Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, March 5, 2011

இது ஆடம்பரமா? பப்ளிசிடியா??

புதுடில்லி : காங். எம்.பி. கன்வர் மகன் லலித் தன்வர் மற்றும் டில்லியை சேர்ந்த முன்னாள் எம்.பி.யின் மகளான யோகிதாவிற்கும், டில்லியில் உள்ள ராஜஸ்தான் பேலஸ்சில் 14மில்லியன் பவுண்டு செலவில் நடந்த இந்த திருமணம் மிகவும் சாதாரணமாக நடந்ததாக சொல்லப்படுகிறது.

திருமண பரிசாக 429 ஹெலிகாப்டர்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திருமண நிச்சயதார்த்தில் கலந்து கொண்டவர்களுக்கு, சில்வர் பிஸ்கட், சபாரி ஆடைகள் மற்றும் ஐயாயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ய 100 டிஷ்கள் மற்றும் 12 டிஜிட்டல் ஸ்கிரீன்கள் பயன்படுத்தப்பட்டன. மணமகன் அலங்காரம் செய்தவருக்கு ஐயாயிரத்து ஐந்நூறு டாலர் பணம் தரப்பட்டது. ஒருவார காலம் நடந்த திருமண நிகழ்ச்சியில் அரசியல் முக்கிய தலைவர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் உள்பட 18 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் உணவு தயாரித்தனர். மொத்த திருமண செலவு 55 மில்லியன் டாலர்களை தாண்டும் எனவும், இதுவரை எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என கணக்கீட முடியவில்லை என மணமகனின் மேலாளர் தெரிவித்துள்ளார். வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் இன்று கலந்து கொள்கிறார்.

இந்நிலையில், இந்தியா ஏழைநாடு என்ற முறையில், இங்கிலாந்தில் இருந்து தரப்படும் 280 மில்லியன் பவுண்டு வழங்கி வரும் வேலையில், ஒரு திருமண நிகழ்ச்சிக்காக 14 மில்லியன் இங்கிலாந்து பவுண்டு செலவழிக்கப்பட்டது உலகளவில் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இதுபோன்று செல்வ செழிப்போடு திருமணங்கள் நடைபெறும் இந்தியாவிற்கு ஆண்டு தோறும் அளிக்கப்படும் நிதிஉதவி தேவைதானா என அந்தாட்டு எம்.பி.க்கள் கூறுவதாக பத்திரிகைகள் கருத்து தெரிவிக்கின்றன.

இந்தியாவின் மொத்த உணவு தானிய விரயத்தால் ஏற்படும் பற்றாக்குறையில் 15 சதவீதத்தை, இந்த திருமண செலவில் இருந்து ஈடுகட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்ண தொறந்த சாமி!

தனது ஸ்லிம்மான உடம்பாலும், கவர்ச்சியாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் என்று சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்து விட்டார் நடிகை ஸ்ரேயா. தற்போது நடிப்பை ‌காட்டிலும் ஆன்மீகம், யோகா, ‌மற்றும் பொது சேவை தொடர்பான நிகழ்ச்சிகளில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கு காரணம் ஒரு பார்வையற்ற தம்பதியர் என்று மனம் நெகிழுந்து கூறுகிறார்.

இதுகுறித்து ஸ்ரேயா கூறியதாவது, சில தினங்களுக்கு முன்னர் பார்வையற்ற தம்பதியரை பார்த்தேன். அவர்கள் இருவரும் மிகவும் அன்புடன், பாசத்துடன் இருந்தனர். அத்துடன் மற்றவர்களுக்கு தங்களால் முயன்ற சிறுசிறு உதவிகளும் செய்து வந்தனர். இந்த சம்பவம் என்னை நெகிழ்ச்சியடைய செய்தது. பார்வையற்ற அவர்களே தங்களால் இயன்ற உதவிகள் செய்யும் போது, கை, கால் மற்றும் கண்கள் நன்றாக இருந்தும் நாம் ஏன்? செய்யக் கூடாது என்று ‌தோன்றியது. அப்போது முடிவு செய்தேன். நாமும் இதுபோன்று உதவிகள் ஏதாவது செய்ய வேண்டும் என்று.

அதன்பின்னர் நானும் சமூக சேவைகள் செய்யத் தொடங்கி விட்டேன். விரைவில் தன்னார்வ அமைப்பு ஒன்று தொடங்கி அதில் பார்வையற்றவர்களுக்கு உதவி செய்ய ஏற்பாடு செய்து வருகிறேன் என்றார். அதுமிட்டுமின்றி உண்மையான அழகு முகத்தில் அல்ல, மனதில் என்பதை நன்றாக புரிந்து கொண்டேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஸ்ரேயா.

Friday, March 4, 2011

நடுநிசி, கவுதம் மேனன் (பேட்டியின் சுருக்கம்)

முதல்ல எல்லாருக்கும் வணக்கம்., என்னுடைய "நடுநிசி நாய்" படத்திற்கு ஆதரவு அளித்த தமிழ் ரசிகர்களுக்கு நன்றி.

