Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, April 4, 2011

பிரபுக்கு வலைவிரிக்கும் அரசியல் கட்சிகள்?

நான் எந்த கட்சியையும் சாராதவன், ஆகையால் அனைத்து கட்சியினரும் என்னை வந்து பார்க்கின்றனர். ஆதுவே எனக்கு மகிழ்ச்சி தான் ஆகையால் அரசியல் எனக்கு வேண்டாம் கூறுகிறார் இளைதிலகம் பிரபு.

சிவாஜி டிரஸ்ட் மூலம் ஏழை எளியவருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை நானும், அண்ணன் ராம்குமாரும் செய்து வருகிறோம். ஒவ்வொரு வருடமும் அப்பாவின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில் ஏழை எளிய நாடக கலைஞர்களுக்கும், அவரது குழந்தைகளுக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறோம். தற்போது தமிழில் நிறைய படங்களில் அப்பா மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறேன். இதுதவிர தெலுங்கு மொழியிலும் நடித்து வருகிறேன். சிவாஜி புரோடக்ஷன் சார்பில் நிறைய படங்களை தயாரிக்க ஆசை. நல்ல கதையம்சம் உள்ள படங்களை தயாரிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

அரசியலுக்கு வருவீங்களா என்று பலரும் கேட்கின்றனர். அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. அப்பா சிவாஜியின் ரசிகர்கள் மற்றும் என்னுடைய ரசிகர்கள் நிறைய‌ பேர் பல்வேறு கட்சியில் இருக்கின்றனர். நான் எந்த கட்சியையும் சாராதவன் என்பதால் எல்லா கட்சியினரும் என்னை வந்து சந்திக்கின்றனர். அதுவே எனக்கு மிகப்பெரிய சந்தோஷமாக இருக்கிறது. அரசியலை பற்றி நன்றாக தெரிந்து வைத்துள்ளேன். ஒரு நாட்டுக்கு நல்ல அரசியல் தேவை. ஆனால் எனக்கோ அரசியல் தேவையில்‌லாதது. அப்பாவின் பெயரை கடைசி வரை காப்பாற்ற வேண்டும். அது‌ஒன்றே போதும், அரசிய‌லெல்லாம் வேண்டாம் என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

ஓய்வா? சச்சின் விளக்கம்!!

புதுடில்லி : தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் எதுவுமில்லை என இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ஓய்வு பெறும் எண்ணம் இதுவரை என் மனதில் இல்லை. ஓய்வு பெறுவது என்று முடிவெடுத்து விட்டால் அதை மறைக்க விரும்பவில்லை.

ஓய்வு பெறுவது என முடிவெடுத்துவிட்டால் அதனை உடனடியாக அறிவித்து விடுவேன் என்று கூறியுள்ளார். கிரிக்கெட் விளையாடுவதை இன்னும் அனுபவித்து விளையாடுவதாகவும் கூறினார்.

பறக்கிறது பலனலிக்குமா?

சிவகங்கை : அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, காரைக்குடியில் நாளை ஜெயலலிதா பிரசாரம் செய்கிறார்.

ஹெலிகாப்டர் மூலம் மாலை 4.15 மணிக்கு காரைக்குடி வரும் அவர், கண்ணதாசன் மணி மண்டபம் அருகே நடக்கும் பொதுக்கூட்டத்தில் 4.30 மணிக்கு பேசுகிறார்.

வேட்பாளர்கள் திருப்புத்தூர் ராஜகண்ணப்பன், மானாமதுரை குணசேகரன், காரைக்குடி பழனிச்சாமி (அ.தி.மு.க.,), சிவகங்கை எஸ்.குணசேகரனை (இந்திய கம்யூ.,) அறிமுகம் செய்து பேசுவார். பின், ஹெலிகாப்டரில் கோவை செல்கிறார்.

Sunday, April 3, 2011

கோயில் கட்டினார்கள்!..கும்பாபிசகம் செய்வார்?? சிங்கமுத்து

தி.மு.க.விற்கு மற்றொரு செந்தமிழ்செல்வி குஷ்பு ஓட்டுகேட்டு வருகிறார். இந்தி எதிர்ப்பு மூலம் வளர்ந்த தி.மு.க. கட்சி இந்திக்கார பெண்ணை வைத்து ஓட்டு கேட்டு வருகிறது.

தமிழ் பெண்களுக்கு கற்பு இல்லை என்று பேசிய குஷ்புவை வடநாட்டிற்கு விரட்ட வேண்டும் என வழக்குகள் போட்ட திருமாவளவனுக்கும், ராமதாசுக்கும் பிரசாரம் செய்கிறார்கள்.

தமிழர்கள் அறிவாளிகள் என உலகத்திற்கு உணர்த்தும் நேரம் இது. அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் ஏழை மக்களுக்கு நல்லது நடக்கும். தினமும் மின்வெட்டு இல்லாமல் மின்சாரம் வழங்கப்படும். விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும். தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட அனைத்து திட்டங்களையும் புரட்சி தலைவி நிறைவேற்றி ஏழைகளின் வாழ்க்கையில் ஒளி விளக்காக திகழ்வார்.

ஊழலை அகற்றவும், விலைவாசியை குறைக்கவும் நீங்கள் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளருக்கு வாக்கு அளிக்க வேண்டும். மீண்டும் தமிழகத்தில் அம்மா ஆட்சி மலர செங்கல்பட்டு தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர் அனகை டி.முருகேசனுக்கு முரசு சின்னத்தில் வாக்கு அளித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று நடிகர் சிங்கமுத்து பேசினார்.

டி.வி, முன் மக்களை கட்டிப்போட்டது?

