Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, February 9, 2011

காதலா காதலா? சீவி மகனுடன்!

ஆந்திரதேசம் : ஆந்திராவின் பெரிய நடிகரும் அரசியல்வாதியுமான ஒருவரது வாரிசுக்கு தமன நடிகை காதல் வலை வீசி அதில் வெற்றியும் கண்டிருப்பதுதான் கோடம்பாக்கத்தில் லேட்டஸ்ட் பரபரப்பு தகவல்.

தமிழில் முன்னணி இடத்தில் இருந்து கோடி கோடியாக சம்பாதித்துக் கொண்டிருக்கும் தமன நடிகை, தமிழ் சினிமா வாரிசு நடிகர் ஒருவரை காதலிப்பதாக ஆரம்பத்தில் தகவல் கசிந்தது. அதனை மறுத்து வந்த நிலையில் அம்மணியின் பார்வை ஆந்திரதேசம் பக்கம் வீசியிருக்கிறது. ஆந்திராவின் பிரபல நடிகரும், அரசியல் கட்சி ஆரம்பித்து, அதனை சமீபத்தில் ஆளும் மத்திய கட்சியுடன் இணைத்துக் கொண்டிருக்கும் சீவி நடிகரின் மகன்தான் தமனத்தின் வலையில் விழுந்தது. இப்போது இரண்டு பேரும் போனில் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பதாக சொல்கிறது ஆந்திர பத்திரிகைகளின் கிசுகிசு பகுதி.

சிக்ஸர் மன்னன், கிரிக்கெட்

ஓரு ஓவரின் 6 பந்துகளில் சிக்ஸர் அடித்து உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத வீரராக மாறியவர் தென் ஆப்பிரிக்காவின் ஹெர்ஷெல் கிப்ஸ்.

2007 உலகக் கோப்பை போட்டியில் 51 ஆட்டங்களில் மொத்தம் 373 சிக்சர்கள் (ஓர் ஆட்டத்துக்கு சராசரி 7.31) விளாசப்பட்டன.

2003 உலகக் கோப்பையில் 52 ஆட்டங்களில் 266 சிக்சர்கள் (சராசரி 5.12) விளாசப்பட்டன.

1975-ல் முதல் உலகக் கோப்பையில் எவ்வளவு சிக்சர்கள் விளாசப்பட்டன தெரியுமா? 15 ஆட்டங்களில் வெறும் 28 சிக்சர்கள் (சராசரி 1.87).

உலகக் கோப்பைகளில் அதிக சிக்சர் விளாசியவர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (30) முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

பாகிஸ்தானின் இம்ரான் நசீர், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோர் ஓர் ஆட்டத்தில் தலா 8 சிக்சர்கள் விளாசியுள்ளனர்.

ஓர் ஆட்டத்தில் அதிகபட்சமாக இந்தியா (2007-ல் பெர்முடாவுக்கு எதிராக), தென் ஆப்பிரிக்கா (2007-ல் நெதர்லாந்துக்கு எதிராக) ஆகிய அணிகள் 18 சிக்சர்கள் குவித்தன.

நெதர்லாந்து வீரர் டான் வான் பஞ்ச் வீசிய ஓவரில் 6 பந்துகளிலும் சிக்சர் அடித்து, ஒரு தின ஆட்டங்களில் வரலாறு படைத்தார் கிப்ஸ்.

Tuesday, February 8, 2011

நித்யானந்தா சாமியாராக, விவேக்

சீடன் படத்தில் தமிழ் சினிமாவின் ஸ்டார் காமெடியன் விவேக், காவி அணிந்த சாமியாராக வருவதோடு மட்டுமில்லாமல், கலர்புல் உடை அணிந்த சாமியாராகவும் கலகலப்பான ரோலில் நடித்துள்ளாராம்.

படப்பிடிப்பின் போது தனது பிஞ்சு பருவத்து காதல் லீலையை சொல்லி, டைரக்டர் சுப்ரமணிய சிவாவுக்கு கிளுகிளுப்பு தந்தாராம் விவேக்.

கடந்த கால, நிகழ் கால சாமியார்களோடு சீடன் படத்தில் வரும் சாமியார் கெட்டப்பை தொடர்புபடுத்த முடியாது என்கிறார் அவர்.

ஒரு படத்தை வாழவைக்க நல்ல காமெடியும், காமெடியனும் மிக முக்கியம் என்றவர் இசையமைப்பாளர் தினாவுக்கு தலைக்குள்ளேயும், தலைக்கு வெளியேயும் நிறைய விஷயம் இருக்கு.

ஆகவே 'சீடன்' பாடல்கல் ஹிட்டாக போகுது என்றும் குறிப்பிட்டுள்ளார். கோலிவுட் படத்தில் வரும் சாமியார் வேஷத்தால் பரபரப்பும் சர்ச்சையும் கிளம்பிவிடகூடாது என்பதில் கவனமாக இருக்கிறாராம்.

(ஜங்க் புட்) பெற்றோர் கவனத்திற்கு!

லண்டன் : குழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை (ஐ.க்யூ.,) ஜங்க் புட்' குறைத்து விடுவதாக சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது."ஜங்க் புட்' எனப்படும், நொறுக்குத் தீனிகளைத் தடை செய்வது குறித்து இந்தாண்டின் இறுதியில் ஐ.நா., ஆலோசனை நடத்த உள்ளது.

இந்நிலையில், பிரிஸ்டன் பல்கலையைச் சேர்ந்த டாக்டர்.கேட் நார்த்ஸ்டோன் என்பவர் தலைமையில் ஓர் ஆய்வு நடந்தது. நான்கு வயதுக்குக் குறைந்த நாலாயிரம் குழந்தைகளிடம் அவர்களின் நுண்ணறிவுத் திறன் ஆய்வு செய்யப்பட்டது.அவர்கள் உண்ணும் நொறுக்குத் தீனிகளுக்கு ஏற்ப, நுண்ணறிவுத் திறன் குறைவது கண்டறியப்பட்டது. சராசரியாக, 1.67 சதவீதம் இயல்பு நிலையில் இருந்து குறைவது தெரியவந்தது. இந்த இழப்பை சரி செய்ய முடியாது என்றும் ஆய்வு கூறுகிறது.