என் படத்திற்கு ஆதரவும், எதிப்பும் வந்த வண்ணம் உள்ளது. ஆனாலும் தமிழ் ரசிகர்கள் புரிந்துகொண்டு ஆதரவு அளித்துகொண்டு இருக்கிறார்கள். மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் படத்தை திரையில் படமாக பார்க்கவேண்டும், அதற்கு வேறு அர்த்தங்கள் கர்ப்பிக்கக்கூடாது. சில அமைப்புகள் கண்டனம் தெரிவித்து படத்தை மேலும் பிரபலமாக்கியது, அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

இளைஞர்கள் வாழ்க்கையை சீரழித்துள்ளார், அருவருப்பையும், வக்கிரத்தையும் பகிரங்கமாக படமெடுத்து விட்டிருக்கிறார் கவுதம் மேனன் என்று பலபக்கமிருந்தும் எதிப்பு தேர்வித்தார்கள் அவர்களுக்கு ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன். ஆட்கள் தியேட்டருக்கு வருவது குறைந்த இந்த நேரத்தில் சொல்வதை வித்தியாசமாகவும், புதுமையாகவும் சொல்லணும், அதே நேரத்தில் விரசமில்லாமல் சொல்லி உள்ளேன்,என்று விளக்கம் தந்தார் கவுதம் மேனன்.

எது எப்படியோ எல்லோரும் சேர்ந்து ஒரு பைசா செலவில்லா பப்ளிசிட்டி செய்துள்ளார்கள்.

நன்றி:மலையாள நாளிதழ்.

மருத்துவ மகத்துவம்., பாகற்காய்

நம் உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் வருகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும். உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.

1. பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.

2. பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.

3. பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும்.

4. பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.

5. ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.

6. பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும்.

7. பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.

8. நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.

9. ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும்.

10. மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது.

11. இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.

12. சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது.

13. பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது.

14. உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம்.

மலேசிய வேலைவாய்ப்பு! ஓர் எச்சரிக்கை!!

கோலாலம்பூர், மலேசிய நிறுவனங்களில் பணியாற்ற 45 ஆயிரம் இந்தியர்களை நியமிக்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது என மலேசிய நாட்டின் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், முறையாக விசாரிக்காமல் வெளிநாடு சென்றால், சாலையோர ஓட்டல்களில் தான் பணியாற்ற வேண்டி வரும் என இந்திய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மலேசியாவைப் பொறுத்த வரை கட்டுமானத் தொழில், ஓட்டல்கள், பெரிய தோட்டங்களில் வெளிநாட்டை சேர்ந்த தொழிலாளர்களே அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர்.இதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் சில ஏஜன்டுகள், வெளிநாட்டு ஆசை காட்டி பலரையும் மலேசியாவிற்கு அழைத்து செல்கின்றனர். கவர்ச்சியான சம்பளம் கிடைக்கும் என்ற ஆசையில் வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. இந்த சூழலில் 45 ஆயிரம் இந்தியர்களை புதியதாக நியமிக்க மலேசிய அரசு முன்வந்துள்ளது.

இருப்பினும்,போலிகளிடம் யாரும் ஏமாற வேண்டாம் என, இந்திய ஐ கமிஷன் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இது குறித்து கமிஷன் அதிகாரிகள் மேலும் கூறியதாவது, மலேசியாவில் பணி வாய்ப்பை தரும் நிறுவனத்தின் பின்னணி, வேலை வாங்கித் தரும் ஏஜன்ட் ஆகியோரைப் பற்றி நன்கு விசாரித்து விட்டு பின், பணியில் சேர வேண்டும். மலேசியாவில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் இந்திய தொழிலாளர்களுக்கு ஆறு மாதம் வரை சம்பள பாக்கி வைத்துள்ளன. அத்துடன், இந்தியர்களை இழிவாகவும் நடத்தி வருகின்றன. இவ்வாறு பிரச்னையில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் நல்ல ஓட்டல்களில் பணியாற்றிய சிலரிடம் மலேசியாவில் மாதம் 35 ஆயிரம் கிடைக்கும் என்ற ஆசை வார்த்தை கூறி அவர்களை அழைத்து வந்த ஏஜன்டுகள், மலேசியாவில் ஒட்டல் வேலைக்கு சேர்த்தனர். ஆனால் நாளடைவில் அது பிளாட்பாரத்தில் உள்ள ஓட்டல் என்பது தெரிந்தது. அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

புலிகளின் கைவர்சையா? இலங்கை அரசு சந்தேகம்!

கொழும்பு, மார்ச் 4 இலங்கையில் இரு போர் விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்த விமானியின் பிரேத பரிசோதனை அறிக்கை தொடர்பாக குழப்பம் நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த முக்கியத் தளபதி ஒருவர் திரிகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமானி மொனாத் பெரேரா மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் நல்ல உடல் நலத்துடன் இருந்தார் என்று விமானப்படைத் தளபதி ஹர்ச அபேவிக்கிரம கூறியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இளைஞரான மொனாத் உட்பட அனைத்து விமானிகளுமே தொடர்ச்சியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வந்தனர். விமானத்தில் புறப்படும் முன்னரும் திரும்பி வந்ததும் அவர்களுக்கு ரத்த அழுத்த பரிசோதனை செய்யப்படும். மேலும் கடந்த மாதம் அவருக்கு முழுமையான மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. இதில் அவர் நல்ல உடல்நிலையி்ல் தான் இருந்துள்ளார். என்று விமானப்படைத் தளபதி தெரிவித்துள்ளதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் விமான மொனாத் பெரேராவின் பங்களிப்பை கெளரவிக்கும் வகையில், தற்போது மரணத்துக்குப் பின்னர் அவருக்கு ஸ்குவாட்ரன் லீடராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

புலிகளா, அல்லது இலங்கை அரசு செய்துவிட்டு புலிகளின் பெயருக்கு களங்கம் விளைவிக்க செய்த சதியா.

கண்டுகொள்ளுமா தேர்தல் கமிஷன்?

ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களின் இறுதித் தேர்வு மார்ச் 2ம்தேதி துவங்கி 25ம் தேதி வரை நடைபெறுகிறது. 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு வரும் 22ம் தேதி துவங்கி ஏப்ரல் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வை 11லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.பல்கலைக் கழக தேர்வுகள் ஏப்ரல் 5ம்தேதி துவங்கி மே 2ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த நிலையில் மார்ச் 20ம் தேதியில் இருந்து ஏப்ரல் 11ம்தேதி வரை தேர்தல் பிரசாரத்திற்கான உச்சக்கட்ட நாளாகும். தேர்தல் பிரசாரத்தில் ஒலி பெருக்கிகள் பயன்படுத்தப்படும் என்பதால் இது மாணவர்களின் படிப்புக்கு இடையூறாக இருக்கும்.மேலும் சித்திரை திருநாள் என்பதால் ஏப்ரல் 14ம் தேதி வருகிறது. தமிழக அரசும் இந்த நாளை அம்பேத்கர் பிறந்த தினமாக அறிவித்து விடுமுறை அளித்துள்ளது. ஏப்ரல் 13ம்தேதி தேர்தல் நடத்தப்படுவதால் அந்த நாளும் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இடையில் 15ம்தேதி ஒரு நாள் மட்டுமே இருக்கிறது.

தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால் அரசு ஊழியர்கள் 12ம் தேதியே விடுப்பு எடுத்துக் கொண்டு தொடர்ந்து ஐந்து நாட்கள் தங்ககள் விடுமுறை நாட்களை சொந்த ஊரில் கொண்டாட போய்விடுவார்கள். தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டியது ஜனநாயக கடமை. தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால் அனைத்து வாக்காளர்களும் ஓட்டுச்சாவடிக்கு வந்து வாக்களிப்பார்களா என்பது சந்தேகம். ஆகவே தேர்தல் தேதியை ஒத்தி வைக்க வேண்டும்.

இந்த ஒன்றிலாவது அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தல் தேதியை மாற்ற சொல்கிறார்களே.

Thursday, March 3, 2011

வானத்தை வலைக்கப்பார்க்கும் மு.க.பேரன்?

முதல்வர் கருணாநிதியின் பேரனும் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகனுமான தயாநிதி அழகிரிக்கு சொந்தமான கிளவுட் நைன் மூவிஸ் நடிகர் சிம்புவின் வானம் படத்தை விலைக்கு வாங்கியுள்ளது.

டைரக்டர் கிரிஷ் இயக்கத்தில் நடிகர் சிம்பு நாயகனாக நடித்திருக்கும் புதிய படம் வானம். இந்த படத்தின் நாயகியாக அனுஷ்காவும், இன்னொரு நாயகனாக நடிகர் பரத்தும் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தை தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் மூவிஸ் வாங்கியிருக்கிறது. விரைவில் வானம் இசை வெளியீடு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருக்கிறார் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி.

தயாநிதியின் கிளவுட் நைன் மூவிஸ் தயாரித்து வரும் முக்கிய படமான அஜித்தின் மங்காத்தாவை மே 1ம்தேதி ரீலிஸ் செய்வது என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில், வானம் படம் அதற்கு முன்னதாகவே ரீலிஸ் செய்யப்படுமா? அல்லது அதற்கு பிறகு ரீலிஸ் செய்யப்படுமா? என்பது தெரியவில்லை.

விக்கிலீக்சுக்கு, லீக்செய்தவருக்கு மேலும் வழக்கு?

வாஷிங்டன், மார்ச் 3: விக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு தகவல்களை அளித்ததான சந்தேகத்தில் கைதான அமெரிக்க ராணுவ வீரர் பிராட்லி மேன்னிங் மீது மேலும் 22 புதிய குற்றச்சாட்டுகளை அமெரிக்கா கூறியுள்ளது.

அமெரிக்க அரசின் பல ரகசியத் தகவல்களை விக்கிலீக்ஸ் இணையதளம் கசிய விட்டு உலகம் முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தங்கள் ரகசியங்கள் வெளியானது குறித்து விசாரித்த அமெரிக்க அரசு, இராக்கில் பணியாற்றிய தங்கள் நாட்டு ராணுவ வீரர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கடந்த ஆண்டில் கைது செய்தது.

இப்போது அவர் மீது மேலும் பல குற்றச்சாட்டுகளை ராணுவம் கூறியுள்ளது. அமெரிக்க ராணுவத்தில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களை பரிசோதித்த போது அதில் அதிகாரபூர்வமற்ற சாஃப்ட்வேர் ஒன்று உள்ளது தெரியவந்ததுள்ளது.

இந்த சாஃப்ட்வேரை பயன்படுத்திதான் விக்கிலீக்ஸ் அமெரிக்க ரகசியங்களை எடுத்துள்ளது தெரியவந்துள்ளது. விக்கிலீக்ஸின் பெயரை குறிப்பிடாமல் எதிரி என்று குறிப்பிட்டுப் பேசிய அமெரிக்க ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர், எதிரிகளுக்கு உதவியாக பிராட்லி செயல்பட்டது உறுதி செய்யப்பட்டால் அவருக்கு மரண தண்டனை கூட விதிக்கப்படலாம் என்றார்.

பொருத்திருக்கும் பொக்கிஷம் நாயகி!

நிறைய படவாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கிருது, ஆனால் நல்ல வலுவான கேரக்டர் ஏதும் அமையாததால் வரும் படங்கள் அனைத்தையும் புறக்கணிக்கிறேன் என்கிறார் நடிகை பத்ம ப்ரியா.