புது தில்லி : உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தை இந்தியாவில் மட்டும் 6 கோடியே 76 லட்சம் பேர் டி.வி.யில் முழுமையாக பார்த்து ரசித்துள்ளனர்.

இதற்கு முன் எந்த ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியையும் இந்தியாவில் இவ்வளவு பேர் ஒரே நேரத்தில் டி.வி.யில் பார்த்து ரசித்ததில்லை. எனவே இதுவும் ஒரு புதிய சாதனையாக அமைந்து விட்டது. இந்தியா- இலங்கை இறுதி ஆட்டம் நடைபெற்ற நேரத்தில் 64 சதவீதம் வீடுகளில் கிரிக்கெட்டையே பார்த்து ரசித்துள்ளனர்.

இந்தியா வெற்றியை நெருங்கிய நேரத்தில் கிரிக்கெட் நடக்கும் சேனலுக்கு மாறியவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துள்ளது. இந்திய மக்கள் கிரிக்கெட்டுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

நண்பன்டா!! ஜெட் வேகத்தில்?

பொதுவாக ஷங்கர் படம் என்றாலே முடிவதற்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகும். ஆனால் இப்போது இவரது இயக்கத்தில் வேகமாக உருவாகி வரும் "நண்பன்" படம் ஓராண்டிற்கு உள்ளே முடியும் என்றும், இப்படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று கூறப்படுகிறது.

இந்தியில் சக்கபோடு போட்ட "3-இடியட்ஸ்" படம் தமிழில் "நண்பன்" என்ற பெயரில் உருவாகி வருகிறது. இப்படத்தை பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா ஆகியோர் நடித்து வருகின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஷங்கர் எப்பவும் தன்னுடைய படங்களை குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது எடுப்பார். ஆனால் நண்பன் பட சூட்டிங்கோ ஜெட் வேகத்தல் சென்று கொண்டு இருக்கிறது.

கடந்த மாதம் தான் ஊட்டியில் தனது சூட்டிங்கை துவக்கினார். ஆனால் அதற்குள் 2கட்ட சூட்டிங்கை முடித்துவிட்டார். இன்னும் சிலதினங்களில் மூன்றாம் கட்ட சூட்டிங்கை ஆரம்பிக்க இருக்கிறார். அத்துடன் படத்திற்கான இசையமைப்பு வேலையும் வேகமாக நடைபெற்று வருகிறது. நண்பன் படத்திற்காக தற்போது லண்டனில் மியூசிக் கம்போசிங் பணியில் ஈடுபட்டு இருக்கும் ஹாரிஸ், இரண்டு பாடல்களை கம்போசிங் பண்ணி முடித்துவிட்டார். விரைவில் மீதி பாடல்களையும் முடிக்க இருக்கிறார். இதனால் படத்தின் ஆடியோவை செம்படம்பர் மாதம் வெளியிட முடிவுசெய்துள்ளனர். அத்துடன் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டு இருக்கின்றனர்.

தாய்ப்பாலுக்கு நிகராக பசும்பால்!

லண்டன் : மரபணு மாற்றப்பட்ட பசுக்களை சீன வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். தாய்ப் பாலில் உள்ள சத்துகள் அடங்கிய பாலை இந்த பசுக்களே தருமென்று அவர்கள் கூறியுள்ளனர்.

தாய்ப் பால் தருவதற்காக மொத்தம் 300 பசுக்களை மரபணு மாற்றம் செய்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக லண்டனில் இருந்து வெளியாகும் "தி சண்டே டெலிகிராப்' பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் மரபணு மாற்ற பசுக்களை உருவாக்கிய குழுவின் தலைமை விஞ்ஞானி நிங் லீ கூறியுள்ளர், இந்த பசுக்கள் தரும் பாலைக் குடிக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும், தொற்றுநோய் பாதிப்பிலிருந்து பாதுகாப்பும் கிடைக்கும். பொதுவாக தாய்ப் பாலில் குடிக்கும் குழந்தைகளுக்குத்தான் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைக்கும். பசும் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு அது கிடைக்காது. ஆனால் எங்கள் குழு உருவாக்கியுள்ள பசுக்களின் பாலில் தாய்ப்பாலுக்கு நிகரான சத்துகளும், நோய் எதிர்ப்பு சக்தியும் உள்ளது.

குளோனிங் மூலம் புதிய உயிர்களை உருவாக்கும் முறையைப் பயன்படுத்தி பசுக்களின் மரபணுவில் மாற்றம் செய்து அவற்றை, தாய்ப்பால் தரும் வகையில் மாற்றியுள்ளோம். "லைசோசைம்' எனப்படும் புரதச்சத்து இருப்பதுதான் தாய்ப்பாலின் சிறப்பு அம்சம். இதுவே தாய்ப்பாலில் அதிகம் இருக்கிறது. இந்த புரதசத்துதான் குழந்தைப் பருவத்தில் பாக்டீரியா மூலம் ஏற்படும் நோய்களை எதிர்க்க உதவுகிறது. இது எங்கள் பசுக்களிலும் உள்ளது. எனவே எங்கள் பசுக்கள் தரும் பால் தாய்ப்பாலுக்கு சிறந்த மாற்றாக இருக்கும் என்றார்.

எனினும் இந்த மாற்றுத் தாய்ப்பாலுக்கு பலத்த எதிர்ப்பும் எழுந்துள்ளது. இது எந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்கும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பசு தரும் பாலை பச்சிளம் குழந்தைகளுக்குக் கொடுத்தால் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்ற சந்தேகங்களும் கிளம்பியுள்ளது.

ஆமணக்கு எண்ணெயில் விமானம் ஓட்டி, சாதனை?