இதுகுறித்து நார்த்ஸ்டோன் கூறியதாவது:பிரிட்டனில் குழந்தைகள், மோசமான உணவு மற்றும் பதப்படுத்தப்பட்ட, சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகளவில் உள்ள உணவுகளை மட்டுமே பெருமளவில் உண்பதால், எட்டரை வயதில் அவர்களின் நுண்ணறிவுத் திறனில் பெரும் குறைபாடு நிகழ்கிறது.ஆனால், ஆரோக்கியமான உணவு முறை, நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கிறது. இந்த வயதில், நல்ல ஊட்டச் சத்துள்ள உணவுகளைக் கொடுத்தால் அவர்களின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும்.இவ்வாறு நார்த்ஸ்டோன் தெரிவித்தார்.

எப்படியேல்லாம் கடத்துறாங்க?

நியூயார்க் : ஆணுறைக்குள் கோகைன் எனும் போதை மருந்தினை வைத்து அதனை வயிற்றுக்குள் பதுக்கி நூதன முறையில் கடத்த முயன்ற வாலிபர் விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டார். 

அமெரிக்காவின் பூஸ்டன் விமான நிலையத்திற்கு ஜெட்புளு எனும் விமானம் லோகான் விமான நிலையத்தில் வந்திறங்கியது. வழக்கம் போல் பயணிகளின் உடமைகள் சோதிக்கப்பட்டன. அப்போது 21‌ வயது நிறைம்பிய ஓரு வாலிபரின் நடவடிக்கையில் சந்தகேம் ஏற்படவே அவரை பிடித்து சோதனையிட்டனர். அந்த வாலிபரை ஸ்கேன் செய்த போது திட்பொருள் இருந்தன.

பின்னர் அவனை டாக்டர்கள் சோதித்து பார்த்த போது அவனது வயிற்றில் 50 ஆணுறைகளில் ஒவ்வொன்றிலும் 50 மி.கி. ‌கோ‌கைகன் போதை மருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவனிடம் சுங்கத்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் நியூஜெர்ஸி மாகாணத்தைச் சேர்ந்தவன் என்றும் தெரியவந்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. உடனடியாக வயிற்றிலிருந்து போதை ‌மருந்துகள் அகற்றப்பட்டன. இவற்றின் மதிப்பு சர்வதேச சந்தையில் 50 ஆயிம் டாலர்கள் ஆகும். தொடர்ந்து‌ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வித்தியாசமான கேரக்டரில் நடிக்கும், பிரகாஷ் ராஜ்

மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த உயரதிகாரியான ஹேமந்த் கர்க்கரேயை நினைவுபடுத்தும் வகையில் அந்த சம்பவத்தை சினிமாவாக எடுக்கிறார் டைரக்டர் அமல் நீரத். ராம்கோபால் வர்மாவிடன் இயக்குனர் பயிற்சி பெற்ற அனுபடத்துடன் படம் இயக்க வந்திருக்கும் இவர், அன்வர் என்ற பெயரில் புதிய படத்தை இயக்கி வருகிறார். தமிழ் மற்றும் மலையாளத்தில் எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில், கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தையும், மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தையும் கலந்து கட்டி கதை சொல்லியிருக்கிறாராம்.

மும்பை குண்டு‌வெடிப்பு சம்பவத்தின் உயிரிழந்த போலீஸ் உயர் அதிகாரி ஹேமந்த் கர்க்கரேயை நினைவுபடுத்தும் கேரக்டரில் பிரகாஷ் ராஜ் நடித்திருக்கிறார். மத தலைவர் ஒருவருடைய கையாளாக ப்ருத்விராஜ் நடித்திருக்கிறார். ப்ருத்வி ராஜ் ஜோடியாக மம்தா மோகன்தாஸ் நடித்துள்ளார். மொழி, அபியும் நானும், வெள்ளித்திரை உள்ளிட்ட படங்களில் ஒர்க்அவுட் ஆன பிரகாஷ்ராஜ்- ப்ருத்வி ராஜ் காம்பினேஷன் இந்த படத்திலும் ரசிகர்களை கவரும் என்று நம்பிக்கை கூறும் டைரக்டர் அமல் நீரத், படம் பார்க்கும் இளைஞர்கள் பயங்கரவாதத்தை பார்த்து கண்ணீர் வடிக்காமல் அதற்கு எதிராக எப்படி செயல்பட வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்கிற படமாக இது இருக்கும், என்கிறார். படத்தில் இடம்பெறும் 5 குண்டு வெடிப்பு சம்பவங்களை தத்ரூபமாக எடுத்து முடித்திருக்கிறாராம் அமல்நீரத்!

சர்வதேச பொருளாதார மந்த நிலையும், வேலை வாய்ப்புகளும்

உலக அளவில், 20 கோடியே 50 லட்சம் பேர் வேலையில்லாமலும் இந்தியாவில் ஆறு கோடிக்கும் மேற்பட்ட படித்த இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளனர். சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையும், படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுமே இந்நிலைக்கு காரணமாக கூறப்படுகிறது.கடந்த 2007ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலை ஏற்பட்டது. இதனால், உலகில் உள்ள எல்லா நாடுகளும் பாதிக்கப்பட்டன. அதன் பின், பொருளாதார மந்த நிலை சிறிது சிறிதாக மாறி வருகிறது. இதனால் பல நாடுகளில் பொருளாதார வளர்ச்சி சிறந்த முறையில் வளர்ந்து வருகிறது.

