Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, May 7, 2011

மானம் கப்பலேறி போயாச்சு!! கதறும் ஸ்வேதா?

தாரம் என்ற ‌பெயரில் உருவாகியிருக்கும் புதிய படத்தின் நாயகியான ஸ்வேதா மேனன், அந்த படத்திற்காக தப்பு தப்பாக, தாறுமாறாக ஆடையணிந்து போஸ் கொடுத்திருந்தார். அந்த ஸ்டில்களை ஆண்மைக்குறைவு லேகிய டப்பாவில் அச்சிட்டிருக்கிறார்களாம்.

திரையுலகில் அடுத்தடுத்த வாய்ப்புகள் பெற்று முன்னேறுவதற்காக ஆடைகளை துறந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்தபோது போகாத மானம், லேகிய டப்பாவில் அந்த படம் இடம்பெற்றதால் போய் விட்டதாம் அம்மணிக்கு!

என் மானமே போச்சு என்று கதறிய ஸ்வேதா சம்பந்தப்பட்ட லேகிய ஆசாமிகளிடம் பல கோடிகள் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போட்டிருக்கிறார். வேடிக்கை என்னவென்றால் இந்த படத்தை எடுத்த தயாரிப்பாளரும் தப்பவில்லை இதில். ஏனென்றால் இந்த போட்டோவை பயன்படுத்திக் கொள்ள அனுமதி கொடுத்தவரே அவர்தானாம். மானத்தை வாங்கிடுச்சே!

Friday, May 6, 2011

போதைக்கு அடிமையாகும் சிறுவர்கள்! ஓர் எச்சரிக்கை!!

மும்பை : மும்பையில் உள்ள மன்குர்ட், கோவண்டி குடிசைப் பகுதிகளில் அண்மையில் 12 பேர் கொண்ட டாக்டர்கள் குழு ஒன்று ஆய்வு நடத்தியது. அதில், அந்த குடிசைப் பகுதிகளில் வசிக்கும் சிறுவர்களில் 90 சதவீதம் பேர், புகை, மது, பாக்கு உள்ளிட்ட போதை பொருட்களுக்கு அடிமையாகி உள்ளது தெரியவந்தது. ஏழு வயதிலேயே இந்த சிறுவர்கள் சிகரெட் உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தத் தொடங்குவது தெரியவந்தது

இதுகுறித்து அந்த டாக்டர்கள் குழுவினர் கூறியதாவது: இங்குள்ள குடிசைப் பகுதியில், 300 குடும்பங்களை தேர்ந்தெடுத்து, 1,500 சிறுவர்களிடம் இந்த ஆய்வுகளை நடத்தினோம். இதில், 80 சதவீத சிறுவர்கள், சிகரெட் மற்றும் மதுப்பழக்கங்களுக்கு அடிமையாகி உள்ளனர். 90 சதவீதம் பேர், போதை பாக்குகளை பயன்படுத்துகின்றனர். மேலும், இந்த சிறுவர்கள் 10 வயதிலேயே குற்றச் செயல்களிலும் ஈடுபடத் தொடங்குகின்றனர். போதைப் பாக்கு பயன்படுத்துவதால், இந்த சிறுவர்களில் 1,000 பேருக்கு மேல், பல் தொடர்பான அபாயமான நோய்கள் ஏற்பட்டுள்ளன.

புகை மற்றும் மது பழக்கங்களால், 200 க்கும் அதிகமான சிறுவர்கள், சுவாசக் கோளாறு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, எங்கள் ஆய்வறிக்கையை, மாநில தலைமை செயலரிடம் அளித்துள்ளோம். அந்த அறிக்கையின் அடிப்படையில், பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளதாக, அரசு தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இந்த குடிசைப் பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோருக்கு, சரியான வேலையோ, கல்வியறிவோ எதுவும் இல்லை. எனவே, அவர்கள் தங்கள் பிள்ளைகளை, சரியான முறையில் கண்காணிக்கத் தவறி விடுகின்றனர். கட்டுப்பாடற்ற சுதந்திரம் கிடைப்பதால், அந்த சிறுவர்கள், தவறான நபர்களுடன் சேர்ந்து, தவறான பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகின்றனர். இவர்கள் வளர்ந்து 20 வயதை தொடும் முன்பாகவே, பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடத் தொடங்கி விடுகின்றனர். எனவே பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டியது மிக அவசியம். இவ்வாறு டாக்டர்கள் கூறினர்.

விண்டோஸ் XP - Administrator பாஸ்வேர்ட் Recovery

1. Place your Windows XP CD in your cd-rom and start your computer (it’s assumed here that your XP CD is bootable – as it should be - and that you have your bios set to boot from CD)

2. Keep your eye on the screen messages for booting to your cd Typically, it will be “Press any key to boot from cd”

3. Once you get in, the first screen will indicate that Setup is inspecting your system and loading files.

4. When you get to the Welcome to Setup screen, press ENTER to Setup Windows now

5. The Licensing Agreement comes next - Press F8 to accept it.

6. The next screen is the Setup screen which gives you the option to do a Repair.

It should read something like “If one of the following Windows XP installations is damaged, Setup can try to repair it”
Use the up and down arrow keys to select your XP installation (if you only have one, it should already be selected) and press R to begin the Repair process.

7. Let the Repair run. Setup will now check your disks and then start copying files which can take several minutes.

8. Shortly after the Copying Files stage, you will be required to reboot. (this will happen automatically – you will see a progress bar stating “Your computer will reboot in 15 seconds”

9. During the reboot, do not make the mistake of “pressing any key” to boot from the CD again! Setup will resume automatically with the standard billboard screens and you will notice Installing Windows is highlighted.

10. Keep your eye on the lower left hand side of the screen and when you see the Installing Devices progress bar, press SHIFT + F10. This is the security hole! A command console will now open up giving you the potential for wide access to your system.

11. At the prompt, type NUSRMGR. CPL and press Enter. Voila! You have just gained graphical access to your User Accounts in the Control Panel.

12. Now simply pick the account you need to change and remove or change your password as you prefer. If you want to log on without having to enter your new password, you can type control userpasswords2 at the prompt and choose to log on without being asked for password. After you’ve made your changes close the windows, exit the command box and continue on with the Repair (have your Product key handy).

