Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, June 14, 2011

பயங்கரவாதத்தை உருவாக்குவது பயங்கரவாதிகளே? ஹெட்லி

குஜராத் கலவர விடியோ காட்சிகளால் பயங்கரவாதி ஆனதாக லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த டேவிட் ஹெட்லி சிகாகோ நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

லஷ்கர் அமைப்பின் தலைமையிடமான பாகிஸ்தானின் முஸபராபாத் நகரில் நடைபெற்ற முகாமில் கலந்து கொண்டேன். அப்போது, 2002-ல் நடைபெற்ற குஜராத் கலவர விடியோ காட்சிகளை காண்பித்து என்னைப் போன்றோரை இந்தியாவுக்கு எதிராக செயல்படத் தூண்டினார்கள்.

கூட்டம் கூட்டமாய் முஸ்லிம்களை கொலைசெய்ய உற்சாகமூட்டியதும், பொருளாதாரத்தை சூறையாட ஆலோசனை வழங்கியதும் நரேந்திரமோடியின் நேரடி உத்தரவுகளே! மேலும், முஸ்லிகளை கொலை செய்தவர்களையும், அவர்களை கற்பழித்தவர்களை பாராட்டி பாதுகாப்பும் அளித்ததும் இந்த நரேந்திர மோடியே தான்.
குஜராத்தில் மக்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்படுவதையும், வீடுகள் தீக்கிரையாக்கப்படும் காட்சிகளும் எனது மனதைப் பாதித்தது.
விசுவ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த பாபா பஜ்ரங்கி என்பவரின் பேச்சை ரகசியமாக படம் பிடித்த விடியோ காட்சிகளையும் காண்பித்தார்கள். அதில், ஏராளமான முஸ்லிம் பெண்களைக் கொன்றதாகவும், வீடுகளுக்கு தீ வைத்ததாகவும் பாபா பஜ்ரங்கி கூறுகிறார்.

பாபர் மசூதி இடிப்பு விடியோ காட்சிகளையும் காண்பித்தார்கள். பல வாரங்களாக அந்த விடியோ காட்சிகளை மட்டுமே ஒளிபரப்பினார்கள். மனித குலமே வெட்கப்படும்படி இந்துத்துவ தீவிரவாதிகள் நரேந்திரமோடியின் உதவியுடன் தாங்கள் செய்த படுகொலைகளையும் கற்பழிப்புகளையும் பெருமையுடன் விவரிக்கும் காட்சிகளை காணும் யாருமே அதிர்ச்சியடையாமல் இருக்கமுடியாது. ஒவ்வொரு விடியோவும் முடிந்த பின்னரும் அது குறித்து விவாதித்துபோம், இவ்வாறு ஹேட்லி கூறினார்.

# பயங்கர வாதிகள் உருவாகப்படுகிறார்கள், ஹிந்துத்துவா சக்திகளினால்., குஜராத்தின் நரேந்திர கேடி போல் முதல் அமைச்சராக இருந்தால் இன்னும் பலபேர் உருவாக்குவான் இந்த ஹிந்துத்துவா கேடிகளினால்., நாட்டில் நடந்த குண்டுவெடிப்புகள் அனைத்தும் ஹிந்துத்துவா சக்திகள்.

ஆணவ(காரிக்கு)த்துக்கு ஆப்பு வைத்த உச்ச நீதிமன்றம்!

தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமச்சீர் கல்வி இந்த ஆண்டும் தொடர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1 மற்றும் 6ம் வகுப்புகளூக்கு இந்த ஆண்டும் சமச்சீர் கல்வி தொடர வேண்டும். இதர வகுப்புகளில் சமச்சீர் கல்வி அமல் செய்வது பற்றி ஆராய நிபுணர் குழு அமைக்க வேண்டும். நிபுணர் குழு 3 வாரத்திற்குள் அறிக்கையை தாக்கல் செய்யவும்.

நிபுணர் குழு அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். நிபுணர் குழு அறிக்கை மீது உயர்நீதிமன்றம் தினமும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

* இதைத்தான் உயர் நீதி மன்றம் ஏற்கெனவே சொன்னது. கூத்தாடிகளும் அறிவற்றவர்களும் நாட்டை அள்வதால், பாதிக்கபடுவது மாணவர்களும் பெற்றோர்களும் தான். இபோதாவது புறிந்தால் சரி.

பெண் சவாரி செய்தவர் புதிதாக ஆசைப்பட்டு விழுந்தார், சாமியார் நித்யா

பெங்களூர் : சாமியார் நித்யானந்தா குதிரை சவாரி செய்யும் போது, குதிரை மிரண்டு கீழே தள்ளியதால், அவரது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, பெங்களூர் மருத்துவமனையில் ஆபரேஷன் செய்யப்பட்டது.

பிடதி நித்யானந்தா தியான பீட ஆசிரமத்தில் இன்று குதிரை சவாரி செய்த போது, குதிரை மிரண்டதில் சாமியார் நித்யானந்தா கீழே விழுந்தார். இதில் அவரது கையில் எலும்பு முறிவு இருக்கும் என, டாக்டர்கள் கூறியதால், காலை 11 மணிக்கு, பெங்களூர் மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இங்குள்ள வி.ஐ.பி.,க்கள் அறையில், அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

Monday, June 13, 2011

தமிழகத்தில் மீண்டும் தலை தூக்கும் தேவதாசி முறை!

