Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, June 8, 2011

மீண்டும் நீடிப்பு அவசர கால சட்டம் ..

அவசரகா சட்டம் மேலும் ஒரு மாதகாலத்திற்கு பாராளுமன்றத்தால் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது 97 மேலதிக வாக்குகளால் இம்முறை அவசரகால சட்டம் நீடிக்கப்பட்டது.

அவசரகால சட்டத்திற்கு ஆதரவாக 119 வாக்குகளும் எதிராக 22 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனநாயக தேசிய முன்னணி ஆகியன அவசரகால சட்டத்திற்கு எதிராக வாக்களித்தன.

சாமியாரா! சாமியார் வேசத்தில் இருக்கும் தீவிர வாதியா!?

யோகா குரு ராம்தேவின் நெருங்கிய உதவியாளர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா., இவர் கடந்த 2005ம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் போலி ஆவணங்கள் கொடுத்து பாஸ்போர்ட் வாங்கியதாகவும், ஆயுத சட்டத்தை மீறி 2 துப்பாக்கி லைசென்ஸ் வாங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து உத்தரகண்ட் புலனாய்வு துறையினர் விசாரிக்கின்றனர். இப்போது பாலகிருஷ்ணாவிடம் தீவிர விசாரணை நடத்த பிரதமர் மன்மோகனும் உத்தரவிட்டுள்ளார். தவிர உத்தரகண்டில் நிலமோசடியில் ஈடுபட்டதாகவும் பாலகிருஷ்ணா மீது புகார் எழுந்துள்ளது. நேபாளத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணா. அங்கு குற்ற செயலில் ஈடுபட்டுவிட்டு இந்தியாவுக்கு தப்பி வந்தவர்’ என்றும் கூறப்படுகிறது.

#பெட்டி செய்தி (20 இளைஞர்கள் முன்வர வேண்டும். அவர்கள் 30 லிருந்து 40 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பெண்களும் முன்வரலாம்., அவர்கள் தங்கள் உயிரையும் அர்ப்பணிக்க தயாராக இருக்க வேண்டும். அவர்களுக்கு ஆயுத பயிற்சி அளிக்கப்படும். 10 ஆயிரம் ஆண்கள் மற்றும் பெண்கள் அடங்கிய படையை உருவாக்க திட்டமிட்டுள்ளோம் (மத்தய ரிசர்வ போலீஸை ஆயுதம் கொண்டு எதிர்க்க) என்றும் ராம்தேவ் கூறியுள்ளார்.)

Tuesday, June 7, 2011

கீழ் சாதி பெண் என்று விரட்டப்பட்டவர் மீண்டும், ரொம்ப நன்னா இருக்கு

புது தில்லி : மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் உமா பாரதி, பாரதிய ஜனதா கட்சியில் மீண்டும் இணைந்தார். தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், கட்சித் தலைவர் நிதின் கட்கரி முன்னிலையில் அவர் கட்சியில் சேர்ந்தார்.

ஒழுங்கு (தாழ்த்தப்பட்ட) நடவடிக்கையின் கீழ் கட்சியிலிருந்து 2005-ல் வெளியேற்றப்பட்டவர் உமா பாரதி. கட்சியில் இணைந்த பிறகு அவரும், கட்சித் தலைவர் நிதின் கட்கரியும் பாஜக தலைமை அலுவலகத்தில் கூட்டாகப் பேட்டி அளித்தனர்.

"உமாபாரதி மீண்டும் இணைந்ததை வரவேற்கிறோம். அவரது வருகையால் பாஜக பலம் பெறும். உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை பலம் பொருந்திய கட்சியாக மாற்றும் பொறுப்பு உமாபாரதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது' என நிதின் கட்கரி தெரிவித்தார்.

Monday, June 6, 2011

கூத்தடிக்கும் கொள்கைக்கும் சம்பத்தம் உண்டா? ரொம்ப ஆடுனே அடக்கிடுவாங்க மக்கள் !

நீண்ட போராட்டத்துக்குப் பிறகுதான் தமிழ்நாட்டில் 2010-ம் ஆண்டு பொதுப்பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த சட்டம் இயற்றப்பட்டது. தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தில் நூற்றுக்கணக்கான வல்லுநர்கள் உழைப்பைச் செலுத்தி பொதுப்பாடத்திட்டத்தை உருவாக்கினர். இந்த வரைவு பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டு பொதுமக்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகளும் கேட்டறியப்பட்டன.

இவ்வாறு பெறப்பட்ட ஆலோசனைகளைப் பரிசீலித்தப் பிறகு பாடத்திட்டம் இறுதிசெய்யப்பட்டது. பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், மெட்ரிக், ஆங்கிலோ, ஓரியண்டல் பள்ளி ஆசிரியர் பிரதிநிதிகளை உறுப்பினர்களாகக் கொண்ட பொதுக்கல்வி வாரியம் இறுதிசெய்யப்பட்ட பொதுப்பாடத்திட்டத்துக்கு ஏற்பும் அளித்தது. இதனடிப்படையில், பள்ளி ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கொண்ட குழுவால் பாடநூல்களும் எழுதப்பட்டன.

தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் சுமார் 200 கோடி ரூபாய் செலவில் 1 முதல் 10 வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு கிடங்குகளிலும், பள்ளிகளிலும் வைக்கப்பட்டுள்ளன. பொதுப்பாடத்திட்டமே சமச்சீர் கல்வி ஆகாது. ஆனால், பொதுப்பாடத்திட்டம், பொதுப்பாடநூல், பத்தாம் வகுப்பு இறுதியில் பொதுத் தேர்வு என்பது சமச்சீர் கல்வி முறையை நோக்கிய பயணத்தின் முதற்படி ஆகும். மீண்டும் பழையபடியே நான்கு வகை பாடத்திட்டத்துக்குச் செல்வது என்பது கல்வி வளர்ச்சியில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். இது வணிக நோக்கத்துடன் பள்ளி நடத்தும் தனியார் பள்ளி நிர்வாகிகளை மகிழ்விக்கும்.

