வின் முந்தைய படைப்பான “நான் கடவுள்” திரைப்பட வசனம் நினைவுக்கு வருகிறது. ‘மாட்டுக்கறி தின்னாலும் மலையாளி புத்திசாலியாத்தாண்டா இருக்கான்’ என்று வில்லன் ஒரு வசனம் பேசுவான். அந்த வசனத்திற்கு முழுமுதற்பொறுப்பு ஜெயமோகன் என்னும் எழுத்தாளர். மேற்கூறிய வசனத்தில் இரண்டு செய்திகள் நாம் கவனிக்க வேண்டும்

(1) மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களுக்கு புத்தி கிடையாது. (2) மலையாளிகள் புத்திசாலி. ஜெயமோகன் மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என்று சொல்லும்போது, அவரின் இந்துத்துவ அரசியல் மனநிலை அப்பட்டமாக வெளிப்படுகிறது. அதே சமயம், தன்னுடைய மலையாளி இன பாசத்தையும் விட்டுக் கொடுக்காமல், மலையாளிகள் புத்திசாலிகள் என்று ஒரு கருத்தினை பதிவு செய்கிறார். எஸ்.ராமகிருஷ்ணன்தான் அவன் - இவன் படத்திற்கு செயமோகன் பாணியில் ஒரு வசனத்தை எழுதியிருக்கிறார்.##

காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா? புரோகிதர் மந்திரம் சொல்ல

காத்மாண்டு: நேபாள் நாட்டில் முதன்முறையாக இந்து கோயில் ஒன்றில் இந்து மதசடங்கு முறைப்படி அமெரிக்காவைச் சேர்ந்த ஒரினச்சேர்க்கை (‌லெஸ்பியன்) தோழிகள் இருவர் திருமணம் செய்துகொண்டனர்.

புரோகிதர் மந்திரம் சொல்ல , அங்குள்ள இந்து கோயில் அர்ச்சகர்கள் முன்னிலையில் இந்த திருமணம் நடந்தது. இந்த திருமணம் ஆசியாவின் முதன்முதலாக வெளிப்படையாக நடந்த லெஸ்பியன் திருமணம் என கூறப்படுகிறது. அமெரிக்காவின் கலேரோடோவைச் சேர்ந்தவர் கர்டினி மிட்செல் (41) இவர் ஒரு பேராசிரியராக பணியாற்றி வருகிறார். சாராவெல்டன் (48) இவர் அமெரிக்காவில் வக்கீலாக உள்ளார். இவரும் நீண்ட நாட்களாக நெருங்கிய தோழிகளாக இருந்துள்ளனர்.

இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதில் ஷாராவெல்டன் , நேபாள் வம்சத்து அமெரிக்க வாழ் பெண் ஆவார். எனவே அவரது விருப்படி நோபள் நாட்டிலேயே இந்து முறைப்படி திருமணம் செய்ய கர்டினி மிட்செல் சம்மதித்தார். இருவரும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நேபாள் வந்தனர். திருமணத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஷாப்பிங் செய்தனர். நேற்று காத்மண்டுவில் உள்ள தக்ஷின்காளி எனும் புகழ்பெற்ற இந்து கோயிலில் , இந்து சமய சடங்குகளின்படி, புரோகிதர்கள் மந்திரம் சொல்ல இவர்களது திருமணம் நடந்தது. இவர்களது திருமணத்தை நேபாள் நாட்டின் ஓரினச்சேர்க்கை திருமண உரிமையை ஆதரிக்கும், புளு டைமன்ட் சமூகம் மற்றும் பிங்க் மவுன்டைன் ,எனும் அமைப்புகள் முன்னின்று நடத்தி வைத்தது. இதில் இருவீட்டு குடும்ப உறுப்பினர்கள், திருநங்கைகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

இதற்கிடையே நேபாள் கோர்ட்டில் ஏற்கனவே ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அனுமதியளித்திருந்தது. அதுமட்டுமின்றி, ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் பெண் லெஸ்பியன்களுக்கு சட்ட பாதுகாப்புக்கென புதிய அரசியல் சட்டத்தையும் இயற்றியுள்ளது. இந்த லெஸ்பியன் திருமணம் ஆசியாவின் முதல் லெஸ்பியன் திருமணம் என கூறப்படுகிறது. இந்த திருமணம் மூலம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிலும் ஓரினச்சேர்க்கையாளர்கள்,லெஸ்பியன்கள் வருகை அதிகரிக்கும் அரசுக்கு அன்னிய செலாவணி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நேபாள் நாட்டில் நிலவுகிறது.