வாஷிங்டன் : மெக்சிகோ நாட்டில் ஏ320 ரக ஏர்-பஸ் விமானத்தை விமான எரிபொருளுடன் 30% காட்டு ஆமணக்கு எண்ணெய் கலந்து ஓட்டி புதிய சாதனை படைத்தார்கள்.

பெட்ரோல், டீசலுக்கு மாற்று எரிபொருளைக் கண்டுபிடிக்க உலகம் முழுவதும் ஆய்வு நடக்கிறது. ரயில் என்ஜின்களில் டீசலுடன் தாவர எண்ணெயைக் கலந்து ஓட்டலாம் என்பதை இந்தியா உள்ளிட்ட நாடுகள் நிரூபித்துள்ளன. இதற்காக ரயில்பாதை ஓரங்களில் காட்டு ஆமணக்குச் செடிகள் நட்டு பராமரிக்கப்பட்டன. என்ன காரணத்தாலோ இந்த ஆய்வும் சோதனைகளும் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளன.

ஆனால் மெக்சிகோ நாட்டில் விமானத்தையே காட்டு ஆமணக்கு எண்ணெய் கலந்த எரிபொருளில் ஓட்டி சனிக்கிழமை சோதித்துப் பார்த்தார்கள். விமானம் வெற்றிகரமாக, எந்தவிதத் தொழில்நுட்பச் சிக்கலும் இன்றி பறந்தது. மெக்சிகோ சிட்டி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏஞ்செல் அல்பினோ கார்சோ நகரம் வரை விமானத்தை ஓட்டினார்கள்.

விமான எரிபொருளைப் பயன்படுத்தினால் ஏற்படும் கரியுமிலவாயு வெளிப்பாடு இந்த கலப்பு எண்ணெயைப் பயன்படுத்தியபோது 60% குறைந்திருப்பதும் குறித்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. முதலில் பெட்ரோல், டீசலுக்கான தேவை 30% முதல் 60% வரை குறைந்தாலே சர்வதேசச் சந்தையில் அதன் விலை தாறுமாறாக உயர்வதைக் கட்டுப்படுத்தி விடலாம்.

அதே சமயம் சாப்பிடுவதற்குத் தகுதியற்ற காட்டு ஆமணக்கு எண்ணெய்க்கும் நல்ல பொருளாதாரப் பயன்பாடு கிடைக்கும். எளிதில் சாகுபடி செய்யக்கூடிய இதை இந்தியா போன்ற நாடுகளில் தரிசு நிலங்களிலும் சாலையோரங்களிலும் சாகுபடி செய்து எண்ணெய் வளத்தை உள்நாட்டில் பெருக்க முடியும். எனவே இந்த சோதனை முயற்சி எல்லா வகையிலும் பாராட்டத்தக்கதே ஆகும்.

A R R ன், ஸ்பிரிட் ஆப் மியூசிக்!

ஆஸ்கர், கிராமி விருதுகளுக்குப் பின் தமிழ்ப் படங்களில் அவ்வப்போது கவனம் செலுத்தி வந்தாலும், கடந்த ஆறு மாதங்களாக ஓய்வையே விரும்பினார் ஏ.ஆர்.ரஹ்மான்.

ஹாலிவுட், பாலிவுட் படங்களுக்கு ரஹ்மானை ஒப்பந்தம் செய்ய காத்திருந்த போதும், ரஜினியின் "ராணா' படத்தையே டிக் அடித்தார். இப்போது பாடல்கள் உருவாக்கம் பெற்று வருகிறது. கவிஞர் வைரமுத்து எழுதிய இரண்டு பாடல்களுக்கு இசையமைப்பு பணிகள் முடிந்து விட்டன. அதில் ஒன்று ரஜினியின் அறிமுகப் பாடல், மற்றொன்று காதல் பாடல்.

இந்நிலையில் ரஹ்மானின் சொந்த வாழ்க்கை, இசைப் பயணம், அவரது ஆன்மிக ஈடுபாடு உள்ளிட்ட அனைத்தையும் கொண்டதாக தயாராகி உள்ளது. "ஸ்பிரிட் ஆப் மியூசிக்' என்ற புத்தகம். இதை எழுதியிருப்பவர் நஸ்ரீன் முன்னி கபீர். இந்த புத்தக வெளியீட்டு விழா ஏப்ரல் 6-ம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது. மணிரத்னம் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். பாலிவுட், கோலிவுட் உள்ளிட்ட இந்திய திரையுல நட்சத்திரங்களும். ஹாலிவுட் நட்சத்திரங்களும் பெருமளவில் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

தேர்தல் ஜுரத்தில் அரசியல் கட்சிகள்!!

தேர்தல் நாள் நெருங்குவதால் அனைத்து கட்சிகளும் ஆர்ப்பரிக்க முடியாத சூழ்நிலையில் சிக்கியுள்ளன. தங்களது அணிக்கு பெரும்பான்மை கிடைத்து, ஆட்சி அமைக்க முடியுமா? என்ற கலக்கத்தில் கட்சித் தலைவர்கள் உள்ளனர்.