இந்தச் சூழலில் நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பொதுப்பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி, கிடங்குகளில் இருக்கும் பாடநூல்களை மாணவர்களுக்கு அளித்து, பத்தாம் வகுப்பு இறுதியில் ஒரே பொதுத்தேர்வு என்ற நடைமுறையைக் கொண்டுவரக் கோருகிறோம். அதேபோல், அரசுப் பள்ளிகளை வலுப்படுத்துதல், தனியார் பள்ளியில் இடஒதுக்கீட்டை உறுதிசெய்தல், கட்டணக் கொள்ளையை தடுக்க உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளல், போதுமான ஆசிரியர் நியமித்தல் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி தரமான கல்வி சமச்சீராக அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தனியார் பள்ளிகளை அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளாக மாற்றவும், புதிய பள்ளிகளை அரசு தொடங்குவதும் மட்டுமே பொதுப்பள்ளி என்ற பதம் நோக்கி சமச்சீர் கல்வி செல்லும். பொதுப்பள்ளி மூலம் கல்வி உரிமை பெறவும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றவும் தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கையை மேற்கொண்டு பள்ளிக் கல்வியில் இந்தியாவுக்கே வழிகாட்டும் முதல் மாநிலமாகத் திகழச் செய்ய வேண்டும்.

ரெகவர் பைல்ஸ்., அழித்த பைல்களை மீட்க !

நாம் சில வேளைகளில் தேவையான பைல்களை நாம் அறியாமலேயே அழித்துவிட்டு திண்டாடுவோம். அவை ரீசைக்கிள் பின்னில் இருந்தால் பரவாயில்லை. வேண்டுமென்றே ஷிப்ட் அழுத்தி டெலீட் கீயைப் பயன்படுத்தி ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லாமல் சில பைல்களை துவம்சம் செய்துவிடுவோம். பின் வருத்தப்படுவோம்.

இவ்வாறு அழிக்கப்பட்ட பைல்களைக் கண்டுபிடித்து எடுத்துத்தரவென்றே பல புரோகிராம்கள் உள்ளன. அவற்றில் பல சாதாரணமாகக் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்கள் கையாளும் வகையில் இருக்காது. தேவையற்ற கேள்விகளைக் கேட்டுவிட்டு பின் முடியாது எனப் பதிலளிக்கும். இல்லை எனில் அழித்தவர்களே அவற்றை மீண்டும் திரும்பப் பெற முடியாத வகையில் பல செயல்களில் ஈடுபட்டு பின் கவலைப் பட்டுக் கொண்டு இருப்பார்கள். இதற்கெல்லாம் தீர்வு தரும் வகையில் அனைவரும் கட்டாயம் கொண்டிருக்க வேண்டிய புரோகிராம் ஒன்று இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. இந்த புரோகிராமின் பெயர் Recover Files .

இது கிடைக்கும் தளத்தின் முகவரி http://www.undeleteunerase.com/download.html.

ரீசைக்கிள் பின்னிலிருந்து நீக்கப்பட்ட பைல்கள், நெட்வொர்க் கட்டமைப்பில் அழிக்கப்பட்ட பைல்கள், கையடக்க பிளாஷ் கார்டிலிருந்து ஒரேயடியாக நீக்கப்பட்ட பைல்கள், டாஸ் இயக்கம் மூலம் டெலீட் செய்த பைல்கள், விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு கட்டாயமாக நீக்கிய பைல்கள் என அத்தனை வகையிலும் அழித்த பைல்களை இந்த புரோகிராம் மூலம் நீக்கிவிடலாம். மிகச் சிறிய ஆனால் வேகமாக இயங்கும் புரோகிராமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

விண்டோஸ் 95 தொடங்கி விஸ்டா வரையில் இது இணைந்து செயல்படுகிறது. NTFS மற்றும் FAT ஆகிய இருவகை பார்ட்டிஷன்களில் அழித்த பைல்களை இது மீட்டுக் கொடுக்கிறது. இந்த புரோகிராமின் அளவு 1189 கேபி மட்டுமே என்பது இதன கூடுதல் சிறப்பு. எதற்கும் இதனை இறக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

Siva.

கோடையும் வியர்வையும், அதை போக்க சில டிப்ஸ் இதோ

குளிர்காலம் முடிந்து கோடை காலம் ஆரம்பிக்கும் போது. கோடை என்றால் சட்டென நம் நினைவுக்கு வருவது வெயிலின் சூடும், அதனால் உண்டாகும் வியர்வையும்.

வியர்வை அதிகம் சுரக்கும் ஒருசிலரது உடலில் நாற்றமும் ஏற்படும். வியர்வையினால் உண்டாகும் இந்த நாற்றம் நமது அருகில் இருப்பவரை முகம் சுழிக்க வைக்கும்.அத்தகைய நிலை உண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

குளிக்கும் நீரில் ஓர் எலுமிச்சைப் பழத்திலிருந்து பிழியப்பட்ட சாறை ஊற்ற வேண்டும். அதில், கால் தேக்கரண்டி அளவு உப்பையும் சேர்க்க வேண்டும். இந்த நீரில் குளித்து வந்தால், வியர்வை நாற்றம் அறவே நீங்கிவிடும்.