கடந்த ஆண்டு வரை உலகில் வேலை இல்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை 20 கோடியே 50 லட்சம் பேர். இது 6.1 சதவீதமாகும். இதில், 7 கோடியே 80 லட்சம் பேர் இளைஞர்கள். கடந்த 2007ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 7 கோடியே 35 லட்சமாக இருந்தது. உலக தொழிலாளர் நிறுவனம் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே, இந்த ஆண்டு வேலை இல்லாத தொழிலாளர்களின் எண்ணிக்கை உலகில் 20 கோடியே 33 லட்சமாக குறையும் என்று உலக தொழிலாளர் நிறுவனம் கூறியுள்ளது.

இந்தியாவில் ஆறுகோடி பேர்: ஆறு கோடிக்கும் மேற்பட்ட படித்த இளைஞர்கள், இந்தியாவில் வேலை இல்லாமல் உள்ளனர். மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு கல்வி திட்டங்களால், கடந்த 20, 30 ஆண்டுகளில் படித்தவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், படித்த, வேலை இல்லாத இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களில், கடந்த 2004-05ம் ஆண்டில் பணிக்கு சேருவோர் எண்ணிக்கை 0.32 சதவீதம் குறைந்துள்ளது. உலகளவில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு காரணமாக இந்தியாவிலும் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 1993 - 94ம் ஆண்டில் விவசாய துறையில் வேலை வாய்ப்புகள் 61.67 சதவீதமாக இருந்தது.ஆனால், 2004 -05ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 52 சதவீதமாக குறைந்துவிட்டது. விவசாயத்துறை மூலம் வரும் வருமானம் அதிகமாக உள்ள நிலையில், விவசாய வேலை வாய்ப்புகள் குறைந்து வருவது.

இந்திய பொருளாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. வர்த்தகம், ஓட்டல், உணவு விடுதி, போக்குவரத்து, தகவல் தொடர்பு ஆகிய துறைகளில் வேலை வாய்ப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. ஆனால், இந்த துறைகளில் பணி செய்பவர்கள், தங்களின் பணி பாதுகாப்பு இல்லாத நிலையை உணர்கின்றனர். எனவே, பல இளைஞர்கள் சுய தொழில்களில் ஈடுபட துவங்கியுள்ளனர். இருப்பினும், இவர்களுக்கும் ஒரு தடை ஏற்படுகிறது. சுய தொழில், சிறு தொழில் செய்யும் இளைஞர்களின் தொழிலை பாதிக்கும் அளவிற்கு பெரிய நிறுவனங்களும், சூப்பர் மார்க்கெட்டுகளும், ஷாப்பிங் மால்களும் ஏராளமாக வந்துவிட்டன. இதன் காரணமாக, வேலை இல்லாமல், சுய தொழில் செய்யும் இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய வருமானம் பெரிய நிறுவனங்களுக்கு செல்கிறது. இது, வேலை இல்லா திண்டாட்டத்தை மேலும் அதிகரிக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Monday, February 7, 2011

சிலிரைட்(Celerite) மாத்திரை உபோயோக்கிப்பவர்கள் கவனத்திற்கு!

உடல் எடையை குறைக்க உதவும் மருந்துகள் இதயத் துடிப்பிற்கு பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உடல் எடையைக் குறைக்கவும், உடல் மெலியவும் பயன்படுத்தும் மாத்திரைகளில் அதிகமாக பயன்படுத்தப்படுவது sibutramine(சிபுட்ராமின்) என்ற வேதிப்பொருளாகும். இப்பொருள் இதய அதிர்ச்சிக்கு காரணமாக அமையும் என மருத்துவ உலக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து sibutramine(சிபுட்ராமின்) வேதிப்பொருள் அடங்கிய மருந்துகளை சந்தையிலிருந்து வாபஸ்பெற யு.ஏ.இ அதிகாரிகள் தீர்மானித்தனர். இதன் ஒரு பகுதியாக யு.ஏ.இ சந்தையில் கிடைத்த 'சிலிரைட்'(celerite) மாத்திரைகளுக்கு தடை ஏற்படுத்தியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகத்தை மேற்கோள்காட்டி 'கல்ஃப் நியூஸ்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதயத்தின் செயல்பாடுகளை மோசமாக பாதிக்கும் என்பதால் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்யும் இம்மருந்துகள் இதயம் தொடர்பான நோய்களுக்கும், அதிக இரத்த அழுத்தத்திற்கும் காரணமாவதாக யு.ஏ.இ சுகாதார அமைச்சகத்தின் மெடிக்கல் ப்ராக்டீஸ் அண்ட் லைசன்ஸ் பிரிவு சி.இ.ஒ டாக்டர்.அமீன் அல் அமீரி தெரிவித்துள்ளார்.

ஃபுட் அண்ட் ட்ரக் அட்மினிஸ்ட்ரேசனின் உத்தரவின் படி இத்தடை விதிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

உடல் எடையைக் குறைக்க உதவும் மருந்துகளில் சில தேவையற்ற கலவைகள் உள்ளன. இவை பசியை இல்லாமலாக்கும். இதனால் சாப்பிடும் உணவின் அளவு குறையும். ஆனால், இவை கடுமையான உடல்நலனை சீர்கெடுக்கும் பல பிரச்சனைகளை உருவாக்கும் என அதிகமான புகார்கள் வெளியாகின.

இதயத்துடிப்பை மிக அதிகமாக அதிகரிக்கச் செய்யும் sibutramine(சிபுட்ராமின்) இதய அதிர்ச்சிக்கும், முடக்குவாதத்திற்கும் காரணமாகிறது என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வேதிப்பொருள் அடங்கிய இதர சில மருந்துகள் ஏற்கனவே யு.ஏ.இயில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரத்தை விரும்பும் மக்களைக் கொண்ட யு.ஏ.இயில் குழந்தைகள் உள்பட உடல் எடை கூடியவர்கள் அதிகரித்து வருகின்றனர். இதன் காரணமாக தங்கள் உடல் எடையை குறைப்பதற்காக இத்தகைய மருந்துகளை உபயோகிக்கின்றனர்.