13. Once the Repair is done, you will be able to log on with your new password (or without a password if you chose not to use one or if you chose not to be asked for a password). Your programs and personalized settings should remain intact.

சென்னையில் சாதனை! 5, ந்து ஆண்டுகளில்

நோக்கியா இந்தியா நிறுவனம், ஐந்து ஆண்டுகளில் 50 கோடி மொபைல் போன் சாதனங்களை தயாரித்து, சாதனை படைத்துள்ளது.

சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில், நோக்கியா இந்தியா நிறுவனத்தின் மொபைல் போன் தொழிற்சாலை அமைந்துள்ளது. இத்தொழிற்சாலையில், கடந்த 2006ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் முதல் மொபைல் போன்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2007ம் ஆண்டில், 10 கோடியாக இருந்த மொபைல் போன் சாதனங்கள் தயாரிப்பு, படிப்படியாக அதிகரித்து, தற்போது 50 கோடியை எட்டியுள்ளது. ஐந்து ஆண்டுகளில், படைக்கப்பட்ட இந்த சாதனையை கொண்டாடும் விதமாக, சி 3 என்ற அதிநவீன வசதிகள் கொண்ட மொபைல் போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நோக்கியா இந்தியா நிறுவனத்தின் செயல் பிரிவு இயக்குனர் பிரகாஷ் கடாமா, புதிய மொபைல் போனை வெளியிட்டு கூறியதாவது: சென்னைத் தொழிற்சாலையில் இதுவரை, 28.50 கோடி டாலர் (1,311 கோடி ரூபாய்) முதலீடு செய்யப்பட்டுள்ளது. இங்கு, 1,000 முதல் 6,000 ரூபாய்வரை விலை கொண்ட மொபைல் போன்கள் தயாரிக்கப்படுகின்றன.

இதையொட்டி 6,074 ரூபாய்விலையில், அதி நவீன வசதிகள் கொண்ட புதிய சி 3 மொபைல் போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிறுவனம் விரைவில் இரண்டு 'சிம்' பொருத்தக் கூடிய மொபைல் போன்களை அறிமுகப்படுத்தவுள்ளது. இவ்வாறு பிரகாஷ் கடாமா கூறினார்.

Thursday, May 5, 2011

"வானம்" வசப்படுமா? சிம்புவுக்கு!!

மின்னலாய் மழையாய் வெயிலாய் நிழலாய் என வானம் படத்தில் பல வித்தியாச உணர்வுகள். ஏதோ ஒரு வித தேடலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிற ஐந்து வெவ்வேறு கதைகள். இந்த ஐந்து கதாபாத்திரங்களும் சந்திக்கிற ஒரு புள்ளி தான் க்ளைமாக்ஸ்!

கலர் கலர் கமர்ஷியல் ஜிகினா வேலைகள் கண்ணை உருத்தினாலும் ஒரு நல்ல கருத்தை சொல்ல வந்திருக்கிறது வானம் டீம். தெய்வம் வாழ்வது எங்கே, தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில்... என்ற நா.முத்துக்குமாரின் வரிகள் தான் படம். தவறுகளை உணரும் மனிதனின் மூலம் ஒரு நல்ல சமுதாயம் நாளை உருவாகும் என்பதே கதையின் மையக் கருத்து.

சிம்புவும் சந்தானமும் - சென்னை பெசன்ட் நகர் குப்பத்தில் வசிக்கிறவர்கள். கேபிள் டி.வி பணத்தை வசூல் செய்யும் கேபிள் ராஜாவாக சிம்பு. பணக்காரனாக பிறக்க முடியாத சிம்பு, பணக்கார மாப்பிள்ளையாக வேண்டும் என்ற பிளானில் ஒரு பணக்கார அமுல் பேபியை காதலிக்கிறார். ஆனால் சிம்பு குப்பத்தில் இருப்பவர் என்ற உண்மையான மேட்டர் அம்மணிக்கு தெரியாது. அவர் நண்பராய் சந்தானம்.

அனுஷ்கா - ஆந்திர எல்லை ரெட் லைட் பகுதியில் ராணியம்மா கம்பனியில் வேலைப்பார்க்கிற விலைமாது. சரோஜான்னா அவ்வளவு மவுசு! அவளுக்கு ஒரு கனவு இருக்கிறது. தனியா பிஸ்னஸ் பண்ணி சம்பாதிக்கனும். ராணியம்மாவிற்கு அல்வா கொடுத்துவிட்டு தன் கனவை சுமந்தபடி தன் தோழியின் துணையோடு சென்னை வருகிறார்.

பரத் - ஒரு இசைக் கலைஞர். தன் இசைக் குழுவோடு லைவ் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற கனவு! ஒரு நாள் இந்த உலகம் தன் புகழை சொல்லும் என்ற லட்சியத்தோடு தன் இசைப் பயணத்தை நோக்கிப் பயணிக்கிறார். அவருக்கு ஜோடி வேகா.

சரண்யா தன் மாமா மற்றும் மகனோடு - பள்ளிப்படிப்பு இல்லாத சரண்யா. தன் மகன் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். வட்டிக்காரன் தொல்லை, மகனை வேலைக்கு அனுப்ப வேண்டிய நிலை. கடனை அடைக்கவும் தன் மகனின் படிப்பு செலவிற்காகவும் தன் கிட்னியை விற்க துணிகிறார்.

பிரகாஷ் ராஜ் - இஸ்லாம் மதத்தை சார்ந்தவர். மதத்தின் பெயரால் நடந்த கலவரத்தில் கற்பவதியான தன் மனைவியின் வயிற்றில் வளரும் இரட்டைக் குழந்தைகளை பறிகொடுக்கிறார். அதே சமயத்தில் தன் தம்பியையும் பிரிந்துவிடுகிறார். தொலைந்துபோன தம்பியைத் தேடி சென்னை வருகிறார்கள் கணவனும் மனைவியும்.

இந்த ஐந்து கதைகளும் க்ளைமாக்சில் இணைத்திருக்கிறார் இயக்குனர் க்ரிஷ்.

இந்தக் கதையை சிம்பு தேர்ந்தெடுத்த காரணத்திற்காய் ஆயிரம் நல்ல வார்த்தைகளால் அவரை அபிஷேகம் செய்யலாம். தத்துவம் பேசி வரும் சில பெரிய நடிகர்கள் கூட கமர்ஷியல் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்க, இளைய நடிகர்கள் இப்படி ஒரு கருத்துள்ள கதையை தேர்வு செய்ததற்காக டன் டன்னாய் பாராட்டலாம்!