இந்தியாவின் வட மாநிலங்களான ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்பட சில இடங்களில் இன்றும் தேவதாசி முறை பின்பற்றப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் இந்த முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில், தற்போது விழுப்புரத்தில் ஒரு ஊரில் சிறுமியை தேவதாசியாக மாற்ற முயற்சி நடந்ததாக தகவல்கள் வெளியானது. இந்த செய்தியை கண்டு மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து, இந்த சம்பவத்தை ஒரு வழக்காக எடுத்துக் கொண்டது.

இதனை மனித உரிமைகள் ஆணைய நீதிபதி வெங்கடாசலமூர்த்தி, உறுப்பினர்கள் செல்வக்குமார், பரமசிவன் ஆகியோர் விசாரித்தனர். விசாரணைக்கு பிறகு நீதிபதி, தேவதாசி முறை தமிழகத்தில் முற்றிலும் ஒழிக்கப்பட்ட பிறகு எப்படி இது போல் நடக்கிறது.

இந்த சம்பவம் பற்றியும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு என்ன நிகழ்ந்தது என்பது பற்றியும் தமிழக சமூக நலத்துறை உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இந்த விளக்கத்தை 4 வாரத்துக்குள் ஆணையத்தில் அளிக்க வேண்டும்“ என்று உத்தரவிட்டார். இது தொடர்பாக தமிழக சமூக நலத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பார்ப்பன புரட்டில் இதுவும் ஒன்று?

அல்சர் பற்றி அறிந்து கொள்ளவேண்டியவை

வயிற்றுப்புண் இருவகையில் ஏற்படுகிறது. அவை உணவு முறை, மன அழுத்தம், உணவு முறையில் மாறுபாடு கொண்டவர்களில் முதலில் பாதிக்கப்படும் உறுப்பு வயிறுதான்.

நேரம் கடந்த உணவு, அதிக பட்டினி, எளிதில் ஜீரணமாக உணவு, அதிக உணவு போன்ற காரணங்களால் வயிற்றில் புண் உண்டாகிறது. அதுபோல் மன அழுத்தம், மன எரிச்சல், அதிக கோபம், பயம், வெறுப்பு இவைகளாலும் வயிற்றில் புண் உண்டாகிறது. மலச்சிக்கல், அஜீரணக் கோளாறும் வயிற்றில் உள்ள அபாய வாயுவை சீற்றமடையச் செய்து வயிற்றுப்புண்ணை உண்டாக்குகிறது.

* அதுபோல் மனம் சம்பந்தப்பட்ட காரணங்களால் இயல்புக்கு மாறாக சுரப்பிகள் அதிகம் நீரைச் சுரந்து வயிற்றுப் பாதிப்பை உருவாக்குகிறது.

* உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டும்.

* அதிக சூடான பானங்களை, குடிக்கக்கூடாது. அதுபோல் வேகமாகவும் அருந்தக்கூடாது.

* சூடான உணவுப்பொருட்களை சாப்பிடக்கூடாது.

* அதிக குளிரூட்டப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.

* புளி, காரம் இவற்றை கண்டிப்பாக குறைத்துக்கொள்ள வேண்டும்.

* மது, போதை, புகை போன்றவை இரைப்பையை பாதித்து, குடல்களில் புண்களையும் உண்டாக்கும்.

* எளிதில் ஜீரணமாகாத உணவுகளை தவிர்த்து, எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்ண வேண்டும்.

* பசித்த பின் உணவு அருந்த வேண்டும். அதிகமாக உணவு அருந்தக்கூடாது.

* அதிகமாக புளித்துப்போன உணவுகளைச் சாப்பிட வேண்டாம். இரவில் புளித்த தயிர், மோர் கெடுதலை ஏற்படுத்தும்.

* கோபம், டென்சன், எரிச்சல், அதிக பயம் இவற்றை குறைத்துக்கொள்ள வேண்டும்.

* தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்­ணீராவது குடிக்க வேண்டும்.

மேற்கண்ட நடைமுறைகளை சரியாக கடைப்பிடித்து வந்தால் வயிற்றுப்புண் ஏற்படாமல் ஆரோக்கியமாக வாழலாம்., படித்ததுபோல் இன்றுமுதல் கடை பிடிப்போமா.

சூப்பர் ஸ்டாருக்கு அடுத்து தளபதிக்குத்தான் உலகெங்கும் ரசிகர்கள்

ஷாங்காய் நகரில் நடந்த திரைப்பட விழாவில் விஜய்யின், "காவலன்" படத்தை பார்த்த ரசிகர்கள் கடைசி 20 நிமிடங்களில் கண்கலங்கி போனார்கள் என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் விஜய். சீனாவின் ஷாங்காய் நகரில் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. அதில் விஜய் நடித்த காவலன் படமும் திரையிடப்பட்டது. விழாவில் காவலன் படம் ஆங்கில மற்றும் சீன மொழி சப்-டைட்டிலுடன் இந்த படம் திரையிடப்பட்டது. இந்தவிழாவில் நடிகர் விஜய்யும் கலந்து கொண்டார். சர்வதேச திரைப்பட விழாக்களில் விஜய் பங்கேற்பது இதுதான் முதன்முறை.

