Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, February 4, 2011

ராணாவுக்கு தயாராகும் ரஜினி!

நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினி மூன்று வேடங்களில் தோன்றி நடிக்கும் படம்.

ரொம்ப எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள், எல்லா அம்சமும் படத்தில் வைத்து இருக்கிறார், கே.எஸ். ரவிக்குமார்.

மூன்று முகம்' படத்துக்குப் பின் "ராணா'வில் மூன்று வேடங்கள் ஏற்கிறார் ரஜினி., தீபிகா படுகோனே, அனுஷ்கா, இலியானா என பலரிடம் பேச்சு நடக்க, கமலைத் தொடர்ந்து ரஜினியுடன் ஜோடி சேர திரிஷாவுக்கே அடித்திருக்கிறதாம் வாய்ப்பு. மூன்று வேடங்களில் ரஜினி வந்தாலும், ஒரு ரஜினிக்குதான் ஜோடியாம். மார்ச்சில் தொடங்கும் படப்பிடிப்புக்காக இப்போதே தயாராகி விட்டது "ராணா' படக்குழு. வெளிநாடுகளில் படப்பிடிப்பு தளங்களை பார்க்க கிளம்பி விட்டாராம், கே.எஸ்.ரவிக்குமார்.

விஜய் இரண்டாவது முறை ஜெ"யை சந்திப்பு? தேர்தலுக்கா!

சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் சென்னையில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

இரண்டாவது முறையாக ஜெயலலிதாவை அவர் சந்தித்துப் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. போயஸ் கார்டன் இல்லத்தில் நடந்த இந்தச் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது.

கடந்த இரு மாதங்களுக்கு முன்பும் ஜெயலலிதாவை எஸ்.ஏ.சந்திரசேகரன் சந்தித்துப் பேசினார். இதையடுத்து அதிமுகவில் விஜய் இணைந்து விடுவார் என்றும், தன்னுடைய மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றி அதிமுகவுக்கு ஆதரவு கொடுப்பார் என்றும் பேசப்பட்டது.

இதன்பிறகு விஜய் தன் மாவட்ட நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து கருத்துகளையும் கேட்டறிந்தார். வருகிற சட்டப் பேரவைத் தேர்தலை அரசியல் இயக்கமாக நாம் சந்தித்தே ஆக வேண்டும் என நிர்வாகிகள் கருத்து தெரிவித்தாகக் கூறப்பட்டது. இருப்பினும் தன் அரசியல் பிரவேசம் குறித்து அமைதிகாத்து வந்தார் விஜய்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு வெளியான "காவலன்' திரைப்படம், சில பிரச்னைகளால் ஒரு நாள் தாமதமாக திரைக்கு வந்தது. படத்தைத் திரையிட திரையரங்குகள் கிடைக்காத நிலையில், ஒரு வார இடைவெளிக்குப் பின்னரே முக்கிய திரையரங்குகளில் "காவலன்' திரையிடப்பட்டது.

பேனர் வைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சில திரையரங்குகளின் வாசலில் வைக்கப்பட்ட பேனர்களும் கிழித்தெறியப்பட்டன. இதுதொடர்பாக பல மாவட்டங்களில் காவல்துறையிடம் ரசிகர்கள் புகார் அளித்தனர்.

இதையடுத்து ""அரசியலுக்கு வரும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். நேரமும், காலமும், சூழலும் என்னை அந்த இடத்துக்கு அழைக்கும்போது நிச்சயம் என்னை அங்கு வைப்பேன்'' என்றார் விஜய்.

"காவலன்' பட பிரச்னையில் ஏன்? எதற்கு? யார்? என்றே தெரியாமல் இருக்கிறேன். யாரென்று தெரிந்தால் நானே வீதியில் இறங்கிப் போராடவும் தயார் என்று பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் ஆளுங்கட்சி தரப்பை மறைமுகமாகச் சாடினார் அவர்.

அப்போதும் தன்னுடயை அரசியல் பிரவேசம் குறித்த தெளிவான கருத்தை விஜய் முன் வைக்கவில்லை.

ஆனால் விஜய் ரசிகர் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகளும், விசுவாசிகளும் இந்த சட்டப்பேரவை தேர்தலில் நம்முடைய அரசியல் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும், இதுவே அரசியலுக்கு வருவதற்கு சரியான தருணம் என விஜய்யிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.

விஜய்யின் அரசியல் நிலைப்பாடு என்ன? அதிமுகவுக்கு விஜய் ஆதரவு உண்டா? விஜய் பிரசாரம் செய்வாரா?

இந்த பின்னணியில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

த்ரிஷா, வுக்கு டும் டும்!

நடிகை த்ரிஷா இந்த ஆண்டு இறுதிக்குள் கல்யாணம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யாவின் குஷி படத்தின் மூலம் சிறிய கேரக்டரில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. பிற்காலத்தில் நாயகியாக முன்னேறி, பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நாயகிகள் பட்டியலில் இடம்பிடித்த த்ரிஷா, போதையில் குத்தாட்டம், நிர்வாண குளியல் என பல சர்ச்சைகளையும் சந்தித்து விட்டார். தமிழ், தெலுங்கு என பிஸியாக இருந்த த்ரிஷா, சமீபத்தில் இந்தி படம் ஒன்றிலும் நடித்தார். இதுவரை காதல் வலையில் சிக்காமல் இருந்து வந்த த்ரிஷா, இப்போது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளாராம். இந்த‌ ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடைபெறும் என தெரிகிறது.

திருமணத்திற்காக மாப்பிள்ளை வேட்டையில் த்ரிஷாவின் பெற்றோர் இறங்கியிருக்கும் அதே வேளையில் அம்மணி, பிராணிகளுக்கான பாதுகாப்பு இல்லம் ஒன்றை தொடங்க திட்டமிட்டிருக்கிறாராம். பிராணிகள் மேல் அதிக பிரியம் உள்ளவர் நடிக‌ை த்ரிஷா. பெங்களூரில் சாலையில் கிடந்த நாய்க்குட்டியை எடுத்து வந்து தனது வீட்டில் வளர்ந்து வரும் த்ரிஷா, பிராணிகள் நல அமைப்பின் தூதுவராகவும் உள்ளார். ஆதரவில்லாமல் பிராணிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்த அவர் தனது நண்பர்களுடன் இணைந்து பிராணிகள் பாதுகாப்பு இல்லம் தொடங்க முடிவு செய்திருக்கிறார். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், நாட்டில் நிறைய பிராணிகள் உதவியின்றி இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் பாதுகாப்பு அளிப்பது இயலாத காரியம். ஆனாலும் முடிந்த அளவு அவைகளுக்கு உதவ திட்டமிட்டுள்ளேன். நண்பர்களுடன் இணைந்து பிராணிகள் பாதுகாப்பு இல்லம் துவங்க முடிவு செய்துள்ளேன், என்றார்