சிம்புவும் சந்தானமும் அடிக்கிற லூட்டி செம ஜாலி. இவர்களுடன் சேர்ந்துகொண்டு படத்தின் தயாரிப்பாளர் விடிவி கணேஷும் கலக்குகிறார். சிரிக்க வைத்து வரும் சிம்பு, க்ளைமாக்சில் கொஞ்சம் சீரியஸாகி அனைவரின் கைத்தட்டல்களையும் அள்ளிக் கொள்கிறார். அதுவும் சரண்யாவிடம் திருடிய பணத்தை திருப்பி கொடுக்கிற காட்சியில் சிம்பு பிண்ணிட்டார்!

அனுஷ்கா சரோஜாவாக அசால்ட் பண்ணுகிறார். காமெடி நடிகர் ப்ரம்மாநந்தா என்னை கல்யாணம் பண்ணிக்கோ என்றதும்... என்னது எப்பவுமே ஒரே ஆளா! என பஞ்ச் வைக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் டாக்டரிடம் தன் தோழியை காப்பாற்ற சொல்லும் அனுஷ்கா, நான் வேணும்னா உங்க கூட படுக்குறேன் சார், எத்தனை முறை வேண்டுமானாலும் படுக்குறேன் சார்... என அழுதுகொண்டு சொல்வது நச்.

பரத் ஓவர் அலட்டல். ஆட்டத்தை இன்னும் கொஞ்சம் குறைத்துக் கொண்டிருக்கலாம். காதல், வெயில், இந்தப் படங்களில் நடித்த பரத்தை தேடவேண்டி இருக்கிறது. சரண்யாவும் பிரகாஷ் ராஜும் சிறந்த நடிகர்கள் என்பதை யாரும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இருவருமே கதைக்கு தேவையான நடிப்பு. க்ளைமாக்சில் கைத் தட்ட வேண்டிய பல காட்சிகள் இருக்கிறது.

எவன்டி உன்னப் பெத்தான்... சிம்புவின் ரசிகர்களுக்கு விருந்து படைகிற பாடல். அனுஷ்காவை இன்னும் கொஞ்ச நேரம் ஆடவிட்டிருக்கலாமே என்பது ரசிகர்களின் ஏக்கம். தெய்வம் வாழ்வது எங்கே... என்று பல இடங்களில் ஒலிக்கும் யுவனின் குரல் சலிக்கவில்லை. மெலடி குத்து ராப் என யுவன் இசைவேட்டையாடி இருக்கிறார். நிரவ்ஷாவின் ஷாட்டும் ஆண்டனியின் கட்டும் தேவைக்கு ஏற்ப தெளிவாகவே செயல்பட்டிருக்கிறது.

வானம் ஒரு நல்ல கருத்தை சொல்ல வந்தாலும் இதில் சொல்ல வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது, தீவிரவாதிகள் மருத்துவமனையின் நோயாளிகளையும் பணியாளர்களையும் சரமாறியாக சுட்டு வீழ்த்துவது கர்ன கொடூரம். மும்பையில் நடந்த நிகழ்வைத் தான் எடுத்திருக்கிறார்கள் என்று நம்மை யூகிக்க வைக்கிறார்கள். படத்தில் காட்டப்படும் தீவிரவாதியின் வசனம் இது, சென்னைல குண்டு வச்சா வெடிக்காதா என்ன... வெடிக்கும்! (ஏம்பா இந்த கொலைவெறி?)

சென்னையில் தான் பிற மாநிலத்தின் வியாபாரிகளும் சுதந்திரமாக வியாபாரம் செய்ய முடியும் என்று சொல்லப்படுகிறது. இந்தியாவின் எந்த மாநிலத்தை ஒப்பிட்டுப் பார்த்தாலும் தமிழகம் தான் எந்த அசம்பாவிதங்களும் இல்லாத மாநிலமாக திகழ்கிறது. இதை மறுத்துப் பேசுகிற சில கட்சிகள் இருப்பதே வானத்தில் கொஞ்சம் வருத்தம். தெலுங்கு படத்தின் ரீமேக் என்பதால் மட்டுமே இதை பொருத்துக் கொள்ளலாம்.

படிப்பை பாதியில் நிருத்தியவர்கள் தொடர? தமிழ் மீடியம் அறிமுகம்

மதுரை : இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலையில் (இக்னோ) பட்டப்படிப்புக்கான ஆயத்தப்படிப்பை தமிழ்வழி பயிற்று மொழியாக அனுமதித்து, ஜூலை முதல் மாணவர் சேர்க்கையை அனுமதிக்க உத்தரவிட்டுள்ளது.

எந்த அடிப்படை கல்வித் தகுதியும் இல்லாதவர்கள், பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள், உயர் கல்வியில் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு, சான்றிதழ் படிப்பு பெற, இக்னோ பல்கலை ஆயத்தப் படிப்பை அடிப்படை தகுதியாக நடத்தி வருகிறது. இது ஆறுமாத கால படிப்பு. இதன்பின் 3 ஆண்டு பட்டப் படிப்பை இக்னோவிலேயே தொடரலாம். அவர்கள் மேலும் 2 ஆண்டு முதுநிலை பட்டத்தையும் தொடரலாம். இதை, தொலைநிலைக் கல்வி குழுமம் (டிஸ்டன்ஸ் எஜுகேஷன் கவுன்சில்) அங்கீகரித்துள்ளது.

பல்வேறு தரப்பினரும் பயன்பெறும் வகையில் இப்படிப்பின் தேவையை உணர்ந்து தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, மராத்தி, ஒடியா மொழிகளில் வழங்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பாடநூல்களை மொழி பெயர்க்கும் பணிகள் நடந்து வருகின்றன. மதுரை மண்டலம் இப்பணியை முடித்துவிட்டது. வரும் ஜூலை முதல் இப்படிப்பை தமிழ் வழியில் வழங்க துணைவேந்தர் ராஜசேகரன் பிள்ளை உத்தரவிட்டுள்ளார்.

துவங்கியது இயக்கம்! இனப்(ஈழப்)படுகொளையாலனுக்கு முடிவு?

போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தி, ஐ.நா.வுக்கு அனுப்ப புலம் பெயர்ந்த ஈழ அகதிகள் மறுவாழ்வு மையம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய புலம் பெயர்ந்த ஈழ அகதிகள் மறுவாழ்வு கழகத்தைச் சேர்ந்த ஈழநேரு,

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சேதான் காரணம். இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குமரி முதல் சென்னை வரை கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளோம். பின்னர் இதனை ஐ.நா.வுக்கு அனுப்புவோம். அரசியல் வேறுபாடின்றி அனைவரும் ஒத்துழைப்பார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம் என்றார்.

நாடு திரும்ப விருப்பம், அமெரிக்க வாழ் இந்தியர்கள்!!

நியூயார்க் : அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியர்கள் பெரும்பாலோர் மீண்டும் தங்கள் நாட்டிற்கு திரும்பிவர விரும்புவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. கார்ப்-கார்ப்.காம் என்ற இணைய தளம் நடத்திய கருத்து கணிப்பில் அமெரிக்காவில் கிரீன் கார்டு ஹோல்டராக இருக்கும் இந்தியர்களில் 50 சதவீதத்திற்கும் மேல் தங்கள் நாட்டில் செட்டில் ஆவதை விரும்புவதாகவும் அதற்கான தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் தற்போது 2 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருகின்றனர். தற்பொது 6.4 சதவீதத்தினர் ஏற்கனவே நாடு திரும்பியுள்ளதாகவும், 51 சதவீதம் பேர் தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் 26 சதவீதத்தினர் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நாடு திரும்புவதாகவும்.10 சதவீதம் பேர் குழந்தைகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களை கற்றுதருவதற்காக வேண்டியும் நாடு திரும்புகின்றனர்.

இவர்கள் இவ்வாறு நாடு திரும்புவதால் அமெரிக்காவின் வியாபார உலகில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாததாகி விடும் என்று கார்ப்-கார்ப்.காம் இணையதளத்தின் சிஇஓ பிரபாகரன் முருகையா தெரிவித்துள்ளார். இந்தியர்களில் பெரும்பாலானோர் பிஎச்டி பட்டம் பெற்றவர்களாக காணப்படும் சூழ்நிலையில் ஆசிய நாட்டு மக்களில் இந்தியர்கள் மட்டும் சுமார் 60 சதவீதம் பேர் நிர்வாக துறைகளில் முன்னிலையில் உள்ளனர். இந்தியாவில் வசிக்கும் தங்களது வயதானபெற்றோர்களை கவனித்து கொள்ளவும் வளர்ந்து வரும் இநதயாவின் பொருளாதார வளர்ச்சியும் ஒரு காரணம் என அவர் தெரவித்துள்ளார்.

Wednesday, May 4, 2011

அவ்ளாவாக பிடிக்கும் அமீரை, கங்கனா

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வந்து கொண்டு இருக்கிறார் கங்கனா ரனாவத். சமீபத்தில் மாதவனுடன் இவர் நடித்து வெளிவந்த தானு வெட்ஸ் மானு நல்ல வரவேற்‌பை பெற்றுள்ளது. இந்நிலையில் புதிய டைரக்டர் ஒருவர் கங்கனாவை சந்தித்து, தன்னுடைய கதையை பற்றி கூறியிருக்கிறார்.

கங்கனாவிற்கு கதை பிடித்து போக அந்தபடத்தில் நடிக்க ஓ.கே. சொல்லியிருக்கிறார். கூடவே இந்தபடத்தில் நடிகர் அமீர்கானும் நடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆனால் டைரக்டரோ, நான் சொன்னால் அவர் ஏற்க மாட்டார் என்று தயங்க, உடனே கதையை என்னிடம் கொடுங்கள் என்று வாங்கி, அதை அமீர்கானின் அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டு, அமீர்கானுக்கு தகவல் சொல்லிவிட்டாராம். அமீர் கானும் கதையை படித்துவிட்டு வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். இதனால் சிறிது வருத்தத்தில் இருக்கிறார் கங்கனா.

அமீர்கான் ஏற்கனவே பிஸியாக இருக்கிறார் என்பது அனைவரும் அறிவர். காரணம் இவர் விரைவில் நடிக்க இருக்கும் தூம்-3 படத்திற்கான வேலையில் மும்மரமாக இறங்கிவிட்டார். இதனிடையே இந்தபடத்தையும் நடிக்க ஒப்புக்கொண்டால் கால்ஷீட் உட்பட பல பிரச்சனைகள் வரும் என்பதை உணர்ந்து, இப்படத்தை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டதாக கூறப்படுகிறது.

தேர்தல் விதி மீறல், நடிகை குஷ்புக்கு சம்மன்!

தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக 60 வழக்குகள், வாக்காளர்களை இடையூறு செய்ததாக 19 வழக்குகள், தேர்தல் விதிகளை மீறியதாக 260 வழக்குகளை, தேனி மாவட்ட போலீசார் பதிவு செய்தனர்.

இதில், 10 வழக்குகளில் தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளது. 210 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 40 வழக்குகள் விசாரணை நிலையில் உள்ளன. தேர்தல் வழக்குகள் அனைத்தும் போலீஸ் ஸ்டேஷன் ஜாமீனில் வெளிவரக் கூடியவை என்பதால், வழக்கு பதிவு செய்யப்பட்ட அனைத்து வேட்பாளர்களையும் கைது செய்து, ஜாமீனில் விட்டுள்ளனர்.

ஆனால், பிரசாரத்திற்கு வந்த நடிகை குஷ்பு மீது பழனிசெட்டிப்பட்டி, ஆண்டிப்பட்டி போலீசில் விதிகளை மீறியதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குஷ்பு வெளியூரைச் சேர்ந்தவர் என்பதால், சம்மன் அனுப்பி கைது செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. இவருக்கு ஸ்டேஷனில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tuesday, May 3, 2011

தேர்தல் களம், பதவி ஏற்பு விழாவுக்கு தயாராகிறது விளையாட்டு அரங்கம்!

சென்னை : தமிழகத்தில் புதிய அமைச்சரவை அமையவுள்ள சூழலில், பதவியேற்பு நிகழ்ச்சி எங்கு நடைபெறும் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சி அமைக்கப் போகிறது, கூட்டணி ஆட்சியா? அதிக இடங்களைப் பெற்ற தனிக்கட்சியா என்ற கேள்விகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இவற்றுக்கான விடை மே 13-ல் தெரிந்துவிடும்.