விழாவில் பங்கேற்ற விஜய் பேசியதாவது, ஷாங்காய் பட விழாவில் "காவலன்" படம் பங்கேற்றது, அந்தவிழாவில் நானும் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது எனக்கு ஒரு புதுமையான அனுபவத்தை தந்தது. நடிகர், மொழி, தேசம் இவற்றை கடந்து ஒரு நல்ல படம் எந்த நாட்டு மக்களையும் கவரும் என்பதற்கு இது ஒரு உதாரணம். படத்தின் ஒவ்வொரு காட்சியையும் இங்குள்ள சீனர்கள் ரசித்தனர். குறிப்பாக காமெடி காட்சிகளை பார்த்து விழுந்து, விழுந்து சிரித்தது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. படத்தின் கடைசி 20 நிமிடங்கள் அமைதியாக ரசித்த ரசிகர்கள் கண் கலங்கி போனார்கள். படம் முடிந்ததும் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்கள். படம் பார்த்து முடித்ததும் என் கேரக்டரான பூமி பெயரைச் சொல்லி அனைவரும் பாராட்டியது எனக்கும் மிகழ்ச்சியாகவும், அதேசமயம் பெருமையாகவும் இருந்தது. மொத்தத்தில் என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக இந்த விழா அமைந்தது.

உலக சூப்பர் ஸ்டார் ஜாக்கிசானுக்கு இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் ரசிகர்கள் அதிகம். நான் படிக்கும்போது அவருடைய படங்களை நிறைய பார்த்து ரசித்திருக்கிறேன். இன்று அவரது ஊரில், நான் நடித்த காவலன் படம் திரையிடப்பட்டது பெரும் பாக்கியமாக கருதுகிறேன். இங்குள்ள ரசிகர்களை என் வாழ்வில் மறக்க மாட்டேன். இவ்வாறு விஜய் பேசினார்.

விஜய்யின் பேச்சுக்கு அனைவரையும் கவரே, எல்‌லோரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். ஷாங்காய் திரைப்பட குழுவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவு பரிசு ஒன்றை விஜய் வழங்கினார். இவ்விழாவில் காவலன் படம் பங்கேற்ற உறுதுணையாக இருந்த ரேக்ஸ் அவர்களுக்கு விஜய் தமது நன்றியை தெரிவித்து கொண்டார்.

Sunday, June 12, 2011

இன்னும் 10 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது இந்திய அணியை

அன்டிகுவா, ஜூன் 13 சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களில் இந்திய வீரர்களின் ஆதிக்கம் 10 ஆண்டுகளுக்கு தொடரும் என்று அணியின் பயிற்சியாளர் டங்கன் ஃபிளெட்சர் கூறியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள அன்டிகுவா நகரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தியாவில் மிகத் திறமையான கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் இந்திய அணி மிகவும் பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. எனவே, சர்வதேச கிரிக்கெட்டில் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்கு இந்திய அணியின் ஆதிக்கம் தொடரும். என்று டங்கன் ஃபிளெட்சர் கூறினார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில், 3 போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கை பேசியில் பேசியினால் மட்டுமல்ல , டெக்ஸ்ட்டிலும் வரும் பாதிப்பு!

பொதுவாக செல்போனில் எஸ்எம்எஸ் அனுப்புவதும், பெறுவதும் ஆபத்தில்லாததாகக் கருதப்படுகிறது. ஆனால் சமீபத்திய ஆய்வுகள் தொடர்ச்சியாக எஸ்எம்எஸ் அனுப்புவதாலும், படிப்பதாலும் தூக்கமின்மை, படபடப்பு, கோபம் முதலியவை ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளன.

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த "மகாத்மா காந்தி நினைவு மருத்துவக் கல்லூரியைச்' சேர்ந்த சமூக மருத்துவவியல் துறைத்தலைவர் சஞ்சய் தீட்சித் இது பற்றிக் கூறியதாவது, தொடர்ச்சியாக எஸ்எம்எஸ் அனுப்புவதினால் இளைஞர்களுக்கு மன அழுத்தமும், பயமும் ஏற்படுகிறது. 18-லிருந்து 25 வயது வரையுள்ள 150 இளைஞர்களிடத்தில் ஆய்வு செய்ததில் இது தெரியவந்துள்ளது.

தொடர்ச்சியாக எஸ்எம்எஸ் அனுப்புவதினால் தினசரி வேலைகளும், படிப்பும் பாதிக்கப்படுவதாக இளைஞர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். மேலும் ஆழ்ந்து உறங்க முடியவில்லை என்பதை அவர்கள் உணர்கிறார்கள். இளைஞர்கள் எஸ்எம்எஸ் அனுப்பிவிட்டு அதற்கான பதில் வரவில்லையென்றால் மனதளவில் பாதிப்படைந்து, யாரும் தங்களுடன் தொடர்பில் இல்லையென்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.