மாத்யமம்

எம்.பி.ஏ, விசா தடை.,பிரிட்டன்!

லண்டன் : பிரிட்டனில் எம்.பி.ஏ., படித்து முடித்த இந்திய மாணவர்கள் வேலை தேடுவற்காக இரண்டாண்டு காலம் அனுமதிக்கப்பட்டனர். தற்போது, பிரிட்டனில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதையடுத்து, இதற்கு தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இதன் காரணமாக எம்.பி.ஏ., படிக்க வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவை போன்று பிரிட்டனிலும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால், ஐரோப்பிய நாடுகளைச் சாராத பிற சர்வதேச மாணவர்கள் பிரிட்டனில் தங்கி வேலை தேடுவதைத் தடுக்க விசா வழங்கும் நடைமுறையில் படு கெடுபிடிகளை கொண்டுவர அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

பிரிட்டினில் எம்.பி.ஏ., படிப்பு படிப்பதற்காக இந்தியா உட்பட சர்வதேச நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பெருமளவில் வருவர். இரண்டாண்டு காலம் படிப்பை முடித்ததும், பல மாணவர்கள், பிரிட்டனில் வேலை தேடுவர். குறிப்பாக இந்தியா, சீனா, நாடுகளிலிருந்து தான் அதிகளவில் மாணவர்கள் வருவர். இவர்களின் வருகையால், கடந்த இரண்டு ஆண்டுகளில் பிரிட்டனை சேர்ந்த மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறுவதில் சிக்கல் நிலவியது.

சமீபத்தில், விழா ஒன்றில் பேசிய பிரிட்டன் குடியேற்றத்துறை அமைச்சர் டாமின் கிரீன் பேசுகையில்," ஐரோப்பிய நாடுகள் அல்லாத சர்வதேச நாடுகளிலிருந்து வந்துள்ள மாணவர்கள் எண்ணிக்கையால், பிரிட்டனை சேர்ந்த மக்கள் வேலைவாய்ப்பு பெறுவதில் சிக்கல் நிலவுகிறது. இதைத் தடுக்க, பிரிட்டனில் படிக்க வரும் மாணவர்கள் தங்கள் படிப்புக் காலம் முடிந்ததும், இரண்டாண்டுகள் வேலை பார்க்க அனுமதிக்கப்பட்டனர். தற்போது, இதற்கான விசாவை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றார்.

பிரிட்டனின் இந்த முடிவால், இந்திய மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்படும் சூழ்நிலை எழுந்துள்ளது. லண்டனில் செயல்படும் எம்.பி.ஏ., மாணவர்களுக்கான அமைப்பு இது குறித்து கூறியதாவது: எம்.பி.ஏ., படிப்பு பிரிட்டன் உட்பட 70 நாடுகளில் உள்ளது. படித்து முடித்ததும், வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை காரணமாக இந்தியா மற்றும் சீனாவில் இருந்து பெருமளவில் மாணவர்கள் வருகின்றனர். ஆனால், படிப்பு முடித்த பிறகு, இரண்டாண்டு காலத்திற்கு வழங்கப்பட்ட விசாவை தடை செய்யும் முடிவால், பலரும் பாதிக்கப்படுவர். மேலும், எம்.பி.ஏ., படிக்க வரும் மாணவர்கள் எண்ணிக்கை குறையும். படிப்பை முடித்ததும் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாவதால் பலரும் வருவதற்கு தயங்குவர். இதனால் கனடா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா பக்கம் மாணவர்கள் திரும்புவர். இது பிரிட்டன் கல்லூரிகளுக்கு பாதிப்பாக அமையும். இவ்வாறு அந்த அமைப்பு கூறியுள்ளது.

பிரபுதேவா, வை பாராட்டிய டென்னிஸ் வீரர் இவான்செவிக்

பிரபுதேவாவிற்கு இந்தியாவில் மட்டுமல்ல உலகமெங்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அப்படி பிரபுதேவாவின் தீவிர ரசிகர்களில் பிரபல டென்னிஸ் வீரர் காரன் இவானிசெவிக்கும் ஒருவர்.

நடன இயக்குநராக சினிமாவில் அறிமுகமானார் பிரபுதேவா. இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று பெயரடுத்த பிரபுதேவாவிற்கு உலகமெங்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஒருகட்டத்தில் ஹீரோவாக வலம் வந்த பிரபுதேவா, இப்போது இயக்குநராகவும் ஜொலிக்கத் தொடங்கியுள்ளார். தற்போது தமிழில் ஜெயம் ரவி-ஹன்சிகா மோத்வானியை வைத்து எங்கேயும் காதல் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் 53நாளில் எடுக்கப்பட்டது. முற்றிலும் ரொமான்ஸ் படமான எங்கேயும் காதல் இம்மாதம் பிப்.14ம் தேதி காதலர் தினத்தன்று ரிலீசாகிறது.

சமீபத்தில் இந்தபடத்திற்கான சூட்டிங் பாரிசில் நடைபெற்றது. சூட்டிங்கில் பிரபுதேவாவை பார்த்ததும் அங்கு ஏராளமான ரசிகர்கள் அங்கு கூடி விட்டார்களாம். சிலர் அவரிடம் ஆட்டோகிராப் மற்றும் புகைப்படங்கள் எடுக்க துவங்கிவிட்டனர். இந்த ரசிகர்கள் கூட்டத்தில் பிரபல டென்னிஸ் வீரர் காரன் இவானிசெவிக்கும் ஒருவர். சூட்டிங்கில் இருந்த பிரபுதேவாவிடம் சென்று ஆட்டோகிராப்பும், போட்டாவும் எடுத்து கொண்டுள்ளார். இவர் கடந்த 2001ம் ஆண்டு நடந்த விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். தவிர 1994ம் ஆண்டு உலகின் டாப் டென்னிஸ் வீரர்கள் பட்டியலில் 2வது இடமும் பெற்றுள்ளார்.