இந்தச் சூழ்நிலையில், புதிய அமைச்சரவை பதவியேற்புக்கான முன் ஏற்பாடுகள் நடந்து வருவதாகத் தெரிகிறது. பதவி ஏற்பதற்கான இடங்கள், பெரும்பான்மை கட்சி அல்லது அணியின் தலைவரது முடிவைப் பொறுத்தது என்றாலும் அரசின் சார்பில் சில இடங்கள் அடையாளமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நேரு உள்விளையாட்டு அரங்கம், வள்ளுவர் கோட்டம், சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கம் போன்ற இடங்களிலே புதிய அமைச்சரவையின் பதவியேற்பு நிகழக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

முடிவடைவதால் அதற்குள்ளாக புதிய அமைச்சரவை பதவியேற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் புதிய அரசு பதவியற்க ஓரிரு நாட்களே உள்ளன.

அப்போது பதவியேற்புக்கான இடங்களைத் தேர்வு செய்வதில் சிரமம் இருக்கக் கூடாது என்றும், இடத்தை இப்போதே தேர்வு செய்து அவற்றைச் சுத்தப்படுத்தி புதுப்பிக்கும் பணிகளைச் செய்தால் பதவியேற்பு நிகழ்வை எளிதாக நடத்தலாம் என்று மூத்த அதிகாரிகள் கருதுகின்றனர்.

சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கம் உட்பட சில இடங்கள் புதிய அமைச்சரவையின் பதவியேற்புக்குத் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பதவியேற்புக்கான இடம் இறுதி செய்யப்பட்டு விட்டால் இதர ஏற்பாடுகளைச் செய்வதற்கு ஒரு நாள் போதும் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.

கின்னஸ் சாதனையை முறியடித்த இளைஞர்! பகிர்ந்துகொள்ள முடியாத தேர்தல் விதிமுறை?

ராமநாதபுரம் மாவட்டம், புல்லந்தையைச் சேர்ந்தவர் தினகரன்(30). கராத்தே மாஸ்டராக உள்ள இவர், சாதிக்கும் எண்ணத்தில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ராமநாதபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஒரே மூச்சில் 151 மெழுகுவத்தியை ஊதி அணைத்து கின்னஸ் சாதனை செய்ததை அறிந்த தினகரன், அதை முறியடிக்க முடிவு செய்தார்.

இதற்கான பயிற்சி எடுக்க கிராம பள்ளிக்கு சென்றபோது, அங்குள்ள ஆசிரியர்கள் அனுமதி மறுத்து, வெளியேற்றினர். இதையெல்லாம் கடந்து, சாதனைக்கு தயாரானார் தினகரன். உலக சாதனையாளர்களை தேர்வு செய்யும் அமைப்புகளில் ஒன்றான "எலைட்' உதவியை நாடினார். கோவையில் கடந்த ஏப்.,30ல் நடந்த நிகழ்ச்சியில், அவருக்கு வாய்ப்பு தரப்பட்டது. ஒரே மூச்சில் 201 மெழுவத்திகளை ஊதி அணைத்து சாதனை படைத்தார். இவரது சாதனையை அங்கீகரித்த "எலைட்' அமைப்பு, உலக சாதனையாக ஏற்று சான்றிதழ் வழங்கியது.

தினகரன் கூறியதாவது: நண்பர்கள் உதவியே என் சாதனைக்கு அடித்தளமாக இருந்தது. எத்தனையோ எதிர்ப்பை மீறி தான் இந்த பாராட்டு கிடைத்துள்ளது. கின்னஸ் சாதனையை முறியடித்தது மகிழ்ச்சியளிக்கிறது. தேர்தல் விதிமுறை அமலில் இருப்பதால், எனது பாராட்டை அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ள முடியவில்லை, என்றார்.

ஆரோக்கியத்துக்கு அறுசுவை சாக்லேட்!

வாஷிங்டன் : சாக்லேட் - இந்த வார்த்தைக்குள்ள ஈர்ப்பை விவரிக்கவே முடியாது. குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களைக் கூட இந்த நான்கு எழுத்து வார்த்தை மயக்கி வைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் சாக்லேட் சாப்பிட்டால் உடல் எடை கூடிவிடும் என்று பலரும் குறிப்பாக பெண்கள் ஆசைப்பட்டாலும் சாக்லெட் சாப்பிடுவதை மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்வர். ஆனால் அதற்கு அவசியமே இல்லை. சாக்லேட் சாப்பிட்டால் இருதயத்துக்கு நல்லதாம். அதனால் உடல் எடையும் அதிகரிக்காதாம். இதை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.

விக்டோரியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் லில்லி ஸ்டோஜன்ஸ்கோவா மற்றும் டாக்டர் ஜான் அஸ்தோன் ஆகியோர் எழுதிய ஆய்வுக் கட்டுரையில் சாக்லேட் உணவு எந்த அளவுக்கு உடலுக்கு நன்மை விளைவிக்கிறது என்று கூறியுள்ளனர்.

வாயில் நீர் சொட்ட சொட்ட மிகவும் ரசித்து, ருசித்து சாக்லேட் சாப்பிட வேண்டுமாம். சாக்லேட் சாப்பிடுவதால் கிடைக்கும் சுகானுபவத்தை உணர்ந்து சாப்பிட்டால் அது கூடுதல் பலனை அளிக்கிறதாம். எனவே சாக்லெட் சாப்பிடுபவர்கள் எவ்வித குற்ற உணர்வின்றி சாக்லெட்டை சாப்பிட வேண்டும் என்று அவர்கள் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர்.