இன்னுமொரு குறிப்பு : 2 தேக்கரண்டி சீயக்காய் தூள், 2 தேக்கரண்டி வெந்தயத்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து களி போல் தயாரிக்கவும். இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக்கு தேய்த்து குளித்து வரவும். இரண்டே வாரத்தில் உடலில் நிரந்தமாக குடிகொண்டிருக்கும் வியர்வை நாற்றம் ஓடிவிடும். தலையும், உடலும் சுத்தமாகி மணம் வீசும்.

Mohamed Ali.

உள்ளூர் சாமியார்கள் தொள்ள தாங்காமே, வெளிநாடுகளில் இருந்து உஜாலா?

சென்னை தேனாம்பேட்டையில் வெளிநாட்டை சேர்ந்த 7 பேர் யோகா பயிற்சி மையம் நடத்தி வருவதாகவும், அதில் தாம்பத்யம் நீண்ட நேரம் நீடிப்பதற்கு பயிற்சி கொடுக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

தேனாம்பேட்டை சொக்கலிங்கம் நகரில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து யோகா பயிற்சி மையம் நடத்துகின்றனர். அங்கு யோகாவுடன் செக்ஸ் கலந்து பயிற்சி அளிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

மாக்காய் தேன், ஆடம்தேன் என்ற 2 பேர் முழுநேர பயிற்சி கொடுக்கின்றனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே ஆபாச படத்தில் நடித்தவர்கள் என தெரிகிறது. மேலும் அங்கு உர்ரிக் (டென்மார்க்) சைமோன் (ரொமேனியா) ஆகியோரும் யோகா பயிற்சி அளிப்பதாக தெரிகிறது. இவர்களும் ஆபாச படத்தில் நடித்தவர்கள் என சந்தேகிக்கிறோம்.

இவர்கள் அனைவரும் சுற்றுலா விசாவில் வந்து தேனாம்பேட்டையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் செயல் சட்டவிரோதமானது. எனவே காவல்துறை உடனடியாக இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து யோகா மையத்தை மூட வேண்டும்.

சாமியார்கள் வேசத்தில் இருந்துகொண்டால்தான் எதுவெண்டாலும் செய்யலாம் அப்பத்தான் பி ஜே பி, ஹிந்துத்துவா கட்சிகளின் ஆதரவு கிடைக்கும்.

Sunday, June 5, 2011

உருகுதே மருகுதே கனியை (மொழி) கண்டதாலே...?

என் மகள் கனிமொழி இன்று மத்திய அரசின் உத்தரவினாலோ, அலட்சியத்தாலோ அல்லது வேறு எந்த காரணத்தாலோ சிறையில் இருக்கிறார். வழக்கு நடந்து கொண்டிருப்பதால் நான் வழக்கின் ஆழத்திற்கு செல்லவில்லை.

கனிமொழி செய்த ஒரு தவறு கலைஞர் டிவியில் ஒரு பங்குதாரராக இருந்ததுதான். பங்குதாரரை அந்த நிறுவனத்திலே ஏற்பட்ட, ஒரு கோளாறுக்காக பங்குதாரரை பாதிக்கின்ற செயலில் ஈடுபடமுடியுமா என்ற வாதத்தை நம்முடையை மூத்த வழக்கறிஞர் நீதிமன்றத்தில் எடுத்துக்கேட்டார். அதற்கு இன்னும் பதில் வரவில்லை.

இருந்தாலும் கனிமொழி சிறையிலே இப்பொழுது வாடிக்கொண்டிருக்கிறார். திகார் சிறைச்சாலை எப்படிப்பட்டது என்பதை சொல்கிறேன். ஒரு மலரை வைத்தால் பத்து நிமிடங்களில் வாடிவிடக்கூடிய அளவுக்கு கொடுமையான வெயில்.

அப்படிப்பட்ட இடத்தில்தான் இருக்கிறார் என் மகள் கனிமொழி. நானும் எனது மூத்த மகள் கனிமொழியும் ஆறுதல் கூறும்பொழுது, அக்கா நீங்கள் அப்பாவைப் பார்த்துக்கொள்ளுங்கள். நான் வழக்கை சந்திக்கிறேன். இதற்கெல்லாம் கவலைப்படமாட்டேன்.

இவையெல்லாம் எதிர்கொள்கின்ற சக்தியைத்தான் திராவிட முன்னேற்றக்கழகம் நமக்கு வழங்கியிருக்கின்றது என்பதை மறந்துவிடாதீர்கள் என்று கனிமொழி என்ற பெண்மணி சொல்லுகின்ற அளவுக்கு நாம் சக்தியைப்பெற்றிருக்கின்றோம்.

ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி நஷ்டம் என்று முதலில் அறிவிக்கப்பட்டு, அதன்பிறகு சுறுங்கி 30 ஆயிரம் கோடி என்று வந்து இப்போது யார் குற்றவாளி என்று கேள்வி எழுந்து,யாரையாவது ஒருவரை குற்றவாளியாக அடையாளம் காட்டவேண்டும் என்று கனிமொழியை அடையாளம் காட்டியிருக்கிறது சிபிஐ.

கனிமொழி செய்த குற்றம் நான் செய்த குற்றம். கலைஞர் டிவியில் பங்குதாரராக இருக்க வேண்டும் என்று கனிமொழியை கேட்டேன். அதற்கு கனிமொழி வேண்டாம் என்று மறுத்தபோது, எதிர்காலத்தில் கனிமொழிக்கும் ஏதாவது ஒரு ஆதாரம் இருக்க வேண்டும் என்பதற்கா பிடிவாதமாக பங்குதாரராக்கினேன்.