Sunday, February 6, 2011

ஓரினச்சேர்க்கை! எதில்தான் பின்பற்றுவது?

புதுடில்லி : ஓரினச்சேர்க்கை கிரிமினல் குற்றம் ஆகாது என டில்லி ஐகோர்ட்டு கடந்த 2009ம் ஆண்டு ஜூலை 2ம் தேதியன்று தீர்ப்பளித்தது. ஓரினச் சேர்க்கை தொடர்பான கோர்ட்டு தீர்ப்பு பலரை அதிருப்தி அடைய செய்தது. 

இந்நிலையில் டில்லி ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து அரசியல்வாதிகள் , சமூக ஆர்வலர்கள், மத ‌போதகர்கள் என பல்வேறு தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். அதில் அவர்கள், “ஓரினச் சேர்க்கை கிரிமினல் குற்றம் இல்லை என்ற டில்லி ஐகோர்ட்டின் தீர்ப்பால் சமூதாய சீரழிவு ஏற்படும். ஓரினச்சேர்க்கை, என்பது இயற்கைக்கு எதிரானது என குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கு இன்று நீதிப‌திகள் ஜி.எஸ்.சிங்வி. ஏ.கே.கங்குலி அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வருகிறது.

கலாம் சொன்னது போல் 2020 வல்லரசாகும?

அமெரிக்க, இந்திய மாணவர்களுக்கு புதிய விசா!

சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள திரி-வேலி பல்கலைக்கழகத்தில் படித்த இந்திய மாணவர்கள் போலி விசாவில் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை முடியும் வரை மாணவர்களைக் கண்காணிக்க அவர்களது கால்களில் கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்டது. 18 இந்திய மாணவர்களின் கால்களில் இதுபோன்ற கருவிகள் இணைக்கப்பட்டன.

இதற்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. இதையடுத்து அமெரிக்கா தனது நிலையில் இருந்து சிறிது இறங்கி வந்துள்ளது. இது குறித்து சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதர அதிகாரி சுஷ்மிதா கங்குலி தாமஸ் கூறியுள்ளது:

அமெரிக்க குடியேற்றம், சுங்கவரி அமலாக்கத் துறையிடம் இருந்து கடிதம் வந்துள்ளது. அதில் இந்திய மாணவர்கள் பிரச்னையை சிறப்பாக கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளதாகவும், மாணவர்களுக்கு புதிய விசா வழங்குவது குறித்து அமெரிக்க சட்டதிட்டங்களுக்கு உள்பட்டு பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் கால்களில் கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்டிருக்கும் விஷயத்தில் அதிக கவனம் எடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் மொத்தம் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்திய மாணவர்கள் அதிகம் பேர் அங்கு வர வேண்டும் என்றே விரும்புகிறோம். இந்தப் பிரச்னையில் நல்ல தீர்வு விரைவில் ஏற்படும் என்றார் திமோத்தி ரோமர்.

அமெரிக்காவில் குடித்து விட்டு கார் ஓட்டும் பிரபலங்கள் பிடிபட்டால் அவர்களைக் கைது செய்வதற்கு பதிலாக அவர்களைக் கண்காணிக்க காலில் ரேடியோ அதிர்வலைக் கண்காணிப்புக் கருவியைக் கட்டி விடுவது வழக்கம். கைது செய்வதற்கு பதிலாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை இது. இந்திய மாணவர்கள் விஷயத்திலும் கைது செய்வதற்கு பதிலாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இல்லையெனில் அவர்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டுமென்று முன்னதாக அமெரிக்க அதிகாரிகள் விளக்கம் அளித்திருந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.

கூட்டணிக்குள் ஒரே பரபரப்பு!!

தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் அதிக சீட்டுகளை எதிர்ப்பார்க்கிறது. அ.தி.மு.க., அணியில் தே.மு.தி.க., இடம் பெறுவது தாமதமாவதற்கும் அதிக சீட்டுகள் எதிர்பார்ப்பே காரணமாக உள்ளது. தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இடம்பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அக்கட்சி அ.தி.மு.க., அணியில் இடம் பெறுமா அல்லது தனித்து போட்டியிடுமா? என்ற குழப்பமும் நீடிக்கிறது. கூட்டணிக் கட்சிகளின் தொகுதி பங்கீட்டினால் தமிழகத்தில் தனிக்கட்சி ஆட்சி சகாப்தம் முடிந்து விடும் நிலை புதிய திருப்பமாக உருவாகவுள்ளது.

தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியில் பா.ம.க., இடம் பெறுவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. காங்கிரசுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவும் அறிவிக்கப்பட்டு விட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் காங்கிரஸ் தொகுதி பங்கீடு குழுவும், தலைவர் சோனியாவால் அறிவிக்கப்படவுள்ளது. தி.மு.க.,விடம் 80 தொகுதிகள் கேட்பதில் காங்கிரஸ் பிடிவாதமாக உள்ளது. தி.மு.க., தரப்பில் 80 தொகுதிகளுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால், கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 48 தொகுதிகள் மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 23 தொகுதிகளையாவது காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இறுதிகட்ட நிபந்தனையை விதிக்கவும் திட்டமிட்டுள்ளது.