மிகவும் தரமான "டார்க் பிரவுன்' சாக்லேட்டில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் மூலக்கூறுகள் உள்ளன. இவை அதிகப்படியாக சேரும் கொழுப்புகளை விரைந்து கரைத்துவிடுகின்றன. அத்துடன் விரைவாக பசியெடுப்பதையும் சற்று தள்ளிப்போடுகிறது. கருஞ்சிவப்பு திராட்சை ரசத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியைக் காட்டிலும் இரு மடங்கு சக்தி சாக்லேட்டில் உள்ளன. பிரதான மூலக்கூறான சாக்லேட்டில் உள்ள கோகோவில் உள்ள அல்கலாயிட் எனப்படும் ஒபுரோமின் எனும் பொருள் தசைகளை ஊக்குவித்து உடலுக்கு சக்தியை அளிக்கிறது. ரத்த நாளங்களை விரிவடையச் செய்து ரத்த அழுத்தம் ஏற்படுவதைக் குறைக்கிறது. அத்துடன் உடலில் சேரும் கொழுப்பு அளவைக் குறைக்கிறது. இதன் மூலம் மாரடைப்பு அது சார்ந்த பக்க வாதம் ஏற்படுவது குறைகிறது.

மேலும் கோகோவில் உள்ள இயற்கை மூலப்பொருள் மூளையை சுறுசுறுப்பாக்கும் ரசாயனம் சுரக்க உதவுகிறது. இதனால் மன அழுத்தம் ஏற்படுவது குறைகிறது.

சாக்லேட் சாப்பிடுவது நல்லது என்பதற்காக குடும்பத்தினர் சாப்பிடும் அளவுக்கு ஃபேமிலி சாக்லேட்டை வாங்கி சாப்பிடக்கூடாது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் - என்பதைப் போல அளவோடு சாப்பிட்டால் அதன் பலன் முழுமையாகக் கிடைக்கும். பொதுவாக அனைத்து சாக்லேட்டுகளிலும் 75 சதவீதம் முதல் 85 சதவீதம் வரை கோகோ கலந்திருக்கும். இத்தகைய பிரவுன் சாக்லேட் சற்று கசப்பு சுவை இருந்தாலும் அது மிகவும் நல்லது. இது அல்லாமல் பால் சாக்லேட் இந்த அளவுக்கு பலனளிக்காது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்களது ஆய்வின் பலனை அனுபவ ரீதியில் உணர்வதற்காக ஒரு தம்பதியை தேர்வு செய்து அவர்களுக்கு தினசரி சாக்லேட்டும், சாக்லேட் பானங்களும் அளித்து சோதித்துள்ளனர். அவர்களது செயல்பாடு ஆராய்ச்சியை மெய்ப்பிக்கும் வகையில் இருந்துள்ளது.

தங்கையை காப்பாற்ற தமையன் டெல்லி பயணம்?

மத்திய அமைச்சர் மு.க. அழகிரி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவிற்கு பிறகு சென்னையில் முகாமிட்டிருந்தார். திமுக உயர்மட்டக்குழுவில் பங்கேற்ற அவர் சென்னையில் இருந்து கட்சிப்பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

நேற்று முன் தினம் அவர் கொடைக்கானலுக்கு ஓய்வுக்கு சென்றிருந்தார். இதை அறிந்த தென்மாவட்ட கட்சியினர் அழகிரியை கொடைக்கானலில் சந்தித்து ஆலோசனை செய்தனர்.

இன்று அதிகாலையில் கொடைக்கானலில் இருந்து மதுரை சென்ற அழகிரி, காலை 10 மணிக்கு அவசர அவசரமாக டெல்லி புறப்பட்டுச்சென்றார். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் வரும் 6ம் தேதி சிபிஐ விசாரணைக்கு கனிமொழி ஆஜராகவேண்டும்.

இந்நிலையில் அழகிரியின் டெல்லி பயணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனிமொழியை கைது செய்யாமலிருக்க முன் நடவடிக்கைகள் எடுப்பதற்காகத்தான் அழகிரி திடீரென்று டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

Monday, May 2, 2011

உலக வங்கி கடனை இவர்களிடம் பெற்று அடைய்க்கலாமே!!

அரசியல் தலைவர்கள் சொத்து மதிப்பு பட்டியல் இதோ

1.மாயாவதி (55) - உத்தரபிரதேசம் - ரூ. 87 கோடி

2.மு.கருணாநிதி (86) - தமிழ்நாடு - ரூ. 44 கோடி

3. டோர்ஜி காண்ட் (56) - அருணாச்சல பிரதேசம் - ரூ. 23 கோடி

4. பிரகாஷ் சிங் பாதல் (83) - பஞ்சாப் - ரூ. 9.20 கோடி

5. கிரண்குமார் ரெட்டி (50) - ஆந்திரா - ரூ. 8.11 கோடி

6. நவீன் பட்நாயக் (64) - ஒரிசா - ரூ. 7.89 கோடி

7. நெய்பியூ ரியோ (60) - நாகலாந்து - ரூ. 7.23 கோடி

8. பிரிதிவிராஜ் சவான் (65) - மராட்டியம் - ரூ. 6.81 கோடி

9. வி.வைத்திலிங்கம் (60) - புதுச்சேரி - ரூ. 5.70 கோடி

10. தருண் ஹோகை (75) - அசாம் - ரூ. 4.94 கோடி

11. பவான் சாம்ளிங் (60) - சிக்கிம் - ரூ. 3.82 கோடி

12. பூபிந்தர் சிங் ஹூடா (63) - அரியானா - ரூ. 3.74 கோடி

13. உமர் அப்துல்லா (41) - ஜம்மு காஷ்மீர் - ரூ. 3.49 கோடி

14. முகுல் சங்மா (46) - மேகாலயா - ரூ. 3.42 கோடி

15. திகாம்பர் காமத் (57) - கோவா - ரூ. 3.23 கோடி

16. லலித்வாலா (69) - மிசோரம் - ரூ. 2.29 கோடி

17. எடிïரப்பா (68) - கர்நாடகா - ரூ. 2 கோடி

18. நரேந்திர மோடி(கேடி) (60) - குஜராத் - ரூ. 1.5 கோடி

19. அர்ஜுன் முண்டா (43) - ஜார்கண்ட் - ரூ. 1.33 கோடி

20. சிவராஜ் சவுகான் (52) - மத்திய பிரதேசம் - ரூ. 1.23 கோடி

21. ஷீலா தீட்சித் (73) - டெல்லி - ரூ. 1.18 கோடி

22. பி.கே.துமால் (67) - இமாச்சல பிரதேசம் - ரூ. 1.18 கோடி

23. அசோக் ஹெலாட் (60) - ராஜஸ்தான் - ரூ. 1.04 கோடி

24. ராமன் சிங் (58) - சத்தீஸ்கர் - ரூ. 1 கோடி

25. புத்ததேவ் பட்டாச்சார்யா (67) - மேற்கு வங்காளம் - ரூ. 46.20 லட்சம்

26. நிதிஷ் குமார் (60) - பீகார் - ரூ. 42.56 லட்சம்

27. ரமேஷ் போக்ரியால் (52) - உத்தரகாண்டம் - ரூ. 37.30 லட்சம்

28. அச்சுதானந்தன் (87) - கேரளா - ரூ. 16.09 லட்சம்

29. மாணிக் சர்கார் (62) - திரிபுரா - ரூ. 8.11 லட்சம்

30. ஒக்ரம் இபாபி சிங் (63) - மணிப்பூர் - ரூ. 6.09 லட்சம்

மக்களை தவிர அனைத்து அரசியல்வாதிகள் அனைவரிடமும் கோடிக்கணக்கில் பணம்,அசையும், அசையா சொத்துகள்.