அதன் விளைவு, அந்த நிறுவனத்திற்கு ஏற்பட்ட கேடு, கனிமொழையையும் துன்புறுத்துகின்ற அளவிற்கு வந்திருக்கின்றது. இதை எண்ணிப்பார்த்து கனிமொழிக்கு வந்த ஆபத்தை தவிர்ப்பார்கள் என்று நான் நம்புகின்றேன். இங்கே கூடியிருக்கின்ற உங்களிடம் என் வேதனையை பகிர்ந்துகொண்டேன்’’ என்று பேசினார்.

பெட்ரோல் வாங்க பணம், கிரிடிட் கார்ட் மட்டும் போதாது!

குர்கான் : அரியானா மாநிலம், குர்கான் மாவட்டத்தில், ஹெல்மெட் அணிந்து வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே பெட்ரோல் வழங்குமாறு, போலீசார் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இந்தியாவில் ஆண்டுதோறும், ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். சர்வதேச அளவில், இது மிக அதிகபட்ச எண்ணிக்கை. சாலை விபத்துகளை குறைக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்கிறது. குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள், விபத்துகளில் உயிரிழக்கின்றனர். எனவே, இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று, பல்வேறு மாநிலங்களில் சட்டமியற்றப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணிவது தொடர்பாக, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

ஆனாலும், ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்தில் சிக்கவே செய்கின்றனர். அரியானா மாநிலம், குர்கான் மாவட்டத்தில், இருசக்கர வாகன ஓட்டிகளில், ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் வழங்க வேண்டும் என்று, பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

குர்கான் மாவட்டத்தில் ஆண்டுதோறும், ஆயிரத்திற்கும் அதிகமான சாலை விபத்துகள் நடக்கின்றன. உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் 951 பேர் படுகாயமடைந்தனர். இதில், 461 பேர் இருசக்கர வாகன ஓட்டிகள். ஹெல்மெட்டை கட்டாயமாக அணியுமாறு போலீசார் அறிவுறுத்தினாலும், பொதுமக்கள் அதை கடைபிடிப்பதில்லை. எனவே, குர்கான் மாவட்டத்தில், ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் விற்பனை செய்யக் கூடாது என்று, பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

Saturday, June 4, 2011

A R R ஐ புகழும் கலைப்புலி தாணு

இசையால் உலக திரையுலகை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் ஏ.ஆர்.ரகுமான். அவர் இசையில் மயங்காதார் எவரும் இல்லை. திரைக்கலைஞர்களின் லட்சிய கனவான ஆஸ்கார் விருதை 2009-ல் ஏ.ஆர்.ரகுமான் பெற்றுக் கொண்டு எல்லா புகழும் இறைவனுக்கே என தமிழில் கூறிய வார்த்தைகளை கேட்டு தமிழ் கூறும் நல்லுலகம் அவரை உச்சி முகர்ந்து மெச்சி மகிழ்ந்தது.

தமிழ் மன்னர் புகழை பழித்து கல் சுமந்த கசடர்களான கனசவிசயர் வழித் தோன்றலாய் இப்போது ஒரு இஸ்மாயில் தர்பார் தன்னை வெளிப்படுத்தியுள்ளார். இவர் ஏ.ஆர்.ரகுமானை பழித்து விளம்பரம் தேடியுள்ளார். அதாவது, “ஜெய்ஹோ” பாடல் ரகுமானுக்கு உரியதில்லை என்றும் காசு கொடுத்து ஆஸ்கார் விருதை வாங்கியுள்ளார் என்றும் அவர் வசை பாடியுள்ளார். ஏ,ஆர்.ரகுமான் இசை தனித்துவம் வாய்ந்தது. நவீன தன்மைகளை உள்ளடக்கியது.

மேட்டுக்குடி இசையோடு பள்ளத்தில் தள்ளப்பட்டு கிடக்கும் தலித் மக்களின் பறையையும் இணைத்து தரும் சிறப்புடையது. “சினேகிதியே”, “அழகிய லைலா”, பாடல்கள் நவீன தன்மையில் மிளிர்வன. “சின்ன சின்ன ஆசையாக மிளிந்து மானூத்து சந்தையிலே என வளர்ந்து கண்ணா மூச்சி ஏனடா என வியக்க வைத்து “டாக்சி டாக்சி” என இளைஞர்கள் இதயங்களை சுண்டி இழுத்தது.

அவர் இசையை பருகி உலகமே ஆனந்த கூத்தாடுகிறது. ஏ.ஆர்.ரகுமானை விமர்ச்சிக்க இஸ்மாயில் தர்பாருக்கு அருகதை இல்லை. ஆஸ்கார் விருதை பற்றி அவதூறு கூறியதன் மூலம் இப்படியும் அனாமதேய பேர் வழிகள் விளம்பரம் பெற்று விடுகிறார்கள். ஆனால் வித்தக கலைஞர் ஏ.ஆர்.ரகுமான் புகழுக்கு எள்ளவு கூட களங்கம் கற்பித்து விட முடியாது. ஆஸ்கார் விருது குழுவின் 30 உறுப்பினர்களையும் காசு கொடுத்து விலைக்கு வாங்குவது என்பது இஸ்மாயில் தர்பாரின் கற்பனையில் மட்டுமே சாத்தியம்.

காவி மயமாக போகும் இந்தியா, கருவர்க்கப்போகும் காங்கிரஸ்

‘ஊழலை ஒழிக்கிறோம்’ என்ற புதிய முகமூடியுடன் இந்துத்துவா மதவாதி சக்திகள், பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே போன்ற ரூபத்தில் புதிய உண்ணாவிரத நாடகங்களை தலைநகர் டெல்லியில் அரங்கேற்றுகின்றன.