Thursday, February 3, 2011

ஓமன் நாட்டில் வேலை, தகுதி 10-ம் வகுப்பு

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு ஓமன் நாட்டில் வேலைவாய்ப்பு உள்ளது. இதற்கான நேர்முகத் தேர்வு பிப்ரவரி 7-ம் தேதி காலை 9 மணிக்கு சென்னையில் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு

ஓமன் நாட்டிலுள்ள முன்னணி நிறுவனத்துக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 22 வயது முதல் 28 வயதுக்குட்பட்ட பொதுப் பணியாளர்கள் உடனடியாக தேவைப்படுகிறார்கள். தகுதி உள்ளவர்கள் தங்கள் சுயவிவரம் அடங்கிய விண்ணப்பம், கல்வி மற்றும் அனுபவச் சான்றிதழ்கள், பாஸ்போர்ட் போன்றவற்றின் உண்மை நகல்கள், நீலநிறப் பின்னணியுடன் எடுக்கப்பட்ட 5 பாஸ்போர்ட் புகைப்படம் ஆகியவற்றுடன் "தமிழ்நாடு அரசு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், 48, முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை' என்ற முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம்.

விவரங்கள் அறிய www.omcoomanpower.com என்ற இணைய தளத்திலோ அல்லது 044 24464268, 24464269, 9952940460 என்ற எண்களிலோ தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுவாழ் இந்தியர்கள் வாக்களிப்பது எப்படி? விளக்கம்!

புது தில்லி, பிப். : இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

அதன்படி தேர்தல் நடைபெறும் போது, தங்கள் தொகுதிக்கு வந்து வெளிநாடுவாழ் இந்தியர்கள் வாக்களிக்கலாம். இதற்காக தங்கள் பாஸ்போர்டை வாக்குச்சாவடியில் பணியில் உள்ளவர்களிடம் காட்ட வேண்டும். அவர்கள் தேர்தல் நடைபெறும் தொகுதியில் உள்ளவர்கள்தான் என்பது அதன் மூலம் அறிந்துகொள்ளப்படும்.

18 வயது நிரம்பியிருக்க வேண்டும் என்ற பொதுவான விதியுடன், வேறு எந்த நாட்டிலும் அவர்கள் குடியுரிமை பெற்றிருக்கக் கூடாது என்பதும் முக்கியமாகும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி ஒருவருக்கு வாக்களிக்க உரிமை உண்டு என்றால், தேர்தலில் போட்டியிடவும் உரிமை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் இந்தியாவில் வாக்குரிமை வேண்டும் என்ற வெளிநாடுவாழ் இந்தியர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது. முன்பு உள்ள விதிகளின்படி ஒருவர் 6 மாதங்களுக்கு மேல் வெளிநாட்டில் சென்று தங்கியிருந்தால், வாக்காளர் பட்டியலில் இருந்து அவர்களது பெயர் நீக்கப்பட்டுவிடும்.

இந்தியாவைச் சேர்ந்த சுமார்.

1 கோடியே 10 லட்சம் பேர் பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்றனர்.

இந்தியாவில் உள்ளவர்களுக்கு:

வாக்காளர் அடையாள அட்டை தொலைந்து விட்டதா. 15 ரூபாய்க்கு டூப்ளிகேட் வாக்காளர் அட்டை வழங்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டசபை பொது தேர்தல் நடக்கிறது. வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப் பட்டு புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகளும் வழங்கப்படுகின்றன.

அதிர்ச்சியை ஏற்ப்படுத்திய சோனியா! பா.ம.க. பரபரப்பு

திமுக கூட்டணியில் பா.ம.க.வை மீண்டும் சேர்ப்பதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்த்தார் என்ற தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக அணியில் பா.ம.க. சேருகிறதா இல்லையா என்ற கேள்வி கடந்த சில தினங்களாக பரபரப்பாகப் பேசப்பட்டுவந்தது. கடந்த வாரம் தில்லி சென்ற முதல்வர் கருணாநிதி, திமுக அணியில் பா.ம.க. இருப்பதாகக் கூறினார்.

முதல்வர் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார், கூட்டணி பற்றி விரைவில் கட்சி உயர் நிலைக்குழு கூட்டத்தில் பேசி முடிவு செய்வோம்' என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறினார். இதையடுத்து, "நாங்களும் இன்னும் முடிவு செய்யவில்லை' என்று கருணாநிதி கூறினார். சென்னை திரும்பிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், "திமுக அணியில் பா.ம.க.வைச் சேர்ப்பது பற்றிய கேள்விக்கு இடமில்லை' எனக் கூறிவிட்டார்.

புதன்கிழமை சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், திமுக கூட்டணியில் பாமக இல்லை என்று தாம் கூறவில்லை' என்றும், கூட்டணி குறித்து முதல்வரின் நம்பிக்கை வீண் போகாது' என்றும் கூறினார். கூட்டணியில் பாமக இல்லை என தாம் கூறவில்லை என்றால், பத்திரிகைகளில் செய்தி வெளியான நாளிலேயே அதற்கு மறுப்பு தெரிவிக்காமல், இனி அந்தக் கேள்விக்கே இடமில்லை என கருணாநிதி கூறிய பிறகு எதற்கு மறுப்பு தெரிவிக்கிறார் என திமுக உயர்நிலைத் தலைவர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்தச் சூழ்நிலையில் திமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமை நடந்தது.

கூட்டணியில் பா.ம.க.வைச் சேர்ப்பது பற்றிய பேச்சு வந்தபோது, விரோதிகளைக்கூட மன்னிக்கலாம்; துரோகிகளை மன்னிக்கக் கூடாது. 2009 வரையில் நம்முடன் ஆட்சியில் இருந்துவிட்டு திடீரென கூட்டணியைவிட்டு விலகிச் சென்ற பா.ம.க.வை இப்போது கூட்டணியில் சேர்க்க வேண்டும் என ஏன் கூறுகிறீர்கள்? என்று தில்லியில் சோனியா காந்தி கேட்டபோது என்னால் எந்தப் பதிலும் கூற முடியவில்லை'' என்று கருணாநிதி பேசியதாக கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவிக்கின்றனர்.

கருணாநிதி தில்லியில் இருந்து சென்னை திரும்பிய போதேகூட இதுபற்றி அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. பா.ம.க.வை கூட்டணியில் சேர்க்க சோனியா எதிர்ப்பு தெரிவிக்கிறார் என்று அப்போதே கூறினர்.