பதில் எஸ்எம்எஸ்ஸýக்காக இளைஞர்கள் செல்போனை சோதித்துப் பார்ப்பதும், பதில் வரவில்லையெனில் கவலையடைவதும் "டெக்ஸôடாஃபிரேனியா' என்று அழைக்கப்படும் என்றார்.

இளைஞர்களில் பெரும்பாலோர் அதிக எஸ்எம்எஸ் அனுப்புவதற்காகக் கட்டணம் குறைவாக உள்ள திட்டங்களையே தேர்ந்தெடுப்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

தூக்கம் கண்ண கட்டுது.

கொள்ளை அடிக்கும் கல்வி நிறுவனத்தை கட்டுப்படுத்துவது எப்படி?

தனியார் பள்ளிகள் கட்டணம் குறித்து மேல் முறையீடு செய்த 6400 பள்ளிகளுக்கான திருத்திய கட்டணம் நாளை வெளியாகிறது. புதிய கட்டணங்கள் எப்படி நிர்ணயிக்கப்பட்டது என்பது குறித்தும் கட்டணக் குழு நாளை விளக்கம் அளிக்க உள்ளது.

தமிழகத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளின் கட்டணத்தை முறைப்படுத்த நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கட்டணக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு நடத்திய விசாரணையின் அடிப்படையில் கடந்த ஆண்டு மே மாதம் 7ம் தேதி தனியார் பள்ளிகள் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்த கட்டணத்தில் தங்களுக்கு திருப்தி இல்லை என்று 6400 பள்ளிகள் மேல் முறையீடு செய்தன.

பின்னர், கட்டணக் குழுவின் தலைவராக நீதிபதி ரவிராஜபாண்டியன் பொறுப்பேற்றார். அவர் 15.11.2010 முதல் 4.5.2011 வரை பள்ளி நிர்வாகிகளிடம் நேர்காணல் நடத்தினார்.

நேர்காணலின் போது ஒவ்வொரு பள்ளியும் அளித்த விவரங்கள், மேல் முறையீடு செய்தபோது அளித்த விவரங்கள், நேர்முகத் தேர்வின்போது அளித்த விவரங்கள் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து ஆடிட்டர்களின் தணிக்கைக்கு உட்படுத்தி மீண்டும் அவற்றை கட்டணக் குழு சரிபார்த்தது. இதையடுத்து கடந்த சில நாட்களாக இறுதி ஆணை தயாரித்து முடிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து புதிய கட்டணத்தை வெளியிட அரசு அனுமதி வழங்கியது.

இதையடுத்து மேல் முறையீடு செய்த மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், ஐசிஎஸ்இ பள்ளிகள் அடங்கிய 6357 பள்ளிகளுக்கு இறுதி ஆணைகள் தயார் நிலையில் உள்ளன. இறுதி ஆணைகள் நாளை (13ம் தேதி) அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.

நாளை காலை 10.30 மணி அளவில் டிபிஐ வளாகத்தில் உள்ள கட்டணக் குழு அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இறுதி ஆணைகள் அடங்கிய கவர்களை பெற்றுக் கொள்வார்கள். அதன் பின் அந்தந்த மாவட்டங்கள் ஏதாவது ஒரு மையத்துக்கு அந்தந்த பள்ளிகளை வரவழைத்து இறுதி ஆணைகளை முதன்மை கல்வி அலுவலர்கள் வழங்குவார்கள்.

மேல் முறையீடு செய்த பள்ளிகள் நேர்காணலின்போது கொடுத்த விவரங்களை அடிப்படையாகக் கொண்டும், கட்டண நிர்ணய சட்டப்படியும் பள்ளிகளுக்கு ஏற்ப தற்போது கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கு முன்பு எவ்வளவு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. மேல் முறையீட்டுக்கு பின்னர் தற்போது எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து நாளை தெரியும்.

நீதிபதி ரவிராஜ பாண்டியன் தலைமையிலான குழு நாளை இது குறித்து விளக்கம் அளிக்க உள்ளது., ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியாக கட்டணம் நிர்ணயம் செய்யப் பட்டுள்ளதால் அந்தந்த பள்ளிகள் கட்டணம் குறித்த விஷயங்களை பள்ளி தகவல் பலகையில் ஒட்ட வேண்டுமா, ஏற்கெனவே வசூலித்த கட்டணம் அதிகமாக இருந்தால் அதை திரும்ப மாணவர்களுக்கு கொடுக்க வேண்டுமா, இந்த கட்டணத்திலும் திருப்தி இல்லை என்றால் மீண்டும் மேல் முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்படுமா என்கிற சந்தேகங்களுக்கு நாளை பதில் கிடைக்கும் என்று தெரிகிறது.

Saturday, June 11, 2011

குழந்தை தொழிலார்களை ஒழிப்போம், நம் அனைவருடைய கடமை

குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றிடுவோம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி, அவர்களின் வாழ்வில் ஒளியேற்றுவோம்.