சுமார் 18 கோடி ரூபாய் செலவில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் மின்விசிறிகள், மேடைகள் முதலிய தடபுடல் ஏற்பாடுகள்.

தொலைக்காட்சி ஊடகங்கள், ஏடுகள் இவற்றுக்கு அபார விளம்பரங்கள் தருவதோடு, இப்படி இரட்டை வேடதாரிகள் “தூய யோவான்களாகவும் சித்திரித்து, படித்த பாமரர்களையும் ஏமாற்றிடத் துணை போகின்றன ஹிந்துத்துவா சக்திகள்!

அரசியலில் ஊழலை ஒழிக்குமுன் ஆன்மீகத்தைச் சரி செய்யுங்கள்!

அரசியலைத் தூய்மைப்படுத்தும் முன்பு இவர்கள் சார்ந்த ஆன்மீகம், மதங்களில் அன்றாடம் நடக்கும் கொலை, கொள்ளை, மோசடிகளைத் தடுத்து நிறுத்த முதலில் உழைக்க வேண்டாமா?

அப்பாவி மக்களைக் கவருவதற்காக கறுப்புப் பணம், வெளிநாட்டு வங்கிகளில் உள்ள பணத்தை கொண்டு வருதல் போன்ற பல்வேறு திட்டங்களை முன் வைத்து மத்திய அரசாங்கத்தை “பயமுறுத்திட” இப்படி ஒரு உண்ணாவிரத நாடகத்தைத் துவக்கி, ஊடகங்கள் ஊதிப் பெருக்குவதால் நடத்திட முன் வந்துள்ளனர்; பாபா ராமதேவ், அன்னாஹசாரே போன்றவர்கள் புதிய அவதாரங்கள்!

மத்தியில் உள்ள அய்க்கிய(அ)யோக்கிய முற்போக்குக் கூட்டணி குறிப்பாக காங்கிரஸ் தலைமையில் உள்ள ஆட்சிக்கு எதிராக பா.ஜ.க. காவி ஆட்சியை மீண்டும் கொண்டு வரவே இப்படிப்பட்ட திடீர் ஊழல் ஒழிப்பு திடீர்க் காட்சிகள்!

டில்லியில் இதில் அரசியல்வாதிகள் மேடையில் இருக்க அமைதிக்கப்பட மாட்டார்களாம்! மாறாகக் கலந்து கொள்பவர்கள் யார் யார் தெரியுமா?

1. விசுவ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால்.
2. சாத்வி ரிதம்பரா பெண் தீவிரவாதி
3. ஆர்.எஸ்.எஸ். தீவிரவத அமைப்பினர்.மோகன் பகவத், பிரவின் தொகடியா, மோடி, அமித் ஷா இன்னும் பல தீவிரவாதிகள்.
4. இந்து தீவிரவத அமைப்புகள். 

பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள்., இதில் அசோக் சிங்கால், சாத்வி ரிதம்பரா போன்றவர்கள் பாபர் மசூதி இடிப்பில் சம்பந்தப்பட்டு, குற்றம் சுமத்தப்பட்டவர்கள்; ஜளிடீளி லிபரான் கமிஷன் என்ற அறிக்கையை காங்கிரளி கட்சி செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு விட்டதே! அதிலும் அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கிலும் இவர்கள் எல்லாம் உள்ளனர்!

இதை அய்க்கிய (அ)யோக்கிய முற்போக்கு முன்னணி ஆட்சித் தலைமை, பிரதமர், அமைச்சர்கள் எவருமா புரிந்து கொள்ளவில்லை?

ஊழலை ஒழிக்க தயங்காது என்று கூறும் மத்திய அரசு தலைமை, இந்த சாமியார்களிடம் ஏன் கெஞ்ச வேண்டும் அமைச்சர்களை தூது அனுப்பி இதை நிறுத்திடும்படிக் கெஞ்சுதல், கொஞ்சுதல் செய்ய வேண்டும்? அவ்வளவு பலவீனமான அரசாக இயங்குவது நல்லதா? இந்த அரசாங்கம் எதற்கு.

இந்த அரசியல் அலங்கோலங்கள்பற்றி நினைத்தால் ஜனநாயகம் இப்படி கேலிக் கூத்தாக்கப்படுகிறதே என்று எண்ணி வேதனைப்பட வேண்டியுள்ளது!

மீண்டும் காவிகள் அரியணை ஏறவே இந்த ஆயத்தங்கள் என்பதை புரிய வைக்க வேண்டியது முற்போக்குச் சிந்தனை உடைய தலைவர்களின் கடமையாகும்.

பார்பன பத்திரிக்கைகளும் ஒத்து ஊதுகிறது.

எச்சரிக்கைவிடும் ஜெயா! எடுத்துக்கொள்ளுமா தனியார் பள்ளிகள்?

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் குறித்து அரசுக்கு புகார் அளித்தால் அப்பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.

மேலும், கூடுதல் கட்டணம் தொடர்பாக முதல்வரின் புகார் பிரிவுக்கு மனு அளிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் ஜெயலலிதா, பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக எந்தப் பெற்றோரும் இதுவரை அரசுக்கு புகார் அளிக்கவில்லை. பெற்றோர்களானாலும், பள்ளிகளானாலும் கட்டணம் குறித்து அரசுக்கு மனு கொடுத்தால் நிச்சயமாக பரிசீலிக்கப்படும்.