நீதி மன்றத்தையே அவமதித்தது தமிழக அரசு!

சமச்சீர் கல்வி திட்டம் முதல் கட்டமாக 1-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனிடையே, மற்ற வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்தப்படுத்துவது குறித்து நிபுணர் குழு அமைத்து 3 வாரங்களுக்குள் அறிக்கை சமர்பிக்கும்படியும் அதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.,இதனால் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தமிழக அரசு மீது ஆசிரியர் மனோன்மணியம் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார் .

அதில் 1-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்பு பாடப் புத்தகங்களில் சில பக்கங்கள் கிழிக்கபடுவதாகவும் , திருத்தம் செய்யபடுவதாகவும், சமச்சீர் கல்வியினை நடைமுறைப்படுத்தாமல் கடந்த ஆண்டு பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருகின்றன.,மேலும், சமச்சீர் கல்வி வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. ஆனால் நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு அவமதிப்பு செய்கின்றது என கூறியுள்ளார்.

#தன்னுடைய சொத்து குவிப்பு வழக்கில் ஒரு தடவை கூட கோர்ட் வாசலை மிதிக்காதவர் இது எம்மாத்திரம்.#

Sunday, June 19, 2011

இந்திய டாக்டர் ஒருவரை தேடும் பனி மும்முரம் அமெரிக்க எஃப் பி ஐ

சிகாகோ, ஜூன்.20: இந்தியாவில் பிறந்த டாக்டர் கெளதம் குப்தாவை அமெரிக்காவின் எஃப் பி ஐ தீவிரமாகத் தேடி வருகிறது. அவரைப் பிடிக்குமாறு சர்வதேச போலீசையும் அமெரிக்கா உஷார்படுத்தியுள்ளது.

டாக்டர் கெளதம் குப்தாவின் எடைக் குறைப்பு விளம்பரங்கள் மிகவும் பிரபலமானவை. அவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க இன்சூரன்ஸ் நிறுவனங்களை 25 மில்லியன் டாலர் அளவுக்கு மோசடி செய்துள்ளதாக எஃப்பிஐ குற்றம்சாட்டியுள்ளது.

புளு கிராஸ், இல்லினாய்ஸ் புளு ஷீல்டு மற்றும் இல்லினாய்ஸ் மெடிகெய்ட் ஆகிய நிறுவனங்களில் அவர் போலியாக உரிமை கோரியதாக சிகாகோ டிரிபியூன் தெரிவிக்கிறது., மெடிகெய்ட் குறைந்த வருவாய் உடைய குடும்பங்களுக்கான ஓர் அமெரிக்க மருத்துவத் திட்டமாகும். இதற்கு அமெரிக்க அரசும், பல்வேறு மாநிலங்களும் நிதி உதவி அளிக்கின்றன. மாநில அரசால் இந்த் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மோசடி செய்ததாக குப்தா மீது புகார் வந்ததையடுத்து, அவருடைய மருத்துவமனையின் முன்னாள், இந்நாள் ஊழியர்கள் மற்றும் நோயாளிகளிடம் எஃப்பிஐ அதிகாரிகளும், இல்லினாய்ஸ் மாநில போலீசாரும் விசாரணை நடத்தினர்., கெளதம் குப்தா தற்போது எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என எஃப்பிஐ செய்தித்தொடர்பாளர் ரோஸ் ரைஸ் தெரிவித்தார்.

குப்தாவின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 35 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம் என சிகாகோ டிரிபியூன் தெரிவிக்கிறது,. குப்தா அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என ஸ்பிரிங்ஃபீல்டு நீதிமன்றத்தில் அமெரிக்க போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடைசி ச்சான்ஸ் கலைஞருக்கு...!?