முதல்வர் கருணாநிதி, முதல் கட்டமாக கோவை, ஈரோடு, சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டங்கள் மூலம் பிரசாரம் செய்து முடித்துள்ளார். இன்று வடசென்னையில் பிரசாரம் மேற்கொள்கிறார். நாளை (5ம் தேதி) சென்னை தீவுத்திடலில் காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசுகிறார்.இரண்டாம் கட்டமாக தென்சென்னை, மதுரை, திண்டிவனம், விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், திருவாரூர் ஆகிய இடங்களில் கருணாநிதி பிரசாரத்தில் ஈடுபடுகிறார். தி.மு.க.,வுக்கு ஆதரவாக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா, கடந்த 26ம் தேதி முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தை திருச்சியில் துவக்கினார். கடந்த 1ம் தேதி சென்னையில் அதிவிரைவு பிரசாரத்தில் ஈடுபட்டார். இன்று மதுரையிலும், நாளை முதுகுளத்தூர், பரமக்குடி, காரைக்குடி, மதுரை, கோவை பகுதியில் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அ.தி.மு.க., அணியில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், நடிகர், நடிகைகள் பிரசார மேடையில் ஏறி, இறங்குகின்றனர்.

இரு அணியிலும் தலைவர்கள் பிரசாரம் சூடுபிடித்திருந்தாலும் எந்த அணிக்கும் வாக்காளர்களின் ஆதரவு அலை வீசவில்லை. இலவச திட்டங்களை தி.மு.க.,வை போல அ.தி.மு.க.,வும் அறிவித்திருப்பதால் இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கையையும் பொதுமக்கள் சரிசமமாக கருதுகின்றனர்.

தேர்தல் பணியில் இரு அணிகளின் தொண்டர்களும் களத்தில் காணப்படுகின்றனர். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதில் தேர்தல் கமிஷன் தீவிரமாக இருப்பதால், கட்சியினர் மத்தியில் அதிருப்தி நிலை நீடிக்கிறது. தவிரவும், பா.ஜ., - இந்திய ஜனநாயகக் கட்சி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளும் களத்தில் இருப்பதால், எந்த அணிக்கு இது வாய்ப்பைக் குறைக்கும் அல்லது சாதகமாக்கும் என்ற குழப்பமும் இருக்கிறது.

தேர்தல் நாள் நெருங்கும் நிலையில், இலவச "டிவி', காஸ், ஊரக வேலைவாய்ப்பு திட்டம் போன்றவை ஆளுங்கட்சிக்கு ஆதரவை பெற்றிருந்தாலும், ஸ்பெக்ட்ரம் ஊழல், மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்றவை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. அதே நேரத்தில், இந்த பிரச்னைகள் எல்லாம் அ.தி.மு.க., அணிக்கு ஆதரவாக மாறுமா? என்பதிலும் தெளிவு இல்லை.மேலும், தொகுதி சீரமைப்பு, அந்தந்த பகுதியின் வளர்ச்சி நிலைமை, வேட்பாளரது பின்புலம் போன்றவற்றை வைத்து ஓட்டுப் போடும் நிலை இருப்பதாக, பலரும் கருதுகின்றனர்.

மேலும், தேர்தல் கமிஷன் கெடுபிடி செய்வதாக ஆளும் தி.மு.க., கூட்டணி வெளிப்படையாக குறைகூறுவது, இத் தேர்தலில் வித்தியாசமான அம்சமாகும். "நியாயமற்ற செயலில் ஈடுபடுவதாக' முதல்வர் குற்றம்சாட்டியிருக்கிறார். எதிரணியில் அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் தோன்றி பிரசாரம் செய்யப்போவதில்லை என்பதும் வெளிப்படையாகியிருக்கிறது.

Saturday, April 2, 2011

வடிவேலுடன் மினி பேட்டி?

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் நடந்த தேர்தல் அடிதடி வழக்கால், மதுரை சிறையில் உள்ள ரித்தீஷ் எம்.பி.,யை காமெடி நடிகர் வடிவேலு நேற்று மதியம் 2 மணி முதல் 2.30 மணி வரை சந்தித்து பேசினார். பின், சிறை வளாகத்தில் அவர் கூறியதாவது தி.மு.க., மீண்டும் ஆட்சியை பிடிக்கும். நான் ஏழையாக இருந்தவன். அந்த கஷ்டம் தெரியும். வசதி படைத்தவர்களுக்கு அது தெரியாது. இதனால்தான் ஏழை மக்களுக்கு கருணாநிதி அறிவித்த திட்டங்களை உணர்ந்து பிரசாரம் செய்கிறேன்.

ஓட்டுரிமை இல்லாதவர்களுக்குகூட கருணாநிதியின் திட்டங்கள் போய் சேருகின்றன. ஆனால், இதெல்லாம் ஏன் செய்கிறார் என்று ஒரு ஆளு கேட்கிறான், என்றார். மதுரைக்கு திடீர் விசிட் ஏன்?நான் அம்மாவை பார்க்க... அதாவது என்னை பெத்த அம்மாவை பார்த்து திருநீறு வாங்க வந்தேன். ஏப்.,1 முதல் தென்மாவட்டங்களில் பிரசாரம் செய்து, என் சொந்த பந்தங்களை எல்லாம் பார்ப்பேன். என் வாழ்க்கையே காமெடிதாங்க. திருவாரூர் பிரசார கூட்டத்தில், விஜயகாந்த் குறித்து நீங்கள் பேசியது அநாகரீகமானது இல்லையா? எதுங்க அநாகரீகம். நான் என்ன அசிங்கமாவா பேசினேன். தப்பு தப்பா பீல் பண்ணாதீங்க.