இதற்கிடையில், பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் மகன் அன்புமணி தில்லி சென்று காங்கிரஸ் தலைமையைச் சமாதானம் செய்து கூட்டணியில் சேர முயற்சி மேற்கொண்டார் என்று தில்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பா.ம.க. 31 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த முறை கூடுதல் தொகுதிகளைக் கேட்டுப் பெற வேண்டும் என்பதற்காக, முயற்சி மேற்கொண்டு வந்தனர்.

கடந்த ஆண்டு மாநிலங்களவைத் தேர்தல் சமயத்தில், தங்களுக்கு உடனடியாக இடம் தர மறுத்த திமுக தலைமைக்குப் பதிலடி தருவதற்காகவே, ""நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை'' என்று ராமதாஸ் கூறினார் என பா.ம.க.வினர் கூறி வந்தனர்.

ஆனால் இனி அந்தக் கேள்விக்கே இடமில்லை' என்ற கருணாநிதியின் பதிலால் பா.ம.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர். திமுகவில் இல்லை என்று தெரிந்துவிட்டால் அதிமுகவில் மரியாதையான அளவுக்கு தொகுதிகள் கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சமே இதற்குக் காரணம் என அரசியல் வட்டாரத்தில் கூறுகின்றனர்.

திமுக - காங்கிரஸ் அணியில் பா.ம.க.வைச் சேர்ப்பதில் சோனியாவுக்கு விருப்பம் இல்லை என்பது அதிர்ச்சி தருவதாகக் கருதப்படுகிறது. இருந்தாலும் காங்கிரஸ் தலைமையைச் சமாதானப்படுத்துவதைப் பொருத்தே இந்த அணியில் பா.ம.க. சேருவதற்கான வாய்ப்பு அமையும் என திமுக தலைவர்கள் கூறுகின்றனர்.

வீட்டு பெண்ணுகளை [எப்படி காப்பாற்றுவது?

கோவையில் முகாமிட்டு அப்பாவி மக்களிடம் பணம் பறித்து வந்த போலி மாந்த்ரீகர்கள், சாமியார்கள், "அருள்வாக்கு சித்தர்கள்' பலரும் போலீசுக்கு பயந்து வீடு, லாட்ஜ்களை காலி செய்து வெளிமாவட்டங்களுக்கு ஓட்டம் பிடித்தனர். கோவை, செல்வபுரத்தைச் சேர்ந்தவர் வி.டி.ஈஸ்வரன்(49); போலி மாந்த்ரீகர். குடும்ப பிரச்னை, கடன் தொல்லை, தீராத நோய், தொழில் நஷ்டம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு மாந்த்ரீகம், ராசிக் கல், பரிகாரம் மூலமாக தீர்வு காண்பதாக விளம்பரம் செய்தார். இதை உண்மையென நம்பி வந்தவர்களிடம் 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வசூலித்து மோசடி செய்தார். குழந்தைப் பேறு வேண்டி வந்த பெண்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தார். இவரால் பாதிக்கப்பட்ட பெண் உள்ளிட்ட இருவர் செல்வபுரம் போலீசில் புகார் அளித்தனர்.

விசாரணை நடத்திய போலீசார், போலி மாந்த்ரீகர் ஈஸ்வரனை கைது செய்து சிறையில் தள்ளினர். போலீசாரின் அதிரடி நடவடிக்கை கோவையில் முகாமிட்டிருக்கும் போலி மந்திரவாதிகள், பரிகார ஜோசியர்கள், அருள்வாக்கு கூறும் போலி சித்தர்கள், சாமியார்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் போலீசில் புகார் அளித்து விடுவார்களோ என அஞ்சி, மோசடி நபர் கள் பலரும் ஓட்டம் பிடித் துள்ளனர். தாங்கள் வசித்து வந்த வீடுகள், தங்கியிருந்த லாட்ஜ்களை இரவோடு இரவாக காலி செய்துவிட்டு வெளி மாவட்டங்களுக்கு ஓடிவிட்டனர். போலி மாந்த்ரீகர்கள் உள்ளிட்ட மோசடி நபர்களின் விளம்பரங்களை கண்காணிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ள மாநகர போலீசார், அந்நபர்களின் திரைமறைவு வேலைகள் குறித்த விபரங்களை திரட்டி வருகின்றனர். இதனால், பணம் பறிக்கும் நோக்கத்துடன் செயல்படும் மோசடி சாமியார்கள் மற்றும் மாந்த்ரீகர்களில் பலரும் மிரண்டு "எஸ்கேப்' ஆகிவிட்டனர்.

கோவை மாநகர போலீஸ் தெற்குப்பகுதி சட்டம் - ஒழுங்கு உதவிக்கமிஷனர் பாலாஜி சரவணன் கூறியதாவது, போலி மாந்த்ரீகர் ஈஸ்வரனை கைது செய் யச் சென்ற போது அவரது வீட்டின் முன் கதவு தாழிடப் பட்டிருந்தது. அங்கிருந் தோரிடம் விசாரித்த போது ஈஸ் வரன், பக்தி பரவசமடைந்த நிலையில் வீட்டினுள் அரை மணி நேரமாக ஆனந்த தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறார்' என, தெரிவித்தனர். அந்நபர்களை கடுமையாக எச்சரித்துவிட்டு வீட்டில் நுழைந்து மோசடி நபரை கைது செய்தோம். அவர் வைத்திருந்த பல்வேறு நிறங்களிலான ராசிக் கல், கண் மை போன்ற கலவை உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தோம். "ராசிக் கற்கள் எதற்காக?' என கேள்வி எழுப்பியபோது, "கஷ் டங்களில் இருந்து நம்மை காப்பாற்றும்' என, மோசடி நபர் தெரிவித்தார். இப்போது உனக்கு கஷ்ட காலம் நெருங்கிவிட்டது; உன்னை கைது செய்யப் போகிறோம், ராசி கற்கள் உன்னை காப்பாற்றுமா?' என, கேட்டபோது அதிர்ச்சியடைந்தார். அதன்பின், தான் மோசடியில் ஈடுபட்டு பலரிடம் பணம் வசூலித்ததை ஒப்புக்கொண்டார், அந்நபரை கைது செய்தோம். இவரை போன்ற நபர்களிடம் யாரும் ஏமாறக்கூடாது. கடன் தொல்லை என்றால், அதிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகளை கண்டறிய வேண்டும். தீராத நோய் இருந்தால் சரியான சிகிச்சைகளை பெறுவதற்கான சிறந்த டாக்டரை நாட வேண்டும். தொழில் நஷ்டமானால், அதற்கான காரணத்தை கண்டறிந்து தொழிலை மேம்படுத்து வதற்கான வழிமுறைகளை அமல்படுத்த வேண்டும். குடும்பத்தில் பிரச்னை என்றால், இரு தரப்பினரும் தவறுகளை திருத்திக்கொண்டு சேர்ந்து வாழ முயற்சிக்க வேண்டும். அதைவிடுத்து பரிகார பூஜை நடத்தியோ, ராசி கற்களை அணிந்தோ, மை தடவியோ எந்த பிரச்னைக்கும் தீர்வு காண முடியாது.