குழந்தை தொழிலாளர் முறை நமது நாட்டில் அறிவும், வலிமையும், பொருந்திய தலைமுறையாக உருவாக வேண்டிய ஆயிரக்கணக்கான குழந்தைகள், கடும் உடல் உழைப்பின் சுமையால் நசுக்கப்படுகின்றனர். இக்குழந்தைகளை உடல் உழைப்பின் நிர்பந்தத்திலிருந்து விடுவித்து, அவர்களுக்கு இயல்பான வளர்ச்சியை செய்வது நமது தலையாய கடமை.

குழந்தை பருவம் என்பது குழந்தைகளுக்கு இயற்கையாகவே அமைந்திட்ட உரிமை. அந்த உரிமையை அவர்களிடமிருந்து பறிப்பது இயற்கை நியதிக்கும், சமூகநீதிக்கும் புறம்பானது என்பதை கருத்திற்கொண்டு, உலகெங்கும் ஜூன் 12ம் தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் நாம் அனைவரும் நம் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப உறுதி ஏற்போம்.

குழந்தைகள், பணிக்கு செல்வதைக் கண்டால் அவர்களை தடுத்து பள்ளிக்கு அனுப்பி வைப்போம். குழந்தைத் தொழிலாளர் முறை என்னும் சமூக அவலம் நீக்கப்பட, சமுதாயத்தில் உள்ள அனைவரும் உறுதியேற்போம். நம் ஒவ்வொருவரின் கடமையும் கூட, சிந்திப்பீர் பெற்றோர்களே.

பேச்சு போட்டியின் பலன், பறக்க சான்ஸ் கிடைத்தது அமெரிக்காவுக்கு

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர் பாத்திமா. அங்கன்வாடி ஊழியர். இவரது மூத்த மகள் ஹலிமா தர்வேஷ் (20). நெல்லை மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 3ம் ஆண்டு பயில்கிறார்.

கடந்த ஆண்டு பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரியில் கடந்த ஆண்டு அமெரிக்க தூதரகத்தினர் நடத்திய ஆங்கில பேச்சு போட்டியில், "ஜனநாயகம்' என்ற தலைப்பில் பேசிய பேச்சு அனைவரையும் கவர்ந்தது. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வாழ்க்கை வரலாற்றை ஒளிபரப்பி, அதில் சில விமர்சனங்களை சொல்லச்செய்தனர். அதையும் சிறப்பாக செய்த மாணவி ஹலிமாவை அமெரிக்க அரசின் செலவில் 10 மாதங்களுக்கு வடக்கு அலபாமா பல்கலையில் கலாச்சாரம் மற்றும் கம்ப்யூட்டர் கல்விக்கு தேர்வு செய்தனர். மாதம் சுமார் ரூ.12 ஆயிரம் ஊதியத்துடன் தங்கும் வசதி, உணவுடன் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது.

10 மாத படிப்பிற்கு பின், தற்போது நெல்லை வந்துள்ள மாணவி ஹலிமா தர்வேஷ் கூறியதாவது, மிகவும் பின்தங்கிய பகுதியில் வளர்ந்த நான் சிறுவயதில் நன்றாக படித்தேன். என் தந்தை தர்வேஷ் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாளராக இருந்தார். நாங்கள் சிறுவயதாக இருக்கும்போது இறந்துவிட்டார். அப்பாவின் மரணத்தால், குடும்பம் வறுமைக்கு தள்ளப்பட்டது. உறவினர்களின் செலவில் மேலப்பாளையம் பெண்கள் கல்லூரிக்கு பயில வந்தேன். அப்போது தான் அமெரிக்க வாய்ப்பு கிடைத்தது. தனியாக என்னை அமெரிக்கா அனுப்புவதற்கு அம்மாவிற்கு மனமில்லை என்றாலும், கல்வி கற்கும் வாய்ப்பை நழுவவிடக் கூடாது என்பதற்காக அனுப்பி வைத்தார். கடந்த 10 மாதங்களாக அமெரிக்காவில் நிறைய கற்றுக்கொண்டேன். நவீனமுறையில் கற்றுக்கொடுத்தல், கம்ப்யூட்டர் துறையில் நாம் 5 ஆண்டுகளுக்கு பின்பு படிக்கும் விஷயங்களை அங்கு உடனுக்குடன் கற்றுத்தருகிறார்கள். என்னைப்போலவே ஜோர்டான், இஸ்ரேல் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 88 பேர் அங்கு பயின்றோம்.

பெற்றோரின் பிரிவு தெரியக்கூடாது என்பதற்காக ஹேஸ்டிங்க்ஸ் தம்பதியினர் என்னை குழந்தையாக தத்தெடுத்துக் கொண்டு உதவிகள் புரிந்தார்கள். மாதாமாதம் அமெரிக்கா தந்த உதவித்தொகையை, எங்கள் குடும்ப வறுமையை போக்குவதற்காக வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். சாதாரண குடும்பத்தை சேர்ந்த எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. கல்லூரி முடிந்த பிறகு வீட்டின் தேவைக்காகவும் 11ம் வகுப்பு பயில உள்ள தங்கை ரிஸ்வானாவிற்காகவும் நான் ஏதாவது வேலையில் சேர்ந்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். தொடர்ந்து படித்து ஐ.ஏ.எஸ்., படிப்பேன், என்றார்.