பட்டியல், மிருகம், பொக்கிஷம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை பத்மப்ரியா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென் இந்தியா சினிமாவை ஒரு ரவுண்ட் வந்துவிட்டார். ஆனால் எந்த மொழியிலும் அவரால் நிலைத்து நிற்க முடியவில்லை. ஆரம்பத்தில் ஹோம்லி பெண்ணாக வந்த பத்மப்ரியா, பின்னர் கவர்ச்சியாகவும் நடிக்க ஆரம்பித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நாயகியாக ஜொலிக்க முடியவில்லை. தற்போது தமிழில் எந்த படவாய்ப்பும் கிடைக்கவில்லை. இதற்கு காரணம் ஒரு நல்ல வலுவான கேரக்டருக்காக காத்திருப்பதாக கூறுகிறார் பத்மப்ரியா.

வார்த்தையில் வண்ணமிடும் தமிழக கங்.,

தமிழகத்தில் காங்கிரஸ் தயவின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது, விரைவில் காமராஜர் ஆட்சி, காங்கிரசை முதன்மை கட்சி ஆக்குவோம்' - இவை எல்லாம் தமிழக காங்., கோஷ்டி தலைவர்கள் அடிக்கடி உதிர்க்கும் வார்த்தைகள். ஆனால் தற்போது தி.மு.க., கூட்டணியில் அக்கட்சியின் நிலை, சொல்லித் தெரியவேண்டியதில்லை. "பாரம்பரிய பட்டத்து யானை, தன் பாகனின் பசிக்காக பிச்சை எடுப்பது போல, காங்கிரசின் நிலை உள்ளது' என, கடந்த 1991-96 அ.தி.மு.க., ஆட்சியின் போது, சட்டசபை நிகழ்வுகள் குறித்து, பீட்டர் அல்போன்ஸ் வர்ணித்தார். அவர் உதிர்த்த வார்த்தைகள் தற்போது கனக்கச்சிதமாக அக்கட்சிக்கு பொருந்தும்.

புதிய கட்சிகள்: கடந்த சட்டசபை தேர்தலில் முதன் முதலாக களம் கண்ட தே.மு.தி.க.,வின் கூட்டணி நிலைப்பாட்டை, கடந்த சில வாரங்களுக்கு முன் வரை இரு திராவிட கட்சிகளும் பதட்டத்துடன் கண்காணித்தன. கடந்த லோக்சபா தேர்தலில் முளைத்த கொங்குநாடு முன்னேற்ற கழகத்தை, தங்கள் அணிக்கு இழுப்பதில் இரு கட்சிகளும் முனைப்பு காட்டின. இப்போட்டியில் தி.மு.க., வெற்றியும் பெற்றுள்ளது. ஆனால் 125 ஆண்டு பாரம்பரிய கட்சியின் நிலை?

கடந்த 2004 முதல் தி.மு.க., கூட்டணியில் தொடரும் காங்., 90 "சீட்' என, நிபந்தனை விதித்து, 60 "சீட்' கிடைத்தால் கூட போதும் என்ற ரீதியில் கையேந்தி நிற்கிறது. இதில் "கற்பனை குதிரை மீது சவாரி, தேவையற்ற கூடுதல் சுமை' (தி.க., தலைவர் வீரமணி) என்பது போன்ற வசவுகளையும் தாங்கிக் கொண்டு, கிடைத்ததை பெற வேண்டிய நிலை.

காங்., இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது' என, முழங்கும் தலைவர்கள் இதை எப்படி பொறுத்துக் கொள்கின்றனர் என்பது தான் தொண்டர்களுக்கு விடை தெரியாத வினா. கடந்த இரு தேர்தல்களில் தனித்து நின்ற தே.மு.தி.க., பலத்தை நிரூபித்துள்ளது. ஆனால் "13 லட்சம் இளைஞர்களை கட்சியில் இணைத்துள்ளதாக தம்பட்டம் அடிக்கும் காங்., தலைவர்கள், மாற்று நிலை எடுக்க யோசிப்பது ஏன்?' என கேட்கின்றனர் தொண்டர்கள். "ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி உடன்பாட்டில் காங்., கையெழுத்திட்டவுடன் "கோட்டா சிஸ்டம்' என்ற பெயரில் தொகுதிகளை கூறு போட, கோஷ்டி தலைவர்கள் தயங்குவதில்லை. அப்போது, "தன்னுடைய கோஷ்டி தான் பலமானது' என புள்ளி விவரங்களை, தமிழகத்தின் நிலை தெரியாத "மேலிட தலைவர்களிடம்' அடுக்குவர். இதை நம்பி கோஷ்டிகளுக்கு, "சீட்'களை பிரித்து தருவர். ஆனால் தற்போதைய இக்கட்டான நிலையில், கோஷ்டி தலைவர்கள் வாய் மூடி மவுனியாக இருக்கின்றனர். கூட்டணி என்றால், "சீட்' பிடிக்க மல்லுக்கட்டும் கோஷ்டி தலைவர்கள் கட்சியின் தன்மானத்தை காக்க முன்வருவதில்லை.

தனித்து நிற்கும் பட்சத்தில், ஒவ்வொரு கோஷ்டி தலைவரும் ஐந்து தொகுதிகளுக்கு பொறுப்பேற்று பணி செய்தால், 30 தொகுதிகளை கைப்பற்றலாம். ஆனால், இந்த விஷப்பரீட்சைக்கு தலைவர்கள் தயாரில்லை. இதுபோன்ற சூழல் ஏற்பட்டால், அத்தலைவர்களின் செல்வாக்கு என்ன என்பது, வெட்ட வெளிச்சமாகிவிடும். அவர்களின் கோஷம் எல்லாம் "தேர்தல் நேரத்து துணுக்கு தோரணங்கள் தான்' என்கின்றனர் தொண்டர்கள் ஆதங்கத்துடன்.