விஜயகாந்த்தை பற்றி நீங்கள்...கேள்வியை முடிப்பதற்குள் இடைமறித்த வடிவேலு, "யாருங்க அவரு. ஒரு ஆளு கருப்பு எம்.ஜி.ஆர்., கேப்டன் சொல்றாரு. அந்த ஆளை பற்றிதான் பேசுவேன். பாவம் ஒரு அப்பாவி வேட்பாளரை மக்கள் மத்தியில் அடிக்கும் அந்த ஆளுக்கு தலைவனுக்குரிய தகுதி கிடையாதுங்க. அந்த கட்சி தொண்டர்கள் நல்லவங்கதான். இந்த ஆளுதான் சரியில்லை.அவரை பற்றி பேசுவதால் உங்களுக்கு மிரட்டல் வந்ததா?எனக்கா மிரட்டல். என்னை பார்த்துதான் அந்த ஆளு பயப்படுறாரு. எவ்வளவு திட்டினாலும் தாங்குறாரு. படவாய்ப்பு, ஷூட்டிங் இல்லாததால் கடையை (கட்சியை) ஆரம்பிச்சிருக்கிறாரு.

கோடிகளுடன் புரளும் கேடிகள்!!

தேர்தல் வந்தால் போதும் நிதி வசூலை ஆரம்பித்துவிடுகின்ற கட்சிகள். அது எங்கிருந்துதான் இந்தக் கட்சிகளுக்கு பணம் கொட்டுகிறதோ… ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிகளைப் புரட்டிவிடுகின்றன தேசியக் கட்சிகளும் மாநில கட்சிகளும்.

காங்கிரஸ், பாரதிய ஜனதா போன்ற கட்சிகளின் ஆண்டு வருமானம், பன்னாட்டு நிறுவனங்களை விட அதிகமென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

இந்த கட்சிகளின் வருமானங்கள், அது தொடர்பாக அக்கட்சிகள் தாக்கல் செய்துள்ள வருமான வரி கணக்குகள் போன்ற விவரங்களைத் திரட்டி வெளியிட்டுள்ளது ஜனநாயக சீர்த்திருத்த சங்கம் என்ற அமைப்பு. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் உதவியுடன் இவற்றைப் பெற்று வெளியிட்டுள்ளது அந்த
அமைப்பு.

2007-08 மற்றும் 2008-09ம் ஆண்டுகளில் மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு வந்துள்ள வருமானம் ரூ.717 கோடியே 69 லட்ச ரூபாய்!

பாஜக மட்டும் இளைத்ததா என்ன… ஆட்சியில் இல்லாவிட்டாலும் அக்கட்சி ரூ.343 கோடியே 8 லட்சம் ஈட்டியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி ரூ.251 கோடியே 76 லட்சமும், ஏழைப் பங்காளர்களின் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி ரூ.122 கோடியே 53 லட்ச ரூபாயும், சமாஜ்வாடி கட்சி ரூ.71 கோடியே 30 லட்சம், தேசியவாத காங்கிரஸ் ரூ.57 கோடியே 40 லட்சமும், ராஷ்டிரிய ஜனதா தளம் ரூ.6 கோடியே 20 லட்ச ரூபாய் வருமானமும் ஈட்டியுள்ளன.

தேசிய கட்சிகளில் மிகவும் குறைவாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு ஆண்டுகளிலும் சேர்த்து இரண்டு கோடியே 40 லட்ச ரூபாய் மட்டுமே வருமானம் பெற்றுள்ளது.

2007-08ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2008-09ம் ஆண்டில் பி.எஸ்.பி.,யின் வருமானம் 161 சதவீதமும், தேசியவாத காங்கிரஸ் வருமானம் 130 சதவீதமும், காங்கிரஸ் வருமானம் 125 சதவீதமும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சி கூப்பன்களை விற்பனை செய்ததன் மூலம் மட்டும், 598 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது.

இந்த இரு ஆண்டுகளில் பா.ஜ., 297 கோடியே 70 லட்ச ரூபாயும், பி.எஸ்.பி., 202 கோடியே 94 லட்ச ரூபாயும், காங்கிரஸ் 72 கோடியே 9 லட்ச ரூபாயும் நன்கொடையாக பெற்றுள்ளன. பகுஜன் சமாஜ் கட்சி, ஒருவரிடமிருந்தும் 20 ஆயிரத்திற்கும் அதிகமாக நன்கொடை பெறாத நிலையிலும், அக்கட்சி பெற்ற மொத்த நன்கொடையின் மதிப்பு 202 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது
குறிப்பிடத்தக்கது.

கடந்த 2009ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, அதிக சொத்துக்கள் உடைய கட்சி காங்கிரஸ். இக்கட்சிக்கு, 611 கோடியே 77 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இதையடுத்து, பகுஜன் சமாஜ் கட்சிக்கு 286 கோடியே 15 லட்ச ரூபாய் மதிப்பிலும், பா.ஜ.,வுக்கு 260 கோடியே 70 லட்ச ரூபாய் மதிப்பிலும் சொத்துக்கள் உள்ளன.

அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள், நன்கொடையாக கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை வாரி வழங்கியுள்ளன. பாரத் எலெக்டோரல் டிரஸ்ட் அதிகபட்சமாக 18 கோடி ரூபாயை கட்சிகளுக்கு நன்கொடையாக அளித்துள்ளது. இந்நிறுவனம், காங்கிரஸ் கட்சிக்கு 11 கோடி ரூபாயும், பாஜகவுக்கு 6 கோடி ரூபாயும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு 1 கோடி ரூபாயும் வழங்கியுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக, டாரன்ட் பவர் லிமிடெட் நிறுவனம் காங்கிரஸ், பி.ஜே.பி.,க்கு தலா 4 கோடியே 50 லட்ச ரூபாயும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 1 கோடி ரூபாயும் அளித்துள்ளது.

வீடியோகான் இன்டஸ்டிரியல் லிமிடெட் நிறுவனம் 7 கோடியே 50 லட்ச ரூபாயும், அதானி அண்டு முந்த்ரா போர்ட் அண்டு எஸ்.இ.இசட்., லிமிடெட் நிறுவனம் 6 கோடி ரூபாயும் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியுள்ளன.