அ.தி.மு.க., அணியை பொருத்தவரையில் கூட்டணிக்கட்சிகளுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையை விறுவிறுப்பாக நடத்தி முடித்துள்ளது. தே.மு.தி.க.,வுடன் தொகுதி பங்கீடு முடித்த பின், அடுத்த கட்டமாக பா.ம.க.,வைப் பற்றி யோசிக்க திட்டமிட்டுள்ளது. தற்போது அ.தி.மு.க., அணியில் பா.ம.க., "வெயிட்டிங்' லிஸ்டில் உள்ளது. தே.மு.தி.க., - ம.தி.மு.க., - இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடித்துக் கொடுக்கும் போது, அ.தி.மு.க., தரப்பில் குறைந்த பட்சம் 126 முதல் 135 தொகுதிகளுக்குள் தான் போட்டியிட வேண்டிய நிலை உருவாகும்.அதேபோல், தி.மு.க., அணியில் காங்கிரசுக்கு 70 முதல் 80 தொகுதிகளும், விடுதலைச் சிறுத்தைகளுக்கு 10 முதல் 15 தொகுதிகளும் மற்ற சமுதாய அமைப்புகள் கட்சிகளுக்கு தி.மு.க., தரப்பில் தொகுதி ஒதுக்கீடு செய்ய வேண்டியிருப்பதால், அக்கட்சியும் 135 தொகுதிகள் வரை தான் போட்டியிட வேண்டியதிருக்கும்.

இப்படி கூட்டணிக் கட்சிகளுக்கு தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரு கட்சிகளும் பகிர்ந்து கொடுத்து விட்டால், இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த சட்டசபை தேர்தலிலும் தி.மு.க.,வால் பெரும்பான்மை பெற முடியவில்லை. எனவே, கடந்த பத்து ஆண்டுகளாக, மத்தியில் தனிக்கட்சி ஆட்சி சகாப்தம் முடிவுக்கு வந்தது போல், இனிமேல் தமிழகத்திலும் அதே நிலை தொடரும் வாய்ப்பு இருக்கிறது என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இத்திருப்பத்தால் முக்கியமாக தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய கட்சிகள் மக்களிடம் தங்களுடைய தனி ஆட்சி என்று வலியுறுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும். இது காங்கிரஸ், தே.மு.தி.க., போன்ற கட்சிகளுக்கு சாதகமாகுமா என்பது சீட் ஒதுக்கீடு மற்றும் தேர்தல் பிரசாரம் ஆகிய நடைமுறைகளில் தெரிந்து விடும் என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையால் இக்கட்சிகள் அனைத்தும் தங்கள் தேர்தல் யுக்தி பற்றி அதிக அக்கறை கொண்டுள்ளன. பீகாரில் அதிக செல்வாக்கு கொண்ட லாலு கட்சியின் தற்போதைய நிலை, இத் தடவை பா.ம.க.,வுக்கு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. திராவிடக் கட்சிகள் அதைக் கூட்டணியில் மனமுவந்து ஏற்கத் தயங்குவதே அந்த அபாயத்தை நோக்கிச் செல்லும் அடையாளம் என்று கூறப்படுகிறது.

குற்றம் செய்த மனது குறுகுறுக்கும்!

வாஷிங்டன் : குவான்டனாமோ சிறைக் கைதிகளைக் கொடுமைப்படுத்திய விவகாரத்தில் தான் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தால், அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் தனது சுவிட்சர்லாந்து பயணத்தை ரத்து செய்து விட்டார்."குவான்டனாமோ சிறையில் உள்ள, சில கைதிகளை சித்ரவதை செய்யும்படி சிறை அதிகாரிகளுக்கு அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உத்தரவிட்டார்' என்று அமெரிக்காவில் இயங்கி வரும் மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.இந்நிலையில், இம்மாதம் 12ம் தேதி சுவிட்சர்லாந்தில் நடக்க உள்ள, ஒரு ஆண்டு விழாவில் முக்கியப் பேச்சாளராக புஷ் கலந்து கொள்ள இருந்தார்.சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில், அவர் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதனால் அங்கு புஷ் வரும் போது அவரைக் கைது செய்யும் படி அமெரிக்க மனித உரிமை அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.இதனால் தான் கைது செய்யப்படுவோம் என்று அச்சம் கொண்ட புஷ், தனது சுவிட்சர்லாந்து பயணத்தை ரத்து செய்துவிட்டார்.

Saturday, February 5, 2011

மும்மூர்த்திகள் தமிழில் நீண்ட இடைவெளிக்குப்பிறகு?

தமிழ் சினிமாவில் இரண்டு நடிகர்கள் சேர்ந்து நடிப்பது மிகவும் அபூர்வம். ஆனால் இந்தி மற்றும் மலையாளத்தில் இது ரொம்ப சர்வ சாதாரணம். மலையாளத்தில் மம்முட்டி-மோகன்லால் இருவரும் இணைந்து நிறையபடங்களில் நடித்திருக்கின்றனர். அதுபோல் இந்தியிலும் அந்தகால நடிகர்கள் அமிதாப், தர்மேந்திரா உள்ளிட்ட நடிகர்கள் முதல் இப்போது உள்ள ஷாரூக்கான், அமீர்கான், ஹிருத்திக் உள்ளிட்ட நடிகர்கள் பலர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முதன்முறையாக விஜய்-விக்ரம்-விஷால் ஆகிய மூன்று முன்னணி நடிகர்கள் சேர்ந்து நடிக்கின்றனர்.

தமிழில் இந்த மாதிரி இணைந்து நடிப்பது மிக குறைவு தான். ஆனால் இப்போது அது கொஞ்சம், கொஞ்சமாக மாறி வருகிறது. தற்போது பாலா இயக்கத்தில் விஷால்-ஆர்யா இணைந்து அவன் இவன் படத்தில் நடிக்கின்றனர். அதேபோல் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் நண்பன் படத்தில் விஜய்-ஜீவா-ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் ராவணன் படத்திற்கு பிறகு மணிரத்னம் அடுத்த ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்திற்கு பொன்னியின் செல்வன் என்று பெயரிடப்பட்டுள்ளது. சரித்திரத்தை மையமாக வைத்து உருவாகும் இப்‌படம் மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட இருக்கிறது. இப்படத்தில் விஜய்-விக்ரம்-விஷால் ஆகிய முன்னணி நடிகர்கள் மூன்று பேர் சேர்ந்து நடிக்கின்றனர். தமிழ் சினிமாவில் இவர்கள் இணைந்து நடிப்பது இதுவே முதன்முறையாகும்.