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்றதாகக் கூறப்படும் டி.பி.ரியாலிட்டி நிறுவனம், அதற்குப் பிரதிபலனாக தனது துணை நிறுவனங்கள் மூலம் கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி வழங்கியதாக சிபிஐ துணைக் குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள கனிமொழியும், சரத்குமாரும் ஜாமீன் கோரி தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அவர்களது மனுக்களை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து இருவரும் தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஆனால், தில்லி உயர் நீதிமன்றமும் அவர்களது மனுக்களை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று சிபிஐ தரப்பில் கடந்த 17-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கனிமொழியும், சரத்குமாரும் முக்கிய சதியாளர்கள். அவர்களை விடுவித்தால் சாட்சிகளையும், ஆதாரங்களையும் அழித்து விடுவார்கள், எனவே அவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று சிபிஐ மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் டி.வி.க்கு பரிமாற்றம் செய்யப்பட்ட ரூ.214 கோடி ஊழல் பணம்தான், இருவரும் கூறுவதுபோல் கடன்தொகை அல்ல என்றும் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. சிறப்பு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் ஜாமீன் மனுக்களை தீவிரமாகப் பரிசீலித்து தள்ளுபடி செய்து விட்டன. 2ஜி வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இருவருக்கும் ஜாமீன் வழங்குவது முறையாக இருக்காது என்று சிபிஐ தனது மனுவில் மேலும் கூறியுள்ளது. இந்தப் பின்னணியில் கனிமொழி, சரத்குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற உள்ளது.

சிறுமியை சீறலளித்த காவல்துறையின் காமுகன்

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் சமீபத்தில் 14 வயது சிறுமி போலீஸ் நிலையத்தில் கற்பழித்து கொல்லப்பட்டார். இந்த நிலையில் அங்கு மீண்டும் ஒரு கொடூரம் சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

உத்தரபிரதேச மாநிலம் கன்னூஜ் மாவட்டம் குர்புர்வா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரீத்தி. 14 வயதான அவளை அந்த கிராமத்தைச் சேர்ந்த குல்தீப், நிரஞ்சன் ஆகியோர் கற்பழிக்க முயன்றனர். இதை தடுக்க சிறுமி போராடினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் சிறுமியின் கண்களை கத்தியால் குத்தி கற்பழித்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் அந்த சிறுமியின் இடது கண் பார்வை பறிபோனது. வலது கண் அதிகமாக சேதம் அடைந்து உள்ளது.

இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்ய மறுத்த சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் ஆகிய 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

காவல்துறையை கிலி பிடிக்கச்செய்யும் தமிழக அரசு!!

திருவனந்தபுரம்:கேரள மாநில காவல் துறையில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முதல், அனைத்து உயரதிகாரிகளும் தங்களது சொத்துக் கணக்கு விவரங்களை, தங்களது மேல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என, மாநில டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.

மாநிலத்தில் பல்வேறு மோசடி நிதி நிறுவனங்களில், கேரள மாநில காவல் துறையைச் சேர்ந்த சிலர், பங்குதாரர்களாக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, நிதி முதலீடு சம்பந்தமான எந்த நிறுவனங்களையும் மறைமுகமாக நிர்வகிக்கவோ, பங்குதாரர்களாகவோ கூடாது என, மாநில போலீஸ் டி.ஜி.பி.,ஜேக்கப் புன்னூஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும், மாநில காவல் துறையில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முதல், அவருக்கும் மேல் உள்ள அனைத்து உயரதிகாரிகளும் தங்களது சொத்துக் கணக்கு விவரங்களை உடனடியாக தங்களது மேல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

மாநிலத்தில் பல்வேறு நிலைகளில் உள்ள போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த உத்தரவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.போலீசார் இடமாற்றத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என, போலீஸ் சங்கத்தின் சார்பில் முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது என்றாலும் அதை அவர் நிராகரித்து விட்டார். போலீஸ் உயரதிகாரிகள் இடமாற்றம் தொடர்ந்து நடந்து வருகிறது.

Saturday, June 18, 2011

ஆப்ரேசன் செய்து அசத்திய இங்கிலாந்து விஞ்ஞானிகள், வயது 20

இங்கிலாந்தை சேர்ந்தவர் பெக்கி ஜோன்ஸ். 20 வயது பெண்ணான இவர் கடுமையான மூச்சு திணறல் நோயினால் அவதிப்பட்டார். இவரை தெற்கு மான்லுஸ்டரில் உள்ள பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவரது நுரையீரலில் பூஞ்சைக்காளான் நோய் பாதித்து இருப்பதை கண்டறிந்தனர். எனவே, நுரையீரலில் உள்ள பூஞ்சைக்காளானை அகற்ற மருந்து மாத்திரைகளை வழங்கினர்.ஆனால், அந்த நோய் குணமாகவில்லை. மாறாக அதிக அளவில் பரவியது. முன்பை விட மூச்சு திணறல் அதிகமானது.