பெற்றோர்கள் போராட்டம் நடத்துவதற்குப் பதிலாக, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தால் தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக பள்ளிகள் உணர்ந்தாலோ, பெற்றோர்கள் அப்படி நினைத்தாலோ போராட்டம் நடத்துவதற்குப் பதிலாக அவர்கள் அரசை அணுகலாம். அரசு தலையிட்டு அதை தீர்த்து வைக்க வேண்டுமென்று மனு கொடுத்தால் நிச்சயமாக அரசு அதன் மீது நடவடிக்கை எடுக்கும்.

புகார் பிரிவுக்கு மனு: பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் முதல்வரின் பெயரில் உள்ள தனிப் பிரிவுக்கு புகார் தெரிவிக்கலாம். அதற்கு தங்களுடைய புகார் கடிதத்தை அனுப்பினாலே போதும். கட்டண நிர்ணயம் தொடர்பான வழக்கு இப்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றார் முதல்வர் ஜெயலலிதா.

Friday, June 3, 2011

இரு முறை குழந்தையை பார்த்துவிட்டு படியுங்கள் (DOWNSYNDROME)

தற்போதைய சூழ்நிலையில் இது போன்ற குழந்தைகள் ஒரு பெரிய குடும்பத்தில் ஒருத்தராவது இருக்கிறார்கள். நாமும் இதை பெரிதாக கண்டுகொள்வதில்லை. இதற்க்கு காரணம் வசதிகள் இருந்தும் ஒருவகையான அறியாமைதான் என நினைக்கிறேன். நாம் நேரடியாக பாதிக்கபடாதவரை நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என நினைப்பது மனித இயல்பு.

இந்த குறைபாட்டுடன் பிறந்த குழந்தைகளை வளர்ப்பவர்கள் நிறைந்த பக்குவம் அடைகிறார்கள். அனைத்துலக ரீதியில் இதுபோன்ற குழந்தைகளுக்கு பயிற்ச்சி பள்ளிகள் இருக்கிறது. அதற்க்காக உதவிகளும் செய்கிறார்கள். பணத்தை துரத்தும் வாழ்க்கையை கற்றுத்தரும் இப்போதைய கல்வி முறைகள தவிர்த்து, குழந்தைகளின் செயல்படும் தகுதிக்கு ஏற்ப சொல்லித்தரும் கல்வி முறைகளை கனடா நாட்டில் ஏற்படுத்தி இருக்கிறார்கள்

இது போன்ற குழந்தைகளை சரியான முறையில் மருத்துவ சிகிச்சைக்கு உடன்படுத்தும் போது [ உதாரணம்: அக்கு ப்ரஸ்ஸர் / அக்கு பன்க்சர் / தை-ச்சி / யோகா / வர்மம் ] இந்த குழந்தைகள் மற்றவர்களைபோல் செயல் பட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இதை வழி நடத்த பொறுமை அதிகம் தேவை. இந்த குழந்தைகளை மன நலம் குறைந்தவர்கள் என்று சிலர் சொல்வதுண்டு....என்னை பொருத்தவரை நாம் தான் மன நலம் குறைந்தவர்கள்

இவர்களிடம் பழகிப்பார்த்தால் தெரியும் நான் சொன்ன உண்மை, இவர்களிடம் புறம் பேசுதல் , பொய் , ஏமாற்றுதல் , ஈகோ , எதுவும் கிடையாது. இப்போது சொல்லுங்கள் யார் உண்மயில் மன நலம் குறைந்தவர்கள்?.

இறைவன் உதவியால் முயற்ச்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
ZAKIR HUSSAIN.

வாக்குக்காக வாக்குறுதி அளித்த ஜெயா!! (ஈழ)திற்கு என்ன செய்யப்போகிறார்?

இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்த ராஜபட்சவுக்கு எதிராக ஐ.நா. மன்ற விசாரணைக் குழு அறிக்கை வெளியிடப்பட்டு, ராஜபட்ச போர்க் குற்றவாளியாக பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று உலக நாடுகள் பலவும் கோரி வருகின்றன.

தமிழக சட்டப்பேரவையில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக மக்களும், உலகெங்கும் வாழும் தமிழர்களும் எதிர்பார்த்திருக்கும் வேளையில் ராஜபட்சவைக் கண்டித்தோ, இனப் படுகொலைக்குத் துணைபோன இந்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்தோ அ.தி.மு.க. அரசின் கருத்து ஆளுநர் உரையில் இடம் பெறாதது தமிழகத்திலுள்ள மக்களுக்கும், உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தையும், வேதனையையும் அளிக்கிறது.

முந்தைய அரசால் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் அறவே பயன்படுத்தப்பட மாட்டாது என்ற அறிவிப்பு ஏற்புடையதல்ல.

சமச்சீர்க் கல்வித் திட்டம் குறித்து ஆய்வு நடத்த அமைக்கப்படும் ஆய்வுக் குழுவுக்குக் கால நிர்ணயம் செய்யாமல் கண் துடைப்பு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இது சமச்சீர்க் கல்வித் திட்டத்தை முழுமையாகவே ரத்து செய்வதற்காக எடுக்கப்பட்டுள்ள முடிவு என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்காமல் அத்திட்டத்தைக் கிடப்பில் போட்டு விட்டு புதிதாக மோனோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் என்ற அறிவிப்பு ஆரோக்கியமானதல்ல. இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஈழ விசயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணம்தான் என்ன, எல்லாம் ஓட்டுவாங்கி பொறிக்கி கட்சிகள்தான், ஏனென்றால் பார்பனர்களுக்கு (ஈழ) தமிழர்கள் மேல் ஒரு போதும் அக்கறை கிடையாது.