இலங்கை எகிப்த்தை பின்பற்றுமா?

கொழும்பு: எகிப்து நாட்டில் நடைபெற்று வரும் சம்பவத்தை போன்று இலங்கையிலும் நடைபெற வாய்ப்பு உள்ளது என எதிர்கட்சி தலைவர் சூசக தகவல் வெளியிட்டுள்ளார். இதுபற்றிய விபரம் வருமாறு: எகிப்து நாட்டில் அந்நாட்டின் அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி வலக வலியுறுத்தி அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. அதே போல் இலங்கையிலும் விடுதலைப்புலிகளை அடக்கியதில் வெற்றி பெற்ற சரத் பொன்சேகா மீது ராஜ துரோக குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் பல்வேறு கட்டங்களில் ஆளும் இலங்கைஅரசு ஜனநாயக நெறிமுறைகளை மீறி ஆட்சி செய்து வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கொண்டாடப்பட்ட இலங்கை தேசியதின கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் எம்பிக்கள் தாக்கப் பட்டுள்ளனர். இவை எகிப்து சம்பவம் நடைபெறுவதற்கு முன்னோடியாக கருத வேண்டி யுள்ளது என ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்மசிங்கே தெரிவித்துள்ளார்.

பிரபு தேவா, வை தொடர்ந்து அடுத்து விவாகரத்து!

விவாகரத்து பெறுபவர்களின் பட்டியலில் சினிமாக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. சமீபத்தில் விவாகரத்து பெற்ற செல்வராகவன்-சோனியா அகர்வால் பிரகாஷ்ராஜ்-லலிதாகுமாரி, நடிகர்கள் அரவிந்த்சாமி இதுதவிர விவாகரத்து கேட்டுள்ள பிரபுதேவா-ரமலத் ஜோடி என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அந்த வரிசையில் மற்றொரு நடிகையும் சேர்ந்துள்ளார். அவர் பெயர் பூமிகா.

தமிழில் "பத்ரி" படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பூமிகா, "ரோஜாகூட்டம்" உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதுதவிர இந்தியில் பூமிகா சாவ்லா என்ற பெயரில் அவர் ரொம்ப பிரபலம். இவருக்கும் பிரபல யோகா மாஸ்டர் பரத் தாகூருக்கும் கடந்த 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தார். சந்தோஷமாக சென்ற இவர்கள் வாழ்க்கையில் இப்போது புயல் அடிக்க ஆரம்பித்துள்ளது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் பூமிகா விவாகரத்து கேட்டு அப்பீல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

எதற்காக விவாகரத்து என்று விசாரித்த போது பரத் தாகூரும்-பூமிகாவும் இணைந்து "தகிட தகிட" என ஒருபடம் தயாரித்து உள்ளனர். ஆனால் இந்தபடம் ப்ளாப் ஆனது. இதுதவிர துபாயில் யோகா பள்ளி ஒன்றும் திறந்து உள்ளனர். இதுவும் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் வரவில்லையாம். இதனால் ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். இந்நிலையில் பரத்தாகூர் தொடர்ந்து படம் தயாரிக்கும் படி பூமிகாவை வற்புறுத்தி வருவதாக தெரிகிறது. ஏற்கனவே நிறைய நஷ்டம் ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து படதயாரிக்கும் படி கணவர் கூறிவருவது அவரை வெறுப்‌படையச் செய்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து வரைக்கும் சென்றுள்ளதாக தெரிகிறது. பூமிகா தனது வக்கீல் மூலம் கோர்ட்டில் விவாகரத்து கேட்டு அப்பீல் செய்துள்ளார்.

பூமிகா தற்போது தனது தயாருடன் வசித்து வருகிறார். தவிர முன்பெல்லாம் பொது நிகழ்ச்சியில் தனது கணவருடன் சேர்ந்து வந்த பூமிகா இப்போது தனியாகத்தான் வருகிறாராம்.

அ.தி.மு.க,வுக்கு பூட்டு போட்ட ம.தி.மு.க.,

சென்னை : அ.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவிடம், 39 தொகுதிகளை கேட்டு, ம.தி.மு.க., விருப்பம் தெரிவித்துள்ளது.

அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தொகுதி பங்கீடு குழுவினரான ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் ம.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினர் மாரியப்பன், பாலவாக்கம் சோமு, குருநாதன் ஆகியோர் நேற்று முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் ம.தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளின் பட்டியலை, அக்கட்சியின் குழுவினர், அ.தி.மு.க., குழுவினரிடம் ஒப்படைத்துள்ளனர். ஒரு லோக்சபா தொகுதிக்கு ஒரு சட்டசபை தொகுதி வீதம், 39 லோக்சபா தொகுதிகளுக்கு, 39 சட்டசபை தொகுதிகளை கேட்டு அ.தி.மு.க.,வினரிடம், ம.தி.மு.க., குழுவினர் விருப்பம் தெரிவித்து உள்ளனர். கடந்த சட்டசபை தேர்தலில்ம.தி.மு.க.,விற்கு 35 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

பேச்சுவார்த்தை முடிந்த பின் வெளியே வந்த ம.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவை சேர்ந்த மாரியப்பன் நிருபர்களிடம் கூறியதாவது: பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது. தேர்தலில், குடும்ப ஆட்சியும், ஊழல் ஆட்சியுமான தி.மு.க., ஆட்சியை அகற்றி விட்டு, 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறும். ஜெயலலிதாவை முதல்வராக்குவதற்குரிய வியூகம் அமைப்பது குறித்தும் பேசினோம். தேர்தல் பிரசாரம், தேர்தல் அறிக்கைகள் தயார் செய்வது குறித்து ஆலோசனை நடத்தினோம். எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்பதை தலைமை தான் முடிவு செய்யும். வைகோ போட்டியிடுவாரா என்பது எங்களுக்கு தெரியாது. இன்னும் சில கட்சிகள் கூட்டணியில் சேர இருக்கின்றன. எனவே அடுத்த கட்ட பேச்சு வார்த்தையும் நடக்கவுள்ளது. இவ்வாறு மாரியப்பன் கூறினார்.