மன ரீதியான துன்புறுத்தல், அச்சத்தில் பெண் போலீசார்?

பெண் போலீசாரின் பிரச்னை, குறைகளை கேட்க கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பிரத்யேக கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும், போலீஸ் அதிகாரிகள் மீதான அச்ச உணர்வு காரணமாக, பெண் போலீசார் யாரும் புகார் அளிக்க முன் வரவில்லை.

தமிழகத்தில் பெண் போலீசாருக்கு, ஆண் போலீஸ் அதிகாரிகளால் உடல், மன ரீதியான தொல்லைகள் அதிகரித்திருப்பதாக ஈரோட்டைச் சேர்ந்த பெண் போலீஸ் வள்ளி, சென்னை ஐகோர்ட்டில் முறையிட்டிருந்தார். மேலும், தனக்கு தெரிந்த தகவல்களுடன் கூடிய மனுவை "சீலிட்ட கவரில்' வைத்து கோர்ட்டில் சமர்ப்பித்திருந்தார்.

இவரது புகார், பெண் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான வள்ளியின் மனு மீதான விசாரணை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில், சமீபத்தில் இவரை ஈரோடு எஸ்.பி., அலுவலகத்துக்கு நள்ளிரவு நேரத்தில் அழைத்து பெண் போலீஸ் அதிகாரிகள் விசாரித்தனர். வழக்கு விசாரணை கோர்ட்டில் இருக்கையில், போலீஸ் அதிகாரிகள் அத்துமீறி செயல்பட்டு தன்னை அழைத்து விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தியதாகவும், நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாகவும் ஐகோர்ட்டில் வள்ளி மீண்டும் முறையிட்டார்.

இவ்விவகாரம் விஸ்வரூபம் எடுப்பதை கண்ட போலீஸ் அதிகாரிகள், வள்ளியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை கவனிக்கத் துவங்கியுள்ளனர். மேலும், பல ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும் "பெண் போலீசாரின் குறை கேட்கும் கமிட்டி'க்கு மீண்டும் உயிரூட்டியுள்ளனர்.

தேர்தல் ஆணையம் பற்றி ஒப்பாரி வைக்கும் ஆளும் கட்சி?

தமிழகத்தில் மட்டும் தேர்தல் ஆணையம் அதிக கெடுபிடிகளை விதித்துள்ளது பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியிருப்பது தொடர்பாக முதல் அமைச்சர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணையம் என்ற அமைப்பு விருப்பு, வெறுப்புகளை அகற்றி அனைவருக்கும் பொதுவாகவும், நடுநிலையோடும் செயல்பட வேண்டிய ஒரு அமைப்பு. இத்தகைய தேர்தல் கமிஷன் வெவ்வேறு அளவுகோல்களை கடைப்பிடிக்கக் கூடாது என்பதே மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் கருத்து ஆகும்.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டு, முறைப்படுத்த வேண்டும் என்பதில் அரசியல் கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஒரே அமைப்பு ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு நடைமுறையைப் பின்பற்றுவது ஜனநாயகத்தை வளப்படுத்துவதற்கு உதவாது.

இந்திய அரசியல் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டுள்ள எந்தவொரு அமைப்பும், கடிவாளமின்றி ஓடுவதை அரசியல் சட்டம் அனுமதிக்கவில்லை. மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சுட்டிக்காட்டியிருப்பதைப்போல தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்படுவதுடன், அரசியல் சட்ட நிபுணர்களையும் கலந்தாலோசித்து முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஜனநாயகத்தின் மீதும், அரசியல் சட்டத்தின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை உடையவர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் கருத்து உதாசீனப்படுத்தக் கூடியது அல்ல.

Sunday, May 1, 2011

பயன் தரும் இணையதளங்கள், உங்கள் பிள்ளைகளுக்கு!

1. http://www.textbooksonline.tn.nic.in/ இதனை தமிழக அரசின் கல்வி அமைச்சகம் இதனை உருவாக்கியுள்ளது.இதிலே 12 ம் வகுப்பு வரை தமிழ்,அறிவியல்,கணக்கு என பாடப்புத்தகங்கள் சேமிக்கப்பட்டுள்ளன.

2. http://www.alfy.com/ இதில் சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள், மற்றும் நிறம்தீட்டுதல் வீடியோ கிளிப்ஸ் என விளையாட்டுடன் கற்றலை மேம்படுத்துகிறது இத்தளம்.

3. http://www.coolmath4kids.com/ இத்தளம் குழந்தைகளின் கணித அறிவு ஆற்றலை விளையாட்டுடன் கற்றுத் தருகின்றது.

4. http://kids.yahoo.com/ இது குழந்தைகளுக்காக யாஹூ நிறுவனத்தின் படைப்பாகும்.

5. http://kalvimalar.dinamalar.com/tamil/default.asp இது தினமலர் நாளிதழின் கல்விக்கானப் படைப்பாகும் இதிலே மாணவர்களுக்கானத் தகவல்கள் குவிந்து இருக்கின்றன.

6. http://www.educationatlas.com/ படிக்கும் திறனைச் சிறப்பாக வளர்த்துக் கொள்ளல், படித்து புரிந்து கொள்ளும் திறனை அதிகப்படுத்திக் கொள்ளல்,உங்களுடைய தனிப்பட்டப் படிக்கும் திறன் குறித்து அறிந்து கொள்ளுதல் அவற்றினை மேம்படுத்துதல் போன்றவற்றினை இத்தளம் சிறப்பாகக் கூறுகின்றது.