Thursday, June 2, 2011

மகளின் ஜெயில் வாழ்க்கையால் மனமுடைய்ந்து பிறந்த நாளை துறந்த!?

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க., கொள்கை பரப்பு செயலருமான ராஜா, தி.மு.க., தலைவர் கருணாநிதி மகள் கனிமொழி எம்.பி., உட்பட ஏழு பேர், சி.பி.ஐ., போலீசாரால் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், கனிமொழி மற்றும் தொழிலதிபர் மொரானியின் ஜாமின் மனுக்களை, சி.பி.ஐ., கோர்ட் தள்ளுபடி செய்தது. பின், டில்லி ஐகோர்ட்டில் ஜாமின் கேட்டு கனிமொழி மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கில், வக்கீல்கள் வாதம் முடிந்த நிலையில், மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், டில்லி ஐகோர்ட்டிற்கு நாளை முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் தான் கோர்ட் மீண்டும் திறக்கப்படும். விடுமுறைக்கு முந்தைய நாளான இன்று, கனிமொழியின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு வெளியாகும் என, தி.மு.க., வட்டாரத்தில் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இன்றைய விசாரணை பட்டியலில் கனிமொழி வழக்கு இடம் பெறவில்லை. அதனால், கோடை விடுமுறை முடிந்த பின்னரே ஜாமின் மனு மீதான தீர்ப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வெளியானால், இன்னும் ஒரு மாத காலத்திற்கு கனிமொழி, திகார் சிறையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால், தி.மு.க., கவலை அடைந்துள்ளது.

இந்த சூழ்நிலையில், தி.மு.க., தலைவர் கருணாநிதி தன் பிறந்த நாளான இன்று, டில்லிக்கு வருகிறார். சென்னையிலிருந்து இன்று காலை 9.30 மணிக்கு புறப்பட்டு, மதியம் 1 மணிக்கு டில்லி வருகிறார். பின், திகார் சிறைக்குச் சென்று மகள் கனிமொழியைப் பார்த்து ஆறுதல் கூற உள்ளதாக தி.மு.க., தெரிவித்தன. ஏற்கனவே கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக கனிமொழியின் தாய் ராஜாத்தியும், தி.மு.க., எம்.பி.,க்களும் டில்லியில் தங்கியுள்ளனர்.

காய்கறிகளுக்கு தடை விதித்த ஐக்கிய அரபு குடியரசு

துபாய்: ஸ்பெயின், ஜெர்மனி, டென்மார்க், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வெள்ளரிக்காய் இறக்குமதி செய்வதற்கு ஐக்கிய அரபு நாடுகள் தடைவிதித்துள்ளது.

மேற்கண்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெள்ளரிக்காயில் இ.கோலி வகை பாக்டீரிய õ இருப்பதே காரணமாகும். வளைகுடா நாடுகளின் சுற்றுப்புற சூழல் துறை அமைச்சகம் இத்தடையை விதித்திருப்பதாக வாம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதே போல் வளைகுடா நாடுகளை சேர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்÷வோர் காய்கறிகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என வளைகுடா நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகமும் அறிவுறுத்தியுள்ளது.

எயிட்ஸ்ம் இந்தியாவின் விழிப்புணர்வும்!?

ஐ.நா: வளரும் தலைமுறையினரில் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் தினமும் எய்ட்ஸ் நோய்க்கு தாக்குதலுக்கு உள்ளாவதாக ஐ.நா சார்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 10 முதல் 19 வயதுக்குட்பட்ட இளம் தலைமுறையினரில் பெண்கள் சுமார் 46 ஆயிரமும், ஆண்களில் சுமார் 49 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இளம் தலைமுறையினர் எய்ட்ஸ் பாதிப்பில் தென் ஆப்ரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது. இந்நாட்டில் சுமார் 2லட்சத்து 10 ஆயிரம் பெண்களும் 82 ஆயிரம் ஆண்களும் பாதிக்கப் பட்டுள்ளனர். தொடர்ந்து நைஜீரியாவில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பெண்களும் , ஒரு லட்சம் ஆண் களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கென்யா நாடு முதலிடத்தை பிடித்துள்ளது.

உலகம் முழுவதும் 60 சதவீதம் வரை வளரும் இளம் பெண்கள் இந்த நோயின் தாக்குதலுக்கு உட்பட்டிருந்தாலும் தென்னாப்ரிகாவில் இவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப் படுகிறது. இந்தவகை நோய் பரவுவதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பினும் குறிப்பாக குடும்ப சூழ்நிலை, சமுதாய பழக்க வழக்கம், அரசியல் சூழ்நிலை போன்றவை முக்கிய காரணியாக கூறப்படுகிறது.

கடந்த 2009-ம் ஆண்டில் 15-24 வயதினரில் சுமார் 41சதவீதத்தினர் எய்ட்ஸ் நோயால் பாதிக் கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 15 வயது கொண்டவர்களே அதிகமாகும். இவ்விசயத் தில் இந்தியா 10-வது இடத்தை பிடித்துள்ளது. இருப்பினும் மற்றும் சமுதாய பழக்க வழக்கம், அரசியல் எதிர்ப்பு போன்ற சூழ்நிலைகளை தாண்டி பாலியல் கல்வி சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

சுதந்திர தேசமாக வாக்கெடுப்பு நடத்தவேண்டும், வை கோ

பெல்ஜியம் நாட்டில், ஐரோப்பிய யூனியன் கவுன்சில் கூட்டத்தில், ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்னை குறித்த கருத்தரங்கம் நடந்தது. இதில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேசியதாவது: இலங்கை அரசு, ஏழு வல்லரசுகளின் ராணுவ உதவியுடன், தமிழ் மக்களை கொன்று குவித்தது. ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும், போரை நிறுத்தும்படி கூறியும், இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை.