இவை வெளியில் தெரிந்த கணக்கு மட்டுமே. மறை முகமாக அரசியல் கட்சிகளுக்குக் கிடைக்கும் ஆதாயம் இதைவிட இருமடங்கு இருக்கும் என்கிறது இந்த தகவல்களை வெளியிட்டுள்ள அமைப்பு.

இப்படியெல்லாம் அரசியல் கட்சிகளுக்கு தனியார் நிறுவனங்கள் நன்கொடை வழங்குவது எதற்காக? ஜனநாயகத்தை தழைக்கச் செய்யவா… ம்ஹூம்!

ஆட்சியிலிருக்கும் கட்சி மூலம் அதிக காரியங்களைச் சாதித்துக் கொள்ளவும், எதிர்க்கட்சியாக உள்ள முக்கிய கட்சி அந்த காரியங்களைக் கெடுக்காமல் இருக்கவும்தான்!

வெறிச்சோடிய முக்கிய நகரங்கள்!

உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தைக் காண ரசிகர்கள் திரையரங்குகளிலும், வீடுகளிலும் முடங்கியதால் சென்னையின் முக்கிய வீதிகள் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடின.

சென்னையில் உள்ள பள்ளிகள், தனியார் நிறுவனங்கள் என அனைத்துக்கும் மதியத்துக்கு மேல் விடுமுறை அளிக்கப்பட்டன. போட்டியைக் காண்பதற்காக அனைவரும் அவசரமாக வீடு திரும்பியதால் பகல் 12 மணி முதல் மதியம் 2 மணி சென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆனால் 2 மணிக்கு மேல் முக்கியச் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின. எப்போதும் பரபரப்பாகவும், போக்குவரத்து நெரிசலிலும் சிக்கித் தவிக்கும் மயிலாப்பூர், வேப்பேரி, பெசன்ட் நகர், குரோம்பேட்டை, அண்ணா நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட சென்னையின் முக்கியப் பகுதிகள் அனைத்தும் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடின.

ஷாப்பிங் மால்கள், பார்களிலும் எல்சிடி திரைகளில் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பட்டது.

மும்பை முக்கிய நகரங்களில் உள்ள பெரிய திரையரங்குகள், ரெஸ்டராண்டுகள், ஷாப்பிங் மால்கள், பப்புகள் ஆகியவற்றில் ஒளிபரப்பப்பட்டன. இங்கு ஏராளமானோர் கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்தனர். இதற்காக அவர்கள் முன்பதிவும் செய்திருந்தனர்.

ஏராளமான ரசிகர்கள் தங்கள் முகத்தில் பல்வேறு வண்ணங்களை தீட்டியிருந்தனர். ஏராளமான பார்களில் மது விற்பனையும் படுஜோராக நடைபெற்றது. வடக்கு மும்பையில் உள்ள. போட்டியை முன்னிட்டு மகாராஷ்டிரத்தில் அரசு விடுமுறை அறிவிக்கப் பட்டிருந்தது. போட்டியை காண வந்திருந்த ரசிகர்கள், மைதானத்தில் வீடு திரும்புவதற்காக சிறப்பு ரயில்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் மதியத்திற்கு மேல் விடுமுறை அளிக்கப்பட்டன.

கொல்கத்தாவில் காலையில் இருந்து கிரிக்கெட் ஜுரம் ரசிகர்களை தொற்றிக்கொண்டது. பட்டாசுகள், மூவர்ணக் பலூன்கள், இந்திய அணியின் டி-ஷர்ட்கள் ஆகியவற்றின் விற்பனை படுஜோராக நடைபெற்றது. இங்குள்ள முக்கிய நகரங்களில் பிரமாண்டமான திரைகளில் ஆட்டம் ஒளிபரப்பப்பட்டது. இதை ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்தனர்.

வோட்டுக்கு..., நோட்டு?? பரிசு!!

கடந்த 1991-96ம் ஆண்டு வரை தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி நடந்து வந்தது. அப்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில், "கட்-அவுட்' கலாசாரம், வளர்ப்பு மகன் திருமணம், ஆடம்பரம் போன்றவை தலை தூக்கி இருந்தன. இதனால் பொதுமக்களிடம், அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.க., மீது கடும் அதிருப்தி நிலவியது. இதன் எதிரொலியாக, 1996ம் ஆண்டு தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட நெடுஞ்செழியன் போன்ற மூத்த தலைவர்கள் கூட, தொகுதி மாறி வேறு தொகுதிகளில் போட்டியிட்டனர். பிரசாரத்தின் போது, அ.தி.மு.க., வேட்பாளர்கள் பலர் திருப்பி அனுப்பப்பட்டனர். வேட்பாளர்களை ஊருக்குள்ளேயே நுழையவிடாமல், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பொது மக்களின் எதிர்ப்பு, தேர்தல் முடிவிலும் எதிரொலித்தது. அ.தி.மு.க., வெறும் நான்கு இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

அந்த நிலைமை இப்போது ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அச்சத்தில், ஏற்கனவே சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, ஆளுங்கட்சி எடுத்து வைத்திருந்தது. ஐந்தாண்டுகளும் வழங்கப்பட்ட நலத் திட்டப் பணிகள் அனைத்தும், மக்களைச் சென்றடையும் போது, உள்ளூர் எம்.எல்.ஏ.,க்களின் பங்கேற்பும் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ளப்பட்டது. அதற்கு ஓரளவு பலனும் கிடைத்தது. எம்.எல்.ஏ.,க்கள் அடிக்கடி தென்படுவதால், மக்கள் மத்தியில் பெரியளவில் வெறுப்பும் எழவில்லை. இதெல்லாம், முதல் இரண்டு ஆண்டுகள் மட்டும் தான். அடுத்தடுத்த சம்பவங்கள் அதைத் தக்கவைக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, சுனாமி போல வந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார், மக்களின் மன நிலையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. "எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் அனைவருமே வலுவாக சம்பாதித்து விட்டனர்' என்ற எண்ணம், எல்லாருக்கும் ஏற்படத் தொடங்கியது. இடைத்தேர்தல்களில் வழங்கப்பட்ட பணம், அவர்களின் ஆசையைத் தூண்டிவிட்டது. "ஓட்டுக்கு நோட்டு வாங்குவது தங்கள் உரிமை' என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவு, தற்போது விபரீதத்தில் முடிந்திருக்கிறது.