இதுகுறித்த விழிப்புணர்வு அனைத்து தரப்பு மக்களிடம் ஏற்பட வேண்டும். மோசடி சாமியார்கள், அருள் வாக்கு சொல்லும் போலி சித்தர்கள், மாந்த்ரீகர்கள் ஆகியோரின் உதவியை நாடினால் பணத்தை இழக்க வேண்டியிருக்கும்; பெண் கள், பாலியல் ரீதியான துன் புறுத்தலுக்கு உள்ளாகி குடும்ப கவுரவத்தையும் இழக்க நேரிடும். இவ்வாறு, உதவிக்கமிஷனர் பாலாஜி சரவணன் தெரிவித்தார்.

நான் அவளில்லை! ஜெயலலிதா

சென்னை, பிப். 3: ட்விட்டர் வலைத்தளத்தில் தான் சேரவில்லை என்றும் தன் பெயரை யாரோ போலியாக பயன்படுத்துகிறார்கள் என்றும் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

சமுதாய நெட்வொர்க் வலைத்தளமான ட்விட்டரில் என் பெயரில் எழுதப்படுவது குறித்து எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. நான் ட்விட்டரில் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

போலீஸ் சைபர் க்ரைம் மூலமாக இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Wednesday, February 2, 2011

உலகக்கோப்பையில் 2,.புதிய முறை : ஐசிசி

புதுடில்லி : உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் 2 புதிய முறைகளை கடைபிடிக்க ஐசிசி முடிவு செய்துள்ளது. போட்டிகள் டிராவில் முடிந்தால் சூப்பர் ஓவர் முறையில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கவும், டெஸ்ட் போட்டிகளில் இருப்பது போன்று அம்பயர்களின் முடிவை மறுபரிசீலனை செய்யும் முறையையும் அறிமுகம் செய்ய ஐசிசி தீர்மானித்துள்ளது. இந்த புதிய முறைகள் காலிறுதிப் போட்டிகள் முதல் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில், 4 ஆட்டங்கள் நடக்கிறது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 2-ந்தேதி வரை இந்தப்போட்டி நடக்கிறது. இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 நாடுகளில் உலக கோப்பை போட்டி நடத்தப்படுகிறது. உலக கோப்பை போட்டியில் 4 ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. நியூசிலாந்து- கென்யா (பிப்ரவரி 20), இங்கிலாந்து- தென் ஆப்பிரிக்கா (மார்ச் 6), இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் (மார்ச் 17), இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் (மார்ச் 20) ஆகிய போட்டிகள் நடைபெறுகிறது.

இந்திய அதிகார வர்க்கம், இதை படித்து தெரிந்துகொள்ளுங்கள்!

கொச்சி: மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் தன்னை சிக்கவைத்தது முஸ்லிம் என்ற ஒரேக் காரணத்திற்காகத்தான் என அவ்வழக்கில் சமீபத்தில் விடுதலையான அப்துல் கலீம் தெரிவித்துள்ளார்.

கொச்சியில் ப்ரஸ் க்ளப்பில் பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு.

"கடந்த 2007 ஆம் ஆண்டு மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடித்தவுடன் சிலமணி நேரங்களுக்குள்ளாகவே போலீசார் என்னைத் தேடிவந்தனர். என்னைக் கைதுச் செய்தபிறகு விசாரணை நடத்த போலீசாருக்கு விருப்பமில்லை. மாறாக, எப்படியாவது குண்டுவெடிப்பை நடத்தியது நான் என்பதை ஒப்புக்கொள்ளச் செய்ய வேண்டுமென்பதில் அவர் குறியாக இருந்தனர்.

இதற்காக அவர்கள் என்னை கொடூரமாக சித்திரவதைக்கு ஆளாக்கினர். என்னை தனிமைச் சிறையில் அடைத்தனர். ஐந்து அல்லது ஆறுதினங்கள் என்னை அவர்கள் நிர்வாணமாக சிறையில் அடைத்தனர். எனது மர்மஸ்தானங்களிலும், தலையிலும் எலக்ட்ரிக் ஷாக் கொடுத்தனர். 18 மாதம் நான் சிறையில் வாடினேன்.

பட்டப்படிப்பை தொடர்ந்துக் கொண்டிருக்கும் வேளையில்தான் அவர்கள் என்னைக் கைதுச் செய்தனர். சிறையிலிருந்து நான் முதலில் விடுவிக்கப்பட்ட போதிலும் போலீசாரின் கொடுமை தொடர்ந்தது. பின்னர் நான் மருத்துவம் படிப்பதற்கு மெரிட்டில் அட்மிஷன் கிடைத்தது. ஆனால், என்னை பயங்கரவாதி என அழைத்து போலீஸ் அச்சுறுத்தியதைத் தொடர்ந்து கல்லூரி அதிகாரிகள் என்னை மருத்துவம் படிக்க அனுமதிக்கவில்லை.

பொய்வழக்கில் சிக்கவைக்கப்பட்ட எனது சகோதரர் காஜாவை நான் சந்திக்கப் போனபொழுது என்னை போலீசார் டார்ச்சர் செய்தனர். சிறையில் எனது சகோதரனுக்கு மொபைல் போனை கொண்டு கொடுத்ததாக கூறி அவர்கள் என்னை மீண்டும் சிறையிலடைத்தனர். எனது உறவினர்கள் உள்பட பலரையும் பொய்வழக்கில் சிறையிலடைத்தனர்.

வாடகை வீட்டில்தான் நாங்கள் வசித்து வந்தோம். வழக்கில் என்னை குற்றவாளியாக சேர்த்தபொழுது வீட்டை காலிச் செய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டது.

ஹைதராபாத் சஞ்சல்குண்டா சிறையிலிருக்கும் பொழுதுதான் ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுவாமி அஸிமானாந்தாவை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியிருந்தார். சக மனிதர்களிடம் நல்லமுறையில் நடந்துக்கொள்ள இஸ்லாம் கற்றுத் தருகிறது. அதனடிப்படையில்தான் நான் அஸிமானந்தாவுடன் நடந்துக் கொண்டேன். மூன்று தினங்கள் மட்டுமே எனக்கு அஸிமானந்தாவுடன் பழகுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அவருடைய மனதை மாற்றியது நானல்ல. அல்லாஹ்தான் மாற்றினான்.