2009ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து, மே மாதம் வரை லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஜெர்மனி தீர்மானம் கொண்டு வந்தது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆதரித்தன. இலங்கைக்கு பொருளாதார உதவி செய்யக்கோரி, இலங்கை அரசு தயார் செய்த தீர்மானத்தை, இந்தியா, பாகிஸ்தான், சீனா உட்பட 29 நாடுகள் ஆதரித்தன. அதை ரத்து செய்யும்படி, தற்போது ஐ.நா., மூவர் குழு பரிந்துரைத்துள்ளது.

ராஜபக்ஷேவையும், அவரது சகோதரர்களையும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். கிழக்கு தைமூர், தெற்கு சூடான் ஆகியவை தனி நாடாக ஓட்டெடுப்பு நடத்திய ஐ.நா., மன்றம், தமிழ் ஈழம் சுதந்திர தேசமாக, அனைத்து நாடுகளின் பார்வையாளர்களுடைய கண்காணிப்பில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். வெளிநாடுகளில் உள்ள ஈழத்தமிழர்களும், அந்தந்த நாடுகளில் பங்கேற்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றிய பார்லிமென்டை கேட்டுக் கொள்வதெல்லாம், இலங்கையில் தமிழர் பகுதிகளில் இருந்து ராணுவம், காவல் துறை உடனே அகற்றப்பட வேண்டும். சிங்களர் குடியேற்றங்கள் அடியோடு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். வீடுகளை இழந்து முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு, மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள, செஞ்சிலுவை சங்கம், தொண்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட வேண்டும். சிங்கள ராணுவத்தாலும், போலீசாராலும் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் உடனே விடுவிக்கப்பட வேண்டும். இவ்வாறு வைகோ பேசினார்.

Wednesday, June 1, 2011

மாற்றத்தை விரும்பும் ஜெயா, தன்னையும் மாற்றிகொள்வாரா?

தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், போலீஸ் துறையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

குறிப்பாக, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மாற்றத்தை தொடர்ந்து, மாவட்டந்தோறும் எஸ்.பி.,க்கள் மற்றும் சென்னை முழுவதும் துணை கமிஷனர்கள் மாற்றம் செய்யப்பட்டனர்.

அதன் தொடர்ச்சியாக, நேற்று சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள 46 போலீஸ் உதவி கமிஷனர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 26 பேர் காத்திருப்பு பட்டியலில் இருப்பதாக தெரிகிறது.

தன்னை மாற்றிகொள்ளாமல் காவல்துறையில் பதவிகளை மாற்றிக்கொண்டு இருக்கிறார்., தான் மாறுவது எப்போது. மாற்றத்தை விரும்பும் ஜெயா, தன்னையும் மாற்றிகொள்வாரா?

மனித, செல் அறிக்கப்போகும் செல்போன் (புற்றுநோய் அபாயம்)

ஜெனிவா : செல்போன் பயன்படுத்ததாதவர்கள் யாராவது இருக்கிறார்‌ளா என்றால் கிட்டதட்ட இல்லை என்று சொல்ல அளவிற்கு இன்று சர்வதேச சமுதாயத்தில் செல்போன் பயன்பாடு ஊடுருவி இருக்கிறது.

இன்றி‌யமையாத அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக கருதப்படும் செல்போன்களை காலம், நேரம் பார்க்காமல் உபயோகப் படுத்துவதால் உடலில் புற்றுநோழ் புரையோடி ஆபத்தை ஏற்படுத்தும் என அவ்வப்போது எச்சரிக்கை செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.

இருப்பினும் செல்போன் பயன்பாடடால் கேன்சர் நோய் ஏற்படும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்ற வாதமும் நிலவி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் தான் செல்போன்கள் பயன்பாட்டால் கேன்சர் (புற்றுநோய்) நோய் தாக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக உலக சுகாதார மையம் அண்மையில் விடுத்துள்ள எச்சரிக்கை குறிப்பில் தெரிவித்துள்ளது. உலக சுகாதார மையத்தின் ஒரு அங்கமான சர்வதேச கேன்சர் நோய் சிகிச்சை ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. செல்போன் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட அந்தக் குழுவில் 14 நாடுகளைச் சேர்ந்த 31 விஞ்ஞானிகள் இடம் பெற்றிருந்தனர். குழுவுக்கு தலைவராக அமெரிக்க அ‌திபர் ஒபாமாவின் தேசிய புற்றுநோய் ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான டாக்டர் ஜொனாதான் சாமெட் இருந்தார்.

செல்போன்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு தான் கேன்சர் நோயை ஏற்படுத்தும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. வெளிநாட்டில் மொபைல் போன் வாங்குபவர்கள், அந்த போனில் இருந்து வெளியேறக்கூடிய கதிர்வீச்சு அளவு ஆகியனவற்ற‌ை அறிந்து கொண்டு பின்னர் தான் செல்போனை வாங்குகின்றனர். ஆனால் இந்தியா போன்ற மற்ற ஆசிய நாடுகளில் நுகர்வோர் மத்தியில் இந்த விழிப்புணர்வு இல்லை என்று பரவலாக கூறப்படுகிறது. இத்தகைய விழிப்புணர்வோடு செல்போன்களை வாங்கினால், கேன்சர் அபாயத்தில் இருந்து ஓரளவுக்கு நாம் நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!