சமச்சீர் கல்வியும், நம் கடமையும், கவுரவம் பார்க்கும் த.அரசு

சமச்சீர் கல்வித் திட்டத்தில் பல குறைகள் இருந்தாலும் அத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே அதில் உள்ள குறைகளை படிப்படியாகக் களைய வேண்டும்.

மக்கள் தொடர்ந்து நெருக்கடி தந்து சமச்சீர் கல்வியை பயன் படுத்த வைப்பது நம் கடமை, மக்கள் பணத்தில் அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள்., சென்னை உயர்நீதிமன்றமும் அதன் இடைக்காலத் தீர்ப்பில் இதையே தெரிவித்திருக்கிறது.

இந்தத் தீர்ப்பை கௌரவம் பார்க்காமல் அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு குழப்பத்தை ஏற்படுத்தாமல் சமச்சீர் கல்வித் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

இதற்கான சிலவுகள் முந்தைய முதல்வரோ தற்போதைய முதல்வரோ தன் வருமானத்திலிருந்து அச்சடிக்கப்பட்டவை அல்லவே, உணர்ந்து நடந்து கொண்டால் சரி. கவுரவம் பார்ப்பது புது அரசுக்கு நல்லது அல்ல.

அழகுக்கு அட்வைஸ் செய்யும் புன்னகை அரசி

சினிமாவில் வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள டு-பீஸ் உடையணிந்து கூட நடிக்க தயார் என்று கூறும் நடிகைகளுக்கு மத்தியில் இன்னமும் தொடர்ந்து குடும்பபாங்கான கேரக்டரில் மட்டுமே நடித்து வரும் புன்னகை இளவரசி சினேகா, பொன்னர் சங்கர் படத்திற்கு தமிழில் அந்தளவிற்கு வாய்ப்பு இல்லாவிட்டாலும் தொடர்ந்து ஒன்றிரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது முரட்டுகாளை, விடியல், நூற்றுக்கு நூறு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கில் ரஜானா என்ற படத்திலும், இந்தியில் ஒரு படத்தில் நடிக்கிறார். சமீபகாலமாக சினேகாவின் தோற்றத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. முன்பை விட அழகாகவும், புது பொலிடுவுடனும் காணப்படுகிறார். இதற்கு காரணம் யோகாவாம்.

என் அழகிற்கு காரணம் யோகா தான். தினமும் 2 மணி நேரம் யோகா பயற்சி செய்கிறேன். இதனால் எனக்கு நிறைய பலன் கிடைத்துள்ளது. சாப்பாடு விஷயத்திலும் நிறைய கட்டுபாட்டுடன் இருக்கிறேன். என் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட விரும்புகிறேன். திருமணத்தை பற்றி இப்போதைக்கு எண்ணமும் இல்லை. இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து அதைப்பற்றி யோசிப்பேன் என்று புன்னகையுடன் கூறுகிறார் இந்த புன்னகை இளவரசி.

Friday, June 10, 2011

இந்தியாவின் பேச்சு வார்த்தை என்கிற நாடகம் (ஈழ) இனப்படுகொலையாளன் மீது நடவடிக்கை எப்போது?

கொழும்பு, ஜூன் 11: இலங்கைத் தமிழர்கள் பிரச்னை தொடர்பாக விவாதிக்க இலங்கை சென்றுள்ள இந்திய அதிகாரிகள், அந் நாட்டு அமைச்சருடன் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர்.

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் வியாழக்கிழமை சென்னை வந்து முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது இலங்கைத் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை களைய இந்தியா தரப்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி ஜெயலலிதாவிடம் எடுத்துரைக்கப்பட்டதாக தெரிகிறது. ஜெயலலிதாவை சந்தித்துப் பேசிய பிறகு மேனன் தலைமையில் இந்திய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கொழும்பு புறப்பட்டுச் சென்றனர். அக்குழுவில் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ், பாதுகாப்புத்துறை செயலர் பிரதீப் குமார் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளார்கள்.

அக்குழுவினர் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரீசை வெள்ளிக்கிழமை சந்தித்து இரு தரப்பு உறவு தொடர்பான விவகாரங்கள் குறித்துப் பேசினர் என அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே, இலங்கை அதிபர் ராஜபட்சவை இந்திய அதிகாரிகள் குழு சனிக்கிழமை சந்தித்துப் பேச உள்ளது. இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபய, அதிபரின் செயலர் லலித் வீரதுங்கவுடனும் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். பின்னர் அவர்கள் இந்தியா திரும்புகிறார்கள்.

Thursday, June 9, 2011

அடுத்த பதவிக்கு தயாராகும் ஹிலாரி கிளின்டன்

வாஷிங்டன் : அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் அடுத்தாண்டு தனது அமைச்சர் பதவி காலம் முடியவுள்ள நிலையில் உலக வங்கியி்ன் தலைவராக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் அதிபர் ஒபாமா அரசு நிர்வாகத்தில் வெளியுறவு துறை அமைச்சராக உள்ளார். இவர் அதிபர் ஒபாமாவை எதிர்த்து அதிபர் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார். எனினும் ஒபாமா இவரை வெளியுறவு அமைச்சராக நியமித்தார். இந்நிலையில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் அடுத்தாண்டு முதல் துவங்குகிறது. இதில் தனது பதவிகாலத்தை முடிக்கவுள்ள ஹிலாரி கிளின்டன் ,கெளரமிக்க உலகவங்கியின் அடுத்த தலைவராக அதிகளவு வாய்ப்புகள் இருப்பதாக ரீடர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக பூர்வாங்க ஆலோசனை நடந்து வருவதாக ஹிலாரியின் செயலாளர் பிலிப்ரையினஸ் தெரிவித்தார்.