எவரும் தீவிரவாதிகளாக மாறுவதற்கு விரும்புவதில்லை. அவர்களை சமூகம்தான் அவ்வாறு ஆக்குகிறது. உண்மையான பயங்கரவாதிகளை கைதுச் செய்வதற்கு பதிலாக முஸ்லிம்களை கைதுச்செய்து பயங்கரவாதிகளாக மாற்ற போலீஸ் முயற்சி செய்கிறது.

நான் இனிமேல் எல்.எல்.பி(சட்டப்படிப்பு) படிப்பை தொடரப் போகிறேன். எனது அனுபவத்தை உலகம் முழுவதும் அறிவிக்க விரும்புகிறேன்." இவ்வாறு அப்துல் கலீம் தெரிவித்தார்.

தேஜஸ்

அமெரிக்க வாழ் இந்திய டாக்டருக்கு, 43 மில்லியன் டாலர் அபராதம்

பூஸ்டன்: அமெரிக்காவில் , சுகாதாரத்திட்டம் என்ற பெயரில் பணமோசடி செய்ததாக அமெரிக்கவாழ் இந்திய டாக்டர், அவரது மனைவி ஆகியோருக்கு கோர்ட் 15 ஆண்டுகள் சிறை தண்டனையும், 43 மில்லியன் டாலர் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் டாக்டர் அருண்சர்மா(56). இவரது மனைவி கிரண்சர்மா. இவர்கள் அங்குஒரு மருத்துவமனை வைத்து நடத்தி வந்தனர். இவர்கள் பல்வேறு சுகாதார திட்டம் நடத்தி பொதுமக்களிடம் ஏராளமானோரிடம் பணம் வசூல் செய்து மோசடி ‌செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக டெக்சாஸ் கோர்டில் வழக்கு தொடரப்பட்டது.இதில் அருண்சர்மாவுக்கு 15 ஆண்களும், மனைவி கிரண்சர்மாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 43 மில்லியன் டாலர் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இது குறித்து டெக்சாஸ் மாகாண அட்டர்னி ஜெனரல் ஜோஸ்ஏஞ்சல் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாக இவர்கள் போலியான சுகாதார திட்டத்தினை நடத்தி வந்துள்ளனர். இவர்கள் வீட்டில் சோதனையிட்டதில் மோசடிய மூலம் 8 லட்சம் டாலர் அளவிற்கான கரன்சிகளும், முக்கிய ஆவணங்க‌ளும் கண்டுபிடிக்கப்பட்டன என்றார்.

பல முறை துப்பியாகிவிட்டது, மத்திய, மாநில அரசுகளை?

எகிப்தில் மக்கள் வீதிகளில் இறங்கி போராடுவதற்கு முன் டுனிசியாவில் டிவிட்டர் புரட்சி வெடித்தது.வேலையில்லா திண்டாட்டம் ,ஊழல் போன்ற பிர்சனைகளால் வெறுத்து போன டுனிசிய மக்கள் டிவிட்டர் மூலம் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளத்துவங்கியது அரசுக்கு எதிரான மக்கள் இயக்கமாக உருவானது.

டுனிசியாவின் புரட்சி தீ மற்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கு பரவலாம் என்று கணிக்கப்பட்டதற்கு ஏற்பவே எகிப்தில் பதவி நாற்காலியில் பல ஆண்டுகளாக ஒட்டிக்கொண்டிருக்கும் முபாரக் அரசுக்கும் எதிரான‌ போராட்டம் வெடித்தது.எதிர்பார்க்க கூடியது போலவே எகிப்து அரசு முதல் வேலையாக டிவிட்டருக்கு தடை விதித்து இண்டெர்நெட் பயன்பட்டிற்கும் கட்டுப்பாடுகளை விதித்தது.

போராட்டத்தை நசுக்க எப்போதுமே ஆதக்க சக்திகள் பல்வேறு அடக்கு முறைகளை கடைபிடித்து வந்துள்ளனர்.தகவல் யுகத்தில் மக்கள் போராட்டத்திற்கான மாபெரும் ஆயுதமாக இணையம் உருவாகி இருப்பதால் போராட்டம் என்று வரும் போது அரசுகள் முதலில் செய்வது இண்டெர்நெட்டின் குரல் வலையை நெறிப்பது தான்.

சரி விசயத்துக்கு வருவோம், வேறு யார், நம் மீனவர்கள்தான் தெனம் கடலில் சுடப்படும் அவலநிலை., மத்திய, மாநில அரசுகள் வாய்வார்த்தகலால் எதிர்ப்பை சொல்லிவிட்டு வேறு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலை, நம் மீனவர்களுக்கு.

இறந்தவர்கள் எல்லோருமே வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்ந்த ஏழைகள். எனினும், தங்களிடம் இருக்கும் ஒரே ஆயுதம் உயிர்தான் எனக் கருதி, ஈழத் தமிழர்களைக் காப்பதற்காக உயிர்த் தியாகம் செய்துள்ளனர். அந்த தியாகிகளின் குடும்பத்தார், அரசு அளித்த பணத்தை வாங்க மறுத்தனர். இந்த இன உணர்வு தமிழக இளைஞர்களுக்கு வர வேண்டும். கடந்த 27 ஆண்டுகளில் 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சிங்களகடற்படை கொன்று குவித்துள்ளது. இதைக் கேட்க நாதியில்லை.

உலகின் 5-வது பெரிய கடற்படையை வைத்துள்ள இந்தியாவால், எல்லை தாண்டும் ஒரு சிறிய நாட்டின் கடற்படையைத் தடுக்க முடியவில்லை என்பதை யாராவது நம்புவார்களா? ஆனால், தமிழர்கள் என்பதால் இவர்கள் வேடிக்கைப் பார்க்கிறார்கள் என்பதுதான் உண்மை.

நமது மீனவர்களையும், எஞ்சியுள்ள ஈழத் தமிழர்களையும் பாதுகாக்க வேண்டுமெனில், தமிழகத்தில் உள்ள 6.5 கோடி தமிழ் மக்களும் கொதித்தெழவேண்டும்.

தமிழ் இனத்தைக் காக்க, மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை. ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்ட நிலை நாளை உலகத் தமிழர்களுக்கும், தமிழகத்தில் உள்ள தமிழர்களுக்கும் வரும்.