Friday, February 4, 2011

"எஸ் க்யூப்' பள்ளி குழந்தைகளுக்காக பி.பாபு கண்டுபிடிப்பு

பள்ளிக்குழந்தைகளின் ஒவ்வொரு அசைவையும் குறுஞ் செய்திகளாக பெற்றோருக்கு அனுப்பும், மென் பொருளை கண்டுபிடித்துள்ள பிரசன்ன பாபு ஒவ்வொரு சமூகப் பிரச்னைக்குமே, ஏதாவது ஒரு தீர்வை யோசித்து பார்ப்பது என் வழக்கம். அந்த வகையில், பள்ளிக் குழந்தைகள் கடத்தப்படுவது தொடர்பான செய்திகளைப் படித்த போது, அதற்கான தீர்வு காணும் முயற்சியில் இறங்கினேன்.

மூன்று மாதக் கடின உழைப்பிற்குப் பின், ஒரு புதிய மென் பொருளை கண்டுபிடித் துள்ளேன். இதற்கு "எஸ் க்யூப்' என்று பெயரிட்டுள்ளேன். பள்ளி செல்லும் குழந்தைகளின் ஒவ்வொரு அசைவையும், குறுஞ்செய்திகளாக, பெற்றோரின் மொபைல் போனுக்கு, "எஸ் க்யூப்' அனுப்பி வைக்கும். பள்ளி வேன் அல்லது பஸ் குழந்தைகளை ஏற்றிச் செல்வது முதல், முதல் பாட வேளை வருகைப் பதிவு உணவு நேரத்திற்கு பின் உள்ள பாட வகுப்பு, மாலை வீடு திரும்பும் வரை எல்லா விஷயங்களும், பெற்றோருக்கு குறுஞ்செய்தியாக வந்து விடும். மாலை நேரத்தில் பள்ளியில் சிறப்பு வகுப்பில் குழந்தை பங்கேற்றால், அது குறித்த அறிவிப்பும் கிடைத்துவிடும்.

இந்த ஏற்பாடு பள்ளியை கட்' அடித்துவிட்டு சினிமாவிற்கு செல்லும் மாணவர்களுக்கு மட்டுமே பாதகமானது; பெற்றோருக்கு 100 சதவீதம் சாதகமானது. இந்த வசதியை பெற, பள்ளியில் இணையதள வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் இருப்பது அவசியம். வருகைப்பதிவு விவரங்கள் கம்ப்யூட்டரில் ஒருவரால், சுலபமான முறையில் ஏற்றப்பட வேண்டும். அரசே மாநிலம் தழுவிய அளவில், பள்ளிகளில் இந்த வசதியை ஏற்படுத்தலாம். தனியார் பள்ளிகளிலும், இந்த முறையை கட்டாயமாக்கச் சொல்லி கேட்கலாம்.

கேம்ப்ரிட்ஜ் பலகலைக்கழக 'ஓ' லெவல் தேர்வு - வரலாற்றுச் சாதனை

அடிப்படை மொழி ஆங்கிலமல்லாத நாடுகளின் 14 முதல் 17 வரையிலான வயதையுடைய மாணவர்கள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயில்வதற்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வு 'ஓ' லெவல் தேர்வாகும்.

இந்த ஆண்டு நடத்தப்பட்ட 'ஓ' லெவல் தேர்வில் 24 பிரிவுகளில் 23-இல் 'ஏ' க்ரேடைப் பெற்று வெற்றிப்பெற்று சாதனை படைத்துள்ளார் பாகிஸ்தானைச் சார்ந்த 17 வயது மாணவர் இப்ராஹீம் ஷஹீத். இவர் பாகிஸ்தானில் எலக்ட்ரிகல் எஞ்சினீயரிங் கல்லூரி பேராசிரியரின் மகனாவார். கேம்ப்ரிட்ஜில் முக்கிய பாடமாக இயற்பியலையும், பொருளாதாரத்தையும் தேர்வுச் செய்துள்ளார் மாணவர் இப்ராஹீம் ஷஹீத்.

தனது சாதனையைக் குறித்து அவர் கூறியதாவது: "நான் வெறும் ஒரு சராசரி மாணவன்தான் என எனது பள்ளிக்கூட ஆசிரியர்கள் எனது தந்தையிடம் கூறுவார்கள். இதனைத் தொடர்ந்து தேர்வுகளில் உயர்ந்த வெற்றியை பெறவேண்டும் என்ற விருப்பம் எனக்கு அதிகரித்தது. பாகிஸ்தானில் தற்பொழுது நிகழ்ந்துக் கொண்டிருக்கும் அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சனைகளில் எனக்கு நிராசையுண்டு. நாட்டிற்காக ஏதேனும் நல்லது செய்ய என்னால் முடியுமென்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது.

எனது ரோல் மாடல் பாகிஸ்தான் அணுசக்தித் திட்டத்தின் தந்தையான அப்துல் காதிர் கான் ஆவார்" இவ்வாறு இப்ராஹீம் ஷஹீத் தெரிவித்தார்.

மாத்யமம்

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!