பலமுறை தனித்து நின்று ஜெய்த்தவர்கள், தற்போது நின்று ஜெய்ப்பதர்க்கு?

கேன்சரை எதிர்க்கும் கேரட்

காரட் சாப்பிடுவதால் நம்முடைய உடலில் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் உருவாகிறது என்பது தெரிந்த செய்திதான். ஆனால் காரட்டில் உள்ள எந்த பகுதி புற்றுநோய் கட்டிகளை அழிக்கிறது என்பது இப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்திலும், டென்மார்க்கிலும் உள்ள நியூகாஸில் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுபற்றிய ஆராய்ச்சிகளை எலிகளைக் கொண்டு செய்துவருகிறார்கள். எலிகளில் காணப்படும் புற்றுநோய்க்கட்டிகள் மூன்றில் ஒருபங்காக குறைவது எதனால் என்பதற்கான விடை இப்போது கிடைத்திருக்கிறது.

காரட்களை சேமிக்கும்போது வேர்ப்பகுதிகளில் கறுப்பு நிற புள்ளிகள் தோன்றி அழுகல் தொடங்கி விடுகிறது. இந்த நோய்க்கு liquorice rot என்று பெயர். இந்த நோயை ஒழிக்க Falcarinol எனப்படும் இயற்கையான பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பூச்சிக்கொல்லிக்கு புற்றுநோய்க்கட்டிகள் வளர்ச்சியடைவதை கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக இப்போது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் புற்றுநோய்க் கட்டிகளுடன் கூடிய 24 எலிகள் பயன்படுத்தப்பட்டன. இந்த எலிகளை மூன்று குழுக்களாக பிரித்துக் கொண்டனர். முதல் குழுவிற்கு நமக்கு நன்றாகத் தெரிந்த ஆரஞ்சுநிற காரட்டுகள் பதினெட்டு வாரங்களுக்கு உண்ணக் கொடுக்கப்பட்டன. மற்றொரு குழுவிற்கு falcarinol தேவையான அளவில் சேர்க்கப்பட்ட காரட்டுகள் கொடுக்கப்பட்டன. மூன்றாவது குழுவிற்கு falcarinol ன் அளவு அதிகரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டது. மூன்றாவது குழுவில் புற்றுநோய்க்கட்டிகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது அறியப்பட்டது.

நியூகாஸில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் கிர்ஸ்டன் ப்ராண்ட் என்பவர் இந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். புற்றுநோய்க்கட்டிகளை கட்டுப்படுத்த எவ்வளவு தேவை என்பதை துல்லியமாக கண்டறிய இந்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக டாக்டர் ப்ராண்ட் கூறுகிறார். மேலும் காய்கறிகளைப் பயிரிடும்போதே மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்தும் ஆய்வுகள் செய்யப்பட்டுவருகின்றன.

பச்சைக்காரட், சமைக்கப்பட்ட காரட், காரட்சாறு இவற்றை உணவில் சேர்க்கும்போது அவை புற்றுநோய்க்கட்டிகளில் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்தும் ஆய்வுகள் தொடருகின்றன.

Falcarinolன் அளவு அதிகரிக்கும்போது நச்சுத்தன்மையை விளைவிக்கிறது என்பது ஒரு கசப்பான உண்மை. ஆனால் ஒரே சமயத்தில் 400 கிலோ காரட்டை சாப்பிடுவதால் மட்டுமே ஆபத்தான அளவிற்கு நச்சுத்தன்மையை உண்டாக்கப்படுமாம். Falcarinol என்னும் நச்சு புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலை உடலுக்குள் தூண்டிவிடுகிறது என்பதுமட்டுமே இதுவரையிலான கண்டுபிடிப்பு.

களஞ்சியம்.

Wednesday, March 2, 2011

வருகிறது கேமிராவுடன் கூடிய ஐபோட் - 2

சான்பிரான்ஸ்சிஸ்கோ: முன்னணி ‌தகவல்தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் கேமிராவுடன் கூடிய இரண்டாவது ஐபோடை நேற்று அறிமுகம் செய்து வைத்தது.

மொபைல் போன்களுக்கு அடுத்தபடியாக இன்று பலரும் பயன்படுத்தக்கூடிய தகவல்தொழில்ப சாதனமாக உள்ளது ஐபேட். இதில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் விற்பனையில் முதலிடம் வகிக்‌கிறது. இதன் தலைமை நிர்வாகியாக ஸ்டீவ் ஜாப்ஸ் உள்ளார். இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது இரண்டாவது ஐபோடை கேமிராவுடன் கூடிய நவீன தொழில்நுட்பத்துடன் தயாரித்துள்ளது. இதன் எடை 1.03 பவுண்ட்கள், மிகவும் மெல்லிதான தடிமனுடன் அழகிய இரு வண்ணங்களில் கறுப்பு, வெள்ளை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்விலை 499 டாலர் முதல் 829 டாலர் வரை உள்ளது.

அமெரிக்காவில் வரும் 11-ம் தேதி சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது. முன்னதாக இதன் அறிமுக விழாவில் சான்பிரான்ஸிஸ்‌கோவில் அதன் தலைமை நிர்வாகி ஸ்டீவ்ஜாப்ஸ் அறிமுகப்படுத்தினார். ஏற்க‌னவே ஆப்பிள் நிறுவனத்தின் உலக சந்தை மதிப்பில் 95 சதவீதத்தினை கொண்டுள்ளது. இரண்டாவது ஐபோட்டில் காமிரா உள்ளது. அனைத்து வீடியோ பைல்களும் இவற்றில் அப்லோட் செய்யும் வசதியும் கொண்டுள்ளது. இந்த அறிமுக விழாவில் ஆப்பிள் நிறுவனத்தில் தலைமை நிர்வாகி ஸ்டீவ்ஜாப், உடல் நலக்குறைவில் இருந்த போதும் கலந்து கொண்டார்.