தற்போது உலக வங்கியில் 187 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தில் ஏகமனதாக ஒப்புதல் பெறப்பட்டால் 2012-ம் ஆண்டு ஹிலாரி உலகவங்கியின் தலைவர் பதவியேற்பார் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலகவங்கியின் தற்போதைய தலைவராக ராபர்ட் ஜிலோயிக் உள்ளார்.

திருட்டு பல வகை, அதில் இது வேறு வகை

பார்சிலோனா: திருட்டு என்பது அனைவராலும் வெறுக்கப்படும் தொழில் என்றாலும் சில திருடர்களின் திருட்டு முயற்சிகளைப் பார்த்தால் வியப்பும் திகைப்பும் சில சமயங்களில் நகைப்பும் ஏற்படுகின்றன.

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரைச் சேர்ந்த 2 திருடர்களின் கூட்டணி அடித்த கொள்ளை இந்த ரகத்தைச் சேர்ந்தது. விமான நிலையத்துக்கு வந்து சேரும் பயணிகளின் லக்கேஜ் பைகளில் திருட்டுப்போவது குறித்து அடிக்கடி புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. அந்த விமானநிலையத்துக்கு வந்த லக்கேஜ் வேனில் திடீரென ஏறி சோதனையிட்டனர். அப்போது மிகப்பெரிய சூட்கேஸ் ஒன்றைப் பார்த்தபோது அதன் ஜிப் பூட்டப்படாமல் எளிதில் திறக்கும் விதத்தில் இருந்ததால் சந்தேகப்பட்டனர்.

உடனே அதன் ஜிப்பைக் கழற்றியதும் உள்ளே ஒருவர் கை, கால்களை முடக்கி ""தாயின் கருப்பையில் இருக்கும் குழந்தையைப் போல' படுத்திருந்தார். அவரைத் ""தட்டி'' எழுப்பி, விசாரித்ததில் உண்மையைக் கக்கிவிட்டார். விமான நிலையத்துக்கு வரும் அந்த லக்கேஜ் வண்டியில் அவரை சூட்கேஸில் அடைத்து அவருடைய நண்பர் ஏற்றிவிட்டு விமான நிலையத்துக்கு வேறு வண்டியில் போய்விடுவாராம். அந்த லக்கேஜ் வேனை விமான நிலையத்தில் மீண்டும் திறக்க ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகுமாம்.

அந்த இடைவெளியில் அவர் சூட்கேûஸத் திறந்துகொண்டு வெளியே வந்து மற்ற சூட்கேஸ்களைத் தேட்டைபோடுவாராம். விலையுயர்ந்த நகைகள், தங்கம், வைரம், நவரத்தினங்கள், கடிகாரங்கள், செல்போன்கள் போன்றவற்றை எடுத்துக் கொண்டு மீண்டும் தனது சூட்கேஸில் வந்து உட்கார்ந்துகொண்டு மூடிவிடுவாராம். பிறகு அவரை ஏற்றிவிட்ட நண்பர் நிலையத்துக்கு வந்து சூட்கேûஸ எடுத்துச் சென்றுவிடுவாராம். சூட்கேஸில் இருந்தவரையும் அவருடைய நண்பரையும் போலீஸôர் கைது செய்துள்ளனர்.

உதவிக்கு யாராவது வாங்களேன், சிக்கலில்

கொழும்பு : இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி.,) தனது பணியாளர்களுக்கு கூட, சம்பளம் தர வழியில்லாமல் பெரும் நிதிச்சிக்கலில் சிக்கித் தவிக்கிறது. இந்தியா, வங்கதேசத்துடன் இணைந்து இலங்கையும், சமீபத்தில் முடிந்த உலக கோப்பை தொடரை நடத்தின. இதற்காக இலங்கையில் அம்பாந்தோட்டை பகுதியில் புதிய மைதானம் கட்டியது மற்றும் கொழும்பு, கண்டியில் இரண்டு மைதானங்களை புதுப்பிப்பதற்காக, 14 கோடி ரூபாய் செலவிட திட்டமிட்டது. ஆனால், திட்டமிட்டதை விட அதிகளவு செலவு ஏற்பட்டது.

இப்போது இதைச் சரிசெய்ய இலங்கை அரசு, அங்குள்ள வங்கிகளை எஸ்.எல்.சி., அணுகியுள்ளது. இதுகுறித்து எஸ்.எல்.சி., பொருளாளர் சுஜீவா ராஜபக்சே கூறுகையில், இலங்கையின் மிகப்பெரிய விளையாட்டு அமைப்பு, நிதிச்சிக்கலில் சிக்கித் தவிப்பது உண்மை தான். இதற்காக அரசு மற்றும் வங்கிகளை உதவி செய்யுமாறு கேட்டுள்ளோம்,என்றார்.