தமிழ் தேசிய இனம் ஒன்றுபட்டால், அதை வெல்லும் சக்தி யாருக்கும் கிடையாது. இன்று, உலகத் தமிழினம் அழிவின் விளிம்பில் உள்ளது. இப்போதாவது இந்த அபாயத்தை நாம் உணராவிட்டால், நமக்கு விடிவு வராது. எஞ்சியிருக்கும் ஈழத் தமிழர்களை காக்கும் கடமை நமக்குள்ளது.

குறிப்பு : வாங்க ஓட்டுக்கு பைசா தர்றாங்க போய் வாங்கலாம், யாருக்கோ பிரச்சினை நமேக்கென்னே! மத்திய, மாநில அரசுகள் மட்டுமல்ல நாமலும்தான்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர்!

சென்னை :
வரும் சட்டசபைத் தேர்தலுக்காக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப் பணி முடிந்து, இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 10ம் தேதி வெளியிடப்பட்டன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர், தங்கள் வசிப்பிட முகவரிக்கான சான்றுடன், படிவம் 6ல் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 24 வயதுடையவர்கள் தங்கள் விண்ணப் பித்துடன், வயதுக்கான சான்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.விண்ணப்பங்களை, உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்கள் (நகராட்சிகளில் தாசில்தார் அலுவலகங்கள்) அல்லது வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்கள் (மாநகராட்சிகளில் மண்டல அலுவலகங்கள்), மற்ற பகுதிகளில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம்.தாசில்தார் அலுவலகங்களில் உள்ள தலைமையிட துணை தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள தலைமை உதவியாளர், மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் உள்ள அலுவலக மேலாளர் ஆகியோர் இந்த விண்ணப்பங்களை பெற, அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். விண்ணப்பத்தை பெற்றதற்கு ஒப்புதல் சீட்டு அளிப்பதோடு, விண்ணப்பத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறியவும், தகுதியிருந்தால் புகைப்பட அடையாள அட்டையைப் பெறவும் விண்ணப்பதாரர் எந்த நாளில் வர வேண்டும் என்பதை அவர் தெரிவிப்பார்.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டோருக்கு ஒரு மாதத்தில் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும். இதேபோல, தங்களது பெயர் மற்றும் விவரங்களில் திருத்தங்கள் செய்ய விரும்புவோர், படிவம் 8ல் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.

மீண்டும் வை கோ தேர்வு

சென்னை : ம.தி.மு.க., பொதுச் செயலராக வைகோ மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ம.தி.மு.க.,வின் நான்காவது அமைப்பு தேர்தலில் போட்டியிட, வேட்புமனு தாக்கல் நேற்று தாயகத்தில் நடந்தது. பொதுச் செயலர் பதவிக்கு வைகோ போட்டியிட வேண்டும் என, 10 மாவட்டச் செயலர்கள் முன்மொழிந்தனர்; 15 மாவட்டச் செயலர்கள் வழிமொழிந்தனர். போட்டியிட யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், மீண்டும் பொதுச் செயலராக வைகோ தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ம.தி.மு.க.,வின் பொதுச் செயலராக, தற்போது நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.அவைத் தலைவராக துரைசாமி, பொருளாளராக மாசிலாமணி, துணைப் பொதுச் செயலராக மல்லை சத்யா, நாசரேத்துரை, துரை பாலகிருஷ்ணன், ஆட்சிமன்ற குழு செயலராக கணேசமூர்த்தி எம்.பி., அரசியல் ஆலோசனை குழு செயலராக மலர்மன்னன், அரசியல் ஆய்வு மைய செயலராக செந்தில் அதிபன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் வைகோ பேசியதாவது:சட்டசபை தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடையும். ம.தி.மு.க.,விற்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு. சோதனைகளை சந்தித்து கொண்டிருக்கிற நமக்கு மறுமலர்ச்சி கிடைக்கவுள்ளது.மறுமலர்ச்சி என்பது எளிதில் கிடைக்காது. அதற்கு விலை கொடுக்க வேண்டும். உயிரையும், ரத்தத்தையும் தியாகம் செய்ய வேண்டும். அரசியல் களத்தில் ம.தி.மு.க.,வின் ஆட்டம் துவங்கி விட்டது.இவ்வாறு வைகோ கூறினார்.

விஜய்,ன் பிறந்தநாளில் வேலாயுதம்

வேலாயுதம் படத்தில் படுபிசியாக இருக்கிறார் நடிகர் விஜய். இப்படம் வருகிற ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்தநாளில் ரிலீஸ் ஆகிறது.

பல்வேறு பிரச்சனைகளையும் தாண்டி "காவலன்" படம் விளம்பரம் இன்றி விண்ணைத் தொட்டது. பொங்கலுங்கு வந்த படங்களில் காவலன் படம்தான் சூப்பர்ஹிட். இதனையடுத்து ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம் ராஜா இயக்கும் படம் "வேலாயுதம்". இப்படத்தில் விஜய், ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடிக்கின்றனர். விஜய்யின் தங்கையாக சரண்யா ‌மோகன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ‌சென்னையில் மும்மரமாக நடைபெற்று வருகிறது. படத்தை ஜூன் மாதம் 22ம் தேதி, விஜய் பிறந்த நாளன்று ரிலீஸ் செய்யவுள்ளனர்.

ஏற்கனவே அஜித்தின் "மங்காத்தா" படம் அவரது பிறந்த நாளான மே 1ம் தேதி ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, February 1, 2011

போட்டிகளை சிறப்பாக எதிர்கொள்வோம், தோனி

கடந்த முறை போல் அல்லாமல், இம்முறை நெருக்கடியை கூடுதல் பொறுப்பாக எடுத்துக்கொண்டு சிறப்பாக செயல்பட்டு, உலக கோப்பை தொடரில் சாதிக்க முயற்சிப்போம் என, இந்திய அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

கடந்த 2007 உலக கோப்பை தொடரின் போது, டிராவிட் தலைமையில் சென்ற இந்திய அணியின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த எதிர்பார்ப்புகளே அணிக்கு பெரும் நெருக்கடியாக அமைய, முதல் சுற்றுடன் நாடு திரும்பியது. இது இந்திய ரசிகர்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அதுபோல, இம்முறை சொந்த மண்ணில் தொடர் நடப்பதால், இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

உலக கோப்பை தொடருக்காக, சிறப்பான முறையில் தயாராகி உள்ளோம். எங்களது திறமையை முழு அளவில் இத்தொடரில் வெளிப்படுத்துவோம். போட்டிகளின் போது ஏற்படும் எதிர்பார்ப்புகள், நெருக்கடிகள் போன்றவற்றை கூடுதல் பொறுப்பாக எடுத்துக்கொண்டு சிறப்பாக சமாளிப்போம். ஆனால் எப்படியும் தோல்வியடைய மாட்டோம்.
மற்றபடி கோப்பை வெல்வது குறித்து ஒன்றும் கூற முடியாது. ஏனெனில் கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில், என்ன நடக்கும் என்று முன்னதாக கணிக்க முடியாது. நாங்கள் ஒருவரை ஒருவர் நம்புகிறோம். தவிர, எங்களது பயிற்சிகள் உள்ளிட்டவைகள் மீதும் நம்பிக்கை வைத்துள்ளோம். இதுதான் ஒவ்வொரு போட்டியையும் சரியான மனநிலையுடன் எதிர்கொள்ள உதவும்.