சினிமாவைவிட சின்னத்திரையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்

பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் இதுவரை யாரும் வாங்கிடாத சம்பளத்தை வாங்க இருக்கிறார். ஆனால் அவர் இவ்வளவு சம்பளம் வாங்கப்போவது, சினிமாவில் அல்ல டி.வி. நிகழ்ச்சியில்.

ஸ்டார் குழுமங்களில் ஒன்றான ஸ்டார் ப்ளஸ் சேனல் ரியாலிட்டி டான்ஸ் ஷோ நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறது. அதில் நடுவராக பங்கேற்க ஹிருத்திக் ரோஷனிடம் அணுகியது. அவரும் நடுவராக பங்கேற்க ஓ.கே. சொல்லிவிட்டார். இதற்கு காரணம் அவருக்கு வழங்கப்பட இருக்கும் சம்பளம் தானாம். அப்படி என்ன சம்பளம் என்கிறீர்களா? ஒரு எபிசோடுக்கு ரூ.2கோடி சம்பளம் பேசியுள்ளார் ஹிருத்திக். அதற்கு அந்த டி.வி. நிறுவனமும் ஓ.கே. சொல்லியுள்ளது.

ஜஸ்ட் டான்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த நிகழ்ச்சிக்கு ஹிருத்திக் மற்றும் பிரபல நடன இயக்குநர்கள் பரா கான் மற்றும் ‌வைபவி மெர்ச்சன்ட் ஆகியோர் நடுவர்களாக இருப்பார்கள். டி.வி. நிகழ்ச்சியில் ஹிருத்திக் பங்கேற்பது இதுவே முதல்முறை. அதுமட்டுமல்ல இவருக்கு வழங்கப்படும் சம்பளம் இதுவரை எந்த‌‌‌வொரு நடிகரும் வாங்கிடாத சம்பளம் என்கிறார்கள் அவரது நெருக்கமானவர்கள்.

அயர்லாந்தின் துடுப்பாட்டம் கண்கொள்ள காட்சி

பெங்களூர் : உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி இன்று அயர்லாந்துடன் மோதியது.

கடந்த இரண்டு போட்டிகளில் ரன்குவிப்பை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி அதிரடி வெற்றியை பதிவு செய்யதது. 50 ஓவர்களில் 8 விக்கட்டுக்கு 327 ரன்கள் எடுத்தது. ஆனால் அயர்லாந்து வீரர்களும் பதிலடி கொடுத்தார்கள் ஒ. பிரைன் 63 பந்துகளில் 113 ரன், அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

2007 தொடரில் "சூப்பர்-6' போட்டியில் இங்கிலாந்து அணியிடம் அடைந்த தோல்விக்கு அயர்லாந்து பதிலடி தந்தது., போட்டியும் விறுவிறுப்பு இருந்தது,

ஸ்கோர் : இங்கிலாந்த் : 50 ஓவர் 8 விக்கட்டுக்கு 327, அயர்லாந்த் : 49.1 ஓவர் 7 விக்கட்டுக்கு 329

இந்தியா பாடம் கற்க்கவேண்டும் அயர்லாந்திடம்.

கலர் டி வி, க்கு ஆப்பு, அரசுக்கு மாப்பு? தேர்தல் கமிஷன்

சென்னை : தேர்தல் நடைமுறைகள் முடியும்வரை, இலவச கலர் "டிவி' வினியோகத்தை நிறுத்தி வைக்கவேண்டுமென, அதிகாரிகளுக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதவிர, இலவச வினியோகங்களை கண்காணிக்கும் பணியில் தேர்தல் கமிஷன் தீவிரம் காட்டத் துவங்கியுள்ளது.

தமிழக அரசு, அனைத்து தரப்பினருக்கும் இலவச கலர் "டிவி'க்கள் வழங்கி வருகிறது. கடைசியாக கொள்முதல் செய்யப்பட்ட, "டிவி'க்கள் அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை வினியோகிக்கும் பணியில், ஆளுங்கட்சியினரும், அதிகாரிகளும் இம்மாதம் முதல் தேதியில் இருந்து தீவிரம் காட்டத் துவங்கினர். ஆனால் மார்ச் 1ம் தேதி, தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதனால், உடனடியாக, தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. எனவே, மக்களுக்கு வினியோகிப்பதற்காக வாங்கி வைத்த, "டிவி'க்களை என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த அதிகாரிகள், அவற்றை இரவோடு இரவாக வினியோகிக்கும் பணியை பல்வேறு இடங்களில் துவக்கினர்.

மற்ற இலவசங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதையும் கண்காணிக்கும் பணியில் தேர்தல் கமிஷன் இறங்கியுள்ளது. இலவசங்கள் வினியோகத்துக்கு துணை போகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே இது தொடர்பாக அதிகாரிகளுக்கு உத்தரவுகளை தேர்தல் கமிஷன் பிறப்பித்துள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் நேர்மையாக நடப்பதை உறுதி செய்ய அவ்வப்போது பல்வேறு உத்தரவுகளை தேர்தல் கமிஷன் பிறப்பித்து வருகிறது. தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அனைத்து அதிகாரிகளின் செயல்பாடுகளும், தேர்தல் கமிஷனின் கண்காணிப்புக்குள் வரும். விதிமீறி செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் அதற்கு மேல் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் போலீஸ் துறையினரை, சொந்த மாவட்டங்களில் இருந்து மாற்ற வேண்டுமென உத்தரவிட்டிருந்தது. இதுதவிர கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று ஆண்டுகள் ஒரே மாவட்டத்தில் பணியாற்றிய அதிகாரிகளை வேறு மாவட்டங்களுக்கு மாற்றவும் உத்தரவிட்டிருந்தது. மேலும் இடமாற்றம் செய்யப்படும் அதிகாரிகள் விடுமுறை போன்ற காரணங்களால், கடைசியாக பணியாற்றிய இடங்களில் இருந்தால் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றவும் உத்தரவிட்டுள்ளது. இதுதவிர கோர்ட்டில் ஏதாவது வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்திருந்தால் அவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது' என்று தெரிவித்தார்.