இந்தத் தேர்தல் பிரசாரத்தில் நடந்த சில சம்பவங்களும், 1996 நிலைமை திரும்புகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் தான் இருக்கின்றன. திருவாரூரில், முதல்வர் மகள் செல்வி பிரசாரத்தின் போது, ஒரு முதியவர், "எங்களுக்கு என்ன செய்தீர்கள், உங்களுக்கு ஓட்டு போடுவதற்கு' என நேரடியாகவே கேட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில், அமைச்சர் சுப.தங்கவேலனை பொதுமக்கள் ஊருக்குள் நுழையவிடாமல் தடுப்பதற்காக, தங்கள் சாலையையே வெட்டி திருப்பி அனுப்பியுள்ளனர். விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி பிரசாரம் சென்ற போது, ஊருக்குள் நுழைய விடாமல், கிராம எல்லையிலேயே பொதுமக்கள் தடுத்துள்ளனர். சென்னை மயிலாப்பூரில், காங்கிரஸ் தலைவர் தங்கபாலு பிரசாரம் மேற்கொண்ட போது, ஒரு மூதாட்டி, "ஆமா, தேர்தல் அப்ப வருவீங்க; ஓட்டு வாங்கிட்டு போவீங்க; அதுக்கப்புறம் இந்தப் பக்கமே வரமாட்டீங்க... உங்களுக்கு எதுக்கு ஓட்டு போடணும்' என, திட்டி அனுப்பியுள்ளார்கள்.

Friday, April 1, 2011

கடமை, பொறுமை, வீரம் மூன்றும் இல்லை, வடிவேல்!

தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய வடிவேலு, கலைஞர் ஏழைகளுக்காக போட்ட திட்டம் என்னை கவர்ந்தது. அதனால்தான் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறேன். புதுசா ஒரு நடிகர் வந்திருக்கிறார். நான்தான் கருப்பு எம்.ஜி.ஆர். அடுத்த முதல்வர் என்றெல்லாம் பேசுறாரு. கட்சி ஆரம்பிச்சு அஞ்சு வருஷம்தான் ஆகுது.

ஆனால் அஞ்சுமுறை முதல் அமைச்சரா இருந்த கலைஞரை ஒழிப்பேன் என்கிறார். வயது வித்தியாசம்தான் பார்க்க வேண்டாமாய்யா? கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம். கடமை இருந்தால் வீரன் ஆகலாம். பொறுமை இருந்தால் தலைவர் ஆகலாம். இந்த மூன்றும் அவரிடம் இல்லையே!

தலைவர் என்றால் அடிப்படை தகுதி வேண்டாமா கட்சி வேட்பாளரையே போட்டு அடிக்கிறார். நான் சினிமாவில் காமெடி பண்ணுகிறேன். அவர் அரசியலில் காமெடி பண்றாரு. அந்த அம்மா தான் அவரை பெரிய ஆளுன்னு நெனச்சு 41 சீட் கொடுத்திருக்கு. எனக்கு அவரு டம்மி பீஸ்தான். சினிமாவில் ஹீரோவா நடிச்சாலும் அரசியலில் அவர் ஜீரோ தான்.

பாலிவுட்டை கோலிவுட்டுக்கு இழுத்துவரும், விக்ரம்!

பாலிவுட்டின் கனவு கன்னியாக திகழும் நடிகை கத்ரீனா கைப் தமிழில் விக்ரமின் ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மதராசப்பட்டினம் படத்தை இயக்கிய டைரக்டர் விஜய், இப்போது விக்ரம்மை வைத்து "தெய்வத்திருமகன்" என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விக்ரமின் ஜோடியாக அனுஷ்காவும், அமலா பாலும் நடித்து வருகின்றனர். இப்படம் முடியும் தருவாயில் உள்ளது. இதனையடுத்து விக்ரம், டைரக்டர் ஷங்கரின் நிறைய படங்களுக்கு கம்யூட்டர் கிராபிக்ஸ் டிசைனராக பணிபுரிந்த கண்ணன் என்பவரது படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு "கரிகாலன்" என்று பெயரிட்டுள்ளனர். மிகுந்த பொருட்ச் செலவில் மிக பிரம்மாண்டமாக இப்படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

இதனிடையே இப்படத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகை கத்ரீனா கைப்பை நடிக்க வைக்க டைரக்டர் கண்ணனும், நடிகர் விக்ரமும் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை கத்ரீனா கைப் நடிக்க சம்மதம் தெரிவித்தால் தமிழில் அறிமுகமாகும் முதல்படம் இதுவாகத்தான் இருக்கும். அதுவும் பிரபல நடிகர் சீயான் விக்ரமுடன் நடிக்க இருக்கிறார்.