கடந்த 2007 தொடரில் முதல் போட்டியில் வங்கதேசத்துடன் அடைந்த தோல்வியால், தொடரைவிட்டு வெளியேற நேர்ந்தது. அதனால் இம்முறையும் அந்த அணியுடன் முதல் போட்டியில் பங்கேற்பதால், அப்படித்தான் நடக்கும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் நடந்தவைகள் நடந்ததாக இருக்கட்டும். நடப்பவை எப்போதும் நல்லதாக நடக்கும் என்று நம்புவோம். நான் உங்களை விட அதிக நம்பிக்கை உடையவன்.

மற்ற விளையாட்டுகளில் ஓய்வுகள் எப்படி உள்ளது என்று எனக்குத் தெரியாது. ஆனால் கிரிக்கெட்டை மட்டும் தான் அதிக விமர்சனம் செய்கிறோம். குறுகிய இடைவெளி இருந்தால், அதிக போட்டிகளில் பங்கேற்க வேண்டியது உள்ளதே என்கிறோம். அதிக இடைவெளி இருந்தால், இது மிகவும் அதிகம் என்கிறோம். கிரிக்கெட்டை பொறுத்தவரையில், சரியான அட்டவணையை முடிவு செய்வது கடினம்.
தற்போது கிடைத்திருக்கும் இந்த இடைவெளியே நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் சிறிய காயங்களில் இருந்தும் மீண்டு, "ரிலாக்சாக' அணிக்கு திரும்ப உதவும்.

இந்திய உலக கோப்பை அணியில் இரண்டாவது விக்கெட் கீப்பர் இல்லை என்கிறார் ஒருவர். மற்றொருவர், இடது கை சுழற்பந்து வீச்சாளர் இல்லை என்கிறார். பொதுவாக அணித்தேர்வில் எல்லோருடைய கருத்துக்கும் இசைந்து போவது என்பது முடியாத காரியம். என்னைப் பொறுத்தவரையில் தேர்வு செய்யப்பட்டுள்ள 15 பேர்களும், உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படுவார்கள்.

விநோத அமெரிக்கா!

ஹூஸ்டன் : அமெரிக்காவில் உள்ள செவ்ரான் ஹூஸ்டன் பகுதியில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர். அவர்களில் டேவிட் மற்றும் மோலியும் அடங்குவர். போட்டி யின் இருவரும் சந்தித்துக்கொள்ளவில்லை. போட்டியின் தூரம் 16 மைல்கள் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. போட்டி துவங்கிய சிறிது நேரத்திற்கு பின்னர் அப்பகுதியில் இருந்த வில்லியம்ஸ் டவர் என்ற பகுதியில் ஓய்விற்கு டேவிட் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த மோலி ஓய்விற்காக நின்ற போது மயக்க நிலைக்கு சென்றார். அருகில் இருந்த டேவிட் மோலியை தாங்கிப்பிடித்தார். அந்த இடத்தில் இருவரின் மனங்களும் இடம் மாறின. இதனையடுத்து மோலியுடன் உடன்வந்த அவரது சகோதரி ராய்ச்செல் நீங்கள் இருவரும் ஏன் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்ற ஐடியாவை உதிர்த்தார். இந்த ஐடியாவை இருவரும் ஏற்றுக்கொள்ளவே உடனடியாக திருமணம் நடைபெற்றது. போட்டியில் கலந்து கொண்டவர்கள் கரவொலி எழுப்ப போட்டியை தொடர்ந்தனர்.

தமிழகத்தில் முன்றாவது அணியா? வெளங்குமா!

காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம், முதல்வர் கருணாநிதி நடத்திய முதல்கட்ட பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் கூட்டணி பற்றி காங்கிரஸ் மேலிடம் உறுதி செய்யாததாலும், தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் மூன்றாவது அணி அமைய வேண்டும் என்ற கோரிக்கையை அக்கட்சி மேலிடம் பரிசீலனை செய்து வருவதாலும், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சக மாநாட்டில் கலந்து கொள்ள கடந்த 30ம் தேதி முதல்வர் கருணாநிதி, டில்லிக்கு சென்றார். தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியை ஏற்கனவே பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் உறுதி செய்ததால், இந்த பயணத்தின்போது காங்கிரசுக்கு எத்தனை இடங்கள் என்பது உள்ளிட்ட விஷயங்கள் பேசி முடிவாகி விடும் என இருதரப்பினரும் நம்பிக்கையுடன் இருந்தனர்.ஆனால், முதல்வர் டில்லி சென்றதும், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மீது மூன்றாம் கட்ட விசாரணையை சி.பி.ஐ., நடத்தியது தி.மு.க., வட்டாரத்தை அதிர்ச்சி அடையச் செய்தது. "ஸ்பெக்ட்ரம்' விவகாரம் தொடர்பான நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையிலான கமிஷன், அறிக்கையை தாக்கல் செய்தது. மேலும், சோனியாவை சந்திப்பதற்கு மதியமும், மாலையிலும் முதல்வரை அலைக்கழித்துள்ளனர். இந்த மூன்று சம்பவங்களும் தி.மு.க., தரப்பிற்கு அதிருப்தியை அளித்தன.

ஒருவழியாக, நேற்று முன்தினம் இரவு சோனியாவை முதல்வர் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ராகுல், அகமது படேல் ஆகியோரும் உடனிருந்தனர். அப்போது நடந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின்போது, "காங்கிரசுக்கு 80 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும். ஐந்து அமைச்சர் பதவிகள், துணை முதல்வர் பதவி தரப்பட வேண்டும்' என, ராகுலின் விருப்பத்தை சோனியா தெரிவித்ததாகவும், அதற்கு முதல்வர் எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருந்தார் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு மேல், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை இருதரப்பும் தொடர விரும்பாததால், "இரு கட்சிகளின் சார்பில் தொகுதி பங்கீடு குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தலாம்' என, அவர்கள் முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.சோனியாவை அவரது வீட்டில் முதல்வர் சந்தித்தபோது எடுத்த புகைப்படங்களையும் காங்கிரஸ் வெளியிடவில்லை. கூட்டணி குறித்த கருத்துக்களை முதல்வர் தெரிவித்தார். ஆனால், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. முதல்வர் எதிர்பார்க்காத வகையில், தொகுதிகள் எண்ணிக்கையை அதிகமாகவும், ஆட்சியில் பங்கும் காங்கிரஸ் கேட்டது அவருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.சென்னையில் நாளை நடக்கவுள்ள தி.மு.க., பொதுக்குழுவில், காங்கிரஸ் நிபந்தனை குறித்து விவாதித்து முடிவு எடுக்க முதல்வர் திட்டமிட்டுள்ளார்.