இந்த முறை தேர்தல் நடைமுறைகளை கண்காணிக்க மூன்று கட்ட பார்வையாளர்களை தேர்தல் கமிஷன் நியமிக்க உள்ளது. பொது பார்வையாளர்கள் தேர்தலின் ஒவ்வொரு கட்டத்தையும் உன்னிப்பாக கவனிப்பர். அவர்களது பணிகள் குறித்து தேர்தல் கமிஷன் விரிவான அறிவுரைகளை அவர்களுக்கு அளிக்கும்.

அடுத்ததாக செலவுக் கணக்கு பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர். இவர்கள் தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரின் செலவுகளையும் கண்காணிப்பர். குறிப்பாக வங்கிகளில் தனியாக கணக்கு துவங்கி வேட்பாளர்கள் செலவிடும் முறை தமிழகத்தில் தற்போது அறிமுகப்படுத்தப்படுகிறது.இவை தவிர மைக்ரோ பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, ஓட்டுச்சாவடி அளவில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். ஓட்டுப்பதிவு துவங்கியது முதல், மின்னணு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, அவை உரிய இடத்துக்கு கொண்டு போய் சேர்க்கப்படும் வரை இவர்கள் கண்காணிப்பர். பொதுப் பார்வையாளர்களின் நேரடி கட்டுப்பாட்டில் இவர்கள் செயல்படுவர்.

இலவசங்களை கொடுத்து கொடுத்து மக்கள் மனங்களை மழுங்க அடித்து வைக்கும்முயற்சி.

இணைய தளத்தில் அழைப்பு! பயத்துடன் சீனா?

பீஜிங்:எகிப்து, டுனீசியா, லிபியா எழுச்சியைத் தொடர்ந்து சீனாவிலும் மக்கள் அமைதியான முறையில் போராட வேண்டும் என்ற இணையதள அழைப்பை அடுத்து, சீனாவில் செய்தி சேகரிக்கும் வெளிநாட்டு நிருபர்களுக்கு, சில சலுகைகளை சீன அரசு ரத்து செய்துள்ளது.

லிபியா எழுச்சியைத் தொடர்ந்து, பிப்ரவரி 20ம் தேதி பீஜிங் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மக்கள் கூடும் முக்கிய இடங்களில், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்றும், இந்த ஆர்ப்பாட்டம் ஒவ்வொரு ஞாயிறன்றும் நடக்க வேண்டும் என்றும், இணையதளங்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனால் பீதியடைந்த சீன அரசு, பிப்ரவரி 20 மற்றும் 27ம் தேதிகளில் பீஜிங், ஷாங்காய் மற்றும் வேறு சில நகரங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களை போலீசார் மூலம் கலைத்தது; பலர் கைது செய்யப்பட்டனர். இதில், வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் சிலர், பல்வேறு தொந்தரவுகளுக்கு ஆளாயினர்.அவர்களின் கேமராக்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஏ.பி., ப்ளூம்பெர்க் போன்ற பிரபல செய்திநிறுவனங்களின் செய்தியாளர்கள் தாக்கப்பட்டனர்.கடந்த 2008ல், பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக்கை முன்னிட்டு, வெளிநாட்டு செய்தியாளர்கள் சீனாவில் எங்கு வேண்டுமானாலும் செய்தி சேகரிக்கலாம் என்பது போன்ற சில சலுகைகள் அளிக்கப்பட்டிருந்தன.

கடந்த வாரம் வரை இந்த சலுகைகள் அமலில் இருந்தன. மத்திய கிழக்கு நாடுகளில் நடப்பதைப் போல சீனாவிலும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தால், அவை வெளிநாட்டுப் பத்திரிகைகள் மூலம் உலகுக்குத் தெரியவரும் என்று பீதியடைந்துள்ள சீன அரசு, நேற்று அந்த சலுகைகளை உடனடியாக ரத்து செய்து விட்டது.இதனால், வெளிநாட்டு செய்தியாளர்கள் இனி, அரசு அனுமதிக்கும் இடங்களில் மட்டும் செய்தி சேகரிக்க வேண்டும். இதற்கு பல்வேறு செய்தியாளர் கூட்டமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்திய டாக்டருக்கு ஆயுள்! அமெரிக்காவில்