அனைத்து அதிகாரமும் உண்டு? ஐகோர்ட்! (வாக்குப்பதிவு நேரம் மாற்றம்)

தேர்தல் கமிஷன் சர்வாதிகாரமாக நடந்து கொள்கிறது என்றும், சோதனை என்ற பெயரில் மக்களை துன்புறுத்துவதாகவும் எனவே தேர்தல் கமிஷன் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை கடந்த வாரம் விசாரித்த நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர். இதன் படி தேர்தலை நியாயமாக நடத்தும் வகைக்கு தேர்தல் கமிஷனுக்கு எல்லா அதிகாரமும் உண்டு என்றும் , கமிஷன் எடுக்கும் நடவடிக்கை அதிகாரத்தில் தலையிட முடியாது என்றும் , அ‌தே‌நேரத்தில் நடத்தப்படும் சோதனைகள் தொடர்பாக உரிய ஆவணங்கள் பராமரித்து கொள்ளப்பட வேண்டும் என்றும், இத்துடன் பணம் பட்டுவாடா, பொருட்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதை தடுக்க கமிஷனுக்கு அதிகாரம் உண்டு. இவ்வாறு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது.

தேர்தல் ஓட்டளிப்பு நேரம் மாற்றம், வழக்கமாக ஓட்டுப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் இந்த முறை காலை ஒரு மணிநேரம் தாமதமாக துவங்கும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது, இதன்படி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும்.

உலக கிண்ணம்! ஆஸ்திரேலியா கவலை?

மெல்போர்ன் : தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் மட்டுமே தற்போதைய அளவில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கிரிக்கெட் மோகம் ஒட்டுமொத்த உலகத்தையே ஈர்த்துள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல.

இந்தியா - இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதும் உலககோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி, மும்பை வாங்கடே மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. உலகெங்கும் உள்ள இந்தியர்கள், இந்தியாவின் வெற்றியை காண ஆவலுடன் உள்ளனர். இந்திய பிரதமரும், இந்தியாவி்ன வெற்றிக்கு அனைவரும் பிரார்த்திக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில், நாளை நடை‌பெற உள்ள போட்டியைக் காணும் பொருட்டு, போட்டி நடைபெறும் நேரத்தில் பணியில் ஈடுபடப் போவதில்லை என்று ஆஸ்திரேலியாவில் வாழும் இந்திய டாக்சி டிரைவர்கள் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக, ஆஸ்திரேலியர்கள் மிகுந்த கலக்கமடைந்துள்ளனர். மேல்படி்பபிற்காக ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் இந்திய மாணவர்கள் பெரும்பாலானோர் பகுதிநேர வேலையில் ஈடுபட்டு வருகி்ன்றனர். அந்த பகுதிநேர வேலைகளில், டாக்சி ஓட்டுவது முதன்மை இடத்தைப் பிடிக்கிறது.

இதுகுறித்து, அந்த டாக்சி டிரைவர்கள் கூறியதாவது, போட்டி துவங்கியதிலிருந்து முடியும்வரை நாங்கள் டாக்சி ஒட்டுவதில்லை என்றும், இந்தியாவின் வெற்றியை கண்குளிர கண்டு ரசிக்க ஆர்வமாக உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்னர். சாட்டர்டே நைட் பார்ட்டி நேரத்தில் போட்டி நடப்பதால், தாங்கள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும், இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போதும் தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டதாக ஆஸ்திரேலியர்கள் தெரிவித்தனர். இவர்கள் உள்ளிட்ட உலகில் வாழும் அனைத்து இந்தியர்களின் கனவை நனவாக்கும் வண்ணம், இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற வேண்டும்

ஈழப் (இனப் ) படுகொலை செய்தவனை இந்தியாவுக்குள் அனுமதியா?

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியைப் பார்க்க வரும் இலங்கை அதிபர் ராஜபட்சவை இந்தியாவுக்குள் அனுமதிக்க கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

ஈழத் தமிழர்களை கொன்று குவித்த ராஜபட்ச, இந்தியாவுக்கு வருகை தருவது தமிழ்ச் சமூகத்தை வேதனைப்படுத்துவதாகும்.

பிரபாகரனின் தாயார் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள நான் சென்றபோது, இந்திய எம்.பி., என்ற நிலையிலும் இலங்கை நாட்டுக்குள்ளேயே அனுமதிக்க முடியாது என தடைவிதித்தார். இந்திய அரசை அவமதிக்கும் வகையில் திருப்பி அனுப்பிய ராஜபட்ச இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு இந்தியா வருகிறார்.

இந்திய அரசை தொடர்ந்து அவமதித்து வரும் ராஜபட்சவை அவ்வப்போது சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும் இந்திய அரசின் போக்கு வேதனைக்குரியதாகவும் நகைப்புக்குரியதாகவும் உள்ளது. சர்வதேசப் போர்க் குற்றவாளி என உலகின் பல நாடுகள் ராஜபட்சே மீது குற்றம்சாட்டுகிற நிலையில், இந்திய அரசு மட்டும் ராஜபட்சவை வரவேற்று ஊக்கப்படுத்துவது தமிழினத்தை மேலும் மத்திய அரசு வஞ்சிக்கிறது என்பதை மீண்டும் உறுதிபடுத்துகிறது.

சர்வதேச போர்க்குற்றவாளி ராஜபட்சவை இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்க கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வற்புறுத்துகிறது.

துணை முதல்வர், ஆசை இல்லை? கேப்டன்!

ஈரோடு : வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றால் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் சந்திர குமாரை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றால் தான் துணை முதல்வர் பதவியை கோரப்போவதில்லை என்று தெரிவித்தார். மேலும் அ.தி.மு.க., வென்று புதிய ஆட்சி அமைந்ததும் பல்வேறு புதிய நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!