எனவே நுரையீரல் மாற்று ஆபரேசன் நடத்த முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து பெக்கி ஜோன்ஸ்சுக்கு நுரையீரல் மாற்று ஆபரேசனை வெற்றிகரமாக செய்து முடித்தனர். தற்போது அவர் எந்தவித பிரச்சினையும் இன்றி வழக்கமாக சுவாசிக்கிறார்.

இதற்கு முன்பு அமெரிக்காவில் 2 வயது சிறுவனுக்கு செயற்கை நுரையீரல் பொருத்தப்பட்டது. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இந்த அறுவை சிகிச்சையை நிகழ்த்தினர். அதுவே மிகப்பெரிய சாதனையாக கருதப்பட்டது. தற்போது உலகிலேயே முதல்முறையாக நுரையீரல் மாற்று ஆபரேசன் செய்து இங்கிலாந்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இந்நாள் முதல்வருக்கு முன்னாள் முதல்வர் எழுதிக்கொள்வது

முதல்-அமைச்சராக 3 வது முறை பதவியேற்றுள்ள ஜெயலலிதா தனனை பக்குவப்படுத்தி கொள்ள வேண்டும் , தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச்செயலகத்தை ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றியது தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்தினால் தான் புதிய தலைமைச்செயலகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பணத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தை புறக்கணிப்பது என்பது மக்களையே அவமதிப்பது போல் ஆகும். தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்ட பல பாலங்களில் தான் முதல்வரின் கார் செல்கிறது . கோட்டையில் உள்ள நாமக்கல் கவிஞர் கட்டடம் தி.மு.க., ஆட்சிகாலத்தில் கட்டப்பட்டது. ஜெயலலிதாவின் பிடிவாதம் அவரது பதவிக்கு அழகல்ல என்று கூறியுள்ளார்.

உள்ளமே உங்களுக்குத்தான் உருகிப்போன ரஜினி

சென்னை : உங்களை மகிழ்விப்பது தான் என் லட்சியம்' என, ரசிகர்களுக்கு நடிகர் ரஜினி கடிதம் எழுதியுள்ளார்,சிறுநீரக கோளாறு காரணமாக சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினி, தீவிர சிகிச்சைக்குப் பின் உடல் நலம் தேறி, மருத்துவமனையிலிருந்து திரும்பியுள்ளார். தற்போது, சிங்கப்பூரில் தங்கியுள்ள அவர், தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆகியோருடன் தொலைபேசி மூலம் பேசிய ரஜினி, ரசிகர்களுக்கு தன் கைப்பட நான்கு பக்க கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:வாழ்க்கை என்ற விளையாட்டில், காசை மேலே சுண்டிவிடுவது தான் மனிதனின் வேலை, அது கீழே விழும்போது, பூவா, தலையா என்பதை ஆண்டவன் முடிவு செய்கிறான்., என் மீது அவர்கள் காட்டிய அன்பும் தான், என்னைக் காப்பாற்றி உள்ளது. விரைவில், "ராணா' படம் மூலம் ரசிகர்களை மகிழ்விப்பேன். அது தான் என் லட்சியம். இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.

ரசிகர்களுக்கு கடிதம் எழுதுவதற்காக, பேப்பர் மற்றும் பேனாவை கொண்டு வரச் சொல்லி, ரஜினியே கடிதத்தை எழுதியதாக, ரஜினியின் பி.ஆர்.ஓ., கூறியுள்ளார்.உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை இசபெல்லா மருத்துவமனையில் ஏப்ரல் 29ம் தேதி ரஜினி சேர்க்கப்பட்டார். அன்றைய தினமே வீடு திரும்பிய ரஜினி, மீண்டும் இசபெல்லா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து, சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு, மே 13ம் தேதி மாற்றப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனைக்கு, மே 27ம் தேதி சென்றார்.

உலகெங்கும் அகோரமாய் காட்சி அளிக்கும் பயங்கரவாதம்!?