ஹூஸ்டன்: அமெரிக்காவில் மருத்துவ வாரிய தலைவரை குண்டு வைத்து கொல்ல முயன்ற வழக்கில், இந்திய வம்சாவளி டாக்டருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆர்கன்சாஸ் மாகாணத்தின் ரசல்வில்லி நகரை சேர்ந்தவர் ரந்தீப் மான். டாக்டராக பணியாற்றி வந்தார். நோயாளிகளுக்கு அதிகப்படியான மருந்து எழுதி கொடுப்பதாக இவர் மீது புகார் வந்ததால், இவரது லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டது. இதனால், கோபமடைந்த ரந்தீப், மருத்துவ வாரிய தலைவர் ட்ரென்ட் பியர்சை கொல்ல திட்டமிட்டார். மெம்பிஸ் நகரில் உள்ள பியர்சின் வீட்டில் கடந்த 2009ம் ஆண்டு பிப்., காரில் குண்டு வைத்து கொள்ளப்பார்த்தார், 4ம்தேதி குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் பியர்சின் கண் மற்றும் காது பாதிக்கப்பட்டது. ஒரு கண் பார்வையிழந்தார்; ஒரு காது, கேட்கும் திறனை இழந்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு காரணமான ரந்தீப் கைது செய்யப்பட்டார்.
ஆயுத வழக்கு தொடர்பாக ரந்தீப்புக்கு அமெரிக்க கோர்ட் 45 லட்ச ரூபாய் அபராதம் விதித்தது. தன்னுடைய ஒரு கண் மற்றும் காது செயல் திறனை இழந்ததால், ரந்தீப்புக்கு கடும் தண்டனை வழங்கும் படி பியர்ஸ் கோர்ட்டில் கோரியிருந்தார். இதை தொடர்ந்து, ரந்தீப்புக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கை நடத்த இடையூறு செய்த குற்றத்துக்காக, ரந்தீப்பின் மனைவி சங்கீதாவுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், 23 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து, அப்பீல் செய்து கொள்ள கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

Tuesday, March 1, 2011

தக்காளியின் மருத்துவ குணம்

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் அரிய பழம் இது. தக்காளியில் உள்ள சிட்ரிக், பாஸ்போரிக், மாலிக் ஆகிய அமிலங்கள் இரத்தத்தைச் சுத்தப்படுத்துகின்றன.

புற்று நோயைத் தவிர்க்கும் பி1 (P1) என்ற பொருளும், உடலுக்கு நிறத்தையும் மனதிற்குத் துடிப்பையும் வழங்கும் 'லைகோபென்' என்ற பொருளும் தக்காளியில் உள்ளன.

கலோரி குறைவாக உள்ள பழம் இது. உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்ளலாம். தினமும் 5 பழங்கள் சாப்பிட்டுவந்தால் உடல் எடை இரண்டே மாதத்தில் குறைந்து விடும்.

இத்துடன் உடலின் எந்தப் பகுதியில் எந்தவிதமான நோய்க்கிருமி இருந்தாலும் அந்த விஷக்கிருமிகளை அப்புறப்படுத்தி, சிறுநீரை நன்கு வெளியேறச் செய்து, அதன் மூலம் நோய்க்கிருமிகள் அனைத்தையும் உடலிலிருந்து வெளியேறச் செய்துவிடும். இதனால் கச்சிதமான தோற்றத்தில் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்

தக்காளியில் வைட்டமின் A, வைட்டமின் C, பாஸ்பரஸ், கால்சியம் போன்றவை அதிக அளவு உள்ளன. எனவே, தக்காளிச்சாறை உணவு சாப்பிடுவதற்கு 15 நிமிடங்கள் முன்பு அருந்தினால் சாப்பாடு குறைவாகச் சாப்பிடலாம். போதிய சத்துணவும் தக்காளிச் சாறு மூலம் கிடைத்துவிடுவதால் உடல் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது.

நடுத்தர மக்களின் அரிய பழம் இது. ஆப்பிள், பப்பாளி, திராட்சையை விட விலை குறைவு என்பதால் தக்காளிப் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு இளமையை எளிதில் புதுப்பித்துக் கொள்ளலாம். ஏனென்றால், யூரிக் அமிலம் என்ற விஷ அமிலம் அப்புறப்படுத்தப்படுகிறது. கல்லீரலையும் சுத்தப்படுத்துகிறது தக்காளிச் சாறு.

தக்காளிச் சாறுடன் காரட் அல்லது பீட்ரூட் சாறு அருந்துவது நல்லது. முதுமையிலும் கண்பார்வை தெளிவாக இருக்க வைட்டமின் A நிறைந்த தக்காளிச் சாறு அதிகம் உதவும்.

சாரா.

ஏன் இந்த கோபம்? நயன்!

கேரள நடிகர் சங்கமான (அம்மா) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு நடிகைகள் நயன்தாரா மீராஜாஸ்மின் ஆகியோர் பங்கேற்க மறுத்ததால், இருவரும் மீது கடும் கோபத்தில் இருக்கிறது கேரள நடிகர் சங்கம்.

கேரள நடிகர் சங்கம் சார்பில் கோழிக்கோடில் நாளை(02.03.11) பிரமாண்டமான கலைவிழா நடத்தப்படுகிறது. இதில் கலந்துகொள்ளுமாறு அம்மாநில நடிகர், நடிகையர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது அம்மா சங்கம். விழாவில் மலையாள முன்னணி நடிகர்கள் மம்முட்டி மோகன்லால் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்ள இருக்கின்றனர். விழாவில் பங்கேற்க நயன்தாரா, மீரா ஜாஸ்மினுக்கு அழைப்பு விடுத்தும் இருவரும் பங்கேறக முடியாது என்று அறிவுத்துள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே மீரா ஜாஸ்மின் மீது நடிகர் சங்கம் கோபத்தில் இருக்கிறது. இதற்கு காரணம் முன்பு ஏதோ ஒரு விழாவிலும் அவர் கலந்து கொள்ளவில்லையாம், இப்போது கோழிக்கோடு விழாவிலும் பங்கேற்க மறுப்பதால் அவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறது நடிகர் சங்கம். அதேபோல் நடிகை நயன்தாராவும் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது. ஆகையால் இருவரும் மீதும் நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிகிறது.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!