காங்கிரஸ் நிபந்தனைக்கு தி.மு.க., செவிசாய்க்கவில்லை என்றால், ராகுல் பார்முலாவின் படி, காங்கிரஸ் தலைமையில் மாற்று அணியை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முடிவை காங்கிரஸ் மேலிடம் பரிசீலிப்பதற்கு தமிழக காங்கிரசாரின் நெருக்கடியும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. தே.மு.தி.க., - பா.ம.க., மற்றும் சில சமுதாய அமைப்புகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவும், தேர்தல் முடிவுக்கு பின் எந்த அணி ஆட்சியில் பங்கு தருகிறதோ அந்த அணிக்கு ஆதரவு அளிக்கலாம் என்பது காங்கிரஸ் திட்டம். தி.மு.க.,வை பொருத்தவரை, அதிகபட்சமாக 60 தொகுதிகளை காங்கிரசுக்கு ஒதுக்கவும், தேர்தல் முடிவுக்கு பின் ஆட்சியில் பங்கு தருவது பற்றி முடிவு எடுக்கலாம் என பேச்சுவார்த்தை நடத்தி, தி.மு.க., - காங்கிரஸ் தொகுதி பங்கீடுக்கு இறுதி வடிவம் கொடுக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு தினங்களில் கூட்டணி இழுபறி முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக கிண்ணம் கிரிக்கட்! பொது தேர்வும்,

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அனைத்தும் பொதுத்தேர்வு சமயத்தில் நடக்க உள்ளதால், தங்கள் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும் என, பெற்றோர் கலக்கமடைந்துள்ளனர்.

இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கிரிக்கெட் போட்டி, எங்கு, எப்போது நடந்தாலும் முக்கிய பணிகளை கூட ஒதுக்கி வைத்து விட்டு, "டிவி'யில் அதன் ஒளிபரப்பை காணத் தவறுவதில்லை. அதிலும் மாணவர்கள் பள்ளிக்கு, "மட்டம்' போட்டு விட்டு கிரிக்கெட் பார்ப்பது அதிகரித்துள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இம்மாதம் 19ம் தேதி துவங்கி ஏப்.,2ம் தேதி வரை நடக்கவுள்ளது. இவ்வாண்டு உலகக் கோப்பையை இந்தியா வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து கூறியுள்ளதால் கிரிக்கெட் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரையும், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு மார்ச் 28ல் துவங்கி ஏப்.,11ம் தேதி வரை நடக்கிறது. இதே காலகட்டத்தில் கிரிக்கெட் போட்டிகளும் நடக்க உள்ளதால் இந்தாண்டு மாணவர்களின் தேர்வு சதவீதம் குறைய வாய்ப்புள்ளது.

மாணவர்களின் படிப்பை கவனத்தில் கொண்ட ஒரு சில பெற்றோர், தங்கள் வீடுகளில் உள்ள கேபிள் "டிவி' இணைப்பை துண்டித்துள்ளனர். இருந்தாலும் மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவரோ என்ற கவலை பெற்றோர்களிடம் ஏற்பட்டுள்ளது.இத்தகைய சூழ்நிலையில், தங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு படிப்பில் கவனம் செலுத்தினால் சிறந்த மதிப்பெண் பெற முடியும் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர். எனவே பொதுத்தேர்வின் அவசியம் குறித்த ஆலோசனைகளை ஆசிரியர்களும், பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து பெற்றோரும் ஆலோசனை வழங்கி, மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.

மோடிக்கு விசா தர கனடா மறுப்பு!

கனடா(ஒட்டாவா) : 2002-ம் ஆண்டு ஆயிரக்கணக்கில் முஸ்லிம் குடிமக்களை படுகொலைச் செய்த வழக்கில் சிக்கியிருக்கும் மோடிக்கு விசா தருவதை எதிர்த்து உலக சீக்கியர்கள் அமைப்பு கனடா குடியேற்றத்துறை அமைச்சர் ஜேசன் கென்னியிடம் எதிர்ப்பு கடிதத்தை கொடுத்துள்ளனர்.

இந்தியாவை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் ஹிந்துத்துவ உணர்வு மிக்க பாரதி ஜனதா கட்சியை சேர்ந்த ஆட்சேபனைக்குரிய அரசியல் வாதி என்ற கருத்து இருந்தபோதிலும் கென்னியும் மற்ற அரசியல் தலைவர்களும் மோடிக்கு விசா தர விரும்புவதாக பத்திரிக்கைகளுக்கு தெரிவித்துள்ளனர்.

மஹாத்மாவின் பூமிக்கு நீங்கா களங்கத்தை ஏற்படுத்திய இந்த காவிக் கும்பல், திரைமறைவிலிருந்து சதித் திட்டம் தீட்டிய கட்சிநிர்வாகிகள் மற்றும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சிசுக்கொலைகள் நடத்திய காலாட்படை. சிலசமயம் தலைவர்களே காலாட்படையிலும் தைரியமாக பங்கெடுத்தார்கள்…

சர்வதேச மனித உரிமை கண்கானிப்பு மற்றும் பொதுமன்னிப்பு அமைப்பு 2000 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதற்கு மோடி உதவிசெய்ததாகவும், படுகொலை குறித்து விசாரணை செய்ய தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டிய வேளையில் இவர் போன்று வெள்ளை மனதுள்ள அரசியல்வாதிகள் இந்தியாவில் நிறைய இல்லை என்று கெனடிய முன்னாள் உயர் ஆணையர் பீட்டர் சுதர்லாண்ட் கூறியிருந்ததற்கு கடுமையாக ஆட்சேபித்த உலக சீக்கியர்கள் அமைப்பின் தலைவர் ப்ரேம் சிங் வின்னிங், "மோடி சிறுபான்மையினரை நசுக்கி அடக்கி ஒடுக்குபவர் என்று இந்திய மனித உரிமை ஆணையமே கூறியிருக்கும்போது, கனடிய மனித உரிமை வழக்கறிஞராக இருக்கும் நானும் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன்." என்று கூறியுள்ளார்.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!