இலங்கையில் இருந்து வெளியாகும் "டெய்லி மிரர்' என்ற பத்திரிகையில், தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு, சம்பளம் கூட கொடுக்க முடியாத நிலையில் எஸ்.எல்.சி., உள்ளது. இந்த சிக்கலில் இருந்து எஸ்.எல்.சி.,யை காப்பாற்ற, ரூ. 8 கோடி வரை கொடுக்க இலங்கை அரசு முன்வந்துள்ளது,'' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.சி.சி., செய்தித் தொடர்பாளர் இதுகுறித்து கூறுகையில், மைதானத்தில் போட்டிகள் நடத்தப்படும் எண்ணிக்கைக்கு ஏற்பத்தான், கட்டணம் வழங்கப்படும். மைதானம் கட்டுவதற்கு ஆகும் செலவுகள் குறித்தெல்லாம், ஒப்பந்தம் எதுவும் இல்லை,'' என்றார்.

கசப்பான அனுபத்திளிருந்து கரை ஏறுகிறது, உறவிலும் விரிசல்?

சென்னை : ஸ்பெக்டரம் விவகாரம் தொடர்பாக காங்கிரசுடன் கசப்பில் இருக்கும் தி.மு.க., மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து நாளை நடக்கவுள்ள தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவளிப்பது என்றும் தி.மு.க., முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனியை காப்பாற்ற மேலிட உத்தரவு இது எப்படி இருக்கு., தனக்கு தனக்கு என்றால் மொறம் படக்கு, படைக்கு என்று அடிக்குமாம்.

Wednesday, June 8, 2011

ஸூ வைத்திருக்க வேண்டியதுதான் அதற்காக, ரூ 70 லட்சத்திற்கா!!

இங்கிலாந்தை சேர்ந்த தம்பதி டாம்குரூஸ்-கேடி ஹோல் கல். இவரது மகள் சுரி. 5 வயது சிறுமியான இவளுக்கு ஆடம்பர “ஷு"க்கள் மற்றும் ஆடைகளை அணிவதில் அலாதி பிரியம்.

எனவே இவள் விலை உயர்ந்த ஆடம்பர “ஷு"க் களை தனது வீட்டில் வாங்கி குவித்து இருக்கிறாள். இது வரை ரூ.70 லட்சம் மதிப்புள்ள “ஷு"க்களை வாங்கி இருக்கிறாள். அதுவும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட “ஷு"க்களே அவளிடம் உள்ளன.

இது குறித்து சிறுமி சுரி கூறும் போது, “நான் இது போன்ற ஆடம்பர டிசைன் “ஷு"க்கள் அணிவது தான் எனது தந்தைக்கு பிடிக்கும். எனவே, அவர் தான் நான் விரும்பும் விதவிதமான “ஷு"க்களை வாங்கி தருகிறார் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தாள்.

இந்தியர்கள் கைது இங்கிலாந்தில்

லண்டன் ஜூன் 9: இங்கிலாந்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக 12 வியாபாரிகள் உள்பட 40 பேர் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இங்கிலாந்தில் உரிய விசா அனுமதியின்றி இந்தியர்கள் தங்கியிருப்பதாக குடியேற்றத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதன்படிலீசெஸ்டர்ஷெயர் மாகாணத்தில் உள்ள ஒரு வர்த்தக நிறுவனத்திற்குள் 80-க்கும் மேற்பட்ட குடியேற்றத்துறை அதிகாரிகள் , போலீசார் உதவியுடன் அதிரடியாக புகுந்தனர். அங்கு 80 ஊழியர்களை கைது செய்தனர். இவர்களின் 28 பேர் இந்தியர்கள். இது குறித்து இங்கிலாந்து குடியேற்றத்துறை அமைச்சர் டாமின்கிரின் கூறுகையில், லீசெஸ்டர்ஷெயர் மாகாணத்தில் தான் இந்தியா வம்சாவழியைச் சேர்ந்தவர்கள் உரிய ஆவணம் இன்றி பலர் தங்கியிருப்பதாக தெரிகிறது.

இதே போன்று கடந்த மே மாதம் 26-ம் தேதியன்று இம்மாகாணத்தில் உள்ள ஒரு துணி உற்பத்தி நிறுவனம் ஒன்றில் சோதனை நடத்தியதில் 14 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 12 பேர் இந்தியர்கள். இவர்கள் குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வருகின்றனர் என்றார். போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், இந்தியர்கள் மீதான நடவடிக்கை தொடரும். இவர்கள் குற்றவழக்கு நிரூபிக்கப்பட்டால் 10 ஆயிரம் பவுண்ட்கள் அபராதம் விதிக்கப்படும் என்றார். இதன் மூலம் கடந்த இரண்டு மாதங்களில் இங்கிலாந்தில் குடியேற்றத்துறையினர் மிகபெரிய ரெய்டு நடத்தியதில் 40 இந்தியர்களை கைது செய்துள்ளனர்.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!