7. http://www.learn-english-online.org/LessonA/LessonA.htm ஆங்கில அறிவினை ஆரம்பத்தில் இருந்தே வளர்த்துக் கொள்வதற்கானத் தளம்.

8. http://www.tamilnotes.com/தமிழ் இலக்கண அறிவை வளர்த்துக் கொள்வதற்கான இணையம்.

இந்தியாவை இரண்டாக உடைக்க 34343 தொடக்கப்பள்ளிகள்!!

ஏகல் வித்யாலயா என்ற அமைப்பு ஏப்ரல் 2008 கணக்கெடுப்பின் படி 34343 பள்ளிக்கூடங்களை இந்தியா முழுவதும் நடத்திவருகின்றது. இது இந்து பாசிச அமைப்பான ஆர்.எஸ்.எஸ் மற்றும் வி.எச்.பி. தொடர்புடையது.

ஏகல் வித்யாலயா என்பது இந்துச் சிறுவர் சிறுமியருக்கு இந்துமதக் கலாச்சார மரபுகளைக் கற்பிப்பதற்காக, குறிப்பாக பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் ஒரேயோர் ஆசிரியரைக் கொண்டு, குருகுல பாணியில் ஆர்எஸ்எஸ் நடத்தும் தொடக்கநிலை பள்ளிக்கூடங்களாகும்.

1988 ஆம் ஆண்டு ஜார்க்ண்டில் தொடங்கப்பட்ட ஏகல் வித்யாலயா இயக்கம் இன்று 22 மாநிலங்களில் 34000 கிராமங்களில் பரவியுள்ளது. இந்த ஏகல் பள்ளிகளில் 10,00,000 மாணவர்கள் பயிலுகின்றனர். இந்தியாவை ‘சீக்க்ஷித், ஸ்வஸ்த், மற்றும் சம்ரித்’ ஹிந்துத்துவா சிந்தனையோடு வளர்க்கப்படும் குழந்தைகள், இந்தியாவை இரண்டாக உடைத்து ஹிந்து நாடாக உரூவாக்குவதே தமது குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றனர். ஒரு இலட்சம் கிராம்ங்களை 2015க்குல் சென்றடைய வேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோள்.

சங் பரிவார அமைப்புக்கு 2006 ஆம் ஆண்டு 2 மில்லியன் டாலர் கொடுத்துள்ளது ஏகல் வித்யாலயா. அமெரிக்க அதிபர பாரக் ஒபாமாவின் ஆலோசனைக் குழுவில் ஏகல் வித்யாலயா என்ற சங் பரிவார அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்புடைய சோனால் ஷா எனும் இந்திய அமெரிக்கப் பெண்மணி இடம் பெற்றிருக்கிறார் என சர்ச்சை கிளம்பியது.

வெளிநாட்டு நிதி : யு.எஸில் இவ்வமைப்பு வேகமான முறையில் நிதி சேகரிக்கிறது.ஜூலை 2009 ஆம் ஆண்டு சிகாகோவில் 160000 டாலர் நிதி சேகரித்தது.செப்டம்பர் 2009 ஆம் ஆண்டு சான் டிக்கொவில் கலாச்சார நிகழ்ச்சி மூலம் 14000 டாலர் கொடுத்துள்ளது.மே 2010ல், 600 பேர் கலந்துக் கொண்ட சிகாகோ நிகழ்ச்சியில் 82525 டாலர் சேகரித்தது.அதே மாதத்தில் மத்திய அட்லாண்டிக் பகுதியில்,500,000 டாலர் ஐந்து கருணை இல்லம் மூலம் நிதி சேகரித்தது.85 பள்ளிகளை 2004 மற்றும் மார்ச் 2006 ஆம் ஆண்டு ஆஸ்ட்ரேலியாவில் உள்ள அமைப்பு தத்து எடுத்துள்ளதுதேசிய இந்து மாணவர் அமைப்பு (UK) வெளிநாட்டு நிதி திரட்டலில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

கசந்துபோகும் ஸ்பெக்ட்ரம், கசக்கப்போகும் கூட்டணி?

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் கனிமொழி எம்.பி.,யின் பெயர் இடம் பெற்றது. அதை சி.பி.ஐ., கையாண்டவிதமும் முதல்வர் கருணாநிதியை எரிச்சல் படவைத்தது. இதையடுத்து, தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம், அறிவாலயத்தில் நடந்தது. அக்கூட்டத்தில், ஸ்பெக்ட்ரம் வழக்கை சட்டரீதியாக மேற்கொள்வது என்ற முடிவு எடுக்கப்பட்டது.

ஆனால், அக்கூட்டத்தில் காங்கிரஸ் மேலிடம் மீது தி.மு.க., இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், தனியார் "டிவி' நிறுவனம் ஒன்று வெளியிட்ட கருத்துக் கணிப்பில், "தி.மு.க., மீண்டும் ஆட்சியை பிடிக்கும்' என அறிவித்தது. அந்த நிலையில், நேற்று முன்தினம் முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில், அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் சந்தித்துப் பேசினார்.

வெளியே வந்த ஜெயந்தி, நிருபர்களிடம் கூறும்போது, ""காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணியில் எந்த விரிசலும் கிடையாது. ஸ்பெக்ட்ரம் பிரச்னை சுப்ரீம் கோர்ட்டில் துவங்கி, பல்வேறு அமைப்புகளால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால், சட்டவழி செல்லவேண்டிய நிலை இருக்கிறது. அதனால், கூட்டணியில் விரிசல் ஏற்பட வாய்ப்பில்லை' என்றார்.

அவரை தொடர்ந்து, மத்திய அமைச்சர் வாசன், முதல்வர் கருணாநிதியை நேற்று சந்தித்து பேசினார். அப்போது, "ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் வெற்றி மிகவும் பிரகாசமாக உள்ளது. அதிக இடங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம்' என, கூறினார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் குழப்பத்தை உருவாக்க அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா நினைக்கிறார் என்ற குற்றச்சாட்டையும் முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட கேள்வி - பதில் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், மத்திய கூட்டணியில் இருந்து தி.மு.க.,வை வெளியேற்ற சதி நடப்பதாகவும் தெரிவித்தார்.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!