பாஞ்ச்குலா: சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆர் எஸ் எஸ் தீவிரவாதி லோகேஷ்குமார் சர்மாவுக்கு காவல் நீடிக்கப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலம் பானிபட் அருகில் உள்ள திவானா கிராமத்தில் கடந்த 2007-ம் ஆண்டு சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்தில் 68 பேர் இறந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள். ÷இது தொடர்பாக ஹிந்து தீவிரவாதி சுவாமி அசீமானந்தா கைது செய்யப்பட்டு அம்பாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆர் எஸ் எஸ் தீவிரவாதி லோகேஷ்குமார் சர்மா கடந்த மே மாதம் 15-ம் தேதி கைது செய்யப்பட்டார். இவரிடம் போலீஸôர் தீவிர விசாரணை நடத்தினர். சனிக்கிழமை இவர் பாஞ்குலா கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு ஜூலை 1-ம் தேதி வரை காவலில் வைக்கப்பட்டார்.
------------------------
# கோத்ராவிற்க்கப்புறம் குஜராத்தில் நடந்தது தற்செயல் அல்ல. ஏதோ கட்டுப்படுத்த முடியாத, திட்டமிடப்படாத சமூக வன்முறையுமில்லை. வேண்டுமென்றே ஒரு இன மக்களை அழிக்கப் போடப்பட்ட செயல் திட்டம். ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட படுகொலைகள்.

திட்டமிட்டபடி, தொலை நோக்குப்பார்வையுடன் நகர்ப்புறம், கிராமப்புறம் என்ற எந்த வித்தியாசமுமின்றி முஸ்லிம்கள் வாழும் பகுதிகள் குறிவைக்கப்பட்டது. பெருமளவில் காவிக்கும்பல் ஒரே நோக்கத்தின்கீழ் ஒன்று சேர்ந்தது. எந்த வகையிலேனும் முஸ்லிம்களை கொல்லவேண்டும். குத்தி, கிழித்து முடமாக்கப்பட்டபின் உயிரோடோ, இல்லாமலோ எரியூட்டினார்கள்.

இதில் பங்கெடுத்துக்கொண்ட காவிக் கும்பல்களில் சிலர் தெஹல்காவிடம், இஸ்லாம் எரியூட்டுவதை அனுமதிக்கவில்லை என்பதால் முஸ்லிம்களை உயிரோடு எரித்துக் கொல்வதிலேயே ஆனந்தமடைந்ததாக சொன்னார்கள்.

பெப்ருவரி 27 க்குப்பிறகு, மூன்று நாட்கள் குஜராத்தின் பிஜெபி அரசை இந்துத்வ காவிக்கும்பல் கையிலெடுத்துக்கொண்டு, காட்டுமிராண்டித்தனத்தின் உச்சக்கட்டதிற்க்கு இட்டுச்சென்றது. ஆர்எஸ்எஸ், விஹெச்பி, பஜ்ரங்தள், கிசான் சங்க், அகிலபாரதீய வித்யார்தி பரிஷத், பிஜெபி, கட்சிகளின் உறுப்பினர்களைக் கொண்ட கொலைப்படை உருவாக்கப்பட்டது. மாநிலமெங்கும் பள்ளிவாசல்கள், தர்காக்கள் அழிக்கப்பட்டன. 73 முஸ்லிம் வழிபாட்டுத்தலங்கள் அஹமதாபாதில் மட்டும் தீக்கிரையாக்கப்பட்டது. சபர்கந்தாவில் 55 ம் வடோடராவில் 22ம் பின்னர் கொளுத்தப்பட்டது.

மஹாத்மாவின் பூமிக்கு நீங்கா களங்கத்தை ஏற்படுத்திய இந்த காவிக் கும்பல் அடியாட்கள் இரு வகைப்பட்டனர். திரைமறைவிலிருந்து சதித் திட்டம் தீட்டிய கட்சிநிர்வாகிகள் மற்றும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சிசுக்கொலைகள் நடத்திய காலாட்படை. சிலசமயம் தலைவர்களே காலாட்படையிலும் தைரியமாக பங்கெடுத்தார்கள் இதையெல்லாம் முன்னின்று நடத்தி ஆலோசனை வழங்கியது ஒரு மாநில முதல்வர் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை, ஆகையால் இவரை மோடி என்பதற்கு பதிலாக நரமாமிச கேடி என்பதே பொருத்தமான இருக்கும் #

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!